1.ராமர் பிறந்த ஊர் அயோத்தி; அது எந்த மாநிலத்தில் எந்த நதியின் கரையின் மேல் இருக்கிறது?
XXXX
2.ராமர் கோவில் மீது முஸ்லீம் மன்னன் பாபர் கட்டிய மசூதி அகற்றப்பட்ட பின்னர், 500 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?
XXXX
3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் என்ன ?
XXXX
4.அயோத்தி ராமர் கோவிலில் உள்ள சிலையைச் செய்தவர் யார்?
XXXX
5.ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோரிடையே உள்ள ஒற்றுமை என்ன?
XXXX
6.ராம பிரான் பிறந்தது நவமி திதியில்; புதிய கோவிலில் நவமி நாட்களில் நடைபெறும் பொறியியல் அதிசயம் என்ன?
XXXX
7. ராமர் கோவில் கோபுரத்தின் உயரம் என்ன?
xxxxx
8.ராமர் கோவிலில் எத்தனை கதவுகள் ?
XXXX
9.ராமர் கோவில் மணி எவ்வளவு பெரியது?
xxxx
10.ராமர் கோவில் த்வஜ ஸ்தம்பம் எத்தனை அடி உயரம் உடையது ?
xxxx
BONUS QUESTIONS
11. ராம பிரானின் வைர நெக்லஸ் (கழுத்துக்கு மாலை) எவ்வளவு பெரியது?
xxxx
12.சீதா தேவி பிறந்த ஜனக்பூர் நேபாளத்தில் உள்ளது. அங்குள்ள கோவிலும் மக்களும் அனுப்பும் பரிசுகள் என்ன?
xxxx
13.உலகிலேயே பெரிய ஊது பத்தியை / வர்த்தியை யார் அயோத்திக்கு அனுப்புகின்றனர் ?
xxxx
14.ராமர் கோவில் விளக்குகளில் மிகப்பெரியது எது?
xxxx
விடைகள்
1.உத்தர பிரதேசத்தில் சரயூ நதிக்கரையில் அயோத்தி நகரம் இருக்கிறது .
XXXX
2.அயோத்தி நகர ராமர் கோவில் கும்பாபிஷேகம் -ஜனவரி 22, 2024.
XXXX
3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் சாகேதம்; முஸ்லீம்கள் சூட்டிய பெயர் பைசாபாத்.
XXXX
4.மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய சிலை தான் அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ளது .இந்த சிலையின் உயரம் 51 அங்குலம்;இதன் எடை என்பது 1.5 டன் ;. ராமரின் தலையில் கிரீடம் இருக்கும்.
xxxx
5. ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோர் கருப்பு நிறத் தோல் உடைய கருப்பர்கள் ; வியாசர் தவிர மற்ற மூவரும் பேரழகு வாய்ந்தவர்கள்; ஆரிய- திராவிட வாதம் பேசிய அரை வேக்காடுகளுக்கு இவர்களுடைய நிறம் செமை அடி கொடுக்கிறது.
xxxx
6.நவமி நாட்களில் ராம பிரானின் முகத்தில் சூரிய ஒளி விழும் வண்ணம் லென்ஸ்கள் மூலம் வடிவமைத்துள்ளனர் .ராமர் ஸூரிய குல / ரவி குல திலகம் என்பதை இது காட்டும்..
.XXXX
7.கோபுர உயரம் 161 அடி. கோவிலின் நீள அகலம் 380 அடிக்கு 250 அடிகள் ஆகும் (250 feet wide, 380 feet long and 161 feet (49 m) high கோவிலின் பரப்பளவு 2.77 ஏக்கர் ; கோவில் வளாகத்தின் பரப்பளவு 71 ஏக்கர் .
XXXX
8.ராமர் கோவிலில் 46 கதவுகள் இருக்கின்றன. அவைகளை 100 கிலோ தங்கத்தைக் கொண்டு முலாம் பூசுகின்றனர் .ராமர் கருவறையில் 12 அடி உயரத்திலும் 8 அடி அகலத்திலும் தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள்
XXXXX
9.உத்தர பிரதேச மாநிலம் ஜலேசரில் மிக பிரமாண்டமான மணி ஒன்றை எட்டு வகையிலான உலோகத்தால் செய்துள்ளனர்.அந்த மணியின் எடை 2100 கிலோ ! இந்த மணியை தயார் செய்ய இரண்டு ஆண்டுகள் ஆனது.
XXXX
10. இந்தக் கொடி மரத்தின் (த்வஜ ஸ்தம்பம்) உயரம் 44 அடி. அதன் எ டை 5500 கிலோ. பித்தளையால் ஆனது . குஜராத்திலுள்ள ஆமதாபாத் நிறுவனம் இதை உருவாக்கியது.
xxxxx
BONUS QUESTIONS
11.சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5000 அமெரிக்க வைரங்கள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளியை கொண்டு ராமர் சிலைக்கு நெக்லஸை உருவாக்கியுள்ளார். 40 கைவினைஞர்கள் 35 நாட்களில் இதைச் செய்து முடித்தார்கள்.
xxxx
12.ஜனகபுரி மக்களும் சீதை கோவிலும் 2 லாரிகள் நிறைய 3000 பரிசுகளை அயோத்திக்கு அனுப்பினர் . அவை வெள்ளிப் பாத்திரங்கள் , உலர்ந்த பழங்கள் , துணி மணிகள் ஆகும். இலங்கையில் சீதையை ராவணன், அசோக வனத்தில் சிறை வைத்தான். அங்கிருந்து புனித பாறை ஒன்றை இலங்கை நாடு அனுப்பிவைத்துள்ளது .
xxxx xxxx
13.குஜராத் வடோதரா நகரிலுள்ள நிறுவனம் 108 அடி நீளமுள்ள ஊது பத்தியை / வர்த்தியை அயோத்திக்கு அனுப்பியிருக்கிறது. இதன் குறுக்களவு மூன்றரை அடி; எடை 3610 கிலோ. இது 50 கிலோமீட்டர் தொலைவுக்கு வாசனையைப் பரப்பும் .
xxxx
14.வதோதராவை சேர்ந்த அரவிந்த் பாய் மங்கள் பாய் பட்டேல் என்ற விவசாயி 1100 கிலோ எடையுள்ள ராட்சத விளக்கை வடிவமைத்துள்ளார். பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட இந்த விளக்கு 9.25 அடி உயரமும் 8 அடி அங்குலமும் கொண்டது . இதை ராமர் கோவிலுக்கு அனுப்பியுள்ளார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
KARMA RAHASYA – 1
S. Nagarajan
One’s Karma is the cause for one’s rise and fall.
In this regard there is an ancient story of the conversation between Mrithyu and Gautami with Kala and a Hunter (Fowler) and the serpent.
The story was told by Bhishma to Yudhishthira. In Mahabharata, the first chapter of Anusasana Parva narrates this story.
There was an old lady of the name of Gautami, who was possessed of great patience and tranquillity of mind. One day she found her son dead in consequence of having been bitten by a serpent. An angry fowler, by name Arjunaka, bound the serpent with a string and brought it before Gautami. He then said to her-‘This wretched serpent has been the cause of your son’s death. Tell me quickly how this wretch is to be destroyed. Shall I throw it into the fire or shall I hack it into pieces? This infamous destroyer of a child does not deserve to live longer.’
Gautami replied, ‘ O Arjunaka, release this serpent. It does not deserve death at your hands. Those that have made themselves light by the practice of virtuous deeds, manage to cross the sea of the world even as a ship crosses the ocean. But those that have made themselves heavy with sin sink into the bottom, even as an arrow thrown into the water.’
The fowler said, ‘I know, O lady, that knowing the difference between right and wrong, that the great are afflicted at the afflictions of all creatures. But these words which you have spoken are fraught with instruction for only a self-contained person. Therefore, I must kill this serpent. Those who value peace of mind, assign everything to the course of Time as the cause, but practical men soon assuage their grief (by revenge). Therefore, O lady, assuage your grief by having this serpent destroyed (by me).
Gautami replied, ‘The death of the boy was predestined: therefore, I am unable to approve of the destruction of this serpent.’
At this point of time the serpent, painfully bound with the cord, sighing a little and maintaining its composure with great difficulty, then uttered these words slowly, in a human voice.’
“The serpent said, ‘O Arjunaka, what fault is there of mine? I have no will of my own, and am not independent. Mrityu sent me on this errand. By his direction have I bitten this child, and not out of any anger or choice on my part. Therefore, if there be any sin in this, O fowler, the sin is his.’
The fowler said, “As in the making of an earthen vessel the potter’s wheel and rod and other things are all regarded as causes, so O serpent, (cause in the production of this effect). He that is guilty deserves death at my hands.’
“The serpent said, ‘As all these, viz., the potter’s wheel, rod, and other things, are not independent causes, even so I am not an independent cause. Therefore, this is no fault of mine, as you should grant.”
The serpent directed by Mrityu having said this, Mrityu himself appeared there and addressing the serpent spoke thus.
Mrityu said, ‘Guided by Kala, I, O serpent, sent you on this errand, and neither you nor am I the cause of this child’s death. Even as the clouds are tossed hither and thither by the wind, I am like the clouds, O serpent, influenced by Kala. All creatures, mobile and immobile, in heaven, or earth, are influenced by Kala. All acts in this world and all abstentions, as also all their modifications, are said to be influenced by Kala, Surya, Soma, Vishnu, Water, Wind, the deity of a hundred sacrificer, Fire, Sky, Earth, Mitra and Parjanya, Aditi, and the Vasus, Rivers and Oceans, all existent and non-existent objects, are created and destroyed by Kala. Knowing this, why you, O serpent, consider me to be guilty? If any fault attaches to me in this, you also would be to blame.’
Thus folwer blamed the snake and snake blamed Mritu and Mritu blamed Kala.
Then Kala arrived at that scene of disputation on this point of morality, and spoke thus to the serpent and Mrityu and the fowler Arjunaka assembled together.
Kala said, ‘Neither Mrityu, nor this serpent, nor I, O fowler, am guilty of the death of any creature. We are merely the immediate exciting causes of the event. O Arjunaka, the Karma of this child formed the exciting cause of our action in this matter. There was no other cause by which this child came by its death. It was killed as a result of its own Karma. It has met with death as the result of its Karma in the past. We all are subject to the influence of our respective Karma. Karma is an aid to salvation even as sons are, and Karma also is an indicator of virtue and vice in man. We urge one another even as acts urge one another. As men make from a lump of clay whatever they wish to make, even so do men attain to various results determined by Karma. As light and shadow are related to each other, so are men related to Karma through their own actions. Therefore, neither you, nor am I, nor Mrityu, nor the serpent, nor this old Brahmana lady, is the cause of this child’s death. He himself is the cause here.”
Upon Kala expounding the matter in this way, Gautami, convinced in her mind that men suffer according to their actions, spoke to Arjunaka.’Neither Kala, nor Mrityu, nor the serpent, is the cause in this matter. This child has met with death as the result of its own Karma. I too so acted (in the past) that my son has died (as its consequence). Let now Kala and Mrityu retire from this place, and you too, O Arjunaka, release this serpent.’
Then Kala and Mrityu and the serpent went back to their respective destinations, and Gautami became consoled in mind as also the fowler.
Thus Bhisma convinced Yudhishthira that Men attain to heaven or hell as the result of their own Karma.
Karma Rahasya is subtle.This can not be understood easily.
Even to read this Karama Rahaya article one should have done some good Karma, is it not?
***
Thanks to Kisari Mohan Ganguly who translated Mahabharata first in English between 1883 and 1896. Condensed from his version.
வின்கா ரோசியாVinca rosea என்ற பூ ஆப்பிரிக்காவின் பக்கத்தில் உள்ள மடகாஸ்கர் (Madagascar, now called Malagasy) என்ற தீவிலிருந்து உலகம் முழுதும் பரவியதாக தாவர வியல் அறிஞர்கள் செப்புவர்; இன்று இதை வீடுகளிலும் தோட்டங்களிலும், குறிப்பாக இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், எங்கும் காண்கிறோம்.
இதற்கு தமிழ் நாட்டில் நித்ய கல்யாணி, நயன்தாரா, சுடுகாட்டுப்ப்பூ என்று பல பெயர்கள் உள்ளன. இதை சாகுபடி செய்தால் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் எந்த விதக் கவனிப்பும் இல்லாமல் எளிதில் வளரக்கூடிய தாவரம் / செடி இது. இதற்கு வாசனை என்ற சிறப்பு இல்லை. ஆயினும் நிறைய நோய்களைப் போக்கும் சக்தி இருப்பதால் இதற்கு மதிப்பு அதிகம் .
xxxxxxxxxxxxxxxx
எச்சரிக்கை
மருத்துவக் கட்டுரைகளைப் படித்துவிட்டு, நேரடியாக தனக்குத்தன் தானே வைத்தியம் செய்வது ஆபத்தில் முடிய வாய்ப்பு உண்டு. எதையும் பயன்படுத்துவதற்கு முன்னால் , பதிவு செய்த உண்மை மருத்துவர்களைக் கலந்து (REGISTERED MEDICAL PRACTITIONERS) ஆலோசியுங்கள் .
அவர்கள் சொன்னாலும்கூட, உங்கள் தேகம் அந்த மருந்தை ஏற்கிறதா , எதிரிடை விளைவை உண்டாக்குகிறதா (மலச்சிக்கல், வாந்தி, கிறுகிறுப்பு, அதிக தூக்கம்) என்பதை தேதிவாரியாக குறித்து வையுங்கள்; அதிகப்பாதிப்பு இருந்தால் மருந்தை எடுக்காதீர்கள்.
உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமாவது நீங்கள் எடுக்கும் புதிய மருந்து பற்றிச் சொல்லி விட்டு மருந்தினை எடுங்கள் .
பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் , பலன்கள் உண்மையானால் டாக்டர்களுக்கு வேலையே இராது. ஆகையால் பத்திரிகையில் படிப்பதை அப்படியே பின்பற்றாதீர்கள் . மருத்துவர்கள் சொல்லுவதைக் கேளுங்கள்
Xxxxxxxxxxxxxxxxxxxxxxx
நித்தியக் கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்றும் அழைக்கப்படும் செடி, மடகாஸ்கரில் (LARGE ISLAND COUNTRY NEAR AFRICA; MALAGASSY) இருந்து பரவியது ; தாவரவியலில் இதை அபோசயனேசி (Apocynaceae ) குடும்பத்தின் கீழ் வைத்துள்ளனர் . காதராந்தஸ் ரோசியஸ் Catharanthus roseus என்பது தாவரவியல் லத்தீன் மொழிப்பெயர்.
வெள்ளை நிறம் அல்லது இளம் சிவப்பு நிறத்தில் கவர்ச்சிகரமாகத் தோன்றும் ; கண் போல இருப்பதால் நயன(கண்) தாரா (நட்சத்திரம்) என்றும் எப்போதும் பூப்பதால் நித்ய கல்யாணி என்றும் ஸம்ஸ்க்ருத்தில் அழைக்கின்றனர். தமிழில் நல்ல பெயரைச் சூட்டவில்லை . ஆங்கில மொழியில்Periwinkle பெரிவின்க்கில் என்று சொல்லுவார்கள்
ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களை உடையது இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை.
இம் மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும்.. இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் மேற்பரப்பு பளபளப்பாகவும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும்.
இந்தி மொழியில் இதை சதாபஹார் सदाबहार Sadabahar என்று அழைப்பர் ;
ஏனைய மொழிகளில் Shavam Naari (Malayalam), सदाफूली Sadaphuli (Marathi), নযনতাৰা Nayantara (Bengali); బిళà±ళ à°—నà±నేరà± (Telugu).
நித்தியகல்யாணி மருத்துவப் பயன்கள்
நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.
இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தும் (In the acute leukemias and lymphoblastosarcomas, cytomorphologic and quantitative studies demonstrated that the oncolytic effects correlated well with the magnitude of metaphasic blockade)
ஹா ட்கின்ஸ் நோய் என்னும் புற்று நோயை யும் குணப்படுத்தும் Hodgkin’s disease, lymphosarcoma, and acute leukemia have been studied after treatment with the Vinca rosea alkaloids (vinblastine and vincristine),
நித்ய கல்யாணியிலிருந்து ஆல்கலாய்ட் என்னும் ரசாயனப் பொருட்கள் 70 கிடைக்கின்றன (The stem of Madagascar periwinkle produced a milky sap which is the source of over 70 different indole alkaloids. அவற்றில் நான்கினை மருத்துவ உலகம், புற்று நோய் சிகிச்சையில்( cancer fighters.)பயன்படுத்துகின்றன ; அவையாவன
: வின் ப்லாஸ்டின் Vinblastine (VBL),
வினோரெல்பை ன் vinorelbine (VRL),
வின்கிரிஸ்டின் vincristine (VCR) and
வின்டெசின் vindesine (VDS).
இவைகளில் VCR, VBL and VRL என்பன அமெரிக்காவிலும் வின் ப்லுனைன் Vinflunine என்பதை ஐரோப்பாவிலும் பயன்படுத்துகின்றனர் .புற்று நோயைத் தீர்க்கும் மருந்துகளில் இரண்டாவது இடத்தை வகிப்பது நித்ய கல்யாணி என்றால் இதன் மதிப்பை அறியலாம் .
மனநோய்களை குணமாக்கும்;
இரத்த அழுத்தம் , நீரிழிவுநோய் கட்டுப்படும்; been used for various treatments, e.g. diabetes mellitus, high blood pressure and infection
மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும்;
அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும்.
பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.
xxxxxxxxx
இதில் கிடைக்கும் ஆல்கலாய்ட் என்னும் ரசாயனப் பொருட்கள்: அஜ்மாலின்,ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine)
இது தவிர மருந்து செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து கிடைப்பதாலும் இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.,
xxxxxx
வருமானம் தரும் நித்யகல்யாணி
ஏற்றுமதி தகவல்கள்
வோல்சா நிறுவனம் திரட்டிய (As per Volza’s Global Export data), தகவலின்படி (Vinca rosea export shipments) 283 கப்பல்களில் நித்ய கல்யாணி ஏற்றப்பட்டது . 58 ஏற்றுமதி நிறுவனங்கள் அதை அனுப்பின.( stood from World at 283, exported by 58 World Exporters to 61 Buyers.). அதை 61 வியாபார நிறுவனங்கள் வாங்கின
பெரும்பாலான வின்கா ரோசியா செடிகளை பிரான்ஸ், ஜப்பான், பெரு ஆகிய நாடுகள் வாங்கின.
(France, Peru and Japan)
இந்தியா முதலிடம்
இந்தியா 184 கப்பல்களிலும் காஸ்டாரிகா 23 கப்பல்களிலும் , வியட் நாம் 21 கப்பல்களிலும் நித்ய கல்யாணி சரக்குகளை அனுப்பின
The top 3 exporters of Vinca rosea are India with 184 shipments followed by Costa Rica with 23 and Vietnam at the 3rd spot with 21 shipments.
xxxx
தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
நித்தியகல்யாணியின் இலைகளும், வேரும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. . நித்ய கல்யாணியின் இலைகள் அமெரிக்கா ஹங்கேரிக்கு ஏற்றுமதியாகிறது. இதன் வேர்கள் மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எற்றுமதி செய்யப்படுகிறது.
நித்ய கல்யாணி செடியினை நேரடியாக உட்கொள்வது ஆபத்தானது .
–subham—
Tags- நித்ய கல்யாணி, Vinca rosea, Periwinkle, சதாபஹார் सदाबहार Sadabahar, புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் , குணமாகும், மருந்து ஏற்றுமதி , நயனதாரா
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் என்ற இந்தக் கட்டுரைத் தொடர் 57-ஆவது பகுதியுடன் நிறைவடைகிறது ஆயிரக் கணக்கில் பகவதி, ஐயப்பன் , சிவன், விஷ்ணு , கணபதி, முருகன், நாகர் கோவில்கள் உள்ள மலையாள தேசத்தில், பழைய சேர நாட்டில் 108 கோவில்களை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான பணியே. ஆயினும் மக்கள் ஏராளமாகச் செல்லும் கோவில்களைக் கருத்தில் கொண்டு 108-க்கும் அதிகமான கோவில்களை தேர்ந்தெடுத்தேன்.
xxxx
111. திருவனந்தபுரம் சிவன் கோவில்கள்
Chenkal Siva Parvathi Temple with tallest Linga
திருவனந்தபுரம் நகரிலிருந்து கொல்லம் செல்லும் பாதையில் கழக் கூட்டம் மஹாதேவர் கோவில் இடம்பெறுகிறது. இது ஒரு பழங்கால சிவன் கோவில் ஆகும். 14 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது இது.
இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம் டிசம்பரில் வரும் திருவாதிரை உற்சவம் ஆகும். திருவாதிரை நாளன்று, பெண்கள் கேரள பாணியில் பட்டுப்புடவை உடுத்திக் கொண்டு திருவாதிரைக் களி ,கை கொட்டிக் களி என்ற நடனங்களை பாடிக்கொண்டு ஆடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும் இந்த பத்து நாள் திருவிழாவில் கேரள பாணி நடனங்களும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
xxxxx
ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவன் கோவில்
ஸ்ரீ கண்டேசுவரம் மகாதேவன் கோவில் (Sreekanteswaram Mahadeva Temple) சுமார் 1500 ஆண்டு வரலாறு உடையது. பழைய நூல்களில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன.
திருவனந்தபுரம் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இதே பெயரிலுள்ள பழைய கோவில் பழைய கோவில் புத்தன்சந்தை என்ற பகுதியில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் 10 நாள் உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது .
சிவன் மூலவர் ஆவார். மகா கணபதி, முருகன், ஆஞ்சநேயர், ஸ்ரீ கிருஷ்ணர், அய்யப்பன், நாகராசர் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன.
அதிகாலையில் நடை திறந்ததும், முதல் நாள் இறைவனுக்குப் போடப்பட்ட மாலைகளையும், பூக்களையும் எடுத்து, மாற்றிச் சுத்தப்படுத்தும் இருபது நிமிடங்கள்தான் நிர்மால்ய தரிசன நேரம். இதைக் கண்டு தரிசிப்பதற்கு அதிகாலையில் இருந்தே பக்தர்கள் வந்து சேர்கிறார்கள்.
திருவிழாக்கள்
ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. சிவபெருமானின் பிறந்த நாளாகக் கருதப்படும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆராட்டு இருக்கும். சிவராத்திரி பண்டிகையும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அப்போது சிவபெருமானின் சிலையை நாள் முழுவதும் தூய நெய்யால் அபிஷே கம் செய்கிறார்கள் .
xxxxxxx
58 அடி உயர ‘கங்காதேஸ்வரர்’ சிலை உள்ள ஆழிமலை சிவன் கோவில்
தற்காலத்தில் எழுப்பப்பட்ட புதிய கோவில்களில் பக்தர்களைக் கவர்வ து 58 அடி உயர ‘கங்காதேஸ்வரர்’ சிலை உள்ள ஆழிமலை சிவன் கோவில் ஆகும் .
2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி, தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நடைபெற்று, 2020-ம் ஆண்டு இறுதியில் நிறைவுபெற்றது.
இந்த சிலையில், சிவபெருமான் ஒரு காலை தரையில் ஊன்றியும், மற்றொரு காலை மடித்தும் வைத்திருக்கிறார். தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை ஏந்துகிறார் .
தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் இருந்து பூவாறு – கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் 58 அடி உயரத்தில் கங்காதரேஸ்வர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாநிலத்தில் இருக்கக்கூடிய சிவன் கோவில்களில் மிகவும் உயரமான சிலை, இக்கோவிலில் மட்டுமே உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தக் கோவிலுக்கு வருகின்றனர்.
xxxxx
பாரசாலா மகாதேவர் கோவில்
கேரள – தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள பாரசாலா என்ற சிறிய கிராமத்தில் கோவில் அமைந்துள்ளது. திருவன ந்தபுரம்- கன்னியாகுமரி சாலையில் 30ஆவது கிமீ.யில் கோவில் அமைந்துள்ளது இங்கு மூலவரான சிவபெருமான் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார், இது ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது வேணாடு அரச குடும்பத்தைச் சேர்ந்த மல்லன் செண்பகராமன் தேலவா என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயிலில் பார்வதி கிழக்கு நோக்கிய நிலையில், பின்புறத்தில் உள்ளார்.
400 ஆண்டுகள் பழமையானதாகும். அரிய கல் கட்டிடக்கலையைச் சேர்ந்தது. அரிய சடங்குகளுக்கு புகழ் பெற்றதாகும். சாதி, மதம் போன்றவற்றிக்கு அப்பாற்பட்டு அனைத்து சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களும் இக்கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.
xxxx
112. பழவங்காடி கணபதி கோவில்
திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் பழவங்காடியில் பிள்ளையார் கோவில் இருக்கிறது மகாகணபதி கிழக்கு நோக்கிப் பார்த்தபடி, வலது காலை மடித்து வைத்து அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் .. இக்கோவிலுக்குள் விநாயகரின் முப்பத்திரண்டு திருவுருவங்களை அழகிய ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர் இந்திய ராணுவத்தின் பராமரிப்பில் இருக்கும் இந்தக் கோவிலை, மிலிட்டரி பிள்ளையார் என்றும் அழைப்பார்கள். . திருவனந்தபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
கரிக்ககம் சாமுண்டிதேவி கோவில் சக்தி வழிபாட்டுக்காரர்களுக்கு முக்கியமான கோவில் ஆகும். ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் சாமுண்டிதேவி கோவில், கரிக்ககம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பிற்கால சேர மன்னனான ராமவர்மா காலத்தில் உருவானது. தேவியானவள் , உக்கிரமாக இருக்கும் ரத்த சாமுண்டியாக தரிசனம் தருகிறாள். திருவிதாங்கூர் மன்னனின் படைவீரர்கள் களரிச் சண்டை பயிற்சி பெறும் களமாக விளங்கிய இடம் என்பதால், இந்தப் பகுதிக்கு ‘களரிக்களம்’ என்று பெயர் வந்தது. பின்னர் அதுவே ‘கரிக்ககம்’ என்று மருவியது . திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் இந்த ஆலயம் இருக்கிறது.
xxxx
114. நாராயண குரு கட்டிய சிவன் கோவில் , அருவிப்புரம்
திருவனந்தபுரத்திலிருந்து 26 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற அருவிப்புரம் சிவன் கோவில் இருக்கிறது. அங்கு நாராயண குரு தவம் செய்த குகையும் இருக்கிறது சிவராத்திரி ஏனைய சிவன் கோவில் உற்சவம் போலவே சிறப்புடன் நடைபெறுகிறது. அப்போது கலை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சமய மகாநாடுகளும் நடைபெறும். இந்த விழாவினைத் தவிர, நாராயண குரு பிறந்த தினத்தை ஜெயந்தியாகக் கொண்டாடிவருகின்றனர்
கேரளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் ‘குரு’வாக விளங்கியவர் நாராயண குரு என்னும் மகான் ஆவார் . இந்து சமயத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாறாத மாபெரும் பணியைச் செய்தவர். தாமே பல இந்தக் கோவில்களைக் கட்டினார்.
1888-ல் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்கிற மலைகளும் காடுகளும் சூழ்ந்த இடத்தில் நெய்யாறு ஓடும் இடத்திற்கு அருகில் ஒரு இடத்தில் தனது சீடர்கள் உதவிகளுடன் அந்த ஆற்றில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்து அந்தக் கல்லை சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்தார். இந்தக் கோவிலுக்கு முதலில் தென்னை மரக்கிளைகள் மற்றும் மாமரத்து இலைகளைக் கொண்டு மேற்கூரை அமைக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் தீண்டத் தகாதவர்களுக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப்பட்ட காலத்தில் இந்த அருவிப்புரம் சிவன் கோவில் அமைக்கப்பட்டது ஒரு புரட்சிகரமான செயலாக இருந்தது.
xxxxx
மொழி ஆராய்ச்சிக்கு உதவும் கேரள கோவில்கள்
கேரள / சேர/ மலையாள இந்துக்கள் பழைய தமிழ் மரபுகளையும் , தமிழ் மொழிச் சொற்களையும் பாதுகாத்துவருகின்றனர் . சிலப்பதிகாரத்தில் உள்ள பழைய வழிபாடுகளை இன்றும் காண முடிகிறது
27 நட்சத்திரங்களில் இரண்டே விண்மீன்களுக்கு மட்டும் திரு என்ற சிறப்பு அடைமொழி சேர்க்கப்பட்டதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தனது உபந்யாஸத்தில் அழகாக விளக்கியுள்ளார். அந்த திரு ஒணத்தையும் திரு ஆதிரையையும் இன்றும் பழைய சம்பிரதாயப்படி மலையாள இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். அம்பலம், களி , தளி போன்ற பழந் தமிழ் சொற்களை சர்வ சாதாரணமாகக் கையாண்டு வருகின்றனர் .
எல்லா கோவில்களிலும் யானைகள் பவனி வருவது பழைய ராஜாக்களை நினைவுபடுத்தும்.
சோழர்கள் பெரிய கோவிலை தஞ்சையில் கட்டிய பின்னர், தெலுங்கு நாயக்கர்கள் மதுரை, திரு அண்ணா மலையில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பிய பின்னர், புதிய கட்டிடக்கலை உண்டானது. அதற்கு முன்னர் இருந்த கட்டிடக் கலையை கேரள கோவிலில் காண்கிறோம். இது அஸ்ஸாம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவியது ஆராய்ச்சிக்குரிய விஷயம். மத்திய, தென் அமெரிக்க நாகரீகம் வரை இது சென்றுள்ளது .
தமிழ் நாட்டிலுள்ள பல ஊர்ப்பெயர்களும் கோவில் பெயர்களும் இருப்பதும் ஆராய்ச்சிக்குரிய விஷயம்
நிறைவுரை
கேரளத்தின் புவியியலைக் கொண்டு பரசுராமரின் காலத்தை நிர்ணயிக்க வேண்டும் .
கேரள கோவில்களில் நடக்கும் ஆயிரக்கணக்கான புதிய சடங்குகளை ஆராய்ச்சி ரீதியில் வீடியோ எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் .
சிலப்பதிகார வழக்கங்கள், தெய்வங்கள் ஆகியவற்றை கேரளத்துடன் ஒப்பிட்டு ஆராய வேண்டும்.
ஏராளமான கோவில்களில் அற்புதமான மரச் சிற்பங்களும் சுவர் ஓவியங்களும், விளக்குகளும் உள்ளன. அவைகளை புகைப்படம், வீடியோ எடுத்தது ஆவணப்படுத்த வேண்டும் .
கோவில் கல்வெட்டுகளை, மன்னர் பங்கு பணிகளை கால வரிசைப்படி எழுத வேண்டும்.
திப்பு சுல்தான் முதல், வெள்ளைக்காரர்கள் வரை கோவில்களைத் தாக்கி அழித்ததை வரலாற்றுப் பாடத்தில் சேர்க்கவேண்டும்.
கேரள கட்டிடக்கலை அஸ்ஸாம் , தென்கிழங்கு ஆசிய நாடுகள் , மாயா நாகரீகம் வரை சென்ற காலத்தையும் பாதையினையும் ஆராய வேண்டும்
திருவாதிரைக் களி , கும்மி பாடல்களையும் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும் .
ஓட்டந்துள்ளல் , கதகளி , சாக்கியர் கூத்து அனைத்தையும் கோவில் வாரியாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்..
உலகிலேயே அதிக பொக்கிஷங்களை உடைய திருவனந்த புர பத்மநாப சுவாமி கோவில் புதையல்களை தக்க பாதுகாப்புடன் வெளி உலகிற்குக் காட்சிப்படுத்த வேண்டும் . இது ஏராளமான வரும்படியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை .
சபரி மலை திருவாபரண ங்களையும் , கோவில் நகைகளையும் போட்டோ, வீடியோ மூலம் பதிவு செய்து ஆராய வேண்டும் .
எல்லாவற்றுக்கும் மேலாக அரிய , பழைய பொக்கிஷங்களை இந்து விரோத அரசுகள் அழிக்காதபடி பார்த்துக்கொள்ள மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டும்.
இந்தக் கட்டுரைத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது .
–Subham—
Tags- மொழி ஆராய்ச்சி, அருவிப்புரம் , கரிக்ககம் ,சாமுண்டிதேவி,
பழவங்காடி கணபதி, கோவில் , கேரள, புகழ்பெற்ற, 108 கோவில்கள், PART 57, கழக் கூட்டம் மஹாதேவர் கோவில் பாரசாலா மகாதேவர் ஸ்ரீகண்டேஸ்வரம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 3
ச.நாகராஜன்
கர்ம ரகசியத்தை விளக்கும் நூல்கள் சனாதன தர்மத்தில் ஏராளமாக உள்ளன.
அவற்றில் மிக முக்கியமான ஒன்று யோக வாசிஷ்டம்.
அதில் மரணத்தைப் பற்றிய ஏராளமான செய்திகள் கூறப்படுகின்றன.
ராமருக்கு வசிஷ்டர் மரணம் பற்றிக் கூறுவதை இங்கு பார்க்கப் போகிறோம்.
முதலாவதாக ‘மரணம் ந பயாவஹம்’ என்று கூறப்படுகிறது.
இதன் பொருள் :
‘மரணம் பயத்தை (அல்லது அபாயத்தை) தருவதல்ல’.
அடுத்து வருவது:-
உபசயோ மஹான்
IT IS A GREAT PROPERITY.
அது மிகப்பெரும் வளமை.
இறந்து போகும் ஒருவன், திருப்பிப் பிறக்கவில்லையெனில் அது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம்.
உத்ஸவோ வா!
It is a Joyous occation.
இது ஒரு சந்தோஷகரமான வைபவம்.
உடல் மறைந்து போகிறது என்பதால் அது ஆத்மாவிற்கான ஒரு சந்தோஷகரமான தருணம்.
புது உடல் கிடைக்கிறது என்றால் அதுவும் கூட சந்தோஷத்திற்குரிய ஒரு விஷயம் தானே!
முட்டாள்களே!
சந்தோஷம் தரும் ஒரு தருணத்தால் ஏன் வருந்துகிறீர்கள்?
மூர்த்தி ஸ்வரூபம்
மரணத்தின் ஸ்வரூபம் என்று அடுத்து சொல்லப்படுவது இது:
மரணம் சர்வநாஷாத்ம ந கதாசன வித்யதே!
Death is not, at anytime, of the nature of complete destruction.
மரணம் ஒரு போதும் சர்வநாசத்தை விளைவிப்பதல்ல.
இறந்து போன ஒருவனை நஷ்டமடைந்து விட்டதாகக் கூறுகிறோம். ஆனால் இது உண்மையல்ல. அதுமட்டுமல்ல, இது தவறான கூற்று.
திருப்பித் திருப்பிப் பிறப்பதால் காலத்தாலும் இடத்தாலும் அவன் பிரிக்கப்பட்டவனாகவே பார்க்கப்பட வேண்டும்.
குரங்கானது காட்டில் உள்ள ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்திற்குப் போவது போலவே இதைப் பார்க்க வேண்டும்.
ஆத்மாவானது ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குப் போகிறது.
ஓ, ராமா! ஆத்மாக்கள் தனிப்பட்ட ஆசைகளினாலும்,தங்களது வாசனைகளாலும் (மனப்பதிவுகள்) இன்னொரு இடத்தில் இன்னொரு காலத்தில் இருக்கிறது.
கனவு காணும் ஒருவன் கனவுலகத்தில் தனது சாவைச் சந்தித்த பிறகு விழிப்படைந்த பிறகு இன்னொரு கனவைப் பார்க்க எப்படி உயிர்த்தெழுகிறானோ அப்படியே தான் விழிப்புலகில் சாவை அடையும் ஒருவன் இன்னொரு முறை பிறந்து இன்னொரு விழிப்புலகில் ஒரு கனவைக் காண்கிறான்.
சாவில் பிரக்ஞையை இழந்த பிறகு ஆத்மாவிற்கு அனைத்து உலகங்களும் உடனடியாக, கண்களை விழித்தவுடன், தெரியக் கூடிய உலகங்களாகத் தெரிகின்றன.
சாவில் பிரக்ஞையை இழந்த பிறகு மூன்று உலகங்களில் உள்ள எல்லாப் பொருள்களும் ஒரு க்ஷணத்தில் வந்து தெரிகின்றன.
பிறகு ஆகாயம் உள்ளிட்ட முடிவற்ற விஷயங்கள் அனைத்தும் அவனுக்குத் தெரிகின்றன.
மரணத்தைப் பற்றிய ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கூட ஶ்ரீராமருக்கு வசிஷ்டர் பிட்டுப் பிட்டு வைக்கிறார் இப்படி.
கர்ம ரகசியத்தை அறிய அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்று யோக வாசிஷ்டம்.
சம்பந்திப் பூ வெள்ளை நிறத்தில் இருக்கும்; இதன் தாவரவியல் பெயர் பாலியான்தஸ் ட்யூபெரோசா Polianthes tuberosa. இதன் வேர் கிழங்கு போல பருத்து இருப்பதால் டியூபர் Tuber என்ற சொல் ஒட்டிக்கொண்டது .நல்ல நறுமணம் வீசும்; பூஜைக்கும், நறுமணப் பூச்சுகளுக்கும் பயன்படும் இந்தப் பூ, தென் அமெரிக்காவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள மெக்சிகோவில் தோன்றி உலகெங்கிலும் பயணம் செய்துவிட்டது; வங்க தேசத்தில் இதை ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்துகின்றனர் ; ஸ்பெயின் நாட்டு கிறிஸ்தவ பாதிரிகள், அஸ்டெக் the Aztecs , மாயா Mayan நாகரீகங்களை சூறையாடி அழிப்பதற்கு முன்னர், 500 ஆண்டுகளுக்கு முன் வரை, இதை மாயா , அஸ்டெக் நாகரீக மக்கள் பயன்படுத்தி வந்தனர். சம்பங்கி மலரின் மருத்துவ குணங்கள் பற்றி மருத்துவ பத்திரிகைகளில் ஆதாரபூர்வ செய்திகள் கிடைக்கின்றன .
இந்த மலரை நாட்டு வைத்தியத்தில் கட்டிகளைக் குணப்படுத்தகவும் , அழகு ஊட்டவும், மலம் இளக்கியாகவும் , தேகத்தில் சூட்டைத் தணிக்கவும், பாலியல் நோய்களைக் குணப்படுத்தவும் , முடி வளர் தைலமாகவும், வாந்தி உண்டாகக்கூடிய பொருளாகவும், உடலில் நீரைக் குறைக்கவும் பயன்படுத்துகின்றனர்.(used for treating tumour, cosmetic, laxative, cooling, placebo, sexual disorder, hair colour, emetic, diuretic, and gonorrhoea.)
வட இந்தியாவில் இதை ராஜ கந்தம் (மணங்களின் அரசன் Rajanigandha or Nishigandha), என்பர்; இரவில் பூப்பதால் நிசி கந்தம் என்றும் அழைப்பார்கள் . கந்தம் என்றால் நறுமணம்; நாம் சுகந்தா, சுகந்தி என்ற பெயர்களை பெண்களுக்கு சூட்டுகிறோம் அல்லவா?
அனைத்து வகை மண்ணிலும் சம்பங்கி வளரும். சரளை, செம்மண்ணில் நன்றாக வளரும். எல்லாக் காலத்திலும் சாகுபடி செய்யலாம்.
இதைத் தோட்டங்களில் அழகிற்காகவும் வளர்க்கின்றனர். மஞ்சள் நிற , இளம் சிவப்பு நிற சம்பங்கிகளும் உண்டு.
விலை அதிகம்
உலகின் புகழ் பெற்ற, எல்லோரும் விரும்பும், நறுமண உடற் பூச்சுகளில் (perfumes பெர்ப்யூம் ) இது கொஞ்சமாவது இருக்கும்; கரணம் என்னவெனில் விலை மிக அதிகம் . 3600 கிலோ பூக்களில் இருந்தது அரை கிலோ நறுமண எண்ணெய்தான் கிடைக்கும் என்றால் இதன் விலையை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம் (Voluptuous, intoxicating and expensive, so expensive! It takes over 3600 kilos of flowers to produce just half a kilo of tuberose oil), இதனால் இதை சிறிதளவே கலந்து ஏனைய ஆயில் (oils) களை அத்தோடு சேர்க்கின்றனர்.
அறைகளில் கொஞ்சம் மலர்கள் இருந்தாலும் நல்ல மணம் வீசும். மல்லிகை போல வாடிவிடாது. சில நாட்களுக்கு புதுமை மாறாது இருக்கும்.
தமிழ் நாட்டில் சம்பங்கி சாகுபடி பற்றியும் அதன் மூலம் ஏராளமான வரும்படி கிடைப்பது பற்றியும் வெப் சைட்டுகளிலும் விவசாயப் பத்திரிகைகளிலும் நிறைய தகவல்கள் உள்ளன. ஆயினும் ஏற்றுமதி விவரங்களைத் தரும் இணைய தளங்களில் எந்தச் செய்தியும் இல்லாததால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகிறதா என்று தெரியவில்லை. பெர்ப்யூம் தொழிலில் முதலிடம் வகிக்கும் பிரான்ஸ் இதை அதிகம் வாங்குகிறது . பிரான்ஸ் நாடுதான் உலக பெர்ப்யூம் தலைநகர் ஆகும்.
கீழ்கண்ட பெர்ப்யூம்களில் சம்பங்கி மலரின் மணம் இருப்பதை நல்ல மூக்கு இருப்போர் எளிதில் அறிவர்.
Smell tuberose in:
Goutal Tubéreuse
Chanel Gardénia
Clive Christian C for Women
Dior Poison
Dior J’Adore Dior
Diptyque Do Son
Floris Tuberose
Frederic Malle Carnal Flower
Givenchy Amarige
Givenchy Organza
Guerlain Jardins de Bagatelle
L’Artisan Parfumeur Tubéreuse
சம்பங்கிப் பூவை தேங்காய் எண்ணெய் , ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் கலந்து அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர் .
இந்திய மொழிகளில் இதன் பெயர் :
சம்ஸ்க்ருதம் ரஜினி கந்த Rajnigandha, ரஜோனி கந்த Bengali i- Rajoni-Gandha,) உருது மொழியில் குல் ஷாபி in Urdu Gul Shabbi) மராத்தியில் நிசி கந்த , (in Marathi, NishiGandha) கன்னடத்தில் சுகந்த ராஜ , (in Kannada Sugandharaja), தமிழில் சம்பங்கி (in Tamil Sambangi) தெலுங்கு மொழியில் , நில சம்பங்கி ( in Telugu NelaSampenga) .
இந்து திருமணங்களில் (Wedding Garlands) மாலைகளில் உதிராத பூவாக நிலைத்து நிற்பதும் சம்பங்கி ஒன்றுதான். ஏனைய மலர்கள் நாள் முடிவதற்குள் வாடி உதிர்ந்து விடும்.
இந்தி , வங்காளி மொழிக் கதைகளில் ரஜினிகந்த பெயரைக் காணலாம். 17ம் நூற்றாண்டில் இப்ராஹிம் அட்டையில் ஷா எழுதிய Ibrahim Adil Shah II (1571- 1627), எழுதிய குறிப்பில் இதை திருமண அறையில் பயன்படுத்துவதைப் பற்றி எழுதிவைத்துள்ளார்.
திருவனந்தபுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் திருவல்லம் என்னும் இடத்தில் பரசுராமர் கோவில் இருக்கிறது. கேரள மாநிலத்தையே கடலிலிருந்து மீட்டுத் தந் த பரசுராமருக்கு உள்ள ஒரே கோவில் இதுதான். கேரளத்தில் பஞ்ச பாண்டவர்களோ, அவருக்கு முந்தைய ராம லெட்சுமண பரதரோ , அவருக்கும் முந்தைய பரசுராமரோ சம்பந்தப்படாத கோவில்கள் மிகச் சிலவே .
கரமணை ஆற்றின் கரையில் அமைந்த பரசுராமர் கோவில் , கோவலம் கடற்கரையிலிருந்து 6 கி.மீ தொலைவுதான்.
கருவறையைச் சுற்றி நாலம்பலம் உள்ளது. இந்தக் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது . கேரள தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படுகிறது; அடிக்கடி நடத்த திருப்பணிகளால் பல பழைய கட்டிடங்கள் மறைந்துவிட்டன .
இங்கும் முன்னோர்களை வழிபடும் பலி சடங்குகள் நடக்கின்றன.ஆடி அமாவாசை தினத்தன்று கரமனை ஆற்றில் குளித்து விட்டு தர்ப்பணம் செய்கிறார்கள்.’கர்க்கிடக வாவு’ எனப்படும் இந்த நாள் அரசு விடுமுறை நாளாகும் .
ஆண்டுதோறும் அக்டோபர் – நவம்பரில் பத்து நாள் உற்சவம் நடக்கும். எட்டாம் நாளன்று திடம்பு வடிவில் புறப்படும் ஊர்வலம் மறுநாள்தான் கோவிலுக்குத் திரும்பும். ஒன்பதாம் நாள் நடக்கும் யானைகள் பவனி, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலுக்குச் செல்லும் . போகும் வழியில் சங்குமுகம் கடலில் மூர்த்தியை நீராட்டுவார்கள்.. இது ஆராட்டு ஆகும். திரு வனந்தபுரத்தில் பல சடங்குகள் நடக்கும். மறுநாள் காலையில் பரசுராமர் திருவல்லத்துக்குத் திரும்புவார்.
XXXX
108.உல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருவனந்த புரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது. . இது ஒரு அழகான கோவில் . மார்ச் (பங்குனி உற்சவம்) மாதத்தில் எட்டு நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கும். கேரளத்துக்கே உரித்தான அத்தனை வகை நடனங்களும், சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கும். ஏழாவது நாளில் ஆறாட்டு நடக்கிறது. யானைகள் பவனி, அருகிலுள்ள சாஸ்தா கோவில் வரை சென்று, மாலையில் திரும்பிவிடும்.
தை (ஜனவரி) மாதம் தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது; .நூற் றுக்கணக்கான பக்தர்கள் காவடிகளை சுமந்து கொண்டு, கொட்டு மேளத்துக்கு ஏற்ப நடனம் ஆடிக்கொண்டு வருவார்கள். சுமார் 300 காவடிகள் அருகாமையிலுள்ள கெளரீபட்டம் கோவிலில் புறப்பட்டு உல்லூரை வந்தடையும்.
XXXX
109.குளத்தூர் சிவன் கோவில், த்ரிப்பாத புரம்
Thrippadhapuram Mahadeva Temple (aka Major Thrippappoor Shree Mahadevar Kshethram)
திருவனந்தபுரம் நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் மனோரம்யமான சூழ்நிலையில் சிவன்- விஷ்ணு கோவில் இருக்கிறது . குளத்தூர் என்பது ஊரின் பெயர். அங்கு சிவா- விஷ்ணுவோடு கணபதி, ஐயப்பன் ஆகிய தெய்வங்களையும் தரிசனம் செய்யலாம்.
திரு பாத புரம் என்றால் இறைவனின் கால் FEET பதித்த புனித இடம் என்று பொருள். இங்கு விஷ்ணுவின் பாதங்களைக் காணலாம். ஆயினும் பிரதான தெய்வம் சிவ பெருமான்தான்.
திவாகர முனிவரின் முன்னால், விஷ்ணு தோன்றிய போது அவருடைய தலை திரு வனந்த புரத்திலும் , கால்கள் இங்கும் தோன்றியதாம் . அதன் நினைவாக இங்கே பாதங்கள் உள்ளன. கோவிலுக்கு அருகில் கண் தீர்த்தம் இருக்கிறது .
கோவிலில் இரண்டு கருவறைகள் உண்டு. சிவனுக்கும் கிருஷ்ணன்/விஷ்ணுவுக்கும் உள்ள அவை எதிரெதிரே அமைந்து ள்ளன . ஆறு சிவலிங்கங்களும் இரண்டு விஷ்ணு பாதங்களும் இருப்பது தனிச் சிறப்பு ஆகும்
கோவிலில் கண் EYE வடிவிலுள்ள தீர்த்தம் தவிர , வெளியே பாபநாஸத் தீர்த்தக் குளமும் இருக்கிறது
சிவ பெருமானுக்கு 7 நாள் உற்சவத்தையும், விஷ்ணுவுக்கு பத்து நாள் உற்சவத்தையும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது . விழாக் காலங்களில் எல்லா வகை கலை நிகழ்ச்சிகளையும் காணலாம் . இத்துப் பாண்டிகை தினங்களில் பெரும் பக்தர் கூட்டத்தைக் காணலாம்.
XXXXX
110.பழம் சிரா தேவி கோவில்
திருவனந்தபுரம் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் பழம்சிறை என்னுமிடத்தில் தேவி கோவில் அமைந்துள்ளது; நாகர் ஊட்டு என்பது கோவிலின் சிறப்பு வழிபாடு. விரதம் இருக்கும் புலவர்கள் என்போர் நள்ளிரவுக்குப் பின்னர் நாகர் / பாம்பு படத்தை பாடிக்கொண்டே வரைவார்கள் . நாகர் குறித்து அவர்கள் பாடுவார்கள். கடைசி நாளன்று பக்தர்கள் பொங்கல் வைத்து தேவிக்குப் படைப்பார்கள். மார்ச் மாதம் நடக்கும் 7 நாள் விழாவில் ஐந்தாம் நாள் தான் நாகர் களம் என்னும் நாகர் படம் வரைதல் நடக்கும். விழாக்காலத்தில் கோவில் விளக்குகளில் ஜொலிக்கும். கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். தாளப்பொலி ஏந்தி பெண்கள் பவனி வருவார்கள் .
கர்ப்பகிரகத்தை சுற்றிலும் 17 யானைகள், ஆறு சிங்கங்கள் தாங்கி இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேற்பகுதியில் மும்மூர்த்திகள் அவர்களது தேவியர்களுடன் காட்சி தருகின்றனர். இவை சமீப கால படைப்புகள் .பிரகாரத்தில் தசாவதார காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், நவகிரகங்கள் மூர்த்திகளும் இருக்கின்றனர் .
–SUBHAM—
TAGS- பழம் சிரா தேவி கோவில், த்ரிப்பாத புரம், திருவல்லம் பரசுராமர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜனவரி 2024 ஹெல்த்கேர் மாத இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை
நியூக்ளியர் மன இறுக்கச் சோதனை!
தமிழாக்கம் : ச.நாகராஜன்
நியூக்ளியர் மன இறுக்கச் சோதனை (Nuclear Stress Test) என்பது இதய தசைக்கு இரத்த ஓட்டம் எப்படிப் பாய்கிறது என்பதை மதிப்பிடும் சிகிச்சைக்கான ஒரு சோதனை முறையாகும்.
இதை மையோகார்டியல் பெர்ஃப்யூஷன் இமேஜிங் (Myocardial perfusion Imaging – MPI) – அதாவது இதயத்தசை மருந்து உட்கொள்ளலைப் படமாக்கல் – அல்லது ரேடியோநியூக்ளிட் டெஸ்ட் -அதாவது கதிரியக்கச்சிதைவு அணுக்கரு சோதனை (Radionuclide Stress Test) என்றும் கூறுவர்.
இது, கரோனரி தமனி வியாதி (Coronary artery disease CAD) பற்றி அறியவும், இதயத்தின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் பற்றிய முழுத் தகவலையும் பெறுவதற்காகவும் செய்யப்படும் ஒன்று. இந்தச் சோதனையில் சிறிய அளவு கதிரியக்கப் பொருள் பயன்படுத்தப்படும். அத்துடன் இதயத்தின் விவரமான படங்களை உருவாக்க, படமாக்கும் தொழில்நுட்பம் (Imaging Technology) பயன்படுத்தப்படும்.
இதைப் பற்றிய முழுவிவரங்களையும் இங்கு பார்ப்போம்:
செயல்முறை:
1. ரெஸ்ட் பேஸ் (ஓய்வு நிலை- Rest Phase);
நோயாளிக்கு முதலில் கதிரியக்க சுவடறியும் (Radioactive Tracer) சிறிய அளவு – பொதுவாக 99M – டெக்னெடியம் (technetium) ஊசி போடப்படும். இந்த சுவடறியும் மருந்து இதய தசை உயிரணுக்களிலிருந்து எடுக்கப்பட்ட கூட்டுப்பொருள்களுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். பின்னர் நோயாளி சிறிது நேரம் ஓய்வான நிலையில் இருப்பார் – அப்போது சுவடறியும் மருந்தானது இதயம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு விடும்.
2. இமேஜிங் அட் ரெஸ்ட் (Imaging at Rest)
ஒரு விசேஷமான கேமரா – காமா கேமரா என்று அறியப்படும் ஒரு கேமரா – அல்லது ஒரு ஸ்பெக்ட் (SPECT – Single Photon Emission Computed Tomography) ஒய்வான நிலையில் இதயத்தைப் படங்களாகப் பிடிக்கும். மன இறுக்க நிலையில் உள்ள போது இருக்கும் நிலையுடன் இவை ஒப்பிடுவதற்கு, ஒரு அடிப்படையாக அமையும்.
3. ஸ்ட்ரெஸ் பேஸ் – மனஇறுக்க நிலை (Stress Phase)
இதயத்தை இறுக்கத்திற்கு உட்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று உடல்பயிற்சி (Exercise) ஆகும். இன்னொன்று பார்மாகோலோஜிகல் மன இறுக்கம் (Pharmacological Stress) ஆகும். உடல்பயிற்சி செய்யும் போது, நோயாளி ஒரு ட்ரெட் மில்லில் நடக்கவோ அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இருக்கும் சைக்கிளை பெடல் செய்யவோ சொல்லப்படுவார். நோயாளி உடல்பயிற்சி செய்ய முடியாத நிலையில் இருப்பின், உடல்பயிற்சி செய்தால் ஏற்படக்கூடிய நிலையைப் பெறுவதற்காக அடினோசைன் (Adenosine) அல்லது டோபுடாமைன் (Dobutamine) செலுத்தப்படுவார்.
4. இமேஜிங் அட் ஸ்ட்ரெஸ் – மன இறுக்க நிலையில் படங்கள் (Imaging at Stress)
மன இறுக்க நிலைக்குப் பின்னர், நோயாளி இன்னும் ஒரு முறை ரேடியோஆக்டிவ் ட்ரேஸர் ஊசி போடப்படுவார். இப்போது கேமரா மன இறுக்க நிலையில் இருக்கும் இதயத்தின் படங்களைப் பிடிக்கும். மருத்துவர்களை இந்தப் படங்கள் இரத்த ஓட்டம் பற்றி அறியவும், மன இறுக்கத்தின் போது போதுமான அளவு ரத்தம் பெறாத பகுதிகளை இனம் கண்டு அறியவும் உதவும்.
சுவையான தகவல்கள்
1. பாதுகாப்பான ரேடியோஆக்டிவ் ட்ரேஸர்கள்
மன இறுக்க சோதனியில் பயன்படுத்தப்படும் ரேடியோ ஆக்டிவ் ட்ரேஸர்கள், மிகக் குறைந்த அளவு கதிரியக்கத்தையே வெளிப்படுத்தும். அத்துடன் மிகச் சிறிய அளவிலான பாதி அளவு உயிரியக்கத்தையே கொண்டிருக்கும். ஆகவே சிகிச்சை பற்றி அறிவதற்காக, பாதுகாப்பாகவே இவை இருக்கும். கதிரியக்க பாதிப்பை குறைப்பதற்காக கொடுக்கப்படும் அளவும் மிகவும் கவனத்துடன் கட்டுப்படுத்தப்படும்.
2. தனிப்பயனுக்குத் தக்கபடியான மன இறுக்க வழிமுறைகள் (Customized Stress Methods).
உடல்பயிற்சியா அல்லது பார்மகோலாஜிகலா என்பது ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்குத் தக்கபடி தேர்ந்தெடுக்கப்படும். சில நோயாளிகள் உடல் அங்கங்களின் இயக்கக் குறைபாட்டினால் உடல்பயிற்சியைச் செய்ய முடியாதவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலைகளில் பார்மலோலாஜிகல் மன இறுக்கம் கடைப்பிடிக்கக் கூடிய மாற்று வழிமுறையாக அமையும்.
3. டைனமிக் ஹார்ட் ஃபங்ஷன் அசெஸ்மெண்ட் – இதய இயக்கத்தை மதிப்பீடு செய்தல் (Dynamic Heart Function Assesment)
இரத்த ஓட்டத்தை மதிப்பீடு செய்வதோடு, நியூக்ளியர் ஸ்ட்ரெஸ் சோதனைகள் இதயத்தின் இயக்கத்தைப் பற்றிய உள்ளீடுகளையும் தருகின்றன. இதயத் துடிப்பில் இதயம் பம்ப் செய்வதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை மருத்துவர்கள் சிகிச்சை செய்ய கரோனரி தமனி வியாதி தவிர இதர நிலைகள் பற்றியும் அறியச் செய்வதில் உதவும்.
4. பாலின வித்தியாசங்கள்
ஆண்கள் மற்றும் பெண்களின் இதயங்கள் மன இறுக்கத்தின் போது வித்தியாசமாக செயல்படுகின்றன என்பதை ஆய்வு முடிவுகள் காண்பிக்கின்றன. பெண்கள் மிக அதிகமாக தவறான உடன்மறை மற்றும் எதிர்மறை அநுபவங்களைப் பெறுகின்றனர். இந்த வித்தியாசங்களை அறிவது துல்லியமான சிகிச்சைக்கு இன்றியமையாததாக ஆகிறது.
5. சிடி ஆஞ்ஜியோகிராபியுடன் சேர்த்தல் (Combination with CT Angiography)
சில கேஸ்களில் இரத்த ஓட்டம் பற்றிய விரிவான மதிப்பீட்டிற்காகவும் கரோனரி தமனிகளின் அங்க அமைப்பிற்காகவும் நியூக்ளியர் மன இறுக்கச் சோதனைகள் சிடி ஆஞ்ஜியோகிராபியுடன் இணைக்கப்படுகின்றன.
முடிவுரை:
நியூக்ளியர் மன இறுக்கச் சோதனைகள் இதய இயக்கம் மற்றும் இரத்த ஓட்டம் பற்றி மிக அரிய தகவல்களை அறிய உதவும் நவீன கருவிகளாக அமைகின்றன. அவை சிகிச்சை பற்றி அறியவும் இதய நிலைகளை நிர்வகிக்கவும், தனிப்பட்ட திறன் வாய்ந்த கவனிப்பை நோயாளிக்கு அளிக்கவும் உதவுகின்றன. தொழில்நுட்ப மேம்பாடுகளும் முன்னேற்றங்களும் இந்த சோதனைகளை மேம்படச் செய்வதோடு இன்னும் அதிக தகவல்களைத் தந்து பாதுகாப்பாக இருக்க உதவுகின்றன.
*****
English Original
A nuclear stress test, also known as myocardial perfusion imaging (MPI) or radionuclide stress test, is a diagnostic procedure used to evaluate blood flow to the heart muscle. It’s commonly employed to detect coronary artery disease (CAD) and assess the overall health and function of the heart. The test involves the use of a small amount of radioactive material and imaging technology to create detailed pictures of the heart.
Here’s a more in-depth exploration of the nuclear stress test:
Procedure:
1. Rest Phase: The patient is injected with a small amount of a radioactive tracer, often technetium-99m. This tracer is typically attached to compounds that are taken up by heart muscle cells. The patient then rests for a short period to allow the tracer to distribute throughout the heart.
2. Imaging at Rest: A specialized camera, known as a gamma camera or a SPECT (Single Photon Emission Computed Tomography) camera, captures images of the heart at rest. These images provide a baseline for comparison with the stressed state.
3. Stress Phase: There are two main methods to stress the heart – exercise or pharmacological stress. During exercise, the patient might walk on a treadmill or pedal a stationary bike. If the patient can’t exercise, drugs such as adenosine or dobutamine may be administered to simulate the effects of exercise.
4. Imaging at Stress: After the stress phase, the patient is again injected with the radioactive tracer, and the camera captures images of the heart under stress. This allows physicians to compare blood flow and identify areas of the heart that may not be receiving an adequate blood supply during stress.
Interesting Facts:
1.Safe Radioactive Tracers: The radioactive tracers used in nuclear stress tests emit very low levels of radiation and have short half-lives, making them safe for diagnostic purposes. The doses used are carefully controlled to minimize radiation exposure.
2. Customized Stress Methods: The choice between exercise and pharmacological stress is often tailored to the patient’s individual circumstances. Some patients may not be able to perform physical exercise due to physical limitations, and in such cases, pharmacological stress is a valuable alternative.
3. Dynamic Heart Function Assessment: In addition to assessing blood flow, nuclear stress tests can provide insights into the dynamic function of the heart. They can reveal abnormalities in the heart’s pumping ability, helping physicians diagnose conditions beyond just coronary artery disease.
4. Gender Differences: Studies have shown that there can be differences in the way men and women’s hearts respond to stress. Women may experience more false positives or negatives, and understanding these differences is crucial for accurate diagnosis.
5. Combination with CT Angiography: In some cases, nuclear stress tests are combined with CT angiography to provide a more comprehensive evaluation of both blood flow and the anatomical structure of the coronary arteries.
Conclusion:
Nuclear stress tests are sophisticated diagnostic tools that provide valuable information about the heart’s function and blood flow. They play a crucial role in diagnosing and managing heart conditions, contributing to more personalized and effective patient care. Advances in technology continue to refine these tests, making them even more informative and safe.
ரோஜாச்செடியில் முள் நிறைந்த தண்டு, கிளைகளுக்கு இடையே ரோஜா மலர் இருக்கும். மல்லிகைச் செடியில் காம்பின் மீது பூக்கள் இருக்கும். அங்கு மட்டுமே வாசனை. ஆனால் ஒரு செடி முழுதுமே வாசனை அடிக்கிறதென்றால் , அது மருக்கொழுந்து செடியாகவே இருக்கும். பச்சை நிறத்தில் இருந்தாலும் அது பூ மாலையில், கதம்ப மாலையில் , கடவுளின் பாதத்தில் மணங் கமழ இடம்பெறும்.
ஆங்கிலத்தில் இதை Wormwood வோர்ம் வுட் என்பர். இது ஒரு மூலிகை; மருந்தாகவும் நறுமணப் பொருளாகவும் பயன்படுகிறது .
மரிக்கொழுந்து என்றும் எழுதுவார்கள். பசுமை வண்ணத்தில் சிறிய இலைகளுடன், மெலிதான உருவில் தண்டுகளாகக் காட்சியளிக்கும் அவை, இருக்கும் இடங்கள் எல்லாம், நறுமணத்தைப் பரப்பும்!
மருக்கொழுந்து செடியை இந்தியா உள்பட 48 நாடுகள் ஏற்றுமதி செய்கின்றன. ஆண்டுதோறும் 1851 கப்பல் லோடு loads விற்பனை ஆகிறது (Global Export Trade data of Wormwood:1851 Export Shipments found from 48 exporting Countries)
xxxxx
மருக்கொழுந்து சாகுபடி
மரிக்கொழுந்து, வண்டல் நிலம், கரிசல் நிலம், மற்றும் செம்மண் நிலங்களில் அதிக அளவில் வளரும். மிதமான மழை மற்றும் சூரிய ஒளி மரிக்கொழுந்து செடிகளை நன்கு வளர வைக்கும் தன்மை உள்ளவை. அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி, உரம் மற்றும் மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே, நன்கு செழித்து வளரும் தன்மை மிக்கது. ஓராண்டு காலம் வரை இலைகள் மற்றும் தண்டுகள் மூலம், நறுமணப் பயன்கள் தரும் மரிக்கொழுந்து, அடர்த்தியாக, நிறைய கிளைகளுடன் வளரும்.
மரிக்கொழுந்து சாகுபடி, இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சுமார் 1000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.
மரிக்கொழுந்து ஓராண்டு வாழும் வகையை சார்ந்த பயிராகும். 45-80 செ.மீ. உயரம் நேராக வளரக்கூடிய இச்செடிகள் சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது. மாலைகளுக்கு உபயோகிப்பதற்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து விதைத்ததில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யபடுவதால் எந்த பருவத்திலும் சாகுபடி செய்யலாம். ஆனால், வாசனை எண்ணெய்க்காக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மார்ச் வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.
பூக்கும் தாவர வகைப் பிரிவில் ஆஸ்டரேசி ( family Asteraceae) குடும்பத்தில் 2000 வகைகள் உடைய துணைக் குடும்பத்த்தில் இதுவும் ஒன்று. ஆங்கிலத்தில் இதற்கு பல பெயர்கள் இருக்கின்றன (artemisia plant, the artemisia herb, the sweet annie herb, and “sweet wormwood.). இதன் தாவரவியல் பெயர் Artemisia absinthium ஆர்டிமிஸியா அப்சிந்தியம்.
xxxxx
மருத்துவ உபயோகங்கள்
பசியின்மையைக் குணப்படுத்தவும் பித்த நீர்ப் பிரச்சனைகளை அகற்றவும், வயிற்று நோய்களை நீக்கவும் மருக்கொழுந்து பயன்படுகிறது ; குடலில் ஏற்படும் பிடிப்பு, காய்ச்சல், கல்லீரல் பிரச்சனை, புழுக்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை போக்கவும் இதை உபயோகிக்கிறார்கள் . யாருக்காவது உடலுறவு கொள்வதில் விருப்பமின்மை இருந்தால் அதை மாற்றவும் இது டானிக்காக செயல்படுகிறது ; வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது
காயங்கள் ஏற்பட்டாலோ, பூச்சிக்கடி ஏற்பட்டாலோ அந்த இடத்தில் மருக்கொழுந்தை வைத்து வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சோப்புகளிலும், அழகு சாதனப் பொருட்களிலும் , வாசனைப் பூச்சுகளிலும் மருக்கொழுந்து எண்ணை பயன்படுகிறது .
சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு (Anti fungal) , மருந்தாகிறது. உடல் வீக்கங்கள் கட்டிகள் தரும் வலியைப் போக்கி, அவற்றை சுருங்க வைக்கிறது. மன நல பாதிப்புகளுக்கு ஆற்றல்மிக்க, நிவாரணமாகத் திகழ்கிறது., நல்ல தூக்கம் வர உதவும்.
தினமும் உறங்கப் போகுமுன், தலையணையின் கீழே, ஒரு கொத்து, மரிக்கொழுந்து இலைகளைத் தண்டுடன் வைத்துக்கொண்டு, அதன் பின் உறங்கச் செல்ல கண்களைத் தூக்கம் மெள்ளத் தழுவும்.
xxxxx
மதுபானத்தில் மருக்கொழுந்து
சிலவகை மதுபானங்களில் மருக்கொழுந்து எண்ணையைப் பயன்படுத்துகிறார்கள் . வெர்மவுத் , அப்சிந்த்தே (alcoholic drinks Vermouth, Absinthe ) முதலியவற்றில் இது உள்ளது.
19, 20 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்ஸ் நாட்டில் அப்சிந்த்தே மதுபானம் பிரபலம் ஆகியது. இதை அருந்தினால் போதை ஏற்பட்டு மாயக் காட்சிகளைக் காணுவார்கள் என்ற எண்ணம் பரவியதால் இதை பச்சை தேவதை என்று அழைத்தார்கள் Absinthe was thought to have hallucinogenic properties – hence its nickname “la fee verte” (the green fairy). வெர்மவுத் என்பது இத்தாலிய ஒயின் பானம் (Vermouth, a fortified Italian wine) இதில் மருக்கொழுந்து மணம் வீசும். . பிரபல பெர்ப்பியூம் நிறுவனங்கள் அதிக விற்பனையாகும் வாசனைப் பூச்சுகளில் மருக்கொழுந்து ஆயிலை பயன்படுத்துகின்றன ( popular fragrances like Burberry Body and Ralph Lauren Polo Black.)
xxxx
மருக்கொழுந்துக்கு தடை விதித்தது ஏன்?
சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்பட சில ஐரோப்பிய நாடுகள் மருக்கொழுந்த்து உபயோகத்துக்கு தடைவிதித்தன . இதை அதிகம் பயனபடுத்தினால் அது நரம்பு மாண்டலத்தை பாதிக்கும் அமைதியற்ற மன நிலை, வலிப்பு, மூளை பாதிப்பு ஏற்படும் ஆயினும் இப்போது கட்டுப்பாடுகளுடன் இதன் உபயோகம் மீண்டும் வந்துவிட்டது.
அமெரிக்காவிலும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தடை இருந்தது . இப்போது அமெரிக்கா , கனடாவில் இது பயிராகிறது.
செடியின் தண்டு, பூ, இலைகளைக் கொதிக்க வைத்து அதிலிருந்து வரும் ஆவியைக் குளிர வைத்தால் அசுலின் எண்ணெய் கிடைக்கும்; நீலப் பச்சை நிறத்தில் இருக்கும் azulene. எண்ணெயில் துஜோன், போர்னியோல், பைனின் ஆகிய ரசாயனப் பொருட்கள் இருக்கின்றன ( The oil is blueish-green due to the oil’s concentration of azulene. The extract is rich in other organic chemicals such as thujone, borneol, and pinene) The main components of artemisia oil are ñ-thujone, Ã-thujone, sabinene, myrcene, trans-sabinol, trans- Sabinyl acetate, and linalyl acetate and geranyl propionate.
—subham—
Tags- மருக்கொழுந்து, மரிக்கொழுந்து, சாகுபடி, ஏற்றுமதி, மருத்துவ, பயன்கள், நறுமணம், மதுபானம், தடை
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 55
கோவில் எண்கள் –105, 106
105.ஆட்டுக்கல் /ஆற்றுக்கால் பகவதி கோவில்
திருவனந்தபுரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி கோவில் உள்ளது. அங் கு நடக்கும் பொங்கல் விழா நாடு முழுதும் பிரசித்தி பெற்றது . இதை கண்ணகி கோவில் என்றும் அழைப்பார்கள்.
இந்தக் கோவிலின் தோற்றம் பற்றி ஒரு கதை உள்ளது .
திருவாங்கூர் ராஜ்யத்தின் வீரர்களா கப் பணியாற்றியவர்கள் நாயர்கள் ஆவர். அவர்களில் ஒரு குழுவான முல்லக்கல் வீடு பிரிவின் தலைவர் அருகிலுள்ள ஆற்றில் குளிக்கச் சென்றார். அங்கே ஒரு சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்து இளநீர் கொடுத்தார். அதை சாப்பிடுவதற்குள் அந்தப் பெண் மாயமாக மறைந்தாள். அவருக்கு வியப்பும் திகைப்பும் ஏற்பட்டது. ஒன்றும் புரியவில்லை. அன்றிரவு கனவில் அதே பெண் தோன்றி, அவர் வண ங்கிவரும் பகவதியே, தான் என்று அவருக்கு அறிவித்தாள் . அவள் சொன்னபடியே பகவதிக்கு ஒரு கோவிலை எழுப்பினார்.
இந்தக் கோவிலில் கருவறைக்கு மேல், பெரிய விமானம் இருக்கிறது. கோவிலின் நுழைவாயிலை அழகான சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா இந்தக் கோவிலைப் புதுப்பித்தார். ஆஸ்த்தான ஜோதிடர் சங்கரானந்தா சொன்னது போல 1912லம் ஆண்டில் பழைய சிலையை எடுத்துவிட்டு மரத்தினால் ஆன புதிய உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார் .
பெண்களின் சபரி மலை
சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருப்பது போலவே பல்லாயிரக் கணக்கான பெண்கள் விரதம் இருந்து இங்கு வந்து பொங்கல் படைக்கிறார்கள் இதனால் பெண்களின் சபரி மலை என்ற சிறப்பு அடைமொழியும் இந்த இடத்துக்கு உண்டு ; அப்போது பெண்கள் மட்டுமே கோவில் அருகில் வரலாம். கோவிலைச் சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் பொங்கல் பானைகளைக் காணலாம். உலகின் மிகப்பெரிய சமையல் திருவிழா அல்லது பொங்கல் விழா என்று இதை அழைத்தாலும் மிகையாகாது
பத்துநாள் பொங்கல உற்சவம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். ஒன்பதாவது நாள் விழாவில் வெல்லம், தேங்காய் கலந்த சர்க்கரைப் பொங்கலை உண்டாக்கி அம்மனுக்கு படைப்பார்கள். அப்போது கோவில் பூஜாரி , தேவியின் வாளை கையில் ஏந்தி வலம் வருவார். புனித நீரைத் தெளித்த்து பொங்கல் படைக்கும் பெண்மணிகளை ஆசீர்வதிப்பார்.
இது முடிந்த பின்னர், தேவியை அருகிலுள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருளச் செய்வார்கள் செண்டை மேளம், நாகஸ்வரம் முழங்க, யானைகள் பவனி வர, குதியோட்டம் , தாளப் பொலி, கும்பக் குடம் புடை சூழ, பகவதி அம்மன் செல்வாள். வழி நெடுகிலும் பக்தர்கள் சம்பிரதாய முறையில் அம்மனுக்கு வரவேற்பும் வழிபாடும் நல்குவார்கள் . அடுத்த நாள் காலையில்தான் இந்த ஊர்வலம் கோவிலுக்குத் திரும்பும் .
விழாக்காலத்தில் செவிக்கு விருந்தளிக்க இன்னிசை கச்சேரிகளும் , கண்களுக்கு விருந்து படைக்க பரத நாட்டியம் , மோகினியாட்டம், கதகளி ஆட்டம் ஆகியவையும் நடக்கும்.
இப்பொங்கல் விழாவில் சுமார் 10 லட்சம் பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.
கோவிலில் நடக்கும் மற்ற வைபவங்கள் :
மண்டல விரதம், வினாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, சிவராத்திரி, கார்த்திகை தீபம், ஆயில்ய பூஜை, ஐஸ்வர்ய பூஜை, நிரையும் புத்தரிசியும் (இது வயலில் அறுவடைக்கு முன்னர், கொஞ்சம் நெற்கதிர்களை அறுத்து வந்து சாமிக்குப் படையலிடுவது), அகண்ட நாம ஜபம்.
xxxxxxx
106.சிறையின்கீழ் சர்க்கரா தேவி கோவில்
Sarkara Bhagavathy temple located at Chirayinkeezhu Taluk, Thiruvananthapuram
திருவனந்தபுரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் மேலும் ஒரு புகழ்பெற்ற பகவதி கோவில் இருக்கிறது.
கருவறைக்கு வெளியே நாலம்பலம் இருக்கிறது. கோவிலின் சிறப்பு அங்குள்ள சிறபங்களும் ஓவியங்களும் ஆகும்.
நாலம்பலத்துக்கு நான்கு வாயில்கள் உள்ளன. சுவரில் ஆயிரக் கணக்கான சுட்டு விளக்குகளை பொருத்தியுள்ளனர் . விழாக்காலத்தில் இவைகள் அனைத்தும் ஜெகஜ்ஜோதியாக ஒளி வீசும்.
ஆண்டுதோறும் இரண்டு விழாக்களை கோவில் கொண்டாடுகிறது. தேவியின் பிறந்த நாளாகக் கருதப்படும் பரணி உற்சவம் மிகவும் கீர்த்தி வாய்ந்தது. கடைசி நாளில் கருடன் தூக்கம் நடக்கும். அன்று உருச்சா என்னும் பூமியில் உருண்டு வரும் நேர்த்திக்கடனும் நடைபெறும். கோவில் விளக்குகள் அனைத்தும் எரியும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக திகழும் . பத்தாம் நாளில் தேவி தோன்றுவாள் என்ற நம்பிக்கை உள்ளதால் அவளது தெய்வீக ஆசீர்வாதங்களுக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
எல்லா கேரள திருவிழாக்களில் இருக்கும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கும் நடைபெறுகிறது.
இரண்டாவது முக்கிய விழா காளியூட்டு உற்சவம் ஆகும்; இது எட்டு நாட்களுக்கு நடக்கிறது; 64 கிராமங்களின் தலைவர்கள் தாருகா என்ற அசுரனை காளி கொன்றதை நடத்திக் காட்டுவார்கள்
இந்த தேவி- அசுரன் மோதல் கட்டடம் கட்டமாக நடக்கும். தம்புரான் புலையன், புலையி புறப்பாடு, தம்புரான் புறப்பாடு என்ற வரிசையில் நிகழும். கடைசி நாளன்று 100 அடி உயர விசேஷ மேடையில் தேவியும் அசுரனும் மோதுவார்கள். அதைக் காண பல்லாயிரக் கணக்கானோர் வருகின்றனர் . இதைக் காண்பவர்கள் மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருக்கும். இதை பரனேத்து என்றும் அழைப்பர் .
திருவிதாங்கூர் மன்னர் அனிசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா 1748 ஆம் ஆண்டு காளியூட்டு விழாவை அறிமுகப்படுத்திய பிறகு இது முக்கியத்துவம் பெற்றது. அந்தத் திருவிழா பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முதல் அறுவடையின் விளைச்சலை தேவிக்கு சமர்ப்பிக்கும் போது வருகிறது.
காளியூட்டு என்றால் என்ன?- விக்கிபீடியா தகவல்
காளியூட்டு என்பது கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை நாளில் நடக்கும் கலை. இதை காளிநாடகம் என்றும் அழைப்பர். காளிக்கும் தாரிகனுக்கும் நிகழ்ந்த போரைக் குறித்து நிகழ்த்துவது ஆகும்.
ஐதீகம்
கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று, சர்க்கர கோவிலில் நடக்கும் ஒரு விழா காளியூட்டு. மக்களை வதைத்து, துன்பங்கள் ஏற்படுத்திய தாரிகனை, காளி கொன்று மக்களைக் காத்து நிற்பதை நினைவுகூர்வர்.
வரலாறு
திருவிதாங்கூர் பரணாதிகாரியாக இருந்த பேரரசர் மார்த்தாண்ட வர்மா, காயங்குளம் ராஜாவாக ஆன பின்பு, போருக்கு] புறப்படும் முன்பு சர்க்கரர் கோவி லில் காளியூட்டை நிகழ்த்தினார்.. அந்த யுத்தத்தில் வென்று, காயங்குளம் , திருவிதாங்கூரோடு சேர்த்ததினால் ஆண்டுக்கொரு முறை நடத்தி வரும் நிகழ்வு இது.
சடங்குகள்
‘முடியுழிச்சில்’ என்னும் சடங்கு நிகழ்த்தப்படும். அன்று காளி, தாரிகனை நிலத்தில் போரில் வென்றதால், அதைக் கொண்டாடும் விதத்தில், குலைவாழையும் கும்பளவும் வெட்டி நட்டுக் கொண்டாடுவர். இது கைலாயத்தில் வாழும் பரமசிவனை சென்றடைவதாக நம்புகின்றனர். இத்துடன், வெள்ளாட்டம் களி, குருத்தோலையாட்டம், நாரதன் புறப்பாடு, நாயர் புறப்பாடு, ஐராணி புறப்பாடு, கணியாரு புறப்பாடு, புலையர் புறப்பாடு, முடியுழிச்சில், நிலத்தில் போர் என்னும் ஒன்பது சடங்குகளும் நிகழ்த்தப்படுகின்றன.
—subham–
Tags– காளியூட்டு, சிறையின்கீழ், சர்க்கரா தேவி, கோவில் , ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி