பிரபல இலக்கிய  சம்வாதங்கள்-1 கவி தார்த்திக சிங்கமும்…….!- Part 2 (Post.11,502)


WRITTEN BY B. KANNAN, Delhi

Post No. 11,502

Date uploaded in London – 3 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Part Two

மேலும் தொடர்கிறார் 

बाह्यैर्वर्णाडम्बरैर्मा भ्रमन्तु
च्छित्वा गर्भाभ्यन्तरं शोधयन्तु ।
निर्णेतारो नीरसत्वेन को  
डिण्डीराणां डिण्डिमानां च भेदः ।४।

பாஹ்யை வர்ணாடம்ப ரைர்மா ப்ரமந்து

ச்சித்வா கர்பாப்யந்தரம் ஷோதயந்து |

நிர்ணேதாரோ நீரசத்வேன கோ வா

டிண்டிராணாம்  டிண்டிமாநாம் ச பேத: || (4)

(பாஹ்யைவெளிப்பாடுஅந்நியம்வர்ணாடம்ப=தரம் பொருந்தியரைர்மா=பண்புஇயல்புப்ரமந்து=மயங்கிச்சித்வா=பரிசீலனைஷோதயந்து=விளக்கம்நிர்ணே தாரோதீர்மானித்தல்நீரசத்வேன=குறைகளின்றி, டிண்டிராணாம்=நீர்க்குமிழிடிண்டிமாநாம்மத்தளம் பேத:= (இரண்டுக்குமுள்ள) வித்தியாசம்

(ஓரு பொருளின் புறத் தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடுதல் போற்றுதற்குரிய விஷயமல்லவே) ஒரு கிரந்தத்தை ஆராயும் விமர்சகர்கள் அது எடுத்துக் காட்டும் வெளிப்படையான இயல்பு, பண்புகளால் மட்டும் ஈர்க்கப்படாமல் அதில் அடங்கியி ருக்கும் சாராம்சம் எந்தக் குறைபாடு இன்றிச் சொல்லப் பட்டிருக்கிறதா என்பதையே தேட வேண்டும்- தொட்டால் உடையும் நீர்க்குமிழியா, தொடுவதால் நாதமெழுப்பும் மத்தளமா என அப்போதுதானே தெரியும்?

இப்படியாகத்தானே அவர்களிடையே கடுமையானச் சொற்போர் விவாதம் நடந்தது. சிங்கத்தின் முன் குள்ளநரி எதிர்த்துப் போராட முடியுமா? சுவாமிதேசிகரே முடிவில் வெற்றிவாகைச் சூட, தவறை உணர்ந்த டிண்டிமா கவி அவரிடம் சரணடைந்து, சுவா மியைப் போற்றிப் புகழ்ந்தார், இதோ இப்படித்தான்……

घोटीधाटीकठोरस्फुटविकटकथाटोपवाचाटकोटी- 

कोटीराघाटपेटीपुटघटितमणीसङ्घसङ्घट्टिताङ्घ्रिः ।   
खर्वीकुर्वन् सगर्वं जयति कविततेस्सर्वतन्त्रस्वतन्त्रो        
वेदान्ताचार्यवर्यो विघटितजडधीसङ्कटो वेङ्कटेशः ।५।

கோடீதாடீ கடோரஸ்ஃபுடவிகடகதாடோப வாசாடகோடீ

கோடீராகாடபேடீ புடகடிதமணீ சங்கசங்கடிட தாங்க்ரி:|  

கர்வீகுர்வந் சகர்வம் ஜயதி கவிததேஸ சர்வதந்த்ர ஸ்வதந்த்ரோ

வேதாந்தசார்யவர்யோ விகடித ஜடதீ சங்கடோ வேங்கடேச: ||

இப்பாடலில் புலவர் செய்யும் வார்த்தைஜாலம் நம்மை வியக்க வைக்கிறது! அவர் பயன்படுத்தியுள்ள மோனை அலங்கார அணி(ALLITERATION) செய்யுளைத் திரும்பத் திரும்பப் படிக்க வைக்கிறது என்பது என்னவோ, உண்மையே!

(கோடீதாடீ=குதிரைப் பந்தய சூதாட்டம், கடோர்=மும்முறம், ஸ்ஃபுட=தீவிரத்தைக் குறைக்க, விகடகதாடோப= சமாளிக்க முடியாத வாதாடுபவர், வாசாட=பேச்சுப் போட்டி,

கோடீ=மகுடம்,ராகாடபேடீ=பொருள் வைக்கும் பெட்டி, புடகடிதமணீ= பளபளக்கும்மணி, சங்கசங்கடிட=பிறருடன் மோதுதல், கர்வீகுர்வந்=காயப்படுத்தும் செயலை அகற்றுதல், சகர்வம்=மிகப்படுத்திய தற்பெருமை, கவிததேஸ=எல்லாம் அறிந்த, விகடித=பயமுறுத்தும், ஜடதீ =மந்தம்,முட்டாள்தனம்)

ஶ்ரீவேங்கடேச தவச்சீலரே! தாங்கள் பங்கேற்ற தர்க்க விவாத நிகழ்ச்சிகள் யாவும் குதிரைப் பந்தயத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பணயம் வைத்து விளையாடுவது போல் நீண்டுப் போய்க் கொண்டிருக்கும், அல்லவா! மும்முறமாய் கடுமையாக வாதம் செய்வோர் பலர் அதிமேதாவிகள், சமாளிக்க முடியாத அளவுக்கு விதண்டா  வாதமிடுபவர்கள், சிலர் மந்தபுத்தியுடையோர், இவர்கள் அனைவரும்  தற்பெருமை எனும் மின்னும் மகுடத்தைத் தங்கள் ”தலைப் பெட்டி” மேல் சூடியிருப்பதாகப் பீற்றிக் கொள்வர். இவர்களை வாதத்தில் வென்று, அவர்கள் அணிந்திருக்கும் செருக்குஎன்ற மகுடத்தை வீழ்த்தி, ஆணவம், ஆடம்பரம் மற்றும் வீண் கர்வத்தை அடக்கியுள்ளீர்! தாங்கள் கவிஞர்களுள் தலை சிறந்தவர். இதை அறிந்துகொள்ளாத இச்சிறியோனை மன்னித்து அருள்வீராக!” — எனக் கூறித் தன் கன்னங்களில் “பளார்பளார்” என்று அறைந்து கொண்டு சுவாமி தேசிகரைத் தண்டனிட்டார். பின்பு கீழ்கண்டவாறு போற்றித் துதித்தார்…..

द्विचतुष्पदपरिवर्तन-
गर्वितकविशरभगण्डभेरुण्डः ।
खण्डनखण्डनकविरिह
डिण्डिमकविगण्डडिण्डिमो जयति ।६।

த்வி சதுஷ்பத பரிவர்தன

கர்வித கவிஷரப கண்டபேருண்ட: |

கண்டந கண்டந கவிரிஹ

டிண்டிமகவி கண்ட டிண்டிமோ ஜயதி ||

(த்வி சதுஷ்பத=2 அல்லதுசொற்களை மட்டும்பரிவர்தனகையாண்டுகர்வித கவிஷரபகர்வமிக்க கவிகுஞ்சரம்,

கண்டபேருண்ட:=கண்டபேருண்ட விலங்கு*

கண்டந கண்டந=கன்னத்தில் போட்டுக் கொண்டுகண்ட டிண்டிமோமத்தளம் தட்டுவது )

ஸ்வாமி! டிண்டிமா என்கிற இந்தப் புலவன் தன் அடாதசெயலுக்கு வருந்தி, மத்தளத் தைத் தட்டுவது போல் கன்னத்தில் அறைந்துகொண்டு தங்களிடம் மன்னிப்பு கோரு கிறான். நீங்கள் அதிசயக் கண்டபேருண்டா விலங்குப் பறவை(!) போன்றவர். தங்க ளுக்குத் தெரிந்த இரண்டு (அ) நான்குச் சொற்களை வைத்துக் கொண்டு கவிதையில் வார்த்தை ஜாலம் காட்டித் தங்களைப் பலமிக்கக் குட்டிச் சிங்கம், யானைக்குட்டி என இறுமாப்புடன் சுற்றி வரும் போலி கவிஞர்களின் மமதையை  அடக்கி ஆளுபவர், நீங்கள்! உங்களுக்கு முன் நான் எம்மாத்திரம்?” எனக் கூறி சரணடைகிறான்.

*கண்டபேருண்ட=பயங்கர முகத்தையுடைய மகத்தான மந்திர தந்திரப் பலம் வாய்ந்த இரட்டைத் தலைக் கழுகு. மகேசன் கோபாவேச நரசிம்மரைச் சாந்தப்படுத்த எடுத்த ஷரபேஸ்வரர் வடிவம். தனது கூரிய வளைந்த நகத்தாலும்,அலகாலும் யானையைத் தூக்கிப் பிடித்திருக்கும். சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத் தைப் போல் நீண்ட மயிலிறகு போன்ற முடி கொண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப்பற்களும், யாளியைப் போன்ற உரு வமும் உடையவராகச் சித்தரிக்கப்படுகிறார்.

ஹோய்சால சாம்ராஜ்ஜியத்தின் அரசு சின்னமாக இருந்துள்ளது.

டிண்டிமா சர்வபௌமா அத்துடன் நிற்காமல் தேசிகர் மீது ஒருமங்கல ஸ்லோகத்தை யும் உடனுக்குடன் இயற்றி வணங்கினார். மிகவும் எளிமையான, விரைவில் புரிந்து கொள்ளக் கூடியச் சொற்களையே இங்குப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.  தினமும் ஶ்ரீவேதாந்த தேசிகர் சஹஸ்ர நாமாவளியைச் சொல்லுகையில் இந்த ஸ்லோகத்தைக் கூறி முடிப்பது ஒவ்வொரு வைணவரின் கடமையில்ஒன்றாக விளங்குகிறது. 

वेदेसन्जत खेदे मुनि  जन वचने प्राप्त नित्यावमाने
संकीर्णे  सर्व वर्णे सति तदनुगुन्णे निश्प्रमणे  पुराणे |
मायावादे समोदे कलि कलुस वसत सुन्य वादे विवादे
धर्म त्राणाय यो भूत स जयति भगवान विष्णु घंटावतार !”||

வேதே சந்ஜத கேதே முனி ஜன வசனே ப்ராப்த நித்யாவமானே

சங்கீர்ணே சர்வவர்ணே சதி தத அநுகுன்ணே நிஷ்ப்ரமணே  புராணே |

மாயாவாதே சமோதே கலி கலுச வசத சுன்ய வாதே விவாதே

தர்ம த்ராணாய யோ பூதஸ ஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார! ||

கேதே=தளர்வு,நலிவுஅநுகுன்ணேபரிவர்த்தனைநிஷ்ப்ரமணே=குழப்ப நிலை,

கலுச=திறமையற்றத்ராணாய =ரட்சிக்ககாப்பாற்ற

(எங்கு பார்த்தாலும் கொந்தளிப்பு, கொடுமை,திறமையற்றப் போக்கு என கலிகாலத்து இலட்சணங்கள் தெரிகின்றன.தவறான முறையில் வேதநெறிகள் விளக்கப்படுவதால் அவை தளர்வடைந்து அவதிக்கு உள்ளாகின்றன;அறிஞர்களின் அறிவுரைகள் புறக்க ணிக்கப் படுகின்றன; அனைத்து வகுப்புகளிலும் புனிதமற்றக் கலாச்சார பரிவர்த்த னைக் காணப்படுகிறது; இந்தக் குழப்பமானப் பின்னணியில் நமது  புராண-இதிகாசங் கள் அதன் மகத்துவத்தைச் சிறிது  சிறிதாக இழக்க ஆரம்பிக்கின்றன; வஞ்சகமும், சூழ்ச்சியும் தலைவிரித்து ஆடுகின்றன; ஆன்மிகம், ஒழுக்கநெறிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன; நாத்திகவாதம் தலைத்தூக்குவதைக் காணமுடிகிறது; இந்த இக்கட்டா னத் தருணத்தில் தான் ஶ்ரீவேதாந்த தேசிகர், தர்மத்தை நிலைநாட்டவும், தர்மசிந்த னையை ரட்சிப்பதற்காகவும் ஶ்ரீமந்நாராயணனின் ஓங்கி நாதமெழுப்பும் கண்டாமணி யின் மறுபதிப்பாய் இப்பூவுலகில் அவதரித்தார்; அதில் அவர் அடையும் வெற்றியின் பிரகாசத்தில்  பிரமாதமாய் ஒளிர்கிறார். அப்படிப்பட்ட அவருக்கு நமது அநேக நமஸ் காரங்கள் உரித்தாகட்டும்! )  

டிண்டிமாகவியின் ராகவாப்யுதயம் காவியத்தை விடச்சிறந்த  யாதவாப்யுதயம் காப் பியத்தை நமக்கு அருளிய ஆச்சாரியன் வேதாந்ததேசிகரை வணங்கித் துதிப்போம்.

அடுத்து மற்றொரு விவாத நிகழ்வைக் காண்போம்.

        —————————————————————————————————–

 tags- டிண்டிமாகவி, ராகவாப்யுதயம் , யாதவாப்யுதயம், வேதாந்ததேசிக

கோயில் இல்லாத ஊர், அறிஞர் இல்லாத சபை பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,501)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,501

Date uploaded in London – 3 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART TEN OF ARAPPALEECHURA SATAKAM WITH LONDON SWAMINATHAN’S COMMENTARY

ஒன்று இல்லாமற் பயன்படாதவை

10.கோவில் இல் லாதவூர், நாசியில் லாமுகம்,

     கொழுநன் இல் லாத மடவார்,

  குணமதில் லாவித்தை, மணமதில் லாதமலர்,

     குஞ்சரம் இலாத சேனை,

காவல்இல் லாதபயிர், பாலர்இல் லாதமனை,

     கதிர்மதி யிலாத வானம்,

  கவிஞர்இல் லாதசபை, சுதிலயை இலாதபண்,

     காவலர் இலாத தேசம்,

ஈவதில் லாததனம் நியமம்இல் லாதசெபம்,

     இசை லவணம் இல்லா தவூண்,

  இச்சையில் லாதபெண் போகநலம், இவை தம்மின்

     ஏதுபலன் உண்டு? கண்டாய்!

ஆவியனை யாட்கிடம் தந்தவா! கற்பதரு

     ஆகும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

      (இ-ள்.) ஆவி அனையாட்கு இடம் தந்தவர் – உயிரனைய

உமையம்மைக்கு மெய்யில் இடப்பங்கை அருளியவனே!, கற்ப தரு ஆகும்

– கற்ப தரு என உலகிற்குப் பயன்படுகிற எமது ……. தேவனே!. கோவில்

இல்லாதவூர் – திருக்கோயில் இல்லாத ஊரும், நாசி இல்லா முகம் – மூக்கு இல்லாத முகமும், கொழுநன் இல்லாத மடவார் – கணவன் இல்லாத பெண்களும், குணமது இல்லா வித்தை – நற்பண்பையூட்டாத கல்வியும்,

மணமது இல்லாத மலர் – நறுமணம் இல்லாத பூவும், குஞ்சரம் இல்லாத

சேனை – யானை இல்லாத படையும், காவல் இல்லாத பயிர் –

வேலியில்லாத பயிரும், பாலர் இல்லாத மனை – மழலைச் சிறுவர் இல்லாத இல்லமும், கதிர்மதி இல்லாத வானம் – ஞாயிறுந் திங்களும் உலவாத வானமும்கவிஞர் இல்லாத சபை –புலவர்கள் இல்லாத அவையும், சுதி லயை இலாத பண் – இசையுந் தாள

அளவும் இல்லாத சங்கீதமும், காவலர் இலாத தேசம் – அரசன் இல்லாத  நாடும்ஈவது இல்லாத தனம் – கொடையில்லாத பொருளும், நியமம் இல்லாத செபம் – ஒழுங்கு இல்லாத வழிபாடும், இசை லவணம் இல்லாத

வூண் – ஏற்ற அளவு உப்பில்லாத உண்டியும், இச்சை யில்லாத பெண்

போகம் – விருப்பமற்ற மங்கையின் இன்பமும், இவை தம்மின் – ஆகிய இவற்றால், ஏது பலன் உண்டு – என்ன நன்மை யுண்டு? கண்டாய்

     (க-து.) கோயில் இல்லாத வூர் முதலானவை பயனற்றவை.

xxxx

கோவில்கள்

தமிழர்களைப் போல கோவில்களைப் போற்றியோர் வேறு எவருமிலர் .

ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோபுர தரிசனம் கோடி புண்ணியம்கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற ஆன்றோர் மொழிகளைத் தமிழ் சிறுவர்களும் அறிவார்கள். அதை எல்லாம் வீட தமிழ் நாட்டில்தான் 40, 000 கோவில்கள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை வானளாவிய கோபுரங்களை உடையன . பன்னிரு திருமுறைகளும் திவ்வியப் பிரபந்தமும்  கோவில்களால்  எழுந்த பாடல்களே . இன்று கோவில்கள் மூலம் பிழைப்போர் தொகையும் கோடி கோடியாகும் .

அச்சன்கோவில், நாகர்கோவில், வைத்தீஸ்வரன்கோயில், திருமலைக் கோயில்  என்று கோவில் பெயர்களிலேயே ஊர்கள் இருப்பதும் தென்னாட்டில்தான் .

xxxx

கணவன் இல்லாத பெண்கள்

இந்த வகைப் பெண்கள் முதலில் மேலை நாட்டில் மட்டுமே அதிகமாக இருந்தனர் . ஏனெனில் அ ங்கு விவாக ரத்து செய்து / divorce வாழும் பெண்களுக்கு அரசாங்கம் பணத்தை வாரி வழங்குகிறது. மேலும் பணக்காரர்களைக் கல்யாணம் கட்டி ,எட்டி உதைந்தால், ஜீவனாம்சம் alimony என்ற பெயரில், வேலை செய்யாமலே காசு பெற முடிகிறது . பல ஆண்கள் அவர்களைச் சுற்றி வட்டமிட்டு ஏமாறுவதில், அவர்கள் பல காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். இவ்வளவு இருந்தாலும் அவர்களுக்குப் பின்னால், முதுகுக்குப் பின்புறத்தில், ஆண்களும் பெண்களும் பேசும் ஏச்சுப் பேச்சுக்களால் அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் முகம் காட்ட முடிவதில்லை.

Xxxxx

நற்பண்பையூட்டாத கல்வி

அந்தக் காலத்தில் ஒருவரை மெத்தப் படித்தவர் என்று அறிமுகப் படுத்தினால் அவர்கள் அந்தக் கல்விக்கு ஏற்ற ஒழுக்கம் உடையவர் என்று அர்த்தம் . இதனால்தான் வள்ளுவனும்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. — குறள் 391  என்றான் .

மேலும் இப்போதெல்லாம் அறநெறிக் கல்வி moral education மிகவும் குறைந்துவிட்டது . கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகள் வன்முறை மற்றும், ஆபாச வீ டியோக்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆசிரியர்களின் ஒழுக்கமோ பத்திரிகைகளில் வரும் கைது செய்திகளில் news about arrests of teachers பிரதிபலிக்கிறது . இதையெல்லாம் எண்ணித்தானோ   குணமதில் லாவித்தை என்று அம்பலவாணர் இந்த சதகத்தில் கூறினார் போலும் !

Xxx

சந்திரன் இல்லா வானம், தாமரை இல்லாப் பொய்கை,

மந்திரி இல்லா வேந்தன், மதகரி இல்லாச் சேனை,

சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபைசுதர்இல் வாழ்வு,

தந்திகள் இல்லா வீணைதனம் இலா மங்கை போல் ஆம்.

என்று விவேகசிந்தாமணியில் ஒரு அருமையான பாடல் உள்ளது. இந்த சதகத்தில் உள்ள. குழந்தைகள் இல்லாத வீடு, இன்பம் தராத மங்கை. முறையற்ற இசை, நிலவு இல்லாத வானம் ஆகியன இதிலும் உளது.

மதகரி இல்லாச் சேனை — மதம் பொருந்திய யானைகள் இல்லாத சேனையும்,     சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபை — சிறந்த புலவர்கள் இல்லாத பழமையான சபையும்,     சுதர் இல் வாழ்வு — நல்ல மக்கள் பேறு இல்லாத வாழ்வும்,

Xxx

குறள் 66

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்

[அறத்துப்பால்இல்லறவியல்மக்கட்பேறு]

என்று சொல்லும் வள்ளுவன் பத்து குறட்பாக்களில்  புத்திரப் பெரு பற்றி விளக்கிவிட்டான். இதே கருத்தைப் புறநானூற்றிலும் (168) காணலாம்

படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்

உடைப் பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்

குறுகுறு நடந்துசிறுகை நீட்டி,

இட்டும்தொட்டும்கவ்வியும்துழந்தும்,

நெய்உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,

மயக்கு உறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.

—-புறநானூற்றுப் பாடல் 168 . பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.

Xxxx

வள்ளுவனின் செக்சி Sexy  உவமை

இன்பம் தர முடியாத மங்கைகள் பற்றி வள்ளுவனும் அறிவான் ; அவன் பயன்படுத்தும் Sexy உவமையில் அது வருகிறது

குறள் 402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று

[பொருட்பால், அரசியல், கல்லாமை]

Xxx

சூரிய சந்திரர்கள்

சூரியனும் சந்திரனும் எவ்வளவு முக்கியம் என்பதை சிலப்பதிகாரக்

கடவுள் வாழ்த்திலும் காண்கிறோம்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-

கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்

அம் கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-

காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு

மேரு வலம் திரிதலான்.

Xxxx

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே  என்ற பழமொழி உப்பின் அவசியத்தைக் காட்டும் (லவணம் = உப்பு)

xxx

நேற்று வெளியிட்ட விளக்க உரையில் பர்த்ருஹரி நீதி சதகப் பாடல்களையும் கருத்திற்கொள்க

 –subham—

tags-கோவில், இல்லாத, கல்வி, சபை , புலவர் 

S Nagaraajan Article Index : November 2022 (Post No.11,500)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,500

Date uploaded in London – 3 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SNR Article Index : November 2022

 NOVEMBER 2022 

1-11-2022 11402        அருணகிரிநாதரும் தமிழும் – 6 புத்தக அறிமுகம் 100 : 

               விண்வெளியில் மனித சாதனைகள் பாகம் 3

2-11-2022 11406        அருணகிரிநாதரும் தமிழும் – 7 புத்தக அறிமுகம் 101 : 

               அறிவியல் துளிகள் பாகம் 1

3-11-2022 11409        அருணகிரிநாதரும் தமிழும் – 8 புத்தக அறிமுகம் 102 : 

               அறிவியல் துளிகள் பாகம் 2

4-11-2022 11411        அருணகிரிநாதரும் தமிழும் – 9 புத்தக அறிமுகம் 103 : 

               அறிவியல் துளிகள் பாகம் 3

5-11-2022 11414        எஸ்.நாகராஜன் அக்டோபர் 2022 கட்டுரைகள் இண்டெக்ஸ்

              புத்தக அறிமுகம் 104 : அறிவியல் துளிகள் பாகம் 4

6-11-2022 11417       Hindu Dharma – A Way of Life புத்தக அறிமுகம் 105 : அறிவியல்

               துளிகள் பாகம் 5

7-11-2022 11420       நீடித்த ஆரோக்கிய வாழ்விற்கு ஆயுர்வேதம் தரும்

               அன்புரை – புத்தக அறிமுகம் 106 : அறிவியல் துளிகள்   

               பாகம் 6

8-11-2022 11423         அருணகிரிநாதருக்கு என்ன ‘வேணும்?’ -1 – புத்தக

                அறிமுகம் 107 – அறிவியல் வியக்கும் ஆன்மீகம்!

9-11-2022 11426        அருணகிரிநாரிநாதருக்கு என்ன ‘வேணும்?’ -2 புத்தக   

                அறிமுகம் 108 – திறன் கூட்டும் தியானம்

10-11-2022 11429  அருணகிரிநாதர் போற்றும் ‘ வேண்ட அரிய

               பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாள்’!  –

               புத்தக அறிமுகம் 109 – நவ கிரகங்கள்

11-11-2022 11434     தன்னேர் இலாத தமிழின் பெருமை!  புத்தக அறிமுகம்

               110 – ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்!

12-11-2022 11437      பாரேன், படைத்தவனின் புத்திசாலித்தனத்தை, தூ! –

                புத்தக அறிமுகம் -111 – ஆஹா! அப்படியா!! (விஞ்ஞான

                கேள்வி-பதில்கள்)

13-11-2022 11440     ஆகவராமன் என்ற பட்டத்தைப் பெற்ற சூரிய காங்கேயன்!

              -கொங்குமண்டல சதகம் பாடல் 88 -புத்தக அறிமுகம் -112

              – அறிவியல் நோக்கில் ஆன்மீக ரகசியங்கள்!

14-11-2022 11442    திருப்புகழில் ராமாயணம்! – புத்தக அறிமுகம் 113 –

               வருவார் காந்திஜி!   

15-11-2022 11444     திருப்புகழில் கணபதி! புத்தக அறிமுகம் 114 – விலங்கு

               உலகப் புதுமைகள்!

16-11-2022 11447    ஆஹா! அதிரடிச் செய்திகள்! –  புத்தக அறிமுகம் 115 –

               டயானாவின் கதை

17-11-2022 11450      சேவையே பிரார்த்தனை!  –  புத்தக அறிமுகம் 116 –  

               நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!

18-11-2022 11452    அருள்வாயே – 1  –  புத்தக அறிமுகம் 117 – ஜோதிடம்

               உண்மையா?

19-11-2022 11454     அருள்வாயே – 2 –   புத்தக அறிமுகம் 118 – பார்த்ததில்

               ரசித்தது படித்ததில் பிடித்தது – 1

20-11-2022 11457      அருள்வாயே – 3 –    புத்தக அறிமுகம் 119 திரைப்படப்

                                        பாடல்களோடு ஒரு பயணம் – 1             

21-11-2022 11459       அருள்வாயே – 4 –    புத்தக அறிமுகம் 119 திரைப்படப்

                                        பாடல்களோடு ஒரு பயணம் – 2

22-11-2022 11462      முயற்சியே வெற்றி தரும் – புத்தக அறிமுகம் 120

               அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா! 

23-11-2022 11464       கலியுக அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா  – புத்தக

               அறிமுகம் 121/1 அற்புத அவதாரம் சத்யசாயிபாபா

               (அம்ருத சாகரம் இணைப்பு)

24-11-2022 11467       ராமாயணத்தில் வரும் நதிகள் – 1 – கலியுக அவதாரம்  

                 ஶ்ரீ சத்ய சாயிபாபா  – புத்தக அறிமுகம் 121/2 அற்புத

                அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

25-11-2022 11471          ராமாயணத்தில் வரும் நதிகள் – 2  – புத்தக

                 அறிமுகம் 122 – பறக்கும் தட்டுகளும்

                    அயல்கிரகவாசிகளும்     

26-11-2022 11475            அருள்வாயே – 5 –    புத்தக அறிமுகம் 123 ஆன்மீக

                  ரகசியங்கள்!

27-11-2022 11479      வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட கோடி

                ரத்னங்களாலும் பெற முடியாது (சுபாஷிதம்) – –   

                புத்தக அறிமுகம் 124 அறிவியல் வியக்கும் மந்திர

                மஹிமை, மனோசக்தி, மறுபிறப்பு, காலம் பற்றிய

                உண்மைகள்!

28-11-2022 11481       ராமாயணத்தில் வரும் நதிகள் – 3    – புத்தக அறிமுகம்

                125 முன்னேறவும் முன்னேற்றவும் சில கதைகள்,

                சம்பவங்கள், கருத்துக்கள்!

29-11-2022 11483       ராமாயணத்தில் வரும் நதிகள் – 4    – புத்தக அறிமுகம்

                                        126 அறிவியல் துளிகள் 18ஆம் பாகம்

30-11-2022 11487        காம கீதா – ஆசை வெல்லுதற்கரியது, அதை

                வெல்லும் உபாயம் என்ன? புத்தக அறிமுகம்  127

                கடவுளைக் காட்டு!

***                            

புத்தக அறிமுகம் 130 

இத்துடன் எனது 130 புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் நிறைவடைகிறது. அன்பர்கள் இவற்றை pustaka, amazon, overdrive, scribd, google, storytel ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கலாம்.

புஸ்தகா மூலமாகப் படிக்கலாம்டிஜிடல் புத்தகமாகவும் அச்சிட்ட புத்தகமாகவும் வாங்கலாம்.

புதிய புத்தகங்கள் பற்றிய அறிமுகம் அவ்வப்பொழுது தொடரும். நன்றி.

           ச.நாகராஜன்

வாக்கிற்கு அருணகிரி!

பாகம் 1 

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. திருப்புகழ் ஓதல் ஒரு வழிகாட்டி!

2. மந்திரத் திருப்புகழ்

3. 100 திருப்புகழ் பாடல் பட்டியல்

4. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள் – 1

5. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள் – 2

6. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள் – 3

7. 1324 திருப்புகழ்பாடல்களில் 857 சந்தங்கள்! 178 தாள அமைப்புகள்! 

8. சகல கலா வல்லவன் யார்? – பார்வதியின் தீர்ப்பு!                   9. முருகனே திருஞான சம்பந்தர் – அருணகிரிநாதர் அருளுரை!         10. கலாப மயில் பெருமை!

11. அனைத்துப் பதமும் அருளும் மயில் விருத்தம்!

12. அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 1

13. அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 2

14. தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்!

15. அருணகிரிநாதரும் தமிழும் – 1

16. அருணகிரிநாதரும் தமிழும் – 2

17. அருணகிரிநாதரும் தமிழும் – 3

18. அருணகிரிநாதரும் தமிழும் – 4

19. அருணகிரிநாதரும் தமிழும் – 5

20. அருணகிரிநாதரும் தமிழும் – 6

21. அருணகிரிநாதரும் தமிழும் – 7

22. அருணகிரிநாதரும் தமிழும் – 8

23. அருணகிரிநாதரும் தமிழும் – 9

24. உடல் ஒரு மரம்? அருணகிரிநாதரின் வர்ணனை! உடலே கோயில் –

   அப்பரின் சிந்தனை!!

25. அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்

26. மதுரகவி திருப்புகழ்

*

நூலில் உள்ள என்னுரை இது:

என்னுரை

தெய்வ மொழியான தமிழின் தெய்வீக ஆற்றலைப் புலப்படுத்த அவதரித்த அருளாளர் அருணகிரிநாதர்.

 தமிழின் மூலம் எளிதாக முருகனை அடைய வழி வகுத்தவர் அவர்.

தமிழுக்குப் புதிய சந்த வகையைக் காட்ட முருகனே அருள் புரிய அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களை உலகிற்குத் தந்தார்.

வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனிவில்

தாக்கிற் றிருஞான சம்பந்தர் – நோக்கிற்கு

நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்

சொற்குறுதிக் கப்பரெனச் சொல்

என்ற பாடல் மூலம் ‘வாக்கிற்கு அருணகிரி’ எனப் புலவோர் உச்சி மேல் வைத்துக் கொண்டாடிய அருளாளர் அருணகிரிநாதர் என்பது தெளிவாகிறது.

‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்’ என்ற அவரது வாக்கு திருப்புகழை மெய்யாக இயற்றியது யார் என்பதைத் தெரிவிக்கிறது.

அனைத்து வேதம், இதிஹாஸம், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் சாரமாகத் திகழ்வது திருப்புகழ்.

தமிழின் பெருமையை அருணகிரிநாதர் ஆங்காங்கே சொல்லிக் கொண்டே போவது தமிழர்கள் செய்த பெரும் பாக்கியமே.

‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்/ என்று தமிழ் முருகனின் ரகசியத்தை அவர் உரைக்கக் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.

திருப்புகழ் அமிர்தத்தின் பெருமையை திருமுருக கிருபானந்த வாரியார், தணிகைமணி திரு வ. சு. செங்கல்வராய பிள்ளை, கௌமாரம் ஶ்ரீ கோபாலசுந்தரம்உள்ளிட்டோர் மிக அழகுற விளக்கி வந்துள்ளனர்.

இந்த நூல் நான் அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

திருப்புகழின் பெருமையை உரைக்கும் இன்னும் பல கட்டுரைகள் அடுத்த பாகமாக மலரும்.

இதை அவ்வப்பொழுது www.tamilandvedas.com இல் வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

கட்டுரைகளைப் படித்து அவ்வப்பொழுது பாராட்டி ஊக்கமூட்டிய அனைத்து மெய்யன்பர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இதை நூல் வடிவில் அழகுற வெளியிட முன் வந்த pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

திருப்புகழை தினமும் ஓதுவோம். முருகனின் திருவருளைப் பெறுவோம்.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                ச.நாகராஜன்

24-10-2022

தீபாவளித் திருநாள்

 நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

TWO BOOKS A DAY KEEP YOURSELF BUSY ALL DAY (Post No.11,499)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,499

Date uploaded in London – 2 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxxx 

BOOK 22

Om in Rome; Manu Smriti in London Church

Contents

1.Parthenon of Athens and its Hindu Links!

2.Story of Athena and Ganga Devi!

3.My Trip to Santorini Islands in Greece

4.Indian History Wonder in Greece

5.Hindu Rituals in Greece

6.Mysterious Buddha in Sweden!

7.Ideas from New York

8.I saw the Blue Danube River in Vienna

9.What is Vienna Famous for ?

10.House of Music (Haus der Musik)

11.My Visit to Royal Palace in Madrid in Spain

12.Yoga without Religion is Dangerous!

13. Hinduism in Different Colour Capsules!

14. Om (Aum) in Rome !

15.OM symbol in Europe (2000 BCE)!

16.London is changing!

17.Buckingham Palace in Numbers

18.Tamil Activities in London

19.Big Indian Bucket on a London Road!

20.Indian Wonder- Manu Smriti in London Cathedral!

21.DIWALI IN BRITISH PARLIAMENT

22. Diwali in No.10 Downing Street

23.British M.P. visits 7 Hindu Temples on New Year Day!

24.London-Capital of the Tamil Speaking World

25.Hindu Festivals in London!

26.Goddess on the March

27.Roll on the Road and Get rid of Your Sins!

28.LONDON MAHALAKSHMI TEMPLE RATH YATRA

29.Wonderful Chariot Festival in London

30.Hare Krishna Rath Yatra, 17th July 2016

31.Ayurveda Exhibition in London

32.Colombia – Land of Anaconda, Butterflies, Coffee, Drugs and Orchids

33.Singapore is Sanskrit

34.Visit to Nantien Temple: Chinese belief in Astrology

35.Amazing Ganesh Figure in Australian Hills! 

36.Are Australian Aborigines Tamil Hindus?

37.Sixty Stories about Ayers Rock!

38.Hindu Symbolism in Paris!

***********************

BOOK 21

Interesting Titbits from Bhagavad Gita

CONTENTS

1.Interesting Words in the Bhagavad Gita

2.Are you Mr or Miss Dirghasutri ?

3.Uttishta/Arise: A Powerful Command

4.RIG VEDA IN BHAGAVAD GITA

5.Gandhiji on Hinduism (Bhagavad Gita)

6.Bhagavad Gita Simile used by Ancient Tamil Poets!

7.‘I am Alpha and Omega’ – Krishna and Christ

8.Gateway to Hell and Gateway to Heaven

9.Gita Jayanthi

10.Machines and Mirrors in Bhagavad Gita

11.Forty Five Commentaries on Bhagavad Gita

12.One Minute Bhagavad Gita

13.Krishna’s Diamond in USA ?

14.Bhagavad Gita through a Story

15.Krishna’s List of 26 Divine Qualities!

16.Atom Bomb to Zoo of the Bhagavad Gita: Part 1

17.Atom Bomb to Zoo of the Bhagavad Gita: Part 2

18.INTERESTING WORDS IN BHAGAVAD GITA – TWO DOORS

19.Bhagavad Gita – Chitraratha Mystery Solved !

20.Bhagavad Gita – Chitraratha Mystery Solved -2

21.Lord Krishna’s Generous Donations!

22.LARGEST BHAGAVAD GITA

23.Bhagavad Gita in Tabular Columns

24.Animals in the Bhagavad Gita!

25.Jesus name in Bhagavad Gita! Tamil Fish symbol in Britain!!

26.Krishna’s Restaurant in Dwaraka – Hot Satwic Food Sold!

27.G for Ganga….. Gayatri…… Gita…. Govinda…

28.Einstein’s Hindu Connection!

29.Black Hole in Manu Smrti and Bhagavad Gita

30.SIMILARITIES BETWEEN BHAGAVAD GITA AND PARSI’S ZEND AVESTA

31.Tirukkural and Bhagavad Gita compared by Rev G U Pope and VRR Dikshitar

32.Part 2 of Tirukkural and Gita compared by Rev G U Pope and VRR Dikshitar

33.Chanakya , Valluvar and Bhagavad Gita

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

tags –  twoo books a day, gita om, Rome 

Tamil Hindu Encyclopaedia 32- Vishnu’s incarnations தசாவதாரம் in Sangam Corpus (Post.11,498)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,498

Date uploaded in London – 2 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

It is very interesting to see that Tamils knew many Avaratas of Lord Vishnu even before 2000 years ago. We have very clear evidence of Tri Vikrama Avatar in the Rig Veda. We have references to Matsya and Varaha Avataras as well in the Vedas. But Tri Vikrama (Vamana became Tri Vikrama ) measuring the  Universe with His Three Steps captivated everyone and Andal of Tiruppavai, Tiru Valluvar of Tirukkural too sang about it. So do Krishna – Balarama Avatara. We find them in Sangam and later literature like Tiruk Kural.

Let us go into Sangam Literature:

Lord Vishnu is blue in colour; but he sleeps in milky ocean giving a beautiful contrast. He is on the Snake Bed which has 1000 heads with jewels. They are shining like flames; he is wearing Tulsi garland. He is having Yoga Nitra/ conscious sleep / அறிதுயில்.

Tamil Reference: Kali.105-71/72; 123-4; Perum.-lines 372/3; Pari.13-26/29

Xxx

Pari 3-68-72 repeats what Bhagavad Gita says

He is all; all is in him. He is born again and again (AVATARS); but no one make him born. He himself is born/ self born

Pari 15- 49/52 says he is born to help the living beings.

xxx

Boar Avatar- Varaha Avatara வராஹ அவதாரம்

Pari 2-16/19 describes Varaaha Avataara:

The earth was in water. Just to make the living beings appear on earth he took the earth out from the water. He did it by taking the shape of a boar. And so the era was called Varaaha Karpam. He brought the Bhuumaa Devi out on his horn so that the world would never suffer- Pari 2-32/33; 3-21/23; Pari.3-34/36

The task is similar to Meru Mountain – pari.4-22/24

Xxx

Swan Avatarஅன்னம் அவதாரம்

Once upon a time the Seven Clouds  poured down heavily and tried to destroy the world. Lord Vishnu took the shape of a giant Swan and dried them by fanning with its wings (Pari.3-25/26)

Xxx

Tri Vikrama- Vaamana Avataara

வாமன / த்ரி விக்ரம அவதாரம்

To control the arrogance of the demon king Mahaa Bali, Lord Vishnu became a short Brahmin boy and went begging to King Bali. When the short Brahmin boy asked for three feet of Land the king laughed and said ‘granted’. But Lord Vishnu became A giant figure and measured the earth and sky with two steps and when he waited for the third step, King Bali himself offered his head. He pushed him down with his foot and King Bali went to Paataala Loka (may be South America or South East Asia). He was allowed to return once a year during Onam season.

This is mentioned in

Mullai 3; Perum. 29-30 and Kali.124-1; Pari. 3-20

When he did the demons went and jumped into sea (Pari.3-54/56

All the Avatara stories are symbolic and they are talking about geological changes that happened millions of years ago. Mahabali story may be about Hindu migration to South East Asia or Mayan/Aztec South America

Xxx

Tamil references

பரிபாடல் 13 VISHU IN MILKY OCEAN

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,

மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த

கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்

துளவம் சூடிய அறிதுயிலோனும்

மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்,             30

XXXX

பரிபாடல் 3 YOU ARE IN ALL; ALL ARE IN YOU; SELF BORN

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,

உறைவும் உறைவதும் இலையே; உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;  70

முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்

பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே:

XXX

பரிபாடல் 15 YOU REMOVE THE DIFFICULTIES BY APPEARING; INCARNATING YOURSELF

புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,

வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்,       50

எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்

மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்

அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்.

கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;

XXXX

பரிபாடல் 3 SWAN INCARNATION

‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச்   25

சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்’ எனவும்,

XXX

கலித்தொகை 124 Kalitogai 124 TRIVIKRAMA AVATARA

ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்

பால் அன்ன மேனியான் அணி பெறத் தைஇய

நீல நீர் உடை போல, தகை பெற்ற வெண் திரை

வால் எக்கர்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப!

XXX

பெரும்பாணாற்றுப்படை TRI VIKRAMA AVATAR- VAMANA AVATAR

இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்

முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர் . . . .[30]

To be continued…………………………

Tags- Dasavatara, Vishnu, Avatara, Vamana, Trivikrama, Varaha, Swan, Anna, Boar, Tamil , Sangam Poems

Learn Tamil Verbs- 28 (1000 Tamil Verbs)—Post No.11,497)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,497

Date uploaded in London – 2 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இப்போதே செய்  (இப்போது+ ஏ = இப்போதே)- Ippothe Sey- Now Do- Do Now (“IT”  is not in Tamil; The AE sound makes it emphatic)—Do it Now

XXX

Sey செய் – Do, Manufacture, Produce

Tamils use this Sey செய் as a suffix with many nouns to make a compound verb. About thirty examples are given here.

போன் செய் – pon sey – make a call- make a phone call

Avan netru pon seythaan அவன் நேற்று போன் செய்தான்

xxxx

கற்பனை செய் Karpanai sey- அவள் லாட்டரிப் பரிசு கிடைத்ததாக கற்பனை செய்துகொண்டாள் Aval Lottery Parisu Kitaiththathaaka Karpanai seythukontaal- She — lottery prize— got– imagined herself.

xxx

பயணம் செய் – Payanam Sey- Travel (verb)

அவர்கள் நாளை லண்டனுக்குப் பயணம் செய்வார்கள்

Avargal Naalai Londonukkup Payanam Seyvaarkal— They –Tomorrow—To London— will travel.

xxxx

ஆட்சி செய் – aatchi sey – Rule (verb)

இப்போது இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறது- Ippothu Inthiyaavil Bharateeya janathaa Katchi  aatchi seykirathu — Now—in India—BJP — ruling

xxxxx

தயார் செய் —  Thayaar Sey — Prepare

பறிமுதல் செய் – Parimuthal sey– Confiscate

சதி செய் – sathi sey–Conspire

கைது செய் – kaithu sey —arrest

புகார் செய்  — Pukaar Sey—complain—lodge a complaint (10)

வம்பு செய் – Vambu sey—Pick up a quarrel—make/ give nuisance

ஆராய்ச்சி செய் – Aaaraaychi Sey—Do research

பதிவு செய் – Pathivu sey- register, Record

சுத்தம் செய் – Suththam sey- Clean (verb)

சவரம் செய் – Savaram sey—Shave (Verb)

கேலி செய் – Keli sey- tease, mock at

தெரிவு செய் – Therivu sey– select

சத்தியம் செய் – Saththiyam sey—promise, do promise

சட்டை செய் – Sattai sey—take notice of

ஊகம் / யூகம் (20)- Uukam or Yuukam sey- guess (verb)

சரி செய் – Sari sey-  correct, make amends, repair (verb)

முடிவு செய் – Mudivu sey- Decide

தவறு செய் – Thavaru sey- commit mistake, do wrong things

தானம் செய் – Dhaanam sey- donate, do charity

பாசாங்கு செய்- Paasaangu Sey- Pretend

தடை செய் – Thadai Sey- Ban, Prohibit

உதவி செய் – Uthavi sey- Help (verb), render assistance, assist

 முயற்சி செய் – Muyarchi sey- Attempt, make an effort, endeavour (verb)

கல்யாணம் செய் – Kalyaanam sey- Marry

 ஒழுங்கு செய்  (30) –  Ozungu sey- Arrange, place them in order

ஏற்பாடு செய்—Erpaadu sey—Make arrangements

There are number of combinations like this. But the above verbs are commonly used by the Tamils in their day to day conversation.

Conjugation

செய் – செய்ய

செய்கிறேன் – செய்யவில்லை (செய்கிறாய் , செய்கிறான் , செய்கிறாள் , செய்கிறார்கள், செய்கிறது ) Present

செய்வேன் – செய்ய மாட்டேன் (செய்வாய்,செய்வீர்கள் ; செய்வார்கள்  ,செய்யும் )- Future

செய்தேன் –செய்யவில்லை  (செய்தாய், செய்தீர்கள், செய்தான், செய்தாள் , செய்தார்கள், செய்தது)- Past

செய்கிறது – செய்யும் – செய்யாது (neuter)

Similar verbs பெய்/ Pey– rain, shower , வை – Vai (scold, rebuke, chide)

— subham—

Tags—Sey, compound verbs, do, make, Tamil verbs

பிரபல இலக்கிய  சம்வாதங்கள்-1 கவி தார்த்திக சிங்கமும், ‘டிண்டிம்’ கவியும்!- Part 1 (Post.11496)

 WRITTEN BY B. KANNAN, Delhi

Post No. 11,496

Date uploaded in London – 2 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

XXXXX 

பிரபல இலக்கிய  சம்வாதங்கள்-1

WRITTEN BY B. KANNAN, NEW DELHI

             கவி தார்த்திக சிங்கமும், ‘டிண்டிம்’ கவியும்!

            ॐ राघवा अभ्युदयो उत्कृष्ट  यादावा अभ्युदय प्रदाय नमः

     ஓம் ராகவா அப்யுதயோ உத்க்ருஷ்ட யாதாவா அப்யுதய ப்ரதாய நம:

        {திருக்குடந்தை தேசிகர், அபரதேசிகர் என்று அறியப்படும் கோபாலதேசிகர்

         இயற்றிய வேதாந்த தேசிகர் சஹஸ்ரநாமம் (706)}

தென்னிந்தியாவின் இந்து சமஸ்தான மன்னர்கள் தங்கள் அரசவையில் தமிழ்ப் புலவர்கள், கவிஞர்களை ஆதரித்து வந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். அர சாங்க அலுவல்களுக்கு அப்பாற்பட்டு ஒதுக்கப்படும் ‘கேளிக்கை’  இடைநேரத்தில் புதிய நூல் அரங்கேற்றம், புலவர்களுக்குள் சூடான வாத,பிரதிவாதம், கிளுகிளுக்க வைக்கும் தற்புகழ்ச்சி விவாதங்கள் நடந்தேறுவதுண்டு. அவற்றில் நாட்டின் பிற பிர தேசங்களைச் சேர்ந்த அறிஞர்களும் அவ்வப்போது உற்சாகமுடன் பங்கேற்பர்.நக்கீரர்- தருமி, ஒட்டக்கூத்தர்-புகழேந்தி, அருணகிரிநாதர்-வில்லிபுத்தூரர் சம்வாதங்கள்,மதுரை

மாம்பழக் கவிசிங்க நாவலர்- வடநாட்டுக் கவிஞன் விஸ்வநாத பாரதி, நைஷதசரித் திரம் இயற்றிய ஶ்ரீஹர்ஷர்- கன்னோஜ் மன்னன் ஜெயச்சந்திரன், வசிஷ்ட ஶ்ரீகணபதி சாஸ்திரி- அம்பிகாதத்தா, வேதாந்த தேசிகர்-சமண முனிகள், ஆதிசங்கரர்-மண்டன மிஸ்ரர் ஆகியோரது விவாதங்கள்  மிகவும் புகழ் பெற்றவை. இவற்றுள் சிலவற்று டன் பங்கேற்று இதுவரை அறியாத வேறு சில முக்கியமானச் சம்பவங்களைப் பற்றி யும் இப்போது பார்ப்போம்.

முதலில் பிரபல வைணவ ஆச்சாரியார் ஶ்ரீவேங்கடநாதா எனும் ஶ்ரீவேதாந்த தேசிக ரின் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்றைக் கவனிப்போம்…. 

ஶ்ரீதேசிகரின் வாழ்வில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. பல வாதப் பிரதிவாதங்களில் கலந்துகொண்டு வெற்றிவாகையும் சூடியுள்ளார். அதனா லேயே “கவி தார்க்கிக சிங்கம்” என்ற விருதையும் பெற்றுள்ளார்.  சுவாமி தேசிகர்-டிண்டிமா பட்டா (திண்டிமா என்றும் மருவி அழைக்கப்படுகிறது) கவி இடையே

அவர்களின் புத்திசாதுரியத்தை வெளிப்படுத்தும் விதமாக, அழகானக் கவிதை வாயி லாக நடந்ததாகக் கூறப்படும் அருமையான விவாதமும் இதில் ஒன்றாகும். யார் இந்த டிண்டிமா கவி?

டிண்டிமா கவி என்பது ஒருவரது பெயரைக் குறிக்கவில்லை. மாறாக ஒரு குறிப்பிட் டப் புலவர்கள் குலத்தை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது. விஜயநகர அர சர்கள் அவர்களுக்கு ஒரு சிறப்பான அந்தஸ்தத்தையும் அளித்தனர்.அவர்களின் வரு கையைத் தெரிவிக்க “டிண்டிம்” என்று முரசில் ஒலி எழுப்புவார்களாம்,அதனால்தான்

தங்கள் பெயரின் பின்னொட்டாக (SUFFIX) “டிண்டிமா கவி” என்ற பட்டப் பெயரையும் இணைத்துக் கொண்டார்கள்.

இவர்கள் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டு, தற்போதைய வட ஆற்காடு பிரதே சத்தில் விஜயநகரப் பேரரசர்களின் ஆதரவில் 14-16ம் நூற்றாண்டு வரை மிக்கப் புக ழுடன் விளங்கினார்கள். இரண்டாம் ராஜநாதா டிண்டிமா மன்னன் சாளுவ நரசிம்ம னின் போர்க்களத் தீரச் செயல்களைப் பற்றியும், ராஜநாதா டிண்டிமா(3) ராஜா அச்சு தராயர் பிரபாவங்கள் பற்றியும் காவியங்கள் இயற்றியுள்ளனர். கௌடா டிண்டிமா என்பவரும் இக்காலத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த புலவர் ஆவார். எந்த முரண்பட்டச் சச்சரவுக்குள்ளும் சிக்காமல் இவர்களுள் ஒரு டிண்டிமா பட்டா தான் தர்க்க சாஸ் திர கவிசிம்மத்துடன் வாதித்தார் என்பதாக எடுத்துக் கொள்வோம். மேலே கட்டுரைத் தலைப்பில் கொடுத்துள்ள ஶ்ரீதேசிகர் சஹஸ்ரநாமம் 706-ம் துதியே இதற்குச் சான்று! மேலும், வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் இந்த டிண்டிமா பட்டா, சுவாமி தேசிகர் காலத்துக்கு இரு நூற்றாண்டுகள் பிற்பட்டவர். மன்னன் சாளுவ நரசிம்மனு டன் தொடர்புடையவர் என்றும் அறியப்படுகிறார்.

இந்த டிண்டிமா புலவர், தான் இயற்றிய ஶ்ரீராமர் சரிதத்தை கூறும் அபிநவராமாப் யுதயம் என்ற காவியமே மிகச் சிறந்தது எனத் தற்பெருமை அடித்துக் கொண்டு, அகங்காரத்துடன் நடந்து கொண்டார். ஒருமுறை ஶ்ரீரங்கம் சென்றவர் சுவாமி தேசி கரிடம் தனது நூலைக் காட்டிப் பீற்றிக் கொண்டார். சூடான வாதப் பிரதிவாதமும் நடந்தது. நூலை முழுதும் ஆராய்ந்துவிட்டுத் தன் அபிப்பிராயத்தைச் சொல்வதாகத் தேசிகர் கூறிவிட்டார். அந்தப் புலவர் திரேதாயுத நாயகன் ஶ்ரீராமனின் மீது காவியம் இயற்றியிருந்தார் என்றால், தேசிகரோ, துவாபரயுக நாயகன் ஶ்ரீகிருஷ்ணனின் லீலை களைச் சுவைபடக் கூறும், 24சர்க்கங்கள் கொண்ட யாதவாப்யுதயம் கிரந்தத்தை ஒரே இரவில் இயற்றிக் காட்டினார். 

கிரந்தத்தின் ஆரம்பமே அவரைப் புரட்டிப் போட்டுவிட்டது என்றால் அது மிகையா காது மங்கல ஸ்லோகத்தைப் படித்து, அதில் அடங்கியுள்ளத் தத்துவப் பொருளைப் புரிந்து கொண்டதும் அவரது சப்தநாடிகளும் ஒடுங்கி விட்டன. மேலும், ஆறாவது அத்தியாயம், சித்திரக் கவிப் பாடல்கள் அடங்கிய கோவர்தனக் கிரி அருமைப் பெரு மைகளைக் கூறும் சித்திரச் சர்க்கத்தைப் படித்ததும் அவரது தலைக் கனம் சிதறுக் காயைப் போல் சுக்குநூறாகத் தெறித்து விழுந்து விட்டது. அதன் நடையழகை முற் றிலும் உணர்ச்சிபூர்வமாக ரசித்துப் படித்தவர், அதுவே ஒரு தலைசிறந்த காவியம் என்று தீர்மானித்து மேலே என்ன சொல்வது எனப்புரியாமல் வாயடைத்துப் போனார்  வீராவேசமெல்லாம் காற்றிழந்தப் பலூன் மாதிரி ஆகி, கூனிக்குறுகி, பெட்டிப்பாம்பாக மாறிவிட்டார். தேசிகரின் கிரந்தத்துக்கு முன் தனது காவியம் ஒரு பொருட்டேஅல்ல என்பதை நன்கு புரிந்து கொண்டவர், சுவாமிகளைச் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து, தன்னை மன்னித்தருளுமாறு வேண்டினார்………

அவர்களிடையே நடந்த செய்யுள் வடிவ விவாதம் இதோ.…

छित्वा सर्वाण्यरण्यान्यतिविषमलतागुल्मदुर्गाणि सद्यः
प्राप्तं मां पक्कणान्तं बत भषकततिर्भुक्कणैर्धिक्करोति ।
लज्जन्ते हन्तुमेनां मदकरटिघटाकुम्भपीठीविपाट-
क्रीडाधौरेयधारा मम खलु नखराः किं करोमि क्व यामि ।1।

சித்வா சர்வான் ஆரண்யான்யதி விஷமலதாகுல்ம துர்காணி சத்ய:

ப்ராப்தம் மாம் பக்கணாந்தம் பத பஷக: ததிர்புக்கணை அதிக்கரோதி|

லஜ்ஜந்தே ஹந்துமேனாம் மதகர(ட்)டிகடா கும்பபீடிவிபாட்

க்ரீடா தௌரேயதாரா மம களு நக்ரா: கிம் கரோமி க்வயாமி||

 (சித்வா=அபாயகரம்,

விஷமலதாகுல்ம=மரம்,முள்செடிகொடி,சத்ய:=குறுக்கிடும்,

 பத=பச்சாதாபம், பஷக:=நாய், ததிர்புக்கணை=புலையன் வீட்டைக் காவல் காக்கும்,

 மதகர(ட்)டி= மதம் பிடித்தயானை,கடா கும்ப=பானைபோன்ற மத்தகம், தௌரேய                                             

 தாரா=கொஞ்சம் காயப்படுத்தி, களு=முறையிடு, நக்ரா:=நகம் )

அவர் தேசிகரிடம் செருக்குடன் சொல்கிறார்-அடர்ந்தக் காட்டுப் பாதையில், வெகு வேகமாக  வழியில் குறுக்கிடும் மரம், முள் செடிகொடிகளை அகற்றியபடிவந்திருக்கி றேன். நடுவே, ஒரு புலையன் வீட்டைக் காவல் காக்கும் நாய் வடித்த சோற்றை வயிறு முட்டச்  சாப்பிட்ட பிறகும், அதன் மீது பச்சாதாபப்படும் என்னைப் பார்த்துக் குரைக்கிறது. மதம் பிடித்த யானைகளின் மத்தகத்தை இந்தக் கூரிய நகங்களால் அனாயாசமாகக் கிழித்துச் சாகடித்திருக்கிறேன். இப்போது அதே நகங்களால் அல்ப சுவானம் ஒன்றைச் சிறிது கேலியாகக் காயப்படுத்தித் துவம்சம் செய்ய வெட்கப்படு கிறேன். ஐயகோ, என்ன செய்வேன் யாரிடம் போய் முறையிடுவேன்!

இங்கு,அவருடன் வாதிட்ட அதிமேதாவி, இறுமாப்பு மிக்கப் புலவர்களை மதம் கொண்ட யானைக்கு ஒப்பிடுகிறார். கூரிய நகங்கள் அவரது வாதத்திறமை, இலக்கி யப் புலமைக்கு உவமையாகச் சொல்லப்படுகின்றன. தேசிகரை மிகவும் மட்டம் தட் டிப் பேசுகிறார். 

प्राज्ञानामेव राज्ञां सदसि न सहते जल्पमल्पेतरेषां
क्षुद्रेष्वाक्षेपमुद्रां न खलु गणयते डिण्डिमः सार्वभौमः ।
भाङ्कुर्वद्भेककुक्षिंभरिषु भयभरोद्भ्रान्तभोगीन्द्रसुभ्रू-
भ्रूणभ्रंशी किमम्भःफणिषु पतगराट् संभ्रमी बंभ्रमीति ।2।

பிரக்ஞானாமேவ ராஞாம் சதஸி ந சக்தே ஜல்பமல்பேதரேஷாம்
க்ஷுத்ரேஷ்வ ஆக்ஷேபமுத்ராம் ந களு கணயதே டிண்டிம:சார்வபௌம:| 
பாங்குர்வத பேக குக்ஷிம்பரிஷு பயபரோத் ப்ராந்த போகீந்த்ர சுப்ரூ
ப்ரூணப்ரம்ஷீ கிமம்ப: ஃபணிஷு பதகராட் சம்ப்ரமீ பம்ரமீதி||

(பிரக்ஞானாம்=பண்டிதர்கள், ஜல்பமல்பேதரேஷாம்=பல அர்த்தமற்றப் பேச்சுகள், க்ஷுத்ரேஷ்வ=வாதமிடும், களு=உண்மையில்/சும்மா, கணயதே=பொறுத்துக் கொள்வது, சார்வபௌம:=சாம்ராட், பா(ங்)=பளபளக்கும், பேக:= தவளை, குக்ஷிம் பரி=நேர்மை/ வயிறு நிரம்ப, பயபரோத்=அநேக பயங்கர, ப்ராந்த=தவறாக, போகீந்த்ர=பாம்பின் உடல், சுப்ரூ=சுபர்ணன், ப்ரூண=கருமுட்டை, ப்ரம்ஷீ=கொல்ல, அம்ப: ஃபணிஷு=தண்ணீர் பாம்பு, ஃபணிஷு==HOOD,பேட்டை, தொப்பி, பதகராட்= முழுங்கு, சம்ப்ரமீ=குழப்பத்தில் வட்ட மிடும், பம்ரம்=வண்டு) 

பண்டிதர்கள் நிரம்பிய ராஜசபையில் தங்களை அதிமேதாவிகள், எல்லாம் அறிந்த சூரர்கள் என்று எண்ணிக்கொண்டு, பலதரப்பட்ட அர்த்தமற்ற முட்டாள்தனமான வாதங்களை வாய்க்கு வந்தபடி உளறி வைப்பவர்களின் நடத்தையைக் கவிசாம்ராட் டிண்டிமா என்கிற இந்தப் புலவன் சும்மா பார்த்துக் கொண்டு செவிடன் போலிருக்க மாட்டான்,சிறிதும் பொறுத்துக்கொள்ளவும் மாட்டான். சாமானிய மனிதர்கள் என்மீது வைக்கும் விமரிசனங்களுக்கு  நான் ஏன் செவிசாய்க்கவேண்டும்? அழகிய பள பளக் கும் இறக்கைகளையுடைய சுபர்ணா (கருடன்) பெரிய பேட்டைகளுடைய அநேக பயங்கரப் பாம்புகள் மற்றும் அதன் கருமுட்டைகளை வயிறுமுட்டமுழுங்கியுள்ளான். அப்படிப்பட்டவன், வட்டமிடும் வண்டுபோல் குழப்பத்தில் மெய்மறந்துத் தவளையை உண்ணும் தண்ணீர்ப் பாம்பைக் கொல்வதில் நேர்மையாகப் பெருமைப் படுவானா?

என்று மேலும் இகழ்ந்து பேசுகிறான்.தன்னைப் பெரியதிருவடிக்கும், தேசிகரைத் தண் ணீர்ப் பாம்புக்கும் ஒப்பிடுவதைப் பாருங்கள்!

எவ்விதச் சலனமுமின்றி அவ்வளவையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஶ்ரீதேசிகர், பழத்தில் ஊசியேற்றுவது போல் புலவனுக்குத் தக்கப் பதிலடியும் கொடுத் தார்…. அவர் காட்டும் உவமையைப் பாருங்கள்!

स्पर्धन्तां सहजं नु कुञ्जरतया दिक्कुञ्जरैः कुञ्जरा
ग्राम्या वा वनवासिनो मदजलप्रस्विन्नगण्डस्थलाः ।
हा कालस्य विपर्ययं शृणु सखे प्राचीनपल्लीमल-
स्वादस्निग्धकपोलभित्तिरधमः कोलोऽपि संस्पर्धते ।३।

ஸ்பர்தந்தாம் சஹஜம் நு குஞ்சரதயா திக்குஞ்சரை: குஞ்சரா

கிராம்யா வா வனவாசினோ மதஜல ப்ரஸ்வின்ன கண்டஸ்தலா: |

ஹா காலஸ்ய விபர்யயம் ஸ்ருணு சகே ப்ராசீன பள்ளிமல

ஸ்வாதஸ்நிக்த கபோலபித்தி தம: கோலோ அபி சம்ஸ்பர்ததே ||

(ஸ்பர்த=போட்டி,சஹஜ்=சேர்ந்து, நு=எதுவாய் இருந்தாலும்,

குஞ்சரா=யானை/வேழம்

ப்ரஸ்வின்ன= வியர்வை, கண்டஸ்தலா=நெற்றி, விபர்யயம்=மாற்றம்/கோலம்

பள்ளிமல=கிராமத்துக் கழிவு ஓடை, ஸ்நிக்த=மூழ்கித் திளைத்து, கபோலபித்தி=

முகமெல்லாம், தம:=ஊதி,குழப்பி, கோலோ=பன்றி/ கேழல்/ வராகம்)

பட்டணத்தில் வாழும் பழக்கப் படுத்தப்பட்டப் பிராணியானாலும், காட்டில் வெறியு டன் அலையும் அபாயகரமான மிருகமானாலும் தங்களை மதம் பிடித்த,நெற்றியில் வியர்வை ஒழுகும் பலம் வாய்ந்த வேழம் என்று பீற்றிக் கொள்ளட்டும்; எண் திசை களைக் காக்கும் குஞ்சரங்களுடன் போட்டியிடட்டுமே! ஆனால் காலம் செய்யும் கோலத்தைக் கேள், தோழா! கிராமத்துக் கழிவுநீர் ஓடைச் சகதியில் சாவகாசமாக,  உற்சாகமாய்த் தலை மூழ்கித் திளைத்துக் கும்மாளமிடும் வராஹங்கள் கூடதிக்கஜங் களுடன் போட்டிபோடத் துடிக்கின்றனவே, என்ன செய்வது? 

To be continued…………………………………………………….

அழகு எது ?அறப்பளீச்சுர சதகம் கூறுகிறது (Post No.11,495)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,495

Date uploaded in London – 2 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

This is part 9 — verse 9 of Arappalichur sataka– with London swaminathan’s commentary

 ஒன்றற்கொன்று அழகு

வாழ்மனை தனக்கழகு குலமங்கை; குலமங்கை

     வாழ்வினுக் கழகு சிறுவர்;

  வளர்சிறுவ ருக்கழகு கல்வி;கல் விக்கழகு

     மாநிலம் துதிசெய் குணமாம்;

சூழ்குண மதற்கழகு பேரறிவு; பேரறிவு

     தோன்றிடில் அதற்க ழகுதான்

  தூயதவம், மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை

     சொல்லரிய பெரியோர் களைத்

தாழ்தல், பணி விடைபுரிதல், சீலம், நேசம், கருணை

     சாற்றுமிவை அழகென் பர்காண்

  சௌரி, மல ரோன், அமரர், முனிவர், முச்சுடரெலாம்

     சரணம்எமை ரட்சி யெனவே.

ஆழ்கடல் உதித்துவரு விடம்உண்ட கண்டனே!

     அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) சௌரி, மலரோன், அமரர், முனிவர், முச்சுடர் எலாம்

– திருமாலும் பிரமனும் வானவரும் முனிவரும் (மதி யிரவி அங்கி யெனும்)

முச்சுடரும் ஆகிய எல்லோரும் சரணம் எமை ரட்சி என – அடைக்கலம்

எங்களை ஆதரி என்று வேண்ட, ஆழ்கடல் உதித்துவரும் விடம் உண்ட

கண்டனே – ஆழமான கடலில் தோன்றி வந்த நஞ்சம் உண்ட (நீல)

கண்டனே!, அண்ணல் – தலைவனாகிய எமது ……… தேவனே!,

வாழ்மனை தனக்கு அழகு குலமங்கை – வாழும் இல்லத்திற்கு அழகு நற்குடிப் பிறந்த மங்கையாவாள்,

 குலமங்கை வாழ்வினுக்கு அழகு சிறுவர் – குலமங்கையின்

வாழ்விற்கு அழகு செய்வோர் நன்மக்கள்,

வளர் சிறுவருக்கு அழகு கல்வி –

வளரும் சிறுவர்களுக்கு அழகு செய்வது கல்வி,

கல்விக்கு அழகு மாநிலம் துதி செய் குணம்ஆம் – கல்விக்கு அழகாவது பெரிய உலகம் புகழும் நற்பண்பாகும்,

சூழ்குணமதற்கு அழகு பேரறிவு – பொருந்திய அந்த

நற்பண்புக்கு அழகுசெய்வது பெருமை மிக்க அறிவு,

பேரறிவு தோன்றிடில் அதற்கு அழகுதான் – பேரறிவு உண்டானால் அதற்கு அழகு செய்பவை,

தூய தவம் – நல்ல தவமும், மேன்மை – பெருந்தன்மையும், உபகாரம் –

(பிறருக்கு) உதவியும், விரதம் – நோன்பும், பொறுமை – பொறையும், சொல் அரிய பெரியோர்களைத் தாழ்தல் – புகழ்தற்கரிய பெரியோர்களை வணங்குதலும்,

 பணிவிடை புரிதல் – (அவர்கட்குத்) தொண்டுசெய்தலும்,

சிவநேசம் – சைவப்பற்றும், கருணை – அருளும் (என) சாற்றும் இவை

அழகு என்பர் – கூறப்பட்ட இவை அழகாகும் என்பார்கள் (அறிஞர்கள்.)

காண் : முன்னிலையசைச் சொல்.

     (க-து.) இங்குக் கூறப்பட்டவை ஒன்றுக்கொன்று அழகு செய்வன.

வெற்றிவேற்கை நூல் எழுதிய  அதி வீர ராம பாண்டியன் சொல்கிறார்

கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்

செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்

வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்

மன்னர்க்கு அழகு செங்கால் முறைமை

வணிகர்க்கு அழகு வரும்பொருள் ஈட்டல்

உழவர்க்கு அழகு உழுதூண் விரும்பல்

மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்

தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை

உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்

பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்

குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்

விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்

அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்

வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை

XXXX

பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல்

केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चन्द्रोज्ज्वला
न स्नानं न विलेपनं न कुसुमं नालङ्कृता मूर्धजाः ।
वाण्येका समलङ्करोति पुरुषं या संस्कृता धार्यते
क्षीयन्ते खलु भूषणानि सततं वाग्भूषणं भूषणम् ॥ 1.19 ॥

பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல்

 கேயூராணி ந பூஷயந்தி புருஷம் ஹாரா ந சந்த்ரோஜ்வலா

ந் ஸ்நானம்ந விலேபனம் நகுஸுமம் நாளங்ருதா மூர்த்தஜாஹா

வாண்யேகா சமலங் கரோதி புருஷம் யா ஸம்ஸ்க்ருதா தார்யதே

க்ஷீயந்தே கலு பூஷணானி ஸததம் வாக் பூஷணம் பூஷணம்

மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;

நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.

நீர் முழுக்கோசந்தனப் பூச்சோ,பூக்களோசிகை அலங்காரமோ

ஒருவனுக்கு அழகு அல்லபண்பட்ட பேச்சே அழகு தரும்.

ஏனைய எல்லாம் வாடி வதங்கும்உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.

நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.

 XXXX

மனைவி இல்லாத வீடு சூன்யமானது

(இல்லாள் இல்லாவிடில் அது வீடு இல்லை)

–கதா சரித் சாகரம் (கதைக்கடல்)

அபார்யம் ஹி சூன்யம் க்ருஹபதேர்க்ருஹம்

Xxxx

கணவனின் அரைப்பகுதி மனைவி (ஆணில் பாதி பெண்)

அர்தம் பார்யா மனுஷ்யஸ்ய

Xxxx

மனைவி என்பவள் உலோகத்தால் செய்யப்படாத ஒரு தளை (கைவிலங்கு)

-சாணக்ய நீதி சாஸ்த்ரம்

அலோஹமயம்  நிகடம் களத்ரம்

Xxxx

கட்டுபடாத மனைவி  எதிரி

-சாணக்ய நீதி

அவிநீதா ரிபு: பார்யா

Xxxx

.மனைவியின் காம வலையில் விழுந்த கணவன், சாவையும் பொருட்படுத்தான்

–பாரத மஞ்சரி

காந்தா கடாக்ஷ ஹ்ருஷ்டோ ஹி ந வேத்தி மரணம் ஜன:

Xxxx

க்ரியாணாம் கலு தர்ம்யாணாம் சத்பத்ன்யோ மூல காரணம்

–குமாரசம்பவம், காளிதாசன்

அறப்பணிகள் அனைத்துக்கும் வேர் போன்றவர் நல்ல மனைவிமார்களே.

Xxxx

பெண்களின் அழகு எது?

குயிலின் அழகு இனிமையாகக் கூவுதலில் இருக்கிறது;

பெண்களின் அழகு கற்பில் உள்ளது (கணவனைத் தவிர யாரிடமும் விருப்பமின்மை);

அவலட்சணமான தோற்றம் உள்ளவரிடத்தில் அழகு என்பது அவருடைய அறிவுதான்;யோகிகளுக்கு அழகு மன்னிப்பதில் உள்ளது”.

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்

வித்யா ரூபம் குருபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்

–சாணக்கிய நீதிஅத்தியாயம் 3ஸ்லோகம் 9

Xxxx

EDUCATION IS THE BEST ORNAMENT

எது அழகுநான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787)

Date: 6 May 2016; Post No. 2787

கல்வி அழகு

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம் யாமென்னு நடுவு நிலைமையால்

கல்வியழகே அழகு – நாலடியார் 131

சிகை அலங்காரமும்ஆடையினது கரை அழகும்மஞ்சள் பொடி பூசியதால் ஏற்படும் அழகும் அழகல்ல. மனத்தினால் நாம் நல்லவர் என்று எண்ணும் நடுநிலைமையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு. (கல்விகற்றால்நல்லவர் ஆவர். அதுவே அழகு)

நாலடியார் என்பது பல கவிஞர்கள் சேர்ந்து படிய 400 பாடல்களைக் கொண்ட நூல்.

சொல் அழகு

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

பொருள்:- தலை மயிர் அழகும்பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும்நகத்தின் அழகும்செவியின் அழகும்குற்ரமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும்தோளினுடைய அழகும்செல்வத்தின் அழகும்நடை அழகும்நாணத்தின் அழகும்திரண்ட கழுத்தின் அழகும்உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும்இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

வள்ளுவன் கூறுகிறான்

சிறந்தஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகுமண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

विद्या नाम नरस्य रूपम् अधिकं प्रच्छन्नगुप्तं धनं
विद्या भोगकरी यशःसुखकरी विद्या गुरूणां गुरुः ।
विद्या बन्धुजनो विदेशगमने विद्या परा देवता
विद्या राजसु पूज्यते न तु धनं विद्याविहीनः पशुः ॥ 1.20 ॥

 பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல்

வித்யா நாம நரஸ்ய ரூபமதிகம் ப்ரச்சன்னகுப்தம் தனம்

வித்யா போககரீ ய்ஸ்ஹ ஸுககரீவித்யா குரூணாம் க்ருஹு

வித்யாம் ப்ந்துஜனோ விதேச கமனே வித்யா பராதேவதா

வித்யா ராஜஸு பூஜ்யதேந து தனம் வித்யா விஹீனஹ பசுஹு

கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;

அவனுடைய ரஹஸிய செல்வம் அது;

வளமும்மகிழ்ச்சியும்புகழும் நல்குவது.

குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;

வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்;

கல்வியே உயர்ந்த கடவுள்.

மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லைஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்– குறள் 410

XXX

பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல் 37

நீதி சதகம் 37

அரசனுக்கு ஆபத்து கெடு மதி உடையவரின் ஆலோசனை;

சந்யாசிக்கு ஆபத்து பந்தங்கள் (மடம்சொத்துசுகம்);

புதல்வனுக்கு  ஆபத்து அதிக செல்லம்;

அறிவாளிக்கு ஆபத்து தொடர்ந்து படியாமை;

குடும்பத்துக்கு ஆபத்து கெட்ட மகன்/ மகள்;

நற்பெயர்க்கும் மரியாதைக்கும்  ஆபத்து கெட்டவர் சஹவாசம்;

புத்திக்கு ஆபத்து கள் குடித்தல்;

விவசாயத்துக்கு ஆபத்து நிலத்தைக் கவனியாமை/ பராமரிக்காது இருத்தல்;

அன்புக்கு ஆபத்து உறவினரை விட்டு வெளிநாடு செல்லல்;

வளத்துக்கு ஆபத்து விவேகமின்மை;

செல்வத்துக்கு ஆபத்து மெத்தனம்.– நீதி சதகம் 37

வள்ளுவன் ஈரடியில் ஏழுக்கும் மேலான சொற்களில் சொல்லுவதை பர்த்ருஹரி மிகச்சொற்பமான சொற்களில் சொல்கிறான்.

Bhartruhari Nitisataka 37

दौर्मन्त्र्यान्नृपतिर्विनश्यति यतिः सङ्गात्सुतो लालनात्
विप्रो‌உनध्ययनात्कुलं कुतनयाच्छीलं खलोपासनात् ।
ह्रीर्मद्यादनवेक्षणादपि कृषिः स्नेहः प्रवासाश्रयान्
मैत्री चाप्रणयात्समृद्धिरनयात्त्यागप्रमादाद्धनम् ॥ 1.42 ॥

த்ரௌர் மந்த்ர்யான் ந்ருபதிர் விநஸ்யதி யதிஹி சங்காத் ஸுதோ லாலனாத்

விப்ரோ அனத்யயனாத் குலம் குதநயாத்சீலம் கலோபாசனாத்

ஹ்ரீர்மத்யாதனவேக்ஷணாதபி க்ருஷிஹி ஸ்நேஹக  ப்ரவாஸாஸ்ரயான்

மைத்ரீ சா ப்ரணயாத் ஸம்ருத்ததிரனயா த்யாகப்ரமாதாத்தனம்

XXXX

நல்லாரைக் காண்பதுவும் நன்றே / சத் சங்கம்

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

இம்மையில் சுவர்க்கம்


நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
பொற்பு உடை மகளிரொடு
பொருந்தியே வாழ்தல் ஒன்று;
பற்பலரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்தல் ஒன்று;
சொற்பெறும் இவைகள் மூன்றும்
இம்மையில் சுவர்க்கம் தானே! —(விவேக சிந்தாமணி)

மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்!

XXXX

பரோபகாரம் இதம் சரீரம்

“எவனொருவன் பிறருக்காக வாழ்கிறானோ அவனே உயிர் வாழப்வன் மற்றவர் எல்லோரும் இருந்தும், இறந்தோருக்குச் சமம்

 “They alone live who live for others, the rest are more dead than alive”.

வள்ளுவரும் இதையே சொன்னார்

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும் – குறள் 214

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் பொன்மொழித் தொகுப்பு நூலும் இதையே பகர்கிறது:

பரம் பரோபாகாரார்த்தம் யோ ஜீவதி ச ஜீவதி : எவன் பிறருக்கு உதவி செய்யும் வாழ்க்கை உடையவனோ அவனே வாழ்பவன்.

(1).பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா:

பரோபகாராய வஹந்தி நத்யா:

பரோபகாராய துஹந்தி காவ:

பரோபகாரார்த்தம் இதம் சரீரம் – விக்ரம சரிதம்

பொருள்:–

மற்றவர்களுக்காகவே மரங்கள் பழுக்கின்றன

மற்றவர்களுக்காகவே நதிகள் ஓடுகின்றன

மற்றவர்களுக்காகவே பசுக்கள் பாலைப் பொழிகின்றன

மற்றவர்களுக்காகவே இந்த உடல் இருக்கிறது

(2).பரோபகாராய சதாம் விபூதய: – சமயோசித பத்ய மாலிகா

நல்லோருடைய செல்வம் பிறருக்காகவே உளது

(3).விபாதி காய: கருணாபராணாம் பரோபகாரைர்ன து சந்தனேன – பர்த்ருஹரி

ஒருவனுடைய உடல் ஒளிருவது சந்தனத்தால் அல்ல; பிறருக்கு உதவி செய்வதன் மூலமே.

(4).சர்வ பூத உபகாராச்ச கிம் அன்யத் சுக்ருதம் பரம் – கதாசரித் சாகரம்

எல்லா உயிர்களுக்கும் உதவி செய்வதைவிடப் புண்ணியமானது எது?

பரோபகாராய புண்யாயபாபாய பரபீடணம்”

பொருள்: பிறருக்கு உதவி செய்வது புண்ணியம்பிறருக்கு தீங்கிழைப்பது பாபம்.

இதைப் புரிந்து கொண்டால் உலகம் அமைதியுடன், ஆனந்தமாக வாழும்!

xxxx

நல்லதோர் வீணை செய்தே – அதை

     நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி – எனைச்

     சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,

வல்லமை தாராயோ – இந்த

     மாநிலம் பயனுற வாழ்வதற்கே !

சொல்லடி சிவசக்தி – நிலச்

     சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் — உள்ளம்

     வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன், — நித்தம்

     நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீச்சுடினும் — சிவ

     சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன்; — இவை

     அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

          – மகாகவி பாரதியார்

—SUBHAM—

Tags–அழகு, எது , பர்த்ருஹரி, குஞ்சி அழகு, பரோபகாரம், சுபாஷிதம், விவேகானந்தர், பாரதியார்

படிக்காசுப் புலவரை வாதில் வென்ற கொங்குமண்டலப் புலவர்கள்! (Post No.11,494)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,494

Date uploaded in London – 2 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 85

படிக்காசுப் புலவரை வாதில் வென்ற கொங்குமண்டலப் புலவர்கள்!

,நாகராஜன்

தமிழகப் புலவர்களில் தனி இடத்தைப் பெறுபவர் படிக்காசுப் புலவர். அவர் ராமநாதபுர சமஸ்தானத்தில் இரகுநாத சேதுபதியின் சமஸ்தான வித்வானாக இருந்து பெரும் புகழ் பெற்றார்.

ஒரு சமயம் தல யாத்திரையை  மேற்கொண்ட அவர் கொங்கு மண்டலம் வந்தார்.

அந்தக் காலத்தில் கவசை ஆறை நாட்டில் கவசை நகரில் கல்வி கேள்விகளில் வல்லவராயும் வள்ளன்மையில் சிறந்தவராயும் இருந்த மசக்காளி மன்றாடி என்பவர் புகழுடன் வாழ்ந்து வந்தார்.

அவரது சமூகத்தில் தமிழ்ப் புலவர் சபை ஒன்று கூடிற்று.

அதில் வண்ணப் பாக்கள் சொல்வது பற்றிய வாதம் ஒன்று நடந்தது.

அதில் படிக்காசுப் புலவர் எடுத்துக் கொடுத்தபடி முடிக்கவில்லை என்று சொல்லி அவர் கொண்டு வந்த பல்லக்கு முதலியவற்றை கொங்கு மண்டலப் புலவர்கள் எடுத்துக் கொண்டனர்.

படிக்காசுப் புலவர் தனது ஆடை முதலியவற்றைச் சுமந்து கொண்டு,

“அஞ்சாலி மக்களுஞ் சாணாகும் பாணரு மம்பட்டருஞ்

செஞ்சாயக் காரரும் வேசையர் மக்களுஞ் செந்தமிழைப்

பஞ்சாகப் பன்னி யொருகாசுக் கோர்வண்ணம் பாடலுற்றார்

நஞ்சாகப் போச்சுதை யோவென் றமிழ்கொங்கு நாடெங்குமே”

என்று மனம் நொந்து மிக்க வருத்தத்துடன் பாடினார். பிறகு மனதைச் சமாதானம் செய்து கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

கவசையில் நடந்த கவி வாத சம்பந்தமான பகைமையால் கொங்குப் புலவர்கள் வைத்த சூனிய வித்தைத் தீமையில் வருந்தி, திருச்செங்கோட்டுக்கு அவர் வந்து சேர்ந்தார். ஶ்ரீ அர்த்த நாரீஸ்வரர் மீது வருகைப் பதிகம் பாடி, பின்னர் தேக சுகத்தை அடைந்து உமைபாகப் பதிகம் பாடினார். பின்னர் சமீபத்தில் உள்ள மோரூர்க்குச் சென்று பாம்பலங்காரர் மீது வருக்கக் கோவை பாடி அரங்கேற்றினார்.

அதற்காகக் குமாரசாமிக் காங்கேயன் சன்மானம் தர அதை ஏற்றார்.

அந்திப் பிறைச் சடையரா வாசல ராலயத்திற்

கந்தப் பிரான்கதை கற்சிலை யாலமை காங்கெயரில்

விந்தைப் புயக்கும ரேந்திர வேந்து வியந்தெமக்குத்

தந்தச் சிவிகை கொடுத்தான் பெரும்புகழ் தாங்கினனே

எனப் புகழ்ந்து சோழநாட்டை அடைந்தார்.

வேலைசூழ்பணி மாமலை வேலரும் விமலரு மகிழ்வெய்தச்

சீலமாகியோ ரைம்படி யரிசியுஞ் சிலகறி பருப்போடே

மாலை காவிரி மஞ்சனந் தீபமும் மனமிகு தயவாகிப்

பாலை சேர்மசக் காளிசெங் கோடரைப் பணிந்திவை யளித்தானே

–    திருச்செங்கோட்டுப் புராணம் திருப்பணி மாலை

இனி குமார காங்கேயன் பற்றிப் பார்ப்போம்.

இவன் இம்முடிப் பட்டம் பெற்றவன் என்பதை அடியிற்கண்ட
செய்யுள் வலியுறுத்துகின்றது.

முன்னா ளுறைந்தைவரு மரசர்பெரு மானுலகில்
                          முடிமன்னரிட தம்பிரான்
முதுமொழி குலோத்துங்க சோழனருள் செய்தனன்
                            முத்தமிழ்க் கம்பநாடன்
அந்நாளி லேபொன்னி கரைகள்கட வாதுள் ளடங்கவிசை
                                      பாடலுக்கா
ஆதித்த னுள்ளளவு மழியாத வதுவைவரி யளித்தனர்க
                                   ளன்றுமுதலாப்
பன்னாத நிலைமைசெறி கொங்குநாட் டினின் மேவு படிகார
                                       வித்வச்சனர்
பங்கென நடந்துவரு படிதனக் கிடரதாய்ப் படித்தசிலர்
                                  கைக்கொண்டதை
இந்நாளி லேகீர்த்தி நிலையாக விடுவித்தவ் வியல்வாண
                                     ருக்களித்தான்
இங்கிதம தாகவரு கவசைநகர் வாழ்வுற்ற இம்முடி
                                      மசக்காளியே(தனிப்பாடல்)

கொங்குமண்டல சதகத்தில் வருகின்ற     54, 64-ஆம் செய்யுட்கள் குறித்த
மோரூர்க் காங்கேயர்களுக்கும், 69-ஆம் செய்யுட் கூறும் கோபண
மன்றாடிக்கும், 75-ஆம் பாட்டுக் குறிப்பிடும் காடையூர்க் காங்கேயர்க்கும், 76ஆம் செய்யுள் விளக்கும் அல்லாளனிளை யானுக்கும் இம்முடி என்ற பட்டப்பெயருண்டு.

இம்மடி என்று கூறுவதையுங் காணலாம். தேச மன்னர்
குறுநில மன்னர், நாடு, ஊர் அதிகாரிகள், சில குருக்கள்களும் இம்முடி
என்று பெயர்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்பெயரை மிகு
மேன்மையாகப் பாராட்டுகிறார்கள். இம்மடி (இம்முடி) என்பதன் பொருள் இரட்டை அதாவது இரண்டாவதான். எனவே, இம்முடிக் குமார காங்கேயன் என்றால் குமார காங்கேயன் என்பவன் ஒருவன் இருக்க, அவனுக்குப் பின் மற்றொரு குமார காங்கேயன் வந்தால் அவன் இம்மடி (இரண்டாவது) குமார காங்கேயனாகிறான். இன்னுமொருவன் தோன்றினால் மும்மடி (மூன்றாம்) குமார காங்கேயனாகிறான்.

இந்த வரலாறை கொங்குமண்டல சதகம் தனது 85ஆம் பாடலில் பதிவு செய்கிறது.

நல்லார் புகழ்மசக் காளி கவசையி னாவினிசை

யெல்லாஞ் சொலிநிலை நிலாமற் பல்லக் கிரவைபற்றிச்

சொல்லா லுயர்ந்த படிக்காசன் கட்டிச் சுமக்கக்கவி

வல்லா ரடித்துத் துறத்திய துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

மசக்காளி மன்றாடியின் கவசை (ஆறை நாட்டில் உள்ள சர்க்கார் சாமக்குளம் அதாவது கோவில்பாளையம்) நகரில் நடந்த பா இயற்று வாதப் போரில் நிற்கவில்லை என்று பல்லக்கும் சன்மானப் பொருள்களையும் பற்றிக் கொண்டு, மற்ற எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு படிக்காசுப் புலவர் நடந்து போகும்படி ஊரை விட்டு அகற்றிய கவி சொல்லும் திறமை உடையவர் இருப்பதும் கொங்கு மண்டலமே என்பதாம்.

***

 புத்தக அறிமுகம் 129

இலக்கிய உலகில் கம்பரின் காட்சிவில்லியின் மாட்சி,

சங்கப் புலவர்களின் ஆட்சி!

பொருளடக்கம்

முன்னுரை

அத்தியாயங்கள்

1. எது கவிதை?                                                     2. காவியத்தின் நோக்கம்                                              3. கவிதையை ரஸிப்போமா?                                                 4. கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி!                                   5. கவிதையில் சித்திரங்களைக் காண்பிக்கும் கம்பன்!                 6. இந்திரன் இராமனைத் துதித்தல்! – கம்பன் தரும் அதிசயம்!          7. கவிகள் திலகம் கம்பன் கண்ட திலகம்!                               8. வர பலம் தவறினாலும் சர பலம் தவறாது!                          9. இலங்கை மங்கையின் லிப்ஸ்டிக்! அயோத்தி மங்கையின் ஸ்டிரா!! –     

   கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்!                            10. எது வினை? இடர் இலை?                                      11. மாளிகைக் கவியை விலைமகளிர்க்கும் பொருந்த அமைத்த    சிலேடை சிரேஷ்டன் கம்பன்!                                         12. கம்பன் தரும் சித்திரம்: இந்திரஜித்தின் வீட்டைக் காவல் காத்த லட்சணம்!                                                         13. இராவணனின் சிறப்பு பற்றிக் கம்பர் கூறும் ஒரு பாடலின் இரு வடிவங்கள்! – அவன் தரும் அரிய செய்தி!                             14. இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்: கம்பர் காட்டும் இரகசிய குறிப்பு                                         15. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 1.  16. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 2  17. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 3   18. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 4.  19. உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்!                         20. கவிஞன் தன் குறிப்பைச் சொல்லும் தற்குறிப்பேற்ற அணி!         21. வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 1                                                      22. வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2                             23. இரண்டு பாடல்களில் மட்டுமே வரும் ஒரு அபூர்வ அணி –    ஒற்றைமணி மாலை அணி!                                      24. தங்கத் தமிழாம் சங்கத் தமிழ் தெய்வத் தமிழே!    25. ஒப்பற்ற தமிழின் உயர்வு!                                    26. தமிழில் அலங்காரம்!                                              27. தமிழில் உள்ள யமகப் பாடல்கள்!                                  28. யமகவந்தாதியின் பட்டியல்!                                      29. புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை!   30. ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்!          31. எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்!                32. தனிப்பாடல்களில் புலவர்கள், புலவர்கள் பல விதம்!               33. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பாடல்கள்! – 1            34. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பாடல்கள்! – 2

*

நூலில் இடம் பெறும் முன்னுரை இது:

முன்னுரை

உலகில் உள்ள மொழிகளில் எல்லாம் பழமையானதும்அழகியதும்இலக்கிய வளம் வாய்ந்ததும்இறைவனால் உருவாக்கப்பட்டு புலவர்களின் தலைவனாக அவனே அமர்ந்து வளர்த்த மொழி ஒன்றே. அது தமிழ் தான்!

இதைப் பற்றி எத்தனை ஆயிரம் நூல்கள் வேண்டுமானாலும் எழுதலாம். எழுதினாலும் தமிழின் சிறப்பை முற்றிலுமாக ஒருவர் சொல்லி விட்டதாக ஆகாது.

தமிழின் புதுப் புது பரிமாணங்களையும்வடிவங்களையும்ஆழத்தையும்அகலத்தையும் காட்டுவதற்கென்றே உதித்த தெய்வப் புலவர்கள் பலர்.

தெய்வப் புலவர் திருவள்ளுவர்சங்க காலப் புலவர்கள்திரு ஞான சம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரர்மாணிக்க வாசகர், 12 ஆழ்வார்கள்கவிச் சக்கரவர்த்தி கம்பன்வில்லிப்புத்தூரார்மஹாகவி பாரதியார் என்ற கவிஞர்களின் இந்தப் பட்டியல் மிக நீண்ட ஒன்று.

இந்தக் கவிஞர்களில் கம்பன் காட்டும் வண்ணக் காட்சிகள் பல. மகாபாரதத்தைத் தமிழில் தந்த வில்லிப்புத்தூராரின்  மாட்சியோ தனி.

சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்களின் ஆட்சியோ அதிசயிக்கத் தக்க ஒன்று.

இவை பற்றி அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இது.

இதை தமிழ் நெஞ்சங்களிடம் நூல் வடிவில் தருவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

நிலாச்சாரல் மின்னிதழ்www.tamilandvedas.com ப்ளாக் உள்ளிட்டவற்றில் வெளியான கட்டுரைகள் இவை.

இதை வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு மற்றும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக்.

அழகிய முறையில்இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                                        . நாகராஜன்                                               1510-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

செய்யக்கூடாத செயல்கள் (ஒண்ணாது) எவை எவை? –அறப்பளீச்சுர சதகம் (Post.11493)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,493

Date uploaded in London – 1 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part 8 of Arappalichchura Satakam

வஞ்சகர் தமைக்கூடி மருவொணா தன்பிலார்

     வாசலிற் செல்லொ ணாது;

  வாதெவ ரிடத்திலும் புரியொணா தறிவிலா

     மடையர்முன் நிற் கொணாது;

கொஞ்சமே னும்தீது செய்யொணா தொருவர்மேல்

     குற்றஞ்சொ லொண்ணா தயல்

  கோதையர்க ளோடுபரி காசஞ்செ யொண்ணாது;

     கோளுரைகள் பேசொணாது;

நஞ்சுதரும் அரவொடும் பழகொணா திருள்வழி

     நடந்துதனி யேகொணாது

  நதிபெருக் காகின் அதில் நீஞ்சல்செய் யொண்ணாது;

     நல்வழி மறக்கொணாது;

அஞ்சாமல் அரசர்முன் பேசொணா திவையெலாம்

     அறியும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) இவையெலாம் அறியும் – இங்குக் கூறப் பட்டவற்றை

யெல்லாம் அறிந்த, எமது ………… தேவனே! வஞ்சகர்தமைக் கூடி மருவ

ஒணாது – வஞ்சகரைக் கூடிப் பழகல் தகாது, அன்பு இலார் வாசலில்

செல்லஒண்ணாது – அன்பு இல்லாதவரின் வீட்டுவாயிலை அடைதல்

கூடாதுவாது எவரிடத்திலும் புரியஒணாது – எவரிடமும் வாதாடல்

கூடாது அறிவு இலா மடையர்முன் நிற்க ஒணாது – அறிவு இல்லாத

பேதைகளின் எதிரிலும் செல்லக் கூடாது, கொஞ்சமேனும் தீது செய்ய

ஒணாது – சிறிதாகினும் தீய செயலைச் செய்தல் ஒவ்வாது, ஒருவர் மேல் குற்றம் சொலஒண்ணாது – ஒருவர்மேல் குறைகூறல் கூடாது, அயல் கோதையர்களோடு பரிகாசம் செய ஒண்ணாது – பிற மங்கையருடன் நகைத்துப் பேசுதல் கூடாது, கோள் உரைகள் பேச ஒணாது – கோள் மொழிகள் கூறல் கூடாது, நஞ்சு தரும் அரவொடும் பழக ஒணாது – நஞ்சைத் தரும் பாம்பொடு பழகல்கூடாது, இருள்வழி நடந்து தனி ஏக ஒணாது –

இருண்ட நெறியிலே தனியே நடந்து செல்லல் கூடாது, நதி பெருக்கு ஆகின்

அதில் நீஞ்சல் செய்ய ஒண்ணாது – ஆறு பெருகிச்சென்றால் அதை நீந்திச் செல்லுதல் கூடாது, நல்வழி மறக்க ஒணாது – நன்னெறியை மறத்தல் கூடாது அஞ்சாமல் அரசர்முன் பேச ஒணாது – அரசரிடம் அச்சமின்றிப் பேசுதல் கூடாது.

     (க-து.) இங்குக் கூறப்பட்டவை செய்ய ஒண்ணாதவை.

Xxx

London swaminathan’s commentary on verse 9

இவை அனைத்தும் ஆத்திச் சூடி , உலக நீதி, நீதி வெண்பா  முதலிய நூல்களில் கண்ட விஷயங்களே .

நாள்தோறும் பத்திரிகைகளில் வரும் கொலை, களவு, விபத்து பற்றிய செய்திகளைப் படிக்கையில் இவை அனைத்தும் இன்றும் தேவைப்படும் அறிவுரைகளே என்பதை உறுதியிட்டுச் சொல்ல முடியும்

–சுபம்–

உலக நாதர் இயற்றிய உலக நீதியில் கண்டவற்றை ஒப்பிட்டுப் பார்ப்போம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

Never play around with poison

ஒப்பிடு: தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப்படும் –(குறள் 202)

Xxxx

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

ஒப்பிடு: நல்லினத்தி னூங்குத் துணை யில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல் — (குறள் 460)

Neverever associate with fraudulent people

நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

ஒப்பிடு: சிற்றினம் அஞ்சும் பெருமை–(குறள் 451)

Don’t move with people of who are not  at your wavelength

xxx

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

Never go alone to places you don’t know.

Xxx

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

Don’t go to places that should be avoided

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல் பதாகும் அறிவு — (குறள் 451)

Xxx

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

Don’t talk ill of others

ஒப்பிடுக: இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று —(குறள் 100)

Xxxx

போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்

ஒப்பிடு: அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது — (குறள் 181)

 Don’t talk behind anyone’s back.

Xxx

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்

Never covet another’s wife

ஒப்பிடு: பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள் 148)

Xxx

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

Never step into a house where you are not respected

 Xxx

 புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்

Don’t use harsh words

ஒப்பிடு: இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்குவது (குறள் 99)

xxx

—subham—

 Tags- உலக நாதர் ,உலக நீதி, செய்யக்கூடாத செயல்கள் ,ஒண்ணாது,  எவை எவை? –அறப்பளீச்சுர சதகம்