கிரேக்க மொழிச் சொல்லில் தமிழ், சம்ஸ்க்ருதம்- Sirius/Sothis (Post No.8918)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8918

Date uploaded in London – –11 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதத்தில் சுவையான வான சாஸ்திரக் குறிப்புகள் உள்ளன. இவற்றைப் பார்க்கையில் எல்லோருக்கும் வான சாஸ்திரம் நன்கு தெரிந்து இருந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.

முதலாவது சுவையான விஷயம் வானியலுக்கு ‘ஜோதிஷம்’  என்று பெயர்! வேதத்தைப் பயில்வோருக்கு இது ஒரு கட்டாய பாடம் ஆகும்

‘ஜோதி’ JYOTI என்றால் ஒளிப் பிழம்பு . ஜோதிஷம் என்றால் ஒளி உமிழும் விண்வெளி (Light Emitting Matters in the Sky) விஷயங்களை  ஆராய்வது ஆகும்.

அந்த ஜோதி = ஒளிப்பிழம்பு  என்ற சொல், வானத்தில் மிகப்பிரகாசமான நட்சத்திரத்துக்கு சூட்டப்பட்ட கதையைக் காண்போம் . மிகவும் பிரகாசமான கிரகம் வெள்ளி Venus . மிகவும் பிரகாசமான நட்சத்திரம் – Sirius சிரியஸ்

நட்சத்திரம் ஜொலிக்கும்/ கண் Twinkle சிமிட்டும் .

கிரகம் கண் சிமிட்டாது No Twinkling ஒளிரும்

இரவு நேரத்தில் ஒளிரும் நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமானது சிரியஸ் என்னும் நட்சத்திரம் ஆகும். இதை கிரேக்கர்கள் சோதிஸ் SOTHIS என்று அழைப்பர். “ஜ|” J என்னும் எழுத்து உலகில் சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த பழைய மொழியிலும் கிடையாது. அதை ச அல்லது யா என்ற உச்சரிப்புடன் பயில்வர். எடுத்துக் காட்டாக தமிழில் ஜெ கிடையாது. உலகிலேயே மிகவும் குறைகளை உடைய பழைய மொழி தமிழ்தான் .ஏன் எனில் அரேபிய, எபிரேய மொழிகளில் உள்ள ‘ஹ’ வும் இராது. ‘ஸ் ஷ்’ ‘ஜ’ போன்ற உச்சரிப்பும் இராது. இதனால் செமிட்டிக் மொழி உச்சரிப்போ, ஐரோப்பிய மொழி உச்சரிப்போ தமிழில் தர இயலாது. அவைகளை தமிழ் வழி ப்படுத்த (Tamilize) வேண்டும் அப்படிச் செய்கையில் பல அனர்த்தங்கள் விளையலாம். இக்குறைகளை  உணர்ந்தோர் பிற்காலத்தில் ஜ , ஷ, ச, ஹ , க்ஷ  முதலிய கிரந்த எழுத்துக்களையும் (Grantha Lipi)  உச்சரிப்புகளை அறிமுகப்படுத்தினர்

xxxx

சிவப்பு வர்ணத்தில் திருவாதிரை; மூன்று நட்சத்திரம்- மிருக ஸீர்ஷம் 

நான் கண்டுபிடித்த புதிய கொள்கை-

இந்திய -ஐரோப்பிய மொழிக் கொள்கை , திராவிட மொழிக் கொள்கை தவறு. (Classification of Indian Languages is wrong)

இரண்டும் வேவ்வேறு குடும்பம் அல்ல .

உலகிலேயே மிகப்பழைய மொழி/கள் சம்ஸ்கிருதமும் தமிழுமே .

எந்த ஒரு பழைய மொழிச் சொல்லையும் நம்முடைய மொழிகளில் காட்டிவிடலாம் .(Oldest Two Languages are Tamil and Sanskrit; any old word of any any ancient language can be traced back to these two Indian Languages)

அதாவது இந்திய மொழியின் வேர்ச் சொல் (root) இரண்டு வகையில் பிரியலாம் ; ஒன்று சம்ஸ்கிருத வழி ; மற்றோன்று தமிழ் வழி ; ஆங்கிலத்தில் வழங்கும் எண் 1, 8 (One, Ettu) ஆகியன தூய தமிழ் உச்சரிப்பிலும் ஏனையன சம்ஸ்கிருத உச்சரிப்பிலும் இருப்பதைக் காணலாம் .

இப்பொழுது வான சாஸ்திரத்தில் ஒரு உதாரணம் காட்டப் போகிறேன்.

ஜோதி என்றால் எரியும் பிழம்பு ; எடுத்துக்காட்டு – தீப ஜோதி, தீப ஜ்வாலை

தமிழில் ஜோதி = எரியும்

இந்த இரண்டும் வானத்திலேயே பிரகாசமான சிரியஸ் (Siriu) நட்சத்திரத்தில் இருப்பதைக் காணுங்கள்

ஸ் /எரி -ய = கிரேக்க மொழி =”Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). = எரியும் S/Eri/os

இதையே கிரேக்கர்கள் SOTHIS சோதி (ஜ்யோதி) என்றும் அழைத்தனர் =after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).

ஆக தமிழ் ‘எரியும்’ சம்ஸ்க்ருத ஜோதி ஆகிய இரண்டையு ம் சிரியஸ் நட்சத்திரத்தில் காணலாம்

xxxx

நைல் = நீல மாதா 

எகிப்திய மொழியில் சம்ஸ்க்ருதம்

எரியும்(S-eri-os) என்று கிரேக்க மொழியில் தமிழைப் பயன்படுத்திய கிரேக்கர்கள் திடீரென்று சோதி / ஜோதி Sothis என்று ஸம்ஸ்க்ருதத்தையும் பயன்படுத்தியது ஏன் ?

ஏனெனில் எகிப்திய மொழியில் அதை ‘சோதி உதயம்’ Sopdet என்று அழைத்தனர்.

எகிப்தியர் வாழ்வில் சிரியஸ் மிக முக்கியமானதாகும். சிரியஸ்  அடிவானத்தில் தோன்றிவிட்டால் உலகிலேயே மிகப்பெரிய நதியான நைல் NILE வெள்ளப் பெருக்கெடுத்து எகிப்திய தேசத்தை வளப்படுத்தும் இதனால் சிரியஸ் நட்சத்திரத்தோடு உதயம்/ உத்பத்தி என்ற சொல்லையும் சேர்த்து சோதத் பத் Sopdet  என்றனர்.

அந்த நதிக்கே நீல – நைல் (BLUE NILE) என்றும் ஸம்ஸ்க்ருதப் பெயர் சூட்டினர் .

நதியை கங்கா மாதா போல,  பெண் (RIVER GODDESS)  உருவாக்கினர் .

thuban= druvan

அதுமட்டுமல்ல சிவன் தலையில் கங்கை இருப்பது போல ஆசிரிஸ் OSIRIS தேவன் தலையில் நதியை வரைந்தனர்.சிவனின் உருவமான நந்தியை ஆசிரிசுக்கு வரைந்தனர்

சிரியஸ் தோன்றினால் எகிப்தில் வெள்ளம்; கிரேக்க நாட்டிலோ அக்கினி நட்சத்திர ஆரம்பம். ஆகையால் அதை அவர்கள் ஸ் / எரி /யும் – சிரியஸ் என்று பெயர் சூ ட்டியதில் வியப்பில்லை

நந்தி/சிவன் ; தலையில் சந்திரன் /கங்கை

Source material :–

((Sirius is the brightest star in the night sky. With a visual apparent magnitude of -1.46, it is almost twice as bright as Canopus, the next brightest star.

The name “Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). The star has the Bayer designation Alpha Canis Majoris. What the naked eye perceives as a single star is actually a binary star system, consisting of a white main sequence star of spectral type A1V, termed Sirius A, and a faint white dwarf companion of spectral type DA2, termed Sirius B. The distance separating Sirius A from its companion varies between 8.1 and 31.5 AU.

The exact pronunciation of ancient Egyptian is uncertain, as vowels were not recorded until a very late period. In modern transcription, her name usually appears as Sopdet (Spdt,[3] lit. ‘Triangle’ or ‘Sharp One’), after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).))

tags — சிரியஸ் , சோதி, ஜோதி, கிரேக்க மொழி , எரியும்

Xxx subham xxx

நீதி, க்யாதி, ஜோதி – தேகாபிமானம், தெய்வாபிமானம் – பாபாவின் உரை! (6324)

WRITTEN  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 29 April 2019


British Summer Time uploaded in London – 13-09

Post No. 6324

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நீதி, க்யாதி, ஜோதி – தேகாபிமானம், தேஷாபிமானம், தெய்வாபிமானம் – பாபாவின் உரை!

ச.நாகராஜன்

இடம் புட்டபர்த்தி -பிரசாந்தி நிலையம்.

21-7-2002 அன்று ஆரம்பிக்கவிருந்த பன்னாட்டு சேவா மாநாடுகளின் ஏற்பாடுகள் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தன.

அதைத் தொடக்கி வைக்க வேண்டியவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா.

ஆனால் அவரால் பேச முடியாதபடி அவரது தாடைகள் வீங்கி இருந்தன. உணவு உண்ண முடியாது, பேசவும் முடியாது.

நிகழ்ச்சியின் பொறுப்பாளரான திரு சீனிவாசனுக்கு பெரும் கவலை வந்து விட்டது.

ஆனால் பாபாவோ மாநாடு ஏற்பாட்டைத் தொடருமாறு கூறி விட்டார்.

மாநாட்டில் அவரது உரை பிரமாதமாக அமைந்தது. அதில் இறுதியில் என்ன நடந்தது என்பதை அவர் விளக்கிக் கூறினார்.

கழுத்து வீக்கத்தினால் ஒரு சிறுவன் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். தாங்க முடியாத வலி. டாக்டரோ அது தீர குறைந்த பட்சம் 20 முதல் 25 நாட்கள் ஆகும் என்று கூறி விட்டார்.

அவனை அழைத்த பாபா, ‘சாயி உன்னுடன் இருக்கையில் நீ ஏன் அழுகிறாய்’ என்று கூறி விட்டு ஒரு இனிப்பை தன் அங்கை அசைவினால் வரவழைத்தார். அதை அந்தப் பையன் வாங்கி உண்டான்.

வலியை பாபா ஏற்றுக் கொண்டார்.

சீனிவாசன் பாபாவை எப்படி நீங்கள் உரை ஆற்றப் போகிறீர்கள் என்று கேட்ட போது “இது உடல் என்ற உணர்வு இருந்தால் தானே வலியை நான் உணரப் போகிறேன். இது உனது உடல். அனைத்து உடல்களுமே என்னுடையவையே” என்று அருளினார்.

அவரது உரையின் ஒரு பகுதி இதோ:

திரு சீனிவாசனை நோக்கி அவர் கூறியது :“I feel the pain if I think that this is My body. But this is not My body, it is yours.”

பின்னர் மாநாட்டில் கலந்து கொண்டோரை நோக்கி அவர் கூறினார்:

“All your Bodies are mine. Hence I take your suffering upon Myself. That is My duty. THIS is not My body, so I do not care for it. Not only now, at any point of time, I do not care for any suffering. I practise whatever I preach. That is why I say, My Life is My message. It is not possible for all to understand and realise My Divinity. I do not want to say it in public. I do not indulge in advertisement. All that is Mine is yours and vice-versa. I have no desires at all. All My desires  are meant to give you happiness. Greatness does not lie in preaching, it lies in practice. A true acharya (preceptor) is one who practises and then preaches.  That is what I am doing.”

பாபாவின் இந்தச் சொற்களிலிருந்து அவரது தெய்வீகத் தன்மையை நன்கு புரிந்து கொள்ளலாம்.

அன்று அவர் ஆற்றிய சொற்பொழிவில் கருத்துக்கள் சொல் ஜாலத்துடன் வெளி வந்தன; அனைவரையும் மகிழ்வித்தன.

 “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உடல் உண்டு. இயற்கை ஒரு கண்ணாடி. நீங்கள் இதில் பார்ப்பது உங்களது பிரதிபலிப்பையே அன்றி வேறல்ல. இன்று மனிதன் சுயநலத்துடனும் சுய தேவையுடனும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான். சுயநலம் சமூகத்தில் முற்றிலுமாகப் பரவி விட்டது. தேஹாபிமானம் அதிகமாகிக் கொண்டே போகிறது.  தேஷாபிமானம் குறைந்து கொண்டே வருகிறது. தேஹாபிமானத்தை ஒருவன் விடும் வரையில் அவன் தெய்வாபிமானத்தை விருத்தி செய்து கொள்ள முடியாது.” என்றார் அவர்.

உரையின் ஆரம்பத்தில் பாபா மனித வாழ்க்கையின் அஸ்திவாரங்களை விளக்கினார்.

“மனித வாழ்க்கையானது சமதா (Samata -Euality),

சமைக்யதா(Samaikyata – Unity),

சௌப்ரத்ருத்வம் (Saubhratrutvam – Fraternity),

சௌஜன்யம் (Saujanyam – Nobility)

ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வாழ்க்கை என்னும் மாளிகைக்கு இவையே அஸ்திவாரங்களாக அமைகின்றன. இதில் எந்த ஒன்று இல்லாத போனாலும் கூட வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும். ஆகவே ஒவ்வொருவரும் இவற்றை வளர்த்துக் காத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் மனிதத் தன்மை என்றால் என்ன என்பதை ஒரு மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும்.

சத்யம் நீதியை போஷிக்கிறது (Truth fosters Neethi – Morality)

தர்மம் க்யாதியைத் தருகிறது (Righteousness confers Kyati – Reputation)

தியாகமே ஜோதி ஆகிறது (Thyaga (sacrifice) is the Jyothi)

மானவ ஜாதி இந்த மூன்றின் சேர்க்கையாக இருக்கிறது. (Mana jathi – human race- is the combination of these three – neetim kyathi and Jyoti.”

தொடர்ந்து தனது உரையில் மனிதன் இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

சேவாதள மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான சேவாதளத் தொண்டர்கள் பரவசமடைந்தனர்; பாபாவைத் தொழுதனர்.

நிகழ்ச்சி பெரும் வெற்றியுடன் முடிந்தது.

***

முழு உரையையும் ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் SATHYA SAI SPEAKS – Volume 35  உரை எண் 11ஐப் படிக்கலாம்.

நூல் கிடைக்குமிடம் : Sri Sathya Sai Books & Publications Trust Prasanthi Nilayam – 515 134, Ananthapuram District, Andhra Pradesh, India

xxxx

சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!

om tamil

Compiled  by S NAGARAJAN

Post No.2256

Date: 19 October 2015

Time uploaded in London: 8-07 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

ரகசியத் தெளிவு

சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!

 

.நாகராஜன்

 OM red filter

சொல்லில் இருக்குது அனைத்துமே

 

இரகசியங்களைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் ஒரே மாதிரியான அறிவுரைகளையே சொல்கின்றன. யூதம், ஹிந்து என்றெல்லாம் இதில் வேறுபாடு கிடையாது. ஏனெனில் அடிப்படை உண்மைகள் சாஸ்வதமானவை!

தேவி பாகவதத்தில் அம்பிகையின் முன்னர் ஆகப் பெரும் மஹரிஷிகள் வாயைப் பொத்தி மௌனம் அனுஷ்டிக்கிறார்களாம்! ஏனெனில் வாயைத் திறந்தால் சொல் குற்றம் வந்து விடுமோ என்று!

 

யூத மதத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சொற்களை ஜாக்கிரதையாகப் பிரயோகம் செய் என்றே கூறுகிறது. அதிலும் பிரார்த்தனை புரிவதில் சொல்லுக்குள்ளே ஜோதியைக் காணுங்கள் என்கிறது!

லிக்விடிம் எக்வாரிம் (தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான முத்துக்கள்) தொகுப்பில் முக்கியமான ரகசியம் சொல்லப்படுகிறது இப்படி:-

 

EACH MORNING A NEW CREATION

Take special care to guard your tongue                                            

 Before the morning prayer.

Even greeting your fellowman, we are told.                                    

Can be harmful at that hour.
A person who wakes up in the morning is                                     

Like a new creation

Begin your day with unkind words,                                                  

Or even trivial matters –

Even though you may later turn to prayer,                                      

You have not been true to your Creation

All of your words each day                                                         

Are related to one another

All of them are rooted                                                           

 In the first words that you speak                     

                                                LIQQUTIM YEQARIM

MAHALAKSHMI LAMPS

உனது நாவைக் காப்பதில் விசேஷ கவனம் எடு                               

காலை பிரார்த்தனைக்கு முன்னர்

உங்கள் சக மனிதருக்கு வணக்கம் செலுத்துவது கூட,                            

அந்த நேரத்தில் தீமை பயக்கக்கூடும் என்று எங்களுக்குச் சொல்லப்படுகிறது

காலையில் கண் விழிக்கும் ஒரு மனிதன்                                           

ஒரு புதிய படைப்பு போல

 

அன்பில்லாத வார்த்தைகளுடன் உங்கள் நாளை ஆரம்பியுங்கள்,                      

அல்லது அல்ப விஷயங்களுடன் துவங்குங்கள்

பின்னால் நீங்கள் பிரார்த்தனை புரியத் தொடங்கினாலும் கூட,                          

உங்கள் படைப்புக்கு நீங்கள் உண்மையானவராக இல்லை

ஒவ்வொரு நாளும் உங்களின் எல்லாச் சொற்களும்                               

ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டிருக்கின்றன

 

அந்த அனைத்துமே நீங்கள் பேசும் முதல் வார்த்தைகளை                          

வேராகக் கொண்டிருக்கின்றன

                                                             லிக்விடிம் எக்வாரிம்

 

 

பிரம்மாண்டமான ஒரு ரகசியம் மிக எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஹிந்து தத்துவத்தில் காலை எழுந்தவுடன்

 

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கர மத்யே சரஸ்வதி                                            

கர மூலேது கோவிந்த: ப்ரபாதே கர தர்ஸனம்

 

என்று நல்ல சொற்கள் மூலம் திருமகள், கலைமகள், கோவிந்தன் ஆகியோரை நமஸ்கரித்து நாளை நல்ல நாளாக்கி நமது நாளாக்குகிறோம்.

ஒரு நாளைக்கு 100 ஆசீர் வசனம் ஓதுங்கள்

 

கடவுள் நம்மிடம் எதை விரும்புகிறார் என்பதை யூத மதத்து ராபி மெய்ர் (Rabbi Meir) அருமையாக விளக்கிக் கூறுகிறார். மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இறையாளர் இவர்.

 

தால்முட்இல் வரும் செய்யுளுக்கு இவர் அற்புத விளக்கம் ஒன்றைத் தருகிறார். அது Mah என்ற வார்த்தையைக் கூறுகிறது. இதன் பொருள் என்னஎன்பதாகும். ஆனால் மெய்ரோ அந்த உச்சரிப்பை அதே போன்று உள்ள Meah என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இதன் பொருள் 100 என்பதாகும். அதாவது கடவுள் நம்மை தினமும் 100 Blessings (100 ஆசீர் வசனங்கள்ஓத வேண்டும் என்று விரும்புகிறார் என்றார்.

 

தினமும் நூறு நல்ல வார்த்தைகளைப் பேசும் ஒருவனுக்கு என்றைக்கேனும் கெடுதி விளையுமா? நிச்சயம் ஒரு கெடுதியும் வராது. ரகசியங்களை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது.

அனைத்தும் பொருள் பொதிந்தவை.

 IMG_4438

சொல் ஒன்று வேண்டும்

 

மஹாகவி பாரதியார் பாடிய சொல் என்ற பாடல் அற்புதமான பாடல்.

சொல் ஒன்று வேண்டும் தேவசக்திகளை நம்முள்ளே                             

நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்

மின்னல் அனைய திறல் ஓங்குமேஉயிர்                                             

வெள்ளம் கடை அடங்கிப் பாயுமே                                                     

தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு                                    

செய்கை  அதனில் வெற்றி ஏறுமே

 

என்று சொல்லின் பெருமை கூறும் அவரது பாடலை முழுவதுமாகப் படிக்கும் போது யூதர்களின் வேதம் கூறும் சொல்லுக்குள் ஜோதி காணும் அனுபவம் கை கூடும், இல்லையா!

பேசுகின்ற வார்த்தைகள் பலவற்றை நம்மிடம் அன்றாடம் சேர்க்கின்றன. இவற்றில் நாளைத் துவக்கும் போது பேசுபவை அன்றைய போக்கை உருவாக்குகின்றன. ஆகவே பேசுவதைச் சரியாகப் பேசு; சரியான சொற்களைத் தேர்ந்தெடு என்பதே அறநூல்களின் அறிவுரை.

 

இதை ஒரு சோதனையாகக் கூடச் செய்து பார்க்கலாம்; விளைவுகள் பிரம்மாண்டமான அளவில் நலம் பயப்பதைக் கண்டு நாமே பிரமித்து விடுவோம்!

 

*****************