படிக்காசுப் புலவரை வாதில் வென்ற கொங்குமண்டலப் புலவர்கள்! (Post No.11,494)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,494

Date uploaded in London – 2 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 85

படிக்காசுப் புலவரை வாதில் வென்ற கொங்குமண்டலப் புலவர்கள்!

,நாகராஜன்

தமிழகப் புலவர்களில் தனி இடத்தைப் பெறுபவர் படிக்காசுப் புலவர். அவர் ராமநாதபுர சமஸ்தானத்தில் இரகுநாத சேதுபதியின் சமஸ்தான வித்வானாக இருந்து பெரும் புகழ் பெற்றார்.

ஒரு சமயம் தல யாத்திரையை  மேற்கொண்ட அவர் கொங்கு மண்டலம் வந்தார்.

அந்தக் காலத்தில் கவசை ஆறை நாட்டில் கவசை நகரில் கல்வி கேள்விகளில் வல்லவராயும் வள்ளன்மையில் சிறந்தவராயும் இருந்த மசக்காளி மன்றாடி என்பவர் புகழுடன் வாழ்ந்து வந்தார்.

அவரது சமூகத்தில் தமிழ்ப் புலவர் சபை ஒன்று கூடிற்று.

அதில் வண்ணப் பாக்கள் சொல்வது பற்றிய வாதம் ஒன்று நடந்தது.

அதில் படிக்காசுப் புலவர் எடுத்துக் கொடுத்தபடி முடிக்கவில்லை என்று சொல்லி அவர் கொண்டு வந்த பல்லக்கு முதலியவற்றை கொங்கு மண்டலப் புலவர்கள் எடுத்துக் கொண்டனர்.

படிக்காசுப் புலவர் தனது ஆடை முதலியவற்றைச் சுமந்து கொண்டு,

“அஞ்சாலி மக்களுஞ் சாணாகும் பாணரு மம்பட்டருஞ்

செஞ்சாயக் காரரும் வேசையர் மக்களுஞ் செந்தமிழைப்

பஞ்சாகப் பன்னி யொருகாசுக் கோர்வண்ணம் பாடலுற்றார்

நஞ்சாகப் போச்சுதை யோவென் றமிழ்கொங்கு நாடெங்குமே”

என்று மனம் நொந்து மிக்க வருத்தத்துடன் பாடினார். பிறகு மனதைச் சமாதானம் செய்து கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

கவசையில் நடந்த கவி வாத சம்பந்தமான பகைமையால் கொங்குப் புலவர்கள் வைத்த சூனிய வித்தைத் தீமையில் வருந்தி, திருச்செங்கோட்டுக்கு அவர் வந்து சேர்ந்தார். ஶ்ரீ அர்த்த நாரீஸ்வரர் மீது வருகைப் பதிகம் பாடி, பின்னர் தேக சுகத்தை அடைந்து உமைபாகப் பதிகம் பாடினார். பின்னர் சமீபத்தில் உள்ள மோரூர்க்குச் சென்று பாம்பலங்காரர் மீது வருக்கக் கோவை பாடி அரங்கேற்றினார்.

அதற்காகக் குமாரசாமிக் காங்கேயன் சன்மானம் தர அதை ஏற்றார்.

அந்திப் பிறைச் சடையரா வாசல ராலயத்திற்

கந்தப் பிரான்கதை கற்சிலை யாலமை காங்கெயரில்

விந்தைப் புயக்கும ரேந்திர வேந்து வியந்தெமக்குத்

தந்தச் சிவிகை கொடுத்தான் பெரும்புகழ் தாங்கினனே

எனப் புகழ்ந்து சோழநாட்டை அடைந்தார்.

வேலைசூழ்பணி மாமலை வேலரும் விமலரு மகிழ்வெய்தச்

சீலமாகியோ ரைம்படி யரிசியுஞ் சிலகறி பருப்போடே

மாலை காவிரி மஞ்சனந் தீபமும் மனமிகு தயவாகிப்

பாலை சேர்மசக் காளிசெங் கோடரைப் பணிந்திவை யளித்தானே

–    திருச்செங்கோட்டுப் புராணம் திருப்பணி மாலை

இனி குமார காங்கேயன் பற்றிப் பார்ப்போம்.

இவன் இம்முடிப் பட்டம் பெற்றவன் என்பதை அடியிற்கண்ட
செய்யுள் வலியுறுத்துகின்றது.

முன்னா ளுறைந்தைவரு மரசர்பெரு மானுலகில்
                          முடிமன்னரிட தம்பிரான்
முதுமொழி குலோத்துங்க சோழனருள் செய்தனன்
                            முத்தமிழ்க் கம்பநாடன்
அந்நாளி லேபொன்னி கரைகள்கட வாதுள் ளடங்கவிசை
                                      பாடலுக்கா
ஆதித்த னுள்ளளவு மழியாத வதுவைவரி யளித்தனர்க
                                   ளன்றுமுதலாப்
பன்னாத நிலைமைசெறி கொங்குநாட் டினின் மேவு படிகார
                                       வித்வச்சனர்
பங்கென நடந்துவரு படிதனக் கிடரதாய்ப் படித்தசிலர்
                                  கைக்கொண்டதை
இந்நாளி லேகீர்த்தி நிலையாக விடுவித்தவ் வியல்வாண
                                     ருக்களித்தான்
இங்கிதம தாகவரு கவசைநகர் வாழ்வுற்ற இம்முடி
                                      மசக்காளியே(தனிப்பாடல்)

கொங்குமண்டல சதகத்தில் வருகின்ற     54, 64-ஆம் செய்யுட்கள் குறித்த
மோரூர்க் காங்கேயர்களுக்கும், 69-ஆம் செய்யுட் கூறும் கோபண
மன்றாடிக்கும், 75-ஆம் பாட்டுக் குறிப்பிடும் காடையூர்க் காங்கேயர்க்கும், 76ஆம் செய்யுள் விளக்கும் அல்லாளனிளை யானுக்கும் இம்முடி என்ற பட்டப்பெயருண்டு.

இம்மடி என்று கூறுவதையுங் காணலாம். தேச மன்னர்
குறுநில மன்னர், நாடு, ஊர் அதிகாரிகள், சில குருக்கள்களும் இம்முடி
என்று பெயர்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்பெயரை மிகு
மேன்மையாகப் பாராட்டுகிறார்கள். இம்மடி (இம்முடி) என்பதன் பொருள் இரட்டை அதாவது இரண்டாவதான். எனவே, இம்முடிக் குமார காங்கேயன் என்றால் குமார காங்கேயன் என்பவன் ஒருவன் இருக்க, அவனுக்குப் பின் மற்றொரு குமார காங்கேயன் வந்தால் அவன் இம்மடி (இரண்டாவது) குமார காங்கேயனாகிறான். இன்னுமொருவன் தோன்றினால் மும்மடி (மூன்றாம்) குமார காங்கேயனாகிறான்.

இந்த வரலாறை கொங்குமண்டல சதகம் தனது 85ஆம் பாடலில் பதிவு செய்கிறது.

நல்லார் புகழ்மசக் காளி கவசையி னாவினிசை

யெல்லாஞ் சொலிநிலை நிலாமற் பல்லக் கிரவைபற்றிச்

சொல்லா லுயர்ந்த படிக்காசன் கட்டிச் சுமக்கக்கவி

வல்லா ரடித்துத் துறத்திய துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

மசக்காளி மன்றாடியின் கவசை (ஆறை நாட்டில் உள்ள சர்க்கார் சாமக்குளம் அதாவது கோவில்பாளையம்) நகரில் நடந்த பா இயற்று வாதப் போரில் நிற்கவில்லை என்று பல்லக்கும் சன்மானப் பொருள்களையும் பற்றிக் கொண்டு, மற்ற எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு படிக்காசுப் புலவர் நடந்து போகும்படி ஊரை விட்டு அகற்றிய கவி சொல்லும் திறமை உடையவர் இருப்பதும் கொங்கு மண்டலமே என்பதாம்.

***

 புத்தக அறிமுகம் 129

இலக்கிய உலகில் கம்பரின் காட்சிவில்லியின் மாட்சி,

சங்கப் புலவர்களின் ஆட்சி!

பொருளடக்கம்

முன்னுரை

அத்தியாயங்கள்

1. எது கவிதை?                                                     2. காவியத்தின் நோக்கம்                                              3. கவிதையை ரஸிப்போமா?                                                 4. கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி!                                   5. கவிதையில் சித்திரங்களைக் காண்பிக்கும் கம்பன்!                 6. இந்திரன் இராமனைத் துதித்தல்! – கம்பன் தரும் அதிசயம்!          7. கவிகள் திலகம் கம்பன் கண்ட திலகம்!                               8. வர பலம் தவறினாலும் சர பலம் தவறாது!                          9. இலங்கை மங்கையின் லிப்ஸ்டிக்! அயோத்தி மங்கையின் ஸ்டிரா!! –     

   கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்!                            10. எது வினை? இடர் இலை?                                      11. மாளிகைக் கவியை விலைமகளிர்க்கும் பொருந்த அமைத்த    சிலேடை சிரேஷ்டன் கம்பன்!                                         12. கம்பன் தரும் சித்திரம்: இந்திரஜித்தின் வீட்டைக் காவல் காத்த லட்சணம்!                                                         13. இராவணனின் சிறப்பு பற்றிக் கம்பர் கூறும் ஒரு பாடலின் இரு வடிவங்கள்! – அவன் தரும் அரிய செய்தி!                             14. இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்: கம்பர் காட்டும் இரகசிய குறிப்பு                                         15. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 1.  16. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 2  17. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 3   18. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 4.  19. உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்!                         20. கவிஞன் தன் குறிப்பைச் சொல்லும் தற்குறிப்பேற்ற அணி!         21. வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 1                                                      22. வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2                             23. இரண்டு பாடல்களில் மட்டுமே வரும் ஒரு அபூர்வ அணி –    ஒற்றைமணி மாலை அணி!                                      24. தங்கத் தமிழாம் சங்கத் தமிழ் தெய்வத் தமிழே!    25. ஒப்பற்ற தமிழின் உயர்வு!                                    26. தமிழில் அலங்காரம்!                                              27. தமிழில் உள்ள யமகப் பாடல்கள்!                                  28. யமகவந்தாதியின் பட்டியல்!                                      29. புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை!   30. ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்!          31. எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்!                32. தனிப்பாடல்களில் புலவர்கள், புலவர்கள் பல விதம்!               33. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பாடல்கள்! – 1            34. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பாடல்கள்! – 2

*

நூலில் இடம் பெறும் முன்னுரை இது:

முன்னுரை

உலகில் உள்ள மொழிகளில் எல்லாம் பழமையானதும்அழகியதும்இலக்கிய வளம் வாய்ந்ததும்இறைவனால் உருவாக்கப்பட்டு புலவர்களின் தலைவனாக அவனே அமர்ந்து வளர்த்த மொழி ஒன்றே. அது தமிழ் தான்!

இதைப் பற்றி எத்தனை ஆயிரம் நூல்கள் வேண்டுமானாலும் எழுதலாம். எழுதினாலும் தமிழின் சிறப்பை முற்றிலுமாக ஒருவர் சொல்லி விட்டதாக ஆகாது.

தமிழின் புதுப் புது பரிமாணங்களையும்வடிவங்களையும்ஆழத்தையும்அகலத்தையும் காட்டுவதற்கென்றே உதித்த தெய்வப் புலவர்கள் பலர்.

தெய்வப் புலவர் திருவள்ளுவர்சங்க காலப் புலவர்கள்திரு ஞான சம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரர்மாணிக்க வாசகர், 12 ஆழ்வார்கள்கவிச் சக்கரவர்த்தி கம்பன்வில்லிப்புத்தூரார்மஹாகவி பாரதியார் என்ற கவிஞர்களின் இந்தப் பட்டியல் மிக நீண்ட ஒன்று.

இந்தக் கவிஞர்களில் கம்பன் காட்டும் வண்ணக் காட்சிகள் பல. மகாபாரதத்தைத் தமிழில் தந்த வில்லிப்புத்தூராரின்  மாட்சியோ தனி.

சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்களின் ஆட்சியோ அதிசயிக்கத் தக்க ஒன்று.

இவை பற்றி அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இது.

இதை தமிழ் நெஞ்சங்களிடம் நூல் வடிவில் தருவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

நிலாச்சாரல் மின்னிதழ்www.tamilandvedas.com ப்ளாக் உள்ளிட்டவற்றில் வெளியான கட்டுரைகள் இவை.

இதை வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு மற்றும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக்.

அழகிய முறையில்இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                                        . நாகராஜன்                                               1510-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

செய்யக்கூடாத செயல்கள் (ஒண்ணாது) எவை எவை? –அறப்பளீச்சுர சதகம் (Post.11493)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,493

Date uploaded in London – 1 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part 8 of Arappalichchura Satakam

வஞ்சகர் தமைக்கூடி மருவொணா தன்பிலார்

     வாசலிற் செல்லொ ணாது;

  வாதெவ ரிடத்திலும் புரியொணா தறிவிலா

     மடையர்முன் நிற் கொணாது;

கொஞ்சமே னும்தீது செய்யொணா தொருவர்மேல்

     குற்றஞ்சொ லொண்ணா தயல்

  கோதையர்க ளோடுபரி காசஞ்செ யொண்ணாது;

     கோளுரைகள் பேசொணாது;

நஞ்சுதரும் அரவொடும் பழகொணா திருள்வழி

     நடந்துதனி யேகொணாது

  நதிபெருக் காகின் அதில் நீஞ்சல்செய் யொண்ணாது;

     நல்வழி மறக்கொணாது;

அஞ்சாமல் அரசர்முன் பேசொணா திவையெலாம்

     அறியும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) இவையெலாம் அறியும் – இங்குக் கூறப் பட்டவற்றை

யெல்லாம் அறிந்த, எமது ………… தேவனே! வஞ்சகர்தமைக் கூடி மருவ

ஒணாது – வஞ்சகரைக் கூடிப் பழகல் தகாது, அன்பு இலார் வாசலில்

செல்லஒண்ணாது – அன்பு இல்லாதவரின் வீட்டுவாயிலை அடைதல்

கூடாதுவாது எவரிடத்திலும் புரியஒணாது – எவரிடமும் வாதாடல்

கூடாது அறிவு இலா மடையர்முன் நிற்க ஒணாது – அறிவு இல்லாத

பேதைகளின் எதிரிலும் செல்லக் கூடாது, கொஞ்சமேனும் தீது செய்ய

ஒணாது – சிறிதாகினும் தீய செயலைச் செய்தல் ஒவ்வாது, ஒருவர் மேல் குற்றம் சொலஒண்ணாது – ஒருவர்மேல் குறைகூறல் கூடாது, அயல் கோதையர்களோடு பரிகாசம் செய ஒண்ணாது – பிற மங்கையருடன் நகைத்துப் பேசுதல் கூடாது, கோள் உரைகள் பேச ஒணாது – கோள் மொழிகள் கூறல் கூடாது, நஞ்சு தரும் அரவொடும் பழக ஒணாது – நஞ்சைத் தரும் பாம்பொடு பழகல்கூடாது, இருள்வழி நடந்து தனி ஏக ஒணாது –

இருண்ட நெறியிலே தனியே நடந்து செல்லல் கூடாது, நதி பெருக்கு ஆகின்

அதில் நீஞ்சல் செய்ய ஒண்ணாது – ஆறு பெருகிச்சென்றால் அதை நீந்திச் செல்லுதல் கூடாது, நல்வழி மறக்க ஒணாது – நன்னெறியை மறத்தல் கூடாது அஞ்சாமல் அரசர்முன் பேச ஒணாது – அரசரிடம் அச்சமின்றிப் பேசுதல் கூடாது.

     (க-து.) இங்குக் கூறப்பட்டவை செய்ய ஒண்ணாதவை.

Xxx

London swaminathan’s commentary on verse 9

இவை அனைத்தும் ஆத்திச் சூடி , உலக நீதி, நீதி வெண்பா  முதலிய நூல்களில் கண்ட விஷயங்களே .

நாள்தோறும் பத்திரிகைகளில் வரும் கொலை, களவு, விபத்து பற்றிய செய்திகளைப் படிக்கையில் இவை அனைத்தும் இன்றும் தேவைப்படும் அறிவுரைகளே என்பதை உறுதியிட்டுச் சொல்ல முடியும்

–சுபம்–

உலக நாதர் இயற்றிய உலக நீதியில் கண்டவற்றை ஒப்பிட்டுப் பார்ப்போம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

Never play around with poison

ஒப்பிடு: தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப்படும் –(குறள் 202)

Xxxx

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

ஒப்பிடு: நல்லினத்தி னூங்குத் துணை யில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல் — (குறள் 460)

Neverever associate with fraudulent people

நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

ஒப்பிடு: சிற்றினம் அஞ்சும் பெருமை–(குறள் 451)

Don’t move with people of who are not  at your wavelength

xxx

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

Never go alone to places you don’t know.

Xxx

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

Don’t go to places that should be avoided

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல் பதாகும் அறிவு — (குறள் 451)

Xxx

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

Don’t talk ill of others

ஒப்பிடுக: இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று —(குறள் 100)

Xxxx

போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்

ஒப்பிடு: அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது — (குறள் 181)

 Don’t talk behind anyone’s back.

Xxx

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்

Never covet another’s wife

ஒப்பிடு: பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள் 148)

Xxx

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

Never step into a house where you are not respected

 Xxx

 புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்

Don’t use harsh words

ஒப்பிடு: இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்குவது (குறள் 99)

xxx

—subham—

 Tags- உலக நாதர் ,உலக நீதி, செய்யக்கூடாத செயல்கள் ,ஒண்ணாது,  எவை எவை? –அறப்பளீச்சுர சதகம்

காதல் கவிதை (GSS) புஸ்தகத்தில் ஒரே குழப்படி (Post No.11,492)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,492

Date uploaded in London – 1 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

பிராக்ருத மொழியில் ஒரு பிரபல நூல் இருக்கிறது. அதன்   பெயர்  காதா சப்த சதி (GSS- GATHA SAPTA SATI) அதன் பொருள் 700 கவிதைகள் என்பதாகும். ஸம்ஸ்க்ருத்தின் பேச்சு வழக்கு பிராகிருதம்; அதாவது கொச்சை மொழி. தமிழில் உள்ள நாட்டுப்புற பாடல்கள் அல்லது இப் போதுள்ள தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கு ஒப்பிடலாம். இதன் உள்ளடக்கம் கிராமப்புற காதல் ஓவியங்கள் (Love and Sex in Villages) ஆகும். தமிழில் உள்ள அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை நூல்களுடன் ஒப்பிடலாம். இதை தமிழில் ஜெகந்நாத ராஜா ஓரளவுக்கு மொழிபெயர்த்தார். இது பற்றி உண்மைகளை யாரு ம் சொல்வதில்லை வெறும் புகழுரைகளை மட்டும் சொல்லுவார்கள். அது மட்டுமல்ல;காளிதாசன் இதிலிருந்து காப்பி அடித்தானா? தமிழ்ப் புலவர்களை இந்த பிராக்ருதக் கவிஞர்கள் காப்பி அடித்தார்களா என்று அரை வேக்காட்டுத் தனமான கட்டுரைகளையும் எழு துவர் .

3 உண்மைகளை முதலில் அலசி ஆராய்வோம்

1. இதை ஹாலன் என்ற முதல் நூற்றாண்டு மன்னன் தொகுத்ததாகச் சொல்லுவார்கள். அது தவறு; ஏனெனில் பிற்காலத்தவர், குறிப்பாக பிற்கால மன்னர்களின் கவிதைகளும்  இதில் உள்ளன

2. இந்த நூலின் பெயர் 700 கவிதைகள். ஆனால் இதை முதல் முதலில் உலகின் பார்வைக்குக் கொ ண்டுவந்த ஜெர்மானிய அறிஞர் வீபர் (ALBRECHT WEBER IN 1881) பதிப்பில் 964 பாடல்கள் உள்ளன . அவர் 17 பதிப்புகளை — ஓலைச் சுவடிகைளை– ஒப்பிட்டு அதைக் கொணர்ந்தார் . அவரும் பிறரும் கண்ட பதிப்புகளில் உள்ள பொதுவான கவிதைகள் 430 மட்டுமே. ஆகையால் இதை 700 கவிதை — காதா சப்தசதி என்று அழைப்பது நாலும் நாலும் பத்து  (4+4=10) என்று சொல்வது போல ஆகும்.  வீபர் (ALBRECHT WEBER IN 1881)  ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். ஆக, 150 ஆண்டுகளா கத்தான் உலகிற்கு இந்தக் கவிதைகள் தெரியும். ஸம்ஸ்க்ருத்த்தில் கவிகள் புனைந்த காளிதாசன் முதலிய கவிஞர்களையும் 650 நாடகங்கள் இயற்றிய நாடக ஆசிரியர்களையும் அதற்கு முன்னரே உலகம் அறியும்.

XXX

3.இந்த நூல் பற்றி இந்திய அறிஞர்களுக்கும் அதிகம் தெரியாது. பாண என்ற ஏழாம் நூற்றாண்டு அறிஞர்தான் (Bana, author of Harsha Saritha) முதலில்  இதைக் குறிப்பிட்டுள்ளார்.ஆகையால் இதை எவரும் காப்பி (Copy) அடித்திருக்க முடியாது. காளிதாசனுடைய காலமோ கி.மு (BCE) முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை சங்க இலக்கியத்திலுள்ள 200 க்கும் மேலான உவமைகள் காட்டுகின்றன.

xxxx

இந்தக் கவிதைகள் அனைத்தும் மஹாராஷ்டிர பிராகிருத வழக்கில் இருக்கின்றன. மேலும் கோதாவரி அல்லது அதற்கு அப்பாற்பட்ட பிரதேசம் தொடர்பான பின்னணி உடையவை. ஆகையால் தமிழர்களை அவர்கள் பார்த்து எழுதினர் என்பதும் சரியல்ல.

பாரதியார் சொல்கிறார்- சொல்லித் தருவது அல்ல மன்மதக் கலை – என்று; காதல், காமம் தொடர்பான உணர்ச்சிகள் பொதுவானவை. அதை எவரும் அவரவர் முறையில் கவிதையில் வடிக்கலாம். எடுத்துக் காட்டு-இக்கால திரைப்படப்  பாடல்கள் .

XXX

இனி மேற்கூறிய தகவல்களுக்கு ஆதாரம் என்ன என்பதைக் காண்போம்.:

ஹாலன் (HALAN of SATAVAHANA DYNASTY)

ஹாலன் என்ற சாத வாஹன மன்னன் குறுகிய காலமே ஆண்டான். அவனுக்கு கவிதை என்றால் உயிர் மூச்சு. தானும் கவி இயற்றி மற்றவர்களையும் ஊக்குவித்தான். இவை அனைத்தும் உண்மையே; அவன் இயற்றிய 44 கவிகள் நூலில் உள்ளன. ஆயினும் அவனுக்குப் பின்னர் ஆட்சி புரிந்த வாகடக, ராஷ்டிரகூட மன்னர்கள் பெயர்களிலும் கவிதைகள் உள்ளன. ஹாலன்  என்பவன் எவ்வளவோ பாடல்களுக்கு இடையே 700 கவிதைகளைத் தெரிந்தெடுத்தான் என்ற பாடலும் நூலின் மூன்றாவது கவிதையாக வருகிறது . ஆயினும் இதிலுள்ள கவிகளின் பெயர்களை வைத்து காலத்தைக் கணக்கிட்டால் அது ஏழாம் நூற்றாண்டு வரை செல்கிறது

நூலிலுள்ள பெரும்பாலான கவிஞர்கள் ஊர் பேர் தெரியாதவர்கள் மட்டுமல்ல. கவிதைகளின் வரிசையும் பதிப்புக்கு பதிப்பு மாறியுள்ளது. அப்படியி ருக்கையில் இதை ஒரு ஒட்டு மொத்த நூலாகவும் கருத முடியவில்லை.

XXX

முட்டாள் மன்னர்கள்

துவக்க கால சாதவாஹன மன்னர்களுக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது ; அவர்களை முட்டாள்களாகக் காட்டும் கதைகளும் உள்ளன .  இ ந்த நூலின் கவிதைகளில் கூட ஏ முட்டாளே , ஏ அறிவிலியே என்ற பேச்சுக்கள் அதிகம் உள.

மா உதக = மோதக கதையை முன்னரே ஒரு கட்டுரையில் கொடுத்துள்ளேன்; இதோ சுருக்கம்:

சம்ஸ்க்ருதம் தெரிந்த பேரழகியை- ராஜகுமாரியை- ஒரு சாதவாகன மன்னன் கல்யாணம் கட்டுகிறான் ; ஒரு நாள் இருவரும் நீரில் குடைந்து விளையாட ஆற்றுக்குச் செல்கின்றனர். விளையாட்டுக்காக சாதவாகன மன்னன் அவள் மீது தண்ணீரைப் பீச்சி அடிக்கிறான். அவள் சம்ஸ்க்ருதத்தில் மா உதக= தண்ணீரை அடிக்காதே என்று கெஞ்சுகிறாள் – கொஞ்சுகிறாள் ; அவள் கொஞ்சல் மொழிகளை தவறாகப் புரிந்து கொண்ட மன்னன், அவள் மோதகம்/ கொழுக்கட்டை கேட்கிறாள் என்று எண்ணி சேவகர்களுக்கு உத்தரவிடுகிறான் – உடனே மகாராணிக்கு கொழுக்கட்டை/ மோதகம் கொண்டுவாருங்கள் என்று. மஹாராணியும், தோழிகளும் சிரி சிரி என்று சிரிக்கின்றனர். மன்னன் அறியாமைக்கு வெட்கித்து தலை குனிந்து சம்ஸ்க்ருதம் கற்கிறான்; இயற்கையிலேயே கவிதைகளில் ஆர்வம் பிறக்கிறது.

முதல் இரு நூற்றாண் டுகளுக்குள் ருத்ர தாமன் கல்வெட்டு, காம சூத்திரம், காளிதாசனின் கவிதைகள் , பாஷா ,சூத்ரகன் நாடகங்களைக் கண்ட நாட்டில் காதா சப்த சதி உதயமானதில் அதிசயம் ஒன்றுமில்லை

XXXX

காமச் சுவை

காமச் சுவையை ரசிப்பவர்களுக்கு இதில் நிறைய விஷயங்கள் உண்டு. பெரும்பாலும் பெண்களின் பேச்சுக்களாக அமைந்த —ஆர்யா அணி – இரண்டுவரிக் கவிகளுக்கு அவரவர் இஷ்டம் போல பொருள் கொள்ளலாம்

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலந்தப் பழம் இலந்தப் பழம் போன்ற பாட்டுகளுக்கும் காட்டுராணி கோட்டையிலே கதவுகள் இல்லை போன்ற பாட்டுகளுக்கும் செக்சி  SEXYஉரை எழுதுவது போல விமர்சகர்கள் எழுதித் தள்ளியுள்ளனர் ; ஆகையால் இளம் உள்ளங்களுக்கு கவிதை விருந்தாக இந்த நூல் அமைந்ததில் வியப்பொன்றுமில்லை

வாத்ஸ்யாயன மகரிஷி (KAMASUTRA OF VATSYAYANA) சம்ஸ்க்ருதத்தில் எழுதிய முதல் செக்ஸ் SEX புஸ்தகத்தை ஆராய்ச்சி நூல் என்றும் இதை கிராமப்புற பிராக்டிகல் கைடு என்றும் ஒப்பிடலாம்.

XXXX

ஒரு சில எடுத்துக் காட்டுகள்

கணவனிடம் கடிபட்ட இலந்தைப் பழத்தை ஒரு பெண் காட்டுகிறாள் ;

அதை புன் சிரிப்புடன் கணவன் கைகளில் கொடுக்கிறாள் ;

அது குழந்தையின் கடி பட்ட பழம்

உடனே  உரைகாரர்கள் கற் பனை சிறகடித்துப் பறக்கிறது

1.மகனுக்குப் பற்கள் முளைத்து விட்டன ; இனிமேல் தாய்ப்பால் அருந்த வரமாட்டான்

நானும் நீங்களும் கூடிக் குலவலாம்

2. மற்றோர் உரை :– இது அவன் கடித்த பல் தட மல்ல ; நன் செய்த வேலைதான்; அர்த்தம் புரிகிறதா ?

(என்னைக் கடியுங்கள் )

3.இன்னும் ஒரு உரைகாரர் :–இதே போல நானும் உன் மீது தடம் பதிக்கக் காத்து இருக்கிறேன்; வா, வா

XXXX

சிலேடைகளும் நிறைந்த  கவிதைகள் உள்ளன இதோ

பெண்களின் மார்பக அழகைக் கண்டு மயங்காதோர் உண்டா?

அவைகள் கவிதைகள் போன்றவை ;

(அர்த்த) புஷ்டியுள்ளவை ; படிக்க/ பிடிக்க ஆனந்தம் தருபவை ;

இறுக்கமானவை; கனமானவை (பொருள் நிறைந்தவை);

அணிகள் அழகு செய்பவை  (செய்யுள் அணிகள்; தங்க அணிகள்)

இப்படி 964 கவிதைகள் இருந்தால் யார்தான் படித்து, ரசித்து, ருசிக்க மாட்டார்கள்?

xxxx

MY OLD ARTICLES ON G S S

காதா சப்த சதி – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

25 Sept 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. தோள் கண்டார் தோளே …

காதா சப்த சதியிருந்து சில சுவையான கவிதைகள்

https://tamilandvedas.com › காத…

·

11 Jan 2015 — நான், காதா சப்தசதி என்னும் நூலை ஆங்கில … இந்த சப்த சதி 700 காதல் கவிதைகள் …

காதா சப்தசதியில் அதிசயச் செய்திகள்!

https://tamilandvedas.com › காத…

9 Jan 2015 — கட்டுரை 4:- இதில் 700 காதல் கவிதைகளைக் கொண்ட பிராக்ருத —-காதா சப்த சதி— கவிதை …

புகழ் மிகு பிராக்ருத காதல் நூல் தோன்றிய கதை

https://tamilandvedas.com › புகழ…

6 Jan 2015 — பிராக்ருத மொழியில் காதா சப்த சதி என்ற ஒரு காதல் நூல் இருக்கிறது.

Brahmachari | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › bra…

8 Jan 2015 — இதே போல கயமனார் (சப்த சதியில் கஜன், கஜதத்தன்) … காதா சப்த சதி என்பது அகத்துறை …

–சுபம்–

Tags- காதா சப்த சதி , காதல் நூல், குழப்படி , வீபர் , ஹாலன்

தன் பெயரையே விருதுப் பெயராகக் கொடுத்த உத்தமச் சோழன்! (Post.11,491)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,491

Date uploaded in London – 1 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 87

தன் பெயரையே விருதுப் பெயராகக் கொடுத்த உத்தமச் சோழன்!

,நாகராஜன்

தாராபுரம் தாலுகாவில் காங்கேயம் பிரிவில் (நத்தக்) கரையூர் என்னும் ஊருக்கும்ஆணூருக்கும் தலைமை பெற்றவர்கள் சர்க்கரை என்ற பெயரைக் கொண்ட குடியினர்.

அந்த மரபில் தோன்றிய ஒருவர் உத்தமச் சோழ சக்கரவர்த்தி அரசாண்ட காலத்தில் அவரிடத்தில் சேனாபதிப் பதவி பெற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார்.

அவர் சேனையை நடத்தி, வெற்றி பெற்று வரலாயினார்.

இதைக் கண்ட மன்னன் மனம் மிக மகிழ்ந்தான்.

உத்தமச் சோழன் என்ற தன் பெயரையே விருதுப் பெயராக சேனாபதிக்குக் கொடுத்து கௌரவித்தான்.

இதற்குச் சான்றாக விளங்கும் ஒரு பாடல் இது:

ஓங்கு சொட்டைக் காரர்கண்ட னுத்தமக்கா மிண்ட னென்றே

ஈங்குலகி லுன்னையல்ல லேவர்க்காகிலும் வருமோ

                         (நல்லத்தம்பிச் சர்க்கரை காதல்)

நத்தக்காரையூர் சயங்கொண்டநாத ஈஸ்வரர் ஆலயத்தில் உள் தூணில் உத்தமச் சோழக்காமிண்டன் நட்ட தூண் என வெட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.

மடவளாக சிவாலய கர்ப்பகிரஹத்தின் வட புறச் சுவரில் வெட்டப்பட்டுள்ள சாஸனம் –

கட்டளைக் கலித்துறை

“சரங்கொண் டிலங்கை சமைத்தபெற் றான்றரி யாரிறைஞ்ச

உரங்கொண்ட காரைம னுத்தமச் சோழ னுபயபுய

மிரங்கும் படியரு ளான்மட வீரினி யென்னுயிரைக்

குரங்கின் கையிற்பட்ட பூமாலை யாக்குங் குளிர்த்தென்றலே”

என்று காணப்படுகிறது.

பழைய கோட்டை பட்டக்காரர்கள் உத்தமச் சோழன் என்னும் பட்டப் பெயர் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தமிழ் வேந்தர்கள் தன் கீழுள்ள சிற்றரசர்களுக்கும் மந்திரி தந்திரிகளுக்கும் தம் பெயரை விருதுப் பெயராகக் கொடுப்பது வழக்கம்.  (பழைய கோட்டை என்பது நாட்டு வழக்காகும்)

சைவம் வளர்த்த சேக்கிழார் புராணச் செய்யுள் ஒன்றைக் காணலாம் :

 அத்தகைய புகழ்வேளாண் மரபிற்சேக்கி ழார்குடியில்

   வந்தவருண் மொழித்தே வர்க்குத்

தந்துபரி வளவனுந்தன் செங்லோ லோச்சுந்

   தலைமையளித்தவர் தமக்குத் தனது பேறு

முத்தமச்சோ ழப்பல்ல வன்றா னென்று

    முயர்பட்டங் கொடுத்திடவாங் கவர்நீர் நாட்டு

நித்தனுறை திருநாகே சுரத்திலன்பு நிறைதலினான்

     மறவாத நிலைமை மிக்கார்

என்று சொல்லவவர் தமையழைத்தரச னிவரமைச்சரிவர் பட்டமும்

மன்றன் மாலைபுனை தொண்டைமானென வகுத்தபின் றமதுமண்டலம்

அன்றுவற்கம்வர வந்தடைந்தவரை யாற்றல் செய்து தொண்டை மண்டலம்

நின்று காத்தபெரு மானெனத் தமது பெயரை யெங்கும் நிறுத்தினார்

இன்னன வகையிற் கூறி யினப்படை முற்றுங் காட்ட

மன்னனிவ் வீரனைப் போற் கண்டிலே மெனமகிழ்ந்து

கொன்னுற வழைத்து நாமங் கொந்தகப் பெருமானென்றே

நன்னெறிப் பட்டங் கட்டி நல்கினான் பரிவட்டங்கள்

–    மெய்காட்டிட்ட திருவிளையாடல்

இங்கு ‘கொந்தகப் பெருமான்’ என்ற சொற்றொடர் வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கொந்தகை வேளாளர் என ஒரு வகுப்பினர் உள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

மேற்கூறியவற்றால் அரசர் மகிழ்ச்சி அடையும் போது அதற்குக் காரணமாக அமைந்தவர்களுக்கு தனது பெயர் அல்லது கொள்வோரின் இனம் பற்றிய பெயர், காரணமான பெயர் முதலியவற்றைப் பட்டமாகக் கொடுத்து வந்திருக்கின்றனர் என்பது விளங்குகிறது.

வேளாளர்கள் மந்திரி, தந்திரி, சேனாதிபதிகளாக இருந்து வந்ததை மானக்கஞ்சாற நாயனார் புராணத்தில் “அரசர் சேனாபதியாம் விழுமிய வேளாண் குடி’ என்றும் ‘வளவர் சேனாபதிக் குடியாம் பொன்னி நாட்டு வேளாண்மையிலுயர்ந்த பொற்பினது” எனக் கூறப்பட்டமையாலும் காணலாம்.

இந்த வரலாற்றை கொங்கு மண்டல சதகம் தனது 87வது பாடலில் பெருமையாக் குறிப்பிடுகிறது.

பாடல்:

இத்தரை மீதினிற் சேன பதியா யிருந்து வெற்றி

யொத்து வரப்பெற்ற தற்காத் தனக்கிங் குறுபெயராம்

உத்தமச் சோழனென் றன்பாத் தாப் பெறு மோங்குபட்ட

வர்த்தனன் வாழ்வுறு மாணூர் திகழ்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

இந்த உலகத்தில் சேனாபதியாக இருந்து, சென்ற போர்களில் வெற்றி பெற்று வருவதைக் கண்ட உத்தமச் சோழன் என்னும் மன்னன், தன் பெயரான உத்தமச் சோழன் என்னும் பெயரைப் பட்டப் பெயராகக் கொடுக்கப் பெற்று (சர்க்கரை) வாழும் ஆணூர் கொங்குமண்டலம் என்பதாம்.

கொங்குமண்டல சதகத்தில் பல பாடல்கள் ஆணூர்ச் சர்க்கரையின் மரபினரைக் குறித்துப் பாடப்பட்டவையாகும்.

 51, 52, 53, 57, 66, 67 ஆகிய பாடல்கள் சர்க்கரை மரபினர் பற்றியதாகும்.

இவர்களின் குல முதல்வன் அல்லது மூல புருஷன், சர்க்கரை என்னும் பெயரை உடையவனாதலின் பட்டத்துக்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் இப்பெயரை உத்தமச் சோழன் – காமிண்டன் – மன்றாடி என்று தனித் தனியாகத் தம் முன்னோர் பெற்ற விருதுப் பெயர்களையும் இணைத்து இட்டு வழங்கி வருகின்றனர்.

இப்படிப்பட்ட பட்டங்கள் ஒரு  காலத்தினதோ அல்லது ஒருவருடையதோ அல்ல. வேறு வேறு காலத்தில் அந்தக் குடியில் உதித்தவர் எனக் கொள்ளலாம்.

***

புத்தக அறிமுகம் 128

WHO IS MORE INTELLIGENT, MALE OR FEMALE?

CONTENTS

Foreword

Chapters

I LITERATURE

1. Journalist V.Santhanam: an inspiration to the young!                                           2. Who Is More Intelligent and Clever? Male or Female?

3. Sex – Hinduism shows the scientific way!
4. No Divorce! Secrets to have a Happy Relationship!                                                                           
5. Who is a Poet? Hundreds of Definitions! All are beautiful!                                                         6.  Love Poems in Sanskrit Literature                                                                                                          7. Satiric Verses in Sanskrit Language                                                                                            8. Pun in Sanskrit Literature.                                                                                                      9. Wonderful Inspirational Sanskrit Subhasita Verses                                                                              10. Let Us Salute the Great American, Sanskrit Scholar Ludwik Sternbach                                        11. Number One to Ten : Sayings of the Wise                                                                                          12. The Poetical Works of Tiruloka Sitaram With Translation and Notes.                                      13.The Poetical Works of Tiruloka Sitaram With Translation and Notes – Part II. 

II HINDU GLORY

14. Wit and Wisdom of Bhagavan Ramana maharishi!                                             15. Paul Brunton – by Annie Cahn Fung                                                 16. If You Want to Know India, Read Swami Vivekananda!                               17. Forgotten Arts in India                                                                             18. What you have learnt is Handful, what you haven’t learnt is….                    19. Swami Ramathirtha’s Notes                                                                                               20. Taj Mahal is a Hindu Temple reveals the book ‘World Vedic Heritage’              21. Hindu Destiny in Nostradamus by G.S.Hiranyappa                                                      22. Jesus Christ Visited India and Died in Kashmir             

III SELF IMPROVEMENT

23. Napoleon’s Leadership Qualities                                                                                                24. Miraculous Incidents Due to Positive Emotions From Day to Day Life and History                   25. Confidence: The Key to Success.                                                                                            26. Secrets to Success                                                                                                          27. Be A Tough Minded Optimist!                                                                                       28. Thinking for Results                                                                                                            29. Management Stories which you must definitely read! – 1                                                                  30. Management Stories which you must definitely read! – 2                                                                           31. LAWYERS JOKES                                                                                                                            32. Adam and Eve: Jokes.                                                                                                                33. Nature’s Numbers by Ian Stewart                                                                                                           34. The Power of Subconscious Mind                                                                       

IV BOOKS TO READ

35. ‘Awaken the Giant Within’

36. God Is Not Dead                                                                                                          37. Damn Good Advice.                                                                                                   38. Voice of Senses                                                                                                                  39. A Journey Towards the Infinite Absolute                                                                       40. 1001 Movies You Must See Before You Die by Steven Jay Schneider.             41. Life And Contribution of Mridanga Vidwans By Dr Madurai K. Thiagarajan

*

நூலில் இடம் பெற்றுள்ள என்னுரை :

Foreword

It is with great pleasure I am presenting this book to the learned readers.

The book has been divided into Four parts.

In the first part we are coming into contact with the vast literature of India.

Interesting verses are quoted so that one may get inspiration to explore the treasure that India offers to the world!

In the second part the never-ending glory of the great nation Bharat that is India is highlighted.

The third part is devoted to self- improvement. Along with the secrets to success, in a lighter vein we may enjoy some management stories and jokes also!

The fourth part is a Book review section in which some good books are recommended for reading.

These articles have been published in www.ezinearticles.com and attracted more than one lakh eighteen thousand readers all over the world. These articles have been reprinted in around 1900 + magazines around the world.

Some of the articles have been published in www.tamilandvedas.com.

Readers are requested to have a glimpse at the vast literature of India, the glory of Bharat and principles of Self- Improvement which may be applied to lead a meaningful life.

Good Luck to all.

Sanfrancisco                                                                                     S.Nagarajan

4th October 2022

VIJAYA DASAMI                                 

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Learn Tamil Verbs 27 தேடு ,மூடு ,ஆடு, (Post.11,490)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,490

Date uploaded in London – 30 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

These are third class verbs, conjugated in the same way. Look at தேடு- search, மூடு- close, ஆடு dance, பாடு- sing, விளையாடு- paly etc. they are useful Tamil verbs

 After the root of the verb, I have given infinitive for each verb.

தேடு- THEDU – SEARCH, GO IN SEARCH OF தேட- THEDA/ INFINITIVE- TO SEARCH ,

மூடு- மூட MUUDU- CLOSE  ,

ஆடு- AADU- DANCE ஆட,

பாடு PAADU -பாட, SING

வாடு வாட VAADU WITHER ,

சாடு –சாட SAADU LASH AT (SOMEONE)

விளையாடு VILAIYAADU –விளையாட PLAY

XXX

EXAMPLES

RAAMAN SEARCHED SITA/ RAMA WENT IN SEARCHOF SITA

RAAMAN SEETHAIYAI THEDINAAN= ராமன் சீதையைத் தேடினான் –RAMA—SITA+YAI – SEARCHED

XXX

அவர்கள் கதவை மூடினார்கள்

AVARGAL – KATHAVAI—MOODINAARGAL

THEY – DOOR+AI- CLOSED

THEY CLOSED THE DOOR

XXXX

AVAL MEDAIYIL AADINAAL அவள் மேடையில் ஆடினாள்

SHE—IN THE STAGE—DANCED

IN ENGLISH YOU WILL SAY- ON THE STAGE

SHE DANCED ON THE STAGE

XXXX

GITA AND SITA DID NOT SING; RADHA WILL SING

GEETHAAVUM SEETHAAVUM PAADAVILLAI; RAATHAA PAADUVAAL —கீதாவும் சீதாவும் பாடவில்லை; ராதா பாடுவாள்

XXX

YOU MAY DO YOUR OWN SENTENCES LIKE THIS.

HERE IS THE TABLE

tags– Tamil verbs, Thedu, Moodu, Aadu, Paadu, conjugations

Tamil Hindu Encyclopaedia 31–Brahma / பிரம்மா (Post No.11,489)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,489

Date uploaded in London – 30 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Brahma is often confused with two other words Brahmana and Brahman.

The three words have different meanings.

1.Brahma is one of the Hindu Trinity, i.e. Brahma, Vishnu and Shiva

2.Brahmana or Brahmin is the name of the priestly class, one of the four Vedic castes

3.Brahman is god in the Upanishads, Hindu god is genderless.

Xxx

Brahma is given the job of Creation. He was born on a lotus that came out from the belly button of Vishnu lying in the sea bed on 1000 headed snake.

Ancient Tamils called him with different names based on the Hindu Puranic stories.

Xxx

 Poovan

Puu in Tamil is flower as well as lotus. Since Brahma came out seated on lotus flower he is Called POOVAN, literally, Mr Flower, Pari 1-49

Xxx

He was born with five heads, but lost one to Shiva and so he was called NAANMUKAN,literally Mr Four Faced.

Perum.lines402-404 used this word.

Pari 3-91/94 also described this story

Xxx 

One poet portrayed him as the son of Vishnu Pari. 3-12/14

He is the one who created all and so he takes back all. Kali.129 -1/2

This shows that the creator and the preserver are one and the same.

Pari 1-45/49 attributed all the three tasks to one god Vishnu.

The earth was full of water. He removed the flood and made life appear on earth.Kali 106-18/19

Xxx

One poet called him uncultured creator looking at the different types of people on earth. Puram 194-15

Natrinai poet also 240-1 wondered at the way he created the world

xxx

Brahma’s four faces are constantly reciting Vedas says Pari.Thirattu 8-7/11

Because Vedas came out from him, he was also called

Vaaymozi Makan, where Vaaymozi stands for the Vedas

Xxxx

Heavenly Ganges River was sent from sky by Brahma and Lord Shiva controlled its speed by bearing it on his hair- says Pari.9-3/4

When Shiva went to knock down the Space Castles that were flying like modern Space Labs, Brahma was Lord Shiva’s charioteer (Kali 2-1/8)

Xxx

According to Hindu Puranas Brahma is not eternal. Brahma changes. He lost one head to Shiva. These stories are not mentioned by the Sangam poets.

Later poets added these stories in their poems

பெரும்பாணாற்றுப்படை 402-405

நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்

நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்

தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றிச்

சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்,   405

Xxxx

பரிபாடல் திரட்டு -8

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த

நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப

Xxx

பரிபாடல் 3

‘வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,

நீ’ என பொழியுமால், அந்தணர் அரு மறை.

xxx

பரிபாடல் 3

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,

நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய

வாய்மொழி மகனொடு மலர்ந்த

தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!     94

Xxxx

Following names for Brahma are found in Sangam Tamil Literature

பிரம்மா Brahma,

படைப்போன்- Padaippon- Creator,

பூவன்- Poovan – Mr Flower

நான்முகன்- Naan mukan- Mr Four Faced

ஆதி அந்தணன்- Aadhi Anthanan – First Brahmin

முதியவன்- Muthiyavan – Eldest/ Oldest,

வாய்மொழி மகன்- Vaaymozi Makan—Veda (mouthed) man

தாமரைப் பூவினுட் பிறந்தோன் – Person born in Lotus

மலர்மிசை முதல்வன், – First man on flower

உலகு படைத்தோன், – Creator

படைத்தோன், – Creator

முதுமுதல்வன் Old and First man

MY OLD ARTICLES

Science behind Hindu God Brahma! – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/11/19 › science-behi…

19 Nov 2014 — Of the three gods Brahma has amazing science behind him. We know about the cosmic rhythm in the dance of Shiva. We see the nuclear explosion …


Brahma | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › brahma

Every Hindu believes in the doctrine and our females are not behind in their beliefs. According to a very ancient conception, the soul ascends to the abodes of …


‘KA’ is Brahma – Interesting Info. from Panini and Kautilya …

https://tamilandvedas.com › 2020/06/25 › ka-is-brahma…

25 Jun 2020 — Panini refers to Prajapati under the symbolical name of Ka. Patanjali says Ka is not a pronoun (who), but the proper name of a deity. Panini …

Brahma | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › brahma

Posts about Brahma written by Tamil and Vedas. … Brahma told Parvati in her distress to replace the head with whatever she finds in the first place.


29 Names of Brahma! – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/11/20 › 29-names-of…

20 Nov 2014 — Brahma is the first god in the Hindu Trinity: BrahmaVishnuShiva. Brahmana is the caste name in the four fold caste system: Brahmana, 

 tags- நான்முகன், படைப்போன், பிரம்மா

செல்வம் தேடும் வழி பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post no.11,488)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,488

Date uploaded in London – 30 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

பாடல் 7

This is verse 7 of Arappaleechchura Satakam with London swaminathan’s commentary 

பொருள்செயல் வகை  பற்றி அறப்பளீச்சுர சதகம்

புண்ணிய வசத்தினாற் செல்வமது வரவேண்டும்;

     பொருளைரட் சிக்க வேண்டும்

  புத்தியுடன் அதுவொன்று நூறாக வேசெய்து

     போதவும் வளர்க்க வேண்டும்;

உண்ணவேண் டும்; பின்பு நல்லவத் ராபரணம்

     உடலில்த ரிக்க வேண்டும்;

  உற்றபெரி யோர்கவிஞர் தமர்ஆ துலர்க்குதவி

     ஓங்குபுகழ் தேட வேண்டும்;

மண்ணில்வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர்மோட்ச

     வழிதேட வேண்டும்; அன்றி,

  வறிதிற் புதைத்துவைத் தீயாத பேர்களே

மார்க்கம்அறி யாக்குரு டராம்

அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும்

     அழகன்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அண்ணலே – தலைவனே!, கங்காகுலத் தலைவன்

மோழைதரும் அழகன் – கங்கை மரபின் முதல்வனான மோழை யீன்ற

அழகனான, உமது ……… தேவனே!, செல்வமது புண்ணிய வசத்தினால்

வரவேண்டும் – செல்வமானது நல்ல நெறியிலே கிடைத்தல் வேண்டும்,

பொருளை ரட்சிக்க வேண்டும் – (அவ்வாறு கிடைத்த) செல்வத்தைக்

காப்பாற்றல் வேண்டும், புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து

போதவும் வளர்க்க வேண்டும் – அறிவின் திறத்தால்அப்பொருளை

ஒன்று நூறாகுமாறு புரிந்து நன்றாகப் பெருக்குதல் வேண்டும்; உண்ண

வேண்டும் – சாப்பிடவேண்டும், பின்பு நல்ல வத்திரம் ஆபரணம் உடலில்

தரிக்க வேண்டும் – பிறகுஅழகிய ஆடைகளையும் அணிகளையும்

மெய்யிலே அணிதல் வேண்டும், உற்ற பெரியோர் கவிஞர் தமர்

ஆதுலர்க்கு உதவி ஓங்குபுகழ் தேடவேண்டும் – தம்மையடைந்த

பெரியோர்க்கும் கவிஞருக்கும் உறவினர்க்கும் வறியவர்க்குங் கொடுத்து மிக்க புகழை யீட்டல் வேண்டும், மண்ணில் வெகு தருமங்கள்

செயவேண்டும் – உலகிலே வேறுபல அறங்களையும் இயற்றுதல் வேண்டும்,

உயர் மோட்ச வழிதேட வேண்டும் – மேலான வீட்டுக்கு நெறியாராய்தல்

வேண்டும், அன்றி – (இவ்வாறு) அல்லாமல், வறிதில் புதைத்து வைத்து

ஈயாத பேர்களே மார்க்கம் அறியாக் குருடராம் – வீணிலே (மண்ணில்)

புதைத்து வைத்துவிட்டுப் (பிறர்க்கு) அளிக்காதவர்களே நெறியறியாத

குருடர்கள் ஆவர்.

     (வி-ரை.) கங்கை – நீர். வேளாளர் உழவுக்கு நீரையே விரும்பி

நிற்பார்கள் என்பதனாற் கங்கா குலத்தவர் எனப்பட்டனர். இச் செய்யுளால்

மதவேளின் தந்தை மோழை யென்றறியப்படும். புண்ணியம் – நன்மை.

வசம் – ஆதரவு. வத்திர ஆபரணம் : வத்திராபரணம் (தீர்க்கசந்தி).

கம்அறி யாக்குரு டராம்

 (க-து.) நன்னெறியிற் பொருளையீட்டித் தானும் உண்டு உடுத்துப்

பிறர்க்கும் அளித்தல் வேண்டும்..

xxx

எனது உரை

நல்லதொரு பாடல் இது; காசு வேண்டும்; அதை நல்ல வழியில் பெற வேண்டும் ;அதை பாதுகாப்பதோடு    100 மடங்காக  அதிகரிக்க சொல்லிக்கொடு; அதை அனுபவிக்க வேண்டும். பிறருக்கு தருமம் செய்து புகழ் ஈட்ட வேண்டும்.

நம்மில் பலரும் இறைவனிடம் வேண்டுவது இதுதான் . தமிழர்களைப் பற்றி ஒரு பழமொழி உண்டு. தமிழன் புதைத்துக் கெட்டான் என்று ; அதாவது தானும் பயன்படுத்ததாத படி, பிறரையும் அனுபவிக்க முடியாதபடி மண்ணில் புதைத்துவைத்து பின்னர் இறந்து போவான். ஒருவேளை அது பற்றி யாருக்காவது சொல்ல நினைக்கும்போது, வாயில் கடைசி விக்கல் வந்து சொல்லாமலே இறந்தும் போவான்.

மற் றொரு வகை இருந்தும் அனுபவிக்கமுடியாத நிலை. சர்க்கரை வியாதிக்கும் (Diabetes and Heart disease) இருதய நோய்க்கும் பணக்காரர் வியாதி என்று பெயருண்டு. தனது மகன்/ மகள்  கல்யாணத்தில் கூட  லட்டு, அல்வாவை சாப்பிட  முடியாத நிலை பெரும் பணக்காரர்களுக்கு இருப்பதை நானே பார்த்து இருக்கிறேன். என்னுடன் வேலை பார்த்த ஒருவருக்கு லண்டனில் 7 வீடுகள் சொந்தம்; ஆனால் இருதய நோய்; காப்பியில் பால் விடக்கூடாது; சர்க்கரையும் போடக்கூடாது . அடடா ! ஆண்டவா ! என் வாழ்க்கையில் நான் இனிமேல் எண்ணெய்க் கத்தரிக்காய் கறி சாப்பிட முடியாதே என்று சொல்லி அங்கலாய்ப்பார்

இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் அம்பலவாணர் எழுதிய அறப்பளீச்சுர சதகம் பொருளைக்கொடு ; அதை அனுபவிக்கும் உடல் நலம், மன நலம் ஆகியவற்றையும் கொடு ; அது பன்மடங்கு பெருக வேண்டும்; பிறருக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக — தான தருமம் செய்வதாக — அது இருக்கட்டும் என்று வேண்டுகிறார்.

.Xxxx

பணத்தை முதலீடு செய்யாமல் செலவிட்டால் அது கரைந்து போகும். குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பது தமிழ்ப் பழமொழி ; பணத்தை 100  மடங்காக மாற் றும் வித்தை பெண்களுக்குக் கூடத் தெரியும்

TAMIL WOMAN’S REINVESTMENT PLAN

புத்திசாலி தமிழ்ப் பெண்கள்

Post No. 9445;Date uploaded in London – –1 APRIL  2021     

சங்க கால தமிழகத்தில்  பெண்கள் சுதந்திரமாகவும் (independent and business oriented) வியாபாரத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்தனர் என்பது சங்க காலப் பாடல்களில் இருந்து தெரிகிறது.

பெணகள் பாடுவதும் ஆடுவதும் உலகம் முழுதும் இருந்துள்ளது. அதில் வியப்பொன்றுமில்லை. இது நிறைய பாடல்களில் வருகிறது. ஆனால் பூ வியாபாரம், உப்பு வணிகம், மோர், பால் , நெய், கள் , எண்ணெய் போன்றவற்றை விற்கும் பெண்களையும் காண்கிறோம். இவைகளுக்கு எல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல ஒரு செய்தியை சங்க கால நூலான பெரும்பாணாற்றுப் படை (வரிகள் 154-165) அளிக்கிறது.

ஒரு ஆயர் மகள் (Yadava woman)  , அதாவது இடைக்குலப் பெண், தயிரிலிருந்து வெண்ணை கடைந்து எடுத்துவிட்டு மோரை விற்கிறாள். அவளே வெண்ணையைக் காய்ச்சி நெய்யாகவும் விற்கிறாள். அந்த நெய்க்கு பண்ட மாற்றாக பொற்காசு ஒன்றை ஒருவர் கொடுக்க முன் வருகிறார். ஆனால் அவள் அதை ஏற்க மறுக்கிறாள். ‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கு’மென்பது பழமொழி. தங்கம் என்றால் பெண்கள் சொக்கிப் போய்,  மயங்கி விடுவார்கள். ஆனால் இந்தப் பெண்ணோ எனக்கு பொற் காசு வேண்டாம்.அதற்குப் பதிலாக ஒரு எருமை, ஒரு பசு , ஒரு கன்றுக்குட்டி கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறாள்.அந்த புத்திசாலிப் பெண்ணைக் கண்டு வியக்கிறோம். அவளுக்கு தங்கக் காசை வாங்கி நகை செய்து போட்டுக்கொள்ளுவதை விட தன்னுடைய வருவாயை மறு முதிலீடு (Re investment)  செய்வதில் ஆர்வம் மிகுதியாக இருந்தது! அவளுடைய அறிவு இக்காலத்தில் MBA, M.Com. எம்.பி.ஏ. எம்.காம் படித்த பெண்ணுக்கு நிகர் என்று சொல்லத் தோன்றுகிறது.

இதோ அந்தப் பாடல் வரிகள் :–

புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி

யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி

ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து

புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ

நாண்மோர் மாறு நன்மா மேனிச் . . . . .160

சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட்

குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மக

ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி

நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா

ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ

மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பி

னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன

பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்

தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி

விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை . . . .170

பெரும்பாணாற்றுப்படை வரிகள் 154-165

அந்தப் பெண் செய்யும் பண்ட மாற்று வணிகத்தில் (Barter Tade) நெல் கிடைக்கிறது. அதைக் கொண்டு தன் உற்றார் உறவினர்க்கெல்லாம் உணவிடுகிறாள் என்ற செய்தியும் அப்பாடலில் வருகிறது. ஆக தன்னுடைய சுய சம்பாத்தியத்தின்  மூலம் ஒரு பெரிய குடும்பத்தையே நடத்திய புத்திசாலி அவள் என்பதையும் அறிகிறோம்.

****

JAIN WOMAN’S REINVESTMENT PLAN

கெட்டிக்காரி யார்ஒரு சமண மதக் கதை (Post No.7031)

Date: 29 SEPTEMBER 2019;Post No. 7031

சமண மத நூல்களில் நல்ல கதைகள் உள. அவை பிராக்ருத மொழியில் இருப்பதால் பிரபலமாகவில்லை. இதோ ஸ்வேதாம்பர பிரிவு சமண (ஜைன) மத நூலில் இருந்து ஒரு நல்ல கதை.

ஐந்து தானிய (நெல்) மணிகள்

முன்னொரு காலத்தில் ‘தன’ என்ற  வியாபாரி அவனுடைய மனைவி ‘பட்டா’வுடன் வசித்துவதான். அவனுக்கு நான்கு மகன்கள். அவர்களுடைய பெயர்கள்–தன பாலெ, தன கோவெ, தன தேவெ, தன ரக்கியெ. அவர்கள் நால்வரும் கல்யாணம் கட்டிய பின்னர் வீட்டுக்குள் நான்கு மருமகள்கள் புகுந்தார்கள். அவர்களுடைய பெயர்கள்- உஜ்ஜீயா, போகவையா, ரக்கையா , ரோகிணீயா.

மகன்கள், மருமகள்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் ஒரு பொருளுடைத்து. அவர்கள் பின்னர் என்ன செய்யப்போகிறார்கள், அவர்களுடைய குண நலன்கள் என்ன என்பதை விளக்கும் பிராக்ருதச் சொற்கள் அவை. பிராக்ருதம் என்பது பேச்சு மொழி; அதாவது கொச்சையான சம்ஸ்க்ருதம் ரக்ஷிதா என்பதை ரக்கையா என்பர், தேவ என்பதை தேவெ என்பர்.

தன  என்னும் செல்வந்தருக்கு ஒரு கவலை வந்தது. இவ்வளவு செல்வம் சேர்த்துவிட்டேன். வீட்டுக்கு வந்த மருமகள்கள் இதைப் பாது காத்து வருங்கால சந்ததிக்கு வழங்க வேண்டுமே என்று கவலைப்பட்டார். மேலும் அவரும் மகன்களும், திரைகடல் ஓடித் திரவியம் தேடச் சென்றால் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திரும்பி வருவர்.

ஆகையால் வீட்டுக்கு வந்த மகராசிகளில் யார் எப்படிப்பட்டவர் என்பதை அறிய ஒரு சோதனை வைத்தார். நாலு மருமகள்களையும் அழைத்து ஐந்து அரிசி (நெல்) மணிகளைக் கொடுத்து இவற்றை ஜாக்கிரதையாகப் பாது காத்து வாருங்கள்; நான் திரும்பி வர ஐந்து ஆண்டுகள் ஆகும் . பின்னர் உங்களைச் சந்திக்கிறேன் என்று தானிய மணிகளைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.

அவர் போனவுடன் உஜ்ஜீயா என்ற மா/நாட்டுப்பெண் (மருமகள்) அட, வீடு நிறைய சாக்கு சாக்காக நெல் கிடக்கிறது. இதை எவள் பாதுகாத்து வைப்பாள்? என்று சொல்லி ஐந்து நெல் மணிகளையும் குப்பைத் தொட்டியில் போட்டாள்.

அதேபோலக் கருதிய போகவையா அவைகளைத் தூக்கி எறியாமல் வாயில் போட்டு மென்று தின்றுவிட்டாள்.

மூன்றாவது நாட்டுப் பெண் ஆன ரக்கீயா அவகளை ஒரு நல்ல பட்டுத் துணியில் மடித்து ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பெட்டியில் வைத்து படுக்கை அறையில் தலைமாட்டில் வைத்துப் பாதுகாத்து வந்தாள்

நாலாவது மருமகளா ரோகிணி, ஐந்து நெல் மணிகளையும் வேலைக் கார்களிடம் கொடுத்து இவைகளை மிகவும் கவனமாக வளருங்கள் என்றார். அவை காய்த்துக் குலுங்கியவுடன் புதிய வித்துகளைப் பயிரிட்டாள். அவை மேலும் வளர, வளர பயிர் வளம் பெருகியது; நல்ல அறுவடையும் கிடைத்தது.

ஐந்து ஆண்டுகள் உருண்டோடின. வணிகரும் திரும்பி வந்தார். மருமகள்களை அழைத்தார். 5 தானிய மணிகளையும் கொண்டு வாருங்கள் என்றார். உஜ்ஜீயா என்ன செய்தாள் தெரியுமா? நெற் குதிரில் உள்ள தானியத்தில்  ஐந்து புதிய மணிகளைக் கொணர்ந்தார். இவை நான் கொடுத்த தானிய மணிகள் என்று சத்தியம் செய்வாயா? என்று கேட்டார். அவள் பயந்துபோய் உண்மையைக் கக்கினாள். அடச் சீ நீ போ! இனிமேல் வீட்டைக் கழுவி, மெழுகி, வறட்டி தட்டும் வேலைதான் உனக்கு என்று சொல்லி அனுப்பினார்.

போகவையா, இதைப் பார்த்து பயந்து போய், தான் 5 தானிய மணிகளையும் கொடுத்த அன்றே சாப்பிட்ட உண்மையைக் கக்கினார்.

அடச் சீ நீ போ; சரியான சாப்பாட்டு ராமி நீ! இனிமேல் உனக்கு சமையல் அறை வேலைதான். தினமும் எல்லோருக்கும் சமைத்துக் கொட்டு; பாத்திரங்களைக் கழுவி, அடுப்பை மெழுகி, சமையல் அறையிலேயே வசி என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அடுத்ததாக ரக்கீயா வந்தார். படுக்கை அறையில் தலையணைக்கு அடியில் பாதுகாத்துவைத்த ரத்தினப் பெட்டியைக் கொணர்ந்து ஐந்து நெல் மணிகளையும் பட்டுத் துணியில் சமர்ப்பித்தார். வர்த்தகருக்கு மெத்த மகிழ்ச்சி. நீ இந்த வீட்டு பண்டக சாலை  ( பொக்கிஷ அறை); அனைத்துக்கும் அதிகாரி. இந்தா, சாவி. அவைகளைப் பாதுகாப்பது உன்   பொறுப்பு என்றார்.

GOOD INVESTMENT

நாலாவதாக ரோகிணி வந்தாள்- தந்தையே 5 தானிய மணிகளையும் கொணர நிறைய வண்டிகள் வேண்டும்; ஏனெனில் அவைகளைப் பயிரிட்டுப் பெருகவைத்தேன். நல்ல அறுவடை கிடைத்தது என்றார். பின்னர் வண்டி வண்டியாக, மூட்டை, மூட்டையாக தானியக் குவியல்களைக் கொணர்ந்து கொட்டினார். வியாபாரிக்கு பெரும் சந்தோஷம். நீதான் இனி இந்த வீட்டுக்கு மஹாராணி; தலைவி; குடும்பத்தை நிர்வகிக்கும் முழு அதிகாரத்தையும் உனக்குத் தருகிறேன் என்றார்.

இந்தக் கதையின் நீதி என்னவென்றால்– சமண மதத்தினர் போற்றும் அஹிம்சை, பிறர்பொருள் நயவாமை, உண்மை, பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடாமை, கெட்ட வழிகளில் செல்வம் சேர்க்காமை ஆகிய ஐந்து கொள்கைகளை யார் பின்பற்றுகிறார்களோ அவர்களே பெரும் பேறு அடைவர் என்பதாம்.

xxxxx

நாய் பெற்றதெங்கம் பழம்

பர்த்ருஹரி நீதி சதகம் ஸ்லோகங்கள் 38, 39

தானம் போகோ நாசஸ்திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய

யோன ததாதி  ந புங்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி – 38

दानं भोगो नाशस्तिस्रो

गतयो भवन्ति वित्तस्य ।

यो न ददाति न भुङ्क्ते

तस्य तृतीया गतिर्भवति ॥ 1.38 ॥

பொருள்

“ஒருவனுடைய செல்வம் மூன்று வழிகளில் கரைகிறது; தானம் கொடுப்பதாலோ, தனக்குப் பயன்படுத்துவதாலோ, இழப்பதாலோ போய்விடும். முதல் இரண்டு வழிகளைப் பயன்படுத்தாதோருக்கு மூன்றாவது வழி திறந்தே இருக்கிறது”.

அதாவது,

“செல்வத்தை, காசு பணத்தை, ஒருவன் தனக்கோ பிறருக்கோ பயன்படுத்த வேண்டும் அல்லது அது வீணாகிப் போகும். பணக்காரன், தானும் அனுபவியாமல் தர்மமும் செய்யாமல் இருந்தால் அது நாசமாகும்.-38”

பழமொழி 400 என்னும் தமிழ் நூல் இதை இன்னும் அழகாகச் சொல்லும்.

நாய் கையில் கிடைத்த தேங்காய் போல என்று

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி

வேய்முற்றி முத்து திரும் வெற்ப  அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்  –பழமொழி 216

பொருள்

“ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !

மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம்  நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”

நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.

கருமிகள் எனப்படும் லோபிகளும் இதுபோன்றவர்களே.

4.WHAT MISERS HAVE HOARDED THE WICKED WILL TAKE

4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்

என்று கொன்றை வேந்தனில் அவ்வையாரும் கூறுவார்

நாம் எல்லோரும் மைடாஸ் (Midas, the Miser) கேட்ட வரம் பற்றிய கதையை அறிவோம்.

xxx

நல்ல வழியில் ஈட்டாத பொருள் பற்றி திரு வள்ளுவர் அழகாகக் கூறுகிறார்:

வினைத் தூய்மை

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.   (குறள்  – 656)

தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது

பலர் ஏன் திருடுகின்றனர் என்ற கதைகளில் ஒருவர் துன்பத்தைத்த துடைப்பதற்காக அவர்கள் திருடினார்கள், கொள்ளை அடித்தார்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள். அது தவறு என்று வள்ளுவன் சொல்லிவிட்டான் .

இன்னும் பலர் மற்றவர்களை அழவைத்து பொருளைச் சேர்க்கிறார்கள்; அப்படிப்பட்ட செல்வம் அவர்களை அழ , அழ வைத்துவிட்டுப் போய்விடும் என்றும் வள்ளுவன் செப்புவான்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.   ( – 659)

பிறர் அழும்படியாகச் செய்து பெற்றுக் கொண்ட செல்வம் எல்லாம், நாம் அழும்படியாக அகன்று போகும்;

தீய வழிகளில் சேர்த்த செல்வத்தைக் காப்பாற்றவும் முடியாது; பச்சை மண்கலத்தில் தண்ணீரை வைத்து பாதுகாப்பது போன்றது அது என்று வள்ளுவன் சொல்லும் உவமை சாலப்பொருந்தும்

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.   ( 660)

வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

Xxxx

ஈயென்று ஒருவர்

    ஈயென்று நானொருவரிட நின்று கேளாத

        இயல்பு மென்னிட மொருவரீ

        திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம

        லிடுகின்ற திறமும் இறையாம்– என்று அருட் பிரகாச வள்ளளார் வேண்டுகிறார் .

xxxx

தான, தருமம் பற்றிய பொன்மொழிகள்

தானத்தின் இலக்கணம்

அநந்தஸ்ரூணி ரோமானி பஹுமானம் ப்ரியம் வச:

கிஞ்சானுமோதனம் தானம் தான் பூஷண பஞ்சகம்.

ஆநந்தஸ்ரூணி – தானம் கொடுத்தபின் ஆநந்தக் கண்ணீர்,

ரோமாணி – மயிர்க்கூச்சம் எடுத்தல்,

பஹுமானம் – மரியாதை காட்டல்,

ப்ரியம் வச: – பிரியமான சொற்களைச் செப்பல்,

அனுமோதனம் – தானத்தை மறுக்காமல் ஏற்றல்

xxx

நல்ல தானம் (சாத்விகம்) எது?

தகுதியான இடத்தில், தகுதியான காலத்தில், தகுதியுள்ள ஆளுக்கு (பாத்ரம்) கொடுப்பதே உத்தம தானம்; உயர்ந்த தானம் (17-20)

தாதவ்யமிதி யத்தானம் தீயதே அனுபகாரிணே

தேசே காலே ச பாத்ரே ச தத்தானம் சாத்விகம் ஸ்ம்ருதம்

இந்த ஸ்லோகத்தில் இன்னொரு வரியையும் சேர்த்துள்ளார்

நமக்கு உதவி செய்யாத ஒருவருக்கு தானம் செய்ய வேண்டும்.

அதாவது ஏற்கனவே நமக்கு ஏதோஒரு வகையில் உதவி செய்தததால் அந்த நபருக்கு தானம் கொடுத்தால் அது தானம் இல்லை. அது நன்றிக் கடன் ஆகும்.

Xxx

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி (226)

பிறருடைய பசியைத் தீர்ப்பதே பெரிய தருமம்/அறம். அப்பொருள் பிற்காலத்தில் தனக்குச் சேர்த்து வைக்கும் இடமாகும்.

ஆனால் இப்படிச் செய்வது இரண்டாம் வகை தானம் (தாமசம்).

புறநானூற்றில் தானம்

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணின்கன் ஆய் அல்லன்;

என்று ஆய் அண்டிரனை முடமோசியார் பாராட்டுகிறார் (புறம் 184)

 அதாவது அடுத்த ஜன்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்பதற்காக ஆய் அண்டிரன் தானம் செய்யவில்லை. பிறருடைய வறுமையைக் கண்ட மாத்திரத்தில் இயல்பாகப் பொங்கி எழும் மனிதாபிமான அடிப்படையில் வாரி வழங்குவானாம்! இது முதல் வகைத் தானம். ஆய் அண்டிரன், பேகன், கர்ணன், பாரி வள்ளல் போன்றோர் சாத்வீக (உத்தம) தானம் செய்தோர் ஆவர்.

Xxx subham xxxx

Tags-பொருள் ,தேடுதல் ,ஈட்டல், தகனம், தருமம், முதலீடு , கதைகள் , தமிழ்ப் பெண் , சமண பெண்

ஆசை வெல்லுதற்கரியது! அதை வெல்லும் உபாயம் என்ன? (Post.11,487)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,487

Date uploaded in London – –   30 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாபாரதச் செல்வம்

காம கீதா!

ஆசை வெல்லுதற்கரியது! அதை வெல்லும் உபாயம் என்ன?

ச.நாகராஜன்

மஹாபாரதத்தில் 14வது பர்வமாக அமையும் ஆஸ்வமேதிக பர்வத்தில் பதிமூன்றாவது அத்தியாயம் ஆசையை வெல்லுவது கஷ்டம் என்றும் அதை எப்படி வெல்வது என்பதையும் கூறுகிறது.

மாதவர், யுதிஷ்டிரருக்கு இந்த ரகசியத்தைக் கூறுகிறார்.

இது ‘காம கீதா’ என்று அழைக்கப்படுகிறது.

மாதவர் தர்மபுத்திரரிடம் கூறுகிறார் இப்படி : யுதிஷ்டிரரே! இந்த (ஆசை) விஷயத்தில் பூர்வ விருத்தாந்தம் தெரிந்தவர்கள் காமனால் பாடப்பட்ட காதைகளைச் சொல்லுகின்றனர். அவைகளை முழுதும் சொல்கிறேன் கேள்”

காமன் உரைத்த காதைகள் இவை:

“நாஹம் ஷக்யோபாயேன ஹந்தும் பூதேன கேனசித் | (ஸ்லோகம் 12)

ஒரு பிராணியாலும் என்னை உபாயமின்றிக் கொல்ல முடியாது.

யோ மாம் ப்ரயததே ஹந்தும் ஞாத்வா ப்ரஹரனே பலம் |
தஸ்ய தஸ்மின் ப்ரஹரனே புன: ப்ராதுர்பவாம்யஹம் || (ஸ்லோகம் 13)

எவன் ஒருவன் ஆயுதத்திலுள்ள பலத்தைத் தெரிந்து என்னைக் கொல்ல முயற்சி செய்கின்றானோ, அவனுடைய அந்த ஆயுதத்தில் நான் மறுபடியும் தோன்றுகிறேன்.

யோ மாம் ப்ரயததே ஹந்தும் யக்ஞைர்விவித தக்ஷிணை: |

ஜங்கமேஷ்விவ தர்மாத்மா புன: ப்ராதுர்பவாம்யஹம் || (ஸ்லோகம் 14)

எவன் என்னைப் பலவித தக்ஷிணைகள் உள்ள யாகங்களால் கொல்ல முயற்சிக்கிறானோ, தர்மாத்வானவன் ஜங்கமங்களுள் (உயர்ந்த ஜாதியில்) பிறப்பது போல நான் மறுபடியும் அவனுடைய (சித்தத்தில்) தோன்றுகிறேன்.

எவன் என்னை வேதங்களாலும், வேதாந்தத்தில் சொல்லிய சாதனங்களாலும் கொல்ல முயற்சிக்கிறானோ, அவனிடத்தில் ஜீவன் ஸ்தாவரங்களில் தோன்றுவது போல நான் தோன்றுகிறேன்.

யோ மாம் ப்ரயததே ஹந்தும் த் ருத்யா சத்ய பராக்ரம: |

பாவோ பவாமி தஸ்யாஹம் ச ச மாம் நாவபுத்யதே || (ஸ்லோகம் 16)

உண்மையான பராக்ரமுள்ள எவன் ஒருவன் என்னை தைரியத்தினால் கொல்ல முயற்சி செய்கிறானோ, அவனுடைய சித்தமாக நான் ஆகிறேன். அவனும் என்னைத் தெரிந்து கொள்வதில்லை.

கடுமையான விரதமுள்ள எவன் ஒருவன் என்னைத் தவத்தினால் கொல்ல முயற்சிக்கிறானோ, அவனுடைய தவத்தில், பிறகு நான் மறுபடியும் தோன்றுகிறேன்.

யோ மாம் ப்ரயததே ஹந்தும் மோக்ஷமாஸ்தாய பண்டித: |

தஸ்ய மோக்ஷரதிஸ்தஸ்ய ந்ருத்யாமி ச ஹசாமி ச |

அவத்ய: சர்வபூதானாமஹமேக: சனாதன: ||  (ஸ்லோகம் 18)

எந்தப் பண்டிதன்  மோக்ஷத்தைக் கருதி என்னைக் கொல்ல விரும்புகிறானோ, மோக்ஷத்தில் ஆசையுள்ள அவனிடத்தில் நான் நர்த்தனம் செய்கிறேன். நகைக்கிறேன்.”

எப்போதுமுள்ள நான் ஒருவனே ஒரு பிராணியினாலும் கொல்ல முடியாதவன்.

ஆக, நாம் ஒருவனாலும் கொல்ல முடியாதவன் என்று காமன் கூறும் இந்த காம கீதையை உணர்வோர் நிச்சயம் திடுக்கிடுவர்.

ஆகவே இந்த ஆசையை வெல்வது எப்படி என்பதை மாதவர் கூறுவது மிக முக்கியமானதாக ஆகிறது!

“மம (என்னுடையது என்று பொருள்) என்னும் இரண்டு அக்ஷரம் சம்சாரத்திற்குக் காரணமாகும்.

ந மம (என்னுடையதன்று என்று பொருள்) என்பது சாஸ்வதமான பிரம்மத்தை அடையக் காரணம் ஆகும்.

பண்டித யோகியான ஒருவன் மனிதன் பயனில் ஆசைப்படுவது தர்மமன்று; ஆசையை அடக்குவது தான் தர்மம். அதுவே மோக்ஷத்திற்குக் காரணம் என்று ஆலோசித்துத் தெரிந்து கொண்டு அடக்குகிறான்.”

இது தான் மாதவர் விண்டு உரைக்கும் ரகசியம்.

‘எந்த கர்மத்தைச் செய்தாலும் அதில் பயன் பற்றி நினையாதே; பயன் கருதாது கர்மத்தைச் செய்!’ என்பது தான் மொத்த சாரம்!

மஹாபாரதம் மானிட உலகிற்குத் தரும் மிகப் பெரும் ரகசிய செய்தி இது தான்!

***

புத்தக அறிமுகம் 127

கடவுளைக் காட்டு!

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. கடவுளைக் காட்டு – 1                                                     2. கடவுளைக் காட்டு – 2                                                     3. கடவுளைக் காட்டு என்போருக்கு பதில் கேள்வி: கடவுள் இல்லை       என்பதை நிரூபி!                                                     4. கடவுளுக்கு சவால்!  குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியர் கவிதை!                   5. கடவுளைக் காட்டு நம்புகிறேன்! – என்போருக்கு இதோ பதில்!                     6. இறைவன் இருக்கிறான்! – அறிவியல் தரும் ஆதாரங்கள்!                        7. இறைவன் இருக்கிறான்?! நாத்திகமும் (?) ஆத்திகமும் (!)                    8. கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்!               9. கடவுள் எங்கே? – 1                                                                                                                                           10. கடவுள் எங்கே – 2                                    11.கம்ப்யூட்டர் கடவுளே சரணம்!                                                 12. இறைவன் பற்றிய இரகசியங்கள்!                                                                                13. கடவுளும் கம்ப்யூட்டரும்                                                                                                                                  14. மறக்கின்ற தருணமும் நினைக்கின்ற தருணமும்!                                                                           15. கென்னடி – மிட்சுபிஷி – செர்னோபில் – பிரமிக்க வைக்கும் கர்ம பலன் சம்பவங்கள் மூன்று!                                                    16. கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!                                                                                           17. கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கரன்ஸி!
18. நல்லதும் கெட்டதும் ஏன் ஏற்படுகிறது?                                       19. காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்!                      20. காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்!                                21. பிரார்த்தனையின் சிறப்பு                                                                                                                                22. பிரார்த்தனை செய்வது எப்படி?                                                                                                                 23. மொத்தம் எத்தனை கடவுள்?                                           24. கடவுளுக்கு ஜாதி பேதம் இல்லை; பக்திக்கும் அது இல்லை!         25. லாலி தேகன் மை கயி! மை பீ ஹோ கயி லால்!!                                               26. தர்ம விளக்கம்!                                                                      27. ஒரு ஹிந்துவாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது?                                   28. இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை, மகனே!                             29. தெய்வம் பலப்பல சொல்லி பகைத் தீயை வளர்ப்பவர்மூடர்!                    30. உண்மை ஒன்றே!

*

நூலில் இடம் பெற்றுள்ள என்னுரை :

என்னுரை

மனித வாழ்க்கையில் எழும் சிக்கலான கேள்விகள் பல!

அவற்றில் முக்கியமான சில : எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடவுள் இருக்கிறாரா? பிரார்த்தனைக்குப் பலன் உண்டா? கர்ம பலன் என்றால் என்ன? – இப்படிப் பல கேள்விகள்.

இவற்றிற்கு அருளாளர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் அவ்வப்பொழுது விடை அளித்து வந்துள்ளனர்.

ஆனால் அறிவியல் யுகத்தில் கடவுளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.

அறிவியலில் தங்கள் தங்கள் சோதனைச்சாலைக்கு ஏற்ப கடவுளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர் விஞ்ஞானிகள். அவர்களில் சிலர் புதிய நாத்திகவாதத்தை அறிவியல் துணையோடு மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர்.

அதே சமயம் விஞ்ஞானிகளில் பலரும் அதே அறிவியலின் துணையோடு கடவுளை ஆய்வுக்கு உட்படுத்தி இறைவன் இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

இறைவன் பற்றிய சுவையான பல உண்மைகளைத் தொகுத்துத் தருகிறது இந்த நூல்.

கர்ம பலனைப் பற்றிய கேள்விகளுக்கு விடைகளையும், பிரார்த்தனையின் மகிமை பற்றிய செய்திகளையும் கூடவே இந்த நூல் தருகிறது.

ஞான ஆலயம், மாலைமலர், www.tamilandvedas.com ப்ளாக் உள்ளிட்டவற்றில் வெளியானவை இவை.

இவற்றை வெளியிட்டோருக்கும் இவற்றைப் படித்து என்னை ஊக்குவித்த அன்பர்களுக்கும் எனது நன்றி.

அழகிய முறையில்இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                                                            .நாகராஜன்                                            28-9-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

GURU NANAK  QUOTES : DECEMBER 2022 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.11,486)

Golden Temple at Amritsar in Punjab.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,486

Date uploaded in London – 29 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

FESTIVAL DAYS:3 Gita Jayanti, 6 Barani Deepam,Tiruvannamalai Deepam, 7 Sarvaalaya Deepam, 8 Sri Pancharatra Deepam, Pournami, 11 Poet Bharatiyar Birth Day, 16 Maarkazi/Dhanur month begins; 25 Christmas , 26 Boxing Day.

Full moon day/Purnima- 8; New moon day/ Amaavaasyai- 23; Ekaadasi fasting Days- 3 / 4 and 19

Auspicious Days- December 11, 12, 14

Xxx

FOLLOWING ARE GURU NANAK DEV JI’S QUOTATIONS

DECEMBER 1 THURSDAY

“Burn worldly love, rub the ashes and make ink of it,

make the heart the pen, the intellect the writer,

write that which has no end or limit.” ― Guru Nanak, Sri Guru Granth Sahib

xxxx

DECEMBER 2 FRIDAY

“He who has no faith in himself can never have faith in God.”

Xxxx

DECEMBER 3 SATURDAY

“Even Kings and emperors with heaps of wealth and vast dominion cannot compare with an ant filled with the love of God.”

Xxxx

DECEMBER 4 SUNDAY

“Dwell in peace in the home of your own being, and the Messenger of Death will not be able to touch you.”― Guru Nanak

Xxxx

DECEMBER 5 MONDAY

“The world is a drama, staged in a dream”

Xxxx

DECEMBER 6 TUESDAY

“For each and every person, our Lord and Master provides sustenance. Why are you so afraid, O mind? The flamingos fly hundreds of miles, leaving their young ones behind. Who feeds them, and who teaches them to feed themselves? Have you ever thought of this in your mind?”

Xxxx

DECEMBER 7 WEDNESDAY

“Speak only that which will bring you honour.”

xxxx

DECEMBER 8 THURSDAY

“He who regards all men as equals is religious.”― Guru Nanak

Xxxx

DECEMBER 9 FRIDAY

“Nanak, the whole world is in distress. He, who believes in the Name, becomes victorious.”― Guru Nanak, Sri Guru Granth Sahib

Xxxx

DECEMBER 10 SATURDAY

“Whatever kind of seed is sown in a field, prepared in due season, a plant of that same kind, marked with the peculiar qualities of the seed, springs up in it.”

Xxxx

DECEMBER 11 SUNDAY

“those who have loved are those that have found God”

― Guru Nanak

xxxx

DECEMBER 12 MONDAY

“In this world when you ask of happiness

Pain steps forward”― Guru Nanak

Xxxx

DECEMBER 13 TUESDAY

“Wherever the Protector of all keeps me, there is heaven.”

Xxxx

DECEMBER 14 WEDNESDAY

“Realization of Truth is higher than all else. Higher still is truthful living.”

XXXX

DECEMBER 15 THURSDAY

Riches cannot be gathered without sin and evil means.

Xxxx

DECEMBER 16 FRIDAY

 Through shallow intellect, the mind becomes shallow, and one eats the fly, along with the sweets.

Xxxxx

DECEMBER 17 SATURDAY

“Your Mercy is my social status.”

― Guru Nanak, Sri Guru Granth Sahib

XXXX

DECEMBER 18 SUNDAY

One cannot comprehend Him through reason, even if one reasoned for ages.

Xxxx

DECEMBER 19 MONDAY

 Let no man in the world live in delusion. Without a Guru none can cross over to the other shore.

Xxxx

DECEMBER 20 TUESDAY

Alone let him constantly meditate in solitude on that which is salutary for his soul, for he who meditates in solitude attains supreme bliss.

Xxxx

DECEMBER 21 WEDNESDAY

 Sing the songs of joy to the Lord, serve the Name of the Lord, and become the servant of His servants

xxxxx

DECEMBER 22 THURSDAY

I bow at His Feet constantly, and pray to Him, the Guru, the True Guru, has shown me the Way.

Xxxx

DECEMBER 23 FRIDAY

 I am not the born; how can there be either birth or death for me?

xxxx

DECEMBER 24 SATURDAY

“What should the yogi have to fear? Trees, plants, and all that is inside and outside, is He Himself”― Guru Nanak, Sri Guru Granth Sahib

xxxx

DECEMBER 25 SUNDAY

“I am neither a child, a young man, nor an ancient; nor am I of any caste.”

xxxx

DECEMBER 26 MONDAY

“Owing to ignorance of the rope the rope appears to be a snake; owing to ignorance of the Self the transient state arises of the individualized, limited, phenomenal aspect of the Self.”

XXXX

DECEMBER 27 TUESDAY

“Death would not be called bad, O people, if one knew how to truely die.”

XXXX

DECEMBER 28 WEDNESDAY

“I am neither male nor female, nor am I sexless. I am the Peaceful One, whose form is self-effulgent, powerful radiance.”

XXXX

DECEMBER 29 THURSDAY

“There is but One God, His name is Truth, He is the Creator, He fears none, he is without hate, He never dies, He is beyond the cycle of births and death, He is self illuminated, He is realized by the kindness of the True Guru.

xxxx

DECEMBER 30 FRIDAY

He was True in the beginning, He was True when the ages commenced and has ever been True, He is also True now.”― Guru Nanak

XXX

Gita Jayanthi in December.

DECEMBER 31 SATURDAY

By His order some obtain their reward; by His order others must ever wander in transmigration. All are subject to His order; none is exempt from it. He who understands God’s order, O Nanak, is never guilty of egoism.

XXXX SUBHAM XXXX

Tags― Guru Nanak, Quotes, Amritsar, Sikh Religion, Guru Grantha Sahib, Golden Temple

குருநானக் பொன்மொழிகள்- டிசம்பர் 2022-  நற்சிந்தனை காலண்டர் (Post.11,484)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,484

Date uploaded in London – 29 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சீக்கிய மத ஸ்தாபகர் குரு நானக் தேவின் பொன்மொழிகள் இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

விழா நாட்கள் – 3 கீதா ஜயந்தி ; 6 பரணி தீபம் , திருவண்ணாமலை  தீபம் ; 7 சர்வாலய  தீபம் ; 8 பாஞ்சராத்ர  தீபம் ; 11 மஹா கவி பாரதியார் பிறந்த தினம்; 16 மார்கழி/ தனுர் மாத துவக்கம் ; 25 கிறிஸ்த்மஸ் பண்டிகை

பெளர்ணமி -8; அமாவாசை -23; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 3/ 4, 19.

சுப முகூர்த்த தினங்கள்- 11,12, 14

xxx

டிசம்பர் 1 வியாழக் கிழமை

உலக பந்த பாசத்தைப் பொசுக்குங்கள் ; அந்த சாம்பலைக் குழைத்து மை தயாரியுங்கள் ; உங்கள் இதயமே எழுதுகோலாக ஆகட்டும் ;உங்கள் புத்தி எழுத்தர் ஆகட்டும்;ஆதி அந்தமற்ற அவனை எழுதுங்கள் – ஸ்ரீ குரு கிரந்த சாஹிப் எனப்படும் ஆதிக் கிரந்தத்தில் குரு நானக்ஜி சொன்னது

Xxxx

டிசம்பர் 2 வெள்ளி  கிழமை

தன்னையே நம்பாதவனுக்கு இறைவனிடத்தில் நம்பிக்கை ஏற்படாது (தன்னம்பிக்கை அவசியம்)

Xxxx

டிசம்பர் 3 சனிக்  கிழமை
 

மஹத்தான சாம்ராஜ்யமும், மலைபோலச் செல்வமும் உடைய அரசன் கூட இறைவனின்  அன்பு நிரம்பிய எறும்புக்கும் சமம் ஆக மாட்டான்.

டிசம்பர் 4 ஞாயிற்றுக் கிழமை

உங்கள் உள்ளத்தில் சாந்தி நிலவ வாழுங்கள்; மரண தூதன் உங்களைத் தொட்டே முடியாது – குரு நானக்

Xxxx

டிசம்பர் 5 திங்கட்  கிழமை

உலகமே நாடகம்; கனவில் நாடகம் நடக்கிறது. – குரு நானக்

Xxxx


டிசம்பர் 6 செவ்வாய்க் கிழமை

நம் ஒவ்வொருவனுக்கும் இறைவன் படி அளக்கிறான் ; மனமே! என் கவலைப் படுகிறாய்?செங்கால் நாரைகள் தனது குஞ்சுகளை விட்டு விட்டு பல நூறு மைல்கள் பறக்கவில்லையா! அவைகளுக்கு உணவளிப்பது யார்? உண்ணக் கற்றுக்கொடுத்தது யார்? எப்போதாவது இதை எண்ணிப் பார்த்தாயா ? – குரு நானக்

xxxx

டிசம்பர் 7  புதன்  கிழமை

எல்லோரையும் சமமாக நடத்துவோனே மதத்தைப் பின்பற்றுவோன் ஆவான்

xxxx

டிசம்பர் 8 வியாழக் கிழமை

உனக்கு மதிப்பும் மரியாதையையும் ஏற்படுத்தும் சொற்களை மட்டும் செப்பு

Xxxx

டிசம்பர் 9 வெள்ளி  கிழமை 

நானக், உலகமே துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறது.அவனுடைய பெயரில் நம்பிக்கை உடைவான் வெற்றி அடைகிறான்

Xxxx

டிசம்பர் 10 சனிக்  கிழமை

ஒருவன் எதை விதைத்து , பருவத்தில் பாசனம் செய்கிறானோ அதே பயிர் அந்த கணங்களி உடைய விதைகளுடனே முளைக்கும்

Xxxx

டிசம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை

இந்த உலகில் நாம் இன்பத்தை நாடுகிறோம்; ஆனால் துன்பமே முன்னுக்கு வந்து நிற்கிறது.

xxx

டிசம்பர் 12 திங்கட்  கிழமை

யார் அன்புடன் வாழ்கிறார்களோ அவர்களே இறைவனைக் கண்டவர்கள் ஆவர்.

xxxx

டிசம்பர் 13 செவ்வாய்க் கிழமை

எல்லாம் வல்லவன் என்னை எங்கு வைக்கிறானோ, அதுவே எனக்கு சொர்க்கம்

Xxxx

டிசம்பர் 14  புதன்  கிழமை

சத்தியத்தை (இறைவன்) உணர்வதே எல்லாவற்றையும் விட  மேலானது ; அதையும் வீட்டா மேலானது நேர்மையான வாழ்க்கை .

XXXX

டிசம்பர் 15 வியாழக் கிழமை

 பாவத்தின் மூலமும் தீய வழிகள் மூலமுமே செல்வத்தைச் சேர்க்கமுடியும்.

Xxxx

டிசம்பர் 16 வெள்ளி  கிழமை

வறட்டு புத்தியினால் மனமும் வறண்டு விடுகிறது. அப்போது இனிப்புடன் அதில் உட்கார்ந்த ஈயையும் சேர்த்தது உண்டுவிடுகிறான்.

xxxx

டிசம்பர் 17 சனிக்  கிழமை

இறைவா, நீ என் மீது பொழியும் கருணைதான் எனக்குக் கிடைத்த சமூக அந்தஸ்து

XXXX

டிசம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை

யாரும் மாயையில் உழலவேண்டாம் ; குரு இல்லாமல் மறு கறைக்குச் செல்ல முடியாது

Xxxx

டிசம்பர் 19 திங்கட்  கிழமை

ஒருவன் தன்னந்தனியாக அவனது ஆன்ம தாகத் தைத் திடீர்ப்பவன் குறித்து தியானிப்பானாக ; தனியாக தியானிப்பவனே பரம ஆனந்தத்தை அடைகிறான்

XXXX

டிசம்பர் 20 செவ்வாய்க் கிழமை

ஆண்டாண்டுக்கு காலம் சிந்தித்தாலும் விசாரணை/ஆராய்சசி மூலம் அறியக்கூடியவன் அல்ல ஆண்டவன்

Xxxx

டிசம்பர் 21 புதன்  கிழமை

ஆண்டவனிடம் அவன் புகழை  மகிழ்ச்சியோடு பாடுங்கள் ; அவன் பெயர்கண்ட இடத்த்தில் சேவை செய்யுங்கள்; அடியார்க்கு அடியாராக மாறுங்கள்

Xxxxx

டிசம்பர் 22 வியாழக் கிழமை

நான் எப்போதும் அவன் பாதம் பணிகின்றேன் ; எப்போதும் குருவினைப் பிரார்த்திக்கிறேன்; ; உண்மையான குரு , அவன், எனக்கு வழிகாட்டிவிட்டான் .Xxxx

டிசம்பர் 23 வெள்ளி  கிழமை

நான் பிறக்கவே இல்லை; எனக்கு மரணமும் பிறவியும் ஒரு பொருட்டல்லவே

xxxx

டிசம்பர் 24 சனிக்  கிழமை

யோகியானவன்  எதைக் கண்டு பயப்படுவான்? மரங்கள், செடி கொடிகள் ஆகிய அனைத்தின் உள்ளும் புறமும் அவன்தானே இருக்கிறான்.

Xxxx

டிசம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை

நான் குழந்தையும் அல்ல; இளைஞனும் அல்ல; புராதன புருஷனும் அல்லன் ; எனக்கு ஜாதி ஏதும் இல்லை

xxxx

டிசம்பர் 26 திங்கட்  கிழமை

அறியாமை  காரணமாக கயிற்றைப் பாம்பாகப் பார்க்கிறான் ;அவ்வாறே நம் ஆன்மாவையும் அழியக் கூடியதாக , நம்முடையதாக, வரையரை க்குட் பட்டதாகக் கருதுகிறோம்.

டிசம்பர் 27 செவ்வாய்க் கிழமை

உண்மையாக மரணம் எய்தும் முறையை அறிந்துவிட்டால், யாரும் மரணத்தைக் குறை சொல்லமாட்டார்கள்

XXXX

டிசம்பர் 28 புதன்  கிழமை

நான் ஆணுமல்ல; பெண்ணுமல்ல; அலியுமல்ல.நான் சாந்தமே வடிவானவன்; சுயம் பிரகாசி; ஒளியோடு பிரகாசிக்கிறேன்

XXXX

டிசம்பர் 29 வியாழக் கிழமை  

கடவுள் ஒருவனே; அவன் பெயர் சத்தியம்; அவனே நம்மைப் படைத்தவன்; யார்க்கும் அஞ்சாதவன்,வெறுப்பற்றவன்; பிறப்பு இறப்பு எனும் சுழற்சிக்கு அப்பாற்பட்டவன்; அவன் சுயம் பிரகாசி; உண்மையான குருவின் அருள் கிடைத்தால் அவனை அறியலாம்.

xxxx

Golden Temple at Amritsar அமிர்தசரஸ் பொற்கோவில்

டிசம்பர் 30 வெள்ளி  கிழமை

இந்த யுகம் தோன்றியபோதும் யுகம் பெருகியபோதும்,இப்போதும் எப்போதும் உண்மைப் பொருளாக விளளங்குபவன் அவன்

XXX

டிசம்பர் 31 சனிக்  கிழமை

அவன் அருளாலே சிலருக்கு பரிசு கிடைக்கிறது ; அவன் கட்டளையினால் பலர் பிறப்புச் சுழலில் சிக்குகிறார்கள்;; எல்லோரும் அவன் கட்டளைக்குட் பட்டவர்களே; எவரும் விதி விலக்கல்ல ; ஆண்டவன் கட்டளையை அறிந்தவர்களுக்கு அஹம்காரம் வராது.

-subham-

Tags- குருநானக் பொன்மொழிகள்குருகிரந்த சாஹிப்சீக்கிய மதம்அமிர்தசரஸ் பொற்கோவில்