8000 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இந்துக்கள் குடியேற்றம்! (Post No.3707)

Written by London swaminathan

 

Date: 9 March 2017

 

Time uploaded in London:- 9-21 am

 

Post No. 3707

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரிலிருந்து பேரறிஞர்  நிகலஸ் கஜானாஸ் எழுதிய வேதமும் இந்திய-ஐரோப்பிய இயல் ஆய்வுகளும்  (Vedic and Indo-European Studies by Nicholas Kazanas, Aditya Prakashan, New Delhi, year 2015) என்ற புத்தகத்தில் பல சுவையான தகவல்கள் உள்ளன. 16 ஆண்டுகளுக்கு முன் வெளியான மரபியல் ஆராய்ச்சி மூலம் இந்துக்கள் வடமேற்கு இந்தியாவிலிருந்து புறப்பட்டு ஐரோப்பா முழுவதும் சென்றது தெரிய வந்துள்ளது.

 

குஜராத், ராஜஸ்தான், சிந்து மாநிலங்களிலிருந்து புறப்பட்ட இந்துக்கள் வடமேற்காகச் சென்றனர்.

Genetics also has in the 2000 decade established beyond any doubt the fact that genes flowed into Europe from N W India (Gujarat, Rajsathan, Sindh); these are the R1a 1a and the M458 and they travelled north westward before 8000 years ago (see underhill 2010)

 

பத்தாம் பசலிக் கொள்கை

 

பிரபல சம்ஸ்கிருத அறிஞர் எம்.பி. எமனோ (M B Emeneau)  1954ஆம் ஆண்டில் எழுதினார்:

“கி.மு.2000 ஆம் ஆண்டுகளில் இந்திய ஐரோப்பிய மொழி (சம்ஸ்கிருதம் என்ற பெயர் பின்னால் ஏற்பட்டது) பேசும் ஒரு குழுவோ, குழுக்களோ இந்தியாவின் வடமேற்கிலுள்ள கணவாய்கள் வழியாக இந்தியாவுக்குள் வந்தது. இந்த மொழியியல் கொள்கை 150 ஆண்டுகளாக இருந்துவருகிறது. இதுவரை இதை மறுப்பதற்கான நல்ல காரணம் ஏதுமில்லை. ஆனால் இந்துக்கள் இப்படிப்பட்ட படையெடுப்பு நடந்தது குறித்து அறியாமையில் (ignorance) உழல்கின்றனர்”

இதற்கு நிகலஸின் பதில்:

எமனோதான் அறியாமையில் உழல்கிறார். இந்துக்கள் அல்ல. அவர் இப்படி எழுதி 12 ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற சைன்டிfபிக் அமெரிக்கன் விஞ்ஞான சஞ்சிகையில் பிரபல தொல்பொருட்துறை நிபுணர் ஜார்ஜ் டேல் 1966-ல் எழுதிய கட்டுரையில் ( Eminent archaeologist George Dale in Scientific American Journal) சிந்து சமவெளியில் படையெடுப்போ, வன்செயலோ, ரத்தக் களறியோ வெற்றி முழக்கமோ, நடந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். எமனோ பழைய கொள்கையை திரும்பச் சொன்னாரே தவிர சாட்சியங்கள், தடயங்கள் ஏதும் தரவில்லை ஆனால் ஏ.எல். பாஷம் ( Professor A L Basham, author of the famous book The Wonder that was India) போன்ற வரலாற்று அறிஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை ( ஆண்டு 1975) ஒப்புக்கொண்டனர். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இந்தியர்கள் இதை ஒப்புக்கொள்ளத் துவங்கினர் இப்போது சிலர் அமைதியான குடியேற்றம் என்று கதைக்கத் துவங்கியுள்ளனர் – என்று நிகலஸ் தனது நூலில் எழுதுகிறார்.

 

 

ரிக் வேதத்தின் காலம் கி.மு.3500

 

மாக்ஸ்முல்லர் செய்த பெரிய தவறு:

கதா சரித் சாகரம் என்ற 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சம்ஸ்கிருத கதைப் புத்தகத்தில் ஒரு பேய்க்கதை உள்ளது. அதில் காத்யாயனர் என்ற ஒருவரின் பெயர் வருகிறது. அவர்தான் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்  வாழ்ந்த இலக்கண வித்தகர் காத்யாயனர் என்று மாக்ஸ்முல்லர் (Max Muller)  ஊகம் செய்து கொண்டு வேதங்கள் கி.மு 1200 க்கு முன் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லிவிட்டார். அறிஞர் உலகம் முழுதும் இந்த அபத்தமான முடிவை எதிர்த்தவுடன் மாக்ஸ்முல்லர் அந்தர்பல்டி (ulta) அடித்தார்!

 

கோல்ட்ஸ்டக்கர், விட்னி, விண்டர்நீட்ஸ் ( Goldstrucker, Whitney, Winternitz and others) மற்றும் பலரெதிர்ப்பு தெரிவித்தனர். முல்லரும் ஒப்புக்கொண்டார். எவரும் ரிக் வேதத்தின் காலத்தைக் கணிக்கவே முடியாதென்று! ரிக் வேத துதிகள், 1500 அல்லது 2000 அல்லது கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருக்காலாம் – என்றார் மாக்ஸ்முல்லர்.

 

(ஆயினும் வெள்ளைக் காரர்கள் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப 1200 -ஆண்டை எழுதி வருகின்றனர். மேலை நாட்டிலும் பெரும்பாலான இந்திய பல்கலைக் கழகங்களிலும் கற்பித்து வருகின்றனர். ஜெர்மன் அறிஞர் ஜாகோபி (Herman Jacobi) , இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் பால கங்காதர திலகர் (B G Tilak) ஆகியோர் ரிக் வேதம் கி.மு 4500 க்கு முந்தையது என் று எழுதியதைக் காட்டுவதுகூட இல்லை. அவர்கள் இருவரும் தனித் தனியே ஆராய்ந்து வானியல் ரீதியில் (Based on astronomical data)  நிரூபித்ததை இன்றுவரை எவராலும் மறுக்கவும் முடியவில்லை; இந்திய வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுதுவது நமது தலையாய கடமை)

 

ஆரியர்கள் இந்தியாவுக்குள் குடியேறினர் என்பது அபத்தமான கொள்கை என்பதை அறிஞர் நிகலஸ் கிரேக்க, அவஸ்தன் (Greek and Avestan) மொழிகள் மூலம் நிரூபிக்கிறார்.

நிகலஸின் கணிப்பு ரிக் வேதம் கி.மு.3500 க்கு முன், அதாவது சிந்து வெளி நாகரீகத்தின் முன், என்பதாகும். அவர் மொழியியலைக் கொண்டு நிரூபிப்பது நமது புராணங்களிலும் பஞ்சாங்கத்திலும் எழுதியதை ஒத்திருக்கிறது. கி.மு 3102- ல் கலியுகம் துவங்கியது என்றும் அதற்கு சற்று முன்னர் வியாசர், வேதங்களை நான்காகப் பிரித்து நான்கு சீடர்களுக்கு அளித்து, அவற்றைப் பரப்பும் பணியை ஒப்படைத்தார் என்றும் எழுதியிருப்பதை எல்லோரும் அறிவர்.

 

கி.மு 7000 முதல் கி.மு 600 வரை தங்கு தடையற்ற தொடர்ச்சியான ஒரு கலாசாரம் வடமேற்கு இந்தியாவில் இருந்தது; யாரும் வெளியிலிருந்து புகுந்து மாற்றவில்லை என்பதையும் ஆல்சின், கெநோயர், போஸல், ஷாப்பர் ஆகியோர் அண்மைக்கால ஆராய்ச்சியில் காட்டிவிட்டனர். சிந்து சமவெளிக்குள் வெளியார் புகுந்ததற்காக தடயங்கள் அறவே இல்லை என்பதை அமெரிக்க அறிஞர் ஜே எம் கெநோயர் (American scholar J M Kenoyer)   தெளிவாகக் காட்டிவிட்டார்.

However all archaeologists today, experts in the area of Saptasindhu (Allchin, Kenoyer, Poschel, Shaffer and many others), emphasize the unbroken continuity of the native culture from c.7000 to 600 BCE, when the Persians began to invade the region.

இந்திய ஆபஸ்தம்ப, போதாயன ரிஷிகளின் நூல்களில் உள்ள சுலப சூத்ரங்களிலிருந்துதான் எகிப்திய, பாபிலோனிய கிரேக்க கணிதங்கள் உருவாயின என்று அமெரிக்க விஞான வரலாற்று அறிஞர் ஏ. செய்டென்பர்க் கூறுகிறார். இவை கி.மு 2000-ல் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

Of great significance are two articles by American historian of science A.Seidenberg wherein he argues that Egyptian, Babylonian and Greek mathematics derive from the Indic Sulbasutras of Apastamba and Baudhayana or a work like that, dated c 2000 BC as lower limit, thus furnishing totally independent evidence………………………………….

 

(எகிப்திய பிரமிடுகளை இந்தியர்கள் கட்டினார்கள் என்ற கட்டுரையில் சுலபசூத்திரங்கள் பற்றி நான் எழுதியுள்ளேன்)

 

ஆகையால் ரிக் வேதம் கி.மு 3500 க்கு முன் வந்திருக்க வேண்டும். பிராமணங்களும் உபநிஷத்துகளும் கி.மு 2500 ல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ராமர் கதை முதலிலும் மஹாபாரதக் கதை பின்னரும் வந்தன. இவை பற்றி மக்களுக்கு கி.மு.3000 வாக்கிலேயே தெரிந்திருக்கக்கூடும் என்று எழுதும் நிகலஸ் இதை மொழி இயல் ரீதியிலும் நிரூபித்துள்ளார். அதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

–சுபம்–