
Post No. 9781
Date uploaded in London – –27 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிறந்த தேதி – ஜனவரி 3, கி.மு.106
இறந்த தேதி – டிசம்பர் 7, கி.மு.43
வாழ்ந்த காலம் – 63 ஆண்டுகள்
சிசரோ (CICERO) ஒரு சக்தி வாய்ந்த பேச்சாளர், எழுத்தாளர், ராஜ தந்திரி ஆவார் . 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியின் ரோமாபுரியில் கொ டி கட்டிப் பறந்தவர் ;உரைநடையில் வல்லவர். அவர் லத்தீன் மொழி யில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் இன்றும் எழுத்து வடிவில் கிடைக்கின்றன. அவருடைய காலத்திலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு லத்தீன் மொழி ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தியது இந்த செல்வாக்கிற்குக் காரணம் சிசரோ போன்றோரின் காலத்தால் அழியாத படைப்புகள்தான்.
சிசரோ மத்தியதர குடும்பத்தில் பிறந்தார். பணப் பிரச்சினை இல்லை. ஆகையால் ரோம் நகரில் அருமையான கல்வி வசதி அவருக்குக் கிடைத்தது. வழக்கறிஞராக வாழ்க்கையைத் துவங்கினார். ஆயினும் அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் பெரும்புகழ் தந்தது. 30 வயதிலேயே அவர் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செனட் SENATE என்பது ரோமானிய சாம்ராஜ்ய ஆட்சிக்குழு. அந்த அரசில் பெரும்பதவி ‘கான்சல்’ (CONSUL) எனப்படும். ஒரு அமைச்சரைப் போன்ற பதவி. அதில் அவர்க்கு ஆசை பிறந்தது பிரபுக்கள் குடும்பத்தில் பிறவாத எவர்க்கும் இப்பதவி கிடைப்பது அரிதிலும் அரிது. ஆயினும் அவருடைய பேச்சாற்றல் மூலம் கி.மு.63-ல் செனட் உறுப்பினர் ஆனார்.
அப்போது ரோம் அரசுக்கு எதிரான சதியை சிஸரோ கண்டுபிடித்து அதில் சமபந்தப்பட்டவர்களுக்கு மரண தண் டனை வாங்கித் தந்தார். இதில் தகாத வழிகளை அவர் பின்பற்றியதாக ஜூலியஸ் ஸீஸர் (JULIUS CAESAR ) குற்ற ஞ்சாட்டி அவரை ஒரு ஆண்டுக்கு நாடு கடத்தினார். அதற்குப் பின்னர் ஜூலியஸ் சீஸர் , ரோமாபுரியை ஆளும் சர்வாதிகாரி ஆனார்.
ஓராண்டுக்குப் பின்னர் ரோமுக்குத் திரும்பிவந்த சிசரோ, அரசியலை விட்டு விட்டு இலக்கியத்தில் முழு கவனம் செலுத்தினார். அந்தக் காலத்தில்தான் அவர் தத்துவம், சமுதாயம், பேச்சாற்றலை பற்றிய அரிய படைப்புகளை எழுதினார்.
கிமு.44-ல் ஜூலியஸ் சீஸர் படுகொலை செய்யப்பட்டார். அப்போது பதவிப் போர் வெடித்தது. கான்சல் மார்க் ஆன்டனிக்கும் (MARK ANTON)Y எதிர்கால ஆட்சியாளர் அகஸ்டசுக்கும் (EMPEROR AUGUSTUS) இடையே பெரும் போராட்டம். மார்க் ஆண்டனிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சொற்பொழிவு வாயிலாக சிசரோ உதிர்த்தார். இது பிலிப்பிக்ஸ் PHILIPPICS என்ற நூலாக மலர்ந்தது. இதுவே அவரது உயிரைக் காவு கொண்டது.
மார்க் ஆன்டனியும் அகஸ்டசும் (EMPEROR AUGUSTUS) கைகோர்த்து ஓரணியில் சேர்ந்தனர். ஆட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து சிசரோவை சிரச்சேதம் செய்தனர். அவருடைய உடல் உறுப்புகளை சேதப்படுத்தி பழிதீர்த்துக் கொண்டனர். ஆனால் காலப்போக்கில் அவர் புகழ் உயர்ந்து ஓங்கியது.
PUBLICATIONS
(ALL YEARS IN BCE)
63 -ORATIONS AGAINST CATILINE
55 -ON ORATORY
52 -ON THE REPUBLIC
52 -ON THE LAWS
46 – BRUTUS
44 – ON OLD AGE
44 – ON FRIENDSHIP
44 – ON THE NATURE OF THE GODS
44 – ON DUTY
44-43 – PHILIPPICS


–SUBHAM–
TAGS- ரோமானிய எழுத்தாளர், சிசரோ, CICERO,