Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரக்ஞை பற்றி புத்தபிரானின் அருளுரை!
ச.நாகராஜன்
பிரக்ஞை என்பது எல்லா திசைகளிலும் ஊடுருவி எங்கு பரந்திருக்கும் பார்க்க முடியாதது, ஒளி மிக்கது, எல்லையற்றது –
இதுவே புத்தபிரான் பிரக்ஞையைப் பற்றி கூறி அருளிய உபதேச உரையாகும்.
அவர் ஆயிரக் கணக்கில் சித்திரங்களையும், உவமைகளையும் வெவ்வேறு வடிவங்களையும் தனது உரைகளில் வழங்குவது வழக்கம்.
ஏனெனில் மனிதர்கள் ஆயிரம் வகையினர்.
ஒருவருக்குச் சொன்னது இன்னொருவருக்குப் புரியாது.
ஆகவே கேட்பவர் மனநிலை, பக்குவத்திற்கு ஏற்ப அவர் உபதேச மொழிகளை அருள்வது வழக்கம்.
ஒரு முறை பிரக்ஞையைப் பற்றி அவர் கூறியது ஒரு சீடருக்குப் புரியவில்லை.
அவர் மனநிலையையும் பக்குவ நிலையையும் புரிந்து கொண்ட புத்தபிரான் அவரை நோக்கிக் கேட்டார்:
“ அப்பனே! கிழக்கு நோக்கி இருக்கும் சுவரைக் கொண்ட ஒரு வீட்டில், அந்த சுவரில் ஒரு ஜன்னலும் இருக்கும் போது, காலையில் சூரியன் உதிக்கும் போது, சூரிய ஒளியானது எங்கு விழும்?”
சீடர் யோசித்தார்,, பதில் சொன்னார் இப்படி: “மேற்குப் பக்க சுவரில்.”
புத்தர் கேட்டார்: “ மேற்குப் பக்கம் சுவரே இல்லை என்றால் சூரிய ஒளி எங்கு விழும்?”
சீடர் யோசித்துச் சொன்னார் : “நிலத்தில் விழும்”.
புத்தர் மேலும் கேட்டார் : “நிலமே இல்லை எனில் எங்கு விழும்?”
சீடர் கூறினார் : “நீரில் விழும்”.
புத்தர் : நீரும் இல்லை என்றால்?
சீடர் கூறினார் : “ நீரும் இல்லை என்றால் அது எங்கும் விழாது.
புத்தர் சந்தோஷத்துடன் கூறினார்: “சரியாகச் சொன்னாய். நமது இதயம் எப்போதும் பற்றி கொண்டிருக்கும் நான்கு சத்துணவுகளான உணவு, புலன் சார்ந்த தொடர்பு (பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல்), எண்ணம் மற்றும் பிரக்ஞை ஆகிய நான்கிலிருந்தும் விடுபடும் போது பிரக்ஞையானது எங்கும் விழாது. அந்த நிலை தான் துக்கம், பற்று, ஏமாற்றம் எதுவும் இல்லாத இடம், இதை தான் நான் உனக்குச் சொல்கிறேன்”
சீடன் நன்கு புரிந்து கொண்டான்.
ஒரு புத்த பிட்சு புத்தரை நோக்கி, “ஐயனே! பூமி, தீ, காற்று, நீர் ஆகியவை மங்கி மிதி மிச்சமில்லாமல் போய்விடும் இடம் எது? என்று கேட்டார்.
புத்தபிரான், “ நீ கேட்ட கேள்வி தவறு. அதை இப்படி மாற்றிக் கேட்டிருக்க வேண்டும். பூமி, தீ, காற்று, நீர் ஆகியவை இருக்க முடியாத இடம் எது? என்று கேள்.
எல்லையற்று எல்லா திசைகளிலும் உள்ள பார்க்க முடியாத, ஒளிர்கின்ற, எல்லையற்ற பிரக்ஞையில் அந்த நான்கும் உள்ளன. அந்த நான்கு பூதங்கள்(Elements), பெரியது, சிறியது, கரடு முரடானது, மிருதுவானது, சுத்தமானது, அசுத்தமானது எதற்கும் அங்கு இடமில்லை. அதில் தான் நாமமும் ரூபமும் ஒரு முடிவுக்கு வருகிறது. இந்த முற்றுப் பெற்ற நிலையில், பிரக்ஞை இல்லாத நிலையில், எல்லாமும் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது” என்றார்.
பிரக்ஞையைப் பற்றி ஆங்காங்கே சீடர்களுக்கு புத்தபிரான் பல அரிய ரகசியங்களை, பெரிய உண்மைகளை அருளியுள்ளார்.
அவை பிரக்ஞை பற்றிய தெளிவான உண்மையை நமக்கு நல்கும்!
Among the Hindu gods, Shiva is associated more with the animals. There are many temples in Tamil Nadu where Lord Shiva blessed them and helped them to attain Mukti or liberation.
Since Hindu religion believes in Karma theory and rebirth, many stories say that the animals are rebirths of some people, but cursed to become animals for their bad behaviour.
Here is a list of shrines and the animals associated with the temples:
Vaitheeswaran koil – Jatayu (Falcon or Eagle)
Thiru Kazukukundram – Eagle
Tiruchirappalli – Jatayu
Tiruchchirukuti – Gauda/ Falcon
Kuranganil muttam- Squirrel
Kuranganil muttam – Crow
Tirukkachur – Tortoise
Tiruvermbur – Ant
Thiru Engoi malaai- Fly
Thiruvalivalam- Black bird
Thiruvanaikkaval – Spider
Thiruvanaikkaval- Elephant
Karivalamvantha Nallur – Elephant
Pennakatagam – White Elephant
Tiruppananthal – Airavatham (white elephant)
Tirukkalahasthi – Elephant
Tiruchchivapuram – Pigs
Pandrimalai- Pigs
Thirukutallaval- Monkey
Thirumaraikkadu -Rat or Mouse
Thirunallur – Beetle
Nannilam – Honey bee
Thirunaraiyur -Heron or Stork
Avur pasupatheeswaram – Cow
Thillai sthanam – Kamadhenu
Thirup Pampuram – Snake
Nagerkoil – Snake
Kovil Perumalam- snake
Thepperumanallur- snake
Thiruthevankudi- Crab
Thiruppathiripuliyur – Rabbit or Hare
Athur – Frog
Melappathi- Cat
Kovil thevarayanpettai- Fish
Xxxx
Vishnu and Gajendra Moksha
Vishnu and other gods and goddesses are also associated with many birds, reptiles, and animals. Hindu Goddesses keep parrots in their hands or shoulders.
I posted the following in 2013 under Hindu Gods and Animals (May 3, 2013)
Gajendra Moksha episode is linked with many shrines including Tirumohur near Madurai. Lord Vishnu saved the elephant Gajendra from the mouth of a crocodile.
The spider and elephant story of Tiruanaikkaval near Trichy is very popular.
Tirumakaral is near Kanchipuram. King Rajendra Choza built a temple for lord Shiva 1000 years ago at Tirumakaral. The king saw a golden colour iguana in a shrub. When he ordered his servants to catch it, they cut the plants in the bush. When they accidentally cut the tail of the animals, blood gushed out. On seeing it, the king fainted and heard a voice from the sky that he should build a temple there.
அருணகிரி நாதர் பாடிய சிறுவாபுரி முருகனை வேண்டித் துதித்த பின்னர், பெரிய பாளையம் சென்று பவானி அம்மனைத் தரிசித்தோம். அங்கிருந்த கூட்டத்தையும் பெண்களின் பக்தியையும் கண்டபொழுதே அவள் வரம் கொடுக்கும் சக்தி தேவி என்பது புரிந்தது. வரிசையின் நின்று அம்மனைத் தரிசித்ததால், அம்மன் திருப்தியாக தரிசனம் தந்தாள். அதுவோ பிப்ரவரி மாத (2023-ம் ஆண்டு) வெள்ளிக்கிழமை வேறு; கூட்டத்துக்கு கேட்கவா வேண்டும்.
பெரிய பாளையம் எங்கே உள்ளது ?
பெரியபாளையம் என்னும் ஊர், சென்னையிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காலை எ ட்டு மணிக்குப் புறப்பட்டு சிறுவாபுரி முருகனையும் பெரிய பாளையம் பவானி அம்மனையும் தரிசித்துவிட்டு நாலே மணி நேரத்துக்குள் பெரம்பூருக்குLUNCH லஞ்ச் சாப்பிட வந்துவிட்டோம்.
பவானி அம்மனின் சிறப்பு என்ன?
இது பெரிய பெரிய கோவில். முதலில் வரம் தரும் அற்புத. விநாயகர் கோவில். பின்னர் பெரிய த்வஜ ஸ்தம்பத்துடன் அம்மன் கோவில்.. விநாயகர் சந்நிதியை ஒட்டி அன்னை மாதங்கியின் சந்நிதி இருக்கிறது.
பவானி அம்மனின் சந்நிதிக்கு எதிரே பெரிய குத்து விளக்குகள். அதில் நெய் ஊற்றி வழிபட்டால் நேர்ந்தது நிறைவேறும் என்பதால் பெண்கள் கூட்டம் . அருகிலேயே மாவிளக்கு ஏற்றும் பகுதிப் பரவசம் ஊட்டும் காட்சிகள்.
அம்மன் திருமுகம் அருள் பொழியும் முகம். மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.
அம்மனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால் உற்சவர் நமக்கு தரிசனம் தருகிறார்..
வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமருடன் (விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) மற்றும் நாகர் ஆகிய சன்னிதிகளைத் தரிசிக்க முடியும்.
சங்கு சக்கரத்துடன் காட்சி தரும் அன்னையை நாராயணீ என்று புராணங்கள் போற்றும்.
இங்குள்ள பவானி, கிருஷ்ணனை கம்சனிடமிருந்து காப்பாற்றிய சகோதரி என்ற நம்பிக்கையும் நிலவுகிறது (கிருஷ்ணன் பிறப்பு பற்றிய கதையை அறிந்தவர்களுக்கு இது விளங்கும்).
நாங்கள் தரிசனம் முடித்துவிட்டு வருகையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, உடலைக் கட்டாந்தரையில் உருட்டிக்கொண்டு அங்கப் பிரதட்சிணம் செய்த காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. பக்திக்கு எல்லை உண்டோ?
கிராம தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் என்றும், சிவன் விஷ்ணு, பிள்ளையார், கந்தன் ஆகியோர் இறக்குமதித் தெய்வங்கள் என்றும் சில அசட்டுப்பிஸட்டுக்கள் புரட்டி எழுதுவதை படித்திருப்பீர்கள். இவையெல்லாம் பேத்தல், பிதற்றல் என்பது காஞ்சி பரமாசார்யாரின் சொற்பொழிவிவுகளைப் படித்தோருக்கு நன்கு விளங்கும். பவானி, ரேணுகா, அம்மன், மஹா மாயா (மகாமாயீ) ராகா தேவி (ராக்காயீ) மூகாம்பிகை (மூக்காயீ) ஆயீ , காளி , மதுர காளி , மாரி , ஆத்தா முனி ஆண்டி , ஆர்ய (அய்யனார்), சாஸ்தா (சாத்தன்) முதலியன எல்லாம் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். மேலும் இவர்களில் பல பெயர்கள் ரிக்வேதத்தில் கூட இருக்கினறன.
தெய்வங்களில் ஆரிய, திராவிட பேதத்தைக் காட்டும் பி.எச் .டி . காரர்களுக்கு செமை அடி கொடுக்கும் கிராமீய தெய்வங்களைப் போற்றி வழிபடுவோம்.. பல பிராமண குடும்பங்களுக்கு கிராமீய தெய்வங்கள்தான் குல தெய்வம் என்பதும் அரைவேக்காடுகளுக்குத் தெரியாது . இதுகளுக்கும் அதுகளுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கும் அறிவிலிகளுக்கு புத்தி தடுமாறாமல் இருக்க இறைவியை வேண்டுவோம்.
ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லுகையில், இருபுறமும் உள்ள கடைகளையும், பூ, பழம் விற்போரையும் காணுகையில் நாள் தோறும் பல கோடி மக்களுக்கு வயிற்றுப் பிழைப்பு நடக்க இந்தக் கோவில்கள்தான் உதவுகின்றன என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. அதைவிட இந்த பிரமாண்டமான கோவிலை எழுப்பியபோது வேலையில் ஈடுபட்ட கட்டிடக் தொழிலாளர்களின் , சிற்பிகளின் வாழ்க்கை முன்னேறியதையும் நினைவுகொள்ள வேண்டும்.பூக்களையும், பழங்களையும் பயிரிடும் விவசாயிகளுக்கு திருவிழா நாட்கள் வந்தால் கொண்டாட்டம்தான். நல்ல போனஸ் கிடைக்கும் .
ஒருவேளை கோவில்களை எள்ளி நகையாடும் திராவிடங்களும் பிற மதங்களும் வெற்றி பெற்றால், இந்தப் பல கோடி மக்களும் வேலை இழப்பார்கள் ; அந்த நிலை வராமல் தடுப்பது இந்துக்களின் கடமை.
–subham—
Tags–பவானி அம்மன், பெரியபாளையம், மாவிளக்கு, குத்துவிளக்கு, கிராம தெய்வங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 10
காவேரி ஆறு உற்பத்தி ஆனதும் கொங்கு மண்டலத்திலேயே!
ச.நாகராஜன்
முன்னொரு காலத்தில் பார்வதி தேவியாரின் திருமண நாளில் தேவர் முதல் யாவரும் மேருமலையில் திருமண விழாவிற்காக ஒருங்கு திரண்டனர். ஏராளமான சுமை ஏறியதால் வடதிசை அழுந்தியது.
தென் திசையோ மேல் எழுந்தது. பூமியைச் சமனாக்குமாறு அகத்தியரை நோக்கிச் சிவபிரான் கட்டளையிட்டார்.
தமிழ்த் தேர்ச்சியுற்று அகத்தியர் காவிரி நதியைக் கையில் உள்ள கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு கொங்கு நாட்டை அடைந்தார். சூரபத்மன் முதலியோரின் துன்பத்துக்கு ஆற்றாத இந்திரன் வேற்று உருவம் கொண்டு சீர்காழிப் பதியில் நந்தனவனத் திருப்பணியைச் செய்து கொண்டிருந்தான்.
நீர் இன்றிச் செடிகள் காயிந்திருந்தமை கண்டு வருத்தமுற்று ஆனைமுகப் பிள்ளியாரை வேண்டினான். வெண் காக்கை வடிவு கொண்ட விநாயகப் பெருமான், அகத்திய முனி வைத்திருந்த கமண்டலத்தைக் கவிழ்த்தார். உள்ளே இருந்த காவேரி நதி நிலத்தில் பீறிட்டுப் பெருக்கெடுத்து சீர்காழி வழியே ஓடியது.
இந்த வரலாற்றைப் பெருமையுடன் கொங்குமண்டல சதகம் 10ஆம் பாடலில் வழங்குகிறது.
சீரார் வளவ னிலம்புன நானாடாச் செழிப்புறவும்
பேரார் வரநதி பெய்துறு பாவம் பிரிந்திறவும்
ஏராரும் பொன்னி புவியுள முன்ன குடமுதவி
வாரார் பெருமை படைத்தது நீள் கொங்கு மண்டலமே
கொங்குமண்டல சதகம் பாடல் 8
பாடலின் பொருள் :
சோழ மண்டலம் நீர்ப்பாசனமாகவும் கங்கை நதி தனது பாவங்களை நீக்கிக் கொள்ளவும் வாய்த்தது காவேரி நதி.
அந்தக் காவேரி நதி அகத்திய முனிவர் கரத்திலிருந்து விழுவதற்கு முதலில் இடம் கொடுத்து உதவியது கொங்கு மண்டலமே.
ஸ்காந்தத்தில் காவிரி நீங்கு படலத்தில் இந்த வரலாறு இப்படி பதிவு செய்யப்படுகிறது:
Part two of Ramayana paintings at Ramaswami Temple in Kumbakonam, Tamil Nadu
Since the pictures are in three rows and the rope fence is before the wall, my photographs are not in order and not in full.
This post is to highlight the significance of such a magnificent art. Temple must bring out all the pictures in book format, view card format, fridge format and curtain format etc.
Had it been Britain or Italy or Spain or Portugal they would have made big money out of the art.
The temple has beautiful sculptures as well. Please see my Tamil articles for the Dasavatara and Ramayana sculptures. Over 200 Ramayana pictures are there. It is believed they are hundreds of years old.
We must preserve them for future generations.
–Subham—
Tags -Ramayana paintings, on walls, Ramaswami temple, part two, Kumbakonam
This is my umpteenth trip to India; may be 40th trip!
Every time I make it a point to visit some new temples; seeing my parents to get their blessings and having Darshan at our Kula Devata temple in Vaitheeswaran Koil and my favourite temple Madurai Meenakshi temple, where we used to play hide and seek in the dark corridors 60 years ago , was also on the itinerary. Now my parents are no more and Meenakashi temple has become Tirupati Balaji temple; no easy access.
So we covered 40 places from Vaitheeswarankoil to Tiruvannamalai.
xxx
We landed in Madras called Chennai on 12th February 2023. We covered 40 temples, Adhistanams, Ashrams in three weeks time.
Kumbakonam is six hours drive (including lunch break) from Chennai. We landed at Srivathsam, an old age community centre for mostly Brahmins and only vegetarians at 3-30 pm . There is a lodge cum restaurant called Divine Inn. You get true Kumbakonam filter copy and typical brahmin food from 5-30 am to 8-30pm.
If you book your room through a resident there, you get discount as well. We paid Rs.1200 per day for a double bed room (AC) instead of 1500 per day. Just six kilometers from Kumbakonam. They are building another community centre called Kausthubam.
My friend Mr V S Srinivasan asked us to get ready by 4-30 pm. We visited six temples in five hours: Ramaswami temple, Chakrapani temple, Sarangapani temple (all Vishnu), Kumbeswar Temple, Nageswar temple and Karumbaayiram Pillaiyar/ Ganesh temple.
Xxx
Ramayana on walls
Ramaswami temple, though only 500 year old, is an art gallery of Ramayana. I posted 20 plus pictures of sculptures there yesterday. They are about Ramayana and Dasavatara. The temple belongs to Nayak Period.
The idols look majestic; no one can forget the Rama, Lakshmana, Bharata ,Satrugna with Sita Devi and Hanuman. The strange thing about these Murtis is Hanuman playing Veena with Ramayana book by his side. My policy is Not to take pictures of idols that are worshipped in the Garba Griha (sanctum sanctorum)
Today I post the Ramayana paintings on the wall in parts (Please all the parts); they need better preservation and better protection. If it is a cathedral in Rome or Madrid or Lisbon, they would have printed View cards, key chains, Coffee Cups, Scores of books with the temple pictures. The temple must print all the pictures in good quality and sell them to fund the temple.
தமிழில் பொருள்படைத்த , நகைச் சுவை மிக்க சமயச் செற்பொழிவுகளை நமக்கு வழங்கிச் சென்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் . அவர் ஆற்றிய சொற்பொழிவில் கேட்ட ஒரு கதை இதோ:–
( எனது சொற்களில் வடிக்கிறேன் ; பிழை இருப்பின் எமதே )
இந்த பூமியில் எவ்வளவோ உயிரினங்கள் இருக்கின்றன. காக்கைக்கு மயிர் நரைத்து வெள்ளைக் காக்கை ஆனதுண்டா? பன்றிக்கு மயிர் நரைத்து வெள்ளைப் பன்றி ஆகிறதா? ஆனால் மனிதனுக்கு மட்டும் நரை வருகிறதே ஏன் ?
ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது .
என்னுடைய ஊர் காங்கேய நல்லூர்; அங்கிருந்து ஒரு வயதானவர் என்னைப் பார்க்க வந்தார். ஏன் மறுமணம் செய்யவில்லை என்றேன்? பையன்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்
அவருக்கு நரை வந்தும் ஆசை விடவில்லை (மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது ).
யாருக்கு ஆசை விட்டது? நரையை மறைக்க கருப்பு டை Dye (சாயம் வேறு).
மிருகங்கள் உண்ணவும் உறங்கவும் வாழ்கின்றன
மனிதர்கள் எண்ணவும் (பிறருக்காக) இரங்கவும் வாழ்கின்றனர் .
ஏன் இறைவன் மனிதனுக்கு நரையைக் கொடுத்தான் ?
அதுதான் இறைவன் அனுப்பும் First Notice முதல் நோட்டீஸ் . உனது காலம் விரைவில் முடியப் போகிறது. இப்போதாவது இறைவனை நினை; நாலு பேருக்கு உதவி செய் .
கொஞ்சம் நாளுக்குப் பின்னர் கண்ணாடி தேவைப்படுகிறது .
அது கடவுள் அனுப்பும் Second Notice இரண்டாவது நோட்டீஸ்.
பின்னர் பற்கள் ஆட்டம் காணும். அது Third Notice from God மூன்றாவது நோட்டீஸ் .
அதற்கு அடுத்துவரும் நோட்டீஸ் Last Notice from God – மரணம் .
நரை வந்த பின்னரும் இறை – வனை நினையாவிட்டால் அது நமது பிழை.
வயதான மனிதனுக்குத் தள்ளாதவன் என்று ஏன் தெரியுமா பெயர் ?
அவன் எதையும் வேண்டாம் என்று தள்ளாதவன்!!
ஆசையை ஒதுக்கித் தள்ளாதவன்!!!
(தள்ளாத வயதில் பொல்லாத ஆசைகள்)
புதுமணத் தம்பதிகள் ரயில் பெட்டியில் உட்கார்ந்து இருக்கினறனர்; இவனோ தள்ளாதவன். அந்தப் பெண்ணை வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!
Xxxxx
கிழவி கதை
ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள் ; பொல்லாத கிழவி. எதையும் எடுத்துக்கொண்டு விடுவாள்; எதையும் யாருக்கும் கொடுத்ததில்லை ; தானம் கொடுத்ததில்லை ; அவளும் இறந்தாள் ; நரகத்துக்குச் சென்றாள் ; கடும் துயரம் . அந்தப் பக்கம் வந்த தேவ தூதரிடம் அப்பா , கெஞ்சிக் கேட்கிறேன்; என்னை இங்கிருந்து வெளியே எடு– என்றாள்
அவன் கேட்டான் – நீ எப்போதாவது தானம் தருமம் செய்து இருக்கிறாயா ? யாருக்காவது காசு போட்டு தருமம் செய்து இருக்கிறாயா?
பாட்டி சொன்னாள் : ஒரு குருடன் தட்டில் காலணா காசு போட்டேன் ; ஆனால் அவன் பார்க்க முடியாததால் அவன் தட்டிலிருந்து நாலணா எடுத்துக் கொண்டேன் .
அடிப் பாவி !!
தேவதூதன்: வேறு என்ன நல்லது செய்தாய்?
என்னிடம் ஒரு அணா இருந்தது; அந்தக் காலத்தில் அதற்கு 12 தம்பிடிகள். 12 வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டேன். அப்போது ஒருவர் வந்து வயிறு பசிக்கிறது என்றார் . நான் எதையும் கொடுக்கவில்லை. கடைசி வாழைப்பழம் பாதி அழுகி இருந்ததால் அதைத் தூக்கி எறிந்தேன். அவர் பாதி வாழைப்பழத்தைச் சாப்பிட்டுச் சென்றார் – என்றாள்.
அடக்கிழவி ! வா உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றான் தேவதூதன்.
நரகத்தில் ஒளியே கிடையாது; கும் மிருட்டு; இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த 4 பாவிகள் , நைஸாக கிழவியின் காலை பிடித்துக்கொண்டார்கள் ; சொர்க்கத்துக்கு வந்த கிழவி பெரிய ஒளியை, வெளிச்சத்தைப்பார்த்து மகிழ்ந்தாள். அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. ஒருவர் பின் ஒருவராக நாலு பேர் அவளுடைய காலைப் பிடித்துக் கொண்டு மேலே வருவது.
டேய் ! யாரடாவன்? எனது அரை வாழைப்பழத்துக்கு நான் சொர்க்கம் செல்கிறேன். நீங்கள் எப்படியடா வர முடியும்? என்றாள்
அவள் மீண்டும் நரகத்துக்குள் விழுந்தாள் யாரோ ஒருவனுக்கு கொடுத்த அரை வாழைப்பழத்தை எனது என்று சொல்லி சொந்தம் கொண்டாடினாள் .
இதனால்தான் அருணகிரி நாதர் யான் , எனது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை கேட்டு திருப்புகழ் பாடினார்.
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
மெளிது சால மேலாக …… வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீத …… மருள்வாயே
என்கிறார் அருணகிரிநாதர்
((எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் … நமனையும்
தாக்குவது போல் ஆகாயம் வரை பறந்து போகும் மனத்தின் தன்மை
எளிது சால மேலாக உரையாடும் … மிகவும் எளிதான வகையில்
மேலெழுந்து ஆணவத்துடன் பேசுகின்ற
எனது யானும் வேறாகி … எனது என்ற மமகாரமும், நான் என்ற
அகங்காரமும் நீங்கி,
எவரும் யாதும் யான் ஆகும் … பிற பொருள்கள் யாவும் நானே
ஆகக்கூடிய
இதய பாவன அதீதம் அருள்வாயே … மனோ பாவத்திற்கு எட்டாத
பெரு நிலையைத் தந்து அருள்வாயாக.(தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்;kaumaram.com)
யான், எனது என்ற எண்ணம் அகல வேண்டும்; எல்லோருக்கும் உதவ வேண்டும்.
Xxxx
கவிழ்த்த பானையும் ; விரியாத பாய் மரமும்
மழையே பெய்யாத ராயல சீமையில் ஒரு நாள் மழை கொட்டித்தீர்த்தது . எல்லோரும் வீட்டிலுள்ள அண்டா , குண்டா, பானை, சட்டி எல்லாவற்றையும், ஓட்டிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் வைத்து நிரப்பிக்கொண்டு இருந்தனர் ; ஒரு கிழவி இருந்தாள் ; உடலை நகர்த்த முடியாத அளவு பலவீனம்;பேத்தியை அழைத்தாள் :
அடியே வீட்டிலுள்ள பானைகளை அந்த ஓட்டுத் தண்ணீர் விழும் இடத்தில் வையடி ; தண்ணீர் எல்லாம் வீணாக்கப் போகிறதே என்றாள் .
அந்தச் சிறுமி ‘கேரம் போர்டு’ carrom board விளையாடிக்கொண்டிருந்தாள் ; வேண்டா வெறுப்பாக நாலு பானைகளை நாலு இடங்களில் வைத்தாள்
மழையும் நின்றது ; பாட்டி ஆர்வத்தோடு மெல்ல நகர்ந்து வந்து பார்த்தாள் ; பானையில் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் இல்லை. ஏன் ?
அந்த அறியாத சிறுமி பானைகளைத் தலைகீழாக கவிழ்த்து வைத்திருந்தாள்
நாமும் அது போலத்தான் இருக்கிறோம். இறைவன் அருள் மழை பொ ழிகிறான் ; நாம் கவிழ்த்த பானைகளாக இருக்கிறோம் ; திறந்த மனது இருக்க வேண்டும் ; மனது அகன்று விசாலமாக இருக்க வேண்டும் .
xxx
நாகப்பட்டினத்தில் 12 பாய் மரக்கப்பல்கள் இருந்தன.
துறை முகத்தில் கடலில் அந்த மரக்கப்பல்கள் நின்றன ;
நல்ல காற்று அடித்தது ; நாலு கப்பல்கள் அழகாகச் சென்றன .
நகராத 8 கப்பல்கள் காற்று ஒழிக ; காற்று ஒழிக ;என்று கோஷம் போட்டன .
அது காற்றின் பிழை அன்று; நான்கு கப்பல்களின் பாய் மரம் விரிந்து இருந்தன ; அவை காற்றின் சக்தியால் அழகாக மிதந்து சென்றன; மீதி எட்டுக் கப்பல்களின் பாய் மரம் ஒடுங்கி இருந்தன .
நாமும் அப்படித்தான் இருக்கிறோம்; இறைவனின் அருள் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது ; அதை ஏந்துவதற்கு நமக்கு விரிந்த மனம், திறந்த மனம் வேண்டும்
(கடவுள் ஒழிக என்று கோஷமிட்டுப் பலன் இல்லை).
நாம் எல்லோரும் இறைவனின் அருள் மழையையும் , அருள் காற்றையும் பெற வேண்டும் .
எல்லாம் எல்லோருக்கும் சொந்தம் . அருணகிரிநாதர் வேண்டியது போல யான், எனது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை பெறவேண்டும்
(வாரியார் சொற்பொழிவில் கேட்டதில் நினைவில் நின்றதை எழுதியுள்ளேன் ).
அனைவரும் யூ டியூபிலும் , ஒலித் தட்டு , ஒலி நாடாக்களில் கேட்டு மகிழ்க.
–subham—
Tags- கிருபானந்த வாரியார் , யான், எனது, கிழவி கதை, கவிழ்ந்த பானை , பாய்மரக் கப்பல் , தள்ளாதவன், நரை , ஏன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாபாரத மர்மம்!
இறைவன் கொடுத்த அங்கங்களைக் காப்பது எப்படி?
ச.நாகராஜன்
இறைவன் மனிதனைப் படைத்து பல அங்கங்களைக் கொடுத்திருக்கிறான். அதைக் காக்கும் விதத்தையும் பெரியோர் மூலமாக நம்மை அறிய வைக்கிறான்.
மஹாபாரதத்தில் விளக்கப்படாத ரகசியம் எதுவுமில்லை.
இந்த அங்க ரகசியங்களையும் சாந்தி பர்வம் 275வது அத்தியாயத்தில் விளக்கமாகக் காணலாம்.
கைகள் முதலானவற்றைக் கொண்டு நான்கு துவாரங்களைக் கொண்டது மனித சரீரம்.
சரீரம், இந்திரியம், மனம், புத்தி என்ற நான்கு முகங்களைக் கொண்டவன் புருஷன்.
வேதவாக்கியத்தால் விராட், ஹிரண்டகர்ப்பன், அந்தர்யாமி, சுத்தம் என்கின்ற நான்கு விதமாக ஜீவன் அடைகிறான்.
கைகளும் வாக்கும் உதரமும் ஜனன ஸ்தானம் என்கின்ற குறியும் அந்தத் தேவர்களுக்கு வாயில்கள்.
அந்த வாயில்களை ஒவ்வொருவரும் காக்க வேண்டும்.
எப்படிக் காப்பது?
கை, கால்களைப் பாதுகாப்பது எப்படி?
புத்திசாலியாக இருக்கும் ஒருவன் சொக்கட்டான் காய்களால் சூதாட்டம் ஆடக் கூடாது.
பிறருடைய பொருளைக் கவரக் கூடாது.
உறவினரல்லாதவருடைய ஹவிஸைக் கிரகிக்கக் கூடாது. அதாவது அவருக்கு யாகம் செய்விக்கக் கூடாது.
கோபமடைந்து ஒருவரை அடிக்கக் கூடாது.
இப்படி இருந்தால் அவனுடைய கால்களும் கைகளும் நன்கு பாதுகாக்கப்பட்டவையாக ஆகும்.
வாக்கைப் பாதுகாப்பது எப்படி?
கடும் சொல்லைச் சொல்லக் கூடாது.
வீண் வார்த்தை சொல்லக் கூடாது.
கோள் சொல்லக் கூடாது.
மற்றவரைக் குறித்து அபவாதம் சொல்லக் கூடாது.
சத்தியத்தையே விரதமாகக் கொள்ள வேண்டும்.
அஜாக்கிரதையின்றி மிதமாகப் பேச வேண்டும்.
இப்படி இருந்தால் ஒருவனுடைய வாக்கு நன்கு காக்கப்பட்டதாகும்.
உதரவாயிலைக் காப்பது எப்படி?
உணவு உட்கொள்ளாமல் இருக்கக் கூடாது.
அதிக உணவையும் உட்கொள்ளக் கூடாது.
நாக்கு சபலமின்றி இருத்தல் வேண்டும்.
உணவைத் தேடி பெரியோர் வரத்தக்க வகையில் இருத்தல் வேண்டும்.
சரீர யாத்திரைக்குத் தேவையான அளவு உணவை உட்கொள்ள வேண்டும்.
இப்படி இருப்பவனது உதரவாயில் (வயிறு) நன்கு காக்கப்பட்டதாகும்.
ஜனன ஸ்தானம் எனப்படும் குறியைக் காப்பது எப்படி?
பிறன் மனைவியை விரும்பக் கூடாது.
ருதுவில்லாத காலத்தில் தனது மனைவியை உறவுக்கு அழைக்கக்கூடாது.
பத்நி விரதனாக இருக்க வேண்டும். அதாவது விவாம் செய்து கொள்ளாத பெண்களை விலக்க வேண்டும்.
இப்படிப்பட்டவனுடைய ஜனன ஸ்தானம் எனப்படும் குறி நன்கு காக்கப்பட்டதாகும்.
இப்படி எந்த புத்திசாலியினுடைய குறி, உதரம், கைகள், நான்காவதான வாக்கு ஆகிய நான்கு வாயில்களும் நன்கு காப்பாற்றப்படுகின்றனவோ அவன் தான் இரு பிறப்பை உடையவன்.
இந்த துவாரங்களைக் காப்பாற்றாதவனுக்கு அனைத்துமே பயனற்றவை ஆகி விடும்.
இது கபிலருக்கும் ஸ்யூரமரஸ்மிக்கும் நடந்த உரையாடலில் இடம் பெறுகிறது.
இந்த உரையாடலில் ஏராளமான ரகசிய விஷயங்களைப் பற்றி முற்றிலுமாக அறிய முடிகிறது.