Picture: Indus Valley Seals with Tiger Gods
Written by London Swaminathan
Date: 10 October 2016
Time uploaded in London: 16-22
Post No.3239
Pictures are taken from various sources; thanks.
Contact swami_48@yahoo.com
கருப்புத் தோல் உடைய அனைவரும் திராவிடர்கள் அல்லது இந்நாட்டுப் பூர்வ குடிகள் என்றும் மற்றவர்கள் எல்லோரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் என்றும் முத்திரை குத்தினர் நாடு பிடிக்க வந்த வெள்ளைத்தோலினர்.
இல்லை திராவிடர்களும் வெளிநாட்டி லிருந்துதான் வந்தனர் என்று கால்டுவெல்களும் கனகசபைகளும் பேசினர். ஆனால் இந்திய இலக்கியங்களோ இங்கே வாழும் மக்கள் அனைவரும் இந்த தேசத்தின் பூர்வ குடிகள் என்றும் உலகெங்கும் சென்று நாகரீகத்தை நிலை நாட்டினர் என்றும் ((ரிக் வேதமும், அதர்வண வேதமும், சங்கத் தமிழ் இலக்கியங்களும்)) செப்புகின்றன.
நரபலி, எருமை பலி, களிமண் குடிசை முதலிய பல பழக்க வழக்கங்களை திராவிடர்களின் வழக்கம் என்று மதத்தைப் பரப்பவந்தோர் சித்தரித்துள்ளனர். உண்மை என்னவென்றால் வேத கால, இதிஹாச-புராண கால, சிந்து சமவெளி கால, சங்கத்தமிழ் காலங்களிலேயே மலைஜாதி மக்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. சிறிய எண்ணிக்கையில் இருந்தவர்களுடைய தனிப்பட்ட வாழ்வு யாரையும் பாதிக்கவில்லை. ஆனால் வெளிநாட்டினர் வந்து, அவர்கள் பகுதிக்குள் நுழைந்தவுடன், காம சம்பந்தமான நோய்களும், அமைதி யின்மையும் பரவின.
உலகில் மூட நம்பிக்கைகள் இல்லாத சமுதாயமே கிடையாது. இன்றும் கூட மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள், டெலிவிஷன் கலைஞர்கள், திரைப்பட நடிகர் நடிகையர், அரசியல்வாதிகள்— சட்டையின் நிறம், புறப்படும் நேரம், நாள் பற்றி பலவிதமான நம்பிக்கைகள்– வைத்திருப்பதைப் பத்திரிக்கை பேட்டிகளில் படிக்கலாம். ஆனால் கருணாநிதியாரின் ‘மஞ்சள் துண்டு’ போல இதற்குப் பல விளக்கங்கள் கொடுத்து மழுப்புவர்.
இதோ திராவிடர்களின் பெயரில், வெளிநாட்டினர், பட்டியலிட்ட மூட நம்பிக்கைகள்:–
பழங்குடி மக்களின் ‘புலித்தேவன்’
பழங்குடி இனத்தவர் தாங்கள் புலிகளாகவோ பாம்புகளாகவோ மாறமுடியும் என்று நம்புகின்றனர். ஆன்மாவில் பாதி மட்டும் வெளியே சென்று மிருக உரு எடுத்து, எதிரியைக் கொல்ல முடியும் அல்லது ஆடு, மாடுகளைச் சாப்பிட்டு பசியாற்றிக்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். இப்படி பாதி உயிர் வெளியே போகையில் சோம்பேறியாய் விடுவர் அல்லது வேலையே செய்யாமல் சோர்ந்துவிடுவர் என்பது அவர்கள் நம்பிக்கை. (இப்படிப் பல புலித் தேவன் முத்திரைகள் சிந்து வெளியில் கிடைக்கின்றன).
பெண் வந்தால் அபசகுனம்
கோண்ட் இனத்தினர் வேட்டைக்குப் புறப்படும்போது எதிரில் பெண்கள் வந்தால் அபசகுனம். உடனே வீட்டிற்குப் போய்விட்டு, எல்லாப் பெண்களையும் ம றைந்திருக்கும்படி சத்தம் கொடுத்துவிட்டு வெளியே வருவர்.
(இதை எழுதும்போது எனக்கு என்னுடைய சென்னை புரசவாக்கம் சித்தி நாள் தோறும் செய்யும் செயல் நினைவுக்கு வருகிறது. எனது சித்தப்பா பக்ககா தி.மு.க. சாமி, பூமி நம்பிக்கை கிடையாது. ஆனால் சித்தியின் பூஜை வழிபாடுகளைத் தடுக்க மாட்டார். தினமும் அலுவலகம் செல்லும்போது மட்டும் மனைவியின் சொல்லுக்கு, ‘மந்திரத்துக்குக் கட்டுண்ட பாம்பு போல’ கட்டுப்படுவார். முத லில் சித்தி வாசல் வரை சென்று இரு புறமும் எட்டிப்பார்ப்பார். எந்த அபசகுனமும் இல்லை என்று தெரிந்தவுடன் கையால் சைகை தருவார். உடனே, தயாராக வாசலில் நின்றுகொண்டிருக்கும் சித்தப்பா புறப்படுவார். நாங்கள் மதுரையிலிருந்து சென்று அவர் வீட்டில் தங்கும் போதெல்லாம் இதை வேடிக்கை பார்ப்போம். இந்து மத சகுன சாஸ்திரப்படி, விதவை, ஒரு பிராமணன் ஆகியோர் வந்தால் அபசகுனம்)
கோண்டு இனப் பெண் மாதவிலக்கு காலத்தில் அந்த வீட்டிலுள்ள யாரும் வேட்டைக்குப் போக மாட்டார்கள். அப்படிப்போனால் ஒரு மிருகமும் சிக்காது என்பது அவர்களுடைய (மூட) நம்பிக்கை!
காகா நண்பன்!
கோண்ட் இன மக்கள் காகத்தைக் கொல்ல மாட்டார்கள். காகத்தைக் கொன்றால் ஒரு நண்பனைக் கொன்றதற்குச் சமம்! இதற்கு ஒரு கதை சொல்லுவார்கள். கடவுள் உலகத்தைப் படைத்த காலத்தில் ஒர் வயதான ஆணும் பெண்ணும் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளுடன் வசித்துவந்தனர். கொள்ளை நோய் வந்து ஒருவர் ஒருவர் பின் ஒருவராக ஐந்து பிள்ளைகளும் இறந்தார்கள். பெற்றோர்களோ மிகவும் வயதானவர்கள்; வறியவர்களும் கூட. ஆகையால் சடலங்களை எடுத்துச் சென்று தகனம் செய்ய இயலவில்லை. சடலங்களை வீட்டிற்கு அருகிலேயே தூக்கி எறிந்துவிட்டனர்.
ஒரு நாள் இரவில் அவர்களுடைய கனவில் விஷ்ணு தோன்றினார். ஒரு காகத்தைப் படைப்பதாகவும், அது இறந்தவர்களின் சடலத்தைத் தின்றுவிடும் என்றும் கனவில் சொன்னார். ஆகையால் காகங்கள் நண்பர்கள்.
ஏழாம் நம்பர் ஆகாது!
குறவர்கள் திருடப் போவதற்கு முன்னால் சகுனம் பார்ப்பார்கள். ஏழு என்ற எண் அவர்களுக்குத் துரதிருஷ்டமானது. ஆகையால் ஏழு பேராகச் செல்லமாட்டார்கள். அப்படி ஏழு பேராகச் செல்ல நேர்ந்தால், கன்னம் வைக்கப் பயன்படும் கருவியை ஒரு ஆளாகக் கருதி எட்டு பேர் என்று சொல்லிக் கொள்வார்கள். போகும் வழியில் விதவை, பால் பானை, மாடு கத்துதல் ஆகியாவற்றை அப சகுனமாக கருதுவர். திருமணமாகி வந்தவன், சிறையிலிருந்து வந்தவன் ஆகியோர் திருட்டுக் கும்பலில் இருக்கக்கூடாதாம்.
குறவர் இனப் பெண்கள் நீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் வித்தை முதலியன தெரிந்தவர்கள். கணவன்மார்கள் நீண்ட நாட்களுக்குத் திரும்பிவராவிடில் கெட்ட சகுனம் ஆம். உடனே ஒரு விளக்குமாற்றுக் குச்சியை எடுத்து , அதில் மேலும் பல குச்சிகளைக் கட்டி எண்ணையில் தோய்த்து தண்ணீரில் மிதக்க விடுவர். அது தண்ணீரில் மிதந்தால் கவலைப்படத் தேவை இல்லை. மூழ்கிவிட்டால் கணவனைத் தேடி மனைவி புறப்பட்டுவிடுவாள்.
தமிழர்களின் தும்மல் நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் எழுதிய குறள்கள், பல்லி சொல்லுக்குப் பயப்படுதல், காட்டுப் பன்றி கேட்ட பல்லி சொல்– பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள் ஆகியவற்றை முன்னரே பட்டியலிட்டுவிட்டேன். எனது பழைய கட்டுரைகளைப் படித்தறிக.
Read also my articles:
சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்,Research Article No.1811; Date: 19th April 2015
புதையல் கிடைக்க, காதலில் வெற்றி பெற சோதிடம்!!, Research Article No.1669; Dated 23 February 2015.
டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும், ஏப்ரல் 15, 2012
தமிழர்களின் சோதிட நம்பிக்கை
Can Birds Predict Your Future? (Posted on 22 July 2012)
Beware of Wagtail Birds: Prediction by Varahamihira (19 February 2015)
How to find water in the Desert? Varahamihira on Water Divination (Posted on 16 February 2015)
Tamil Astrology: Rope Trick for Predictions (Posed on 27 February 2013)
Two Tamil Articles posted on 12 April 2012 on Greek Delphi Oracles and Tamils
Birds and Gods.
—SUBHAM–
You must be logged in to post a comment.