மாலை நேர சந்த்யாகாலம் முடிந்த பின்னர் சற்று நேரம் கழித்து நக்ஷத்திரங்கள் வானில் சிறிது தோன்ற ஆரம்பிக்கும் போது அந்த (அற்புதமான காலச் சேர்க்கையானது) யோகம் விஜயா என்று அழைக்கப்படுகிறது. அது எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றியைத் தரும் ஒன்று.
குத்தமிதம் என்றால் என்ன?
கேஸஸ்தனாதிக்ரஹணே ஹர்ஷாதிப்ரமித்தே முகே |
துக்காதிஷ்கரணம் தன்வயா யத் தத் குத்தமிதம் மதம் ||
அழகிய மேனி கொண்ட ஒரு யுவதி அவளது தலை கேசத்தை இழுத்துப் பிடிக்கின்ற போதோ அல்லது அவளது மார்பகம் அழுத்தப்படும்போதோ வலிப்பது போலப் பாசாங்கு செய்கின்ற போது அவள் முகம் பரவசத்தை அடைகின்றதைக் காண்பிக்கும், அந்த நிலையே குத்தமிதம் என்று கூறப்படுகிறது.
புதிர்க் கவிதை
காக்கைக்கு சந்தோஷம், நரிக்கோ..?
கேசவம் பதிதம் த்ருஷ்டதா த்ரோணோ ஹர்ஷமுபாயத: |
ருதந்தி கௌரவா: சவேம் ஹா கேசவம் கதம் கத: ||
ஒரு சவம் நீரில் விழுகின்ற போது ஒரு காக்கை மிகுந்த சந்தோஷத்தை அடைகிறது (தனக்கு விருந்து கிடைத்து விட்டது என்று).
ஆனால் நரிகளோ ஏமாற்றத்தால் ஊளையிடுகின்றன – “ஓ, கடவுளே க்ருஷ்ணா! எப்படி அது போனது?” என்று!
இந்த சுபாஷிதத்தில் கேசவம் என்ற வார்த்தை இரு இடங்களில் வருகிறது. முதல் இடத்தில் கே + சவம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இது சவத்தைக் குறிக்கிறது. அடுத்த இடத்தில் கேசவம் என்பது பகவான் கிருஷ்ணனைக் குறிக்கிறது.
இது ஒரு சொல் விளையாடல்!
இது கூட ஸ்லோகம் புதிர் என்ற வகையில் சேர்ந்த ஒன்று!
ஒரு நாயானது மனிதனின் தலை மயிர், அல்லது ஒரு கல், சாம்பல், தீச்சுள்ளி, கிழிந்த துணி, கரி, கயிறு, விறகு, ஓட்டாங்குச்சி ஓடு ஆகிய இவற்றில் எதையாவது ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு பயணத்திற்கு புறப்பட இருக்கும் ஒருவனின் முன்னால் வந்தால் அப்படிப்பட்ட நாய் அந்த மனிதனுக்கு தீய சகுனத்தைக் காண்பிக்கிறது.
கிம் த்வம் ந வேத்ஸி ஜகதி
ப்ரக்யாதம் லாபகாரணே மூலம் |
விதிலிகிதாக்ஷரமாலம்
பலதி கபாலம் ந பூபால: ||
இந்த உலகில் அடையும் அனைத்து லாபங்களுக்கும் அடிப்படையான காரணம் என்ன என்று உனக்குத் தெரியுமா?
தலையில் கபாலத்தில் விதியினால் வரிசையாக எழுதப்பட்ட அக்ஷரங்களே பலனைத் தருகிறது.
பூபாலனுக்கு – அரசனுக்கு- செய்த சேவைகள் அல்ல!
இந்த சுபாஷிதத்தில் லாபகாரணே மூலம், அக்ஷரமாலம், கபாலம் பூபால: என்ற வார்த்தைகள் ஒரு சொல் ஜாலத்தை அர்த்தத்தோடு தருகிறது!
லண்டனில் தொடர் சொற்பழிவாற்றிவரும் மதுரைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ சொ மீ சுந்தரம் (PROFESSOR S S M SUNDARAM, MADURAI), மாணிக்கவாசகரின் திருவாசகம் பற்றி 13-7-23 காலையில் நடத்திய சொற்பொழிவில் பல வியப்பான தகவல்களைத் தந்தார் . 18-7-23 முடிய காலையிலும் மாலையிலும் 60 நிமிடச் சொற்பொழிவுகள் லண்டன் ஈலிங் பகுதியில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெறும் ( 11 AM , 7 PM ).
ராஜாஜியும் திருவாசகமும்
ராஜாஜி என்னும் ராஜா கோபாலாச்சாரியாரை அறியாதோர் எவருமிலர்; இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்; தியாகி; மாபெரும் அறிஞர். சக்ரவர்த்தி திருமகன் என்ற பெயரில் ராமாயணத்தையும், வியாசர் விருந்து என்ற தலைப்பில் மஹாபாரதத்தையும் எழுதி புகழ் அடைந்தவர்.
அவர் சேலத்தில் வழக்கறிஞராக இருந் காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது அங்கு சப் இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்தவர் கிருஷ்ண ஐயர் . இருவருக்கும் ஒத்துவராது ; கிருஷ்ண ஐயர் ஒரு தரப்பை எதிர்த்தால் இவர் வக்கீல் என்ற முறையில் அவருக்குப் பாது காப்பு தருவார் . இருவரும் கான்டீனில் சாப்பிடுகையில் வெவ்வேறு டேபிள் . ஒருநாள் கிருஷ்ண ஐயர் வழக்கம் போல ஒரு பாடலைச் சொல்லிவிட்டு, இறைவனை வணங் கிச் சாப்பிட்டார் . அது ராஜாஜியின் காதிலும் விழுந்தது.
அந்தப் பாடல் திருவாசகம் அடைக்கலப்பத்து பகுதியில் வரும் பாடல்
தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
அதை மீண்டும் சொல்லக்கேட்ட ராஜாஜி எனக்கு ஒரு திருவாசகம் வாங்கிக் கொடுங்கள் என்றார் . அவரும் அதை வாங்கிக் கொடுக்கவே ராஜாஜி அதை முழுதும் படித்துப் பொருள் உணர்ந்தார்
நான் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள அருமையான முருகன் கோவிலுக்குச் சென்றேன். அது யாழ்ப்பாணத் தமிழர்கள் நடத்தும் கோவில்; சொற்பொழிவாற்ற அழைத்திருந்தனர். போது ஒரு அம்மையார் உள்ளே நுழைந்தார். உடனே எல்லோரும் எழுந்து மரியாதை செலுத்தினர். எல்லோரும் எழுந்திருந்ததால் நானும் எழுந்தது மரியாதை செலுத்தினேன். என்னைத் தெரியுமா ? என்று கேட்டார். நானோ ஆஸ்திரேலியாவுக்குப் புதிது. இவரை எப்படித் தெரியும்? திகைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் .
நான்தான் சேலம் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண அய்யரின் மகள் . யாழ்ப்பாணத்தில் டாக்டர் பட்டம் வாங்கிய ஒரு அறிஞரைத் திருமணம் செய்துகொண்டேன். இப்போது இங்கு சிட்னியில் இருக்கிறேன் என்றார் .
XXXX
காந்திஜியும் திருவாசகமும்
காந்திஜி தென் ஆப்ரிக்காவில் இருந்த காலம் . ஒருவர் முகத்தில் ரத்தக் காயங்களுடன் வந்து சேர்ந்தார். அவர் பெயர் பாலசுந்தரம். என்ன இது ரத்தக் காயங்கள் என்றார் . நாங்கள் எல்லோரும் தென் ஆப்ரிக்காவில் வெள்ளைக்கார்களிடம் அடிமைத் தொழில் செய்துவருகிறோம். எங்களுக்கு ஒரு உரிமையும் சுதந்திரமும் இல்லை.எங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்று கேட்டார். ஏனெனில் அப்போது காந்தி அங்கே வழக்கறிஞர் . காந்தி, அவர்களுடன் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அனைவரையும் அரசாங்கம் சிறைக்குள் தள்ளியது . அவர்களுடன் தில்லையாடி வள்ளியம்மை என்ற 13 வயதுப் பெண்ணும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் உடல்நலம் குன்றியதால் விடுவிக்கப்பட்டார். அவர் தென் ஆப்ரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க்கில் சிறு வயதிலேயே இறந்தார். இறக்கும் தருவாயில் பாலசுந்தரத்தைப் பார்த்து “அண்ணா அந்தப்பாட்டைப் பாடுங்கள்” என்னு சொன்னவுடன் பாலசுந்தரமும் பாடினார். காந்தி , பால சுந்தரத்திடம் அது என்ன பாட்டு என்றவுடன் அவர் அது திருவாசகப் பாடல் என்றார் . இறக்கும் திருவாயில் ஒருவர் திருவாசகத்தைக் கேட்டாலோ இறந்த ஆவி உலவும் இடத்தில் அதைப் பாடினாலோ அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்; எந்த சிந்தனையுடன் ஒருவர் இறக்கிறோமோ அந்த சிந்தனையோடு மறுபிறப்பு ஏற்படும் . அந்தக் காலத்தில் காந்தியின் பெயர் எம்.கே .காந்த்திதான். மஹாத்மா எனும் பட்டம் பிற்காலத்தில் தாகூர் மூலம் வந்ததே . காந்தியும் திருவாசகத்தைப் படிக்க ஆவல் கொண்டார். தமிழும் அவர் கற்கத் துவங்கினார் . திருவாசகத்தை ஆங்கில எழுத்தில் (TRANSLITERATION) எழுதிப் படித்து அதன் பொருளையும் அறிந்தார்.
வள்ளியம்மையின் காதில் பால சுந்தரம் சொன்னது திருவாசகத்தின் கடைசி பகுதியாகும்; அதன் பெயர் அச்சோ பதிகம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.–என்று துவங்கும் பதிகம் ஆகும்.
(தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898ஆம் ஆண்டில் ஓர் செங்குந்தர் குடும்பத்தில் பிறந்தார். இவர் மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். நெசவுத் தொழிலாளியான முனுசாமி முதலியார் பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார். 1914ம் ஆண்டில் இறந்ததும் தென் ஆப்ரிக்க நகரமான ஜோஹன்னஸ் பரக்கில்தான். )
XXXX
திரு வி க வும் திருவாசகமும்
ரெவரெண்ட் ஜி.யூ .போப் இறக்கும்போது தமிழ் நாட்டு மக்க்கள்தான் தனது இறுதிச் சடங்கிற்கும் கல்லறைக்கும் பணம் தரவேண்டும். அது தான் என் விருப்பம் என்று தெரிவித்திருந்தார் . தமிழ்நாட்டிலுள்ள எல்லா பள்ளி களிலும் இந்த அறிவிப்பு வெளியானது. ஆசிரியர் அறிவித்தவுடன் பல மாணவர்கள் நாலணா கொடுத்தனர். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. ஒரு மாணவன் மட்டும் எழுந்து ஐந்து ரூபாய் கொடுத்தான். என்னப்பா இது! என் மாத சம்பளமே ஐந்து ரூபாய்தான் — என்று சொல்லி வாத்தியார் வியந்தார். அந்த மாணவன் சொன்னான்- அவ்வப்போது எனக்குக் கிடைக்கும் காசுகளை ஒரு டப்பாவில் போட்டுவைத்தேன். வீட்டிற்கு வந்து போவோர் கொடுத்த காசு அது. என் அப்பாவுக்கு திருவாசகம் பிடிக்கும். அதைப்படித்துவிட்டு அது பற்றி எனக்கும் சொல்லுவார் . ஆகையால் டப்பியில் இருந்த பணத்தைக் கொடுக்கிறேன்.
இப்படிச் சொன்ன அந்த மாணவன் யார் தெரியுமா ?
பிற்காலத்தில் தமிழ் அறிஞர், பேச்சாளர், நூலாசிரியர் என்று பெயர் எடுத்த திரு. வி. கலியாண சுந்தர முதலியார் .
XXXX
அண்ணாமலை செட்டியாரும் திருவாசகமும்
திருவாசகம் பிரதிகளை அச்சடிக்கப்போகின்றோம் . அது வேண்டுவோர் பிரதிக்கு பத்து ரூபாய்வீதம் அனுப்புங்கங்கள் என்று அறிவிப்பு வெளியான து . 1900ம் ஆண்டில் பத்து ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. பள்ளத்தூர் அண்ணாமலை செட்டியார் 5000 ரூபாய் அனுப்பி 500 பிரதிகளை அனுப்புங்கள் என்றார். திருவாசகத்தின் மீது அவ்வளவு மதிப்பு!.
XXXX
ரமண மகரிஷியும் திருவாசகமும்
ரமண மகரிஷியின் தாயார் தனது இறுதிக்காலத்தில் திருவண்ணா மலையில் ரமணருடன் வசிக்க விரும்பினார் . இறுதி நாள் நெருங்கியதை அறிந்த ரமணர், தாயாரின் தலையைத் தன் மடியில் கிடத்தி திருவாசகத்தை ஓதினார் . அவர் இறந்தவுடன் எல்லோரும் சாப்பிட்டப் போங்கள் என்றார் . எல்லோரும் திகைத்து நின்றனர். இறந்த வீட்டில் , காரியங்கள் முடியும் வரை யாரும் சாப்பிடமாட்டார்கள்; தீட்டு என்று கருதும் காலம் அது. ஆனால் ரமணர் சொன்னார் — திருவாசகத்துக்கு தீட்டு என்பதே கிடையாது . எல்லோரும் சாப்பிட்டு வந்த பின்னர் திருவாசகப் பாராயணம் தொடர்ந்தது .
XXX
தாய் தள்ளிய பிள்ளையை பேயும் அணுகாது — ரமண மகரிஷி – தாய்- திருவாசகம் பற்றிச் சொன்னபோது சொ சொ மீ சொன்ன பழமொழி
XXXX
ஜட்ஜ் சுப்ரமண்ய ஐயரும் திருவாசகமும்
ஜட்ஜ் சுப்ரமண்ய ஐயரம் ஜி.யூ போப்பும் நண்பர்கள் . ஜியூ போப் அவருக்கு ஒரு பரிசு அனுப்பினார். அது என்ன தெரியும?. கண்ணீர் துளி விழுந்த தாள் . போப் மனம் உருகி திருவாசகம் படித்தபோது அவர் கண்ணீர்த் துளிகள் ஒரு பேப்பரில் விழுந்தது.
தமிழில் பேப்பரை தாள் என்போம். இறை வனின் பாதகமலங்களையும் தாள் என்போம். திருவள்ளுவரும் அப்படிப்படியுள்ளார். . இரு பொருள் படும்படி திருவாசக தாள் , சுப்ரமண்ய அய்யருக்கு பரிசாக வந்தது. அவரும் நன்றி தெரிவித்து பதில் அனுப்பினார். நீங்கள் அனுப்பிய தாளை நடராஜ பெருமானின் தாளில் (பாத கமலம் )வைத்து வணங் குகிறேன் என்று .
XXXX
திருவாசகம் = தேன்
திருவாசகத்தை தேன் என்பார்கள். ஏன் தெரியுமா?
தேன் எப்போதும் கெடாது . தேனில் போட்டுவைத்த பொருளும் கெடாது . பலாச் சுளைகளை தேனில் போட்டுக் கெடாமல் வைத்திருப்பதைப் பார்த்து இருப்பீர்கள் . திருவாசகம் ஒரு தேன் . அதில் நாம் திளைத்தோமானால் கெட்டுப்போக மாட்டோம்
XXX
தமிழ்நாட்டு வைஷ்ணவர்கள் சோற்றை, சாதத்தை திருவமுது என்பார்கள். சாப்பாடு நமக்கு இறைவன் படைக்கும் அமுதம் . சேக்கிழாரும் காரைக்கால் அம்மையார் பற்றிப் பாடுகையில் திரு அமுது சமைத்ததாகவே பாடுகிறார்.
XXX
1950ம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனம் முயற்சியில் தண்டபாணிதேசிகர் எழுதிய திருவாசக உரை நூல் வெளியானது ; அதற்கு முன்னுரை எழுதித் தருமாறு ராஜாஜியிடம் கேட்டபோது அவர் தனக்கு அந்தத் தகுதி கிடையாது என்று சொல்லி மறுத்துவிட்டார். தான் அதை சிறையில் முழு க்கப் படி த்ததாகவும் அது தன் உயிர் நூல் என்றும் சொன்னார்
XXX
(காலையும் மாலையும் இரண்டு மணி நேரம் சொ சொ மீ ஆற்றிய உரை முழுதையும் எழுதவேண்டுமானால் அது புத்தக வடிவிற்குப் பெருத்து விடும் . ஆகையால் புல்லட் பாயிண்டு BULLET POINTS களை மட்டும் கொடுத்தேன். இதில் பிழை இருப்பின் அது என் காதில் தவறாகக் கேட்ட குற்றமே. சொ சொ மீ. சுந்தரம் அவர்களின் குற்றம் அன்று . பிழை பொறு த்தருள்க )
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எது கொடியது? எது இனியது?
ச.நாகராஜன்
எது கொடியது? எது இனியது?
எது கொடியது?
ஒரு பெண்ணின் இதயம்.
ஒரு இல்லறத்தானுக்கு எது இன்பமும் லாபமும் தரத்தக்கது?
மனைவியின் நல்ல குணங்கள்.
எது காதல்?
மனதில் சுழலும் எண்ணம்.
எது கிடைப்பதற்குக் கடினமானது?
ஞானம்.
இதைச் சொல்லும் சுபாஷிதம் இது:
கிம் க்ரூரம் ஸ்த்ரீ ஹ்ருதயம்
கிம் க்ருஹிண: ப்ரியஹிதாய தாரகுணா: |
க: காம: சங்கல்ப:
கிம் துஷ்கரசாதனம் ப்ரக்ஞா ||
சேவை செய்யா வாழ்வு அர்த்தமில்லா வாழ்வு!
நன்கு சத்துணவு ஊட்டப்பட்டு வலிமை கொண்டு நீண்ட ஆயுளுடன் இருக்கும் உடலால் என்ன பயன்?
மற்றவருக்கு சேவை செய்யாது வாழும் ஒருவன் பயனற்றவனே!
கிம் காயேன சுப்ருஷ்டேன வலினா சிரஜீவிதா |
யோ ந சர்வோபகாரி ஸ்யாஜ் ஜீவன்னபி நிரர்தக: ||
ஒரு பைசாவை ஏளனம் செய்பவன் பணக்காரனாக மாட்டான்!
ஒரு கௌரியை (கௌரி என்பது ஒரு மிகச் சிறிய மதிப்புள்ள நாணயம்) வெறுத்து ஏளனம் செய்பவன் ஆயிரம் காசைச் சேர்க்க மாட்டான். (அதாவது அவன் ஒருபோதும் பணக்காரனாக மாட்டான்)
அதே போல, ஒரு வினாடியை வீணாக்குபவன் வித்தையின் அடுத்த கரையை ஒரு போதும் அடைய மாட்டான்.
அதாவது கல்விக் கடலை நீந்திக் கடக்கவே மாட்டான்.
கிம்காகிணீக: புருஷ: சஹஸ்ரம் நாஹிகச்சதி |
ததைவ கிம்முஹூர்தோபி வித்யாபாரம் ந கச்சதி ||
கல்வியும் காசும் சேரும் விதம்!
சிறு நொடிகளை வீணாக்குபவனுக்கு கல்வி எப்படி வரும்?
சிறு பைசாக்களை அலட்சியப்படுத்துபவனுக்கு பணம் எப்படி சேரும்?
கல்வியையும் பணத்தையும் ஒருவன் சிறு சிறு நொடிகளிலும் சிறு சிறு காசுகளினாலும் சேர்க்க வேண்டும்.
கிம் க்ஷணஸ்ய க்ருதோ வித்யா கிம்கணஸ்ய க்ருதோ தனம்|
க்ஷணஷ: கணஷச்சைவ வித்யாமர்த்தம் ச சாதயேத் ||
விதியே வெல்லும்!
எதற்காக அதிகம் சிந்தனை செய்கிறாய்?
ஏன் கவலையினால் சோகம் அடைகிறாய்?
தலையில் என்ன எழுதி இருக்கிறதோ
அதன் படி தான் அனைத்தும் நடக்கும்!
கிம் சிந்ததேன பஹுனா
கிம் பா ஷோகேன மனஸி நிஹிதேன |
தன்னிச்சிதே பவிஷ்யதி
விதினா லிகிதம் லலாடே யத் ||
வாழ்க்கை என்பது தான் என்ன?
வாழ்க்கை என்பது தான் என்ன”
குற்றமில்லாமல் இருப்பது.
சோர்வாக (மந்த்மாக) இருப்பது எதனால்?
கூரிய புத்தி என்றாலும் கூட பயிற்சி இல்லாமல் இருப்பதால்!
உலகியலில் எவன் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பவனாவான்?
1.பட்டுச் சேலைக்குப் பெயர்போன காஞ்சீபுரம் யாருடைய தலைநகராக இருந்து சீரும் சிறப்பும் பெற்றது?
xxxxx
2.காஞ்சீபுரம் உள்ள பகுதியை எந்த நாடு என்று சொல்லுவார்கள் ?
xxxx
3.சோழ நாடு சோறுடைத்து, பாண்டிய நாடு முத்துடைத்து … அப்படியானால் காஞ்சீபுரம் உள்ள நாடு எது உடையது ?
xxxxx
4.காஞ்சீபுரத்தில் மாமரத்துக்குள்ள சிறப்பு என்ன?
XXXXX
5.காமாட்சி கோவிலுக்குள் உள்ள வைணவ திவ்ய க்ஷேத்திரம் எது ?
XXXX
6.பஞ்சபூத ஸ்தலங்களிலும், ஏழு மோக்ஷ புரிக்கள் பட்டியலிலும் காஞ் சிக்கு உள்ள சிறப்பு என்ன ?
XXXX
7.காஞ்சீபுரத்தில் அத்திவரதரின் புகழ் பரவுவது ஏன் ?
Xxxxx
8.காஞ்சீபுரத்தில் எத்தனை பகுதிகள் உள்ளன? குறைந்தது எத்தனை கோவில்கள் இருக்கின்றன?
Xxxx
9.காஞ்சீபுரத்தில் உள்ள மியூசியத்தின் , பல்கலைக்கழகத்தின் பெயர்கள் என்ன ?
Xxxxx
10.கந்தபுராணம் எங்கு அரங்கேறியது ?
விடைகள்
1.பல்லவர் தலைநகர்
xxxxxx
2.தொண்டை நாடு
xxxxx
3.வேழ முடைத்து மலைநாடு, மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து—என்றார் ஒளவையார்
xxxxx
4.ஏகாம்பரேஸ்வர் கோவிலின் தல மரம் –மாமரம்
xxxx
5.காமாட்சியின் பெருமையை அனைவரும் அறிவர். ஆயினும் அந்தக் கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் – கருவறையில் — ஒரு திவ்ய தேசம் இருப்பது பலருக்கும் தெரியாது காமாக்ஷி அம்மன் கோயிலுக்குள், அம்மன் கர்ப்பக்ரஹத்துக்கு வலப்பக்கத்தில் திருக்கள்வனூர் பெருமாள் நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.
xxxxxx
6.பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி என்னும் மண் / பூமியைக் குறிப்பது காஞ்சீபுரம் ; ஏகாம் பரேச்வர கோவிலில் மணலில் லிங்கம் இருக்கிறது ; சப்த புரிக்கள் என்ற ஸ்லோகத்தில் காஞ்சி உள்ளது .
xxxxxx
7.காஞ்சிபுரத்தில் . கோவிலின் வடக்கே உள்ள நூறுகால் மண்டபத்தில் அனந்தசரஸ் எனப்படும் நீராழி மண்டபத்தில் நீரில் மூழ்கியபடி கருங்கற்கலால் ஆன பாறைக்குள் அத்திமரத்தால் ஆன அத்தி வரதராஜ பெருமாள் சயன நிலையில் இருக்கிறார் இவர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
xxxxxx
8.காஞ்சீபுரத்தில் சின்ன காஞ்சி , பெரிய காஞ்சி , ஜைன காஞ்சி என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன குறைந்தது 108 கோவில்கள் உள்ளன (இதே பிளாக்கில் 108 கோவில்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
xxxxxx
9.சகுந்தலா ஜகந்நாதன் மியூசியம் ; Shakuntala Jagannathan Museum of Folk Art
காஞ்சீபுரத்தில் பல்கலைக்கழகத்தின் பெயர்–ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வா மகாவித்யாலயா காஞ்சீபுரம் -631 561Sri Chandrasekarendra Saraswathi Viswa Maha Vidyalaya [ SCSVMV ] is deemed university at Kancheepuram.
xxxxx
10.காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் தான் கச்சியப்ப சிவாசாரியார். அவர் எழுதிய கந்தபுராணம் காஞ்சீபுரத்தில் குமரகோட்டத்தில் அரங்கேறியது
அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுவாயாக’ என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார் ..
Xxxxxxx subham xxxxxxx
Tags
காஞ்சி , காஞ்சிபுரம் , பல்கலைக்கழகம் , மியூசியம், மா மரம், அத்தி வரதர் , கந்த புராணம் , Quiz
லண்டனில் தொடர் சொற்பழிவாற்றிவரும் மதுரைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ சொ மீ சுந்தரம் (PROFESSOR S S M SUNDARAM, MADURAI), மாணிக்கவாசகரின் திருவாசகம் பற்றி நேற்று 13-7-23 காலையில் நடத்திய சொற்பொழிவில் பல வியப்பான தகவல்களைத் தந்தார் . 18-7-23 முடிய காலையிலும் மாலையிலும் 60 நிமிடச் சொற்பொழிவுகள் லண்டன் ஈலிங் பகுதியில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெறும் ( 11 AM , 7 PM ).
Xxxxx
திருவாசகத்தில் 658 பாடல்கள் இருக்கின்றன. இந்த அதிசய நம்பரை மாணிக்கவாசகரே முதல் பாடலில் மறைமுகமாகச் சொல்லிவிடுகிறார். முதல் பாடலான சிவபுராணத்தில் முதலில் 6 வரிகளில் வாழ்க, அடுத்து 5 வரிகளில் வெல்க, அடுத்த 8 வரிகளில் போற்றி (6,5,8) வருகின்றன!!!
xxx
ஏனைய பாடல்கள் கடவுள் பற்றிய பாடல்கள் ; திருவாசகமோ கடவுளோடு பேசிய பாடல்கள்
xxx
யார் புத்திசாலி?
தந்தது உன் தன்னை கொண்டது என்தன்னை
யார்கொலோ சதுரர் ? என்று மாணிக்கவாசகர் சிவனிடம் கேட்கிறார் .
அதாவது ஒன்றுமில்லாத என்னை ஏற்றுக்கொண்டு உன்னையே தந்துவிட்டாய் . நீ புத்திசாலியா? என்பது கேள்வி . நாமும் யார் புத்தி சாலி என்று யோசிப்போம் .
உண்மையில் சிவன்தான் புத்திசாலி. அதனால்தான் தேன் போன்ற திருவாசகம் நமக்கு கிடைத்தது..
Xxx
சிதம்பரத்தில் நடராஜக் கடவுளுக்கு வலது பக்கம் மாணிக்கவாசகர்; இடது பக்கம் சிவகாமி . அவ்வளவு முக்கியத்துவம்.
மாதவ சிவஞான முனிவர், இவரை ஞானத்தால் சிவமே ஆனவர் என்று போற்றுகிறார் .
முதலில் மூவர் மட்டுமே இருந்தனர். சிவப்பிரகாச சுவாமிகள்தான் மூவரோடு இவரையும் சேர்த்து நால்வர் என்ற அணியை உருவாக்கினார்.
Xxxx
பைபிளைத் தவிர வேறு எந்த நூலையும் அச்சிடக்கூடாது என்று கிறிஸ்தவ வெள்ளைக்காரர்கள் உலகம் எங்கும் தடை போட்டிருந்தனர். அந்தத் தடை நீக்கப்பட்டவுடன் முதலில் வெளியான பக்தி நூல் திருவாசகமே.
xxx
மேலை நாட்டிலுள்ள எல்லா பக்தி இலக்கியத்தையும் ஒரு தராஸுத் தட்டில் வையுங்கள். திருவாசகத்தின் ஒரு வரியை இன்னொரு தட்டில் வையுங்கள். திருவாசகம் எடை மிக்கது என்று கிறிஸ்தவ குருநாதரிடம் ரெவரெண்ட் ஜி.யூ.போப் REV. G U POPE சொன்னார். அவர் வியப்புடன் காரணம் கேட்டபோது இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் என்ற ஒரு திருவாசக வரிக்கு சமம் எதுவும் இல்லை என்றார் ஜி.யூ.போப்..
xxx
ஜி.யூ.போப் மீது வழக்கு
ஜி.யூ.போப் கிறிஸ்தவ பாதிரியார்.. அவர் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பாமல் திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால் ஏசு சபையாருக்குக் (SOCIETY OF JESUS) கோபம்; ஆத்திரம் பொங்கியது . அவர் மீது லண்டனில் கேஸ் போட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு ஒரு வாரத்துக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கினார் ; கோர்ட்டில் ஒரே கூட்டம் ;பரபரப்பு . போப்புக்கு நிச்சசயம் சிறைத்தண்டனை என்று எல்லோரும் கருதினர். ஆனால் நீதிபதியோ ஜி.யூ போப் அவர்களை வணங்கிவிட்டு அவர்தான் உண்மையான கிறிஸ்தவர் HE IS A TRUE CHRISTIAN என்றார் . அவர் இவ்வளவு அருமையான நூலை மொழிபெயர்த்த பின்னரும் மதம் மாறவில்லை ; அவரே உண்மையான கிறிஸ்தவர் என்றார் . ஏசு சபை யாருக்கு பெருத்த ஏமாற்றம்.
Xxxx
திருவாசகத்துக்குள் சொ சொ மீ .
நானும் என் தம்பியும் சிறுவயது முதலே தினமும் திருவாசகம் படிப்போம். மதுரையில் என் வீட்டின் பெயரே திருவாசகம்தான் . . ஒருவர் என் வீட்டிற்கு வருகை புரிந்தார். இதுவரை திருவாசக ம் வெளியே இருந்தது . இப்பொழுது திருவாசகத்துக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்கிறார்! (உங்களுக்குள் திருவாசகம் வந்துவிட்டது)
XXXX
ராஜாஜியும் திருவாசகமும், காந்திஜியும் திருவாசகமும் திரு.வி.க. கவும் திருவாசகமும் , ஜட்ஜ் சுப்ரமண்ய ஐயரும் திருவாசகமும் என்ற தலைப்பில் இன்னும் அரிய விஷயங்களைத் தொடர்ந்து சொன்னார். அவற்றையும் காண்போம்.
தொடரும்………………..TAGS- திருவாசகம், சொ சொ மீ , லண்டன் சொற்பொழிவு
Panchalingeshwara Temple.பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் .
Basaralu Temple. மல்லிகார்ஜுனர் கோவில் .
Pralaya Varahanatha Temple.பிரளய வராஹநாதர் கோவில் .
35.Sri Lakshmi Janardhana Temple, Mandya ஸ்ரீ லக்ஷ்மி ஜனார்த்தன சுவாமி கோவில்
மைசூரு நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் மாண்டவ்யா தலத்தில் இக்கோவில் அமைந்துள்ளது மாண்டவ்யர் என்ற மகரிஷியின் பெயரில் உருவான ஊர் இது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இப்பகுதியை ஆண்ட இந்திரவர்மன் என்ற கங்க வம்ச அரசர் குழந்தை வரம் வேண்டி கட்டிய கோவில். அவருக்குப் பிறந்த சோமேஸ்வரன் என்பவன் ஸகலேஸ்வர் கோவிலைக் கட்டினான். கங்க வம்ச சின்னமான யானையைக் கோவிலில் காணலாம். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தரும் ஜநார்த்தனரை , மக்கள் / குமந்தைகள் வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம். இவ்வாறு குழந்தை பெற்ற ஒரு இத்தாலிய நாட்டுக்காரர் , இந்தக் கோவிலுக்கு ஒரு ஆலய மணியை காணிக்கையாகக் கொடுத்துள்ளார்.
XXXX
36.Karighatta Srinivasa Temple கரிகட்டா ஸ்ரீனிவாசர் கோவில்
மைசூரிலி ருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் ஸ்ரீரங்க பட்டணம் அருகில் குன்றின் மீது அமைந்த கோவில் இது .
கரி கட்டா என்றால் கரிய மலை.கரி கிரி வாசன் அல்லது பைராகி வெங்கட ரமணர் என்றும் பெருமாளுக்கு பெயர். பூவால் அலங்கரிக்கப்படும்போது அவர் பைராகி/ நாடோடி பக்தர் போலத் தோன்றுகிறார். மலையின் உயரம் 2697 அடி. படிகளின் எண்ணிக்கை 450. குன்றின் உச்சியிலிருந்து புகழ்பெற்ற கோவில்களையும் தரிசிக்கலாம். இந்தக் கோவிலில் பெருமாளின் உயரம் ஆறு அடி. அவருக்கு இடது புறம் யோக ஸ்ரீ னிவாசரும் வலது புறம் போக ஸ்ரீ னிவாசரும் காட்சி தருவார்கள். கருட ஸ்தம்பமும், பத்மாவதித் தாயார் சந்நிதிகளும் உள .இங்கே காணப்படும் விஷ்ணு பாதம் (காலடிச் சுவடு), தர்ப்பைப்புல், பெரிய கல்யாண மண்டபம் ஆகியன பற்றியும் வரலாறுகள் இருக்கின்றன.
XXXXX
Lakshmi Narashimhaswami Temple, Srirangapatna ஸ்ரீரெங்கப்பட்டண லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
இந்தியாவில் 800 நரசிம்மர் கோவில்கள் இருக்கின்றன என்பது ஒருவர் கணக்கு. இங்குள்ள நரசிம்மர் 800 ஆண்டு வரலாறு உடையவர்.. இது பெரிய கோவில். ஆனால் அதிகமான பேருக்குத் தெரியாது .
XXXXX
37. ஸ்ரீரெங்கப்பட்டண ரங்கநாத சுவாமி கோவில் Ranganathaswamy Temple, ,Srirangapatna
மைசூரிலிருந்து 15 கி மீ தூரம். மிகவும் புகழ்பெற்ற பஞ்ச ரங்க, ஆதிரங்க க்ஷேத்ரம் .
காவிரி நதியின் கரையில் ஐந்து புகழ்பெற்ற ரங்கநாதர் ஆலயங்கள் உள . அந்த பஞ்ச ரங்க ஸ்தலங்களில் இதுவே முதலில் இருப்பதால் ஆதி ரங்க என்று வைஷ்ணவர்கள் அழைப்பர். அடுத்த நான்கு தலங்களும் தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் அமைந்துள்ளன.
ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர், மாயவரம் (தமிழ்நாடு)
நீண்ட நெடும் பாம்பான ஏழுதலை நாகத்தில் ரங்கநாதர் எனும் விஷ்ணு படுத்திருக்க, லெட்சுமி அருகில் அமர்ந்து இருக்கிறார் . பெரிய சிலை .
கோவிலில் இடம்பெறும் ஏனைய சந்நிதிகள் : ரெங்கநாயகி, ராமர், நரசிம்மர், சுதர்சனர் பஞ்ச முக ஆஞ்சனேயர் , கோபால கிருஷ்ணர்
கிபி (பொது ஆண்டு) 894 முதல் வரலாறு இருப்பினும் அதற்கு முன்னரே கோவில் இருந்திருக்க வேண்டும் ஒவ்வொரு வம்ச மன்னர்களும் கட்டிடங்களை எழுப்பி கோவிலைப் பெரிதாக்கினார்கள் .
நுழை வாயிலில் இருக்கும் 4 பெரிய தூண்களில் விஷ் ணுவின் 24 வடி வங்கள் அலங்கரிக்கினறன.
ஹொய்சாள பாணி கலை அம்சங்களை அவை பிரதிபலிக்கின்றன .
பிரகாரத்தில் புராணக்கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன ரங்கநாத சுவாமியின் ரத சிற்பம் அற்புதமாக இருக்கிறது . காவிரி நதியானது அதன் போக்கில் மூன்று தீவுப் பகுதிகளை உண்டாக்கியது. சிவா சமுத்திரம், ஸ்ரீரங் கப்பட்டணம் , திருச்சி/ ஸ்ரீரங்கம் .மூன்று இடங்களில் உள்ள கோவில்களையும் பார்ப்பதில் கர்நாடக வைஷ்ணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் .
XXXXX
38.Brahmeswara Temple. பிரம்மேஸ்வரர் .கோவில்
மாண்ட்யா மாவட்டம் கிக்கேரியில் அமைந்த ஹொய்சளர் கோவில் இது .
900 ஆண்டு பழமை உடைய இந்தக் கோவில் தொல்பொருட் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது . மிகவும் சிதிலமடைந்த இந்த இடத்தில் ஒரு மியூசியமும் இருக்கிறது . எவரும் அங்கு வருவதில்லை என்று அதிகாரிகள் குறைப்பட்டுக்கொள்கின்றனர் . கோவிலுக்குள் நடன மாதர்களின் சிற்பங்களை பல ‘போஸ்’களில் காணலாம். வெளியே சுவர்களில் வெவ் வேறு கட்டிட பாணிகளைக் காணலாம்.
சிவன் சந்நிதியுடன் தேவி சந்நிதியும் இருக்கிறது பிரமேஸ்வரரை நோக்கி வலது புறம் விஷ்ணு , இடது புறம் சிவன் சந்நிதிகள் இருப்பதால் இதை திரிகூட ஹொய்சாள கோவில் என்பர் விமானத்தின் அகலம் 22 அடி.
நிறைய சிற்ப ரத்தினங்கள் நிறைந்த இந்தக்கோவிலில் பொட்டு வைத்துக்கொள்ளும் அலங்காரி , வேலைப்பாடு அமைந்த தூண்கள், லட்சுமி நரசிம்மர், கணேசர், மகிஷாசுர மர்தனி, உமா மஹேஸ்வரர் , கால பைரவர், சென்னை கேசவர் முதலியன கண்டு ரசிக்கத்தக்கவை.
பிரம்மா, விஷ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் கலைமகள் அலைமகள் , மலைமகள் ஆகியோருடன் ஒன்றாகக் காட்சி தருவதும் குறிப்பிடத்தக்கது..
Basaralu Temple. மல்லிகார்ஜுனர் கோவில்
தொடரும் …………………tags- கர்நாடக மாநில, 108 , புகழ்பெற்ற கோவில்கள் – 6 ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
பிசாசு ரௌடி கார்!
ச.நாகராஜன்
ஶ்ரீ கிருஷ்ண பிரபன்ன ராமானுஜ்தாஸ் (Sri Krishna Prapanna Ramanujdas) அவர்கள் SCIENCE FAILS TO ANSWER என்ற தலைப்பில் பல அரிய பிரமிக்க வைக்கும் சம்பவங்களை கல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழான TRUTH பத்திரிகையில் தந்து வருகிறார்.
தொகுதி 91 – (9-7-23 தேதியிட்ட) இதழ் 8 இல் அவரது கட்டுரையில் ஒரு பகுதி இது:
மோரிஸ் ஓனர் (MORRIS OWNER – June 1941) 1941 ஜூன் இதழில் வெளியாகியுள்ள ஒரு செய்தி அறிக்கை இது:
யூகோஸ்லேவியாவில் ப்ரிக் ரெட் ஃபேன்ஸி (Brick Red Fancy) கார் ஒன்றை ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்ட் (ARCHDUKE FERDINAND) வாங்கினார்.
ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்டும் ஆர்ச் ட்யூகெஸ் சோபியாவும் (ARCHIDUKE FERDINAND, ARCHDUCHESS SOPHICA) அந்தக் காரில் 29-6-1914 அன்று பயணம் செய்து கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டனர்.
இந்த அரசரும் அரசியும் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்தக் காரை சரஜீவோவின் (Sarajevo) கவர்னர் வாங்கினார். அந்தக் கார் அவரது கார் ஷெட்டில் இருந்தது. அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். காரில் ரத்தக் கறை இருந்தது.
மூன்றாவதாக அதை ஆறாவது ஆஸ்ட்ரியன் ஆர்மியைச் சேர்ந்த ஜெனரல் போடியுரெக் (General Potiurek) வாங்கினார். அவருக்கு அந்தக் கார் மிகவும் பிடித்திருந்தது. வாலிவா யுத்தத்தில் (Vallevar War) அவர் தோற்கடிக்கப்பட்டார். அவருக்குப் பைத்தியம் பிடித்தது.
அடுத்து அந்தக் காரை ஆஸ்ட்ரியன் படைத் தலைவர் வாங்கினார். ஆனால் அவரது திறமைசாலியான டிரைவர் தன்னையும் சாகடித்துக் கொண்டு இரு பாதசாரிகளையும் சாக அடித்தார்.
யூகோஸ்லேவியாவின் கவர்னர் அதை வாங்கினார். அதை ஓட்டும் பொது அவரது வலது கையை அவர் இழந்தார்.
ஒரு டாக்டர் அந்தக் காரை கவர்னரிடமிருந்து வாங்கினார். கார் தறி கெட்டு ஓட அவர் ஒரு சாலை விபத்தில் இறந்தார்.
அந்த அழகிய சிவப்பு வண்ணக் காரை வாங்கிய ஒரு மனிதர் அதை வேண்டுமென்றே மலை ஒன்றில் செலுத்தினார். ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
கடைசியாக மிஸ்டர் ஹார்ஷ்ஃபோல்ட் (Mr Harshfold) என்பவர் அந்தக் காரை வாங்கினார். அவரது திருமண ஊர்வலத்தின் போது அவர் அந்தக் காரை ஓட்ட, ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு நான்கு நண்பர்களுடன் அவரும் இறந்தார்.
13 வருடங்கள் கழிந்து 1927ஆம் ஆண்டு அந்தக் கார் சுக்கு நூறாக்கப்பட்டது.
பிசாசு ரௌடி கார் அதன் உரிமையாளர்களைப் படுத்திய பாடு கொஞ்சமா, நஞ்சமா என்ன?