பொறுமைக்கு உதாரணம் பூமாதேவி – தமிழன் கண்ட உண்மை (Post No.10,575)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,575

Date uploaded in London – –    18 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 11

பொறுமைக்கு உதாரணம் பூமாதேவி – தமிழன் கண்ட உண்மை

PATIENCE AND EARTH

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப்  பொறுத்தல் தலை –குறள் 151

அதர்வண வேத பாடல் / மந்திரம் 28 வரை கண்டோம். 63 மந்திரங்கள் உள்ள இந்த துதியில் இதோ 29-ஆவது மந்திரம் :-

மந்திரம் 29

விம்ருக்வரீம் ப்ருதிவீ மா வதாமிம் க்ஷமாம் பூமிக்கு ப்ரஹ்மணா வாவ்ருத்தானாம்

ஊர்ஜம் புஷ்டம் பிப்ரதிம்மன்னபாகம்  க்ருதம் த்வாபி  நி ஷீதேம பூமே -29

பொருள்

பொறுமையின் சின்னமே பூமியே! தூய்மை செய்பவளே! ஆன்மீக பலத்தால் வலு அடைபவளே ! சக்தி, வளம் ஆகியன உடையவளே ,  உணவையும் நெய் யையும் உடையவளே! உன் மீது உட்கார்ந்து ஓய்வு எடுக்கலாமா? 

இந்த மந்திரத்தில் பூமியின் பொறுமை போற்றப்படுகிறது. இந்த அற்புத விஷயத்தை இமயம் முதல் குமரி வரையுள்ள புலவர்கள் பாடியுள்ளனர். இது இந்துக்களின் சொந்தக் கண்டுபிடிப்பு.

எத்தனை வெட்டுகிறோம், எத்தனை தோண்டுகிறோம்; அப்படியும் அம்மாவை எட்டி உதயும் குழந்தை போல எங்களை அணைக்கிறாயே என்று இந்துக்கள் வியக்கின்றனர். ஆகையால் மீண்டும் மீண்டும் கும்பிடு போடுகின்றனர்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப்  பொறுத்தல் தலை –குறள் 151

பரிபாடல் என்னும் சங்க இலக்கிய நூலிலும் (2-55) இதே கருத்து வருகிறது

‘நோன்மை நாடின் இருநிலம் யாவர்க்கும்’ (உன்னுடைய பொறுமை நிலத்தைப் போன்றது)

சம்ஸ்க்ருதத்தில் எண்ணற்ற இடங்களில் வருகிறது

ரகு வம்சம் (18-9) என்னும் காவியத்தில் காளிதாசனும் க்ஷமா என்று பூமியைக் குறிப்பிடுகிறான்

XXX

WATER AND PURITY

மந்திரம் 30

சுத்தா ந ஆபஸ்தன்வே க்ஷரந்து ந யோ னஹ ஸேதுரப்ரியே தம் நி தத்மஹ

பவித்ரேண ப்ருதிவி மோது புனாமி –30

சென்ற பாட்டில் உள்ளது போலவே இங்கும் தூய்மை போற்றப்படுகிறது

  எங்கள் உடல் சுத்தம் டைய தூய நதி நீர் பெருக்கெடுக்கட்டும். எங் களை ஆக்கிரமிக்க நினைப்போர் விஷயத்தில் வாளாவிருக்க மாட்டோம். நான் என்னையும் சுத்தம் செய்து கொள்கிறேன்

இந்துக்களின் வாழ்வில் நீர் என்பது பிறப்பு முதல் இறப்புவரை தொடர்புடையது. அதை ரிக் வேதமும் மீண்டும் மீண்டும் விதந்து ஓதுகிறது ; ஆகையால் அவர்கள் தினமும் குளிக்கும் வெப்ப மண்டலத்தைச் TROPICAL zone சேர்ந்தவர்களே; குளிர்ப் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் இல்லை.

Xxxx

STUMBLING BLOCKS

மந்திரம்/ பாடல் 31

யாஸ்தே ப்ராசீஹி ப்ரதிசோ யா உதீசிர் யாஸ்தே பூமி அதராத் யாஸ்ச பஸ்யாத்

ஸ்யோநாஸ்தா மஹ்யம் சரதே பவந்து மா நி  பப்தம் புவனே நிஸ்ரியாணஹ –31

பொருள்

உன்னுடைய கிழக்கு திசையில் வசிப்போரும் , வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் வசிப்போரும்

என்னிடம் இனிமை பாராட்டட்டும். அங்கு நான் இன்பமாக பயணிப்பேன் ஆகுக; இந்த உலகில் நான் வாழும் காலம் வரை தடுமாறக்கூடாது”.

இது மிகவும் பொருளுள்ள பாடல். கவச மந்திரங்களை போல நான்கு திசைகளில் இருந்தும் நன்மையே வந்தெய்துக என்று வேண்டிவிட்டு, ‘தடுமாறக்கூடாது என்று சொல்லுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. இவ்வாறு நான் நாலு திசையிலும் செல்லும்போது உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும்

2. உள்ளத்தில், செய்கையில், சொல்லில் தடுமாறக்கூடாது. அதாவது திரிகரண சுத்தி; மனம், மொழி, மெய் மூன்றிலும் தூய்மை இருக்க அருள்வாயாகுக. ஏற்கனவே சொன்ன தடுமாறக் கூடாது என்ற பதங்கள் மீண்டும் வருவதைக் கருத்திற்கொள்ள வேண்டும். ஒரு முறை, உடல் தடு மாற்றத்தையும் இரண்டாம் முறை, உள்ளது தடுமாற்றையும் மனதிற் கொண்டு பாடியிருப்பார் போலும் !

இதில் இன்னொரு சுவையான மொழி இயல் LINGUISTICS MATTER  விஷயமும் வருகிறது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை  செய்யும்  சந்தியா வந்தன மந்திரத்தில் அவர்கள் 4 திசைகளையும் நோக்கி மந்திரங்களைச் சொல்லுவார்கள்.அதிலும் பிராச்யை , தக்ஷிணாயை, பிரதீச்யை, உதீச்யை என்றே சொல்லி நமஸ்கரிக்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து திசை வழிபாடு இருக்கிறது. அதுமட்டுமல்ல ,

புறநானூற்றில் கூடலூர்க் கிழார் பாடிய அற்புதப் பாடல் வருகிறது (புறம் 229); சேர மன்னன் மாந்தரஞ் சேரல் இறக்கப்போவதை முன் கூட்டியே அறிவித்தது ஒரு எரி கல் . அதில் ‘பிராச்யை’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லை ‘பாசி என்றும்’ உதீச்யை என்ற சொல்லை ‘ஊசி’ என்றும் தமிழ் மயமாக்கியது வியக்கத்தக்க ஒன்று. கூடலூர்க் கிழார் சம்ஸ்க்ருத மன்னன்!!

அவர் தமிழ்ப்படுத்தினாலும் அது மற்றவர்களுக்கும் புரிந்து இருப்பது இமயம் முதல் குமரி வரை சம்ஸ்க்ருதம் புழங்கியதைக் காட்டுகிறது. மேலும் இதே பாட்டில் பங்குனி மாதம், மேஷராசி முதலிய விஷயங்களும் வருவதால் யவனர்களிடமிருந்து இந்துக்கள், நாள் கிழமைகளை கற்றுக்கொண்டனர் என்ற பொய்மை வாதம் தவிடு பொ டி ஆகிறது.

XXXX

பாடல் 32

மா நஹ பஸ்சான்மா  புரஸ்தான்னுதிஷ்டா மோத்தராத்தராதுத

ஸ்வஸ்தி பூமே நோ பவ மா விதன் பரிபந்தினோ வரீயோ யாவயா வதம் –32

பொருள்

மேற்கு திசையில் இருந்தோ கிழக்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே; வடக்கு, தெற்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே”.

பூமாதேவியே எங்களிடம் கருணை காட்டு; வழிப்பறி செய்யும் கொள்ளையர் எங்களைக் காணாமல் போகட்டும்; அதி பயங்கர ஆயுதங்களை எங்களிடமிருந்து தொலைவில் வைப்பாயாகுக –32

கிட்டத்தட்ட சென்ற பாடல் போன்றதே. திசைகளைத் தவிர வழிப்பறி கொள்ளையரும் வருகின்றனர் இது பழங்கால இந்தியாவின் நிலையைக் காட்டுகிறது மஹாபாரதத்தில் தமயந்தி சென்ற வழியில் கொள்ளையர் நடத்திய தாக்குதல் விரிவாக உள்ளது. சங்கத் தமிழ் நூல்களில் வழிப்பறி கொள்ளையர் வருகின்றனர். இப்போதும் கடற்கொள்ளையர்கள் கப்பல்களைக் கடத்திச் சென்று கொள்ளை அடிப்பதை பத்திரிக்கையில் படிக்கிறோம்.; ஆயுதமற்ற அமைதியான சமுதாயத்தை வேண்டுவதும் இப்பாடலின் அச்சிறப்பே.

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்று பாரதிதாசன் பாடினார் . காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய ஸம்ஸ்க்ருதக் கவிதையை எம்.எஸ். சுப்புலட்சுமி, ஐக்கிய நாடுகள் சபையில் பாடியதால் அது உலகம் முழுதும் ஒலிபரப்பாகியது . உலக நட்புடன் துவங்கும் அந்த மைத்ரீம் பஜத பாடல் யுத்தம் த்யஜத   என்ற வரிகளுடன் முடிகிறது . ‘போர் செய்வதைக் கைவிடுங்கள்’ என்ற அவ்வரிகளின் SOURCE ‘மூலம்’ வேதத்தில் உள்ளது. அதர்வண வேதத்தில் ஆயுதங்கள் தொலைவில் ஒழியட்டும் என்ற வரிகள் உள்ளன..

இமயம் முதல் குமரி வரை நம் சிந்தனை ஒன்றே.

TO BE CONTINUED…………………

TAGS- பூமி, பொறுமை, அகழ்வாரை , பூமிஸூக்தம்-11

பெண்களுடன் வாதாடாதே (Post No.2913)

RelationshipFighting

Article written by London swaminathan

 

Date: 22 June 2016

 

Post No. 2913

 

Time uploaded in London :– 8-33 AM

 

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனிதனுக்கு இழிவை ஏற்படுத்தும் 6, பெருமை தரும் 4, விஷயங்கள்

donkey ride

பால சகித்வம் = சிறுவர்களுடன் நட்பு (பக்குவம் அடையாதோருடன் நட்பு)

அகாரண ஹாஸ்யம் = காரணமில்லாமல் தனக்குத் தானே சிரித்தல் (மொபைல் போன், ஐ பேட் – இவைகளைப் பார்த்து பொது இடங்களில் சிரித்தல்)

ஸ்த்ரீஷு விவாதோ= பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுதல் (மனைவி, சஹோதரிகளுடனோ, அடுத்தவீட்டுப் பெண்களுடனோ சண்டை போடுதல்)

 

அசஜ்ஜன சேவா = கெட்டவர்களுக்குச் செய்யும் உதவி (லஞ்சம் கொடுத்தல்)

கார்தப யானம் = கழுதை சவாரி (ஓட்டை காரில் சவாரி செய்தல்)

அசம்ஸ்க்ருதவாணி = கொச்சை மொழியில் பேசுதல் (பண்பற்ற மொழி; கீழ்மக்கள் பயன்படுத்தும் மொழி)

ஷட்சு = இந்த ஆறில்

நர: – மனிதன்

லகுதாம் = சிறுமையை

உபயாதி = அடைகிறான்.

 

பாலசகித்வமகாரணஹாஸ்யம் ஸ்த்ரீஷு விவாதோ(அ)சஜ்ஜனசேவா

கார்தபயானமசம்ஸ்க்ருதவாணீ ஷட்சு நரோ லகுதாமுபயாதி

Xxxx

school boys

பெருமை தரும் நான்கு விஷயங்கள்

एको धर्मः परं श्रेयः क्षमैका शान्तिरुत्तमा।
विद्यैका परमा दृष्टिरहिंसैका सुखावहा॥

ஏகோ தர்ம: பரம்ஸ்ரேய: க்ஷமைகா சாந்திருத்தமா

வித்யைகா பரமா த்ருஷ்டிரஹிம்சைகா சுகாவஹா

 

 

தர்மம் (என்ற ‘ஒன்று’ ) மாபெரும் மேன்மையைத் தரும்

பொறுமை (என்ற ‘ஒன்று’ ) சிறந்த அமைதியைத் தரும்

கல்வி (என்ற ‘ஒன்று’ ) அளவற்ற நிறைவைத் தரும்

அஹிம்ஸை (என்ற ‘ஒன்று’ ) தொடர்ந்து சுகத்தைத் தரும்.

–உத்யோக பர்வம், மஹாபாரதம்

 

–subam–

 

 

பொறுமை: மூன்று குட்டிக் கதைகள்!

buddha

Research Article No. 2085

Written by London swaminathan
Date : 19 August  2015
Time uploaded in London :–  16-42

புத்தரும் பூர்ணாவும்

புத்தரின் சீடர்களில் முக்கியமானவர் பூர்ணா. அவர் தர்மப் பிரசாரம் செய்யப் புறப்படுவதற்கு முன்னால் புத்தரின் அனுமதியைக் கோரினார்.

உடனே அவர்கள் இருவரிடையே நடந்த சம்பாஷனை பின்வருமாறு:–

“பூர்ணா, எங்கே போய் தர்மப் பிரசாரம் செய்யப் போகிறாய்?

குருவே, சூனப்ராந்தம் என்ற இடத்தில்

அதுவா? அங்குள்ள்வர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாயிற்றே; உன் அறிவுரைகளை ஏற்காமல் உன்னை இகழ்ந்து பேசினால் என்ன செய்வாய்?

அதனால் என்ன? கையால் அடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்வேன்.

சரி, அப்படி கைகளால் குத்து விட்டால்?

அதனால் என்ன, ஆயுதங்களைக் கொண்டு தாக்கவில்லையே என்று எண்ணி மகிழ்ந்து என் தர்மப் பிரசாரத்தைத் தொடருவேன்.

அது சரி, ஆயுதங்களைக் கொண்டு தாக்கினால் என்ன செய்வாயாம்?

அதனால் என்ன, ஆளைக் கொல்லவில்லையே, அந்த அளவுக்கு நல்லவர்கள்தான் என்றெண்ணி என் பணியைத் தொடருவேன்; என் கடன் பணி செய்துகிடப்பதுவே!

சரி, உன்னைக் கொன்றுபோட்டுவிட்டால்……?

மிகவும் மகிழ்ச்சியுடன் இறப்பேன்; அட இவ்வளவு சீக்கிரம் நிர்வாண நிலையை (முக்தி) அடைய உதவினார்களே! என்று அகம் மகிழ்வேன்; உளம் குளிர்வேன் என்று பூர்ணா பதிலிறுத்தார்.

புத்தர், “பூர்ணா, உன் இஷடப்படியே செய்; நீ பரிபூரண பக்குவம் பெற்றுவிட்டாய்” என்று சொல்லி பொறுமையின் சின்னமான பூர்ணாவுக்கு ஆசிவழங்கினார்.

stamp_newton

ஐசக் நியூட்டன்

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் ஒரு நாயை வளர்த்துவந்தார். அதற்கு டயமண்ட் (வைரக் கல்) என்று பெயரும் சூட்டி அன்பாகப் போற்றி வந்தார். ஒரு நாள் அவர் மாலையில் உலாவச் சென்றார். அப்பொழுது அறையின் மேஜை மீது மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அன்று என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. அவர் உலாவச் சென்ற நேரத்தில் அந்த நாய் மேஜை மீது தாவிக் குதித்தது போலும். மெழுகுவர்த்தி கீழே சாய்ந்து அங்கு அவர் எழுதிவைத்திருந்த காகிதங்களுக்குத் தீவைத்தது. அத்தனையும் எரிந்து கருகின. அதன் அருமை பெருமை நியூட்ட்ன் ஒருவருக்கே தெரியும். ஏனெனில் அவை அவரது இருபது ஆண்டுக் கால ஆராய்ச்சியின் முடிவுகளடங்கிய காகிதங்கள்.

உலாவச் சென்று திரும்பிய நியூட்டனுக்கு அவற்றைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி. எல்லாம் டயமண்டின் ‘திருவிளையாடல்’ தான் என்பது அவருக்குப் புரிந்தது. அதுவோ தான் செய்த பெரிய தீங்கை அறியாது அன்பாக வாலைக் குழைத்து நியூட்டனை வரவேற்றது.

நியூட்டனைத் தவிர வேறு ஒருவர் அந்த சூழ்நிலையில் இருந்திருந்தால், நாயை எத்தி உதைந்து அறைக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்தியிருப்பார். ஆனால் நியூட்டனோ அன்பாக நாயை எடுத்துத் தழுவி அணைத்து, “டயமண்ட், நீ செய்த சிறிய காரியத்தின் விளைவுகளை நீ அறியமாட்டாய்” என்றுசொல்லிக் கொஞ்சினார். அது மீண்டும் வாலை ஆட்டி தன் நன்றியைத் தெரிவித்தது. நியூட்டன் மீண்டும் எழுதத் துவங்கினார்.

சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே”- வெற்றி வேர்க்கை

நிறையுடைமை நீங்காது வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள்

books_370

அகராதி பிடித்த மனைவியால் ஆங்கில அகராதி எரிந்தது!

டாக்டர் தாமஸ் கூப்பர் என்பவர் முதலாம் எலிசபெத் மஹாராணி காலத்தில் பெரும் ஆங்கில அகராதியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். முன்னரே இருந்த அகராதியில் மேலும் 33,000 சொற்களைச் சேர்க்க அவர் எண்ணினார். இதற்காக அவர் எட்டு ஆண்டுக் காலம் கஷ்டப்பட்டுச் சேர்த்த 33,000 சொற்களைக் காகிதங்களில் எழுதிவைத்தார். அவரது மனைவியோ எழுத்து வாசனை தெரியாத பிடாரி, கொடுமையின் சின்னம். அவர் வெளியே போயிருந்த நேரத்தில் அவரது நூலத்திற்குள் சென்று அத்தனை காகிதங்களையும் குவித்து சொக்கப்பனை கொளுத்தி மகிழ்ந்தாள்.

அந்த முட்டாள் பெண்மணி, தன் கணவர் படித்துப் படித்துப் பாழாய்ப் போய்விடுவாரோ என்று பயந்தாள்! அவர் திரும்பிவந்து பார்த்தபோது அவருக்குப் புரிந்துவிட்டது. எனினும் மனைவியிடம் யார் செய்த வேலை இது? என்று கேட்டார். ஏன்? நான்தான் செய்தேன்! என்றாள் துணிச்சலாக. அவர் சொன்னார், ஓ தீனா, எனக்கு பெரும் தொல்லை செய்துவிட்டாயே – என்று. பின்னர் மீண்டும் எட்டு ஆண்டுகளுக்கு மேஜையில் உட்கார்ந்து பொறுமையாக எழுதி அகராதிப் பணியை முடித்தார்.

பொறுமையின் சின்னம் தாமஸ் கூப்பர் என்றால் மிகையாகாது.

கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்

குரங்கு, ரமணர்

ஆகஸ்ட்  2015 (மன்மத வருடம் ஆடி/ஆவணி மாதம்) காலண்டர்

Compiled by London swaminathan

Date : 30th July 2015

Post No. 2028

Time uploaded in London : 7-55 AM

Swami_48@yahoo.com

ஏகாதசி :– ஆகஸ்ட் 10 and 26;  முஹூர்த்த தினங்கள்:– 20, 21, 27

பௌர்ணமி:–29;  அமாவாசை:– 14 ஆடி அமாவாசை

Important days:- 3 ஆடிப்பெருக்கு; 14 ஆடி அமாவாசை

15 இந்திய சுதந்திர தினம்; 16 ஆடிப் பூரம்; 28 ஓணம், வரலெட்சுமி விரதம், ரிக் உபாகர்மா; 29  யஜூர் உபாகர்மா, ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன்,; 30 காயத்ரி ஜபம்

cow and calf face book

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை

ஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)

நல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.

ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை

கோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

தயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா?

ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை

தயா மாம்சாசின: குத:? (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

புலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா?

ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை

தயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)

தூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.

ஆகஸ்ட் 5 புதன்கிழமை

ந ச தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)

கருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.

கஜேந்திர,சேனாபூர்,ஒரிஸ்ஸா

ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை

சர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)

எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்

ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை

தாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)

அழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை

ப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)

கனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.

ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை

அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241

செல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)

ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை— குறள் 247

உயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.

amma ponnu

ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை

வலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250

நம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.

ஆகஸ்ட் 12 புதன்கிழமை

அல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245

கருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.

ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை

பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய் – பாரதி

ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை

அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)

பெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.

(ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)

ஆகஸ்ட் 15 சனிக்கிழமை

க்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)

பொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.

cow and calf vellai pasu

ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)

வலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.

(ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை

க்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)

தவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்

(ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153

ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை

க்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)

பொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது?

(ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)

ஆகஸ்ட் 19 புதன்கிழமை

க்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)

பொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.

(ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151)

ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை

க்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)

பொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.

(ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)

ama ponnu

ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை

ஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)

அறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.

ஆகஸ்ட் 22 சனிக்கிழமை

க்ஷமயா கிம் ந சித்யதி (சாணக்ய சதகம் 13-22)

பொறுமையினால் அடைய முடியாதது என்ன?

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)

எல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்

ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை

க்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)

வலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை

ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை

ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்

பொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)

எத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை

myna, fb

ஆகஸ்ட் 26 புதன்கிழமை

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்

பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)

ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை

நிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி (பகவத் கீதை 11-55)

எவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்

ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை

ஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)

எல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)

ஆகஸ்ட் 29 சனிக்கிழமை

லபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதா:(ப.கீதை 5-25)

எவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.

ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை

உயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்

IMG_4561

ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை

அன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் —  பாரதியார்

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே  – பாரதியார்

–சுபம்-

Pictures are used from different sources including face book friends, souvenirs, books etc; thanks.This is a non-commercial  blog.