QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 3 (Post No.12,947)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,947

Date uploaded in London – –   23 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

21. புகழ்பெற்ற சிவன் கோவிலுக்குள்ளும் காஞ்சி காமாட்சி கோவிலுக்குள்ளும் உள்ள திவ்ய தேசங்கள் எவை ?

XXXXX

22 .ஆதிசங்கரருக்கும் காஞ்சிபுரத்துக்கும் உள்ள தொடர்பு என்ன ?

XXXXX

23 . காஞ்சி நகரில் வசித்த ஆழ்வார்கள் யார் ?

XXXXX

24 .காஞ்சி நகரினை நிறுவிய தமிழ் மன்னன் யார்?

XXXXX

25 . சங்க இலக்கியத்தில் காஞ்சியை ஆண்ட மன்னன் பெயர் இருக்கிறது . அவர் பெயர் என்ன ?

XXXXX

26 சம்ஸ்க்ருதத்தில் காஞ்சி நகரினை என்ன பெயர்களில் குறிப்பிடுகிறார்கள் ?

XXXXX

27 . இந்த நகருக்கு வந்து அசோகன் கட்டிய புத்த ஸ்தூபி பற்றிக் குறிப்பிட்ட சீன யாத்ரீகர் யார் ?

XXXXX

28 .நாளந்தாதட்சசீலத்துக்கு இணையான பல்கலைக் கழகம் காஞ்சியில் இருந்தது . அதன் பெயர் என்ன?

XXXXX

29.காஞ்சிபுரத்தில் எத்தனை கல்வெட்டுகள் கிடைத்தன?

XXXXX

30 .சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படையில் பிரமணப்புலவர் உருத்திரங்க கண்ணனார் இந்த நகரை எப்படி வருணிக்கிறார்?

XXXXX

விடைகள்

21. புகழ்பெற்ற சிவன் கோவிலான ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்திலுள்ள திருநிலாத் திங்கள் துண்டம் என்ற வைணவ

தலம், திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற பெருமாள் ஆவார்.

இதே போல காஞ்சி காமாட்சி கோவிலுக்குள், கர்ப்பக் கிரகத்தின் வலது பக்கத்தில் உள்ள பெருமாளை திருமங்கை ஆழ்வார் பாடி திருக்கள்வனூர் என்ற தலமாக அங்கீகரித்துள்ளார் .

XXXXX

22.பாரத நாடு முழுதும் நடந்து சென்று நான்கு மூலைகளில் நான்கு மடங்களைத் தாபித்த  சங்கரர், இங்குள்ள மடத்தில் பீடாரோஹணம் ஏறி, மறைந்ததாக ஐதீகம் .

XXXXX

23.பொய்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார்.

XXXXX

24.கரிகாலன் என்று பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் செப்புகிறார் . கல்வெட்டுகளும் கரிகாலன் – காஞ்சி தொடர்பினை உறுதி செய்கின்றன .

XXXXX

25.பெரும்பாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூல் காஞ்சியை ஆண்ட இளந்திரையனைப் புகழ்கிறது இதை எழுதிய பிராமணப் புலவரின் பெயர் திரு.ருத்ராக்ஷம் ; தமிழில் உருத்திரங்கண்ணனார்.

XXXXX

26.காமகோட்டம், துண்டீர புரம், தண்டக புரம், பிரம்ம புரம் , சிவ புரம், காம பீடம், இந்து புரம்,  பிரளயசிந்து முதலிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது ; சம்ஸ்க்ருதத்தில் காஞ்சி என்றால் இடுப்பில் அணியும் ஒட்டியாணம்; தமிழில் காஞ்சி என்றால் ஒரு மரத்தின் பெயர்.

XXXXX

27.சீன யாத்ரீகர் யுவாங் சுவாங்; அவர் மாமன்னன் அசோகன்   எழுப்பிய நூறு அடி உயர ஸ்தூபியைப் பார்த்ததாக எழுதியுள்ளார் ; இப்போது அது இல்லை .

XXXXX

28. பல்கலைக் கழகம் கடிகா , கடிகை

XXXXX

29.காஞ்சிபுரத்தில் 650 க்கும் மேலான கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்ககள், கிடைத்தன .

பல்லவர் 15 , சோழர்கள் 245  , தெலுங்கு-பல்லவர் 48 , பாண்டியர்கள் 12 , ஹொய்சாளர்கள் 3 ,தெலுங்கு-சோழர்கள் 3 , பிற்காலப் பல்லவர் 7, சம்புவராயர் 10 , விஜயநகர அரசர்கள் 160 , மற்றும் பாணர், காகதீயர், சேரர் , மொகலாயர்  கல்வெட்டுகள்

XXXXX

30.விஷ்ணுவின் வயிற்றிலிருந்து தோன்றியபிரம்ம தேவனைச் சுமந்து வந்த,   தாமரை மலரின் மொட்டினைப் போல காஞ்சி விளங்கியது .

பெரும்பாணாற்றுப்படையில் காஞ்சி

கச்சி மூதூரின் சிறப்பு

நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்

நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்

தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றிச்

சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்,   405

……………………

விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர்; (393-411)

பொருளுரை:    நீல நிறத்தையும் வடிவினையுமுடைய திருமாலுடைய கொப்பூழ் ஆகிய நான்முகனைப் பெற்ற பல இதழ்களையுடைய தாமரையின் மொட்டைபோல் அழகுடன் தோன்றி, செங்கல்லால் செய்யப்பட்ட உயர்ந்த படைவீட்டைச் சூழ்ந்த மதிலினையும், …….., பலர் தொழும்படி விழாக்களினால் சிறப்பையுடைய பழைய ஊர்,

XXXXX

—SUBHAM—

TAGS- பெரும்பாணாற்றுப்படை, கச்சி, கடிகா, கடிகை, யுவாங் சுவாங்

ராம நாம மஹிமை – 4 (Post No.12,946)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,946

Date uploaded in London –  –   23 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழாவை ஒட்டி சிறப்புக் கட்டுரைத் தொடரில் நான்காவது கட்டுரை! காஞ்சி ஆசார்யாளின் அருமையான உரையின் ஒரு பகுதி இது!

ராம நாம மஹிமை – 4

ச.நாகராஜன்

காஞ்சி பரமாசார்யாளின் உரை

ஶ்ரீ ராமரைப் பற்றி பல இடங்களில் பல உரைகளில் பல ரகசியங்களை காஞ்சி பரமாசார்யாள் தெரிவித்துள்ளார்.

தெய்வத்தின் குரல் என்ற அவரது உரைகளின் தொகுப்பில் முதல் பாகத்தில் வரும் ஒரு பகுதி இது:

 ‘ராமன்’ என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவது தான் யோகம். அப்படியிருப்பவனே யோகி..

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக் கொண்டு வாழ்ந்தான்.

“ராவணன் ஸீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?” என்று கேலி செய்து கேட்டவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மநுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து ‘இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்? வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லியிருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். ‘ராகவா, நீ எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.

நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். ‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.

சாக்ஷாத் ஸ்ரீ ராமனை லட்சியமாகக் கொண்டு “ராம ராம” என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.

***

Amazing Facts about Kanchipuram – Part 1 (Post No.12,945)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,945

Date uploaded in London – –   22 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

अयोध्या मथुरा माया काशी काञ्ची अवन्तिका ।  

पुरी द्वारावती चैव सप्तैते मोक्षदायकाः 

Meaning: 1: Ayodhya, Mathura, Maya (Mayapuri or Haridwar), Kashi (Varanasi), Kanchi (Kanchipuram), Avantika (Ujjain) … 2: … and Dwaravati (Dwaraka); These seven cities are giver of Moksha (Liberation) (and are called Mokshapuri).

Kanchipuram in Tamil Nau is one of the Seven holy cities of India. And it is the only South Indian city in the Saptapuris ( 7 Holy Cities) list. There is another famous sloka/couplet which says it is the greatest city in India:

xxxx

Pushpeshu jati, purusheshu Vishnu

Naarishu Rambha, Nagareshu Kanchi.”

 A rough translation would be Jasmine is at the top of  flowers, Vishnu is the best among men , Ramba is the most beautiful amongst women and  Kanchi is at the top of cities. It is attributed to the greatest Indian poet Kalidasa.

Is it an exaggeration? No. if one sees all the 100 temples here, one would appreciate what Kalidasa said. Not only that ,around 22 Vaishnavite shrines of the 108 Holy Vishnu temples are in and around Kanchipuram .

xxxx

It was the capital city of Pallava empire. So historical records are available for at least 1500 years.

An invader from north asked his army not to touch a single stone in Kanchi , because he admired the beautiful architecture of the temples. All great foreign pilgrims have visited it and praised it.

xxxx

The greatest of the modern Shankaracharyas, Kanchi Kamakoti Peetam Sri Chandrasekarendra Saraswathi  (1894-1994) lived here for one hundred years and raised its sanctity.

The city was divided into Shiva Kanchi, Vishnu Kanchi and Jaina Kanchi because of group of temples in each area.

xxxx

Every temple has a strange or novel story which make it unique.

It is on the banks of river Kamba. The name Kanchi  is derived from Kanchi tree. Great Saivite and Vaishnavite saints composed a lot of devotional scriptures from this city.

If one mentioned just the wonders only, that will be a voluminous book. Let me just give them in bullet points.

xxxx

Ekamreshwar or Ekamparanatha temple is the most famous Shiva temple in the town. It means God of One Mango Tree . Once Parvati playfully closed the eyes of Shiva with her hands; the whole world became dark; when all the heaven dwellers complained to Shiva, he  cursed Parvati to be born on earth and do penance. She did it and made a Linga (formless shape of Lord Shiva) out of sand for  daily worship. Suddenly a flash flood came in the river and yet she was unperturbed; that sand Linga also survived the floods. A temple was built over that Sand Linga and till this day  no bathing is (Abisheka) is done to the Linga.

xxxx

Among the Vishnu temples, most famous one is the Varadaraja Perumal Temple; it became famous because of

1).A wooden statue made of Athi (ficus) tree is preserved under the temple tank and taken out for a fortnight worship once in 40 years. It was taken out and worshipped in 2019; next time the sculpture will be out only in 2059. A great news appeared in newspapers in 2019. A lucky person saw it for the third time in his life ( at the age of  10, 50 and 90).

2).Another wonder in the temple is two golden head lizards whice are worshipped in the temple. King Asamanjan of Solar dynasty and his wife were cursed to become lizards. But Upamanyu Muni helped them to come out of the curse by making both worship Lord Varadaraja. Even now people Q up to see the two lizard sculptures with golden coloured heads. it is believed that those who see the lizards or touch them will be bereft of diseases.

To be continued……………………..

Tags- Kanchi Facts, part 1, Varadarajar, Ekampareshwar 

QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 2 (Post No.12,944)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,944

Date uploaded in London – –   22 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

11 . காஞ்சிபுரம் நகரில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா எடுக்கும் கோவில் எது ?

XXXX

12 .அந்தக் கோவிலில் இரண்டு பல்லிகள் சிற்பங்களை எல்லோரும் தரிசிப்பது ஏன் ?

XXXX

13 . இந்தக்கோவிலுக்கு ராபர்ட் கிளைவ் என்ன கொடுத்தான் ?

XXXx

14.கண் நோய்கள் நீங்க இந்தக்கோவிலில் ஏன் பிரார்த்தனை செய்கின்றனர் ?

XXXX

15.எட்டு கைகளுடைய அரிய பெருமாளை காஞ்சியில்  எங்கே தரிசனம் செய்யலாம்?

XXXX

16 . தீபப் பிரகாசர் அல்லது விளக்கொளிப் பெருமாள் கோவிலின் சிறப்பு என்ன?

XXXX

17.காஞ்சி நகரத்தை சமய ஆர்வலர்கள் எத்தனை பிரிவுகளாகப் பிரிப்பார்கள் ?

XXXX

18.விஷ்ணு காஞ்சியில் உள்ள மற்றோர் தலமான திருவேளுக்கைக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது ?

XXXX

19.திரு ஊரகம் உலகளந்த  பெருமாள் கோவிலில் எத்தனை பெருமாள்கள் உள்ளனர் ?

XXXX

20. காஞ்சிபுரத்தில் பாண்டவர்களுடன் தொடர்புடைய கோவில் எங்கே இருக்கிறது ?

XXXX

விடைகள்

11.வரத ராஜப்பெருமாள் கோவில் . அங்குள்ள குளத்தில் மூழ்கிக் கிடக்கும் அத்தி மரத்திலான சிற்பம் 40  ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு பத்து நாட்களுக்கு மேல்  தரிசனத்துக்கு வைக்கப்படுகிறது ; 2019 ஆம்  ஆண்டில் இந்த வைபவம் நடந்தது. அடுத்த முறை 2059 ல்  தரிசனம் செய்யலாம். பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர்.

XXXX

12.அயோத்தி மன்னன் சகரனுடைய பிள்ளை அசமஞ்சனும் அவன் மனைவியும் சாப வசத்தால் பல்லிகளாக மாறினர். உபமன்யு முனிவர் வரதராஜப் பெருமாளை தரிசனம்  செய்துவைத்தவுடன் அவர்கள் மனித உருப்பெற்று ஸ்வர்கத்துக்குச் சென்றார்கள். இந்தப் பல்லிகளை வணங்குவோர் அனைவரும் நோய் நொடியில்லாமல் வாழ அருள வேண்டும் என்று அவர்கள் பிரார்த்திதை பெருமாளும் ஏற்றார். தங்கத் தலைகளுடன் உள்ள  பல்லிகளை (only sculptures)  இப்போதும் தரிசிக்கலாம் .

XXXX

13.மகர கண்டி (கழுத்தில் அணியும் மாலை) கொடுத்தான் .

ராபர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனியின் குமாஸ்தாவாக வேலை செய்த காலத்தில் , வரதராஜர் மீது கொண்ட பக்தியால், மகர கண்டி கொடுத்தான். இதேபோல், வெள்ளைக்கார கலெக்டர் Lord Place பிளேஸ் துரை, சுவாமிக்கு பல ஆபரணங்களைக் கொடுத்துள்ளார். விழாக்காலங்களில் சுவாமி இந்த ஆபரணங்களை அணிந்து உலா செல்வார்.

XXXX

14.ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.

XXXX

15.வரத ராஜப் பெருமாள் கோவிலிலிருந்து இரண்டு கி.மீ .தொலைவில் அஷ்டபுயகரப் பெருமாள் கோவில் இருக்கிறது . அங்குள்ள பெருமாள் சிலைக்கு எட்டு புஜங்கள் இருக்கின்றன. அவற்றில்  சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு, சங்கம்,  வில்,  கேடயம், கதை ஆகிய எட்டு ஆயுதங்களை வைத்துள்ளார்.

XXXX

16.இந்தக் கோவிலில் வேதாந்த தேசிகரின் சிலை உள்ளது; அதை அவருடைய மகன் நயின வரதாச்சாரியாரே பிரதிஷ்டை செய்தார். ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார். பிரகாரத்தில் வேதாந்த தேசிகரின் வரலாறு சித்திரமாக வரையப்பட்டுள்ளது. இது அவருடைய அவதார ஸ்தலம்.

XXXX

17.சிவ காஞ்சி , விஷ்ணு  காஞ்சி ,ஜைன  காஞ்சி என்று மூன்று பிரிவுகளாகப் பிரிப்பார்கள் . விஷ்ணு காஞ்சியில் எல்லா பெருமாள் கோவில்களும் சில பர்லாங் தூரத்திலேயே உள்ளன.

XXXX

18.வேள் என்றால் ஆசை ; வேட்கை, வேள்வி முதலிய சொற்களுக்கு மூலச் சொல்.

திருவேளுக்கை ஸ்தலத்தில் உள்ள பெருமாள் காமாசிகா நரசிம்மர் ஆவார். நரசிம்மன் ஆசையுடன் வசித்த இடம் என்பது அதன் பொருள். 

XXXX

19.திரி விக்ரமனை உலகளந்த பெருமாள் என்று அழகாக மொழி பெயர்த்துள்ளனர் ; ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்று ஆண்டாளும் அடி அளந்தான் என்று திருவள்ளுவரும் போற்றிய பெருமாள்.

இங்கு ஊரகம் (பேரகம் ) , நீரகம் , காரகம், கார்வானம் ஆகிய பெருமாள்கள் எழுந்தருளியுள்ளனர் . இந்தக் கோவிலை ஒரே திவ்ய தேசமாகவே கருதுவர் .

XXXX

20.பெரிய காஞ்சிபுரத்தில் ஒன்பது திவ்ய தேசங்கள் , அதாவது ஆழ்வார்கள் பாடிப்போற்றி மங்களா சாசனம் செய்த புனிதக் கோவில்கள், இருக்கின்றன. இதில் ஒன்றான திருப்பாடகம் தலம் பாண்டவர் தூதர் கோவில் எனப்படும்.

ஜனமேஜயன் , கிருஷ்ணன் கதைகளைக் கேட்டுவிட்டு, காஞ்சி நகருக்கு வந்து அஸ்வமேத யாகம் செய்து பூர்ணாகுதி செய்த பின்னர் க்ருஷ்ண பரமாத்மா பாண்டவ தூதனாக காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது. குலோத்துங்க சோழன் கல்வெட்டும் இருக்கிறது.

—subham—

TAGS- ராபர்ட் கிளைவ் , மகர கண்டி , வேதாந்த தேசிகர், QUIZ காஞ்சிபுரம் 40 , QUIZ- PART 2,

ராம நாம மஹிமை – 3 (Post No.12,943)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,943

Date uploaded in London –  –   22 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழாவை ஒட்டி சிறப்புக் கட்டுரைத் தொடரில் மூன்றாவது கட்டுரை!

ராம நாம மஹிமை – 3

ச.நாகராஜன்

ராம நாம மஹிமையைப் பற்றிக் கூறும் போது ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் நினைவு முதலில் வருவது இயல்பே. பல நூறு கிருதிகளை இயற்றிய அவரைப் போல ராம நாமத்தின் மஹிமையை கீர்த்தனைகளால் விளக்கியவர் இருக்க முடியாது!

தஞ்சை மன்னரின் சேவகத்தை விரும்பாமல் அவர் பாடிய

கிருதி இது :

பல்லவி

நிதி சால சுகமா
ராமுனி சன்னிதி சேவ சுகமா
நிஜமுக பல்கு மனசா
நிதி சால சுகமா.ஆ..

அனுபல்லவி

ததி நவநீதக்ஷீரமுலு ருசோ – தாஸரதி
த்யானபஜந ஸுதா ரஸமு ருசோ

சரணம்
தம ஸம மநு கங்கா ஸ்நாநமு ஸுகமா கர்த்தம
துர்விஷய கூப ஸ்நாநமு ஸுகமா

மமத பந்தன யுத நரஸ்துதி சுகமா??
ஸுமதி த்யாகராஜநுதநி கீர்த்தந ஸுகமா…

பொருள் : ஓ, மனமே உண்மையைச் சொல்! செல்வம் தான் சுகமா அல்லது ராம சந்நிதி சேவை சுகமா?

தயிர், வெண்ணெய், பால் ருசியா?

தாஸரதியின் தியானம், பஜனை ருசியா?

பாவத்தைப் போக்கும் கங்கையில் குளிப்பது புனிதமா?

இந்திரிய சுகம் தேடும் துர்க்கந்தமான இவ்வாழ்வுக்கு நிகரான கிணற்று நீரில் குளிப்பது சுகமா?

அகங்காரமுள்ள மனிதர்களைப் புகழ்வது சுகமா?

அல்லது நல்ல புத்தியுள்ள தியாகராஜனால் புகழப்படும் ராம கீர்த்தனம் சுகமா?




*

தனக்கு உற்றார் உறவினர் யார் என்று அவர் கூறுவது இது:

பல்லவி

ஸீதம்ம மாயம்ம ஸ்ரீ ராமுடு3 மா தண்ட்3ரி

அனுபல்லவி

வாதாத்மஜ ஸௌமித்ரி வைனதேய ரிபு மர்த3

தா4த ப4ரதாது3லு ஸோத3ருலு மாகு ஓ மனஸா (ஸீ)

சரணம்

பரமேஸ1 வஸிஷ்ட2 பராஸ1ர நாரத3 ஸௌ1னக ஸு1

ஸுர பதி கௌ3தம லம்போ33ர கு3ஹ 1ஸனகாது3லு

4ர நிஜ பா43வதாக்3ரேஸருலெவரோ 2வாரெல்லரு

வர த்யாக3ராஜுனிகி பரம பா3ந்த4வுலு மனஸா (ஸீ)




பொருள்:

ஓ! மனமே!

சீதம்மா நமது தாயார். ஶ்ரீ ராமன் நமது தந்தை.

வாயுமைந்தன்சௌமித்திரிவினதை மைந்தன்சத்துருக்கினன்தாதைபரதன் ஆகியோர் நமக்கு சகோதரர்கள்.

பரமேசன்வசிஷ்டர்பராசரர்நாரதர்சௌனகர்சுகர்தேவர் தலைவன்கௌதமர்லம்போதரன்குகன்சனகாதியர்இப்புவியில் பாகவதர்களில் சிறந்தவர் எவரோ அவர் யாவரும் அருளுடைய தியாகராஜனின் நெருங்கிய உறவினர் ஆவர்.

*

ஶ்ரீ ராம நாமத்தின் மஹிமையைப் பற்றி அவர் கூறுகிறார்:

மனஸா!

ஶ்ரீ ராம பஜன, பர லோக ஸாதனமே

ஸ்மர, லோப, மோஹ, ஆதி பாபுலனு ஸ்மரியஞ்சதே;

ஜனன ஆதி ரோக பயாதுலசே,

ஜகமந்து கல்கு துராஸலசே,

தனய ஆதி பாந்தவுல ப்ரமசே, தகலனு ஈது

கிருதியின் பொருள்:

ஓ, மனமே!

இராம பஜனை  மறுமைக்குச் சாதனம்

காமம், பேராசை, மயக்கம் ஆகிய பாவிகளை நினையாதே..

பிறவி முதலாக நோய்கள் என்னும் பெரிய பயங்களிலும், உலகினில் ஏற்படும் தீய ஆசைகளிலும், மனைவி மக்கள் முதலாக சுற்றமெனும் திகைப்பினிலும் (ராம நாமம்) சிக்க விடாது.

*

அடுத்து 108 உபநிடதங்களில் ஒன்றும் அதர்வண வேதத்தில் வரும் 31 உபநிடதங்களில் ஒன்றாகவும் அமையும் ஸீதோபநிஷத் ஸீதையைப் பற்றிக் கூறுவதைப் பார்க்கலாம்.

தேவர்கள் பிரம்மாவிடம், ‘ஸீதா என்பது யார்? அவளுடைய ரூபம் என்ன?’ என்று கேட்டார்கள்.

அப்போது பிரம்மா கூறினார்:

மூலப்ரக்ருதி ரூபத்வாத் ஸா ஸீதா ப்ரக்ருதி:

ஸ்ம்ருதா!

மஹாமாயா அவ்யக்த ரூபிணீ வ்யக்தா பவதி!!

பொருள் : மூலப்ரக்ருதி வடிவினள் ஆதலால் அந்த ஸீதா ப்ரக்ருதி எனக் கூறப்படுகிறாள். அவ்யக்த ரூபிணியான மஹா மாயை வெளிப்படையாகத் தோன்றுகிறாள்.

ஶ்ரீ ராமஸாந்நித்ய வசாஜ்ஜகதானந்தகாரிணீ!|

உத்பத்திஸ்திதி ஸம்ஹாரகாரிணீ

ஸர்வதேஹினாம் ||

ஸீதா பகவதீஜ்ஞேயா

மூலப்ரக்ருதிஸம்ஜ்ஞிதா!

ஸர்வாதாரா கார்ய காரணமயீ மஹாலக்ஷ்மீர்-தேவேசஸ்ய

பின்னாபின்ன ரூபா சேதனாசேதனாத்மிகா

பூதேந்த்ரிய மன: ப்ராண ரூபேதி ச விஜ்ஞாயதே!

பொருள் : ஶ்ரீ ராம ஸாந்நித்ய வசத்தால் அவள் உலகிற்கு ஆனந்தமளிப்பவள். உடல் படைத்தவர்களுக்கெல்லாம் உற்பத்தி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகியவற்றைச் செய்பவள். மூலப்ரக்ருதி எனப்பட்டவளே பகவதீ ஸீதா என அறிய வேண்டும். அனைத்திற்கும் ஆதாரமான காரிய காரணமயமான மஹாலக்ஷ்மீ. தேவநாயகரினின்று பிரிந்தும் பிரியாமலும் இருக்கும் ரூபமுடையவள். சேதன, அசேதன வடிவானவள். பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள், மனம், பிராணன் எல்லாம் அவளுடைய ரூபமே என்று உணர வேண்டும்.

இன்னும் விரிவாக அடுத்தடுத்து சீதையின் முழு மஹிமையையும் விளக்கமாகக் கூறுகிறது ஸீதோபநிஷத்!

தியாகராஜ கீர்த்தனைகள் பல நூறு. அவற்றைப் படித்தால் ராம நாம மஹிமை புரியும்; ஸீதோபநிஷத்தைப் படித்தால் ஸீதையின் அவதார மஹிமை புரியும்!

***

12 நிமிடத்தில் அருமையான ராகத்தில் ராமாயணம்!

POSTED ON 21-1-2024

அனைவரும் கேட்கவேண்டிய பாடல்

FILM LAVA KUSA IN TAMIL AND TELUGU; AVAILABLE IN YOUTUBE

ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே

இந்தக் கதை கேட்கும் எல்லோருமே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்

அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை

கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்

கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை

ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே

காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே

கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே

தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே

தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே

பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்

பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்

சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்

சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்

காதலினால் இருவர் கண்களும் கலந்தன

காதலினால் இருவர் கண்களும் கலந்தன

கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்

ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்

அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்

அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்

அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு

மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே

மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே

மகர தோரணத்தால் அலங்கரித்தாரே

மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி

மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்

வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும்

மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்

மரண மூர்ச்சை அடைந்த பின்னர்

ராமனையும் அழைக்கச் செய்தாள்

தந்தையுனை வனம் போகச் சொல்லி

தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார்என்றாள்
 சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்

சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்

விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த

தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே

மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே

மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்

அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே

அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே

ஐயனும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்

அன்பால் ராமபிரான் நண்பனாகினான்

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்

அன்பால் ராமபிரான் நண்பனாகினான்

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை

ராமபிரான் மீது மையல் கொண்டாள்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை

ராமபிரான் மீது மையல் கொண்டாள்

கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை

மானபங்கம் செய்து விரட்டி விட்டான்

தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்

ஜானகி தேவியை சிறையெடுத்தான்

தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்

ஜானகி தேவியை சிறையெடுத்தான்

நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி

தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்

ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்

வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்

ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்

அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்

கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்

கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்

வானர சேனையுடன் சென்றான்

விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்

வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்

கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்

அரசுரிமை கொண்டான்

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்

ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்

ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

இப்படி அழகுற சம்ஸ்கிருத ஸ்லோகத்துடன் பாடல் முடிகிறது.

ஒரு கோடி வசூல்; விருதுகள் பல (எஸ். நாகராஜன்)—-SUBHAM—–

Amazing Facts about Hindu’s Holiest City – Varanasi (Post No.12,942)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,942

Date uploaded in London – –   21 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 Hindu’s Holiest City Varanasi is in Uttar Pradesh on the banks of River Ganga. It is one of the 12 Jyotirlinga Shrines.

xxxx

Varanasi, also known as Kasi (kaasi) is the oldest city in the world. Hindus believe Mahabaharata war took place just before Kali Yug which began in 3102 BCE. Kasi Kingdom and the kings famous three daughters Amba, Ambika, and Ambalika lay the foundation for the great epic. So it is known from Vedic days.

xxxx

Author Mark Twain wrote in 1897 of Varanasi,

Benares is older than history, older than tradition, older even than legend, and looks twice as old as all of them put together.

xxxx

The presiding deity is Shiva with the name Viswanath. Goddess Visalakshi is his consort.

xxxx

On Deepavali day Priceless Gold statue of Goddess Annapoorani will be displayed worship. It is preserved in the vault of Reserve Bank of India at other times.

xxxx

The name Varanasi is derived from two rivers Varuna and Asi that go around Kasi area. Foreigners corrupted the name and Varanasi became Benares. Ganges tributaries forming the city’s borders: Varuna still flowing in northern Varanasi, and Assi, today a small stream in the southern part of the city, near Assi Ghat. 

xxxx

There  are 64 Ghats according to tradition; but modern count is 84 Ghats in the River Ganges. Dasa Asvamedh Ghat is the most famous one.

xxxx

Manikarnika and Harischandra Ghat are well known because the dead bodies are half bunt there and pushed into the river.

xxxx

Great saints like Tulsidas, Kabir das are associated with Kasi.

Buddha born as a Hindu king, came and delivered his first lecture at Kasi area and that place is known as Sarnath now.

xxxx

It is one of the Seven Holy Cities of India known as Saptapuris.

अयोध्या मथुरा माया काशी काञ्ची अवन्तिका ।  पुरी द्वारावती चैव सप्तैते मोक्षदायकाः Meaning: 1: Ayodhya, Mathura, Maya (Mayapuri or Haridwar), Kashi (Varanasi), Kanchi (Kanchipuram), Avantika (Ujjain) … 2: … and Dwaravati (Dwaraka); These seven cities are giver of Moksha (Liberation) (and are called Mokshapuri).

xxxx

Muslim fanatic Aurang Zeb demolished most famous Shiva Temple and built a mosque on it. He did the same in Ayodhya and Mathura as well. Later Kasi Viswanath Temple was built by a Maratha commander after Auranga Zeb’s demolition.

xxxx

Kasi is not only a pilgrim centre but also a centre for popular silk saris .

xxxx

Scholars from all over India came to Kasi to win the famous scholars of other sects.

xxxx

Now there over 4000 places of worship in Kasi.

Gnanvapi inside a mosque is in news nowadays; it is believed fanatic Aurang Zeb buried Hindu’s holy Shivlinga there.

xxxx

Nattukkottai Chettiar community of Tamil Nadu is doing amazing service there.  “Even if Punjab Mail is delayed Sambo Shankara won’t be delayed” is the popular saying in Kasi. The community is doing Puja thrice  a day and the Puja articles are taken along the streets from their Choultry to the temple. They do it with the slogan Sambo Shankara, Sambo Shankara and hence the saying.

xxxx

Famous Durga temples are there. After Narendra Modi became Prime Minister of India, vast improvements  are done so that devotees get easy access to the temple .

xxxx

Kasi is a holy pilgrim centre for Hindus, Jains , Buddhists and Sikhs because of their saints birth or visit to it.

xxxx

Ancient Tamil inscriptions end with a curse which shows the sanctity of the place. “If anyone violates the instructions in the inscription that person will get the sin of killing a holy cow on the banks river Ganga in Kasi. This shows Cow, Ganga and Kasi are the most sacred things for the Hindus

–subham—

Tags – Amazing facts, Kasi, Varanasi, Viswanath temple,

மாயா இன மக்கள் வணங்கிய இலவம் பஞ்சு மரம் போடும் புதிர் ! (Post No.12,941)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,941

Date uploaded in London – –   21 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

இலவு காத்த கிளிபோல என்பது தமிழ் பழமொழி . பழமொழி என்று சொன்னவுடனேயே அது காலத்தால் பழமையானது என்பது வெள்ளிடை மலையென விளங்கும் . இதை செய்பா (Ceiba) என்ற பொதுப்பெயரால் அழைப்பார்கள் ஆங்கிலத்தில் SILK COTTON TREE  சில்க் காட்டன் ட்ரீ என்பர். கபோக் KAPOK என்ற பெயரும் உண்டு .

முதலில் புதிர் என்ன என்பதைக் காண்போம் . இதற்கு சம்ஸ்க்ருதத்தில் ஷால்மலி என்று பெயர் . ஷால்மலித்

த்வீபம் என்பது சப்த த்வீபங்களில் ஒன்று என்று வராஹ புராணம் இயம்புகிறது. அதுமட்டுமல்ல ; அது ஸ்வயம்புவ மனுவின் புதல்வனான பத்து புதல்வர்களில் ஒருவரான த்யுதிமான் ஆண்ட ஏழு தீவுகளில் ஒன்று என்றும் சொல்கிறது . இது பற்றிய விளக்கங்கள் வரும் இடங்களில் அந்த ஷால்மலி மரத்தை வணங்குவோர் இருக்கும் இடத்தை அப்படி அழைத்தனர் என்றும் சொல்கிறார்கள் . ஆனால் என்சைக்ளோபீடியா என்னும் கலைக் களஞ்சியங்களில் இது மத்திய அமெரிக்க, தென் அமெரிக்க மரம் என்றும் பிற்காலத்தில் ஆப்ரிக்கா வழியாக இந்தியா வந்தது என்றும் எழுதியுள்ளனர் . அது உண்மை இல்லை என்பதை தமிழ்ப் பழமொழியும் புராண விளக்கங்களும் காட்டுகினறன் ; மகாபாரதத்திலும் இந்த மரம் பற்றிய குறிப்பு இருப்பதாக ஒருவர் எழுதியுள்ளார்

Śālmalidvīpa (शाल्मलिद्वीप) is one of the seven islands (dvīpa), ruled over by Dyutimān, one of the ten sons of Priyavrata, according to the Varāhapurāṇa chapter 74. Priyavrata was a son of Svāyambhuva Manu, who was created by Brahmā, who was in turn created by Nārāyaṇa, the unknowable all-pervasive primordial being.

மாயா அல்லது மாயன் இன மக்கள் இந்தியாவிலிருந்து கலியுகத் துவக்கத்தில் தென் அமெரிக்காவுக்குச் சென்றனர் என்று நான்

 எழுதிய ஆராய்ச்சிக்கு கட்டுரையில் கூறினேன். இந்த இலவம் பஞ்சு மரம் இபோது இன்னொரு  சான்றாக வந்துள்ளது .

மாயன் மொழியில் இதை யாக்ஸ் சி Yax Che (“Green Tree” or “First Tree”) என்பார்கள் ; பச்சை மரம் அல்லது முதல் மரம் என்று பொருள். 

இந்த மரப் பிரிவில் மூன்று வகை மரங்கள் இருக்கின்றன. வெப்ப மனதளக் காடுகளில் 230 அடி உயரம் வரை வளரும்; அதன் பட்டையில் முட்கள் இருக்கும். இதுதான் மாயா மக்கள் வணங்கும் மரம். மேற்கு ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் இதைவிடச் சிறிய மரம் வளர்கிறது. அதன் பட்டையில் முட்கள் இராது . மூன்றாவது வகை மரத்தை வர்த்தக ரீதியிலேயே பயிரிடுகிறார்கள் . இதன் காய்கள்தான் பஞ்சு உற்பத்திக்குப் பயன்படுகிறது ; தலையணை , மெத்தை ஆகியவற்றில் இலவம் பஞ்சினை அடைகிறார்கள் . கம்போடியாவிலுள்ள அங்கோர்வட்டில் பெரிய கோவில்களை (Cambodia’s Angkor Wat _வளைத்துப் பிடிக்கும் மரங்கள்தான் இவை . மரத்தின் அடிப்பகுதி பரந்தும் விரிந்தும் காணப்படும்

The Ceiba tree (Ceiba pentandra and also known as the kapok or silk-cotton tree) is a tropical tree native to North and South America and Africa. In Central America, the ceiba had great symbolic importance to the ancient Maya, and its name in the Mayan language is Yax Che (“Green Tree” or “First Tree”).

இது பூக்கும் நேரத்தில் மரத்தை நோக்கி வௌவால்களும் பட்டுப்பூச்சிகளும் தேனீக்களும் படையெடுக்கும் . அதிலுள்ள தேனினை உறிஞ்சிக் குடிக்க அவைகள் வருகின்றன. ஒவ்வொரு மரமும் தினமும் உற்பத்தி செய்யும் தேனின் அளவு 2 லிட்டர் ஆகும்.

இந்துக்கள் அரச மரத்தை எப்படி பிரம்மா, விஷ்ணு சிவன் என்று வழிபடுகிறார்களோ அதேபோல மாயா இனத்தினரும் இந்த மரத்துக்கு மூன்று தொழில்களைக் கற்பிக்கிறார்கள். வேர்ப்பகுதி பாதாள லோகத்தையும் நடுப்பகுதி பூலோகத்தையும் மேல்பகுதி சொர்க்கத்தையும் குறிக்கும் மரம் இது என்பது அவர்களின்  நம்பிக்கை.

மாயா இனமக்கள் இந்துக்களைப் போல மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்கள்; கபோக மரத்தில் தொங்கும் கொடிகள் மூலம் இறந்தோரின் ஆவிகள் விண்ணுலகத்துக்குச் செல்வதாகவும் நம்பினர் .

xxxx

வணிக , மருத்துவ உபயோகம்

ஆப்பிரிக்காவில் இதன் மரத்தை பிளைவுட் டாகப் பயன்படுத்தி பெட்டிகள் தயாரிக்கிறார்கள்  இளம் மொட்டுக்களை வெண்டைக்காய் போல உணவாகப் பயன்படுத்துகிறார்கள் .

குவாத்திமாலா  போர்ட்டோரிக்கோ, ஈக்வடோரியல் கினி ஆகிய  நாடுகளில் இதைதேசீய மரமாக அறிவித்துப் பாதுகாக்கிறார்கள் ; யாரும் அவைகளை வெட்ட முடியாது. வியட்நாமின் சைகோன் நகரத்தின் பெயர் இந்த மரத்தின் வியட்நாமியச் சொல்லில் இருந்து பிறந்தது.

இந்த மரத்தின் பட்டையைக்கொண்டு தயாரிக்கும் கஷாயம் (Ceiba pentandra bark )  உடம்பில் நீர் கட்டாமல் தடுக்கவும், காம இச்சைகளைப் பெருக்கவும் தலைவலி, நீரிழிவு நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது .

xxxx

எண்ணெய்

இதன் காய்களை நசுக்கி எடுக்கும் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  பருத்திக்கொட்டை எண்ணெய் போன்றது ;ஆனால் காற்றுப்பட்டால் விரைவில் கெட்டு விடும் . இதில் அயோடின் சத்து அதிகம் ; எளிதில் உலராது. வருங்காலத்தில் எரிபொருளாகவும் பெயிண்ட் செய்யவும் பயன்  படலாம் .

–subham— 

 tags- மாயா இன மக்கள்,   இலவம் பஞ்சு மரம்,   புதிர், கபோக், செய்பா 

QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1 (Post No.12,940)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,940

Date uploaded in London – –   21 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பொதுவாக நான் 10 கேள்விகளை மட்டும் கேட்பேன் ; ஆனால் 

முன்னர் QUIZ காஞ்சி பத்து QUIZ என்ற பெயரில் பத்து கேள்விகளை வெளியிட்டேன்; இப்போது காஞ்சிபுரம் பற்றி மட்டும் நாற்பது  கேள்விகளைக் கேட்பதற்குக் காரணம் காஞ்சி பரமாசார்யார் , உலகப் புகழ்பெற்ற வரலாற்று, தொல்பொருள் அறிஞர் டாக்டர் இரா நாகசாமி போன்றோர்  இந்த நகரம் பற்றி நிறைய சொல்லியுள்ளனர் ; இந்த நகரம் சிவ காஞ்சிவிஷ்ணு காஞ்சிஜைன காஞ்சி என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது என்று காஞ்சி பரமாசார்யார் (1894-1994) குறிப்பிட்டுள்ளார்  பொதுவாகத் தமிழ் மன்னர்கள் சேர, சோழ, பாண்டிய  மன்னர்கள் படையெடுத்தால் எதிரி மன்னனின் ஊரையே  அழித்து, கழுதை பூட்டி ஏர் உழுது, கொள்ளும் எள்ளும் விதைப்பர் என்று சங்க இலக்கியம் விளம்பும் . ஆனால் ஒரு  மன்னன் காஞ்சியின் அழகைக்கண்டு இதைக் கொஞ்சமும் தொடக்கூடாது என்று உத்தரவிட்டான் என்பார் அறிஞர் நாகசாமி . ஆகையால் 40 கேள்விகளில் இந்த நகரத்தைக் காண்போம்.

1 .காஞ்சியில் எந்தக் கோவிலில் ஆழ்வார் பாடல் பெற்ற நான்கு வைணவ தலங்கள் உள்ளன ?

XXXX

2.காஞ்சிபுரத்திலும் அதைச் சுற்றியும் எத்தனை பாடல்பெற்ற திவ்ய தேச தலங்கள் இருக்கின்றன ?

XXXX

3.காஞ்சி உலகலந்தப் பெருமாள் கோவில் அர்ச்சகராக இருந்தவர் திருக்குறளுக்கு எழுதிய உரையே பத்துப் பேர் எழுதிய உரைகளில் சிறந்தது என்று உலகமே போற்றுகிறது ;அவர் பெயர் என்ன ?

xxxx

4.சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. புஷ்பங்களில் ஜாதி முல்லை/மல்லிகை சிறந்ததுபுருஷர்களில் பெரியவர் விஷ்ணுபெண்களில் சிறந்தவர் ரம்பாநகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம். இதை காளிதாசர் செய்ததாகச் சொல்லுவர். அது என்ன ஸ்லோகம்?

xxxx

5.சேர,சோழ,பாண்டிய நாடுகள் வாரிசையில் காஞ்சி எந்த நாட்டைச் சேர்ந்தது அதன் சிறப்பு என்ன?

xxxxx

6. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை அறியாதோர் இல்லை அங்கு அன்னைக்கு எத்தனை கரங்கள்அவற்றில் என்னென்ன இருக்கின்றன ?

Xxxx

7. காமாட்சி சந்நிதியில் உள்ள லெட்சுமி யார் ?

xxxx

8.அப்பர்சுந்தரர்திருநாவுக்கரசர்ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவன் கோவிலின் பெயர் என்ன ஏன் அந்தப் பெயர் வந்தது?

xxxxx

9.பஞ்ச பூத ஸ்தலங்களில் இங்குள்ள லிங்கம் எந்த வகை லிங்கம் ?

XXXX

10.முக்தி தரும் ஏழு  ஸ்தலங்களில் காஞ்சியும் ஒன்று அதன் பழைய  தமிழ்ப் பெயர் என்ன அதற்குக்  காரணம் என்ன?

xxxx

விடைகள்

1.பெரிய காஞ்சிபுரம், பகுதியில் உலகலந்த பெருமாள் கோவில் உள்ளது. அதில் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் என்ற 4 பாடல் பெற்ற தலங்கள் அடக்கம்.

XXXX

2.ஒரு கோவிலுக்குள் நுழைந்தால் 4 திவ்ய தேச தலங்களைத் தரிசிக்கலாம். காஞ்சிபுரத்தை வலம் வந்தாலோ 14 திவ்ய தேசங்களைத் தரிசித்துவிடலாம்.

XXXX

3.அவர் பெயர் – பரிமேல் அழகர் ; உரை எழுதிய பத்துப் பேர் :-

தருமர் மணக்குடையர் தாமத்தர் நச்சர்

பரிலேழகர் பருதி – திருமலையர

மல்லர் கவிப் பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்

கெல்லையுரை செய்தா ரிவர்

1)தருமர் 2) மணக்குடவர் 3) தாமத்தர் 4) நச்சர் 5) பரிமேலழகர் 6) பருதி 7) திருமலையர் 8) மல்லர் 9) கலிப்பெருமாள் 10) காளிங்கர் ஆகிய பத்துப் பேரே திருக்குறளுக்கு உரை எழுதினார்கள் ..

XXXX

4.पुष्पेषु जाती पुरुषेषु विष्णुर्नारीषु रम्भा नगरीषु काञ्ची ।

नदीषु गंगा नरपेषु रामः काव्येषु माघः कवि कालिदासः ॥

“ புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு

நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி “

“Pushpeshu jati, purusheshu Vishnu

Naarishu Rambha, Nagareshu Kanchi.”

சிலர் இன்னும் ஒரு வரியையும் சேர்ப்பர் ;

नदीषु गंगा नरपेषु रामः काव्येषु माघः कवि कालिदासः ॥

நதீஷு கங்கா, நரசேஷு ராமஹ காவ்யேஷு மாகஹ கவி காளிதாஸஹ ; அதாவது அவர் ஒருவர் மட்டுமே புலவர் ; ஏனையோர் புலம்பர்  .

XXXX

5.தொண்டை நாடு;

வேழ முடைத்து மலைநாடு, மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து—என்றார் ஒளவையார்

XXXX

6.காமாக்ஷி தேவி   வடிவத்திலும், ஸ்ரீ சக்ர வடிவத்திலும் சதுர் (4) புஜங்களோடு  காயத்ரி மண்டபத்தில் கொலு வீற்றிருக்கிறாள்.காமாக்ஷியின் நான்கு கரங்களில் ஒன்றில் கரும்பினால் ஆன வில்லும் இன்னொன்றில் புஷ்பங்களால ஆன அம்புகளும் உண்டு. மீதி இரு கரங்களில் பாசமும் அங்குசமும் உண்டு. காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர்.

XXXX

7.காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி இருக்கிறாள்.

கருவறையின் வலது புறத்தில் கள்வர் என்ற பெயரில் திருமால்/விஷ்ணு  இருக்கிறார்.  அதேபோல காயத்ரீ மண்டபத்தின் இடது புறத்தில் அரூப லெட்சுமி சந்நிதி இருக்கிறது. இங்கு வினோதமான ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது.அங்கு அம்பாள் பிரசாதமான குங்குமம் இருக்கும். அதைக் கீழேயிருந்து எடுத்து மேலிருந்து கீழாகத் தடவ வேண்டும் . ஏனென்றால் ,

மஹா விஷ்ணுவின் சாபத்தால் உருவமிழந்த லெட்சுமி தேவி , காமாட்சியைப் பிரார்த்தித்து , உருவம் பெற்றாளாம் . அதாவது காமாட்சியின் குங்குமத்தை லெட்சுமியின் மீது தடவும்போது அவள் உருவம் பெறுவாள் என்று காமாட்சி அனுக்கிரஹித்தாள் . அதை இன்றும் எல்லோரும் பின்பற்றுகிறார்கள்

XXXX

8. ஏகாம்பரேஸ்வரர்  கோவில் அல்லது ஏகாம்பர நாதர் கோவில் . இதன் தமிழ் அர்த்தம் ஒற்றை மாமரக் கடவுள் . கயிலாயத்தில் சிவன் கண்களை பார்வதி விளையாட்டாக மூடினாள் ; ஊக்கமே இருண்டுபோனது ; இதனால் கோபம் அடைந்த சிவன், அவளை பூமியில் தவம் செய்து  திரும்பி வா என்று அனுப்பினார் ; அவர் காஞ்சியில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் (ஒற்றை மாமரக் கடவுள்) மணலால் லிங்கம் செய்து வழிபட்டார். வெள்ளம் வந்த போதும் அதை அழியாமல் பாதுகாத்தார் . இப்போதும் மா மரமே தல விருட்சம்.

XXXX

9. மண்ணால் ஆனதால் இது பிருத்வீ லிங்கம் என்று அழைக்கப்படுகிறது . ஆகையால் இதற்கு அபிஷேகம் கிடையாது

XXXX

10.கச்சி என்பதே பழைய பெயர்; இது தில்லை , மருதம் போன்ற மரங்களால் ஏற்பட்ட தலப்பெயர்கள் போல காஞ்சி மரத்தால் வந்த பெயர். காஞ்சி என்ற சொல் மருவி கச்சி ஆனது .

XXXX

Tags- QUIZ காஞ்சிபுரம் 40,  PART 1 , பரிமேலழகர் , கச்சி, காமாட்சி , அரூப லெட்சுமி , ஏகாம்பரேஸ்வரர் , மாமரம் , பிருத்வீ லிங்கம்

ராம நாம மஹிமை – 2 (Post No.12,939)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,939

Date uploaded in London –  –   21 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழாவை ஒட்டி சிறப்புக் கட்டுரை!

ராம நாம மஹிமை – 2

ச.நாகராஜன்

ராமதாபினீ உபநிடதம் விளக்கும் ராமநாம மஹிமை!

நூற்றெட்டு உபநிடதங்களில் ஒன்றான ராமதாபினீ உபநிடதம் ராம நாம மஹிமையைப் பற்றி நன்கு விளக்குகிறது.

இது அதர்வண வேதத்தில் உள்ள 31 உபநிடதங்களில் ஒன்று.

இதில் உள்ள சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

ஶ்ரீ ராமபூர்வதாபின்யுபநிஷத் என்ற முதல் பகுதியில் வருவது:

யதைவ வடபீஜஸ்த்த: ப்ராக்ருதச்ச மஹாத்ரும:!

ததைவ  ராமபீஜஸ்த்தம் ஜகதேதச்சராசரம் ||

பொருள் : எப்படி ஒரு ஆலின் விதையில் ப்ராக்ருதமான ஆலமரம் உறைகிறதோ, அப்படித்தான் ராம என்னும் பீஜத்தில் இந்த சராசர ப்ரபஞ்சம் உறைகிறது.

ஶ்ரீ ராமோத்தரதாபின்யுபநிஷத் என்ற இரண்டாம் பகுதியில் வருவது:

ஓம் யோ வை ஶ்ரீ ராமசந்த்ர: ஸ பகவான் அத்வைத ப்ரமானந்தாத்மா பூர்ப்புவஸ்தஸ்மை வை நமோ நம: |

பொருள் : எவர் ஶ்ரீ ராமச்சந்திரரோ அவர் தான் பகவான். இரண்டற்ற பரமானந்த ஆத்மா. பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் எல்லாம். அவரை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.

நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள்

பன்னிரெண்டு ஆழ்வார்கள் அருளிய பாடல்களில் ராமரைத் துதித்துப் போற்றும் பாடல்கள் ஏராளம் உள்ளன.

நாலாயிர திவ்ய ப்ரபந்தத்திலிருந்து சில பாடல்கள்:

ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த பெருமாள் திருமொழியில் வரும் பாடல்:

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணி வயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்து வித்தாய்

செம்பொன்சேர் கன்னி நன் மாமதிள் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!

என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ.

                           பாடல் எண் 719, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

பாராளும் படர்செல்வம் பரத நம்பிக்கே அருளி

ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!

சீராளும் வரைமார்பா! திருக்கண்ணபுரத்து அரசே!

தாராளும் நீண் முடி என் தாசரதீ! தாலேலோ!

                           பாடல் எண் 723, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!

அற்றவர்க்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!

கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே!

சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!

                           பாடல் எண் 724, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

ஶ்ரீ திருமழிசைப்பிரான் அருளிச் செய்த திருச்சந்த விருத்தம்

ஊனில் மேய ஆவி நீ உறக்கமொடு உணர்ச்சி நீ

ஆனில்மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ

வானினோடு மண்ணும் நீ வளங் கடற் பயனும் நீ

யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே!

                           பாடல் எண் 845,  நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

ஶ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்

இரவும் நன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை

குரவமே கமழும் குளிர்பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால்

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத திருவல்லிக்கேணி கண்டேனே

                           பாடல் எண் 1077, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

Picture shows PM Narendra Modi’s Ramayana Shrines Tour.

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி

நீள்கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்

தாள்கள் தலையில் வணங்கி நாள்கடலைக் கழிமினே

                           பாடல் எண் 2736, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

எந்தாய்! தண்திரு வேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய்!

மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒருவாளி கோத்த வில்லா!

கொந்தார் தண்ணந் துழாயினாய்! அமுதே! உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தாற்

வானேறே! இனியெங்குப் போகின்றதே?

                           பாடல் எண் 2848, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?

புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்றின்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசம் முற்றவும்

நற்பாலுக்கு உத்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!

                           பாடல் எண் 3381, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

***

To be continued……………………………….