
Written by london swaminathan
Date: 7th August 2016
Post No. 3042
Time uploaded in London :– 9-14 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
உலகின் முதல் சட்டப் புத்தகம் மனு ஸ்மிருதி! இதில் 2685 ஸ்லோகங்கள் உள்ளன. இவர் பல அதிசய விஷயங்களை ச் சொல்லுகிறார். இது சம்ஸ்கிருத மொழியில் இருந்தாலும் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றது. 1794 ஆம் ஆண்டிலேயே இதை வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவிட்டார். தமிழ் இலக்கியமு ம், கல்வெட்டுகளும் மனு ஸ்மிருதியைப் புகழ்ந்து தள்ளுகின்றன. தேரில் மகனை முறை செய்த சோழனுக்கு மனு நீதிச் சோழன் என்று பெயர்! அவ்வளவு புகழ் வாய்ந்த மனு நீதியைப் படிக்காமல், இடைச் செருகலாகச் சொல்லப்பட்ட சில பாக்களைக் கொண்டு, சிலர் அவதூறு கற்பிக்கின்றனர். தமிழில் இதை முழுதும் வாசித்தால் இதன் அருமை பெருமைகள் புரியும்!
9 பேர் இதற்கு விளக்க உரைகள் எழுதியுள்ளனர் என்றால் இதன் பெருமையையும், ஆழ்ந்த பொருளையும் கூறலும் வேண்டுமோ!
அதிசயம் 1 Woman’s mouth is unpolluted!
பெண்களின் வாய் எப்போது சுத்தமாக இருக்கும் என்கிறார் மனு! ஒரு பறவை, பழத்தைக் கொத்திக் கீழே போட்டால் அது எச்சில் இல்லை; பாலைக் கன்றுக்குட்டி வாய் வைத்துக் குடித்தாலும் அங்கே சுரக்கும் பால் அசுத்தம் இல்லை; ஒரு நாய், தனது வாயை வைத்துக் கடிக்கும் வேட்டை மிருகங்களும் அசுத்தம் இல்லை; அது போல ஒரு பெண்ணின் வாய் எப்போதும் அசுத்தம் அடைவது இல்லை (மனு 5-130)
அதிசயம் 2 Men lived for 400 years!
கிருத யுகத்தில் மனிதன் 400 வயது வரை வாழ்ந்தான். பின்னர் ஒவ்வொரு யுகத்திலும் ஆயுள் ஒவ்வொரு கால் பகுதியை இழந்தது (அதாவது நூறு, நூறு ஆண்டுகளாகக் குறைந்து வந்தது (1-83)
வேறு பல இடங்களில் கலி யுகத்தில் மனிதனின் ஆயுள் 100 என்று மனு பகர்வார்.
திருக்கோவிலூர் ஞானானந்தா, காசி பூதலிங்க சுவாமிகள் முதலானோர் நமது காலத்திலேயே 150 முதல் 300 ஆண்டுகள் வரை வாழ்ந்த அற்புதங்களையும் நினைவு கூறுதல் சாலப் பொருந்தும்.
அதிசயம் 3 Manu lived when Saraswati River flowing for 1000 mile!
ஒரு மனிதனுக்கு பிரம்மஹத்தி விலக (பிராமணனைக் கொன்ற பாவம் விலக), அவன் சரஸ்வதி நதிக் கரையில் நடந்து கொண்டே வேதம் சொல்ல வேண்டும் என்பார் மனு. இதற்கு முன் அவன் 1000 மைல் நடக்க வேண்டும் என்று ஒரு பாட்டில் பகர்வார். ஆக மனு என்பவர் வேத காலத்தில், சரஸ்வதி நதி ஓடிய காலத்தில் இருந்தவர். வேதத்தின் ஒரு சாகை முழுவதையும் மூன்று முறை சொல்லிக் கொண்டு விரத உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும் என்றும் இயம்புகிறார்.!(11-78)
ஆங்கிலம் மட்டும் படித்த அரைவேக்காடுகள் மனுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்று செப்புவர். ஆனால் மனு இக்ஷ்வாகுவுக்கும் முந்தியவர் என்று கண்ணன் பகவத் கீதையில் செப்பியதையும் நினைவு கூறுதல் பொருத்தம்!
அதுமட்டுமல்ல பூமிக்கு சர்க்கரையைக் கொண்டு வந்தவர் இக்ஷ்வாகு என்பதையும் சர்க்கரை சிந்து சமவெளியில் கண்டு பிடிக்கப்பட்டதையும் நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்கு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் நிறுவியுள்ளேன்.
உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் பல மனுக்களின் பெயர்கள் இருப்பதை வேறு ஒரு ஆய்வுக் கட்டுரையில் கூறினேன்.
ஆக மனு என்பவர் மிக, மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்று புலனாகும்.
மங்கட் என்பவர் இவரை கி.மு.5700க்கு முன்னதாக வைக்கிறார்.
சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயெ வறண்டு போயிருந்ததை மஹாபாரதம் மற்றும் பிராமணங்கள் வாயிலாக நாம் அறிவோம்.
இந்திய அரசியல் சானத்துக்கு பார்லிமெண்ட் நேற்று கொண்டு வந்த அரசியல் சட்டத் திருத்தத்தை வைத்து இந்திய அரசியல் சட்டம் நேற்று தோன்றியது என்று சொன்னால் நம்மை எல்லோரும் இகழ்வாரன்றோ; இதுபோல மனு பற்றி வெளிநாட்டினர் தத்துப் பித்து என்று உளறி இருக்கின்றனர். உண்மையில் மனுவும் சரஸ்வதி நதியும் சிந்து சமவெளி நாகரீக காலத்தவை அல்லது அதற்கும் முந்தியவை.
அதிசயம் 4 (Sumukan Mystery)
சுமுகன் என்றொரு மன்னனி பெயரை மனு (7-41) குறிப்பிடுகிறார். இந்திய இலக்கியங்களில் இவர் பெயர் இல்லை. ஆனால் சுமேரியாவில் இவர் பெயர் இருக்கிறது. இது குறித்து முன்னரே விரிவாவக ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். வேறு எந்த இலக்கியமும் செப்பாத ஒரு விஷயத்தை மனு இயம்புவதிலிரந்தே அவரின் பழமை வெளிப்படும்.

அதிசயம் 5 (Soma Herb)
சோம யாகம் பற்றி மனு பல இடங்களில் பேசுகிறார். சோமலதை எனப்படும் மூலிகையின் விற்பனை, அதற்குள்ள தடைக ளையும் அவர் சொல்லுகிறார். சோம யாகத்துக்கான சோமக் கொடி வேத காலத்திலேயே அருகிவிட்டது. வேத கால இறுதியிலேயே இதற்கான மாற்றுத் தாவரங்களைக் கதைகத் துவங்கிவிட்டனர். ஆகவே வேத காலத்தின் ஆரம்பத்திலேயே மனு தர்ம சாத்திரம் தோன்றியிருத்தல் வேண்டும்.
3-87, 211, 257
4-26, 52
9-129, 11-7 to 12, 255
Sale of Soma – 3-158, 180, 10-80
அதிசயம் 6 No Interpolation!!!
வெளி நாட்டுக்காரர்கள் இந்திய இலக்கியங்களை மட்டம் தட்டுவதில் மன்னர்கள். இந்திய இலக்கியங்கள் எல்லாவற்றிலும் இடைச் செருகல் உண்டு என்று சொல்லி இந்துக்கள் மனதில், ஐயப்பாட்டைக் கிளப்பி இந்து மத தையே ஆட்டம் காணச் செய்ய ஆசைப்பட்டவர்கள். ஆங்கிலம் படித்த நம்மூர் அசட்டுப் பிச்சுகளும் அதை அப்படியே நம்பி மேலும் உளறுவதைக் காணலாம்; வாழ்நாளில் 700 கீதை ஸ்லோககளை ஒரு முறை கூடப் படிக்காமல், கீதை பற்றி கேள்வி மட்டும் கேட்பர்! விநோதப் பிறவிகள்!!
இப்படிப்பட்ட வெளிநாட்டினர், மனு தர்ம சாத்திரத்தில் மட்டும் இடைச் செருகல் பற்றிக் கதைப்பதே இல்லை. ரிக்வேதத்தில் கிலம் (பிற்சேர்க்கை), தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் பிற்சேர்க்கை, சங்க இலக்கியத்தில் கலித்தொகை, பரிபாடல் எல்லாம் பிற்சேர்க்கை என்று கதைக்கும் மாக்கள், மனு தர்ம சாத்திரம் பற்றி வாயே திறக்கா!. இதை அப்படியே எடுத்துக் கொண்டால்தான் சூத்திரர்கள் பற்றிய பகுதிகளை எடுத்துக்காட்டி இந்து மதத்தை அழிக்கலாம் என்று நம்பினர் அந்தப் பேதைகள்.
உண்மையில்; சூத்திரருக்கு எதிரான பகுதிகள் சுங்க வம்ச பிராமணர் ஆட்சிக்காலத்தில் இடை யில் செருகப்பட்டவை.
இதற்கு என்ன ஆதாரம்?
கீழ்ஜாதிப் பெண்ணான, வசிட்டரின் மனிவியான அருந்ததியைப் புகழும் மனு, எல்லா ஜாதிகளிலும் உள்ள ரத்தினம் போன்ற பெண்களைக் கல்யாணம் செய்யலாம் என்பார். அது மட்டுமல்ல கீழ் ஜாதியில் படித்தவன் இருந்தால் அவனிடம் போய்க் கற்று அவனுக்கு குருவுக்குரிய மரியாதை செய்க என்கிறார்.
உலகில் பெண்களை மனு புகழ்ந்த மாதிரி எந்த நாட்டு இலக்கியத்திலும் பெண்கள் புகழப்பட்டதை இன்று வரை காண முடியாது! ஆனால் பெண்களுக்கு எதிரான சில ஸ்லோகங்கள் இடைச் செருகலாக சொருகப்பட்டுள்ளன. இத்தகைய முரண்பாடுகளே மனு தர்ம சாத்திரத்தில் இடைச் செருகல் உண்டு எனக்காட்டி நிற்கின்றன. ஆனால் வெளிநாட்டு ‘அறிஞர்கள்’ மனுதர்மத்தில் மட்டும் இடைச் செருகல் பற்றிப் பேசவே இல்லை. இது உலக மஹா அதிசயம்! ராமாயணத்திலும் மஹா பாரதத்திலும் கூட இடைச் செருகல் உண்டு என்று சொல்லும் இந்த “யோக்கியர்கள்” மனுவில் மட்டும் எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக் கொண்டு தாக்குவர்.
திராவிடக் கோமளிகள் திருக்குறளையே முழுதும் படிப்பதில்லை. மனுவையா படிக்கும்?
அதிசயம் 7 (Water Origin of Life on earth)
கடவுள் முதலில் தண்ணீரைப் படைத்தார் என்றும், உயிரினங்களைப் படைக்க எண்ணிய அவர், தண்ணீரில் தனது விந்துவை விட்டார் என்றும் அது பெரிய தங்க முட்டையாகி அதில் பிரம்மா தொன்றினார் என்றும் மனு கூறுவார். ( 1- 8 முதல் 10 வரை).
உலகில் தண்ணீர் தோன்றிய பின்னரே உயிரினம் தோன்றின என்ற விஞ்ஞான உண்மையும், தண்ணீரில் முதல் உயிர் தோன்றியது என்ற விஞ்ஞான உண்மையும், உலகம் முழுதும் கோள வடிவமானது (முட்டை) என்ற விஞ்ஞான உண்மையும் மனுவின் ஸ்லோகங்களில் பொதிந்து கிடப்பதை சொல்லத் தேவை இல்லை.
தொடரும்……………
Please read my earlier posts:–
Mystery of Manu: Rig Veda Mystery No.8, posted on 19 January 2015
The Sugarcane Mystery: Indus Valley and Ikshvaku Dynasty, posted on 19 November 2011
Sanskrit words in Sumerian Culture: Sumukan Mystery, posted on 12 May 2014)
–சுபம்–
You must be logged in to post a comment.