கொட்டாரக்கரை கணபதி– கேரள மாநில புகழ்பெற்ற கோவில்கள் – 2 (Post.12,710)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,710

Date uploaded in London – –  –  13 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 2

கோவில் எண் 1- கொட்டாரக்கரை கணபதி

வினைகள் ஒழிக்கும் கொட்டாரக்கரை கணபதி பகவானே ……… என்ற பாடலை K J  ஜேசுதாஸ் பாடுவதைக் கேட்ட பின்னர் எல்லோருக்கும் கொட்டாரக்கரை கோவிலுக்குப் போக வேண்டும் என்ற ஆசை எழுவது இயல்பே.

இது ஒரு சிவன் கோவில்; ஆனால் கணபதியால் பிரசித்தம் அடைந்துவிட்டது.

கோவில் இருப்பிடம்

கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் துறைமுகத்துக்கு அருகில் கொட்டாரக்கரை  இருக்கிறது  கொல்லம் நகரிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் இருக்கிறது  கதகளி என்னும் புகழ்பெற்ற நடனம் இங்குதான் ராமன் ஆட்டம் என்ற பெயரில் துவங்கியது .

கோவிலின் சிறப்பு

கோவிலின் சரியான பெயர் Kizhakkekara Siva Kshethram. கிழக்கேக்கர சிவ க்ஷேத்ரம் . இங்கு சிவபெருமான்தான் மூலஸ்தானத்தில் உள்ளார் ; பரசுராமர் ஸ்தாபித்த லிங்கம். கேரள மாநிலமே பரசுராமரால் கடலிலிருந்து மீட்கப்பட்ட பூமி என்பது ஐதீகம் (வாய் மொழி வரலாறு)

கருவறைக்குப் பின்பக்கம் படிஞ்ஞாறு பகவதி சந்நிதி உள்ளது

பலா மரத்தில் செய்யப்பட கணபதி கையில் மோதகத்துக்குப் பதிலாக அப்பம் இருக்கிறது. அதைப்பார்த்தவுடன் அருணகிரிநாதர் பாடிய

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி

(கனி, அப்பம், அவல் , பொரி)

     கப்பிய கரிமுகனடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ

     கற்பக மெனவினை கடிதேகும்……

என்ற திருப்புகழைப் பாடத் துவங்கி விடுவோம்

பலா மரத்தில் கணபதி உண்டானது எப்படி? என்பது பற்றி இரண்டு வரலாறுகள் உண்டு; பெருந்தச்சன் என்ற சிற்பி பலா மரத்தைக் கண்டவுடன் அதில் கணபதி செய்து கோவில் நிர்வாகத்தின் அனு மதியுடன் கணபதியைப் பிரதிஷ்டை செய்தார் என்பது முதல் வரலாறு. அப்படி  அவர் ஏன் செய்தார்?  என்பதற்குப் பின்னணியில் வேறு ஒரு வரலாறும் உண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிராமணர்  தினமும் சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்  திடீரென்று ஒரு அசரீரி கேட்டது.

அசரீரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு சரீரம் இல்லாத என்று பொருள்; ஆளே இல்லாமல் வானிலிருந்து ஒலிக்கும் குரல் இது .

என்னையும் வணங்கிவிட்டுச் செல் என்ற குரலைக் கேட்ட அந்தப் பிராமணன் உற்று நோக்கும்போது பலா மரத்தின் அடிப்பகுதி  கணபதி உருவத்தில் இருந்தது; அதை பிள்ளையாராக நினைத்து வழிபடத் துவங்கினார். பின்னர் கணபத்திக்கு புதிய சந்நிதி கிடைத்தது.

இதைப்படிக்கும்போது நாமே நடந் ததை ஊகிக்க முடிகிறது. மரத்துக்கு அடியில் இயற்கையாக அமைந்த யானை உருவத்தை, சிற்பி கண்டு, முறையான வடிவில் செதுக்கி அருளினார் என்பதே வரலாறு.

நான் எழுதிய இலங்கைத் தீவின்  108 புகப்பெற்ற  ஆலயங்கள் என்ற புஸ்தகத்தைப் படித்தோருக்கு அங்கும் இப்படி நடந்தது நினைவுக்கு வரும். மரத்தின் அடிப்பகுதி கணபதி உருவத்தில் இருந்தவுடன் போகும் வரும் பயணிகள் அதை வணங்கவே அங்கு முறையான கோவில் கட்டப்பட்டது .

. அது சரி, சிவனை விட்டுவிட்டு, கணபதியை எல்லோரும் மெச்சுவது ஏன்?  என்ற கேள்வி எழுகிறதல்லவா!  அதற்கும் பதில் உண்டு; இந்த இடத்திலுள்ள கணபதிக்கு நெய்யப்பம் நைவேத்தியம் செய்வதாக வேண்டிக்கொண்டால் நினைத்தது எல்லாம் நிறைவேறுகிறது அதனால்தான் ஜேசுதாசும் வினைகள் ஒழிக்கும் கணபதி பகவானே………………. என்று நீட்டி முழக்குகிறார் போலும். அனைவரும் கேட்க வேண்டிய பாடல் அது; அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில் இது.

கோவில் வெப்சைட்டில் கோவில் நேரம், வழிபாடு, விழாக்கள் முதலியன எல்லாம் விவரமாகக் கிடைக்கிறது. சதுர்த்தி தினங்களும் விநாயகர் சதுர்த்தியும் பொதுவாக எல்லா இந்துப் பண்ணாடிகை  தினங்களும் கூட்டம் அதிகம் கூடும் கோவில் இது.

இந்த ஊரில் பல கோவில்கள் இருக்கின்றன. மஹாதேவ கோவில், மணிகண்டேஸ்வர கோவில்,  குலசேகர நல்லூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், திருக்கண்ண மங்கல மஹாவிஷ்ணு கோவில், நெடுவத்தூர் பகவதி கோவில் ஆகிய பெயர்களிலும் கோவில்களை தரிசிக்கலாம்; பல கோவில்கள் ராமாயணத்துடன் தொடர்புடையவை.

XXXX

கோவில் வெப்சைட்

Kottarakara Sree Maha Ganapathi Temple | Kottarakara …

kottarakaramahaganapathi.org

https://kottarakaramahaganapathi.org

Kottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage center in Kerala, lord Ganapathy is only a minor deity here. But the temple today is famous as a …

VazhipadukalKottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage …
Temple TimingsKottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage …
About TempleThere are many legends about Kottarakara Ganapathy. Actually …
Temple Event CalendarKottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage …

கொட்டாரக்கரை கதகளி ராமன் ஆட்டம் பற்றிய எனது ஆங்கிலக் கட்டுரைகளில் கதகளி நடனம் பற்றிய சுவையான விஷயங்களை படித்தறிக

Kathakali Facts!- Part 1 (Post No.11812)

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2023/03/16 › kathakali-fa…

16 Mar 2023 — 1. Kathakali is a dance drama form peculiar to Kerala. · 2. Kathakali is an improvement on Krishnattam, kind of dance drama based on Jayadeva’s …

Kathakali Facts- Part 2 (Role of Colours; Play of Colours)

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2023/03/17 › kathakali-fa…

17 Mar 2023 — Bali, Sugriva and Kalakeya wear have red beards, while Kali, Kattalan/ hunter have black beards. Hanuman is depicted wearing white beard. All …

—SUBHAM—

TAGS —  கொட்டாரக்கரை கணபதி , ஜேசுதாஸ் பாடல், கேரளம்   புகழ்பெற்ற 108 கோவில்கள்,  Part 2

ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- வால்மீகி – பாகம் 1 (Post.12,709)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,709

Date uploaded in London –  –  13 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- வால்மீகி – பாகம் 1 

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த லை வெளியிட்டுள்ளார்.

நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை:

1. இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணுதல்

2. இராமன் கோசலை சந்திப்பு

3. மந்தரையின் சூழ்ச்சி

4. கைகேயியின் சூழ்ச்சி

5. இராமன் அயோத்தி நீங்குதல் குஹனைச் சந்தித்தல்

6. பரத்வாஜ முனிவருடன் சந்திப்பு

பிற்சேர்க்கை

1. அயோத்யா காண்டம் வால்மீகி ராமாயணம் ஸர்க்கங்கள்

2. உதவிய இராமாயண நூல்களின் பட்டியல்

இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் ஐந்தாவது நூலாக அமைகிறது.

நூலுக்கு முன்னுரை அளித்துள்ள திரு ஆர். சேஷாத்ரிநாதன், தான் வால்மீகி ராமாயணம், கம்பனின் கவிதைகள், துளஸிதாஸரின் தோஹாக்களில் பொதிந்துள்ள ஒராயிரம் விஷயங்களை எப்படி உபந்யாசகர்கள், உரையாசிரியர்கள் போன்றோரின் கட்டுரைகள் மற்றும் காணொளிகள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது என்பதையும் அதைத் தொகுப்பு நூலாக தந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

ராம நாமம் மிருதசஞ்சீவினி நாமம். மரிக்கப் போன சீதா பிராட்டியாருக்கு தஞ்சமாகவும், கடலைத் தாண்டும் ஆஞ்சநேயருக்கு பாஹு பலமாகவும், விபீஷணன் போன்ற சரணாகதர்களுக்கு ஆத்ம பலமாகவும், சம்பாதிக்கு இறக்கைகள் முளைத்து புதிய ஜீவனைத் தந்த சஞ்சீவினியாகவும் விளங்கியது ஷடாக்ஷரியான மஹா மந்திரம் ஶ்ரீ ராம மந்திரம்.

வால்மீகி ராமாயணத்தில் உள்ள 24000 ஸ்லோகங்களில் உள்ள ஒரு அக்ஷரத்தைச் சொன்னால் கூட மஹாபாதகங்களும் நாசமடையும் என்று உறுதி சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே இந்த நூலை முழுவதும் படிப்போர் அடையும் நன்மையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பேறுகளுக்கும் நாம் நாட வேண்டிய நூல் இராமாயணமே.

இந்த நூலில் பால காண்டத்தைத் தொடர்ந்து அயோத்யா காண்டத்தில் வரும் சம்பவங்களை சுவாரஸ்யமாகப் பல நூல்களின் உதவியோடு அற்புதமாகத் தொகுத்துத் தருகிறார் நூலாசிரியர்.

இராமனின் கல்யாண குணங்கள் 24.

இராமன் மிகுந்த அழகு நிறைந்தவன், பராக்கிரமம் உடையவன், பொறாமை இல்லாதவன், கடுமையான வார்த்தைகளைப் பேசாதவன் என்பது உள்ளிட்ட 24 குணங்களையும் அறிகிறோம்.

இராமனை அழைத்த தசரதர் இராமனுக்கு மகுடம் சூட்டுவதற்கான காரணங்களை வரிசையாகக் கூறுகிறார்.

1.இக்ஷ்வாகு வம்சத்திற்குத் தகுதியானவன்.

2. சிறந்த குணங்களை உடையவன்

3. தசரதனின் முதல் மனைவியின் புதல்வன்

4. இராமனது நல்ல குணங்களால் மக்கள் அவனை விரும்புகின்றனர்.

5. பெரியோர்களிடத்தில் பணிவுள்ளவன்.

6. எல்லா விதத்திலும் தசரதனை விடச் சிறப்புடையவன்

பல சுவையான கேள்விகள்  எழுப்பப்பட்டு அதற்குரிய பதிலும் தரப்பட்டிருப்பதை நூலில் காணலாம்.

தேவர்களின் வேண்டுகோளின்படி இராவணனை சம்ஹாரம் செய்வதற்காக மகாவிஷ்ணு மனிதனாக பூமியில் அவதாரம் எடுத்தார்.

ஆனால் அவர் தசரத சக்ரவர்த்திக்கு மகனாக ஏன் பிறக்க வேண்டும்?

இக்ஷ்வாகு மன்னன் மகாவிஷ்ணு மூர்த்தியை அயோத்திக்கு எடுத்து வந்து சரயு நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து பூஜிக்க ஆரம்பித்தான்.

இந்த பூஜை 35 தலைமுறைகளாகத் தொடர நாளடைவில் பூஜையில் சற்று சிரத்தை குறைந்தது. இதை நிவர்த்தி செய்ய மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து தானே மகாவிஷ்ணுவுக்கு பூஜை செய்ய வந்தார். தேவர்கள் இராவணனை சம்ஹாரம் செய்ய விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அதையும் நிறைவேற்ற ராமனாக அவதரித்தார்.

இப்படி பல சுவையான விவரங்களை நூலில் காணலாம்.

ஆங்காங்கே மூல ஸ்லோகங்கள் சம்ஸ்கிருதத்திலேயே தரப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது..அயோத்யா காண்டத்தில் உள்ள 119 ஸர்க்கங்களும் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளது.

பல நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் தந்திருப்பது நூலின் சுவையைக் கூட்டுகிறது.

–subham—

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 17 (Post No.12,708)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,708

Date uploaded in London – –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx

I am skipping 50,51,52,53,54, 55 to coincide with at least one book. I will cover them later.

शशी दिवसधूसरो गलितयौवना कामिनी

        सरो विगतवारिजं मुखमनक्षरं स्वाकृतेः ।

प्रभुर्धनपरायणः सततदुर्गतः सज्जनो

        नृपाङ्गणगतः खलो मनसि सप्त शल्यानि मे ॥ 56॥

ஶஶீ திவஸதூஸரோ கலிதயௌவனா காமினீ

ஸரோ விகதவாரிஜம் முகம் அனக்ஷரம் ஸ்வாக்ருதேஹே  |

ப்ரபுர்தனபராயணஹ ஸதததுர்கதஹ  ஸஜ்ஜனோ

ந்ருபாங்கணகதஹ  கலோ மனஸி ஸப்த ஶல்யானி மே || 1.56 ||

56. The moon pale by day, a lovely woman past her youth, a lake bereft of lotuses, the unlettered mouth (speech) of a handsome man, a powerful man devoted to wealth, a good man ever in misfortune, a wicked man in a king’s court – these are seven barbs in my heart.–56

பகலில் காணப்படும் ஒளியிழந்த சந்திரனும், இளமையைத் தாண்டிய பெண்ணும், தாமரையில்லா குளமும் , பேசத்தெரியாத அழகனும், செல்வச்  செருக்குடைய பலவானும் , கஷ்டப்படும் நல்லவனும் , அரசவையிலுள்ள  தீயோனும் என் இதயத்தைத் துளைக்கும் ஏழு முள்கள் ஆகும் .

xxxxxx

न कश्चिच्चण्डकोपानामात्मीयो नाम भूभुजाम् ।

होतारमपि जुह्वानं स्पृष्टो दहति पावकः ॥ 57॥

ந கஶ்சிச்சண்டகோபானாம்

ஆத்மீயோ நாம பூபுஜாம் |

ஹோதாரம் அபி ஜுஹ்வானம்

ஸ்ப்ரு ஷ்டோ வஹதி பாவகஹ  || 1.57 ||

57. There is no one dear as one’s own, to a king with a fierce temper. The fire, burns even the sacrificer offering oblations, if touched (by him).

கடுங் கோபமுடைய அரசனுக்கு எவனும் நெருங்கிய நண்பன் இல்லை; யாகத் தீயானது வேள்வி வேட்பவன் தொட்டாலும் சுட்டுப் பொசுக்கத்தான் செய்யும்.

 அதிகோபங்கொள்ளும் அரசரிடத்தில்

மதியோன் எவனும் மருவான் — விதிசேர்

மகஞ்செய்வோன் தன்னையங்கி வாட்டத் தொடங்கின்

முகங் கால் தெரியாது முன்பு –57

Xxxxx

मौनान्मूकः प्रवचनपटुर्वातुलो जल्पको वा

        धृष्टः पार्श्वे वसति च सदा दूरतश्चाप्रगल्भः ।

क्षान्त्या भीरुर्यदि न सहते प्रायशो नाभिजातः

        सेवाधर्मः परमगहनो योगिनामप्यगम्यः ॥ 58॥

Xxxx

The norms of serving are complex, incomprehensible even to sages. If silent the servant is labelled dumb, if quick to reply, flippant and loquacious. If he stays close he is called audacious, and if not, diffident. If patient (with rebukes etc.) then he is timid, if not tolerating them, he is discourteous.

Who can live in peace, in the vicinity of the base man, who incites all other wicked people, who has no restraint, who has forgotten his earlier lowly activities, who despises virtues but has obtained glory by fate?–58

வேலையாளின் நிலைமை கஷ்டம்தான்.முனிவர்களுக்கும் புரியாது. வேலைக்காரன் பேசாதிருந்தால் ஊமை என்று இகழ்வார்கள் உடனே பேசினால் வாயாடி பட்டம் சூட்டுவார்கள் ; பக்கத்தில் நின்றால் மரியாதை தெரியாதவன்;  தள்ளி நின்றால் தன்னம்பிக்கை இல்லாதவன்; பொறுமையாக இருந்தால் பயந்தவன்; பொறுமை இல்லாவிட்டால் அவமதிப்பவன்  என்பார்கள்- 58

மௌனோன் மூகஹ  ப்ரவசனபடுர்வாதுலோ ஜல்பகோ வா

த்ரு ஷ்ஹ  பார்ஶ்வே வஸதி ச ஸதா தூரதஶ்சாப்ரகல்ஹ  |

க்ஷான்த்யா பீருர்யதி ந  ஸஹதே ப்ராயஶோ நாபிஜாத ஹ

ஸேவாதர்மஹ  பரமகஹனோ யோகினாம் அப்யகம்யஹ  || 1.58 ||

பேசாதிருந்தால் பெருமூமையென்று நன்றாய்ப்

பேசினால்  வாயாடிப்  பேதை  என்றும் — ஆசையுடன்

ஒட்டியிருந்தாலச்சம் உட்பயமில்லானென்றும்

எட்டியிருந்தால் எதற்கும் இல்லாத – மட்டியென்றும்

நெஞ்சம் பொறுத்தால் நிலைத்த முரடனென்றும்

கொஞ்சம் பொறானேல்  — குலவீனன் வஞ்சநென்றும்

பேரார் துறைகளென்றும் பேசுவர் தஞ்ச சேவகனை

ஆராயுங்காலவர்பால் யாராலும் –சீராகச்

சேவித்தலாகா  சிறந்ததவ மாதவ ர்க்கும்

பாவிக்கலாகாதாம் பண்பு     –58

—subham—

Tags- Nitisataka part 17, Bhartruhari 17, Slokas 56,57,58

கோவிலில் மீண்டும் முதலை அதிசயம்! (Post No.12,707)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,707

Date uploaded in London – –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx 

கேரளத்தில் காசர்கோடு அருகிலுள்ள அனந்த பத்மநாப சுவா மி  கோவில் குளத்தில் மீண்டும் ஒரு முதலை தோன்றி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது  அங்கு வசித்த வெஜிட்டேரியன் முதலை , சரியாக ஓராண்டுக்கு முன் இறந்த செய்தி உலகம் முழுதும் பத்திரிகைகளில் வெளியானது. பபியா என்னும் அந்த முதலை  கோவில்  பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு 70 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து சென்ற ஆண்டு அக் டோ பர் 9-ம் தேதி இறந்தது.

இந்தக்கோவில் குளத்தில் ஒரு முதலை இறந்தவுடன் அடுத்த முதலை  வருவது அதிசயமாக இருக்கிறது. இப்படி வரும் நாலாவது முதலை இது; இவ்வளவுக்கும் பக்கத்தில் முதலை வசிக்கும் ஆறோ , குளமோ இல்லை. இப்பொழுது  கோவில் அர்ச்சகர்கள் இந்த முதலை பற்றி ஒரு முடிவு எடுப்பார்கள்.

The Mahavishnu temple is located at Ananthapura near Kumbla in the northern Kerala district of Kasaragod. The temple is known as the ‘moolasthanam’, the original source, of the Sri Ananthapadmanabha Swamy temple of Thiruvananthapuram, according to its website.

MY OLD ARTICLE

கேரள வெஜிட்டேரியன் முதலையும் மஹாபாரத முதலையும் (Post No.11,348)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,348

Date uploaded in London – 12 OCTOBER 2022           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

கேரளத்திலுள்ள  ஒரு கோவில்குளத்தில் வசித்த சைவ (வெஜிட்டேரியன்) முதலை பபியா (Babia) இறந்த செய்தி நாட்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. கோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த இந்த முதலை  பற்றிய செய்தி எல்லா முக்கிய பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியைப் பார்ப்போம்.

தவறு செய்யும் மனிதர்கள் மிருகங்களாகப் பிறப்பார்கள் என்று மநு நீதி நூல் (Manu Smrti)  கூறுகிறது. என்ன என்ன தவறுக்கு என்ன என்ன பிறப்பு என்ற ஒரு பெரிய பட்டியலையும் (Manu 12-54 to 12-70) தருகிறது. மஹாபாரத முதலைக் கதைகளும் இது உண்மைதான் என்று விளம்புகிறது. முதலில் மஹாபாரத முதலைக் கதையைப் பார்ப்போம்.பின்னர் மனு ஸ்மிருதி ஸ்லோகங்களைக் காண்போம் .

மஹா பாரதக் கதை ஆதி பர்வத்தில் வருகிறது. பிராமணர்களுக்கு யாரும் தீங்கு செய்யக்கூடாது என்று  புறநானுற்றுப் புலவர் ஆலத்தூர் கிழாரும் (பாடல் 34- பார்ப்பார் தப்பிய கொடுமையோர் )எச்சரிக்கிறார். இது தெரியாமல் ஐந்து தேவ லோக அழகிகள்,  ஒரு பார்ப்பனனைக் கிண்டல் செய்து முதலைகள் ஆன கதை மிகவும் சுவையானது.

அப்சரஸ் என்னும் தேவ லோக அழகிகள் வர்கா, லதா, சமீச்சி , சவுரபேயி , புத்புதா  ஆகிய ஐந்து பேரும் குபேரன் வீட்டுக்குப் போய்க்கொண்டு இருந்தனர். வழியில் ஒரு பிராமணன் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தார்கள் . இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்  என்பது தமிழ்ப் பழமொழி. ஆகையால்  சேட்டை மிகுந்த இந்த அழகிகள் அவருடைய தியானத்தைக் கலைப்பதற்காக பாடினர், ஆடினர் ; குப், குப் என்று அட்டஹாசச் சிரிப்பு சிரித்தனர். பிராமணர் விழித்தார். குணம் என்னும் குன்றேறி நினறவர்க்கு வெகுளி கணமேயும் காத்தல் அறிதன்றோ ?( வள்ளுவன் குறள் ) ஆகையால் பிடி சாபம் ; நீங்கள் ஐந்து பேரும் ஐந்து ஆண் முதலைகளாக 100 ஆண்டுகளுக்கு வசிக்கக்கடவது என்று சாபமிட்டார் . அப்போதுதான் அந்தப் பெண்கள் விளையாட்டு வினையானது என்பதை உணர்ந்தனர். உடனே கெஞ்சிக் கூத்தாடி சாப விமோசனம் கேட்டனர்.

இந்துமதத்தில் ஒரு பிரம்மாண்டமான உண்மை உள்ளது; அதாவது சத்தியம்தான் கடவுள் (God is Truth; Truth is God) ; அதை கடவுள்களாலும் மீற முடியாது. இதை எல்லாக்  கதைகளிலும் காணலாம். சொன்னது சொன்னதுதான். அதை வாபஸ் பெற முடியாது; ‘ஜகா’ வாங்க முடியாது. ஆனால் கொஞ்சம் தளர்த்தாலாம் .

சரி போ; ஒரு பெரிய  வீரன் வருகையில் நீங்கள் அவனைத் தாக்குங்கள்; அவன் உங்களுக்குச் சாப விமோசனம் கிடைக்கச் செய்வான் என்றார் அந்தப் பார்ப்பனர்.

பெண்கள் அழுதுகொண்டே நின்றபோது நாரதர் அந்தப் பக்கம் வந்தார். அவர்தான் திரிகால ஞானி ஆயிற்றே ; அவர் சொன்னார்; அஞ்ச வேண்டாம் அழகிகளே ; அர்ஜுனன் என்னும் மாவீரன் 13 ஆண்டுக் கால வனவாசம் அனுபவிக்கின்றான். அவன் இந்தக் குளத்திற்கு வந்து உங்களை விடுவிப்பான் என்று ஆறுதல் பகன்றார்.

அவர் செப்பியது போலவே அர்ஜுனனும் ஒரு காலத்தில் அவர்கள் வசித்த குளத்திற்கு அருகில் வந்தான்.; யாரையும் காணவில்லை ; அற்புதமான அழகுமிக்க இந்தக் குளத்திற்கு யாரும் குளிக்க வரவில்லையே; நான் மட்டும் போகலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்த காலையில் ஒருவர் வந்து சொன்னார். இந்தக் குளத்தில் மனிதர்களைத் தின்னும் அதிபயங்கர முதலைகள் (Man eating Crocodiles)  வசிக்கின்றன. ஆகையால் பிராமணர்கள் அனைவரும் ஓடிப் போய்விட்டார்கள் என்று. அதைக் கேட்டவுடன் அர்ஜுனன் குளத்தில் பாய்ந்தான்; பிராமணர்களை விரட்டிய முதலைகளை நான்  ஒரு கை பார்க்கிறேன் என்று சொல்லி குளத்தில் இறங்கினான்.

உடனே ஐந்து முதலைகளும் அவன் மீது பாய்ந்தன. அர்ஜுனன் அவைகளை விரட்டி வெற்றி பெற்றான். அபோது வர்கா என்னும் பேரழகி,  முதலை உருவத்தைவிட்டு,  மீண்டும் அழகியாக அர்ஜுனன் முன்னிலையில் நின்றாள்; வியப்புடன் வினவினான் அர்ஜுனன் : ‘மடக்கொடியே, யார் நீ’  ? உடனே அவள் பிராமண சாபம், பார்ப்பார் தப்பிய கொடுமை எல்லாவற்றையும்  விரித்துரைத்தாள் . சாப விமோசனம் பெற்ற ஐந்து அழகிகளும் தேவலோகம் ஏகினர் .

பின்னொரு காலத்தில் அர்ஜுனன், மாதலி என்பவன் ஒட்டிய ஸ்பேஸ் ஷட்டிலில் Space Shuttle – (விண்வெளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ராக்கெட்) — இந்திர லோகம் சென்றான். அவன் செய்த விண்வெளி பயணம் பற்றிய கதை மகா பாரத வன பர்வத்தில் உள்ளது . அப்படிச் சென்ற போது ஐந்து தேவ லோக அழகிகளும் அர்ஜுனனை அடையாளம்   கண்டு கொண்டனர் ; உடனே செய் நன்றி மறவாமல் அர்ஜுனனுக்காக ஸ்பெஷல் டான்ஸ் ஷோ Special Dance showஏற்பாடு செய்து ஆடிப்பாடி மகிழ்வித்தனர்.

–subham—

tags–முதலை, கோவில் குளத்தில், மீண்டும், காசர்கோடு 

Temple Crocodile Wonder Again ! (Post No.12,706)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,706

Date uploaded in London – –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Kasargod, Nov 11, 2023: Thirteen months after the death of crocodile Babiya, another crocodile has been spotted at at Ananthapura Lake Temple here. This is a cause of surprise among the devotees.

Babiya had a history in the temple and worshiped for 75 years. However, it died on October 9, 2022.

Devotees believed that Babiya used to guard Lord Anantapadmanabha. It used to live in the pond throughout the year. The food that is offered to the Lord is its daily meal. It used to crawl on the same path on which the devotees used to walk from one pond to another pond.

The temple got international popularity because of Babiya, which never harmed anyone. A crocodile was there in the temple pond even before India got independence. However, the British, who set up their military camp in the area shot and killed it. Later, a baby crocodile appeared in the pond and the temple priests named it Babiya.

The development assumes significance, as according to a temple official, there was always a lone crocodile in the lake and the latest one would be the fourth.

“When one crocodile dies another one inevitably appears in the lake and this continues to be an unexplained phenomenon,” the temple has said on its website.

Year After ‘Vegetarian’ Crocodile’s Death, Another One Appears At Kerala Temple

According to temple officials, Babia was a vegetarian and subsisted on the ‘prasadam’ made there.

The Mahavishnu temple is located at Ananthapura near Kumbla in the northern Kerala district of Kasaragod. The temple is known as the ‘moolasthanam’, the original source, of the Sri Ananthapadmanabha Swamy temple of Thiruvananthapuram, according to its website.

“By tradition, the lake is inhabited by a single crocodile and in the memory of the very aged men the present crocodile happens to be the third one they have seen. When one crocodile dies another one inevitably appears in the lake and this continues to be an unexplained phenomenon,” the website stated.

“There is no river or pond nearby where crocodiles exist. The crocodile is friendly and harmless to human beings. Its presence in the lake around the Mahavishnu temple reminds one of the well-known Gajendra Moksha stories in the Bhagavatha Puranam,” according to the temple’s website.

“When one crocodile dies another one inevitably appears in the lake and this continues to be an unexplained phenomenon,” the temple has said on its website.

The new crocodile was spotted in a cave along the lake on November 8 by some devotees, the temple official said.

After the devotees informed the temple about the presence of the crocodile, the temple officials on Saturday verified its presence.

“It is a young crocodile. We have informed the tantri (head priest) of the temple and he will decide what needs to be done next,” the temple official said.

The earlier crocodile, fondly called Babia, was found dead on October 9, 2022.She was the third crocodile in the lake and was believed to be over 70 years old.

—-subham—-

Tags- crocodile, babia, temple, Kasargod

QUIZ  தீபாவளி பத்து  QUIZ (Post No.12,705)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,705

Date uploaded in London – –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Quiz Serial No.80

1.தீபாவளிக்கும் எந்த அசுரனுக்கும் தொடர்பு படுத்தும் கதை உள்ளதுஅவன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன்  அவனைக் கொன்றது யார்?

XXX

2.தீபாவளியை சமண மதத் த்தினர்  ஏன் கொண்டாடுகிறார்கள்?

XXX

3.தீபாவளி அன்று கங்கா ஸ்னானம் ஆச்சா என்று கேட்பது ஏன் ?

XXX

4. தீபாவளியை சீக்கியர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் ?

xxxx

5.தீபாவளி என்பதைப் பேச்சு வழக்கில் DIWALI திவாளி என்பர். இந்தச் சொல்லின் பொருள் என்ன ?

xxx

6.தீபாவளி அன்று காசியில் என்ன விசேஷம்?

xxx

7.தீபாவளி மருந்து என்றால் என்ன ?

xxxx

8.அன்ன கூட விழா என்றால் என்ன ?

XXX

9.அயோத்திக்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு?

XXXX

10.குஜராத்தில் எத்தனை நாட்களுக்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது?

XXX

ANSWERS

1.தீபாவளிக்கும் நரகாசுரன் என்ற அசுரனுக்கும் தொடர்புள்ள கதை தென்னாட்டில் வழங்கி வருகிறது. அவனை ,கிருஷ்ண பரமாத்மா கொன்றார். காம ரூபத்திலுள்ள  ப்ரகஜோதிஷ நகரிலிருந்து அவன் ஆண்டான். இப்போது அதை அருணாசல பிரதேசம் அஸ்ஸாம் என்று பிரித்துள்ளோம்.

XXX

2.சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர்; அவர் முக்தி அடைந்தது தீபாவளி தினத்தில்தான். மேலும் சமணர்களின் ஆண்டு நிறைவடைவதும் அன்றுதான்.

xxxx

3.நரகாசுரனின் தாயின் வேண்டுகோளின்படி அன்று எந்த நீரில் குளித்தாலும் அதில் கங்கை பிரவேசிக்கிறாள்; ஆகையால் கங்கை யில்  குளித்து விட்டீ ர்களா என்று கேட்பது சம்பிரதாயம்

XXXX

4.சீக்கிய மதத்தின் ஆறாவது குரு ஹரி கோவிந்த சிங்; அவரை ஜஹாங்கீர் சிறை வைத்தியிருந்தான்.தீ பாவளி தினத்தன்று அவரையும் 52 சீக்கியர்களையும் அவன் விடுதலை செய்தான். அவர் திரும்பி வந்ததைக் கொண்டாட அன்றைய தினம் சீக்கியர்களும் விளக்கு ஏற்றி பட்டாசு வெடித்தனர். இன்றும் அவ்வாறே கொண்டாடுகின்றனர்.

.xxx

5.தீப +ஆவலி / ஆவளி என்றால் விளக்கு வரிசை என்று பொருள்; அன்றைய தினம் வட இந்தியாவில் , கார்த்திகை அன்று தமிழர்கள் விளக்கு ஏற்றுவது போல விளக்கு ஏற்றுவார்கள் .

xxxx

6.அன்று அன்னபூரணியின் தங்க விக்ரகம் தரிசனத்துக்கு வைக்கப்படும். மற்ற நாட்களில் அது, ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. .xxx

7.தீபாவளி அன்று பலவகை பலகாரங்களையும் இனிப்புகளையும் சாப்பிடுவதால் வயிற்றுக்கு கோளாறு, அஜீரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஜீரண சக்தியை அதிகரிக்க, தீபாவளி மருந்து என்னும் ஸ்பெஷல் லேகியத்தை அன்று உண்ணுவது வழக்கம்; அது அரிசித் திப்பிலி, கண்ட ந் திப்பிலி , சுக்கு, ஜீரகம்,  வெல்லம், மிளகு, கிராம்பு, ஓமம், தேன் , வெண்ணெய்  ஆகியவற்றால் ஆகிய லேகியம் ஆகும்;. அதை ஒரு  நெல்லிக்காய் அளவு சாப்பிடுவார்கள் . அது சாப்பிட ருசியாக இருக்கும்.

XXXX

8.தீபாவளியின் நாலாவது நாளன்று கிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்க ஏராளமான இனிப்புகளையும் பல காரங்களையும் கோவிலில் வந்து மலைபோலக் குவிப்பார்கள்.அன்றுதான்  பெரிய மழையிலிருந்து இடைச் சிறுவர்களை கிருஷ்ணன்,காப்பாற்றினான். கோவர்த்தன மலையைக் குட்டையாகப் பிடித்து தோழர்களைக் காப்பாற்றியதால் அந்த நாளுக்கு கோவர்த்தன பூஜை என்று பெயர்.

XXXX

9.ராம பிரான், இலங்கையில் ராவணனனைக் கொன்றுவிட்டு அன்று அயோத்திக்குத் திரும்பியதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆகையால் அன்று அயோத்தியில் உலகம் வியக்கும் எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழி படுவர்.

XXXX

10. குஜராத்தில் ஐந்து நாட்களுக்குத்  தீபாவளியைக்  கொண்டாடுகிறார்கள் .தீபாவளிக்கு முன்னரே இந்தப் பண்டிகை  துவங்கிவிடுகிறது.  உணவு வகைக்களை தயாரிப்பார்கள்.  பசுக்களை வழிபடுவார்கள்;பழைய கணக்குகளை முடித்து புதுக்கணக்கு துவங்குவர். லெட்சுமி பூஜை செய்வார்கள் . காளி பூஜை, அனுமான் வழிபாடு நடக்கும் ; அன்ன  கூட விழா ஆகியனவும் நடைபெறும். கேரளத்தில் ஓணம்  பண்டிகையின்போது மகாபலியை வரவேற்பது போல வரவேற்பார்கள் ; மலையாளிகள் போலவே கிராமப்புறங்களில் புலி வேஷம் போட்டு ஆடுவார்கள் பட்டாசு வெடித்தல், விளக்கு ஏற்றுதல், அந்தக் கரியில் கண்ணுக்கு மை தயாரித்தல், இனிப்புகளைப் பரிமாறிக்கொள்ளல் , புத்தாடை அணிதல் எல்லாம் நடக்கும்; புத்தாண்டு வாழ்த்தும் தெரிவிப்பார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஓணம் , பொங்கல், புத்தாண்டு தினம், அன்னாபிஷேகம், தீபாவளி ஆகிய அனைத்தையும்  5 அல்லது 6 நாட்களில் கொண்டாடிவிடுவார்கள்.

—SUBHAM—-

TAGS-  தீபாவளி, QUIZ,  கேள்வி பதில், பத்து

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 1 (Post No.12,704)

SUN LIGHT JUMPING FROM ONE HOLE TO ANOTHER; THIRUVANANTHA PURAM TEMPLE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,704

Date uploaded in London – –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx

மகாராஷ்டிரம், கர்நாடகம், இலங்கை ஆகிய இடங்களில் உள்ள 108 கோவில்கள் பற்றி மூன்று புஸ்தகங்களை எழுதி முடித்துவிட்டேன். இப்பொழுது, இந்தத் தீபாவளித் திருநாளில் (12-11-2023), காலடி ஆதிசங்கரனையும், குருவாயூரில் குடிகொண்ட கிருஷ்ணனையும், உலகிலேயே பிரம்மாண்ட பொக்கிஷமுள்ள திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியையையும் திருச்சூர் வடக்கு நாதனையும், , செங்கானூர் பகவதியையும் , கொட்டாரக்கரை கணபதியையும், சபரிமலை சாஸ்தாவையும் வணங்கி கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள் பற்றி எழுதத் துவங்குகிறேன் ; இதை முடித்தவுடன் ஆந்திர மாநில கோவில்களையும் தரிசிப்போம்

கேரளம் என்று சொன்னவுடன் சபரிமலையும் , குருவாயூரப்பனும் , திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியும், பல பகவதி அம்மன் கோவில்களும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் . ஆயினும் வெளி மாநிலங்களில் மிகவும் பிரசித்தமாகாத  நூற்றுக்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன. பட்டியலைப் பார்த்தால் நன்றாகப் புரியும் முதலில் முக்கியக் கோவில்களை எடுத்துக்கொள்வோம்.

கேரளத்தில் உள்ள பாடல்பெற்ற தலங்கள்

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் கேரள வைணவ ஸ்தலங்கள் பற்றிக்  கூறுவதை படியுங்கள் :–

“108 வைணவத் திருத்தலங்களில் 11 தலங்கள் கேரளத்தில் இருக்கின்றன. நம்மாழ்வார் பாடல்பெற்ற தலம் திருவட்டாறு. அவருடைய அன்னை பிறந்த ஊர் திருவெண்பரிசாரம். இவை அன்றைய கேரளமாகிய (தற்போதைய ) குமரிமாவட்டத்தில் உள்ளன.

திருநாவாய, திருக்காக்கரை, திருமூழிக்களம்,திருவித்துவக்கோடு, திருவல்லா, திருக்கடித்தானம், திருச்சிற்றாறு, திருப்புலியூர், ஆறன்முளை, திருவண்வண்டூர், திருவனந்தபுரம், திருவட்டாறு, திருவெண்பரிசாரம் ஆகிய கேரளத்து ஆலயங்கள் ஆழ்வார்களால் பாடப்பட்டவை.”

****

மாவட்டம் வாரியாக முக்கியக் கோவில்களைக் காண்போம்

திருவனந்தபுரம்

ஆற்றுக்கால் பகவதி கோவில்    , ஆற்றுக்கால்    (பத்திரகாளி)    

ஜனார்த்தனசுவாமி கோவில் வர்க்கலை, (              விஷ்ணு)

பத்மநாபசாமி கோயில்      திருவனந்தபுரம் (விஷ்ணு) 

சிவகிரி, வர்க்கலை, (சரசுவதி, நாராயணகுரு)

திருப்பால்கடல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் கீழ்பேரூர் ( கிருஷ்ணன் )

காந்தாரி அம்மன் கோவில்   திருவனந்தபுரம்  (காந்தாரி அம்மன், பிள்ளையார்).

******

ஆலப்புழை

கார்த்தியாயனி தேவி கோவில், சேர்த்தலை    (துர்க்கை)

சக்குளத்துக்காவு பகவதி கோவில்,    நீராட்டுபுரம்  (துர்க்கை)

செட்டிகுளங்கரா தேவி கோவில்,        மாவேலிக்கரா   (பகவதி)   

செங்கன்னூர் மகாதேவர் கோவில்   செங்கன்னூர்  (சிவன்பார்வதி/ பகவதி     )     

கண்டியூர் ஸ்ரீ மகாதேவர் கோவில்  மாவேலிக்கரா   சிவன்

ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோவில்,        பண்டநாடு, செங்கன்னூர் (சிவன்)  

ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோவில்,              ஹரிப்பாடு (முருகன்) 

அம்பலப்புழா கிருஷ்ணர் கோவில்,   அம்பலப்புழா    (கிருஷ்ணன்)    

******

எர்ணாகுளம்

சோட்டானிக்கரை கோவில் சோட்டானிக்கரை     பகவதி அம்மன்

எர்ணாகுளம் சிவன் கோவில், (சிவன், பிள்ளையார், பார்வதி)

பூர்ணாத்திரேயசர் கோவில்   திருப்பூணித்துறை,               (சந்தானகோபால)

திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில் ,கோயில் (வாமனர்)

திருநயத்தோடு சிவ நாராயண கோவில்  (சிவன்     )

மகளியம் ஸ்ரீ ராமசாமி கோவில்   இரும்பனம் (இராமர்)       

தட்சிண மூகாம்பிகா கோவில் , வடக்கு பறவூர்  சரசுவதி       

திருமூழிக்களம் கோவில்,        மூழிக்களம்      (இலட்சுமணன்) 

திருவாலூர் மகாதேவன் கோவில், ஆலங்காடு  (சிவன்)   

*******

இடுக்கி

ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், சித்தம்பாறை     (பிள்ளையார்)

கிருஷ்ணர் கோவில்,, தொடுபுழா   தொடுபுழா

காஞ்சிரமற்றம் ஸ்ரீ மகாதேவர் ஆலயம்   (சிவன்)   

உரவப்பாறா கோயில்  ஒலமட்டம், தொடுபுழா சுப்ரமணியர்    

காரிகோடு பகவதி கோவில்,    கரிக்கோடு (பகவதி)   

******

கண்ணூர்

தளிப்பறம்பு ராஜராஜேஸ்வரர் கோவில்,      தளிப்பறம்பா     சிவன்     

திருவங்காடு இராமசாமி கோவில்,               தலச்சேரி  இராமர்   

திரிச்சம்பரம் கோவில், தளிப்பறம்பா    கிருட்டிணன்    

மிருதங்க சைலேஸ்வரி கோவில்  முழக்குன்னு    துர்க்கை  

ஸ்ரீ சுந்தரேசுவர ஆலயம்     தளாப்பு    சிவன்

*********

காசர்கோடு

அனந்தபுர ஏரிக் கோவில்,            அனந்தபுரம் விஷ்ணு  

மதுர் கோவில்,       மதுர் பிள்ளையார்    

ஸ்ரீ  மடியன் கூலோம் கோவில்    காஞ்சங்காடு    சிவன்

ஸ்ரீ லட்சுமி வெங்கடேசர் கோவில் காஞ்சங்காடு    விஷ்ணு  

ஆனந்தாஸ்ரமம் ,              காஞ்சங்காடு

******

கொல்லம்

சாஸ்தாங்கோட்டை தரும சாஸ்தா கோவில் ,    சாஸ்தாம்கோட்டை    சாஸ்தா  

கடக்கல் தேவி கோவில்     கடக்கல்   பத்ரகாளி 

கிளிமரத்துகாவு கோவில்,கடக்கல்,     (சிவன், பார்வதி, மகாநாதன், கணபதி, முருகன், அனுமன், சாஸ்தா, நாகர் )

பொருவழி பெருவிருத்தி மலைநாடா கோவில் ,பொருவழி, துரியோதனன்

சாத்தன்னூர் ஸ்ரீ பூதநாதர் கோவில் சாத்தனூர்      

புற்றிங்கல் கோவில்   பரவூர்     புற்றிங்கல் அம்மன்   

புலிமுகம் தேவி கோவில்   தாழவா    பத்ரகாளி 

வயலில் திருக்கோவில் மகாவிஷ்ணு ஆலயம் இளம்குளம், கல்லுவத்துக்கல் விஷ்ணு    

ஓச்சிறை கோயில்     ஓச்சிறை   பரபிரம்மம்

கொட்டாரக்கரா மகா கணபதி கோவில் ,கொட்டாரக்கரா சிவ, விநாயகர்

ஸ்ரீ இடியப்பன் கோவில் ,             மறைக்கோடு, கரிக்கோம்     சிவன், பார்வதி, விஷ்ணு

**************

கோட்டயம்    

ஏற்றமனூர் சிவன்கோவில் , ஏற்றமனூர் சிவன்     

திருநக்கரை மகாதேவர் கோவில் கோட்டயம் சிவன்     

வைக்கம் சிவன் கோவில்   வைக்கம்  சிவன்     

வாழப்பள்ளி மகா சிவன் கோவில்  சங்கனாச்சேரி   சிவன்

கடுதுருத்தி மகாதேவர் கோவில்   கடுதுருத்தி சிவன்

நீண்டூர் சுப்ரமணிய சுவாமி கோவில்     நீண்டூர், கோட்டயம்    சுப்பிரமணியன்  

சக்தீசுவரம் கோவில்   அய்மனம், கோட்டயம்  ஆதி பராசக்தி   

கவின்புரம் தேவி கோவில்   ஏழச்சேரி   சிவன், பார்வதி  

பனச்சிக்காடு கோவில் பனச்சிக்காடு     சரஸ்வதி, விஷ்ணு    

பட்டுபுரக்கல் பகவதி கோவில், கட்டம்பாக்கம்   நீழூர், கோட்டயம் பத்ரகாளி

இராமபுரம் ராமர் கோவில்  இராமபுரம் இராமர்

*****

கோழிக்கோடு

லோகநார்  காவு   கோவில்    வடகரை   துர்க்கை  

பிசாரிக்காவு கோவில்  கொயிலாண்டி   துர்க்கை  

தளி சிவன் கோயில்   கோழிக்கோடு   சிவன்     

தளிக்குன்னு சிவன் கோவில் மாங்காவு, கோழிக்கோடு சிவன்

வலயநாடு தேவி கோவில், கோவிந்தபுரம், கோழிக்கோடு    பகவதி   

வரக்கல் தேவி கோவில், கோழிக்கோடு மாவட்டம்   துர்க்கை  

********

மலப்புரம்

திருமந்தம்குன்னு கோவில்  திருமந்தம்குன்னு, அங்காடிப்புரம்   பகவதி

ஆலத்தியூர் அனுமன் கோவில்    ஆலத்தியூர், திரூர் அனுமன்  

பயங்காவு பகவதி கோவில்  புறத்தூர், திரூர்   பகவதி   

திருக்காவு கோவில்   பொன்னானி     துர்க்கை]  

திருநாவாய் நவ முகுந்தன் கோவில், திருநாவாய்    விஷ்ணு, கணபதி, லட்சுமி   

காடாம்புழா தேவி கோவில் ,காடம்புழா  துர்க்கை  

திரிபிராங்கோடு சிவன் கோவில்   திரிபிராங்கோடு, திரூர்  சிவன்

*******

பாலக்காடு

காசி விஸ்வநாத சுவாமி கோயில், கல்பாத்தி

கிள்ளிக்குறிச்சி மகாதேவர் கோவில் , கிள்ளிக்குறிச்சி  சிவன்

சின்னக்கத்தூர் கோவில் பாலப்புரம், ஒற்றப்பாலம் , பகவதி   

கரிம்புழா ராமசுவாமி கோவில்     கரிம்புழா, பாலக்காடு   இராமர்   

மாங்கோட்டு பகவதி கோவில் அத்திப்போட்டா (ஆலத்தூர்)  பகவதி   

பன்னியூர்  வராகமூர்த்தி கோவில் கும்பிடி    வராகன்  

திருப்பாளூர் மகாதேவர் கோவில்,      ஆலத்தூர்  சிவன்

     ******

பத்தனம்திட்டா

மலையாளப்புழா தேவி கோவில்   மலையாளப்புழா தேவி

சபரிமலை கோவில்   சபரிமலை ஐயப்பன்  

வலியகோயிக்கல் கோவில்  பந்தளம்   அய்யப்பன்

ஆறன்முளா பார்த்தசாரதி கோவில் ஆறன்முளா     கிருட்டிணன்    

கவியூர் மகாதேவர் கோவில் கவியூர்    சிவன்

தும்பமண் வடக்குநாத ஆலயம்    தும்பமண்-,அம்பலக்கடவு    முருகா

அணைக்காட்டிலம்மா கோவில்    மல்லப்பள்ளி அணைக்காடு  சிவன், பார்வதி  

திருவல்லவாழ் ஸ்ரீவல்லப கோயில் திருவல்லா சிறீவல்லபன், சுதர்சனமூர்த்தி

தேவி கோவில், திருவல்லா  துர்க்கை  

தட்டயில் ஒரிப்புறத்து பகவதி கோவில்  தட்டயில்  தேவி

*********

திருச்சூர்

ஆறாட்டுபுழா கோவில் ஆறாட்டுப்புழா   வசிட்டர்  

அவனங்காட்டில்களரி விஷ்ணுமாயா ஆலயம்  பெரிங்கோட்டுகரை    விஷ்ணுமாயா    

கானாடிகாவு சிறீ விஷ்ணுமாயா குட்டிச்சாத்தான் சுவாமி கோவில்     பெரிங்கோட்டுகரை    விஷ்ணுமாயா  

சோவலூர் சிவன் கோவில்   குருவாயூர் சிவன்

குருவாயூர் கோவில்   குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர்  

கொடுங்கல்லூர் பகவதி கோவில் கொடுங்கல்லூர் பகவதி    

கூடல்மாணிக்கம் கோவில்   இரிஞ்ஞாலகுடா பரதன்    

மம்மியூர் கோவில்     மம்மியூர்   சிவன்

மாத்தூர் சிவன் கோவில்     குன்னங்குளம்   சிவன்

முண்டயூர் மகாதேவர் கோவில்   அஞ்ஞூர்   சிவன்

பரமேக்காவு பகவதி கோவில் திருச்சூர்   பகவதி   

சத்துருக்கனன் கோயில்     இரிஞ்ஞாலகுடா சத்துருக்கன்    

பூங்குன்னம் சிவன் கோவில் பூங்குன்னம், திருச்சூர்  சிவன்

திரிக்கூர் மகாதேவர் கோவில்    திரிக்கூர், திருச்சூர்    சிவன்     

திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோவில்  திருச்சூர்   கிருட்டிணன்   

திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில்  கொடுங்கல்லூர் சிவன்     

திருப்ரயார் கோயில்   திரிப்ராயர் இராமர்   

வடக்குநாதன் கோவில்     திருச்சூர்   சிவன்     

வில்வாத்ரிநாதர் கோவில்    திருவில்வமலை இராமர், இலட்சுமணன் 

**********

வயநாடு

வள்ளியூர்க்காவு  மானந்தவாடி    துர்கா

திருநெல்லி மகாவிஷ்ணு கோவில்

திருநெல்லி மகா விஷ்ணு   

அம்மா திருவடி கோயில்

குட்டுமுக் சிவன் கோவில், குட்டுமுக்

தாணிக்குடம் பகவதி கோவில், தாணிக்குடம்

திருவுள்ளக்காவு  தர்ம சாஸ்தா ஆலயம்

தொட்டிபால் பகவதி கோவில், தொட்டிபால்

திரிக்கூர் மகாதேவன் கோவில், ஓரகம்

*******

பத்தனம்திட்டா

மலையாளப்புழா தேவி கோவில்   மலையாளப்புழா தேவி

சபரிமலை ஐயப்பன் , தர்ம சாஸ்தா கோவில் சபரிமலை

வலியகோயிக்கல் கோவில்  பந்தளம்   ஐ ய்யப்பன்

ஆறன்முளா பார்த்தசாரதி கோயில் ஆறன்முளா     கிருஷ்ணன்

கவியூர் மகாதேவர் கோவில் கவியூர்    சிவன்

தும்பமண் வடக்குநாத ஆலயம்    தும்பமண்- அம்பலக்கடவு    முருகன்

திருவல்லவாழ் ஸ்ரீவல்லப கோயில் திருவல்லா சுதர்சனமூர்த்தி

தேவி கோயில்  திருவல்லா ,துர்க்கை  

*******

திருச்சூர்

ஆறாட்டுபுழா கோவில் ஆறாட்டுப்புழா   வசிட்டர்  

அவனங்காட்டில்களரி விஷ்ணுமாயா ஆலயம்  பெரிங்கோட்டுகரை    விஷ்ணுமாயா    

கானாடிகாவு  விஷ்ணுமாயா குட்டிச்சாத்தான் சுவாமி கோவில்   பெரிங்கோட்டுகரை     விஷ்ணுமாயா       

குருவாயூர் கோவில்   குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர்  

கொடுங்கல்லூர் பகவதி கோவில்  கொடுங்கல்லூர்  பகவதி   

கூடல்மாணிக்கம் கோயில்  இரிஞ்ஞாலகுடா பரதன்    

மாத்தூர் சிவன் கோவில்     குன்னங்குளம்   சிவன்

மகாதேவர் கோவில்   அஞ்ஞூர்   சிவன்

பரமேக்காவு பகவதி கோயில் திருச்சூர்   பகவதி   

சத்துருக்கனன் கோயில்     இரிஞ்ஞாலகுடா சத்துருக்கன்    

பூங்குன்னம் சிவன் கோவில் பூங்குன்னம், திருச்சூர்  சிவன்     

திரிக்கூர் மகாதேவர் கோவில்    திரிக்கூர், திருச்சூர்     சிவன்     

திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோவில்  திருச்சூர்   கிருட்டிணன்    

திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில்  கொடுங்கல்லூர் சிவன்     

திருப்ரயார் கோயில்   திரிப்ராயர் இராமர்   

வடக்குநாதன் கோவில்     திருச்சூர்   சிவன்     

வில்வாத்ரிநாதர் கோவில்    திருவில்வமலை இராமர், இலட்சுமணன் 

******

வயநாடு

வள்ளியூர்க்காவு  மானந்தவாடி    துர்கா

திருநெல்லி மகாவிஷ்ணு கோயில்     திருநெல்லி      மகா விஷ்ணு

திருவுள்ளக்காவு சிறீ தர்ம சாஸ்தா ஆலயம்

திரிக்கூர் மகாதேவன் கோவில், ஓரகம்

—subham—

Tags– கேரள கோவில்கள், பகுதி 1, 108 புகழ்பெற்ற ,

தீபாவளித் திருநாள்: இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே! – 2 (Post.12,703)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,703

Date uploaded in London –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxxx 

மாலைமலர் தீபாவளித் திருநாள் சிறப்புக் கட்டுரை. 10-11-23 அன்று வெளியான கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே!

(இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

வாரணாசியிலோ (காசி) கங்கா ஆரத்தி என்ற பெயரில் கங்கை நீரில் தீப வழிபாடு நடக்கிறது. ஆயிரக்கணக்கில் தீபங்கள் கங்கா நதியில் ஜொலிக்க தூய்மையான கங்கை நீர் அனைவருக்கும் வளத்தையும் நலத்தையும் தூய்மையையும் அளிக்கிறது.

சிந்தி சமூகத்தினரோ சோடீ தீபாவளி என்ற பெயரில் தீபாவளிக்கு முதல் நாளே அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்கின்றனர்.

ஒரிஸாவில் கார்த்திகை பூர்ணிமா என்ற பெயரில் சிவ-பார்வதி வழிபாடு நடைபெறுகிறது.

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் ‘மோக்ரா மாதா சேவா’ என்ற பெயரில் மல்லிகை மலர்மாலைகள் தேவிக்குச் சூட்டப்படுகின்றன.

கோவாவில் நரகாசுர ராத்ரி என்ற பெயரில் நரகாசுரனின் பெரிய அளவு உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு மறம் அழிந்து அறம் ஓங்க மகிழ்ச்சி பொங்குவதைச் சுட்டிக்காட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கோவா உள்ளிட்ட பல பகுதிகளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்குத் திலகமிட்டு ஆரத்தி எடுத்து தங்கள் நலத்தையும் பாதுகாப்பையும் கோரும் விழாவாக இது அமைகிறது.

வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு காளி வழிபாடு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

பல நாடுகளிலும் தீபாவளி

இந்திய நாகரிகத்தின் உச்ச கட்ட பண்டிகையாக அமையும் இது, பல நாடுகளிலும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுவது, தீபாவளியின் இன்னொரு சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது.

நேபாளத்தில் திஹார் என்ற பெயரில் இது கொண்டாடப்படுவதோடு, பசுக்கள் உள்ளிட்ட அனைத்து விலங்கு மற்றும் பறவைகளை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் நேபாள மக்கள்.

இந்தியாவில் இது தேசிய விடுமுறை தினம் என்பது போல டிரினிடா & டுபாகோ, மயன்மார், மரிஷியஸ், கயானா, சுரிநாம், நேபாளம், மலாசியா, சிங்கப்பூர், ஶ்ரீ லங்கா, பிஜி உள்ளிட்ட 12 நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அமைகிறது. மக்கள் உற்சாகமாக தீபாவளியை இங்கு கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானிலோ இது விருப்பத் தேர்வு விடுமுறை தினம்!

இங்கிலாந்து பிரதமர் இங்கிலாந்திலும் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்காவிலும் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடியதும் மேற்கத்திய லீசெஸ்டர் நகரம் வண்ண விளக்குமயமாக தீபாவளி அலங்காரம் செய்யப்படுவதும் உலகளாவிய பண்டிகை இது என்பதற்கான சான்றுகளாகும்.

சிவகாசியின் சிறப்பு

தீபாவளி அன்று வெடி வெடித்து மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெடியைத் தயாரிக்க  ஏற்படும் அதிகத் தயாரிப்புச் செலவினால் செல்வந்தர்கள், பிரபுக்கள், அரசர்கள் ஆகியோரால் மட்டுமே வெடி வெடிக்க முடிந்தது. ஆனால் இதை அனைவரும் கொண்டாட வழி வகை செய்ய முன்வந்தது தமிழகத்தில் உள்ள சிவகாசி.  விதவிதமான பட்டாஸ் வகைகள் மிக மலிவான விலையில் அளிக்கப்படவே உலகெங்குமுள்ள மக்கள் சிவகாசி வெடிகளை வாங்கி வெடித்து வருகின்றனர். இன்று நமது நாட்டில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான அளவில் அனைவரது எதிர்பார்ப்பையும் தேவையையும் பூர்த்தி செய்கிறது சிவகாசி என்பதால் தமிழகம் தீபாவளி வணிகத்தில் தனி இடத்தைப் பெறுகிறது.

இசைக் கலைஞர்கள் புது வித மெட்டுகளில் இசைப் பாடல்களை வெளியிட தீபாவளி ரிலீஸ் என்று மிகுந்த எதிர்பார்ப்பைத் தரும் சிறந்த கலைஞர்களின் திரைப்படங்கள் தியேட்டர்களை அலங்கரிக்க ரசிகர்கள் அங்கு முற்றுகை இடும் நாளாகவும் இது அமைகிறது. ஓவியர்கள் தீபாவளியை மையப்படுத்தி ஏராளமான ஓவியங்களை வெளியிடும் நாளும் இதுவே தான்.

பத்திரிகைகளோ தீபாவளி மலர்களை வெளியிட்டு வாசகர்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன!

பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான உற்சாகப் பண்டிகை இது. ரங்கோலி கோலங்கள் வண்ண மயமாக வீடுதோறும் திகழ, புதிய பட்டாடைகள், விதவிதமான டிஸைன் துணிகள் என குழந்தைகளை அலங்கரிக்க இனிப்பு வகைகள் ஏராளமாக விதவிதமாகக் கிடைக்க இதுபோல் ஒரு பண்டிகை இன்னொன்று இல்லை என்ற பெயரைப் பெற்று முதலிடத்தை வகிக்கிறது தீபாவளி.

பாரதியாரின் தேசபக்தியூட்டும் தீபாவளிக் கட்டுரை

பாரதியார் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக தீபாவளி நன்னாள் பற்றி மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார் இப்படி;-

“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம்.
சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்

தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.

நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான்.
பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை
கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.

நாமெல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.

ஆனால் சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.”

இதைத் தொடர்ந்து “தீபாவளி தினத்திலே கூட அந்நியத் துணிகளை வாங்கும் ஈஸ்வர துரோகிகளை” கண்டித்து தேசபக்தியை ஊட்டி ‘வந்தேமாதரம்’ என்று முடிக்கிறார் அவர் தனது தீபாவளி தலையங்கத்தை!

வாழ்த்துக்கள்

இந்த நன்னாளில் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம், மன திருப்தி, குடும்ப ஒற்றுமை, தைரியம், வீரம், மறத்தை ஒழித்து அறத்தை வெல்லச் செய்யும் வலிமை,உற்சாகம், சமுதாய மேன்மை ஆகியவற்றைப் பெறச் செய்யும் தீபாவளி நன்னாளில் அனைவரும் அனைத்து நலன்களையும் பெற மாலைமலருடன் இணைந்து அனைவரையும் வாழ்த்துகிறேன்.

தீபாவளி வாழ்த்துக்கள்!

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 16 (Post No.12,702)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,702

Date uploaded in London – –  –  11 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 47,48,49

SLOKA 47

त्वमेव चातकाधार इति केषां न गोचरः ।

किमम्भोद वदास्माकं कार्पण्योक्तिं प्रतीक्षसे ॥ 47॥

த்வமேவ சாதகதார இதி கேஷாம் ந கோசரஹ

கிமம்போத வதாஸ்மாகம் கார்ப்பண் யோக்திம் ப்ரதீக்ஷஸே

47. O Eminent cloud! Who does not know that you are the sole life-support of the Chataka birds? Why then do you wait for our pitiful entreaties?

ஓடும் மேகங்களே! சாதகப் பறவைகளுக்கு ஆதாரமாக இருப்பது நீ ஒன்றுதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.அப்படியிருந்தும்  எங்கள் தாக்கத்தைத் தணிக்க மழை கொட்டட்டும் என்று நாங்கள் வேண்டவும் தேவையா ?

XXXXX

SLOKA 48

रे रे चातक सावधानमनसा मित्र क्षणं श्रूयताम्

        अम्भोदा बहवो वसन्ति गगने सर्वेऽपि नैकादृशाः ।

केचिद्वृष्टिभिरार्द्रयन्ति धरणीं गर्जन्ति केचिद्वृथा

        यं यं पश्यसि तस्य तस्य पुरतो मा ब्रूहि दीनं वचः ॥48॥

ரே ரே சாதக சாவதான மனஸா மித்ர க்ஷணம்  ச்ரூயாதாம்

அம்போதா பகவோ  வசந்தி ககனே சர்வே அபி நைகாத்ருஸாஹா

கேசித் வ்ருஷ்டி பிரார்த் தயந்தி வஸுதாம் கர்ஜந்தி கேசித் வ்ருதா

யம் யம் பஸ்யசி தஸ்ய தஸ்ய புரதோ மா ப்ரூஹி தீனம்  வசஹ

48.  O Chataka, my friend! Listen attentively for a moment. There are many clouds in the sky, yet not all of them are such (worthy of asking). Some drench the earth with showers, some simply roar in vain. Do not utter pitiful words before everyone you see.

ஓஒ சாதகப்பறவையே ! கத்தித் தீர்ப்பதை நிறுத்திவிட்டு நான் சொல்வதைக் கேள்  வானத்தில் எவ்வளவ் மேகங்கள் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் ஒன்றேயல்ல  சில மேகங்கள் பூமி முழுதும் நனையுமாறு கொட்டித்தீர்க்கின்றன. இன்னும் சில வெற்று  இடியோசை செய்துவிட்டு ஒரு சொட்டுத் தண்ணீர் விடாமல் போய்விடும். ஆகையால் நண்பனே! நீ எல்லா மேகங்களுக்கு முன்பாக வும்  தண்ணீருக்காக கூவாதே

சாதகப் பறவை வானத்தில் பற ந்தவாறே  மழை நீரை மட்டுமே உண்ணும் என்பது ஸம்ஸ்க்ருத , தமிழ் செய்யுட்களில் வரும் விஷயம் ஆகும். இங்கே பர்த்ரு ஹரி இரண்டு விஷயங்களை நம் முன் வைக்கிறார்.

உண்மையான கொடையாளி, ஒ ருவன் கேட்கும் வரை காத்திருக்கத் தேவை இல்லை; வறுமை உள்ளவனுக்கு வாரி வழ ங்குவது அவன் கடமை;

இரண்டாவது பாடலில் கொடாதோரை இடித்துரைக்கிறார். சிலர் வெறும் வாய்ச் சவடால் அடிப்பார்கள்; பைசா காசு கூட கொடுக்கமாட்டார்கள்; இன்னும் சிலர் கர்ணன் போல, பாரி போல அனைத்தையும் கொடுப்பார்கள்

XXXX

SLOKA 49

जाड्यं ह्रीमति गण्यते व्रतरुचौ दम्भः शुचौ कैतवं

        शूरे निर्घृणता मुनौ विमतिता दैन्यं प्रियालापिनि । (निर्घ्ऱ्६इणता ऋजो)

तेजस्विन्यवलिप्तता मुखरता वक्तर्यशक्तिः स्थिरे

        तत्को नाम गुणो भवेत्स गुणिनां यो दुर्जनैर्नाङ्कितः ॥49॥ (भवेत्सुगुणिनां)

ஜாட்யம் ஹ்ரீமதி கண்யதே வ்ரதருசௌ தம்பஃ ஶுசௌ கைதவம்

ஶூரே நிர்க்ருணதா முனௌ விமதிதா தைன்யம் ப்ரியாலாபினி |

தேஜஸ்வின்யவலிப்ததா முகரதா வக்தர்யஶக்திஃ ஸ்திரே

தத்கோ நாம குணோ பவேத்ஸ குணினாம் யோ துர்ஜனைர்னாங்கிதஃ || 1.49 ||

49. Ignorance is ascribed to a modest man, deceit in an austere man, hypocrisy to a pure man, ruthlessness to a brave one and lack of intelligence to an ascetic. Poverty or need is attributed to one who speaks sweetly, arrogance to a powerful one, garrulity to an eloquent speaker and incompetence to a strong, calm man. Which virtue of good people is not maligned by the wicked?

அடக்கமாக இருப்பவனுக்கு ஒன்றுமே தெரியாதவன்  எளிமையாக இருப்பவனுக்கு அகந்தைப் பேர்வழி , தூயவனுக்கு கபட வேஷதாரி கருணையே இல்லாதவனுக்கு துணிச்சல்காரன் அறிவே இல்லாதவனுக்கு ஞானி என்ற  பெயரை   தீயோர் சூட்டுவர்; இனிமையாகப் பேசினால் ஏதோ எதிர்பார்க்கிறான் என்றும் வீரா ப்புடன் பேசினால்  திமிறு பிடித்தவன் என்றும்  நன்றாகப் பேசினால் வாயாடி என்றும் அமைதியாக இருந்தால் கையாலாகாதவன் என்றும் கெட்டவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் திட்டாத ஆளும் உண்டோ !

மானியை மந்தனென்றும்  மாதவனை டம்பனென்

ஆன பிறப்பொழுக்கம் ஆதரிப்போனை

கருணையிலான் என்று மின்சொல் காட்டுவோன் தன்னைத்

திருணனென்றும் ஏசுவர் தீயார்   — 49

பேசாதிருந்தால் பெருமூமையென்று நன்றாய்ப்

பேசினால்  வாயாடிப்  பேதை  என்றும் — ஆசையுடன்

ஒட்டியிருந்தாலச்சம் உட்பயமில்லானென்றும்

எட்டியிருந்தால் எதற்கும் இல்லாத – மட்டியென்றும்

நெஞ்சம் பொறுத்தால் நிலைத்த முரடனென்றும்

கொஞ்சம் பொறானேல்  — குலவீனன் வஞ்சநென்றும்

பேரார் துறைகளென்றும் பேசுவர் தஞ்ச சேவகனை

ஆராயுங்காலவர்பால் யாராலும் –சீராகச்

சேவித்தலாகா  சிறந்ததவ மாதவ ர்க்கும்

பாவிக்கலாகாதாம் பண்பு    

To be continued……………………

Tags- பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 47,48,49Nitisataka, Bhartruhari-16

Amazing Brahmin Rule in Sri Lanka- Part 2 (Post No.12,701)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,701

Date uploaded in London – –  –  11 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Arya Chakravarti’s Brahmin origin

Before continuing with C S Navartnam’s pages to show Brahmin’s role in Sri Lanka, I want to add what Mudaliyar C Rasanayagam says in his book ANCIENT JAFFNA (Year 1926).

He says that Arya Chakravarti Dynasty which ruled Northern Sri Lanka for 400 years had Brahminical origin. They were the one who established Hindu Samrajya in Sri Lanka like Shivaji in India. But the great Vijayanagara Hindu Empire and Veera Sivaji’s Hindu Samrajya wiped out Muslim invaders; in Sri Lanka it was quite opposite; Portuguese, Dutch (Holland) and British demolished all Hindu Temples and converted a lot of Hindus after killing the last Arya Chakravarti. They were Christian fanatics. Then Hindu Renaissance happened in the nineteenth century and Saivite saint Arumuga Navalar and Tamil Nagarathar Chettiyars helped to re construct Hindu temples.

Arya Chakravarti has two Sanskrit words. This Arya has nothing to do with the wrong interpretation of Max Muller gang. They said that Aryans came from outside India. But Tamil and Sanskrit scriptures never gave an ethnic connotation to the word or attributed outside origin. They used  ARYA for Himalayan saints, speakers of refined language, and civilized and cultured people in general.

Rasanayagam says there was another Malava Chakravarti as commander and this Arya Chakravarti was a minister cum commander in Rameswaram. At that time, that is 800 years ago, Rameswaram was under Sri Lankan kings. Interpreting an inscription at Tiruppullani near Rameswaram, he said that this Arya Chakravarti married a Kalinga princess living in Jaffna.  His descendants were called Arya Chakravarti and he used both her and his royal titles and symbols. Singai Aryan or a handicapped king known as Koolangai Chakravarti was the first king.

First let me give Rasanayakam’s page and then continue with Navaratnam pages:

—subham—

tags — Brahmin rule, Sri Lanka, part 2