Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 9
ஒரு மனிதனுக்கும் அவன் செய்யும் செயலுக்கும் வித்தியாசம் இல்லை!
ச.நாகராஜன்
வசிஷ்டர் கர்ம ரகசியத்தை ஶ்ரீ ராமருக்கு உபதேசம் செய்கையில் மனம் பற்றிய அனைத்தையும் விளக்கி விடுகிறார்
இவை விஞ்ஞானத்தால் இதுவரை ஆராயப்படவில்லை. சோதனைச்சாலையில் பரிசோதிக்க முடியாத சத்தியங்கள் இவை.
வசிஷ்டர் யோக வாசிஷ்டத்தில் கூறிய கர்ம ரகசியத்தைத் தொடர்வோம்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் மனமே அனைத்திற்கும் ஆதி காரணம் என்று கூறி கர்ம ரகசியத்தின் ஆதி மூல காரணத்தைக் கூறுகிறார் வசிஷ்டர்.
குசுமாஷயயோர்பேதோ ந யதாபின்னயோரிஹ |
ததைவ கர்மமனஸோர்பேதோ நாஸ்த்யவிபின்னயோ: ||
ஒரு மலருக்கும் அதன் வாசனைக்கும் அவை இரண்டாகப் பிரிக்க முடியாமல் இருப்பதனால் ஒரு வித வித்தியாசமும் இல்லாதது போல, ஒருவனின் செயலுக்கும் அவன் மனதிற்கும் பிரிக்க முடியாதபடி ஒரு வித்தியாசமும் இல்லை.
கல்பனாத்மிகயா கர்மஷக்த்யா விரஹிதம் மன: |
ந சம்பவதி லோகேஸ்மின்குணஹீனோ குணீ யதா ||
சில குணாதிசயங்களைக் கொண்ட விஷயம் ஒன்று அப்படிப்பட குணாதிசயங்கள் இல்லாதது போல கற்பனாசக்தியை மட்டும் கொண்டு செயலைச் செய்ய சக்தி இல்லாத மனம் இந்த உலகில் இருக்க முடியாது.
யதா வஹன்யௌஷ்யயோ: சத்தா ந சம்பவதி பின்னயோ|
ததைவ கர்மமனஸோஸ்ததாத்மமனஸோரபி ||
எப்படி தீயானது வெப்பமில்லாமல் இருக்க முடியாதோ அதே போல மனமும் செயலும், ஒரு மனிதனின் ஆத்மாவும் மனமுமாக வேறுபட்டு இருக்க முடியாது.
மனாகபி ந பேதோஸ்தி சம்வித்ஸ்பந்தமயாத்மனோ: |
கல்பனாம் சாத்ருதே ராம ஸ்ருஷ்டௌ புருஷகர்மணோ: ||
ராமா! படைப்பில் ஒரு மனிதனுக்கும் அவனது செயல்களுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை. கற்பனை என்பதை மட்டும் விட்டு விட்டு, அது பிரக்ஞையும் இயக்கமுமாக இருக்கும் இயல்பே பொலத் தான்.
கர்மைவ புருஷோ ராம புருசஹ்ஸ்யைவ கர்மதா |
ஏதே ஹ்ராபின்னே வித்தி த்வம் யதா துஹிந்ஷீததே ||
ராமா! செயலே மனிதன். செயல்-இயற்கை ஒரு மனிதனுக்காகவே இருக்கிறது. ஐஸும் அதில் இருக்கும் குளிர்ச்சியும் போல இவை இரண்டும் வித்தியாசமற்றவை என்பது உனக்குத் தெரியும்.
சம்வித்ஸ்பந்தரஸஸ்யைவ தைவகர்மநராதய: |
பர்யாய சப்தோ ந புன: ப்ருதக்கர்மாதய: ||
விதி, செயல்கள், மனிதர்கள் ஆகிய அனைத்துமே ஒரே அர்த்தத்தைக் கொடுக்கும் விதவிதமான சொற்களே (Synonyms). பிரக்ஞையின் இயக்கத்தைக் கூறும் சாரம் இவை. என்ற போதிலும், செயலும் அதைப் போன்றவையும், தனியே இருப்பதில்லை.
பீஜாங்குர்விகல்பானாம் க்ரியாபுருஷகர்மணாம் |
ஊர்மிவீசிதரங்காணாம் நாஸ்தி பேதோ ந வஸ்துதி ||
விதைக்கும் அதிலிருந்து முளைக்கும் செடிக்கும் எப்படி வித்தியாசமில்லையோ அதே போல ஒருவனின் செயல், அந்த மனிதன், விதி ஆகியவற்றிற்கு இடையே எப்படி பேரலை, அலை, குமிழிகள் ஆகியவற்றிற்கிடையே வித்தியாசம் இல்லையோ அப்படி வித்தியாசம் இல்லை.
இப்படி கர்ம ரகசியம் தெளிவாகக் கூறப்படுகிறது.
மலருக்கும் அதன் வாசனைக்கும் இடையே பேதம் இல்லை.
நெருப்பிற்கும் அது தரும் வெப்பத்திற்கும் இடையே பேதம் இல்லை.
ஐஸ் கட்டிக்கும் அது தரும் குளிர்ச்சிக்கும் இடையே பேதம் இல்லை.
விதைக்கும் அதிலிருந்து எழும் செடிக்கும் இடையே பேதம் இல்லை.
பேராழி அலை, அலை, அதில் எழும் குமிழிகள் ஆகியவற்றிற்கு இடையே பேதம் இல்லை. அதே போல ஒரு மனிதன், அவன் செயல், விதி ஆகியவற்றிற்கு இடையே பேதம் இல்லை.
மனதைக் கவனி; கர்மத்தைப் புரி- விளைவு நல்லதாக இருக்கும் என்பதே இங்கு விளக்கப்படும் சாரம்.
Two Wonder Lemons Auctioned in Tamil Nadu and Britain तमिलनाडु में एक नींबू ₹35 हजार में नीलाम
285 years old fetches £1,416 at UK auction Lemon sold for Rs 35,000 at auction in TN temple
ரூ.35,000-க்கு ஏலம் விடப்பட்ட கோவில் எலுமிச்சை பழம்
Lemon sold for Rs 35,000 at auction in TN temple
Updated: Mar 10 2024 4:26PM
Erode (TN), Mar 10 (PTI) A single lemon fetched Rs 35,000 at an auction held at a private temple at a village near here, the temple authorities said.
.
As per custom, the lemon and other items including fruits offered to Lord Shiva during the Mahasivarathiri festivities observed on Friday night at the Pazhapoosaian temple near Sivagiri village, 35 km from here, were auctioned..
சிவகிரி அருகே கோவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.35,000-க்கு ஏலம் போனது. ஈரோடு, ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சிவன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தன
இதைத் தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவை ஏலம் விடப்பட்டன. இவற்றை ஏராளமான பக்தர்கள் போட்டி போட்டு ஏலத்தில் எடுத்துச் சென்றனர்.
பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழத்தை கோவில் நிர்வாகத்தினர் ஏலம் விட்டனர். அந்த பழத்தை பக்தர் ஒருவர் ரூ.35,000-க்கு ஏலத்தில் எடுத்தார். அவருக்கு அந்த பழத்தை கோவில் நிர்வாகத்தினர் வழங்கினர். பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலத்தில் எடுப்பவருக்கு செல்வமும், ஆரோக்கியமும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
In a unique tradition observed during the Mahasivarathiri festivities at the Pazhapoosaian temple near Sivagiri village, a single lemon became the centre of attention as it fetched an impressive Rs 35,000 in an auction. The private temple, located 35 km from the village, saw as many as 15 devotees participating in the auction, where not only lemons but also other items, including fruits, offered to Lord Shiva were sold.
The auction took place as part of the customary practices during the Mahasivarathiri celebrations on Friday night. The lemon, symbolic of the offerings made to the deity, gained significant value during the bidding process. Ultimately, a devotee from Erode secured the lemon with the highest bid of Rs 35,000, according to the temple authorities.
This unique tradition is rooted in the belief that the person who manages to secure the lemon through the highest bid will be bestowed with blessings of riches and good health for years to come.
—SUBHAM—
Lemon believed to be 285 years old fetches £1,416 at UK auction
Lemon unexpectedly discovered in back of drawer of 19th-century cabinet
A 285-year-old lemon, found in an antique cabinet, was auctioned for £1,416 in the UK. In Indian Rs.141600
According to Brettells Auctions in Shropshire, the lemon was unexpectedly found inside a 19th-century cabinet which was being photographed for sale.
The cabinet was brought in by a family claiming it belonged to a deceased uncle.
The lemon was inscribed with these words: “Given By Mr P Lu Franchini Nov 4 1739 to Miss E Baxter.”
The auction house decided to sell the 285-year-old lemon.
“We thought we’d have a bit of fun and put it (lemon) in the auction with an estimate of £40-£60,” said auctioneer David Brettell.
They were up for a pleasant surprise when it fetched £1,416 at an auction.
On the other hand, the 19th-century cabinet sold for about £32.
According to the Sun, the cabinet is thought to have been brought back to England from colonial India as a romantic gift.
There are several examples in history of ordinary items fetching exorbitant prices in an auction. For example, in 2000, an eBay auction featured a piece of Justin Timberlake’s half-eaten French toast at a New York radio station, fetching over £785.
Another woman sold a piece of bubble gum that Britney Spears had chewed and spat out at a concert at Wembley Arena in 2000. The winning bid was about £10,000.
In Hindi
तमिलनाडु में एक नींबू ₹35 हजार में नीलाम:महाशिवरात्रि पर मंदिर में चढ़ा था; पुजारी बोले- यह पैसा और अच्छी सेहत देगा
तमिलनाडु के इरोड से 35 किमी दूर शिवगिरी गांव के एक मंदिर में चढ़ा नींबू 35 हजार रुपए में नीलाम हुआ। यह नींबू पझापूसियन मंदिर में शुक्रवार (8 मार्च) की रात मनाए गए महाशिवरात्रि उत्सव के दौरान भगवान शिव को चढ़ा था। नींबू के अलावा भगवान को चढ़ाए गए फलों और बाकी चीजों की नीलामी भी की गई।
मंदिर के अधिकारियों ने कहा कि यह मंदिर में चली आ रही सालों पुरानी परंपरा है। इस बार की नीलामी में 15 भक्तों ने हिस्सा लिया। नीलामी के बाद इरोड के एक भक्त ने यह नींबू 35 हजार रुपए में खरीदा।
हालांकि यह पहला मौका नहीं है, इससे पहले भी ऐसी ही नीलामी हो चुकी है। 2019 में विल्लुपुरम के पास रथिनावेल मुरुगन मंदिर में 9 नींबू 1.03 लाख रुपए में बेचे गए थे।
क्यों खास था यह नींबू पझापूसियन मंदिर के पुजारी ने नीलाम किए गए नींबू को भगवान शिव के सामने रखा था। इसके बाद एक छोटी सी पूजा की थी। इसके बाद भक्तों की मौजूदगी में इसे उस व्यक्ति को लौटा दिया जिसने नीलामी में सबसे अधिक बोली लगाई थी।
ऐसा माना जाता है कि जो व्यक्ति सबसे ऊंची बोली लगाने में सफल होता है और नींबू प्राप्त करता है, उसे आने वाले सालों में धन और अच्छे सेहत का आशीर्वाद मिलता है।
तिरुवनैनल्लूर में भी होती है नींबू की नीलामी तिरुवनैनल्लूर के बालथंडायुथपानी मंदिर में इष्टदेव मुरुगा के भाले पर कील लगे नींबू की नीलामी करने की प्रथा है। त्योहार के पहले 9 दिनों के दौरान हर दिन एक नींबू पर कील लगाई जाती है। इसके बाद आखिरी दिन इनकी बोली लगती है। 2016 में इस मंदिर में पहले दिन के नींबू की कीमत 39 हजार रुपए थी।
बनारस में नींबू के दाम कम करने हुई थी तंत्र पूजा
2022 में नींबू के दाम में कमी लाने के लिए वाराणसी के देवी मंदिर में तंत्र पूजा की गई थी। यह पूजा भगत सिंह यूथ फ्रंट के अध्यक्ष हरीश मिश्रा ने स्थानीय लोगों के साथ मिलकर की थी। पूजा के लिए सिगरा क्षेत्र में मां आदिशक्ति के मंदिर में नींबू के साथ तंत्र विधान किया गया था। जिस समय यह पूजा की गई थी, उस समय एक नींबू 15 रुपए का बिक रहा था।
–SUBHAM—
TAGS- TEMPLE, LEMON, AUCTION, 285 YEAR OLD, SHROPSHIRE
Sankha Conch in Hinduism – Part 2 (Post No.13,081)
Hindus blew Chanks in London Demo. against Anti Hindu BBC.
Why is that Dakshinavarta (Valampuri) is considered holy? Hindus invented the clockwise system. Anything clockwise is holy in Hinduism. They do all auspicious things by going round in the clockwise direction ; if it is temple they go round the god in clockwise direction. They use only right hand in all temple rituals. Going clockwise is called Pradakshina; that is you stand facing sun in the east and turn Dakshina/South. So the very word Pradakshina shows that you turn in clockwise direction. Only in funeral ceremony they do Apradakshina (anti- clockwise). Another reason is rarity; in Nature we have less Dakshina Avarta (Right whorl) Sankhas/conches/shells.
The Indian chank Turbinella pyrum is a shell with special meaning in India. Its transformation into a shell trumpet is accomplished by simply knocking off its apex. It is found only in Indian ocean around Andaman Islands and Gulf of Mannar.
A reversed Chank is valuable because it is extremely rare. Hindus call it right whorled Chanks; but biologist call it left handed chanks because they look it from different angle (topsy turvy). These conches/ Chanks are encased in gold or silver and kept in temples for use. They have stands embedded with precious stones. Cheap varieties are available from South Africa and Florida (USA); they are not smooth ones found in temples but with thorny edges.
xxxxx
In the Vedas
Valampuri = Dakshinaavarta Sankha/Chank/Conch
Following information is taken from Wisdom Library
Śaṅkha (शङ्ख) or Śaṅkhamaṇi refers to one of the Maṇis (protection amulets) mentioned in the Atharva-veda. Maṇis refer to small round objects made from natural plant parts or from the solid coverings of animal bodies. It has the properties of being an amulet for protection and warding off evil spirits. or as an herb for treating illnesses. Sudev Krishna Sharman G. listed 9 types of Maṇi [e.g., śaṅkha-maṇi [sangkhamani]—means pearl from the conch shell (Strombus gigas or Conch Pearl)] according to the Atharvaveda including specifying assumptions about the meaning.
Xxx
In Tamil Houses
Sankha Nidhi and Padma Nidhi are two treasures of Kubera. Tamil houses , particularly, Chettiar community business keep the symbols on main doors of their palatial houses.
Kubera’s Nine Treasures
Valampuri Chank- Cheap Variety
Śaṅkha (शङ्ख, “conch”):—One of the nine symbols representing the cosmic principles of the universe, according to the Pāñcarātra literature. These nine weapons and ornaments symbolize the principles which they represent as the presiding deity. The Conch (śaṅkha) represents sāttvic ahaṃkāra (‘virtuous and rightous egoism’).
Śaṅkha (शङ्ख) or Śaṅkhamudrā is the name of a mudrā described in the Īśvarasaṃhitā 31.33.—Accordingly, “the left thumb shall be grasped with the right fist. The fingers in the left hand are to be placed on those of the right. The tip of the left forefinger shall mutually adhere face to face with the right. This is śaṅkhamudrā when it is on the back”. Mūdra (eg., Śaṅkha-mudrā) is so called as it gives joy to the tattvas in the form of karman for those who offer spotless worship, drive out the defects which move about within and without and sealing up of what is done.
Śaṅkha (शङ्ख) and Padma are the two treasures (nidhis) which dharma bears. These are intended to help those people who pursue the right course conduct in order that the pursuits (kāma and artha) would have been fruitfully taken up by them. Kāma means desires in life. Artha means wealth or economic condition. Money is required to pursue these. The two measures Śaṅkha and Padma are thus helpful for them in pursuing these goals. The Viṣvaksena-aṃhitā (XX 87-88) mentions conch, discus and yellow cloth while describing dharma.
xxxx
Musical Instrument
Śaṅkha (शङ्ख) refers to a “musical instruments” that existed in ancient Kashmir (Kaśmīra) as mentioned in the Nīlamatapurāṇa.—The Nīlamata says that the land of Kaśmīra was thronged with ever-sportive and joyful people enjoying continuous festivities. Living amidst scenes of sylvan beauty they played, danced and sang to express their joys, to mitigate their pains, to please their gods and to appease their demons.
The Nīlamata mentions Śaṅkha twice.
Xxxx
The conch represents the first manifestation of articulate language—AUM—nāda-brahman. This monosyllable contains within itself all language and meaning in a potential state. It is the seed from which speech developed—the nutshell containing the whole of knowledge and wisdom. All matter is light and vibration. All the forms of the universe are effects of the primeval sonic vibration. Thus the conch is the symbol of the origin of exist e nce. Its shape is a spiral, starting at one point and evolving into ever increasing spheres. It comes from water, the first compact element. When blown it produces the sound AUM.
Source: Shodhganga: Kasyapa Samhita—Text on Visha Chikitsa (p)
xxxx
Śaṅkha (शङ्ख) refers to one of the eight Divine Serpents visualized as the decorations (nāgābharaṇa) of Garuḍa, according to the second chapter of the Kāśyapa Saṃhitā: an ancient Sanskrit text from the Pāñcarātra tradition dealing with both Tantra and Viṣacikitsā (Toxicology).—Accordingly, text text dictates that a Garuḍa-upāsaka, the aspirant, must meditate on Garuḍa of the following form—[…] He shines with his head adorned with a crown, bedecked with jewels, handsome in every limb, with tawny eyes and tremendous speed, shining like gold, long-armed, broad-shouldered and adorned with the eight divine serpents or Nāgas [e.g., Śaṅkha form his crown]. Śaṅkha form his crown.
1Śaṅkha (शङ्ख).—Considered to be a great, sublime treasure, found in Kubera’s court. Brahmadatta, King of Pāñcāla attained heaven as he used to give Śaṅkha to good brahmins. (Śānti Parva, Chapter 234 and Anuśāsana Parva, Chapter 137). Śaṅkha appeared on earth, according to one belief, from the bones of Śaṅkhacūḍa. (For details see under Tulasī, Para 2).
Śaṅkha (शङ्ख, “conch”): a Musical Instrument.—The Jātakas mention it. In the epic war-scenes use of the śaṅkhas is very common, and we find in the Gītā the śaṅkhas of various warriors mentioned by name. Kauṭilya testifies to the use of śaṅkhas in war. The Vāyu-purāṇa, however, shows its use only in connection with the worship of Śiva by the Bhūtas.
xxxx
Source of Aum
The conch (Śaṅkha) in Viṣṇu’s upper left hand represents the first manifestation of articulate language— AUM— nāda Brāhman. This monosyllable contains within itself all language and meaning in a potential state. It is the seed from which speech developed — the nutshell containing the whole of wisdom.
All the forms of the universe are effects of the primeval sonic vibration. Thus the conch is the symbol of the origin of existence. Its shape is a spiral, starting at one point and evolving into ever increasing spheres. It comes from water, the first compact element. When blown it produces the sound AUM.
xxxx
In Mathematics
Śaṅkha (शङ्ख) refers to a “quintillion” (1,000,000,000,000,000,000) in various lists of numeral denominations, according to gaṇita (“science of calculation”) and Gaṇita-śāstra, ancient Indian mathematics and astronomy.—We can definitely say that from the very earliest known times, ten has formed the basis of numeration in India. While the Greeks had no terminology for denominations above the myriad (104), and the Romans above the milk (103), the ancient Hindus dealt freely with no less than eighteen denominations [e.g., śaṅkha]. Cf. Yajurveda-saṃhitā (Vājasanyī) XVII.2; Taittirīya-saṃhitā IV.40.11, VII.2.20.1; Maitrāyaṇī-saṃhitā II.8.14; Kāṭhaka-saṃhitā XVII.10, XXXIX.6; Anuyogadvāra-sūtra 142; Āryabhaṭīya II.2; Triśatikā R.2-3; Gaṇitasārasaṃgraha I.63-68.
xxxx
Śaṅkha (शङ्ख, “conchshell”) is a Sanskrit word referring to a musical instrument, to be sounded during the ceremony of “laying the foundation” of the playhouse (nāṭyamaṇḍapa), according to the Nāṭyaśāstra 2.35-37.
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ற பகுதியில் 150வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………
PART 16
xxxxx
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—16
xxxxx
க
151.மூலச்சூடு தணிய
151. கற்றாழைச் சோறும் ஆவின் பாலும் கலந்து காலை மாலை புன்னைக்காயளவு உண்டு வந்தால் மூலச்சூடு தணியும். விந்து கட்டும் ; சொறி நமை சோகையிவை தீரும் .
xxxxx
152 லிங்க வீக்கத்திற்கு
கற்றாழைச் சோற்றை ஏழுதரம் கழுவியெடுத்து கொருக்குரிணம் கண்டு … ற்குமேல் வீக்கமுண்டாயிருக்கும் லிங்கத்தின் மீது ஒரு ராத்திரி வைத்துக்கட்ட வாடிப்போகும் .
xxxx
153. பிள்ளைகள் அடித்தள்ளினதற்கு
கரிசலாங்கண்ணியும் பழம்புளியும் சரியிடைவைத்தறைத்து கெச்சக்கரவு அல்லது புன்னைக்காயளவு எட்டு நாள் கொடுக்கத் தீரும்.
xxxx
154. சீத சுரத்திற்கு
கண்டங்கத்திரி சீந்தில் தண்டு தாமரை வளையம் மூன்றும் கிஷாயம் வைத்து சுக்கு கோரைக்கிழங்கு பொடி செய்து கொஞ்சம் கொடுக்கவும்; இப்படி 2-3 வேளை கொடுக்கத் தீரும் .
xxxx
155.விக்கல் வாந்தி சுரத்திற்கு
கண்டங்கத்திரி விரை அமுக்குரா சமூலம் திப்பிலி இவை சமநிடை போட்டு கிஷாயம் வைத்து தேன் முலைப்பால் விட்டுக் கொடுக்கத் தீரும்.
xxxx
156.பல்வலிக்கு
கண்டங்கத்திரி சமூலத்தைச் சுட்டுக்கரியாக்கி பொடித்து வைத்துக்கொண்டு அந்தி சந்தி பல் துலக்கி வந்தால் பல் வலி சாந்தியாகும்.
xxxx
157.பீனிசத்திற்கு தைலம்
கண்டங்கத்திரி பழம் துளசி வெற்றிலை இவைகளின் சாறு கஞ்சா கிஷாயம் நல்லெண்ணெய் வகைக்கு படி அறைத்து ஒன்றாய் கலந்து காய்ச்சி வடித்து தலை முழுகி வர ரத்த பீனிசம், சிராய் பீனிசம் இவை தீரும்; இச்சா பத்தியம்.
xxxx
158.சுரத்தின் பேரில் கொடுக்கும் பேதி கிஷாயம்
கற்றாழைச் சருகு வேம்பின் பட்டை கடுக்காய் கார் கோலரிசி இவைகளை சிதைத்துக் கிஷாயம் செய்துகொடுக்க இரண்டோரு விசை விரோசனமாகி சுரம் தணியும்.
xxxx
159.உட்சுரம் கால் எரிவுக்கு
கற்றாழைச் சாறு நெல்லிக்காய் சாறு முசுமுசுக்கைச் சாறு வகைக்கு அரைக்கால்படி நல்லெண்ணெய் ஒரு படி அதிமதுரம் ஒரு பலம் அறைத்துபோட்டுக் காய்ச்சி முழுகிவந்தால் நிவர்த்தியாகும்
xxxx
160.அண்ட வாய்வுக்கு
கழச்சிப்பருப்பு வெள்ளுள்ளி முருங்கைப்பட்டை சுக்கு கருங்காணம் வகைக்கு இரண்டு களஞ்சி எடுத்து இடித்து ஒரு படி தண்ணீரில் போட்டு அரைக்கால் படியாகக் காய்ச்சி இறக்கிக் கொடுக்கவும். இப்படி ஆறு வேளை கொடுக்க சாந்தியாகும்
இதுவுமது
கழச்சிப்பருப்பு சித்திர மூல வேரின் பட்டை மாவிலிங்கம் வேர்ப்பட்டை, வகைக்கு பலம் ஒன்றெடுத்து இடித்துப்பொடித்து அண்டவெள்ளைக் கருவால் கிளறி களஞ்சிக் காயளவு கொடுக்க சாந்தியாகும் .
கர்மபாஷோச்சேத் – அதாவது கர்ம விதிகளிலிருந்து விடுதலை என்ற முக்கியமான அத்தியாயம் யோக வாசிஷ்டத்தில் விரிவாக விளக்கப்படுகிறது.
1. கர்மபல நியம:
2.
கர்மத்தைத் தொடர்ந்து வரும் பலன்கள்
இதில் கர்ம ரகசியம் விரிவாக விளக்கப்படுகிறது.
ந ச ஷைலோ ந தத்வியோம ந சோப்பிதஸ்ச ந விஷ்டபம்|
அஸ்தி யத்ர பலம் நாஸ்தி க்ருதநாமாத்மகர்மணாம் ||
செய்யப்பட்ட ஒரு கர்மத்திலிருந்து அதன் விளைவு அல்லது பலனிலிருந்து தப்பிக்க ஒரு மலையும் இல்லை, ஒரு வானமும் இல்லை, ஒரு கடலும் இல்லை, ஒரு சொர்க்கமும் இல்லை.
அதாவது கர்மம் ஒன்றைப் புரிந்து விட்ட பின்னர் ஒருவனால் அது தரும் பலனிருந்து எங்கு சென்றாலும் விடுதலை பெற முடியாது. செய்ததற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.
ஐஹிகம் ப்ராவதனம் வாபி கர்ம யத்ரசித்தம் ஸ்புரத் |
பௌருஷோசௌ பரோ யத்னோ ந கதாசன நிஷ்பல: ||
பிரகாசிக்கின்ற ஒரு செயலானது, இந்த உலகத்தில் செய்தாலும் சரி அல்லது பூர்வ ஜென்மத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக இருந்தாலும் சரி, அது பலனைத் தரும்போது அந்த உயரிய மனித முயற்சியானது ஒரு போதும் பலனை அளிக்காமல் போகாது.
3. கர்ம ஸ்வரூபம்
கர்மத்தின் இயற்கை
க்ரியாஸ்பந்தோ ஜகத்யஸ்மிமன்கர்மேதி கதிதோ புதை: |
பூர்வ தஸ்ய மனோ தேஹம் கர்மாதஸ்சித்தமேவ ஹி ||
அறிஞர்களால் இந்த உலகில் செயல்களின் இயக்கமானது கர்மம் என்று விளக்கப்படுகிறது. முதலில் மனமே அதன் உடலாக இருந்தது. (அதாவது செயலானது மனதில் முதலில் உதிக்கிறது) ஆகவே செயல் என்பது மனமே தான்.
மனமே அனைத்து கர்மங்களுக்கும் காரணம் என்பது இங்கு விளக்கப்படுகிறது.
மானசோயம் சமுத்தமேஷ: கலாகலநரூபத: |
ஏதத்தகர்மணாம் பீஜம் பலமஸ்யைவ வித்யதே ||
இயக்கத்தின் புரிதல் பற்றிய இயற்கையினால், செயலின் விரிவு மனதைச் சார்ந்து இருக்கிறது. இதுவே அந்த செயல்களுக்கான விதையாகும். அதன் பலன் (அல்லது விளைவு) இந்த மனதிற்கே சம்பவிக்கிறது.
கர்மபீஜம் மன:ஸ்பந்த: கத்யதேதானுபூயதே |
க்ரியாஸ்து விவிதாஸ்தஸ்ய ஷாகாஸித்ரபலாஸ்தரோ: ||
கர்மத்தின் விதையானது மனதின் இயக்கமே ஆகும். அது அப்படித்தான் என்று பிரகடனப்படுத்தப்படுகிறது. அனுபவமாகவும் கூட ஆகிறது. வெவ்வெறு உடல் சம்பந்தமான இயக்கங்கள் அந்த மரத்தின் வெவ்வெறு பழங்களைத் தரும் கிளைகளாகும்.
மனத்தில் எண்ணங்கள் எழுகின்றன. அது கர்மத்தில் முடிகிறது. வெவ்வெறு எண்ணங்கள் வெவ்வேறு உடல் இயக்கங்களைச் செய்ய கர்மம் என்னும் மரத்தின் பல்வேறு கிளைகளாக ஆகின்றன. அந்தக் கிளைகளில் செய்கைக்குத் தக்கவாறு வெவ்வேறு பழங்கள் விளைகின்றன.
மிகத் தெளிவாக மனமே அனைத்திற்கும் ஆதி காரணம் என்று இங்கு விளக்கப்படுகிறது.
ஒரு கர்மத்தைச் செய்து விட்டு அதன் பலனிலிருந்து தப்பி விடலாம் என்று யாரும் எண்ணக் கூடாது. ஏனென்றால் அந்தக் கர்மத்தைச் செய்தவன் எங்கு சென்றாலும் அது பூமியில் உள்ள மலையோ, கடலோ அல்லது வானமோ ஏன் சொர்க்கமோ கூட சென்றாலும் அவனால் செய்த கர்மத்தின் விளைவிலிருந்து தப்பிக்க முடியாது.
Shankha/ Conch in Hinduism – Part 1 (Post No.13,077)
There are very interesting beliefs and uses of Conch in Hinduism.
Hindus use Conches for making warning sounds or auspicious sounds. They use it in FIVE occasions:
1.To start a war (as we see in the Bhagavad Gita; all commanders blew the conches at the start of the great Mahabharata war. It is in Tamil literature as well)
2.Temple functions. Even today the blowing of Shanka and Ringing of bells take place during the Arti Time.
3.During Hindu Weddings. Andal’s Tamil poems confirm it. But today only Bengali Hindus follow this custom.
4.Funeral Ceremonies: When the dead boy is taken to crematorium blowing of the conch takes place.
5.Protest Meetings: To protest any particular action they blow conches to attract attention.
Anti BBC Protest
Last year I had been to Anti BBC Demonstration in Central London. It was organised by Patriotic Hindus against BBC’s mischievous propaganda about Hindus and India. Two protestors came with conches and blew them now and then.
Tamil saint Warning
Great Tamil saint Pattinathar lived abut 1000 years ago. He warned Tamils to remember three occasions when the conch is sounded. And he asked all devotees to think of God Shiva before the third Conch sound is done.
The first of the chanks feeds with milk The second shackles us with women of dense locks; The third is sounded to announce our death. How much, Oh, how much is the weal of worldly life?
The first Chank or Sankha is used by mothers to feed the child with milk.
The second sound is heard in weddings.
The third sound is heard when the dead body is taken to crematorium.
xxxx
In the Bhagavad Gita
Hindu Gods Vishnu and Varuna hold Sankha (in Tamil Sangu) in their hands.
The great conch that Vishnu holds is called Paanchajanya.
Not only Vishnu’s conch has a name, but also all Pandava conches have names. It is in the Bhagavad Gita.
Translation: Shri Krishna Maharaj blew a conchshell named Panchjanya; Arjun blew a conchshell named Devdutt, and the doer of horrifying deeds, Bheemsen blew a great conchshell named Paundr.
Translation: Kunti’s son, King Yudhishthir blew a conchshell named Anantvijay, and Nakul and Sahdev blew conchshells named Sughosh and Manipushpak.
xxxx
CONCH WONDER IN TAMIL TEMPLE
Tirukazukundram near Chengalpattu in Tamil Nadu is famous for two things. The temple in the village is attributed to Lord Shiva called Veda Girishwar. The town name in English is Holy Eagle Hill.
The temple at the top of the hill was visited by two eagles everyday at a particular time to eat the Rice Prasad (holy offering to god). It went on for hundreds of years, but recently the eagles stopped visiting for unknown reasons. The sighting of the eagles every day was recorded in 150 year old books and records.
The second wonder is sighting of conches in the temple tank at the foothills in regular intervals of almost 12 years. The temple records show the conches were washed away to the banks of the tank on 18 July, 1908, 26th June 1919, 1939, 1952, 1976, 1988, 1999, August 2011 and now in September 2024.
Lord Shiva is called Abhisheka Priya (one who is fond of bathing or anointing) and Lord Vishnu is called Alankara Priya (one who is fond of Decorations and Dressing). Following this dictum all big Shiva temples store 1008 conches for doing ritual bathing of Shiva or Shiva Linga with Ganges water (Abisheka) in the month of Kartika. Every year on all Mondays (Kartik Somavar) of that month, abisheka is done. People throng the temples to have the darshan at that time.
xxxx
The very word Conch is English is derived from Sanskrit word Sankka; The letter C is pronounced in English as S/C and K ( as in Charles and Character). Tamils also use the same Sanskrit word in Tamilized form Sangu. Tamil grammar bans Sa as initial letter of any Tamil word. So all SA letered words in Tamil are from Sanskrit.
xxxx
Conches (Shanka in Sanskrit) have been used by the Hindus for thousands of years as money, musical instrument, decorative art pieces and objects of worship. We get them from the sea. Most of the conches are anti clockwise. But very rarely we get clockwise conches and they are called Dakshinavarta Shanka ( In Tamil ‘Valampuri’). This means right whorl or clockwise whorl. They are more valuable and holier than the normal ones. The type of conches used by the Indians is ( Turbinella Pyram) coming from Indian Ocean. But cheaper varieties are available from South Africa.
xxxx
These sacred conches were on the flags of the Hindu Kings once. Travancore Maharaja had this on his flag. It is considered one of the Eight Auspicious symbols of Buddhists. Tibetans and Chinese keep them in the Buddhist Viharas. Many of them are covered with gems, gold and silver plates. Of late these have been auctioned by big Western auction houses for thousands of dollars. Museums around the world have acquired such conches.
2. எந்த சங்கினைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள் ?
XXXX
3. எந்த ஊரில்12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் சங்கு தோன்றுகிறது ?
XXXX
4. பஞ்ச பாண்டவர் கைகளிலுள்ள சங்குகள் பெயர்களை பகவத் கீதையில் காணலாம். அவை யாவை?
xxxx
5. எந்த மாதத்தில் சிவபெருமானுக்கு 1008 சங்குகளைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்?
xxxx
6. வலம்புரிச் சங்கு என்றால் என்ன ?
xxxx
7. சங்கு பற்றி பட்டினத்தார் என்ன சொல்கிறார் ?
xxxx
8. சங்கு என்பதிலிருந்து உருவான ஆங்கிலச் சொல் என்ன ?
XXXX
9. தமிழ்க் கல்யாணங்களில் சங்கு ஊதி தாலி கட்டும் வழக்கம் பற்றி ஆண்டாள் என்ன சொல்கிறாள் ?இப்போதும் திருமணங்களில் சங்கு ஊதி தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யார்?
XXXX
10. கோவிலில் தீபாராதனை காலத்தில் சங்கு ஊதுவது ஏன் ?
XXXX
விடைகள்
1.பாஞ்சஜன்யம்
XXXX
2. வலம்புரிச் சங்கினைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்
XXXX
3. திருக்கழுகுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் ௧௨ ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தோன்றும். இவ்வாறு தோன்றிய சங்குகளைக் கோவிலில் யாரும் காணலாம் ; செங்கல்பட்டுக்கு அருகில் இந்த ஆலயம் இருக்கிறது .
5. கார்த்திகை மாத சோமவாரங்களில் (திங்கட்கிழமை) பெரும்பாலான கோவில்களில் சிவ பெருமானுக்கு சங்காபிஷேகம் நடக்கும் .
xxxx
6. சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் (clock wise whorls) அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர்.
xxxx
7. முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.
முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள்.
இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர்.
மூன்றாவது சங்கு? அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.
xxxx
8. காஞ்ச் CONCH என்று சொல்லுவர். இது உண்மையில் சங்க என்ற ஸம்ஸ்க்ருதச் சொல். பின்னர் தமிழில் சங்கு ஆனது . தொல்காப்பியச் சூத்திரப்படி தமிழில் ‘ச’ எழுத்தில் சொற்களே துவங்க முடியாது ஆகையால் சங்கம், சங்கு என்பதெல்லாம் சம்ஸ்க்ருதம் தான். சங்க என்பதே சரியான உச்சரிப்பு. சி/C என்ற ஆங்கில எழுத்தை ச என்றும் க என்றும் உச்சரிக்கும் வழக்கம் இருப்பதால் ஆங்கிலத்தில் காஞ்ச் CONCH என்கின்றனர் .
xxxx
9. ஆண்டாள் ,வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—
மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டே, தோழீ! நான்.
–ஆண்டாள் நாச்சியார் திருமொழி
வங்காளி இந்துக்கள் இப்போதும் சங்கு ஊதி கல்யாணம் செய்கின்றனர்
XXXX
Temple Tank Shanka Wonder from Tiru Kazuku Kundram
10. சங்கு ஒலி ஓம்கார ஒலியைக் குறிக்கும். வைதீக சைவர்கள் ஆத்மார்த்தமாகவோ பரமார்த்தமாகவோ செய்யும் பூஜைகளில் சங்கு பூஜை முக்கிய இடத்தைப் பெறுகிறது. நத்தார்படையின் மகிமை சொல்லுதற்கரியது. சங்குப் படைக்கு மத்தியில் அதன் அதி தேவதைகளான கங்கா தேவியும் வருணனும் வசிக்கின்றனர். சங்கின் முன்பாகத்தில் கங்கை, சரஸ்வதியும் பின்பாகத்தில் பிரஜாபதியும் வசிக்கின்றனர்.
“ ஏ, பாஞ்சஜன்யமே ! நீ முன்னர் திருப்பாற் கடலில் உதித்தனை. மஹாவிஷ்ணுவினால் கையில் தரிக்கப்பட்டு எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டனை. தேவர் தம் பகைவராகிய அசுரர்களின் மனைவியரின் கருக்களை எல்லாம் உன் பேரொலியினால் ஆயிரம் தூள் தூளாகினை. உனக்கு வணக்கம் “
என்ற மந்திரத்தினால் சங்கில் தீர்த்தத்தை நிரப்பவேண்டும்.சங்கு, ஹரியின் இருப்பிடம். பணத்தைக் கொண்டுவரும். சங்கு தீர்த்தம் பற்றி பத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்றும் புராணங்கள் கூறும்.”
தட்சிணாவர்த்த (வலம்புரிச் சங்கு) சங்கு கொண்டு அர்ச்சிப்போன் ஏழு பிறவிகளில் செய்த வினைகளயும் நீக்கலாம் என்று ஸ்காந்தம் கூறும்.
–SUBHAM—
TAGS- வலம்புரிச் சங்கு, சங்கு ஊதுவது ஏன், பட்டினத்தார், சங்குப் பத்து QUIZ, திருமணம் , கல்யாணம் , ஆண்டாள், வங்காளி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யே ஜிந்தகி உஸீ கி ஹை, ஜீவிதமே சபலமோ,, என் சிந்தை நோயும் தீருமா,
ச. நாகராஜன்
ஒரே ஹிந்தி மெட்டில் மலர்ந்த இரு தமிழ் திரைப்படப் பாடல்கள்!
1953-ம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படம் அனார்கலி.
இது அனைவரும் அறிந்த ஒரு காதல் கதை. ப்ரதீப் குமார்(சலீமாக நடித்தார்) , பினா ராய் (அனார்கலியாக நடித்தார்) , குல்திக் கௌர், நூர்ஜஹான் ஆகியோர் நடித்த் இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் சி.ராமச்சந்திரா.
12 பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றன.
பாடல்கள் அனைத்தும் ஹிட்!
இந்தப் படத்தை இயக்கியவர் : நந்தலால் ஜஸ்வந்த்லால்.
இதில் இடம் பெற்ற ஒரு பாடல் அனைவரையும் கவர்ந்தது. பாடலைப் பாடியவர் லதா மங்கேஷ்கர்.
பாடலை யூ டியூபில் என்றும் கேட்கலாம். பாட்டின் நேரம் 4 நிமிடம் 11 வினாடிகள்
யே ஜிந்தகி உஸீ கி ஹை ஜோ கிஸீ கா ஹோ கயா
என்ற அந்தப் பாடலைக் கீழே பார்க்கலாம்:
yeh zindagi usi ki hai jo kisi ka ho gaya pyaar hi mein kho gaya yeh zindagi usi ki hai jo kisi ka ho gaya pyaar hi mein kho gaya yeh zindagi usi ki hain …
yeh bahaar yeh sama keh raha pyaar kar kisiki aarzoo mein apne dil ko beqarar kar zindagi hai bewafa loot pyaar ka mazaa yeh zindagi usi ki hai …
dhadak raha hain dil to kya dil ki dhadkane na gin phir kahaan yeh phursatein phir kahaan yeh raat din aa rahi hain yeh sada mastiyon mein doob jaa yeh zindagi usi ki hain …
do dil yahaan na mila sake, milenge us jahaan mein khilenge hasaraton ke phul, maut ke aasman mein ye zindagii chali gai jo pyar mein to kya huaa ye zindagii …
sunaa rahii hai daastaan, shamaa mere mazaar kii fizaa mein bhii khil rahii, ye kalii anaara kii ise mazaar mata kaho, ye mahal hai pyaara kaa ye zindagii …
ai zindagii ki shaama aa, tujhe gale lagaauun main tujhii mein Dub jaauun main jahaan ko bhuula jaauun main basa ek nazar mere sanam, alvidaa, alvidaa alvidaa … alvidaa … alvidaa …
ஜீவிதமே சபலமோ
இதே அனார்கலி கதை தெலுங்கிலும், தமிழிலும் 1955-ல் எடுக்கப்பட்டது.
அனார்கலியாக அஞ்சலிதேவியும், சலீமாக நாகேஸ்வரராவும் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றனர். இசை அமைத்தவர் பி.ஆதிநாராயண ராவ். தெலுங்கில் பாடலை எழுதியவர் சமுத்ரலா. தமிழில் எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.
பாடலைப் பாடியவர் ஜிக்கி.
பாடல் இது தான்:
ஆ…. ஆ… ஆ…. ஆ… ஜீவிதமே சபலமோ ஜீவிதமே சபலமோ என் ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ ப்ரேமை என்றால் மதுரமோ? ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ ப்ரேமை என்றால் மதுரமோ? ஜீவிதமே சபலமோ
ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ ப்ரேமை என்றால் மதுரமோ?
வசந்த மதுர தேன்மலர் மன்றாடி ஏங்கும் வேளையே வசந்த மதுர தேன்மலர் மன்றாடி ஏங்கும் வேளையே காவின் தென்றல் வீசுதே யாவும் ப்ரேமை லீலையே காவின் தென்றல் வீசுதே யாவும் ப்ரேமை லீலையே விண்ணோடு பேசும் உறவிலே கண்ணோடு பேசும் ஆவலால் விண்ணோடு பேசும் உறவிலே கண்ணோடு பேசும் ஆவலால்
ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ ப்ரேமை என்றால் மதுரமோ? ஜீவிதமே சபலமோ என் ஜீவிதமே சபலமோ
என் சிந்தை நோயும் தீருமா?
இதே ஹிந்தி மெட்டு மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் இடம் பெற்றது.
அற்புதமான இசையுடன் கூடிய இந்த சோகமயமான பாடலை 1955-ல் வெளியான காவேரி படத்தில் ஜிக்கி பாடினார். D. யோகானந்த் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி கணேசனும் பத்மினியும் நடித்தனர். இதே படம் தெலுங்கில் விஜயகௌரி என்று படமாக்கப்பட்டது.
இசை அமைத்தவர் ஜி.ராமநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் சிதம்பரம் ஜெயராமன்.
இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் உடுமலை நாராயணகவி
என் சிந்தை நோயுந் தீருமா?
தீயன் சூழ்ச்சி மாறுமா?
ஸ்நேகம் ஒன்று சேருமா (என்)
தாயில்லா ஏழை நான்
தரணிமீது வாழ்வெனோ?
சகாயம் தானில்லாது பெருமை
தாழ வீணில் மாள்வெனோ?
தந்தை அன்பைக் காண்பெனோ?
சாந்தி தேடிப் போவேனொ..? (என்)
மனம் பெறாத மல்லிகை
மாண்பு குறைதல் போலவே
மாதும் நானும் சீரிலாப் பேதையாதல் ஞாயமோ?
மாசிலாத தெய்வமே
தேவியே கண் பாரம்மா! (என்)
ஒரே ஹிந்தி மெட்டில் இரு தமிழ்ப் பாடல்கள். அனைவரும் ரசித்தனர்.
மூன்று பாடல்களுமே ஹிட் தான்.
காரணம் அதில் இருந்த இசை மெட்டு தான்!
உற்சாகமும் உத்வேகமும் அந்தக் காலத்தில் பல மொழிகளிலும் இருந்து பெறப் பட்டதை இந்த யூ டியூப் காலத்தில் பார்த்து வியக்க முடிகிறது.
பக்கத்திலேயே ஹிந்திப் பாடலையும் தமிழ்ப் பாடலையும் பார்க்கும் ஒரு அமைப்பு உருவாகும் என்று 1955-ல் சொல்லி இருந்தால் யார் தான் நம்பி இருப்பார்கள்?
இப்போதோ நூற்றுக் கணக்கான ஹிந்திப் பாடல்களையும் அதே மெட்டில் உள்ள தமிழ்ப் பாடல்களையும் ஒரு சேரக் கேட்க முடிகிறது!
ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கும், ஹிந்தியிலிருந்து ஆங்கிலம் மற்றும் தமிழுக்கும், தமிழிலிருந்து ஹிந்திக்குமாக இப்படி பல மொழி சஞ்சாரங்களைக் கொண்ட மெட்டுக்களை இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் கேட்டு, கண்டு பிரமிக்க முடிகிறது!
கேளுங்கள், மகிழுங்கள், திரைப்படப் பாடல் சரித்திரத்தை தெரிந்து கொள்ளுங்கள்!
இருதலைப் பறவை பற்றி 2011 டிசம்பரில் ஒரு கட்டுரை எழுதினேன். அது பற்றிய மேல் விவரங்களை அளிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம் .
கண்ட பேரண்ட பக்ஷி , பாரண்ட பட்சி (भारण्ड) (गण्डभेरुण्ड), என்று இதை சம்ஸ்க்ருதத்தில் அழைப்பர். சுமேரியா முதல் விஜய நகர பேரரசு வரை இருந்த இந்த சிற்பங்களை இன்றும் ரஷ்ய நாணயங்களிலும் , கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கொடிகள் சின்னங்களிலும் பயன்படுத்துகின்றனர் . இந்தியாவைப் பொறுத்த மட்டில் கர்நாடக அரசு, மைசூர் ராஜாங்க சின்னங்களில் இன்றும் இருக்கிறது . சங்கத் தமிழ் நூல்களிலும் இந்தப் பறவை வருகிறது. ஆயினும் இன்றுவரை யாரும் இதை உயிருடன் பார்த்ததில்லை . பாமர மக்கள் இதை அண்டரண்ட பக்ஷி என்பர்
கண்ட பேரண்ட என்றால் சக்தி வாய்ந்த கழுத்து (கண்டம்) என்று பொருள்.
இந்து மத புராணங்களில் இது பற்றிய கதை ஒன்று உள்ளது .
Mysore Royal Emblem
புராணக் கதை
ஹிரண்ய கசிபு என்னும் அரக்கனைக் கொன்று அவனது மகன் பிரஹ்லாதனைக் காப்பாற்ற விஷ்ணு எடுத்த அவதாரம் நரசிம்மாவதாரம். இது தசாவதாரங்களில் ஒன்று. இந்தக் கதையில் ஒரு இடைச் சொருகலாக வரும் கதைதான் கண்டபேரண்ட பட்சி கதை .
நரசிம்மத்தின் உக்கிரத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை வேண்டிக்கொண்டனர். உடனே அவர் சரபம் என்னும் மிருகமாக வந்து நரசிம்மத்தை அடக்குவதற்கு முயன்றார். ஆனால் விஷ்ணு, கண்ட பேரண்டப் பறவையாக மாறி சரபத்தை விரட்டினார். பின்னர் இருவரும் விஷ்ணு, சிவன் என்ற சுய ரூபத்தில் அவரவர் இருப்பிடத்தை அடைந்தனர் . இந்தக் கதையின் உட்கருத்து இருதலைப் பறவை மிகவும் சக்தி வாய்ந்தது ; வெல்லமுடியாதது என்பதாகும் . சக்திவாய்ந்த என்ற பொருளின் காரணத்தினாலேயே கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவும் இன்றும் இதைப் போற்றுகின்றன.
யோக வாசிஷ்ட நூலில் ஒரு ரிஷியின் பெயராகவும் பாராண்ட வருகிறது ; ஆனால் இதில் வியப்பு எதுவும் இல்லை ; கெளசிக பரத்வாஜ, சாண்டில்ய , ஜடாயு முதலிய பெயர்கள் பறவைகளின் பெயர்களே!
சமண மதத்தில் மூன்றுகால் பறவையாக இது வர்ணிக்கப்படுகிறது 2000 ஆண்டுப் பழமையான பஞ்ச தந்திரக் கதையிலும் தமிழ் சங்க நூல்களிலும் இது பற்றி காண்கிறோம்.
XXXXX
Double-Headed bird found in Alaja Huyuk, Turkey, 14th C BC
கீழ்கண்ட கட்டுரை (25-12-2011-ல் வெளியிடப்பட்டது) சுமேரியாவில் தமிழ் பறவை ச.சுவாமிநாதன்
சங்கத் தமிழ் இலக்கியமான அகநானூற்றில் ஒரு அரிய செய்தி வருகிறது. அது ஒரு இரண்டு தலைப் பறவை பற்றிய செய்தி. இந்தப் பறவை சுமேரியாவில் கி.மு 3800 சிலிண்டர் முத்திரை ஒன்றிலும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, பஞ்ச தந்திரக் கதைகளிலும் அச்யுத ராயரின் தங்கக் காசுகளிலும் இதே இரு தலைப் புள் கண்டரண்ட பறவை என்ற பெயரில் உள்ளது. அல்பேனியாவின் தேசியக் கொடியிலும் ரஷ்யாவின் காசு, கரன்சி நோட்டுகளிலும் தமிழ்நாடு,ஆந்திர,கர்நாடக கோவில்களிலும் இந்தப் பறவையின் ஓவியங்களையும் சிலைகளையும் பார்க்கலாம். எப்படி ஒரு தமிழ் பறவை இப்படி உலகெங்கும் பறந்து சென்று வெற்றிக் கொடி நாட்டியது என்பது ஒரு சுவையான செய்தி.
இதோ அகநானூறு கூறுவதைக் கேளுங்கள்: “யாமே,பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே” –கபிலர் (பாடல் எண் 12)
இதன் பொருள்: இனி யாங்களோ ஒரு பொழுதும் பிரிதல் இல்லாது கூடிய வெறுத்தல் இல்லாத நட்பினால் இரண்டு தலைகளுடைய ஒரு பறவையின் உடம்பில் உள்ள ஓர் உயிர் போல் உள்ளோம். இரண்டு தலைப் பறவைக்கு தலைகள் மட்டுமே இரண்டு.ஆனால் வயிறு ஒன்றுதான். கபிலர் பாடிய பாடலில் இருவர் இருந்தாலும் உயிர் ஒன்றுதான் எனப் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் இந்தியா முழுதும் இப்பறவை பற்றி தெரிந்திருக்கிறது. ஆகையால் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட வடமொழி நூலான பஞ்ச தந்திரக் கதையிம் இப்பறவை வருகிறது. புறாக்கள் அனைத்தும் வேடனின் வலையில் சிக்கி அவை அனைத்தும் ஒன்றாகப் பறந்து சென்று வேடனை ஏமாற்றிய கதையை அனைவரும் அறிவோம். அந்தக் கதையில் ஒரு துணைக் கதையாக கண்ட பேரண்ட பட்சி கதை வருகிறது. இரு தலை பறவையின் இரண்டு தலைகளும் ஒன்றுக்கொன்று சண்டை யிடும் கதை. ஒரு தலை தனக்கு அம்ருதம் வேண்டும் என்றும் இன்னொரு தலை தனக்கு விஷம் வேண்டும் என்றும் சண்டை போடுகின்றன. இறுதியில் ஒரு தலை விஷம் அருந்தவே அப்பறவை இறக்கிறது. ஒற்றுமையின்மையால் இருதலைப் பறவை இறக்கும் கதை இது.
சங்கத் தமிழ் நூல்களான பரிபாடல் (8-72), கலித்தொகை (89), பிற்கால நூலான தகடூர் யாத்திரை ஆகியவற்றிலும் இருதலைப் பறவை உவமை வருகிறது.அந்த அளவுக்குப் பிரபலமான கதை. சேர மன்னனும் அதியமானும் ஒரே குலத்தவராயிருந்தும் சண்டை போட்டதற்கு உவமையாக தகடூர் யாத்திரை இதைக் காட்டுகிறது.
xxxx
துருக்கியில் இரு தலைப் புள், கி.மு 1400
சுமேரியாவில் இது லகாஷ் நகர தெய்வம் நினூர்தாவின் சின்னமாகக் கருதப் பட்டது.
துருக்கியில் ஹட்டுசா முதலிய நகர்களில் இது இரண்டு தலைகளாலும் இரண்டு முயல்களைத் தூக்குவது போல பெரிய உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இது கி. மு 1400ல் செதுக்கப் பட்டது. துருக்கியின் வரலாற்றில் பின்னிப் பிணைந்துவிட்ட இப்பறவைக்கு வானத்தில் விண்கலத்திலிருந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமான ஒரு வடிவத்தை எர்சூரும் மாகாணத்தில் இப்போது கட்டிவருகிறார்கள்.
நாயக்க மன்னர் காலத்தில் இப்பறவை மிகப் பலம் வாய்ந்த டினோசர் பறவை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அச்யுத ராயர் (1530-1542) வெளியிட்ட தங்க நாணயத்தில் இரண்டு யானைகளைத் தூக்குவது போல படம் உள்ளது. அவ்ருக்கு முந்திய மன்னன் நாகரி எழுத்தில் பெயரை மட்டும் பொறித்தான்.
தமிழ்நாட்டில் ஆவுடையார் கோவில் ஒவியத்தில் இது பல யானைகளைத் தூக்குவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்னாடகத்தில் கேலடி கோவில் சிற்பத்திலும்,தட்சசீலத்தில் சமணர் கோவில் சிற்பங்களிலும் இப்பறவை உண்டு. ஸ்ரீசைலம்,பேலுர்,கோரமங்கலா கோவில்களிலும் இதைக் காணலாம்.
மைசூர் மன்னர் உடையார், இதை 500 ஆண்டுக் காலமாக ராஜவம்ச சின்னமாக பயன்படுதுகின்றனர். இன்றும் அரண்மனையில் இதைக் காணலாம். கர்நாடக அரசும் இதை தனது சின்னத்தில் பொறித்துள்ளது. இப்பறவை ரஷ்ய நாணயங்கள், கரன்சி நோடுக்கள், அல்பேனியா,பல்கேரியா தபால் தலைகள், தேசியக் கொடி எல்லாவற்றிலும் இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இரு தலைப் பறவை இல்லாத இடமே இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன் கபிலர் பாடிய இப்பறவை எங்கெல்லாம் பறந்து செண்றுவிட்டது!!
குறுந்தொகையில் இருதலைக் குழந்தை
சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் ஒரு இரு தலைக் குழந்தை Siamese Twins பற்றிய சுவையான செய்தி வருகிறது. பாடல் எண் 324 ஐ எழுதியவர் பெயரே கவைமகன்.அதாவது இருதலை உடையோன். கவட்டை, ஆங்கிலச் சொல் gap ஆகியவை இதனுடன் தொடர்புடைய சொற்களாக இருக்கலாம்.
ரிக் வேதத்தில் பெயர் தெரியாத மிகப் பழைய புலவர்களுக்கு அவர்கள் பயன் படுத்தும் சொற்றொடர்களைக் கொண்டு பெயரிடப் பட்டதாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ளனர். ஐந்தாம் நூற்றாண்டில் தமில் இலக்கியத்தைப் பகுத்து வைத்தோரும் அதே நடை முறையைப் பயன் படுத்தி ஏறத்தாழ 20 புலவர்களுக்கு இப்படி காரணப் பெயர்களை இட்டுள்ளனர்.
கவைமகன் (twins or Siamese Twins) எழுதிய குறுந்தொகை 324 ல் இருதலைப் புள் போலவே கருத்து கூறியுள்ளார்.
பொருள்: இத்தலைவியோ தன் அறியாமையினால் வருந்துகின்றாள். யான் என் மனத்தினுள்ளே இரட்டைப் பிள்ளைகள் நஞ்சுண்டால் இருவர் திறத்தும் ஒரு தாய் வருந்துவதைப் போல நீ அங்கனம் வருதலை எண்ணி அஞ்சுவேன்.
ஒட்டிப் பிறக்கும் இருதலை குழந்தை மிகவும் அபூர்வம்.ஒரு லட்சத்தில் ஒர்ன்றுதான் இப்படிப் பிறக்கும்.அக் குழந்தைகளை ஆபரேஷன் செய்து தனியே பிரிக்க 18 மணி நேரம் கூட ஆகும்.இப்படிப் பட்ட நீண்ட நேர அறுவைச் சிகிச்சைகள் அண்மையில் நடந்தன. மேற்கூறிய கவை மகன் உவமையில் ஒரு தலை விஷம் உண்டால் மறு தலையும் இறக்கும் என்பது விளக்கப் பட்டுள்ளது.
XXXXX
Russian Coin, Year 2009
சுமேரியாவில் கருடன் கதை
சுமேரியாவில் கிஷ் என்னும் நகரத்துக்கு முதல் மன்னன் ஏதனன். அவனுக்குக் குழந்தைகள் இல்லை. ஷாமாஷ் என்னும் சூரியக் கடவுளிடம் முறை இடுகிறான். குழந்தை பிறப்பதற்கான மர்ம மூலிகையின் பெயரைச் சொல்லுமாறு வேண்டுகிறான். மலைக்குச் செல்லும் படி சூரியதேவன் உத்தரவிடுகிறான். இதற்கிடையில் மலையில் பாம்புகளுக்கும் கருடன்களுக்கும் இடையில் சண்டை. எல்லா பாம்புகளையும் கருடன் பிடித்துத் தின்பதாக புகார். உடனே பாம்புகள் கடவுளிடம் முறையிட்டன. கருடனைப் பிடிக்க கடவுள் ஒரு திட்டம் தருகிறார். கருடனும் அகப்பட்டுக் கொள்கிறான். அந்த நேரத்தில்தான் ஏதனன் அங்கு செல்கிறான்.
கருடனை ஏதனன் காப்பாற்றுகிறான். நன்றிக்கடனாக அவனை தேவலோகத்துக்கு அது அழைத்துச் செல்கிறது. ஏதனன் உயரத்தைக் கண்டு பயப்படவே திரும்பிவிடுகின்றனர். பின்னர் பூவுகத்துக்கு வந்தவுடன் ஒரு கனவு வருகிறது. .மீண்டும் தேவ லோகம் செல்லுகின்றனர். இந்த இடத்தில் களிமண் பலகை உடைந்திருக்கிறது.
அச்யுத ராயரின் தங்கக் காசு
இருந்தபோதிலும் பிற்கால களிமண் பலகைகளில் ஏதனனின் மகன் பலி அரசாண்டதாக வருவதால் தேவ லோக மூலிகை பெற்று குழந்தை பெற்றிருப்பான் என்றே ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இந்தக் கதையிலும் இந்துமத கருடன் கதையிலும் கருடன்- நாகர் சண்டை வருவதும், அமிர்தம் அல்லது அற்புதக் குளிகை கொண்டுவர தேவலோகம் செல்லுவதும் ஒரே மாதிரியாக உள்ளன.
ஏதனன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததால் அவனை யத்னன் என்று அழைத்திருக்கலாம். யத்ன என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு விடாமுயற்சி என்று பொருள். யத்னன் உடன் சென்றவன் பெயர் சுமுகன். அவனுடைய மக்ன் பெயர் பலி. அதுவும் சம்ஸ்கிருத சொல். சுமுகன், சுமேரு மற்றும் அதர்வ வேதத்தில் வரும் தியமத், அலிகி, விலிகி ஆகிய சம்ஸ்கிருத சொற்கள் சுமேரியாவில் காணப்படுகின்றன. இவை எதற்கும் மேலை நாட்டினர் விளக்கம் சொல்ல முடியவில்லை.
ரிக்வேதத்தில் கருடனை சுபர்ணன், ஸ்யேனன் என்று அழைக்கின்றனர். சுமுகன், சுமேரு. அலிகி, விலிகி பற்றி தனியாகக் காண்போம்.
–SUBHAM—
இருதலைப் பறவை , கண்டபேரண்ட பட்சி, பாராண்ட பட்சி, சங்கத் தமிழ் நூல்கள் , ரஷ்ய நாணயம், சுமேரியா, இந்து மதத்தில் ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8-3-2024 உலக மகளிர் தினம்த்தையொட்டி மாலைமலர் 6-3-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது,
பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்! – 2
ச. நாகராஜன்
இதிஹாஸத்திலும் இலக்கியத்திலும் பெண்கள்
ராமாயண மஹாபாரத இதிஹாஸங்களில் வரும் அறிவு சால் பெண்மணிகளைப் பற்றி எழுதப் புகுந்தால் ஒரு கலைக்களஞ்சியமே உருவாகும்.
திரௌபதி தினமும் பத்தாயிரம் பேர்களுக்கு பெயரைக் குறிப்பிட்டு அன்றாடப் பணிகளைத் தானே நேரில் தருவது வழக்கம்.. மெமரி க்வீன் – நினவாற்றல் ராணி என்றே அவருக்குப் பெயர்.
தமயந்தியோ காதலன் நளனைப் போலவே அதே உருவில் வந்த தேவர்களை தன் கூரிய அறிவு கூர்மையால் இனம் கண்டாள். கண் இமைத்தலால் (தேவர்களுக்கு கண் இமைக்காது; மனிதனான நளனுக்கு இமைக்கும்). அடிகள் காசினியில் தோய்தலால் – தேவர்களுக்கு கால் பூமியில் படாது. நளனுக்கு (பூமியில் கால் ஊன்றி நிற்கும்) வண்ண மலர் மாலை வாடுதலால் (தேவர்களுக்கு சூட்டப்பட்ட மாலை வாடவே வாடாது. மனிதனான நளனுக்கு சூட்டப்பட்ட மாலை வாடி இருக்கும்). இத்தகைய அறிவு கூர்மையால் நளனை இனம் கண்டு அவனுக்கு மாலை சூடிய அற்புத அறிவு சால் பெண் தமயந்தி.
இப்படி அறத்தின் அடிப்படையிலான நூற்றுக் கணக்கான பெண்மணிகளை நமது இதிஹாஸங்களும் இலக்கியமும் சுட்டிக் காட்டுகின்றன.
தமிழ் இலக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டோமானால் சங்க இலக்கியத்தில் நாம் காணும் பெண் புலவர்கள் ஏராளமானோர்.
அஞ்சில் ஆந்தைமகள் நாகையார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், கழார்க் கீரனெயிற்றியார், குமிழிஞாழார் நப்பசலையார், நக்கண்ணையார், போந்தைப் பசலையார், மதுரை நல்வெள்ளியார், முள்ளியூர்ப் பூதியார், வெள்ளிவீதியார் என்று இந்தப் பட்டியல் நீளும். ஔவையாரைப் போல இன்னொரு பெண் புலவர் இலக்கிய உலகில் உண்டா, என்ன?
பெண்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகள்
“ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று மகாகவி பாரதியாரின் முழக்கம் முழங்கி நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. என்றாலும் நம் நாட்டைப் பொறுத்த வரையில்
1) அரசியலுக்குத் தேவையான அளவு தலைமைப் பண்புள்ள பெண்மணிகள் இன்னும் தேவை.
2) வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள, கல்வியறிவில்லாப் பெண்மணிகள் ஏற்றம் பெற உரிய நடவடிக்கை தேவை.
3) பாலியல் கொடுமைகளும், இல்லத்தில் ஏற்படும் வன்கொடுமைகளும் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.
4) நீதித் துறை, விளையாட்டு, அறிவியல், கல்வி, விண்வெளி, பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்களுக்கு இருக்கும் தடைகள் இனம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும்.
ஆணுக்கு அறிவு அதிகமா பெண்ணுக்கு அதிகமா?
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி என்று மகாகவி பாரதியார் கூற்றை மெய்ப்பிக்கும் சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறது கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல் எண் 65.
தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்த போது அவருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.
அறிவில் சிறந்த அவரது மனைவி பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார்.
திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர்.
வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.
ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:
அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்
அறிவில் முதிஞரே ஆவர் – அறிகரியோ
தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்
தான் கொண்ட சூல் அறியார் தான்
இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். நடந்ததை அறிந்து கொண்ட கவிராயர் தன் மனைவியிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார்.
ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், “நான் இழித்துக் கூறவில்லையே ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன். ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கர்பமுற்று சிசு பிறக்கிறது. ஆகவே தங்கள் கர்ப்பத்தைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்” என்றார்.
மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும் போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.
சொர்க்கம் சென்ற ஆன்மா, மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.
அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.
விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.
விஷயம் கொங்கு மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!
சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.
குறுமுனி நேர் தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப
அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்
மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே
பொருள்: தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!
தமிழ் மங்கையர் பொறுப்பு
இப்படி உலகிற்கே அரிய உண்மையை உணர்த்திய பெருமை தமிழ் மங்கையையே சாரும். பெண்களின் சம உரிமையை நிலை நாட்டி உலகெங்கும் அவர்களை மேல் நிலைக்குக் கொண்டு செல்ல தமிழ் மங்கையரை விட தகுதி வேறு யாருக்கு உண்டு. உலக மகளிர் தினத்தில் சிந்திப்போம். செய்வார்களா?