செப்பு மொழி இருபத்தொன்பது! (Post No.11,576)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,576

Date uploaded in London – 23 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபத்தொன்பது!

ச. நாகராஜன்

 1. நான் உன்னிடம் பந்தயம் கட்டுகிறேன், சூதாட்டப் பந்தயத்தை என்னால் விட்டு விட முடியும்.

I bet you I could stop gambling.

2.  நானூறு கோடி நட்சத்திரங்கள் வானில் மின்னுகின்றன என்று நீங்கள் சொல்லும் போது நம்பும் ஒருவர், இந்த இடம் இப்போது தான் பெயிண்ட் அடித்து உலராமல் இருக்கிறது என்று சொல்லும் போது உங்களை நம்பாமல் அதை மட்டும் சரி பார்ப்பது ஏன்?

Why does someone believe you when you say there are four billion stars, but check when you say the paint is wet?

3. செயற்கை நுண்ணறிவு என்பது இயற்கையான முட்டாள்தனத்திற்கு ஈடாகுமா என்ன?

Artificial Intelligence is no match for natural stupidity.

4. உலகில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் சம்பவங்கள் ஒரு செய்தித்தாளின் பக்கங்களில் மிகச் சரியாக அடங்குவது தான் ஆச்சரியகரமாக இருக்கிறது!

It is amazing that the amount of news that happens in the world ev eery day always just exactly fits the newspaper.

5. கவலைப்படுதல் என்பது வேலை செய்கிறது! நான் கவலைப்படும் 90 சதவிகிதம் கவலைகள் ஒருபோதும் நடப்பதில்லை.

Worrying works! 90% of the things I worry about never happen.

6. என்னுடைய அபிப்ராயங்கள் மாறிக் கொண்டே இருந்திருக்கலாம், ஆனால் நான் சொல்வது சரி தான் என்ற உண்மை எப்போதுமே மாறாது.

My opinion may have changed, but not the fact that I am right.

7. கீழே விழுவதால் ஒருவர் மரணமடைவதில்லை. கீழே திடீரென்று ஓரிடத்தில் மோதி நிற்பதால் தான் மரணம் ஏற்படுகிறது.

It is not the fall that kills you; it’s the sudden stop at the end.

8.  நமக்கு போதுமான அளவு ‘கன் கண்ட்ரோல்’ (துப்பாக்கி கட்டுப்பாடு) இருக்கிறது. நமக்குத் தேவையானது ‘இடியட் கண்ட்ரோல்’ தான்!

We have enough gun control. What we need is idiot control.

9. உள்ளே என்ன இருக்கிறதோ அது தான் முக்கியம் என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு குளிர்சாதனப்பெட்டி தான்!

The fridge is a perfect example of what matters is on the inside.

10.  கஷ்டமான ஒரு வேலையைச் செய்ய நான் ஒரு சோம்பேறியைத் தான் தேர்ந்தெடுக்கிறேன். ஏனெனில் ஒரு சோம்பேறி தான் அதைச் சுலபமாகச் செய்யும் வழியைக் கண்டுபிடிப்பான் – பில் கேட்ஸ்

I choose a lazy person to do a hard joy, because a lazy person will find an easy way to do it.  – –   Bill Gates

11. எனக்கு ஜோதிடத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லை; ஏனெனில் நான் தனுர் ராசிக்காரன். தனுர்ராசிக்காரர்கள் எப்போதுமே சந்தேகப் பேர்வழிகள்! – ஆர்தர் சி.க்ளார்க்

I don’t believe in astrology; I’m a Sagittarius and we are skecptical.  – Arthur C Clarke

12.  உலகம் இன்று முடிவுக்கு வந்து விடும் என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நாளைய தினம் வந்து விட்டது.      – சார்லஸ் ஷுல்

Don’t worry about the world coming to an end today. It is already tomorrow in Australia.    – Charles Shulz                                                                                                                                                

13. சிரிப்பு இல்லாமல் கழியும் நாள், வீணான நாளே. – சார்லி சாப்ளின்  

A day without laughter is a day wasted.   – Charlie Chaplin.

14.  ‘மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு என்னால் முடியாது, நான் அல்பமானவன்’ என்று நீங்கள் நினைத்தீர்களானால் ஒரு கொசுவுடன் தூங்கிப் பாருங்கள்!    – தலாய் லாமா

If you think you are too small to make a difference, try sleeping with a mosquito. – Dalai Lama.  

15. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இன்று என்பது நேற்று நீங்கள் கவலைப்பட்ட நாளைய நாள் என்பதை! – டேல் கார்னீகி

Remember, today is the tomorrow you worried about yesterday – Dale Carnegie

16. திருமணம் தான் விவாகரத்து என்பதற்கான முதல் முக்கிய காரணம்! – க்ருஸோ மார்க்ஸ்

Marriage is the chief cause of divorce – Groucho Marx.

17.  ஒரு மனிதன் தன் மனைவிக்காக கார் கதவைத் திறந்து விடுகிறார் என்றால் ஒன்று அந்தக் கார் புதிய காராக இருக்க வேண்டும் அல்லது அவள் புதிய மனைவியாக இருக்க வேண்டும். – பிரின்ஸ் பிலிப், ட்யூக் ஆஃப் எடின்பரோ

When a man opens a car door for his wife, it’s either a new car or a new wife. – Prince Phillip, Duke of Edinburah

18.  குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பேசுகின்ற அனைவருமே ஏற்கனவே பிறந்து விட்டவர்கள் என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?   – பென்னி ஹில்

Have you noticed that all the people in favour of birth control are already born?   – Benny Hill.  

19. இசையைப் பற்றிப் பேசுவது என்பது கட்டிடக்கலையைப் பற்றி நடனமாடுவது போலத் தான்!  – ஸ்டீவ் மார்டின்

Talking about music is like dancing about architecture. – Steve Martin

20. பிரான்ஸின் மணிமகுடம் கீழே கிடப்பதைப் பார்த்தேன், ஆகவே அதை எனது வாளால் பொறுக்கி எடுத்துக் கொண்டேன். – நெப்போலியன்

I saw the crown of France laying on the ground, so I picked it up with my sword – Napoleon Bonaparte

21. வெற்றி என்பது எப்போதும் போரில் ஜெயிப்பதில் இல்லை, கீழே விழும் ஒவ்வொரு தடவையும் மீண்டும் எழுந்திருப்பதில் தான் இருக்கிறது! – நெப்போலியன்

Victory is not always winning the battle, but rising every time you fall.

– Napoleon Bonaparte

22. ஒரு பையனின் ஒரு பார்வையானது ஒரு பெண்ணின் இதயத்தை எப்படித் துளைக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. – நெப்போலியன்

No one knows how it is that with one glance a boy can break through into a girl’s heart. – Napoleon Bonaparte

23. தனியாக நடக்கும் போது வேகமாக நாம் நடக்கிறோம். – நெப்போலியன்

We walk faster when we walk alone. – Napoleon Bonaparte

24. உண்மையான மனிதன் யாரையும் வெறுப்பதில்லை. – நெப்போலியன்

A true man hates no one. – Napoleon Bonaparte

25. முடியாது என்ற வார்த்தை முட்டாள்களில் அகராதியில் மட்டுமே காணப்படும். – நெப்போலியன்

Impossible is a word to be found only in the dictionary of fools. – Napoleon Bonaparte

26. மனிதர்களை இணைப்பது இரண்டே இரண்டு சக்திகள் தாம் – பயம் மற்றும் ஆர்வம். – நெப்போலியன்

There are only two forces that unite men – fear and interest. – Napoleon Bonaparte

27. பேச்சுக்கள் மறைந்து விடும், ஆனால் செயல்கள் நிற்கும். – நெப்போலியன்

Speeches pass away, but acts remain. – Napoleon Bonaparte

28. மக்களை தலைமை தாங்கிச் செல்வதற்கான ஒரே வழி அவர்களுக்கு எதிர்காலத்தைக் காண்பிப்பது தான் : ஒரு தலைவர் என்பவர் நம்பிக்கை வியாபாரி.

The only way to lead people is to show them a future: a leader is a dealer in hope.  – Napoleon Bonaparte

29. நீங்கள் உங்கள் இறகுகளை விரிக்கும் வரையில் உங்களுக்கு எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்பது தெரியாது. – நெப்போலியன்

 Until you spread your wings, you’ll have no idea how far you can fly. – Napoleon Bonaparte

*****************************

கலியுகத்தின் “மகிமை” பற்றி அம்பலவாணர் & அருணகிரிநாதர் (Post.11,575)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,575

Date uploaded in London – 22 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

அறப்பளீசுர சதகம் 30 

அறப்பளீசுர சதகம் 30. குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்

துட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவர்;

     சொல்லும்நற் கவியை மெச்சார்

  துர்ச்சனர்க்க கம்மகிழ்ந்து பசரிப் பார்வரும்

     தூயரைத் தள்ளிவிடுவார்

இட்டமுள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப்

     பென்னிலோ போய்ப்பணிகுவார்;

  ஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசை

     என்னிலோ காலில் வீழ்வார்;

நட்டலா பங்களுக் குள்ளான பந்துவரின்

     நன்றாக வேபே சிடார்;

  நாளும்ஒப் பாரியாய் வந்தபுத் துறவுக்கு

     நன்மைபல வேசெய் குவார்;

அட்டதிசை சூழ்புவியில் ஓங்குகலி மகிமைகாண்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அத்தனே – தலைவனே!, அருமை ………… தேவனே!,

யாருமே துட்ட விகடக் கவியை மெச்சுவர் – எல்லோரும் தீய விகடக்

கவிஞனைப் புகழ்வார்கள், சொல்லும் நல் கவியை மெச்சார் – புகழ்ந்து

கூறத்தக்க நல்ல கவிஞனைப் புகழமாட்டார்கள், துர்ச்சனருக்கு அகம்

மகிழ்ந்து உபசரிப்பார் – தீயவரை மனமகிழ்ச்சியுடன் ஆதரிப்பார்,

தூயரைத் தள்ளி விடுவார் – நல்லோரை ஆதரிக்கமாட்டார்கள், இட்டம்

உள தெய்வந்தனைக் கருதிடார் – விருப்பமான தெய்வத்தை நினையார்,

கறுப்பு என்னிலோ போய்ப் பணிகுவார் – பேய் என்றாற் சென்று

வணங்குவர்ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார் – பெற்றோர்களைச்

சிறிதும் மதிக்கமாட்டார், வேசை என்னிலோ காலில் வீழ்வார் –

பரத்தையென்றாற் காலில் விழுந்துவணங்குவார், நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின் நன்றாகவே

பேசிடார் – இன்பதுன்பங்களுக்கு உட்பட்ட உறவினர் வந்தால் மனம்

விட்டுப் பேசமாட்டார்ஒப்பாரியாய் வந்த புது உறவுக்கு நாளும் பல

நன்மை செய்வார் – ஒப்புக்கு வந்த புதிய உறவினர்க்கு எப்போதும்

பலவகை நலங்களும் புரிவர், அட்ட திசை சூழ் புவியில் ஓங்கு கலி

மகிமை – (இவை) எட்டுத் திக்குகள் சூழ்ந்த உலகில் கலியுகத்தின்

பெருமை.

xxx

ஒப்புநோக்குக- Arunagirinathar

கலியுகத்தில் என்ன, என்ன நடக்கும் என்று சம்ஸ்க்ருத புராணங்களில் நிறைய எழுதி வைத்துள்ளனர்; அதன் சுருக்கத்தை மட்டுமே பாடல் வடிவில் நமக்கு அம்பலவாணர் சொல்கிறார்.

Thiruppugal from kaumaram.com with Sri Gopalasundaram’s commentary

கலியுகம் பற்றி அருணகிரிநாதரும் இதையே சொல்கிறார் :-

கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்

     கோதுசே ரிழிகு லத்தர் …… குலமேன்மை

கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர

     கோவுநா னெனஇ சைப்பர் …… மிடியூடே

ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்

     ஆசுசேர் கலியு கத்தி …… னெறியீதே

ஆயுநூ லறிவு கெட்ட நானும்வே றலஅ தற்கு

     ளாகையா லவைய டக்க …… வுரையீதே

ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர

     ஈசன்மேல் வெயிலெ றிக்க …… மதிவேணி

ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்

     ஏறியே யினிதி ருக்க …… வருவோனே

வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து

     வேதனா ரையும் விடுத்து …… முடிசூடி

வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த

     வீறுசேர் சிலை யெடுத்த …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் … பயந்தவராய்

இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப் பேச்சைப் பேசுவார்கள் சிலர்.

அற்பர் கோது சேர் இழி குலத்தர் குல மேன்மை கூறியே நடு

இருப்பர் … கீழ் மக்களாகவும் குற்றம் உள்ள இழி குலத்தவராகவும்

இருப்பினும்சிலர் தங்கள் குலத்தின் பெருமையே பேசி சபை நடுவே வீற்றிருப்பர்.

சோறு இடார் தரும புத்ர கோவு(ம்) நான் என இசைப்பர் …

(பசித்தவருக்குச்) சோறு இடாத பேர்வழிகள் தரும புத்ர அரசனே

நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசுவர்.

மிடி ஊடே ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் …

தரித்திர நிலையில் ஆழ்ந்து கிடப்பவர் செல்வம் மிக்க குபேரன் நான் என்று தம்மைத் தாமே புகழ்வர்.

ஆசு சேர் கலி யுகத்தின் நெறி ஈதே … குற்றம் நிறைந்த

கலி யுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது.

Thiruppugal from kaumaram.com with Sri Gopalasundaram’s commentary

……………………………………………….

Xxxx

விராலிமலை திருப்புகழிலும் பணமே கொடுக்காதவர்களையும் குபேரன் என்று புகழும் காலம் என்று சொல்லி அருணாகிரிநாதர் வருந்துகிறார் :-

கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து

     குலாவியவ மேதி ரிந்து …… புவிமீதே

எடாதசுமை யேசு மந்து எணாத கலியால் மெ லிந்து

     எலாவறுமை தீர அன்று …… னருள்பேணேன்

Thiruppugal from kaumaram.com with Sri Gopalasundaram’s commentary

Xxx

கலியுகம் பற்றி மனு Manu on Kaliyuga

கிருத யுகத்தில் மனிதர்கள் 400ஆண்டுகள் வாழ்வார்கள் . திரேதா, துவாபர, கலியுகத்தில் இது ஒவ்வொரு கால் பங்காக குறைந்துகொண்டே வரும்.(மனு ஸ்ம்ருதி Manu 1-83)

இதற்கு விளக்கம் எழுதியோர், கிருத யுகத்தில் பசு மாட்டுக்கு நான்கு கால்கள் இருந்ததாகவும் அது ஒவ்வொரு யுகத்திலும் ஒரு காலை  இழந்து கலி யுகத்தில் ஒற்றைக் காலில் நிற்கிறது என்றும் எழுதி வைத்துள்ளனர் ; நல்ல உவமை.

ஆயுள் தவ வலிமை, கிடைக்கும் பலன்கள் ஆகியனவும் யுகத்துக்கு யுகம் மாறும் 1-84

சமய ஆசாரங்களும் யுகத்துக்கு யுகம் மாறும் Manu 1-85

கிருத யுகத்தில் தவமும், திரேதா யுகத்தில் ஞான வேட்கையும், த்வாபர யுகத்தில் யாக யக்ஞங்களும் , கலியுகத்தில் தானமும் பலன் தரும்  1-86

அரசர்களின் செயல்பாட்டையும் கலியுகத்துக்கு உவமையாகக் கூறுகிறார் Manu 9-302 மநு :–

கலியுகத்தில் மன்னன் தூங்கிக் கொண்டு இருக்கிறான்.

துவாபர யுகத்தில் மன்னன் விழித்துக்  கொண்டு விட்டான் .

திரேதா யுகத்தில் செயலில் இறங்க ஆயத்தமாகிவிட்டான் .

கிருத யுகத்தில்  செயலில் இறங்கி விடுகிறான்

இந்த உவமையும் கலியை மந்தமான யுகம் என்பதை  விளக்குகிறது.

Xxxx

கிரேக்க , ரோமானிய புலவர்கள் (Hesiod, Ovid)

கிரேக்க , ரோமானிய  கலாசாரங்களில் யுகங்களை ஐந்தாகவும், நாலாகவும் பிரித்து வகைப்படுத்தியுள்ளனர் ; தங்க யுகம், வெள்ளியுகம், வெண்கல யுகம் இரும்பு யுகம் (Golden, Silver, Bronze, Iron Ages) என்று வகைப்படுத்தி கடைசி யுகத்தில் வறுமையும் மரியாதையின்மையும் தாண்டவம் ஆடும் என்றும் எழுதிவைத்துள்ளனர் ; கிரேக்க மொழியில் ஹெசியாட் (Greek Poet Hesiod) என்ற புலவரும் லத்தீன் மொழியில் ஒவிட் (Roman Poet Ovid)  என்ற புலவரும் இது பற்றி எழுதி வைத்துள்ளனர். அவர்களும் நம்மைப் பார்த்து ‘காப்பி’யடித்தது தெளிவாகத் தெரிகிறது. நம்மவர்கள் கல்கி KALKI  என்னும் அவதாரம் வந்து, தீயனவற்றைத் துடைத்தழிக்கும் என்று முத்தாய்ப்பு வைத்துள்ளனர். இதை பிற நாட்டு இலக்கியங்களில் காண முடியாது.

Xxxxxxxx

பாகவத புராணம்

கலியுகத்தில் என்னென்ன நடக்கும். என்று பாகவத புராணமும் (12th  Chapter in Bhagavatha Puranam) கூறுகிறது:-


* கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொறுமை, தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய இவைகள் நாளுக்கு நாள் குறையும்.


* கலியில் பணமுள்ளவனே மேலான குலத்தில் பிறந்தவன் ஆவான்.
* பணமுள்ளவன் எவனோ அவனே ஆசாரம் உள்ளவனாக கருதப்படுவான்.


* பலமுள்ளவன் எவனோ அவன் மட்டுமே தர்மம், நியாயம்  போன்றவற்றை தீர்மானிப்பான்.
* மணம் செய்து கொள்பவர்கள் அவரவர் சொந்த விருப்பத்தின் படியே இயங்குவார்கள். குலம் மறைந்து போகும்.
* மனிதர்கள் அவர்களின் குணங்களைக் கொண்டு சிறந்தவர்களாக போற்றப்பட மாட்டார்கள்.
* பிராமணர்களுக்கு பூனூல் அடையாளமாக மட்டுமே இருக்கும்.
* அதிகமாகப் பேசுபவனே பண்டிதன் என்ற புகழை அடைவான்.
* ஏழையாக இருப்பவர்களே பழிபாவங்களுக்கு ஆளாவார்கள். பணமுள்ளவனே நல்லவன் என்று பெயரெடுப்பான்.
* மனிதர்கள் அதிகம் சாப்பிடுபவர்களாகவும், காமவெறி கொண்டவர்களாகவும், தரித்திரர்களாகவும் இருப்பார்கள்.
* ஆணும் பெண்ணும் சம்மதித்து புணர்ந்தாலே விவாஹம் செய்து கொண்டதாகக் கருதப்பட்டு விடும். விவாஹம் தேவையற்றதாகும்.
* ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க மாட்டார்கள். ஸ்த்ரீகள் வெட்கம் இல்லாதவர்களாகவும், கடுஞ்சொல் பேசுபவர்களாகவும், திருட்டுத்தனம், மாயை, பிடிவாதம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.
* மனிதர்கள் பூமியை தங்களுடையது என்று சொல்லிக்கொள்வார்கள். பூமியை சொந்தம் கொண்டாட தந்தையுடன் சண்டையிடுவார்கள். சகோதரர்கள் அடித்துக் கொள்வார்கள்.
* அருகிலிருக்கும் கோவிலை விட தூரதேசத்தில் இருக்கும் க்ஷேத்திரமே புண்ணிய க்ஷேத்திரமாக கருதப்படும்.
* புகழுக்காக மட்டுமே தானங்கள் செய்யப்படும்.
* மயிர் வளர்ப்பு அழகுக்கான முக்கியப் பொருளாகிவிடும்.
* தைரியமாகப் பேசுபவனே சபைக்குரியவனாகக் கருதப்படுவான்.
* திருடர்கள், கருணையற்றவர்கள் மற்றும் அயோக்கியர்கள் போன்றவர்களே அரசனாக இருப்பார்கள்!
* அரசாள்பவர்கள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். வேதமார்கம் கெடுக்கப்படும்.
* ப்ரஜைகளுடைய பணங்களை அரசர்களே திருடிக்கொள்வார்கள்! அவர்களால் உபத்திரவிக்கப்பட்டு மக்கள் மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து வாழ நேரிடும்.
* பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர், காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி, கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள்.
* கலியுகத்தில் 50 வயதே பரம ஆயுளாகும்.
* பசுக்கள் பாலிலும் உருவத்திலும் ஆடுகள் போல் ஆகிவிடும். கறக்காத பசுவை பாதுகாக்கவோ வளர்க்கவோ விரும்பமாட்டார்கள்.
* ஜாதிகளெல்லாம் பெரும்பாலும் சூத்திர ஜாதிகளாகிவிடும்.
* சந்நியாசிகள் எல்லாம் குடும்பஸ்தர்கள் போலவே நடந்துகொள்வார்கள். பணத்திலேயே மிக்க ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
* ஆண்களுக்கு பெண்டாட்டி வீட்டு பந்தங்களே முக்கியமானவர்களாகிப் போவார்கள். மச்சினி, மைத்துனர்களிடம் பிரிமயாகப் பழகுவார்கள். சொந்த தந்தை, சகோதர * சகோதரிகளிடம் பிரியம் வைக்க மாட்டார்கள்.
* மரங்கள் எல்லாம் வன்னி மரங்களாகவே இருக்கும்.
* மேகங்களில் மின்னல்கள் அதிகமாக இருக்கும். வீடுகள் மகிழ்ச்சியற்று சூனியமாகவே காட்சியளிக்கும்.

(Taken from ஸ்ரீனிவாஸ் ஸர்மா post)

Xxxx

MY OLD ARTICLES ON KALI YUGA

கலியுகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

·

26 Aug 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. கலியுகம் முடிந்து துவாபர யுகம் நடக்கிறது.

கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை – Tamil and Vedas

https://tamilandvedas.com › கலி…

6 Dec 2014 — கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா? earth-temps. Research paper written by London Swaminathan

கலியுக முடிவு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

கலியுக முடிவு பற்றி சாணக்கியன் (Post No.4639). Written by London Swaminathan. Date: 20 JANUARY 2018.

கலியுகம் முடிந்து துவாபர யுகம் நடக்கிறது (Post …

https://tamilandvedas.com › கலி…

26 Aug 2020 — அதர்வ வேதத்தில் 4 யுகம் பற்றிய ஒரு குறிப்பில் ஒரு யுகம் என்பது 10,000 ஆண்டுகள் …

கலியுக- அறிகுறிகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

·

4 Apr 2015 — குலிங்க பக்ஷி பற்றி கல்கி புராணம் கூறுவது முன்னர் நான் எழுதிய “மஹா …

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் …

https://tamilandvedas.com › கலி…

2 Jul 2016 — DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR …

xxxx

English Version of Bhagavata Purana on Kali Yuga

Sukadeva Gosvami said: Then, O King, religion, truthfulness, cleanliness, tolerance, mercy, duration of life, physical strength and memory will all diminish day by day because of the powerful influence of the age of Kali.

In Kali-yuga, wealth alone will be considered the sign of a man’s good birth, proper behaviour and fine qualities. And law and justice will be applied only on the basis of one’s power.

Men and women will live together merely because of superficial attraction, and success in business will depend on deceit. Womanliness and manliness will be judged according to one’s expertise in sex, and a man will be known as a brahmana just by his wearing a thread.

A person’s spiritual position will be ascertained merely according to external symbols, and on that same basis people will change from one spiritual order to the next. A person’s propriety will be seriously questioned if he does not earn a good living. And one who is very clever at juggling words will be considered a learned scholar.

A person will be judged unholy if he does not have money, and hypocrisy will be accepted as virtue. Marriage will be arranged simply by verbal agreement, and a person will think he is fit to appear in public if he has merely taken a bath.

A sacred place will be taken to consist of no more than a reservoir of water located at a distance, and beauty will be thought to depend on one’s hairstyle. Filling the belly will become the goal of life, and one who is audacious will be accepted as truthful. He who can maintain a family will be regarded as an expert man, and the principles of religion will be observed only for the sake of reputation.

As the earth thus becomes crowded with a corrupt population, whoever among any of the social classes shows himself to be the strongest will gain political power.

Losing their wives and properties to such avaricious and merciless rulers, who will behave no better than ordinary thieves, the citizens will flee to the mountains and forests.

Harassed by famine and excessive taxes, people will resort to eating leaves, roots, flesh, wild honey, fruits, flowers and seeds. Struck by drought, they will become completely ruined.

The citizens will suffer greatly from cold, wind, heat, rain and snow. They will be further tormented by quarrels, hunger, thirst, disease and severe anxiety.

The maximum duration of life for human beings in Kali-yuga will become fifty years.SB 12.2.12-16

By the time the age of Kali ends, the bodies of all creatures will be greatly reduced in size, and the religious principles of followers of varnasrama will be ruined. The path of the Vedas will be completely forgotten in human society, and so-called religion will be mostly atheistic. The kings will mostly be thieves, the occupations of men will be stealing, lying and needless violence, and all the social classes will be reduced to the lowest level of sudras. Cows will be like goats, spiritual hermitages will be no different from mundane houses, and family ties will extend no further than the immediate bonds of marriage. Most plants and herbs will be tiny, and all trees will appear like dwarf sami trees. Clouds will be full of lightning, homes will be devoid of piety, and all human beings will have become like asses. At that time, the Supreme Personality of Godhead will appear on the earth. Acting with the power of pure spiritual goodness, He will rescue eternal religion.

Lord Visnu—the Supreme Personality of Godhead, the spiritual master of all moving and nonmoving living beings, and the Supreme Soul of all—takes birth to protect the principles of religion and to relieve His saintly devotees from the reactions of material work.

Lord Kalki will appear in the home of the most eminent brahmana of Sambhala village, the great soul Visnuyasa.SB 12.2.19-20

Lord Kalki, the Lord of the universe, will mount His swift horse Devadatta and, sword in hand, travel over the earth exhibiting His eight mystic opulences and eight special qualities of Godhead. Displaying His unequaled effulgence and riding with great speed, He will kill by the millions those thieves who have dared dress as kings.

Taken from Harekrishna site.

Xxxx subham xxxxx

Tags- கலி , கலியுகம் ,குபேரன் , திருப்புகழ், அருணகிரிநாதர், மனு, ஸ்ம்ருதி, அறப்பளீசுர சதகம், பாகவதம், புராணம்

Xxxxxxxxx SUBHAM xxxxxxxxxxxxxx

லண்டனில் மர்மக்கொலை! துப்பறியும் அறிஞர்கள் திகைப்பு !! (Post No.11,574)

Alexander Litivenko

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,574

Date uploaded in London – 22 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 பொலோனியம் POLONIUM என்னும் மூலகம் ELEMENT பற்றி நான் நேற்று எழுதிய விஞ்ஞானக் கட்டுரையின் தொடர்ச்சி  இது.

நூற்றுக்கும் அதிகமான துப்பறியும் நிபுணர்களும் 20 அணுசக்தி விஞ்ஞானிகளும் ஆராய்ந்த படுகொலை ALEXANDER LITIVENKO லிடிவென்கோ படுகொலையாகும்.

(RUSSIAN SPY ALEXANDER LITIVENKO ) அலக்சாண்டர் லிடிவென்கோ ரஷ்யாவின் கே ஜி பி K G B உளவு அமைப்பின் பெரிய அதிகாரியாகப் பணியாற்றி பின்னர் அதன் புதிய அமைப்பான எப் எஸ் பி F S B யிலும் பொறுப்பு வகித்தார் . ரஷ்ய அதிபர் புடின் (PUTIN )உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன் பிரிட்டனுக்கு வந்து அடைக்கலம் கேட்டார். பிரிட்டன், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததோடு அவரை MI -6 எம். ஐ. 6 (MILITARY INTELLIGENCE 6) அமைப்பின் உவாளியாக அமர்த்தி பணமும் கொடுத்து வந்தது. இனி அவர் பொலோனியம் -210  (Polonium 210) என்னும் கதிரியக்க ஐசடொப்பால்  எப்படிக் கொலை செய்யப்பட்டார் என்பதைக் காண்போம்.

நவம்பர் 12006- லண்டன் நகர மத்திய பகுதியில் உள்ள  கழ்பெற்ற Millennium ஹோட்டலில், இரண்டு முன்னாள் உளவாளிகளான( Mr Lugovoi and Dmitri Kovtun) லுகோவோய்  மற்றும்  டிமிட்ரி கோவ்டுன் ஆகிய இருவருடன் தேநீர் அருந்தினார் அலெக்ஸ்சாண்டர் லிடிவென்கோ. இது ஒரு ரகசிய சந்திப்பு.

அன்று இரவு முதல் லிடிவென்கோவுக்கு வாந்தி; உடல்நிலைச் சீரழிவு. லண்டனிலுள்ள பல ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றம்

23 Nov 2006 – லிடிவென்கோ (Litvinenko died)  மரணம் .

அவரை  போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர்கள் கதிரியக்க பாதுகாப்பு உறைகளை அணிந்துகொண்டு பயந்துகொண்டே உடலை வெட்டி சோதனை செய்தனர் ; காரணம் இதற்கு முன்னரே அவர் அணுசக்தி கதிரியக்கத்தால் (Nuclear Radiation) தான் இறந்தார் என்று ஊகிக்கப்பட்டுவிட்டது ; அவரும் தன்னை சிலர் விஷம் வைத்துக்கொன்று விட்டதாக வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

24 Nov 2006 – லிடிவென்கோவின் மரணத்துக்கு ( Polonium-210 ) பொலோனியம் 210-ன் கதிர்வீச்சே காரணம் என்று டாக்டர்கள் முடிவு செய்தனர்.

22 May 2007 – ரஷ்யாவில் வசிக்கும் லுகோவோய் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது ( murder of Mr Litvinenko)

31 May 2007 – நான் நிரபராதி ; ஆனால் செத்துப்போன லிடிவென்கோ பிரிட்டிஷ் உளவாளி என்று Mr Lugovoi வாக்குமூலம்

5 Jul 2007 – லுகோவோயை பிரிட்டனுக்கு விசாரணைக்கு அனுப்பமுடியாது ; ரஷ்யாவின் சட்ட விதிகள் இதை ஏற்காது என்று ரஷ்யா அறிவிப்பு.

May-June 2013 – மரண / பிரேத விசாரணை அதிகாரி பொது விசாரணைதான் வேண்டும் என்று வலியுறுத்தியதால் தாமதம்

July 2013 – பிரிட்டிஷ் அமைச்சர்கள் அதற்கு மறுப்பு

Jan 2014 – இறந்துபோன லிடிவென்கோவின் மனைவி மரீனா , நீதி மன்றத்தில் — பொது விசாரணையை வலியுறுத்தி வழக்கு

11 Feb 2014 – அவருக்கு ஹைகோர்ட் ஆதரவு

July 2014 – பொது — பகிரங்க விசாரணைக்கு அரசு ஒப்புதல்

January 2015 – பொது — பகிரங்க விசாரணை ஆரம்பம்

முதலில் லிடிவென்கோ உடலை கதிரியக்கக் கருவி கொண்டு பரிசோதித்ததில் கதிரியக்கம் எதுவும் இல்லை.

ஆனால் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட உளவாளிகள் தங்கிய ஹோட்டல்கள் , பயண ம் செய்த விமானம் , அவர்கள் சென்ற கேளிக்கை விடுதிகள், கால்பந்து போட்டி மைதான இருக்கைகள் ஆகியவற்றைச் சோதித்ததில் கதிரியக்கம் காணப்பட்டது

ரஷ்யாவில் இறந்த ஒரு பத்திரிக்கையாளர் பற்றியும்

லிடிவென்கோ , ஆராய்ந்து கொண்டிருந்தார் . அது சம்பந்தமான காகிதங்களை பரிமாறிக்கொண்ட ஹோட்டலிலும் கதிரியக்கம் காணப்பட்டது.

ஓராண்டு விசாரணைக்குப் பின்னர் ஒருவேளை இந்தக்கொலையின் பின்னணியில் ரஷிய அதிபர் புடின் இருந்திருக்கலாம் என்று விசாரணை முடிவு அறிவிக்கப்பட்டது . ஆனால் அதிபர் மாளிகை அதிகாரி இதைத் திட்டவட்டமாக மறுத்தார் .

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பொலோனியம் -210 ஐசடோப் ‘திருவிளையாடல்’

மிகவும் கதிர்வீச்சுடைய பொருள்; அதி சக்திவாய்ந்த ஆல்பா பார்ட்டிகில்ஸ்களை (a-particles) வீசும்

மேரி கியூரியால் கண்டுபிடிக்கப்பட்டது

பூமியிலும் நம் உடலிலும் கூட மிகச் சிறிய அளவில் இது இருக்கிறது

உடலுக்குள் சென்றால்தான் ஆபத்து; தோல் வாழியாக செல்ல முடியாது; சுவாசித்தாலும் ஆபத்து

மேரி க்யூரியின் மரணத்துக்கு ரேடியம் காரணம். அவனுடைய மகள் ஐரீன் மரணத்துக்கு பொலோனியம் காரணம். இருவருக்கும், மேரியின் கணவர் பியருக்கும் (பீட்டர் ) நோபல் பரிசுகள் கிடைக்க உதவியதும் கதிரியாக்கம்தான் ; ஆவதும் அதனாலே; அழிவதும் அதனாலே !

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ரஷ்யாவிலுள்ள மாபியா கும்பல் பற்றியும் லிடிவென்கோ எழுதிவந்ததால் அவர்கள்தான் இந்தக் கொலைக்கு ஏற்பாடு செய்தனரோ என்ற சந்தேகமும் உண்டு . சம்மந்தப்பட்ட அனைவரும் உளவாளிகள் என்பதால் ‘யார் யாருக்கு வேட்டு வைத்தனர்’ என்று சொல்ல முடியாது . அமெரிக்க அதிபர் கென்னடி கொலை வழக்கு போல ஆண்டுதோறும் டெலிவிஷனில் புதுப்புது கதைகளை எட்டுக்கட்ட பத்திரிக்கையாளருக்க்கு  நல்ல வாய்ப்பு  கிடைத்துவிட்டது.

லண்டன் ஹீத்ரோ விமான (LHR) நிலையத்தில் 2 விமானங்கள் , மற்றும் 700 பேருக்கு கதிரியாககப் பாதிப்பு இருக்கிறதா என்றும் சோதிக்க வேண்டியிருந்தது . கணவரின் மரணத்துக்கு பொலோனியம் 210 காரணம் என்று தெரிந்த அடுத்த சில மணி நேரத்தில் அவருடைய மனைவி மரீனா (Marina Litivenko) கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேற நேரிட்டது .

அந்தக் காலத்தில் செயின்ட் ஹெலனா (St Helena Islands) தீவில் சிறை வைக்கப்பட்ட நெப்போலியன் போனபர்ட்டைக் கொல்ல, பிரிட்டிஷார் அவர்  உணவில் ஆர்சனிக் விஷத்தை சிறுகச் சிறுகக் கலந்து  உயிரை வாங்கினர் .. இப்போது பொலோனியம் போன்ற கதிரியக்க மூலகத்தால் ஆட்களை எளிதில் கொல்ல முடிகிறது . லிடிவென்கோ சாப்பிட்ட தேநீர் கோப்பையில் பொலோனியம் கலந்து இருந்திருந்தால் ஏன் அவரது உடலில் கதிரியக்கம் தெரியவில்லை ?

இதற்கு அந்தக் கருவிகள் பிழையானவை , துல்லியமானவை அல்ல என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆக , டாக்டர்களையும் , கருவிகளையும் அவை தரும் முடிவுகளையும் கூட நம்ப முடியாதோ ?

 –subham—-

 tags- பொலோனியம் -210, ஐசடோப்,  மர்மக்கொலை, துப்பறியும் அறிஞர்கள், திகைப்பு ,லிடிவென்கோ, ரஷ்ய உளவாளி, கேஜிபி 

செப்பு மொழி இருபத்தெட்டு! (Post No.11,573)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,573

Date uploaded in London – 22 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

செப்பு மொழி இருபத்தெட்டு! 

ச. நாகராஜன் 

 1. முட்டாளுடன் அனாவசியமாக விவாதிக்காதே. அவன் உன்னைத் தன் அளவுக்குக் கொண்டு வந்து தனது அனுபவத்தால் உன்னைத் தோற்கடிப்பான்.

Do not argue with an idiot. He will drag you down to his level and beat you with experience.

2. பாலியல் உறவு என்பது விடை அல்ல. பாலியல் உறவு என்பது கேள்வி தான். “சரி” என்பது தான் விடை.

Sex is not the answer. Sex is the question. “Yes” is the answer.

3. போலீஸ் வரும் நேரத்தை விட முன்னதாகவே பிஸ்ஸா வந்து விடும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம்.

We live in a society where pizza gets to your house before the police.

4. நம்பு. ஆனால் சரி பார்த்துக் கொள்.

Trust but verify.

5. நான் நீ சொல்வது சரி என்று ஒத்துக் கொண்டால்நாம் இருவருமே தப்பு தான்.

If I agreed with you we’d both be wrong.

6. போர் யார் ரைட் – (சரி) என்பதை நிர்ணயிக்காதுயார் லெஃப்ட் – மீதி இருக்கிறார்கள் என்பதைத் தான் நிர்ணயிக்கிறது.

War does not determine who is right – only who is left.

7.  அறிவு என்பது தக்காளி என்பது ஒரு பழம் என்று அறிவது தான்புத்திசாலித்தனம் என்பது அதை ஃப்ரூட் சாலடில் சேர்க்கக்கூடாது என்று தெரிந்து வைத்திருப்பதே!

Knowledge is knowing a tomato is a fruit; Wisdom is not putting it in a fruit salad.

8. அரசியல்வாதிகளும் டயபர்களும் ஒரு விஷயத்தைப் பொதுவாகக் கொண்டிருக்கிறது. இரண்டையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் – அதே அந்தக் காரணத்திற்காகத் தான்!

Politicians and diapers have one thing in common. They should both be changed regularly and for the same reason.

9. மாலைச் செய்தி குட் ஈவினிங் என்று ஆரம்பிப்பதுஏனெனில் அது குட் ஈவினிங் இல்லை என்பதைச் சொல்லப் போவதற்குத் தான்!

Evening news is where they begin with ‘Good Evening’, and then proceed to tell you why it isn’t!

10.  பத்து லட்சம் குரங்குகள் பத்து லட்சம் டைப்ரைட்டர்களில் அடித்தால் ஷேக்ஸ்பியரின் முழு கவிதைகளும் வந்து விடும் என்பதை நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். ஆனால் அது தப்பு என்பதை இந்த இண்டர்நெட் வந்த பிறகு தான் அறிந்து கொண்டிருக்கிறோம். இண்டர்நெட்டுக்கு நன்றி!

We have all heard that a million monkeys banging on a million typewriters will eventually reproduce the entire works of Shakespeare. Now, thanks to the internet, we know this is not true.

11. பெண்கள் 35க்குப் பிறகு குழந்தைகள் பெறக் கூடாது. 35 குழந்தைகளே போதுமே!

Women should not have children after 35. Really… 35 children are enough.

12. மனிதர்கள் மூன்று விதம். முதல் ரகம் படிப்பினால் அறிந்து கொள்வது. இரண்டாம் ரகம் கூர்ந்து கவனிப்பதால் அறிந்து கொள்வது. மீதி இருக்கும் மூன்றாம் ரகம் தீயைத் தொட்டுப் பார்த்துத் தான்  அது சூடாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ரகமாகும்.

There are three kinds of people. The ones who learn by reading. The ones who learn by observation. And the rest of them who have to touch the fire to learn it’s hot.

13. என்னிடம் தீர்வு இல்லைஆனால் நான் பிரச்சினையைக் கண்டு பிரமிக்கிறேன்.

I don’t have a solution, but I do admire the problem.

14. திருடாதீர்கள். அது அரசின் வேலை.

Don’t steal. That’s the government’s job.

15.  மனிதர்கள் இரண்டு விதம்நீங்கள் வேண்டும் போது தள்ளி இருப்பவர்கள் ஒரு விதம்அவர்களுக்குத் தேவை என்னும் போது உங்களைச் சுற்றி வருபவர்கள் அடுத்த விதம்!

There are two kinds of friends: those who are around when you need them, and those who are around when they need you.

16. பொதுவாக எல்லோருமே மற்றவர்களுக்காகத் தான் விதியைப் போடுகிறார்கள்அதிலிருந்து விதி விலக்கைத் தமக்காகப் போட்டுக் கொள்கிறார்கள்.

People tend to make rules for others and exceptions for themselves.

17. பிரபஞ்ச அழகிக்கான வண்ண அலங்கார அழகுப் போட்டி தீர்மானிக்கப்பட்டு விட்டது. ஜெயித்த அனைவருமே பூமி வாசிகள் தாம்!

The Miss Universe Pageant is fixed. All the winners are from Earth.

18. நிஜமாகவே நான் ரொம்ப எளிமையானவன் தான். உண்மையில் நினைப்பதை விட இன்னும் சிறப்பானவன் நான்.

I’m a humble person, really. I’m actually much greater than I think I am.

19. புத்திசாலியாக இருப்பது ரொம்ப சாதாரணமான விஷயம். முட்டாள்தனமாக எதையாவது எண்ணுங்கள்அப்புறம் அதைச் சொல்லாமல் இருந்து விடுங்கள்.

It’s so simple to be wise. Just think of something stupid to say and then don’t say it.

20.  Hippopotomonstrosesquippeadaliophobia – பெரிய வார்த்தைகளைக் கண்டு பயப்படும் போபியாவின் பெயர்!

Hippopotomonstrosesquippeadaliophobia : Fear of long words.

21. ஒரு கமிட்டி என்பது ஒருவர் செய்யும் வேலையைப் பனிரெண்டு பேர் செய்வது தான்!

A committee is twelve men doing the work of one.

22.  குறித்த நேரத்தைக் கடைப்பிடிப்பதில் உள்ள ஒரு சிரமம் என்னவெனில்அதைப் பாராட்ட யாருமே அங்கு இல்லாமல் இருப்பது தான்!

The trouble with being punctual is that nobody is there to appreciate it.

23. செத்த மீன் தான் நீரோட்டத்துடன் போகும்.

Only dead fish go with the flow.

24. மதுபோதைக்கு அடிமையாகும் வியாதி ஒன்றே தான் அந்த வியாதி உங்களுக்கு இல்லை என்று உங்களை திருப்திப்படுத்தும் ஒரே ஒரு வியாதி.

Alcoholism is the only disease that tries to convince you that you don’t have it.

25. ஒரு ஃபைன் (அபராதம்) என்பது தப்பு செய்வதற்காக விதிக்கப்படும் வரி. ஒரு வரி என்பது சரியாகச் செய்வதற்காக விதிக்கப்படும் ஃபைன்!

A fine is a tax for doing wrong. A tax is a fine for doing well.

26.  பில்கள் இருக்கின்றனவே, அவை மெயிலில் இரு மடங்கு வேகத்தில் பயணிக்கின்றன!

Bills travel through the mail at twice the speed. 

27. இரண்டு கால்களையும் உள்ளே விட்டு நீரின் ஆழத்தை ஒருபோதும் சோதிக்காதே

Never test the depth of the water with both feet.

28. ஒவ்வொரு பார்ட்டியிலும் இரண்டு விதமான பேர்கள் இருக்கிறார்கள் : முதல் ரகம் வீட்டிற்குப் போக விரும்பும் ரகம்இன்னொரு ரகம் போக வேண்டாம் என்று விரும்பும் ரகம். பிரச்சினை என்னவென்றால் பொதுவாக அவர்கள்  திருமணமான தம்பதிகளாக இருப்பது தான்!

At every party there are two kinds of people: those who want to go home and those who don’t. The trouble is, they are usually married to each other.

***

Learn Tamil Verbs Part -35; USEFUL PHRASES (Post No.11,572)

Picture- Thamiz Vaazka- Long Live Tamil

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,572

Date uploaded in London – 21 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 TAMIL LESSONS-USEFUL PHRASES

 Please note the word order in Tamil. It is different from English. Also note verb “is” “are” missing in short sentences in Tamil; still it is grammatical 

Hello! ஹலோ

Vanakkam வணக்கம்/ Tamil word = Namaste நமஸ்தே Hindi = Namskaaram நமஸ்காரம் Sanskrit 

xxxx

 How are you?

Neengal Sowkkiyama? நீங்கள் செளக்கியமா ?

You Well?

xxx

Neengal sukama? நீங்கள்  சுகமா

You well/ healthy?

(Both Sowkkiyam and Sukam are Sanskrit words; but commonly used in cities and educated circles

xxx

Neengal eppadi irukkireergal? நீங்கள் எப்படி  இருக்கிறீர்கள் ?

You how are?

All the words are pure Tamil

xxx

 Very well, thank you.

Sowkkiyamthan, Nandri செளக்கியம்தான் நன்றி

Sukam than சுகம்தான்

Well indeed!

xxx

Sukamaga irukkiren சுகமாக இருக்கிறேன்

Well (I) am

xxx

 What is your name?

Ungal peyar enna? உங்கள் பெயர் என்ன ?

Your name what ?

கள் KAL suffix is plural; but yet used for one person to give respect.

xxx

 My name is………….. 

En peyar—————– என் பெயர்

My name………

Ennutaiya is full word

xxxxx

 Do you speak English?

Neengal Aangilam pesuveergala?

நீங்கள் ஆங்கிலம்  பேசுவீர்களா ?

You English speak?

(when it finishes in AA sound it is interrogative/ question

xxxxx

 Yes. I speak English.

Amam. Nan angilam pesuven/kathaippen

ஆம் நான் ஆங்கிலம் பேசுவேன்

Aam ; naan aangkilam/ English pesuven

xxxx

நான் ஆங்கிலம் கதைப்பேன் (இலங்கை வழக்கு)

Naan aangkilam kathaippen (Sri Lankan Tamil dialect)

Note Pesuven/ Kathaippen are future form of first person.

But yet Tamils use FUTURE for anything habitual or routinely done

xxx

 Where are you coming from?

Neegal Engeyirunthu Varugireergal? நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்?

You wherefrom coming?

xxx

 I am coming from London

Naan Londonilirunthu varugiren நான் லண்டனிலிருந்து வருகிறேன்

I –London from —- come

லண்டனில் + இருந்து, London +from

பாரிஸில்  + இருந்து, Paris+ from

மதுரையில்  + இருந்து Madurai + from

சென்னையில்  + இருந்து Chennai + from

 இருந்து= from = ablative case suffix

xxx

Do you have (ticket/passport/…….)?

Ungalidam ticket/passport irukkiratha?

உங்களிடம் டிக்கெட் / பாஸ்போர்ட் இருக்கிறதா ?

On your person—ticket — is? Passport is?

இருக்கிறது + ஆ

Is + aa (interrogative suffix)

 You may change any verb or pronoun or noun into a question by adding AA 

Is it he?him?= avan+aa= avanaa

Is it I = naan +aa= Naanaa?

Is it James = James+ aa = Jamesaa?

Is it Mary? = Mary +aa= Maryaa?

Coming ?? = varukiraan +aa = Varukiraanaa?

xx

 What is the time now?

Ippothu mani enna? இப்போது மணி என்ன?

Now time what?

xxx

 How far is the Railway station ?

Rayil nilayam evvalavu thooram? ரயில் நிலையம் எவ்வளவு தூரம்?

 Railway station how far?

Since How itself is a question, you don’t need AA in Tamil.

பஸ் ஸ்டாப்விமான நிலையம்கோவில் உங்கள் வீடு

Bust stop, Vimaana nilaiyam/ airport, Kovil= temple, Ungal Veedu = your house

 Un= your= non respectful

Ungal = respectful You or Plural you

xxx

 How do I get to the station?

Rayi nilayaththukku eppadi pogavendum?

ரயில் நிலையத்துக்கு எப்படி போக வேண்டும் ?

Railway station to == how== to go?

க்கு KKU= To

கோவிலுக்குவிமான நிலையத்துக்குபஸ் நிலையத்துக்கு

Kovilukku = Temple to = to temple

Vimaana nilaiyaththukku = to the airport

 xxx

Thank you

Nandri நன்றி = Nandri

xxxx

 Goodbye

Poivittuvarukiren போய்விட்டு வருகிறேன்

Having gone come back= Hindus never say I am off; it is inauspicious to say so; Mothers will stop you and force you to say SEE YOU SOON= Poyvittu= having gone— varukiren = coming

In colloquial language POYTTUVAREN

xxx 

How much is it?

Ithu evvalavu? இது எவ்வளவு ?

This How much?

xxx 

It is expensive!

Ithu romba vilai இது ரொம்ப விலை / அதிக விலை

This too much price

Vilai athigam விலை அதிகம் = Price too much

xxx

 That is fine

Romba nallathu ரொம்ப நல்லது

Too good ; very good

xxx

 Excuse me

Mannikkavum மன்னிக்கவும்

 Sorry/Pardon

Mannikkavum மன்னிக்கவும்

Whether it is a small mistake or error or a big blunder you may use MANNIKKAVUM

xxxx

 Where is the Post Office/Railway Station?

Thapal nilayam enge irukkirathu?

தபால் நிலையம் எங்கே இருக்கிறது ?

 Post office – where – is?

xxxx

 Go straight and then turn left/turn right

Neraga poi idathu pakkam thirmbungal/ valathu pakkam thirumbungal

நேராகப் போய் இடது/ Idathu பக்கம் திரும்புங்கள் = straight going left side– turn/

Right side Turn வலது/Valathu பக்கம்  திரும்புங்கள்

 xxxx

 It is very far/ very near

Athu romba thooram/ romba pakkam

அது ரொம்ப தூரம் / ரொம்ப பக்கம்

That very far/ very near

தூரமாபக்கமா ? dooramaa? Pakkamaa?

Far ? Near ?

By adding interrogative AA to Dooram/ far or Pakkam/ near

You may change it into a question

Xxxx

 Following Impersonal Verbs are already explained in previous lessons

 I don’t understand

Enakku puriyavillai/ vilangavillai

எனக்கு புரியவில்லை / விளங்கவில்லை

xxx

 I don’t know

Enakku theriyathu எனக்குத் தெரியாது

xxx

 I want to go to the (toilet/bath room/book shop) நான் டாய்லெட்டுக்கு

பாத் ரூமுக்கு / புத்தகக் கடைக்கு

போகவேண்டும் = Poga Vendum = should go= have to go

Naan puththaga kadaikku (book shop) pogavendum

xxx

 Can I get cigarettes here?

Inge enakku cigarettugal kidaikkuma?

இங்கே எனக்கு சிகரெட் கிடைக்குமா

தீ ப்பெட்டி = Theeppetti = Match box

xxx

Can I get Idli/ Dosai/ Chapati here?

Enakku Inge dosai kidaikkuma?

எனக்கு இங்கே தோசை  கிடைக்குமா

xxx

 Where can I get Food/Meals/Snacks?

Unavu enge kidaikkum?

உணவு/food எங்கே கிடைக்கும்?

தண்ணீர் = thanneer= cool water

xxx

 I need some hot water

Enakku soodana neer (venneer) vendum

எனக்கு சூடான நீர் வேண்டும்

வெந்நீர்= veneer = hot water

To be continued……………………………………..

போலந்து நாட்டின் பெயரில் பொலோனியம் Polonium Murder in London (Post No.11,571)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,571

Date uploaded in London – 21 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இந்த பிளாக்கில்  வெளிவரும் 45ஆவது மூலகக்  கட்டுரை இது.

பொலோனியம் Polonium என்னும் மூலகத்துக்கு இரண்டு சிறப்புகள் உண்டு ; போலந்து Poland என்னும் நாட்டின் பெயரைத் தாங்கிய மூலகம் – தனிமம்- element– என்ற சிறப்பு. ஒன்று. இதனை முதலில் பிரித்துக்காட்டிய மேரி கியூரி என்ற பெண்மணி பிறந்த நாடு போலந்து .

இரண்டாவது சிறப்பு –மிக அதிகமான கதிவீச்சுடைய (radio active) மூலகம்; இதனால் மனித உயிருக்கு விஷம் (highly toxic)  போன்றது. அதாவது சயனைட்(Cyanide Poison) விஷத்தைவிட சக்தி வாய்ந்தது.

இந்தத் தனிமத்துக்கு (element) மனித உடலில் ஒரு பங்கும் இல்லை. மேலும் புறச் சூழலிலும் ஒரு கெடுதியும் செய்வதில்லை. ஏனெனில் வேகமாக அழிந்துவிடும் மூலகம் .

அணு சக்தி உலைகளிலும் சோதனைச் சாலைகளிலும் மட்டுமே இதற்கு வேலை.

 XXX

மேரி கியூரி (Marie Curie) ஆராய்ச்சி

கதிரியக்கம் உடலில் பட்டால் புற்று நோய் ஏற்பாட்டு உயிழக்க நேரிடும். அப்படி உயிரிழந்தவர் மேரி கியூரி .அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. அவர் பெயரை கியூரியம் என்ற தனிமத்துக்கும் சூட்டினர்.

மேரி கியூரி 1934-ம் ஆண்டில் லூகேமியா (Leukaemia)  என்னும் ரத்தப் புற்றுநோயால் இறந்தார். இதற்கு காரணம் அவர் ரேடியம் (radium) என்னும் கதிரியக்க மூலகத்தில் நீண்ட ஆண்டுகள் ஆராய்ச்சி  செய்ததாகும் .அவருடைய மகளுடைய பெயர் ஐரீன் ஜுலியோட் கியூரி (Irene Joliot Curies) . அவரும் ரத்தப் புற்றுநோயால்தான் 1956ல் இறந்தார். அதற்குக் காரணம் பொலோனியம்.. அவர் ஆராய்ச்சி செய்த சோதனைச் சாலையில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொலோனியம் குடுவை வெடித்ததால் நோய் ஏற்பட்டது .அவருக்கும் ஒரு நோபல் பரிசு கிடைத்தது.

மனித உடலில் 7 பைகோ கிராமுக்கு (Pico gram) மேல் பொலோனியம் சேர்ந்தால் மரணம் சம்பவிக்கும்..அதாவது இதே எடை நைட்ரஜன் சயனைடை விட ட்ரில்லியன் (Trillion) மடங்கு விஷம் வாய்ந்தது.

PICO GRAM : A unit of mass equal to 0.000 000 000 001 grams. Symbol: pg

TRILLION: a million million (1,000,000,000,000 or 1012).

கதிரியக்கம் உடைய ரேடான் வாயு , நாம் சுவாசிக்கும் காற்றில் இருப்பதால் நம் உடலிலும் பொலோனியம் இருக்கும் . அது ஆபத்தில்லாத அளவுதான்.

பொலோனியத்துக்கு  பல ஐசடோப்புகள் உண்டு .அதிக காலம்  கதிரியக்கம் உடையது பொலோனியம் 209. அதன் அரை வாழ்வு (Half Life)  102 ஆண்டுகள். அதாவது அதன் அளவு 102 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துவிடும் .

பொலோனியம் 208 ன் அரை வாழ்வு –  3 ஆண்டுகள்

பொலோனியம் 210.ன் அரை வாழ்வு –  138 நாட்கள் .

இவை தவிர 30 ஐசடோப்புகள் இருக்கின்றன . அவைகளுக்கு அரை வாழ்வு வினாடிகள் முதல் நாட்கள் வரை ஆகும்.

தற்காலத்தில் ஈயம் அல்லது பிஸ்மத் மீது புரோட்டான், ட்யூட் றான் , ஆல்பா பார்ட்டிக்கிள்ஸை (Proton, Deuteron , a-paricles)  பாய்ச்சி பொலோனியத்தை உற்பத்தி செய்கின்றனர்.

xxx

ரசாயன குணங்கள் Chemical Properties)

ரசாயனக் குறியீடு – Po

அணு எண் -84

உருகு நிலை – 254 டிகிரி C

கொதி நிலை –962 டிகிரி C

வெள்ளியும் சாம்பலும் கலந்த நிறம் உடையது . இதை பாதி உலோகம் (SEMI METAL ) என்பர்.

நீர்த்த அமிலங்களில் கரையும்போது இளம் சிவப்பு திரவம் போல இருக்கும். ஆக்சிஜனுடன் கிரியை செய்வதனால்  விரைவில் மஞ்சள் நிறமாகிவிடும். பொலோனியத்தை அதற்குரிய பெட்டியில் அடைத்து வைக்காவிடில் மூன்றே நாட்களில் பாதியாகக் குறைந்து விடும்.

பயன்கள்

ஒருகாலத்தில் பொலோனியத்தை போட்டோகிராபிக் பிளேட்டுகள் செய்யவும், ஜவுளி, பஞ்சாலைகளிலும் பயன்படுத்தி வந்தனர். இப்போது கதிர்வீச்சு  தேவைப்படும் ஆராய்ச்சி நிறுவனங்களில், ஆல்பா ரேடியேஷன், நியூட்ரான் வீச்சு தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

XXX

கிடைக்கும் இடம்

ஒரு டன் யுரேனியம் தாதுவில் 100 மைக்ரோ கிராம் அளவே பொலோனியம் இருக்கும்.1898ல் பாரிஸ் நகரில் கணவர் பியர் கியூரியுடன் சேர்ந்து அரும்பாடுபட்டு மேரி கியூரி , பொலோனியத்தைப் பிரித்தெடுத்தார் .பிட்ச் பிளேன்ட் என்னும் யுரேனியம் தாதுவை வாங்குவதற்கு அவர்களுக்கு ஆஸ்திரிய அரசு உதவியது .1891-ம் ஆண்டிலேயே இப்படி ஒரு தனிமம் இருக்கவேண்டும் என்று (Periodic Table) பிரியாடிக் டேபிளை உருவாக்கிய மெண்டலியேவ் அறிவித்துவிட்டார். .

இப்போது கதிர் வீச்சு மூலம் 100 கிராம் மட்டுமே இது தயாரிக்கப்படுகிறது ஒரு கிராம் பொலோனியம்  உடைய சிறிய குப்பி, 500 டிகிரி C  வெப்பத்தை உருவாக்கும்.அந்த அளவுக்கு அதில் கதிர்வீச்சு இருக்கும் . இதன் காரணமாக தற்காலத்தில் இதை விண்கலங்களில் பயன்படுத்துகின்றனர்

–சுபம்–

TAGS -பொலோனியம் ,போலந்து , கதிர்வீச்சு , மேரி கியூரி, POLONIUM

Murder by Polonium -210 (BBC Report)

Newsnight’s Richard Watson tells the inside story of a perplexing murder.

Wednesday, 1 November 2006 – a crisp, autumn day in London. The capital was heading for a beautiful weekend.

Security cameras captured Alexander Litvinenko on his way to meet two former colleagues from the murky world of Russian intelligence. The grainy black-and-white images show him walking out of frame as he entered the upmarket Millennium Hotel in Grosvenor Square in the heart of Mayfair.

He drank tea that day laced with a lethal dose of radioactive polonium.

Twenty-two days later, he was dead.

Alexander Litvinenko was taken ill just hours after his meeting at the Millennium Hotel’s Pine Bar with Andrei Lugovoi and Dmitry Kovtun, the two former Russian spies he counted as business contacts, even friends. He was admitted to his local hospital in north London on 3 November, vomiting and in great pain.

Xxxx

When the mystery deepened

As a last resort, it was decided to send small blood and urine samples to Britain’s top-secret nuclear research site at Aldermaston in Berkshire.

Scientists at Aldermaston are more accustomed to working with nuclear weapons, but they used their expertise to search for radioactive poison. They first used a technique called gamma spectroscopy. This advanced analytical technique involves passing energy through the sample in a vacuum to search for radioactive elements emitting gamma rays. Each element has a unique signal at a particular energy level.

The results looked negative. However, they noticed a small spike in the read-out, barely above background levels, at an energy of 803 Kilo electron volts (KeV).

By pure chance another Aldermaston scientist, who’d worked on Britain’s early atomic bomb programme decades ago, happened to overhear his colleagues discussing this small spike in the trace. He recognised it immediately as the small gamma ray signal from polonium-210. He knew this because polonium-210 was a vital component of early nuclear bombs.

Xxx

What is polonium-210?

  • Naturally occurring radioactive material that emits highly hazardous alpha (positively charged) particles
  • First discovered by Marie Curie at the end of the 19th Century
  • There are very small amounts of polonium-210 in the soil and in the atmosphere, and everyone has a small amount of it in their body
  • At high doses, it damages tissues and organs
  • It cannot pass through the skin, and must be ingested or inhaled into the body to cause damage
  • Historically called radium F, is very hard for doctors to identify

Xxx

Alexander Litvinenko had drunk contaminated tea at his meeting at the Millennium Hotel. He was being killed from the inside.

100 British detectives and 20 scientists solved the mystery.

When the polonium was discovered, his wife Marina Litvinenko was told it was not safe to stay at her home. “I lost everything. I had only 15-20 minutes to get some things with me, and be out of the house.” She said

Xxx

Polonium Trail

The polonium trail started on 16 October 2006 when Litvinenko met Lugovoi and Kovtun in London. The sushi bar where they had lunch was contaminated. This is thought to be the day of a first murder attempt.

They spent the night at the Best Western Hotel in Shaftesbury Avenue. Heavy contamination was later found in both their rooms.

Lugovoi was back in London on 25 October. His room at the Sheraton, Park Lane, was contaminated.

Three days later he flew from Moscow to London. Polonium was found on his British Airways flight.

And Kovtun flew from Moscow to Hamburg on 1 November. Again polonium was found at locations he visited in the city.

This was the day when both Kovtun and Lugovoi met Litvinenko in the Pine Bar at the Millennium Hotel – the place with some of the most heavily contaminated locations of all.

Hotel security cameras captured Lugovoi, and then Kovtun, visiting the bathroom opposite the Business Centre before Litvinenko arrived. Lugovoi has his hand deeply buried in his pocket. Was he carrying the poison?

He says not, but sinks and a hand-dryer were later found to have been heavily contaminated with polonium-210, as was one toilet cubicle door.

When Lugovoi and Kovtun’s movements were mapped against the sites of polonium contamination, there was an exact match. The evidence of guilt was strong. In May 2007, the then Director of Public Prosecutions Ken Macdonald announced that Andrei Lugovoi was to be charged with murder and his extradition would be sought from Russia. Kovtun was charged in 2010.

Xxx

Russia denies

Officially, Russia continues to deny any involvement in the murder. Andrei Lugovoi was made a member of Russia’s parliament in 2007 – giving him immunity from prosecution – and just this year Putin awarded him a medal for services to the motherland. He now has his own TV show called Traitors. He organised a lie detector test in Russia to prove his innocence.

The other prime suspect, Dmitry Kovtun, is now a business consultant in Russia. He was due to give evidence to the public inquiry this week, but – at the last minute – pulled out. He said he had been unable to get permission from Russian authorities.

— subham—

மனு நீதி நூல் பற்றி அறப்பளீசுர சதகம் (Post No.11,570)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,570

Date uploaded in London – 21 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxx  

அறப்பளீசுர சதகம் பாடல் 29. ஒழுகும் முறை Good Behaviour

மாதா பிதாவினுக் குள்ளன் புடன்கனிவு

     மாறாத நல்லொ ழுக்கம்;

  மருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உள

     வார்த்தைவழி பாட டக்கம்;

காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன

     காலத்தில் நயபா டணம்;

  கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம்

     கருணைசேர் அருள்வி தானம்;

நீதிபெறும் மன்னவ ரிடத்ததிக பயவினயம்;

     நெறியுடைய பேர்க்கிங்கிதம்;

  நேயம்உள தமர்தமக் ககமகிழ் வுடன்பரிவு

     நேரலர் இடத்தில் வைரம்

ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்எம

     தையனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) எமது ஐயனே – எம் தலைவனே!, அருமை ………..

தேவனே!,

மாதா பிதாவினுக்கு உள் அன்புடன் கனிவு மாறாத

நல்லொழுக்கம் – பெற்றோர்களிடம் உள்ளம்நிறைந்த அன்பும் குழைவும் இடையறாத ஒழுக்கமும் வேண்டும், மருவுகுரு
ஆனவர்க்கு உபசாரம் உளவார்த்தை வழிபாடு அடக்கம் – பொருந்திய
ஆசிரியரிடம் இனிய முகமனுடன் கூடிய பேச்சும் வழிபாடும் அடக்கமும் வேண்டும், காது ஆர் கருமை கண் மனையாள் தனக்கோ சயனகாலத்தில் நய பாடணம் – காது வரையில் நீண்ட கரிய கண்களையுடைய
மனையாளிடமோ படுக்கையில் இனிய பேச்சு வேண்டும். வரும் கற்றபெரியோர் முதியர் ஆதுலர்க்கு எலாம் கருணை சேர் அருள் விதானம் –
நாடி வருகின்ற பெரியோர்கள் வயது முதிர்ந்தவர்களும் வறியோர்களும் ஆகிய இவர்களிடம் மிகுதியும் இரக்கமும் பெருங்கொடையும் வேண்டும்,
நீதிபெறும் மன்னவரிடத்து அதிக பய விநயம் – அறநெறி வழுவா
அரசரிடம் மிகுந்த அச்சமும் வணக்கமும் வேண்டும், நெறியுடைய பேர்க்கு இங்கிதம் – நன்னெறி செல்வோரிடம் இனியன செய்தல் வேண்டும், நேயம்உள தமர் தமக்கு அகம் மகிழ்வுடன் பரிவு – நட்புடைய உறவினரிடம் உளங்கனிந்த அன்பு வேண்டும், நேரலரிடத்தில் வயிரம் – பகைவரிடம் மாறாத சினம் வேண்டும், ஆதி மனு நூல் சொலும் வழக்கம் இது ஆகும் – பழைய மனுவினால் எழுதப்பெற்ற நூல் கூறும் முறைமை இதுவாகும்.

     (வி-ரை.) மனையாளிடம் படுக்கையறையில் இனிய மொழிவேண்டும்
என்பதனால் மற்ற வேளையிற் கூடாதென்பது கருத்தன்று. ‘காதல் இருவர்
கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம்’ ஆகையால், முற்றிய இன்பம்
அடைவதற்கு மனைவியின் மகிழ்ச்சியும் வேண்டும் என ‘சயன காலத்தில்
நயபா டணம்’ என்றார். பாடணம் – (வட) பேச்சு; (பாஷணம் என்பதன்
தற்பவம்). பகைவர் மொழியால் ஏமாந்துபோதல் கூடாதென்பதற்கு இவ்வாறு கூறினார்.‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்’
என்றார் வள்ளுவர்.

Xxxx

My commentary

பகைவரிடம் மாறாத சினம் வேண்டும்

மனு நீதி நூலை கம்பன் முதல் அம்பலவாணர் வரை அனைவரும் பாராட்டுகின்றனர். ஏனெனில் அவர் ஹமுராபிக்கும் முந்தியவர் ; அவரைவிடக் கடுமையானவர். அதனால்தான் மனு நீந்திச் சோழன் தன் மகனையே தேர்க்காலில் பலியிட்டு இறவாத புகழ் பெற்றான் ; நமக்குத் தெரிந்து மனு நீதியைப் பின்பற்றியவர் அவர் ஒருவர்தான்! அம்பலவாணர் பல நல்ல குணங்களை அடுக்கி, இவையெல்லாம் மனு சொன்னது என்கிறார். உண்மைதான்; மனு ஸ்லோகங்களைப் படித்தோருக்கு அது தெரியும்

மண்வெட்டி அல்லது கோடரியால் மண்ணைத் தோண்டுபவனுக்கு தண்ணீர்- ஊற்று நீர்– கிடைப்பது போல , ஆசிரியரிடத்தில் பணிவாக இருந்து கல்வி கற்பவனுக்கு அறிவு ஊற்றுப் பெருக்கெடுக்கும் – மனு நீதி 2-218

வள்ளுவனும் இதையே சொன்னான் –

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 

கற்றனைத்தூறும் அறிவு — குறள் 396

XXXX

பயிர்களைக் காப்பதற்காக களைகளைப் பிடுங்கி எறிவது போல அரசனும் எதிரிகளை அழித்து தன் குடிமக்களைக் காக்கவேண்டும் — மனு நீதி 7-110.

வள்ளுவனும்  மரண தண்டனையை ஆதரிப்பவனே ! அவன் சொல்லுவான்

கொலையிற் கொடியாரை வேந்து  ஒறுத்தல்  பைங்கூழ்

களை கட்டதனோடு நேர் – குறள் 550

XXXX

அம்மா அப்பாவுக்கு சலாம் போடு

உலகில் வேறு எந்த நாட்டு சிலபஸிலும் இல்லாத கல்வி இந்து மத ஸ்கூல்களில் மட்டுமே உண்டு .

வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியருக்கு முன்னால் நின்று கொண்டு

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணுஹு 

குருர்  தேவோ மஹேஸ்வரஹ

குரு சாட்சாத் பரப்ரம்ம

தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.– என்ற ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும் .

பொருள்:

ஆசிரியரே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர்  ஆவார்கள். பெரிய கடவுளுக்குச் சமமான அந்த ஆசிரியரை நான் அடிபணிந்து வணங்குகிறேன் .

இதைச் சொன்னவுடன் அவர்களை உட்காரும்படி சொல்லிவிட்டு அவர் பாடம் சொல்லிக்கொடுப்பார் .

மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆசார்ய தேவோ பவ; அதிதி தேவோ பவ;—தைத்திரீய உபநிஷத்.

அன்னையே தெய்வம் , அச்சனே தெய்வம், ஆசிரியரே தெய்வம், விருந்தாளியே தெய்வம்.

உலகில் இப்படிப்பட்ட பாடத்தை — பிஞ்சு மனஸில் –பசு மரத்தாணி போல பதிக்கும் – பாட திட்டம் உலகில் எங்கும் இல்லை. அதை அம்பலவாணரும் நமக்கு நினைவு படுத்துகிறார்.

xxxx

நல்ல மனைவியின் ஆறு லட்சணங்கள்

1.தாயைப் போல அன்பும்

2.வேலைக்காரி போல தொண்டும்

3.திருமகளைப் போல அழகும்

4.பூமாதேவியைப் போல பொறுமையும்

5.அழகிய கொங்கையுடைய வேசி போல இன்பமும்

6.அமைச்சரைப் போல அறிவுரையும்

உடையவளே பெண் என்று பெயர் உடையவள்.

(மற்றதெல்லாம் பெண் உருவில் இறைவன் படைத்த பேய்கள் என்பது சொல்லாமலே விளங்கும்; அதாவது சூர்ப்பநகை, தாடகை, கைகேயி, பூதகி — எல்லாம் ஒன்று சேர்ந்த கட்டழகி!!)

அன்னை தயையும் அடியாள்    பணியுமலர்ப்

பொன்னி   னழகுங் புவிப்பொறையும் — வன்னமுலை

வேசி துயிலும் விறன்மந்     திரிமதியும்

பேசி லிவையுடையாள் பெண்

–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் இல்லை)

xxxx

விவேக சிந்தாமணிப் பாடல்வரிகளை ஒப்பிடலாம்

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96

மதன லீலையில் மங்கையர் வையினும்
இதமுறச் செவிக் கின்பம் விளையுமே. (46)

அறிவுளோர் தமக்கு நாளு மரசருந் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்–64

நிலமதிற் குணவான் தோன்றி னீள்குடித் தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந் தோன்றும் சந்தன மரத்திற் கொப்பாம்

Xxxx

பெண்களின் – குறிப்பாக மனைவியின்– இனிய சொற்கள் பற்றி பாரதியும் பாடுகிறார்:-

“வில்லினை யொத்த புருவம் வளைத்தனை

வேலவா! — அங்கொர்

வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடி

யானது வேலவா!

சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பாள் சிறு

வள்ளியைக் — கண்டு

சொக்கி மரமென நின்றனை தென்மலைக்

காட்டிலே

xxxx

1.”பூட்டை திறப்பது கையாலே-நல்ல 
மனம் திறப்பது மதியாலே”
பாட்டை திறப்பது பண்ணாலே –இன்ப
வீட்டைத்  திறப்பது பெண்ணாலே. 

Xxx

காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்

…………………………………….

………………………………………….
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
xxxx

சீதாபிராட்டி பேசிய இனிய சொற்களை கம்பன் வருணிக்கிறான் :-

அளவு இல கார் எனும் அப்பெரும்பருவம் வந்தணைந்தால்

தளர்வர் என்பது தவம் புரிவோர் கட்கும் தகுமால்

கிளவி தேனினும் அமிழ்தினும் குழைத்தவள் கிளைத்தோள்

வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ

—–கம்பன் பாடல், கிட்கிந்தாக் காண்டம்,கார்காலப் படலம்

பொருள்:–

ஓர் அளவில்லாத சிறப்புடைய கார்காலம் வந்து விட்டால், முற்றும் துறந்த முனிவர்களும் மனம் தளர்ந்து போவார்கள். ஆகவே தேன்அமிழ்தம் ஆகிய இரண்டிலும் தோய்த்து எடுத்தது போன்ற இனிமையான சொற்களைப் பேசும் சீதையின் தோள்களைத் தழுவிய இராமனுக்கு, கார்காலம் துன்பம் தந்தது என்றால் அது துன்பம் என்று கொள்ளத் தக்கதோ?

xxx

அபிராமி பட்டரும் பாடுகிறார்:–

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி! அபிராமியே!

Xxx

இரக்கமும் கொடையும்

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை –குறள் 1059

பொருள் வழங்குவோருக்கு புகழ் — வள்ளல் —என்ற பெயர் எப்படி உண்டாகிறது ? பிச்சை எடுப்போருக்கு இரக்கப்பட்டு அள்ளிக்கொடுப்பதால்தானே .

இதை இன்னும் தெளிவாகச் சொல்கிறது அறநெறிச்சாரம் ,

பரப்புநீர் வையத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்

இரப்பாரில் வள்ளல்களும் இல்லை – இரப்பவர்

இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பனும்

தம்மைத் தலைப்படுத்த லால்” (அறநெறி.219)

— subham —

tags-  மனு நீதி நூல் , அறப்பளீசுர சதகம் , மனைவி, ஆறு லட்சணங்கள்,குருர் பிரம்மா , மாத்ரு தேவோ பவ , பாரதி 

உங்கள் உடலுக்கு உணவு எப்படி சக்தியூட்டுகிறது? -1 (Post.11,569)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,569

Date uploaded in London – 21 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாத இதழ் ஹெல்த்கேர் டிசம்பர் 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

How Food Powers Your Body

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? -1

ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)

தமிழில் : ச.நாகராஜன்

விரைவான வளர்சிதை மாற்றம் (metabolism) எனக்கு இருப்பதாக எப்போதுமே சொல்லப்பட்டு வந்திருக்கிறேன். எதைச் சாப்பிட்டாலும் நான் மெலிந்தே இருக்கிறேன்.  முப்பதுகளின் நடுப்பகுதிக்கு வந்து விட்ட நிலையில், இப்போது தான் நான் கிடைமட்டமாக வளர்வதை அனுபவிக்கிறேன்.

ஒரு வாரத்தில் சில முறைகள் ‘ஸ்க்வாஷ்’ விளையாடுகிறேன். நண்பருடன் வியாழக்கிழமைகளில் ஓடுகிறேன். நாயுடன் நடை பழகுகிறேன். மற்றபடி எப்போதுமே நான் எனது கணினியுடன் தான் முழு நாளையும் கழிக்கிறேன். பிறகு படுக்கையில் உட்கார்ந்து கொள்கிறேன், தூங்கி விடுகிறேன். என்றாலும் கூட நான் மெலிந்தே தான் இருக்கிறேன். பசி வந்த நிலையில் சுலபமாக கோபம் வருகிறது. பகல் நேரங்களில், காலையில் செமத்தியான காலை உணவு, பிறகு இரண்டு ரவுண்டு மதிய உணவு ஆகியவற்றிற்குப் பின்னர் இன்னொரு முறை சாப்பிடத் தயாராகி விடுகிறேன். சில சமயம் இரவு நேரங்களில் பசி மேலிட விழித்துக் கொள்கிறேன். நான் சாப்பிட்டதெல்லாம் எங்கே தான் போகிறது?

நம்முடைய உடல்களுக்கு நிறைய கலோரி தேவைப்படுகிறது. இந்த உடல் என்னும் மெஷினை ஓட்டுவதற்கே அவற்றில் பெரும்பாலும் செலவழிக்கப்படுகிறது. உங்கள் கல்லீரல் இருப்பதைப் பற்றி குறிப்பாக நீங்கள் உணர தேவையில்லை, ஆனால் நிச்சயமாக அது இருக்கிறது, வேலை செய்கிறது. அதே போலத்தான் உங்கள் சிறு நீரகங்கள், தோல், மலக்குடல், நுரையீரல் மற்றும் எலும்புகளும் இருக்கிறது.

நம்முடைய மூளைகள் தான் பெரிய அளவு சக்தியை எடுத்துக் கொள்கின்றன; சராசரியாகப் பார்த்தால் உடல் எடையில் ஐம்பதில் ஒரு பங்கு தான் இருக்கிறது என்றாலும் கூட நாம் எடுத்துக் கொள்ளும் கலோரியில் ஐந்தில் ஒரு பங்கு மூளை எடுத்துக் கொள்கிறது.

ஒருவேளை என்னுடையது உங்களை விடத் திறன் குறைந்ததாக இருக்கலாம். எனக்கு கவலைப்படும் சுபாவமான மனம் – நான் அசை போட்டுப் பார்க்கிறேன் – இருந்த இடத்தை விட்டு அசையாமல் ஓடுவதைப் போல!

எழுதும் போது சில சமயம் சோம்பேறித்தனமாக இருப்பதை உணர்கிறேன். ஒரு பாராவை என் மனதில் சிந்தனை செய்த பின், இப்படிச் செய்ததற்கு எனக்கு காபி வேண்டும் போல இருப்பதாக நானே ஊகம் செய்து கொள்கிறேன். கடைசியாக ஒரு சேண்ட்விச் இன்னும் சரியானபடி இருக்கும் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன். சிந்திப்பதானது எனது கலோரிகளை குறைத்து விட்டதே, ‘தீயில் இன்னொரு கட்டையைப்’ போட வேண்டியது தான்!

தீ என்பது வளர்சிதை மாற்றத்திற்கான ஒரு உவமை மட்டுமல்ல! 18ஆம் நூற்றாண்டில் பிரான்ஸை சேர்ந்த இரசாயன இயல் நிபுணரான ஆண்டாயின் லாரண்ட் டீ லாவோசியர் (Antoine-Laurent de Lavoisier) ஒரு கூரறிவு உடைய தொடர் சோதனையை மேற்கொண்டு, நமது வாழ்க்கை ஆதாரமே தீ தான் என்பதை நிரூபிக்க அதை நடத்தினார்.  

முதலில் காற்று எதனால் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர் கண்டார். பிறகு துல்லியமான அளவுகளைக் கொண்டு காற்றிலிருந்து தீயே ஆக்ஸிஜனைப் பிரித்து துருவாகப் படிய வைக்கிறது என்பதைக் காட்டினார்.

பின்னர் ஒரு சிறிய கம்பார்ட்மென்டைச் சுற்றி  – சிறிய பிரிவைச் சுற்றி – ஐஸ் கட்டிகளை வைத்து அந்தப் பிரிவுக்குள் ஒரு எரியும் ஜுவாலையையோ அல்லது ஒரு சிறு மிருகத்தையோ வைக்கும்படியான ஒரு சாதனத்தை உருவாக்கினார்.

ஐஸ் எவ்வளவு உருகுகிறது என்ற அளவை வைத்து ஜூவாலையால் எவ்வளவு சக்தி அந்த மிருகத்தால் எரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் தொடர்பு படுத்திக் காட்டினார்.

அவர் ஒரு ரெஸ்பிரோமீட்டரைக் கூட உருவாக்கினார். ஒரு மனிதன் வெவ்வேறு காரியங்களைச் செய்யும் போது துல்லியமாக எவ்வளவு ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறான் என்பதைக் காண டியூப்கள் மற்றும் கேஜ்கள் (tubes and gauges) ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டது இந்த சாதனம்.

ஒரு எரியும் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியின் செயல்பாடு போலவே, கார்பன் மற்றும் ஆக்ஸிஜனை மிக மெதுவாக எரிய வைப்பதே சுவாசிப்பது என்னும் செயல் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

ஜூவாலைகளும் உயிர் வாழ் இனங்களும் ஆற்றல் மற்றும் வாயுக்களை ‘எரியவைக்கும் எதிர்வினை’ (combustion reaction) என்று இன்று நம்மால் அறியப்படுவது போல பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒன்றே தான்  என்றார் அவர்.

தீயில் இந்த எதிர்வினை வேகமாக கட்டுப்பாடின்றி இருக்கிறது; பிளவுகளாக எரிபொருளிலிருந்து ஆற்றல் உதறி விடப்படுகிறது. அநேகமாக அனைத்துமே ஒளியாகவும் வெப்பமாகவும் உடனடியாக விடுவிக்கப்படுகிறது.

ஆனால் வாழ்க்கை என்பது இன்னும் அதிக முறையான ஒன்றாக அமைந்திருக்கிறது. உயிரணுக்கள் அவற்றின் எரிபொருளிலிருந்து ஆற்றலை கண்கவரும் வண்ணம் எடுத்துக் கொள்கிறது, ஒவ்வொரு கடைசித் துளியையும் கூட அவற்றினுடைய மிகச் சிறிய நோக்கங்களுக்காக அவை எடுத்துக் கொள்கின்றன. சொல்லப்போனால் எதுவுமே வீணாவதில்லை.

–    சுவாரசியமான நீண்ட கட்டுரை 

——தொடரும்

நூல் பல கல் – ஔவையார் ஏன் சொன்னார்? என் புஸ்தகங்கள் (Post No.11,568)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,568

Date uploaded in London – 20 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எதிர்காலத்தில் லண்டன் சுவாமிநாதன் போலப் பலரும் “இறவாத புது நூல்கள் ” பல இயற்றுவார்கள் என்பது ஔவையார்ருக்குத் தெரிந்திருக்கிறது. ஆகையால் “நூல் பல கல்” என்று ஆத்தி சூடியில் விளம்பினார் . 

இதோ என்னுடைய 87 நூல்களில், இதோ சில தமிழ் நூல்கள்.

வாங்கிப் படியுங்கள்; எல்லா எழுத்தாளர்களையும் ஆதரியுங்கள் .

XXXX

BOOK 50

ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

பொருளடக்கம்

1.ராதே உனக்கு கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!

2.அற்புத உவமை- சேர்ந்தாரைக் கொல்லி: அக்னி பகவான்!

3.ராமரின் வில் பெரிதா? சீதையின் சொல் பெரிதா?

4.பாரதியும் கம்பனும்: சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பார்கள்

5.ஏரிக்கடியில் அரண்மனை: காளிதாசன், வால்மீகி தரும் அதிசய தகவல்

 6.மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது!

7.என்ன பரிசு கொடுக்கலாம்?

8.பாண்டிய மன்னனின் அளவற்ற பக்தி!

9.கவிதையில் இலக்கண அதிசயம்!

10.ஒரு சந்தேகம்- அந்தணர் என்போர் யார்?

11.கழகத்தில் சேராதே: தமிழர்களுக்கு எச்சரிக்கை!!

12.கண்ணாடி புராணம்! ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’

13.காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை

14.கொம்புள்ள மாட்டுக்கு 5 முழம் போதும், தீயோருக்கு……………

15.தமிழ்நாட்டின் எல்லை ‘திருப்பதி’தான்!

16.நால்வகைப் படைகள்: மகாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை!!

17.பஞ்சபூதங்களைக் கண்டுபிடித்தது யார்?

18.பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்?

19.பயப்பட வேண்டும்: வள்ளுவர் அறிவுரை!

20.பாட்டன்,பூட்டன்,ஓட்டன் = பாட்டி, பூட்டி, ஓட்டி: தேவாரம் தரும் அதிசய தகவல்

21.தீபாவளி பற்றி நாம் அறியாத விஷயங்கள்

22.பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள்

23.மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!

24.ஏகாதசி கதை, ருக்மாங்கதன் கதை ;

பகல் பத்து – இராப்பத்து

25.கல்வி பற்றி இந்துக்களின் அபூர்வ கண்டுபிடிப்பு

26.குமரியில் புகழ்மிகு சிலைகள்

27.கெட்டவன் அருகில் நல்லவன் வசிப்பது முடியாது!

28.சங்கீத ரகசியம்: இளமையில் கல்

29.சம்ஸ்க்ருதம் பற்றிய இரண்டு அரிய செய்திகள்!

30.உலகத்தை உண்மை தாங்குகிறது! சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்

31.சோம பானம் பருகுவோம் வாரீர்!

32.மூன்று வகையான வெற்றிகள்

33.மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது!

34.தொல்காப்பியத்தில் எண்.9 ;ஒன்பது கிரேக்க தேவதைகள்

35.நாட்டின் பெயர் பாரதம் என்று எப்படி வந்தது? புதிய விளக்கம்

36.பத்து சந்யாசிகள் பிரிவு ;சீக்கிய மதத்தின் பத்து குருமார்கள்;

ரிக் வேதத்தில் பத்து ராஜாக்கள்

37.பாவங்களும் அஜீரணமும்: மஹாபாரதத்தில்

விசித்திர உவமை; பஞ்ச மாபாதகம்

XXXXX

பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் 

பொருளடக்கம்

1.நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கதை

2.பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை !

3.ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை

4.‘டன்’வந்து ‘டிக்’கொண்டு போய்ட்டான்

5.சுக்குமி, ளகுதி ,ப்பிலி கதை!

6.மாப்பிள்ளை நாயக்கர் தட்டை அறுத்தது போல – ஒரு பழமொழிக் கதை

7.மனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி!

ஒரு சுவையான கதை

8.துளசியின் மகிமையை விளக்கிய ருக்மணி!

9.கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்: பால முரளி கிருஷ்ணா அனுபவம்

10.மெதுவாக ருசித்து சாப்பிடுங்கள்: பால முரளி கிருஷ்ணா ‘அட்வைஸ்’

11.நாரதா கலகப் ப்ரியா! பாரிஜாத மரத்தின் கதை

12.தேவர் கோ அறியாத தேவ தேவன்’ யார்? திருவாசகக் கதை

13.கண்கள் இருந்தும் காணாதார்- திருவாசகக் கதை!

14.அன்னதான மகிமை: கைதியின் கண்ணீர்

15.குட்டிக்கதை- கழுதைப் பிரம்மச்சாரி

16.பொறுமை: மூன்று குட்டிக் கதைகள்!

17.ஒரு குட்டிக் கதை: “நுணலும் தன் வாயால் கெடும்”

18.உலகமஹா கவிஞன் பற்றி ஒரு சுவையான கதை!  

19.நடிகைக்குக் கிடைத்த அற்புதப் பரிசு!

20.கணவனே கண் கண்ட தெய்வம்!!!

21.செத்துப் போன நடிகர் படம்!!

22.பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை!

23.பெண்ணின் கண்களில் தீப்பொறி! வள்ளுவன் தோற்றான்!

24.ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

25.டேய்! போண்டா மூக்கு!

26.மரண தேவனுடன் சுல்தான் வாக்குவாதம்

27.தத்துவ ஞானியும் மரணமும்

28.செத்துப் பிழைத்தார் மார்க் ட்வைன்!

29.பதினான்கு கோடிக்கு மேல் ஒரு பைஸா கூட வேண்டாம்!

30.காதலியை பிக்குணியாக மாற்றினார் புத்தர்

31.பழ மரமும் ஆறு வர்ண மனிதர்களும் -சமண மதக் கதை

32.யானை விரட்டிய கர்வம் பிடித்த கவிஞர் மனம் மாறிய கதை

33.பேராசை பெரு நஷ்டம்-பழமொழிக் கதை

34.சுவத்துக் கீரையை வழித்துப் போடடி………

36.ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ?

37.பழமொழிக் கதை- ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’

38.அன்பின் சின்னம் யொவன்னாஸ் பிராம்ஸ்

39.இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

40.பாட்டுக்கு பத்து ரூபாய்! ஞானியார் அடிகள் கதை

41.நாக்கு பெரிதா? மூக்கு பெரிதா?

42.ஏன் மனைவியைத் தள்ளி விட்டாய்?

43.ஞாபக மறதிப் பேராசிரியர்கள்!

44.கறார் பேர்வழி! கணக்கான பேர்வழி!

45.புத்தி கூர்மை: பலே! பலே! ரபலே!!!

46.மேலும் ஒரு தண்ணீர் அதிசயம்: சுவையான சமண மத சம்பவம்

47.ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு! 

48.கீரியைக் கொன்ற அவசரக் கொடுக்கு

49.ஒரு நல்ல கதை வாளும் நாளும் ஒன்று !

50.கடவுளுக்கு ஞாபக மறதி உண்டு’- தாமஸ் ஆல்வா எடிசன்

51. மாதா கோவில் (Church ) தமாஷ்கள்

***************************

வரலாற்று விநோதங்கள்

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

பொருளடக்கம்

1.கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 1

2.கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 2

3. கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு

4.கருவுயிர்த்தாள் குறத்தி; காயம் தின்றான் குறவன்

5.சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கிய நீதி

6.திருக்குறளுக்கு ‘முப்பால்’ என்று பெயரிட்டது ஏன்?

7.டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள்

8.நாயக்கர் ஆட்சியில் சம்ஸ்கிருத மறுமலர்ச்சி!

 9.மகளுக்கு அக்பர் பாதுஷா கற்பித்த ‘செக்ஸ்’ பாடம்!

10. அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும்

11. இந்து அரசர்களின் பட்டாபிஷேகக் காட்சிகள்

12. இந்து மன்னர்களின் 24 மணி நேர வேலை!

13. உலகின் முதல் சத்யாக்ரஹி

14. எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இந்துக்கள் குடியேற்றம்!

15.உலகம் முழுதும் உமா தேவி வழிபாடு!

16.கோண்டு இன மக்களின் விநோதப் பழக்க வழக்கங்கள்

17.கோண்ட் பழங்குடி இன நட்புறவு ஒப்பந்தம்

18.கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள்;  சம்பந்தர் செய்த அற்புதம்

19.திராவிடர்களின் மூட நம்பிக்கைகள்

20.திராவிடர்களின் இரத்த பலி! படித்து பயந்துவிடாதீர்கள்!!

21.திராவிடர்கள் யார்?

22.‘திராவிடர்கள்’ பிராமணர்களா ? கேள்வி -பதில்

23.தமிழன் காதுல பூ!!

24.நீலகிரி மலையில் படகர்கள்

25.விநோத பழக்க வழக்கங்கள்

26.முதல் திராவிட ராணி:கி.மு.1320; தசரதன் எழுதிய கடிதங்கள்

27.ஆரியமா? திராவிடமா? நீங்களே சொல்லுங்கள் 

XXXX

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham— 

Tags- நூல் பல கல் , ஔவையார்,  என் புஸ்தகங்கள்

Tamil Hindu Encyclopaedia – 40; மயிலூர்தி Peacock Rider /Skanda in Sangam Tamil Books (Post No.11,567)

SKANDA- MURUGA FROM SOUTH EAST ASIA 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,567

Date uploaded in London – 20 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is the Third part on Murugan/Skandan in Sangam Tamil Literature

We have already seen Lord Murugan alias Skanda/Kartikeya’s appearance, birth and his worship in Kurinji/ mountain landscape. Now let us look at his ornaments,  clothes , Vahanas (Mounts of Gods) as portrayed in 2000 year old Sangam Tamil literature.

Some scholars consider Sangam books like Tirumurugatruppadai (Murugu), Paripatal (Pari.) and Kalittokai (Kali) form the latest layer of Sangam period. But word occurrences and the themes in the books prove them wrong. Moreover, whatever said in these so called latest books are already in Pura Nanuru and Aka Nanuru which are considered the oldest layer.

xxx

Vaahanaas (Mounts of Gods) of Lord Muruga/Skanda

Sangam poets described him riding a fast flying Peacock (Pari.18-26) விரை மயில்மேல் ஞாயிறு.

His other vehicle was an elephant named Pinimukam பிணிமுகம்  according to Kuru 1-2; Pura.56-8; Pathitr.11-16; Pari.5-2; 17-44; 21-1; Murugu.78-82

My Vahana research shows that whatever the Vahana is that will be the flag of that God (please read my Vahana research articles). That shows that they are simply symbols and not real vehicles. That will explain how a Fat elephant God can ride a little mouse in Ganapathi iconography.

In Murugan’s case also we see the same; his Vahanas Peacock, Elephant, Cock are shown in his flags s well.

Elephant Flag, Peacock Flag- Pari19-90; Puram 56-7; Murugu 122; Pari.17-48

Rooster/ Cock flag- Murugu 38-39

SKANDA- MURUGA FROM SOUTH EAST ASIA 

What does this show?

Hindus invented these flags and Vahanas for gods which the world follows as Flags and National Emblems of 200++ countries. Even in Vedas we see birds and animal names in Rishis and Gotras. From Himalayas to Kanyakumari we see the same Flags and Vahanas for Gods and Goddesses.

English word Vehicle came from Sanskrit word Vaahana.

xxx

Garlands and Clothes

Murugan wears a Pearl Necklace and it looks like geese flying in the sky in “V “ formation (Akam.120-3; Murugu.104). This simile is copied from Kalidas who lived in First century BCE or earlier according famous Sanskrit scholars.

Hindus not only allocated certain Flags and Vehicles to Gods, but also marked some flowers to each God. From Kanyakumari to Kashmir, Vilva/Biva meant Shiva’s leaf and Tulsi meant Vishnu’s leaf.

They allocated Kadamba tree and its flowers along with Valli flowers and Kaanthal Flowers to Lord Skanda / Muruga- Puram 23-3; Murugu.10-11; Pari.21-10; 14-22; Natr.34-8; Murugu.43-44

Muruga is shown also with shining, sparkling jewellery- Kurinji 51; Kurun.1-3.

Xxx

Full Description of his Appearance

There is a beautiful picture of him in Murugu 205-214

ஆடும் முருகனின் அழகும் ஒப்பனையும்

செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச்    

செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன்,    

கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன், 

குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,    

தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம்   210

கொடியன், நெடியன், தொடி அணி தோளன்  

நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு,

குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல்  

மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்,  

முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி,                215

மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து,

குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே. அதாஅன்று, 

——திருமுருகாற்றுப்படை Tirumurugatruppadai (Murugu)


சிவந்த மேனி= RED BODY

சிவந்த ஆடை= RED CLOTHES

செயலையந்தளிர் அணிந்து ஆடும் காது= TENDER SHOOTS IN HIS EAR

இடுப்பில் கச்சு= CLOTH BELT IN THE WAIST

காலில் கழல்= FOOT ORNAMENT ANKLET/KAZAL

தலையிலே வெட்சிப்பூக் கண்ணி= VETCHI FLOWER WREATH ON HIS HEAD

குழைந்திருக்கும் தலைமயிர் – கொண்டு விளங்கினான் = BEAUTIFUL CURLY/WAVY HAIR

கொம்பு முதலான பல சிறு இசைக்கருவிகளைத் தோளில் மாட்டிக்கொண்டிருந்தான் = HE HAS HORNS AND OTHER MUSICAL INSTRUMENTS HUNG FROM HIS SHOULDERS

சேவல் கொடியைக் கையில் வைத்திருந்தான் = HOLDING ROOSTER FLAG IN HIS HAND (ALSO FLAGS O FRAM AND PEACOCK)

உயர்ந்த உருவம்= TALL FIGURE

தொடி அணிந்த தோள்= ON SHOULDERS HE HAS THODI/BRACELET  JEWEL

யாழ் போன்ற குரலால் பலரும் பாடும் பாட்டைக் கேட்டுக்கொண்டு ஆடினான் = HE DANCED LISTENING TO LYRE VOICED PEOPLE

உடம்பெல்லாம் புள்ளி போட்டுக் கொண்டிருக்கும் மேனி- HE HAS PAINTED DOTS ON HIS BODY

(

குதிபுரள இடுப்பில் கட்டிய ஆடை=THE WAITST CLOTH WAS HANGIG DOWN UPTO HIS FEET

கை அடிக்கும் முழவோசைக் கேற்ப அடியெடுக்கும் நடை= HIS RHYTHMIC STEPS WERE BASED ON THE BEATS FROM THE DRUMS

இப்படிப்பட்ட நிலையில் 

வேலனோடு சேர்ந்து கொண்டும் 

மகளிரின் தோளைத் தழுவிக் கொண்டும் 

தலைமையேற்று முன்னே நின்றுகொண்டும் = ALONG WITH HIM, DAMSELS JOINED SHOULDER TO SHOULDER

குன்றிருக்கும் இடமெல்லாம் 

கூடியாடி நிற்றலும் அவன் பண்பாகும்.

அதுவுமன்றி . . .= THIS IS WHAT HAPPENING WHERVER THERE IS A HILL BECAUSE THAT IS HIS NATURE TO DANCE WITH THE HILL TRIBESMEN AND TRIBES WOMEN.

XXX

NOW A TRANSLATION FROM KAUMARAM..COM

[“(VElan) is of fair complexion; he dons a red garment, cool asOka-shoots behind ears, a girdle, anklets, and vetchi-wreaths; he plays the flute, blows the horn, and other small instruments of music; he has a ram, peacock and flag of rooster; he is tall; he wears an armlet on his forearm; he is with damsels whose sweet voice sounds like the melodious tune of stringed instrument; and he is wearing above the sash around his waist a fragrant shawl trailing upon the ground.”]

XXX

COMMANDER IN CHIEF

In Sanskrit literature Lord Skanda (Murugan) is shown as the Commander in Chief of the Divine Army (of Devas). So he is described as heroic, valorous with a stern look.

Tamils also described him as furious, ferocious and ready to spring in action- Puram 16-12; Akam 158-16;Pathi.26-11; Poruna.131 சீற்றமும் சினமும் மிக்கவன்.

God with great power and skill ஒப்பற்ற பெருந்திறல் வாய்ந்தவன்- Natri.225-1; Akam.181-6

Stands in the front in the battlefield and attain fame – போரிலே முன்னின்று புகழ்பெறுபவன் Akam 1-3; Puram.14-19; Malaipadu.493.

Always victorious – விறல் வெஞ்செய் Puram 22-29; 120-21

These epithets were used for heroic kings and youths as well.

To be continued……………………………………….

Tags. Murugu, Peacock rider, Skanda, Pinimukam elephant, Red dress, fair complexion