இலங்கையில் பிராமணர் ஆட்சி-Part 3 (Post No12,700)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,700

Date uploaded in London – –  –  11 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இலங்கையில் பிராமணர் ஆட்சி – Part 3 (Final Part) 

சிவாஜி மஹராஜ், இந்தியாவில் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவியது போல இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்து ஆட்சியை நிறுவியவர்கள் ஆரிய சக்கரவர்த்திகள்;  400 ஆண்டுகளுக்குக் கொடி கட்டிப் பறந்தார்கள் . போர்ச்சுகீசிய , டச்சு (ஹாலந்து நாடு), பிரிட்டிஷ் பறங்கியர்கள்கள் இலங்கையை ஆக்ரமித்து இந்து மதத்தை எள்ளி நகையாடும் வரை, ஆரிய சக்கரவர்த்திகள் இடிபட்ட 500 கோவில்களையும் புனர் நிர்மாணித்தார்கள் . இந்த சக்ரவர்த்திகளின் தோற்றம் பிராமண தொடர்புடையது. இவர்கள் ராமேஸ்வர பகுதியிலிருந்து வந்தவர்கள். முதல் சக்ரவர்த்தி 50 சதவிகித பிராமணன்; ராவணனைப் போல 50 சதவிகித பிராமணன்.

ஆரிய சக்ரவர்த்தி என்று ஏன் பெயர் வைத்துக் கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய வேண்டும். இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்களும்  இந்திய மன்னர்களின் பெயர்களில் கூட கிடையாது. ஆரிய என்றால் இனம் அல்ல. பண்பாட்டின் உயர்மட்டத்தை அடைந்தவர்கள் என்று பொருள். அதாவது ஆங்கிலத்தில் CIVILIZED சிவிலைஸ்டு, CULTURED கல்ச்சர்ட் என்று சொல்லுவார்கள்;  மாக்ஸ்முல்லர் கும்பல் இதை மாற்றி இவர்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ள பல  நாடுகளைக்காட்டி அங்கிருந்து வந்தவர்கள் என்று சொல்லி வரலாற்றையே தலைகீழாக மாற்றியது. இந்திய பூமியில் உதித்து ஈரான் வரை சென்றவர்கள் ஆரியர்கள் என்பதை பாரசீக மதத்தினரின் வேத புஸ்தகம் ZEND AVESTA  சென்ட் அவஸ்தா காட்டுகிறது 

யாழ்ப்பாண ஆரிய சக்ரவர்த்திகளுக்கும் பாண்டியர்களுக்கும் உள்ள தொடர்பில் எவருக்கும் சந்தேகம் இல்லை; யாழ்ப்பாண சக்கரவர்த்திகள் முதலாமவர் சேதுக்கரை என்னும் ராமேஸ்வரம் , திருப்புல்லாணிப் பகுதியி லிருந்து வந்தவர்கள் என்பதிலும் ஐயப்பாடு இல்லை. யாழ்ப்பாண மன்னர்களே ராமேஸ்வரம், திருப்புல்லாணியில் செய்த கோவில் திருப்பணிகளையும் அவ்விரு இடங்களில் உள்ள கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. முதலாவது ஆரிய சக்ரவர்த்தி பிராமண க்ஷத்ரியருக்கும் பிறந்தவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர் .

யாராவது ஒரு மன்னனுக்கு அங்கஹீனம் இருந்தால், அதை வைத்தே மக்கள் அவனை அடையாளம் காண்பர்நின்ற சீர் நெடுமாறன் முதலில் கூன் பாண்டியனாக இருந்தான்; அவனை மஹேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்த சின்னப்பையன் விபூதி தடவி வழுதி கூனை நிமிர்த்தினான். அந்தச் சின்னப்பையன் திருஞான சம்பந்தன் இல்லாவிடில் இந்தியாவிலும் இலங்கையிலும் சைவ சமயம் இருந்திராது. அவனுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் ,  கீரந்தை என்னும் பிராமணன் வீட்டைக்  காப்பதற்காக தனது கையையே வெட்டிக்கொண்டான் . பின்னர் சித்த, ஆயுர் வேத நிபுணர்கள் வந்து அவனுக்கு ஆபரேஷன் செய்து தங்கக்  கையைப் பொருத்தினர் . அந்த மன்னன் பெயரே நமக்குத் தெரியாது ஆனால் பொற்கைப் பாண்டியன் என்றால் நமக்கு உடனே தெரியும். அவன் கதை பழைய காப்பியங்களில் வருவதால் அவன் சங்க கால மன்னன் என்று நமக்குத் தெரிகிறது.

இஃதே போல யாழ்ப்பாணத்தை ஆண்ட முதல் மன்னனுக்கு Polio Attack போலியோ தாக்குதல் காரணமாக குறுகிய கை இருந்தது. அவனை கூழங்கை சக்ரவர்த்தி என்று அழைத்தனர்.

சரி, முதல் சக்ரவர்த்தி, ராவணனைப்போல  50 சதவிகித பிராமணன்.

என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ?

முதலியார் சி ராஜநாயகம் புராதன யாழ்ப்பாணம் ANCIENT JAFFNA, MUDAIYAR C. RASANAYAGAM, 1926 என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதில் திருப்புல்லாணி க் கல்வெட்டையும் மஹா வம்சக் குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு பின் வருமாறு கூறுகிறார் மாளவ சக்ரவர்த்தி என்பவர்  முன்னர் இலங்கையுடன்  சண்டையிட்டதையும் குறிப்பிட்டுவிட்டு அவர் சொல்வதாவது–

ராமேஸ்வரத்திலுள்ள ஒரு பிராமணர் யாழ்ப்பாணத்தில் இருந்த கலிங்க வம்சத்து உக்ர சிங்கனின் இளவரசி  ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, தந்தை வழி  பெயரான ஆர்ய என்பதையும் வைத்துக்கொண்டார் பெண்வழி வம்சப் பெயரான கலிங்கத்தையும் வைத்துக்கொண்டார் என்பது தெரிய வருகிறது . சேது என்ற பெயரையும் கலிங்க வம்ச சின்னங்களையும்( ராஜ முத்திரை ) வைத்துக்கொண்டனர் .

ஆர்ய சக்ரவர்த்தி  என்பது ஒரு படைத்தளபதியின் பெயர் ;

மஹாபாரத துரோணர் , அஸ்வத்தாமன் காலத்திலிருந்தே  பிராமணர்கள் படைத் தளபதிகளாகவும் இருந்ததை  அறிகிறோம். இதனால் முதல் மன்னர் 50 சதவிகித பிராமணர் என்பதில் வியப்பதற்கொன்றுமில்லை.. ஆயினும் ஆட்சி என்று வருகையில் அ வர்கள் க்ஷத்ரியனாகவே (கலிங்க வம்சம்) காட்டிக்கொள்வார்கள்.

உலக வரலாற்றில் சிங்கமே இல்லாத, சிங்கத்தையே பார்த்திராத  சிங்கபுரி (சிங்கப்பூர்), இலங்கை, ஈரான் ஆகிய நாடுகளின் கொடி அல்லது சின்னத்தில் சிங்கம் இருப்பதற்குக் காரணம் இந்துக்கள் உலகம் முழுதும் வீறு நடை போட்டதே.

இந்துக்களின் ஆதிக்கம் ஐரோப்பா வரை பரவியதால், சிங்கமே இல்லாத ஐரோப்பாவில்  ஜுவலியஸ் சீசர்/CAESAR  அகஸ்டஸ் சீசர் என்று சிங்கத்தின் அடைமொழியை சேர்த்து க்கொண்டனர். கேசரி ( கேச + அரி = மயிர் மிருகம் ) என்பதை ரோமன் லிபியில் எழுதுகையில் கேசர்=  சீசர் ஆகிவிடும் ; இன்றும் நான் சார்ல்ஸ் CHARLES  என்றும் கேரக்டர் CHARACTER  என்றும் C சி எழுத்தை மாறி மாறி பயன்படுத்துவது இந்த சி குழப்பத்தால்தான்.

இதை எதற்காக இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்கை நகர்சிங்கை ஆரியன் ஆகிய எல்லாம் இந்தியத் தொடர்புள்ள கலிங்க வம்சம் என்பதைக்காட்டவே.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரிய சக்கரவர்த்திகள் என்பது பாண்டிய  + கலிங்க கலப்பு ரத்தம் உடையவர்கள்.  மஹா வம்சமும் ஓரிடத்தில் இவர்களில் ஒருவரைக் குறிப்பிடுகையில் ஆரியன் அல்லாத  என்ற சொற்றோடரைப் பயன்படுத்தக் காரணம் அந்த இளவரசி யாழ்ப்பாணத்தில் இருந்த கலிங்க வம்ச அரசி என்பதால்தான்.

இவ்வளவையும் படிக்கையில் இலங்கையின் முதல் மன்னனே கலிங்க வம்சத்தவன் எனபதையும் மறந்துவிடக்கூடாது ; கலிங்கம், வங்கம் என்பன அடுத்தடுத்தது உள்ள பிரதேசங்கள்; அவனைக் கப்பல் ஏற்றி நாடு கடத்தி விரட்டிவிட்ட இடம் வாங்க மாநில துறைமுகம்; வங்கம் என்றால் கப்பல்; அது புறப்பட்ட மாநிலத்துக்கே இப்போது வங்கம் என்று ஆகிவிட்டது. பழைய தமிழ் பாடல்களில் வங்கம் என்ற சொல் கப்பல் என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளது கப்பல் கீழைக்கடலை நாம் இன்றும் வங்காள விரிகுடா என்றே அழைக்கிறோம்  ; வளைந்த (BANGA/ BEND/ VANTHANA/ VANANGUTHAL are cognate words) எல்லாப்  பொருளும் வங்கம் ஆகும்.

–SUBHAM —

Tags- இலங்கையில், பிராமணர் ஆட்சி, Part 3, ஆரிய சக்ரவர்த்தி, கலிங்க வம்ச, இளவரசி கூழங்கைசக்ரவர்த்தி

தீபாவளி – இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே! (Post No.11699)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,699

Date uploaded in London –  –  11 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மாலைமலர் தீபாவளித் திருநாள் சிறப்புக் கட்டுரை. 10-11-23 அன்று வெளியான கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே!

(முதல் பகுதி)

ச.நாகராஜன்

             விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

             விளக்கின் முன்னே வேதனை மாறும்

விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்

விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே

–    தீப ரகசியம் பற்றி திருமூலர் ஏழாம் தந்திரம் – 10

உன்னைக் கண்டு நானாட, என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து

உறவாடும் நேரமடா ஆ ஆ ஆ ஆ

உறவாடும் நேரமடா!

           -கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

அறம் வெல்லும் திருநாள்

உலகின் பல நாடுகளிலும் இப்போது தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.

அறத்திற்கும் மறத்திற்குமான போரில் அறம் வென்ற நாள் இது.

மலர்ச்சி, மகிழ்ச்சி, நம்பிக்கை, ஒளி, செல்வம், ஆரோக்கியம், ஆயுள், மேன்மை உள்ளிட்ட ஏராளமான நலன்களை தீப ஒளி போல வரிசையாகத் தருவதால் இது தீபாவளி ஆகிறது.  தீபம் + ஆவளி = தீப வரிசை)

லட்சுமி தேவி பாற்கடலில் அவதரித்த நாள் இதுவே.

இந்த நன்னாளில் லட்சுமி தேவி சர்வ அலங்காரபூஷிதையாக பூமியில் வருகிறாள். அவளை இல்லந்தோறும் வரவேற்கும் வண்ணம் வீட்டில் இருக்கும் அழுக்குகளையும் குப்பைகளையும் போக்கி, வீட்டை, தீப ஒளி ஏற்றி, பிரகாசமாக வைத்து புத்தாடை புனைந்து தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு பெண்டிரும் ஆண்களும் குழந்தைகளும் வெடி வெடித்து இனிப்பு வழங்கி லட்சுமியை வரவேற்கத் தயாராக இருக்கின்றனர்.

லட்சுமி பூஜை செய்வது இந்த நாளின் சிறப்பு அம்சம்.

ஐந்து தினக் கொண்டாட்டம்

தீபாவளியை ஐந்து தினங்களாக வடக்கே கொண்டாடுகின்றனர்.

முதல் நாள் ‘தன் தேரஸ்’ என்று அழைக்கப்படுகிறது. தன் என்றால் பணம் அல்லது செல்வம் தேரஸ் என்றால் திரயோதசி திதியைக் குறிக்கிறது. செல்வத்தை வரவேற்கத் தயாராகும் நாள் இது. தன்வந்திரி பாற்கடலிலிருந்து வெளிவந்து அவதரித்த தினம்.துளசி செடியின் அருகில் இருந்து யமனை வழிபடும் தினமாக இது அமைகிறது.

அடுத்த நாள் நரக சதுர்தசி. இது கண்ணபிரான் நரகாசுரனை வதம் செய்த நாள்.

அடுத்த நாள் அமாவாசை – தீபாவளித் திருநாள். லட்சுமி பூஜை தினம்.

அதற்கடுத்த நாள் கோவர்தன் பூஜை தினம்.

கடைசியாக பாய் துஜ் என அழைக்கப்படுகிறது. இந்த நாள் யமன் தனது சகோதரியான யமுனையை சென்று பார்த்த நாள். இந்த நாளில் எந்த சகோதரன் தனது சகோதரியைச் சென்று பார்க்கிறானோ  அவனுக்கு அனைத்துப் பாவங்களும் போய்விடும் என்று யமன் அனுக்ரஹித்தான்.

ஐப்பசி அமாவாசை தீபாவளியாக அமைய, இதையொட்டி இந்துக்களின் விக்ரம ஆண்டுத் தொடரில் (விக்ரம சம்வத்) புத்தாண்டு மலர்கிறது.

குபேர பூஜையை அனைத்து இல்லங்களும் சிறப்பாகச் செய்து செல்வ வளத்தைப் பெற வழி வகுப்பது தீபாவளி பண்டிகை தினங்களே!

நரகாசுரனின் வதமும் இராமன் அயோத்தி திரும்புதலும்

நரகாசுரன் தனது தாயான பூமிதேவி மட்டுமே தனக்கு மரணத்தைத் தர முடியும் என்ற வரத்தை வாங்கிக் கொண்டான். அகங்காரம் தலைக்கு ஏற அட்டகாசம் செய்து அனைவரையும் அவன் கொடுமைப்படுத்த தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் இறைவனை வேண்ட சத்யபாமை பூமிதேவியின் அம்சமாகத் தோன்றி கண்ணபிரானுடன் சென்று அவனுடன் போரிடுகிறாள். நரகன் எய்த அம்பு கண்ணபிரானை மார்பில் தாக்க, சத்யபாமை கண்ணனைக் காப்பாற்றித் தானே நரகாசுரனை வதம் செய்ய உதவுகிறாள். நரகாசுரன் தனது பிழையை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு தான் இறந்த இந்த நாளை புவியில் உள்ளோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய நாளாக அமைய வரம் வேண்ட கண்ணன் அப்படியே அருள்கிறான். அதிலிருந்து தீபங்களை ஏற்றி ஒளிமயமாக இந்த நாளை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

இராமபிரான் இராவணனை வதம் செய்து அயோத்தி மீண்டு அரியணை ஏறிய நாள் தீபாவளி நன்னாளே. ஆகவே நாடு முழுவதும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் பல லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாள் தீபாவளி என்பதால் மக்கள் அவர்களை தீபங்களை ஏற்றி நகரத்தை ஒளிரச் செய்து வரவேற்றதும் தீபாவளி நன்னாளிலேயே!

விக்ரமாதித்தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த நாள் தீபாவளியே.

ஜைனபுத்தம்சீக்கியம் கொண்டாடும் தீபாவளி

ஜைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மஹாவீரர் நிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி தினமே. ஆகவே ஜைனர்கள் இந்த தினத்தை புனித நாளாக அனுஷ்டிப்பதோடு தமது முன்னோர்களையும் இந்த நாளில் நினைவு கூர்கின்றனர்.

முகலாய மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்த சிங் இந்த நாளில் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆகவே சீக்கியர்கள் இதை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இதே நாளில் அவருடன் 52 மன்னர்களும் விடுவிக்கப்பட்டனர். ஆகவே அந்தந்த மன்னர் ஆண்ட பிரதேசங்களிலும் இது வழிவழியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கலிங்கத்துப் போரினால் மனம் மாறி அஹிம்சையை வலியுறுத்தும் புத்தமதத்தை அசோகன் தழுவியது இந்த நாளில் தான். ஆகவே புத்தமதத்தினர் இதைக் கொண்டாடுகின்றனர்.

கந்தபுராணத்தின் படி சக்தி தேவியானவள் 21 நாள் விரதம் அனுஷ்டித்து தனது கேதாரகௌரி விரதத்தை முடித்த நாள் இதுவே.

அன்றே சிவபிரான் தேவியை தனது தேகத்தில் பாதியாக ஏற்று அர்த்தநாரீசுவரர் ஆனார். ஆகவே பெண்கள் அனைவரும் இந்த நாளைப் போற்றித் துதிக்கின்றனர்.

விவேகானந்தரால் உத்வேகம் பெற்று கணிதப் பேராசிரியராக இருந்த ஸ்வாமி ராமதீர்த்தர் சந்யாசம் பெற்றது (1899இல்) தீபாவளித் திருநாளிலேயே. இவர் பிறந்ததும் தீபாவளித் திருநாளில் தான் (22-10-1873). ஜலசமாதி அடைந்ததும் ஒரு தீபாவளி நாளில் தான் (17-10-1906)! இப்படி பல மகான்களுடன் தீபாவளி நாளின் அதிசயிக்கத் தக்க தொடர்பு உண்டு!

ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு சிறப்பு அம்சம்

நாட்டில் உள்ள பல பகுதிகளும் இதைப் பலவிதமாகக் கொண்டாடுவது ஒரு வியப்பான சிறப்பான செய்தியாகும்.

தமிழகத்தில் தலையில் எண்ணெய் வைத்து நீராடி வெடிகளை வெடித்து அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைக் கூறி மகிழ்வது தமிழர் மரபு. அன்று இல்லத்தில் கங்கை வருவதாக ஐதீகம். ஆகவே ‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?’ என்று ஒருவரை ஒருவர் விசாரித்து மகிழ்வர்.

கர்நாடகத்தில் நரகாசுரனை கண்ணபிரான் வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக நரக சதுர்த்தசி அல்லது சோடி தீபாவளி என்று இது அழைக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

மஹராஷ்டிரத்தில் வசு பரஸ் என்று அழைக்கப்பட்டு மணமான மங்கையர் பசுக்களையும் கன்றுகளையும் சிறப்பாக இந்த தினத்தில் வழிபடுகின்றனர்.

குஜராத்திலோ ‘சோப்டா பூஜன்’ என்ற பெயரில் எல்லா வணிகர்களும் தங்களது வணிகம் வளமுற இந்த நாளில் சிறப்பு வழிபாடு நிகழ்த்துகின்றனர். புதுக்கணக்கு தொடங்க உகந்த நாள் இது. ஸ்டாக் மார்க்கெட் கூட சிறப்பு வணிகத்தை இந்த நாளில் அறிமுகப்படுத்துகிறது.

**            தொடரும்

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 15 (Post No.12,698)

Bhaartruhari meeting his Old Wife

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,698

Date uploaded in London – –  –  10 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 15  

பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 44,45, 46

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலுள்ள நூறு பாடல்களில் இது வரை 43 பாடல்களைக் கண்டோம். மேலும் சில பாடல்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

இதோ பாடல் 44

நீதி சதகம்- பர்த்ருஹரி 44

SLOKA 44

यद्धात्रा निजभालपट्टलिखितं स्तोकं महद्वा धनं

        तत् प्राप्नोति मरुस्थलेऽपि नितरां मेरौ ततो नाधिकम् ।

तद्धीरो भव वित्तवत्सु कृपणां वृत्तिं वृथा मा कृथाः

        कूपे पश्य पयोनिधावपि घटो गृह्णाति तुल्यं जलम् ॥ 44॥

யத்தாத்ரா நிஜபாலபட்டலிகிதம் ஸ்தோகம் மஹத்தா தனம்

தத்ப்ராப்னோதி மருஸ்தலேபி நிதராம் மேரௌ ச நாதோதிகம்

தத்திரோ பவ வித்தவத்சு க்ருபணாம் வித்திம் வெருதா மா க்ருதாஹா

கூபே பஸ்ய பயோநிதாவபி கடோ க்ருஹ்ணாதி துல்யம் ஜலம்- 44

“ஒருவனுடைய நெற்றியில் பிரம்மா எழுதிவைத்த அளவே அவனுக்கு செல்வம் கிடைக்கும். அவன் பாலைவனத்தில் வசித்தாலும்  இது கிடைக்கும். மேரு மலையில் வசித்தாலும் இதைவிடக் கூடுதலாக எதுவும் கிடைக்காது. ஆகையால் பொறுமையுடன் இரு. பணக்காரர்களிடம் சென்று அடிபணிந்து முகத்துதி செய்யாதே. ஒரு குடத்தைக் கடலில் முக்கினாலும், கிணற்றில் முக்கினாலும் குடத்தின் அளவுக்கே தண்ணீர் கிடைக்கும்”.

44. Whatever is the wealth written on one’s forehead, a little or lots, one will attain that even in a desert, and not more even on the golden mountain, Meru. Therefore, be fearless and do not grovel before the rich. Know that a pitcher takes in the same quantity of water from a well as from the ocean.

கிட்டத்திலுள்ள கிணற்றில் முகத்தாலும்

எட்டி கடலில் எடுத்தாலும் — ஒட்டுநீர்

ஒன்றேயா மேருவினும் ஊழின் படியன்றி

இன்றேயாம் பொன் எண்  –44

தலைவிதிப்படியே செல்வம் கிட்டும் என்பதை விளக்க ஒரு கதை, இந்து சமய நூல்களில் உள்ளது:–

வித்யாரண்யர் என்பவர் தென்னாட்டில் துலுக்கர்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த பெரிய மஹான். அவர் இளம் வயதில் செல்வம் வேண்டி தவம் இருந்தார். இவரது தவத்தை மெச்சிய தேவி, அவர் முன் தோன்றி,

அன்பனே! உன் தவத்தை மெச்சுகிறோம் ஆனால் இந்த நற்பிறப்பில் உமக்கு செல்வம் கிடைக்க வழியில்லை. உமது தலைவிதி அப்படி.

ஆயினும் வேறு ஏதாவது ஒரு வரம் கேள்;  அதைத் தருகிறேன் என்றாள்.

வித்யாரண்யர் யோசித்தார். தேவியயையே   மடக்கி விடுவோம் என்று ஒரு கிடுக்கிப் பிடி போட்டார். நான் ஸந்யாஸம் வாங்கினால் அது அடுத்த பிறவிதானே. இப்போதே ஸந்யாஸி ஆகிறேன். அடுத்த பிறவிக்கான செல்வத்தைக் கொடு என்று கேட்டார்.

தேவியும் சிரித்துக் கொண்டே ‘டன்’ கணக்கில் அவர் முன் தங்கப் பாளங்களை வைத்துவிட்டு மறைந்து விட்டாள்

வித்யாரண்யரோ ஸத்யம் தவறாத மஹா யோகி. ஸந்யாஸம் எடுத்த அடுத்த நிமிடமே அவருக்குப் புரிந்தது; எதிலும் பற்று  இருக்கக் கூடாது என்பது.

அடடா! தேவியிடம் ஏமாந்துவிட்டோமே. ஸந்யாசமும் செல்வமும் ‘சூடான ஐஸ்க்ரீம் என்பது போல ஆயிற்றே’ என்று உணர்ந்தார். அந்தக் காலத்தில் துலுக்கர்களின் அட்டஹாசம் பெருகிக்கொண்டே வந்தது; இந்து தர்மம் அழிபட்டு  வந்தது. அவர் கண் முன்னால் இரண்டு ஆட்டு இடையர்கள் தென்பட்டனர். அவர்களிடம் பிரம்மாண்டமான செல்வத்தைக் கொடுத்து படை திரட்டச் சொன்னார். அவர்களும் உரிய பயிற்சி பெற்று மாபெரும் படை திரட்டி விஜய நகரப் பேரரசை நிறுவி தென்னாட்டில் புகுந்த துலுக்கப் படைகளை விரட்டி அடித்தார் கள்.

விதிப்படி செல்வம் கிட்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. பர்த்ருஹரி சொல்லுவது போல, பாலைவனத்தில் இருந்தாலும் செல்வம் கிட்டும் என்பதற்கிணங்க ஹரிஹரன், புக்கன் என்ற இருவருக்குச் செல்வம் போய் சேர்ந்து விஜய நகரப் பேரரசு உதயமானது.

விதியே வலியது என்னும் வள்ளுவன் கருத்து

திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் மிகத் தீவிரமாக விதியின் வலிமையை விளக்குகிறார்.

கர்ம வினை என்பதுதான் இந்துமத்தின் சிறப்புக் கொள்கை. இந்து மதத்தைத் தொடர்ந்து பாரதத்தில் எழுந்த பிற மதங்களான சமணம், பவுத்தம்,

சீக்கியம் ஆகியனவும் கர்மவினைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன.

இதோ விதியை வலியுறுத்தும் முக்கியக் குறள்கள்

வள்ளுவனும் விதியின் காரணமாகவே ஒருவனுக்கு செல்வம் கிடைக்கிறது என்னும் பர்த்ருஹரி கருத்தை ஆதரிக்கிறான்:

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி- 371

பொருள்

ஒருவனுக்கு பணம் வரக்கூடிய தலைவிதி இருக்குமானால் அவனுக்கு முயற்சி தோன்றும்;அவன் தலைவிதி பணம் வரக்கூடாது என்றால் அவனை சோம்பல் ஆட்கொள்ளும்

பிரம்மாதான் நெற்றியில் எழுதுகிறான் என்பதை வள்ளுவனும் ஒப்புக்கொள்கிறான்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது- 377

கோடி கோடியாகப் பொருள் சேர்த்து இருந்தாலும் நம் விதியை வகுக்கும் இறைவன் எழுதியபடியே நடக்கும்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான் முந்துறும்- 380

தலை விதியை விட, வேறு வலி மையானது ஏதேனும் இருக்கிறதா?

அவ்வையார்

ஒரு குடத்தை எவ்வளவு தண்ணீரில் முக்கினாலும், குடத்தின் கொள் அளவுக்கே தண்ணீர் மிஞ்சும் உள்ளே தங்கும் என்பதை பர்த்ருஹரியிடமிருந்து அவ்வையாரும் எடுத்தாண்டுள்ளார்.

இதோ அந்தப் பாடல்

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால்நாழி – தோழி

நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்

விதியின் பயனே பயன்.

18.Though you dip the measure deep in the deep sea water, it will not contain four measures. O Maid ! Though riches and husband are choice, the happiness of the couple hangs on fate or destiny.

மூதுரைப் பாடல் இது. இதை எழுதிய அவ்வையார் சங்க கால அவ்வையார் அல்ல. பர்த்ருஹரிக்குப் பல நூறு நூற்றாண்டுகள் பிறப்பட்டவர். பர்த்ருஹரி சொன்ன பல கருத்துக்கள் அவருக்குப் பின்னர் தோன்றிய பதினென் கீழக்கணக்கு நூல்களிலும்  உள.

இன்னொரு சிறப்பு- பிரம்மாதான் ஒருவனுடைய தலையில் அல்லது நெற்றியில் எல்லாவற்றையும் எழுதிவைக்கிறான் என்பதாகும்.

எழுத்துமுறையைக் கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. கல்வி, எழுத்து, படைப்பு, விதி ஆகியவற்றுக்குப் பிரம்மாவும், அவருடைய மனைவி ஸரஸ்வதியுமே அதிதேவதைகள் என்பது இமயம் முதல் குமரி வரையுள்ள நம்பிக்கை.

XXX

SLOKA 45

अकरुणत्वम् अकारणविग्रहः

परधने परयोषिति च स्पृहा ।

सुजनबन्धुजनेष्वसहिष्णुता

प्रकृतिसिद्धम् इदं हि दुरात्मनाम् ॥ 1.45 ॥

Ruthlessness, unfounded hostility, desire for another’s wealth and wife, envy towards good people and relatives – these are naturally found in the wicked–45

கெட்டவனுக்கு இயல்பாகவே கொடுஞ்செயல்கள் வரும்.

காரணம் இல்லாமலேயே சண்டைக்கு வருவான்.

மற்றவர் செல்வத்துக்கும் மனைவியர்க்கும் ஆசைப்படுவான்.

நல்லோரைக் கண்டால் சீறி விழுவான்.

தனது குடும்பத்தினரையே நிந்திப்பான்.

ராவணன் இந்த எல்லா கெட்ட குணங்களையும் உடையவன்.

குபேரனின் புஷ்பக விமானத்தைப் பறித்தான்;

சிவ பெருமானின் கயிலை மலையை அசைத்தான்;

ராமனின் மனைவியைக் கவர்ந்தான்.

தேவர்களைத் துன்புறுத்தினான்.

இதை பர்த்ருஹரி அழகாகஒரே ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.

அகருணத்வமகாரணவிக்ரஹக பரதனே பரயோஷிதி ச ஸ்ப்ருஹா

ஸுஜன பந்துஜனேஸ்ஹ்வஸஹிஷ்ணுதா ப்ரக்ருதி ஸித்தமிதம்  ஹி துராத்மனாம்-45

காரணமில்லாக் கலகம் தயையின்மை

சீரணவு  நல்லோர் பாற் பேர் பகைமை – ஏணவும்

சுற்றம் வெறுத்தல் துயர் சேர் பிறனுடைமை

பற்றிலிவை தீயோர் தம் பண்பு — 45

XXXX

எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.

திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079

பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.

ஈசாப்   கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில்  பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.

பிறன் மனை நோக்காத பேராண்மை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146

பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–

பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.

Xxx

picture of a snake charmer

பாம்பு நீர் குடித்தால் விஷமாகும்பசு நீர் குடித்தால் பால் ஆகும்!

SLOKA 46

दुर्जनः परिहर्तव्यो

विद्यया‌உलकृतो‌உपि सन् ।

मणिना भूषितः सर्पः

किम् असौ न भयङ्करः ॥ 1.46 ॥

துர்ஜனஹ பரிஹர்தவ்யோ வித்யயாஅலக்ருதோ அபிஸன்

மணினா பூஷிதஹ ஸர்பஹகிம் அஸௌ ந பயங்கரஹ- 1-46

கற்றவர்களாயினும் தீய குணம் இருந்தால் அவர்களைத் தவிர்க்க வேண்டும். பாம்பின் தலையில் மாணிக்கம் இருந்தாலும் அது ஆபத்தானதல்லவா? –பாடல் 46

46An evil person is to be avoided, even if adorned with learning. Is the cobra, despite being decorated with a gem, not fearsome?

அரவின்  தலையில் அருமணி  உண்டேனும்

விரவும் பயத்தால் விலக்க — விரைகுவ போல்

தீயவர்பாற் கல்வி சிறந்தாலும் மற்றவரை

நீயகன்று தூரத்தில் நில்

XXXXX

தீயவர்பால் கல்வி சிறந்தாலு மற்றவரைத்

தூயவரென்றெண்ணியே துன்னற்க– சேயிழையே!

தண்ணொளிய மாணிக்க சர்ப்பந் தரித்தாலும்

நண்ணுவரோ மற்றதனை நாடு– நீதிவெண்பா

பொருள்

பாம்பிடம் ஒளிமிக்க மாணிக்கக் கல் இர்ந்தாலும் யாராவது அதை நெருங்குவார்களா? அதே போல கெட்டவர்களிடம் கல்வி அறிவு இருந்தாலும் நாடக் கூடாது.

 பசுவுக்கு நீர்–பால்பாம்புக்கு நீர் – விஷம்

பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு ஹெண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளிஆய்ம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்

களியாம் கடையாயார் மாட்டு– –அறநெறிச்சாரம்

பொருள்

பாம்புகள் குடிக்கும் நீர் எல்லாம் விஷமாக மாறுகிறது;

கயவர்கள் கற்கும் ஞன நூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்;

பசு மாடுகள் குடிக்கும் தண்ணீர் இனிய பாலாக மாறும்;

உயர்ந்தோர் கற்கும் ஞான நூல்கள் அவர்கள் மாட்டு அறிவினை வளர்க்கும்.

தீயோர்கள் கற்றாலும் கற்றதையெல்லாம் தவறாக வியாக்கியானம் செய்வர்.

— subham —

tags– நல்லோர்,தீயோர், பாம்பு, பசு, விஷம், பால், Slokas 44,45,46, Nitisataka

Amazing Brahmin Rule in Sri Lanka- Part 1 (Post No.12,697


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,697

Date uploaded in London – –  –  10 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

It is amazing to read that Brahmins ruled Sri Lanka for 50 years in the very early stage of its history. They ruled Sri Lanka 2400 years ago, before Devanampiya Tissa introduced Buddhism in the country. C S Navaratnam in his book A Short History of Hindusim in Ceylon (1964) has beautifully summarised it.

My reading of seven other 100 year old books available in London British Library and SOAS (University of London ) library shows that Brahmins lived there from Northern Jaffna to Southern Galle; and they were not just temple priests but they held high positions in government. They were living in Lanka even during Tamil Elara rule ; Sri Lankan Cleopatra , notorious Anula , married a palace Brahmin as well. She murdered her husband and married a lot of men like Elizabeth Taylor and Henry VIII.

Many people now have a wrong notion that only Jaffna area bought Brahmin priests from India and they were the only Brahmins. But Buddhists themselves can’t avoid mentioning Brahmins in all their books from earlier period. Devanampiya Tissa and other early kings gave Brahmins first place like Asoka who in all his inscriptions mentioned Brahmins first. Asokan inscriptions are worded as ‘Brahmana Sramana’ giving priority to Brahmins. Buddha himself praised Brahmins in a whole chapter in Dhammapada and in two other slokas say that even murders by Brahmins and throwing out kings are justified.

Sri Lankan Brahmins were authors as well. They wrote astrology books and created Panchangas (almanacs) for Hindus. Even Sri Lankan kings followed all that is said in Hindu scriptures and when they died, they were cremated with Vedic mantras.

In another book, the Arya chakravartis are shown having Brahminical origin. A lot of research is required to collect all Brahmin references in Mahavamsa, Choola vamsa, Rajavali, Inscriptions, Pali and Sinhalese books.

It is also interesting to see that Sri Lankan authors were so influenced by Kalidasa, who lived in the first century BCE. Following Kalidasa’s Raghu VAMSA, they wrote Maha VAMSA and Chula VAMSA. Following Megha Sandesa, they wrote several Sandesa (Messenger Poems) kavyas. A comparative study would bring out more truths.

Please see the attachments from C S Navaratnam’s book below,

to be continued………………………………………..

tags– Brahmin rule, in Sri Lanka, Ceylon, Brahmin Kings of Sri Lanka, C S Navaratnam

இலங்கையில் பிராமணர் ஆட்சி –Part 2 (Post No.12,696)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,696

Date uploaded in London – –  –  10 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Second part

மட்டக் களப்பில்  ராம நாதன் என்ற பிராமணனுக்கு முதலாவது ராஜ சிம்மன் அளித்த சாசனம் நமக்குக்  கிடைக்கிறது. பல நாட்டுப் பகைவர்களை முறியடித்து மன்னர்களைவென்ற  ராஜ சிம்ம மஹாராஜா

ராமநாத பிராமணனுக்கு , பின் வரும் நிலங்களை தானம் செய்கிறான் .

……….. …..இந்த சாசனத்துக்கு ஊறு விளைவிப்பவன் , காசி ராமேஸ்வரம், கதிர்காமம், மாணிக்க கங்கை ஆகிய இடங்களில் பாவம்  செய்வதால்  கிடைக்கும் பலன்களுக்குச் சமமான துன்பத்தை அனுபவிக்கக்கடவது என்று சாசனம் முடிகிறது.

xxxx

கண்டி மன்னன் இரண்டாவது ராஜசிம்மன்

இலங்கை மன்னர்களின் ராஜ சபையில் பிராமண வேத பண்டிதர்கள் இருந்து வேத மந்திரங்களை ஓதி வாழ்த்தியதை சேவுள் சந்தேசய (அழகையா வண்ண Thotagamuwe Sri Rahula Thera (1408 – 1491) என்ற  காவியமே பாராட்டுகிறது. ராஜ சிம்மன்  அரசவையில் சேர, சோழ , பாண்டியர்கள் மற்றும் தோல்வி அடைந்த மன்னர்கள் வணங்கி நிற்க, வேத மந்திரங்களை பிராமணர்கள் உச்சரிக்க , அரசன் தெய்வம் போல் வீற்றிருந்தான் என்கிறது ஒரு செய்யுள் .

xxxx

இது ஒரு புறமிருக்க 1640ம்  ஆண்டில், இரண்டாவது ராஜ சிம்மன் படேவியாவுக்கு பிராமண அமைச்சரை தூது அனுப்பிய செய்தியும் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிராமண குடும்பங்கள் ஹாலந்து நாட்டுக்குக் குடியேறி கல்வி கற்று, பெரிய பதவி வகித்ததும் தெரிகிறது. 400 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படிப் பிராமணர்கள் வெளிநாட்டுகுச்  சென்று  கல்வி கற்றதை வேறு எங்கும் காணமுடியவில்லை..

படேவியா – இந்தோனேஷியாவின் ஜாகர்த்தா

Batavia was the capital of the Dutch East Indies. The area corresponds to present-day Jakarta, Indonesia. Batavia can refer to the city proper or its suburbs and hinterland, the Ommelanden, which included the much larger area of the Residency of Batavia in the present-day Indonesian provinces of Jakarta, Banten and West Java.

அசோக மாமன்னன்,  எப்படி பிராமணர்களை கல்வெட்டுகளில் முதலில் குறிப்பிட்டு மதிப்பு கொடுத்தானோ அவ் வாறே  இலங்கையின் சமகால மன்னனான தேவநாம்பி(ரி)ய திஸ்ஸவும் பிராமண ர்களுக்கு மதிப்பு கொடுத்தான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்புகோளத்தில் (சம்பந்துறை ),  புனித அரசமரம் / போ தி மரம்  வந்து இறங்கியபோது அங்கு இரண்டாவது ஸ்தானம்,  திவக்க (திவாகரன்) என்ற பிராமணருக்கு அளிக்கப்பட்டது . அசோகன் மகள் சங்கமித்திரா, தேரர் மஹிந்தர், பிராமணர் திவாக ஆகிய மூவர் தான் அரசமர வரவேற்பு விழாவை முன்னின்று நடத்தினர்.

பதித்யாவின் (Batitya)  ஆட்சிக்காலத்தில் வினய நூல் பற்றி பிக்குகளிடையே மோதல் ஏற்பட்டது. அதற்கான வியாக்கியானத்தை இரண்டு கோஷ்டிகள் வெவ்வேறுவிதமாக விளக்கியது. உடனே மன்னன் , சகல கலா வல்லவனான ஆன ஒரு பிராமண மேதாவியை நடுவராக நியமித்தான். அவர் சொன்னதை எல்லோரும் ஏற்றார்கள் . அந்த அளவுக்கு மன்னரும், பெளத்தர்களும் பிராமணர்களை மதித்தார்கள்.

xxx

சோதிட நூல் சரஜோதி மாலை

இலங்கையில் மிகவும் பிரபலமான ஜோதிட நூல் சரஜோதி மாலை. இதை 700 ஆண்டுகளுக்கு முன்னர் , 1310ல் போஜ ராஜன் என்ற பிராமணர் இயற்றினார்.இன்றும் தமிழ் ஜோதிடர்கள் இதை பயன்படுத்துகின்றனர்.அவர் மூன்றாம் பராக்கிரம பாஹு காலத்தில் வாழ்ந்தவர்.

பின்னர் யாழ்ப்பாண மன்னர் ஒருவர் காலத்தில் செகராஜசேகரமாலை என்ற இன்னும் ஒரு சோதிட நூல் , சோமன் என்ற பிராமணரால் இயற்றப்பட்டது  வடக்கு வன்னி பிரதேச வரலாற்றைக் கூறும் வையா பாடல் என்பதை வையாபுரி அய்யர் இயற்றினார்.

ஆறாம் பராக்கிரம பாஹு காலத்தில் வாழ்ந்தவர்..ஸ்ரீ ராமச்சந்திர கவி பாரதி இந்தியத் தமிழரான அவர் , இலங்கையில் வாழ்ந்துவந்தார்; அவர் புத்தர் மீது சம்ஸ்க்ருத மொழியில் 100 பாடல்களை பக்தி சதகம் என்ற பெயரில் பாடினார்..

அராலி ராமலிங்க ஐயர், முதல் பஞ்சாங்கத்தை 1667-ல் இலங்கை இந்துக்களுக்காக கணித்தார்;. 400 ஆண்டுகளாக அதைத் தமிழர்கள் பின்பற்றிவருகிறார்கள் .

கடந்த சில நூற்றாண்டுகளில் வாழ்ந்த புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் பிராமணர்கள் :–

வட்டுக்கோட்டை கணபதி ஐயர் 1709-1784

இணுவில் நடராஜ  ஐயர் 1854-1905

வண்ணார் பண்ணை சுவாமிகள் பெரியதம்பி  ஐயர் ; அவர் 120 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து சேவை ஆற்றினார்..

xxx

அரசவையில் பிராமணர்கள்  ; இலங்கை கிளியோபாட்ரா

இலங்கை வரலாற்றில் மிகவும் கெட்ட பெயர் எடுத்த அரசி Anulka அனுலா. அவள் CLEOPATRA  கிளியோபாட்ரா போன்ற்வள் .சோர நாகனின் மனைவி; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தாள் BCE 12-16 . அவள் கணவனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு , அடுத்தடுத்துப் பலரை மணந்தாள் . நெளியா என்ற பிராமண புரோகிதரையும் மணந்தாள் .

xxxx

ஆறாம் பராக்கிரம பாஹு ஆண்ட காலத்தில் பிரமணர்களுக்குக் கிடைத்த சலுகைகள் குறித்து கோகில சந்தேச (குயில்விடு தூது )விரிவாகவே பேசுகிறது.

சங்க காலத்துக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாசன் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்தான். அவன் ரகுவம்சம் இயற்றியதை அறிந்த இலங்கை அறிஞர்கள் மஹாவம்சம்சூள வம்சம் என்ற பெயர்களில் வம்ச வரலாறுகளை எழுதினர்க;ள். காளிதாசன் எழுதிய மேக சந்தேசம் உலகப் புகழ்பெற்ற தூத காவியம் ஆகும். இதைப் பார்த்து இலங்கை எழுத்தாளர்கள் ஏராளமான சந்தேச (தூத்து ) காவியங்களை எழுதினார்கள் .

xxx

பிராமணர்களுக்கு கிடைத்த நில தானம், ஸ்வர்ண / gold தானம் முதலியன பற்றி எழுதினால் அது நீண்ட பட்டியல் ஆகிவிடும் . தமிழ்நாட்டில் மங்கலம் ஏ நிற பெயரில் முடியும் கிராமங்கள் அனைத்தும் பிராமணர்களுக்கு மன்னர்கள் கொடுத்த ஊர்கள் ஆகும். இதை பிரம்மதேயம் என்பார்கள்; இறைவனுக்காக கொடுத்தால் அதை தேவதானம் என்பார்கள் .

இலங்கையில் பிராமணர்களுக்கு கிடைத்த தானங்கள் பற்றித் தனியாக எழுதுகிறேன்.

வேத சடங்குகள்

இலங்கை மன்னர்கள் பெளத்தர்களாக இருந்தாலும் பலரும் வேத  கால பட்டாபிஷேக சடங்குகளைப் பின்பற்றினார்கள் . இன்னும் பல இடங்களில் பெளாத்தர்களே வேத மாடலில் Vedic Model  புதிய சடங்குகளை உண்டாக்கி மன்னர்களைத் திருப்திப்படுத்தினர்

ஆறாவது பராக்கிரம பாஹு அளித்த நில தானம் , குடுமுரி ராசா கல்வெட்டில் விரிவாக உள்ளது. பெயர்களை பார்க்கையில் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதும் தெரிகிறது . இந்த மன்னனின் தகனச் சடங்குகள் வேத மந்திரங்கள் ஒலிக்க நடந்தது.

xxxxx

கரிகாலன் காலத்து பிராமணர்கள்

2000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழநாட்டை  ஆண்ட கரிகாலன் பருந்து (எருவை) வடிவ யாக குண்டம் அமைத்து பெரும் யாகம் செய்தது சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது. அவன் ரிக் வேதத்தில் சொன்னபடி ஏழு அடிகள் நடந்து சென்று விருந்தினருக்கு குட் பை Good Bye சொன்ன செய்தியையும் பாவலர்கள் பாடிச்சென்றனர். அவன்தான் இலங்கை ஏழாரன் என்றும் இல்லை அவன் சமகாலத்தில் ஆண்டவன் ஏலாரன் (7 மன்னர்களை வென்று ஏழு ஆரம் /மாலை அணிந்தவன்) என்றும் பேசுவர் பலர். பெளத்த மத நூல்களே அவனை மிகவும் புகழ்ந்து பேசும். அவன் காலத்தில் த்வார மண்டல என்னும் கிராமத்தில் வாழ்ந்த குண்டலி என்ற பிராமணன் மூலமாக துத்தகாமினி பல பொருட்களை பெற்றான் என்ற செய்தியும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.

xxxx

பிராமண புரட்சியும் தமிழர் ஆட்சியும்

2000 ஆண்டுகளுக்கு முன்னர்  வல கம்பாவின் (29-17 BCE ) முதல் ஆட்சி ஆண்டில் மஹாகாமத்தில் திஸ்ஸ என்ற பிராமணன் மன்னருக்கு எதிராக, சாணக்கியன் போல புரட்சிக்கொடி உயர்த்தினான். அப்போது பெரும் குழப்பம் ஏற்பட்டது தமிழ் நாட்டிலிருந்த 7 தமிழ்த் தலைவர்கள் பெரும் படைகளுடன் வந்து ஆட்சியைக் கைப்பற்றினர் .

மஹாசேனன் என்ற மன்னன் இந்துக்கோவில்களை இடித்து பெளத்த விஹாரங்களை  எழுப்பிய செய்தி மகாவம்ச நூலில் உள்ளது. அவன் அப்படி புத்த விஹாரை கட்டிய ஊர்களில் ஒன்று காலந்த  என்ற பிராமணன்  ஊராகும். அவன் பெயரைக் குறிப்பிட்டு அந்த ஊரிலும் மஹாசேனன் புத்த விஹாரம் எழுப்பினான் என்று சொல்லுவதால் அந்தப் பிராமணன் எவ்வளவு புகழ்பெற்றவன் என்பதும் புலனாகிறது.

இந்தியாவில் புத்தர் காலத்தில் மிகப்புகழ்பெற்ற பிராமணர்கள் பெளத்த மதத்தை தழுவினார்கள்; ஏனெனில் புத்தருக்கு பிராமணர்கள்  மீது அபார மதிப்பு; பிராமணர்கள்  படுகொலை செய்தாலும், அவர்கள் ஆட்ச்சியைக் கவிழ்த்தாலும் அவர்கள் செய்தது சரியே என்றும், அவர்களைத் தண்டிக்கக்கூடாது என்றும்  தம்மபதம் என்னும் வேதப்  புஸ்தகத்தில் இரண்டு ஸ்லோகங்களில் பாடியுள்ளார்  (முழு விவரம் எனது பழைய கட்டுரையில் உள்ளது)

தம்மபதம் என்னும் புஸ்தகம் பெளத்தர்கள் வேத புஸ்தகம்.  . அதில் கடைசி அத்தியாயம் முழுவதும் பிராமணர்களின் புகழ்பாடுகிறது. அதில்   பிராமணர்கள் யார் என்று  மனு ஸ்ம்ருதி போலவே வரையறையும் செய்துள்ளார். இலங்கையில் புத்தரைப் பின்பற்றிய  காம தேவ என்ற பிராமணன் சபரகமுவவில் சமன் தேவாலயத்தை நிறுவினான்

இலங்கையில் உள்ள பாலி  மத நூல்களை படிக்கையில் ஒரு விஷயம் தெளிவாகிறது. ஏதோ யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக்கோவில்களுக்கு வந்த தமிழ் நாட்டுப் பிராமணர்தான் இலங்கையில் வசித்தனர் என்று கருதி விடக்கூடாது  விஜயன் காலத்துக்கு முன்னரே, அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் வடகோடி யாழ்ப்பாணம் முதல் தென் கோடி கதிர் காமம், காலி Galle நகர்வரை பிராமணர்கள் இருந்ததையும் அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே 50 ஆண்டுகள் இலங்கையை ஆண்டதையும் பெளத்த மத நூல்கள்தான் நமக்குச் செப்புகின்றன. அமைசர்களாகவும் புரோகிதர்களாகவும், அரசர்களாகவும், தூதர்களாகவும், நூலாசிரியர்களாகவும் பிராமணர்கள் இருந்தனர் .

அடுத்து இந்து சாம்ராஜ்யத்தை இலங்கையில் நிறுவிய ஆரிய சக்கரவர்த்திகள் பிராமணர்களா ? என்பதை ஆராய்வோம்

தொடரும் ………..

இலங்கை, பிராமணர் ஆட்சி, பகுதி 2

London swaminathan October 2023 Articles Index (Post No.12,695)

london swaminathan with london tamil novel writer Giridharan Rajagopalan

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,695

Date uploaded in London – –  –  10 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx

Index No.131

Find the 22 Names of Brahma in the Square (Post.12,544) 1/10

DURGA SAPTA SATI WORK SHOP FOR FOUR DAYS IN LONDON (Post No.12,543) 1/10

Find out Indra’s 26 Names (Post No.12,559) 6/10

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit -1 (Post No.12,642)27/10

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit  -2 (Post No.12,645)28/10

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit  -3 (Post No.12,651) 29/10

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 4 (Post No.12,654) 30/10

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 5 (Post No.12,660) 31/10

Find Out Yama’s 14 Names in the Square (Post No.12,548) 2/10

Foreigners attracted towards Indian spirituality, from deccan  herald 3/10

Hindu Architecture Q and A (Post No.12, 584) 13/10

Hindu Gods ,Flags, Lamps and Instruments in Colombo Museum (Post No.12599) 17/10

More Treasures from Colombo Museum (Post No.12,604)- 3 b 18/10

Find out Ten Navaratri Devis (Goddesses)—Post No.12,609 19/10

pictures Prince of Wales Visit to India and other Eastern Countries (Post No.12,568)- Part 1 9/10

pictures Prince of Wales Visit to Eastern Countries: Part two (Post No.12,571) 10/10

Rare Pictures from 1931 German Book on Hinduism- Part 1 (Post No.12577) 11/10

Rare Pictures from Sri Lanka- Part 2 (Post 12,595)

Rare Pictures of Sri Lanka from 100 Year Old Book-1 (Post No.12,591)15/10

Query on Hinduism: Answer to 5 Questions (Post No.12, 573) 10/10

Sanskrit was never a Spoken Language? Q & A 11/10

Sanskrit was never a Spoken Language? Q & A (Post No.12,580) 12/10

Second Part of ‘Query on Hinduism’: Answer to 5 Questions (Post No.12,576) 11/10

VISHNU= MAAL Q& A மால், திருமால்; Vyaala= Yaali=Leo= Lion (Post No.12,622)

இந்து மதத்தை அழிக்க வந்த கொசு பறந்தது ! (Post No.12,542) 1/10

நுவரெலியா சிவன் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற…… Part 25 (Post No.12,579) 12/10

அழிந்து போன முருகன் கோவில்கள் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 36 (Post.12,625)23/10

பொலன்னறுவையில் 16 கோவில்கள் :

இலங்கைத் தீவின் 108….. Part 32 (Post.12,606) 19/10

மருதடி பிள்ளையார்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 16 (Post.12,550)3/10

முறிகண்டி பிள்ளையார்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 17 (Post No.12,552) 4/10

முழங்காவில், மாமாங்க ஈஸ்வர பிள்ளையார் ஆலயங்கள்-Part 18 (Post No.12,555) 5/10

வட்டுக்கோட்டை கண்ணகி கோவில்- இலங்கைத் தீவின் 108 ஆலயங்கள்  – Part 21 (Post No.12,565) 8/10

மட்டக்களப்பில் அதிசய சிவன் கோவில்- இலங்கை ஆலயங்கள்-23 (Post No.12,570) 1/10

போர தீவு சித்திர வேலாயுத சுவாமி கோவில் – Part 35 (Post No.12,620)22/10

அழிந்து போன முருகன் கோவில்கள் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 36 (Post.12,625)

வரதராஜ பெருமாள் கோவில்கள்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ……. Part 27 (Post No.12,586)14/10

திமிலைத் தீவு விஷ்ணு, வல்லிபுர ஆழ்வார் கோவில்கள் – Part 28 (Post No.12,589)15/10

மீனாட்சி அம்மன் கோவில்கள்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ………39 (Post 12, 638)26/10

முத்துமாரி அம்மன் இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற ஆலயங்கள்- Part 41 (Post.12,644)28/10

பிள்ளையார் கோவில்கள்:இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து……- 14 (Post No.12,541) 1/10

வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் –இலங்கை  ஆலயங்கள்  –  20 (Post.12,561)7/10

பனங்காமம் சிவன் கோவில்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற…… PART 22 (Post No.12,567)9/10

மறைந்து போன சிவன் கோவில்கள்: இலங்கைத் தீவின் ……..26 (Post No.12,583)13/10

அற்புதம் நடத்திய சிவகாமி அம்மன்: இலங்கை108 ……Part 38 (Post.12,633) 25/10

இசை பற்றிய விளக்கம் Q & A (Post No.12,572)10/10

இலங்கையில் செட்டியார்கள் கட்டிய கோவில்கள்  (Post No.12,648) 29/10

கருணாகர பிள்ளையார் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 15 (Post.12,546)2/10

சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ஆலயங்கள்—19 (Post No.12,558) 6/10

கொழும்பு மியூசியத்தில் இந்துசமயம் (Post No.12,562) 7/10

தெஹிவளை விஷ்ணு: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற- 29 (Post.12,593) 16/10

திருக்கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 34 (Post No.12617) 21/10

கிளிநொச்சி உருத்திரபுரி ஈஸ்வரன்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற……. Part 24 (Post.12,575)11/10

சீரணி நாகபூஷணி கோவில்: இலங்கைத் தீவின் 108 இந்து ஆலயங்கள்- Part 31 (Post.12,602) 18/10

சித்திர வேலாயுத சுவாமி கோவில்: இலங்கைத் தீவின் 108 …..Part 33 (Post.12,611) 20/10

சிவ சுப்பிரமணியசாமி கோவில்: இலங்கைத் தீவின்108…..-Part 37 (Post.12,629) 24/10

காளி கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 40 (Post No.12,641)27/10

கோப்பாய் முத்துமாரி –இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 42 ( Post No.12,649) 29/10

திரவுபதி அம்மன் கோவில்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ……..Part 43 (Post No.12,653) 30/10

கண்ணகி கோவில்கள் இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து……… Part 44 (Post.12,657)31/10

சென்னை ஜன்மாஷ்டமிக் காட்சிகள் (Post No.12,563) 7/10

துர்க்கைக்கு ஏன் 10 கரங்கள் ? (Post No.12,607) 19/10

தமிழ் மொழியை வளர்ப்போம் 3102023 –Part 8 (Post No.12,659)

QUIZ பிரம்மா பத்து QUIZ  (Post No.12,547) 2/10

QUIZ சரஸ்வதி பத்து QUIZ (Post No.12.635) 25/10

QUIZ நவராத்திரி பத்து QUIZ (Post No.12,613)20/10

Find out the 17 Names of Kubera in the Square (Post No.12,556) 5/10

Hinduism Crossword Puzzle15-10-2023 (Post No.12,590) 15/10

New புது Tamil தமிழ்  Lessons பாடங்கள்  – பகுதி 1-Part 1 (Post No.12,594)16/10

New Tamil Lesson 2 (Case Suffixes TO and OF)—Post No.12,598 17/10

New Tamil Lessons- 3; Fifth case suffix ஐந்தாம் வேற்றுமை Ablative (Post No.12,603)18/10

New Tamil Lessons-4 (Seventh Case) Locative (Post.12,608) 19/10

New Tamil Lesson 5- இரண்டாம் வேற்றுமை/ Accusative Case (Post No.12,614) 2010

New Tamil Lesson 6:  Third Case- Instrumental, Social ,

மூன்றாம் வேற்றுமை  (Post No.12,618) 21/10

New Tamil Lesson 7 புதிய தமிழ் பாடம் ஏழு (Post No.12,623) 22/10

New Tamil Lesson 8; புதிய தமிழ் பாடம் எட்டு (Post No.12,627) 23/10

New Tamil Lesson 9- Use of Verb Say= SOL (Post No.12,631) 24/10

New Tamil Lesson 10 Verb Pesu= பேசு Speak, Talk (Post No.12,639) 26/10

New Tamil Lesson 11 Verb Kel கேள் Ask or Listen (Post No.12,650) 29/10

November 2023 Calendar- Ma Ananda Mayee Quotes (Post No.12,655) 30/10

–subham—-

Tags. Index 131, October 2023, tamilandvedas.com, swaminathan

London Swaminathan September 2023 Article Index (Post No.12,694)

london swaminathan with tamil writer Divakar

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,694

Date uploaded in London – –  –  10 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Index No.130

செப்டம்பர் 2023 முதல் தேதி முதல் 15 தேதிவரை பதிவுகள் இராது.

OCTOBER 2023 CALENDAR WITH QUOTES FROM BHARTRUHARI’S NITI SATAKA (Post No.12,531) 27/9

Drawings from Burmese Book! (Post No.12,516) 22/9

Gold Treasures discovered in Sri Lanka with Sanskrit Inscription (Post No.12,505) 20/9

Gold Treasures discovered in Sri Lanka with Sanskrit Inscription (Post No.12,505) 19/9

தமிழ்ப் பழமொழிகளில் கன்பூசியஸ் தத்துவம்  (Post No.12,510)

QUIZ  வெந்நீர் ஊற்றுகள் பத்து QUIZ  (Post No.12,539) 30/10

Quiz பாரதி பத்து Quiz (Post No.12,493) 17/10

Quiz பெயர் மாறிய நாடுகள் பத்து quiz (Post No.12,521)

Quiz நட்சத்திரப் பத்து quiz (Post No.12,524)25/9

Used in book பாரதி பாட்டில் சநாதனம் Sanatan! நாத்திகம்

 பேசுவோர் பேய்கள் Ghosts! (Post.12,491) 16/10

பாரதீய ஜனதாக் கட்சிக்கு எனது நன்கொடை (Post No.12,508) 21/9

மாங்காடு காமாட்சியை தரிசித்தேன் (Post No.12,520)

அக்டோபர் 2023 காலண்டர்- பர்த்ருஹரி பொன்மொழிகள் (Post No.12,528) 26/10

1,2 இலங்கைத் தீவின்  108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- 1 (Post No.12494)

Post No. 12,494 (17-9)

முன்னேஸ்வரம் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ்

பெற்ற இந்து ஆலயங்கள் – 3 (Post.12,500)19/9

5 இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்

கதிர்காமம் – Part 5 (Post No.12,507) 21/9

  6 திருகோண மலை – பாடல் பெற்ற தலம் 22/9         

7.அனுராதபுரம் தூபியில் தங்கத் தகடுகளில் ஸம்ஸ்க்ருதக்

கல்வெட்டுகள்! (Post No.12,518) 23/9

8 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் -Part 8 8/9

9.திருக்கேதீஸ்வரம் – 26/9

10 நகுலேஸ்வரம்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற

இந்து ஆலயங்கள்  – 10 (Post No.12,530) 27/9

11 கண்டி புத்தர் பல் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற

இந்து ஆலயங்கள்- 11 (Post.12,533) 28/9

12 மாவிட்டபுரம் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து…….- Part 12 Post No. 12,535 (29/9)

13 இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 13 (Post No.12,538)30/9

—subham—

Tags- September 2023, Index, London Swaminathan, articles

30 நிமிடத்தில் மூட்டையைக் கட்டு! மோடிஜியின் அதிரடி நடவடிக்கை! (Post No.12,693)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,693

Date uploaded in London –  –  10 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

30 நிமிடத்தில் மூட்டையைக் கட்டு! மோடிஜியின் அதிரடி நடவடிக்கை! 

ச.நாகராஜன்

74 வருடங்களாக ஒரு பூச்சியின் தொல்லை தாங்க முடியாமல் அவஸ்தை பட்ட இந்தியாவை மோடிஜி காப்பாற்ற நினைத்தார்.

காப்பாற்றி விட்டார்.

முப்பது நிமிடத்தில் மூட்டையைக் கட்டு என்று சொல்லி விட்டார் அதிரடியாக!

என்ன விஷயம்?

யுனைடெட் நேஷன்ஸ் மிலிடரி அப்ஸர்வர் க்ரூப் (UNITED NATIONS MILITARY OBSERVER GROUP) என்று ஒரு குழு.

1948லிருந்து இந்தக் குழு இந்தியாவில் இயங்கி வந்தது.

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் என்ன அணுகுமுறையை மேற்கொள்கிறது என்பதைக் கண்காணிப்பதே இதன் வேலை. பூச்சி கடிப்பது போல இது இந்தியாவைக் கடித்துக் கொண்டே இருந்தது.

இந்தக் குழுவில் இருக்கும் அனைவருக்கும் சம்பளம், இருப்பிடம், அலவன்ஸ் – இவை அனைத்தும் இந்தியாவின் செலவு. இவர்கள் பொழுதுபோக்கு, சாப்பாடு, பயணம், ஆட்டம், பாட்டம் எல்லாம் இந்திய மக்களின் வரிப்பணத்தில்.

ஆனால் இதன் அறிக்கைகளோ தவறாமல் இந்தியாவிற்கு எதிராக இருக்கும்!

காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கான இரு தரப்பு பிரச்சினை இல்லை என்பது இதன் வாதம். இது முத்தரப்பு பிரச்சினையாம்!

அதாவது காஷ்மீர், பாகிஸ்தான், இந்தக் குழு ஆகிய மூன்று தரப்பினருக்குமான பிரச்சினையாம் காஷ்மீர் பிரச்சினை. இதற்கும் இந்தியாவிற்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம்?!

இதை இங்கு அமர்த்திய பெரியவர் யார் தெரியுமா?

ஜவஹர்லால் நேரு.

74 வருடங்களாக இது செய்த வந்த அட்டகாசத்தை மோடி பார்த்தார்; ஒரு வழி செய்தார்.

இன்னும் முப்பதே நிமிடங்களில் மூட்டையைக் கட்டுங்கள்; நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று அதிரடி உத்தரவு போட்டார்.

அவர்களுடைய விசா, தங்குமிடம் அனைத்தையும் ரத்து செய்தார் அவர்.

பத்து நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவையும் போட்டார்.

40 பேர்கள் இந்தக் குழு  முழித்தது.

இந்த பிரிட்டிஷ் குழு ஒரு வழியாக நாட்டை விட்டு வெளியேறியவுடன் மொத்த இந்தியாவும் நிஜமாக பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றது என்று சொல்லலாம்.

இந்தச் செயலில் பெரிய பங்கு வகித்தவர் வெளியுறவு மந்திரி திரு எஸ்.ஜெய்சங்கர்.

இந்தக் குழுவின் ஆதங்கம் என்ன தெரியுமா?

“இந்தியா எங்களுக்குக் கொடுக்கும் தொகை போதாது;  எங்கள் அலவன்ஸை இந்தியா அதிகரிக்க வேண்டும்” என்றது இந்தக் குழு!

வைக்கப்பட்டது ஆப்பு!

மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டிய செய்தி இது.

அனைவருக்கும் சொல்வோம்; மகிழ்வோம்!

***

முக்கிய குறிப்பு : இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்தே இந்தக் குழு வெளியேற்றப்படும் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் செப்டம்பர் 26, 2023 அன்று இந்தக் குழு மூட்டை கட்டப்பட்டு விட்டதாக இணையதள பதிவுகள் கூறுகின்றன. பெரிய அளவில் பேசப்பட வேண்டிய இந்த விஷயத்தை இந்திய பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லையா அல்லது இந்தக் குழு இன்னும் அகற்றப்படவில்லையா? பொறுத்திருந்து இன்னும் செய்தித்தாள்களைக் கவனிப்போம்.

Source : Net

Please read the original given underneath:

*New India under Modi Regime kicking out the UNMOG in another 10 days

74 years = 30 minutes

What’s UN M O G

India was suffering from a bug for the last 74 years,

Whose name is… *United Nations Military Observer Group*.

Now Modi government has abolished it.

Our Foreign Minister S Jaishankar played a very important role in this.

In just 30 minutes, this entire committee was ordered to leave India within the next ten days!

India has shown the way out of India to the UN Military Observer Group, a committee of the United Nations!

This committee was working in India since 1948 and was keeping a close watch on the attitude of India and Pakistan, especially India itself, on the Kashmir issue.

India was bearing all the expenses of working, traveling, living, eating, getting up and down!

This committee had given very strong statements against India.

It tried to declare Kashmir a trilateral issue rather than a bilateral one and also made serious allegations against India such as *”India is obstructing the work of the United Nations Military Observer Group between us, India and Pakistan so that the committee does not function properly.”*

The committee did not stop here… It further said “The amount that India gives us does not cover our expenses.

So India will have to increase our allowances and expenses and India will have to pay for it!”

It so happened that the dog we had kept was eating ours and was barking at us and had even started biting.

On this the Government of India only said to the Committee : “We have suffered a lot because of your drama. Now you leave from here immediately”. “There is no place left for you in India!”

In just 30 minutes, the Modi Govt. cancelled their visa/s and asked them to leave India and go to their country/ies immediately /

within the next 10 days!!!

For the last 74 years, India has been home to more than 40 of these people and

was bearing their expenses.

Now they have been exiled!

And you know who brought them 74 years ago…?

Brother-in-law of Congressmen *”Jawahar Lal Nehru”!*

*99% of the public would not even know that a British team was ruling India till today because of these Congressmen*.

Today Modi ji has done the work of uprooting the last pillar of the British from India.

Vande Mataram.

——subham——-

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 14 (Post No.12,692)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,692

Date uploaded in London – –  –  9 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பர்த்ருஹரி நீதி சதகம் 40, 41, 42, 43

SLOKA 40

परिक्षीणः कश्चित्स्पृहयति यवानां प्रसृतये

स पश्चात्सम्पूर्णः कलयति धरित्रीं तृणसमाम् ।

अतश्चानैकान्त्याद्गुरुलघुतया‌உर्थेषु धनिनाम्

अवस्था वस्तूनि प्रथयति च सङ्कोचयति च ॥ 1.40 ॥

40. An impoverished man desires a handful of grains. When he is affluent, he considers the world as equal to just a blade of grass. Hence, due to the variability of worth or triviality of things, (we can say that) it is one’s position that enhances or reduces (the value of) objects.

ஏழையாய் இருப்போனுக்கு ஒரு சில தானிய மணிகள் கிடைத்தால் மகிழ்ச்சி; ஆனால் அவனுக்கே நிறைய செல்வம் கிடைத்து கோடீஸ்வரன் ஆகிவிட்டாலோ உலகத்தையே ஒரு சிறு புல் என மதிப்பான். ஆக செல்வத்தின் தன்மை நிலையற்றது. ஒருவனுடைய சூழ்நிலையைப் பொறுத்தே அதன் முக்கியத்துவம்  உள்ளது– பர்த்ருஹரி நீதி சதகம் , ஸ்லோகம் 40

பரிக்ஷீணஹ கஸ்சித் ப்ருஹயதி யவானாம் ப்ரஸ்ருதயே

ஸ பஸ்சாத் ஸம்பூர்ணஹ கலயதி தரித்ரீம் த்ருண சமம்

அதஸ்சானே காந்தா குருலகுதயார்தேஷு தனினா

மவஸ்தா வஸ்தூனி ப்ரதயதி ச ஸங்கோசயதி ச- 40

இது செல்வம் வந்துவிட்டால் ஒருவன் தலைகால் புரியாமல் திரிவான் என்பதைக் காட்டும்.

தமிழிலும் பழமொழி உண்டு: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான் – என்று.

பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு ஸர்மன் இதை இன்னும் அழகாக வருணிப்பான். முதலில் சோர்ந்து கிடந்த எலிகள், வயிறு கொழுக்கச் சாப்பிட்டவுடன் எகிரிக் குதிக்க ஆரம்பிக்கும் இதுவே செல்வம் வந்தவர்களின் நிலையும் என்பது விளங்கும்.

xxxx

SLOKA 41

राजन्दुधुक्षसि यदि क्षितिधेनुम् एतां

तेनाद्य वत्सम् इव लोकम् अमुं पुषाण

तस्मिंश्च सम्यगनिशं परिपोष्यमाणे

नानाफलैः फलति कल्पलतेव भूमिः ॥ 1.41 ॥

41. O King, if you wish to milk the cow that is this earth, nourish now the people of the world, like a calf. When the calf is well-cared, the earth yields all fruits, like the desire-granting creeper.

காசினியாங் காராம்பசுப்பால் கறப்பதெனின்

மாசிலா வேந்தனே ஆண்  கன்றை — நேசமுடன்

உண்பிப்பதுபோல் உலகளிக்க கற்பகம்போல்

மண்மா துநக்களிப்பால் வாழ்வு

வரி விதிப்பது எப்படி?

ஓ அரசனே! இந்தப் பூமி என்னும் பசுவிடம் இருந்து பால் கறக்க விரும்பினால், முதலில் கன்றுகள் என்னும் மக்களுக்கு உணவளித்துப் பாதுகாக்க வேண்டும். உனது மக்களை அன்புடனும் பரிவுடனும் போற்றிப் பாதுகாத்தால், பூமியானது கற்பக மரம் போல வேண்டியதை எல்லாம் உனக்கு அளிக்கும்.–41

காளிதாசனும் கூட இதை வேறு விதமாகச் சொல்லுவான். ஆயிரம் கிரனணங்களால் கடல் நீரை சூரியன் உறிஞ்சுவது எதற்காகத் தெரியுமா? அதை மழை போல பூமியில் கொட்டதான் என்பான். ஆக அரசனுடைய வரிவிதிப்பு மக்களுக்காகவே!

வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர்.

அட்டை போல உறிஞ்சு!

மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.

ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)

அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.

அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப் பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.

பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.

வள்ளுவன் சொல்லுவான்:

அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.

வேலொடு நின்றான் இடு என்றது போலும்

கோலொடு நின்றான் இரவு (குறள் 552)

பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை  வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.

காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-

ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்

சதாப்யோ பலிமக்ரஹீத்

சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்

ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு 1-18)

சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும்  உதவுவது போல அரசனும் உதவுவான்.

இந்துமத நுல்களில் நாடும் பூமியும் பசுவுடன் ஒப்பிடப்படுகிறது. பசு பால் தருவது போல பூமியும் வற்றாது வளம் கொழிக்கும்.

Xxxx

SLOKA 42

सत्यानृता च परुषा प्रियवादिनी च

हिंस्रा दयालुरपि चार्थपरा वदान्या ।

नित्यव्यया प्रचुरनित्यधनागमा च

वाराङ्गनेव नृपनीतिरनेकरूपा ॥ 1.42 ॥

42. Now true, now false, sometimes harsh, sometimes pleasing, hurtful and merciful at different times, greedy and generous by turns, always spending and accumulating lots of wealth – the policy of kings, like a courtesan, has many forms.

சில்லிடத்து மன்னீதி சீராருஞ் சத்தியமாய்ச்

சிலிடத்து சத்தியம் சேர்ந்ததாய்ச்- சில்லிடத்தில் 

காதுக்கினியதாய் கடினமாய்ச் சில்லிடத்தில்

ஓது நிஷ் டூரமாய்  ஓரிடத்தில் — தீதில்

கருணையாய் ஓரிடத்தில் காதல் பொருள்மேல்

மருவுவதாய் ஓரிடத்தில் மற்றும் – ஒருபால்

பொருட்செலவு செய்வதாய் ப் பூண்டொ ருபால்  செய்வித்

திருப்பதாய் ஓரிடத்தில் செல்வம் —பெருக்குவதாய்ப்

பற்பல நாலாறா னோர்   பாலாறா  மாறுபோல்

நிற்பதால் என்றுணர்க நீ

xxxxx

அரசனும் விலை மாதும்

ஒரு அரசன் விலை மாதர் போன்றவன் என்று பர்த்ருஹரி சொல்லுவான். இக்கருத்து சங்க இலக்கிய நூலான புற நானூற்றிலும் (365) உள்ளது.

ஸத்யான்ருதா ச பருஷா ப்ரியவாதினீ ச

ஹிம்ஸ்ரா தயாலுஅபி சார்த்தபரா வதான்யா

நித்யவ்யயா ப்ரசுரனித்யதனாகமா ச

வாராங்கனேவ ந்ருபனீதிரனேகரூபா -42

ஒரு அரசனுடைய வாழ்வு ஒரு விபசாரியைப் போல பல உருவங்களை எடுக்கும். அவன் பொய்யும் பேசுவான்; மெய்யும் உரைப்பான். அவன் சுடு சொற்களும் பெய்வான்; இனிய சொல்லும் அருள்வான். கருணையுடன் இருப்பான்;சில நேரங்களில் கொடுங்கோலனாகக் காட்சி தருவான். அவன் கொடயாளியாகவும் இருப்பான்; கருமியாகச் செல்வத்தையும் சேர்ப்பான். சில நேரங்களில் பணத்தை விரயமும் செய்வான்- ஸ்லோகம் 42

இதை அடுத்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறான் என்று பார்த்து ஒப்பிட வேண்டும். ஒருவனுடைய போக்கு எப்படியும் இருக்கலாம். அவனுடைய     அப்போதைய மனநிலையே இதற்குக் காரணம் என்றும் கொள்ளலாம் அல்லது அரசனானவன் இப்படி எல்லாம் இருக்கும் நிர்பந்தம் உண்டு என்றும் கருதலாம். ஆனால் அடுத்த ஸ்லோகத்தில் ஆறு நல்ல குணங்களைப் பட்டியலிட்டு  விடுகிறான். ஆகையால் பர்த்ருஹரியின் கொள்கை நமக்குத் தெளிவாகி விடுகிறது.

xxxx

SLOKA 43

आज्ञा कीर्तिः पालनं ब्राह्मणानां

दानं भोगो मित्रसंरक्षणं च

येषाम् एते षड्गुणा न प्रवृत्ताः

को‌உर्थस्तेषां पार्थिवोपाश्रयेण ॥ 1.43 ॥

ஆக்ஞா கீர்த்திஹி பாலனம் ப்ராஹ்மணானாம்

தானம் போகோ மித்ரஸம்ரக்ஷனாம் ச

யேஷாமேதே ஷட்குணா நப்ரவ்ருத்தாஹா

கோஅர்த்தச்தேஷாம் பார்த்திவோபாஸ்ரயேண- 43

பொருள்

ஒரு அரசனுக்கு கீழ்க் கண்ட ஆறு குணங்கள் இல்லாவிடில் அந்த அரசனின் கீழ் வாழ்வதில் அர்த்தமே இல்லை; அரசனுக்குத் தேவையான ஆறு குணங்கள்– ஆணை இடும் அதிகார தோரணை, புகழ், பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்கல், நண்பர்களைக் காப்பாற்றுதல், தானம், அதே நேரத்தில் இன்பமான வாழ்வு– 43

43. What is the use of seeking sanctuary with kings, to those who do not cultivate these six qualitites : power to command, fame, the nurturance of Brahmanas, charity, gratification and the protection of friends.

அருந்தண்டம் நற்கீர்த்தி அந்தணரைக் காத்தல்

பெருந்தானாம் போகம் பிரியம் –மருவுமொரு

நட்பா தர வாறு நற்குணமில்லா அரசன்

கட் சேவை செய்தென்ன காண் –43

வள்ளுவனும் இவைகளைச் சொல்லுகிறான்.

அரசனுடைய நீதி வழுவினால், பசுக்கள் பால் தராது; பிராமணர்களுக்கு வேதம் மறந்துவிடும் என்பான். இதன் பொருள்

கோ ப்ராஹ்மணேப்ய ரக்ஷதி (பசுவையும் பார்ப்பனர்களையும் போற்றுவதே நல்லாட்சியின் சின்னங்கள்)- குறள் 560

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் -560

ஆக பாரதீய சிந்தனை இமயம் முதல் குமரி வரைஒன்றே!

—-subham—-

tags-வரி விதிப்பது,  விலை மாது, நீதி சதகம் ,Bhartruhari,  Nitisataka , in Tamil,  in Hindi, Part 14, பர்த்ருஹரி ,ஸ்லோகங்கள் 40,41,42, 43

எல்லா ஜாதியினரும் சந்தியாவந்தனம்   செய்யலாம்- PART 2 (Post No.12,691)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,691

Date uploaded in London – –  –  9 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

PART ONE WAS POSTED YESTERDAY

4. பிராமண ராவணன் சந்தியா வந்தனம்

ராவணன் பிறப்பால் 50 % பிராமணன். குணத்தால் 100 % ராக்ஷஸன்; பிராமணனைக் கொன்றதால் ராமனை பிரம்மஹத்தி  பாபம் பீடித்ததால் ராமபிரான் ராமேஸ்வரம் உள்பட 4 இடங்களில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதை எல்லோரும் அறிவார்கள் . ராவணனின் தாயார் ராக்ஷஸி;  தந்தை பிராமணன்; இதனால் ராவணன் சிவ பூஜை, சந்தியாவந்தனம் ஆகியவற்றில் குறை வைக்கவில்லை. அவன் சிவனிடமிருந்து ஆத்ம லிங்கத்தைப் பெற்றும் அதை நினைத்த இடத்துக்குக் கொண்டுபோக இயலவில்லை; காலைக் கடன்களுக்காக வு ம் , சந்தியா வந்தனத்துக்காகவும் அவன் சிவலிங்ககத்தைக் கீழே வைத்தவுடன் அது அங்கேயே நிறுவப்பட்டது . ராவணன் , இவ்வாறு சந்தியா வந்தனம் செய்த பல குறிப்புகள் ராமாயணத்தில் உள்ளன.

ஆத்மலிங்கத்தை அவன் கொண்டுபோகக்கூடாது என்பதற்காக விஷ்ணு பகவானும் தந்திரம் செய்தார். திடீரென்று மேகங்களை உண்டாக்கி மாலைப்பொழுது போல ஆகாயத்தை மாற்றினார். மாலை சந்தியாவந்தன நேரம் வந்துவிட்டதென்று மயங்கிய ராவணன் , அங்கிருந்த இடைச் சிறுவன் ஒருவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்து , டேய் பையா ! கீழே வைத்துவிடாதே ! இதோ சந்தியா வந்தனம் செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப்போன ராவணன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இடையனும்  லிங்கத்தைக் கீழே வைத்துவிட்டுக் காத்திருந்தான் ; லிங்கத்தைக் கொடுத்த சிவ பிரான் ஒரு கண்டிஷன்/ CONDITION நிபந்தனை விதித்தித்திருந்தார் ; எங்கேயாவது கீழே வைத்தால் அதை எடுக்க முடியாதென்றார். இதை நினைத்த ராவணனுக்கு கோபம் வந்து இடைச் சிறுவனை அடித்தார்; அவன் விநாயகர் ரூபத்தில் தோன்றி, மகனே நீ இங்கேயே பூஜை செய் என்னு சொல்லிவிட்டுப் போனார். ராவணனுக்கு சிவ பெருமானின் லீலைகள் புரிந்தன.

5. குரங்கு அரசன் வாலி சந்தியா வந்தனம்

வாலி, சுக்ரீவன், அனுமன் ஆகியோர் குரங்கு அடையாளம் அணியும் பழங்குடி மக்கள்; நாம் தற்காலத்தில் உடலில் பச்சை குத்திக்கொள்வது போலவும், ஆப்பிரிக்க, தென் அமெரிக்க பழங்குடி மக்கள் உடலில் ஒரு அங்கத்தினை சிதைத்து க்கொள்வது போலவும் குரங்கினை அடையாளமாகக் கொண்ட மனிதர்கள் அவர்கள். குணமும் குரங்கு போல சட்ட திட்டம் இல்லாத வாழ்க்கையினை உடையவர்கள். இதே காலத்தில் கரடி அடையாளம் உடைய ஜாம்பவான், கழுகு அடையாளம் உடைய ஜடாயூ ஆகியோரும் வாழ்ந்தனர். ரிக் வேத ரிஷிகளின் பெயர்களும் பாரத்வாஜ (காகம்)கெளசிக (ஆந்தை) பிராணிகளின் பெயராகவே இருக்கும். இவை அவர்கள் ஒவ்வொருவரும் வைத்துக்கொண்ட அடையாளப் பெயர்கள்; ஆங்கிலத்தில் TOTEM SYMBOLS டோ ட்டம் சிம்பல் என்பர்; இதே போல மஹாபாரதத்தில் வரும் பாம்பு யக்ஞம் (பரீட்சித் சம்பவம்) , தவளை படுகொலை ஆகியன உண்மையில் பாம்போ தவளையோ அல்ல; அந்த இன மக்களுடன் நடந்த போர்கள் அவை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயண, மஹாபாரதம் நடந்ததால் உபன்யாசகர்கள் அவற்றின் சுவையைக் கூட்டுவதற்காக குரங்கு, பாம்பு என்று சொல்லிவிட்டனர் ராமாயண, மஹாபாரத நூல்களை  விஞ்ஞான அணுகு முறையில் படித்துப் பார்த்ததால் அவர்கள் மனிதர்கள்தான், பிராணிகள் அல்ல என்பது நன்கு விளங்கும். அனுமனை நவ வியாகரண பண்டிதன் என்று வால்மீகி , கம்பன் ஆகியோர் போற்றுவதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.. இந்தப் பின்னணியில் வாலி என்ற மன்னனின் சந்தியா வந்தனத்தைப் படிக்க வேண்டும்  .

வாலி , கிஷ்கிந்தா என்னும் நாட்டின் மன்னன்; தற்காலத்தில் கர்நாடகத்தில் இருக்கும் ஹம்பி HAMPI என்னும் இடம் கிஷ்கிந்தை என்று பலரும், திருப்பதியில் உள்ள அஞ்சனாத்ரி மலை என்று  சிலரும் சொல்கிறார்கள் . அதை ஆண்டு வந்த வாலி, மூன்று சமுத்திரக் கரையில் சந்தியா வந்தனம் செய்தான் என்றும் அப்போது இராவணன் அவனைத்  தாக்கவே அபார சக்தி படைத்த வாலி, அவனைப் பந்தாடினான் என்றும் படிக்கிறோம்; அது முதல் வாலியுடன் ராவணன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவனிடம் வம்பு செய்யாமல் இருந்தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது வாலியின் சந்தியா வந்தனம். நமக்கு புராண இதிகாசங்களை விட்டுச் சென்ற முன்னோர்கள் ஆங்காங்கே  இப்படி சந்தியா வந்தனம் பற்றியும் குறிப்பாகச் சொல்லுவது அதன் முக்கியத்தைக் கோடிட்டுக்காட்டவே (Underline) என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

(என்னுடைய யாதவ ஜாதி  நண்பர் ஒருவர் பூணூல் அணிந்து காயத்ரீ சொல்லி வருகிறார்; சத்ய சாய் பாபாவின் பல லட்சம் பக்தர்கள், காயத்ரீ மந்திரத்தை தினமும் ஜபிக்கின்றனர் ; கீழ் ஜாதி பக்தர்  ஒருவருக்கு பாரதியார் பூணூல் போட்ட கதை எல்லோருக்கும் தெரியும் சந்தியா வந்தனம் என்பதே காயத்ரீ மந்திரத்தை தினமும் சொல்லுவதற்காக உண்டாக்கப்பட்டதுதான் ; குறித்த நேரத்தில் அதை அனுஷ்டிக்க வேண்டுமென்பதற்காக சூரியனையும் அத்துடன் இணைத்துவிட்டனர்.)

7. சீதா தேவி சந்தியா வந்தனம்

இலங்கையில் சீதா தேவியைக் கண்டுபிடிக்க  மூலை, முடுக்கெல்லாம் அனுமன் தேடிக்கொண்டிருந்தான் ; அசோக வனத்தை அடைந்த பொழுது சூரியோதய நேரம் வந்துவிட்டது. அசோக வனத்தின் அருகில் இன்றும் ஆறு RIVER ஓடுகிறது . ஒருவேளை சீதாதேவி இங்கிருந்தால் சந்தியா வந்தனம் செய்ய இங்கே வருவாள் என்று மரத்தின் மீது அமர்ந்து காத்திருந்தார் ஆஞ்சனேயர் (அனுமன்). அங்கு வந்தவள் சீதைதான் என்று அவரால் அடையாளம் காண முடிந்தது . ஏனெனில் சீதை கடத்தப்பட்டதை ஏற்கனவே பல வானரங்கள் பார்த்து இருந்தன ; சீதையைத் தேடப்போன அனுமனுக்கு எல்லா தகவல்களும் தெரியும் (சீதை தூக்கி எறிந்த நகைகளை குரங்குகள் எப்படிப் போட்டுக்கொண்டன என்ற நகைச்சுவை செய்தி 2000 ஆண்டு புறநானூற்றுப்  பாடலில் (378)  மட்டுமே உளது )!!!

8.ஆஞ்சநேய சந்தியாவந்தனம்

கிஷ்கந்தா என்னும் நாட்டின் முதலமைச்சர் பதவியில் இருந்தவர் ஆஞ்சநேயர்.. இலங்கையில் போர்க்களத்தில் லெட்சுமணன் மயக்கம் போட்டு விழுந்தான். அவனை எழுந்திருக்கச் செய்ய விசேஷ மூலிகை தேவைப்பட்டது. ஸஞ்சீவினி என்ற ஆயுர்வேத  மூலிகை தேவை என்று கரடி இன அடையாளம் அணியும் ஆயுவேர்வேத ஸ்பெஷலிஸ்ட் AYURVEDA SPECIALIST ஜாம்பவான் சொல்கிறார். உடனே ஆஞ்சநேயர் சிட்டாகப் பறந்து சென்று மூலிகையை IDENTIFY /அடையாளம் பண்ண முடியாததால் ஒரு மலைத்துண்டையே (ROCK) கையில் ஏந்தி வறுகிறார். அப்போதும் சந்தியா வந்தனம் செய்ய மறக்காமல் தங்கிச் செல்கிறார். அவர் குரங்கு அல்ல . ரிக் வேத காலம் முதல் ஒவ்வொரு ரிஷியும் எப்படி தங்களை பறவை அல்லது பிராணியின் பெயரில் அழைத்துக் கொண்டார்களோ அப்படி அவர்  குரங்கு இதைச் சேர்ந்தவர் . அந்த வகையில் எல்லா மனிதர்களைப் போல அவரும் சந்தியா வந்தனம் செய்ததை நமது மத நூல்களில் காண முடிகிறது .

9. ராம ராஜ்ய சந்தியா வந்தனம்

ராமாயணத்தின் முடிவிலும் சந்தியா வந்தனத்தைக் காண்கிறோம் . ராமர் மீண்டும் அரசனாக பதவி ஏற்று ராம ராஜ்யம் நடைபெற்றது அப்போதும் தினசரி ராஜ்ய பரிபாலனத்தில் நாள்தோறும் நடந்த நிகழ்ச்சிகளில்/ சடங்குகளில் சந்தியா வந்தனமும் ஒன்று.

ஆகவே கடிகாரமே இல்லாவிட்டாலும் எளிதில் காணக்கூடியது  அந்திப் பொழுதுகள்; அப்படி மூன்று சந்திப்பு / சந்திப் பொழுதுகள் வருகையில் இறைவனை நினைவு கூற வேண்டும் என்பதே சந்தியா வந்தனம் ; முஸ்லீம்களில் சிலர் 5 வேளைகளில் தொழுவதைக் காண்கிறோம். அவர்கள் விமானம், ரயில், பஸ் நிலையம் என்று பாராமல் ஒரு துணியை விரித்து மண்டியிட்டுத் தொழுதைக் காண்கிறோம். இது போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா இந்துக்களும் மூன்று பொழுதுகளில் தொழுதனர் . இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.

(இலங்கையில் எனக்கு திருகோண மலை செல்லக் கார் ஒட்டிய முஸ் லீம் கிடைத்த இடைவேளையில் ஸார் தொழுகையை முடித்துவிட்டு ஓடி வந்து விடுகிறேன்; நீங்கள் லஞ்ச் LUNCH சாப்பிட்டுக்கொண்டிருங்கள்  என்று சொல்லிவிட்டுச் சென்றார் ; கதிர்மகத்துக்குக் கார் ஓட்டி வந்த வேறு ஒரு முஸ்லீம் இளைஞர் தொழுகை பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. இவ்வளவுக்கும் அவர் GULF COUNTRIES கல்ப் கண்ட்ரீக்களில் பல்லாண்டுகள் வசித்தவர்.

ஆயினும் மூன்று வேளையும் தவறாமல் சந்தியா வந்தனம் செய்த ஒரே மனிதனையும் நான் கண்டுள்ளேன். மதுரையில் தினமணி பத்திரிகையில் என்னுடன் சீனியர் சப் எடிட்டர் ஆக வேலை பார்த்தவர் தானப்பமுதலித்தெரு எஸ். வெங்கடராமன். பாதி நியூஸ் NEWS  எழுதிக்கொண்டிருந்தாலும் உச்சி வேளையிலும் மாலை வேளையிலும் குழாயடிக்குச் சென்று அதிலுள்ள தண்ணீரை சிறிதாகத் திறந்துவிட்டு சந்தியா வந்தனம் செய்துவிட்டு ஓடி வந்துவிடுவார். அங்கே சாப்பாட்டுத் தூக்குச் சட்டிகளுடன் வரும் தொழிலாளர்களும் அமைதியாக விலகி நின்று அவர் சந்தியா வந்தனத்தை முடிக்கும் வரை காத்திருப்பர்.  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு .

(மேலே கண்ட கட்டுரையில் உள்ள விஷயங்களை ஆங்கிலத்தில் எழுதியவர் Shri Gaurang Damani  ஸ்ரீ கெளரங் தாமனி . அவர் எழுதிய புஸ்தகத்தில் பெயர் Untold Stories of Ramayana”. நமக்குத் தெரியாத ராமாயணக் கதைகள்/ விஷயங்கள். அனைவரும் வாங்கிப் படிக்கவும்)

XXXX

E MAIL RECEIVED ON 9-11-2023

திரு.சுவாமிநாதன் அவர்கட்கு,

வணக்கம்.

காரைக்குடி, நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த, சுப.அண்ணாமலை என்ற நான் (தற்போது ஜாம்பியா நாட்டில்-லுசாகா நகரில் வசிக்கும்) உங்களுக்கு தெரிவிக்க விரும்பும் ஒரு தகவல் – எங்களது சமூகத்தில் பெண்களும் சந்தியா வந்தனம் உபதேசம் கேட்டு, தினமும் செய்து வரும் பழக்கம் தொன்று தொட்டு இன்று வரை உள்ளது. எங்களில், ஆண்-பெண்களுக்கு தனித் தனியான குருவினால், பஞ்சாட்சர மந்திர உபதேசம் (காயத்திரி அல்ல) செய்யப்பட்டு, சந்தியா வந்தனம் செய்து வருகிறோம்.

இந்த தகவல் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

SP Annamalai

—சுபம்—

Tags– ராமாயணம், சந்தியாவந்தனம், இராவணன், வாலி , அனுமன் , சீதை