Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas
6-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உபரத்தினங்கள் வரிசை!
கண் பார்வைக் குறை நீங்க ஓபல் அணியலாமே!
ச. நாகராஜன்
உபரத்தினக் கற்களில் ஒன்றாக அமையும் ஓபல் ஒரு அற்புதக் கல்லாகும்.
இது சிலிகானும் தண்ணீரும் அதிகம் உடையது. இதன் ஹார்ட்னெஸ் எனப்படும் கடினத்தன்மை 5.5 முதல் 6.5 வரை ஆகும்.
அற்புதமான வண்ணக்கலவைகளை உடையது ஓபல்.
தீ ஓபல் (FIRE OPAL) என்ற கல்லைப் பார்த்தால் கல்லின் உள்ளே ஒரு தீ ஆறு ஓடுவது போலத் தோன்றும்.
வானவில்லின் வர்ணஜாலங்களைத் தன்னுள்ளே காட்டுவதும் இந்த ஓபல் தான்.
பச்சை ஓபல் (GREEN OPAL) என்ற ஒபல் கல்லின் உள்ளே பச்சை நிறத்தை முப்பரிமாண கோணத்தில் காணலாம். பல வண்ண ஓபல் (MULTI COLOUR OPAL) என்பது நிறைய வண்ணங்களை அள்ளி வீசும்.
இது
நெற்றிக் கண் சக்கரத்துடன் தொடர்பு கொண்டதாக இதை யோகா நிபுணர்கள் கூறுவர்.
பார்ப்பதற்கு மிகவும் அழகான இது கண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. கண்களுக்கு பிரகாசத்தை அளித்து இது கண்னை வலுப்படுத்தும். கண் பார்வை ஸ்டோன் என்பதால் இதை அணிந்து கண்களில் உள்ள கோளாறுகளைக் களைந்து நல்ல பார்வையைப் பெற முடியும்.
அது மட்டுமல்ல, நினைவாற்றலை இது நன்கு ஊக்குவித்து வளர்க்கும். நியூரோ டிரான்ஸ்மிட்டர் கோளாறுகளை நீக்கும்.
ஒளிவட்டம் எனப்படும் நமது அவுராவை இது பிரகாசிக்க வைத்து ஆற்றலை வெகுவாக மேம்படுத்தும். இது உடல் மற்றும் ஆன்மீக குணாதிசயங்களைத் தூண்டி உயரிய ஆன்மீக நிலையையும் தரும்.
இதில் பத்து வித வகைகள் உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கும் இவற்றின் குணாதிசயங்கள் சற்றே வேறுபட்டவையாக இருக்கும்.
தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். சந்தோஷம் தரும். பாராட்டுகளை வாங்கித் தரும். நல்ல உணர்வுடன் ஆரோக்கியமாக இருக்கும் மகிழ்ச்சியை இது தரும்.
நமது பாரதத்தின் நவரத்தின சாஸ்திரப்படி இது உபலகம் என்று அழைக்கப்படுகிறது.
ஜோதிட வல்லுநர்கள், லிப்ரா ராசிக்காரர்கள் அணிய வேண்டிய கல் இது என்று கூறுகின்றனர். (செப்டம்பர் 23 முதல் அக்டோ[அர் 22 வரை பிறப்பவர்கள் LIBRA ராசிக்காரர்கள்)
எட்கர் கேஸ் என்ற பிரபல அதீத உளவியல் நிபுணர் இதை உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும் கல் என்று வர்ணிக்கிறார்.
இதயத்திற்கு சக்தியைத் தரும் இந்தக் கல் சுலபமாக மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலையும் தருகிறது.
விஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஓபலை அணிந்தால் அது உடனே தன் பிரகாசத்தை இழக்கும். நல்ல நண்பர்களின் கூட்டுறவில் இது கூடுதலாகப் பிரகாசிக்கும்.
பதினான்காவது நூற்றாண்டில் ஒரு கோர சம்பவம் லண்டனில் நடைபெற்றது. அங்கு ப்ளேக் நோய் தாண்டவமாட பல லட்சம் பேர் மாண்டனர்.
நோயிலிருந்து தப்பித்த அனைவரும் ஓபல் கல்லைத் தன் கைகளில் அணிந்திருந்ததாக லிண்டா க்ளார்க் என்னும் ஜெம்மாலஜிஸ்ட் கூறுகிறார்.
நமக்குத் தெரிந்த நல்ல நிபுணரிடமிருந்தோ அல்லது கடைக்காரரிடமிருந்தோ இதை வாங்கி அணிய வேண்டும்.
இதை அணிந்தோருக்குத்தான் ஓபலின் ஓஹோ என்ற புகழும் சக்தியும் தெரிய வரும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Hindus attribute the origin of two ancient languages of India to Lord Shiva. Both languages came from the sounds of kettle drum of Lord Shiva, they believe. Hindus are the only people who recited the 14 sutras that came from the lord. Every year, Brahmins repeat the 14 Maheswara (Shiva) Suutraani during their annual Upakarma Ceremony. On that day they change their sacred thread and restart the Vedic studies. No other language has this living tradition.
Paranjothi Munivar who lived 300 years ago said that Shiva created both these languages. Later Sivagnana Munivar and Bharatiyar repeated it. Hindu Puranas clearly say that Lord Shiva sent the seer Agastya to write a grammar for Tamil language. Tamil literature and later commentators also confirmed it.
Here is the first few lines from Bharatiya’s verse:
In the poem titled Mother Tamil,
Siva the supreme was my Father;
Sage Agastya took delight in me.
Grammar, complete and perfect
The Brahmin endowed me with- Bharatiyar
Linguistic scholars around the world acknowledge that Sanskrit grammar of Panini was the first grammar book in the world. Goldstucker dated it Seventh Century BCE.
And in the same way first thesaurus in the world was Amarakosa of Amarasimha. Vatsyayana, author of Sex book Kamasutra, even created a secret code word language. Sanskrit speakers have been using Aditya for number 12, Vasu for number 8, Rudra for number 11 etc. in their conversation.
Mario Pei, author of The Story of Language says,
“Many peoples believe their language or system of writing to be of divine origin. The name of the Sanskrit alphabet is Devanagari which means pertaining to the city of the gods. Hieroglyphic used by the ancient Egyptians or their formal documents, carved in stone, means sacred stone writing (the Egyptians also had the hieratic and demotic scripts , more generally used on papyrus). They believed that writing had been devised by Thoth, God of Wisdom, and the Egyptians name for writing was ndw-ntr, the speech of the Gods. The Assyrians had a legend to the effect that the cuneiform characters were given to man by the god Nebo, who held sway over human destiny. Cuneiform was produced by pressing wedges into wet clay tablets (the name means wedge shaped); it was used by Sumerians, Assyrians, Babylonians, Persians and other peoples of Mesopotamian region from about 4000 BCE to the time of Christ. The Mayas attributed writing to their most important deity Itzamna. The lost pre historic writing of Japan was styled kami no moji or divine characters”.
***
Techniques of Secret Writing
“ One of the earliest descriptions of encryption by substitution appears in the Kama Sutra, a text written in the fourth century AD by the Brahmin scholar Vatsyayana, but based on manuscripts dating back to fourth century BC. The Kama sutra recommends that women should study 64 arts, such as cooking dressing, massage and preparation of perfumes. The list also includes some less obvious arts, namely conjuring, chess, book binding and carpentry. Number 45 on the list is Mlechita-vikalpa, the art of secret writing, advocated in order to help women conceal the details of their liaisons. One of the recommended techniques is to pair letters of the alphabet at random, then substitute each letter in the original message with its partner. If we apply the principle to the Roman alphabet, we could pair letters as follows:
A D H I K M O R S U W Y Z
V X B G J C Q L N E F P T
Then, instead of MEET AT MIDNIGHT, the sender would write CU UZ VZ CGXSGIBZ. This form of secret writing is called a substitution cipher because each letter in the plaintext is substituted for a different letter, thus acting in a complimentary way to the transposition of cipher. In transposition each letter retains its identity but changes its position, where as in substitution each letter change its identity but retains its position.
—Subham—
Tags-Divine Origin , Sanskrit, Tamil , Ancient Languages, wrting system.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருணகிரி நாதர் முதல் திருப்புகழிலேயே தேவியைப் பாடி விடுகிறார் ; கைத்தல நிறைகனி என்று துவங்கும் கணபதி வாழ்த்தில் அவரைப் புகழும் போது உத்தமி புதல்வன் என்று தேவியைப் புகழ்கிறார் இந்தப்பாட்டில் சிவன், உமை, பிள்ளையார் முருகன் ஆகிய எல்லோர் பெயர்களும் வருவது கவனத்துக்குரியது
****
சக்தி பற்றிய பாரதி பாடல்
18. ஓம் சக்தி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ.
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்த ரெல்லாம்,
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர்,சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 1
நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும் என்றே யுலகேழும்
அறைந்திடுவாய் முரசே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு
சொல்லு மவர் தமையே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 2
நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பி விட்டோம்
கும்பிட்டெந் நேரமும் ‘சக்தி’ யென் றாலுனைக்
கும்பிடுவேன் மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில் லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 3
பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்.
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்; தளை
அத்தனையுங் களைந்தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை, காண்,
இன்னு மதே யுரைப்போம், சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 4
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்;
எள்ளத் தனைபொழுதும் பயனின்றி
இரா தென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல், சக்தி வேல்! 5
இந்தப்பாட்டில் தேவியை வழிபட்டால் என்ன என்ன கிடைக்கும் என்ற பட்டியலைப் பாரதியார் தருகிறார் :
இவளுடைய அருட்பார்வை இருந்தால் தீயில் கருகும் பஞ்சு போல நமது துன்பங்கள் பஸ்மாமாகிவிடும்.
அடுத்ததாக, தேவி வழிபாடு நலத்தை நமக்கு நல்கி அல்லது யாவற்றையும் அகற்றிவிடும் என்கிறார் பாரதி .
அடுத்ததாக, நம்மைக் கட்டிப் பிணைக்கும் பாச பந்தங்கள் எல்லாம் விடுபட்டு முக்தி கிடைக்கும் என்கிறார் .
சக்தியைக் கலைவாணி ரூபத்தில் வழிபட்டால் பாரதி போல நம் நாவிலும் சரஸ்வதி தேவி வெள்ளமெனக் கவிதை பாடும் வாக்கு வன்மையைத் தருவாள் –எள்ளத் தனைபொழுதும் பயனின்றி
இரா தென்றன் நாவினிலே வெள்ள மெனப்பொழிவாய் …..
*****
Madurai Temple Vahanas.
குமர குருபர சுவாமிகளின் சகல கலா வல்லி மாலை
குமர குருபர சுவாமிகளும் சகல கலா வல்லி மாலையில் கடைசி பாடலில் இதையே சொல்லுவதைக் காணலாம்
10. Goddess of all Learning! There are myriads of Gods, and celestial beings like the Creator. But is there one to equal you? Grant me this boon that all monarchs, who rule over the earth, bow unto me the moment I sing my poems.
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலுமன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே
6. Goddess of all Learning! You pervade everything: you pervade the Vedas, the five elements, namely, ether, air, water, fire and the earth; you fill the vision and the hearts of Your devotees. Grant me this boon; make me proficient in all the arts whenever I wish. Make me proficient in music, in dance, in learning and in singing sweet poems.
****
கவி பாடும் ஆற்றல் பெற
ஆதிசங்கரரும் கலைமகள் வடிவத்தில் தேவியை வணங்கும் 2 செளந்தர்ய லஹரி பாடல்களில் சரஸ்வதி தேவி நமக்கு நல்ல அறிவினையும் வாக்கு வன்மையையும் கவிபாடும் ஆற்றலையும் தருவாள் என்கிறார் ,
शरज्ज्योत्स्नाशुद्धां शशियुतजटाजूटमकुटां
वरत्रासत्राणस्फटिकघटिकापुस्तककराम् ।
सकृन्न त्वा नत्वा कथमिव सतां संन्निदधते
मधुक्षीरद्राक्षामधुरिमधुरीणाः फणितयः ॥ १५॥
சரஜ்-ஜ்யோத்ஸ்னா ஸுத்தாம் சசியுத-ஜடாஜூட-மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம் i
ஸக்ருன்ன த்வா நத்வா கதமிவ சதாம் ஸன்னிதததே
மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதய: Ii
சரஸ்வதி தேவி சரத்கால சந்திரன் போல ஜொலிக்கிறாள்.இரு கரங்கள் மூலம் பக்தர்களுக்கு வரம் அளிக்கிறாள்; ஏனைய இரு கரங்களில் புஸ்தகத்தையும் ஜபமாலையையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறாள் ; சடை முடியில் மணிமகுடத்துடன் பிறைச்சந்திரன் இருக்கிறது அவளை ஒரு முறை வணங்கினாலும் நல்லோர் நாவிலிருந்து திராட்சை ரசம், பால், தேன் ஆகிய வற்றினும் இனிய சொற்கள் மழைபோலப் பொழிவது என்னே (விந்தை)
****
कवीन्द्राणां चेतःकमलवनबालातपरुचिं
भजन्ते ये सन्तः कतिचिदरुणामेव भवतीम् ।
विरिञ्चिप्रेयस्यास्तरुणतरशृङ्गारलहरी-
गभीराभिर्वाग्भिर्विदधति सतां रञ्जनममी ॥ १६॥
கவீந்த்ராணாம் சேத: கமலவன பாலாதப-ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம் i
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ஷ்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதததிஸதாம் ரஞ்சனமமீ ii
உதய சூரிய கால இளஞ்சிவப்புக் கதிர்களின் நிறத்துடையவளே! தாமரை போன்ற மனம் கொண்ட அருட்கவிகள் உன்னைக் கண்டமாத்திரத்தில் வெள்ளமெனக் கவிதை மழை பொழிகிறார்கள் ; இளமையுடன் தோன்றும் கல்வித் தெய்வமான உன்னைத் தரிசித்த மாத்திரத்தில் சபையோரும் வியக்கும் வண்ணம் அலைகடலென சொற்களை வீசும் சக்தியை அறிஞர்கள் பெறுகிறார்கள்.
(பக்தர்கள் மனம் தாமரைக்கு உவமை; சரஸ்வதி தேவி உதய சூரியனுக்கு உவமை; சூரியனைக் கண்ட தாமரை போல மலரும் கவிஞர் உள்ளம் வெள்ளெமெனைக் கவிதைகளை இயற்றி இலக்கிய வித்தகர் நிறைந்த சபையை அசத்துகின்றனர்.
TO BE CONTINUED……………………….
Tags- சரஸ்வதி தேவி, செளந்தர்ய லஹரி, குமர குருபர சுவாமி, சகல கலா வல்லி மாலை, அருணகிரி நாதர் ,சக்தி , பாரதி பாடல்,தெள்ளு கலைத் தமிழ் வாணி
வடக்கு டான்ஜானியாவில் அமைதியின் உறைவிடம் என்று வர்ணிக்கப்படும் பெரிய நகரான தார் எஸ் சலாமுக்கு வடமேற்கே 350 மைல் தொலைவில் அமைந்துள்ளது கொரோங்கோரோ எரிமலை வாய்!
ஆப்பிரிக்காவின் அற்புதமான பல்வகை வனவிலங்குகளின் இருப்பிடம் இதுவே தான்.
எரிமலையின் கீழே உள்ள செழுமையான புல்வெளிப் பகுதி தான் 30000 மிருகங்களுக்குச் சொர்க்கமாகத் திகழும் இடம்.
ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடியினர் மஸாய் குடியினர் ஆவர். இவர்கள் இந்தப் பகுதியில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தவர்கள். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் இங்கிருந்து வெளியேறினர். இவர்கள்
கோரோங்கோரோவைப் பெரிதும் பூஜித்தனர்.
கடும் பஞ்சகாலத்திலும் கூட அவர்கள் இந்த இடத்தை விட்டு நகரவில்லை. தாகத்தைத் தணித்துக் கொள்ள அங்குள்ள நீரூற்றுகள் அவர்களுக்கு உதவின.
கிழக்கு ஆப்பிரிக்காவின் செயலிழந்த எரிமலைகளுள் கோரோங்கோரோவும் ஒன்று. இரண்டரை கோடி வருடங்களுக்கு முன்னர் இது பொங்கி எழுந்து கொண்டிருந்தது. ஜாம்பியா நதியிலிருந்து தெற்கே 4060 மைல் நீளம் நீண்டிருந்த இந்த எரிமலைப் பகுதி உருவானது.
ஒரு காலத்தில் பூமியின் கீழ் உள்ள டெக்டோனிக் தகடுகளில் இரண்டு அசையவே பெரும் வெடிப்புகள் இரண்டு உருவாயின. அவற்றுள் ஒன்றினால் உருவானது தான் இந்த ஆப்பிரிக்க கொரோங்கோரோ எரிமலை!
அந்தக் காலத்தில் இதன் உச்ச பட்ச உயரம் பிரமிக்க வைக்கும் 15000 அடியாகும். இதன் அடிப்பரப்பு மட்டும் நூறு சதுரமைல்களாகும்.
மற்ற எரிமலைப் பகுதிகள் போலல்லாமல் அதிர்ஷ்டவசமாக இந்தப் பகுதியில் எப்போதும் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. ஆகவே கூட்டம் கூட்டமாக விலங்குகள் இந்தப் பகுதியை நோக்கி வந்தன.
மூங்கே மற்றும் லோன்யோகி (MUNGE AND LONYOKIE)
ஆகிய இரு நதிகள் நீரைக் கொண்டு வந்து இங்கு சேர்க்கின்றன. நீல நிறமுள்ள ஒரு அற்புதமான ஏரி இங்கு உருவாகிவிட்டது.
அரிய இனமான இரண்டு வகை ஃப்ளெமிங்கோ பறவைகள் இங்கு வளர ஆரம்பித்தன. நீர்யானைகளும், யானைகளும் ஏராளமாக இங்கு வசிக்க ஆரம்பித்தன.
இங்கு ஏராளமான செடிவகைகளும் மூலிகைகளும் உள்ளதால் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள அவற்றின் கீழே காண்டாமிருகங்கள் ஓய்வெடுக்கின்றன. இவற்றையே அவை தனது உணவாகவும் எடுத்துக் கொள்கின்றன!
அற்புதமான பெரிய ஏரி, அருகில் பரந்த சமவெளி ஆகியவை இருப்பதால் உற்சாகத்துடன் இங்கு சிங்கங்கள் விளையாடுகின்றன.
எரிமலைப் பகுதியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் அமைந்திருப்பது உலகத்திலேயே இந்த ஒரு இடத்தில் தான் என்பதால்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்
பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்,
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய்.
எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி,
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.
சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.
ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,
யாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்,
இன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள் தருவாள்.
நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு,
அம்பி கையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.
— பாரதியார் பாடல் ; தலைப்பு: தேச முத்துமாரி.
****
ஒளியால் உலகீன்றுயிர் அனைத்தும்
மீன் போற்செவ்வியுறநோக்கி
அளியால் வளர்க்கும் அங்கயற்கண்
அன்னே! கன்னி அன்னமே !
அளியால் இமவான் திருமகளாய்
ஆவியன்ன மயில் பூவை
தெளியா மழலைக்கிளி வளர்த்து
விளையாட்டரும் யா செய்தி என்னே
—பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம்
FISH EYED GODDESS – MEENAAKSHI OF MADURAI.
மீன்கள் இட்ட முட்டைகளைத் தன் பார்வையால் குஞ்சு பொறிப்பது போல நீ ஈன்ற உயிர் அனைத்தையும், உன் அருட் பார்வையால் வளர்க்கிறாய்; அன்னம் போன்றவளே ; மயில் போன்றவளே! மலையத்வஜ பாண்ண்டியன் மகளாய் அவதரித்து பூவைப் பறவைகளையும் கிளிகளையும் வளர்த்து விளையாடும் செயல்தான் என்னே !
கயற் கன்னி = மீனாட்சி; அம் = அழகான ; கயல் = மீன்.
****
Ghanam Krishna Iyer (1790–1854)
ராகம்: ரதிபதிப்ரியா
பாடல்: கனம் கிருஷ்ண ஐயர்
ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்)
சுக ஸ்வரூபிணி மதுர வாணி
சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்)
பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ
பஞ்சமி பரமேஸ்வரி
வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ
வேத வேதாந்த நாத ஸ்வரூபிணி (ஜகத்)
****
அவளின்றி ஓர் அணுவும் அசையாது !
ஆதிசங்கரர், செளந்தர்ய லஹரி
சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதுமபி |
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹரவிரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி || 1 ||
–செளந்தர்யலஹரி , ஆதி சங்கரர் இயற்றியது, முதல் ஸ்லோகம்
ந கலு குசல: ஸ்பந்திதுமபி= அவளின்றி ஓர் அணுவும் அசையாது !
பொருள்
சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் விளக்கம்
தெய்வங்களே நமது குறைகளை நீக்க வேண்டும் . அப்படி நீக்குபவர் தேவர்கள் எனப்படுவர் ; அத்தேவர்களுக்கு ஏற்படும் குறைகளை நீக்கும் தெய்வம் ஸ்ரீ சக்தி எனப்படும். இந்த சக்தியுடன் சேர்ந்து இருப்பதே சிவபெருமானுக்குப் பெருமை. சக்தியுடன் சேராமல் இருந்தால் சிவனும் வெறும் சிவன்தான் . ஆதலால்தான் உலக வழக்கத்திலும் வைஷ்ணவர் முதலிய யாராயினும் எனக்கு எழுந்துவர சக்தி இல்லையே எனக்கூறுவர்.அப்படிச் சொன்னால் , சிவனே என்று இரு சொல்லுவது வழக்கம் .
ஆகையால்தான் ஆதி சங்கரரும் பரமேஸ்வரனுக்கு காரியங்களைச் செய்யவதற்குத் தகுதியை அளிக்கும் பராசக்தி இவளேதான் ; ஆகையால் பிரம்மா, விஷ்ணு முதலியோரும் வணங்கும் ஸ்ரீ சக்தியை நமஸ்கரிக்கவோ துதிக்கவோ புண்யமில்லாதாருக்கு இயலாது. இச்சக்தி இல்லையேல் அசைவதற்கும் இயலாது என்று துதித்திருக்கிறார் .
.
இவ்வுலகில் ஸ்த்ரீ ரூபமாய்த் தெய்வத்தைக் கூறும் மதம் நம் இந்துமதம் ஒன்றுதான். அதனாலேயே நம் மதத்தில் பெண்களுக்கு சிறந்த பெருமை கொடுக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்ல ; தெய்வங்களாகக்கூட பெண்களை பூஜித்து வருகிறோம்.அம்மாதிரி பூஜித்து புடவை, , மஞ்சள் , குங்குமம், புஷ்பம் தாம்பூலம் இவற்றைக்கொடுத்து அலங்கரித்து , அன்னமிட்டு உபசரிப்பதை சுமங்கலிப் பிரார்த்தனை என்று சொல்கிறோம். இப்பூசையை விஷ்ணு மதத்தைச் சேர்ந்தோரும் செய்து வருகிறார்கள். இந்த பூஜையை எதோ ஒரு காரணத்தால் நடத்தாத குடும்பங்களில் நல்ல காரியங்களைத் தொடங்கும்போது இடையூறு ஏற்படுகிறது .அக்குடும்பங்களில் தோன்றும் சந்ததியினருக்கு சந்திரன் , சுக்கிரன் , ராகு ஆகிய கிரஹங்கள் ஜாதகத்தில் தோஷமுள்ளவர்களாகின்றன. மனதும் சுவாச கோஷமும் பாதிக்கப்படுகின்றன. ஆதலாலேயே லலிதா சஹஸ்ர நாமத்தில்
ஓம் சுவாசின்யை நமஹ
ஓம் சுவாசின்யர்ச்சிநப்ரீதாயை நமஹ என்ற நாமங்களால் ஸ்ரீ சக்தியை சுவாசினி ரூபிணியாகவும் சுவாசினியை அர்ச்சிப்பதால் சந்தோஷப்படுகிறவளாயும் கூறப்பட்டுள்ளது இப்படிப் பெண்களைத் தெய்வமாக நினைத்துப் பூஜிப்பது பெரியோர்களுக்கு சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கிறது.
****
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி
கி. வா ஜகந்நாதன் உரை
காப்பு
(கட்டளைக் கலித்துறை)
தாரமர் கொன்றையும் சண்பக
மாலையும் சாத்தும்தில்லை
ஊரர் தம் பாகத் துமைமைந்த
னேஉலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதிஎப்
போதும் என் சிந்தையுள்ளே
கார் அமர் மேனிக் கணபதி
யேநிற்கக் கட்டுரையே.
ASHTA BHUJA VINAYAKAR
(உரை) மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பகமலர் மாலையையும் முறையே அணிந்தருளுகின்ற தில்லையெம்பெருமானுக்கும், அப்பெருமான் வாமபாகத்தில் உறைகின்ற உமாதேவியாருக்கும் திருக்குமரனே, கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதியென்னும் இப்பிரபந்தமானது எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே நிலைபெறும்படி திருவாய்மொழிந் தருளுவாயாக.
தார்-மார்பின் மாலை. கொன்றை சிவபெருமானுக்கும், சண்பகம் அம்பிகைக்கும் உரிய மாலைகள்; சாம்பேயகுஸும ப்ரியா (435) என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று.
நூல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்
திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்
போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென்கடிக்
குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி
என்றன் விழுத்துணையே.
(உரை) உதயமாகின்ற செங்கதிரவனும். மேல் நெற்றியில் அணியும் சிந்துரத் திலகமும், ஞானம் உடையவர்கள் நன்கு மதிக்கின்ற மாணிக்கமும், மாதுள மலரும், தாமரை மலரில் எழுந்தருளிய திருமகள் துதிசெய்கின்ற மின்னற் கொடியும், மெல்லிய வாசனையையுடைய குங்குமக் குழம்பும் ஆகிய பொருள்களைப் போன்றதென்று நூல்கள் கூறுகின்ற திருமேனியையுடைய அபிராமியம்மை என்னுடைய மேன்மையான துணை ஆவாள்.
உதிக்கின்ற செங்கதிர்-பால சூரியன்; கண்கொள்ளும் வடிவினதாதலின் இதனை உவமை கூறினர்; ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ (6) என்பது அம்பிகைக்குரிய ஆயிரந் திருநாமங்களுள் ஒன்று. “வந்துதித்த வெயிலாயிருக்கும் விசும்பில்” (99) என்பர் பின். உச்சித் திலகம்: “சிந்துர வண்ணப் பெண்ணே” (6), “சிந்துர வண்ணத்தினாள்” (8), ‘சிந்துர மேனியள்” (43) என்று பின்னும் கூறுதல் காண்க. திலகம்-மஞ்சாடி என்றும் கூறலாம்.
Posted by London Swaminathan from Facebook on 16-7-2025.
The Lakshmi Narasimha Swamy Temple near Nampally, Telangana, is a unique snake-shaped temple dedicated to Goddess Naga Devatha. It is located on a hillock, accessible via a short climb from the Vemulawada-Karimnagar highway, and is about 150 kilometers from Hyderabad according to a Facebook post. The temple’s design features a large, curled snake structure with a tunnel entrance through the snake’s belly, leading to the shrine. Inside, visitors will find statues depicting the story of Prahalada and Hiranyakasipu, and the idol of Lord Narasimha killing Hiranyakasipu. There are also ancient idols of Naga Devatha, and at the entrance, a statue of Lord Narasimha emerging from a pillar.
****
Lakshmi Narasimha Temple, Nampally Gutta is nestled on a small hillock on the Vemulawada – Karimnagar highway in Telangana. It is a small shrine dedicated to Lord Lakshmi Narasimha, an incarnation of Lord Vishnu. The idol was carved out of the rock around which the temple was built. The visitors have to walk a few hundred steps that lead to the top from nearest the parking area at bottom. The climb is little steep may take up to 15 minutes.
****
The temple is nestled on a small hillock on the Vemulawada – Karimnagar highway. It is a small shrine dedicated to Lord Lakshmi Narasimha, an incarnation of Lord Vishnu. The idol was carved out of the rock around which the temple was built. The visitors have to walk a few hundred steps that lead to the top from nearest the parking area at bottom. The climb is little steep may take up to 15 minutes.
One the way to the Narasimha temple, there is a temple for Naga
Devatha. The temple was built in a model of Snake. Visitors can enter the shrine through the snake’s belly – a long, winding tunnel. There are statues depicting the story of Prahalada and Hiranyakasipu. At the end of the tunnel, the statue of Lord Narasimha killing the demon Hiranyakasipu is present. There are also a few ancient idols of Naga Devatha. At the entrance of the temple, one can find a statue of Lord Narasimha breaking his way out of a pillar.