Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் (Post No.10,100)- part 1
ரிக் வேத கால இந்துக்கள் அபூர்வ மூலிகையான சோம லதையை (லதா= கொடி) ப் பிழிந்து ஒவ்வொரு நாளும் மூன்று முறை இறைவனுக்குப் படைத்தனர். இது ஒரு விதமான ஆனந்தம், சக்தி, உற்சாகம் அளிக்கும் மூலிகை.
வெள்ளைக்காரர்கள் நமது மதத்துக்கு எதிரியானதாலும், நமது மதத்தை நம்பாததாலும், நமது மதத்தைப் பின்பற்றாததாலும் அவர்களுக்கு இது என்னவென்றே தெரியவில்லை. ஆகையால் இதை மயக்கம் ஊட்டும் போதை மருந்து என்று எழுதிவிட்டனர். இதை R TH GRIFFITH கிரிப்பித் வெளியிட்ட ரிக் வேத ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்திலேயே காணலாம்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ் பாடிய 450 புலவர்களுக்கே சோம மூலிகையைப் பற்றித் தெரியாது. யூபம் , வேதம், கங்கை, அமிர்தம், இமயம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் புறநானூற்றில் கூட சோமம் என்ற மூலிகை பற்றிய குறிப்பு கிடையாது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காணாமற்போன இந்த அற்புத மூலிகை பற்றி வெள்ளைக்காரன் உளறிக்கொட்டி கிளறி மூடியதில் வியப்பொன்றுமில்லை . ஆனால் பிற் கால பாண்டியர் கல்வெட்டுகளில் இதைப் பயன்படுத்தியவர்களை மனோ சுத்த சோமயாஜி — மன தைச் சுத்தப்படுத்தும் சோமயாகம் செய்தவர் என்று புகழ்கிறது காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் சோம யாகம் செய்தவர்களுக்கு அரசுக்கு நிகரான வெண் குடை கொடுக்கப்படும் செய்தியை மொழிகிறார்.
ரிக் வேதத்தில் பல நூற்றுக் கணக்கான இடங்களில் சோம மூலிகை பற்றிய மந்திரங்கள் உள்ளன. பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட ரிக் வேதத்தில்- 6000 ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் – ஒன்பதாவது மண்டலம் முழுதும் ‘பவமான சோம’ என்ற கடவுளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . சோம என்பதற்கு பல பொருள் உண்டு. சந்திரன் என்ற பொருளும், மலைகளில் விளையும் சோமம் என்ற மூலிகைக்கும் அதிகமாகப் பயன்படும் சொல். ரிக் வேதத்தில் 9-97 துதியில் உள்ள 58 மந்திரங்களின் மூலம் சோமத்தின் ரஹஸ்யத்தைக் காண்போம் .
அதற்கு முன்பாக வெள்ளைக்காரன் கட்டுக்கதைதையைத் தவிடு பொடியாக்கும் சில விஷயங்களை சொல்கி றேன் .
ஸோமரசத்தை எல்லாக் கடவுளரின் பெயரிலும் ஒரு நாளைக்கு மூன்று முறை தீயில் ஆஹுதி செய்தார்கள்.
காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் இப்படிச் செய்தார்கள்.
அந்த மூலிகையைக் கடவுள் என்று சொல்லி ஆடிப்பபாடி மந்திரங்களை முழக்கி கற்கள் இடையே வைத்து பிழிந்து ஆட்டு ரோமத்தால் ஆன சல்லடை வழியே வடிகட்டி மரத்தால் ஆன வட்டில்கள், பாண்டங்களில் சேகரித்தார்கள்.
சிந்து சமவெளியில் இதுவரை என்ன என்றே தெரியாத ஒரு சாதனம் காளை மாட்டு முத்திரைகளுக்கு அடியே உள்ளது. இது சோமரச சாதனம் என்பது பெரும்பாலோரின் கருத்து.
இப்போது நமக்கு நாமே சில தடைகளை எழுப்பி விடை காண்போம்.
இருபதுக்கும் மேலான இடங்களில் சோம மூலிகையை பருந்தும் கழுகும் கொண்டுவருவதாக ரிக் வேதம் முழுதும் புலவர்கள் பாடுகின்றனர். இதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. சந்திரனையும் கருடனையும் அமிர்தம் தொடர்புபடுத்தி புராணக் கதைகள் பேசுகின்றன. அவற்றுடன் தொடர்புடையன போலும் !
போதை ஊட்டும் பொருளானால் அதை ராத்திரியில் குடித்துவிட்டு கும்மாளம் போடும் வெள்ளைக்காரர்களை நாம் இன்றும் பார்க்கிறோம். எவனாவது அதி காலையில் நதியில் குளித்துவிட்டு அதைச் சாப்பிடுவானா? அதுவும் மந்திரம் சொல்லி பெரும்பகுதியை கடவுளுக்கு என்று சொல்லி தீயில் ஊற்றி வீணடிப்பானா? சிந்தித்துப் பாருங்கள்.
.’இதுதான் சோமம்’, ‘அதுதான் சோமம்’, என்று 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வெள்ளைக்காரப் பயல்கள் அதை ஏன் இன்று பயிரிடக்கூடாது? கொக்கோ கோலா போல ஒரு மணிக்கு கோடி டாலர் சம்பாதிக்கும் தொழிலிலை ஏன் செய்யவில்லை? இன்று போதை மருந்து விற்பனை நிமிடத்துக்கு பலகோடி டாலர் என்று நாம் பத்திரிகையில் படிக்கிறோமே . ஏன் சோமத்தைப் பயிரிடவில்லை?இது எல்லாவற்றுக்கும் ஒரே பதில்:-
சோமம் ஒரு அபூர்வ குளிகை ; ஒரு அதிசய மூலிகை. அது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டது. அது என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் வருணனை ரிக் வேதத்தில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை உள்ளது . அது உடலுக்கு சக்தி, உற்சாகம், நீண்ட ஆயுள் தரும்; அதை சாப்பிடுவோருக்கு வீரம் மிக்க புதல்வர்கள் பிறப்பார்கள்; அவர்களுக்கு ஏராளமான செல்வம் கிட்டும்; மனம் சுத்தம் அடையும் என்பதை பின்வ ரும் 58 மந்திரங்கள் காட்டுகின்றன . அப்படியே 58 மந்திரங்களையும் கொடுக்காமல் BULLET POINTS புல்லட் பாயிண்டுகளில் தருகிறேன்.
ரிக் வேதம் – 9-97- 1 முதல் 58 வரை
பல ரிஷிகள் பாடிய கவிதை RV.9-97; மொத்தம் 58 மந்திரங்கள் / செய்யுட்கள்
நீ மஹான், நீ கவிஞன்; நீ மங்கள போர்க் கவசங்களை அணிந்தவன்;
நீ துதிகளைப் போற்றுபவன்; நீ எல்லாம் அறிந்தவன்.
கடவுள் விருந்தில் விழித்திருப்பவன் .
புகழ் உள்ளவர் இடையே மிக்க புகழ் படைத்தவன்
புவியில் பிறந்தவன்; அன்புக்குரியவன்
சோமனைப் பாடுவோம் ; மகத்தான செல்வம் பெற சோமனைப் பாடுவோம்
வழிபடுவோருக்கு மகத்தான செல்வம் கிடைக்க அவன் இந்திரனிடம் செல்கிறான்.
பசுமை நிறத்துடனும் சுத்தமானவனாகவும் பெருகுக
இன்பம் ஊட்டும் உன் ரசம், இந்திரனை போருக்குத் தயார் செய்யட்டும்
(ரிக் வேதம் முழுதும் போர், பகைவன், பசு, குதிரை, செல்வம், தங்கம், வீரப் பு தல்வர்கள் , வீடு ; குகைகளில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டல், தர்ப்பைப் புல்லை பரத்துதல், சோம ரசம் ஆகியன ஆயிரக்கணக்கான இடங்களில் வருகிறது ; இவைகளில் சொல்லப்படும் இந்தச் சொற்களுக்கு மறைமுக அர்த்தம் வேறு !!)
சோமன் காட்டுப் பன்றி போல உறுமுகிறான்
பகைவரை மிரட்டும் வாத்தியங்களை நண்பர்கள் வாசிக்கிறார்கள்
சோமன் தனி வழியில் செல்கிறான். அவனை முந்துவதற்கு எவருமிலர்.
கூரிய கொம்புள்ளவன் ; ஒளி வீசுவோன்.
பகலில் தங்க நிற ஒளி வீசுவான்; இரவில் வெள்ளி நிற ஒளி உமிழ்வான்
ஆற்றலின் அரசன்; அரக்கர்களை வீழ்த்துகிறான்.
இந்திரனுக்கு இன்பம் தந்து குஷிப் படுத்துகிறான்
இனிப்பானவன்; சுத்தப் படுத்துபவன்.
பருவத்துக்குப் பொருத்தம் உடைய காந்தி/ஒளி உடையவன்
அவனை பத்து சகோதரிகள் (விரல்கள்) களைந்து அனுப்புகிறார்கள்
பசுக்களைத் தொடர்ந்து செல்லும் காளை போல சோமன் விண்ணிலும் மண்ணிலும் ஓடுகிறான்.
அவனுடைய சப்தம் இந்திரன் சப்தம் போல (இடி முழக்கம்) முழங்குகிறது
சுவைக்க இனியன் ; பாலைச் சொரிபவன் ;
ஒளி நிற ஆடை அணிந்த சோமனே , மேகங்களை உன் ஆயுதங்களால் வசப்படுத்து.
நாங்கள் நல்ல வழிகளையும் செல்வத்தையும் பெற உதவி செய்
அரக்கர்களை தண்டாயுதத்தால் அடி .
(இதுவரை 16 மந்திரங்களின் சுருக்கம் கண்டோம்; மேலும் தொடர்வோம்)
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன்!
ச.நாகராஜன்
அற்புதமான நாயன்மார்களின் வரலாற்றை அரும் சொற்களால் தமிழ்ப் பாக்களாகப் புனைந்தவர் சேக்கிழார். அதில் மெய்ப்பொருள் நாயனார் புராணம் தமிழகத்தின் இன்றைய அவல நிலையை விளக்குகிறது.
தொண்டை நாட்டுக்கும் சோழநாட்டுக்கும் நடுவில் உள்ள நடு நாட்டை ஆண்டு வந்தார் மெய்ப்பொருளார்.
வேத நெறி வழுவாமல் ஆகமங்கள் பால் பெரும் பற்றுக் கொண்டு சிவனடியார்களைப் போற்றி அவர்கள் இட்ட வேலைகளைச் செய்து திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு அறம் பிறழாது ஆண்டு வந்தார் அவர்.
“மங்கையைப் பாகமாக வைத்தவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடலாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள் நாயகருக் கன்பர் தாளலால் சார்பொன்றில்லார்”
உமையம்மையை தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின் திருக்கோயில் அனைத்திலும் நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு ஆகிய அனைத்தையும் குறைவின்றி அவர் நடத்தி வந்தார்.
மெய்ப்பொருளாரை வெல்லக் கருதிய பகைவன் ஒருவனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
என்ன செய்தான் அவன்? நேருக்கு நேர் நின்று வெல்ல முடியாத அவன் அவரது கோயில் பற்றையும் சிவப் பற்றையும் ஆகம விதிகளின் மீது அவர் கொண்ட பக்தியையும் கண்டான்; சதித் திட்டம் தீட்டினான்.பின்னர் என்ன நடந்தது?
சேக்கிழார் அற்புதமாகக் கூறுகிறார் இப்படி:-
“மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்த்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்”
அற்புதமாக விவரிக்கிறார் இப்படி சேக்கிழார் பெருமான்! வஞ்சகனான அவன் மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன். அவன் பெயர் முத்த நாதன்.
தத்தன் என்ற அரசனின் மெய்க்காவலனையும் சிவனடியார் என்ற பொய்வேடத்தால் தள்ளி விட்டு அரசனின் அந்தரங்கப் படுக்கை அறைக்குள் நுழைந்தான் அந்த கபட வேஷதாரி.
படுக்கையில் மன்றலங் குழல் மென் சாயல் மாதேவியான அரசியைக் கண்ட பின்னும் முத்தநாதன் வெளியே போகவில்லை.
அரசனும் எழுந்தான். அவனிடம் ஆகப் பெரிய பொய் ஒன்றைச் சொன்னான் முத்தநாதன். உலகில் வேறெங்குமே இல்லாத ஆகமம் என்னிடம் இருக்கிறது என்றான்.
ஆகமம் வழுவாது அறநெறியுடன் கோவில் பூஜைகளை நடத்தும் மெய்ப்பொருளார் மிகவும் மகிழ்ந்து அவனை தவிசின் மேல் – அதாவது மிகப்பெரிய ஆசனத்தில் – அமர்த்தி அருள் செய்க என்றார்.
அந்த நயவஞ்ககப் பாவி புத்தகத்தை எடுத்துத் திறப்பது போல அதன் உள்ளிருந்த வாளை எடுத்து மெய்ப்பொருளார் மீது தான் செய்ய நினைத்த வேலையைச் செய்து முடித்தான்.
அந்த நயவஞ்சக வேலையைக் கூட அருளாளர் சேக்கிழார் பிரானால் கூற முடியவில்லை. “தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய” என்கிறார்.
மன்னன் வீழ்ந்தான். நயவஞ்சக முத்தநாதனை ஒரு நொடிப்பொழுதில் புரிந்து கொண்ட தத்தன் ஓடி வர அவனை மெய்ப்பொருளார் தடுக்கிறார்.”அவன் சிவ வேடம் பூண்டதால் அவனை ஒன்றும் செய்யாதே; அவனைப் பத்திரமாக வெளியே கொண்டு விடு” என்றார்.
அரச ஆணை! தத்தன் அப்படியே செய்தான்.
பொய்த்தவ வேடம் கொண்டு புகுந்த முத்தநாதன் தப்பித்தான் அரசனிடமிருந்து.
தெய்வத்திடமிருந்து அவன் தப்ப முடியுமா?
24 பாடல்களில் மெய்ப்பொருள் நாயனார் புராணத்தை வார்த்தை வார்த்தையாக அனுபவித்து பக்தியுடன் அனைவரும் படிக்க வேண்டும்.
இன்று கோவிலில் பொய்த்தவ வேடம் கொண்டு நுழைந்திருக்கும், இன்னும் புக நினைக்கும், முத்தநாதன்களை எளிதில் அடையாளம் காணலாம்.
தத்தனாக உள்ளே பாய்ந்து முத்தநாதன்களை மொத்தமாக மொத்தி அனுப்ப முயலலாம்.
கோவில்களையே கொள்ளையிடத் துடிக்கும் இந்த முத்தநாதன்களை மெய்ப்பொருளார் இன்று இருந்தால் மன்னிக்கவே மாட்டார் இல்லையா?
முத்தநாதன்களை இனம் காண வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்!
சிலை திருட்டு, கோவில் நகைத் திருட்டு என்று இன்ன பிற கொள்ளைகளைச் செய்யும் திருடர்களை சிறந்த காவல்துறையான தமிழகக் காவல் துறையிடம் இனம் காட்ட வேண்டுவதும் நம் கடமை; அதே போல சிவ வேடம் தரித்து புதிய ஆகமம் இருப்பதாகக் கூறி உள்ளே வரும் முத்தநாதன்களையும் போலீஸிடம் தான் சொல்ல வேண்டும்!
பக்தர்கள் செய்வார்களா?
***
INDEX
சேக்கிழார் பெருமான், மெய்ப்பொருள் நாயனார் புராணம், ஆகமம் பால் மதிப்புக் கொண்ட அரசனை முத்தநாதன் பொய் வேடம் பூண்டு ஏமாற்றுதல், புதிய ஆகமம் இருப்பதாகக் கூறு கொலை செய்யல், ஆலயம் பாதுகாக்க சிலைத் திருட்டுக்காரர்களை போலீஸிடம் சொல்ல வேண்டும்.
முக்கியக் குறிப்பு:-பகுத்தறிவுகளுக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். மெய்ப்பொருள் நாயனாரும் பிராமணர் இல்லை; இச்சரிதத்தை அழகுத் தமிழில் சொல்லும் சேக்கிழார் பிரானும் பிராமணர் இல்லை! எதையும் தவறாகத் திசை திருப்பும் பல தமிழக ஊடகங்களுக்காகத் தான் இந்த குறிப்பு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
PLEASE READ THE ATTRIBUTES THE HINDU SEERS GIVE TO SOMA PLANT AND THE BENEFITS THEY TALK ABOUT IN THER MANTARS IN THE RIGVEDA. THEN YOU CAN EASILY DECIDE WHAT IT IS.
IT IS A SHAME THAT WE DON’T HAVE IT TODAY. SOME HALF BAKED OR FULLY BAKED IDIOTS IDENTIFIED WITH X PLANT OR Y PLANT. HAD THEY REALLY KNOW THE PLANT THEY WOULD HAVE MADE BILLIONS OF DOLLLRS EVERY DAY BY CANNING AND SELLING IT.
I EVEN HAVE A SUSPICION THAT IT IS EQUAL TO AMRITA BECAUSE EAGLE-AMRITA STORY IN LAATER PURANAS IS IN THE RIG VEDA AS FALCON BRINGING IT FROM THE SKY OR MOUNTAIN.
FALACON, EAGLE AND HAWK ARE ASSOCIATED WITH THE SOMA PLANT IN 20 TO 30 MANTRAS.
All he quoted Mantras are from the ninth mandala of the Rig Veda. This Mandala has 114 hymns with 1108 Mantras.
xxx
Here is what the seers say about the Soma Juice:– RV.9-97
You are a mighty SAGE
You are watchful
You are far seeing
You are wearing battle ready raiment.
Let us sing praises to gods loudly and send soma for mighty riches
He has come for our great bliss
You are nobler than the noblest
A prince among us
You preserve us evermore with blessings
Come here with the gods for bounty
You are roaring like a BOAR
The SWANS brought their restless spirit to our dwellings
Friends come and sing in concert praising Soma
Soma appears silvery in night and golden in day light.
Soma has sharp horns and brings forth abundance
Soma bathed in milk excites Indra and make him joyful; Indra slays the demons.
As soma is purified, he pours out treasurers
Soma is GOD and he sprinkles on other gods
Soma / Indu has wearing qualities by seasons
Soma , the RED BULL bellowing to the cattle advances, causing the heaven and earth to roar and thunder
Soma is sweet, meath rich plant
You send us good paths ; show us good path
Pour on us rain from the sky
Let it be healthy
Send us breeze
You are a friend of human beings
Unties me from the knots of sin.
Flow on with thousand streams and give us strength to conquer heroes
Soma flows like unyoked horses
May soma grant us riches sought with longing
Soma gives riches to generous people
Soma is very wise
He who beholds man kind
King supreme of deities and mortals
Treasure lord of riches
Soma is like a speedy HORSE
Give us ample food thousandfold
After you are purified, find out riches
Give us children who will be heroes and give us houses.
Rich in all boons, the best of cheerers
Make heaven and earth well established
You are swifter than thought
You are a LION
Sprung from the gods
You are forerunner of abundant riches
A wise king will not treat his friend unkindly
Like a son following his father’s wishes, grant to this family success and safety.
I have covered only 30 mantras out of 58 in this one hymn (RV 9-97).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Written by London Swaminathan for a magazine recently; (Former BBC Broadcaster, University Tamil Tutor & Dinamani Senior Sub Editor)
ஆங்கில மொழியோ வேறு ஐரோப்பிய மொழியோ பேசும் நாட்டில் வாழும் நாமும் நம் குழந்தைகளும் தமிழ் மொழி கற்பது அவசியமா? வீட்டில் தமிழ் பேசுவது தேவையா? தமிழ் பண்பாட்டைக் காப்பதற்காக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ‘டிக்கெட்’ வாங்கிப் போக வேண்டுமா ? தமிழ் மொழியைக் கற்கும் நேரத்தில் வேறு மொழியையோ, புதிய தொழில்களையோ கற்றால் பணமும் சம்பாதிக்கலாம், புதிய வேலைகளையும் செய்யலாமே! — இவ்வாறு பல வாதப் பிரதிவாதங்கள் நடப்பதை நாம் அறிவோம்.
London University Tamil Department (SOAS)- dr Stuart Blacckburn, Dr John Marrin the Centre, London Swaminathan (Far right) Dr Singvi, High Commissioner (far left). Year 1996
முதலில் ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரையாளர் 43 ஆண்டுகளுக்கு தமிழ் தொடர்பான வேலைகளை மட்டுமே செய்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் வேறு வேலைகளுக்கு மனுப்போட்டும் கிடைக்கவில்லை!! ஆனால் தமிழ் வேலைகள் மட்டும் தேடித் தேடி வந்தன.(பத்திரிகை ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர், பி.பி.சி ஒலிபரப்பாளர் ,தமிழ் சங்க மானேஜர், தமிழ் மொழி பெயர்ப்பாளர்…… என்று) சுருக்கமாகச் சொன்னால் எனக்கும் என் குடும்பத்துக்கும், ‘தமிழ் சோறு போட்டது’. அதுவும் லண்டனில்!!
இது எல்லோர் வாழ்விலும் நடக்க முடியாதல்லவா? ஆகவே பொதுவாக விவாதிப்போம் .
ஒருவர் பிறந்த நாட்டையும், பிறந்த மதத்தையும், பேசும் மொழியையும், சேர்த்த புட் பால் (Foot Ball Club) அணியையும், கிரிக்கெட் அணியையும் ஆதரிப்பதை எல்லா கலாசாரங்களிலும் பார்க்கிறோம் . நாம் மட்டும் ஏன் நமது மொழியையும் பண்பாட்டையும் விடவேண்டும்?
அது சரி, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி ,கீட்ஸ் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் இருக்கிறார்கள். தமிழில் என்ன இருக்கிறது? என்று சிலர் நினைக்கலாம்.
தமிழ் ஒரு கடல். இன்று நாம் படிக்கத் தொடங்கி 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியாது. அதில் பெரும்பகுதி ஆங்கில இலக்கியம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை! தமிழ் பண்பாடோ மற்றவர்கள் முழு அளவு ஆடையின்றி நாகரீகம் இல்லாமல் திரிந்த காலத்தில் இந்தோனேஷியாவரை கொடிகட்டிப் பறந்து இருக்கிறது.
மேலும், எல்லா மரங்களுக்கும் வேர் இருப்பது போல ஒவ்வொருவருக்கும்- ஒவ்வொரு சமுதாயத்துக்கும் – ஒரு வேர் இருக்க வேண்டும். அதற் காகவும் நம் மூலத்தை (மூலம்= வேர்)ப் பிடித்துக் கொண்டு இருக்கவேண்டும்.
சிறு பிள்ளை ஆக இருக்கும்போது விளையாட்டில் கவனம்; இளம் வயதில் வாழ்க்கைத் துணையில் கவனம்; வயதானபோது உடல் நலனில் கவனம்- இப்படி வாழ்நாள் ஓடிவிடுகிறது. இடையே அலுப்பு சலிப்பு தட்டும். அப்போது ஏதாவது ஒரு பொழுது போக்கு தேவைப்படுகிறது அதற்கும் தமிழில் ஆடல், பாடல் என்று நிறைய இருக்கின்றன. பயனுள்ள விஷயங்களை அறிய தமிழில் எல்லாத் துறைகளிலும் கடல் அளவு செய்திகள் இருக்கின்றன. அற்புதங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட 18 சித்தர்கள் வழிகாட்டுவார்கள்.
பல திகில் திரைப்படங்களில் சங்கேத மொழியில் செய்தி அனுப்பி வில்லனை மடக்குவதை பார்த்திருப்பீர்கள்; நமக்கோ சங்கேத மொழியே தேவை இல்லை. நமக்குள் ரகசியமாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள தமிழ் உதவும். அதாவது ஆங்கிலம் போன்ற மொழி புழங்கும் இடங்களில்!
வேலை வாய்ப்புக்கும் தமிழ் உதவும். நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக . இதன் மூலம் கற்கும் கலைகள் நமக்கு பல இடங்களில் சிறப்பான வரவேற்பைத் தருகிறது. சொல்லுவது புரிகிறதா?
தமிழ் இட்டிலி , தோசை, வடை, பொங்கல், சாம்பார், ரசம் பிடிக்காத வெள்ளைக்காரர்கூட இல்லையே. அந்தக் காலத்திலேயே தமிழ் மிளகு ரசமும், கட்டுமரமும் ஆக்ஸ்போர்ட் அகராதியில் நுழைந்துவிட்டதே!.
ஒவ்வொரு ஆண்டும் நான் லண்டன் பல்கலைக் கழகத்தில், தமிழ் வகுப்பில், எல்லோரையும் அறிமுகம் செய்துகொள்ளும்படி சொல்லிவிட்டு ஏன் தமிழ் படிக்க வந்தீர்கள்? என்றும் சொல்லும்படி கேட்பேன். பெரும்பாலோர் தமிழ் பேசும் ஒருவரைக் கல்யாணம் கட்டியதால் தமிழ் தேவைப்பட்டது என்பர். இன்னும் சிலர் மாமியார், மாமனார் பேசுவது (திட்டுவது??) புரியவில்லை என்பதற்காக வந்தேன் என்பர். இன்னும் சிலர் தமிழ் சினிமா, கலை மூலம் ஈர்க்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பலர் தமிழ் நாடு, இலங்கை தொடர்பான ஆராய்ச்சியில் உதவும் என்று எண்ணி வந்ததாக இயம்புவர். ஒரு வெள்ளைக்காரர் துணிச்சலாக ஆண்டு தோறும் இட்லி, தோசை சாப்பிடுவதற்காகவே தமிழ் நாட்டுக்குச் செல்வதாகவும் ஹோட்டல்காரக்ளுடன் நன்கு உரையாட தமிழ் படிப்பதாகவும் சொன்னார். அது பொய்யல்ல என்பது அவர் பல ஆண்டுகளுக்கு என்னிடம் தமிழ் படித்ததிலிருந்து தெரிந்தது. இட்டிலி தோசைக்கு அவ்வளவு மஹிமை!
குறைந்தது தமிழ் திரைப்படங்களில் வரும் நகைச் சுவை காட்சிகளையும் பாடல்களையும் ரசிப்பதற்காகவாது தமிழ் கற்க வேண்டும்.
ஆயினும் பழம் பெருமை மட்டும் பேசுவதோடு நில்லாமல் ஆங்கிலம், இந்தி போல பிறமொழிச் சொற்களையும், நமது மொழியின் அடிப்படை கெடாத அளவுக்கு, ஏற்க வேண்டும். ‘தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் தமிழர்கள் கோஷமிடுவது காதில் கேட்கிறது. உலகிலுள்ள புகழ் பெற்ற பிற மொழி இலக்கியங்களோ, அறிவியல் விஷயங்களோ இன்னும் தமிழில் கால்வாசி கூட மொழிபெயர்க்கப்படவில்லை. வெளிநாட்டில் வாழும் நமக்குக் கிடைக்கும் வசதிகள் தமிழ் மொழி வழங்கும் இடங்களில் கிடைப்பதில்லை. அந்த மொழிபெயர்ப்புப் பணியையும் நம்மில் சிலர் செய்யலாம். அதனால்தான் பாரதியும் ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றார் . அத்தோடு ‘பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றார் மேலும் ஒருபடி போய் ‘இறவாத புது நூல்கள் இயற்றல் வேண்டும்’ என்றார் .இந்த மூன்று பணிகளில் முடிந்ததை நாம் செய்யலாமே.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
நாம ஏவ சித்தாந்தா – நாமமே சித்தாந்தம் என்ற நாம மகிமை சித்தாந்தத்தை வலியுறுத்தி ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள், ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள், திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் உள்ளிட்ட பல மகான்கள், அந்த சித்தாந்தத்தைப் பரப்பிய காலம் நாம சங்கீர்த்தனத்தின் பொற்காலம்.
இந்தப் பொற்காலத்தில் அவதரித்தவர் ஸ்ரீ நாராயண தீர்த்தர்.
காஷ்மீரிலிருந்து கன்யா குமரி வரை அனைவரும் இசைத்து ஆனந்தப்படும் கிருஷ்ண லீலா தரங்கிணி நூலை இயற்றியவர் ஸ்ரீ நாராயண தீர்த்தரே. இந்த நூலை, அனைவரும் பரவசப்படும் விதமாக நாட்டியமாக வடித்து நூற்றுக் கணக்கான நடனக் கலைஞர்கள் நாட்டியம் ஆடி அனைவரையும் பக்திப் பரவசப்படுத்துகின்றனர். அதே போல நூற்றுக் கணக்கான இசை மேதைகளும் தங்கள் குரல் வளத்தால் கிருஷ்ண லீலைகளை செவி குளிரப் பாடுகின்றனர்.
தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த தல்ல வஜ்ஜல என்ற குடும்பம் ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் பானக நரசிம்மர் உறைந்து அருள் பாலிக்கும் மங்களகிரியின் அருகில் அமைந்துள்ள காஜா என்ற கிராமத்தில் வசித்து வந்தது. அங்கு நீலகண்ட சாஸ்திரி, பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ஸ்ரீ நாராயண தீர்த்தர். இவர் பிறந்த ஆண்டு 1665. ஜீவ சமாதி எய்திய ஆண்டு 1745.
இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் கோவிந்த சாஸ்திரி. இவர் இளம் வயதிலேயே ஸ்ரீ கிருஷ்ணர் மீது எல்லையற்ற பக்தி கொண்டிருந்தார். சம்ஸ்கிருதத்தில் வல்லமை பெற்ற இவருக்கு இசை கை வந்த கலையாயிற்று, சாஸ்திரங்களிம் மிகுந்த தேர்ச்சி பெற்றார். அந்தக் கால நடைமுறைப்படி இவருக்கு இளம் வயதிலேயே திருமணமும் நடை பெற்றது.
ஒரு சமயம் தனது மாமனார் வீட்டிற்குச் செல்வதற்காகப் புறப்பட்ட இவர் கிருஷ்ணா நதியைத் தாண்ட வேண்டியிருந்தது. அப்போது ஆற்றின் வெள்ளப் பெருக்குச் சுழலில் மாட்டிக் கொண்டார். வெள்ளத்தில் மூழ்கி உயிர் போய் விடும் என்ற தருணத்தில் இவர் ஆபத் சந்யாசம் மேற்கொண்டார். அந்த மந்திரங்களைச் சொல்லி சந்யாசம் மேற்கொள்ளவே, வெள்ளச் சுழலிலிருந்து மீண்டார், சந்யாசி ஆனார். தனது மனைவியை அவர் பார்த்த போது, அவரது தெய்வீக முகத்தைக் கண்டு மனைவி நடந்ததை உணர்ந்து கொண்டார். தெய்வீக லீலையை உணர்ந்து கொண்ட குடும்பத்தினர் அவரது சந்யாச தர்மத்தை ஏற்றுக் கொண்டனர். தீர்த்தர், இந்திர சரஸ்வதி, பூரி ஆகிய பெயர்களை சந்யாச நாமத்தில் கொண்டவர்கள் அத்வைத சம்பிரதாயத்தைப் பின்பற்றும் ஆசாரியர்கள் ஆவர். காசிக்கு யாத்திரை மேற்கொண்ட கோவிந்தர், அங்கு சிவராமாநந்த தீர்த்தர் என்பவரைக் குருவாகக் கொண்டார். அவர் முறையாக அவருக்கு சந்யாச ஆஸ்ரம தீக்ஷையைச் செய்து வைக்க அவர் நாராயண தீர்த்தர் என்ற நாமத்தை மேற்கொண்டார். அந்தப் பெயராலேயே உலகெங்கும் அறியப்பட்டார்.
ஒரு சமயம் அவருக்குத் தீராத வயிற்று வலி ஏற்பட்டது. அவரது கனவிலே வெங்கடேசப் பெருமாள் அவரது குரு வடிவில் தோன்றி அவரை பூபதிராஜபுரம் என்ற ஊருக்குச் செல்லுமாறும் அங்கு வயிற்றுவலி தீர்ந்து விடும் என்று கூறி அருள் பாலித்தார். கால்நடையாக யாத்திரையை மேற்கொண்ட அவர் திருவையாறு வந்து பஞ்சநதேஸ்வரரையும் தர்மஸம்வர்த்தனியையும் தரிசித்தார். அங்கு ஒரு வில்வ விருக்ஷத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் நடு காவேரியை அடைந்தார். அங்கு வலி இன்னும் தீவிரமானது. அவரது கனவில் மீண்டும் தோன்றிய வெங்கடேச பெருமாள் அவரிடம், காலையில் அவர் பார்க்கும் முதல் பொருளைப் பின் தொடர்ந்து செல்லுமாறு கூறி அருள் பாலித்தார். காலையில் விழித்த நாராயணதீர்த்தர் கண்களில் ஒரு பன்றி தென்பட்டது. அவர் பன்றியைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். பன்றியானது வேகமாக ஓட ஆரம்பித்தது. அது நேராக பூபதிராஜபுரத்தை அடைந்து அங்குள்ள வெங்கடேசர் ஆலயத்தினுள் புகுந்தது, மறைந்தது. வராக அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவே தன்னை ஆட்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த நாராயண தீர்த்தர், விழிகளில் நீர் பெருக தியானத்தில் அமர்ந்தார். நெடுநாள் அவரை வாட்டிய வயிற்றுவலி ஒரு கணத்தில் அங்கே தீர்ந்தது. அவரது தியானத்தில் கிருஷ்ண தரிசனமும் ஏராளமான திவ்ய காட்சிகளும் தென்படலாயின. பூபதிராஜபுரம் இப்படி பன்றி என்ற வராகத்தின் வருகையால் வரகூர் என்ற பெயரைப் பெற்றது.
அவர் கண்ட தெய்வீகக் காட்சிகள் மளமளவென்று அவரது நா வழியாக பொங்கிப் பிரவாகமெடுத்து வரலாயின. கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற அபூர்வ நூல் பிறந்தது. இந்த நூல் ஒரு இசை நூலாகவும் நாட்டியத்திற்கு ஏற்புடையதான ஒரு நாட்டிய நூலாகவும் அமைந்தது. இதை நாராயண தீர்த்தர் தாமே வடிவமைத்து அங்கு அரங்கேற்றியதாக வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு கீதத்தையும் வெங்கடேசருக்கு அர்ப்பணிக்க அவர் தலை அசைத்து அதை அங்கீகரிக்கவே அனைவரும் பெரு மகிழ்ச்சிக்குள்ளாயினர். இன்னொரு கூற்றின் படி ஆஞ்சநேயர் எவற்றை எல்லாம் அங்கீகரித்தாரோ அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அவரே நிராகரித்து விட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.
கிருஷ்ண லீலா தரங்கிணி ஆன்மீகக் கருத்துகளைத் தன்னுள் கொண்ட ஒரு அற்புதமான காவியமாகும். உபநிடதக் கருத்துக்களை ஆங்காங்கே அவர் பதித்துள்ளார். தனது குருவின் பெயரான சிவானந்த தீர்த்தரை அவர் எட்டாவது தரங்கத்தில் அமையும் தேவதேவம் என்ற கீர்த்தனையின் இறுதியில் குறிப்பிடுகிறார். வழக்கமாக கடைசி சரணங்களில் தனது முத்திரையை சிவராம தீர்த்தர் என்றும் நாராயண தீர்த்தர் என்றும் வரநாராயண தீர்த்தர் என்றும் தீரநாராயண தீர்த்தர் என்றும் அவர் பதித்துள்ளார்.
கணபதி துதியைத் தொடர்ந்து தேவகி-வசுதேவர் கல்யாணத்தில் ஆரம்பித்து க்ருஷ்ணர் ருக்மிணியை மணம் முடிப்பது வரை இந்த காவியத்தில் பல காட்சிகளை நாம் காணலாம். சம்ஸ்கிருதத்தில் உயரிய பாண்டித்தியம் கொண்டிருப்பதால் அவரது இந்த காவியத்தில் காவிய ரஸனையைக் காணலாம். சிலேடை உள்ளிட்ட பல அணிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
ஜய ஜய ஸ்வாமிம் ஜய ஜய என்று கம்பீரமாக ஆரம்பிக்கிறது இந்த நூல்.
கிருஷ்ண லீலை என்னும் அலைகள் என்பதே கிருஷ்ண லீலா தரங்கிணி என்பதற்கான பொருளாகும். ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தின் சுருக்கமே இது. அதில் ஒன்று முதல் 58ஆம் அத்தியாயம் முடிய உள்ள பகுதிகளை இதில் காணலாம். இதில் வசனமும் உண்டு, கவிதையும் உண்டு, நாடகமும் உண்டு. ஆக இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் தரும் அபூர்வ நூல் இது. இதில் அமைந்துள்ள ஜதிகளும் சொல்கட்டுகளும், இவரே அதில் லயித்து ஆடிப்பாடி நடித்ததை அடிப்படையாகக் கொண்டு இருப்பதைச் சுட்டிக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஜெயதேவர் இயற்றிய கீதகோவிந்தத்தின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டவர் நாராயணதீர்த்தர். கீத கோவிந்தத்தில் 12 சர்க்கங்கள் அமைந்துள்ளது போலவே கிருஷ்ணலீலா தரங்கிணியிலும் 12 தரங்கங்கள் அமைந்துள்ளன. யக்ஷகான அடிப்படையில் அமைந்துள்ள இந்த காவிய நூலானது 145 கீர்த்தனைகளையும், 267 செய்யுள்களையும் 30 கத்யங்கள் – அதாவது வசன பகுதிகளையும், 30 தருக்களையும் அதாவது விவரண கீதங்களையும் கொண்டுள்ளது. குறைந்தபக்ஷம் 41 ராகங்களை இதில் காணலாம். த்ரிபுட, ஆதி, ரூபக, சாபு, சம்பா, மத்ய, விளம்ப, ஏகா, அட உள்ளிட்ட தாளங்களை நாராயண தீர்த்தர் பயன்படுத்தினார். சம்ஸ்க்ருத யாப்பிலக்கணத்தில் வல்லுநர் என்பதால் அரிய விருத்த வகைகளான அனுஷ்டுப், ஆர்யா, இந்த்ரவஜ்ரா, புஜங்கப்ரயாதம், சார்தூலவிக்ரிதம், வசந்த திலகா, ப்ரித்வி உள்ளிட்ட பல சந்த வகைகளை – விருத்த வகைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இந்த சந்த வகை பற்றி யூடியூபில் டிகாராம் கௌசிக் உள்ளிட்ட அறிஞர்கள் விளக்கியுள்ளதைப் பார்த்து மகிழலாம். https://m.youtube.com/watch?v=FTJ617guES4
கடினமான பதங்களைப் பயன்படுத்துவதை தீர்த்தர் தவிர்த்தார். அவருடைய கத்யங்கள் மிக அழகானவை.
கிருஷ்ணலீலா தரங்கிணி மட்டுமல்லாமல் பாரிஜாத அபஹர்ணம், ஹரிபக்தி சுண்டர்னவம் உள்ளிட்ட பதினைந்து நூல்களையும் அவர் படைத்துள்ளார்.
நெடுங்காலம் வரகூரில் இருந்த நாராயண தீர்த்தர் பின்னர் திருப்பூந்துருத்தியை அடைந்தார். அங்கு ஒரு மாமரத்தின் அடியில் அமர்ந்து மாசி மாத சுக்ல பக்ஷ அஷ்டமி திதியில், கார்த்திகை நக்ஷத்திரத்தில் ஜீவ சமாதி எய்தினார்.
நாராயணதீர்த்தரால் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் உள்ளிட்ட மகான்கள் உத்வேகம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. வரகூரில் இன்றளவும் ஜன்மாஷ்டமி அன்று கிருஷ்ணலீலாதரங்கிணியில் உள்ள கீர்த்தனைகள் இசைக்கப்படுகின்றன. அதே போல அவர் ஜீவ சமாதி எய்திய திருப்பூந்துருத்தியில் தியாகராஜ ஆராதனை போலவே அவரது ஆராதனையும் வெகு விமரிசையாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரது கிருஷ்ணலீலாதரங்கிணியை இணையதளத்திலிருந்து சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தரவிரக்கம் – டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பஜனை சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்டோர் யூடியூபில் கிருஷ்ண லீலா தரங்கிணியின் ஆனந்த அலைகளைச் செவி மடுத்து இன்புறலாம்.
அவரது க்ஷேமம் குரு கோபால என்ற கீதத்தின் வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்:
Raga: Mohanam
Tala: Triputi
Pallavi (refrain):
क्षेमं कुरु गोपाल संततं मम க்ஷேமம் குரு கோபால சந்ததம் மம
நாம சங்கீர்த்தனத்தின் மஹிமையை உணர்த்தி கிருஷ்ண லீலைகளை கிருஷ்ணலீலா தரங்கிணியாக வடித்துத் தந்த நாராயணதீர்த்தரின் பெருமை சூரிய சந்திரர் உள்ளவரை நிலைத்திருக்கும். அவர் காவியம் கிருஷ்ணரின் புகழ் உள்ளவரை ஊழி ஊழி காலம் நிலைத்திருக்கும். நன்றி, வணக்கம்.
*** Tags- நாராயண தீர்த்தர் , க்ஷேமம் குரு கோபால, கிருஷ்ணலீலா தரங்கிணி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்)
அலெக்ஸாண்டர் தூமா(ஸ் ) ALEXANDRE DUMAS 19-ம் நூற்றாண்டின் பிரபல பிரெஞ்சு நாடக ஆசிரியர், நாவல் ஆசிரியர். அவர் எழுதிய இரண்டு துணிகர நாவல்களைப் பலரும் படித்திருப்பார்கள் – த்ரீ மஸ்கிடீர்ஸ் THREE MUSKETEERS /மூன்று துப்பாக்கி வீரர்கள் ; THE COUNT OF MONTE CRISTO தி கவுன்ட் ஆப் மா ண்டி கிறிஸ்டோ
தூமா, பிரான்ஸ் நாட்டில் கிராப்புறத்தில் பிறந்தார். தந்தை ஒரு ராணுவ அதிகாரி; தாய் சத்திரத்தை நடத்தும் ஒரு பெண்மணி.அவருடைய தந்தை நெப்போலியன் போனபர்ட் படையில் பணிபுரிந்தார். சண்டையில் உயிரிழந்தார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. பிழைப்பு தேடி தூமா , தலைநகர் பாரிசுக்கு வந்தார். அப்போதுதான் எழுதத் துவங்கினார்.
27 வயதில் மூன்றாவது ஹென்றி Henry III என்ற வரலாற்று நாடகத்தை எழுதி மேடை ஏற்றினார். அப்போது அவருக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அந்த உத்வேகத்தில் தொடர்ந்து, இடைவிடாது புதிய கதைகள், நாடகங்கள், நாவல்களை எழுதி வந்தார். எப்போதாவது ஒய்வு வேண்டுமென்றால் கிராப்புறத்திற்குச் சென்று ஓய்வு எடுப்பார்.
பிரான்ஸ் நாட்டின் முழு வரலாற்றையும் எழுத வேண்டும் எனது அவருடைய ஆசை. அதன் காரணமாக எழுந்ததுதான் முன்னர் குறிப்பிட்ட இரண்டு நாவல்கள் .
நாவல் , கதைகள் எழுதுவதில் எவ்வளவு வேகம் இருந்ததோ அவ்வளவு வேகம் செலவு செய்வதிலும் இருந்தது. இதனால் எவ்வளவு பணம் வந்தாலும் கடன்காரனானாகி விடுவார். மீண்டும் உழைத்து கடனை அடைப்பார்.
தூமாவுக்கும் அவருடைய காதலிக்கும் பிறந்த மகனின் பெயரும் அலெக்சாண்டர்தான் . அவரும் தந்தை போலவே நாவல் எழுதி புகழ் பெற்றார். அவர் எழுதிய கமீய் Camille என்ற சோகமான காதல்கதை அவரைப் புகழ் பெற வைத்தது. அது 1852-ம் ஆண்டிலேயே பிரான்சில் நடித்து காண்பிக்கப்பட்டது.
தூமா பிறந்த தேதி – ஜூலை 24, 1802
இறந்த தேதி – டிசம்பர் 5, 1870
வாழ்ந்த ஆண்டுகள் – 68
எழுதிய நாவல்கள், நாடகங்கள் –
1829 – HENRY III
1830- CHRISTINE
1831 – NAPOLEON BONAPARTE
1831 – ANTONY
1832 – THE TOWER OF NESLE
1836- KEAN
1844 – THE THREE MUSKETEERS
1844 – THE COUNT OF MONTE CRISTO
1845 – TWENTY YEARS AFTER
1850- THE BLACK TULIP
***
எனது பிளாக்கில் 2015 அக்டோபர் 9ம் தேதி எழுதியது இதோ:-
அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.
“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.
நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:
“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்
நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;
மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!
—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”
நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரெங்கும் பாரதியின் சிந்தனை! ஞான மயம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி சிறப்புற நடத்தப்பட்ட போது 11-9-2021 சனிக் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)
பாரதியார் பற்றிய சிறந்த நூல்கள், கட்டுரைகள், வானொலி உரைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிமுகம் தர வேண்டுமென்று ஒரு எண்ணம் உதிக்கவே 60 புத்தகங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை எழுதினேன்.22-8-2015இல் (கட்டுரை எண் 2091) சகுந்தலா பாரதி எழுதிய என் தந்தை என்ற நூலைப் பற்றி முதலில் எழுதி 27-8-2019இல் (கட்டுரை எண் 6939) 60வது புத்தகமாக சேக்கிழார் அடிப்பொடி திரு T.N.ராமச்சந்திரன் எழுதிய வழி வழி பாரதி பற்றி எழுதினேன். நேரம் கருதி அந்த அறுபது புத்தகங்களில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம். என் தந்தை
பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி எழுதிய அருமையான நூல் இது. 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளி வந்த நூல்.
பாரதி நினைவுகள்
பாரதி பற்றிய இந்த நூலை எழுதியவர் யதுகிரி அம்மாள். 1954 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
என் கணவர் :-
இது புத்தகம் அல்ல. வானொலி உரை. மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மா பாரதி 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் இந்தத் தலைப்பில் ஒரு உரையாற்றினார்.
நான் கண்ட நால்வர்
1959ஆம் ஆண்டு பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தால் வெளியிடப்பட்ட இந்த அருமையான நூலை எழுதியவர் தமிழ் உலகம் நன்கு அறிந்த அறிஞர் வெ.சாமிநாத சர்மா (1895-1978) ஆவார்.
பாரதி புதையல் மூன்றாம் தொகுதி
மிக மிக அருமையான இந்த நூலை பாரதி பக்தர் ரா.அ.பத்மநாபன் தொகுத்து 1975ஆம் ஆண்டு பாரதி தினத்தன்று வெளியிட்டிருக்கிறார்.
பாரதி புதையில் மூன்று தொகுதிகளையும் ஒன்றாய் இணைத்து பாரதி புதையல் பெருந்திரட்டு என்ற நூலாய் அவர் வெளியிட்டார். அதில் 204ஆம் பக்கத்தில் வீர்யம் என்ற கட்டுரையின் முன் குறிப்பாக எனது தந்தையார் பெயரையும் அவர் குறிப்பிடுகிறார். எனது தந்தையார் தினமணி வெ.சந்தானம் 1940களில் ஜயபாரதி பத்திரிகையில் வேலை பார்த்து வந்த போது பாரதியாரின் கவிதைகளைத் தேடிப் பிடித்து வெளியிடுவது வழக்கம். அவரை அன்புடன் இப்போது நினைவு கூர்கிறேன்.
பாரதியார் பிறந்த நாள்
அரவிந்த ஆசிரமம் அமுதன்
இது ஒரு புத்தகம் அல்ல. வானொலி உரை. அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அமுதன் அவர்களை புதுவை வானொலி நிலையத்தார் அழைத்து மஹாகவி பாரதியார் பற்றி உரை ஒன்றை நிகழ்த்துமாறு வேண்டினார்கள்.
பாரதியார் பிறந்த தினத்தன்று 11-12-1968ஆம் தேதி இது ஒலிபரப்பப்பட்டது.
மஹாகவி பாரதியார் – வ.ரா. எழுதிய நூல்
Subramania Bharati – Patriot and Poet
அருமையான இந்த ஆங்கில நூலை எழுதியவர் பி.மஹாதேவன். 1957இல் வெளி வந்தது இது.
கண்ணன் என் கவி
பாரதி இயலில் பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு புத்தகம் கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோர் எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற புத்தகம். இந்த நூலை மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதியது ஒரு சிறப்பு அம்சம் என்றால் இதில் பாரதியார் உலக மகாகவியாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு அம்சம்.
பாரதியார் கவி நயம் – 31 அறிஞர்கள் எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்
பாரதி நான் கண்டதும் கேட்டதும்
பாரதியைச் சந்திக்கும் பேறு பெற்ற பி.ஸ்ரீ எழுதிய நூல் இது.
பாரதி பிறந்தார் – கல்கி எழுதிய நூல்
தினமணி சுடரில் வெளியான பல கட்டுரைத் தொகுப்புகள்
பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி
தினமணி சுடரில் 1980,1981,1982 வெளி வந்த கட்டுரைகள்
இப்படி மகாகவியைப் பற்றி நூற்றுக் கணக்கில் நூல்கள் மற்றும் கட்டுரைகள், துணுக்குகள் அவ்வப்பொழுது ஏராளமான பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன.
மகாகவி ஒரு மாபெரும் கடல். அந்தக் கடலில் மூழ்கி முத்துக்களையும் பவழங்களையும் அரிய பொருள்களையும் எடுத்துக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி பாரதியைக் கற்போர் தேசபக்தியில் சிறந்து விளங்குவர்; தெய்வ பக்தியில் சிறந்து விளங்குவர்; மொழிப் பற்றில் சிறந்து விளங்குவர். வாழ்க்கையை வாழ்வாங்கு வாழும் வாழ்வியலில் சிறந்து விளங்குவர்.
பாரதி 100!
மஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11, 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்து 100 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 100ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.
1. சிறந்த சம்ஸ்கிருத விற்பன்னர்
2. பல்மொழி அறிந்தவர்
3. பள்ளி ஆசிரியர்
4. சிறந்த பத்திரிகாசிரியர்.
5. சிறந்த பதிப்பாளர்
6. கார்ட்டூனை அறிமுகப்படுத்தியவர்
7.சிறந்த கவிஞர்
8. சிறந்த கணவர்
9. சிறந்த தகப்பன்
10. சிறந்த கதாசிரியர்
11. சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.
12. சிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்
13.சிறந்த சொற்பொழிவாளர்
14. சிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.
15. மஹாத்மாவை இனம் கண்டவர், அவரைச் சந்தித்து அவரது இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.
16. திலகரைப் போற்றியவர்
17. தேசபக்தர்களைப் போற்றியவர்
18.வ.உ.சிக்கு நெருக்கமானவர்
19.நிவேதிதாவைக் குருவாகக் கொண்டவர்
20. அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவர்.
21. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்
22.சிறந்த இசை விற்பன்னர்
23. சிறந்த பாடகர்
24. தேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்
24. சங்க இலக்கிய விற்பன்னர்
25. கம்பனில் ஈடுபாடு கொண்டவர்
26. வேதம் புகழ்ந்தவர்
27.ரஷிய புரட்சியை வரவேற்றவர்.
28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்
29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்
30. உலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்
31. தீர்க்கதரிசி
32. வெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்
33. ஜாதிகள் இல்லையென்றவர்
34. ஆதி திராவிடரான கனகலிங்கம் என்பவருக்கு பூணூல் போட்டு புரட்சி செய்தவர்
35. வானியல் நிபுணர்
36. தேசீய ஒற்றுமை போதித்தவர்
37. பெண் விடுதலை கேட்டவர்
38. சிறந்த மொழிபெயர்ப்பாளர்
39. காங்கிரஸ் மஹாசபையின் வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர்
40. புதிய தமிழ்நடையை உருவாக்கியவர்
41. பலரால் பாராட்டப் பெற்றவர் .பிரான்ஸ் நாட்டு அறிஞர் பாரதியாரது பாடலை மொழிபெயர்த்தார். 42. தமிழறிஞர் உ.வே.சாமிநாதையரைப் பாராட்டியவர்
43.காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்ட செயல்வீரர்
44. பகைமை பாராட்டாதவர்
45. ராஜதந்திர நோக்குடையவர்
46. அஞ்சாநெஞ்சர்; பிரிட்டிஷ் அடக்குமுறைக்குப் பயப்படாதவர். 47. தபஸ்வி – மந்திரச் சொல் வேண்டித் தவம் புரிந்தவர்.
48. கொடையாளி – செல்வந்தர் இல்லை என்றாலும் தனக்குக் கிடைத்ததை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டவர்.
49. வந்தேமாதரம் மந்திரத்தைப் பரப்பியவர்
50. படிப்பாளி
51. விருந்தினரை உபசரிப்பவர்
52. புதிய ஆத்திசூடி பாடி காலத்திற்கேற்றபடி புதிய நெறி கண்டவர்
53. வீதி தோறும் இரண்டொரு பள்ளி என்ற லட்சியத்தை முன் வைத்த சிறந்த கல்வியாளர்
54. விஞ்ஞான ஆர்வலர்
55. சக்தி உபாசகர்
56. கண்ணபிரான் பக்தியில் திளைத்தவர்
57. கற்பனையின் சிகரத்தில் ஏறி பல நல்ல கனவு கண்டவர்
58. நடைமுறை வேதாந்தி
59. மகாபாரதத்தின் முக்கிய கட்டத்தை விடுதலையை மனதில் எண்ணி பாஞ்சாலி சபதம் காவியம் இயற்றியவர்.
60. வேதாந்தமாக விரித்துரைக்க ஒரு குயில்பாட்டு கண்டவர்
61. நடுநிலையாளர் சிறந்த நடுநிலை தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
62. சிறந்த ஹிந்து
63. பல இடங்களுக்கும் பயணம் செய்து வாழ்க்கையின் பல அம்சங்களையும் அலசிய பயணி
64. சிறந்த சித்தர்
65. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரைப் போட்டிக்கு அழைக்க நினைத்தவர்.
72. மதமாற்றம் கண்டு பொங்கியவர். தனது அருமை நண்பர் சுரேந்திர நாத் ஆர்யா மதம் மாறியது கண்டு வருந்தி நொந்து கண்ணீர் சிந்தினார்.
73. அழகிய கையெழுத்தைக் கொண்டவர்
74. நன்கு உடை அணிபவர்
75. நண்பர்களை அரவணைத்தவர் – சுமார் 35க்கும் மேலான சீடர்களைப் புதுவையில் கொண்டிருந்தார்.
76. புதிய பாரதம் அமைக்க எண்ணியவர்
77. வெளிதேச வாசம் வெறுத்தவர்
புதுவை வெள்ளைக்காரர் வசம் ஆகும் என்ற ஒரு நிலை வந்த போது பிரான்ஸில் குடியேறலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பாரதியார் அப்படி பிரான்ஸுக்குச் செல்ல விரும்பவில்லை. வெளிதேச வாசத்தை அவர் வெறுத்தார். சிறந்த சுதேசி.
78. மாதாமணி வாசகம் வெளியிட்டவர்
79. ஆங்கில பத்திரிகாசிரியர்
தமிழ் பத்திரிகை ஆசிரியர் என்பதோடு பால பாரதம் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் ஆசிரியராக ஆனார்.
80.தெய்வ அருள் பெற்றவர்
‘மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி’ என எழுதினார். அனைத்தும் சக்தி அருளினாலேயே நடக்கிறது என்று நம்பினார். அந்த சக்தியின் அனுக்ரஹத்தையும் பெற்றார்.
81.மரணம் வென்றவர்
காலா என் காலருகே வாடா, உன்னை சற்றே எட்டி மிதிக்கிறேன் என்றவர். சாகா வரம் அருள்வாய் -ராமா என்று பாடியவர்.பார் மீது நான் சாகாதிருப்பேன் என்று அறிவித்தவர். உண்மை தான்! தனது சாகா வரம் பெற்ற பாடல்களினால் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார்.
82. சகல உயிர்களையும் நேசித்தவர்
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று முழங்கியவர்.
83.வ.வே.சு. ஐயரால் பெரிதும் போற்றப்பட்டவர் சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்! ஆஹா, இதற்கு அக்ஷர லக்ஷம் கொடுக்கலாமே என்றார் அவர்.
84.விவேகானந்தரின் பக்தர்
85.ரமணரை தரிசித்த கவிஞர்
திருவண்ணாமலை சென்ற போது பகவான் ரமணரை தரிசித்தார்.
86.நாடக ஆசிரியர்
87. தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்த நினைத்தவர்
88. பிரெஞ்சு தேசீய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்.
பிரெஞ்சு தேசிய கீதமான லா மார்ஸ்லே என்ற கீதத்தை “ அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம் மன்னு புகழ் நாள் இதுவே“ என்று தமிழில் மொழிபெயர்த்தார்.
ஆக வந்தேமாதரம் என்ற பாரதத்தின் தேசீய கீதத்தையும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதத்தையும் தமிழில் தந்ததால் இரு தேசங்களின் தேசீய கீதங்களையும் தமிழாக்கிய பெருமையைப் பெறுகிறார்.
89. பாரதி பட்டத்தை பதினோரு வயதிலேயே பெற்றவர்.
இவரை மட்டம் தட்ட நினைத்த காந்தி மத நாதர் தந்த ஈற்றடியான, ‘பாரதி சின்னப் பயல்’ என்பதை ‘காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல்’ என எழுதி அனைவரையும் இள வயதிலேயே வியக்க வைத்தவர். இவரது கவிதா திறமையைக் கண்ட அறிஞர்கள் இவருக்கு பதினோரு வயதிலேயே – 1893ஆம் ஆண்டிலேயே – இவருக்கு பாரதி பட்டம் அளித்தனர்.
90. புதிய கவிதா பாரம்பரியத்தை உருவாக்கியவர்
91 பழையதையும் புதியதையும் இணைக்கும் பாலமாக இருந்தவர்
92. உலக அறிஞர்களின் தத்துவங்களைப் பாராட்டியவர்
லாவோட்சு, விட்மன், புத்தர் என உலக அறிஞர்கள் மற்றும் மகான்களின் தத்துவங்களை ஆங்காங்கே கட்டுரையில் தந்தவர். அரவிந்தர், தாகூர், காந்திஜி உள்ளிட்டோரின் சிறப்பான கருத்துக்களையும் தமிழில் தந்தவர்.
93. புராணங்களைப் போற்றியவர்!
94. ஆங்கில கவிதை, கட்டுரை, நூல் எழுதியவர்
ஆங்கிலக் கவிதைகளை எழுதியுள்ளார். தனது கும்மிப் பாடலைத் தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். The Fox with the golden Tail என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார்.
95. சிறை சென்ற தியாகி
1918 நவம்பர் 20ஆம் தேதி புதுவையிலிருந்து குதிரை வண்டியில் குடும்பத்துடன் புறப்பட்ட பாரதியார் பிரெஞ்சு எல்லையைக் கடந்தவுடன் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். கடலூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 முடிய சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
96. ஏராளமான அதிசய அனுபவங்களைப் பெற்றவர்
வாழ்க்கையில் நம்ப முடியாத அதீத உளவியல் அனுபவங்களையும் அதிசய அனுபவங்களையும் பெற்றவர். கோவிந்தசாமி புகழ் என்ற கவிதையில். “ஒரு நாள் இறந்த எந்தை தன்னுருவம் காட்டினான், பின்னர் என்னைத் தரணிமிசை பெற்றவளின் வடிவம் உற்றான்’ என்று கூறி இறந்த தந்தையையும் தாயையும் கோவிந்த சாமி காட்டத் தான் பார்த்ததைக் கூறுகிறார். திருவனந்தபுரம் சென்ற போது மிருகக் காட்சிச் சாலையில் காவலாளி தடுத்த போதும் ஒரு சிங்கத்தின் அருகில் சென்று அதைத் தொட்டு, ‘அன்பு கொண்டோரை நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்பதை கர்ஜனை மூலம் தெரிவியுங்கள்’ என்று சொல்ல சிங்கம் கர்ஜித்தது. இப்படி ஏராளமான அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
97. சிறந்த பொன்மொழிகளையும் புது சூத்திரங்களையும் தந்தவர்.
98.கீதையின் பால் பற்று கொண்டவர். அதற்கு உரை எழுதியவர். பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்; பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் என்று கீதையை இரண்டே வரிகளில் சித்தரித்தவர்.
99. நல்ல புத்தகத்திற்கு முன்னுரை தந்தவர்.
100. சிறந்த மனிதர்
மன்னுக்கு இதம் செய்பவர் மனிதர். அதாவது உலகிற்கு இதம் செய்பவர் என்ற அர்த்தத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த சிறந்த வியக்க வைக்கும் மனிதர் மகாகவி பாரதியார். இறுதியாக, இதோ எனது அஞ்சலி:-
பாரதிரப் பாடிய பாரதியைப் பணிமின்
பாரதி பாரதியே தான் என்ற எனது அஞ்சலியை பாரதிக்குச் சமர்ப்பிக்கிறேன்.
பாரதியாரின் புகழுக்கு முடிவில்லை. அவரது சிறப்பியல்புகளை 100 என்ற எண்ணுக்குள் கட்டுப்படுத்த முடியாது. இந்த எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர் அவர். பாரதியார் திரு நாமம் வாழ்க. தேச பக்தியும் தெய்வ பக்தியும் வெல்க! வந்தேமாதரம்!! பாரத் மாதா கீ ஜெய்!!! இந்த நல் வாய்ப்பை எனக்குத் தந்த திரு சந்தானம் சுவாமிநாதன் அவர்களுக்கும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும், ஞானமயம் குழுவினருக்கும் செவி மடுத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறி அமைகின்றேன்.