Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பெண்கள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள்; பெண்கள் வாழ்க Part 18;இந்தியப் பெண்களைவிட மேல்நாட்டுப் பெண்கள் கூடுதல் ‘சுதந்திரத்துடன்’ வாழ்வது உண்மைதான். ஆனால் இந்தியப் பெண்களைவிட இன்பமான மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு வாழ்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனெனில் விவாகரத்தும் தனிமையாக (separation; single mothers)
tags – பெண்கள் , மேல்நாட்டு அறிஞர்கள், பெண்கள் வாழ்க-18,
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FIRST PART OF THIS TALK WAS BROADCAST LAST MONDAY 19-4-2021; THIS IS SECOND PART
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 26-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
விளக்க முடியாத தற்செயல் ஒற்றுமை சம்பவங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. கார்ல் ஜங் கனவுகளைப் பற்றியும் ஆவிகளைப் பற்றியும் தற்செயல் ஒற்றுமைகள் பற்றியும் ஆராய ஆரம்பித்தார். மனதிற்கு நான்கு பண்புகள் உள்ளன என்பது அவரது கண்டுபிடிப்பு. 1) Sensing ஐம்புலன்கள் மூலமாகச் சுற்றுப்புறத்தை அறிதல் 2) Thinking சிந்தித்தல் 3) Feeling உணர்தல் 4) Intuiting உள்ளுணர்வு மூலமாக ஆழ்மன ரீதியாக விஷயங்களைப் பகுத்துப் பார்த்தல் ஆகியவையே அந்த 4 பண்புகள்.
52 சீட்டுகள் உள்ள ஒரு சீட்டுக் கட்டில் 13 கார்டுகளை ஒருவர் தான் நினைத்த வரிசைப் படி எடுக்க வேண்டுமெனில் 635,000,000,000 தடவைகளில் ஒரே ஒரு முறை தான் இந்த வாய்ப்பு உண்டு என்கிறது புள்ளி இயல் துறை அறிவியல். ஒரே ஒரு முறை ஒருவர் சீட்டுக் கட்டைக் குலுக்கிப் போட்டுத் தான் நினைத்த 13 சீட்டுக்களை எடுத்து நம்மிடம் காட்டினால் வியப்பினால் விழிகள் பிதுங்கி விடும் இல்லையா?
இப்படி நம்ப முடியாத விஷயங்கள் திடீரென்று ஓரிடத்தில் நடந்தால் அதை வெறும் தற்செயல் ஒற்றுமை சம்பவம் என்று ஒதுக்கி விட முடியாது என்று ஜங் கூறினார். அவர் கூறிய இந்த சிங்க்ரானிசிடி தத்துவத்தை ஒப்புக் கொண்ட ஏராளமானோர் இது பற்றி ஆராயத் தொடங்கினர். இவை அதிகாரபூர்வமாக சரி பார்க்கப்பட்டு இப்போது பதிவு செய்யப்படுகின்றன.
சில சம்பவங்களைப் பார்ப்போம்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிரபல நடிகரான அந்தோனி ஹாப்கின்ஸ் (Anthony Hopkins ) ‘தி கேர்ல் ஃப்ரம் பென்ட்ரோவ்கா’ (The Girl from Petrovka) என்ற படத்தில் கோஸ்ட்யா என்ற பாத்திரத்தை நடிப்பதாக இருந்தது. அவர் முதலில் அந்த புத்தகத்தைப் படிக்க விரும்பினார். ஆனால் லேசில் அது கிடைப்பதாயில்லை. ஒரு நாள் லண்டனில் டியூப் ஸ்டேஷனில் அவர் உட்கார்ந்திருந்த போது அருகில் யாரோ ஒருவர் விட்டுவிட்டுப் போயிருந்த புத்தகத்தைப் பார்த்தார். அது என்ன என்று எடுத்துப் பார்த்தால், அது அவர் மிகக் கஷ்டப்பட்டு தேடிக் கொண்டிருந்த அதே புத்தகம் தான். அதில் என்ன விந்தை என்றால் அந்தப் புத்தகத்தில் அதை எழுதிய ஜார்ஜ் பைபெர் (George Feifer)கையெழுத்திட்டிருந்தது தான்!
வயலட் ஜெஸ்ஸாப் (Violet Jessop) என்பவர் ஒரு நர்ஸ். அவருக்கு மிஸ் அன்சிங்கபிள் (Miss Unsinkable) என்ற பட்டப் பெயர் கிடைத்தது? எப்படி என்று பார்ப்போம். 1912இல் பயணப்பட்டு விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலைப் பற்றி அனைவரும் அறிவோம். அதில் பயணித்து தப்பியவர் வயலட். அது மட்டுமல்ல 1916இல் விபத்துக்குள்ளான இன்னொரு கப்பலான ஹெச் எம் ஹெச் எஸ் பிரிட்டானிக் (HMHS Britannic)என்ற கப்பலிலும் பயணப்பட்டு அதற்கு நேர்ந்த விபத்திலிருந்தும் அவர் பிழைத்தார். மூன்றாம் முறையாக ஆர் எம் எஸ் ஒலிம்பிக் என்ற கப்பலில் அவர் பயணப்பட்ட போது அந்தக் கப்பல் ஒரு போர்க்கப்பலுடன் மோதியது. நல்ல வேளையாக யாரும் இறக்கவில்லை. இப்படி மூன்று முறை பிழைத்த இவரை “தி அன் சிங்கபிள்” என்று அழைப்பது நியாயம் தானே!
அடுத்து முதலாம் உலக மகாயுத்தம் பத்து லட்சம் பிரிட்டிஷ் உயிர்களைப் பலி வாங்கியதை உலகம் அறியும். அதில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் பலி 17 வயதான போர்வீரரான ஜான் பர் (John Parr) என்பவர். அந்தப் போர் முடிந்தவுடன் கடைசி பலியாக ஆவணப்படுத்தப்பட்டவர் 30 வயதான் ஜார்ஜ் எட்வின் எலிஸன் (George Edwin Ellison) என்பவர். இதில் வேடிக்கையான தற்செயல் ஒற்றுமை என்னவெனில் இந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி 15 அடி தூரத்தில் செயிண்ட் சிம்போரியன் மிலிடரி சிமெட்ரி (Saint Symphorien Military Cemetery) கல்லறையில் புதைக்கப்பட்டிருந்தது தான். ஆரம்பமும் முடிவும் அந்தக் கல்லறையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தது!
2014ஆம் ஆண்டில் மலாசியன் ஏர் ஃபிளைட்ஸ் இரு கோரமான விபத்துகளைச் சந்தித்தது. முதல் விமானம் உக்ரேனியரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அடுத்த விமானம் இந்தியன் ஓஷியனில் பறக்கும் போது எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி காணாமல் போய் விட்டது. இரண்டும் மலாசிய விமானங்கள் தாம். குறுகிய கால இடைவெளியில் இரு விமானங்களும் விபத்துக்குள்ளாயின. அதில் நெதர்லாந்தைச் சேர்ந்த சைக்கிள் ஓட்டும் வீரரான மார்டன் டி ஜோங்கே (Maarten de Jonge) இந்த இரு விமானங்களிலும் பயணப்பட்ட டிக்கட்டை பதிவு செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இதை விட மலிவான கட்டணத்தில் வேறு விமானங்களில் பறக்க வாய்ப்புக் கிடைக்கவே இந்த இரு விமான டிக்கட்டுகளை கேன்ஸல் செய்தார். அதிசயமாக இந்த விமானங்களில் பறக்காமல் தப்பித்தார்.
80 வயதான ஸு வெய்பாங்க் (Xu Weifang) சீனாவில் ஜியான்ஸு (Jiangsu) மாகாணத்தில் வசிப்பவர். ஒரு நாள் எட்டு வயதான ஒரு சிறுவன் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த போது அவனைக் காப்பாற்றினார். அவர் வயதானவர் என்பதோடு அப்போது பல காயங்கள் ஏற்பட்டு உடல் நலமும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தச் செய்தியை வெளியிட்ட நியூஸ் வீக் பத்திரிகை கூடுதலாக ஒரு தகவலையும் தந்தது. 30 வருடங்களுக்கு முன்னர் ஜூ வெய்பாங்க் தான் காப்பாற்றிய சிறுவனின் தந்தையையும் நீர் விபத்தில் மூழ்காமல் காப்பாற்றி இருக்கிறார்.
இப்படி அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போகலாம்.
சென்ற வாரம் சிங்க்ரானிசிடி உரையை முடித்த பின்னர் மறுநாள் வந்த செய்தி இது. Prince Philip died at 9.00 am on the 9th April , the 99th day of the year at the age of 99.
பிரின்ஸ் பிலிப் ஏப்ரல் 9ஆம் தேதி ஒன்பது மணிக்கு தனது 99ஆம் வயதில் 99ஆம் நாளன்று காலமானார்!
இப்படிப்பட்ட தற்செயல் ஒற்றுமை செய்திகளை ஒவ்வொன்றாக ஆராய ஆரம்பித்த ஜங் அவற்றைச் சரிபார்த்து தொகுக்கவும் செய்தார்.
பிரபல கணித மேதையான வாரன் வீவர் தான் எழுதியுள்ள லேடி லக்: தி தியரி ஆஃப் ப்ராபபலிடி என்ற நூலில், லைஃப் இதழில் வெளியான ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.
நெப்ராஸ்காவில் பீட்ரிஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு சர்ச்சில் தேவாலய இசைப்பாடல் ஒத்திகைக்காக 15 பேர் குழுமத் திட்டமிட்டனர். 1950ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதியன்று மாலை ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு அவர்கள் அங்கு வர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட்து. அங்கு வர வேண்டிய 15 பேரும் சற்று தாமதமாக வந்தனர். பாதிரியாரும் அவரது மனைவி மற்றும் மகளும் தாமதமாக வந்ததற்கான காரணம் பாதிரியாரின் பெண்ணின் உடையை அயர்ன் செய்ய பாதிரியாரின் மனைவி சிறிது நேரம் கூட எடுத்துக் கொண்டார் என்பது தான். வரவேண்டியவர்களுள் ஒரு பெண் தன் ஜாமெட்ரி வரைபடத்தை முடிக்கச் சிறிது நேரம் ஆனது. இன்னொருவரின் கார் ஸ்டார்ட் ஆக தாமதமாகி விட்டது. இரண்டு பேர் அவர்களுக்குப் பிடித்த ரேடியோ புரோகிராமில் லயித்து அதில் ஈடுபட்டு அது முடிந்தவுடன் வந்தனர்.
ஒரு தாய் தன் மகளை குட்டித் தூக்கத்திலிருந்து எழுப்ப நேரமாகவே இருவரும் கிளம்பி வரச் சற்று தாமதமானது. இப்படியே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சின்னக் காரணம் அவர்கள் வருகையை தாமதப்படுத்தியது. அவர்கள் எழு மணி இருபது நிமிடங்களுக்கு வருவதற்குப் பதிலாக ஐந்து நிமிடங்கள் தாமதமாக ஏழு மணி இருபத்தைந்து நிமிடங்களுக்கு சர்ச்சுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டு சர்ச் இடிந்து விழுந்தது. அனைவரும் அதிசயமாக உயிர் தப்பினர். ஒவ்வொரு சின்னக் காரணத்தை வைத்துத் தங்களை தாமதப் படுத்தியது கடவுளே என்று அவர்கள் நம்பினர்.
இந்தச் சம்பவத்தைத் தன் நூலில் குறிப்பிட்ட வாரன் வீவர் அறிவியல் ரீதியாகப் பார்த்தால் பத்து லட்சத்தில் ஒரு தரமே அனைவரும் தாமதமாக வரக்கூடிய இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறக் கூடும் என்று வியந்து எழுதினார்.
உலகில் உள்ள அனைத்துமே பிரபஞ்சத்துடன் ஒன்றி இருப்பதால் மட்டுமே இப்படிப்பட்ட தற்செயல் ஒற்றுமைகள் ஏற்படுகின்றன என்பது ஜங்கின் முடிவு. பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன என்று ஜங் நம்பினார். இதைத் தொடர்ந்து சீன முறையான் ‘ஐ சிங்’கை ஆராய்ந்த அவர் துல்லியமாக அனைத்தையும் இறுதி வினாடி வரை கணித்து செயல்களை உள்ளது உள்ளபடி ‘ஐ சிங்’ விளக்குகிறது என்றார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜோஸப் பிக்லாக் என்பவர் ஒரு தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாடி வீடுகளில் ஒன்றின் ஜன்னலிலிருந்து ஒரு குழந்தை தவறிக் கீழே விழுந்த்து. சரியாக அந்த விநாடியில் அங்கு வந்த பிக்லாக் அந்தக் குழந்தையைக் கையில் ஏந்திப் பிடித்துக் கொண்டார்.குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதில் இன்னொரு அதிசயமும் உள்ளது. ஒரு வருடம் கழித்து அதே பிக்லாக் அதே தெருவில் நடந்த போது அதே மாடிவீட்டிலிருந்து அதே ஜன்னலிலிருந்து அதே குழந்தை மீண்டும் கீழே விழுந்தது.பிக்லாக் இந்த முறையும் குழந்தையைப் பிடித்துக் கொண்டார். குழந்தை மீண்டும் ஒரு முறை உயிர் தப்பியது. இதே போல ஏராளமான இரட்டையர்கள் வாழ்வில் சம்பவங்கள் ஒரே விதமாக இருந்ததையும் அவர்கள் மரணம் ஒரே சமயத்தில் நிகழ்ந்ததையும் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஜங் தனது வாழ்க்கை வரலாற்றில் இப்படிப்பட்ட அமானுஷ்யமான சம்பவங்கள் ஒருவர் வாழ்வில் நிகழவில்லை என்றால் அவர் நிச்சயமாக ஏதோ ஒன்றை இழந்து விட்டார் என்று தான் அர்த்தம் என்கிறார். ஒரு மர்மமான உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று கூறும் ஜங் தான் வாழ்ந்த வாழ்க்கையும் வாழ்ந்த விதமும் திருப்திகரமான ஒன்று என்று கூறித் தன் நூலை முடிக்கிறார். தனது வாழ்க்கை வரலாற்றை தனது சகா ஒருவரிடமும் அனிலா ஜஃபே என்ற பெண்மணியிடமும் கூறி பதிவு செய்திருக்கிறார் ஜங். சில அத்தியாயங்களை அவரே தன் கைப்பட எழுதிக் கொடுத்தார். நூலின் பெயர் Memories, Dreams, Reflections. வியப்பான பல நூறு சம்பவங்கள் அடங்கிய வித்தியாசமான விஞ்ஞானி ஜங்கின் இந்த சுயசரிதை அனைவரையும் நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும் ஒன்று!
ஜங் தனது பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வந்த வீட்டில் அதன் வாயில் கதவில் VOCATUS ATQUA NON VACATUS DEUS ADERIT என்று பொறித்து வைத்திருந்தார். இதன் பொருள்: கூப்பிட்டாலும் சரி, கூப்பிடாவிட்டாலும் சரி, கடவுள் இருக்கிறார்.
அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்த போது சாஞ்சியில் புத்தர் உபதேசம் செய்த இடத்திற்கு அருகில் சென்ற போது அவருக்கு ஆச்சரியகரமான ஒரு உயரிய உணர்வு தோன்றியது. அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள் மூலம் எங்கும் பரவியிருக்கும் பிரபஞ்ச மனம் பற்றிய தத்துவத்தை அவர் உலகின் முன் வைத்தார். இதையே ஹிந்து மதம் அனைவரின் முன்னும் தொன்று தொட்டு வைத்திருக்கிறது. நமது மதத்தில் கொடுக்கப்படும் ஒரு கூடுதல் தகவல் என்னவெனில் அனைத்துமே கர்ம பலன்களாலும் இயற்கை நியதிகளாலும் நிர்ணயிக்கப்பட்டு விட்டன என்பது உண்மை தான் என்றாலும் சாதுக்களின் சங்கமும் இறை வழிபாடும் தீய சம்பவங்களை மாற்றுவதற்கான அருமையான வழிகள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தான்! இந்தத் தற்செயல் ஒற்றுமைகள் இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்றோ என்னவோ!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Panini in his grammar book Ashtadhyayi gives remarkably interesting information about cabinet formation in the government.
He used ASHADAKSHIINA, which literally meant “that which is not seen by six eyes. The Kasika (Kaasikaa) explains it to mean deliberations between two persons only and not more.
“Ashadakshiino mantras, yo dvaabhyaameva kriyate, na bahubhih”
In the political evolution of the Mantri Parishad and with the emergence of the office of the Prime Minister there was a tendency to form a smaller body inside the Parishad/council for more effective and responsible deliberation.
As to the number of ministers constituting this Inner Body, Kautilya supplies valuable information recording the views of earlier political thinkers like
Pisuna
Parasara
Visalaksha and
Bharadvaja
Kautilya states that the number of ministers should three to four (Arthasastra 1-15)
In this matter the most forceful view was that of Kaninka Bharadvaja, the severe theorist who advocated the system of one minister cabinet
This was the ashadakshiina mantra referred to by Panini,i.e.the secret counsel of the king and the chief minister only, in which Six Eyes had not participated. It signified the same thing as
“Shad karno bhidyate mantrah of later literature”
Bharadvaja held that a plethora of councillors betrayed the secret.
“Mantri paramparaa mantram bhinnati, Artha 1-15”
Cited in the Kasika on 5-2-10
This view was disputed by Visaalaaksha, who perhaps true to the veiled suggestion of his name, was in favour of admitting more ministers to that secret sessions of the council.
The Six Eye must have related to urgent and important matters of the state. Panini refers to Aatyayika Vinayadi gana 5-4-34, urgent business, to which Asoka also refers in Rock Edict 6 and so also Kautilya.
Summoning the ministers and the council, the king shall speak to them on urgent matters,
Here ‘mantrinah’ refers to the Inner Cabinet, and ‘Mantri Parishad’ to the fuller Council of Ministers.
The No Six Eyes deliberations belonged to the former.
Similarly, in the Gana patha 4-3-118 ,an act or resolution of the Parishad is called ‘Paarishatka’
All these show how advanced was our political system 2700 years ago
xxx
500 members in Raaja Sabhaa
As distinguished from the Parishad, the General Assembly was represented by the Raaja Sabhaa. Tradition makes King Bindusara having a Council of 500 members.
As examples of Raja Sabha, Patanjali cites Chandragupta Maurya Sabha and Pushyamitra Sabha, Bhashya 1-177
11 May 2015 — Rig Veda mentioned female members of the Sabha as sabhavati (RV 1-167-3). … Later literature gives us information about Council of Five and …
–SUBHAM—
tags – one member, cabinet, Six Eyes, Panini, Kautilya
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
(பெண்கள் வாழ்க தொடர் மார்ச் 22, 2021ல் துவங்கியது. முதல் கட்டுரை எண் 9410)
வரதட்சிணை முறை தலைகீழாக மாறியது எப்படி?
இன்றைய இந்து சமுதாயத்தில் பெரிய கொடுமையாக நிற்பது வரதட்சிணை வாங்கும் – கொடுக்கும் வழக்கமாகும். இதில் விந்தை என்னவென்றால் சாஸ்திரங்களில் வரதட்சிணை கொடுப்பது பற்றி எந்த விதியும் இல்லை! அதைவிட பெரிய விந்தை என்னவென்றால் தமிழ் இலக்கியத்திலும் வடமொழி இலக்கியத்திலும் ஆண்கள்தான் பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துள்ளனர். மனுதர்ம சாஸ்திரம் எழுதப்பட்ட காலத்திலும் இந்த வழக்கம் இருந்தது போலும். பெண்ணின் அப்பா வரதட்சிணை வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் பெண்ணை விற்பதற்குச் சமமாகிவிடும் என்று சாடுகிறார். ஒரு துளிக்கூட வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் அது அசுரர் திருமணமாக ஆகிவிடும் என்றும் கூறுகிறார்.
பெண்களே பெற்று வந்த இந்த வரதட்சிணை எப்படி தலைகீழாக மாறியது? எப்போது இப்படி மாறியது என்பது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.
தமிழ் மன்னர்கள் மூவேந்தரும் குறுநில மன்னர்களின் பெண்களை மணக்க முயன்றபோது பெண்களுக்கு நிறைய பணம் கொடுத்ததை சங்க இலக்கியப் பாடல்கள் வருணிக்கின்றன.
ஆயமகள் மறவுரை :
இதோ ஆயர் முறைமையைப் பாடும் குரவைக் கூத்தாடும் தலைவி கூறுவன:
“உயிரை ஒரு பொருட்டாக எண்ணி அதனால் ஏற்றின் மருப்பினை அஞ்சும் நெஞ்சினையுடையார் ஆயமகளிரின் தோளைப் பொருந்துவது எளிதல்ல”
“கொலைத் தொழிலினையுடைய ஏற்றினது கொம்பினிடையினிலே தாம் விரும்பும் மகளிர் மார்பில் விழுவது போல் வீழில் எம்முடைய இனத்தில் ஆயர்தம் மகளிருக்கு விலை வேண்டா” (கலி 103: 72-73)
ஆயமகளிர் ஆயரின் வீரத்தையே தம் காதலுக்கு விலையாக மதித்தனர். அவர் மறநெஞ்சின் மாண்பு மிகப் பெரியதேயாகும்.
XXX
பெண் ஆட்சியாளர்கள்
ஒரு சமுதாயத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மதிப்பையும் மரியாதையையும் கொண்டு அது எவ்வளவு நாகரீக முன்னேற்றம் உடையது என்று அளந்து விடலாம். இந்த வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மற்ற நாகரீ கங்களை ஒப்பிடுகையில் இந்திய நாகரீகம் முன்னேறியிருந்தது என்று துணிந்து கூறலாம். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தாத பண்டைய சமுதாயம் எதுவும் இல்லை. எல்லா நாகரீகங்களிலும் 99 சதவிகித அரசர்களையும் 1 சதவிகித அரசிகளையும் காண்கிறோம். கவிஞர்கள் முதல் மருத்துவர்கள் வரை எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான். ரிக் வேதத்திலும் சங்கத்தமிழ் இலக்கியத்திலும் காணப்படும் பெண் கவிஞர்கள் எண்ணிக்கை கூட வேறு எந்த சமுதாயத்திலும் இல்லை.
குழந்தைகளைப் பெறுவதும் அவர்களை ஆரோக்கியமாக நற்பண்புகளுடன் வளர்ப்பதும் பெண்களின் கடமையாக இருந்தது. இல்லத்தரசி (HOUSE WIFE) என்பதே அவளுடைய முக்கிய தொழில். ஒரு ஔவையாரும், ஆண்டாளும், காரைக்கால், அம்மையாரும், கங்காதேவியும், மீராபாயும், ஜானாபாயும் விதிவிலக்குகள் ஆவர். ‘மனைக்கு விளக்காகிய வாணுதல்’ (புறம் 314) ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ (குறுந் 135) என்பன இலக்கியச் சான்றுகள்.
போருக்குச் செல்லுதல், வேட்டையாடுதல், நிலத்தை உழுது பயிர் செய்தல், ஆயுதங்களை உருவாக்கும் இரும்பாலை நடத்தல் போன்ற தொழில்களில் எல்லாம் ஆண்களை மட்டுமே காண்கிறோம். தர்மயுத்தம் நடத்தும் (அறப்போர்) மன்னன் பெண்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு முரசு அறிவித்த பின்னரே போர் நட்த்துவான் (புறம் 9 நெட்டிமையார்பாடல்). கண்ணகி மதுரையை எரித்த போதும் பசு பத்தினி பார்ப்பனர் ஆகியோரை விடுத்து மற்றவர்களை எரிக்கும்படி அக்னி தேவனுக்கு உத்தரவிடுகிறாள்.
ராமாயணத்தில் தசரதனுக்கும்சம்பரனுக்கும் நடந்த யுத்தத்தில் தேரோட்டிச் சென்று அவன் உயிரைக் காத்த கைகேயி, முல்லைப் பாட்டில் மன்னனுடன் பாசறைக்குச் சென்ற (முல்லை வரி 45-49) மகளிர் ஆகியோர் விதிவிலக்குகள். பொதுவாக வீரமகன்களை உருவாக்குவது மட்டும் (காண்க புறநானூறு 278-279) அவர்கள் பொறுப்பு, வீரப்போரில் ஈடுபடுவது அல்ல.
ஆயினும் 2000 ஆண்டு பாரத வரலாற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேரடியாக ஆட்சி புரிந்த அரசிகளைப் பற்றி கேள்விப் படுகிறோம். மதுரையில் மீனாட்சி அரசாட்சி செய்ததும், பட்டாபிஷேகம் செய்து கொண்டதும் இன்று வரை ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவியின் உருவத்தையும் ஓவியத்தையும் இந்தியா முழுதும் காணலாம். (காண்க எல்லோரா, மகாபலிபுரம்…)
இவைகளை புராணம் என்று ஒதுக்கி விட்டாலும் கல்வெட்டுகள் சாசனங்கள் மூலம் பல ராணிகளை அறிகிறோம்.
சந்திரகுப்த விக்ரமாதித்தனின் மகளான பிரபாவதி தேவி தன் கணவன் ( வாகடக வம்ச மன்னன்) இளவயதில் இறந்ததால் அரசு கட்டில் ஏறினாள். குஜராத்தை சகரர்க ளிடமிருந்து வெல்வதில் தகப்பனுக்கு துணை புரிந்தாள்.
ஹர்ஷனுடைய ஆட்சியில் அவன் சகோதரி ராஜ்யஸ்ரீ முக்கிய பங்காற்றினாள். ராஜ ராஜ சோழனுக்கு அவன் தமக்கை குந்தவை ஆலோசகராக இருந்து ஆட்சியை வழிநடத்தினாள்.
ஜயசிம்மனின் சகோதரி அக்கா தேவி (கிபி 1025) ஆட்சிப்பொறுப்பிலும் போரிலும் முற்றுகையிலும் பங்கேற்றாள். காகதிய வம்சத்தரசி ருத்ராம்பாளும் மதுரை நாயக்கர் வம்சத்தரசி ராணி மங்கமாளும் மீனாட்சியும் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தனர்.
சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த விஜய பட்டாரிகாவும் (கிபி—) காஷ்மிரத்தைச் சேர்ந்த சுகந்தாவும் தித்தாவும் (கி பி 10 11ஆவது நூற்றாண்டுகள்) ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தனர்.
சாளுக்கியர் ஆட்சியில் அக்கா தேவி தவிர, சோமேஸ்வரரின் ராணி மைலா தேவி (கிபி 1080), ஆறாவது விக்ரமாதித்தனின் முதல் ராணி லெட்சுமிதேவி (கி பி 1100) ஆகியோர் தீவிர பங்கேற்றனர்.
ரஜபுதனத்தில் அரசர் சமர்சீ இறந்தவுடன் அவனது மனைவி கூர்மாதேவி (கி பி 1195) ஆண்டாள். ராணா சங்காவின் மனைவி மர்னாவதி தனது வீராவேச உரையில் அனைவரையும் ஊக்குவித்தாள். மற்றொரு மனைவியான ஜவஹர்பாய் போரிட்டு களத்திலேயே மாண்டாள்.
மராட்டியர் வரலாற்றுக் கோலாப்பூர் தாராபாயும் சித்தூர் அகல்யா பாயும் போர்களத்தில் பெரும் பங்காற்றினர்.
ரஜபுதனத்து பெண்கள் தங்கள் கணவர்கள் போருக்குச் சென்றபோது இரத்தத் திலகமிட்டு வழியனுப்பினர். கணவன் இறந்து விட்டால் மாற்றான் வசம் சிக்காமல் தீயில் பாய்ந்து உயிர் தியாகம் செய்தனர்.
அலாவுதீன் கில்ஜியிடமிருந்து தப்பிப்பதற்காக சித்தூர் ராணி பத்மினி நூற்றுக் கணக்கான தோழியருடன் தீப்புகுந்து தியாகம் செய்த வரலாறு உலகம் அறிந்த ஒன்று.
இவ்வாறு தீப்பாய்ந்து உயிர்த்தியாகம் செய்த பெண்களின் கைச்சுவடுகள் பதித்த கல்வெட்டுகளை நாடு முழுதும் காணலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 25-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திருச்சிற்றம்பலம். அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.இன்று சித்திரை மாதம் ஹஸ்த நக்ஷத்திரம் கூடிய நன்னாள். சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவம் அவர்களின் குருபூஜை தினம் இன்று! அவரைப் போற்றி வணங்குவோம்.
ஹிந்து மதத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று அது யாரையும் பாவி என்று குறிப்பிடுவதில்லை. மாறாக அனைவரையும் அம்ருதஸ்ய புத்ரா: என்றே அழைக்கிறது. அது மட்டுமல்ல; மனிதர்களுக்கு மட்டுமல்ல மோக்ஷம். எந்த உயிரும் முக்தியைப் பெறலாம் என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறது அது. இதை மெய்ப்பித்துக் காட்டியவர் உமாபதி சிவாசாரியார்.
உமாபதி சிவம் தில்லை மூவாயிரவர் எனப்படும் மூவாயிரம் தீக்ஷிதர் குடும்பங்களுள் ஒன்றில் பிறந்தார். ஒருநாள் சோழ மஹாராஜன் அளித்த முத்துப் பல்லக்கில் அவர் சிதம்பரம் வீதியில் சென்று கொண்டிருந்த போது
அவரது பல்லக்கை கண்ட பெரும் மகானான மறைஞான சம்பந்தர் தான் அமர்ந்திருந்த திண்ணையிலிருந்தவாறே, “ பார், பார், பகல் நேரத்தில் குருடன் ஒருவன் பலகைகளில் ஏறிச் செல்கின்றான்” என்றார்.
பல்லக்கின் திரைகளை விலக்கிப் பார்த்த உமாபதி சிவாசாரியார் கண்களுக்கு மறைஞானசம்பந்தர் தோன்றவில்லை.சிதம்பரம் நடராஜரே தோன்றினார். உடனே பல்லக்கை விட்டுக் கீழே இறங்கிய உமாபதி சிவம் மறைஞானசம்பந்தரின் காலடிகளில் வீழ்ந்தார்,
மறைஞானசம்பந்தர் அந்த இடத்திலிருந்து ஓட்டமாக ஓட, உமாபதி சிவம் அவரைப் பின் தொடர்ந்து ஓடலானார். ஓடி ஓடி இருவரும் களைத்துப் போன நிலையில் நெசவாளர்ர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மறை ஞானசம்பந்தருக்கு கூழ் வார்த்தார். அதை அவர் சிவ பிரசாதம் சிவபிரசாதம் என்று சொல்லிக் கொண்டே அருந்த அவர் முழங்கை வழியே சிறிது கூழ் சொட்டு சொட்டாகக் கீழே சிந்த, அந்தத் துளிகளை குரு பிரசாதம், குரு பிரசாதம் என்று சொல்லிக் கொண்டே உமாபதி அருந்தலானார். இந்தச் சம்பவத்தால்
அவரை தீக்ஷிதர் சமூகத்திலிருந்து விலக்கி விட்டனர்.
சிதம்பரத்திற்கு கிழக்கே உள்ள கொற்றவன் குடி என்ற இடத்திற்குச் சென்று ஒரு மடத்தை அமைத்து அவர் சிவ பூஜையை மானசீகமாகச் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு நாள், ஆலயத்தில், உற்சவ நாளன்று கொடி ஏற்ற முயன்ற போது அதுகம்பத்தில் மேலே ஏறவே இல்லை. ‘உமாபதி சிவத்தை கொடி ஏற்றச் செய்க’ என்ற அசரீரி ஒலிக்கவே அனைவரும் அவரை அழைத்து கொடியை ஏற்றுமாறு வேண்டினர். உமாபதி சிவம் கொடிக்கம்பத்தின் முன் வந்து
ஒளிக்குமிருளுக்குமொன்றேயிடமொன்றுமேலிடிலொன்
றொளிக்குமெனினுமிருளடராதுள்ளுயிர்க்குயிராய்த்
தெளிக்குமறிவுதிகழ்ந்துளதேனுந்திரிமலத்தே
குளிக்குமுயிரருள்கூடும்படிகொடிகட்டினனே என்று பாடினார்.
உடனே கொடி மேலே ஏறியது அனைவரும் வியந்து அவரைப் போற்றிப் வணங்கினர்.தொடர்ந்து அவர் இன்னும் மூன்று பாடல்களைப் பாடினார்.
இந்த நான்கு பாடல்களும் கொடிப்பாட்டு என்ற பெயரால் சிறப்புற இன்றளவும் அழைக்கப்படுகின்றன.
இன்னொரு முக்கியமான அற்புத சம்பவம் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்தது.
அந்த நாளில், தாழ்ந்த குலத்தில் உதித்த பெற்றான் சாம்பான் என்பவன் விறகு வெட்டி தனது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தான். அவன் சிறந்த சிறந்த சிவ பக்தன்.
அவன் திருமடைப்பள்ளிக்கு ஒரு விறகுக் கட்டும் உமாபதி சிவாசாரியருக்கு ஒரு விறகுக் கட்டும் தினமும் தவறாமல் கொடுத்து வந்தான்.
நடராஜப் பெருமான் தன் சிறந்த பக்தனுக்கு அருள் பாலிக்க அருள் கொண்டார்.
தனது இயல்பான தோற்றத்தில் ஒரு திரிசூலம், கோடாலி, மான் உள்ளிட்ட அனைத்துடனும் அவன் முன் தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று சிவபிரான் கேட்க, “ஐயனே! எனக்கு முக்தியே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம்” என்றான் சாம்பான்.
உடனே சிவ பிரான் ஒரு ஓலை நறுக்கில் ஒரு செய்யுளை எழுதினார் இப்படி:
“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியாற் கெழுதியகைச் சீட்டுப் – படியின்மிசைப்
பெற்றான் சாம்பானுக்குப் பேதமற தீக்கைசெய்து
முத்தி கொடுக்க முறை”
அடியார்க்கெளியவனான சிற்றம்பலவன் கொற்றங்குடியார்க்கு எழுதிய ஓலை இது: பெற்றான் சாம்பானுக்கு உரிய முறையில் தீக்ஷை அளித்து அவன் முக்தி பெறச் செய்வதே முறையாகும். இது எனது ஆணை.”
ஓலையை பெற்ற சாம்பான் உமாபதி சிவாசாரியரின் காலில் வீழ்ந்து சிவ பிரான் தந்த ஓலையைத் தந்தான். ஒலையைப் படித்த சிவம் பரவசமடைந்தார். ஒரு க்ஷணத்தில் சாம்பானுக்கு நயன தீக்ஷை அளித்தார். அவ்வளவு தான், முதிர்ந்த பக்குவ நிலையில் இருந்த சாம்பான் ஒளி உடலைப் பெற்று சிதாகாசத்தில் கலந்தான்.
செய்தி காட்டுத் தீ போல ஊர் எங்கும் பரவியது. இதை அறிந்த அரசன் பெரிதும் வியப்புற்றான். தானே நேராக கொற்றங்குடிக்கு விஜயம் செய்தான். சிவத்திடம், தனது முன்னால் இன்னும் யாரேனும் ஒருவருக்கு முக்தி அளிக்கப் பணித்தான்.
உமாபதி தன் பார்வையை நாலா பக்கமும் செலுத்தினார்.
அங்கு சிவம் தினசரி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த போது அந்த நீர் வழிந்தோடி வந்து, அந்த நீர் மூலம் வளர்ந்த ஒரு முள்ளிச் செடி அவர் கண்களில் பட்டது. அது நல்ல பக்குவ நிலையில் இருப்பதை உணர்ந்த சிவம் அதன் மீது நயன தீக்ஷையத் தர அது உடனே ஒளி உருவமாகி சிதாகாசத்தில் கரைந்தது. அரசன் இதைப் பார்த்து பிரமித்தான். இது பற்றி நடராஜர் என்ன சொல்கிறார் என்பதை அவரிடமே கேட்டு விடுவோம் என்றான் அரசன்.
அனைவரும் நடராஜரிடம் சென்று பூஜை செய்து கற்பூர ஆரத்தியைக் காட்டினர். அங்கே நடராஜருக்கு இரு புறமும் சாம்பானும் முள்ளிச் செடியும் தோற்றமளிக்க அனைவரும் விக்கித்துப் போயினர். அரசன் உட்பட அனைவரும் சிவாசாரியரின் அடி பணிந்து வணங்கினர்.
இந்தச் சம்பவம் உலகிற்கு ஒரு பெரிய உண்மையை அளித்தது. கேவலம், மனிதப் பிறவி பெற்றவர்கள் மட்டுமே முக்திக்கான அருகதை பெற்றவர்கள் அல்லர்; புல்லும் பூடும் மிருகங்களும் கூட முக்தி பெற அருகதை பெற்றவர்கள் என்பதே அந்த உண்மை. கருடன் பூஜித்த தலம் பட்டீசுரம்; யானை திருவானைக்கா, குதிரை -திருக்குற்றாலம், புலி- பெரும்பற்றப் புலியூர் நரி- சிறுகுடி, ஆடு- திருவாடானை, நாய்- வீழிமிழலை, குரங்கு – தென்குரங்காடுதுறை அன்னம் – அம்பர், மயில் – மாயூரம் கிளி- கீரனூர் வண்டு- திரு வண்டுறை இப்படி மிருகங்களும் பறவைகளும் பூஜித்த தலங்கள் ஏராளம் ஏராளம் உண்டு. அவை முக்தி பெற்ற வரலாறுகளும் நிறைய உண்டு. ஆனால் மிகச் சிறப்பாக முள்ளுக்கும் முக்தி கொடுத்து அருளிய உமாபதி சிவாசாரியாரின் சிறப்பே சிறப்பு. அவரது குருபூஜை தினமான இன்று அவரைப் போற்றி வணங்குவோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று APRIL 25 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
திருமலையில் பிறந்தார் அனுமன்: ‘திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
திருப்பதி :’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் நேற்று அறிவித்தது.
ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் நேற்று வெளியிடப்பட்டது.ராமநவமி தினமான April 21 திருமலை திருக்கோவிலில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது முன்னிலையில், இந்த அறிவிப்பை தேஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.
இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ஹம்பி என்ற இடம் தான், ஹனுமனின் பிறப்பிடம் என, இதுநாள் வரை கருதப்படுகிறது.மேலும், ஜார்க்கண்டில் உள்ள அஞ்சன் மலைப்பகுதி; குஜராத்தில் உள்ள நவ்சாரி; ஹரியானாவின் கைத்தல்; மஹாராஷ்டிராவின் திரியம்பகேஸ்வர் அருகில் உள்ள அஞ்சனேரி உள்ளிட்ட இடங்களும், அனுமனின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ‘திருமலையின் அஞ்சனாத்ரியில் பிறந்த அனுமன், அங்கிருந்து, 363 கி.மீ., தொலைவில் உள்ள ஹம்பிக்கு சென்றிருக்கலாம்’ என கூறப்படுகிறது. திருமலை தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு, புராண, இதிகாச ஆய்வாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
Xxx
திருப்பதியில் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 90 நாட்கள் வரை தரிசிக்கலாம்
கொரோனா 2-ம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது.
ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துள்ளது.
ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90நாட்களுக்குள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு அறை பெறுவதை தேவஸ்தானம் எளிதாக்கி உள்ளது.
திருப்பதியில் உள்ள அலிபிரி பாதாள மண்டபம், சோதனை சாவடி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட இடங்களில் வாடகை அறை ரிசிப்ட் ஸ்கேன் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு பக்தர்கள் ஸ்கேன் செய்து கொண்டால், திருமலைக்கு செல்லும் முன் அவர்கள் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு துணை விசாரணை அலுவலக எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின்னர் பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்திற்கு செல்லாமல் நேராக துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று தங்களின் அறையை பெற்றுக் கொள்ளலாம்.
திருப்பதியில் ஒரே நாளில் 25,695பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,253பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.21கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
xxxxx
அமர்நாத் பயணம் முன்பதிவு நிறுத்தம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.
:கொரோனா தொற்று பரவல் காரணமாக, அமர்நாத் பனிலிங்க கோவில் புனிதப் பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள இமய மலையில், 12 ஆயிரத்து, 730 அடி உயரத்தில், அமர்நாத் பனிலிங்க குகைக் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு இணையதளம் வாயிலாக, ‘ஆன்லைன்‘ முன்பதிவுகள் செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் பயணம், வரும், ஜூன், 28ல் துவங்கி, ஆகஸ்ட், 22 வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது.
இதற்கான முன்பதிவுகள், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு – காஷ்மீர் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகள் மற்றும், ‘ஆன்லைன்‘ வாயிலாக, சமீபத்தில் துவங்கியது.கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அமர்நாத் பனிலிங்க புனித பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியம் அறிவித்தது.‘நிலைமை கட்டுக்குள் வந்த பின், முன்பதிவு மீண்டும் துவங்கப்படும்‘ என, அறிவிக்கப்பட்டுள்ளது.
XXX
இந்திய பக்தர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை: நித்தியானந்தாஅறிவிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், இந்திய பக்தர்கள் தனது கைலாசா தீவிற்கு வர அனுமதி இல்லை என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழக்குகளில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளானவர் சாமியார் நித்தியானந்தா. இவர், இந்துக்களுக்காக கைலாசா என்னும் தனித் தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல், தன்னுடைய நாட்டுக்கு தனி ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். கைலாசா வர விரும்புபவர்களுக்கு இலவச விமான சேவை வழங்கி கூட்டி செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், இன்று வரை அந்த கைலாசா தீவு நாடு எங்கு இருக்கிறது என்பதற்கான விடை மட்டும் கிடைத்தபாடில்லை.
கைலாசா எங்கு உள்ளது என்பது நித்தியானந்தாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியா செல்ல பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதேபாணியில் நித்தியானந்தாவும், இந்திய பக்தர்களுக்கு கைலாசா நாட்டிற்கு வர தடை விதித்துள்ளார். கடந்த 19ம் தேதியிட்டு, நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பாணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Xxxx
உடுப்பி சிரூர் மடத்தின் மடாதிபதியாக 16 வயது சிறுவன் நியமனம்
உடுப்பி மாவட்டத்தில் உள்ள, அஷ்ட மடங்களில் ஒன்றான சிரூர் மடத்தின் மடாதிபதியாக 16 வயது சிறுவன் அனிருத் நியமிக்கப்பட்டு இருக்கிறான். அவனுக்கு அடுத்த மாதம் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
கர்நாடக மக்களால் வேதாந்தி, தத்துவவாதி என்று போற்றப்படும் மத்வாச்சாரியாரால் உடுப்பி மாவட்டத்தில் 8 மடங்கள் அமைக்கப்பட்டன. அவை பெஜாவர், பலிமாறு, அடமாறு, புத்திகே சோதே, கனியூறு, சிரூரு, கிருஷ்ணபுரா ஆகிய 8 மடங்கள் ஆகும். இந்த 8 மடங்களையும் சேர்த்து ஒன்றாக அஷ்ட மடங்கள் என்று மக்கள் அழைக்கின்றனர். இந்த அஷ்ட மடங்களில் பெஜாவர் மடம் தான் தலையாய மடம் என்று கூறப்படுகிறது.
இந்த அஷ்ட மடங்களில் ஒன்றான சிரூரு மடத்தின் மடாதிபதியாக லட்சுமிவரதீர்த்த சுவாமி இருந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து இந்த மடத்தின் பொறுப்பை சோதே மடத்தின் மடாதிபதி நிர்வகித்து வந்தார்.
16வயது சிறுவன்
இந்த நிலையில் சிரூர் மடத்தின் மடாதிபதியாக வித்யோதயா பள்ளி மாணவனான 16 வயதே நிரம்பிய அனிருத் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் துளு மொழி பேசும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரூர் மடத்தின் மடாதிபதியாக அனிருத் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து உடுப்பியில் சோதே மடத்தின் மடாதிபதி விஸ்வவல்லப தீர்த்த ஸ்ரீபாதரு சுவாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனிருத், தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலா பகுதியைச் சேர்ந்தவர். இவர் சிரூர் மடாதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கான பட்டாபிஷேக விழா அடுத்த மாதம்(மே) 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உத்தர கன்னடா மாவட்டம் சோதே மடத்தில் நடக்கிறது.
அதற்கு முன்பாக இவர் அஷ்ட மடங்களிலும் சன்னியாசம் பெறும் நிகழ்ச்சி நடைபெறும். இது அஷ்ட மடங்களின் சம்பிரதாய முறைப்படி நடக்கிறது. அஷ்ட மடங்களின் யாகம விதிகளின்படி சன்னியாசம் பெற்ற பிறகு அனிருத்துக்கு மடம் சார்பில் பெயர் சூட்டப்பட்டு, அவர் சிரூர் மடத்தின் மடாதிபதியாக பதவி ஏற்பார்.
மடாதிபதியாக நியமிக்கப்படுபவருக்கு வயது ஒரு பிரச்சினை இல்லை. ஒருவரின் அறிவுக்கூர்மை, மனிதாபிமான தன்மை, ஒழுக்கம் உள்ளிட்டவற்றை கவனித்துதான் அந்த பதிவி அவருக்கு வழங்கப்படுகிறது– இவ்வாறு அவர் கூறினார்.
Xxxxx
ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
ராமேசுவரம் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமா ஸ்கந்தர் சன்னதிக்கு முன்பாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் ஏப்ரல் 14ம் தேதி கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி முன்பாக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாங்கத்தை கோவிலின் சர்வ சாதகம் சிவமணி வாசித்தார். அப்போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:-
இந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடுகளான தென் கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோய் அதிகமாக பரவும். விளையாட்டு வீரர்களுக்கு விபத்து நடைபெறும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை ஏற்றம், இறக்கமாக சரிவை சந்திக்கும்.
புதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வர நேரும். இதனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும். உலகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும். மூலிகை மருத்துவம் மூலம் தான் புதிய வைரஸ் நோயை அழிக்க முடியும்.
விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். காபி, ஏலக்காய், மிளகு போன்ற மலைப்பகுதியில் விளையும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவற்றின் விளைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வியாபாரமும் இருக்கும். தேனீ, வண்டு, வவ்வால், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளால் பயிர் விளைச்சலுக்கு சேதம் ஏற்படக்கூடும்.
புகழ் பெற்ற பழைய கட்சியே ஆட்சியை பிடிக்க நேரிடும். பழைய கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது.
இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பொழியும். இந்த ஆண்டு சென்னையை புயல் பலமாக தாக்கும்.
அயல் நாடான பாகிஸ்தான் 3 நாடுகளாக பிரிய நேரும். நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்க நேரும். சீனா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும். அண்டை நாடான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் மீது சண்டை போட நேரம் பார்த்துக் கொண்டே இருக்கும். விவசாய உபகரணங்களின் விலை கடுமையாக உயரும். ராக்கெட் ஏவுகணையை தயாரித்து இந்தியா வெற்றி அடையும்.
மருத்துவத்தில் பெரும் முயற்சி செய்து ெதாற்று நோய்க்கான மருந்தை இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பார்.
இவ்வாறு பஞ்சாங்கத்தில் தகவல்கள் இடம்பெற்று இருந்தது.
Xxxxx
கேரளாவில் எளிமையாக நடந்தது ‘திருச்சூர் பூரம்’ விழா
கேரளாவின் பாரம்பரிய பெருமை மிக்க, ‘திருச்சூர் பூரம்‘ திருவிழா திருச்சூறில் ஏப்ரல் 23ம் தேதி எளிமையாக நடந்தது.
கேரளா மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், எல்லா ஆண்டும் சித்திரை மாதம் பூரம் நட்சத்திர நாளில், ‘திருச்சூர் பூரம்’ திருவிழா நடக்கிறது.
ஏப்ரல் 23ம் தேதி கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல்படி, மக்கள் கூட்டமின்றி விழா நடந்தது. அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 7:00 மணியளவில், கன்னிமங்கலம் சாஸ்தா, யானை மீது எழுந்தருளி தெற்கு கோபுர நடை வழியாக நுழைந்து, வடக்குநாதரை வணங்கினார்.
தொடர்ந்து, திருவம்பாடி கிருஷ்ணர், பாறமேக்காவு பகவதி அம்மன், செண்டை மேளம் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எழுந்தருளினர். இதன்பின், வடக்குநாதர் கோவில் வளாகத்தில், ‘இலஞ்சித்தறை மேளம்’ என அழைக்கப்படும், செண்டை மேளம் இசைக்கப் பட்டது.திருவம்பாடி மற்றும் பாறமேக்காவு கோவில் விழா குழுவினர் நடத்தும், ‘குடை மாற்றம்’ நிகழ்ச்சி, இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக நடந்தது.
திருவம்பாடி கோவில் சார்பில் ஒரு யானையும், பாறமேக்காவு பகவதி அம்மன் கோவிலின், 15 யானைகளும் அணிவகுத்தன. யானைகளின் மீது அமர்ந்தவர்கள் முத்துமணி மாலையுடன் கூடிய, வண்ண குடை மாற்றினர்.இரவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.
Xxxxx
இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ராஜாமணி நியமனம்
கோவை மாவட்ட முன்னாள் கலெக்டராக இருந்த ராஜாமணி ஐஏஸ்., தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, தமிழக தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்தார்.
சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கலெக்டர் ராஜாமணி மற்றும் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் மீது எதிர்கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தன. இதனையொட்டி, இருவரையும் இட மாற்றம் செய்வதுடன், தேர்தல் அல்லாத பணியில் நியமிக்கும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவை பிறப்பித்தது. புதிய கலெக்டர் மற்றும் கமிஷனரை நியமிக்கவும், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டது.
தற்போது ராஜாமணிக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
XXXX
ராமேசுவரம் கடல், தீர்த்த கிணறுகளில் புனித நீராடலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் தடுப்பு தொடர்பாக அரசின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று அரியமான், காரங்காடு, ஏர்வாடி கடற்கரை பகுதிகளுக்கும் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 21தீர்த்த கிணறுகள் சுற்றுலாத்துைற கட்டுப்பாட்டிற்குள் வராது என்பதால் சமூக இடைவெளியுடன் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள்.
XXX
எல்லோருக்கும் மஹாவீரர் ஜயந்தி வாழ்த்துக்கள்
24 ஆவது தீர்த்தங்கரர் ஆன சமண முனிவர் மஹாவீரர் ஜெயந்தி இன்று நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது . இன்று.சத்யம், அஹிம்சை ஆகியவற்றைப் போதித்த மஹாவீரர் பிறந்த தினம் ஆகும்.
அனைத்து மக்களுக்கும் மஹாவீரர் பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகுக
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………