Bhagavad Gita, Tamil Veda Tirukkural, Saint Tirumular’s Tirumanthiram and Adi Shankaras Bhagavad Gita Bhashyam (Commentary) – all advise us to avoid the extremes in Food consumption. It is not only to keep your body healthy but also to keep your mind pure. If anyone wants to succeed in spiritual matters whether it is Yoga or Dhyana/meditation t is essential that they avoid the excesses.
Here is the Bhagavad-Gita Sloka 6-16
नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नत: |
न चाति स्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन || 6-16||
nātyaśhnatastu yogo ’sti na chaikāntam anaśhnataḥ
na chāti-svapna-śhīlasya jāgrato naiva chārjuna
BG 6.16: O Arjun, those who eat too much or too little, sleep too much or too little, cannot attain success in Yoga .
Commenting on it, Dr Radhakrishnan (previously President of India and world renowned Philosopher) says,
“We must be free from animal cravings. We must avoid excess in all things. Compare with this the middle path of the Buddhists and the golden mean of Aristotle “.
MIDDLE WAY OF BUDDHISTS:
The Middle Way as well as “teaching the Dharma by the middle” are common Buddhist terms used to refer to two major aspects of the Dharma, that is, the teaching of the Buddha. The first phrasing, refers to a spiritual practice that steers clear of both extreme asceticism and sensual indulgence
Xxx
GOLDEN MEAN OF ARISTOTLE
Moral behaviour is the mean between two extremes – at one end is excess, at the other deficiency. Find a moderate position between those two extremes, and you will be acting morally.
Xxx
Adi Shankara quotes a similar saying from the Satapata Brahmana and adds one more Subhasita from the Yoga Shastra, “ one must eat to fill in half of one’s stomach and drink water to fill in quarter and leave the rest of space for air.”
Xxx
Sri Ramakrishna Paramahamsa says
That food alone should be taken by the devotee which does not heat the system or unsettle the mind.
Swami Chidbhavananda adds,
The body is like Venna. If you tighten the strings too much while tuning it, it would not give good Svara. If you let them very loose, music would not come. It is similar to taking too much or too little food.
Xxx
Tiru manthiram also repeated what is said in Bhagavad Gita. Tiru valluvar who wrote Tamil Veda known as Tirukkural says,
If one’s food and work are excessive or deficient, the three things enumerated by those learned in medical science, flatulence, biliousness and phlegm will cause one disease–Kural couplet 941
Another translation of the above couplet is as follows,
Authorities on medicine hold that undue strain, and food , excessive or deficient , upset the three humours – flatulence, bile and phlegm of the body and bring about disease.
—Subham—
Tags – too much, too little, food, Bhagavad Gita, Tirukkural, Tirumanthiram,
அதிகமாகச் சாப்பிடுவோனுக்கும் மிகவும் குறைவாகச் சாப்பிடுவோனுக்கும் மனத்தை ஒருமைப்படுத்தி தியானம் (யோகம்) செய்வது இயலாது . இதே போலத்தான் உறக்கமும். அதிக நேரம் தூங்காதே; குறைந்த நேரம் தூங்காதே.
இது பற்றி ஆதி சங்கரர், ராம கிருஷ்ண பரமஹம்சர் ,டாக்டர் ராதா கிருஷ்ணன், சுவாமி சித்பவாநந்தர் ஆகியோர் சொல்வதைக் காண்பதற்கு முன்னர் வள்ளுவர், திருமூலர் ஆகியோர் செப்பியதை மனதிற்கொள்வோம்..
xxx
மேவிய அன்னத்தால் விளங்கியது இச்சடம்
பாவியே கொன்று பழியுறும் அன்னத்தான்
ஆவின் மிதந் தப்பிலை யுற்று நோயாகும்
காவில்லிவையெல்லாங் கண்டுகொளன்னமே
–திருமந்திரம் , திருமூலர் இயற்றியது
பொழிப்புரை
அன்னத்தினாலே இச்சரீரம் நிலை பெற்றிருக்கிறது பழியைச் செய்கின்ற அன்னமானது , அளவு மீறினால் பாவியைப் போல சரீரத்தில் நோய்களை உண்டாக்கிக் கொல்லும். அளவுக்கு மீறி அதிகமாகச் சாப்பிட்டால் கபநீர் முதலிய பல நோய்களை உண்டாக்கும் . அன்னத்தால் ரக்ஷிப்பும் பக்ஷிப்பும் உண்டாகும் என்று தெரிந்து கொள்வாயாக.
(திருப்புகழ் தா. ப. வேங்கட சுப்பிரமணியன் உரை, திரு மந்திரம் வைத்தியப் பகுதி, திருவாவடுதுறை ஆதீனம், 1957)
Xxxx
வள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தில் பத்து குறள்களில் பத்து கட்டளைகள் இடுகிறார் . மேற்கூறிய விஷயத்தைச் சுருக்கமாக விளம்புகிறார்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று –குறள் 941
மணக்குடவர் உரை
உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.
இதற்கு இரண்டுவித விளக்கங்களை உரைகாரர்கள் தருகின்றனர்.
ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் எது கூடினாலும் குறைந்தாலும் நோய்களை உண்டாக்கும்.
மற்றோர் விளக்கம் : உணவு அதிகமாகச் சாப்பிட்டாலும் குறைவாகச் சாப்பிட்டாலும் வாதம் , பித்தம், கபம் சம நிலை தவறி உடலில் நோய்களை உண்டாக்கும் .
இதை நாம் கண்கூடாகவும் காண்கிறோம். ஐஸ்க்ரீமையோ, குளிர்ந்த பானங்களையோ தவறான காலத்தில், தவறான அளவில் சாப்பிட்டால் தடுமன் பிடிக்கும்; இருமல் வரலாம் . எதை அதிகம் சாப்பிட்டாலும் அஜீரணம் வரும் ; அதுவே பல நோய்களுக்கு அஸ்திவாரம் போடும்.
Xxx
பகவத் கீதைக்கு (6-16) ஆதிசங்கரர் பாஷ்யம் :
“உணவைத் தன் அளவிற்கு ஏற்ற அளவைக் கடந்து உண்பவனுக்கு , “எது தன் அளவிற்கு ஏற்றதோ , அந்த அன்னம் காப்பாற்றுகிறது ; அது கெடுப்பதில்லை ; அதிகமானது கெடுக்கின்றது ; குறைந்தது காப்பாற்றுவதில்லை” (சதபத பிராஹ்மணம்) என்னும் சுருதியினால் உணவின் ஒழுங்கைக் கண்டுகொள்க. ஆதலால் யோகியானவன் தன் அளவிற்கேற்ற அன்னத்தைக் காட்டினும் அதிகமாக, குறைவாக உண்ணக்கூடாது ; அல்லது வேறு விதமாக உரையிடலாம் . யோகியானவன் யோக சாஸ்திரத்தத்திற் கூறிய அந்த அளவைக் காட்டிலும் அதிகமாக உண்பவனுக்கு யோகம் இல்லை.
“அன்னத்திற்கும் கறி முதலானவற்றுக்கும் பாதி (வயிறு);
ஜலத்திற்கு மூன்றாவது (கால்பாகம்);
காற்று ஸஞ்சரிப்ப தற்காக நான்காவதை மிச்சப்படுத்தி வைக்கவேண்டும் (யோக சாஸ்திரம் )என்று கூறப்பட்டுள்ளது.
(1905ம் ஆண்டில் பெரியகுளம் த .சுந்தரராஜ சர்மா எழுதிய சங்கர பாஷ்ய மொழிபெயர்ப்பை 1977ம் ஆண்டில், திருக்கோவிலூர் ஞானாநந்த தபோவன சந்நியாசிகள் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளனர் )
மேற் கூறிய சங்கர பாஷ்யத்தில் நமக்கு இரண்டு அற்புதமான விஷயங்கள், ஆதிசங்கரர் வாய்மூலம் கிடைக்கிறது.
(1). கீதையும், குறளும் திருமந்திரமும் சொன்ன கருத்து அதற்கு முன்னரே சதபத பிராஹ்மண நூலில் உள்ளது என்பது ஆதிசங்கரர் சொன்னதால் நமக்குத் தெரிகிறது.
(2).”சாப்பிடும்போது வயிற்றில் பாதி அளவு சாப்பிட்டுவிட்டு கால் பகுதியை தண்ணீருக்கும் மீதி பகுதியை வெற்றிடமாகவும் விட வேண்டும்” என்ற யோக சாஸ்திர கருத்து, ஆதிசங்கரர் காலத்துக்கும் முன்னரே இருந்துள்ளதையும் சங்கரர் நமக்கு காட்டுகிறார்..
அர்ஜுனா ! அளவு கடந்துண்பவனுக்கு யோகம் இல்லை. அறவே உண்ணாதவனுக்கும் அஃதில்லை . மிகைபட உறங்குபவனுக்கும் மிகைபட விழித்திருப்பவனுக்கும் யோகம் இல்லை.(6-16)
வீணையின் தந்தியை அளவுக்கு மீறி இறுக்கினால் அது உடைந்து போம். மிக இளக்கினால் அதில் ஓசை வராது . உடலோ வீணை போன்றது . உணவு, உறக்கம் இவைகளில் மிகைப்படுதலும் குறைபடுதலும் கூடாது அந்தந்த சரீரத்துக்கேற்ற உணவு எது , அளவு எது என்பதை அவரவரே தீர்மானிக்கவேண்டும்
பகற்பொழுதில் திருப்தியாக போஜனம் செய். ஆனால் இரவில் உட்கொள்ளும் உணவு குறைவாகவும் இலேசாயுமிருக்கட்டும்.
சரீரத்துக்கு உஷ்ணத்தையும் மனதுக்கு ஸஞ்சலத்தையும் எந்த உணவு கொடுக்காதோ அந்த உணவைத்தான் சாதகன் உட்கொள்ள வேண்டும் – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் .
என்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் 6-16 ஸ்லோகத்துக்கான உரையை முடிக்கிறார்.
Xxx
டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர். அவர் இந்த 6-16 சுலோகத்துக்கு எழுதிய உரையில் புகல்வது யாதெனில்,
” மிருக உணர்வுகளிலிருந்து நாம் விலகி இருக்கவேண்டும்; எல்லா விஷயங்களிலும் மிக அதிகம் , மிகக் குறைவு என்பதைத் தவிர்க்க வேண்டும். பெளத்தர்களின் மத்திய வழிமுறையையும் அரிஸ்டாட்டில் சொன்ன தங்கம்போன்ற வழி முறையையும் இங்கே ஒப்பிட்டுப்பார்க்கலாம்”.
MIDDLE WAY OF BUDDHISTS:
The Middle Way as well as “teaching the Dharma by the middle” are common Buddhist terms used to refer to two major aspects of the Dharma, that is, the teaching of the Buddha. The first phrasing, refers to a spiritual practice that steers clear of both extreme asceticism and sensual indulgence
Xxx
GOLDEN MEAN OF ARISTOTLE
Moral behaviour is the mean between two extremes – at one end is excess, at the other deficiency. Find a moderate position between those two extremes, and you will be acting morally.
Xxx Subham xxxx
Tags- மித உணவு, அதிகஉணவு, யோகம், தியானம், கீதை 6-16, திருமந்திரம், குறள்
அறப்பளீசுர சதகம் பாடல் 46–ம் 47-ம் புராணக் கதைகளின் பட்டியல் .நல்லது நடக்க, எந்த வழியையும் கடைப்பிடிக்கலாம். தீய செயலைச் செய்வோர் எவ்வளவு வலிமை பெற்றாலும் இறுதியில் அழிவர் என்பது இந்த பாடல்களின் கருத்து.
ரஷ்யப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சிகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்படியும் அந்தப் புரட்சிகள் பாராட்டப்படுகின்றன. ஜப்பானிலுள்ள அப்பாவி மக்கள் தலையில் 2 அணுகுண்டுகளைப் போட்டு பல லட்சம் மக்களை ஒரு நொடியில் கொன்றுகுவித்தது அமெரிக்கா. ஆனால் ஹிட்லர் ஒழிந்தான் என்ற சந்தோஷத்தில் அமெரிக்காவை யாரும் இதுவரை கண்டிக்கவில்லை. பாகிஸ்தானில் ஒசாமா பின் லாடனை சட்டவிரோதமாக அமெரிக்கா கொன்றது அவன் 3000 பேர் சாவுக்குக் காரணமானதால் அதையும் உலகம் கண்டிக்கவில்லை . இறுதி லட்சியம் நல்லதாக இருந்தால் எந்த அதிரடி வேலையையும் செய்யலாம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட நடை முறை. பெரிய புராணத்தில் பல வன்முறைக் காட்சிகள் வருகின்றன. அதன் பின்னாலுள்ள சிவ பக்தி– குருட்டுத் தனமான பக்தியால் அவை பாராட்டப்படுகின்றன. மேலும் அவர்கள் அனைவரும் சிவபதம் அடைவதாகவே கதை முடிகிறது.இதை ஆங்கிலத்தில் END JUSTIFIES MEANS என்று சொல்லுவார்கள்.
வள்ளல் சீதக்காதி பற்றி தமிழர்கள் அனைவரும் அறிவர். செத்தும் கொடுத்தான் சீதக்காதி சம்பவத்தையும் பலரும் கேட்டிருப்பார்கள் . ஒருவர் சீதக்காதி இறந்த பின்னரும் அவர் சமாதிக்குச் சென்று வருத்தமுற்றபோது சமாதியின் உள்ளிருந்து சீதக்காதியின் ஒரு கை வெளியே நீட்டியதாகவும் , அதிலுள்ள விரல் மோதிரத்தை அவர் எடுத்துக்கொண்டதாகவும் ஒரு கதை உண்டு.
(இது பற்றியும் சீதக்காதி யார், அவர் சமாதி எங்குள்ளது என்பது பற்றியும் முன்னரே ஆங்கிலம்,தமிழ் இரண்டிலும் இங்கே பதிவுகள் ஏற்றப்பட்டுள்ளன )
இப்போது அதிகம் அறியாத ஒரு சம்பவத்தைக் காண்போம்.
நம் நாட்டில் ஏற்பட்ட ஒரு கொடிய பஞ்சத்தைப் பற்றி ஜே எஸ் சாண்ட்லர் என்ற மேனாட்டார் பின்வருமாறு எழுதியுள்ளார் :
“மறவர் நாட்டில் (சேதுபதி நாடு) தோன்றிய பஞ்சம் கி.பி. 1678-ம் ஆண்டிலிருந்து 1685-ம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. புலிக் கூட்டங்கள் எங்கும் சுற்றி அலைந்தன. நூறு பேர் உள்ள ஒரு கூட்டத்திலும் ஒரு புலி புகுந்து ஒருவரைத் தாக்கித் தூக்கிக்கொண்டு போய்விடும். ஒரு ஊரில் ஒரு சில நாட்களுக்குள் எண்ணற்ற ஆடுகள் கொல்லப்பட்டதுமல்லாமல் எழுபது மனிதர்களும் மறைந்துவிட்டார்கள் . பீதியால் கலங்கிய மக்கள் இரவு நேரத்தில் தங்கள் வீடுகளை சுற்றி நெருப்பு வளர்த்துக் கொண்டு தூங்கினர். .இரவில் வெளியூர்ப் பயணம் செய்வதில்லை. பகலில் செல்வதும் பாதுகாப்பற்றதாய் இருந்தது.
மதுரை நகரம் பொலிவிழந்து காணப்பட்டது புலிகளும் ஓநாய்களும் நகரில் அச்சமின்றி உலவித் திரிந்தன .வெட்டுக்கிளிகள் பயிர்களை மொய்த்துத் தின்றுவிட்டன .நாடு முழுதும் நச்சுப் பூச்சிகள் பரவின.இறந்துவிட்டவர்கள் புதைக்கப்படாமல் ஆற்றின் கரைகளிலே எறிந்து விடப்பட்டிருந்தனர் .
இப்பஞ்ச காலத்தில் வாழ்ந்த சீதக்காதி வள்ளல், மக்கள் துயரைக் கண்டு மனம் புண்பட்டார். தம் மரக்கலங்களை நெல் விளையும் பிரதேசங்களான கோதாவரி தீரம், வங்காளம் முதலிய பிரதேசங்களுக்கு அனுப்பி, தனியங்களைக் கொள்முதல் செய்து பாண்டி நாட்டில் இறக்குமதி செய்தார். அவருடைய காரியக்காரர் , வந்த நெல்லை நல்ல விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அது பலிக்கவில்லை . களஞ்சியங்களில் குவிந்த நெல்லை வள்ளல், வாரி வாரி ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார். அவருடைய காரியக்காரர் (Agents) குறுக்கிட்டும், அவர் விற்பனை செய்ய மறுத்துவிட்டார் . மக்களின் துயரைத் துடைத்த சீதக்காதியின் அன்னதானத்தை , படிக்காசுப் புலவர் பாடியுள்ளார்,
ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்
ஆர்தட்டினும் தட்டுவராமலே அன்னதானத்துக்கு
மார்தட்டிய துரைமால் சீதக்காதி வரோதயனே •
பொன்னுக்குப் பதிலாக நெல்லைச் சமமாக விற்கின்ற கொடிய பஞ்ச காலம்; அக்காலத்திலும் கூட இலவசமாக நெல்லை, ஏழைகளுக்கு வழங்கிய சீதக்காதியை தமிழ் கூறு நல்லுலகம் என்றும் மறக்காது
(இந்த சம்பவத்தை தமிழில் உணவு பற்றி புஸ்தகம் எழுதிய ஏ.கே செட்டியார் தந்துள்ளார்.1967-ம் ஆண்டு மதுரை TVS டி .வி. எஸ் . நிறுவனத்தார் வெளியிட்ட நல்ல புஸ்தகம் அது.)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுப்ரக் – மேவார் இளவரசர் கரன் சிங்கின் குதிரை!
ச.நாகராஜன்
அடிமை வம்சத்தின் முதல் அரசனான டெல்லி சுல்தான் குத்புதீன் அய்பக் ஓடுகின்ற குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்தான் என்று நாம் கேட்டிருக்கிறோம்.
இது உண்மையில் சாத்தியம் தானா? ஒரு ராணுவ தளகர்த்தர், அதுவும் 11 வயதிலிருந்தே குதிரை மீதிருந்து பல்வேறு போர்களைச் சந்திக்க ஆரம்பித்தவன் ஓடுகின்ற குதிரையிலிருந்து கீழே விழுந்து இறப்பானா?
கேள்வி சரியான கேள்வி தான். விடையைப் பார்ப்போம்.
குத்புதீன் ராஜஸ்தானத்தைக் கொள்ளையடிக்க ஆரம்பித்த போது மேவார் அரசனை அவன் கொன்றான். இளவரசன் கரன் சிங்கை சிறைப்பிடித்தான். கொள்ளையடித்த செல்வத்துடனும், இளவரசருடனும் அவரது குதிரையான சுப்ரக்கையும் தன்னுடன் எடுத்துச் சென்றான்.
லாகூரில் கரன்சிங் குத்புதீன் பிடியிலிருந்து தப்பப் பார்த்தார். ஆனால் அப்போது சிறைப்பிடிக்கப்பட்டார். குத்புதீன் அவரது தலையை வெட்ட ஆணையிட்டான். அது மட்டுமல்ல, இன்னும் அவமானப்படுத்தும் விதத்தில் இளவரசரின் தலையை போலோ விளையாட்டில் விளையாடவும் உத்தரவிட்டான்.
இளவரசரின் தலையை வெட்டும் தினத்தன்று வெட்டும் இடத்திற்கு, குத்புதீன் சுப்ரக் குதிரையின் மீது ஏறி வந்தான். சுப்ரக் தனது எஜமானனான கரன் சிங்கைக் கண்டவுடன் ஆக்ரோஷத்துடன் கட்டுப்பாடின்றி கனைத்து துள்ளிக் குதித்தது.
இதனால் குத்புதீன் குதிரை மேலிருந்து கீழே விழுந்தான். சுப்ரக் குத்புதீனை தனது காலால் உதைத்துத் தள்ளியது.
அதன் நீளமான குளம்புகள் குத்பூதின் மார்பிலும் தலையிலும் பலமாக உதைக்கப்படவே அவன் அந்த இடத்திலேயே இறந்தான்.
அனைவரும் விக்கித்துப் பிரமித்து விட்டனர். சுப்ரக் கரன்சிங்கை நோக்கி ஓடியது. ஒரே குழப்பம். இதைப் பயன்படுத்திய கரன்சிங், சுப்ரக் குதிரை மீது பாய்ந்து ஏறினார். குதிரை பறந்தது.
அதன் வாழ்க்கையின் மிக நீண்ட ஓட்டத்தை சுப்ரக் செய்தது!
மூன்று நாட்கள் நிற்காமல் தொடர்ந்து அது ஓடியது. கடைசியில் மேவார் கோட்டையின் வாயில் கதவருகில் வந்து நின்றது.
கரன் சிங் சுப்ரக் மேலிருந்து கீழிறங்கும் போது அது அசைவற்றுச் சிலை போல நின்றது.
கரன்சிங் அன்போடு தன் கரங்களால் சுப்ரக்கின் தலையைத் தடவிக் கொடுத்தார். ஆனால் சுப்ரக் கீழே விழுந்தது. கரன் சிங் திகைத்துப் போனார்.
தனது எஜமானனைக் காப்பாற்றி அவரை அவரது நாட்டிற்கு பத்திரமாகக் கொண்டுவந்த சுப்ரக் கீழே விழுந்து இறந்து விட்டது.
சுப்ரக்கின் கதை சாதாரணமான எஜமான விசுவாசம் என்பதையும் தாண்டிய ஒன்று.
இந்த உண்மைச் சம்பவங்கள் எல்லாம் நமது புத்தகங்களில் இடம் பெறாதே!
சுப்ரக்கைப் பற்றி நீங்களாவது இதைப் படிக்கும் முன்னர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
ஜெய் ஹிந்த்!
ஆதாரம் : (Courtesy – Commodore Amerendra nath Awasthi)
Thanks to : Truth weekly Vol 90 No 33 dated 9th December 2022
Appar alias Tirunaavukkarasar was a great Shiva devotee and saint who lived in the seventh century, a contemporary of another great saint Tiru gnaana Sambandar. Both lived during the reign of the great Pallava king Mahendravarman. Appar’s devotional poems are included in the 4th, 5th and 6th parts of Thevaaram.
His similes about the obscurity of god are similar to Shvetashvatara Upanishad
Appar says,
Like the fire in the wood, like the ghee in the milk,
the great gem like Brilliant Lord is standing obscured.
installing the pole of relationship, with the rope of
feeling, when gyrated vigorously, It (it) would appear in front.
As oil exists in sesame seeds, butter in milk, water in river- beds and fire in wood, so the Self is realized as existing within the self, when a man looks for It by means of truthfulness and austerity-when he looks for the Self, which pervades all things as butter pervades milk and whose roots are Self- Knowledge and austerity. That is the Brahman taught by the Upanishad; yea, that is the Brahman taught by the Upanishads.
Xxx
Another translation
Like oil in sesame seeds, like butter in cream, like water in springs, like fire in firesticks, so dwells the Lord of Love, the Self, in the very depths of consciousness. Realize him through truth and meditation.
The Self is hidden in the hearts of all, as butter lies hidden in cream. Realize the Self in the depths of meditation—the Lord of Love, supreme Reality, who is the goal of all knowledge.
—-திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை, (திருக்குறுந்தொகை)
Xxx
Sri Ramakrishna Paramahamsa explains it in simpler terms:
“You see many stars in the sky at night, but not when the sun rises. Can you therefore say that there are no stars in the heavens during the day? Because you cannot find God in the days of your ignorance, say not that there is no God.”
xxx
There are pearls in the deep sea, but you must hazard all the perils to get them. If you fail to get at them by a single dive, do not conclude that the sea is without them. So also in the quest for the Lord, if your first attempt to see him proves fruitless, do not lose heart. Persevere in the attempt, and you are sure to realise Him at last.
–subham—
Tags- God, oil in sesame, churning milk, in firewood, Svetasvatara Upanishad, Appar, Tevaram
யார் யார், எந்த எந்த, நரகத்துக்குப் போவார்கள் என்று மனு நீதி நூல், புறநானூறு, திருப்புகழ், பகவத் கீதை முதலிய நூல்கள் செப்பியதை முன்னர் கண்டோம் . தமிழ் நூல்கள் நரகம், நிரயம் , அளறு முதலிய சொற்களைப் பயன்படுத்தி நரகத்தை நம் மனக்கண் முன் வைக்கின்றன
இதோ கம்பன் தரும் பட்டியல் :-
உய்ய,’நிற்கு அபயம்’என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்
நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன் என்று வந்த ஒருவனுடைய உயிரினைத் தன்னுயிராகக் கருதிப் பேணிக் காப்பாற்றாத கீழ்மகனும், நன்றி மறந்தவனும், சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும் உண்மை நெறியைப் பொய் என்று கூறுபவனும்; மீண்டு வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவர்.
xxx
விவேக சிந்தாமணி எழுதிய ,பெயர் தெரியாத ஆசிரியர், வேறு ஒரு பட்டியலை நம் முன் சமப்பிக்கிறார்
தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன்,
அந்தமறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,
சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர்,
செந்தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர்.
பொருள்
தந்தை சொல் மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து பின்பற்றாது இருப்பவன், அழிவில்லாத மெய்ஞான குருவின் உபதேசத்தை மறந்தவன், வேதநெறிப்படியான வாழ்க்கையிலிருந்து விலகியவன் ஆகிய நால்வரும் நரகத்தின் வாயிலில் சென்று சேர்வது உண்மை (நிச்சயம்).
xxxx
திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -6 (written on 23 January 2013)
நரகத்துக்கு போவோர் பட்டியல்
யார் யார் நரகத்துக்குப் போவார்கள் என்ற பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்:
ஓதுவித்தவர் கூலிகொடாதவர்
மாதவர்க்கு அதிபாதகமானவர்
ஊசலில் கனலாய் எரி காளையர் மறையோர்கள்
ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்
ஆர்தனக்கும் உதாசினதாரிகள்
ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு
ஏதும் இத்தனை தானம் இடாதவர்
பூதலத்தினில் ஓரமதானவர்
ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்
ஏகசித்த தியானமிலாதவர்
மோகமுற்றிடு போகிதம் ஊறினர்
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே
பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் கும்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.
இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டுவோர் கௌமாரம்.காம் –இல் திரு கோபாலசுந்தரம் அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்பைப் படிக்கவும்.
அறப்பளீசுர சதகப் பாடல் 43-ல் மனு நீதிப்படி ஆட்சி செய்யும் மன்னர் ஒளியும் அறிஞர்களின் பேரொளியும் சூரியன் ஒளியும் எட்டு திக்கிலும் பரவும் என்கிறார் அம்பலவாணர். ஒவ்வொரு படியாக ஒளியின் அளவையும் ஒப்பிடுகிறார். மாணிக்கம் ஒளிமிக்கது. அதைவிட ஒளியுடையது மின்மினி உமிழும் புழுக்கள். அதை விட ஒளிமிக்கது விளக்கு; அதைவிட ஒளியுடையது வர்த்தி. ஞாயிற்றினுக்கும்,மனுநீதி மன்னர்க்கும் ,வீரமுடைய அறிஞருக்கும், மேலே சொன்ன எல்லாவற்றையும் விட ஒளி இருக்கும்; அது எட்டு திக்கிலும் பிரகாசிக்கும் என்கிறார் அம்பலவாணர் .
xxxx
இதோ கம்பனை ஒப்பிட்டுப் பார்ப்போம்
ஆரண்ய காண்ட, அகத்தியப் படலத்தில் கம்பன் மனு நீதி பற்றிக் கூறுகிறான்:–
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும்
தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார்
ஆழி உழவன் புதல்வ ஐயம் இல்லை மெய்யே
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான்.
பொருள்:–
“தசரத சக்ரவர்த்தியின் திருமகனே! நீ இங்கே தங்கினால் வேதங்கள் வாழும்; மனு நீதி வாழும்; அறம் வாழும்; இன்று வரை அரக்கரால் தாழ்வடைந்த தேவர்கள் (இமையோர்) உயர்வர்; அரக்கர்கள் (தானவர்கள்) தாழ்வு அடைவார்கள். இதில் சந்தேகமே இல்லை; அதனால் நீ இங்கேயே தங்கு” என்று இராமபிரானிடம் அகத்தியன் பகர்ந்தான்.
Xxxx
கிஷ்கிந்தா காண்டத்தில் நிறைய இடங்களில் மனு நீதியைப் பாராட்டும் பாடல்கள் வருகின்றன; சில பாடல்களை மட்டும் காண்போம்:–
இராமனை வாலி குறைகூறும் பாடல் இதோ:-
அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறுஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாய் அப்பா
பரக்கழி இது நீ பூண்டால் புகழையார் பரிக்கற்பாலார்
பொருள்:-
ஐயா! அரக்கர் செய்த தீமைக்காக குரங்குகளின் மன்னனைக் கொல்லுமாறு மனுநீதி கூறிற்றோ? நினக்கே உரித்தான அருளை எங்கு விட்டாய்? என்னிடத்தே என்ன பிழையைக் கண்டாய் பெரும்பழியை உன்னைப் போன்றவர் ஏற்றால் புகழை ஏற்க வல்லவர் வேறு எவர் உளர்?
இதற்கு இராமன் அளித்த பதில்:–
தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள
மக்களும் விலங்கேமனுவின் நெறி
புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே
(எது சரி, எது சரியில்லை என்று தெரியாத மக்கள் விலங்குகளே; மனு நீதிப்படி நடக்கும் விலங்கும்கூட தேவர்களுக்குச் சமம்)
இன்னொரு பாடலில் இராமனைப் புகழும் கம்பன்,
மனுநீதியான் என்ற அடைமொழியைச் சூட்டுகிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் “மனு நூலில் சொன்னபடி அறநெறி தவறாது நடப்பவனான இராமன்” என்று வியாக்கியானம் செய்கின்றனர்.
இதை வலியுறுத்தும் ஒரு பாடலும் கிஷ்கிந்தா காண்டத்தில் உண்டு:
நஞ்ச மன்னவரை நலிந்தாலது
வஞ்சமன்று மனு வழக்காதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்
பொருள்:-விஷம் போன்ற கொடியவரைத் தண்டித்தால் அது கொடுமை இல்லை ஏனெனில் அது மனு நீதியில் சொல்லப்பட்டதாகும் ஆகையால இதனை 5 வயதிலும் 50 வயதிலும் அறியாத சுக்ரீவனிடம் எடுத்துச்சொல்வாயாக என்று இராமன் கோபத்துடன் கூறியது கிட்கிந்தைப் படலத்தில் வருகிறது.
இங்கே இன்னும் ஒரு அழகையும் கண்டு ரசிக்கலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற தமிழ்ப் பழமொழியையும் கம்பன் நமக்கு நினைவு படுத்துகிறான் யோகாசனம் பயிலுவோர் ஐந்து வயது முதல் பழக வேண்டும். ஐம்பது வயதில் உடம்பு வணங்காது ; பல்லக்கு மூங்கில் வேண்டுவோர் மூங்கிலை இளமை நிலையிலேயே வளைத்து வைப்பர் ; பல ஆண்டுகளுக்குப்பின்னர் பல்லக்கு செய்ய அதைப் பயன்படுத்துவார்கள்.
Xxx
மனு நீதி நூலில் பிற்காலத்தில் சூத்திரர்களுக்கு எதிராக நுழைக்கப்பட்ட 40, 50 பாடல்களை நீக்கிவிட்டால் கம்பனும் கல்வெட்டுகளும் மனு நீதியைப் புகழ்ந்தது ஏன் என்பது விளங்கும்
Xxx
அறப்பளீசுர சதகம் 45ஆவது பாடலில் எதை, யார் செய்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார்:
நல்ல செயலானாலும் கெட்ட செயலானாலும் பெரியோர் செய்தால் சிறப்பு.;
பெரிய அரசியல் தலைவர்கள் தெருக்கூட்டினால் பத்திரிக்கையாளர் புகைப்படம், வீடியோ படம் எடுப்பர்
காம சம்பந்தமான செயல்களை பருவ மங்கையர் செய்தால் பிரபல மடையும் ; இதை சினிமாக்காரிகள் வாழ்வில் பார்க்கிறோம். அவர்கள் விளம்பரத்துக்குப் போஸ் கொடுத்தால் அதற்கும் கோடி ரூபாய் கிடைக்கும்
வாரி வாரி வழங்கிய வள்ளல்களுக்கு உயர்விலும் தாழ்விலும் புகழ் மங்காது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி கதையில் இதைக் கேட்கிறோம்
போர் வீரர்களுக்கு விழுப்புண்கள் அதிகமானால் மேலும் அழகுதான். புறநானூற்று வீரத்தாய் கதையில் இதை அறிகிறோம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 8
(65 முதல் 74 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
65) காஞ்சீபுரம்
அவமே யான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோ க்ஷத்தையென்று அருள்வாயே
பாடல் எண் 352 – ‘அறிவிலாப் பித்தர்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் வருகின்ற அபவாதத்தை அகற்றி, அன்பு கூர்ந்து நான் தெளிவு பெறுவதர்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்?
66) திருவானைக்கா
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே
பாடல் எண் 362 – ‘குருதி புலால் என்பு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டு கொள்வதற்கும் நீ அருள்வாயாக.
67) திருவருணை
அலமரும் வினைவாழ்வும்
சலில லிபியன சனனமு மலமல
மினியு னடியரொ டொருவழி படஇரு
தமரபரிபுர சரணமு மவுனமு மருள்வாயே
பாடல் எண் 368 – ‘அருவை மிடையென‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வேதனையும் அஞ்சுதலும் உண்டாக்கும் வினைக்கு ஈடான வாழ்வும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும், போதும். இனியேனும் உன் அடியாரோடு நானும் ஒருவழிப்பட்டு (உன்னுடைய) இரண்சு ஒலி செய்யும் சிலம்புகள் அணிந்த திருவடியையும், மௌன உபதேசத்தையும் அருள்வாயாக.
68) திருவருணை
குலவினை களையுங்
கழல்தொழு மியல்தந் தருள்வாயே
பாடல் எண் 389 – ‘விரகொடு வளை‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும் திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக.
69) திருவருணை
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
கிருபா தமெனக் கருள்வாயே
பாடல் எண் 393 – ‘அருமா மதனை‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நெருப்பு கொளுத்தும் (கும்பிபாக) நரகத்தில் புகாத வண்ணம் உனது இரு திருவடிகளைத் தந்து அருள்வாயாக.
எரிவாய் நரகம் என்பது கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து ஆ ஏழு நரகங்களில் ஒன்று. இது கும்பிபாகம் என அழைக்கப்படும். பாவம் செய்தோரைக் குயச் சூளையில் சுடுவது போல வாட்டும் நரகம் இது.
70) திருவருணை
பறிமாதர்
தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
சோதியொளிப் பாதமளித் தருள்வாயே
பாடல் எண் 395 – ‘ஆனை வரிக்கோடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழு நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய் அஎன்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிவாயாக.
71) திருவருணை
சமராகிய மாரனெ டுக்குங் கணையாலே
தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே
பாடல் எண் 397 – ‘இமராஜன் நிலாவது‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காமப்போருக்கு என்றே மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலே, உன்னைப் பிரிந்து தனியே தவிக்கும் மான் போன்ற இப்பெண் உயிர் சோர்ந்து போகாமல் இருக்க ஏதேனும் ஒரு வழி கூறி அருள்வாயாக.
இந்தப் பாடல் அகத்துறையில் நாயக-நாயகி பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காகப் பாடியது. இப்பாடலில் வரும் சந்திரன், தென்றல் காற்று, மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு ஆகியவை தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டுவன.
72) திருவருணை
அடியேன் முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கொ டருள்வாயே
பாடல் எண் 401 – ‘இருவினை அஞ்ச‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரிவாயாக.
73) திருவருணை
ஊடாடி யவரோடு முழலாதே
ஊராகத் திகழ்பாத மருள்வாயே
பாடல் எண் 418 – ‘கோடான மடவார்கள்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (விலைமாதர்களுடன்) ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமல், (எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன் திருவடியைத் தந்தருள்வாயாக.
74) திருவருணை
இறையோ னிடமாய் விளையா டுகவே
யியல்வே லுடன்மா அருள்வாயே
பாடல் எண் 421 – ‘சிவ மாதுடனே‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக.
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.