65. Even without wealth, these become the adornment of naturally high-minded people: praiseworthy charity to the hand, obeisance at the feet of elders to the head, true words to the mouth, matchless victorious bravery, to the shoulders, frankness to the heart and mastery over learning to the ears.
செல்வம் இல்லாதபோதும் சான்றோர்களின் அணிகலம் — கைகளில் பலர் புகழும் கொடைத் தன்மை; ; தலையோ பெரியோரை வணக்க்குதலைச் செய்யும் ;வாயோ உண்மையே பேசும்;; தோள்களோ இணையற்ற வீரத்தைக் காட்டும்; ;இதயமோ நேர்மையைக் கடைப்பிடிக்கும் ; காதுகளோ அறிவு வேட்கையை நாடும்—65
பாரில் மகான்கள் பணமில்லாக் காரணத்தால்
ஆறும் நகையில்லாரானாலும் – நேரும்
செயற்கை அலங்காரமிது செல்வமென வெண்ணார்
இயற்கை யலங்கார மலர்க்கெய்தும் உயர்ச்சி கேள்
செங்கைக்குத் தானம் சிறந்த அலங்காரம்
பொங்கு தலைக்காசான் புனை மலர்த்தாள் – பங்கமின்றிச்
சேவித்தலன்னார் செயிர் தீர் முகத்தினுக்கு
நாவிற் பயிலுண்மை நற்றோட்கு – தாவில்
பராக்கிரமந் தாங்குதல் அப் பண்புடையார் தங்கள்
நிராசை மாயமாய் நிறைந்து விராவுகின்ற
நெஞ்சம் தனக்கென்று நிஷ் களங்க மாயிருத்தல்
அஞ்செவிக்குக் கேள்வி அணி –65
*****
Sloka 66
सम्पत्सु महतां चित्तं भवत्युत्पलकोमलम् ।
आपत्सु च महाशैलशिलासङ्घातकर्कशम् ॥ 66॥
ஸம்பத்ஸு மஹதாம் சித்தம்
பவத்யுத்பலகோஅ ம்அலம் |ஆபத்ஸு ச மஹாஶைலஶிலா
ஸங்காதகர்கஶம் || 1.66 ||
66. During prosperity, the minds of great men are tender as a lotus. In adversity, it is hard as the solid rock in a great mountain.
நல்ல வளமான வாழ்க்கை வாழ்கையில் சான்றோர் மனம் தாமரை மலர் போல மென்மையாக இருக்கும். கஷ்டமான வாழ்க்கை வந்தால் மலையிலுள்ள பாறை போல உறுதியாகிவிடும் –66
காய்ந்த இரும்பின் மீது நீர்த்துளி விழுந்தால் ஆவியாகி விடும்; தாமரை இலையில் விழுந்தால் முத்து போல் நிற்கும்; சுவாதி நட்சத்திரத்தன்று முத்துச் சிப்பியின் வாயில் விழுந்தால் முத்தாகி விடும் .இதுவே கீழ்மக்கள், மத்திய தர மனிதன், உயர்ந்த மனிதனின் குணம்– 67
67. No sign of the water is seen when it falls on heated iron. It shines on a lotus-leaf, resembling a pearl. When it falls into an oyster in the ocean, on the day of Svati constellation, it becomes a real pearl. Generally low, mediocre and superior qualities emerge by association.
காய்ந்த விரும்புண்ட நீர் காணாமற் போவதுமே
ஏய்ந்த கமலவிலைமீதே — தோய்ந்ததெனின்
முத்து நிலையடையும் முந்நீரில் வாழ் கின்ற
முத்துப்பிக்கொள்ள துவே மூடி நி — லைத்திருந்தால்
முத்து மணியாகும் மூது லகிற் சேர்கின்ற
தத்தமிடத்தினது தன்மைக்கொத்த
சேர்ந்துத் தமர் மத்திமரதமர் என் னும்பேர்
ஆர்த்தியிருப்பார் மாந்தரெல்லாம் -67
xxxx
I have skipped 50,51,52,53,54, 55 so that my translation coincides with at least one book. I will cover them later.
— subham—
Tags – Bhartruhari, Nitisataka, in Tamil, in Hindi, in English ,in Sanskrit , slokas 65,66, 67
இது கொச்சி நகர கோவில் ; கொச்சி ராஜ வம்சத்தினரின் எட்டு கோவில்களில் ஒன்று.
எங்கே இருக்கிறது?
எர்ணாகுளம் ஜங்ஷனிலிருந்து பத்து கி.மீ . தூரத்தில் உள்ள பெரிய கோவில் இது.; சுமார் 1000 ஆண்டுகள் பழமை உடைத்து; . எல்லா வற்றுக்கும் மேலாக உலகப் புகழ்பெற்ற EINSTEIN ஐன்ஸ்டைன் கூறிய சித்தாந்தத்தை உடைக்கும், H G WELLS எச். ஜி.வெல்ஸை ஆதரிக்கும் , நம்மாழ்வார் பாடலை ருசுப்பிக்கும், கோவில் இது
ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் ? ஒளி LIGHT ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் பயணம் செய்கிறது. இதை மிஞ்சவும் முடியாது. அந்த வேகத்தில் போகவும் முடியாது அப்படி ஒருவர் சென்றால் அவர் என்றும் மார்கண்டேயனாக, அதாவது அதே வயதில் இருப்பார் என்றார் ; அப்போது பூமியில் உள்ள மார்கண்டேயனின் அப்பாவுக்கு பல நூறு ஆண்டுகள் வயதாகி இருக்கும்!!
எச். ஜி.வெல்ஸ் என்ன சொன்னார் காலப் பயணம் செய்வதாக கற்பனைக் கதை எழுதினார் 1895ல் அவர் எழுதிய டைம் டிராவல் புஸ்தகம் விஞ்ஞா ன புனைக்கதை The Time Machine, first novel by H. G. Wells, published in book form in 1895.
திரிபுனித்துரா கோவில் இந்த TIME TRAVEL INCIDENT டைம் டிராவல் எனப்படும் கதையைச் சொல்கிறது
காலப்பயணம் செய்ய முடியாது என்பது மேலை நாட்டு விஞ்ஞானிகளின் கூற்று. அப்படிப் போனால், காலத்தில் பின்னே பயணம் செய்து , ராஜ ராஜ சோழனை ஒருவர் கொலை செய்துவிட்டால் ராஜேந்திர சோழனே பிறக்க முடியாதே ; வரலாறே பொய்யாகுமே! நான் காலப்பயணம் போய் , என் தாத்தைவைக் கொன்றுவிட்டால் நானே பிறந்திருக்க முடியாதே (GRANDFATHER PARADOX) என்பது அறிஞர்களின் கேள்வி ; இந்துக்கள் சொல்கிறார்கள் :
காலப்பயணம் செய்ய முடியும்; ஆனால் அனாவசியமாக வெள்ளைக்காரன் போல யாரையும் கொல்ல மாட்டார்கள். ஏற்கனவே கொல்லப்பட்டவர்களும் சாகவில்லை. அவர்கள் மற்றும் ஒரு பிரபஞ்சத்தில் (PARALLEL UNIVERSE) வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள். மிகப்பெரிய மகான்கள் அந்த உயிர்களை காலப்பயணம் செய்து மீண்டும் கொன்ற முடியும் என்று .
காலப்பயணம் TIME TRAVEL பற்றி திருஞான சம்பந்தரின் பூம்பாவை சம்பவம், சுந்தரரின் முதலை கொன்ற சிறுவனின் உயிர் மீட்ட சம்பவம் , நம்மாழ்வார் பாடிய இறந்த குழந்தைகளை கிருஷ்ணன் மீட்ட சம்பவம், ரேவதிக்கு மாப்பிள்ளை பார்க்க சுவர்க்கம் சென்ற சம்பவம், மஹாபாரத வனபர்வத்தில் மாதலி என்ற விண்வெளி PILOT பைலட் அர்ஜுனனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷாட்டிலில் திரும்பி வந்த சம்பவம் முதலியன எல்லாம் காலப்பயணத்தைTIME TRAVEL IS POSSIBLE ருசுப்பிக்கிறது . இந்த எல்லா சம்பவங்களிலும் இறந்த பையன்களும் பெண்களும் வேறு ஒரு பிரபஞ்சத்தில் (PARALLEL UNIVERSE) வளர்ந்து பூமிக்கு நிகரான வயதில் திரும்பி வந்ததையும் காட்டுகிறது. அப்படியானால் அவர்கள் ஒளியை விட அதி பயங்கர வேகத்தில் சென்றனரா அல்லது குறுக்குப்பாதை (WORM HOLES) ஏதேனும் உள்ளதா என்பதை புராணங்கள் விளக்கவில்லை.
காலப் பயணம் பற்றி நம்மாழ்வார்
3107 திவ்வியப் பிரபந்தம் TIME TRAVEL STORY IN DIVYA PRABANDHA
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா
உலகும் கழிய
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
ஒன்றும் துயர் இலனே (5)
பொருள்
அர்ஜுனனையும் வைதீக அந்தணனையும் கண்ணன் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு வைகுண்டம் சென்றான்.. (EINSTEIN BEATING SPEED OF SPACE SHUTTLE) ஒரு நாளில், ஒரு முகூர்த்த நேரத்துக்குள்ளாகவே தேரைச் செலுத்தி பரமபதம் சென்று , அங்குள்ள அந்தணன் பிள்ளைகளை உடலோடு பூமிக்கு கொண்டுவந்து கொடுத்தான் . இப்படிப்பட்ட ஆற்றல் படைத்த எம்பெருமானை நான் அடைக்கலமாகப் பற்றிவிட்டதால் எனக்கு கொஞ்சமும் துயர் இல்லை — என்று நம்மாழ்வார் பாடுகிறார்.
அந்தக் கதையை அடிப்படையாக வைத்து எழுந்ததே திருப்புனித்துறை கோவில் இந்தக்கோவிலை பூரணி என்ற பெயரில் பல நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஸ்ரீ பூர்ணத்ரயீஸ்வரர் :என்பதற்கு மும்மூர்த்தி என்று பொருள் ; இங்கு ஸ்ரீ கிருஷ்ணன் குழந்தை வடிவில், சந்தான கிருஷ்ணன் வடிவில் அருள் புரிவதால் குழந்தை பாக்கியம் வேண்டியும் நிறைய பக்தர்கள் வருகிறார்கள்
ஒரு பிராமணனின் இறந்த பத்து குழந்தைகளுக்கு மறுபிறவி கொடுக்க அர்ஜுனன் இறைவனின் உதவியை நாடியபோது , விஷ்ணு பகவான் அர்ஜுனனுக்கு பூர்ணதீஸ்வரர் சிலையை அளித்ததாக புராணம் கூறுகிறது .பத்து குழந்தையும் ,புனிதமான அந்த சிலையையும் அர்ஜுனன் தன் தேரில் ஏற்றிச்சென்றான் , குழந்தைகளை பிராமணனிடம் ஒப்படைத்தார் , இந்த நிகழ்வின் நினைவாகவே இக்கோவிலானது தேர் வடிவ கருவறை யுடன் கட்டப்பட்டது. இது TIME TRAVEL டைம் ட்ராவல் என்பதும் காலப்பயணத்தை நினைவு கூற சிற்பிகள் வடிவமைத்த கோவில்
கம்பீரமான ராஜ கோபுரம் , துவஜஸ்தம்பம், தீப ஸ்தம்பம் முதலியன உள்பட பெரிய பரப்பில் அமைந்துள்ள அழகான கோவில் கோவிலின் மேற்கேயுள்ள அரண்மனையில் விஷ்ணு சிலை முன்னர் இருந்தது. கணபதியும் இங்கே சந்நிதி கொண்டுள்ளார் கர்ப்பக்கிரகம் பித்தளை, செம்பு, தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது
திருவிழாக்கள் :
விருச்சிக உற்சவம் : நாற்பதுக்கும் மேலான யானைகள் பவனி வரும் விழா விருச்சிக மாதத்தில் (நவம்பர்- டிசம்பர்) நடைபெறுகிறது. இது மிகப்பெரிய உற்சவம் .அம்பலம் கதி என்னும் விழா துலா மாதத்தில் நடக்கும். அப்போது கோவிலைச் சுற்றி பக்கதர்கள் சூடத்தை ஏற்றுவார்கள் .இவை தவிர ஆண்டுதோறும் விளக்கு உற்சவமும் கொண்டாடப்படுகிறது
WHERE TO FIND US :The Devaswom Officer, Thrippunithura Devaswom, Thrippunithura . Pin: 682301.
ப்ரம்மனை தியானம் செய்வது ஒரு பெரிய தீர்த்த யாத்திரை. இந்திரியங்களை அடக்குவதும் ஒரு தீர்த்த யாத்திரை தான். தன்னை வெல்லுதல் இன்னும் பெரிய தீர்த்த யாத்திரை. என்றபோதிலும் ஒருவனின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் தூய்மையாக இருக்குமானால் அதுவே தீர்த்தயாத்திரைகளில் மிகவும் பெரிய யாத்திரையாகும்.
சம்சாரவிஷவிருக்ஷஸ்ய த்வே பலே அம்ருதோபமே |
சுபாஷிதரஸாஸ்வாத: சங்கம: சுஜனை: சஹ ||
உலக அறியாமை என்னும் விஷ விருக்ஷத்தில் அம்ருதத்திற்கு ஒப்பான இரு நல்ல பழங்கள் உள்ளன. ஒன்று சுபாஷிதமாக ஒலிக்கும் பாடல்கள், மற்றொன்று நல்லவர்களுடைய சேர்க்கை.
சரஸ்வதி மஹாபாகே வித்யே கமலலோசனே |
வித்யாரூபே விசாலாக்ஷி வித்யாம் தேஹி நமோஸ்து தே ||
ஓ! சரஸ்வதி!! கமல நயனங்களை உடைய அறிவுத் தெய்வமே!! வித்தையின் வடிவமே! உன்னை வணங்குகிறேன். சிறந்த அறிவை எனக்கு வழங்கு.
காசியில் உறையும் சங்கரருக்கு, பார்வதியின் ஈசருக்கு, நற்குணங்களின் உறைவிடத்திற்கு, காமத்தை அழிப்பவருக்கு, கலியுகத்தின் பாவங்களைப் போக்குபவருக்கு கல்யாண தருவிற்கு எனது நமஸ்காரம். அவரை வணங்குகிறேன்.
– மானஸ VI 2
ஆஞ்சனேயமதிபாடலானனம் காஞ்சனாத்ரிகமனீய விக்ரஹம் |
பாரிஜாததருமூலவாஸினம் பாவயாமி பாவமானநந்தனம் ||
அஞ்சனா-வாயுவின் குமாரருக்கு நமஸ்காரம். தாமரை போன்ற சிவந்த முகமும், தங்க மலை போன்ற ஒளி விடும் உடலும் கொண்ட பாரிஜாத மரத்தில் வாசம் புரிபவரை வணங்குகிறேன்.
அநுகந்தும் ஸதாம் வர்த்ம க்ருதஸ்னம் யதி ந ஷக்யதே |
ஸ்வல்பமப்யநுகந்தவ்யம் மார்கஸ்தௌ நாவஸீததி ||
மகான்கள் காட்டிய புண்ணிய வழியில் முழுவதுமாகப் போக முடியாவிட்டாலும் கூட, அந்த வழியில் முதல் அடியை எடுத்து வைக்கும் ஒருவன் துக்கத்தை ஒருபோதும் அடையமாட்டான்.
மித்ர த்ரோஹி க்ருதக்னச்ச யஷ்ச விஸ்வாஸதாதக: |
த்ரயஸ்தே நரகம் யாந்தி யாவஸ்சந்த்ரதிவாகரௌ ||
நண்பன் ஒருவனுக்கு த்ரோஹம் செய்யும் மித்ர த்ரோஹி – நண்பனுக்கு எதிரியாக மாறுதல், அவனுக்கு நன்றியில்லாமல் இருத்தல் அவனது நம்பிக்கைக்கு துரோகம் செய்தல் ஆகிய இந்த மூன்றும் – அவனை சந்திர சூரியர் உள்ளவரை நரகத்தில் இருக்கச் செய்யும்.
க்ராசாதர்தமபி க்ராசமதிர்ப்ய: கிம் ந யச்சஸி |
இச்சானுரூபோ விபவ: கதா கஸ்ய பவிஷ்யதி ||
– தான ப்ரஸம்ஸ 6
உன்னிடம் ஒரு கவளம் தான் உணவு இருந்தது என்றாலும் கூட அதில் பாதியை ஏன் நீ கொடுக்கக் கூடாது? எவன் தனது விருப்பத்திற்குத் தக்கபடி செல்வத்தை அடைகிறான்?
யேஷ்வேதே நி வஸந் தி நி ர்மலகுணாஸ்தேப்யோ னரேப்யோனஹ.62
62. Salutations to those men in whom these impeccable virtues reside : desire for association with good people, pleasure in others’ merits, humility towards elders, striving for learning, delight only in one’s wife, fear of censure, devotion into Shiva, power to restrain oneself, and freedom from the association of the wicked.
यशसि चाभिरुचिर्व्यसनं श्रुतौ प्रकृतिसिद्धमिदं हि महात्मनाम् ॥ 63॥
விபதி தைர்யம் அதாப்யுதயே க்ஷமா
ஸதஸி வாக்யபடுதா யுதி விக்ரமஹ |
யஶஸி சாபிருசிர்வ்யஸனம் ஶ்ருதௌ
ப்ரக்ருதிஸித்தம் இதம் ஹி மஹாத்மனாம் -63
63. Courage in adversity, forbearance in prosperity, eloquence in a gathering, heroism in battle, delight in fame, efforts in (study of) the Vedas – these are natural in great souls.
64. Who showed this difficult path of walking on the razor’s edge, to the good people – charity in private, eager reception to one who has come home, silence after a good turn, not announcing acts of kindness in public, modesty in wealth and speaking of others without disrespect.
பிறர் அறியாத் தானம் பிரியமாய்ச் செய்தல்
பிறர் செய்யு தவிப் பெருமை- பிறர் அறியப்
பேசுதல் தான் செய் பெருநன்றி பேசாமை
மாசு திகழப் பிறரை வாய் மதத்தால் — ஏசாமை
செல்வம் வருங்கால் செருக்கின்மைஎல்லாமும்
நல்லோர் இயற்கை என நாட்டு.
–subham—
Tags- Bhartruhari, Nitisataka slokas 62, 63, 64, part 19
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 3
கோவில் எண் 2 சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்
சோட்டானிக்கரை அம்மே என்ற பாடலைக் கேட்ட மாத்திரத்தில் எல்லோருக்கும் பகவதி அம்மனின், ஜதாம்பிகையின் உருவம் மனக்கண் முன் தோன்றி விடும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோவில் எங்கே இருக்கிறது ?
கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சி நகரின் தென் பகுதியில் சோட்டானிக்கரை அம்மன் கோவில் இருக்கிறது. இங்குள்ள வினோதம் என்னெவென்றால் இந்த தேவி சரஸ்வதியாகவும், மஹா லக்ஷ்மியாகவும் , பத்ர காளியாகவும் பகவாதியாகவும் வணங்கப்படுவதாகும்; வைஷ்ணவர்கள் 108 அபிமான க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று; இங்கு மஹாவிஷ்ணு சன்னதியும் உண்டு.
ஆதி சங்கரர்
இங்கு வந்தால் இந்துமதத்தில் வரும் அத்தனை தேவியாரையும் வழிபட்ட புண்ணியம் கிடைத்துவிடும். கோவிலைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. முக்கியமான கதை ஆதிசங்கரர் கதையாகும்; காஷ்மீரிலிருந்து ஸரஸ்வதியை கேரளத்துக்கு அழைத்து வர ஆசைப்பட்டார் ஆதி சங்கரர். அம்மா, ஒரு கண்டிஷன் CONDITION போட்டாள் ; நான் உன் பின்னால் நடந்து வருவேன்; ஆனால் திரும்பிப் பார்க்கக்கூடாது; உடனே சங்கரர் ஒரு கண்டிஷன் போட்டார்; தாயே! உன் கருணைக்கும் அளவு உண்டோ? நான் திரும்பிப் பார்க்கவில்லை; ஆனால் உன் சலங்கை, கொலுசு ஓசை எனக் கு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று.
அம்மாவும் யெஸ் YES; GRANTED என்று சொன்னாள் .
இறைவியின் திருவிளையாடலுக்குத்தான் அளவும் உண்டா?
பாதி வழி சென்ற பொழுது அம்மாவின் கொலுசு ஓசை ஆதி சங்கரருக்கு கேட்கவில்லை; திகைத்தார்; திரும்பிப் பார்த்தார் அவ்வளவுதான் அம்மாவும் சிரித்துக் கொண்டே நின்றுவிட்டாள் . அந்த இடம் கர்நாடகத்தின் மலைப்பகுதியில் மூகாம்பிகை என்னும் மிகவும் பிரசித்தி பெற்ற தலம் ஆகியது. எம் ஜி ராமச்சந் திரன் வைர வாள் கொடுக்க, ஜெயலலிதா தங்கத்தை அள்ளித்தர, தமிழ் நாட்டிலிருந்து விசேஷ பஸ் சர்வீஸைத் துவங்க மூகாம்பிகை புகழ் திக்கெட்டும் பரவியது..
எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்பது சங்கரரின் கொள்கை; தாயே எல்லையற்ற கருணை உடைய சரஸ்வதி தேவியே!! மலையாள மக்களுக்கு உன் அருள் கிடைத்தே ஆக வேண்டும்!! என்று மன்றாடினார்.
மன்றாடியாரை விட்டுத் தருவாளா சரஸ்வதி; நான் வருகிறேன். ஆனால் இந்தக் கோவிலில் கதவு திறக்கும் போது இருக்க வேண்டுமே என்ன செய்ய??, சொல், என்றாள் . அன்னையே சோட்டானிக்கரைக்கு வா; அங்கு அதிகாலை 4 மணிக்கு, பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீ காட்சி கொடு; பின்னர் மூகாம்பிகை கோவில் திறக்கட்டும் என்றார் . சரஸ்வதியும் சொன்னாள் ; நல்ல ஐடியா! GOOD IDEA சங்கரா; அதிகாலையில் கோவில் திறக்கட்டும் என்றாள் ; இன்றுவரை சோட்டா னிக்கரை கோவில் திறந்த பின்னரே மூகாம்பிகை கோவில் திறக்கும்.
ஆதி சங்கரர் என்றாலே தேச ஒற்றுமை என்று பொருள்; இந்திய முட்டாள்கள் , வெள்ளைக்காரன் இந்த நாட்டை ஒற்றுமைப் படுத்தினான் என்று உளறிக்கொட்டி நான் ஒரு முட்டாளுங்க, நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க என்று பாடுவார்கள். ஆதி சங்கரரோ வெள்ளைக்காரன் கோமணம் இல்லாமல் ஐரோப்பாவில் உலவிக்கொண்டிருந்த காலத்தில் மொபய்ல் போன் MOBILE PHONE இல்லாமல், கூகுள் மேப் GOOGLE MAP இல்லாமல், நதிகளைக் கடக்க பாலங்கள் இல்லாமல், காஷ்மீருக்குச் சென்று ஸ்ரீ நகர்= தேவி பட்டணம் என்ற நகரை உண்டாக்கி சாரதாம்பிகையை ஸ்தாபித்தார். நாட்டின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை ஸ்தாபித்தார்; கர்நாடக மூகாம்பிகையையும் கேரளா சோட்டானிக்கரையையும் இணைத்தார் நாட்டின் நான்கு திசைகளுக்கும் பல லட்சம் பேரை யாத்திரை செய்ய வைத்தார்.
இவ்வாறு இந்தக் கோவில் ராஜ ராஜேஸ்வரி, மஹாலக்ஷ்மி, துர்கா, பகவதி, மஹா ஸரஸ்வதி , ஆதி பராசக்தி, என்று பல பெயர்களை பெற்று காலையில் சரஸ்வதியாகவும் மதியத்தில் மஹா லட்சுமியாகவும், மாலையில் பத்ர காளியாகவும் தோன்றி அருள் மழை பொழிந்து கொண்டே இருக்கிறாள்
கோவிலில் சிவன், பிள்ளையார், தர்ம சாஸ்தா, நாகர் சந்நிதிகளும் இருக்கின்றன .
மன நோய் தீர்க்கும் மஹா தேவி
கோவிலில் பல பைத்தியங்களையும் பார்க்கலாம். ஏனெனில் மன நோயாளிகள் இங்கு வந்து ஒரு சடங்கினைச் செய்தால் நோய் போய்விடும் என்பது நம்பிக்கை. மேலை நாட்டில் மன நோய் என்று சைக்கிட்ரியாஸ்ட் PSHYCHITRIAST இடம் சென்றால் லித்தியம் மாத்திரைகளைக் LITHIUM TABLETS கொடுத்து உண்மையிலேயே மன நோயாளி ஆக்கி விடுவார்கள் ; இந்துக்களோவெனில் மருந்து மாத்திரை இல்லாமல் ஆறு மாதம் கோவிலைச் சுற்றச் செய்வார்கள்; உடனே தெளிவு பிறக்கும்.
மன நோயாளிகளுக்கும் அவர்களைப் பாதுகாப்போருக்கும் நம்பிக்கை ஏற்பட சில சடங்குகள் தேவை. ஆகையால் வரும் நோயாளிகளின் தலை முடியில் ஒன்றை எடுத்து ஒரு மரத்தில் ஆணியால் அடிப்பார்கள்; பின்னர் வேப்பிலை, எலுமிச்சம் பழம் , மிளகாய் முதலியவற்றை பிரசாதமமாக கொடுத்து அனுப்புவார்கள் .
காலம் செல்லச் செல்ல நோயும் தணிகிறது
xxxxx
எனது அனுபவம் – கொஞ்சம் சுய சரிதை
லண்டனில் உள்ள நியூஹாம் யூனிவர்சிட்டி ஹாஸ்பிடல், பார்க் ராயல் சென்ட்ரல் மிடில் செக்ஸ் ஹாஸ்பிடல் (மருத்துவ மனைகள் ) ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கு அவ்வப்போது மன நோயாளிகளுக்கு மொழிபெயர்க்கச் செல்வேன் . அப்போது தனிப்பட்ட முறையில் டாக்டருடன் நட்பு முறையில் friendly chat அளவளாவுவேன் .
சிரித்துக்கொண்டே சொல்வேன்; இப்படி லித்தியம் மாத்திரைகளைக் கொடுத்து ஆட்களை நிஜமாகவே நோயாளி ஆக்குகிறீர்களே; எங்கள் இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் சுற்ற வைத்து ஆறே மாதங்களில் குணப்படுத்தி விடுவார்கள் என்பேன் . லித்தியம் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டால் அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் கூட வராது; ஆளை நடைப்பிணம் ஆக்கி விடுவார்கள்
ஒரு எகிப்திய டாக்டர் பதில் சொன்னார் – எங்கள் நாட்டிலும் இது போன்ற நம்பிக்கைகள் உண்டு; நாங்கள் பெரும்பாலும் சைக்கிட்ரியாஸ்ட் psychiatrist களிடம் அழைத்துச் செல்வதில்லை என்று.
மற்ற டாக்டர்கள் சொன்னார்கள்; இதோ பாருங்கள் நான் கேட்கும் 3 கேள்விகளுக்கு அவர்கள் YES எஸ் என்று. சொன்னால் அதற்குத் தக்க மாத்திரைகளைக் நான் கொடுத்தாக வேண்டும் அல்லது என் வேலை போய்விடும் என்று.
(மூன்று கேள்விகள் : 1.தற்கொலை எண்ணம் வருகிறதா? 2.எல்லோரும் உங்களுக்கு எதிராக ஏதோ சதி செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா ? யாரோ உங்களிடம் பேசி, இதைச் செய் என்று சொல்கிறார்களா ? (வாய்ஸ் கேட்கிறதா/)
MY ADVICE TO MENTAL PATIENTS
என்னுடைய கொள்கை — சில மன நோயாளிகள் வன்முறையில் ஈடுபடுவார்கள் அத்தகையோருக்கு மட்டுமே சமனப்படுத்தும் மாத்திரைகள் தேவை; மற்றவர்களை கோவில், இயற்கைக் காட்சிகள், இன்னிசை, கேளிக்கைகள் முதலியவற்றால் ஆறே மாதத்தில் குணப்படுத்திவிடலாம்; இதை என் நண்பர்கள் சிலர் விஷயத்தில் நானே பார்த்துள்ளேன்).
XXX
நிற்க. மீண்டும் கோவிலுக்குச் செல்வோம்.
இந்தக் கோவிலை பெண்களின் சபரிமலை என்றும் அழைப்பார்கள்; அதாவது ஆண்கள் எப்படி ஆண்டுதோறும் விரதம் இருந்து சபரிமலை சாஸ்தாவை தரிசிக்கிறார்க்ளோ, அதே அளவு மலையாள பெண்மணிகள் இந்த பகவதிக்கு முக்கியம் தருகிறார்கள்.
கோவிலில் ஒரே பீடத்தில் அம்மனுடன் மஹா விஷ்ணுவும் இருப்பதால் அம்மன் நாரயண என்ற பெயரும் கடவுளுக்கு உண்டு; அதே பீடத்தில் பிரம்மா , சிவன் ஆகோயோரும் உளர் ; தனி சந்நிதிகளும் இருக்கின்றன
இந்தக் கோவிலில் பெரிய விழா மகம் தொழல் ; கும்ப மாதத்தில் மக நட்சத்திரத்தில் நடைபெறுகிறது அன்றுதான் தேவியானவள், விஸ்வ மங்கள சாமியாருக்கு தரிசனம் தந்தாள் . ஆண்டுதோறும் அதே நாளன்று தேவி அங்கே வருகிறாள் என்ற நம்பிக்கையால் தனி விசேஷம்.
தனியாக உள்ள கீழக் காவு பகவதி கோவிலில் மன நோயாளிகளுக்கான சடங்குகள் நடக்கும்
கோவிலில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நைவேத்தியம் படைக்கப்படுகிறது
Ellu Nivideyam – Morning, Night எள்ளு நைவேத்தியம் , காலை, இரவு
Vella Nivideyam & Paal Payasam – Afternoon, வெல்ல , பால் பாயஸ நைவேத்தியம் , மதியம் , இரவு
Pizhinju Payasam – Afternoon, Night பிழிஞ்சு பாயஸம் நைவேத்தியம் , மதியம் , இரவு
Kootu/Katti Payasam – Morning, Night கொழுக்கட்டை பாயசம் நைவேத்தியம் , காலை , இரவு
Ney Payasam – Morning, Afternoon,நெய் பாயசம் , காலை, மதியம் இரவு
Night
Appam, Ada, Ottayappam – Night அப்பம், அடை , ஓட்டையப்பம் நைவேத்தியம் , இரவு
வலிய குருதி பூஜை
மாலையில் பகவதி கோவிலுக்கு பெரிய குருக்கள் வந்து சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் வலிய குருதி சடங்கினைச் செய்வார். மன நோயுள்ளவர்கள் அங்கே வருவார்கள்; 12 அண்டாக்களில் வலிய குருதி ஆக்கப்படும் குருதி என்றால் ரத்தம். அங்கு படைக்கப்படுவது ரத்தம் அல்ல. ரத்த நிறத்தில் உள்ள வெஜிட்டேரியன் கலவை மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த செந்நிற திரவம்; இதை உட்கொண்டுவிட்டு, வீட்டுக்கு எடுத்துச் சென்று நான்கு மூலைகளில் புதைத்தால் பேய், பிசாசுகள் அணுகாது.(கந்த சஷ்டிக் கவசமும் எல்லா வகைப் பேய், பிசாசுகள் பெயர்களையும் பட்டியலிட்டு அவைகளை அந்தக் கவசம் விரட்டுவதாக நாம் சொல்கிறோம்).
It is the most important Temple among the 393 shrines spread over 3 Districts of Kerala and coming under the administration of Cochin Devaswom Board. The Divine …
Temple timing: 4 AM to 12 PM, 4 PM to 8:45 PM
Prasad’s timing: 1 PM to 3 PM
Guruthi Pooja at Temple: 8:45 PM to 9:30 PM
Dress code: Men (Dhoti), Women (Saree)
Time taken for darshan: 2 hours
Entry fee: Free, no special darshan available
குருதி பூஜை செய்ய விரும்புவோர் அண்டாக்களின் அடைப்படையில், கட்டணம் செலுத்துவார்கள் அண்டா என்பது பெரிய பாத்திரம் Big Vessel
Below is the list of puja names with the ticket or Guruthi Pooja Cost as per the devotee’s requirement given by the temple authorities.
பிரபல பாலிவுட் பாடகரான சோனு நிகம் (Sonu Nigam) வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது.
ஒரு சமயம் அவர் தனது ரசிகர்களைச் சோதிப்பதற்காக மும்பையில் தெரு ஒன்றில் அமர்ந்து பிச்சைக்காரர் ஒருவர் பாடுவது போல பாட ஆரம்பித்தார்.
உடனே கூட்டம் கூட ஆரம்பித்தது.
கூட்டத்தில் அனைவரும் பாடலை வெகுவாக ரசித்தனர்; பாராட்டினார்; ஆனால் யாரும் ஒரு ரூபாய் கூட தர்மமாகத் தரவில்லை.
ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் அவரிடம் சென்று தன்னிடமிருந்த 12 ரூபாய்களைத் தந்தான்.
“நீங்கள் பசியோடு இருப்பீர்கள். இதோ இதை வைத்து சாப்பிட ஏதேனும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றான்.
அந்தப் பையனின் அன்பை நினைத்து சோனு நிகம் நெகிழ்ந்தார். கூட்டம் கலைந்த போது அந்தப் பையனைக் காணோம். அவன் வீட்டை நோக்கி ஓடி விட்டான்.
சோனு நிகம் கூறினார்:” இந்தச் சிறுவனின் தர்மமானது எனக்கு ஒரு பெரிய ட்ராபி கிடைத்தது போல என்று எண்ணுகிறேன். இதை எனது வாழ்க்கை முழுவதும் அப்படியே வைத்திருப்பேன்” என்றார்.
ஆதாரம் : ஹிந்துஸ்தான் ஹிந்தி நாளிதழில் 19-5-2016 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி
***
வால்டேரின் குறுக்கீடு
வால்டேரைப் பற்றிய ஏராளமான சம்பங்களில் அவரது பொறுமையின்மையைச் சுட்டிக்காட்டும் சம்பவம் இது.
பதினைந்தாம் லூயி பாரிஸிலிருந்து அவரை வெளியேற்றி இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. 1754ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரிஸிலிருந்து வெளியேறிய அவர் 1778ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பாரிஸுக்கு வந்தார்.
அவருக்கு வயது 83. மீண்டும் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து பாரிஸுக்கு வந்த அவரைப் பார்க்க ஏராளமானோர் உற்சாகமாகக் கூடினர்.
அவரை வரவேற்கக் கூடிய கூட்டத்தில் ஒரு இளைஞன் உற்சாகமாக அவரைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தான்
“மகத்தானவரே! இன்று நான் ஹோமரைப் போற்றிப் புகழ வந்துள்ளேன். நாளை சொபோக்ளிஸைப் போற்றுவேன். நாளை மறுநாள் ….”அந்த இளைஞனை இடைமறித்த வால்டேர், “அப்பா! எனக்கு மிகவும் வயதாகி விட்டது. உனது எல்லா போற்றுதலையும் இன்றே முடித்துக் கொண்டால் நல்லது!” என்றார்.
அனைவரும் ஆரவாரித்தனர்.
**
விசித்திரமான மேதை ரிச்சர்ட் பக்மினிஸ்டர் ஃபுல்லர்
சிறந்த கட்டிடக் கலைஞரும் விஞ்ஞானியுமான அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் பக்மினிஸ்டர் ஃபுல்லர் (Richard Buckminster Fuller) கவிகை மாடம் (Geodesic Dome) வடிவமைப்பதில் வல்லவர். (பிறப்பு : 12-7-1895 மறைவு 1-7-1983) எதிர்கால நகரங்களை அவர் மனக்கண்ணில் கண்டு வடிவமைப்பார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் டைமாக்ஸியன் (Dymaxion) என்ற ஒரு காரையும் அவர் வடிவமைத்தார். ஆனால் அவர் கொஞ்சம் விசித்திரமான மேதை. அடிக்கடி உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டே இருப்பது அவர் வழக்கம். ஆகவே அவர் பல்வேறு இடங்களில் என்ன நேரம் என்பதைக் காட்டும் மூன்று கடிகாரங்களைக் கையில் அணிந்து கொண்டிருப்பார். பல வருடங்கள் ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் தூங்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த தூக்கத்திற்கு டைமாக்ஸியன் தூக்கம் (Dymaxion sleep) என்று அவர் பெயர் கொடுத்தார். ஆனால் அவரது சகாவால் இப்படித் தூங்காமல் இருப்பது முடியவில்லை. ஆகவே அவர் பின்னாளில் இந்தப் பழக்கத்தை விட்டு விட்டார். தனது வாழ்நாளில் என்னென்ன நடக்கிறது என்பதை அவர் குறிப்பெடுத்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் என்ன நடக்கிறது என்பதை அவர் 1915ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எழுதி வந்து கொண்டிருந்தார். அதற்கு டைமாக்ஸியன் க்ரானோஃபைல்ஸ் (Dymaxion chronofiles) என்று பெயர். அது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பைல்களின் உயரம் 272 அடி.
I have skipped 50,51,52,53,54, 55 so that my translation coincides with at least one book. I will cover them later.
SLOKAS 59,60, 61
SLOKA 59
उद्भासिताखिलखलस्य विश्रुङ्खलस्य
प्राग्जातविस्तृतनिजाधमकर्मवृत्तेः ।
दैवादवाप्तविभवस्य गुणद्विषोऽस्य
नीचस्य गोचरगतैः सुखमाप्यते कैः ॥ 59॥
59. Who can live in peace, in the vicinity of the base man, who incites all other wicked people, who has no restraint, who has forgotten his earlier lowly activities, who despises virtues but has obtained glory by fate?
கீழ் மக்களுடன் யார்தான் அமைதியாக வாழ முடியும்? அவர்கள் கட்டுக்கடங்காத த்யூரைத் தூண்டி விடுகின்றனர் ; பழைய தீய செயல்களை மறந்து விடுகின்றனர் ; நல்லவற்றை இகழும் அவர்களுக்கு விதி வசத்தால் புகழ் கிடைத்து விடுகிறது-59
உத்பாஸிதாகிலகலஸ்ய விஶ்ருங்கலஸ்ய
ப்ராக்ஜாதவிஸ்த்ருதனிஜாதமகர்மவ்ருத்தஹே |
தைவாதவாப்தவிபவஸ்ய குணத்விஷோஅ ஸ்ய
நீ சஸ்ய கோசரகதைஹி ஸுகம் ஆப்யதே கை ஹி || 1.59 ||
துஷ்டரைச் சேர்ந்து சுவேச்சையாய் வாழ்ந்து குணச்
சிஷ்டரை நீக்கிச் சிறப்பாக்கி கஷ்டமுடன்
இத்தனை நாள் தானுகர்ந்த இல்லாமையை மறந்த
மத்தரையார் சேர்வார் மதித்து
xxxx
SLOKA 60
आरम्भगुर्वी क्षयिणी क्रमेण
लघ्वी पुरा वृद्धिमती च पश्चात् ।
दिनस्य पूर्वार्धपरार्धभिन्ना
छायेव मैत्री खलसज्जनानाम् ॥ 60॥
60. The friendships of evil and good people are like the shadows of the forenoon and afternoon respectively. The former starts big and tapers slowly while the latter starts small and grows later.
காலை நிழல் போலக் கயவர்செயு நட்புச்
சால மிக நீண்டழியும் சான்றோர் தம் – சீலமுள
நட்புக் சிறிதெனினும் நன் மாலை நீழல் போல்
திட்பமுடன் வளரும் சேர்ந்து
தீயோர், நல்லோர் நட்பினை நிழலுக்கு ஒப்பிடலாம்.தீயோர் நட்பு காலை நிழல் போல பெரியத்திலிருந்து சிறிதாகி மறைந்துவிடும். நல்லோர் நட்போ, மாலை நிழல் போல சிறிதாகத்துவங்கி பின்னர் வளர்ந்து கொண்டே போகும்.
ஆரம்பகுர்வீ க்ஷயிணீ க்ரமேண
லக்வீ புரா வ்ருத்திமதீ ச பஶ்சாத் |
தினஸ்ய பூர்வார்தபரார்தபின்னா
சாயேவ மைத்ரீ கலஸஜ்ஜனானாம் || 1.60 ||
xxxx
SLOKA 61
मृगमीनसज्जनानां तृणजलसन्तोषविहितवृत्तिनाम् ।
लुब्धकधीवरपिशुना निष्कारणवैरिणो जगति ॥ 61॥
61. In this world, deer, fish and good people, subsisting on grass, water and contentment respectively, have the hunter, fisherman and evil men as enemies for no reason.
இந்த உலகில் மான் புல்லைத்தான் தின்கிறது; மீனோ தண்ணீரைத்தான் குடிக்கிறது ; நல்லாருக்கு போதும் என்ற மனமே பொ ன் செய்யும் மருந்து ஆயினும் பாருங்கள் ! இவர்களுக்கும் காரணமே இல்லாமல் எதிரிகள் இருக்கிறார்கள் ; மானுக்கு வேடன் எதிரி; மீ னுக்கு செம்படவன் எதிரி; நல்ல மனிதனுக்கோ கெட்டவன் எதிரி .
1.முதலை விழுங்கிய சிறுவனைக் காப்பாற்றிய தேவார பாடகர் யார்?
xxxx
2.இந்தியா முழுதும் பத்திரிகைகளில் அடிபட்ட சைவ முதலையின் பெயர் என்ன?
xxxx
3.சைவ முதலை வசித்த குளத்தில் மீண்டும் மீண்டும் நிகழும் அதிசயம் என்ன ?
xxxx
4. எந்த கடவுளுக்கு முதலை வாகனம் ?
xxxx
5. பஞ்ச தந்திரக் கதைகளில் முதலை எங்கே வருகிறது ?
xxxx
6.அர்ஜுனன்- முதலை கதை என்ன ?
xxxx
7.கங்கை நதியில் வசிக்கும் முதலைகள் எத்தகையவை?
xxxx
8.முதலையால் சன்யாசம் பெற்று உலகை வியக்க வைத்த தத்துவ அறிஞர் யார்?
xxxx
9.முதலைக்கு சங்க இலக்கியத்தில் என்ன சொல் பயிலப்படுகிறது?
xxxx
10.இந்து மதத்தில் வரும் யானை – முதலை கதை குப்த காலம் முதல் சிலைகளில் காணப்படுகிறது ? அது என்ன கதை ?
xxxxx
விடைகள்
1.தேவாரம் பாடிய சுந்தர மூர்த்தி நாயனார் ஒரு தெரு வழியாக நடந்து போனார். ஒரு வீட்டில் மேளதாள முழக்கம். எதிர் வீட்டில் ஒரே அழுகை. என்னப்பா இது அநியாயம்? என்று அவர் கேட்க ஒரு வீட்டில் ஒரு பிராமணப் பையனுக்கு பூணுல் கல்யாணம் என்றும் அவனுடைய நண்பன் இதே வயது என்றும் ஆனால் இதே பையனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நதியில் குளி க்கச் சென்ற போது அவனை முதலை விழுங்கி விட்டதாகவும் அதை நினைத்து அவன் தாயார் அழு வதாகவும் மக்கள் சொன்னார்கள். உடனே சுந்தர மூர்த்தி சுவாமிகள் , நதிக்கரைக்குச் சென்று பதிகம் பாடவும் முதலை அந்தப் பையனை கொண்டு வந்து கொடுத்தது என்றும் அவன் வளர்ச்ச்சி இரண்டு ஆண்டுக்கான வளர்ச்சி அடைந்திருந்தது என்றும் புராணம் சொல்கிறது.
xxxx
2.கேரளத்தில் காசர்கோடு அருகில் கும்பலா என்ற ஊருக்கு அருகிலுள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவில் குளத்தில் பபியா Babia என்ற பெயருள்ள முதலை 70 ஆண்டுகள் வசித்தது . அது 2022ம் ஆண்டு அக்டோபரில் இறந்தது ; அது வாழ்ந்த காலம் முழுதும் கோவில் பிரசாதத்தை மட்டுமே உண்டு, வெஜிட்டேரியனாகவே இருந்தது.
Xxxx
3.அந்தக் குளத்தில் மீண்டும் ஒரு முதலை தோன்றி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது . பபியா Babia முதலை இறந்து சரியாக ஓராண்டுக்குப் பின்னர் இது வந்துள்ளது .இந்தக்கோவில் குளத்தில் ஒரு முதலை இறந்தவுடன் அடுத்த முதலை வருவது அதிசயமாக இருக்கிறது. இப்படி வரும் நாலாவது முதலை இது; இவ்வளவுக்கும் பக்கத்தில் முதலை வசிக்கும் ஆறோ , குளமோ இல்லை.
xxxx
4.கங்காதேவியின் வாகனம் —மகரம்/முதலை Ganga Devi= Crocodile
xxxxx
5.செய்நன்றி கொன்ற முதலை பற்றி வரும் குரங்கு – நவாப்பழம் —முதலை கதை எல்லாச் சிறுவர்களுக்கும் கற்பிக்கப்படுகிறது, தினமும் நாவல் பழத்தைக் கொடுத்து உதவிய குரங்கின் குடலைத் தின்ன விரும்பிய முதலை, குரங்கை, ஆற்றின் மறு கரைக்கு அழைத்துச் சென்றவுடன் தனது திட்டத்தை வெளிப்படுத்தியது. உடனே குரங்கும் தந்திரமாக என் குடலினை காயப் போட்டிருக்கிறேன். ; திரும்பிச் சென்றால் குடலினைத் தருகிறேன் என்றது . முட்டாள் முதலையும் திரும்பிச் சென்றது. குரங்கு, மரத்தின் மீது ஏறிய பின்னர் நன்றிகெட்ட முதலையை அடித்து விரட்டியது.
Xxxx
6.மஹா பாரதக் கதை ஆதி பர்வத்தில் வருகிறது. அப்சரஸ் என்னும் தேவ லோக அழகிகள் வர்கா, லதா, சமீச்சி , சவுரபேயி , புத்புதா ஆகிய ஐந்து பேரும் குபேரன் வீட்டுக்குப் போய்க்கொண்டு இருந்தனர். வழியில் ஒரு பிராமணன் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தார்கள் . சேட்டை மிகுந்த இந்த அழகிகள் அவருடைய தியானத்தைக் கலைப்பதற்காக பாடினர், ஆடினர் ; அட்டஹாசச் சிரிப்பு சிரித்தனர். பிராமணர் விழித்தார். பிடி சாபம் ; நீங்கள் ஐந்து பேரும் ஐந்து ஆண் முதலைகளாக 100 ஆண்டுகளுக்கு வசிக்கக்கடவது என்று சாபமிட்டார் . அப்போதுதான் அந்தப் பெண்கள் விளையாட்டு வினையானது என்பதை உணர்ந்தனர். உடனே கெஞ்சிக் கூத்தாடி சாப விமோசனம் கேட்டனர்.
ஒரு பெரிய வீரன் வருகையில் நீங்கள் அவனைத் தாக்குங்கள்; அவன் உங்களுக்குச் சாப விமோசனம் கிடைக்கச் செய்வான் என்றார் அந்தப் பார்ப்பனர்.
அவர் செப்பியது போலவே அர்ஜுனனும் ஒரு காலத்தில் அங்கு வந்தான் அவன் மீது முதலைகள் பாய்ந்தன. அர்ஜுனன் அவைகளை விரட்டி வெற்றி பெற்றான். . சாப விமோசனம் பெற்ற ஐந்து அழகிகளும் தேவலோகம் ஏகினர் .
xxxx
7.முதலைகளில் 23 வகை உண்டு. இதில் இரண்டு வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. நீண்ட மூக்குள்ள காரியால் Gharial எனப்படும் முதலைகள் கங்கை நதியில் வசிக்கின்றன.
xxxx
8.ஆதி சங்கரர்; அவர் காலடி என்னும் இடத்தில் பிறந்தார் ; ஆற்றில் குளிக்கச் சென்றபோது, ஒரு முதலை காலைப் பிடித்துக் கொண்டது; காப்பாற்ற முடியாமல் தவித்த தாயார் கதறினாள். அம்மா இந்த ஜன்ம ஆயுள் எனக்கு முடிந்துவிட்டது. ஆகையால் நான் சந்நியாசி ஆகிறேன்.அது அடுத்த ஜன்மத்துக்குச் சமம். அப்போது முதலையும் என்னைக் கொல்லாது என்றார். அம்மாவும் நீ உயிரோடு இருந்தாலே போதும் என்றாள் . ஆதி சங்கரர் சந்நியாசி ஆனவுடன் முதலையும் அவரை விட்டுச் சென்றது. அந்த முதலையால் நமக்கு உலகம் புகழும் அத்வைத குரு கிடைத்தார் .
xxxx
9. கராம் = முதலை
xxxx
10.கஜேந்திர மோட்சம் கதை நாடு முழுதும் சிற்பமாக உள்ளது. குப்தர்காலம் முதல் சிற்பங்கள் கிடைக்கின்றன. யானைகளின் தலைவன் ஆன கஜங்களின் இந்திரனை முதலை பிடித்த போது ஆதிமூலமே என்று அது கதறியது . உடனே விஷ்ணு வந்து, முதலையைக் கொன்று கஜேந்திரனைக் காப்பாற்றினார் .
Northwick Park Hospital staff and patients in Kenton , Harrow celebrated Diwali on 8th November 2023. Volunteers from outside also joined them. Hare Krishna temple devotees organised a 45 minute Bhajan and Govardhana Puja. All the participants, irrespective of their faith, showed Aarti to the Gods on the dais. About 120 people participated and received the Prasad.
Hindu staff and patients meet every Wednesday at the Christian Chapel Hall and do Hindu prayers which include Gayatri Mantra, Hanuman Chalisa, Dhanvantri Mantra and Trayambaka Mantra. A brief discussion on Bhagavad Gita will also take place.
Every year Hindu staff assemble to celebrate Pongal, Diwali and other important events. This has been going on for years. I also participated as usual and took pictures.
London swaminathan showing arti
லண்டனில் ஹாரோ Harrow பகுதியில் நார்த்விக் பார்க் Northwick Park Hospital ஆஸ்பத்திரி உள்ளது; வா ரம் தோறும் அங்குள்ள கிறிஸ்தவ வழிப்பாட்டுக் கூடத்தில், இந்துக்களுக்கு புதன் கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது; அரை மணி நேரத்துக்கு ஹனுமான் சாலீஸா, பகவத் கீதை, திரயம்பக மந்திரம், தன்வந்திரி மந்திரம், காயத்ரீ மந்திரம் சொல்லுவோம். ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளியைக் கொண்டாடுகிறோம்.
8-11-2023 புதன் கிழமை தீபாவளியை இனிப்புகள் விநியோகித்துக் கொண்டாடினோம் ; வழக்கம்போல ஹனுமான் சாலீசாவுடன் பிரார்த்தனை நிறைவு பெற்றது.அதற்கு முன்னதாக ஹரே கிருஷ்ணா கோவில் பக்தர்கள் மேள, தாள ஹார்மோனிய இசையுடன் முக்கால் மணிநேரத்துக்கு ஹரே ராம, ஹரே கிருஷ்ண பஜனை செய்தனர். இறுதியில் அனைவரையும் ஆடவும் வைத்தனர். கிறிஸ்தவ பக்தர்களும் வந்து ஆரத்தி கட்டினார்கள். வழக்கமாக கோவர்த்தன பூஜை என்ற பெயரில் எல்லோரும் ஆரத்தி காட்டுவது சம்பிரதாயம். சுமார் 120 பக்தர்கள் வரிசையில் நின்று ஆரத்தி காட்டிவிட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். நானும் வழிபாட்டுடன், புகைப்படங்களையும் எடுத்தேன் . மருத்துவ மனை ஊழியர்கள், தொண்டர்கள், நோயாளிகள், டாக்டர்கள், நர்ஸுகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.