Written by London swaminathan
Date: 14 JULY 2018
Time uploaded in London – 14-37 (British Summer Time)
Post No. 5217
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம் எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் ஆசிரியர் தொல்காப்பியர். அவர் குறித்துப் பல புலவர்கள் கூறிய பொன் மொழிகளைக் காண்போம்:
1.ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோன் – –பனம்பாரனார்
2.நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்
– பன்னிரு படலப் பாயிரம்
3.துன்னரும் சீர்த்தித் தொல்காப்பியன்
-புறப்பொருள் வெண்பா மாலை சிறப்புப் பாயிரம்
4.ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பிய முனி
–இலக்கணக் கொத்து சிறப்புப் பாயிரம்
சூத்திரங்களின் எண்ணிக்கை
இளம்பூரணர் உரை- 1595
நச்சினார்க்கினியர் உரை – 1611
பழம்பாடல்களின் படி 1612
பல சூத்திரங்களை ஒன்றாக இணத்தும் பகுத்தும் பார்த்ததால் இந்த வேறுபாடு என்று அறிஞர் பெருமக்கள் நுவல்வர்.
தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரங்கள்:–
சொல் அதிகாரம்
எழுத்து அதிகாரம்
பொருள் அதிகாரம்
பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பது ஆன்றோர் கருத்து.
தொல்காப்பியருக்குப் பிடித்த எண் 9
மூன்று அதிகாரங்களிலும் தலா ஒன்பது இயல்கள் உள.
அவையாவன:
எழுத்து அதிகாரம்
1.நூல் மரபு
2.மொழி மரபு
3.பிறப்பியல்
4.புணரியல்
5.தொகை மரபு
6.உருபியல்
7.உயிர் மயங்கியல்
8.புள்ளி மயங்கியல்
9.குற்றியலுகரப் புணரியல்
சொல் அதிகாரம்
1.கிளவியாக்கம்
2.வேற்றுமை இயல்
3.வேற்றுமை மயங்கியல்
4.விளி மரபு
5.பெயரியல்
6.வினையியல்
7.இடையியல்
8.உரியியல்
9.எச்சவியல்
பொருள் அதிகாரம்
1.அகத்திணயியல்
2.புறத்திணையியல்
3.களவியல்
4.கற்பியல்
5.பொருளியல்
6.மெய்ப்பாட்டியல்
7.உவமவியல்
8.செய்யுளியல்
9.மரபியல்
தொல்காப்பியருக்குத் தெரிந்த மொழிகள்:–
தமிழ், ஸம்ஸ்க்ருதம் (ஐந்திரம் எனும் இந்திரன் பெயரில் உள்ள ஸம்ஸ்க்ருத இலக்கணம் கற்றவர். இந்த இலக்கணம் கிடைக்கவில்லை)
தொல்காப்பியரின் காலம்
கி.மு.முதல் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை
இவர் ஆய்த எழுத்து என்பப்படும் மூன்று புள்ளி எழுத்து பற்றிக் குறிப்பிடுவதால் முதல் நூற்றாண்டுக்குப் பிறப்ப
ட்டவர் என்பது சிலர் கருத்து.
இவர் எண்வகைத் திருமணம் பற்றியும் வேத காலக் கடவுளரான இந்திரனையும் வருணனையும் தமிழர் கடவுள் என்று குறிப்பிடுவதாலும், பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பர். இன்னும் சிலர் அவை இடைச் சொருகல் என்று சொல்லி தப்பித்துக் கொள்வர்.
இவர் அகஸ்த்ய ரிஷியின் சிஷ்யர். அவருக்கும் இவருக்கும் இடையே நடந்த மோதல் பற்றி ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ பகர்வர். அதே நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் உண்மைப் பெயர் த்ருண தூமாக்கினி என்பர். தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் கீதையும் போற்றும் உசனஸ் ரிஷி பிறந்த காப்பிய கோத்திரத்தை சேர்ந்தவர் என்றும் செப்புவர்.
பொய்யுரை பேசும் திராவிடர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆதாரங்கள் தொல்காப்பியத்துக்கு உள்ளேயே இருக்கின்றன.
இவர் எழுத்து அதிகார உச்சரிப்பில் வேதம் பற்றிச் சொல்கிறார்.
மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ள தர்ம, அர்த்த, காம, மோக்ஷத்தை அதே வரிசையில் அறம், பொருள், இன்பம் என்று சொல்கிறார்.
மேலும் இந்து தெய்வங்கள் அனைவர் பெயரையும் சொல்கிறார். சிவன் பெயரைச் சொல்ல வில்லை
இவர் நூலுக்கு ‘சர்டிபிகேட்’ கொடுத்தவர் கேரளத்து பிராஹ்மணன், சதுர்வேத சிகாமணி- நான்மறை முற்றிய அதங்கோட்டு (திருவிதாங்கோடு) ஆசார்யார்
இது அரங்கேறிய இடம்- நிலம் தரு திரு வில் பாண்டியன் சபை.
அக்காலத்தில் தமிழ் நாட்டின் எல்லை: குமரி மலை, திருப்பதி (வேங்கட மலை)
இவருக்கு பனம்பாரனார் உள்பட 12 சீடர்கள்.
இவர் பிறந்த இடமோ, இறந்த இடமோ, தாய் தந்தையர் பெயரோ தெரியாது.
இவர் இந்து தெய்வங்களைத் தவிர வேறு எவரையும் குறிப்பிடவில்லை. இவரது காலத்தில் பௌத்தமோ ஜைனமோ பிரபலம் ஆகாததால் இப்படி மௌனம் காத்திருக்கலாம்.
தொகாப்பிய ஏடுகளில் 2000 பாட பேதங்கள் இருந்தன. அவைகளை அறிஞர்கள் தட்டிக்கொட்டிச் சீர் செய்துவிட்டனர்.
இவர் நூலிலும் , சிலப்பதிகாரத்திலும், திருக்குறளிலும் அதிகாரம் என்னும் சொல் பயிலப்படுவதால் மூன்று நூல்களும் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கபட்டு நமக்கு வழங்கியிருக்கலாம்.
தொல்காப்பியத்துக்குப் பல உரைகள் இருந்தாலும் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் உரைகளே சிறப்புடைத்து.
–SUBHAM–