செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்!(11,853)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,853

Date uploaded in London –   30 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்! 

ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து எழுவார்களா? – 1 

ச. நாகராஜன் 

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி. 

செகுலரிஸத்திற்கு பலிக் கடா ஆனவன் ஹிந்து! 

செகுலரிஸம் என்றால் மதச் சார்பின்மை.

 1947ஆம் ஆண்டிலிருந்து செகுலரிஸம் என்றால் ஹிந்துக்கள் மற்ற மதத்தினருக்கு அசாத்திய சலுகைகள், முன்னுரிமைகள் கொடுக்க்ப்பட வேண்டும், இதர மதங்களைப் போற்றோ போற்று என்று புகழந்து தள்ளிக் கொண்டிருப்பதோடு இருந்தால் போதாது, தங்கள் மதக் கடவுள்களை, சம்பிரதாயங்களை இழிவு படுத்தும் போது தட்டிக் கேட்கக் கூடாது, இது தான் செகுலரிஸம் என்று சொல்லப்பட்டு வருகிறது; நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது.

கோவில் நிலத்தை லயோலா கல்லூரி ஆக்கிரமித்து லீஸ் முடிந்த பின்னும் தரவில்லை.

கேட்காதே. கல்வி சொல்லித் தருகிறார்கள் ஐயா! கல்விக் கூடம் அது.

ஐயையோ, பிள்ளையார் கோவிலை இடிக்கிறார்கள் ஐயா?

“இடித்தால் என்னா, ரோடை அகலப் படுத்தப் போகிறார்கள், ஊருக்குத் தானே நன்மை! 

ஐயையோ, மதுரை டவுன்ஹால்ரோடில் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து சுற்றிலும் கடைகள் போட்டு விட்டார்கள் ஐயா! 

“அதனால் என்ன? ஏழை வியாபாரிகள் வாழ வேண்டாமா என்ன?

எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்றன? அவை உங்களை வாழ்த்துமே.

 “ அரசாங்க நிலம்த்தில் ஊருக்கு நடுவில் சர்ச் கட்டி விட்டார்கள்  ஐயா!”

“அதனால் என்ன? அவர்கள் வழிபாடு நடத்த வேண்டாமா? சகிப்புத்தன்மையே உங்களுக்குக் கிடையாதா? அரசாங்க நிலம் தானே, உடனே ஒரு பக்கத்தில் மனு ஒன்றைக் கொடுத்து விடுவோம். அதிலேயே அதில் கட்டுவதற்கான அல்லது கட்டியதை நியாயப்படுத்தியதற்கான ஆணையை வாங்கி விடுவோம்.”

  ஆயிரக் கணக்கில் அடுக்கடுக்காக, ஆதாரங்களுடன் பாரத நாடு முழுவதும் செக்குலரிஸத்தின் பேரால் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தவறாக எதைச் செய்தாலும் அதைச் சொல்வது கூட செக்குலரிஸத்திற்கு எதிரானது என்பது எப்போது போகும்?

ஏன் இந்த தேசத்தை ஹிந்து ராஷ்டிரம் என்று அறிவிக்கக் கூடாது?

 ஒரு ஹிந்துவுக்கு ஏசுவும் தெய்வம் தான்; அல்லாவும் தெய்வம் தான்; புத்தரும் தெய்வம் தான், சிவனும் விஷ்ணுவும் விநாயகரும், முருகனும், துர்க்கையும் தெய்வம் தான்.

ஆனால் கிறிஸ்தவர்களுக்கோ ஏசு ஒருவரே ரக்ஷிப்பவர். அவரை ஏற்காவிட்டால் ஏற்காதவர்கள் பாவிகள்.

முஸ்லிம்களுக்கோ அல்லாவை ஏற்காதவர்கள், காபிர்கள். 

ஆக அனைவரையும் மதித்து போற்றி  உயர ஏற்றி வைப்பவர்கள் ஹிந்துக்களே!

ஆனால் அவர்களுக்கு மத வழிபாட்டில் சுதந்திரம் இல்லை; கோவிலுக்கும் அதன் சொத்துக்கும் பாதுகாப்பு இல்லை.

கோவிலின் பிரகாரத்தில் பிரம்மாண்டமான கார்; கோவில் சொத்தில் அதிகாரிக்கு கார். அது நிற்கும் இடம் கோவில் பிரகாரம்.

கோவில் அர்ச்சகருக்கு நினைக்கவே நெஞ்சம் பதறும் வகையில் குறைந்த சம்பளம்!

யூடியூபில் ஆதாரத்துடன் காண்பிக்கப்படும் இது போன்ற காட்சிகளை நூற்றுக் கணக்கில் பார்க்கிறோம்.

ஆனால் ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து இதைத் தட்டிக் கேட்பதில்லை.

தட்டிக் கேட்கும் ஹிந்து முன்னணி போன்ற இயக்கங்களுக்கு உரிய விதத்தில் ஆதரவும் தருவதில்லை. 

ஒரு பெரிய வாதம் முன் வைக்கப் படுகிறது.

என்ன அது?

அஹிம்ஸா பரமோ தர்ம: என்ற உலகப் பிரசித்தி பெற்ற ஸ்லோக வரி எடுத்துக் காட்டப் படுகிறது.

ஆனால் செகுலரிஸத்திற்கு என்ன கதியோ அந்த கதி தான் இந்த ஸ்லோகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. 

பாவிகள், பாதி ஸ்லோகத்தைத் தான் மேற்கோளாகக் காட்டி ஹிந்துக்களின் வாயை அடைத்து விடுகிறார்கள்.

 அஹிம்ஸா பரமோ தர்ம: என்பதற்கு அடுத்தாற் போல வருவதை யாருமே சொல்வதில்லை.

அது என்ன?

“அஹிம்ஸா பரமோ தர்ம: தர்ம ஹிம்ஸா ததைவ ச” 

அஹிம்சையே உயரிய தர்மம்; தர்மத்தைச் செய்யும் போது அதைச் செய்ய விடாது ஹிம்சை செய்வதும் தவறு. 

செகுலரிஸத்தின் அர்த்தத்தையும் நடைமுறையில் மாற்றி விட்டார்கள்; ஸ்லோகத்தையும் பாதியில் வெட்டி நொண்டி ஆக்கி விட்டார்கள்.

ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து எழுவார்களா?

To be continued………………

****

Save Beautiful Sculptures from ‘Stupid Hindus’ (Post No.11,852)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,852

Date uploaded in London – –  29 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I have posted over 100 paintings out of 220 paintings on the walls of Ramaswami temple at Kumbakonam. There are hundreds of beautiful sculptures on pillars throughout the temple. Thy need full protection.

There is a bad habit among Hindus. They act like goat herds. If someone puts some garland around a statue another person comes and lights a lamp. Third person applies butter or oil on it. The sculpture is completely spoiled.

When there are numerous gods and goddesses in many shrines in the same temple, I don’t know why some do this to many statues.

When I was standing in the Qs in temples like Tiruvannamalai, Kanchipuram and other places, one stupid person suddenly jumps up to touch the gold plated gods in the gate. Then all the people following ‘that goat’ and did the same thing.

We already know the story where a hat/cap vendor lost all his hats or caps because all the monkeys saw him wearing the cap. Each one took one cap. Then when he threw his cap all the monkeys did the same. He collected his caps and cycled away.

We know another story where a Guru tied the cat to the pole before every morning Puja. He did it because it was jumping on his lap. After his death his disciples thought that it was an important ritual part of Puja. They all bought one cat each and tied it in their Puja rooms.

I myself have seen how the Durga shrine in Madurai Meenakshi temple was soiled and spoiled. Somebody said that if a lemon lamp is lighted in Her shrine, girls will get married quickly. Though we can appreciate their faith in God, we should not encourage damaging statues and shrines . I have been visiting the temple for many decades. It started very late and not an old custom.

When we give them 100s of opportunities in the same temple to do rituals in the proper shrines they find short cuts.

When I went to Sri Mushnam temple, 10 to 15 school girls surrounded a small shrine and did some funny things, placing the notebooks, pens, text books on the head , feet, shoulder of the Goddess. When we approached them, they stopped it. After we lef,t they started it again.  In course of time the statue may be disfigured.

When I went to Uttarakosamangai Shiva temple to see the famous Nataraja, renovation work was going on. The priest took us around to show he important places. In a dark corridor, a teenage girl was taking a selfie with a particular goddess. Probably she thought it was a short cut for success in exam or love affair etc.

Swami Kripananda Varaiar, Swamil Chitbhavananda and other famous speakers have shown the right path to youngsters. We need more such good speakers.

Temples must display boards not to spoil any statue with oil or flowers etc.

Let us encourage faith in God but should not encourage stupid, unknown, NEW superstitious customs or rituals.

Look at the beautiful sculptures from Kumbakonam Ramaswami Temple. I took these pictures on 19th February 2023.

–subham—

Tags–Kumbakonam, Sculptures, Ramaswami Temple, Stupid rituals, customs

ரமணாஸ்ரமம், சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் விஜயம் (Post no.11,851)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,851

Date uploaded in London – –  29 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருவண்ணாமலைக்கு எத்தனையோ முறை போய்விட்டேன். ஆனால் 2022 இந்திய விஜயத்தின்போது நான் உள்ளே நுழையும் போது சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமக் கதவைப் பூட்டிவிட்டார்கள். எல்லோரும் தட்டு  நிறைய தயிர் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். என்னையும் என் மனைவியையும் பிரசாதம் வாங்கிக் கொள்ளுங்கள், முடியப்போகிறது என்று சொன்னார்கள். நாங்கள் சென்றதோ அருட் பிரசாதத்துக்கு; பொருட் ப்ரசாதத்துக்கு அன்று. ஆகையால் உள்ளே சென்று கம்புக்கிராதி வழியாக பூட்டிய சந்நிதியைப் பார்த்தோம். திருப்தி இல்லை.

ஆகையால் 2023 பிப்ரவரி இந்திய விஜயத்தின்போது , ஒரே நோக்கத்தோடு, சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரம தரிசனம் என்னும் ஒரே நோக்கத்தோடு ,காரை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து பறந்தோம். என்னுடன் வர வேண்டியவர்களால் வர முடியவில்லை. ஆக நானும் டிரைவரும் மட்டும்தான்.

திருவண்ணாமலையில் இரண்டே மணி நேரத்துக்குள் என்ன செய்ய முடியும் என்று திட்ட மிட்டோம். மாலை 3 மணிக்குப்பின்னர் அண்ணாமலை குன்றினை காரிலிருந்து தரிசித்தோம். ரமணாஸ்ரமம் இரண்டு மணிக்கே திறக்கும் என்பதால் முதலில் ராமணருடைய ஆசிரமத்துக்குள் நுழைந்தேன்.

இந்த முறை இந்தியப்பயணத்தில் வினோத அனுபவங்கள்; நான் சென்ற 30 கோவில்களில் ஆகம ரீதியிலான பக்தி மார்க்கம் . அதாவது தேங்காய், பூ, பழம் , தட்டு, நெய் தீப ஆராதனை  (Ritual worship)முதலியன.

கோவிந்தபுரம் முதலிய இட ங்களிலோ ஆட்ட பாட்டங்களுடன் (Dance and Music) சேர்ந்த பஜனை வழி பக்தி. இது முன்னர் சொன்னதிலிருந்து வேறுபட்டது.

ரமண ஆச்ரமத்திலோ வித்தியாசமான ஞான மார்க்கம். அவரது சமாதிக்கு முன்னர் தியான மண்டபத்தில் (Meditation) உட்கார்ந்துகொண்டு “நான் யார் ? Who am I ? என்று சிந்திக்க வேண்டும். மெளனமான தியானத்தின் மூலமே ஆனந்தம் பெறலாம். மனத்தை உட்புறமாகத் திருப்பி உன்னையே நீ எண்ணிப்பார் ; நாம் எல்லோரும் பிறந்ததே ஆனந்தத்துடன்தான். அதைத் தேடத் தேவையே இல்லை . மூடி மறைத்ததுள்ள திரைகளை அகற்றினால் போதும்” என்ற உபதேசம்.

நானும் தியான மண்டபத்தில் அமர்ந்து சுமார் 50 பேருடன் அரை மணி நேரம் தியானம், துதிப்பாடல் மனனம் ஆகியவற்றைச் செய்துமுடித்தேன்.

எனக்குப் பின்பக்கத்தில், தியான மண்டபத்தில், ஒரு நாய் மிகவும் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் மட்டும் அவ்வப்போது திரும்பிப் பார்த்துக்கொண்டே தியானம் செய்தேன் . வழக்கமான விஷ்ணு சஹஸ்ர நாமம் முதலியவற்றைப் படித்தேன்

முதல் தடவையாக ரமண ஆஸ்ரமம் முழுவதையும் சுற்றிப்பார்த்தேன் காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்ற பாரதி வாக்கினை அங்கே செயலில் கண்டேன் . ரமணர் நேசித்த பல பிராணிகளின் சமாதிகள்  பின்புறத்தில் மண்டபங்களுடன் அமைக்கப்பட்டிருந்தன . காகத்தின்(Crow ) சமாதியையும் பல பிராணிகளின்

சமாதிகளையும் கண்டேன் . அங்கு ரமண பக்தர்களின் சமாதிகளும் இருக்கின்றன .

ரமணர் தொடர்பாக என் தந்தை வாங்கிச் சேகரித்த பொக்கிஷம் அனைத்தும் என் சகோதரர்களிடம் இந்தியாவில்  இருந்ததால், லண்டனுக்கு எடுத்துவர, ஒரு தமிழ், ஒரு ஆங்கிலப் பொன்மொழி புத்தகங்களையும் அங்குள்ள புத்தகக கடையில் வாங்கினேன். அருமையான புத்தகங்கள். (அதிலுள்ள தமிழ் ஆங்கிலப் பொன்  மொழிகளை போன மாத, இந்த மாத காலண்டர் பகுதியில் என் பிளாக் BLOG குகளில் காணலாம் ).

மணி 4 ஆகிவிட்டது. சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் GATE கேட் திறந்தவுடன் முதல் ஆளாக உள்ளே நுழைந்தேன். என்னுடன் 3, 4 பேர் மட்டுமே இருந்தனர் . அவருடைய சமாதி அமைந்த கோவில் இது. பல முறை அவரது கோவிலை வலம் வந்தேன் அலுவலத்துக்குச் சென்று காணிக்கை செலுத்தி ரசீதும் பிரசாதமும் பெற்றுக்கொண்டேன் . பரம திருப்தி

சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை முழுதுமே அற்புதச் செயல்கள் நிறைந்தது; இதே பிளாக்கில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய கட்டுரைகள் இருப்பதால் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் வரலாற்று அற்புதங்களைத் திருப்பி எழுதத் தேவை இல்லை..

அங்கு உமாதேவியார் , கண்ணாடி சுவாமிகள் என்று பல பக்தர்கள், சித்தர்களின் சமாதிகளும் இருக்கின்றன .

அவரை நம்பி வேண்டிக்கொண்டபோது எனக்கும் அவை நிறைவேறியதால் அபரிமித நம்பிக்கை. அவருடைய வரலாற்றை முறையாக விவரிக்கும் சேஷாத்ரி சுவாமிகள் சரிதத்தை எனது அண்ணன் சீனிவாசன் எப்போதும் படித்து எங்களுக்குச் சொல்லுவான். ஏய் , உன் பைபிள் எங்கே? என்று கிண்டல் செய்வோம். அந்த ஒரிஜினல் புஸ்தகம் இப்போது கிடைப்பதில்லை.. ஆக 60 ஆண்டுக்கால பக்தர்கள் நாங்கள். ரமண மகரிஷி புஸ்தகங்களையும் எனது தந்தை தினமணி சந்தானம் வாங்கிக் குவித்து வைத்திருந்தார்.

60, 65 ஆண்டுகளுக்கு முன்னர், மதுரையிலுள்ள சொக்கப்ப நாயக்கன் தெரு ரமணர் வீட்டில் உட்கார்ந்து தியானம் செய்தபோதும் அவருடைய உபதேசங்களை இப்போதுதான் படிக்கிறேன்.

இன்னும் விட்டுப்போன ஒரே ஆஸ்ரமம் யோகி ராம் சுரத் குமார் ஆஸ்ரம ம்தான் .

பின்னர் நேராக திருவண்ணாமலைக் கோவிலில் நுழைந்தேன். பல முறை தரிசித்த கோவில் என்பதால் நேராக சுவாமி, அம்மன் சந்நிதிகளைத் தரிசித்துவிட்டு சென்னை திரும்பினேன்.

பிரம்மாண்டமான கோவில். எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். எப்படி எனில் ……………

லண்டன் அருகிலுள்ள ஒரு ஊரில் வசிக்கும் ஈஸ்வரி கமல பாஸ்கரன் என்ற இந்துப் பெயருடைய ஒரு ஆங்கிலப் பெண்மணி திருவண்ணாமலை கோவில் பற்றி எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்துக் கொஞ்சம் புண்ணியம் சம்பாதித்து இருந்தேன். அதில் எழுதிய விவரங்கள் எல்லாம் வேகமாக மனத்திரையில் ஓடின.

சென்ற முறை கிரிவலம் பற்றி எழுதி புகைப்படங்களையும் இங்கே போட்டிருக்கிறேன்.

அண்ணாமலைக்கு அரோஹரா என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறி ‘சிட்’ டாகப்பறந்தேன் சென்னைக்கு.

–சுபம்—

Tags- திருவண்ணாமலை, கோவில், ரமண, ஆஸ்ரமம் , சேஷாத்ரி சுவாமிகள்

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 2 (Post No.11,850)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,850

Date uploaded in London –   29 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

நித்யானந்த மர்மம்!

 யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 2 

ச.நாகராஜன் 

ஜெனிவாவில் உள்ள ஐக்கியநாடுகளின் சபையில் அவ்வப்பொழுது பல மாநாடுகள், கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

சென்ற மாதம், பிப்ரவரி 2023இலும் அப்படிப்பட்ட கூட்டங்கள் நடைபெற்றன.

Committee on Economic, Social and Cultural Rights (CESCR) மற்றும் Committee on the Elimination of Discrimination against Women (CEDAW) ஆகியவற்றின் கூட்டங்களும் ஜெனிவாவில் யு.என். தலைமை அலுவலகத்தில் நடைபெற்றன.

 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பலாய்ஸ் வில்ஸன் (Palais Wilson Building) கட்டிடத்தில் மாநாடுகளின் பங்கு பெறுவோர், என் ஜி ஓக்கள், நிரந்தரமான குழுக்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பல நாடுகளிலிருந்தும் வந்திருக்க, அந்த அறையே ஜே  ஜே என்று இருந்தது.

அதில் ஒரு விசித்திரமான காட்சி இந்தத் தடவை இருந்தது. பத்து பன்னிரெண்டு பெண்மணிகள்  ஆரஞ்சு வண்ண சேலைகளைக் கட்டிக் கொண்டு தங்க நகைகளை அணிந்து கொண்டு முடி அலங்காரம் செய்து கொண்டு திலகம் தீட்டிக் கொண்டு வந்திருந்தனர்.  அவர்கள் பின்னால் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் இருந்த போர்டு ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா” என்று இருந்ததால் அந்த நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் அவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. விஜயபிரியா நித்யானந்தா தான் அந்த நாட்டின் நிரந்தர தூதுவர்.

அவர்கள் தங்களது சுப்ரீம் மதகுரு எப்படி எல்லாம் ஹிந்து விரோத சக்திகளால் கொடுமைப்படுத்தப் படுகிறார் என்று எடுத்துரைக்க ஆரம்பித்தனர்.

சோஷியல் மீடியா அசந்து போனது.

கைலாஸா நாடு இல்லவே இல்லையே உலக வரைபடத்தில்?

நித்யானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடர் அருகே ஒரு இடத்தை வாங்கி ‘கைலாஸாவை’ நிர்மாணித்தார் என்று சொல்லப்படுகிறது.

ஈக்வேடாரோ அவர் வந்தது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டது.

ஆனால் எந்தத் தீவையுமோ அல்லது இடத்தையோ அவருக்கு விற்கவில்லை என்று உறுதிபடச் சொன்னது.

ஈக்வேடாருக்கு ஏன் நித்யானந்தா சென்றார்? அந்த நாட்டுடன் தேவையானோரை திருப்பி அழைக்கும் உடன்படிக்கையை இந்தியா செய்து கொள்ளவில்லை என்பது தான். ஆகவே அங்கு சென்று புகலிடமாக அதை அடைந்த ஒருவரை இந்தியாவிற்கு நினைத்தபடி மீண்டும் கொண்டு வர முடியாது.

அது சரி, ஐநா சபை கூட்டங்களில் கைலாஸா நாட்டினர் எப்படிக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்?

இதற்கு ஐ நா அதிகாரிகள் பதில் கூறி விட்டனர்.

இது போன்ற கூட்டங்களில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், தங்கள் பிரச்சினைகளைப் பற்றி மனுக்களைத் தரலாம். அவற்றைப் பெற்ற பின்னர் அவற்றின் உண்மைத் தன்மை பற்றி அதற்கான குழுக்கள் ஆராயும் என்றனர் அவர்கள்.

VIJAYAPRIYA

இது ஒரு புறமிருக்க கைலாஸா நாடு அமெரிக்காவில் உள்ள 30 நகரங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது.

நெவார்க் நகரம் (Newark City) ‘Sister City’ ஒப்பந்தம் ஒன்றை கைலாஸா நாட்டுடன் செய்து அலுவலக சீல் சகிதம் நிறைவேற்றியுள்ளது.

ஒப்பந்தம் முடிந்த ஆறாம் நாளில் தான் அந்த நகரம் கைலாஸா நாடு பற்றிய ‘உண்மையை’ அறிந்து திகைத்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அறிந்து சங்கடப்பட்டது.

ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அனுப்பிய கைலாஸா நாட்டு ஈமெயில் தாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளது.

கைலாஸா நாடு எல்லையே இல்லாத சேவையையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு உண்மையான நாடு என்று அது தெளிவுபடுத்தியது.

கைலாஸா நாடு ஒவ்வொரு ஆண்டும் வரும் ஜனவரி 3ஆம் தேதியை நித்யானந்தா டே என்று அறிவித்துள்ளது.

கைலாஸா நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் அதன் அதிகாரபூர்வமான விமான சர்வீஸான கருடாவில் ஏறிச் செல்லலாம்.

மூன்று நாட்கள் தங்கலாம்.

தங்குமிடம், உணவு இலவசம்.

பாஸ்போர்ட், விசா எல்லாம் உண்டு.

என்றாலும் கூட கோவிட் பாதிப்பு உலகையே கலக்கிய காலத்தில் இந்தப் பயண அனுமதி நிறுத்தப்பட்டது.

யார் என்ன சொன்னாலும் நித்யானந்தாவின் உறுதியான சீடர்கள் உலகெங்கும் உள்ளனர். சென்னையிலும் உள்ளனர்.

அவர்களில் பலர் – பெண்மணிகள் உட்பட – நித்யானந்தாவின் உருவத்தைத் தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டுள்ளனர்.

 உலகின் ஒரே ஹிந்து தேசம் என்று தன்னை உறுதிபடச் சொல்லும் கைலாஸா தங்கள் நாடு சிறந்த முறையில் திறம்பட உலக நன்மைக்காக இயங்குகிறது என்று கூறுகிறது.

**

நன்றி, ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை, 26-3-2023 இதழ்

கட்டுரை தலைப்பு:

“Decoding the fictional country of Kailasa that catfished 30 US cities”

By Mohua.Das@timesgroup.com                                                              இந்தக் குறுந்தொடர் முற்றும்

Part 7 of Kumbakonam Wonders :Picture Ramayana on Temple Walls (Post No.11,849)

Sita Devi blessing Hanuman

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,849

Date uploaded in London – –  28 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Lakshmana and Ravana getting ready for afi

Dont insult ambassador Hanuman; it is against law, warns Vibhishana.

Ten Headed Ravana shoting an arrow.

This is the last part of the Paintings on the walls of Ramaswami Temple at Kumbakonam in Tamil Nadu.

I did not take the pictures of all the 220 paintings. I just took only about 100 pictures with my I pad in half hour.

There are two huge paintings, well protected in a locked room which we can see from out side.

Like I said  before, a full book is required with exact details. Please don’t allow any foreigner to do it. Only Hindus must do it or allowed to do it.

I have lots of books here in London , in the British Library and SOAS, University of London Library, mocking at us, while giving beautiful pictures. Since they believe in Non Hindu religions, they do it subtly.

Many of the foreigners are anti Hindu fanatics and they attack Hinduism very subtly, when writing about temples. They don’t have faith, but good technology and resources.

Our illiterate Bhattars (priests) and temple authorities open the gates for them without a single question, but deny access to us completely. I know about the Selfi maniacs amongst us and bad Dravidians.  We should not allow them as well. But genuine Hindu scholars must be given access and the copy right should rest with the temple and not with the individual.

Vibhishana’s Coronation

Monkey Brigade/ Vanara Sena in happy mood

Rama Lakshmana Anjaneya

Indra, Brahma, Shiva, Surya and all come to welcome Rama, Sita

Vibhishana Saranagathi

This is not old painting. ; a modern one,

Rama calling the Ocean God Varuna

Huge Anjaneya paintinh

another ancient painting.

Please save and preserve the beautiful sculptures and paintings for our future generations.

–subham—

Tags-Part 7, Ramayana Paintings, Chitra, Picture, Ramayana, Ramaswami Temple

நமஸ்தே, வணக்கம் பொருள் என்ன? (Post No.11,848)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,848

Date uploaded in London – –  28 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பாதுகா பட்டாபிஷேகம் என்ற தலைப்பில் திருமுருக கிருபானந்த வாரியார் ஒரு ராமாயணச்  சொற்பொழிவு நடத்தினார். அதில் துவக்கத்திலேயே இரண்டு அருமையான விஷயங்களை வழங்கினார்.

ராமனின் தலைக்கு மேல் இருந்தது மணி மகுடம். ராமனின் காலுக்கு அடியில் இருந்தது பாதுகைகள், அதாவது காலணி . இந்த இரண்டையும் இணைத்தான் பரதன் ; (பாதுகைகளை வைத்து 14 ஆண்டு அரசாண்டான்) ஆக, பாதுகா பட்டாபிஷேகத்தின் பொருளே, சமுதாயத்தில் மேலே உள்ளவர்களும் கீழே உள்ளவர்களும் இணைய வேண்டும் என்பதுதான். ஆட்சியாளர்களும் கீழ்மட்டத்திலுள்ளவர்களும் இணைந்து ஒன்றுபடவேண்டும் .

xxx

இடது கையை எதற்குப் பயன்படுத்துகிறோம் ? தூய்மை செய்ய, உடலைச் சுத்தப் படுத்தப் பயன்படுத்துகிறோம்.. வலது கையை எப்படி உபயோகிக்கிறோம் ? உண்ணுவதற்காக உபயோகிக்கிறோம் .

ஆனால் கோவிலுக்குப் போனவுடன் வலது கையுடன் இடது கையையும் இணைத்து இறைவனை வணங்குகிறோம். இரண்டுக்கும் சம மரியாதை .

எங்காவது அகில இந்திய இடது கைகள் மகாநாடு நடந்தது உண்டா? அங்கே அவர்கள் வாரத்துக்கு ஒருமுறை நாங்கள் வேலை செய்யமாட்டோம். நாங்களும் இடது கையை உண்ணுவதற்குப் பயன்படுத்துவோம் என்று தீர்மானங்களை நிறைவேற்றினவா? இல்லையே.!

இப்படி நமஸ்தேவணக்கம் சொல்லி இரு கைகளையும் கூப்புவது ஏன்?

கீழான வேலை செய்வோரும் மேலான வேலை செய்வோரும் சமுதாயத்தில் இணைந்து செயல்படவேண்டும் என்பதே ய் இதன் பொருள்.

Xxx

எனது கருத்து

நமஸ்தே/ வணக்கம் பற்றி எவ்வளவோ தத்துவ விளக்கங்களைப் படித்து உள்ளோம்.

முதலில் ஒருவருக்கு ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறோம். எவ்வளவு பெரியவர் ஆனாலும் அவர்களும் பதிலுக்கு நமஸ்தே சொல்லுவது அவர்களின் பணிவைக் காட்டுகிறது. மேலும் எல்லோரிடத்திலும் இறைவன் உள்ளான் என்ற இந்து மத தத்துவத்தை நமஸ்தே விளக்குகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்பதே இதன் பொருள். தமிழிலும் வணக்கம் என்பது அதையே குறிக்கிறது.

 ஞானேஞ்த்ரியம் ஐந்தும் கர்மேந்த்ரியம் ஐந்தும் இணைந்து இறைவனை அடைவதைக் குறிக்கிறது என்றெல்லாம் தத்துவ விளக்கம் சொல்வதைவிட இழிவான வேலை  செய்யும் இடது கையும் மேலான வேலை  செய்யும் வலது கையும் இல்லாமல் உடல் இயங்காது. சமுதாயமும் அப்படித்தான். ஆனால் தாழ்வு, உயர்வு என்பதெல்லாம் நம் மனக் கற்பனையே என்பதே பொருத்தமாக இருக்கிறது.

வாரியார் சுவாமிகள் சொல்லுவது போல இடதுகைகள் மஹாநாடு கூட்டி ஸ்டிரைக் STRIKE செய்வதற்கு தீர்மானித்தாலோ அதே போல வலது கைகள் மகாநாடு கூட்டித் தீர்மானித்தாலோ என்ன ஆகும்?

இவையெல்லாம் தவறு என்பதை இரு கைகள் கூப்பி வணங்குவது காட்டுகிறது. நமஹ= வணங்குதல் என்ற சொல் வேத மந்திரங்களிலேயே இருக்கிறது.

CORONA DANGER

ஏனைய கலாசாரங்களில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவது, கன்னத்தில் முத்தமிட்டு அன்பைக்  காட்டுவது எல்லாம் இருக்கிறது. இவை எல்லாம் சுகாதாரக் கேடானவை, நோய் பரப்பும் கருவிகள் என்பது CORONA கொரோனா என்னும் சீன வைரஸ் பரவியவுடன் தெரிந்தது. இப்போது நமஸ்தேயை உலகமே ஏற்கிறது .

வாரியார் சுவாமிகள் அளித்த விளக்கம் எல்லோருக்கும் புரியும். அவர்தம் உரைகளைக்  கேட்டுப் பயன் அடைவோமாக!

Xxxx

வாரியார் நகைச் சுவை

மேலும் சில வாரியார் சொற்பொழிவுப் பொன்மொழிகள் :–

குளத்தில் இருந்தால் நீர்; அதுவே வியாபாரியின் குடத்தில் இருந்தால் மோர்!

xxx

கணவன் வீட்டுக்கு வந்தால் மனைவி பையைப் பார்ப்பாள்;

தாயோ அவனுடைய வயிற்றைப் பார்ப்பாள்

( என் மகன் சாப்பிட்டானானா , இல்லையா என்று கவலைப்படுவதால்)

xxx

கேதாரம் சென்றால் சேதாரம் வாராது

(கேதார்நாத் சிவனைப் பார்த்தால் அழிவே இல்லை)

xxx

எத்தனை வயது மகன் வீட்டுக்கு வந்தாலும் அம்மாவுக்கு அவன் குழந்தை

மனைவியோ கிழவன் வந்துவிட்டான்; அப்புறம் உன்னிடம் பேசுகிறேன் என்று அடுத்த வீட்டு அம்மணியிடம் சொல்லுவாள்

xxx

–subham—

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 1 (Post No.11,847)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,847

Date uploaded in London –   28 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

நித்யானந்த மர்மம்!

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 1 

ச.நாகராஜன்

டைம்ஸ் ஆஃப் இந்தியா 26-3-2023 தேதியிட்ட இதழில்  ஒரு புதிய “நாடு” பற்றிய சுவையான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

நம்புவதும், நம்பாததும் படிப்பவரது இஷ்டம்.

ஆனால் அது சுட்டிக் காட்டும் கைலாஸ நாடு நம்மை, புல்லரிக்க வைக்கிறது.

செய்தித் தொடரில் சில முக்கிய விஷயங்கள் :

விஜயப்ரிய நித்யானந்தா!

பெயரைச் சொன்னாலே உருகிப் போகும் பக்தர்கள் கூட்டம் ஒரு புறம்.

ஆள் எங்கே என்று பிடிக்க அலையும் அதிகாரிகள் கூட்டம் மறுபுறம்.

கற்பழிப்பு, குழந்தைக் கடத்தல், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் சித்திரவதை செய்தல் உள்ளிட்ட இன்ன பிற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தா இந்தியாவை விட்டு 2019ஆம் ஆண்டு தப்பி ஓடினார்.

இன்று வரை ஆளைப் பிடிக்க முடியவில்லை.

தன்னைத் தானே இந்து மதத்தின் உயரிய சாமியார் என்று கைலாஸா நாட்டில் அறிவித்துக் கொண்டார் அவர். (Supreme Pontiff of the Hindu country KAILASA) தன்னை ஹிந்துக்களை எதிர்க்கும் கூட்டம் அழிக்கப் பார்க்கிறது என்றும் அவர் கூறினார். அவரது பக்தர்கள் அதை ஆமோதித்தனர்.

அவரை உலகம் வியப்புடன் பார்க்கிறது. ஏன்?

குரங்குகள், சிங்கங்கள், புலிகள், பசுக்கள் ஆகியவற்றைத் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒரு வருடத்திற்குள் பேச வைப்பேன் என்று அவர் உறுதி மொழி கூறினார்.

சூரியனை நாற்பது நிமிடங்கள் தாமதமாக தான் உதிக்க வைத்ததாக அவர் கூறினார்? ஏன் இந்த தாமதம்?  ஏனென்றால் அவர் தியானம் செய்து கொண்டிருந்தாராம். ஆகவே சூரியனும் அவருக்கு கீழ்ப்படிந்து நடந்ததாம்!

பூமியைப் பற்றி இதுவரை யாரும் அறியாத ரகசியங்களை அவர் தெரிவிக்கப் போகிறாராம். அயல்கிரகவாசிகள், நாம் இதுவரை காணாத நாகரிகங்கள் நமது பூமியில் உண்டாம்!

அவரது “ME” வாக்கியம் பிரசித்தி பெற்ற ஒன்று. அது என்ன “ME” வாக்கியம்? இதோ:

‘ME’ resides in ‘me’ is residing in all of that as ‘me’, so that ‘me’ through this ‘me’, is talking to ‘me’.

கைலாஸா நாடு எங்கு இருக்கிறது.

அது இருக்கிறது, ஆனால் இல்லை!

அதாவது உலக வரைபடத்தில் நீங்கள் அந்த நாட்டைப் பார்க்க முடியாது.

அது இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது. ஆனால் அங்கு செல்ல விமானத்தில் மட்டும் போக முடியும்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா என்று தங்கள் நாட்டைப் பற்றி அந்த நாட்டின் குடி மக்கள் கூறுகின்றனர்!

அது ஒரு முக்கோண வடிவக் கொடியைக் கொண்டுள்ளது.  நித்யானந்தா மற்றும் நந்தியை அடையாளமாச் சின்னமாக (Emblem) அது சித்தரிக்கிறது.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸாவிற்கு தேசிய கீதம் ஒன்று உண்டு.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸாவிற்கு அரசியம் சட்டமும் உண்டு.

கல்வி, சுகாதாரம், வீடு அமைப்பும் உள்ளிட்ட 15 அரசு இலாகாக்கள் அங்கு உள்ளன.

அதனுடைய புழக்க நாணயத்தின் பெயர் ஸம்ஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா. ஆங்கிலத்தில் கைலாஸியன் டாலர்.

ஹிந்து பக்தர்களின் நாணயப் புழக்கத்திற்கென அந்த நாட்டில் ஒரு ரிஸர்வ் வங்கியும் இருக்கிறது.

‘இலவச ஆன்மீக சேவைக்காக’ (free spiritual services) அது கூகில் (Koogle) வழியே மின் பாஸ்போர்ட்களையும் (e-passports) வழங்குகிறது.

***                   தொடரும்

Part 6 of Kumbakonam Wonders Picture Ramayana on Temple Walls (Post No.11,846)

Hanuman  giving Rama’s ring to Sita Devi in Lanka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,846

Date uploaded in London – –  27 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 6

Pictures of Ramayana incidents and anecdotes were painted on Ramaswami Temple walls at Kumbakonam in Tamil Nadu.

About 220 pictures from the Ramayana were painted a few hundred years ago.

Here are some more pictures:

Rama asking Sugreeva to send his army for his help

Dangerous Nikumbha Cave Yaga to finish Rama

Hanuman searching Sita devi in Ravana’s Palace

Hanuman fighting with Angaradhara

Ravana asking Rakshasis to persuad Sita

Ravana’s source of strength is explained to Rama by Angathan and Jambavan

Hanuman fighting with Seven Sons

Indrajit shooting Brahmastra on Hanuman 

Hanuman fighting with Akshayakumara

Indrajit, binds Hanuman with Brahmastra

—subham–

Pictures, Ramayana, Ramaswami Temple, Kumbakonam, Part 6

கரும்பு ஆயிரம் பிள்ளையார் கோவிவிலில் தரிசனம் (Post.11,845)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,845

Date uploaded in London – –  27 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிள்ளையாருக்கு உள்ள வினோத அடைமொழிகள் போல வேறு எந்த இந்துக் கடவுளுக்கும் விசித்திரமான அடைமொழிகள் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு பெயருக்கும் பின்னர், ஒரு கதை அல்லது சம்பவம் இருக்கும். மதுரை மேல மாசிவீதி பிள்ளையார் கோவிலில் நேருஜி பெயர் ஒட்டிகொண்டது ! சாமியே கும்பிடாத காஷ்மீரிப் பார்ப்பான் ஜவஹர்லால் நேரு. ஒரு காங்கிரஸ்கார கவுன்சிலர் சொன்னதற்காக மதுரையில் நேருவின் கார் அங்கே நின்றதாம். இதனால் நேருவின் பெயர் ஒட்டப்பட்டது.

அட , இது புது வழக்கம் என்று நினைத்து விடாதீர்கள்.   இது புது வழக்க ம் அல்ல. திருவண்ணாமலைக் கோவிலுக்குள்நுழைந்தால் ஒரே கோவிலுக்குள் பல பிள்ளையார் பெயர்களைக் காணலாம். அவ்வளவு பிள்ளையார் பெயர்களுக்கும் விளக்கம்  எழுத ஒரு ‘என்சைக்ளோபீடியா’ தேவைப்படும். இது 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ராஜ ராஜன் சோழன் காலத்திலிருந்து இருந்து வருகிறது. நம்பி ஆண்டார் நம்பியைத் திருப்திப் படுத்துவதாற்காக சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட பொல்லாப் பிள்ளையார் முதல் மதுரை மீனாட்சி  கோவில் முக்குறுணி விநாயகர், விபூதிப்  பிள்ளையார் வரை  சொல்லிக்கொண்டே போகலாம்.

லண்டனில் வசிக்கும் சாமிநாதன் என்ற நண்பர், கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் ஆலயம் கோவிலில் நீண்ட நெடுங்காலம் பூ ஜை செய்த பட்டரின் மகன் ஆவார். அவர் இந்தப் பிள்ளையாரின் மஹிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருந்த தால். இந்த முறை இந்திய விஜயத்தில் அவரைச் சந்தித்து ஒரு ஸலாம் (சல் யூட்).போடத்  தீர்மானித்தேன். அதன்படி ஒரே நாளில் 6 கோவில் தரிசன சூறாவளி சுற்றுப் பயணத்தில் 19-3-2023 அன்று நாங்கள் 3 பேர் அந்தக் கோவிலில் பிள்ளையாரைத் தரிசி த்து அருளாசி பெற்றோம். நல்ல சாந்நித்யம் உள்ள கோவில். நாமே வைப்ரேஷன்VIBRATIONSகளை உணரலாம். சுமாரான கூட்டம்; எளிதான தரிசனம்.

Xxxx

இதோ அவர் கதை  :

இக்கோயில் பற்றி திருக் குடந்தைப்  புராணம் போற்றுவதைக் கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.

அருகரும்புத் தரும்வியப்ப அவனியொரு

கோட்டுநுனி அமைத்துத் தீயோர்

திருகரும்புக் கிடங்கொடாச் செங்கண்வரி

கமும்கிழத் தேதே யென்று

வருகரும்புட் குலமுழக்கு மலர்க்கேழற்

புனற் கோட்டார் வணிகன் பாங்கர்

ஒருகரும்புக் காயிரங்கொண் டுறுகரும்பா

யிரக்களிற்றை உளங்கொள்வோமே“

பிரசித்திபெற்ற கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு அணித்தே உள்ளது கரும்பாயிரம் பிள்ளையார் கோவில் . ஒரு காலத்தில் வராகப் பிள்ளையார் என்ற பெயர்தான் இருந்தது. ஏனெனில் அருகிலுள்ள வராகப் பெருமாள் கோவிலை ஒட்டி அதற்காக அமைக்கப்பட்டது. பின்னர் பிள்ளையார் செய்த லீலையால் கரும்பு ஆயிரம் ஒட்டிக்கொண்டது.

அது என்ன கதை?

ஒரு வியாபாரி ஆயிரக்கணக்கான கரும்புகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு கரும்பு ஆலைக்குச் சென்று கொண்டிருந்தான். யானைக்கு கரும்பு என்றால் கொ ள்ளை ஆசைதானே ! ஆனை  முகப் பிள்ளையார் ஒரு சிறுவன் வேடத்தில் வந்து ஒரே ஒரு க ரும்பைக் கேட்டார். எச்சில் கையாலும் காகத்தை ஓட்டா தக் கஞ்சன் அந்த வியாபாரி . ஒரு கருபம்பைக் கூடத்  தர மாட்டேன் என்றான். மேலும் அதற்காக சில பொய்களையும் சொல்லிவிட்டுப் போனான். ஆனால் அவன் கரும்பாலைக்குச் சென்றபோது அவை எல்லாம் தரக்குறைவானவை என்று நிராகரிக்கப்பட்டன. கவலை அடைந்த வியாபாரியின் கனவில் பிள்ளையார் தோன்றி , அவனது கஞ்சசத்தனத்தால் விளைந்த கருமம் இது என்று விளக்கினார். பின்னர் அவனும் மனம் திருந்தி பிள்ளையாரை கரும்பு சகிதம் வந்து வணங்கினான் ; அது முதற்கொண்டு புதுப்பெயருடன் புகழ் பெற்றார் ஆயிரம் கரும்புப் பிள்ளையார்!

கோவில்களும் இத்தகைய கதைகளும் நமக்குப்  போதிப்பது என்ன?

பிறருக்கு உதவி செய்; ஐயமிட்டு உண் ; யாராவது , எதையாவது கேட்டால் , உன்னிடம் அதிகம் இருந்தால், அதைப் பிறருக்கும் கொடு.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்.

–subham—

Tags- கும்பகோணம், கரும்பாயிரம் பிள்ளையார், கோவில் , ஆயிரம் கரும்பு

உண்மையான மகன் யார்? மனைவி யார்? நண்பன் யார்? (Post.11,844)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,844

Date uploaded in London –   27 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதச் செல்வம்

உண்மையான மகன் யார்மனைவி யார்நண்பன் யார்?

ச.நாகராஜன்

உண்மையான மனைவி யார்?

ஒரு உண்மையான மனவிக்கான இலக்கணம் என்ன? யாரை மகன் என்று கூற முடியும்? ஒரு நல்ல நண்பன் என்று கூறத் தக்கவன் யார்?

இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு பாடலில் விடை தரப்படுகிறது.

ய: ப்ரீணயேத்சுசாரிதை: பிதரம் ச புத்ரோ

      யத்பர்த்ருரேவ ஹிதமிச்சதை தத்களத்ரம் |

தன்மித்ரமாபதி சுகே ச சமக்ரியம் ய-

     தேதத் த்ரயம் ஜகதி புண்யக்ருதோ லபந்தே ||

இந்த சுபாஷிதத்தின் பொருள்:

தனது மேன்மையான நடத்தையால் எந்த ஒருவன் தனது தந்தையை சந்தோஷப்படுத்துகிறானோ அவனே புத்திரன் எனச் சொல்லப்படுவான்.

தனது கணவனின் ஹிதத்தை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒருத்தியே மனைவி எனப்படுவாள்.

 வளமாக சுகத்துடன் இருக்கும் காலத்திலும் அபாயகரமான காலத்திலும் எவன் ஒருவன் உதவி செய்கிறானோ அவனே நண்பன் எனப்படுவான்.

இந்த மூவரும் யாருக்குக் கிடைக்கும் எனில் புண்யம் செய்தவர்களுக்கே இப்படிப்பட்ட மூவர் கிடைப்பார்கள்.

இங்கு திருவள்ளுவரின்

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு”    – (குறள் எண் 788)

என்ற குறளை ஒப்பு நோக்கலாம்.

 காலால் தொடாதே!

எதையெல்லாம், யாரையெல்லாம் காலால் மறந்தும் தொடக் கூடாது.

ஒரு பட்டியலையே தருகிறார் கவிஞர்:

பாதாப்யாம் ந ஸ்ப்ருஷேதக்னிம் ந குரும் ப்ராஹ்மணம் ததா|

ந காம் ச ந குமாரிம் ச ந சிஷும் ந ச தேவதாம்.

பாதத்தால் தீயைத் தொடாதே.

அது மட்டுமல்ல பாதத்தால் தொடக் கூடாதவர்கள் இதோ;

குரு

ப்ராஹ்மணர்

பசு

குமாரி

குழந்தை

(தெய்வ) தேவதைகள்

சொர்க்கம் செல்ல வேண்டுமென்றால்….

சொர்க்கத்திற்குச் செல்ல யாருக்குத் தான் ஆசை இருக்காது.

சொர்க்கத்திற்குச் செல்வது பற்றி ஒரு கவிஞர் ‘டிப்ஸ்’  (TIPS) தருகிறார் இப்படி:

கொடுக்கப்படாததை மனதால் கூட இச்சிக்கக் கூடாது.

மதுபானத்தை அருந்தக் கூடாது.

உயிருள்ளவற்றை இம்சிக்கக் கூடாது.

தவறானவற்றைச் சொல்ல கூடாது.

அடுத்தவர் மனைவியை மனதாலும் விரும்பக் கூடாது. அடைய முயற்சிக்கக் கூடாது.

இவற்றை எல்லாம் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவோர் க்டைப்பிடிக்க வேண்டும்.

கடைப்பிடித்தால்,

பிறகென்ன, சொர்க்கம் நிச்சயம் தான்!

நாதத்தமிச்சேன்ன பிபேச்ச மத்யம்

     ப்ராணான்ன ஹிம்ஸென்ன வதேச்ச மித்யா |

பரஸ்ய தாரான்மனசாபி நேச்சேத்ய:

    ஸ்வர்காமிச்சேஎதூக்ருஹவத்ப்ரவேஷ்டம் ||

பண்டிதன் யார்?

பண்டிதன் என்று யாரைச் சொல்லலாம். கவிஞர் வழி காட்டுகிறார்:

எவன் ஒருவனின் செயல்கள் தடைகளைச் சந்திக்கவில்லையோ அவனே பண்டிதன்.

தடைகள் என்பவற்றில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:

குளிர்,

வெப்பம்,

பயம்,

பற்று,

வளம்,

வளமின்மை

இந்தத் தடைகள் அனைத்தையும் கடந்து தாண்டித் தன் செயல்களைச் செய்பவனே பண்டிதன் ஆவான்.

யஸ்ய க்ருத்யம் ந விதந்தி ஷீதமுஷ்ணம் பயம் ரதி: |

சம்ருத்திரசம்ருத்திர்வா ச வை பண்டித உச்யதே ||

கிடைக்கவே கிடைக்காதது எது?

ஒருவனுக்கு  இன்னொரு வளமான வாழ்வு கிடைக்கலாம்.

இன்னொரு நண்பன் கிடைக்கலாம்.

இன்னொரு மனைவி கிடைக்கலாம்.

இன்னொரு நிலம் கிடைக்கலாம்.

இந்த எல்லாமும் கூட கிடைக்கலாம். ஆனால்

ஒருவனின் உடல் கிடைப்பதென்பது முடியவே முடியாது.

புனர்வித்த்தம் புனர்மித்ரம் புனர்பார்யா புனர்மஹீ |

ஏதத்சர்வம் புனர்லப்யம் ந சரீரம் புன: புன: ||

***