ஜராதுஷ்ட்ரர் வாழ்வில் நடந்த அற்புதங்களும் கந்த சஷ்டிக் கவசமும் (Post No.10508)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,508

Date uploaded in London – –   31 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜராதுஷ்ட்ரர் (ZOROASTER= ZARA THUSHTRA) யார்?

பார்ஸி (PARSI= PARSEE) மத ஸ்தாபகர் . அவர் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியான ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானுக்கு குடியேறி ஒரு புது மதத்தை ஸ்தாபித்தார். அவர்களுக்கு முக்கிய வழிபாடு அக்னீ வளர்த்தல். (FIRE WORSHIP) எப்படி வேத கால பிராமணர்கள் வீட்டில் மூன்று வகை அணையாத அக்னீ இருந்ததோ அதஹி போல இவர்கள் எங்கு சென்றாலும் தீயுடன் செல்வர். அவர்களுடைய மதச் சின்னமே அக்கினி (FIRE ALTAR) குண்டம்தான்.

வேத கால சம்ஸ்க்ருதம் அறிந்தவர்களுக்கு பார்சி மத சொற்கள் அனைத்திலும் சம்ஸ்க்ருதம் கலந்திருப்பதைக் காணலாம்.

வெள்ளைக்காரர்கள் பார்ஸி மதம் அல்லது ஜொராஷ்ட்ரியன் மதம்  பற்றி எழுதிய எல்லாம் ஆயிரம் குழப்பம் உடையவை. அவர் பெயரில் குழப்பம், அவர் பிறந்த இடத்தில் குழப்பம்; அவர் சொன்ன சொற்களை வியாக்கியானம் செய்வதில் குழப்பம். அவர் வாழ்ந்த காலம் பற்றிக் குழப்பம். ஆயினும் வேதம் படித்தவர்கள் பல குழப்பங்களை எளிதில் தீர்க்கிறார்கள் ‘ போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்ற ப ழ  மொழிக்கு ஏற்ப கிரேக்கர்கள் பெயர்களிலும் அவர் வாழ்ந்த காலத்திலும் மகா குழப்பம் செய்தனர். ஜரா துஷ்ட்ரா என்பதை ஜொராஸ்டர் என்று மாற்றினார்கள். ஒரு கிரேக்கர், இவர் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று எழுதினார் . உடனே அத்தனை பேரும் அதைத் திருப்பி எழுதினர் . பிறந்த இடத்தையும் அவர்கள் குழப்பினர் . பிளினி (Pliny)  என்பவர் இரண்டு ஜொராஸ்டர் உண்டு என்று ஒரு வெடி குண்டையும் வீசினார்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் , ஜராதுஷ்ட்ரர் பற்றிச் சொன்ன உண்மைகளை எவரும் கண்டுகொள்ள வில்லை. நான் முன்னரே எழுதிய விஷயங்களை இணைப்பில் காண்க

இன்று பார்ஸி சமய மக்கள், குஜராத்திலும் பம்பாயிலும் வசிக்கக் காரணமே அவர்களின் மூதாதையர்கள் செளராஷ்டிர தேசத்தில் இருந்து சென்றதே . முஸ்லீம்கள் அவர்களை படுகொலை செய்தவுடன் அவர்கள் செளராஷ்டிரத்துக்கே திரும்பி வந்தனர். இன்று ஈரான் எனப்படும் பாரசீகம் (IRAN= PERSIA) வெறிபிடித்த முஸ்லீம்களலின் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஈரான் என்ற சொல்லே ஆர்யன் (ARYAN = IRAN) என்பதிலிருந்து வந்ததுதான்.

SOURASHTRA= ZORASHTRA

ஜராதுஷ்ட்ரா  என்றால் ஸெளராஷ்ட்ர என்பது காஞ்சி சுவாமிகள் சொன்னது ‘

ஜராத் + உஷ்ட்ர = ஹர + உஷ்ட்ர = ஒட்டகத்தை விரும்புவோர் LOVER OR RAISER OF CAMELS , வளர்ப்போர் என்பது வெள்ளக்கார மொழி ஆராய்சசியாளர் சொல்லுவது.. இது இரண்டும் ஸம்ஸ்க்ருதம் தான் . ஆகையால் வேத காலத்துக்கும் பாரசீக மதத்துக்கும் உள்ள தொடர்பை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

அவர்களுடைய மத நூலுக்கு பெயர் செண்ட் அவஸ்த்தா ZEND AVESTA.

இதில் செண்ட் என்பது சந்தஸ் ZEND = CHANDAS ( வேத இலக்கணம் உடைய கவிதை) என்பதன் மருவு என்பது காஞ்சி சுவாமிகள் சொன்னது.

அவஸ்தா AVESTA என்பது பழங்க கால கிழக்கு ஈரானில் (பாரசீகரத்தில்) பேசப்பட்ட மொழி.

அவர்கள் பாடல்களை காதா GATHA  என்பர்; இதுவும் வேத காலம் முதல் இன்றுவரை புழக்கத்தில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொல்.

பார்சி மதத்தினரின் மற்றோரு சொல் யாஸ்ன ; இது யக்ஞ (YASNA= YAGNA)  என்பதன் திரிபு.

அவர்கள் வணங்கும் பெரிய கடவுள் அசுர மஸ்தா AZURA MAZDA (MAHAT ASURA= BIG AND POWERFUL= SUPREME) .

அசுர என்பது சக்தி வாய்ந்த பலமான என்ற பொருளில் பயன்படும் ஸம்ஸ்க்ருதச் சொல். பல வேத கால கடவூரின் அடை மொழி அசுர ; பின்னர் இதை மற்ற எதிரிகளுக்கு பயன்படுத்தினர். அஸீரிய (AYYRIAN = ASURA DYNASTY) நாகரீகம் அசுரர் என்ற பெயரை பெருமையுடன் பயன்படுத்தியது. இன்றும் நாம் ஒரு கார் CAR  வெகு வேகத்தில் வந்தால் அது அசுர வேகத்தில் வந்தது என்கிறோம் .

அசுரர் என்பதை பார்சீ மக்களும் எதிரி/ கெட்டவன் என்றும் பயன்படுத்தினர் (E.G DORA ASURAN= ENEMY OF ZARA THUSHTRA).

ZORASHTRIAN MIRACLES AND KRISHNA MIRACLES AND TAMIL MIRACLES

இப்போது ஜராதுஷ்டிரர் வாழ்வில் நடந்த சுவை மிகு அற்புதங்களை தமிழ் அற்புதங்களுடன் ஒப்பிட்டுக் காண்போம்..

கிருஷ்ண பரமாத்மாவைக் கொல்ல வந்த அத்தனை எதிரிகளுக்கும் ஒவ்வொரு அசுரன் பெயர் கொடுத்தோம். அதே போல ஒட்டகம் வளர்த்த ஜராத் உஷ்ட்ரர் – ஐக் கொல்லவந்தவனும் ஒரு அசுரன்தான் . அவன் செய்த செயல்கள் கந்த சஷ்டிக் கவசத்தில் வருவது வியப்புக்குரியதாகும்

ஒட்டகம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் வருகிறது; இது உஷ்டிர என்ற (USHTRA= OTTAKA IN TAMIL) ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மருவு.

XXX

அற்புதம் 1

குழந்தைகள் பிறந்தவுடன் அழும் ; இதை எல்லா ஆஸ்பத்திரிகளில் இன்றும் காணலாம் . ஆனால் ஜராதுஷ்ட்ரர் பிறந்தவுடன் சிரித்தாராம் . அவர் பிறந்தவுடன் இயற்கையில் உள்ள செடி, கோடி, மரங்கள் ஆனந்தம் அடைந்தன அவருடைய தலை மிகவும் அதிர்ந்து ஆடியதால் யாரும் அவர் தலையைப் பிடிக்க முடியவில்லை என்று பிளினி ( PLINY 23-79 CE) கி.பி. 23- 79 — இயற்கை வரலாறு NATURAL HISTORY  என்னும் நூலில் எழுதியுள்ளார்.

XXX

அற்புதம் 2

துராஸுரன் என்ற மந்திரவாதியும் அவனுடைய அடியாட்களும் ஜராதுஷ்டிரரைக் கொல்ல  பல தாக்குதல்களை நடத்தினர்.இதை கிருஷ்ணர் மீது கம்சன் நடத்த்திய தாக்குதலுடன் ஒப்பிடலாம்

தராசுரன் அல்லது துர் அசுரன் (DORASURAN= DUR+ ASURA)  என்பதில் வரும் அசுரன் என்ற சொல் முக்கியமானது . அவனுடைய அடியாட்கள், குழந் தையாக இருந்த ஜராதுஷ்டிரரை மாடுகளுக்கு இடையே  மிதிபட்டு சாகட்டும் என்பதற்காக தூக்கி எறிந்தார்கள் . ஆனால் பலம் வாய்ந்த ஒரு பசுமாடு அந்தக் குழந்தைக்கு பாதுகாப்பாக அதன்மீதுகுடை போல நின்றது. பின்னர் குழந்தையைத் த்தேடி வந்த தாய் அதை மீட்டுச் சென்றாள்

இதைக் கன்ற்றால் விளா எறிந்த கிருஷ்ணனின் லீலையுடன் ஒப்பிடலாம்

ஜராதுஷ்ட்ரரின் தாயார் பெயர் பால்காரி; ஸம்ஸ்க்ருதத்தில் துக்தோவா. அவரை யசோதாவுடன் ஒப்பிடலாம்

XXX

அற்புதம் 3

பின்னர் தராசுரன் ஆட்கள், ஒரு ஓநாய் வசிக்கும் இடத்தில் இருந்த குட்டி ஓநாய்களைக் கொன்றுவிட்டு அதன் நடுவே குழந்தை ஜராதுஷ்ட்ரனை வைத்தனர். ஒநாய்க் குட்டிகளின் பெற்றோர்கள் திரும்பிவந்தவுடன் கோபத்தோடு குழந்தையை விழுங்க வாயைத் திறந்த பொழுது அவை அப்படியே அசைக்க முடியாதபடி ஸ்தம்பித்தது PARALYSED. பின்னர் அந்தப் பகுதியில் வந்த பெண் ஆடுகள் குழந்தையைத் தூக்கிச் சென்றன துக்தோவா தன மகனை மீட்டாள் .

XXXXX

அற்புதம் 4

கடைசி தாக்குதலில் துராசுரனே வருகிறான். ஜராதுஷ்ட்ரர் தூங்கிக்கொண்டு இருந்த படுக்கை அறைக்குள் குழந்தையைக் கொல்வதற்காக வேல் கம்புடன் நுழைகிறான். அவன் அதைத் தூக்கிய அடுத்த நொடியில் அவன் கைகள் பக்கவாதத்தால் தாக்குண்டு அசையாமல் நின்றன. ; கையில் இருந்த வேல்கம்பு  விழுந்து சப்தம் உண்டாக்கவே பயந்து ஓடிவிட்டான்.

அஸுர = சக்தி வாய்ந்த

மஸ்தா = மஹதா / பெரிய  MAHAT= MAZDA; ASURA= STRONG, BOLD

இருபது வயதான போது ஜராதுஷ்ட்ரர் ஒரு குகைக்குள் தியானம் செய்யச் சென்றார் . இது அவர் ஒரு இந்து என்பதைக் காட்டுகிறது . அங்கு ஒளி மிகுந்த ‘ஞான ஒளி’ அசுர மாஸ்தாவைக் கண்டார். அப்போது அவருக்கு வயது 30. மொத்தம் ஏழு முறை இப்படி தரிசனம் கிடைத்தது அவரிடமிருந்து ஆறு செய்திகள் கிடைத்தன  இதை அமேஷா ஸ்பென்ட என்பர்; இதன் மொழி பெயர்ப்பு  அமரத்துவம் மிக்க நன்மொழிகள்

அமேஷா என்பது அமிர்த என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல் போலும்.

AMESHA = AMIRTA IN TAMIL AMUTHA

அவருடைய முதல் சீடரின் பெயர் மைத்யோமாவோங்க

வைத்ய மஹாதுங்க அல்லது வித்யா மகத் துங்க = அறிவின் சிகரம் .

அவர்கள் இருவரும் கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்தனர் எவரும் கேட்கவில்லை

அவர்களுடைய நல்லதிர்ஷ்டம் ஆப்கானிஸ்தானை ஆண்ட கவி விஸ்டாஸ்பா (SVASTI ASVA) அவர்களை அழைத்து உபதேச மொழிகளை    கேட்டான். மூன்று நாட்களுக்கு ஜராதுஷ்ட்ரர் உபதேசம் செய்தார் ; அரசவையில் இருந்த பொறாமைக்காரர்கள் ஒரு சதி செய்தனர் அவர்கள் எலும்பு, மனித முடி/ரோமம், மாமிசம், அழுகிய நகம்  ஆகியவற்றை ஜராதுஷ்ட்ரர் தங்கியிருந்த சத்திரத்தின் அறைக்குள் ரகசியமாக வைத்தனர் . வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று சத்திரக் காவலனை மிரட்டிவிட்டுச் சென்றனர் . பின்னர் அரசனிடம் சென்று, ஜராதுஷ்ட்ரர்  ஒரு ‘மந்திரவாதி’ ‘சூனியக்காரன்’ என்று குற்றம் சாட்டி சத்திர அறைக்குள் இருந்த பில்லி சூன்ய பொருட்களைக் காட்டினார்கள் . உடனே மன்னன் வெகுண்டு எழுந்து,  ஜராதுஷ்ட்ரரை பாதாள சிறைக்குள் அடைக்க உத்தரவிட்டான். அப்போது மன்னனின் அபிமான குதிரை அஸ்ப சீஹா ASVA SEEHA  , தரையில் விழுந்து வலி தாங்க முடியாமல் அலறியது. அதன் நான்கு கால்களும் வயிற்றை நோக்கி வளைந்தது. யார் வந்தும் அதை மீட்க முடியவில்லை. அப் போது கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக திருஞான சம்பந்தர் மாற்றியது போல ஒரு அற்புதம் நடந்தது

அதைப் பார்ப்பதற்கு முன்னர் ஒரு அற்புதமான ஒற்றுமையைக் கண்டேன். பில்லி சூனியம் வைப்போர் என்ன செய்வதாக தேவராய சுவாமிகள் கந்த சஷ்டிக் கவசத்தில் சொன்னாரோ அது ஜராதுஷ்ட்ரர் காலத்தில் ஆப்கானிஸ்தானத்தில் நடந்தது எனக்கு வியப்பைத் தந்தது

இதோ கந்த சஷ்டி வரிகள்

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

 தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட

ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவைகளுடனே பல கலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட

குதிரை அற்புதத்தை அடுத்த கட்டுரையில் காண்போம்

அஸ்வ என்ற சஸ்க்ருதச் சொல்லின் பொருள் குதிரை வ= ப (வங்கம் = பெங்கால்)

ASPA= ASVA

முதலில் அஸ்வ பின்னர் அதன் பெயர் வரும். இது ஜராதுஷ்ட்ரர்  கதை முழுதும் வருகிறது. அவருடைய தந்தை குடும்பப் பெயரில் வெள்ளைக் குதிரை உண்டு. ஸ்வேத அஸ்வ SPITASVA .

SVETA ASVA = SPITASPA

ஜொராஸ்டர் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஜ…

Tagged with ஜொராஸ்டர். அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும் (Post … https://tamilandvedas.com/…


அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் …

https://tamilandvedas.com › அல…

·

30 May 2018 — Written by London Swaminathan. Date: 30 May 2018. Time uploaded in London – 22-18. Post No. 5061. Pictures shown here are taken from various …

சடலங்களை உண்ண கழுகுகள் தேவை !! (Post No.7539)

https://tamilandvedas.com › சடலங…

· Translate this page

5 Feb 2020 — நான் தினமணிக் கதிரில் 1992ம் ஆண்டு டிசம்பரில் பார்சி மத மக்கள், இறந்த பின்னர் ..

Zoroaster | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › zoroaster

Posts about Zoroaster written by Tamil and Vedas. … We see some other Vedic concepts in the teachings of Zarathushtra (Zoroaster).

You’ve visited this page 2 times. Last visit: 23/05/21


MORE ABOUT ZOROASTER FROM RIG VEDA, VARAHA …

https://tamilandvedas.com › 2020/08/01 › more-about-…

1 Aug 2020 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com MORE ABOUT ZOROASTER FROM RIG VEDA, VARAHA MIHIRA AND KANCHI …

Who was Zoroaster? Why Did Parsees ‘Return’ to Gujarat?

https://tamilandvedas.files.wordpress.com › 2013/12

PDF

25 Dec 2013 — Kanchi Paramacharya (Shankaracharya). Swamikal said in one of his talks that Zoroaster was from Saurashtra. The reason for Parsees coming back …

8 pages


Parsee | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › parsee

19 Apr 2017 — Why did Parses Return to India, I gave 20 points listed by Dattopant Thengadi … The reason for Parsees coming back to Gujarat after the ..

தொடரும்

Tags–ஜராதுஷ்ட்ரர், ஜொராஸ்டர், பார்சி, பார்ஸி  அற்புதம், பில்லி சூனியம், செண்ட் அவஸ்தா

அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும் (Post 5061)

Written by London Swaminathan 

 

Date: 30 May 2018

 

Time uploaded in London – 22-18

 

Post No. 5061

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கடந்த சில கட்டுரைகளில் ரிக் வேத, பாகவத, புத்தமத, சமண மத நூல்களில் உள்ள ‘தண்ணீர் மேல் நடக்கும்’ அதிசயங்களைப் பார்த்தோம். இதே போல பார்ஸி மதத்திலும் ஒரு கதை உண்டு. அதைவிட அதிசயம் என்ன வென்றால் மாமன்னன் அலெக்ஸாண்டரையும் அதிசய புருஷர் ஆக்கிவிட்டனர் கிரேக்க எழுத்தாளர்கள். அலெக்ஸாண்டரும் இப்படிச் சில அதிசயங்கள் செய்ததாக கதை எழுதி (கட்டி) விட்டனர்.

முதலில் பாரஸீக நாட்டில் தோன்றிய பார்ஸி மதத் தலைவர் ஜொராஸ்டர் (ஜராதுஷ்ட்ரா) பற்றிக் காண்போம்.

ஜொராஸ்டர், தனது குடும்பத்துடன் அராக்ஸஸ் நதிக்கரைக்கு வந்தார். வெள்ளத்தில் இறங்கி துணிமணிகள் நனைந்து போனால் எல்லோரும் பார்த்து சிரிப்பாளர்களே என்று தயங்கினார். பின்னர் நீர் மீது நடந்து சென்று அக்கரைக்குப் போய்விட்டார். ஆனால் இக்கதை பன்னிரெண்டாம்  நூற்றாண்டில்தான எழுதப்பட்டது.

 

இதற்கு முன்னுள்ள கீழே குறிப்பிடப்படும் எல்லா கிரேக்க எழுத்தாளர்களும் முதல் இரண்டு நூற்றாண்டுகளை சேர்ந்தவர்களே.

அர்ரியன் என்பவர் எழுதிய வாழ்க்கைச் சரிதத்தில் வாடைக் காற்று வீசும்போது மட்டுமே நீர்வழியைக் கடக்க இயலும் ஆனால் அலெக்ஸாண்டருக்காக திடீரென தென்றல் காற்று  வீசி வழிவிட்டது. இதற்கு தெய்வத் தலையீடே காரணம் என்பார்.

 

ப்ளூடார்ச் என்பாரும் இந்த  வரலாற்றை மீனேந்த்திரன் (மெனாண்டர்) சொல்வதாக எழுதியுள்ளார்

 

சீஸரின் யவனக் கடல் சாகசத்தை விளக்கும்போது அப்பியன் என்ற எழுத்தாளரும் இதைக் குறிப்பிடுவார்.

 

அலெக்ஸாண்டரின் படைகள் நாள் முழுதும் நதிகளைக் கடந்த போதிலும் தண்ணீர் இடுப்பளவே இருந்ததாக ஸ்ட்றாபோ கூறுகிறார்.

 

காலிஸ்தெனிஸ் என்பவர் இவர்கள் எல்லோருக்கும் ஒரு அடி மேல் சென்றுவிட்டார். அலெக்ஸாண்டருக்காக் கடல் திறந்து வழி ஏற்பட்டதாவும், அத்தோடு நில்லாமல் கடல் அலைகள் மேலும் கீழும் எழுந்து அலெக்ஸாண்டருக்கு வணக்கம் செலுத்தியதாகவும்  கூறுகிறார். இது தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது போலத் தற்குறிப்பு ஏற்ற அணியாகும்; இயற்கையில் நாள்தோறும்  நடக்கும் நிகச்சிகளை புலவர்கள் இப்படிப் பயன்படுத்துவர். நாம் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொள்ள  வேண்டும்.

ரோமானிய வரலாற்று எழுத்தாளர் ஜோஸபஸ்,  அலெக்ஸாண்டரின் அற்புதத்தை விவரித்து விட்டு அது மோஸஸ் தெய்வீக சக்தியால் செங்கடலைக் கடந்தது போல என்று எழுதியுள்ளார்

 

இறுதியாக அலெக்ஸாண்டர் பற்றி இன்னும் ஒரு சுவையான செய்தியும் உண்டு.

அலெக்ஸாண்டர் படை எடுப்புக்கு முன்னர் , மாறு வேஷத்தில் பாபிலோனில், டேரியஸ் நடத்திய ராஜ விருந்துக்குச் சென்றாராம். அங்கிருந்த ஒரு படைத் தளபதி அவரை அடையாளம் கண்டு மன்னர் டேரியஸிடம் சொன்னவுடன் அலெக்ஸாண்டர்  தப்பித்தோம் பிழைத்தோம்  என்று சிட்டாகப் பறந்து வெளியேறினார். அவரது அதிர்ஷ்டம், அப்போது வாசலில் ஒரு குதிரை நின்று கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் ஒருவருடைய தீவட்டியைப் பிடுங்கிக் கொண்டு வெளிச்சம் போட்டுக்கொண்டே சென்றாராம்.

அலெக்ஸாண்டரின் குதிரை ஒரு ஆற்றைக் கடந்து சென்று எதிர்க் கரையில் முன்காலை வைக்கவும், நதி உருகத் துவங்கியதாகவும் இதனால் குதிரையின் பின்கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதாகவும் அலெக்ஸாண்டர் ஒரே தாவாகத் தாவி தரையில் குதித்துத் தப்பிவிட்டதாகவும் கதைகள் சொல்லும்.

 

-சுபம்–

 

 

ரஹசியம்! பரம ரஹசியம்! எல்லா மதத்திலும் உண்டு! (Post No.4300)

Written by London Swaminathan

 

Date:14 October 2017

 

Time uploaded in London- 7-43 am

 

 

Post No. 4300

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பாரசீக நாட்டில் (ஈரான்) ஜொராஸ்டர் (Zoroaster or Zarathusthra) என்பவர் பின்பற்றிய மதம், வேத கால சமயம் போன்றது. அவர்களும் தீயை (யாக, யக்ஞம்) வணங்கினர். ஆயினும் சில கருத்துக்களில் மாறுபட்டார். ஒற்றுமை அம்சங்களே அதிகம்; அதில் ஒன்று மந்திரங்களை எல்லோருக்கும் கற்றுத் தராதே என்பதாகும். இது எல்லா சமயங்களிலும் உள்ள உண்மை.

 

நான் தினமும் படிக்கும் விநாயகர் கவசத்தில் கடைசியில் வரும் வரிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக உளது என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது!

அன்பு உறுதி ஆசாரம் உடையார்க்குக்கிக்

கவசத்தை அறைக அல்லார்க்கு

என்பெறினும் உரையற்க எனக்கிளந்து

மரீசி தனது இருக்கையுற்றான்

என்று விநாயக கவசம் முடியும். அதாவது அன்பு, உறுதி, ஆசாரம் ஆகியன எவருக்கு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் இக்கவசத்தைச் சொல்லிக்கொடு; மற்றவர்கள் என்ன கொடுத்தாலும், அவர்களுக்குச் சொல்லி விடாதே என்று கூறிவிட்டு மரீசி முனிவர் அவருடைய இருப்பிடத்தை அடைந்தார் என்பதாகும்.

 

புத்தரும் ஒரு சொற்பொழிவில், எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்; அவைகள் எல்லாவற்றையும் நான் சொல்லித் தரப்போவதில்லை என்று கூறுகிறார். அதிக விடயங்களைச் சொல்லச் சொல்ல குழப்பம் அதிகரிக்கும் என்பது அவருக்கும் தெரியும்.

 

ஜொராஸ்டர் சொல்லிய கருத்துக்கள் ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) என்ற புனித நூலில் உள்ளது. சந்தஸ் என்ற சம்ஸ்கிருதச் சொல்லே ஜெண்ட் (ZEND) என்று திரிந்ததாக ஆன்றோர் கூறுவர். இந்தப் புனித நூலில் மூன்று இடங்களில் இந்த மந்திரங்களை யாருக்குச் சொல்லித் தரவேண்டும்,எப்படி சொல்லித் தர வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

 

தந்தை ஒருவர் மகனுக்குக் கற்பிக்கலாம்; அல்லது சஹோதரன் ஒருவன் மற்ற சஹோதரனுக்கு உபதேசிக்கலாம்; அல்லது அதர்வண் (புரோஹிதர்) தனது சீடனுக்குச் சொல்லித் தரலாம் என்று ஜொராஸ்டருக்கு அஹுரமஸ்தா (AHURA MAZDA அசுர மஸ்தா= பெரிய கடவுள்) சொன்னதாக ஆறாவது அமேஷா ஸ்பெண்டாவில் (Sixth Amesha Spenta) வருகிறது. இதே போல யாஸ்ட் 14, 46 (Yasht 14, 46) ஆகியவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் எல்லா மந்திரங்களும் குரு மூலமாகவே கற்பிக்கப்படுகிறது. பிராமனர் உள்பட மூன்று வருணத்தார் பூணுல் போடும்போதும் அவர்களுக்கு தந்தைதான் காயத்ரீ மந்திரத்தை உபதேசிப்பார். அப்பொழுது மகனையும் தந்தையையும், புரோஹிதரையும் ஒரு பட்டு வேஷ்டியால் போர்த்தி மறைத்து விடுவர். இதன் பொருள் இது ரஹசிய மந்திரம்; அந்த ரஹசியத்தைக் காக்க வேண்டும் என்பதாகும்.

பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் (6-3-12), சாந்தோக்ய உபநிஷத்திலும் (3-2-5-6) இவ்வாறு எழுதப்பட்டுளது. அதாவது மகனோ அல்லது தனது மாணவரோ இல்லாவிடில் மந்திரங்களைக் கற்பிக்காதே என்பது கட்டளை.

 

மதத்தில் தீட்சை பெற்றவர்களுக்கே ரஹசிய ஞானம் கிடைக்கும் என்று கிறிஸ்தவ புனிதர் பால் (St.Paul) கூறுகிறார்.

 

பாபிலோனியா, எகிப்து போன்ற நாகரீகங்களிலும் சில விஷயங்கள் எல்லோருக்கும் கிடைக்காது என்றும் அதில் சேர்ந்தவர்களுக்கு (Initiated)  மட்டுமே கிடைக்கும் என்றும் வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

 

ரோமானிய சாம்ராஜ்யத்தில் பரவிய மித்ர (Mithra Cult) வழிபாடு நிலத்து அடியிலுள்ள குகைகளில் கற்பிக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்த வழிபாட்டில் தீட்சை எடுத்துக் கொள்வோர் சவுக்கடியும் (flagellation) பெறவேண்டும்.

மித்ரனைப் போற்றும் ஒரு மந்திரத்தில் (யாஸ்ட் Yasht 10-122) சவுக்கடி விதிகள் கூறப்படுகின்றன. மூன்று பகல், மூன்று இரவில் குளித்த பின்னர் 30 சவுக்கடி அல்லது சாட்டை அடி பெறும், சாத்திரங்களைக் கற்ற அறிஞர்களே மித்ர பானத்தை அருந்தலாம் என்று ஜோராஸ்டருக்கு அசுர மஸ்தா கூறுகிறா

ர் என்று இந்த யாஸ்ட் சொல்கிறது. சில சந்தர்ப்பங்களில் இரண்டு பகல் இரண்டு இரவுகளில் குளித்து விட்டு இருபது கசையடிகள் வாங்கிய பின்னர் மித்ரனுக்காக தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தலாம் என்றும் அதே மந்திரம் சொல்லும்.

 

ஐயப்ப விரதம் இருப்போர் குருமார்களிடம் தீட்சை பெறுவது இப்போதும் உள்ளது.  அதற்கு 41 நாள் விரதம் இருக்க வேண்டும். இதே போல விஜயாவாடவில் பவானி விரதம் இருப்போர் 41 நாட்களுக்கு சிவப்பு ஆடைகளை அணிந்து கோவில் குருமாரிடம் தீட் சை பெறுகின்றனர்.

 

ஏன் இந்த ரஹசியம்?

கண்ட கண்ட தோழான் துருத்திகளுக்கு மந்திர உபதேசம் செய்தால், அவர்களுடைய நடை உடை பாவனைகள் அந்த மந்திரத்தின் மதிப்பைக் குறைத்து விடும்; மக்கள அதில் நம்பிக்கை இழந்து விடுவர். எல்லா மதங்களிலும் போலி சாமியார்கள் உண்டு; அவர்கள் எல்லாம் நாஸ்தீகவாதிகளுக்கு உதவி செய்யவும் மதங்களின் மதிப்பைக் குறைக்கவும் பிறந்தவர்கள். மந்திரத்தின் மதிப்பையும் சக்தியையும் காப்பாற்ற ரஹசியம், பரம ரஹசியம் அவசியம்!

Source: M P Khareghat Memorial Volume-1, Bombay, 1953 (A Symposium on Indo-Iranian Subjects)

TAGS: ரகசியம், ரஹசியம், பரம, மந்திரம், ஜொராஸ்டர்

இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:–

போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் …

https://tamilandvedas.com/…/போலி-சாமியார்-பற…

2 days ago – போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294) … கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி வேடம் போடும் ஆட்கள் …

மந்திரங்களை யாரும் கற்கலாமா? | Tamil and …

https://tamilandvedas.com/…/மந்திரங்களை-யாரு…

6 Nov 2013 – ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று … எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் …

மந்திரங்களை யாரும் கற்கலாமா? | Swami’s …

swamiindology.blogspot.com/2013/11/blog-post_6.html

6 Nov 2013 – ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று … எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் …

 

–SUBHAM–