ஆலயம் அறிவோம்- ஸ்ரீ காள ஹஸ்தி கோவில் (Post No.9784)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9784

Date uploaded in London – – 28 JUNE   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆலயம் அறிவோம்- ஸ்ரீ காள ஹஸ்தி கோவில்-Part 35

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 27-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி

வட்டவார் சடையனை வயல் அணி காழியான்

சிட்ட நால்மறை வல் ஞானசம்பந்தன் சொல்

இட்டமாப் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே 

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலமாக அமைவதும், சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்வதும், ராகு கேது ஸ்தலமாக அமைவதுமான ஸ்ரீகாளஹஸ்தி தலமாகும். இது திருப்பதியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீ என்றால் சிலந்தி. காள என்றால் பாம்பு. ஹஸ்தி என்றால் யானை என்று பொருள். இந்தத் தலத்தில் ஞானப் பிரஸூனாம்பாள் சமேதராகக் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் தன்னை வழிபட்ட சிலந்திக்கும், பாம்பிற்கும், யானைக்கும் ஒரே சமயத்தில் காட்சி அளித்து இவை மூன்றையும் ஒன்றாக முக்தி அடையச் செய்தார்.

அவ்வுருவங்களையும் அந்தப் பெயர்களையும், தான் இணைத்து,  ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் என்ற திருநாமத்தைப் பெற்றார். ஏராளமான புராண வரலாறுகளையும் சரித்திரச் சம்பவங்களையும் கொண்டுள்ள மிகப் புராதனமான ஸ்தலம் இது. ராகுவும் கேதுவும் வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப் பெற்ற தலம் இது. ஆகவே, லிங்கத் திருமேனியில் நாகப்பாம்புகள் பின்னலிடப்பட்டது போன்ற தோற்றத்தை இங்கு காண முடிகிறது. இது ராகு கேதுவிற்கான விசேஷ ஸ்தலம் என்பதால் காலம் காலமாக ராகு, கேது தோஷம் உடைய லட்சக்கணக்கானோர் இங்கு வந்து வழிபடுகின்றனர். சர்ப்ப சாந்தி உள்ளிட்ட பல வழிபாடுகளை நடத்தி தங்கள் தோஷத்தைக் கழிக்கின்றனர். திருமணத் தடை உள்ளிட்ட பல தடைகள் நீங்கி மனம் மகிழ்கின்றனர்.

கோவிலைச் சுற்றி பிரம்மாண்டமான கற்சுவர்களும் வானளாவிய கோபுரங்களும் அழகிய சிற்பங்களும் உள்ளன. இதன் ஆதி வரலாறு ஒன்று உண்டு. கர்ப்பூர லிங்கம் ஒன்றை இங்கு ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாயு பகவான் வழிபட்டு வந்தான். இதனால் மனம் மகிழ்ந்த சிவபிரான் அவனுக்கு மூன்று வரங்களை அருளினார். அதன் படி வாயு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையையும், ஒவ்வொரு உயிரின் அந்தராத்மாவாக விளங்கும் தன்மையையும், அவன் வழிபட்ட கற்பூர லிங்கம் அவன் பெயராலேயே வழங்கப்படும் பெருமையையும் பெற்றான். இங்கு, சிறிதும் காற்று வீசாமல் இருக்கும் கர்பக்ருஹத்தில் உள்ள திருவிளக்கின் சுடர், தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்பது ஒரு அதிசயமாகும். ஆகவே இங்குள்ள லிங்கம் வாயு லிங்கம் எனப்படுகிறது. படைப்புக் கடவுளான பிரம்மா ஒருமுறை கைலாயத்தைத் தன் தோளின் மீது எடுத்து பூலோகம் வழியாகச் செல்லும் போது எங்கு சிகரத்தின் பாரத்தை உணர்கிறாரோ அங்கு அதை பிரதிஷ்டை செய்து தவம் புரிந்தால் சுபிட்சம் ஏற்படும் என்ற அசரீரி ஒலி கேட்டது. தென் திசை வழியே செல்லும் போது சிவபிரான் வாயுலிங்கமாக சிகரத்தில் நுழைந்தார். பாரம் அதிகமானது. ஆகவே பிரம்மா அதை அங்கேயே வைத்தார். அந்த இடம் தான் திருக்காளத்தித் தலமாகும். அவர் அங்கேயே தங்கு தவம் செய்யத் தொடங்கினார்.              

ஒருமுறை காமதேனுவை வழிபடாமல் புறக்கணித்த லக்ஷ்மி தேவி, அதனால் தன் ஒளியை இழந்தாள். திருமால் லக்ஷ்மியைப் புறக்கணித்து, காளத்தி சென்று தவம் புரியுமாறு கூற, அவரும் ஸ்வர்ணமுகி நதியில் நீராடி ஒரு ஸ்ரீ சக்ரத்தை அம்பிகை ஞானப் பிரஸூனாம்பாளின் திருப்பாதங்களில் வைத்து வழிபடலானார். சில காலம் கழித்து ஒரு வைகாசி மாதம் பௌர்ணமி கழிந்த ஐந்தாம் நாள் ஸ்ரீசக்ரத்திலிருந்து அம்பிகை வெளிப்பட்டுக் காட்சி தர லக்ஷ்மி தேவி இழந்த தனது பிரகாசத்தை மீண்டும் பெற்றாள். திருமால் லக்ஷ்மியை ஏற்றுக் கொண்டு வைகுந்தம் ஏகினார். பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று!    

மிக பிரசித்தமான கண்ணப்ப நாயனாரின் சரித்திரத்தை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அர்ஜுனனே கலியுகத்தில் வேடுவர் குலத்தில் கண்ணப்பனாகப் பிறந்தார் என்று தெலுங்குக் கவிஞர் தூர்ஜடி கூறுகிறார். ஒருமுறை கண்ணப்பன் இங்குள்ள தன் இஷ்ட தெய்வமான லிங்கத்தை வழிபடச் செல்ல, லிங்கத்தின் இடது கண்ணிலிருந்து இரத்தம் வழியவே திகைப்புற்ற கண்ணப்பன் தன் கண்ணைப் பிடுங்கி இறைவனின் கண் இருந்த இடத்தில் அப்ப, ‘நில்லு கண்ணப்ப, இது எனது திருவிளையாடலே’ என சிவ்பிரான் அவனுக்குக் காட்சி அளித்துக் கூறினார். கண்ணப்பனின் பக்தியின் பெருமையை உலகம் அறிந்த இடம் திருக்காளத்தியே.

சந்திர வம்சத்தைச் சேர்ந்த வரகுண பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் இங்கு வந்து தவம் புரிந்து இறைவனின் தரிசனத்தை நேரில் பெற்றான். ஆகவே இந்தத் தலம் வரகுணபுரம் என்ற பெயரைப் பெற்றது. சிவபிரானின் பாடல் பிழையானது என்று நக்கீரர் ஒருமுறை கூற சிவபிரான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க, நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர். அதனால் சிவபிரான் அவருக்கு குஷ்ட நோய் வருமாறு சாபம் தர, தன் பிழையை உணர்ந்த நக்கீரர் இறைவனிடம் தன்னை மன்னித்து அருள் பாலிக்குமாறு வேண்ட சிவபிரான் நீ கைலாயத்தை அடையும் போது உன் நோய் தீரும் என்று அருள் பாலித்தார். திருமுருகாற்றுப்படையை இயற்றிய நக்கீரர் திருப்பரங்குன்றம் குளத்தில் குளித்து எழும் போது எதிரே ஸ்வர்ணமுகி ஆறு ஓடுவதைக் கண்டு அதிசயித்தார். தக்ஷிண கைலாய மலையான காளத்தியைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததனால் ஆனந்தம் அடைந்த அவர் கைலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதி நூலை இயற்றி மனம் மிக மகிழ்ந்தார். காளத்தி கோவிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள தக்ஷிண கைலாய மலைச் சரிவில் நக்கீரருக்கு ஒரு கோவில் உண்டு. சித்துலய்யா என்று அங்கு இவர் அழைக்கப்படுகிறார். இந்தத் தலத்தில் வந்து வழிபட்டுள்ள திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் ஒரு பதிகத்தையும், சுந்தரர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஸ்ரீஞானப்ரஸூனாம்பாளும், ராகு, கேது பகவானும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். சுந்தர நாயனாரின் நல் வாக்கு இது :            

நீறார் மேனியனே, நிமலா நினை அன்றி, மற்றுக்,                                         கூறேன் நா அதனால், கொழுந்தே, என் குணக்கடலே,                                      பாறார் வெண்தலையில் பலி கொண்டுஉழல்காளத்தியாய்,                                

ஏறே, உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே! 

நன்றி வணக்கம்!       

***

tags-  காளஹஸ்தி கோவில்

உலகத்திற்குள் உலகங்கள்!! அற்புதமான லீலா கதை! (Post.9783)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9783

Date uploaded in London – –  –28 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மரணம் என்னும் மாயை! உலகத்திற்குள் உலகங்கள்!! அற்புதமான லீலா கதை!

ச.நாகராஜன்

யோக வாசிஷ்டத்தில் பேருண்மைகளை விளக்கும் அற்புதமான கதைகள் உள்ளன. அவற்றில் மிகச் சுவையானதும் அற்புதமானதும் ஆச்சரியத்தைத் தரக்கூடியதுமான ஒரு கதை லீலாவின் கதை.

உற்பத்தி பிரகரணத்தில் 15ஆம் அத்தியாயம் முதல் 60ஆம் அத்தியாயம் முடிய இந்தக் கதை சுவையாக விவரிக்கப்படுகிறது.

இங்கு சுருக்கத்தைக் காண்போம்:

பத்மா என்ற அரசன் தனது மனைவியான லீலா என்ற அரசியுடன் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்தான். லீலாவிற்கு ஒரு ஆசை பிறந்தது. தானும் தனது கணவரும் மரணமே அடையாமல் என்றும் ஒன்றாக சந்தோஷமாக இருந்து பூவுலகில் வாழ வேண்டும் என்பது தான் அந்த ஆசை. லீலா தனது நாட்டில் இருந்த அறிஞர்கள் அனைவரையும் வரவழைத்தாள்.எப்படி மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்து இந்தப் பூவுலகிலேயே இருக்கலாம், அதற்கு ஒரு வழியைச் சொல்லுங்கள் என்றாள் அவள். அறிஞர்கள் அனைவரும் திகைத்தனர். அனைவரும் ஒருமித்தமாக மரணம் அடையாமல் இருக்கவே முடியாது, மனிதனாய்ப் பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம் உண்டு என்றனர்.

லீலா அவர்கள் அனைவரையும் போகச் சொன்னாள். சரஸ்வதி தேவியை நோக்கிக் கடும் தவம் புரிய ஆரம்பித்தாள். அதே சமயம், கணவனுக்கான தனது பணிகளை அவன் சந்தேகப்படாமல், விடாமல் தொடர்ந்து செய்து வந்தாள். சரஸ்வதி தேவி அவளது தவத்திற்கு மெச்சி நேரில் அவள் முன் பிரசன்னமானாள்.

லீலாவை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள் சரஸ்வதி தேவி.

இரு வரங்கள் வேண்டும் என்றாள் லீலா.

“அவை என்ன, சொல் என்றாள் சரஸ்வதி.

“ஒன்று, எனது கணவர் இறக்கும் போது அவரது ஜீவன் அரண்மனையிலேயே இருக்க வேண்டும். இரண்டாவது நான் விரும்பிய போதெல்லாம் சரஸ்வதி தேவியாகிய நீங்கள் எனக்கு முன்னால் நேரில் பிரசன்னமாக வேண்டும். இவை தாம் நான் வேண்டும் இரண்டு வரங்கள் என்றாள் லீலா.

“தந்தோம் இரு வரங்களை, உனக்கு என்று கூறிய தேவி மறைந்தாள்.

சில காலம் கழிந்தது. ஒரு நாள் மன்னன் பத்மா மரணமடைந்தான். மிகுந்த துயரத்தை அடைந்த லீலா சரஸ்வதி தேவியை நேரில் வருமாறு பிரார்த்தித்தாள். நேரில் பிரசன்னமான சரஸ்வதி, “பிணத்தை மலர்களினால் மூடு என்று கூறியதோடு, பின்னால் அவன் திருப்பி வருவான் என்றாள்.

தேவி கூறியபடியே லீலா செய்தாள்.

சில நாட்கள் கழிந்தன. லீலாவிற்குத் துக்கம் தாளவில்லை. மீண்டும் சரஸ்வதியை அழைத்தாள். “என்னை என் கணவன் எங்கு இருக்கிறாரோ அங்கு அழைத்துச் செல்லுங்கள், அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை என்று கூறினாள்.

சரஸ்வதி அவளது உடலை விடுமாறு கூறி அவளை அவள் கணவரிடம் அழைத்துச் சென்றாள்.

இன்னொரு ராஜ சபையில் தனது கணவன் அமர்ந்திருப்பதை லீலா பார்த்தாள். இப்போது அவனுக்கு வயது பதினாறே ஆகி இருந்தது. அது மட்டுமல்ல, தனது அரச சபையில் இருந்த பலரும் கூட அங்கே அங்கம் வகிப்பதையும் அவள் பார்த்தாள். அவளுக்கு ஒரே ஆச்சரியம். இவர்கள் கூட இறந்து விட்டார்களோ என்று அவள் எண்ணினாள். அதை சரி பார்த்து விடலாமே என்று தோன்றியது அவளுக்கு.சரஸ்வதி தேவியிடம் வேண்டிக் கொள்ள அவர் அருளால் தனது அரண்மனைக்குத் திரும்பினாள். அங்கு அவளே ஆச்சரியப்படும்படி அவளது அனைத்து அரசவை உறுப்பினர்களும் இருந்தனர். அவளது கணவனின் உடலை எப்படி விட்டாளோ அப்படியே விட்டது விட்டபடி அது இருந்தது!

லீலாவிற்கு ஒரே ஆச்சரியம்! எப்படி அவளது குடிமக்கள் இங்கும் இருக்க முடிகிறது, இன்னொரு இடத்திலும் இருக்க முடிகிறது?!

இதில் எது உண்மை, எந்தக் காட்சி பொய்?

தேவியானவள் அவள் முன் தோன்றி இரண்டு அனுபவங்களுமே கனவினைப் போன்றவையே, இரண்டுமே மாயை தான் என்றாள்!

மேற்கொண்டு சரஸ்வதி வசிஷ்டர் என்ற ஒரு பிராமணரின் கதையைக் கூறினாள்.

மிக்க ஏழையான வசிஷ்டர் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் அரசன் ஒருவன் வேட்டையாடச் சென்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். இப்படி வலிமை வாய்ந்த அரசனாக அல்லவோ பிறக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அடுத்த பிறவியில் அவர் பராக்ரமம் பொருந்திய ஒரு அரசனாகப் பிறந்தார். வசிஷ்டரின் மனைவியும் தொடர்ந்து இறக்கவே, அவள் அரசனின் மனைவியாக ஆனாள். சரஸ்வதி இந்தச் சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் நடந்தது என்று விளக்கினாள். அது மட்டுமல்ல, வசிஷ்டர் என்ற அந்த பிராமணரே பத்மா என்ற அரசன் என்றும் அவள் தான் வசிஷ்டரின் மனைவி என்றும் கூறினாள்.

லீலாவிற்கு ஒரே திகைப்பு, பிரமிப்பு! இது எப்படி சாத்தியம் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் தன் கணவர் பத்மாவுடன் பல ஆண்டுகள் அல்லவா வாழ்ந்து வந்தாள்! ஒரு வாரத்திற்கு முன்னர் மட்டுமே இறந்து போன இவர்கள் எப்படி பற்பல ஆண்டுகள் வாழ்ந்தது போலத் தோற்றமளிக்கின்றனர்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சரஸ்வதியை அவள் திகைப்புடன் பார்க்க, தேவியோ, “ காலமும் வெளியும் மனக் கற்பனைகளே என்று விளக்கினாள். ஒருவன் எதைக் கற்பனை செய்கிறானோ அதுவாகவே அவன் ஆகிறான். ஒருவன் கனவு காணும் போது வெகு தூரத்தில் அவன் இருப்பதைக் காண்கிறான். அங்கு நெடுங்காலம் வசிப்பது போலவும் அவன் காண்கிறான். ஆனால் விழித்துக் கொண்டவுடன் தனது பழைய இடத்தில் அதே காலத்தில் இருப்பதைக் காண்கிறான். கனவில் தான் கண்ட நெடுங்காலமானது கனவு கண்ட சில நிமிடங்களில் ஏற்பட்டதே தான் என்பதையும் தெரிந்து கொள்கிறான்.

லீலா இந்த விஷயத்தை இன்னும் சரி பார்த்து விடலாம் என நினைத்து சரஸ்வதி தேவியை அந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினாள். அங்கு வசிஷ்டரின் மகன்கள் வசிஷ்டர் இறந்து விட்டதை நினைத்து இன்னும் துக்கம் அனுஷ்டிப்பதைக் கண்டாள்.

ஆக இப்படியாக சரஸ்வதி, லீலாவிற்கு மூன்று கணவர்கள் இருப்பது மெய்யே என உணர்த்துகிறாள். வசிஷ்டர் என்ற ஏழை, பத்மா என்ற வயதான அரசன், புதிய அரசை ஆளும் இளமையான அரசன்! ஆக தேவி லீலாவை நோக்கி அவளது இந்த மூன்று கணவர்களில் யாரிடம் அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்கிறாள். லீலா தனக்கு நிறைய பிறப்புகள் இருப்பதையும் நிறைய கணவர்கள் இருப்பதையும் இப்போது உணர்ந்து விட்டதாக தேவியிடம் கூறுகிறாள்.

தேவியிடம் தன்னைத் தனது மூன்றாவது கணவனான இளைஞனான அரசனிடம் அழைத்துச் செல்லுமாறு லீலா வேண்டுகிறாள். அங்கேயோ அந்த அரசின் மீது எதிரிகள் ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுத்துள்ளனர். ஆகவே இளைய அரசன் தனது மந்திரிகளுடன் அந்தப் படையெடுப்பை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறான். மந்திராலோசனை முடிந்த பின்னர் அரசன் தூங்கச் செல்கிறான். அப்போது தேவி அவனை எழுப்புகிறாள். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அரசன் தனது இரு புதிய விருந்தாளிகளைப் பார்த்து ஆனந்தம் அடைகிறான். பின்னர் தேவி தூங்கிக் கொண்டிருந்த அமைச்சரை எழுப்பி அவருடைய அரசன் பெயர் என்ன என்பதைத் தெரிவிக்குமாறு கேட்க அவர் அரசனின் பெயர் விதுரதா என்றும் அவர் இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.

 உடனே தேவி அரசனின் தலை மேல் கையை வைத்து அவனது இறந்த காலத்தைப் பார்க்குமாறு சொல்கிறாள்.  அரசன் எப்படி ஒரு வாரத்திற்கு முன்னர் தான், தான் கிராமத்தில் இறந்து விட்டதையும், அதற்கு ஒரு நாள் முன்னதாகத் தான் பற்பல ஆண்டுகள் வாழ்ந்து வந்த பத்மா என்ற அரசனாக இருந்து இறந்து போனதையும் இப்போது பல காலமாக விதுரதா என்ற பெயரில் தான் வாழ்ந்து வருவதையும் பார்த்து வியப்பின் உச்சிக்கே செல்கிறான். சரஸ்வதி இந்த மூன்றுமே மாயை என்று கூறி ஒரு போதும் அவன் இறக்கவும் இல்லை, பிறக்கவும் இல்லை என்று உணர்த்துகிறாள். உண்மையில் அவன் சுத்த விஞ்ஞானம் அதாவது சுத்தமான பிரக்ஞை என்றும் கூறுகிறாள்.

இளைஞனான அரசன் தேவியிடம்  புதிய ராணியையும் புதிய அமைச்சரையும் தனது பழைய அரசுக்குக் கூட்டிச் செல்ல தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்கிறான். தேவி, அதற்கு அவன் போரில் இறக்க வேண்டும் என்றும் பின்னர் தனது புது மனைவியுடனும் புது அமைச்சருடனும் அவனது பழைய உடல் கிடக்கும் இடத்திற்கு அப்படிச் செல்லலாம் என்றும் கூறுகிறாள்.

அதன்படியே அரசன் போருக்குச் சென்று அங்கே கொல்லப்படுகிறான். பிறகு தேவி அவனையும் அவனது ஒரே மாதிரியாக இருக்கும் இரு மனைவிகளையும் அதாவது பழைய லீலா, புதிய லீலா ஆகிய இருவரையும் கூட்டிச் செல்கிறாள். அங்கு உடலாகக் கிடந்திருக்கும் பழைய மன்னன் பத்மாவை உயிர்ப்பிக்கிறாள்.

இந்தக் கதை இப்படி விரிவாகச் சொல்லப்படுகிறது. பெரிய உண்மை என்னவெனில் சங்கல்பம், ஆசை, எண்ணங்கள், காலம் வெளி ஆகியவற்றின் ஒப்புமைத் தோற்றம் ஆகியவை இந்தக் கதை மூலம் நன்கு விளக்கப்படுகிறது. நாம் காணும் உலகத்திற்குள் இன்னும் பல நுண்ணிய உலகங்கள் இருக்கின்றன என்பதையும் இந்தக் கதை புலப்படுத்துகிறது. ‘புருஷா சேதனா மாத்ரம் – அதாவது புருஷன் என்பவன் வெறும் சேதனா தான் – ஆன்மா என்பது பிரக்ஞையே என்ற உண்மையை உணர வேண்டும்.  விதுரதா என்ற மன்னனின் உடல் பத்மா என்ற மன்னனின் உடலாக இருப்பது ஏன் என்றால் அதற்கான காரணம் உள்ளூர அவனிடம் இருக்கும் ஆசையே தான் – வாஸனையே அதன் காரணம் என்று இந்தக் கதை விவரிக்கிறது.

இந்தக் கதையை நன்கு ஆழ ஊன்றி சிந்திப்பதன் மூலம் பல பேருண்மைகளை அறிந்து கொள்ள முடியும்!

இதில் உள்ள உண்மைகளை ஹ்யூ எவரெட் (Hugh Everett) என்ற நாஸா விஞ்ஞானி சமீப காலத்தில் கூறிய போது உலகமே வியந்தது. யுனிவர்ஸ் (Univierse)  என்பது ஒன்று மட்டுமல்ல, பல பிரபஞ்சங்கள் உள்ளன, (Multiverse)  என்றார் அவர். இந்தக் கொள்கையை அறிவியல் உலகம் இப்போது தீவிரமாக ஆதரித்து மேலும் ஆராய்ந்து வருகிறது. இன்னொரு செய்தி, இந்த பல் பிரபஞ்சங்கள் ஒன்றிற்கு மேல் ஒன்றாக ஒரு மிலிமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறதாம்!

யோக வாசிஷ்ட உண்மைகளும் நவீன அறிவியல் உண்மைகளும் ஒன்றே என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது இல்லையா?!

***

Index

யோக வாசிஷ்டம் உற்பத்தி பிரகரணம்

லீலாவின் கதை

பல பிறப்புகள், அனைத்தும் மாயையே,

ஆன்மா என்ற பிரக்ஞையே உண்மை

சரஸ்வதி தேவியின் வரங்கள்

பத்மா, வசிஷ்டர், விதுரதா

உலகத்திற்குள் உலகங்கள்

தமிழர்கள் ஏன் ரிக் வேத பெயரிடும் முறையைப் பின்பற்றினர்?(Post.9782)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9782

Date uploaded in London – –27 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாம் பின்பற்றும் நூற்றுக் கணக்கான விஷயங்களுக்கு மூலம்/ ஆணிவேர் , உலகின் பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அடர்ந்த காடுகள்; பிரம்மாண்டமான நதிகள்; பாலங்கள் கிடையாது. அகஸ்தியர் விந்திய மலையில் ரோடு  போடும்வரை சாலைகள் கிடையாது. கடலோரமாகவோ, கப்பல் மூலமாகவோதான் கங்கை நதி வழியாக வட இந்தியாவுக்குள் நுழைய முடியும் ;மின்சாரமும், மொபைல் போனும் இன்டர்நெட்டும் இல்லாத காலத்தில்- குறைந்தது 3500 ஆண்டுகளுக்கு– முன்னர் ஒரே நம்பிக்கை இருந்ததென்றால் அதிசயம்தானே . அதுவும் அப்போது இந்தியாதான் உலகிலேயே பெரிய நாடு!

பெயரிடும் முறையைக் காண்போம் .

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், அண்டர் மகன் குறுவழுதி என்பன புறநானூற்றுப் புலவர் பெயரில் உள்ளனர். அதாவது இன்னார் மகன் நான்  என்று பெருமையாக செப்புவது பழைய வழக்கம். இதன் மூலம் ஒருவரை அடையாளம் காண்பதும் எளிது. ஏனெனில் பழங்காலத்தில் ஒரே பெயருடன் ஒரு ஊரில் பலர் இருப்பர்!

ஆங்கிலத்தில் மகன் பெயரை தந்தை  பெயருடன் ஒட்டிவிடுவார்கள்:-

எ .கா . டேவிட்சன், ஸ்மித்சன்

ஸ்காட்டிஷ், ஐரிஷ் மொழிகளில் முன்னால் ஒட்டிவிடுவர்

எ .கா .

மக் டொனால்ட் = டொனால்ட் மகன்

இந்த ஸ்காட்டிஸ் பெயரில் தமிழ் சொல் மகன் (மேக்) இருப்பதைக் காண்க

ஓ’ ஷானஸ்ஸி = ஷானஸ்ஸி வழிவந்தவன் (தாத்தா பெயர் ஷானஸ்ஸி )

இதிலும் முந்தைய பெயரிலும் மகன், தாத்தா என்பதெல்லாம் தனியாகவோ ஒட்டிக்கொண்டோ இருக்கின்றன . அதுவும் ஐரிஷ் ஸ்காட்டிஷ் பெயர்களில் முன்னால் ஒட்டப்படுகின்றன அல்லது இணைக்கப்படுகின்றன இப்போது தமிழ்ப் பெயரை ஒப்பிடுங்கள்

அண்டர் மகன் குறு வழுதி

மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார்

பேய் மகள் இள வெயினி

இது ரிக் வேத முறையாகும்.

‘மானா’ வின் மகன் அகஸ்தியன் என்று மந்திரங்களில் வரும் .

குசிக விச்வாமித்ரன் இக்ஷிதரன் மகன் (3-33) என்று காண்கிறோம்.

தமிழ் முறையில் ‘மகன்’ என்பது தனியே வரும்.

இன்னொரு முறையும் சம்ஸ்க்ருதத்தில் உண்டு. தசரதன் மகன் தாசரதி , ஜனகன் மகள் ஜானகி, பாண்டு புதல்வன் பாண்டவன் என்றும் வரும். அந்த அமைப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை.

ஆனால் தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்தும் மற்றுமுள்ள ஒற்றுமை மகன் என்பதை பிரித்துச் சொல்வதாகும்.

XXX

மநு மர்மம்

தமிழில் மநு நீந்திச்  சோழன் கதையை எல்லோரும் அறிவர். இந்த மநு பற்றியும் புராணத்தில் வரும் பிரளய கால மநு பற்றியும் பலரும் அறிவோம். ரிக் வேதத்தில் மனு பற்றி பல மண்டலங்களில் வருகிறது. இவர் எந்த மநு ? எத்தனையாவது மனு? இவருக்கும் நீதி நூலுக்கும் சம்பந்தம் உண்டா? இவருக்கும் பிரளயா காலத்தில் உயிரிங்களைக் கப்பலில் ஏற்றிக்  காப்பாற்றிய  மநுவுக்கும் தொடர்பு உண்டா? அல்லது தற்கால மன்வந்தரத்தின் அதிபதி வைவஸ்வத மனுவா என்றெல்லாம் தெரியவில்லை. யாரும் இது பற்றி பிரஸ்தாபிப்பதும் இல்லை.

எந்தத் துறை எடுத்தாலும் அதில் ரிக் வேதமே வழிகாட்டியாக இருக்கிறது. இந்தியா தவிர மற்ற கலாசாரங்களில் 4 பருவங்கள் தான் உண்டு. ரிக் வேதத்திலும் சங்கத் தமிழ் நூல்களிலும் மட்டும் 6 பருவங்கள் இருக்கின்றன. இதை விட  நமக்கு  வேறு என்ன சான்று தேவை? இமயம் முதல் குமரி வரை ஒரே கலா சாரம் அதுவும் கைபர் கணவாய் வழியாக வந்ததல்ல ; மண்ணின் மைந்தர்கள் தோற்றுவித்ததே அது .

கர்நாடக  சங்கீதத்தி ல்  கடைசியில் பெயரைச் சொல்லி முத்திரை வைப்பதை திருஞான சம்பந்தர்தான் சொல்லிக் கொடுத்தார் என்று நினைத்தேன். சமப்ந்தருக்குப் பின்னர் ஜெயதேவர் அஷ்டபதியில் அவருடைய பெயர் ஒவ்வொரு பாடலிலும் முத்திரையாக வருகிறது. பின்னர் புரந்தரதாசர், தியாகராஜர் பாடல்களிலும் பாடியோர்  பெயர்களைக் காண்கிறோம். இதுவும் ரிக் வேத மந்திரத்தில் துவங்கியதே. பல்லவி அனுபல்லவி, ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் அதே வரிகள் ஆகிய எல்லாவற்றையும் ரிக் வேதத்தில் காணும் போது வியப்பு மேலிடுகிறது.

உவமைகளில், நண்பர்கள் பற்றிய உவமைகள் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலாவது இந்த அளவுக்கு இருக்குமா என்பது ஐயப்பாடே. பெற்றோர்கள், மனைவிமார்கள் உவமைகளும் அன்பின் இலக்கணமாக உவமிக்கப்படுகின்றன .

உலகின்  மிகப் பழைய கவிதைத் தொகுப்பு, வரலாற்று நூல், வாய் மொழி இலக்கியம் என்ற பெருமையுடன் மேற்கூ றியனவும்சேரும்போது ரிக் வேதத்தின் சிறப்பு அதிகரிக்கிறது.

-SUBHAM—

TAGS – பெயரிடும் முறை, ரிக்வேதம் மக்டொனால்ட்

2000 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானிய எழுத்தாளர் சிசரோ (9781)

WRITTEN BY LONDON SWAMINATHAN 

Post No. 9781 

Date uploaded in London – –27 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிறந்த தேதி – ஜனவரி 3, கி.மு.106

இறந்த தேதி – டிசம்பர் 7, கி.மு.43

வாழ்ந்த காலம் – 63 ஆண்டுகள்

சிசரோ (CICERO) ஒரு சக்தி வாய்ந்த பேச்சாளர், எழுத்தாளர், ராஜ தந்திரி ஆவார் . 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியின் ரோமாபுரியில் கொ டி கட்டிப் பறந்தவர் ;உரைநடையில் வல்லவர். அவர் லத்தீன் மொழி யில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் இன்றும் எழுத்து வடிவில் கிடைக்கின்றன. அவருடைய காலத்திலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு லத்தீன் மொழி ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தியது இந்த செல்வாக்கிற்குக்  காரணம் சிசரோ போன்றோரின் காலத்தால் அழியாத படைப்புகள்தான்.

சிசரோ மத்தியதர குடும்பத்தில் பிறந்தார். பணப் பிரச்சினை இல்லை. ஆகையால் ரோம் நகரில் அருமையான கல்வி வசதி அவருக்குக் கிடைத்தது. வழக்கறிஞராக வாழ்க்கையைத் துவங்கினார். ஆயினும் அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் பெரும்புகழ் தந்தது. 30 வயதிலேயே அவர் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செனட் SENATE என்பது ரோமானிய சாம்ராஜ்ய ஆட்சிக்குழு.  அந்த அரசில் பெரும்பதவி ‘கான்சல்’ (CONSUL) எனப்படும். ஒரு அமைச்சரைப் போன்ற பதவி. அதில் அவர்க்கு ஆசை பிறந்தது பிரபுக்கள் குடும்பத்தில் பிறவாத எவர்க்கும் இப்பதவி கிடைப்பது அரிதிலும் அரிது. ஆயினும் அவருடைய பேச்சாற்றல் மூலம் கி.மு.63-ல் செனட் உறுப்பினர் ஆனார்.

அப்போது ரோம் அரசுக்கு எதிரான சதியை சிஸரோ  கண்டுபிடித்து அதில் சமபந்தப்பட்டவர்களுக்கு மரண தண் டனை வாங்கித் தந்தார். இதில் தகாத வழிகளை அவர் பின்பற்றியதாக ஜூலியஸ் ஸீஸர் (JULIUS CAESAR ) குற்ற ஞ்சாட்டி அவரை ஒரு ஆண்டுக்கு நாடு கடத்தினார். அதற்குப் பின்னர் ஜூலியஸ் சீஸர் , ரோமாபுரியை ஆளும் சர்வாதிகாரி ஆனார்.

ஓராண்டுக்குப் பின்னர் ரோமுக்குத் திரும்பிவந்த சிசரோ, அரசியலை விட்டு விட்டு இலக்கியத்தில் முழு கவனம் செலுத்தினார். அந்தக் காலத்தில்தான் அவர் தத்துவம், சமுதாயம், பேச்சாற்றலை பற்றிய அரிய படைப்புகளை எழுதினார்.

கிமு.44-ல் ஜூலியஸ் சீஸர் படுகொலை செய்யப்பட்டார். அப்போது பதவிப் போர் வெடித்தது. கான்சல் மார்க் ஆன்டனிக்கும் (MARK ANTON)Y எதிர்கால ஆட்சியாளர் அகஸ்டசுக்கும் (EMPEROR AUGUSTUS) இடையே பெரும் போராட்டம். மார்க் ஆண்டனிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சொற்பொழிவு வாயிலாக சிசரோ உதிர்த்தார். இது பிலிப்பிக்ஸ் PHILIPPICS என்ற நூலாக மலர்ந்தது. இதுவே அவரது உயிரைக் காவு கொண்டது.

மார்க் ஆன்டனியும் அகஸ்டசும் (EMPEROR AUGUSTUS)  கைகோர்த்து ஓரணியில் சேர்ந்தனர். ஆட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து சிசரோவை சிரச்சேதம் செய்தனர். அவருடைய உடல் உறுப்புகளை சேதப்படுத்தி பழிதீர்த்துக் கொண்டனர். ஆனால் காலப்போக்கில் அவர் புகழ் உயர்ந்து ஓங்கியது.

PUBLICATIONS

(ALL YEARS IN BCE)

63 -ORATIONS AGAINST CATILINE

55  -ON ORATORY

52 -ON THE REPUBLIC

52 -ON THE LAWS

46 – BRUTUS

44 – ON OLD AGE

44 – ON FRIENDSHIP

44 – ON THE NATURE OF THE GODS

44 – ON DUTY

44-43 – PHILIPPICS

–SUBHAM–

TAGS- ரோமானிய எழுத்தாளர்,  சிசரோ, CICERO,

ஹெலன் கெல்லர் : ஒரு அபூர்வமான பெண்மணி! (Post No.9780)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9780

Date uploaded in London – –  –27 JUNE   2021    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜூன் 27 ஹெலன் கெல்லர் டே (Helen Keller Day)! அவரது நினைவைப் போற்றுவோம்!

ஹெலன் கெல்லர் : ஒரு அபூர்வமான பெண்மணி!

ச.நாகராஜன்

ஹெலன் கெல்லர் : பரிவும் விடாமுயற்சியுமே வெற்றிக்குக் காரணம் என்பதை உணர்த்திய ஒரு அபூர்வமான பெண்மணி!

அமெரிக்காவில் பிறந்த ஹெலன் கெல்லர் உலகினருக்கு ஒரு அபூர்வமான உண்மையைக் காட்டுவதற்காகப் பிறந்த சாதனையாளர் என்றே சொல்லலாம். (பிறப்பு ஜூன் 27,1880 மறைவு ஜூன் 1, 1968)

மனம் தளராத விடா முயற்சி எந்தச் சூழ்நிலையிலும் வெற்றி தரும்! இது அவர் காட்டிய உண்மை.

19 மாதக் குழந்தையாக இருந்த போது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார். அவரால் பேசவும் முடியவில்லை. புலன்களின் இயக்கம் பற்றிய சிக்கல் ஏராளமாக அவரிடம் இருந்தது.

ஹெலனுடைய தாயார் தன் குழந்தைக்கு உதவி செய்வதற்கான தகுந்த நபரைத் தேட ஆரம்பித்தார். காது கேட்காத குழந்தைகளுக்காக உதவி புரிது வந்த அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்லை அவர் நாடினார். பெல் அவரை மசாசூசெட்ஸில் இருந்த பெர்கின்ஸ் ஸ்கூர் ஃபார் தி ப்ளைண்ட் என்ற கண்பார்வையற்றோருக்கான பள்ளியை நாடுமாறு ஆலோசனை கூறினார்.

ஹெலனின் தாயார் அந்தப் பள்ளியை நாடினார். பள்ளி ஹெலனுக்கு உதவி புரிய ஆன்னி சல்லிவன் (Annie Sulliven)  என்ற ஒரு ஆசிரியையை அனுப்பியது. அவரே அந்தப் பள்ளியில் மாணவியாக இருந்தவர் தான். அவரும் பார்வை இழந்த ஒருவர் தான்.

அவர் ஒரு மாதம் ஹெலனுடன் பழகி வந்து, பின்னர் பல பொருள்களின் பெயரைக் கற்றுத் தர ஆரம்பித்தார். பல பொருள்களை ஒவ்வொன்றாக ஹெலன் கையில் வைப்பார். அந்தப் பொருளின் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.

ஆனால் ஹெலனுக்கோ அவர் என்ன செய்கிறார் என்பதே முதலில் புரியவில்லை. அவரோ குருடு, செவிடு! தனது விரல்களில் ஏதோ ஒரு அசைவு ஏற்படுவதையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அந்த அசைவு நகர்வதையும் மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு நாள் ஹெலனின் கையில் ஆன்னி ஒரு கோப்பையைக் கொடுத்தார். விரல்களில் அசைவு ஏற்பட்டது. அவை CUP என்பதற்கான அசைவுகள்! அடுத்து  அந்தக் கோப்பையில் நீரை ஊற்றினார். இப்போது W A T E R என்பதற்கான எழுத்துக்களுக்கான அசைவுகள் ஏற்பட்டன.

ஹெலனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. முதலில் CUPக்கும் WATERக்கும் வித்தியாசம் தெரியாமல் மாற்றி மாற்றிச் சொன்னார். அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.ஆன்னி விடவில்லை. அவரை பம்ப் ஹவுஸுக்குக் கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு அவர் நீரை பம்ப் செய்ய கோப்பையை ஹெலன் பிடிக்குமாறு செய்தார். இன்னொரு கையால் WATER என்பதற்கான ஸ்பெல்லிங்கை விரல் அசைவுகள் செய்து காட்டினார். ஹெலன் அசைவற்று நின்றார். அவரது முழுக் கவனமும் அந்த அசைவுகளின் மீது இருந்தது. இப்போது அவருக்குச் சற்று புரிய ஆரம்பித்தது. நீர் அவர் கையில் பாய ஆரம்பித்த போது இனம் தெரியாத உணர்வு அவருக்குள் ஏற்பட்டது. அது சாவிலிருந்து மீண்டும் உயிர் பிழைத்தது போல அவருக்கு இருந்தது. (It was as if I had come back to life after being dead – Helen Keller).

இப்படித்தான் ஆரம்பித்தது அவரது படிப்பு!

ஹெலன் தனது ஆசிரியையான ஆன்னி சல்லிவனைச் சந்தித்ததைப் பற்றி உளமார தனது சரிதையில் குறிப்பிடுகிறார் இப்படி: எனது வாழ்க்கையில் மிகக் குறிப்பிடத்தகுந்த ஒரு நாள் நான் எனது ஆசிரியையான ஆன்னி மேன்ஸ்ஃபீல்ட் சல்லிவன் என்னிடம் வந்த நாள் தான்.  (“The most significant day I remember in all my life is the one on which my teacher, Anne Mansfield Sullivan, came to me. I am filled with wonder when I consider the immeasurable contrast between the two lives which it connects.” – The Story of My Life)
ஆன்னி தன் பணியில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு அபூர்வமான் ஆசிரியை! அவரால் தான் ஹெலன் கெல்லர் பேச முடிந்தது, எழுதப் படிக்க முடிந்தது. ஏன், பாடவும் கூட முடிந்தது!

பல வருடங்கள் அவரிடம் படித்த பின்னர் ஹெலன் பெர்கின்ஸ் பள்ளிக்குச் சென்றார். ஆங்கிலத்தைத் தவிர ப்ரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம். லத்தீன், ப்ரெய்லி ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.

பல வருடங்கள் கடுமையாக உழைத்த பின்னர் 1900ஆம் ஆண்டில் ராட்க்ளிஃப் கல்லூரிக்குச் செல்ல அவர் தயாரானார். 1904ஆம் ஆண்டில் அவர் பட்டதாரியானார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் அவர் தான்!

1902ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியில் படிக்கும் போதே அவர், ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்” (The Story of my life) என்ற தனது சுய சரிதையை எழுதினார். ஜான் ஆல்பர் மேசி (John Albert Macy) என்பவர் அவருக்கு உதவினார். தனது வாழ்நாளில் அவர் 14 புத்தகங்களையும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார்.

30 நாடுகளுக்கு பயணம் செய்து அனைவருக்கும் அவர் உத்வேகம் ஊட்டினார். பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார். குறிப்பாக அவர்களுது ஓட்டுரிமைக்காக அவர் போராடினார். 1968ஆம் ஆண்டு அவர் மறையும் போது அவருக்கு வயது 87. அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்ஸன் 1964, செப்டம்பர் 14ஆம் தேதியன்று அவருக்கு ‘ப்ரெஸிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்; (Presidential Medal of Freedom)  என்ற அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.

ஆன்னி சல்லிவனின் பரிவும் ஹெலனின் விடாமுயற்சியுமே அவரது வெற்றிக்குக் காரணம். எந்த சூழ்நிலையிலும்  எவ்வளவு மோசமான சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி வெற்றி காண முடியும் என்பதை மனித சரித்திரத்திற்கு உணர்த்தியவருள் முக்கியமான இடத்தைப் பெறுபவர் ஹெலன் கெல்லர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அபாரமான சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை நினைவு கூரும் நாள் மட்டுமல்ல இது; துரதிர்ஷ்டவசமாக உடல் ஊனம் கொண்டோரை அவமதிக்காமல், ஒதுக்காமல் அவர்களை சமுதாயத்துடன் இணைக்க நம்மால் ஆன உதவியைச் செய்ய உறுதி பூண வேண்டிய நாளும் கூட இது தான்!

***

INDEX

ஹெலன் கெல்லர் : பிறப்பு, மறைவு, கண் பார்வையின்மை, காது கேளாத தன்மை, ஆன்னி சல்லிவன், ஆசிரியை, கற்பித்த விதம், கற்ற மொழிகள், சுய சரிதை, 14 புத்தகங்கள், அமெரிக்க ஜனாதிபதியிடம் பெற்ற விருது, ஹெலன் கெல்லர் டே

 —subham–

 tags- ஹெலன் கெல்லர்

Rivers in the Rigveda and Panini’s Ashtadhyayi-2 (Post No.9779)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9779

Date uploaded in London – –26 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

In this second part; let us look at the rivers in the Rig Veda and compare them with the rivers in Panini’s Ashtadhyayi.

We must remember that none of them wrote a book on geography. I wanted to point out the size of the books as well. Rig Veda is a book with over 1000 hymns running to 10,000 mantras running to 20,000 lines; but lot of repetitions are there. But we can expect more from the Rig Veda than from Panini who has only less than 4000 pithy sayings/Sutras on grammar.

We have over 30 rivers in the RV. And over 125 direct references are there to the rivers mentioned. Over 100 references to seas and oceans are in the Rig Veda. Apart from this, innumerable river, boat, sea, lake similes are there.

We have ancient rivers in the RV which are not found anywhere else. The best example is Aapayaa mentioned in the Third Mandala. No one can identify it.

We see a beautiful ode to Three Rivers by Visvamitra there.

In the matter of rivers, all the mischiefs of Griffith and gang are exposed by Shrikant Talageri in his scholarly work.

(Following list is taken from ‘THE RIGVEDA- A HISTORICAL ANALYSIS BY SHRIKANT G TALAGERI’.)

PLEASE SEE THE CONCLUSIONS AT THE END

Rivers in Ten Mandalas of RV

Sarasvati

1-3-10/12, 1-89-3, 1-13-9,, 1-142-9,, 1-164-49,52, 1-188-8

2-1-11, 2-3-8,2-30-8,2-32-8,2-41-16/18

3-4-8,3-23-4,3-54-13

No Sarasvati in Fourth Mandala

5-5-8,5-42-12,5-43-11,5-46-2

6-49-7,6-50-12,6-52-6,6-61-1/7, 6-10-11,6-13-14

7-2-8,7-9-5,7-35-11,7-36-6,7-39-5,7-40-3,7-95-1/2, 7-95-4/6,7-96-1,3/6

8-21-17,18, 8-38-10,8-54-4

9-5-8,9-67-32,9-81-4

10-17-7/9,10-30-12,10-64-9,10-65-1,10-65-13,10-66-5,10-75-5,10-110-8,10-131-5,

10-141-5,10-184-2

Xxx

Sindhu

1-83-1,1-44-12,1-122-6,1-126-1,1-186-5,1-94-6,1-94, refrain in the last verses of 1-96,1-98, 1-100,1-103,1-105,1-115

Sindhu is absent in Mandala 2&3

4-30-12,4-54-6,4-55-3

5-53-9

No Sindhu in 6&7

8-12-3,8-20-24,25, 8-25-14,8-26-18,8-72-7

9-97-58

10-64-9,10-65-13,10-66-11,10-75-1,3,4,6,9

Xxx

Ganga

Jahnavi 1-116-9,3-58-6

6-45-31, 10-75-5

Xxx

Yamuna

5-52-17,7-18-19,10-75-5

Xxx

Rasa

1-112-12,4-43-6,8-72-13,9-41-6,10-75-6,10-108-1,2,10-121-4

Xxx

Apaya

3-23-4,

Xxx

Gomati

8-24-30,10-75-6

Xxx

Sarayu

4-300-18,5-53-9,10-64-9

Xxx

Asikni 7-5-3,8-20-25,10-75-5

Gauri 1-164-4,

Vipss 3-33-1,

Sutudri 3-33-1,10-75-5

Drsadvati 3-23-4,

Kusavaa 4-18-8

Parushni 4-22-2,7-18-8/9, 8-75-15,10-75-5

Vipas 3-31-1,4-30-11,

Kubha 5-53-9,10-75-6

Krumu 5-53-9,10-75-6

Anitabhaa 5-53-9

Asmanvati 10-53-8

Amsumati8-96-13

Aarjikiiyaa 8-7-29, 8-64-11, 9-65-23

Suvaastu 8-19-371

Susoma 10-75-5

Susartu 10-75-6

Sveti 10-75-6

Svetyaavari 8-26-18

Mehatnu 10-75-6

Marudvrdhaa 10-75-5

Trstaamaa 10-75-6

Vitastaa 10-75-5

Hariyupia 6-27-5

Yavyaavati 6-27-6

Prayiyu 8-19-37

Vaiyiyu 8-19-37

River Sarasvati has the highest number of references.

SHRIANT  has arranged the Ten Mandalas in chronological order and made comments on the basis of the order.

He has found out Vedic Hindus migrated towards West from the East.

He has pointed out the blunders in Griffith’s translation and interpretation.

RV 3-33 and 10-75-5 and 10-75-76 are important.

The evidence of the rivers in the RIGVEDA is unanimous in identifying to the east of Sarasvati as the original homeland of the Vedic Hindus.

The reference in 1-116-9 associates river Jahnavi with sage Bharadvaja,Divodasa and Gangetic dolphin. It is clear that the river is specially associated with the oldest period of the Rigveda .

The Sarasvati is so important in the whole of the Rigveda that it is worshipped as one of the three great goddesses in the Apri suktas of all ten family composers . The Indus finds no place in these Apri suktas.

In the Nadi Stuthi, nearest river Ganges is mentioned first and then other rivers are mentioned. Griffith deliberately misleads the readers by adding a foot note that the most distant river (Ganges) is mentioned first. And in the same way in 3-33 also he adds a note to say ‘this shows the eastward expansion of the Vedic Aryans. but it is actually the Hindus westward march!

Xxx

My comments

In RV 3-33 there is a beautiful ode to rivers. It is the fifth dialogue poem if you start from Mandala 1. Viswamitra says to the rivers ‘I have come from far away. The far away is Bihar. But Griffith mischievously puts the ‘far away’ beyond India’s borders. How do we know whether Shrikant is right or Griffith is right ?. Though Shrikant has stated enough reasons I will add one more point.

In the poems regarding rivers we see Jamadagni, Visvamitra, Bharadvaja and other seers. The three seers mentioned above are in Valmiki Ramayana as well. So we know for sure Visvamitra’s journey to Mithila in Bihar- Nepal border. We know where Janaka, Sita’s father ruled. We know Rama’s victory over Parasurama, son of Jamadagni. All these places the far away in Bihar- Nepal border and not Afghanistan or Iran . Mischief maker Griffith confesses in every other hymn of Rig Veda that he cant understand and yet he never stopped damaging the Vedas. Hindus must be careful about the 30 +++ clowns and jokers in the Max Muller gang.

—subham—

 Tags- Rigveda, Rivers, Griffith, Westward , Hindus March,Panini

ஆங்கில நாவல்களின் தந்தை டேனியல் டீஃபோ (Post No.9778)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9778

Date uploaded in London – –26 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புகழ்பெற்ற ராபின்ஸன் க்ரூஸோ  கதையை அறியாதவர்கள் எவரும் இல்லை. இதை எழுதியவர் டேனியல் டீ ஃபோ (DANIEL DEFOE) .

டேனியல் டீஃபோவை ஆங்கில நாவல்களின் தந்தை (Father of the English Novel) என்று அழைப்பார்கள் அவருடைய ராபின்ஸன் க்ரூஸோ (ROBINSON CRUSOE) நாவல் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

டீ போவின் படைப்புக்கு முன்னால் , கதைகள் அனைத்தும் நாடகங்களாகவோ செய்யுட்களாகவோ எழுதப்பட்டன. டீ போதான் முதன்முதலில் உரைநடையில் நம்பத் தகுந்த கதாபாத்திரங்களைப்  படைத்து எளிய நடையில் கதை எழுதினார்.கதையின் சூழ்நிலையும் நம்பத் தகுந்த வகையில் அமைந்தது .

டீ போ, லண்டனில் கசாப்புக் கடைக்காரர் மகனாகப் பிறந்தார் .படிப்பு முடிந்தவுடன் ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்தார். வணிகராக, வியாபாரியாக வாழ்க்கை நடத்தினார். இளம் வயதில் அவர் துவங்கிய வியாபாரங்கள் அனைத்தும் நஷ்டத்தில் முடிந்தன. இதனால் பெரும் கடன் வலையில் சிக்கிக்கொண்டார் .

எழுத்து மூலம் சம்பாதிக்கலாமே என்று எண்ணி எழுதத் துவங்கினார். சமுதாயத்திலுள்ள அநீதி, அக்கிரமங்களை விமரிசித்து எழுத ஆரம்பித்தார். துவக்க காலத்தில் நூற்றுக் கணக்கான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார் அவர் எழுகாத விஷயமே இல்லை. அரசியல், சமயம், பூகோளம், பயணம், பேய் பிசாசு, மர்மம் என்று எழுதித் தள்ளினார். அவர் அரசியல் பற்றி எழுதியது அங்கத நடையில் இருந்ததை பலரும் விரும்பினர் . ஆயினும் அவரால் கிண்டலும் கேலியும் செய்யப்பட்ட அரசியல்வாதிகள்,  டீபோவுக்கு எதிராக அணி திரண்டனர் .பல நேரங்களில் இது சொல்லொணா கஷ்டங்களைக் கொடுத்தது. ஒரு முறை சிறையிலும் அடைக்கப்பட்டார் .

40 வயதில் ஞானோதயம் பிறந்தது. இனிமேல் அரசியல்வாதிகள் பற்றி  எழுத வேண்டாம் என்று முடிவு செய்து கதைகள் எழுதத் துவங்கினார். அவற்றில் கிடைத்த வெற்றியால்தான்  நாம் இன்று அவரின் புகழ் பாடுகிறோம்.

டீபோவுக்கு 59 வயதான போது அவர் எழுதிய ராபின்ஸன் க்ரூஸோ – கதைதான் அவருக்கு அழியாப்புகழ் ஈட்டித் தந்தது . ஒரு மனிதன் கப்பல் விபத்தில் சிக்கி, உடைந்த கப்பலிலிருந்து தப்பி ஒரு தீவை அடைகிறான் அங்கு மனிதர்களே இல்லை. தனிமையில் அவன் என்ன செய்தான் என்பது இக்கதையாகும் இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. டீபோவின் புகழ் எங்கும் பரவியது .

அலெக்ஸ்சாண்டர் செல்கிர்க் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதியதே ராபின்சன் க்ரூஸோ கதை  ஆகும். அவருடைய இரண்டாவது நாவல் மோல் பிளான்டர்ஸ் MOLL FLANDERS . இதற்கும் நல்ல வரவேற்பு. இன்று ஆங்கில இலக்கியம் படிப்போர் இந்த இரண்டு நாவல்களையும் அறிந்தே ஆகவேண்டும் என்ற அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பிறந்த ஆண்டு- 1660

இறந்த தேதி – ஏப்ரல் 24, 1731

வாழ்ந்த காலம் – 71 ஆண்டுகள்

அவர் எழுதிய நூல்கள்

1719- ROBINSON CRUSOE

1719 – FURTHER ADVENTURES OF ROBINSON CRUSOE

1720- MEMOIRS OF A CAVALIER

1720- CAPTAIN SINGLETON

1722- MOLL FLANDERS

1722 – A JOURNAL OF THE PLAGUE YEAR

1722 – COLONEL JACK

1724- ROXONA

தமிழில் வேதநாயகம் பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ , ராஜம் அய்யர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ போன்ற பெருமை உடைத்து டீபோவின் கதைகள்.

–SUBHAM—

TAGS– ராபின்சன் க்ரூசோ டேனியல் டீபோ, Daniel Defoe, Robinson Crusoe

காசி விஸ்வநாதர் கோவிலும் ஞானவாபி மசூதியும்! (Post.9777)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9777

Date uploaded in London – –  –26 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

காசி விஸ்வநாதர் கோவிலும் ஞானவாபி மசூதியும்!

ச.நாகராஜன்

பாரத தேசம் ஹிந்து பூமி. ஆனால் செகுலரிஸம் என்ற பெயரில் இந்த பூமியின் ஜீவநாடியான ஹிந்து மதத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சொல்லுக்கு அப்பாற்பட்டது. எவ்வளவு தீங்கு இந்து மதம் அல்லாதவர்களால் இழைக்கப்பட்டதோ அதே அளவு அல்லது அதற்கு மீறிய அளவில் செகுலரிஸம் பேசும் போலி மதவாதிகளால் இழைக்கப்பட்டது, இழைக்கப்பட்டு வருகிறது என்பது சத்தியம். சத்தியம் தவற வேறல்ல.

காசி விஸ்வநாதர் கோவில் அழிக்கப்பட்டதைப் பற்றிச் சில தகவல்களை இங்கு பார்ப்போம்.

ஸ்வாமி ஈஷானந்த சரஸ்வதி அவர்கள் காசி விஸ்வநாதர் சரித்திரத்தை முழுவதுமாக ஆராய்ந்தவர். அவர் தரும் தகவல்கள் உண்மையானவை; ஹிந்துக்களுக்கு சொல்லொணா வருத்தத்தைத் தருபவை.

இந்த காசி விஸ்வநாதர் கோவில் அழிவைப் பற்றி நமது சரித்திர புத்தகங்கள் மூச்சு விடுவதில்லை. ஏன் அழிக்கப்பட்டது, எப்போது அழிக்கப்பட்டது, எப்படி அழிக்கப்பட்டது என்பதைப் பற்றிய ஒரு விவரமும் நம்மில் பெரும்பாலானோருக்கே தெரியாது; அப்படி இருக்க நமது குழந்தைகளுக்கு எப்படித் தெரிந்திருக்கப் போகிறது!

போகட்டும், வரலாற்றுப் பதிவிற்காக உண்மைகள் வெளியே சொல்லப்பட வேண்டும். விஸ்வநாதர் அருளால் கோவில் புனரமைக்கப்பட வேண்டும்.

ஜெய் விஸ்வநாத்!

காசி விஸ்வநாதரைக் காக்க தங்கள் ரத்தத்தைச் சிந்தி பலியானவர்கள் நாக சந்யாசிகள்.

1664ஆம் ஆண்டு.

கொடுங்கோலன் ஔரங்கசீப்பின் படைகள் காசியை நோக்கிப் படையெடுத்து வந்தது. இதைத் தடுக்க முன்னணியில் இருந்தவர்கள் நாக சந்யாசிகள்.

அவர்களது நோக்கம் ஹிந்து தர்மத்தைக் காப்பது ஒன்றே. அதில் பல அம்சங்கள் உண்டு.

1)   கோவிலைக் காக்க வேண்டும்.

2)   ஞானவாபி புனித தீர்த்தத்தைக் காக்க வேண்டும்.

3)   ஹிந்துப் பெண்மணிகள் கற்பழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.

4)   ஹிந்துக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்.

5)   ஹிந்துக்கள் சொத்துக்களும், இதர உடைமைகளும் கொள்ளை போவதிலிருந்து தடுக்க வேண்டும்.

இன்ன பிற!

வரலாற்று ஆசிரியனான ஜேம்ஸ் ஜி. லொச்ட்ஃபெல்ட் (James G. Lochtefled) தனது புத்தகமான ‘தி இல்லஸ்ட்ரேடட் என்சைக்ளோபீடியா ஆஃப் ஹிந்துயிஸம்’   முதல் தொகுதியில் (The Illustrated Encyclopeadia of Hinduism – Vlaume I) பல விவரங்களைத் தந்துள்ளார்.

அதே போல அமெரிக்க தத்துவ ஞானியான வில்லியம் அர்.பிஞ்ச் மற்றும் வில்லியம் ஏ. காம் (William R.Pinch and William A. Gam) எழுதியுள்ள புத்தகமான ‘சோல்ஜர் மாங்க்ஸ் அண்ட் மிலிடண்ட் சாதுஸ்’ (Solddier Monks and Militant Sadhus”) என்ற புத்தகத்தில் பல விவரங்களைத் தந்துள்ளனர்.

இவர் பின்னால் ஒரு ஹிந்து சந்யாசி ஆனார். தனது பெயரை நாக பாபா ராம் பூரி என்று வைத்துக் கொண்டார். இதை ‘ஆடோபயோகிராபி ஆஃப் சாது: ஏ ஜர்னி இன் து மிஸ்டிக் இந்தியா’ (Autobiography of Sadhu : A journey into Mystic India)  என்ற நூலில் காணலாம்.

1664 முதல் 1669 முடிய ஔரங்கசீப்புக்கும் நாக சந்யாசிகளுக்கும் நடந்த மிக உக்கிரமான போர் பற்றிய விவரங்களை இதில் காணலாம்.

காசி விஸ்வநாதர் கோவிலை அழிக்க தனது படைத்தளபதிகள் தலைமையில் மிகப் பெரும் படை ஒன்றை ஔரங்கசீப் அனுப்பினான். கோவிலை அழித்து அந்த இடத்தில் ஒரு மசூதி கட்ட வேண்டும் என்பது அவனது கட்டளை. சில வரலாற்று ஆசிரியர்கள் ஔரங்கசீப்பும் கூட படையில் இருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

 மஹா நிர்வாண் அகாரா சந்யாசிகள் கொடுங்கோலனின் படையை எதிர்க்கத் தயார் ஆயினர். 1664இல் இரத்தம் சிந்தத் துவங்கியது. 2000 நாக சந்யாசிகள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் 1000 முதல் 15000 வரை ஔரங்கசீப்பின் வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் படையின் தலைமைத் தளபதியும் கொல்லப்பட்டான். ஏனைய படைவீரர்கள் உயிர் பிழைக்கத் தப்பி ஓடினர்.

காசி விஸ்வநாதர் கோவில் காப்பாற்றப்பட்டது. ஹிந்துப் பெண்மணிகளும் காப்பாற்றப்பட்டனர்.

அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஔரங்கசீப் காசி பக்கமே தன் பார்வையைச் செலுத்தவில்லை.

1669 வந்தது. தனது சகாக்களுடனும் பகீர்களுடனும் கலந்தாலோசித்த ஔரங்கசீப் இன்னொரு தாக்குதலுக்குத் தயார் ஆனான்.

இந்த முறை ஒன்றைரை லட்சம் படை வீரர்கள் திரட்டப்பட்டனர். இதில் குதிரைப் படையே பெரும் பங்கை வகித்தது.

பெரும் படை காசியை நோக்கி வருகிறது என்பதை அறிந்து கொண்ட நாக சந்யாசிகள் காசியில் ஒன்று கூடினர்.

40000 நாக சந்யாசிகள் திரண்டனர். இவர்கள் அனைவரும் காலாட் படையினரே.

குதிரை வீரர்களுடன் இவர்கள் அதீத தீரத்துடன் சண்டையிட்டனர். போர் உக்கிரமாகப் பல நாட்கள் நடை பெற்றது. கடைசி நாக சந்யாசி உயிர் துறக்கும் வரை இந்தப் போர் நீடித்தது.

40000 நாக சந்யாசிகள் தீரத்துடன் உயிர் துறக்க ஔரங்கசீப்பின் படையிலோ 50000 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த விவரங்களை ஜதுநாத் சர்க்கார் (Jadunath Sarkar) எழுதிய “தி ஹிஸ்டரி ஆஃப் தாஸ்நாமி நாகா சந்யாசி’ (The History fo Dasnami Naga Sanyasi) என்ற நூலில் ‘தி வார் ஆஃப் ஞானவாபி’ (The War of Jnan Bapi) என்ற அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.

ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை அழித்தான். ஞானவாபி தீர்த்தம் (குளம்) அழிக்கப்பட்டது. அருகில் இருந்த பல கோவில்களும் தரை மட்டமாக்கப்பட்டன. கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதியை ஔரங்கசீப் எழுப்பினான்.

இந்த வரலாறைச் சொல்வது கூடாது; எழுதுவது கூடாது. ஏனெனில் அது செகுலரிசத்திற்கு எதிரானது. வரலாறு என்றாலும் கூட அது மறைக்கப்பட வேண்டும். – இதுவே ஹிந்து விரோத சக்திகளின் ஒரே நிலைப்பாடு.

ஆனால் காசி விஸ்வநாதர் கோவில் அழிக்கப்பட்டது மறைக்கப்படக் கூடியதும் அல்ல; மறக்கப்படக் கூடிய விஷயமும் அல்ல!

ஜெய் காசி விஸ்வநாத்!

 TAGS—- காசி விஸ்வநாதர்,கோவில், ஞானவாபி மசூதி, ஔரங்கசீப்,

Rivers in the Rigveda and Panini’s Ashtadhyayi-1 (Post No.9776)


WRITTEN BY LONDON SWAMINATHAN
 

Post No. 9776 

Date uploaded in London – –25 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Panini lived closer to the Vedic age. He is assigned Eighth century BCE by Goldstucker and other great Sanskrit scholars. He is continuously giving the Vedic usages along with Sanskrit of his day and he called them by Chandas and Basha.

It will be useful to compare the usages in both because both the Vedic Rishis and Panini lived in the same area. But one must always remember that none of them wrote a book on geography and so one can’t expect 100% geographical information from them.

Poets of Sangam Tamil literature who lived 2000 years ago spoke about the Rivers Ganga and Yamuna but not the Sindhu/Indus. If one applies negative evidence as proof Tamils knew nothing about the Indus River basin at all. But fanatic Tamils boast that they ruled Indus area once. They very often quote the idiotic Brahui theory without rhyme or reason. No one can give even ten Tamil words in Brahui language. Moreover, the physiological features of both Indus and Afghan Brahui people are dissimilar to the Tamils.

Now back to the rivers in Panini’s works…..

Panini mentions Suvaastu in the north west 4-2-77; Swat

This river with its tributary the Gauri, modern Panjkora flowed through Gandhara, according to VS Agrawala. He described all the rivers in his book India As Kknown to Panini.

Upper part of Gandhara was known as Uddiyana, famous for its blankets called Pandu Kambala , also mentioned by Panini 4-211

The western capital of Gandhara was Pushkalavati which is identified with modern Charsadda a little above the junction of the Swat with the Kaabul river.

The Kasika ( a later day commentary) mentions Pushkalavati as the name of a river in three Sutras along with certain other names as

Udumbaravati

Viranavati

Masakavati

Of these Masakaavatii seems to be identical with the name of the river on which Massaga or Massaka, capital of the warlike people known as the Aasvakaayanas was situated.

Agrawala guesses that portions of  Swat river might have been named

Pushkalavati and

Masakavati.

It may be added that Patanjali mentions

Udumbaraavatii

Masakaavatii

Ikshumatii and

Drumatii definitely as names of rivers 2-287

Of these Udumbaraavatii may have flowed through the country of the Audumbaras and Iksumatii is identical with a tributary of the Ganges referred to as Oxymagis by Arrian and now known as Iikhan, also Kaalindi flowing through Farukkabad district.

Xxx

Sindhu/ Indus

The next great river mentioned in the north west is the Sindhu after which the country to its east was named Sindhu, the present Sind-Sagar Doab 4-3-93

(Agrawala wrote this in 1953.)

Taking its rise from the snows of western Kailasa in Tibet, the Sindhu first flows north west for half of its length, and then reaching the Darad country in the north west of Kashmir and of Little Pamir it takes a south ward course along which lay its most famous places.

A geographical feature of the Indus descending from the defiles of Dardistan is expressed in the grammatical formation ‘Daaraadi Sindhuh’, naming it after its immediate source (Prabhavati 4-3-83). Emerging from the Darad highlands the river enters the Gandhara country with Swat or Uddiyana on its right and the ancient Janapada of Urasaa, modern Hazara in NWFP on its left until it receives its most important western tributary the Kaabul river at Ohind, a few miles north of Attock where it is at present crossed by a bridge.

Ohind was the ancient Udbhaanda, the place of transhipment of goods across the Sindhu and the spot where the great northern trade route called Uttarapatha in Sutra 5-1-77 crossed the river.

Panini’s own birth place Salaatura was a riparian town of the Indus situated at a distance of only four miles from Ohind in the angle of Kubhaa and the Sindhu

About sixty miles east of Udbhanda was Takshasilaa, the eastern capital of Gandhara, and at an equal distance to the west was Pushkalavati, its western capital.

The Trans Indus country was known in ancient times as Paare – Sindhu (Sabha parva 51-11, Mahabharata). It’s famous breed of mares imported into India is mentioned by Panini as Paare- Vadavaa, the mare from beyond the border 6-2-42

xxx

Varnu = Bannu

(V=B)

Varnu corresponding to Bannu on the other side of the river is mentioned in a sutra, and also gana-paatha. The Bannu Valley is drained by the rivers Kurram (Vedic Krumu) and the Gambila or Tochi which unite and flow in to Sindhu .

It appears that the Kurram river after it left the Kurram Agency and from the point where it enters the Bannu Valley was named Varnu in ancient days.

To south of Kekaya was situated the Sindhu Janapada lying north to south between the rivers Jhelum and Indus.

Along the lower most course of the River Sindhu was situated the ancient Sauvira Janapada now known as Sind.

Of the rivers of Punjab, Panini mentions Vipas (Beas ) and the Wells dug on its north side 4-2-74.

Bhidya and Uddhya

Panini names two other rivers Bhidya and Uddhya 3-1-115

Uddhya is the same as Ujh flowing through Jassora district and falling into river Ravi.

On Panini 2-4-7, Kasika cites the example Uddhy-Eravati, that is Uddhya and Iraavatii.

Bhidya may be identified with a river named Bai rising in Jammu about 15 miles to the west of the river Ujh and flowing into the Ravi in Gurudaspur district.

Kalidasa refers to these two rivers in Raghuvamsa 11-8

Xxx

Devika

Panini also mentions the river Devika and what grew on its banks 7-3-1 which Patanjali describes to be Sali rice 3-316.

Pargiter rightly identified it with the river Deg. Devika flowed through the Madra country and joined Ravi according to Vamana Purana.

Panini mentions another river Ajravatii, the Achiravati of Pali texts, modern Rapti on which stood Sarasvati

Sarayu

The next river mentioned in this region is Sarayu of which Rapti is a tributary. It may be noted that Sarayu was also the name of a river n remote Rigvedic India flowing past Herat (derived from Hari Rud, old Persian Harayu from Vedic Sarayu ).

Darius I,  (516 BCE), in his inscription mentions Haraiva, the people of Harayu, equal to Paninis Saarava.

In the Elamite version of the Behitsun inscription occurs the name

(Arriya= Haraiva = Gk. Ariya with its capital at Heart )

Rathaspa

Another river Rathaspaa is mentioned in the Gana paatha to Sutra 6-1-157. This name occurs in the Jaiminiya Brahmana and in the Adi parva 172-20 (Mahabharata)  where it is one of the seven sacred rivers between Sarasvati on the one hand Gandaki on the other. Most probably it was a river of Panchala and the name may correspond to Rodhopha which is mentioned by the Greek writers as marking an important stage on the great royal road from the frontier to Pataliputra. It is 119 miles from the Ganges. Actually Ramaganga is the river at 119 miles. It is in between the Ganges and Sarayu.

Ramaganga falls into Ganges in Kanauj .

Sarasvati

Sarasvati is mentioned in the Sutra 6-3-120

Saaradiinaam cha. Though several rivers lay claim to this name, the most famous one was that which separated east and the west county in the north west of India.

Charmanvati

Of the rivers of central India, Panini mentioned Charmanvati 8-2-12

Panini uses the term Rumanvat which the Kasika connects with a place producing salt.

Lavana sabdasya rumana- bhaavo nipaatyate

(L=R)

The form Rumanvat have been based on the name Rumaa, a river or lake in the district of Sambhar in Ajmer which is also the source of river

Luunii.

xxxxxxxxxx

My comments

From the days of Rigveda, Hindus considered all the rivers as mother or sister. In Panini also we see the same Vedic suffix VATI OR MATI. Until this day we see only women names end with Vati or Mati

Masculine names end with PATI as we see in Brhaspati, Brahmanaspati, Ganapathi, Grhapati , Vanaspati etc.

Surprisingly Ganga is missing though we find indirect references through its tributaries. This proves Panini lived closer to Vedic times. In the Rigveda we see more importance is given to Sarasvati and Sindhu. Only when Sarasvati dried up more importance was given to Sarasvati. But Vedic Hindus fought internal wars even on the banks of river Yamuna

Again I want to emphasise none of them wrote a book on geography. 2000 years ago, Tamils mentioned Ganges many times, Yamuna at least once, but never mentioned Sindhu.

Vedas mentioned more than 30 rivers. There is no literature in the world equal to Rigveda where we see glorification of the rivers. Over 60 references are there to Sarasvati in the RV.

There is a beautiful dialogue with three Rivers in the third mandala of the RV. Innumerable river similes are in the same Veda . The Rishis knew very well the rivers go and merge with the sea. It is compared to all girls seeking the company of Mr Sea.

Another beautiful reference to ocean shows their deep knowledge about oceanology. One Rishi says the sea never crosses its boundary. Though all the rivers poured continuously, It is never full or overflowing. The same Rigvedic matter is used by a Sangam Age Brahmin poet Paranar (Pathitru Pathu 45-19). This shows Paranar is well versed in the Rigveda. If a seer of Rigveda makes a comment like that, they must have watched it for generations and discussed it and wondered about it.

In the second part I will write about the rivers in the Rig Veda.

To be continued………….

 tags-

To be continued………….

 tags- Rivers, in Rig Veda, Rivers in Panini

இந்தியா பற்றி நாவல் எழுதிய ஆங்கில நாவல் ஆசிரியர் ஈ.எம்.பார்ஸ்டர் (Post.9775)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9775

Date uploaded in London – –25 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில நாவல் ஆசிரியர் ஈ எம் பார்ஸ்டர் ( E.M.FORSTER) எழுதிய ஐந்து புகழ்பெற்ற நாவ ல்கள் , அவரை 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஆங்கில நாவல் ஆசிரியர் வரிசையில் இடம்பெற வைத்தன . இந்த 5 புதினங்களை அவர் 45 வயதுக்குள் எழுதி முடித்தார்.

எட்வர்ட்  மார்கன் பார்ஸ்டர் (EDWARD MORGAN FORSTER) என்பது அவருடைய முழுப் பெயர்; அவர் லண்டனில் பிறந்தார். அவர் பிறந்த ஒரே ஆண்டில் தந்தையை இழந்தார். பள்ளிக்கூடம் போவது அவருக்கு வேப்பங் காயாகக் கசந்தது. ஆனால் பிற்காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக படிப்பு வரை முன்னேறினார். அங்கு அபாஸ்டில்ஸ் (APOSTLES)  என்ற பெயரில் இயங்கிய அறிஞர்கள் விவாதக் குழுவில்சேர்ந்தார். விரைவில் ப்ளூம்ஸ்பரி (BLOOMSBURY GROUP) குழுவில் இணைந்தார். பழைய பத்தாம் பசலி உத்திக ளுக்கு எதிரான புரட்சி எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கொண்டது ப்ளூம்ஸ்பரி அணி.

இளம் வயதிலேயே தாயாருடன் இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பின்னர் இரண்டு முறை இந்தியாவில் நீண்ட காலம் பயணம் செய்தார். 26 வயதிலேயே அவருடைய முதல் நாவல் (WHERE ANGELS FEAR TO TREAD ) வேர் ஏஞ் சல்ஸ் பியர் டு ட்ரீட் வெளியாகியது . 32 வயதுக்குள் மேலும் 3 நாவல்கள் எழுத்துலகில் வலம் வந்தன. இதில் ஒன்றான (HOWARDS END) ஹோவர்ட்ஸ் எண்ட் நாவல் இவரை பிரபல நாவல் ஆசிரியர் ஆக்கியது. இது இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான மோதல் பற்றியது. ஒரு குடும்பம் வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்டது. இன்னொரு குடும்பம் கலை இலக்கிய உலகில் ஈடுபாடு கொண்டது.

ஆயினும் அவர் 45 வயதில் வெளியிட்ட (A PASSAGE TO INDIA) ‘ஏ பேஸேஜ் டு இந்தியா’ இவரை புகழ் ஏணியின் உச்சிக்கு ஏற்றியது .பிரிட்டிஷ் ஆட்சிக்கால இந்தியாவில் ஏற்பட்ட இந்து- முஸ்லீம் மோதல்களையும், ஜாதிப் பிரச்சினைகளையும், வர்க்கப் போராட்டங்களையும் இதில் பயன்படுத்தினார்.

பார்ஸ்டர் வெறும் புதின எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் பல கட்டுரைகளையும், இலக்கிய விமரிசனங்களையும், சிறு கதைகளையும் எழுதினார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் இலக்கியம் பற்றி சொற்பொழிவாற்றிய அவர் இறுதியில் அங்கு ஆசிரியராக அமர்ந்தார்.

பார்ஸ்டரின் ஆரம்பகால நாவல் மோரிஸ் (MAURICE) தற்காலத்தில் பெரிதும் அடிபடும் ஹோமோசெக்ஸுவல் – ஒருபால் புணர்ச்சி – விஷயம் உடையது . இது அவர் இறந்த பின்னர்தான் அச்சாகியது.

பார்ஸ்டர் பிறந்த தேதி – ஜனவரி 1, 1879

இறந்த தேதி – ஜனவரி 7, 1970

வாழ்ந்த காலம் – 91 ஆண்டுகள்

படைப்புகள்

1905  – WHERE ANGELS FEAR TO TREAD

1907 – THE LONGEST JOURNEY

1908  – A ROOM WITH A VIEW

1910 – HOWARD’S END

1911 – THE CELESTIAL OMNIBUS

1922 – ALEXANDRIA : A HISTORY AND A GUIDE

1924 – A PASSAGE TO INDIA

1936 – ABINGER HARVEST

PUBLISHED AFTER HE DIED……

1971 – MAURICE

பார்ஸ்டரின் நாவல்களில் பெரும்பாலானவை திரைப்படக் கதைகளாகவோ, டெலிவிஷன் கதைகளாகவோ பயன்படுத்தப் பட்டுள்ளன.

–SUBHAM–

Tags- பாஸேஜ் டு இந்தியா , ஈ எம் பார்ஸ்டர், E M Forster, A PASSAGE TO INDIA