பத்து நாடுகள் வழியாகப் பாயும் டான்யூப் நதியைப் (Danube River) பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை; அது 25-10-2022ல் நிறைவேறியது. குடும்பத்தோடு ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் (Vienna , Austria ) ஐந்து நாட்கள் தங்கி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினோம்.. தீபாவளியன்று கங்கா ஸ்னானம் ஆச்சா? என்று கேட்பது சம்பிரதாயம்.அதாவது அன்றைய தினம் அதிகாலையில் எங்கு குளித்தாலும் அது கங்கையில் குளிப்பததற்குச் சமம். அதாவது அன்றைய தினம் கங்கா தேவி எல்லா நீர் நிலைகளிலும் பிரவேசிக்கிறாள் . நாங்கள் வியன்னாவில் ஹோட்டல் அறையில் குளித்துவிட்டு திருப்தி அடைந்தோம். வியன்னாவில் குடிநீர் சப்ளை அருகிலுள்ள மலை ஊற்றிலிருந்து வருகிறதாம். நதியிலிருந்து அல்ல; நிற்க .
டான்யூப் நதி மேல் ஏன் அவ்வளவு காதல் என்று கேட்கிறீர்களா? இயற்கையிலேயே விஞ்ஞானத்தின் எல்லா துறைகளிலும் , பூகோளம் , சரித்திர பாடங்களிலும் எனக்கு ஒரு ஆசை , ஈடுபாடு உண்டு.அந்தவகையில் ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதியான டான்யூப் நதியைச் சந்தித்து , ஹலோ ஹவ் ஆர் யூ ? Hello! How are you? என்று கேட்க விரும்பினேன். நாங்கள் மாலை நேரத்தில் சென்றதால் கடைசி கப்பலும் சென்றுவிட்டதால் (Boat ride or Cruise) படகு சவாரி செய்ய இயலவில்லை. ஆயினும் நீல நீரையுடைய நீளமான நதியைக் கண்டேன்; ஆனந்தம் கொண்டேன்.
இரண்டு உலக யுத்தங்களிலும் சம்மந்தப்பட்டது இந்த நதி. ஜெர்மனியில் கருங்காட்டில் (Black Forest) உற்பத்தியாகி 10 நாடுகளில் பாய்ந்து கருங்கடலில் (Black Sea) சங்கமம் அடைகிறது. ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் நீலம்/Blue என்பதை கருமைக்கும் பயன்படுத்துவோம். நீல குயில் என்போம்; கரு ங்குயில் என்று பாடுவோம். நான் பிராமணன் என்ற முறையில் தினமும் தெற்கு திசை நோக்கி நின்று, மூன்று வேளைகளில் யமதர்மனுக்குச் சொல்லும் மந்திரத்திலும் அவனை நீல நிறத்தவனே என்று போற்றுவேன். அவனோ Utter Black அட்டர் பிளாக்.;போகட்டும். கருங்காட்டில் உற்பத்தியாகி கருங்கடலில் கலக்கும் நீல(Blue Danube) டான்யூப் நதிக்கும் அப்பெயரின் பொருத்தத்தை விளக்க இவ்வளவும் சொன்னேன்.
ஹிட்லர் தோற்கப் போவது தெரிந்தவுடன் ஜெர்மானியர்கள் தங்கள் கப்பல்களை நதியில் வேண்டுமென்றே மூழ்கடித்தனர். இப்போதும் நீர்மட்டம் குறையும் போது அவைகளைக் காணலாம் .
XXX
நதியின் நீளமும் அணைகளும்
இந்தியாவில் சிந்து , பிரம்மபுத்ரா நதிகளின் நீளம் 2900 கிலோமீட்டர். கங்கை நதியின் நீளம் 2525 கிலோமீட்டர். டான்யூப் ஆற்றின் நீளம் 2850 கிலோமீட்டர். ஏறத்தாழ சிந்து நதி போன்றதே. ஐரோப்பாவின் நீளமான நதி வால்கா (Volga River) . அதன் நீளம் 3535 கிலோமீட்டர்.
ஜெர்மனியில் உற்பத்தியாகி உடனே ஆஸ்திரியாவுக்குள் நுழைவதால் அதன் தூய்மை கெடாமல் நீல நிறத்திலேயே எங்களுக்குக் காட்சி தந்தது.
இந்த நதி பற்றி நூற்றுக் கணக்கான புஸ்தகங்களும் பல டாகுமெண்டரிகளும் வெளிவந்துள்ளன.இதன் மீதும் இதன் உபநதிகள் மீதும் 700 அணைகள் உள்ளன. ஜெர்மனியில் இருக்கும் நதி மூலத்திலிருந்து அடுத்த வீடான ஆஸ்திரியா வருவதற்குள் ஆயிரம் கிலோ மீட்டருக்குள் 60 பெரிய அணைகள் இருக்கின்றன. பல நாடுகளின் குடி நீர்ப் பிரச்சனையையும் மின்சார பிரச்சனையையும் இந்த ஆற்று நீர் தீர்ப்பதோடு பாசன வசதிக்கும் பயன்படுகிறது. எல்லா வற்றுக்கும் மேலாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுக்கிறது .காரணம்; ஆயிரக் கணக்கான சொகுசு(Cruises ) கப்பல்கள் பல லட்சம் மக்களை ஏற்றிய வண்ணம் இங்கே பவனி வருகின்றன.
மேலும் சில சுவையான விஷயங்களை (Bullet Points) புல்லட் பாயிண்டுகளில் காண்போம்; மைல் கணக்கில் இதன் நீளத்தைச் சொல்லவேண்டுமானால் 1777 மைல்கள் . இது தோன்றும் இடம் ஜெர்மனி ;ஆனால் சங்கமம் ஆகும் இடம் ருமேனியா
இந்த ஆற்றின் முகத்துவாரத்தில் பல லட்சம் சதுர மைல் பரப்புள்ள பசுமைக் காடுகளும் சதுப்பு நிலக் காடுகளும் பரவிக் கிடக்கின்றன
பல நாடுகளிலிருந்து வரும் குடியேற்றப் பறவைகள் இந்த நதியின் முகத்துவாரத்தில் உள்ள பிரம்மாண்டமான சதுப்பு நிலக்காடுகளில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.
இந்த ஆறு செல்லும் 10 நாடுகள் – ஜெர்மனி, ஆஸ்திரியா , ஸ்லோவாகியா , ஹங்கேரி, க்ரோவேஷியா செர்பியா , பல்கேரியா,மால்டோவா, உக்ரைன், ருமேனியா .
மூன்று நாடுகளின் தலை நகரங்களான புடாபெஸ்ட், பெல்கிரேட், வியன்னா ஆகியவை இந்த நதிக் கரையில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு .
சொகுசு கப்பல்களோடு மிகப்பெரிய வணிகக் கப்பல்களும் செல்லும் அளவுக்கு ஆழம் உடையது இந்த நதி .
இதன் நீர்வழிப்போக்கு மட்டும்தான் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன என்று எண்ணி விடக்கூடாது. நிறைய கால்நடைப் பாதைகளும் சைக்கிள் பாதைகளும் மக்களை ஈர்க்கின்றன.
கலைஞர்கள் , இதன் கரையில் அமர்ந்து வரைவர்; கிராமியப் பாடகர்களும், புலவர்களும் பாடி மகிழ்வர் . 2000 ஆண்டு கிரேக்க, ரோமானிய வரலாற்றுடனும் இரண்டு உலகப்போர்களுடனும் தொடர்பு இருப்பதால் இதான் வரலாறு நீண்ட வரலாறு ஆகும்
இது பாயும் நாடுகளில் எட்டு கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களோடு மேலும் 20 கோடிமக்கள் இதனால் பயன் அடைகின்றனர் . பல கால் வாய்கள் உள் நாட்டிற்கு தண்ணீரை எடுத்துச் செல்கின்றன..
200 வகைமீன்கள் இதில் வசித்தாலும் குறிப்பிடத்தக்கது சால்மன் வகை மீன்தான். அது மனித உயரத்துக்கு வளருவதோடு முப்பது ஆண்டுகள் வரை வாழக்கூடியதும் ஆகும்.
இவ்வளவு அழகான நதிக்கு ஆபத்தாக விளங்குவது மனிதர்கள் கலக்கும் மாசு ஆகும். இதன் புறச் சூழல் பிரச்சனைகள் குறித்து நிபுணர்கள் எச்சகரித்துள்ளனர். பன்னாட்டு அமைப்புகள் இதில் கவனம் செலுத்தி வருகின்றன. தொழிற்சாலை கழிவுகளோடு சாக்கடை நீரையும் மக்கள் கலக்கின்றனர் .
இயற்கை வனப்பும் தூய நீரும் உடைய இந்த நதியை வருங்கால ஸந்ததி னருக்கு பாதுகாப்பது மனித குலத்தின் கடமை.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
–subham–
Tags- டான்யூப் , நதி, ஆறு, ஜெர்மனி, பத்து நாடுகள்,நீள மான ஆறு, ஐரோப்பா
As a lover of Geography and History, I have been dreaming of seeing the Blue Danube River for long. And at last, my dream came true, and I stood on the banks of River Danube on 25th October 2022. We visited Vienna in Austria for four days. There is a tradition in India to greet everyone on Deepavali (also spelt Diwali) Festival Day “Had you Ganga Snaan in the morning? Is everyone in your family hale and healthy?”. What they mean is the Holy Ganga (also spelt Ganges) comes to every house on the Diwali day and whatever water you use for bathing on that day is considered as holy as River Ganga? And I gave that proud status to Vienna spring water on Diwali day. Because all our family members had Snaanam (bathing) in the hotel room on Diwali day (24-10-22) with that water. Vienna’s drinking water supply comes from mountain springs.
Many people have commented on the blue water of Danube and of late people have been resenting about the pollution in the river as well which turned the blue river into pink and brownish. Here are a few quotes on River Danube.
Blue, muddy yellow or blood-red: the colour of the Danube varies according to history and geography. Never able to truly form the countries through which it runs into a single political entity, it nevertheless connects peoples and regions reconcilable only in dreams or poetry, writes László Földenyi.
xxx
Here is a poem on the Danube
THE BLUE PLANET
THE BLUE PLANET by JOHN M. ARRIBAS
This beautiful blue planet that we call earth
No one really can confirm its origin or birth
Some declare it was shaped by a powerful being
Others state the result of a cosmic unveiling
It just seems to be a tiny body in limitless space
With the right conditions to beget the human race
Orbiting at the right distance from a giant star
Allowing flora and fauna to propel exemplar
Giant creatures once roamed the face of the earth
But a cataclysmic event caused their dearth
Doom for the giants was a boon for the small
Leaving crevices and oceans learning to crawl
And so after millions of years we arrive at now
We’ve nearly conquered the why and almost how
Yet we still have questions that surely remain
Is there a will to cease our destructive reign
The Danube was once blue now a brownish pink
The elusive snow leopard is nearly extinct
xxx
Interesting Facts about river
Since I was not far from the place of river’s origin, I saw only Blue Danube. It is the second longest river in Europe and the most international river flowing through ten European countries. When we went there in the evening it was too late for the river cruise. But I saw lot of ferries and ships going along the river even from the plane. So I had the bird’s eye view of the river even before touching down in Vienna.
Here are some interesting facts about the river:
Indian rivers Sindhu/Indus and Brahmaputra are about 2900 kilometres long and Danube is 2857 kilometres long, nearly same. Holy Ganga is 2525 Kms long.
The Danube is 2,857 km long and up to 1.5 km wide. It is the second largest river in Europe – after the Volga (3,535 km).
One of Europe’s most well-known international waterways, the Danube is a lifeline, a vital shipping route, and an international creative hotspot. This amazing river has been at the heart of European creative and political history for thousands of years.
1. IT’S THE LONGEST NON-RUSSIAN RIVER IN EUROPE
Europe’s longest river is the Volga – an incredible 2,294-mile expanse of water that travels across Western Russia. The continent’s second-longest river, however, is the Danube – a 1,777-mile river that travels from Germany to Ukraine.
2. IT FLOWS FROM GERMANY ALL THE WAY TO THE BLACK SEA
Its incredible length and straightforward West-East direction give the Danube one of the most impressive journeys in history. This remarkable river starts in the Black Forest region of Germany and travels all the way to the Romanian Black Sea coast.
3. IT’S A 20TH CENTURY GRAVEYARD FOR POWERFUL WARSHIPS
In 1944, sensing defeat was imminent, hundreds of German ships were scuttled in the Danube to avoid capture by the Soviet Union. Today, the warships can be seen from the banks of the Danube during summer, as the river’s water level falls.
4. IT PASSES THROUGH OR BESIDE TEN DIFFERENT COUNTRIES
As it travels from the Black Forest to the Black Sea, the Danube passes through or beside ten different countries. It also passes through some of Central and Eastern Europe’s most important cities, such as Vienna, Budapest, and Belgrade. It flows through ten countries – Germany, Austria, Slovakia, Hungary, Croatia, Serbia, Bulgaria, Moldova, the Ukraine and Romania – and thus more countries and landscapes than any other river on the continent.
5. IT’S LINED BY A SERIES OF POPULAR BICYCLE TRAILS
The Danube is an important local landmark, as well as a popular tourist site. As it travels through major cities, the Danube is lined by hundreds of bicycle trails and walking paths.
6. IT’S BEEN A HISTORICAL HOTSPOT FOR ARTISTS
The Danube is more than just a shipping lane – it’s one of Europe’s most important cultural landmarks. The river has featured in Greek legends, Romanian folk songs, and hundreds of modern novels.
The Best River Cruise prices found here!
7. IT SUPPLIES DRINKING WATER TO MILLIONS OF PEOPLE
Its immense volume of water makes the Danube one of Central Europe’s most vital sources of fresh drinking water. The river supplies millions of people with drinking water, particularly residents of the German city Stuttgart.
8. IT’S ONE OF EUROPE’S MOST IMPORTANT SHIPPING ROUTES
Through the Bavarian canal system, the Danube connects the Atlantic Ocean with the Black Sea. Because of this, it’s one of Europe’s most important shipping routes, capable of accommodating even the largest of shipping vessels.
9. IT’S HOME TO HUNDREDS OF AMAZING FLORA AND FAUNA SPECIES
The Danube is a hotspot for flora and fauna, boasting almost 200 species of fish in its waters. During the Middle Ages, the river was an important source of food due to its huge supply of sturgeon.
10. IT’S BECOMING A HOTSPOT FOR SCENIC RIVER CRUISES
Once a primarily economic river, the Danube is quickly becoming one of Central and Eastern Europe’s most valuable tourist destinations. River cruises on the Danube, as well as tours around its many cities, are very popular with international visitors.
xxx
Pollution Problem
A wide-ranging global study has identified the Danube as the river with the highest concentration of antibiotics in Europe and the single most polluted on the continent.
The Danube begins in Germany and snakes through nine other countries, covering 2,850 kilometres, before draining into the Black Sea.
In 2019, a group of Austrian scientists noted a “critical” presence of E. coli bacteria in Serbia’s strip of the river, which can cause infections in humans. Local experts noted that this is a sign of the high levels of organic pollution.
Thanks to its sheer size and power, the Danube mostly manages to “cleanse itself,” said Bozo Dalmacija, a chemistry professor leading a water quality research team in Serbia
xxx
Flora & Fauna
Where the mighty Danube River meets the Black Sea, it has created a massive delta land, Europe’s largest wetland area.
The Danube Delta, the largest river delta wetland in Europe, has become one of the finest, wildest, best protected and most famous wildlife areas of the whole continent. The area provides new sources of income and pride for the people who live here and in the surrounding Romanian, Ukrainian and Moldavian regions.
The 580,000 hectare delta is home to massive amounts of waterbirds of all kinds, most notably white pelicans, herons, storks, cormorants and terns. It is a favourite staging area for passage migrants and also wintering grounds for masses of migrating waterbirds from the steppes, the boreal forests and the Tundras further north.
The delta is harbouring the largest number of fish species anywhere in Europe, including Beluga sturgeon.
Flowing 2,857 km from Germany’s Black Forest to the Danube Delta in Romania and Ukraine and the Black Sea, the Danube is Europe’s only major river which flows west to east, from Central to Eastern Europe. The European Commission now recognizes the Danube as the “single most important non-oceanic body of water in Europe” and a “future central axis for the European Union”. Major tributaries of the Danube include the Tisza, Drava, Sava, Inn, and Prut rivers.
About 83 million people live in the Danube River Basin and more than 20 million people depend directly on the Danube for their drinking water – primarily groundwater from domestic wells. The basin also unifies and sustains a wealth of diverse cultures and traditions.
More than 80% of the length of the Danube has been regulated, and over 700 dams and weirs have been built along its main tributaries.
This river flows through 10 countries. Start from Germany, this river flow through Austria, Slovakia, Hungary, Croatia, Serbia, Romania, Bulgaria, Moldova, and Ukraine and end up in Black Sea. Some of top-class fishing species, like Pike, Zander, Welsh Catfish, Tench, Carp, Sturgeon, Salmon or Trout can be found in this river. More than that, in Danube delta, you also can find many unique Euryhaline fish, like eel, Sea bass and Mullet.
The Danube salmon can reach the size of a man and live for 30 years – but its last hunting grounds in the Balkans are being threatened by a rash of dam-building.
xxx
DAMS
The upper part of the Danube is ideal for building hydropower plants due to the river’s natural gradient. A total of 59 dams have been built along the Danube’s first 1,000 kilometres – from the source down to Gabcikovo – many of them decades ago. This means that the Upper Danube is interrupted every 16 km on average.
Around 60% of the electricity generated in Austria yearly originates from hydropower – 20% produced along the Danube itself
At a high-level meeting of the International Commission for the Protection of the Danube River in Innsbruck, Austria, representatives of Danube basin countries discussed for the first time how to prevent new hydropower projects from damaging river ecosystems of the 800,000 km2 large basin.
Hundreds of books have been written on this beautiful river in addition to many documentaries.
—-subham—
Tags- Danube, My visit, Vienna, Facts, about, I saw
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதரும் தமிழும்! – 2
ச.நாகராஜன்
அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.
முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.
பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.
அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.
11) திருச்செந்தூர்
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
செந்திற் பதிநக – ருறைவோனே
பாடல் எண் 96 : வஞ்சத்துடனொரு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : செம்மை பொருந்திய சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சூடிக் கொண்டு திருச்செந்தூர் நகரில் உறைந்திருப்பவனே!
12) பழநி
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர இனி வரவேணும்
பாடல் எண் 115 : இத்தாரணிக்குள் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உன்னுடைய உண்மை ஞானத்துக்கு உறைவிடமான திருவடித் தாமரைகளைப் பற்றுக் கோடாக அடைந்து தமிழ்க் கவிதைகளை ஓதிப் பணிந்து உருகும்படியான அன்பை இன்று அடியேனுக்குத் தர இனி வந்தருள வேண்டும்.
13) பழநி
வற்றா மதுக் கருணை உற்றே மறைக் கலைகள்
ஓதித் தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி
அத்தா
பாடல் எண் 115 : இத்தாரணிக்குள் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வற்றாத தேன் போலக் கருணையைப் பூண்டு, வேத நூல்களை ஓதி நன்கு பயின்று தமிழை ஆராய்ந்து தேவாரப் பாமாலைகளைத் தந்தைக்குச் சூட்டிய திருஞானசம்பந்தராக வந்த ஐயனே!
14) பழநி
தமிழ்க் காழி மருதவன மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி வருகுழகர் – தருவாழ்வே
பாடல் எண் 121 : உயிர்க்கூடு விடுமளவும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சம்பந்தரின் திருநெறித்தமிழ் எனப்படும் செந்தமிழ் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய சீகாழி திருவிடைமருதூர், வேதாரணியம், திருமருகல், தநுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான் தந்த குமரனே!
15) பழநி
மெய்ப் பலகை
சதுபத் துநவப் புலவர்க் கும் விபத் – தியில் ஞான
படலத் துறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்
பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் – குருநாதா
பாடல் எண் 126 : கடலைச் சிறை வைத்து எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சங்கப் பலகையில் வீற்றிருந்த நாற்பத்தொன்பது புலவர்களுக்கும் வேறுபாடு இல்லாத முறையில் ஞானப் பகுதியில் உள்ள இலக்கண இலக்கிய (இயல், இசை, நாடகம் ஆகிய) முத்தமிழில் (சிவபெருமான் இயற்றிய) அகப்பொருள் விளக்கத்தைக் குற்றமின்றி உணர்வித்து அருளிய வித்தகனே, சற் குருநாதனே!
16) பழநி
சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு
கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர
தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய – பெருமாளே
பாடல் எண் 155 : சிந்துர கூரமருப்பு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிறப்பு மிக்க குறத்தியாகிய வள்ளியின் இன்பம் பொலியும் மார்பகத்தை விரும்பி மேவும் சாமர்த்திய அழகனே, தண்ணிய தமிழ் வழங்கும் பழநி மலையில் தங்கி வீற்றிருக்கும் பெருமாளே!
17) பழநி
சொர்க்கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றமிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல் கதியைப் – பெறவேணும்
பாடல் எண் 167 : திடமிலி சற்குணமிலி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சொர்க்க உலகத்தில் இடம் பெறத் தகுதி இல்லாதவன் யான். கைகளால் ஒரு தானமும் கொடுத்து அறியாதவன் யான். உன்னை நல்ல தமிழ்ப் பாடலால் பாடுவதற்கு ஏற்ற சொல்வன்மை இல்லாதவன் யான். (இத்தகைய குறைபாடுகள் உள்ள அடியேன்) உனது இரண்டு திருவடிகளையும் அடைந்து, நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் தீர்ந்து உயர்ந்த முக்தி நிலையைப் பெற்று உய்ய வேண்டும்.
18) பழநி
கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு
கற்பனை நெற்பல அளித்த காரண – னருள்பாலா
பாடல் எண் 172 : நெற்றி வெயர்த்துளி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நன்கு கற்ற தமிழ்ப் புலவனாகிய சுந்தரர் மீது மகிழ்ச்சி பூண்டு ஒரு பொன் கொடி போன்ற அவரது மனைவியார் (பரவையார்) களிப்புற, தாம் இட்ட கட்டளைப்படி வந்து குவிந்த நெல் மலையை அளித்த மூலப் பொருளான சிவபெருமான் அருளிய பாலனே!
விளக்கம் : இங்கு பாடலில் குறிப்பிடப்படும் சம்பவம் இது:
சுந்தரர் பரவையாரோடு திருவாரூரில் வாழ்ந்து வந்த போது குண்டையூர் கிழவர் என்பவர் சுந்தரருக்கு நெல்லைத் தவறாது அளித்து வந்தார். ஒரு சமயம் மழை இல்லாமல் போகவே நெல் கொடுக்க முடியாமல் அந்தக் கிழவர் வருந்தினார். அவரது வருத்தம் நீங்கும் படி சிவபெருமானே நெல் மலை அளித்தார்.
இந்த வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது.
19) பழநி
பலபல பைம்பொற் பதக்க மாரமு
மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப் பனீரொடு
பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு – மணிவோனே
பாடல் எண் 183 : மலரணி கொண்டை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பற்பல விதமான பசும் பொன்னால் ஆகிய பதக்கங்களையும், மாலைகளையும், அடிமையாகிய நான் சொல்லுகின்ற திருப்புகழ் என்னும் தமிழ்ப் பன்னீரையும், நறுமணம் மிக்கு வீசும் கடப்ப மாலையையும் அணிபவனே!
20) சுவாமிமலை
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த – மயில்வீரா
பாடல் எண் 216 : சரண கமலாலயத்தை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிவந்த தாமரை இதழ் போன்ற உன் பாதங்களைத் தினந்தோறும் நான் துதிப்பதற்கு அருமையான தமிழ் ஞானத்தைத் தந்த மயில் வீரனே!
***
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.
புத்தக அறிமுகம் – 96
அறிவியல் அதிசயங்கள் (பாகம் 3)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. நீங்களும் படைப்பாளி ஆகலாம்!
2. இசை கேட்டால் அறிவு வளரும்
3. குழந்தைகளும் ‘யோசனை’ கூறலாம்
4. குழந்தைகளின் அறிவுத்திறன்
5. அறிவு வளர குழந்தைகளுடன் பேசுங்கள்
6. குட்டிக் குழந்தைகள் பேசுகின்றன…
7. உங்கள் குழந்தைகளை சாதனையாளர் ஆக்குவது எப்படி?
8. ஜாக்கிரதை! வருகிறது ந்யூரோ மார்க்கடிங்!
9. அறிவியல் அலசலில் ‘காதல்’
10. கர்ப்பம், பிரசவம் இல்லாமல் குழந்தை!
11. இதோ கருத்தடைப் பட்டை! இனி வேண்டாமே மாத்திரைகள்!!
12. மார்பகப் புற்றுநோய் இனி பயமில்லை…
13. மார்பகத்தை பாதுகாக்க டிப்ஸ்…
14. மொபைல் போன்
15. வேண்டாமே சிசேரியன்!
16. ஏ டு இஸட் – உங்கள் கணவரை அலசுங்கள்
17. உடல் பேசும் மொழி
18. நூறு வரும் வாழும் சூப்பர் மனிதன்!
19. ஹிட்லரின் சங்கேத மெஷின்!
20. ஹிட்லரின் தங்கப் புதையல்!
21. ஷீபா ராணியைத் தேடி…
22. விந்தை மனிதர் செஷைர்
23. கில்லடின் கதை
24. உலகின் முதல் அணுகுண்டைப் போட்டவர்!
25. வினாடிகளுக்குப் பின்னர் குண்டு வெடித்தது
26. கல் வட்டம்
27. கல்மரங்கள்
28. உலகிலேயே தன்னந்தனியான சின்னத்தீவு
29. மான் வடிவத்தில் ஒரு தோட்டம்!
30. பயோமெட்ரிக் பாஸ்போர்ட்!
31. கான்சர் நோய்க்கு ஒலி சிகிச்சை
32. நோய் தீர்க்கும் காந்தசக்தி!
33. சேற்றைப் பூசினால் பொலிவு கூடும்!
34. மனிதனுக்குப் பன்றியின் உறுப்புகள்!
35. ஆர்டர் கொடுத்தால் உங்கள் குரூப் ரத்தம் தயார்!
36. ஆக்சிஜன் குளியல்
37. விஷமே வியாதிக்கு நிவாரணம்
38. கிரீனிச்
39. உப்பு உயிரைக் குடிக்கும்!
40. சாக்லெட், சாக்லெட்!
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
The marvels of science and inventions are expanding in an amazing way, so the book has come in its third installment to astonish the readers. Reading the three parts altogether, makes the reader to go awe. The very names of the articles such as Kaalap Payanam (Time Travel), Jaakkirathai! (Caution!), Varugirathu Neuro Marketing (Here comes the Neuro Marketing) and Manithanukkup Pandriyin Uruppugal (Pig’s Organs for Humans) enthrall the readers. Read the full book to reach the peak of excitement.
அறிவியல் அதிசயங்களும், கண்டுபிடிப்புகளும் வியக்கத்தக்க வகையில் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. எனவே ‘அறிவியல் அதிசயங்கள்’ நூல் மூன்றாம் பாகமாக வெளிவந்துள்ளது. மூன்று பாகங்களும் சேர்த்துப் படித்தால், விஞ்ஞானத்தின் வளர்ச்சியை எண்ணிப் பிரமிக்கச் செய்கின்றன.‘காலப் பயணம்’, ‘ஜாக்கிரதை! வருகிறது ந்யூரோ மார்க்கெடிங்’, ‘மனிதனுக்குப் பன்றியின் உறுப்புகள்’ என நூலின் சில அத்தியாயங்களின் பெயர்களே மிரள வைக்கின்றன. முழு நூலையும் படித்துப் பார்த்தால் வியப்பின் உச்சிக்கே செல்லலாம்.*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 3’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Five years ago, I wrote an article about Akbar’s interest in Sun Worship (Surya Namaskara). In a footnote to a sloka in Rajatarangini of Kalhana (History of Kashmir) R.S.Pandit gives more interesting details of Sun Worship of Moghul emperor Akbar.
Kashmir is famous for Sun Worship . It was ruled by Hindu Kings until 12th century. Later Muslim rulers invaded and captured power . But yet Babar and Akbar followed some ancient customs.
Here is what R S Pandit says in his translation of Rajatarangini from Sanskrit into English:
Sloka 7-709
Thinking there had been divine anger owing to the destruction of the image of Taamra svaamin (Sun), he (Kashmir king) proceeded to seek refuge with Maartanda to save his life.
xxx
Foot note to sloka 709 in Seventh Taranga of Rajatarangini (raajataranginii)
This is the famous shrine at Matan, according to Prof.Foucher “rise proudly like a Greek Temple on a promontory”. Apparently, sun worship was prevalent in Kashmir in the time of Kalasa. We know that Akbar attempted to revive the worship of the sun.
The Portuguese account is as follows: It is quite true that he held the law of Mahomed of no account but he was much addicted to the worship of the sun to which he made prayers four times a day, namely in the morning when he rose, at noon , on retiring to bed and again at midnight. On each occasion he repeated as many as a thousand and fifty names of the luminary, which he counted by means small balls threaded like our paternosters, but consisting of beautiful precious stones.” This is corroborated by Badaoni , who tells us that people used to crowd every morning “opposite the window near which his Majesty used to pray to the sun…….. No sooner his Majesty finished saying the thousand one names of the “Greater Luminary” and stepped into the balcony, then the whole crowd prostrated themselves” (Muntakhab ut-law-arikh Vol.II, page 336)
The worship of the “dazzling Surya” is still the living faith of India of millions of people including the remnant of the ancient Iranians , the Parsis. It is being revived in recent times through physical culture exercises known as ‘Surya Namaskars’ which the Maratha generalissimo at Panipat Sadasiva Rao Bhau practised thousand times a day.
Rajatarangini English Translation, Year 1935
–subham–
My Old articles:
Akbar was a Hindu Saint in his Former Life! (Post No.3988)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதரும் தமிழும்! – 1
ச.நாகராஜன்
அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.
முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.
பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.
அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.
1) திருப்பரங்குன்றம்
வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்
பாடல் எண் 14 – சருவும் படி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வளமான தமிழைப் பயில்கின்றோர் பின்னால் திரிகின்றவன்
2) திருச்செந்தூர்
தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க் கன்றற் புதமாகச்
சிவ வடி வங்காட் டுஞ்சற் குருபர
பாடல் எண் 26 அவனி பெறுந்தோட்டம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தமிழ் போல் இனிய இளம் தென்றல் காற்றில் உலாவும் மன்மதனாம் லக்ஷ்மி மகனை, அன்று அற்புதமாக நெருப்பை எழுப்பி வென்ற சிவபிரானுக்கு பேரின்ப உண்மையாம் மங்களப் பொருளைக் காட்டிய சற்குருபரனே!
3) திருச்செந்தூர்
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழைரு
செவி குளிர இனியதமிழ் பகர்வோனே
பாடல் எண் 28 : அறிவழிய மயல் பெருக எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிவனுக்கு ஒப்பான பொதியமலையைச் சார்ந்த முனிவனான அகத்தியனின் உள்ளம் மகிழ அவனது இரண்டு செவிகளும் குளிர இனிய தமிழை ஓதியவனே!
4) திருச்செந்தூர்
தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே
பாடல் எண் 52 : கொடியனைய எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தமிழில் வல்லவனே! உயர்ந்த பரம் பொருளாகிய சங்கரன் வணங்கும் தம்பிரானே!
5) திருச்செந்தூர்
புகலரியதாம் த்ரி சங்கத்
தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சிப்
புவியதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர்
புனிதம் இலி மாந்தர் தங்கள்
புகழ் பகர்தல் நீங்கி நின் பொன்
புளக மலர் பூண்டு வந்தித் திடுவேனோ
பாடல் எண் 60 : தகர நறை பூண எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சொல்வதற்கு அரியதாம் முச்சங்கத்து தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில் வாழ்ந்தும் பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும் புனிதமில்லாத மக்களிடம் போய் அவர்களைப் புகழ்ந்து பேசுதலை விட்டு விட்டு உனது அழகிய இன்பம் தருகின்ற திருவடி மலர்களை மனதில் கொண்டு துதிக்க மாட்டேனோ?
6) திருச்செந்தூர்
தகைக்கும் தனி திகைக்கும் சிறு
தமிழ்த் தென்றலி னுடனேநின்
றெரிக்கும் பிறையெனப் புண்படு
மெனப் புன்கவி சிலபாடி
இருக்கும் சிலர்
பாடல் எண் 64 : தரிக்குங்கலை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தனிமையில் நின்று திகைக்கின்றேன். மெல்லிய இனிய தென்றல் காற்றுடன் வந்து சந்திரன் நின்று கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன் என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி சில புலவர்கள் வீணே இருக்கின்றனர்.
தமிழ்த் தென்றல் – இனிய தென்றல்
7) திருச்செந்தூர்
மழுக்கைக் கொண்ட சங் கரர்க்குச் சென்று வண்
தமிழ் சொற் சந்தமொன்று அருள்வோனோ
பாடல் எண் 71 : நிதிக்குப் பிங்கலன் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மழுவைக் கையில் ஏந்தியவருமான சங்கரற்கு குருவாகச் சென்று வளமான தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை ஓதியவனே!
8) திருச்செந்தூர்
துணைச் செம்பொற் பதத்து இன்புற்று
எனக்கென்று அப் பொருள் தங்கத்
தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய்
பாடல் எண் 79 :பருத்தந்த எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உனது இரண்டு செம்பொன் பாதங்களில் இன்புறச் செய்து எனக்கு எப்போதும் அப்பெரும் பொருள் நிரம்பத் தங்கும்படியாகத் தொடுக்கப்படும் தமிழ்ச் சொற்களைத் தந்து இப்போதே ஆண்டு அருள்வாய்!
9) திருச்செந்தூர்
முந்து தமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொழு நீடு பாடிப் பாடி
முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி உழலாதே
பாடல் எண் 91 : முந்து தமிழ் மாலை கோடிக் கோடி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மொழிகளில் முந்தியுள்ள தமிழ் மொழியில் பாமாலைகளை கோடிக் கோடிக் கணக்கில் சந்தப் பாக்களின் வகையில் நீண்டனவாகப் பாடிப் பாடி அழிகின்ற மக்களின் வீட்டு வாசல்கள் எங்கே உள்ளன என்று தேடித் தேடி அலையாமல்…
10) திருச்செந்தூர்
வாய்ப்புற்ற தமிழ் மார்க்கத் திண் பொருள்
வாய்க்குச் சித்திர முருகோனே
பாடல் எண் 93 : மூப்புற்றுச் செவி கேட்பற்று எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வாய்ப்புள்ள தமிழின் அகத்துறையின் உறுதியான பொருளை உண்மை இதுவே என ருத்திரசன்மனாக வந்து அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே!
விளக்கம் : இந்தப் பாடல் விளக்கும் சம்பவம் இது:
மதுரையில் சொக்கநாதர் இயற்றிய இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு நக்கீரர் ஒரு உரையை எழுதினார். அந்த உரையே சிறந்த உரை என்று சங்கப் புலவர்களிடையே முருகனே ருத்திரசன்மனாக வந்து நிலை நாட்டினான்.
இதைத் திருவிளையாடல் புராணத்தில் விளக்கமாகக் காணலாம்.
***
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
புத்தக அறிமுகம் – 95
அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. சூரியனிலிருந்து பூமியை நகர்த்தப் போகிறார்களா?
2. சூரியனில் வெடிப்பு – பூமியைப் பாதிக்குமா?
3. நிலவில் குண்டு போட அமெரிக்கா திட்டம்
4. பூமி ஒரு குக்கிராமம்
5. புதிய கோணத்தில் பூமியின் வளர்ச்சி….
6. சூடாகும் பூமி
7. ஓஸோன் துளை பெரிதாகிறது
8. விண்வெளிச் சாலை
9. விண்கலத்தின் ஓட்டுநர் அறை எப்படி இருக்கும்?
10. ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களை அழைத்த நாஸா.
11. விண்வெளியில் குப்பை கூட்ட லேசர் விளக்குமாறு
12. விண்வெளி ஜோதி
13. வானிலையை மாற்றும் நட்சத்திர ரகசியம்
14. சிரியஸ் நட்சத்திரம்
15. அமெரிக்காவில் சுனாமி ஆபத்து
16. அண்டார்டிகா ஆபத்து
17. அண்டார்டிகா பனி நெடுஞ்சாலை
18. பனி மனிதன் இருக்கிறானா?
19. பனி மனிதன் இருக்கிறான்
20. முதல் மனிதன் தோன்றியது எங்கே?
21. தூக்கம் விளக்கும் ரகசியங்கள்
22. ஒரு நாளைக்கு 26 மணி நேரம் ஆக்குவது எப்படி?
23. அரிய வகை மரம்
24. நோய் தீர்க்கும் மூலிகைகள்
25. சிகரெட்டும் போதைப் பொருளே
26. அபாயத்தில் மனித குலம்
27. லோகி பேர்ட்
28. ஆயிரம் கண்டுபிடிப்புகளைத் தந்த அபூர்வ மேதை
29. காலப் பயணம்
30. மூளையை நூறு விழுக்காடு முழுவதுமாகப் பயன்படுத்த ஏழு
அதிசய வழிகள்
31. சித்திரவதை
32. வியர்வை ஊசி!
33. பெண்களைக் கவரும் நீலக் கண்கள்
34. டெலிவிஷனிலிருந்து விஷப்புகை
35. செயற்கைப் பெண் இயந்திரம் தயார்
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This amazing book consists of incredible phenomenon and peculiar astonishing facts from all over the world. Interesting to read about the use of Laser Cannons to sweep up the galaxial garbage and also America’s plan to bomb the moon and galaxial road. The statistical analysis of imagining the earth as a tiny city excites the readers wondrously. This book also contains segments such as igloo men, first man of the world and time travel etc.
உலகின் பல்வேறு அதிசய நிகழ்வுகளையும், வித்தியாசமான செய்திகளையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல். விண்வெளியில் குப்பையைக் கூட்ட லேசர் விளக்குமாறு தேவைப்படும் எனும் செய்தி அதிசயிக்க வைக்கிறது. நிலவில் குண்டு போட அமெரிக்கா எடுத்திருக்கும் திட்டம், விண்வெளிச் சாலை போன்றவை பிரமிக்க வைக்கின்றன. பூமியை ஒரு குக்கிராமமாகக் கற்பனை செய்தால் எப்படி இருக்கும் என ஒரு புள்ளியியல் விவரணை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இன்னும் பனிமனிதனைப் பற்றிய செய்திகள், உலகின் முதல் மனிதனைப் பற்றிய சேதிகள், காலப்பயணம் என பலதரப்பட்ட விஷயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது இந்நூல்.*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 2’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Tamils divided the entire living beings into two divisions
உயர் திணை Uyar Thinai= Higher beings (Devas, Gods, Human beings)
xxx
அஃறிணை Ah Rinai = that which is not higher (animals, in animate objects)
You use the same verb for in animate objects and animals
Xxx
Today I gave you eight verbs in two tables; that is eight mangoes in one stone in Tamil or 8 birds in one stone in English.
If u know the stem and suffix you will be able to do the conjugation.
NEW VERBS
Kala= mix= கல
Ira = die= இற
Iza (ila) = lose = இழ
xxx
In another table
Ala = measure= அள
Kada= pass by = கட
Mudi = finish = முடி
Tholai = lose something = தொலை
Kalai -= shuffle, change the order, disperse கலை
xxx
இதுவரை நாம் கற்றதை நினைவு கூறுவோம்
Remember – Irregular verbs such as Vaa= come and Po=Go do not obey the rules; you just memorise them.
xxxx
நிகழ்காலம் Present
Add KIRA and then PGN suffix
வினைச் சொற்களுடன் ‘கிற’ என்பதைச் சேர்த்து இறுதியில் தன்மை, முன்னிலை, படர்க்கை மற்றும் ஆண் , பெண் , ஜடப்பொருள் அல்லது அஃறிணை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இறுதியில் ஒருவரா பலரா என்பதற்கு ஏற்றவாறு விகுதியை சேர்க்கவேண்டும் .
‘கிற’ என்பதையும் கின்ற KINDRA is also similar to KIRAஎன்பதையும் பயன்படுத்தலாம். ஆனால் அது பேச்சு வழக்கில் அதிகம் இல்லை
சாப்பிடுகிறேன் ,சாப்பிடுகின்றேன்
xxx
வருங்காலம் Future
Add V or PP and then PGN
மேற்கூறி யது போலவே ; ஆனால் கிற என்பதற்குப் பதிலாக வ் அல்லது ப் ப் என்பதை பயன்படுத்துவோம்
சாப்பிடுவேவ் sasppiduVen
படிப்பேன் padiPPen
இறந்த காலம் Past Tense (very difficult 7 different types with sub divisions as well
ஏழு வகுப்பு வினைச் சொற்களும் வேறு வேறு விதமாக செயல்படும்
xxx
கட்டளை வாக்கியம் Command or Request (Imperative)
ஒருமையில் வினைச் சொல்லை அப்படியே பயன்படுத்தலாம்
வா, போ , செய், சாப்பிடு , படி
பன்மை அல்லது மரியாதை கொடுக்கையில் உங்கள் என்பதை சேர்க்க வேண்டும்
அப்படிச் சேர்க்கையில் இடையில் சில எழுத்துக்களை சேர்ப்போம் அல்லது நீக்குவோம் Add Ungal following morphophonemic rules
xxxx
Negative Imperative
எதிர்மறை கட்டளை வாக்கியங்களில்
ஆதே அல்லது ஆதீர்கள் என்பதை வினை எச்சகத்துடன் சேர்க்கவும்
அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவனைச் சுடக்கூடாது என்று சீதா தேவி வெளியிட்ட வேண்டுகோளை அக்கினி பகவான் ஏற்றான் . ஏனெனில் அவள் கற்புக்கரசி.; மனம், மொழி, மெய் மூன்றின் மூலம் வேறு ஆடவணை நினையாத பெண்களுக்கு அற்புத சக்தி உண்டு என்று வள்ளுவனும் சொன்னான்.
சீதையின் ஸ்லோகங்களை வால்மீகி முனிவரின் வாயிலாகத் தொடர்ந்து பார்ப்போம்:- இவை சுந்தர காண்டத்தில் வரும் ஸ்லோகங்கள்
हनुमज्जनकश्चापि पुच्छानलयुतोऽनिलः।।5.53.33।।
ववौ स्वास्थ्यकरो देव्याः प्रालेयानिलशीतलः।
ஹநுமஜ் ஜனகஸ் சாபி புச்சானலயுதோ அனிலஹ
வவெள ஸ்வாஸ் த்ய கரோ தேவ்யாஹா ப்ராலேயானில சீதலஹ
தெய்வீகப் பெண்ணின் (சீதையின்) மனதைச் சாந்தப்படுத்தும் முகமாக, வாயு பகவானும் அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ மீது குளிர்ந்த காற்றை வீசினான்.
(அனல = அனல்/ தீ ; அநில= காற்று; சீதல = குளிர்ச்சி), புச்சம்= வால்
Xxx
दह्यमाने च लाङ्गूले चिन्तयामास वानरः।।5.53.34।।
प्रदीप्तोऽग्निरयं कस्मान्न मां दहति सर्वतः।
தஹ்யமானே ச லாங்கூலே சிந்த்யாமாச வானரஹ
ப்ரதீப்தோ அக்னிரயம் கஸ்மான்ன மாம் தஹதி ஸர்வதஹ
வால் எரியும்போது , எல்லா பக்கங்களிலும் எரியும் தீ எப்படி தன்னைச் சுடவில்லை என்று அந்த வானரமும் வியப்புற்றது .
வானர = மனிதக் குரங்கு= வன+ நர = வனத்தில் வாழும் மனிதன்/நரன்
லாங்கூலம் = வால் ; தஹ்ய = தகித்தல் ; மாம் = என்னை; சிந்த்யா = சிந்தித்தது ; அக்னி = தீ
Xxx
दृश्यते च महाज्वालः करोति न च मे रुजम्।।5.53.35।।
शिशिरस्येव सङ्घातो लाङ्गूलाग्रे प्रतिष्ठितः।
த்ரச்யதே ச மஹா ஜ்வாலஹ கரோதி ந ச மே ருஜம்
சிசிரஸ்யேவ ஸங்காதோ லாங்கூலாக்ரே ப்ரதிஷ்டிதஹ
இந்த பெரிய தீ எனக்கு கெடுதல் எதையும் செய்யவில்லை ; என்னுடைய வாலில் ஐஸ் கட்டியை வைத்தது போலல்லவா இருக்கிறது (மேலும் வால் பகுதிக்கு மேல், தீ பரவவும் இல்லை )
லாங்கூல அக்ரே – வாலின் நுனியில் மட்டும்; ப்ரதிஷ்டிதஹ = நிலையாக நிற்கிறதே
xxxx
अथवा तदिदं व्यक्तं यद्दृष्टं प्लवता मया।।5.53.36।।
रामप्रभावादाश्चर्यं पर्वत स्सरितां पतौ।
‘அதவா ததிதம் வ்யக்தம் யத் த்ருஷ்டம் ப் லவதா மயா
ராம ப்ரபாவாதாஸ்சர்யம் பர்வத ஸரிதாம் பதெள
ராமபிரானின் சக்தியால்தான் இது நிகழ்கிறது . நான் கடலைக் கடக்கும்போது கூட எனக்கு பாதுகாப்பு தருவதற்காக (ஓய்வு எடுப்பதற்காக ) ஒரு அற்புத மலை எழுந்து நின்றது (இப்போது வால் எரியாமல், சுடாமல் இருப்பதற்கும் ) ராமனின் சக்திதான் என்பது வெளிப்படை
Xxx
यदि तावत्समुद्रस्य मैनाकस्य च धीमतः।।5.53.37।।
रामार्थं सम्भ्रमस्तादृक्किमग्निर्न करिष्यति।
‘யதி தாவத் ஸமுத்ரஸ்ய மைநாகஸ்ய தீமதஹ
ராமர்த்தம் ஸம்ப்ரமஸ்தா த்ரவ்கிமக்னீர் ந கரிஷ்யதி
கடல் என் மீது காட்டிய அக்கறை காரணமாக , புத்திசாலியான மைநாக மலையே எனக்காக எழுந்து வந்ததே ! மலை கூட ராமனுக்கு சேவை செய்கையில் தீ செய்ய முடியாதது என்ன ?
xxx
सीतायाश्चानृशंस्येन तेजसा राघवस्य च।।5.53.38।।
पितुश्च मम सख्येन न मां दहति पावकः।
ஸீதாயாஸ் சா ன்ருசம் ஸ்யேன தேஜஸா ராகவஸ்ய ச
பிதுஸ்ச மம ஸக்யேன ந மாம் தஹதி பாவகஹ
சீதையின் உறுதியான கற்பு, ராமனின் சக்தி , அக்னி பகவானுடன் உள்ள என் தந்தையின் நட்புறவு ஆகியவற்றால்தான் தீ என்னை எரிக்கவில்லை .
மம பிதுஸ் ஸக்யேன= என் தந்தையின் நட்புறவு ; பாவக = தீ
இந்த கடைசி ஸ்லோகத்த்தில்தான் வால்மீகி முத்தாய்ப்பு வைக்கிறார். ஒரு அற்புதம் நிகழ்கையில், ஒரு மனிதன், மனதில் என்ன என்ன எண்ணங்கள் ஏற்பட்டு வியப்புறுவான் என்ற உளவியலை (Psychology) இங்கே பார்க்கிறோம். ஸீதா, ராமனின் மஹத்தான சக்தியைப் புகழ்ந்துவிட்டு இறுதியில் மட்டும் தன் குடும்பத்தை நினைக்கிறார் ; காற்றுக்கும் தீ க்கும் உள்ள நட்புறவு இயற்கையில் நாம் காண்பதே ; அதை வாயு புத்திரனான அனுமன் கடைசியில் நமக்குக் காட்டுகிறான் . வால்மீகி முனிவரின் எளிய சம்ஸ்க்ருத நடையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். உலகம் முழுதும் தோன்றிய 3000 ராம காதைகள் , பாடல்கள், கிருதிகள் , திரைப்படங்கள், டிவி சீரியல்கள் எல்லாவற்றுக்கும் மூல புருஷன் வால்மீகி. காலத்தால் அழியாத காவியத்தை நமக்கு அளித்தவர் வால்மீகி!!
— சுபம் —
தீ எரிக்காது-, இந்து மத அற்புதம்-3 , சுந்தர காண்டம், வால்மீகி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யோகி ஆதித்ய நாத் கேட்கும் ஒரு கேள்வி ? பதிலை செகுலரிஸ்டுகள் சொல்வார்களா?
ச.நாகராஜன்
யோகி ஆதித்யநாத் அவர்கள் தனது நிலை பற்றி இப்படித் தெளிவாகக் கூறுகிறார்.
1. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு ஹிந்து மதத்தை மதிக்கிறாரோ அதே அளவுக்கு நான் இஸ்லாத்தை மதிக்கிறேன்.
2. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு ஶ்ரீ ராமரை மதிக்கிறாரோ அதே அளவுக்கு நான் அல்லாவையும் மதிக்கிறேன்.
3. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு கீதைக்கும் இராமாயணத்திற்கும் மதிப்புக் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு நான் குர்-ஆனுக்கும் மதிப்புக் கொடுக்கிறேன்.
4. இஸ்லாமியர் எந்த அளவுக்கு ஹனுமான்ஜிக்கு மதிப்புக் கொடுக்கிறார்களோ அதே அளவுக்கு நான் மஹம்மது நபி அவர்களுக்கும் மதிப்புக் கொடுக்கிறேன்.
5. ஒரு முஸ்லீம் கோவிலை எந்த அளவுக்குப் புனிதம் என்று கருதுகிறாரோ அதே அளவிற்கு மசூதியை நான் புனிதம் என்று மதிக்கிறேன்.
6. இஸ்லாமிய ஆண்கள் ஹிந்துப் பெண்களுக்கு எந்த அளவு மதிப்பைத் தருகிறார்களோ அதே அளவிற்கு நான் இஸ்லாமியப் பெண்களுக்கும் மதிப்புத் தருகிறேன்.
7. இஸ்லாமியர் ஹிந்துப் பண்டிகைகளை எந்த அளவு மதிக்கிறார்களோ அதே அளவிற்கு நான் இஸ்லாமிய பண்டிகைகளை மதிக்கிறேன்.
இப்படி இருக்கும் போது என்னை மதவெறியன் என்று எப்படிச் சொல்ல்லாம்?
நன்றி : ட்ரூத் ஆங்கில வார தொகுதி 90 இதழ் 5 13-5-2022
இதன் ஆங்கில மூலம் இதோ:
I. Brilliant Yogi Adityanath says:
1. I respect Islam to the same extent that a Muslim respects Hinduism.”
2. “I respect Allah as much as a Muslim respects Lord Ram.”
3. “I give the same respect to the Quran as a Muslim gives to the Gita or Ramayana.”
4. “I respect Prophet Mohammed as much as Muslims respect Lord Hanumanji.”
5. “I consider a mosque as pure as a Muslim considers a Mandir pure.”
6. “I respect Muslim women as much as Muslim men respect Hindu women.”
7. “I respect Muslim festivals as much as Muslims respect Hindu festivals.” “
Then how can I be called communal?” –from Social Media
Thanks : Truth
Source : Truth WeeklyVolume 90 Issue இதழ் 5 Dated 13-5-2022
***
புத்தக அறிமுகம் – 94
அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. செவ்வாயில் மனிதன் இறங்குவது நிச்சயம்
2. செவ்வாயில் மனித முகம்
3. சூரியன் இறக்கும் நாள்
4. பூமியின் மீது 76 லட்சம் அணுகுண்டுகள் மோதும் நாள்
5. 2028ல் பூமி சுக்கு நூறாகச் சிதறுமா?
6. இன்னொரு பூமி எங்கே?
7. வானத்தில் வைரச் சுரங்கம்
8. மறைந்த விண்கலங்கள்
9. வால் நட்சத்திரத்தில் இறங்கத் திட்டம் 10. ராட்சஸ அலைகள் உண்மையே – ஒப்புக்கொள்ளும் விஞ்ஞானிகள்
11. மேகத்தில் பாக்டீரியாக்கள்!
12. பனி மனிதனின் கால்
13. தேவை நல்ல தூக்கம்
14. உலகை மாற்றிய ஆறு தாவரங்கள்
15. சார்லஸ் பாபேஜ்
16. வருகிறான் இயந்திரன்
17. மூளைக்கும் பயிற்சி தேவை
18. அறிவியல் புதிர்
19. மிஸ் மெமரி
20. பிளாஸ்டிக் நுரையீரல்
21. எதிர்காலத்தைக் கலக்க இருக்கும் சயின்டிஃபிக் சினிமா
22. கண்ணில் அணியும் சினிமா
23. மூளை உள்ள எதிர்கால வீடு
24. காற்றில் எழுதும் எழுத்தையும் பிடிக்கும் பேனா
25. ஆக்ஸிஜன் குளியல்
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
Knowing the human brain is the most important invention of the country and this book serves in understanding the left and right section of the human brain and its impact on the human behavior and actions. Researches have proved that a human brain is never utilized to 100% of its capability. This book answers the 100% utilization issue and tells us the ways and means for cent percent usage of our brains to the full capability. A must read of all age groups.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனை என்றால் அது மனித மூளை பற்றிய ஆராய்ச்சியாகத்தான் இருக்கும். இடப்பக்க, வலப்பக்க மூளைப் பகுதிகளின் குணாதிசயங்களும், அவை மனிதர்களின் பண்புகளில், நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கும் நூல். மனிதர்களின் மூளை அதன் தகுதிக்கேற்பச் செயல்படுத்தப்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையின் முழுமையான செயல்பாட்டிற்கான முறைகள் இந்நூலில் எளிமையாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன. கூடவே, எதிர்கால நியூரல் எந்திரங்கள், மாற்று எரிபொருள், தாவரங்களின் அறிவு ஆகியவை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 1’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.