அதர்வண வேதத்தில் பேய்கள் பட்டியல் (Post No.10,452)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,452
Date uploaded in London – – 16 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான்கு வேதங்களில் சுமார் 20,000 மந்திரங்கள் உள்ளன. வேதங்களில் உள்ள பல சொற்களின் பொருள், மாக்ஸ் முல்லர் கும்பலுக்கும் மார்க்ஸீயக் கும்பலுக்கும் தெரியவில்லை. அது போன்ற இடங்களில் சொந்தக் கருத்துக்களை நுழைத்துவிட்டனர். இந்தக் கும்பலில் 30 வெளிநாட்டினர் அடக்கம். சில சொற்களுக்கு எதிரும் புதிருமாக அவர்கள் அர்த்தம் கற்பிப்பது நமக்கு நல்ல ‘தமாஷ்’ GOOD JOKES ஆக இருக்கிறது. அதர்வண வேதத்தில் ஒரு துதியில் சுமார் 39 பேய்களின், துஷ்ட தேவதைகளின் (GHOSTS, EVIL SPIRITS) பெயர்கள் வருகின்றன. இவைகளை மொழி பெயர்த்தால் மிகவும் விநோதப் பெயர்கள் (FUNNY NAMES) வரும். சில பேய்களின் பெயர்களை மொழி பெயர்க்க முடியவில்லை. இவை மட்டும் மனிதர்களின் பெயர்களாக இருந்தால், உடனே அது ‘ஆரியர் அல்லாத பூர்வ குடி மக்கள்’ என்று எழுதி பிரிவினை வாதம் பேசினார்கள் மார்க்சீய- மாக் ஸ்முல்லர் கும்பல். இங்கோ பேய்கள் !! திராவிடப் பேய்களின் பெயர்கள் என்று திட்ட முடியவில்லை; திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான் !

சுமேரியாவில் காணப்படும் பேய்களின் பெயர்களை முன்னே எழுதியுள்ளேன்; ஆனால் உலகில் எந்த நாட்டு இலக்கியத்திலும் இப்படி தொடர்ந்து ஒரே துதியில் சுமார் 40 பேய்களின் பெயர்ப் பட்டியல் இல்லை.

திரைப்படம் எடுப்போருக்கும் , கதை எழுதுவோருக்கும், கார்ட்டூன் படக்கதை, VIDEO GAME வீடியோ கேம் செய்வோருக்கும் நல்ல ஒரு பட்டியல் இது!

இதோ பேய்களின் பெயர்கள் :-
சங்கத் தமிழ் இலக்கியப் பாடல்களிலும் பெண்களைப் பிடிக்கும் – புதிதாகப் பிறந்த குழந்தைகளைத் தாக்கும் பேய்கள்/ தேவதைககள ள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவைகளை விரட்ட ‘ஐயவி’ என்னும் வெண்கடுகைகைப் புகைக்குமாறும் சொல்லப்பட்டுள்ளது. கீழ்கணட அதர்வண வேத துதியிலும் 12 ஆவது மந்திரம் சூரிய கிரணங்களின் சக்தி பற்றிப் பேசுகிறது ஆகையால் பாக்டீரியா- வைரஸ் கிருமிகளை அவர்களை இப்படிப் பெயர்கள் சூட்டி அழைத்தனரோ என்றும் என்ன வேண்டியுள்ளது .

அதர்வண வேதம்- காண்டம் 8- சூக்தம் 439- கருப்ப தோஷம்
அலிம்சம் , வத்சபம் , பலாலம், அனுபலாலம்
சர்க்கும், கோகம், மலிமலுசம், பலீசகம் ,
அசிரேஷம், வவிராசம், ரிஷக்ரீவம், பிரமீளினம் ,
துர்நாமம், கிஷ்கினம் , அராயம், குஸூலர் ,
குடசீலர், ககுபர், கரூமர், ஸ்ரீமங்களை ,
குருந்தர், குகூரபர், கலஜர் , சகதூமஜர் ,
உருண்டர், மட்டமகர் , நபும்சகர், கும்பமுஷ்கர் ,
சாயக்கன், நக்நதன், தங்கல்வன் , கிமீதினன் ,
ஸ்தம்பஜன், துண்டிகன், கருமன் , பலீநசன்
சுனை ரோமம் உள்ளவன் , சடைகேசன் , அரைப்பவன், அதிகம் பற்றுபவன் ,
ஆத்திரன், அருண வண்ணன், சீமுகத்தான், சாலுடன், விரல்களற்றவன்,
இது தவிர முட்டை விழுங்கி, மனித மாமிசம் புசிப்போன் , 2 வாயன், 4 கண்ணன்,
ஐந்து காலன் , இரண்டு முகத்தோன் என்றெல்லாம் மந்திரங்கள் பேசுகின்றன !!!

Ralph T H Griffith கிரிப்பித் என்ற ஒருவர் மட்டும், வேத மொழி பெயர்ப்பில், பக்கத்துக்குப் பக்கம், “எனக்குத் தெரியவில்லை, புரியவில்லை, விளங்கவில்லை, தெளிவில்லை, குழப்பமாக உள்ளது, விடுகதை வடிவில் பேசுகின்றனர்”– என்றெல்லாம் எழுதியுள்ளார். இது போல யூத மத, ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளிலும் சில பெயர்கள் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரும் மற்ற ஐரோப்பியர்களும் பல ஸம்ஸ்க்ருதப் பெயர்களை யூகத்தின் பேரில் மொழிபெயர்த்துள்ளனர்.

நாம் கூட பள்ளிக்கூடங்களில் வாத்தியாருக்கும் , மாணவர்களுக்கும் வினோதமான பட்டப் பெயர்களை இன்றும் வைக்கிறோம். திரைப்படங்களில் 007, ஜேம்ஸ்பாண்ட் என்றெல்லாம் பெயர்களைப் பார்க்கிறோம். சீன வைரஸ், பறவைக் காய்ச்சல் என்றெல்லாம் பெயர் சூட்டுகிறோம்.

இதோ சில ஸம்ஸ்க்ருதப் பேய்களின் தமிழ் மொழி பெயர்ப்பு :
வைக்கோல் அரக்கன், அவனைப் பின்தொடர்வோன், இம்சிப்பவன், குயில்/ஓநாய், கள்வன், பலிதன், உஷ்ணன் , ரூபம் அழிப்பவன் , கரடிக் கழுத்தன் , இமைப்பவன், தீமை, குதிர் வயிறன் , குண்டு வயிறன் , கூன முதுகன், கீச்சுக் குரலன் , கலக்கன் , நெல் குத்துவோர் முலையில் இருப்பவன், விராட்டிப் (cow dung) புகையில் வருவோன் வாயால் கடிப்பவன், அம்மண ஆள் .ஈட்டி மூக்கன், குரங்கு மூஞ்சி .
26 மந்திரங்கள் உள்ள இந்தப் பாடலில் பெரும்பாலும் குழந்தைகள், தாய்மார்களைத் தாக்கும் நோய்கள் பற்றியும் அவைகளை ‘பஜம்’, ‘பிங்கம்’ என்ற இரண்டு மூலிகைகள் போக்கி விடும் என்றும் ரிஷி முனிவர் பாடுகிறார்

கிமீதின் KIMIDIN என்ற பெயரையும் அ ராயி ARAYI என்ற பெயரையும் இப்பட்டியலில் காண்கிறோம். அந்த இரண்டு பெயர்களும் உலகின் மிகப் பழமையான புஸ்தகமான ரிக் வேதத்தில் வருகின்றன; கிமீதின் என்ற பெயரைக் கஷ்டப்பட்டு மொழி பெயர்த்து பொருள் காண முயன்றனர். அதை இரண்டு வகையாக மொழி பெயர்த்து , ‘இப்பொழுது என்ன’ ‘இப்பொழுது எப்படி’ என்றெல்லாம் மொழிபெயர்த்து இது உளவாளியாக (Spy) இருக்கலாம் என்றும் எழுதி வைத்துள்ளனர். இனி துப்பறியும் கதை எழுதுவோர் 007 ஜேம்ஸ்பாண்ட், ஷெர்லாக் ஹோம்ஸ் என்று எழுதாமல், கிம் இதானீம் என்று எழுதலாம் !
–subham–
Tgas- அதர்வண வேதம், பேய்கள் ,பட்டியல், கர்ப்ப தோஷம்,

RAMAYANA SCENES IN THANJAVUR PLATE IN LONDON (Post No.10,451)

PICTURES TAKEN BY DR A NARAYANAN Ph.D.
Post No. 10,451
Date uploaded in London – – 16 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

LOCATION- BRITISH MUSEUM, LONDON
PICTURES BY DR A NARAYANAN, LONDON

Please zoom and enlarge the pictures to get a good view.

tags- Thanjavur plate, Ramayana scenes, British Museum

சீதையும் கோதையும்- POEMS BY LONDON NARAYANAN (Post No.10,450)

WRITTEN BY DR. A. NARAYANAN
Post No. 10,450
Date uploaded in London – – 16 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

DR A NARAYANAN WITH SRI VELUKKUDI KRISHNAN IN LONDON 

சீதையும் கோதையும்
வேள்விச்சாலையமைக்க நிலம்
வெட்டக் கருப்பையில் தோன்றுவது
கலப்பை நுணிக் களி மண்ணில்
கண்டெடுக்கப் போர் முனையறிந்த
அரசனுக்கு ஏர் முனை ஏந்தியதோ
மகள் அவதாரமான புவிமகளே
நில மகளாயினும் மிதிலை அரசுக்குக்
குல மகள் மைதிலி சனக மன்னனின்
செல்வியாகி சானகி எனும் பெயர்
சூடி ராசியத்திற்கோர் ராச இலக்குமி
குடியின் கொடி மலரெனப் பூரித்தப்
புரவலனறியா இவளே வால்மீகீ
முனிவன் படைத்த ராமாயண ஆதி
காவிய நாயகி சீதையே அவதார
ஜெயராமனின் தாரமான தாரகையே.
தோளிணைந்த பூக்குடலியோடு மலர் கொய்ய
தோட்டம் சென்ற விட்டுசித்தன் தண் துழாய்
செடியடியில் மலர் தாமரை எழில் வழிந்
தோடி மதியொளி வீசிய மதலையைக் காண
மடி தவரி மண் தவழ்ந்த இப்பூங்குழலி
மலர் கொய்யும் கைக்கு மாலனருளிய
மாலையென மார்பணைத்து கோதை எனும்
பெயர் சூட்டி அன்னையுமபிதாவும் ஆசானுமாய்
வளர்த்தவனிதை வாய் மொழிந்ததோ
வாசுதேவன் மூச்சுக் காற்றோ முகுந்தன்
பருகும் நீரும் புசியுமுணவும் கண்ணனே என
சிறையிலே பிறந்தோனை மனதிலே சிறை
வைத்துக் கவிதையே விதையாகி கண்ணனே
செடியாகக் கொடியாயவன்மீது தவழ்ந்த
கோதையே கோவிந்தனையே ஆண்டாள்
அங்கு அறியானோ அரசர்கோன் நிலமீன்ற
அணங்கு சீதை அனந்தன் மார்புறங்கும்
அலைமகளேயென இங்கு புரியானோ பெரி
ஆழ்வான் விட்டு சித்தன் தன்மண் மகளே
அச்சுதன் சித்தம் கவரும் கோதையென
–நாராயணன் (Dr A Narayanan Ph.D., London)
xxxx

நாதமா ராகமா வேதமா?

பாடலாமோ பண்ணிசைக்கு ஆடலாமோ
வீணையின் நாதத்தில் வாணியின் வாசம்
வேய்ங்குழலிசையில் வேணுகானனின் சுவாசம்
ஏழு சுவரங்களில் எண்ணற்ற ராகங்கள்
எடுத்துப் பாட ஏழு சன்மங்களும் போதாது
சுருதியும் லயமும் சுவரங்களோடிணைந்து
சுகமான ஒலியாய் எழுவதே தரமான ராகம்
சுவர்கமே கேட்கும் அந்த சுவையான வேதம்

  • Dr A Narayanan, London
    XXX

  • ஓயாத ஆசை

மண்ணிலே ஓடும் தண்ணீர்
மனதிலே ஓடும் ஆசை
எண்ணிலாப் பொருள்கள் கண்டு
எனக்கு வேண்டுமென்றேங்கும்
மனதைப் பற்றியதாசையோ
மலருக்கு மலர் தாவும் தேனீக்களாக
தேனீக்களோ தேடுவது தேனொன்றே
தேரா இம்மனிதனோ தேடுவது பலவும்
நிறை வான பின்னும் குறையாத
ஆசை அலைகள் போராது போராதென
ஓசையிட நேராத ஆசையிலும்
மாறாது ஆறாத இவனாசை
அடங்குவதோ ஆறடி மண்ணிலே

Dr .A. நாராயணன்
xxx subham xxxx

tags – Dr A நாராயணன், சீதை, கோதை, ஓயாத ஆசை, நாதமா வேதமா

திரு அருட்பிரகாச வள்ளலார் – 3 (Post No.10,449)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,449
Date uploaded in London – – 16 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

VADALUR PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

திரு அருட்பிரகாச வள்ளலார் – 3
ச.நாகராஜன்

சாலையில் இருந்த சில அன்பர்களுக்கு சுவாமிகளை போட்டோ எடுக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. சென்னையில் உள்ள மாசிலாமணி முதலியார் முதலானவர்களைக் கொண்டு எட்டு தரம் போட்டோ படம் பிடித்தனர். ஆனால் ஒரு தடவையும் அவர் உருவம் படமாகவில்லை. சுத்த தேகத்தை எப்படிப் படம் பிடிக்க முடியும்?

வள்ளலார் வாழ்வில் நடந்த இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தொழுவூர் வேலாயுத முதலியார் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்.

வள்ளலார் வடலூரில் 1867இல்சத்திய ஞான சபை என்ற அற்புதமான ஒரு அமைப்பை நிறுவினார். அங்கு ஐந்தடி உயரமுள்ள சீமைக் கண்ணாடி ஒன்று நிறுவப்பட்டது.ஒரு சிறு திருவிளக்கும் அங்கு வைக்கப்பட்டது. இந்தக் கண்ணாடியின் எதிரே ஏழு திரைகள் உள்ளன. வழிபாட்டின் போது திருவிளக்கைப் பார்க்கத் தடையாக இருக்கும அந்த ஏழு திரைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அகற்றப்படும். இந்த ஏழு திரைகளைப் பற்றி வள்ளலார் பெருமானே விளக்கம் தந்துள்ளார்.

ஆன்மப் பிரகாசத்தை மறைக்க 7 திரைகள் உண்டு. அவையாவன:
கருப்புத் திரை – மாயா சத்தி; நீலத் திரை – கிரியா சத்தி; பச்சைத் திரை – பரா சத்தி; சிவப்புத் திரை – இச்சா சத்தி; பொன் மயத் திரை – ஞான சத்தி; வெண்மைத் திரை – ஆதி சத்தி, கலப்புத் திரை – சிற்சத்தி

தைப்பூசம் அன்று திரை திறக்கப்படும்; அத்துடன் மட்டுமின்றி வோரு மாதமும் பூச நட்சத்திரத்தில் இந்த ஞான சபை தரிசன நிகழ்வு நடைபெறும்.

வள்ளலார் ஒரு அருட் கவி. அவர் கவிதை மழையாகப் பொழிந்தார். எளிய நடையில் உயர்ந்த கருத்தைக் கொண்ட பாக்களை அவர் உடனுக்குடன் இயற்றி அருள் பாலித்தார். நரனைத் துதி செய்யும் ஒரு பாடலைக் கூட அவர் எழுதவில்லை. ஒன்பது வயதிலேயே கவி பாட ஆரம்பித்த அவர் 5818 பாடல்களைப் பாடினார். திரு அருட்பா என்று அழைக்கப்படும் இந்தப் பாடல்களைத் தமிழ் மக்கள் உளமுருக இன்றளவும் ஓதி வருகின்றனர்.

மனுமுறை கண்ட வாசகம், ஜீவ காருண்ய ஒழுக்கம் உள்ளிட்ட உரை நடை நூல்களையும் அவர் அருளினார்.

மூலிகைகள் பற்றிய அவரது ஞானம் மகத்தானது. 485 மூலிகைகளின் பட்டியலையும் அவற்றின் அற்புத குணங்களையும் அவர் தந்துள்ளார்.

ஒரு முறை சங்கராசாரியார் சம்ஸ்கிருதத்தை மாத்ரு பாஷை என்று கூற உடனே அடிகளார் அப்படியானால் தமிழ் பித்ரு பாஷை என்று கூறி ஒரு அரிய விளக்கத்தைத் தமிழ் பற்றித் தந்தார்.

ஏராளமான உபதேசங்களை அவ்வப்பொழுது அவர் பக்தர்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தார்.

1873ஆம் ஆண்டு ஸ்ரீ முக வருடம் அறை உள்ளிருந்த விளக்கை வெளியே கொண்டு வைத்தார் அவர்.

30-1-1874 அன்று ஸ்ரீ முக வருடம் தை மாதம், வெள்ளிக்கிழமை, “நான் போகிறேன். பார்த்து அவ நம்பிக்கை அடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது. வெறு வீடாகத்தான் இருக்கும் படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார் “ என்று சொல்லி தன் அறையில் நுழைந்து அறைக் கதவைத் தாளிட்டார். பின்னர் அவர் வரவில்லை. யாரும் அவரைப் பார்க்கவும் இல்லை.

அடிகளின் மறைவு அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. உடலுடன் ஒருவர் மறைய முடியுமா என்ற இந்தக் கேள்வியை அரசாங்கமும் கேட்டது. இந்தப் புதிருக்கு ஒரு விடை காண தென்னார்க்காடு மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ஜே.எச். கார்டின்ஸ் என்பவர் ஒரு விசாரணையை நடத்தினார். அவரே மேட்டுக்குப்பம் சென்றார். கலெக்டர், டாக்டர், தாசில்தார் உள்ளிட்ட குழு அவர் வாழ்ந்த இடத்தை அடைந்தது. தாசில்தார் வெங்கடராமன் என்பவர் அதைக் கதவைத் திறவுங்கள் என்று அதிகார முறையில் கூறினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

கலெக்டர் தனது அறிக்கையில், “அவர் அறைக்குள் செல்லும்போது அறை திறக்கப்படக் கூடாது என்று தன் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அன்றிலிருந்து அவர் காணாமல் போய் விட்டார். அறை இன்னும் பூட்டப்பட்டே இருக்கிறது.” என்று எழுதினார்.

அம்பலத் தரசே அருமருந்தே ஆனந்தத் தேனே அருள் விருந்தே என்று பாடாத பக்தர் இன்று இல்லை.
“அருள் ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருள் சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்து என்னையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்”
என்று பாடிய அவர் ‘அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை’ என்ற உணர்வை அனைவருக்கும் ஊட்டினார்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய அருள் உள்ளம் கொண்ட மகான் அவர். தன்னுடைய ஊனுடலை ஞான உடலாக மாற்றிக் கொண்டதாக அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

எல்லையற்ற அவரது மஹிமையையும் பெருமையையும் ஒரு சிறு உரைக்குள் அடக்கி விட முடியாது. பெருங்கடலின் ஒரு சில திவலைகளையே இப்போது பார்த்தோம்.

மிக பிரம்மாண்டமான ஒரு மஹா புருஷர் தமிழ் மண்ணில் தோன்றி ஆயிரக் கணக்கான பாடல்களை அருளி உடலுடன் மறைந்து உலகையே அதிசயக்க வைத்த உத்தமராக ஒளிர்கிறார் என்பது தமிழர்கள் செய்த புண்ணியமே.

வள்ளலாரைப் படித்து அவர் காட்டும் சன்மார்க்க நெறி வழி அனைவரும் நடப்போம்; உயர்வோம்!

நன்றி, வணக்கம்!

tags —  வள்ளலார் 3


பகவத்கீதை சொற்கள் INDEX-29; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -29 (Post.10,448)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,448
Date uploaded in London – – 15 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் index 29
கேசவஸ்ய 11-35 கேசவனுடைய
கேசவரர்ஜுனயோஹோ 18-76 கேசவனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே
கேசி நி ஸூதன 18-1 கிருஷ்ணா, கேசி என்ற அசுரனைக் கொன்றவனே
கேஷூ 10-17 எந்த எந்த
கைஹி 1-22 எதனால் ……… 5 WORDS

கெளந்தய 2-14 அர்ஜுனா , குந்தியின் மகனே
கெளமாரம் 2-13 மாணவப் பருவம், இளம் பருவம்
கெளஸலாம் 2-50 புத்திசாலித்தனம்
க்ரதுஹு 9-16 வேத வேள்வி
க்ரியதே 17-18 செய்யப்படுகிறதோ …. 10 WORDS

க்ரியந்தே 17-25 செய்யப்படுகின்றன
க்ரியாமாணானி 3-27 செய்யப்படுகின்றன
க்ரியாபிஹி 11-48 கிரியைகளால்
க்ரியா விசேஷ பஹுபலாம் 2-43 விஷேசமானதும் , விரிவானதுமான கிரியைகளைப் பற்றிய
க்ரூரா ன் 16-19 கொடூரமான …. 15 WORDS

க்ரோதம் 16-18 – கோபம்
க்ரோதஹ 2-62 – கோபம்
க்ரோதாத் 2-63 கோபத்திலிருந்து
க்லேதயந்தி 2-23 நனைக்கிறது, ஈரமாக்குதல்
க்லேஸஹ– போராட்டம் …. 20 WORDS

க்லைப்யம் 2-3 கோழைத்தனம்
க்வசித் 18-1 எப்போதும்
க்ஷணம் 3-5 நொடியில்
க்ஷத்ர கர்ம 18-43 க்ஷத்ரியனின் கடமைகள்
க்ஷத்ரியஸ்ய 2-31 க்ஷத்ரியனுக்காக … 25 WORDS

க்ஷத்ரியாஹா 2-32 க்ஷத்ரியர்கள்
க்ஷமா 10-4 பொறுமை , மன்னித்தருளுதல்
க்ஷமீ 12-13 மன்னிக்கும் குணம் படைத்தவர்
க்ஷயம் – 18-25 இழத்தல், அழிவு
க்ஷயாய 16-9 அழிப்பதற்காக …. 30 WORDS

க்ஷரம் 15-18 அழியக்கூடிய
க்ஷா ந்தி ஹி 13-7 பொறுமை
க்ஷஆ மயே 11-42 மன்னித்து விடு
க்ஷிபாமி 16-19 தள்ளுகிறேன்
க்ஷிப்ரம் 4-12 சீக்கிரத்தில் ……. 35

க்ஷீண கல்மஷாஹா 5-25 எவருடைய தீமைகள் ஒழிந்தனவோ
க்ஷீனே 9-21 தேய்ந்ததும்
க்ஷுத்ரம் 2-3 அற்பமான
க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞயோஹா 13-2 க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞனையும் பற்றிய
(க்ஷேத்ர= உடல்; சரீரம் )
க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ சம்யோகாத் 13-26 இந்த இரண்டின் கூடுதலால் ……. 40

க்ஷேத்ரக்ஞம் 13-2 க்ஷேத்ரக்ஞனாக; சரீரம் பற்றிய அறிவுடையவன்
க்ஷேத்ரம் 13-1 சரீரம்/ உடல்
க்ஷேத்ரி 13-33 க்ஷேத்ரி யான ஆத்மா
க்ஷேம தரம் 1-46 அதிக நன்மை தருவதாக
கம் 7-4 ஆகாயம் …… 45

கே 7-8 ஆகாயத்தில்
கச்ச 18-62 அடை
கச்சதி 6-37 அடைகிறான்
கச்சன் 5-8 சென்றாலும்
கச்சந்தி 2-51 அடைகின்றனர் ……50

கஜேந்த்ராணாம் 10-27 யானைகளில்
கதரசம் 17-10 சுவையிழந்த
கதவ்யதஹ 12-16 அச்சமற்ற
கதசங்கஸ்ய 4-23 பற்றுகளைத் துறந்த
கத ஸந்தேஹக – 18-73 சந்தேகம் நீங்கப்பெற்ற …..55

கதாகதம் 9-21 போதையும் வருதலையும்
கதாஸூன் – 2-11 உயிரிழந்தவர்களைக் குறித்து
கதாஹா 8-15 எய்திய, அடைந்த
கதிம் 6-37 கதியை
கதிஹி 4-17 போக்கு …… 60 WORDS
60 MORE WORDS ARE ADDED IN THIS PART 29

TO BE CONTINUED…………………..

tAGS – GITA WORD INDEX 29

39 GHOSTS IN ATHARVANA VEDA ! (Post.10,447)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,447
Date uploaded in London – – 15 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

Are you writing a Ghost Story? Are you producing any Children’s games? Are you producing any Adult Video Games against baddies? Here is a long list of evil characters you may use without any copyright violation!!

Max Muller gang and Marxist gang came with an ulterior motive when they statred translating or interpreting Vedas; they wanted to destroy Hinduism and disintegrate India; They said Aryans came into India long ago and now we come to rule you; What is wrong in it?
Muslim gangs ruled India for 700 years and Christian gangs ruled holy Bharat for 300 years and Poet Bharati, the greatest of the modern Tamil poets, called it ‘1000 year unkind rule’. Swami Vivekanada told us to thow all the mud from the bottom of Indian ocean and yet it is not enough to punish them. Kanchi Paramacharya used the mildest terms in condemning them ; we call it ‘as mild as sending a needle into banana fruit’. Mahatma Gandhi and Ambedkar rejected the foreigners views.

Foreigners took one hymn from here and one hymn from there and tried to link them. When Manu Smrti praised women sky high in 5 verses, scoundrels took one verse to “show” , Manu didnt like women’s independence. No one has praised women that high anywhee in world literature 2000 years ago. In the same way 30 foreign jokers tried to translate the Vedas; Ralph TH Griffith was at least honest in saying in every other page of his translation, ‘the meaning is obscure, it is uncertain, enigmatic, can’t translate, not clear’ etc. Griffith refused to translate all sexy passages in the Vedas like the early Christians refused to translate third part of Tamil Veda Tirukkural!

These people quoted Sayana and Yaskar here and there and then gave their own hypotheses. One must be careful in quoting them. But yet I myself use one of the hymns from Griffith’s translation to show their inability to explain many words in the Vedas.
Here is the list of 30++++ ghosts in Atharvana Veda (AV).
xxx


AV ;Book 8; Hymn 6 (Sukta 439)
Sukta= Su + Ukta= Well said; good saying
‘The hymn is an incantation designed to exercise various evil spirits who beset women’.
Even 2000 year old Tamil Sangam literature talks about evil spirits harming pregnant women and prescribe white mustard (Aiyavi) smoke to drive them away.
But here are stange names! Where did they get the names from? What is the meaning in Sanskrit? If translated they sound funny; many of them are untranslatable! (in one of my articles I have given the list of Sumerian Ghosts). In some places, we know, they mean viruses and bacteria.
Here is the list of Ghosts or evil spirits from AV:
Alinsa
Vatsapa
Palaala
Anupalaala
Sarku

Koka
Malimlucha
Pallijaka
Vavrivaasas
Asresha

Riksagrilva
Pramilin
(Baja)
Durnaamaa
Sunaamaa
Black and Hairy Asura

Stambaja
Tundika
Araaya
Kukshilas
Kusuulas

Kakubhas
Srimas
Karumas
Kukndhas
Kukuurabhas

Makakas
Khalajas
Sakadhuumajas
Urundas
Matmatas

Kumbhamushkas
Saluuda
(Pinga)
KIMIIDIN
Saayaka
Nagnaka

Tangalva
Paviinasa
(already translated by Griffith:- Maniac Haired, Groper Fiend, Biter, Bristly Haired, Five Footed, Fingerless, Four Eyed, Double Faced, Close Creeper, Worm, Quick Roller, Husband wooers, Egg eaters, Licker)
xxx


Medical Science or Abracadabra?
When you read this hymn you know all these are affecting women.They may be bacteria or virus. Mantra 12 in the hymn clearly says all these (bacteria/virus) are driven away by Sun light.
xxx
FUNNY TRANSLATIONS!
Griffith and Weber have translated some words in the list: Pinga and Baja- Strong scented plants that drive the evil spirits; Vatsapa-drinking like a calf; Husband wooers- the dainties which attract the future husbands; Palaala- straw; Malimlucha- robber; Koka- wolf or Koel; Rikshagriiva- bear necked; Durnaama- ill named; Stambaja- growing in a bush or pillar; Tundika- furnished with a snout; Viledehi- licker; Kukshilas- big bellied; Kakubhas- humpbacks; Karumas- dissonant; Kukurubhas- howlers; Khalajas – threshing floor; Sakadhumajas- produced from smoke of cow dung; Nagnaka- naked; Pavinasa- spear head nosed; For others- unknown meaning

Footnote adds Milton in Paradise Lost and stories in Roman and German mythology and folk tales have some funny names like this.
xxx


My comments
I have gone through the list of Sumerian demons; no where I found a long list like this. and all are in only one hymn where pregnant women are affected!
May be they mean different types of disease causing bacteria and virus; the hymn says Sun light cures;
Kimidin and Arayi occur in several hymns of the Rig Veda, the oldest book in the world.
Araayi – RV 10-155-1 -one eyed, limping hag, fly ever -screeching! to the hill
Kimiidin- One of a class of malignant spirits. According to Nirukta of Yaska,the word originally means one who goes about crying ‘Kim Idaaniim? Quid nunc? What now?’ or ‘Kim Idam? What is this?’ Literally a quid nunc; a vile an treacherous spy and informer.


My Comments
In the modern world we also name many spies with different names ‘007’ ‘Jamesbond’, Sherlock Holmes etc.
So we may find only from its context the correct meaning. Sanskrit has lot of funny etymolgies for many words; we come across a lot in Satapata Brahmna; Yaskar, wrote a book on etymology (Nirukta) even before Greek, Latin Tamil appeared in the world of literature. Most of the ancient languages had no literature when sanskrit men wrote grammar, etymology, astrology, logic etc;
The next hymn to this in AV is about Ayur Veda; the seer talks about the amazing power of animals in identifying the healing herbs. I will write about it in my next article.
Here is the Full ‘Mumbo Jumbo’ Hymn:-

Hymns of the Atharva Veda, by Ralph T.H. Griffith, [1895], at sacred-texts.com

HYMN VI
A charm to exercise evil spirits who beset women
1Let neither fiend of evil name, Alinsa, Vatsapa, desire
Thy pair of husband-wooers which thy mother cleansed when, thou wast born.
2Palala, Anupalala, Sarku, Koka, Malimlucha, Palijaka Vavri- vāsas and Asresha, Rikshagriva and Pramilin.
3Approach not, come not hitherward: creep not thou in-between her thighs.
I set, to guard her, Baja, that which chases him of evil name
4Durnāmā and Sunāmā both are eager to converse with her.
We drive away Arāyas: let Sunāmā seek the women-folk,
5The black and hairy Asura, and Stambaja and Tundika,
Arāyas from this girl we drive, from bosom, waist, and parts below.
6Sniffer, and Feeler, him who eats raw flesh, and him who licks his lips,
Arāyas with the tails of dogs, the yellow Baja hath destroyed.
7Whoever, in thy brother’s shape or father’s comes to thee in sleep,
Let Baja rout and chase them like eunuchs with woman’s head- dress on.
8Whoever steals to thee asleep or thinks to harm thee when awake,—
These hath it banished, as the Sun travelling round drives shade away.
9Whoever causeth her to lose her child or bear untimely fruit,—
Destroy him, O thou Plant, destroy the slippery fiend who lusts for her.
10Those who at evening, with the bray of asses, dance around the
house, Kukshilas, and Kusfilas, and Kakubhas, Srimas, Karumas,
These with thine odour, O thou Plant, drive far away to every side.
11Kukundhas and Kukūrabhas who dress themselves in hides and skins,
Who dance about like eunuchs, who raise a wild clamour in the wood, all these we banish far away.
12All those who cannot bear the Sun who warms us yonder from the sky,
Arāyas with the smell of goats, malodorous, with bloody mouths, the Makakas we drive afar.
13All those who on their shoulders bear a head of monstrous magnitude,
Who pierce the women’s loins with pain,—those demons, Indra drive away!
14Those, bearing horns upon their hands, who first of all approach the brides;
Standing in ovens, laughing loud, those who in bushes flash forth
light, all these we banish hence away.
15Those who have retroverted toes, and heels and faces in the front,
Khalajas, Sakadhūmajas, Urundas, all the Matmatas, impotent Kumbhamushkas, these,
Drive thou, O Brāhmanaspati, far from this girl with vigilance.
16Sightless and with distorted eyes, impotent. woman less be they.
O Healing Plant, cast each away who, not her husband, would approach this woman wedded to her lord.
17The Bristly-haired, the Maniac-haired, the Biter, and the Groper-fiend,
The Creeper-near, the Copper-hued, the Snouty, and the Saluda,
With foot and heel kick over, as a hasty cow her milking-pan.
18If one should touch thy coming babe or kill thine infant newly born,
The yellow Plant with mighty bow shall pierce him even to the heart.
19Those who kill infants unawares, and near the new-made mothers lie,
Let Pinga chase the amorous Gandharvas as wind chases cloud.
20Let it maintain the genial seed: let the laid embryo rest secure.
Let both strong Healers, to be worn within the girdle, guard the babe.
21From the Kimīdin, for thy lord and children, Pinga shield thee well,
From Sāyaka, and Nagnaka, Tangalva, and Pavīnasa.
22From the five-footed, fingerless, from the four-eyed, the double- faced,
From the Close-creeper, from the Worm, from the Quick-roller guard her well.
23Those who eat flesh uncooked, and those who eat the bleeding flesh of men,
Feeders on babes unborn, long-haired, far from this place we banish these.
24Shy slinkers from the Sun, as slinks a woman from her husband’s sire,
Deep down into the heart of these let Baja and let Pinga pierce.
25Pinga, preserve the babe at birth, make not the boy a female child.
Let not Egg-eaters mar the germs: drive the Kimidins far away
26Sterility, and infants’ death, and weeping that announceth woe,
Dear! lay them on the fiend as thou wouldst pluck a garland from a tree.
–subham–

tags-  Ghosts, Evil spirits, Atharvana Veda, Kimidin, 39 ghosts

திரு அருட்பிரகாச வள்ளலார் – 2 (Post No.10,446)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,446
Date uploaded in London – – 15 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

திரு அருட்பிரகாச வள்ளலார் – 2
ச.நாகராஜன்

கூடலூர் அப்பாசாமி செட்டியார் வீட்டில் ஒரு சமயம் சுவாமிகள் ஒரு அறையில் இருந்தார். அப்போது ஒரு மனிதர் தங்கு தடையின்றி உள்ளே நுழைந்து சுவாமிகள் இருந்த அறைக்குள் சென்றார். அவரை எங்கேயும் காணாததால் சுவாமிகளை வினவ, “அவர் ஒரு சித்தர். என்னைக் காண வந்தார். இந்நேரம் காசியில் இருப்பார். இதோ அவர் கொடுத்த லட்டு” என்றார் சுவாமிகள்.

அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வப்பொழுது இரும்பு, ஈயம், செம்பு ஆகிய உலோகங்களைத் தங்கமாக மாற்றிக் காண்பிப்பார் சுவாமிகள். பின்னர் யாரும் அதை எடுக்காதபடி கேணிகளிலும் குளங்களிலும் எறிந்து விடுவார். அவருடனேயே இருந்த வேம்பையர் என்பவர் சுவாமிகள் உலோகங்களை மாற்றும் விதத்தையும் அதற்கென அவர் கொண்டிருந்த பொருள்களையும் நன்கு கவனித்து வந்தார். அந்தப் பொருள்களைச் சேகரித்து தானும் மற்ற உலோகங்களைத் தங்கமாக மாற்ற முயன்றார். அவர் கண் பார்வை உடனே மங்கி ஒளியை இழந்தது. என்ன செய்தும் கண் பார்வை வரவில்லை. சுவாமிகளிடம் வந்து தான் செய்த தவறை ஒளிக்காமல் சொல்லி மன்னிப்பு வேண்டினார் அவர். சுவாமிகள் நீரை எடுத்து அவர் கண்ணில் பூசவே கண்ணொளி அவருக்கு மீண்டது.

விருத்தாசலத்தில் வசித்து வந்தவர் வேங்கடேச ஐயர் என்பவர். அவர் ஒரு வக்கீல். ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமிகள் ஆற்றும் பிரசங்கங்களுக்குத் தவறாமல் வருகை புரிந்து அதைக் கேட்டு முடிந்த பின்னர் இரவு நேரத்தில் மூன்று மைல் தூரமுள்ள காட்டுப் பாதையைக் கடந்து அவர் ஊர் திரும்புவது வழக்கம். காட்டுப் பாதையில் செல்லும் போது அவர் முன்னர் (ஆள் யாரும் இல்லாமல்) இரு தீவட்டிகள் மட்டும் போய்க் கொண்டிருக்கும். அதை ஏந்துபவர் யாரும் இருக்க மாட்டார்கள். சுவாமிகளின் அருட்செயலே இது என்பதை உணர்ந்த ஐயர் வடலூருக்கு வந்து அங்கேயே தங்கி சுவாமிகளின் பூரண அருளுக்குப் பாத்திரர் ஆனார்.

சுவாமிகளின் சத்திய தரும சாலையில் ஒரு நாள் இரவு திடீரென்று நூறு பேர் வந்து சேர்ந்தனர். சமையல் எல்லாம் முடிந்து அனைவரும் உண்ணும் தருணம் அது. என்ன செய்வது என்று அனைவரும் தவித்தனர். ‘பிச், இலை போடுங்கள் எல்லோருக்கும்’ என்று கூறிய சுவாமிகள் தானே அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தார். இருந்த உணவு நூறு பேருக்கும் போதுமானதாக இருந்தது. அனைவரும் திருப்தியுடன் உண்டனர்.

வடலூரில் ஒரு சமயம் மழை இல்லாமல் போனது. அனைவரும் வருந்துவதைக் கண்ட சுவாமிகள் நன்கு மழை பொழிய அனுக்கிரகித்தார். அதே போல புதுப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சுவாமிகளை தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த இரண்டு கிணறுகளிலும் நீர் இன்மையைச் சொல்லி அருள் புரிய வேண்டினர். சுவாமிகள் அனுக்கிரகம் செய்தார். உடனே இரு கிணறுகளும் நிரம்பியதோடு அவற்றின் நீரும் இனிமையானது. அந்தக் கிணறுகள் இன்று வரை வற்றவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு இரவில் சுவாமிகளும் மஞ்சக்குப்பம் கோர்ட்டு சிரஸ்தார் இராமச்சந்திர முதலியாரும் ஒரு மாட்டு வண்டியில் ஏறி வடலூரிலிருந்து மஞ்சக்குப்பம் சென்று கொண்டிருந்தனர். வழியில் சில கள்வர்கள் வண்டியை மறித்தனர். முதலியார் கையிலிருந்த வைர மோதிரத்தைக் கழட்டுமாறு அவர்கள் அதட்டினர். சுவாமிகள் அக்கள்வரை நோக்கி ‘அவசரமோ’ என்றார். அவரை அடிக்க கள்வர் கையை ஓங்க, ஓங்கிய கைகள் அப்படியே நின்றன. அவர்களின் கண் பார்வையும் போனது. பின்னர் அவர்கள் சுவாமிகளிடம் மன்னிக்குமாறு வேண்ட ‘பிச்’ என்னும் மகா மந்திரத்தை சுவாமிகள் கூறினார். இழந்த பார்வையை மீண்டும் பெற்ற கள்வர்கள் அன்று முதல் களவுத் தொழிலை விட்டு விட்டு சன்மார்க்க நெறியில் நின்றனர்.

குறிஞ்சிப்பாடியில் உள்ள வணிகர் ஒருவர் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஜலங்கழிக்க மறைவில் ஒதுங்கும் போது புற்றரவு ஒன்று அவரைத் தீண்டி விட்டது. உடனே அவர் “இராமலிங்கத்தின் மீது ஆணை” என்று கூறவே அப்பாம்பு புற்றில் நுழையாமல் அப்படியே நின்று விட்டது. அதை அவர் கவனியாமல் பயந்து அங்கிருந்து விரைவாக அகன்று வீடு போய்ச் சேர்ந்தார். விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் அவர் வடலூர் வந்து சுவாமிகளை தரிசனம் செய்த போது, “அட, பிச்! ஒரு உயிரை எத்தனை நாள் தான் பட்டினி போடுகிறது?! மூன்று நாட்கள் ஆயிற்றே. உடனே போய் ஆணையை விடுதலை செய்யும்!” என்றார் சுவாமிகள். வியப்படைந்த அந்த வணிகச் செட்டியார் உடனே பாம்பு இருந்த இடத்திற்கு விரைந்தார். அங்கு புற்றின் வாயிலில் பாம்பு பரிதாபமாக படுத்துக் கிடந்தது. செட்டியார் ஆணையை விடுதலை செய்ய பாம்பு புற்றுக்குள் நுழைந்தது.

சுவாமிகளின் அன்புக்கு பாத்திரமான தேவநாயகம் பிள்ளை என்பவரின் ஒரே புதல்வரான ஐயாசாமி என்பவர் நோய்வாய்ப்பட்டார். இருபது வயதே ஆன அவரை வைத்தியர்கள் கை விட்டு விட்டனர். அவர் ‘ஒ’வென்று அரற்றி சுவாமிகளை நினைத்துப் பிரார்த்தனை செய்தார். அன்று இரவே 11 மணிக்குப் பின்னர் அவர் இல்லம் வந்து சேர்ந்த சுவாமிகள் அவருக்கும் புதல்வருக்கும் திருநீறு கொடுத்து அருளி, “நாளை குணமாகும்” என்றார். மறு நாள் வியாதி குணமானது.

ஆனால் அவர் தேவநாயகம் வீட்டில் இருந்த அதே சமயம் வடலூர் சத்திய தரும சாலையில் சுவாமிகள் உபந்யாசம் செய்த வண்ணம் இருந்திருக்கிறார். இது பின்னால் தெரிய வர அனைவரும் இரு இடங்களில் ஒரே சமயத்தில் அவர் இருந்ததை எண்ணி பிரமித்தனர்.

ஒரு நாள், வெளியே சென்ற சுவாமிகள் வரவில்லையே என்று எண்ணிய வேலூர் சண்முகம் பிள்ளை என்பார் சாலையை விட்டு வெளியே போய்ப் பார்த்தார். அங்கே சுவாமிகளுடைய அங்கங்கள் எல்லாம் தனித்தனியே கிடந்தன. ஐயோ என்று அலறி அந்த அன்பர் புலம்பித் தவித்த வேளையில் சுவாமிகள் திடீரென்று அவர் கண் முன்னே தோன்றினார்., “இனி நீர் இது மாதிரி வந்து பார்க்காதீர்” என்று அவரை சுவாமிகள் எச்சரித்தார். அவரும் மகிழ்ச்சியுடன் சுவாமிகளைப் பின் தொடர இருவரும் சத்திய தரும சாலையை அடைந்தனர்.
* தொடரும்

tags- வள்ளலார் – 2,

‘ஏழு அடி நட்பு’ சங்க இலக்கியத்தில் அதர்வண வேத மந்திரம் (Post.10,445)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,445
Date uploaded in London – – 14 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கரிகால் சோழன் வைத்திருந்த பருந்து வடிவ யாக குண்டம் பற்றியும் அவன் ரிக் வேதத்தில் சொன்னபடி 7 அடிகள் நடந்து சென்று நண்பர்களை வழி அனுப்பினான் என்றும் முடத்தாமக்கண்ணியார் என்ற சங்க காலப் புலவர் பொருநர் ஆற்றுப்படையில் பாடியிருப்பதை 2012ம் ஆண்டு இங்கே எழுதினேன்.
பின்னர் பாணினியும் இதையே இலக்கண சூத்திரத்தில் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே சுட்டிக் காட்டி இருப்பதையும் 2020ம் ஆண்டுக்கு கட்டுரையில் குறிப்பிட்டேன் (பழைய கட்டுரைகளின் இணைப்புகளைக் கீழே காண்க)
இப்போது புதிய விஷயம் என்னவென்றால் இது அதர்வண வேதத்திலும் உளது; ரிக் வேதத்தில் உள்ள நிறைய மந்திரங்கள் சிற்சில மாற்றங்களுடன் அதர்வண வேதம் முழுதும் விரவிக்கிடப்பதைக் காணலாம். பொருநர் ஆற்றுப்படையில் செப்பிய இந்த 7 அடி நட்பு விஷயம் ,இதோ அதர்வண வேத துதியில் :–

காண்டம் 5, துதி 11; சூக்தம் 153- வினா விடை
இந்தக் கவிதை உரையாடல் வடிவில் அமைந்துள்ளது. இதில் ‘7 அடி’ விஷயம் தவிர ‘வளி வழங்கு மாஞாலம்’ (atmosphere) என்ற அறிவியல் செய்தியும் உளது. இதை புறநானூற்றுப் புலவரும் எடுத்தாண்டுள்ளார் .

இந்த துதியில் மந்திரம் 9, மந்திரம் 10 ஆகியவற்றில் ‘7 அடி விஷயம்’ வருகிறது :–

மந்திரம் 9
வருணனை நோக்கி அதர்வன் சொல்கிறான்- எல்லா மானிடர் இடையே , திசைகளின் நடுவே உனது உயரிய தோத்திரங்கள் வருக ; நீ எனக்கு கொடுக்காமல் வைத்திருக்கும் பொருளை எனக்கு இப்போது அளி ; நீ எனக்கு நெருங்கிய 7 அடி நண்பன் நம்மிடையே நிலவும் ஒரே நெருக்கம்- பிணைப்பு நம்மை ஒன்று சேர்க்கட்டும் .
மந்திரம் 10- வருணன் பதில்
நம்மிடையே உள்ள ஒரே பிறப்பு – ஒரே பிணைப்பு நம்மை இணைப்பதை நான் அறிவேன் ; நான் உன்னுடைய நிரந்தர, உறுதியான நண்பன்; ஆகையால் கொடுப்பதாகச் சொல்லி, பின்வாங்கிய நான், அந்தப் பரிசை இப்போது அளிக்கிறேன்

இது போன்ற சுமார் 20 உரையாடல் கவிதைகள் (Dialogue Poems) உலகின் மிகப் பழமையான ரிக் வேதத்திலும் உளது . அவை, யாக யக்ஞங்கள் முடிந்தவுடன் நடித்துக் காண்பிக்கப்பட்டன; உலகில் , நாட்டிய நாடகம் தோன்றியது நமது நாட்டில்தான். உலகில் நடராஜர் போலவும், மஹா காளி போலவும் dance டான்ஸ் ஆடும் கடவுளர் வேறு எங்கும் கிடையாது .


இந்தப் பாடலைப் பற்றி ஒரு கதை வழங்கி வருகிறது; முதலில் அதர்வனுக்கு வருணன், ஒரு புள்ளிகள் மிக்க ஒரு பசு அளித்தார் ; பின்னர் அதை திரும்ப அழைத்துக் கொண்டார். அப்போது நடந்த உரையாடலே இந்தக் கவிதை .
xxx
புற நானூற்றில் காற்று மண்டலம் (Atmosphere)
பூமியைச் சுற்றி மட்டுமே காற்று மண்டலம் (atmosphere) உண்டு என்பதை தற்கால விஞ்ஞானம் கூறியது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புறநானூற்றில் தமிழர்கள் அதை விண்டுரைத்தனர். ஆனால் அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அதர்வண வேத ரிஷி பாடிவிட்டார்

‘வளி வழங்கு திசையும்’ என்று குறுங்கோழியூஊர் கிழாரும் – பாடல் 20; ‘வளி இடை வழங்கா வானம் சூடிய’ என்று வெள்ளைக்குடி நாகனாரும் — பாடல் 36- காற்று மணடலம் பற்றிப் பாடினார்கள். அதற்கு அப்பால் என்ன என்பதைப் பாடவில்லை ; அதையும் பாடுகிறார் வேத காலப் புலவர்

மந்திரம் 5
வருணனே ! உன்னை நீயே நிர்வகித்துக் கொள்ளும் திறமைசாலியே! புத்திசாலி இயக்குனரே! எல்லா பரம்பரைகளையும் நீ அறிகிறாய்.
பிழை அறியாப் பெருமானே! இந்த பிராந்தியத்துக்கும் அப்பால் எது உளது ? மிகத் தொலைவில் உள்ளதிற்கும் அப்பால் தூரத்தில் எது உளது?

மந்திரம் 6
வருணன் பதில்
இந்த வளி மண்டலத்துக்கு அப்பால் ஒன்றுள்ளது ; அதைத் தாண்டியும் ஏதோ இருக்கிறது ; அடைவதற்கு மிகக் கடினமாமனது; அவ்வளவு தூரம்! வருணனான நான் அதை அறி ந்து உனக்கு அறிவிப்பேன்;
ஈகைக் குணமற்ற பாணிகள் (Miserly Baniya= Phoenicians) கீழே செல்லட்டும்; அதற்கும் கீழே தாசர்கள் செல்லட்டும்
xxx
இந்த மந்திரங்களுக்கு 125 ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்குறிப்பு எழுதியோர் கூறியதாவது –

Ralph T H Griffith க்ரிப்பித் சொல்வது-
“வளி மண்டலத்து அப்பால் சுவர்க்கம் (Heaven) உள்ளது; அதற்கப்பால் முடிவே இல்லாத மண்டலம் (Infinity) .
இந்த வினா- விடைப் பகுதி தெளிவற்று உள்ளது.”

Muir முயர் , என்பவர் சொல்லுவது –
“வளி மண்டலத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது? மிகத் தொலைவில் உள்ளத்திற்கும் முன்னால் என்ன இருக்கிறது? தவறு இழைக்காதவனே சொல்!
வளி மண்டலத்துக்கு அப்பால் ஒன்று இருக்கிறது; அதற்கு முன்னால் பக்கத்தில் வேறு ஒன்று இருக்கிறது. அதை அணுகமுடியாது”

125 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை மொழிபெயர்த்தவர்களே இவ்வளவு விஞ்ஞான விஷயங்களை வேத குறிப்புகளில் எழுதி வைத்துள்ளனர் .
அதர்வண வேதத்தில் உள்ள மூலிகை மற்றும் விஞ்ஞான விஷயங்களை ஆராய ஒரு தனி மகாநாடு கூட்டுவது அவசியம்!


MY OLD ARTICLES :- —-


கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்https://tamilandvedas.com › கரிக…
· 

18 Jan 2012 — சங்கத் தமிழ் நூல்கள் சங்க கால மன்னர்கள் செய்த பல அபூர்வ யாகங்கள் குறித்து …

பாணினியும் கரிகால் சோழனும் (Post No.8888)https://tamilandvedas.com › பாண…· 

4 Nov 2020 — கரிகாலன் பற்றிய அதிசய விஷயங்கள் என்ன? 1.கரிகால் சோழன், பருந்து வடிவ யாக குண்டம் ..


கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்https://tamilandvedas.com › கரிக…· Translate this page
18 Jan 2012 — கரிகால் சோழன் வேத நெறி தவறாது ஆண்டவன். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ …

பாணினியும் கரிகால் சோழனும் (Post No.8888)https://tamilandvedas.com › பாண…· Translate this page
4 Nov 2020 — 18 Jan 2012 — கரிகால் சோழன் வேத நெறி தவறாது … 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ …


–subham–

TAGS- ஏழு அடி நட்பு , கரிகாலன், அதர்வண வேதம், வளி வழங்கு மாஞாலம்

November 2021 London Swaminathan Articles,Index-108 (Post No.10,444)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,444
Date uploaded in London – – 14 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 
JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”
IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10,000 PLUS POSTS.

xxx


Is Dove a Bad Omen? Rig Veda Answers; Tamil Discovery of Doves; 10,286; Nov.1,2021
Sun and Science in the Rig Veda; 6 Discoveries Confirmed; 10,291; 2/11
Amazing Unity in the Rig Veda- London Swaminathan’s Research; 10,295, 3/11
Amazing Unity in the Rig Veda-2; 10,297;4/11
Amazing Unity in the Rig Veda-3; 10,302; 5/11
Amazing Unity in the Rig Veda-4; Is Einstein wrong? 10,304; 6/11
Deepavali Event in British Parliament; 10,305; 6/11
Amazing Unity in the Rig Veda-5 (last part) ; 10,310; 7/11
Stupid Sri Lankans on dangerous path again! They want you to Kidnap Others’ Wives! 10347; 17/11

Tamil and English Words 2700 Years Ago- 69; 10,321; 10/11
Tamil and English Words 2700 Years Ago- 70;10,348; 17/11
Tamil and English Words 2700 Years Ago- 71;10,380; 26/11
(last article in this series)


Beautiful Poem on Rain in Rig Veda; 10357: 19/11
Did Sorates know Vedas? His Sun as Eye remark shows it; 10,383; 27/11
December 2021 Calendar with Baba Quotations; 10,384; 27/11
Amazing Animal Lesson in Atharvana Veda, 10393; 29/11
1,2,3,4……. Number Worshippng Hindus;10,378; 25/11

All Credits go to Sita Mami (for Tamil Dramas in London); 10, 362; 21/11
Christians burned alive 9 Million Women- Chambers Encyclopedia; 10,371, 23/11
October 2021 London Swaminathan Articles- Index 107 (10,323); 1011
Story of Tiru Valluvar Staatue in London University; 10325; 11/11
Hindu God is cleverer than CIA, KGB, MI5, MI6, Mossad, James Bond and RAW Spies! (10,327); 11/11
Frog Mystery in Vedas; Frog in Crematorium and Canal Ceremony; 10332; 13/11
Frog Mystery in Vedas-2; 10,34015/11
Hindu Goddess turns into Frog Goddess in Egypt;10340; 15/11

Who is London Swaminathan? -1; 10306; 6/11
Who is London Swaminathan? -2; 10,313; 8/11
Who is London Swaminathan? -3; 10,317; 9/11
Why did London Swaminathan go to Jail? Who is London Swaminathan-4; 10,322; 10/11
Who is London Swaminathan-5; 10,345; 16/11
Who is London Swaminathan-6; Women have more Power of Observation; 10,349; 17/11
Who is London Swaminathan-7; Personal Meeting wit Shankaracharyas, 10, 354; 18/11
Who is London Swaminathan-8; Swamiji Krishna’s Miracles; 10,360; 20/11
Who is London Swaminathan-9; More Miracles by Swamiji; 10,368; 20/11
Who is London Swaminathan-10? Lucky to visit Famous Samdhis;10374; 24/11

World Hindu news Roundup;7-11-2021; 10308;7/11
World Hindu news Roundup;14-11-2021; 10334; 14/11
World Hindu News round up 21-11-2021; 10,363; 21/11
World Hindu News round up 28-11-2021; 10,388; 28/11
London Calling Thamil Muzakkam 7-11-2021, (10, 318)9/11
London Calling- Thamil Muzakkam 31-10-2021; 10,288
London Calling- Thamil Muzakkam 31-10-2021; 10,288
London Calling – Gnanamayam Broadcasts-14,15 Nov.2021Thamil (10, 318)9/11
London Calling – Gnanamayam Broadcasts-21,22 Nov.(10, 372)23/11
London Calling – Gnanamayam Broadcasts-28,29 Nov., (10, 395)30/11
xxxx
TAMIL ARTICLES IN NOVEMBER 2021

ரிக் வேதத்தில் புறா ஜோதிடம் -1; தமிழர்களின் புறா கண்டுபிடிப்பு -1;10290; நவம்பர் 2, 2021
ரிக் வேதத்தில் புறா ஜோதிடம் -2; தமிழர்களின் புறா கண்டுபிடிப்பு -2; 10,293; 3/11
சூரியனைப் பற்றி 6 கண்டுபிடிப்புகள் வேதத்தில் உள்ளது ; 10,301; 5/11
உலக மஹா கீதம்- வேதத்தில் மேலும் ஒரு தேசீய கீதம் ;10326; 11/11
ஜேம்ஸ் பாண்ட் – ஐ தோற்கடித்த ஹிந்து; 10,329; 12/11
குழந்தை பெற, செல்வம் செழிக்க, கல்வி சிறக்க இலவச புஸ்தகம் ;10,336; 14/11
மர்மத் தவளைகள் : ரிக், அதர்வ வேதம் தரும் அதிசயத் தகவல்கள் , 10337; 14/1
மர்மத் தவளைகள் : ரிக், அதர்வ வேதம் தரும்…… -2 10343; 16/11
இலங்கை அரக்கன் மீது ஞான சம்பந்தர் கடும்தாக்கு ;10352; 18/11

பிண்ணாக்கு ! நாத்திகர் மீது வள்ளலார் கடும் தாக்கு ;10,358; 19/11
மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே ! வேதத்தில்
அற்புதமான மழை வருணனை ! 10,367; 22/1
90 லட்சம் பெண்கள் உயிருடன் எரிப்பு; சேம்பர்ஸ் கலைக்களஞ்சியம் திடுக்கிடும் தகவல்; 10,370; 23/11
எண்களை / நம்பர்களை வணங்கும் வினோத இந்துக்கள் ; 10,377; 25/11
விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காத அதிசய விஷயம்!
இந்துக்கள் கண்டுபிடிப்பு ;10381;26/11
சாக்ரடீஸுக்கு வேதம் கூடத் தெரியும்? 10,387; 28/11
அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம் – பிராணிகள்
கற்பிக்கும் பாடம் -1; 10396; 330/11

பகவத் கீதை சொற்கள் INDEX 17; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -17; 10294; 3/11
பகவத் கீதை சொற்கள் INDEX 18; 10,299; 4/11
பகவத் கீதை சொற்கள் INDEX 19; 10,314; 8/11
பகவத் கீதை சொற்கள் INDEX 20; 10,330; 12/11
பகவத் கீதை சொற்கள் INDEX 21; 10,341; 15/11
பகவத் கீதை சொற்கள் INDEX 22; 10,353; 18/11
பகவத் கீதை சொற்கள் INDEX 23; 10,374; 24/11
பகவத் கீதை சொற்கள் INDEX 24; 10,392; 29/11

உலக இந்து சமய செய்தி மடல் 7-11-2021;10319
உலக இந்து சமய செய்தி மடல் 14-11-2021; 10335
உலக இந்து சமய செய்தி மடல் 21-11-2021; 10,364
உலக இந்து சமய செய்தி மடல் 28-11-2021; 10,389

—subham—

Tags- Index108, November 2021, London swaminathan

திரு அருட்பிரகாச வள்ளலார் – 1 (Post No.10,443)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,443
Date uploaded in London – – 14 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 13-12-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

திரு அருட்பிரகாச வள்ளலார் – 1
ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.


திரு அருட்பிரகாச வள்ளலார் பெருமானின் திவ்ய சரித்திரம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

தமிழர்களின் நல்வினைப் பயனாக அவரது சரித்திரத்தை “திரு அருட்பிரகாச வள்ளலார் தலை மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதிய உண்மைகள்” என்று அவரே தலைப்பிட்டு 77 பக்கங்களில் தருகிறார்.

‘பரதகண்டத்தின் பண்பு’ என்று முதலாம் பகுதி ஆரம்பிக்கிறது, ’திருமருதூர் என்று மறைந்தார்’ என்று 117ஆம் பகுதி முடிகிறது.

இந்தப் பகுதிகளில் வள்ளலார் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் பல சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. ஏழாவது பகுதியில் தெய்வத் தந்தையார் திரு அவதாரம் என்ற தலைப்பில் அவர் தரும் ஜனனக் குறிப்பு இது. அவரது ஜாதகத்தையும் தந்துள்ளார் அவர்.

“வள்ளலார் பெருமான் கலி 25-48 சுபானு வருடம், தட்சணாயனம், வருஷ ருது புரட்டாசி மாதம், 21ந் தேதி, பூர்வ பக்ஷம், துதியை திதி, ஞாயிற்றுக்கிழமை, இளஞாயிறே போன்று உதயாதி 29 நாழிகை, மீன லக்கினம், சித்திரை நட்சத்திரம் 4ஆங் கால் துலா ராசி (5-10-1823) கூடிய சுப தினத்தன்று நம் தெய்வத் தந்தையார் திரு மருதூர்ப் பதியிலே திரு அவதாரம் செய்தார்.”

ராமலிங்கம் என்று பெயரிடப்பட்ட அருட்குழந்தை அம்பலக் காட்சியை சிதம்பரத்தில் கண்டது. குழந்தையைப் பார்த்த பெரும் மகானான அப்பய்ய தீக்ஷிதர், “இக்குழந்தை அம்பலவாணரின் அருட் குழந்தையே” என்று வாழ்த்தினார்.

பெருமான் ஓதாது அனைத்தையும் உணர்ந்தார்.

வள்ளலாரின் தமையனார் சபாபதி பிள்ளை திருஞானசம்பந்தர் சரித்திரத்தை ஒரு நிகழ்ச்சியில் சொல்ல இருந்த போது திடீரென்று சுகவீனமுற்றார். வள்ளலார் பெருமான அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றி அனவரையும் மகிழ்வித்தார்; வியக்க வைத்தார்!

மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் தானே கடினமான நடையில் சிலேடைப் பாடல்களைப் பாடி பெருமானாரிடம் அவரை சோதிக்கக் கருதி, “சங்க காலத்துப் புலவர்கள் பாடியது இது” என்று சில ஓலைச் சுவடிகளைக் கொடுத்தார். அவற்றை ஒரு கணம் நோக்கிய பெருமான், “அப்பா, இவை பொருள் இலக்கணம் தேறாக் கற்றுக் குட்டி பாடியவை” என்றார். திகைத்துப் போன முதலியார் அன்றிலிருந்து அவரது அத்யந்த சீடரானார்.

ஒற்றியூரில் ஒரு நாள் இருந்த போது, அன்றிரவு சத்திரத்தில் ஒரு குருக்கள் வந்து அவருக்கு அன்னமளித்துச் சென்றார். மறுநாள் விசாரித்த போது அந்தக் குருகள் வெளியூர் சென்று இரண்டு நாட்கள் ஆயிற்று என்ற விவரம் வெளி வந்தது. தியாகப் பெருமானே குருக்களாக வந்தது ஊர்ஜிதமாயிற்று.

ஒரு முறை திருவொற்றியூரில் தரிசனத்திற்காக எல்லோரும் செல்லும் கீழண்டை மாட வீதி வழியாகச் செல்லாமல் பெருமானார் தேரடி வீதி வழியாகச் சென்றார். அங்கு இருந்த ஒரு நிர்வாண சந்யாசி போவோர் ஒவ்வொருவரையும் பார்த்து, ‘கழுதை போகிறது, மாடு போகிறது’ என்று சொல்வது வழக்கம். ஆனால் அவர் பெருமானாரைப் பார்த்து, “இதோ உத்தம மனிதன் போகிறான்” என்றார். அவரிடம் சென்று பெருமானார் சிறிது நேரம் சில உரைகளைக் கூற அன்றே அந்த சந்யாசி அந்த இடத்தை விட்டு அகன்றார்.

ஒரு நாள் இரவு நேரம் வீட்டிற்குத் தாமதமாக வந்ததால் திண்ணையில் படுத்தார் வள்ளலார். அவரைத் தட்டி எழுப்பிய தமக்கையார் அமுது படைத்தார். மறுநாள் தமக்கையார் தான் கதவை உட்தாளிட்டு இருந்ததாகவும் வெளியே வரவே இல்லை என்றும் வியப்புடன் கூறினார். அமுது படைத்தது வடிவுடைய நாயகியே என அனைவரும் தெளிந்தனர்; வியந்தனர்!

கருங்குழி என்னும் ஊரில் ஒரு நாள் வேங்கட ரெட்டியார் வீட்டில் அவரது வேண்டுதலின் பேரில் வள்ளலார் தங்கி இருந்தார். அன்று இரவு ரெட்டியார் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் விளக்கை ஏற்றி விட்டு அருகிலிருந்த மண்பாண்டத்தில் பழகுவதற்காக நீரை நிரப்பி விட்டுச் சென்றார். பாக்களை இயற்றிக் கொண்டிருந்த வள்ளலார் விளக்கு அருகில் எண்ணெய் இருக்கிறதென்று எண்ணி அதை எடுத்து ஊற்றியவாறே இருந்தார். விளக்கு நீரால் எரிந்து கொண்டே இருந்தது. விடியற்காலையில் வீடு வந்த ரெட்டியார் நடந்ததை உணர்ந்து பரவசமெய்தினார். அன்று முதல் அனைவரும் பெருமானாரை தெய்வமாகக் கருதலாயினர். சுவாமிகள் தண்ணீரால் விளக்கை எரித்த அந்த அறையை இன்றும் தைப்பூசத்தன்று அன்பர்கள் தரிசித்து வருகின்றனர்.

முத்து நாராயண ரெட்டியார் என்பவர் கண் பார்வையற்று வருந்தினார். சுவாமிகளிடம் தன் குறையைச் சொல்லவே அவருக்கு திருநீறு கொடுக்கவே அவருக்குக் கண் பார்வை வந்தது. இதனால் மனம் மிக மகிழ்ந்த ரெட்டியார் தன் செல்வம் முழுவதையும் அவர் பெயருக்கு எழுதி வைப்பதாகச் சொன்னார். அதை ஏற்க மறுத்த சுவாமிகள், ‘சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கு எழுதி வைத்து விடுங்கள்’, என்றார்.

கூடலூரில் அப்பாசாமி செட்டியார் என்ற அன்பருக்கு வாழைத் தோட்டம் ஒன்று இருந்தது. அதில் சென்ற போது சுவாமிகளை பேயன் வாழைமரத்திலிருந்த பாம்பு ஒன்று தலையில் தீண்டி விட்டது. அனைவரும் பதறினர். பாம்பைக் கொல்ல எத்தனித்தனர். சுவாமிகள் ‘அது தானாகவே இறந்து விடும். அது இறப்பதற்காகவே என்னைத் தீண்டியது’, என்றார். பாம்பின் விஷம் சுவாமிகளை ஒன்றும் செய்யவில்லை. சிறிது நேரத்தில் பாம்பு இறந்தது.
* தொடரும்

tags- இராமலிங்கம், அருட்பிரகாச,  வள்ளலார் , கருங்குழி