Hinduism through 500 Pictures in Tamil and English-32; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-32 (Post.15,284)

Written by London Swaminathan

Post No. 15,284

Date uploaded in London –  18 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ENGLISH VERSION WAS POSTED YESTERDAY (17-12-2025)

துர்கா தேவி ( என் சுய புராணமும் உள்ளது)

சிற்ப சாஸ்திரத்தில் துர்க்கையின் வடிவம்

துர்க் என்றால் கோட்டை ; துர்க்கையை வழிபடுவோரை அவள், அரண் போல வளைத்துக் காப்பாள் ;

தேவி வடிவங்களில் மிகவும் நம்பிக்கையையும் தைரியத்தையும் வெற்றி உணர்வினையும் ஊட்டக்கூடிய தோற்றம் துர்கா தேவி . அவளைப்  பார்த்த மாத்திரத்திலேயே நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி / ஆக்க பூர்வ சக்தி வந்துவிடும் !

****

துர்கா தேவியின் மகிஷாசுர மார்த்தனி  சிற்பம்தான்  மிகவும் மனதில் பதியும் வடிவம். மகாபலிபுரத்தில் உள்ள இந்த மஹிஷாசுரமர்தனியின் சிலையைப் புகைப்படம் எடுக்காத வெளி நாட்டுக்காரர்  எவருமில்லை! யார் யாரெல்லாம் மாமல்லபுரத்துக்கு வந்தார்களோ அவர்கள் எல்லோரும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எருமை முக அசுரனை தேவி வதம் செய்த காட்சியை படம்பிடித்து புஸ்தகங்களில் வெளியிட்டுள்ளனர்; அவ்வளவு அற்புதமான சிலை!

மஹிஷ – எருமை.

மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிற்பம்

துர்க்கையின் உருவான மகிஷாசுரமர்த்தினி பத்து கரங்களைக் கொண்டவர். மூன்று கண்களை உடையவர். தலையில் ஜடா மகுடம் தரித்தவர். சந்திரகலாவைத் தலையில் சூடியவர். கண்கள் நீலோத் பல மலரினை ஒத்ததாக அமைந்திருக்கும். பருத்த உடலினையும், மெலிந்த இடையினையும் பெற்றவர். அடசி மலரின் நிறத்தினை உடையவர். உடலில் மூன்று வளைவுகளை /நெளிவுளைக் (திரிபங்கம்) கொண்டவர். வலது கரங்களில் திரிசூலம், கத்தி /கட்கம், சக்தி ஆயுதம், சக்கரம் அம்பு ஆகியவையும் இடது கரங்களில் பாசம் அங்குசம். கேடயம், பரசு, மணி ஆகியவற்றைத் தரித்திருப்பார். இவளின் காலடியில் துண்டிக்கப்பட்ட மகிஷனின் கழுத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பது போல் அமைந்திருக்கும். எருமைத் தலையின் மீது தமது இடது காலினையும், தமது வாகனமாகிய சிங்கத்தின் மீது காலை ஊன்றியவாறும் அமைந்திருப்பார் என்று சிற்பரத்தினம் குறிப்பிடுகின்றன.

விஷ்ணுதர்மோத்திரம், மகிஷாசுரமர்த்தினியைச் சண்டிகா என்று அழைக்கின்றது. இவர் இருபது கரங்கள் பெற்றவளாகக் கூறுகிறது. பொன் நிறத்தில் ஒளிருபவளாகவும் சிங்கத்தின் மீது கோபத்துடன் அமர்ந்திருப்பவளாகவும் குறிப்பிடுகிறது. இவளது கைகளில் சூலம், கட்கம், சங்கு, சக்கரம், பாணம், சக்தி, வஜ்ரம், அபயம், டமரு, குடை ஆகியவைகளை வலது கரங்களில் தரித்தும், இடது கரங்களில் நாகபாசம், கேடயம், பரசு, அங்குசம், தனுஷ், கந்தம் (மணி) துவஜம் (கொடி) கதை, கண்ணாடி மற்றும் முத்காரம் (கள்ளி) ஆகியவைகளைத் தரித்திருப்பாள். வலது கையில் ஏந்திய திரிசூலம் மகிஷனின் கழுத்தில் பதித்திருப்பது போல அமைந்திருக்கும். மகிஷனின் விழி பிதுங்கி, புருவங்கள் இரத்தத்தில் நனைவது போலிருக்கும்.

மாமல்லபுரத்தில் இச்சிற்பம் அமைந்துள்ளது.

Durga at Gangakondacholeeswaram

மாசிமகத்தன்று கடற்கரையில் குவியும் பழங்குடி இருளர் இனமக்கள் அப்போது காலநிலை மாறி, கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலில் முழங்கால் கடல் நீரில் நடந்து சென்று அங்கு உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் மற்றும் தமிழகமெங்கும் பரவலாக இடம்பெற்றுள்ளது. சிவன் கோவில்களில் வடபுறச் சுவர்களில் உள்ள மாடங்களில் துர்க்கையைக் காணலாம் ; சில இடங்களில் எருமைத் தலை மீது அவள் காட்சி அளிக்கிறாள்.

மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று வணங்கப்பட்டாள். சிவபெருமான் திரிசூலத்தையும் விஷ்ணு  சுதர்சன சக்கரத்தையும் பிரம்மா தனது சக்தியையும் அளித்தார்கள்.

***

லலிதா சஹஸ்ரநாமம் முழுதும் பண்டாசுரனை வதம் செய்த கதை வருகிறது .

தேவி மஹாத்ம்யம் என்னும் 700 ஸ்லோககங்களில் அவள் கதை முழுதும் சுருக்கமாக வருகிறது வங்காளி மக்களுக்கு இந்தத் துதி அத்துப்படி;.கோவில்களில் தினசரி பாராயணமும் நடக்கும்; காளி, துர்கா என்ற வடிவங்களில் அவளை ராம கிருஷ்ண பரமஹம்சர் முதல் பல்லாயிரக்கணக்கானோர் வணங்கி அருள்பெற்றனர் .

சம்ஸ்கிருதத்தில் ‘நவ’ என்றால் ஒன்பது என பொருள். மந்திர சாஸ்திர நூல்கள்  துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரம் மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மஹா கௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவம் .

நவதுர்க்கா வடிவங்கள்

பிரதமம் சைல புத்ரிச்ச த்விதியம் பிரம்மசாரினிம்

திருதியம் சந்திரகண்டாச்ச கூஷ்மாண்டா சதுர்த்தமம்

பஞ்சமம் ஸ்கந்தமாத்ரேணி ஷஷ்டமம் காத்யாயனீம்

சப்தமம் காலராற்றிச்ச அஷ்டமம் கௌரிநிம்

நவமம் சித்திதாத்ரீச நவதுர்கா பிரதிடதம்

प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी ।

तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुर्थकम् ॥

पञ्चमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा ।

सप्तमं कालरात्रिश्च महागौरीति चाष्टमम् ॥

नवमं सिद्धिदात्री च नवदुर्गाः प्रकीर्तिताः ।

उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना ॥

பிரதமம்  ஷைலபுத்ரிதி  த்வீதீயம் ப்ரஹ்மசாரிணீ |

திருதீயம் சந்திரகண்டேதி  கூஷ்மாண்டேதி  சதுர்த்தகம்  ||

பஞ்சமம்  ஸ்கந்தமாதேதி ஷஷ்டம்  காத்யாயணீ  ததா  |

சப்தமம்  காலராத்ரிஸ் -ச   மஹாகவுரிஇதி  ச  அஸ்டமம்  ||

நவமம்  சித்திதாத்திரீ   ச  நவதுர்காஹா  ப்ரகீர்த்தாஹா    ||

உக்தானி ஏதானி நாமானி  ப்ரஹ்மனைவ  மஹாத்மனா  ||

Meaning:

(These are the names of Nava Durgas)

1: First is Shailaputri (Daughter of the Mountain), Second is Brahmacarini (Who wanders in Brahman, a Tapasyi, performer of Penance),

2: Third is Chandraghanta (Bell of Moon), Kushmanda (Glowing substratum of Universal Egg) is Fourth,

3: Fifth is Skandamata (Mother of Skanda), Sixth is Katyayani (Daughter of Katyayana Rishi),

4: Seventh is Kalaratri (Dark Night of Destruction), Mahagauri (Great Shining White Form) is Eighth,

5: And Nighth is Siddhidatri (Bestower of Siddhis or Accomplishments); These are eulogized as Nava Durga (Names of Nine Durgas),

6: These Names were indeed uttered by (none other than) the great-souled Brahma.

Mahisasuramardini drawing

1.சைலபுத்ரி

துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது ‘மலைமகள்’ என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.

இவர் தனது முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் ‘தாட்சாயினி’ என்றும் கூறுவர். இவர் தான் சிவனை திருமணம் பார்வதி தேவி ஆவார்.

2.பிரம்மசாரிணி

‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது.

சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு கடும் தவம் புரிந்தார்.

3. சந்திரகண்டா

நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா அன்னையை வணங்கப்படுகிறார். இவர் அன்னையின் மூன்றாவது வடிவமாவார். நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். ‘சந்திர’ என்றால் நிலவு. ‘கண்டா’ என்றால் மணி என்று பொருள்.

 பத்து கைகளை கொண்டு  சிங்க வாகனத்துடன் காட்சி தருகின்றார்.

Durga statue

4. கூஷ்மாண்டா:

கு, உஷ்மா, ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது.கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும்.

5. ஸ்கந்த மாதா

ஸ்கந்த என்றால் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை அதாவது முருகனின் தாய் ஆவார்

நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையும், ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போன்றும், மற்றொரு கரம் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார்.

6. காத்யாயனி

முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். அவருக்கு காதயா என்ற மகன் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். இதனால் இவருக்கு ‘காத்யாயனி’ என்ற பெயர் வந்தது. இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.

7. காளராத்திரி

அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம்.

கால என்றால் நேரத்தையும், மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும்.

இந்த துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக்கூடியது.இவளின் நான்கு கைகளின், ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது. இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது.

8. மகாகௌரி

மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவரின் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றார்.

நான்கு கரம் கொண்ட மகாகௌரி, ஒரு கரத்தில் சூலம், மறு கரத்தில் மணியையும் தங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு காளை வாகனமாக இருக்கின்றது.

9. சித்திதாத்ரி

நவராத்திரி விழாவின் கடைசி நாளான மகா நவமி தினத்தில் ‘சித்தி தாத்ரி’ துர்க்கை வழிபாடு செய்வர். ‘சித்தி’ என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றாள் அருள்பவள், அதாவது சக்தியை அருள்பவள் என்று பொருள்.

மார்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு அன்னை அருளிய எட்டு விதமான சித்திகள் -குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி, நான்கு கரங்களில், இடது கரத்தில் கதை, சக்கரத்துடனும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியும் அருள்பவள். சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம்.

***

விஷ்ணு துர்க்கை

மேல்மா கிராமத்தில் விஷ்ணு துர்க்கை புடைப்புச்சிற்பம் கண்ெடடுக்கப்பட்டது.  பாலை நில கடவுளாகவும், வேட்டைக்கு செல்வோர், போருக்கு செல்வோர் கடவுளாகவும் துர்க்கை வழிபாடு பழக்கத்தில் உள்ளது. புடைப்பு சிற்பம் வடக்கு திசை நோக்கி உள்ளது.

கரண்ட மகுடம், காதுகளில் பத்திர குண்டலங்களுடன், கழுத்தில் சரபலி, மார்பு கச்சை, தோள்பட்டையுடன், இடுப்பில் அரையாடை முடிச்சுடன் உள்ளது. 4 கரங்களில் சங்கு, சக்கரம், அபயம், கடிஹஸ்தங்கள் காட்டப்பட்டுள்ளது. பல்லவர் காலமான , 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தது இது

******

சுய புராணம் MY STORY  ALLOT LOT LUCKY PRIZE JOURNALIST QUOTA

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு முதல் ‘லாட்’டிலேயே மதுரை எல்லிஸ் நகரில் ஒரு வீடு அல்லாட் ஆகியது ஏனெனில் ஜர்னலிஸ்ட் கோட்டாவில் நானும்தினமணி எடிட்டர்  ஏ என் சிவராமன் மகனும் மனுப்போட்டோம்; இரண்டே பேர்தான் மனு! இருவருக்கும் அடித்தது லக்கி பிரைஸ் ; ஆனால் என் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் சுடுகாடு!

நான் கிரஹப்பிரவேசம் செய்த நாளில் ஹோ வென்று ஒரு சடலம் எரிந்து கொ ண்டிருந்தது என் அம்மா கேட்டாள். என்னடா இது?  என்று; அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதலில் பூஜைக்கு வேண்டியதைஎடுத்து வைப்போம் என்றேன்.

பின்னர் நீண்ட  போராட்டத்துக்குப் பின்னர், பெரும் ரகளை, கிளர்ச்சிக்குப் பின்னர் சுடுகாடு மூடப்பட்டது . நிற்க

சொல்ல வந்த விஷயம் வேறு; அந்த வீட்டில் குடிபுகுந்த பின்னர் என் மகனுக்கு நிற்காத வயிற்றுப்போக்கு ஏற்பட்டது  சீர் அடித்தது என்று சொன்னார்கள் மதுரை பழங்காநத்தத்தில் போய் மந்திரித்தும் நிற்கவில்லை.

எங்கள் எல்லோருக்கும் கணபதி மந்திரத்தை தென்காசி ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா உபதேசம் செய்தார்;  கணபதி ஹோமத்தை மட்டும் எனது தந்தை மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ.சந்தானம், எனது பெரிய அண்ணன் ஸ்ரீநிவாஸன், தினமணி சீனியர் சப் எடிட்டர் வெங்கடராமனுக்கு  உபதேசம் செய்தார்; அவரை தினமும் சந்திப்பதால் அவர் வீட்டுக்குப் போய் பிரச்சனையையும் கவலையையும் கொட்டித் தீர்த்தேன்; அவர் அலட்சியமாக

இதெல்லாம் புது வீட்டுக்குப்போனால் வரும் சாதாரண பிரச்சனை இதற்குப் போய் கவலைப்படாதே என்றார்

எனக்குப் பெரிய ஏமாற்றம். என்ன சார் ? உங்களிடம் வந்தால்  நீங்கள் ஏதோ மந்திரம் போட்டு பிரச்சனையை முடித்து வைப்பீர்கள் என்று வந்தேன். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே? என்றேன் . சிறிது மெளனம் .

பின்னர், சரி ஒரு மந்திரத்தை சொல்லித் தருகிறேன்; கை, கால்களை அலம்பிக்  கொண்டு (கழுவிக்கொண்டு) வா என்றார் . பெரும்பாலோருக்குத் தெரிந்த துர்கா சூக்தத்தின் முதல் மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் அவர் சொன்னபடி 13 ஆவ்ருத்தி /தடவை சொல்லி வருகிறேன். துர்கா தேவி பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறாள்.

–subham —

Tags- விஷ்ணு துர்க்கை ,மாமல்லபுரம் ,மகிஷாசுரமர்த்தினி ,சிற்பம் , துர்கா தேவி, என் சுய புராணம், படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-32 , Hinduism through 500 Pictures in Tamil and English-32

நம்மாழ்வார் பாசுரமும் இலங்கைத் தமிழும் (Post No.15,170)

Written by London Swaminathan

Post No. 15,170

Date uploaded in London –  10 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நான் லண்டனில் வாழும் வெம்பிளி பேட்டை, BRENT COUNCIL பிரென்ட் என்னும் நகரசபையின் கீழ் உள்ளது . இதை இலங்கைத்  தமிழர்கள் எழுதுகையில் பிரென்ற் என்று எழுதுவார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிக்கூட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பாடசாலை கிரிக்கெற் போட்டி என்று அறிவிப்பார்கள்  . விக்கிப்பீடியாவுக்குப் போனால் அவர்கள் கனடா நாட்டிலுள்ள டொராண்டோ  , ஒண்டாரியோ பெயர்களை எப்படி எழுதுகிறார்கள் என்று காணலாம் . இதோ விக்கிப்பீடியா :

ரொறன்ரோToronto in Canada

தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) . இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ONTARIO ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

***

இது பற்றி வியப்புடன், ஒரு இலங்கைத் தமிழரை இதை எப்படி உச்சரிப்பீர்கள் என்று கேட்டபொழுது டொரோண்டோ என்றார்

எழுதும்போது ஆங்கில “டி ” அல்லது தமிழ்ச் சபதத்திற்கு  “ற்” என்று எழுதுகிறார்கள். இது வேறு எங்கும் இல்லாத வினோத இலக்கணம் . தமிழில்  “ற்”  எண்டு முடியும் சொற்களைக் காண முடியாது. ஆனால் இடையில் வரும்போது “டி ” என்னும் ஒலி “ற்”  ஆக மாறுவதை நம்மாழ்வார் பாசுரங்களில் காணலாம் . பத்மநாபன் என்பதை ப”ற்”பானாபன் என்று  சொல்லி அவர் பாடுகிறார் .

தமிழ் இலக்கணப்படி கல், பல், சொல் என்பதெல்லாம் இடையில் வரும்போது கற்குவியல், பற்பொடி, சொற்கள் என்று மாறுவதைக் காண்கிறோம் ஆனால் துவக்கத்திலும் இறுதியிலும் காண முடியாது  எப்படி யாழ்ப்பாணத்தில் மட்டும் இப்படி வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியதே !

பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்,

எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த

கற்பகம், என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்

வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே. 2-7-11

***

கிறி உறி  மறி நெறி

கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே,

உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்,

மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை,

நெறி பட அதுவே நினைவது நலமே. 2-10-6

English translation of verse 2.10.6:

Desist from base deeds and remember

‘Tis good to think solely of traversing the road

Which leads to Māliruñ Cōlai where live together

Herds of deer and young ones and stays our Lord,

Who from hanging hoops ate up all the butter.

(From wisdomlib.org)

நம்மாழ்வாருக்கு மிகவும் பிடித்த சொற்கள் சில; இராப் பகல் என்பதை நிறைய பாசுரங்களில் உபயோகிக்கிறார் அது போல கிறி என்ற சொல்லும் அவருக்கு மிகவும் பிடித்த சொல்.

அகராதியில் இதற்குள்ள பொருள்:

பொய், வஞ்சம், தந்திரம், மாயாஜாலம், வழி, குழந்தைகளின் முன் கையில் அணியும் ஆபரணம்.

இங்கு வழி , நல்ல வழி என்ற பொருளில் வருகிறது.

தமிழில் பொருள்

நல்ல வழியை எண்ணுவதே சிறந்தது ; இதை வீட்டுக் கீழ்மையை எண்ணாதீர்கள் . அத்திருமாலிருஞ் சோலையில்தான் உறி வெண்ணையை எடுத்துண்டு கண்ணன் கோயில் கொண்டுள்ளான். பெண் மான்கள் தன் குட்டிகளோடு சேர்ந்து வாழும் சோலை மலைக்குச் செல்லும் வழியை நினைப்பதே நல்லது .

மறி என்றால் ஆடு என்றே பெரும்பாலும் பொருள் வருகிறது. இங்கு மான்கள் என்று வருவதும் நோக்கற்பாலது .

***

திருக்குறளுக்கு புதுப் பொருள்!

ஈரடியால் உலகளந்தவனும் மூவடியால் உலகளந்தவனும்

பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ; அந்த அவதாரத்தைச் சொல்லும்போதெல்லாம் நம்மாழ்வார், குறளா திருக்குறளா என்று பாடுகிறார் . அவர் மனத்தில் உள்ள கருத்தினை நாம் அறிய முடிகிறது ; மூன்று அடிகளால் உலகத்தினை அளந்து ஓங்கி உலகளந்த உத்தமன்- த்ரி விக்ரமன் – என்ற பெயர் பெற்றான் விஷ்ணு .

இரண்டே அடிகளால் (குறள்) உலகத்தினையே அளந்துவிட்டான் வள்ளுவன்; அவன் பேசாத பொருள் இல்லையே! 

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி

வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே

செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்

செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

குறளா என்று பல பாசுரங்களில் அழைத்தவர் இங்கு திருக்குறள் என்ற சொல்லையே பயன்படுத்துவத்தைக் கவனிக்க வேண்டும் . நம்மாழ்வார் திருக்குறளை நன்றாகக் கற்றவர் என்பதை பல பாசுரங்கள் மூலம் அறிய முடிகிறது . மாணிக்க வாசகரின் திருவாசகமும் அவர் பாசுரங்களில் எதிரொலிக்கிறது. அவற்றைத் தனியாகக் காண்போம் .

***

இதைத் திருவள்ளுவமாலையில் பரணரும் பாடியுள்ளார்.

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்

ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்

வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்

உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

இந்த பரணர் பிற்கால பரணர் ஆவார்.

–subham—

Tags- திருக்குறளுக்கு, புதுப் பொருள், கிறி உறி  மறி நெறி, நம்மாழ்வார் இலங்கைத் தமிழ், திருக்குறளா

My Old Articles

இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)

Post No. 13,659

Date uploaded in London – 12 September 2024         

பரிகரிஅரிநரிமறிகிரிசுரிவரி (Post No.6057)


Date: 10 FEBRUARY 2019


Post No. 6057

தமிழ் ஒரு அழகான மொழி. பழைய கால ஆநந்தவிகடன் அகராதி அல்லது அதற்கு முந்திய நிகண்டுகள் ஆகியவற்றை எடுத்துப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு சொல்லுக்கு இத்தனை பொருளா என்று ஒரு புறம் வியப்போம். ஒரே பொருளைச் சொல்ல இத்தனை சொற்களா என்று மறு புறம் வியப்போம். தாமரை என்பதற்கு பல சொற்கள் இருக்கும். அரி என்ற ஒரு சொல்லுக்கு பல வித அர்த்தங்கள் இருக்கும். மேலும் ஒருஎழுத்து,  இரு எழுத்துச் சொற்களைக் கொண்டே நிறைய விஷயங்களைச் சொல்ல முடியும்.

இந்தச் சொல்லையோ,சப்தத்தையோ வேறு மொழிகளில் பிரயோகித்தால் இன்னும் வியப்பான விஷயங்கள் வரும்.

உதாரணமாக அரி என்ற சொல்லுக்கு விஷ்ணு, பகைவன், சிங்கம் இன்னும் பல பொருள்கள் வரும். ஹீப்ரூ (Hebrew)  மொழியிலும் அரி என்றால் சிங்கம்  என்பதைக் கண்டு வியப்போம். கேஸரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் (கேசம்/முடி உள்ள மிருகம்)  ஸீசர் என்று உச்சரிக்கப்பட்டு ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் என்ற பெயர்களில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புகுந்தது.

ஒரே சப்தம் வரும் சொற்களைச் சொல்லுவதும் கவிதை போல இருக்கும். அதை நினைவு வைத்துக் கொள்வதும் எளிதாக இருக்கும். சொல் விளையாட்டுகளை விளையாடவும் ஏதுவாக இருக்கும்.

குறுக்கெழுத்துப் போட்டி, தமிழ் ஸ்க்ராபிள் (Tamil Scrabble) , சொல் போட்டி போன்றவை மூலமும் விடுகதைகள் மூலமும் மாணவர்களை டெலிவிஷன், வீடியோ கேம்ஸ் முதலியவற்றில் இருந்து திசை திருப்பலாம்.

நான் என் மகன்களுடன் ரயிலில் செல்லும்போது ஒரே சப்தத்தில் முடியும் ஆங்கிலச் சொற்களைச் சொல்லி விளையாடுவோம். ‘ஷன்’ (Tion or Sion)  என்று முடியும் சொற்கள் என்றால்

Consternation

Conflagration

Concentration

Condemnation

Education

Fruition

என்று நூற்றுக் கணக்கில் வரும்.

நாங்கள் மூவரும் சொன்ன சொற்களைக் கேட்டு ஆங்கிலேயர் ஒருவரே வியந்து பாராட்டினார். இன்னும் சிலர் மூக்கில் விரலை வைத்து வியக்காமல் கண்களால் வியந்தனர்.

தமிழிலும் இது போல அறிவு தொடர்பான விஷயங்கள்  பரவ வேண்டும்

யூ ட்யூப், You Tube, Social Media, சோஷியல் மீடியா (பேஸ் புக், வாட்ஸ் அப்), பத்திரிக்கைகள், சினிமா, நாடகங்களில் சில காட்சிகள், பள்ளிக்கூடங்களில் போட்டிகள் மூலம் இவைகளை வளர்க்கலாம்.

நான் சொல்லுவதை விளக்க ஒரே ஒரு உதாரணம்:–

“ரி” சப்தத்தில் முடிய வேண்டும்

விலங்கியல் பெயராக இருக்க வேண்டும் என்று போட்டி விதி வைத்துக் கொள்வோம். எனக்கு உடனே நினைவில் வரும் சொற்கள்

அரி- சிங்கம்

பரி-குதிரை

வரி-வண்டு

நரி- நரி,குள்ள நரி

மறி- ஆடு

கரி- யானை

கிரி-பன்றி

உரி– கடல் மீன் வகை

சுரி- ஆண் நரி

அரி-குரங்கு, சிங்கம்

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறுக்கெழுத்துப் போட்டிகள் பிரபலமான காலத்தில் வந்த ஆநந்தவிகடன் அகராதி போன்றவை இருந்தால், ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள வேறு பொருள்களும் வியப்பைத் தரும்

வியப்பான செய்தி

தமிழில் அகராதியே இல்லை!!! இப்போது நீங்கள் எந்தக் கடையில் சென்று எந்தப் பதிப்பக அகராதி வாங்கினாலும், ஆங்கில-தமிழ், இந்தி -தமிழ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தமிழ் என்ற பெயரில், சம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும். தனித் தனியாக ஒவ்வொரு பக்கத்திலும் தமிழ்- ஸம்ஸ்க்ருத சொல் விகிதாசாரம் போட்டுப்  பார்த்தால் ஸமஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்.

நம்  முன்னோர்கள்   தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் இரு கண்களாக   பார்த்ததால் தமிழ் அகராதி என்ற பெயரில் ஸம்ஸ்க்ருதச் சொற்களையும் சேர்த்தனர். ஆங்கிலத்திலும் இப்படித்தான். பிற மொழிச் சொற்களும் ஆங்கில அகராதியில் இருக்கும்.

(ஆக்ஸ்போர்டு அகராதியில் உள்ள ‘ஐயோ,’ ‘பறையா’ என்ற தமிழ் சொற்களை அகற்றக் கோரி நான் இயக்கம் நடத்தி வருகிறேன்.)

எடிமலாஜிகல் டிக்சனரி என்ற பெயரில் பர்ரோ, எமனோ போன்றோர் திராவிடச் சொற்களை மட்டும் கொண்டு சொற் பிறப்பியல் (Etymological)  அகராதி தொகுத்தனர்.

ஆனால் அதிலும் குறை கண்டேன். நீர் (Nereids=water nymphs) என்ற தமிழ்ச் சொல்

கிரேக்க மொழியிலும் உள்ளது அரிசி என்ற(Oryza) சொல் செமிட்டிக் மொழிகளிலும் கிரேக்கத்திலுமுளது. இவை தொடர்பின் மூலம் பரவியதா அல்லது மனித இனம் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசி, இப்போது மிச்சம் மீதியாக நிற்கின்றனவா  என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

எடுத்துக் காட்டாக சப்த=ஏழு என்ற சொல் செமிட்டிக், ஸம்ஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் 3000 ஆண்டுகளாக இருக்கிறது. ஆக, சிந்து-ஸரஸ்வதி நாகரீகத்திலும் இது இருக்கவேண்டும். இப்படி அணுகினோமானால் பல புதிர்களுக்கு விடை  கிடைக்கும்.பிலோனிய தெய்வமான செப்பெத்து, யூதர்களின் சப்பத் (sabbath day= seventh day) ஆகியவை ஏழு தொடர்பானவை.

நிற்க.

சொல் ஆட்டம், சொற் சிலம்பாட்டம் விளையாடுவோம்.

தமிழை வளர்ப்போம்!!

–சுபம்–

TWO BOOKS ON AZVARS

ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

பொருளடக்கம்

1.நான் பெருந்தமிழன் :பூதத்தாழ்வார் பெருமிதம்

2. ஆழ்வார் தரும் அதிசயச் செய்தி: 7 மலை, 7 கடல், 7 முகில்;

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

3. ஊர்வசியே வந்து ஆடினாலும் போகமாட்டேன் :ஆழ்வார் உறுதி

4. நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும்

5. பொய்கை ஆழ்வாரின் அற்புதச் சொல் வீச்சு; பாணினியின் ஒப்பீடு

6. முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம்

7. வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு சிவப்பு! அப்பரும் ஆழ்வார்களும் – ஒரு ஒப்பீடு

8.நலம் தரும் சொல் – திருமங்கை ஆழ்வார் கண்டுபிடிப்பு

9.நோய்களுக்கு பெரியாழ்வார் கட்டளை

10.ஆழ்வார்கள் கேள்வி-பதில் குவிஸ்

11. கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், 

உப்பைப் போல இருப்பான் பக்தன்

12. பாரதி – நம்மாழ்வார் – கிருதயுகம்

13. தமிழில் வைஷ்ணவ ஜனதோ -அசலாம்பிகையின் அற்புதக் கவிதை :

நாமக்கல் வெ .ராமலிங்கம் பிள்ளை

14.தமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை

15. கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம்

*****

தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

பொருளடக்கம்

1.திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்! ஆண்டாளும் நகைகளும்

2.பறை என்றால் என்ன ?

3.ஆண்டாளும் மொழியியலும்

4.ஆண்டாள் காலம் பற்றிக் குழப்பம்!

5.ஆண்டாள் போடும் மார்கழி மாதப் புதிர்!

6.பாவை என்பது என்ன? 

7.ஆண்டாள் பாடல்களில் இயற்கைக் காட்சிகள்! 

8.ஆண்டாள் பாடலில் உபநிஷத்தும் சன்யாசிகளும்!

9.திருப்பாவையின் அமைப்பு

10.திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு!

11.முப்பத்து மூவர்

12.அம்பரமே தண்ணீரே சோறே!

13.‘அல்குல்’ பற்றி ஆண்டாள் பேசலாமா?

14.கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ?

15.திருப்பாவை ராகங்கள்

16.ஆண்டாள் பொன்மொழிகள்

*****

17.வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

18.வள்ளலார் முருக பக்தனா ? சிவ பக்தனா ?

19. தெய்வமணி மாலையில் உவமை நயம்

20. மேலும் பல உவமைகள்

21.வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள் -5

22.வள்ளலார் பாடலில் பகவத் கீதையின் தாக்கம்- 6

23.தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்

24.வள்ளலாரின் சிவ பக்தி!

25.வள்ளலாரும் மூலிகைகளும்!

26.வள்ளலாரின் கந்தர் சரணப்பத்து

27.அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

28.அரசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

29.நால்வர்க்கு வள்ளலார் போடும் பெரிய கும்பிடு!

30.வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்!

31.நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் கடும் தாக்கு

32.ராமலிங்க சுவாமிகளின் 3 முக்கியப் பாடல்கள்

33.நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்?

வடலூர் வள்ளலாரின் சத்ய ஞான சபைக்கு விஜயம்

34. வள்ளலார் பொன்மொழிகள்

—subham—

அட்டையிலுள்ள ஆண்டாள் படம் , விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி . வடலூர் வள்ளலார் படம் லண்டன் சுவாமிநாதன் எடுத்தது.

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-7 (Post.15,067)

Hanuman Sculptures in Indonesia.

Written by London Swaminathan

Post No. 15,067

Date uploaded in London –  8 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 மனோஜவம் மாருத துல்ய வேகம் 

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |

வாதாத்மஜம் வானரயூத முக்யம் 

ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி ||

மனத்தின் வேகமுடையவர் ; காற்றுக்கு இணையாக வேகம் கொண்டவர் ; புலன்களை வென்றவர்;புத்திமான்களில் மிகச் சிறந்தவர்; வாயுவின் மகன்; வானர சேனைகளின் முக்கியத் தலைவன்; ஸ்ரீ ராம தூதனான அவனை தலையால் வணங்குகிறேன்.

ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகத்தை விட வேகமாகச் செல்லக்கூ டியது மனம்; மனத்தின் சக்தியை அறியாத வெள்ளைக்காரர்களுக்கு இது புரிய இன்னும் கொஞ்ச  காலம் ஆகும் .நாரதர் போல பிரபஞ்சம் சுற்றும் பயணிகளை அவர்கள்  அறியவில்லை!  

ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

இதன் பொருள்:-

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்  –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு

அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்

அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்

****

Vali- Sugriva fighting; Rama shooting with an arrow from behind the tree

யார் கொலோ சொல்லின் செல்வன் !!

கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன் என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன்.

அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய

மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –

(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).

இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து “கருணையின் கடல் அனையர்” என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன் மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-

சதமன் அஞ்சுறு நிலையர்

தருமன்  அஞ்சுறு சரிதர்

மதனன்  அஞ்சுறு வடிவர்

மறலி அஞ்சுறு விறலர்”

பொருள்:–

இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,

தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,

மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,

யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.

என்ன அழகான வருணனை!

அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும் ‘தனக்குவமை இலாதான்’ என்ற  அடைமொழியை கம்பன், அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் – என்கிறான் கம்பன் .

 Vaanara Sena acceptedd Rama only after testing his strength; Rama was asked to pierce throuh seven strongest trees in Kishkinda (Now Hampi in Karnataka)

ராமனையும் லட்சுமணனையும்  நேரில் பார்த்த அநுமன்

“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு” (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்.

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..

உடனே அனுமன்,

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.

உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு வனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

***

அனுமனின் சொல்லாற்றல்

அனுமனின் சொல்லாற்றலால் அவனை ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவார் கவிச் சக்ரவர்த்தி கம்பர்.

ராமனின் குண நலன்களை வருணிக்கும் வால்மீகியோ, ராமனை

மித பாஷி= (குறைவாகப் பேசுபவன்);

ஹித பாதி= ( மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தருவதை சொல்பவன்);

ஸ்ருத பாஷி= (உண்மையே பேசுபவன்);

பூர்வ பாஷி (தலைக் கனம் கொஞ்சமும் இல்லாமல் நதானே போய் முதலில் பேசுபவன்);

என்று நான்கு அடைமொழிகளால் வருணிப்பார். இந்த நான்கு குணங்களும் இருந்தால் அவனை யார் வெல்ல முடியும்?

அனுமனின் சொல்லாற்றலுக்கு எடுத்துக் காட்டு, சீதையைக் கண்டு பேசிவிட்டு, முதல் முதலில் ராமனைச் சந்தித்தவுடன்,

கண்டெனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்

தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்

அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும்

பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம், கம்ப ராமாயணம்

இந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி போடுவது போல கண்டேன் கற்பினுக்கு அணியை (சீதையை) என்று சொல்லிவிட்டு என் கண்களால் பார்த்தேன் என்றும் சேர்க்கிறான். இக்காலப் பத்திரிக்கைகள் போல சொல்லப்படுகிறது, அறியப் படுகிறது, நம்பப்படுகிறது என்றெல்லாம் சொல்லாமல் என் கண்களால் கண்டேன் என்கிறான். இங்கே அனுமனின் சொல்லாற்றலையும் கம்பனின் கவி புணையும் ஆற்றலையும் ஒருங்கே காண்கிறோம்.

இதனால்தான் ராமன் – அனுமன் முதல் சந்திப்பின் போதே

இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே – என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற் றன்றே! யார் கொல் இச் சொல்லின் செல்வன்!

வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ! விடைவலானோ!

இந்தச் சொல்லின் செல்வன் நான்மறைகளை நாலு வாயாலும் சொல்லும் பிரம்மாவா? மொழிகளுக்கு எல்லாம் மூல முதல்வனான விடை ஏறு சிவ பிரானா? என்று வியக்கிறான் ராமன். காரணம் முதலில் அனுமன் தன்னைப் பணிவுடன் அறிமுகப் படுத்திக் கொண்ட முறை!!

ஆக பொது இடங்களில் பேசுவது எப்படி என்பதில் ஆதி சங்கரரரும் வள்ளுவரும் ஒன்றிப்போவதைக் கண்டு சுவைத்து மகிழலாம்.

***

பணிவுக்கும் துணிவுக்கும் மட்டும் பெயர் எடுத்தவர் ஆஞ்சனேயர் என்று எண்ணிவிடக்கூடாது; கண்மூடித்தனமான பக்திக்கும் அவர் எடுத்துக்காட்டு இதை தாஸ்ய பக்தி என்பர். ராமதாஸனாக  விளங்கும் அவரை கிஷ்கிந்தா காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும் , யுத்த காண்டத்திலும் காணலாம்

இதோ ஒரு கதை :

ஜாம்பவான் மூலம் அனுமனின் பக்தியையும் அளவுகடந்த திறமையையும் அறிகிறோம்; பிராம்மாஸ்த்திரத்தின் தாக்குதலால் , போர்க்களத்தில்  லெட்சுமணன் உளப்பட அனைவரும் மூர்ச்சசையாகி இருக்கின்றனர்; ஆனால் விபீஷணன் பாதிக்கப்படவில்லை; அவர் ஒவ்வொருவர் அருகிலும் வந்து உடல்நிலையைச் சோதிக்கிறார். ஜாம்பவான் அருகில் வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி :

ஆஞ்சனேயர் உயிருடன் இருக்கிறாரா ?

விபீஷணனுக்கு ஒரு அதிர்ச்சி. ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் முதலியோர் பற்றிக் கேட்காமல் ஏன் அனுமன் பற்றி மட்டும் விசாரிக்கிறீர்?

என்று வினவினார் விபீஷணன் ..

ஜாம்பவான் பதில் சொல்கிறார் :

அனுமன் ஒருவன் உயிரோடு இருந்தால் அனைவரும் பிழைத்துவிடுவார்கள் அவன் புத்திமான்; பலவான்; காற்றினும் கடுகிச் செல்பவன் அவன் எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க  முடியும் . இதை ராமாயணக் கதையிலும் காண்கிறோம்; சஞ்சீவி பர்வதத்தையே பெயர்த்து எடுத்து வந்து — ஆக்சிஜன் சிலிண்டர்  பொருத்தியது போல– அனைவருக்கும் உயிர்மூச்சினை உண்டாக்கினார்

***

சிவ பெருமானின் அவதாரம் தான் ஹனுமான் என்பதற்கு குறைந்தது மூன்று இலக்கிய ஆதாரங்கள்  இருக்கின்றன.

அதில் ஒரு ஆதாரம் , முருகன் புகழ் பாடிய திருப்புகழில்  கிடைக்கிறது. இந்த 3 ஆதாரங்களும்   ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையானது ; வால்மீகி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய ராமாயணம்தான் மிகவும் பழமையானது என்றாலும்  பரந்த பாரத பூமியில் செவி வழியாக வந்த எவ்வளவோ செய்திகள் 3000 ராமாயணங்களிலும் ராமன் பற்றிய பாடல்களிலும் கிடைக்கின்றன. இவைகளை எல்லா மொழிகளிலும் இருந்தும் தொகுத்து புஸ்தகமாக வெளியிட்டால் அவை பல தொகுதிகளாக, ஒருவேளை பல நூறு தொதகுதிகளாக வர வேண்டியிருக்கும். கடல் அளவுக்குப் பெருகியது ராமாயணம்; தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயணம் செய்தால் அங்குள்ள அதிசய வினோத ராமாயணங்களில் நாம் அறியாத புதிய கதைகளைக் கேட்டு ரசிக்கலாம்; அதில் வியப்பில்லை. நம்முடைய சம்ஸ்க்ருத பெயர்கள்,  இந்தியாவுக்கு வெளியே எத்ததனை விதமான ஸ்பெல்லிங்க்குகளில் எழுதப்படுகிறது என்ற விநோதத்தைக் கண்டால் ,  இன்னும் வியப்பாக இருக்கும்;

அனுமனின் தாயின் பெயர் அஞ்சனா (அஞ்சனை ); தந்தையின் பெயர் கேசரி . அஞ்சனா என்ற பெண்மணி , சிவபெருமானை வேண்டி பெற்றபிள்ளை அனுமன் என்று பாவார்த்த  ராமாயணம் கூறுகிறது. இதை எழுதியவர் மராட்டிய பூமியில் அவதரித்த மஹான் ஏக நாதர் .

தசரதன், புத்ர காமேஷ்டி யாகம் செய்த பின்னர் யாக குண்டத்திலிருந்து வந்த பாயசத்தை மூன்று மனைவியருக்கும் பிரித்துத் தந்ததை வால்மீகி நமக்குச் சொன்னார். அதில் கீழே சிந்திய ஒரு பகுதியை கருடன் எடுத்துச் செல்லவே , அது அஞ்சனை தவம் செய்த காட்டில் விழுந்தது; அதை வாயு பகவான் அஞ்சனை இடம் தந்தான். அவளும் சிவனை நினைந்து அதை அருந்தவே கர்ப்பம் அடைந்து வாயுகுமாரனைப்  பெற்றாள் . பிறந்த குழந்தை சிவனுடைய அம்சத்துடன் பிறந்தது .

***

இன்னுமொரு கதை :

ராமன் என்னும் அவதாரம் ராவணன் என்னும் ராட்சசனை அழிக்க வந்தது ; அப்போது வைகுண்டத்தில் அல்லது சொர்க்கத்தில்  இருந்த ஒவ்வொருவரும் பூமியில் வெவ்வேறு பெயர்களில் தோன்றினார்கள். தேவர்கள் வானரங்களாகவும், சிவ பெருமான் அனு மானாகவும் அவதரித்து ராவண ஸம்ஹரத்தில் உதவினார்.

இதை ஏகநாதர் பாடல்களும் , அருணகிரி நாதரின் திருப்புகழும் , துளசிதாஸரின் ஹனுமான் சாலீசாவும் சொல்கினறன.

அனுமன் சிவனின் அவதாரம்

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று

கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி

கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து

கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை

அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி

அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது

அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி

இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்

எரியது என்றும் ருத்ரற் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்

எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ

அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற

அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து

அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே

பொருள்–

கருவிலே சேர்ந்து பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்து

கரு முற்றிப் பக்குவம் அடைந்து கடைசியில் பூமியில் வந்து பிறந்து

குழந்தையின் வடிவத்தில் தோன்றி, குழந்தையை அங்கு கழுவியெடுத்து,  சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க தரையிலே கிடந்தும், அழுதும், உள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும், நடை பழகியும், அரைநாண் கட்டியும், காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,  பொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும், முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,அருமையான பெண்களின் நட்பைப் பூண்டு,

நோய்வாய்ப்பட்டு அலைந்து திரிந்தது போதும். (இனிமேல்)

உனது அருள் கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?

சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி) வெற்றி வானர அரசர்களாகவும், ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன் கரடி  இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும், நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும், ஒப்பில்லாத தேவர்கள் யாவரும் இன்னின்ன வகைகளிலே வந்து இப் பூமியில் சேர்ந்திட, (இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து, அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன் புகழும் குணம் வாய்ந்த  மருமகனே, பிரம்மாவையும் கோபித்து,  (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் அன்புடன் அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

***

ஹனுமான்  சாலீசா

ஶங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।

தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥

வித்³யாவான கு³ணீ அதி சாதுர ।

ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥

பொருள்

. நீங்கள் சிவபெருமானின் அவதாரம் பரிசுத்தமான, ஏகாந்தமான, அழகான கைலாச பர்வதத்தில் அமர்ந்து ராம நாம ஜபம் செய்கிறீர்கள் ; உங்களுடைய இருதயம் என்னும் காட்டில் ராமன் எபோதும் உலவிக்கொண்டு இருக்கிறார். ராமாவதார நோக்கத்தை நிறைவேற்ற நீங்களே கேசரி மைந்தனாக அவதரித்தீர்கள் புகழ் ஒளியாலும் , வீரத்தாலும் உயர்ந்த உங்களை உலகமே தொழுது நிற்கிறது என்று உரைகாரர்கள்  விளக்கியுள்ளனர்.

8.ஆழம் காண முடியாத அறிவுடையவர் நீங்கள்; நற்குணங்களும் செயலாற்றுவதில் பெரும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் .ராமனுக்குப் பணி செய்வதையே குறிக்கோளாக உடையவர்.

ஆக துளசிதாஸர் , ஏகநாதர் , அருணகிரி நாதர் மூவரும் அனுமனை சிவனின் அம்சமாகவே கருதுகின்றனர்.

 to be continued………………….

tags–Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-7, Part Seven, அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி,கண்டெனன் கற்பினுக்கு அணியை, சொல்லின் செல்வன் 

பாரதி போற்றி ஆயிரம் -முதல் பாகம் (Post.14,977)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,977

Date uploaded in London – 13 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

பாரதி போற்றி ஆயிரம்

முதல் பாகம்

ச. நாகராஜன்

(இந்த நூலைத் தொகுத்தவர்) 

22 கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய 254 பாடல்கள் இந்த முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.

அடுத்த இரு பாகங்களில் 746 பாடல்கள் இடம் பெறுகின்றன.

** 

முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ள முன்னுரையின் ஒரு பகுதி

முன்னுரை 

என்னுடைய குடும்பமே பாரதி பற்றுடைய குடும்பம் என்றால் அது மிகையாகாது.

 எனது தந்தையார் தினமணி திரு வெ. சந்தானம் பாரதியார் பாடல்களை ஜெயபாரதியில் வெளியிட்டு பாரதியைப் பரப்பும் பணியில் ஈடுபட்டவர்.

 அவர் பாரதியாரின் பாடல்களை உணர்ச்சியுடன் பாடும் போது பிரமித்துப் போய் மெய்மறந்து அதைக் கேட்போம். எனது சகோதரர்கள் அனைவரும் பாரதியார் பாடல்களைப் பரப்பும் பணியில் இடைவிடாது ஈடுபட்டவர்கள்.

 அடுத்து சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய திரு வி.ஜி. சீனிவாசன் சிறந்த பாரதி பக்தர். எங்கள் குடும்ப நண்பர். அவர் எங்களை பாரதியார் வழியில் நன்கு ஊக்குவித்தவர்.

 ஆக இயல்பாகவே பாரதியாரைப் போற்றியவர்களை நாங்கள் போற்றி வந்தோம். இந்த வகையில் பாரதியாரைப் போற்றி வெளிவரும்  நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்பொழுது படித்து இவற்றைத் தொகுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் அவ்வப்பொழுது என் மனதில் எழுவதுண்டு.

 மகாகவி பாரதியாரை அறிமுகப்படுத்தும் நல்ல நூல்களை அறிமுகப்படுத்திய எனது கட்டுரைகளின் தொகுப்பு இரு பாகங்களாக புஸ்தகா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. (மஹாகவி பாரதியாரை பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும் பாகம் 1 மற்றும் பாகம் 2)

 அத்துடன் மஹாகவி பாரதியார் பற்றி அவ்வப்பொழுது எழுதிய எனது கட்டுரைகளின் தொகுப்பையும் புஸ்தகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

(அதிசய மஹாகவி பாரதியார்)

 பாரதியாரைப் போற்றி எழுதப்பட்ட ஒராயிரம் கவிதைகளை சேகரித்து, தொகுத்து www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கில் 11-12-2017 முதல் வெளியிட ஆரம்பித்தேன். இந்தப் பணி 7.5.2018இல் முடிவு பெற்றது.

*

முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ள

கவிஞர்கள், பாடல்களின் பட்டியல்

பகுதி

எண்       கவிஞர்                பாடல்கள்         பாடல்களின்

                                                    தொடர் எண்

1     வி.ஜி.சீனிவாசன்                 6               1 முதல் 6

2.    இரகுபதி சாமிநாதன்              1               7

     இரா. இளங்குமரன்               5               8 முதல் 12

3.    கலைமோகன்                    3               13 முதல் 15

     மு. சதாசிவம்                    2               16, 17

     கா. தேவராசக்கனி           1               18

4.    சூ. கிரிதரன்                6               19 முதல் 24

5.    ம.க.சிவசுப்பிரமணியன்      6               25 முதல் 30

6.    பாரதிதாசன்                6               31 முதல் 36

7.    பாரதிதாசன்                6               37 முதல் 42

8.    பாரதிதாசன்                9               43 முதல் 51

9 .   நாமக்கல் கவிஞர்           10              52 முதல் 61

10.   நாமக்கல் கவிஞர்           13               62 முதல் 74

11.   நாமக்கல் கவிஞர்           8               75 முதல் 82

12.   நாமக்கல் கவிஞர்           5               83 முதல் 87

13.   நாமக்கல் கவிஞர்           5               88 முதல் 92

14.   நாமக்கல் கவிஞர்           3               93 முதல் 95

     பட்டுக்கோட்டை

     கல்யாணசுந்தரம்                  1               96

15.   அழ.வள்ளியப்பா                  5               97 முதல் 101

16.   கவிமணி தேசிக விநாயகம்

     பிள்ளை                         6               102 முதல் 107

17.   கவிமணி தேசிக விநாயகம்

     பிள்ளை                         6               108 முதல் 113

18.   கவிமணி தேசிக விநாயகம்

     பிள்ளை                         6               114 முதல் 119

19.   கவிமணி தேசிக விநாயகம்

     பிள்ளை                        6               120 முதல் 125

20.   கவிமணி தேசிக விநாயகம்

     பிள்ளை                         6               126 முதல் 131

21.   கவிமணி தேசிக விநாயகம்

     பிள்ளை                         3               132 முதல் 134

22.   பாரதிதாசன்                2               135,136

23.   பாரதிதாசன்                5               137 முதல் 141

24.   பாரதிதாசன்                5               142 முதல் 146

25.   பாரதிதாசன்̀̀                6               147 முதல் 152

26.   பாரதிதாசன்                4               153 முதல் 156

27.   பாரதிதாசன்                3               157 முதல் 159

28.   கண்ணதாசன்                    5               160 முதல் 164

29.   கண்ணதாசன்                    4               165 முதல் 168

30.   கண்ணதாசன்                    5               169 முதல் 173

31.   கண்ணதாசன்                    6               174 முதல் 179

32.   கண்ணதாசன்                     8               180 முதல் 187

33.   கண்ணதாசன்                    6               188 முதல் 193

34.   கண்ணதாசன்                    4               194 முதல் 197

35   பண்டித ஜனாப் K. அப்துல்

     சுகூர் (1933)                       8               198 முதல் 205

36.   பண்டித ஜனாப் K. அப்துல்

     சுகூர் (1933)                     18            206 முதல் 213

37.  நா.சீ. வரதராஜன்                  4               214 முதல் 217

38.  சங்கு கணேசன்                   1               218

    மதிவண்ணன்                2               219, 220

    ஆர்.பி.சாரதி                       1               221

39.  கவிஞர் தமிழழகன்          10              222 முதல் 231

40.  கவிஞர் K.ராமமூர்த்தி            9               232 முதல் 240

41.   கவிஞர் K.ராமமூர்த்தி            9             241 முதல் 249

42.  திருமதி சௌந்தரா கைலாசம்    5             250 முதல் 254

****

கவிஞர்கள்

1     வி.ஜி.சீனிவாசன்                

2.    இரகுபதி சாமிநாதன்             

3.    இரா. இளங்குமரன்              

4.    கலைமோகன்                   

5.    மு. சதாசிவம்                   

6.    கா. தேவராசக்கனி          

7.    சூ. கிரிதரன்               

8.    ம.க.சிவசுப்பிரமணியன்     

9.    பாரதிதாசன்               

10.   நாமக்கல் கவிஞர்          

11.   பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்                 

12.   அழ.வள்ளியப்பா                 

13.   கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை                          

14.   கண்ணதாசன்              

15   பண்டித ஜனாப் K. அப்துல் சுகூர்                         

16.  நா.சீ. வரதராஜன்                 

17.  சங்கு கணேசன்                  

18.  மதிவண்ணன்               

19.  ஆர்.பி.சாரதி                      

20.  கவிஞர் தமிழழகன்         

21.  கவிஞர் K.ராமமூர்த்தி           

22.  திருமதி சௌந்தரா கைலாசம்  

to be continued…………………………….

**********

காளிதாசன் நூல்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் சங்கீதம் (Post.14,894) Part 1

Written by London Swaminathan

Post No. 14,894

Date uploaded in London –  23 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

காளிதாசனின் நூல்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும்  இசை  பற்றி வரும் செய்திகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். 

காளிதாசன் எழுதிய ஏழு நூல்களில் குறைந்தது முப்பது இடங்களில் இசைக் கருவிகளின் பெயர்கள் வருகின்றன . இவை தவிர ஆடல்-பாடல் என்ற பல குறிப்புகளும் உள்ளன . குறிப்பாக வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் பற்றிப் பாடுகிறார் .

சங்கத் தமிழில் பல நூல்களில் இசைக்குறிப்புகள் உள்ளன. சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த சிலப்பதிகார காப்பியத்தில் உரைகள் மூலம் நிறைய செய்திகள் கிடைக்கின்றன அரைச்சலுரில் இசைக் கல்வெட்டு இருக்கிறது சிலப்பதிகாரம் நடந்த காலமும் அரைச்சலுர் கல்வெட்டுக் காலமும் இரண்டாம் நூற்றாண்டு என்பதால் அவைகளையும் சங்க காலத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்  வீணை என்ற வாத்தியம் இன்று பிரபலமானாலும் சிலப்பதிகார காப்பியத்தில்தான் முதல்  முதலில் நாரதர் வீணை என்ற குறிப்பு வருகிறது அதற்கு முன்னர் அதற்கு இணையான யாழ் மட்டுமே இருந்தது. அதைக் குப்தர் கால சிற்பம் மிக அழகாகக் காட்டுகிறது அதே வடிவ இசைக்கருவிகள் இப்போது மேல்நாட்டில் மட்டுமே வாசிக்கப்படுகின்றன.

முதலில் ஒரு சுவையான விஷயத்தைக் காண்போம் காளிதாசன் குறைந்தது மூன்று இடங்களில் வல்லகி என்ற இசைக் கருவியைப் பாடியுளான்  . இது வீணையல்ல; இதுதான் யாழ்; சங்கத் தமிழ் நூல்கள்   யாழ்   பற்றிக் குறிப்பிட்டாலும் அதன் உருவத்தைக் காட்டும் சிற்பங்கள் கிடைக்கவில்லை .

Yaaz= Vallaki 1700 years ago.

Russian Folk Music Instrument.

மத்தியப்பிரதேசத்திலுள்ள பவாயா (புராதன பத்மாவதி நகரம்)  என்னும் இடத்தில் சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ள . இதில் அழகான பெண் யாழ் வாசிக்க மேலும் சிலர் தபேலா போன்ற மத்தளங்களை வாசிக்க ஒரு பெண் நடனம் ஆடுகிறாள்; இன்னும் ஒரு பெண் வாசிக்கும் கருவி சேதமடைந்ததால் முழுவதையும் பார்க்க முடியவில்லை. வல்லகி என்னும் யாழ் கருவியில் ஏழு தந்திகள் உள்ளன. இதை இப்போதும் ரஷ்யர்கள் பாலைலாகா (வலைலாகா ) என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர் பிராக்ருதத்தில் வல்லகியை வல்லாய் என்றுதான் சொல்லுவார்கள். ஆக ரஷ்ய மொழியில் இது பலாலகா ஆனதில் வியப்பில்லை; ரஷ்யாவில் இதன் கதை 400 ஆண்டுகளுக்குள் அடங்கிவிடுகிறது. அதற்கு முன்னர் என்ன பெயர் இருந்தது, இது எப்படித் தோன்றியது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை  

प्रतियोजयितव्यवल्लकीसमवस्थामथ सत्त्वविप्लवात्|

स निनाय नितान्तवत्सलः परिगृह्योचितमङ्कमङ्गनाम्॥ ८-४१

இறந்துபோன இந்துமதியை அஜன் தனது மடியில் வைத்துக் கொண்டான். அவளோ இசை எழுப்ப முடியாத தந்திகள் தளர்ந்த வல்லகி போல இருந்தாள்

pratiyojayitavyavallakīsamavasthāmatha sattvaviplavāt|

sa nināya nitāntavatsalaḥ parigṛhyocitamaṅkamaṅganām || 8-41

 [VALLAKI: tusahāra 1, 8.] [Raghuvaśa 8, 41. 19, 13.]

***

अङ्कमङ्कपरिवर्तनोचिते

तस्य निन्यतुरशून्यतामुभे।

वल्लकी च हृदयंगमस्वना

वल्गुवागपि च वामलोचना॥ १९-१३

அவனுடைய மடியை  இனிய நாதமுடைய வல்லகியும் , இனிய சொல்லுடைய பெண்ணும் அலங்கரித்தன ;

aṅkamaṅkaparivartanocite

tasya ninyaturaśūnyatāmubhe |

vallakī ca hṛdayaṁgamasvanā

*****

வீணையும் வல்லகியும் வேறு வேறு இசைக்கருவிகள் என்பதை அமரகோசமும் கூறுகிறது. அதுதான் உலகில் தோன்றிய முதல் அகராதி/ நிகண்டு:-

Harmony (1), Lute (veena) (3), Seven stringed lute (1)

(१.७.४१३)  समन्वितलयस्त्वेकतालो वीणा तु वल्लकी

(१.७.४१४)  विपञ्ची सा तु तन्त्रीभिः सप्तभिः परिवादिनी

Harmony (1), Lute (veena) (3), Seven stringed lute (1)

(१.७.४१३)  समन्वितलयस्त्वेकतालो वीणा तु वल्लकी

(१.७.४१४)  विपञ्ची सा तु तन्त्रीभिः सप्तभिः परिवादिनी

***

காளிதாசன் நூல்களில்  இசை பற்றிய குறிப்புகள்:

துந்துபி – ரகு.10-76

கண்டா – ரகு .7-41;

மிருதங்கம் -ரகு.13-40, 14-14, 14-64, 19-5; மாளவிகா.1-21

முரஜா – மேக.58,66; குமார 6-40;. மாளவிகா.1-22

படகா – மேக36;. ரகு.9-71

புஷ்கர – மேக.72  ரகு.17-11, 19-14,  மாளவிகா.1-21

தூர்ய – ரகு.3-19, 6-9, 6-56, 10-76, 16-87 விக்ர.4-12;  குமா.7-10;

வல்லகி- ரகு 8.41;19-13; ருது.1-8

வேணு ரகு.19-35 ;

வீணா – ரகு.8-33, 19-35;  மேக.91

இந்தக் குறிப்புகளிலிருந்து காளிதாசனின் இசைப் புலமையும் ஆர்வமும் தெரிகிறது ; இதை குழந்தைகள் பிறக்கும் போதும், மன்னர்களின் அரண்மனைகளிலும், போர் முழக்கங்களிலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளிலும் உஜ்ஜைனியின் சிவன் கோவில் போன்ற இடங்களிலும் காளிதாசன் பயன்படுத்தியுள்ளான். தமிழர்களைப்போலவே காடுகளில் மூங்கில் ஓட்டைகளில் காற்று புகுந்து எழுப்பும் இசையையும் மயிலின் அகவலில் வரும் ஓசையையும் குறிப்பிடுகிறான் .அவன் சங்கீதப் பிரியன் என்பது தெளிவாகிறது.

मनोभिरामाः शृण्वन्तौ रथनेमिस्वनोन्मुखैः।

षड्जसंवादिनीः केका द्विधा भिन्नाः शिखण्डिभिः॥ १-३९

manobhirāmāḥ śṛṇvantau rathanemisvanonmukhaiḥ |

ṣaḍjasaṁvādinīḥ kekā dvidhā bhinnāḥ śikhaṇḍibhiḥ || 1-39 RAGHU.

திலீபனும் சுதக்ஷிணையும் சென்ற ரதத்தின் சப்தத்தைக் கேட்டு மயில்கள் தலை நிமிர்ந்து எழுப்பிய அகவல் ஒலியைக் கேட்டுக்கொண்டே அவர்கள் சென்றனர் ;ஆண் மயில் ஒரு குரலிலும் பெண் மயில் வேறு குரலிலும் அகவின. ஷட்ஜ ஸ்வரத்துக்கு ஒப்பானவையும் இனிமையாகவும் அவை இருந்தன.

They have travelled on and on listening to the heart-pleasing screams of peacocks that have raised their faces on listening to the rhythmic rattles of chariot wheelspin and started to scream in two split-pitches, exactly like the SaDja musical notes that will be split into two pitches called chyuta broken; and achyuta unbroken. [1-39]

 If an octave contains eight notes, its Indian counterpart also contains eight, but leaving the last one, they are called sapta swara-s – sa, ri, ga, ma, pa, da, ni , but by adding one more sa in next pitch, they total to an octave. These are musically called SaDjama, R^iSabha, gAndhAra, madhyama, pancama, dhaivata, niSAda plus one more SaDja in next scale. Then these peacocks and peahens are said to be screaming in two scales/pitches. On this single verse mallinAtha sUri comments one full A4 page commentary to establish kAlidAsa’s knowledge in music.

–FROM SANSKRITDOCUMENTS.ORG

***

स कीचकैर्मारुतपूर्णरन्ध्रैः कूजद्भिरापादितवंशकृत्यम्।

शुश्राव कुञ्जेषु यशः स्वमुच्चैरुद्गीयमानं वनदेवताभिः॥ २-१२

காட்டில் மூங்கில் மர ஓட்டைகளில் இயற்கையாக எழும் புல்லாங்குழல் ஓசையைத் தமிழில் சம்ஸ்க்ருதத்தில் வல்லவரான பிராமணப் புலவன் கபிலனும் அகநானூற்றில் பயன்படுத்துகிறான்

sa kīcakairmārutapūrṇarandhraiḥ kūjadbhirāpāditavaṁśakṛtyam|

śuśrāva kuñjeṣu yaśaḥ svamuccairudgīyamānaṁ vanadevatābhiḥ || 2-12

ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்

கோடை அவ் வளி குழலிசை ஆக,

பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை

தோடு அமை முழவின் துதை குரல் ஆக,

கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,          5

மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,

இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,

………………………………………………..

நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?–அகநானூறு 82

காட்டில் எழுந்த இயற்கை ஒலிகள் ஆர்கெஸ்டரா போல இசைக்க மயில்கள் ஆடின அதற்கு ரசிகர் கூட்டம் குரங்குகள் என்கிறார் கபிலர்.

****

தமிழில் இசை

பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

To be continued…………………………..

Tags-  காளிதாசன் நூல்கள், சங்கத் தமிழ் நூல்கள், சங்கீதம், இசை வல்லகி, ரஷ்யா  

சங்க இலக்கியத்திலும் காளிதாசன் நூல்களிலும் உமா (Post No.14,889)

Written by London Swaminathan

Post No. 14,889

Date uploaded in London –  21 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மிகவும் அதிசயமான விஷயம் உமா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் அப்படியே சங்கத்தமிழ் நூல்களில் வந்தது ஆகும். காளிதாசன் சங்க காலத்துக்கு முந்திய புலவர் என்று நான் மற்றும் ரெவரென்ட் ஜி யு போப் போன்றோர் சொல்வதற்கு இது மேலும் ஒரு சான்று !

இதற்குக் காரணம் காளிதாசன் எழுதிய அற்புதமான குமார சம்பவம் என்னும் காவியமா!கும் .

அதில் முழுக்க முழுக்க உமாவின் மஹிமை வருகிறது . உ+மா என்றால் நீ (தவம்) செய்யாதே என்று பொருள் கண்டுள்ளனர் . சிவன் என்னும் காதலனை அடைவதற்காக உமா செய்த தவத்தை மிக அழகாக வருணிக்கிறார் காளிதாசன் ; சப்த ரிஷிகளும் அவளைக் கண்டு வியக்கின்றனர் !

சங்க இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் உள்ளன. வேதம், யூபம் காலம், மனம் , காம, உலகம் , வால்மீகி, பிரம்ம , தாமோதரன் கேசவன் வாதுல கோத்ரம் சாண்டில்ய கோத்ரம் கெளசிக கோத்ரம், காப்பிய கோத்ரம் போன்ற சொற்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் மீண்டும் மீண்டும் வருகின்றன. ஆனால் பெண் தெய்வங்களில் உமா என்ற ஒரு பெயர் மட்டுமே  அப்படியே வருகிறது. சம்ஸ்க்ருதத்தில் ஆ என்ற சப்தத்தில் முடியும் சொற்களை தமிழில் ஐ என்ற சப்தத்துடன் முடிப்பது இலக்கண விதி சீதா= சீதை; பகவத் கீதா= கீதை ; அதே போல உமா =உமை !

உலகப் புகழ்பெற்ற கலை வரலாற்று நிபுணர் சிவராம மூர்த்தி சொல்லுவது போல, குப்தர் கால சிற்பங்களிலும் தங்க நாணயங்களிலும் காளிதாசனின் காவியங்களின் செல்வாக்கு பிரதிபலிக்கிறது . பரம பாகவதர்கள் என்று தங்களைக் கல்வெட்டுகளிலும் தங்க நாணயங்களிலும் எழுதிக்கொண்ட குப்தர்களையே குமார குப்தன்ஸ்கந்த குப்தன்  முதலிய ஸம்ஸ்க்ருதப் பெயர்களையும் சூட வைத்தது ; 1600 ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டசோர்  கல்வெட்டுக்கள் காளிதாசனின் கவிதை பாணியில் எழுதப்பட்டுள்ளன . நிற்க . உமாவின் கதைக்கு வருவோம் .

சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் பெண் தெய்வங்கள் உள்ளனர் ; ஆயினும் காளி, துரக்கா , லட்சுமி என்று சொல்லாமல் கொற்றவை, காடுகிழாள், பழையோள், திரு, தவ்வை என்றெல்லாம் சுற்றி வளைத்து மொழிபெயர்த்தனர் ! உமாவுக்கு மட்டும் விதி விலக்கு ! அப்படியே குறைந்தது நான்கு இடங்களில் உமை என்று எழுதிவிட்டனர் !

அகம் -0-7

கலி. 38-2

முருகு.153

பரி.5-28

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் – கலித்தொகை 38-2

உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண்

மூ-எயில் முருக்கிய  முரண்மிகு செல்வன் – முருகு.153/4

கயிலை மலையில் – இமய மலையில் — சிவனுடன் உமை அமர்ந்து இருக்கும் காட்சி இது  அதைச் சொல்லும்போதும்கூட வேறு அதிசயச் செய்திகளையும் சேர்க்கிறார் நக்கீரர் ; மூன்று கண்கள் இருந்தும் ஒன்றும் இமைக்கவில்லை அதுமட்டுமல்ல வானில் தொங்கிய அரக்கர்களின் மூன்று ஸ்பேஸ் ஷட்டில்களைப் பார்வையிலேயே பஸ்மம் ஆக்கிவிட்ட செய்தியும் உளது

காளிதாசனின் குமார சம்பவம் அற்புதமான இமயமலை வருணனையுடன் துவங்குகிறது ; அதை புறநானூற்றில் உள்ள மிகப்பழைய பாடல்கள் அப்படியே மொழிபெயர்த்துள்ளன. என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நான் எழுதிய ஒப்பீடுகள், மூன்று நூல்களாக அச்சில் வெளிவந்துள்ளன.

***

அர்த்தநாரீஸ்வரர்

உலகிலேயே பெண்களுக்கு முதலிடம் கொடுத்தவர்கள் இந்துக்கள் மட்டுமே . ஆங்கிலத்தில் THE OTHER HALF தி அதர் ஹாப் — இன்னும் ஒரு பாதி- என்று மனைவியைச் சொல்லுவார்கள் . இது வேதத்தில் உள்ள சொற்கள் .

சிவன் பாதி , பார்வதி பாதி என்பதை ரகுவம்ச முதல் ஸ்லோகத்திலேயே சொல்லும் பொருளும் போல பிரிக்க முடியாதவர்கள் என்று பாடிய காளிதாசன், ஜகதப்

 பிதரெள பார்வதி பரமேஸ்வரெள என்று முதல் ஸ்லோகத்தை முடிக்கிறான்; உலகிற்கே பார்வதி பரமேஸ்வரன்தான் பெற்றோர்கள் என்றும் சொல்கிறான் அதிலும் கூட பார்வதியின் பெயர்தான் முதலில்; இன்று வரை ஆங்கிலத்திலும் கூட முதலில் மனைவியின் பெயரைச் சொல்லி பின்னர் கணவர் பெயரைச் சொல்லுவார்கள் ஹில்லரி கிளிண்டன் என்றுதான் சொல்கிறார்கள் ; இதையெல்லாம் கற்பித்தவன் காளிதாசன் . இதோ சங்க இலக்கிய வரிகள் —

மாயவள் மேனிபோல் தளிர் என – கலி.35-3

சிவபெருமானுடைய செம்மேனிக்கு மாறான கருமையும் பச்சையும் உடையவள் இவள் .

இறைவனுடைய ஒருபாகத்தில்  உமை விளங்குதலை

மிக்கு ஒளிர் தாள் சடை மேவரும் பிறைநுதல்

முக்கண்ணான் – கலி 104-11/12

படர் அணி அந்தி பசுங்கட் கடவுள் – கலி 101-24

வரிகளிலும் காணலாம்.

உமா என்னும் பார்வதியை மலைமகள் என்றனர்; இவள் இமவான் புத்ரி ஆதலால்தான் காளிதாசன் குமார சம்பவத்தை இமயமலையின் இயற்கைக்காட்சி வருணனையுடன் துவங்குகிறான் ; இதே போல லெட்சுமியை அலைமகள் சரஸ்வதியைக் கலைமகள் என்றெல்லாம் வருணிப்பதைத் தேவார பாடல்களில் காணலாம் . இவையெல்லாம் சங்க இலக்கியத்திலே துவங்கிவிட்டன

 மலைமகள் – முருகு.257

முருகப்பெருமானை வருணிக்கும் பாடல்களில் இவள் மகன்தான் முருகன் என்பதையும் புலவர்கள் சொல்கிறார்கள்.

***

…………………………

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

நாகம் நாணா, மலை வில்லாக,

மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய,       25

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்

பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்

உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,

அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி

இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு,        30-

பரிபாடல்-5

சிவன் முப்புரத்தை அழித்தான். அப்போது, பிரமன் (ஆதி அந்தணன்) தேர் ஓட்டினான்.

வேதங்கள் குதிரை. நிலவுலகம் தேர். நாகம் வில்லிலுள்ள நாண். மேரு மலை வில். அழலும் தீ அம்பு.

ஒரே அம்பில் மூன்று கோட்டைகளையும் தீப்பற்றி எரியச்செய்தவன்.

இந்தச் சினம் தணிய, தேவர்கள் வேள்வி செய்தனர்.

அவர்கள் அளித்த வேள்விப் பாகத்தை வாங்கி உண்டவன்.

அவன் இளங்கண் ஒன்றும் கொண்ட பார்ப்பான் (சிவன்).

சிவன் உமையுடன் கூடிக் காமப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தான்.

அது புணர்ச்சி இல்லாத புணர்ச்சி.

அப்போது அவன் நெற்றிக் கண் ஒரு வரம் தந்தது……………..

இந்தப் பரிபாடலில் உள்ள கதைகள் எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் உள்ளவை.

****

குமார சம்பவத்தில் சில பாடல்கள் 

உமாவின்  பெயர்க் காரணம்

तां पार्वतीत्याभिजनेन नाम्ना बन्धुप्रियां बन्धुजनो जुहाव।

उ मेति मात्रा तपसो निषिद्धा पश्चादुमाख्यां सुमुखी जगाम॥ १-२६

ஹிமவான் என்னும் இமயமலை அரசனின் புதல்வி என்பதால் – பர்வத ராஜ குமாரி என்பதால்– பார்வதி என்பதுதான் அவளின் இயற்பெயர் ; ஆனால் அவள் காட்டிற்குத் தவம் செய்ய விரும்பியபோது அம்மா சொன்னாள் உ = நீ மா =செய்யாதே /போகாதே  -1-26

tāṁ pārvatītyābhijanena nāmnā bandhupriyāṁ bandhujano juhāva |

u meti mātrā tapaso niṣiddhā paścādumākhyāṁ sumukhī jagāma || 1-26

As a dear child of kith and kin she was affectionately called by her patrilineal name pArvati for she is the daughter of a parvata-rAja; when her mother trying to dissuade this girl with a delicate lineament from high ascesis addressed her as u mA, meaning “oh, girl, don’t do it”; later this sobriquet remained her proper name. [1-26]

2b) Umā (उमा) was named so because “she was prevented from going to forest by Menā” [derived from ‘u’ ‘mā’—‘O (child) do not (practise austerities)’], according to the Śivapurāṇa 2.3.22 (“Description of Pārvatī’s penance”).—Accordingly, after Menā spoke to Pārvatī: “Thus, in various ways, the daughter was dissuaded by her mother. But she did not find any pleasure except in propitiating Śiva. Pārvatī acquired the name Umā since she was prevented from going to forest by Menā and forbidden to perform penance. O sage, on realising that Pārvatī was quite dejected, Menā, the beloved of the mountain, permitted her to perform penance. […]”.

****

உமா என்றால் ஓம் அ +உ+ம

Umā is the combination of three letters of OM – U + M + A, the praṇava. U refers to creation, M refers to destruction and A refers to sustenance. Therefore Umā also means the three acts of the Brahman.

****

उमारूपेण ते यूयं संयमस्तिमितं मनः|

शम्भोर्यतध्वमाक्रष्टुमयस्कान्तेन लोहवत्॥ २-५९

உங்கள் நோக்கம் நிறைவேற வேண்டுமானால் (தாரகாசுரனை அழிக்க முருகன் பிறக்க வேண்டுமானால் )  உமாவையும் சிவனையும் காந்தமும் இரும்பும் கவர்வது போல ஆக்க வேண்டும் (அதாவது இருவரிடையே காமத்தைக் /காதலை உருவாக்க வேண்டும் ) . ஆனால் சிவ பெருமானோ கடும் தவத்தில் இருக்கிறார். 2-56

umārūpeṇa te yūyaṁ saṁyamastimitaṁ manaḥ |

śambhoryatadhvamākraṣṭumayaskāntena lohavat || 2-59

“In order to achieve your mission you all have to do your best to magnetize Uma, as it were, who in turn can magnetize the iron-like stubborn mind of Shiva which is now wedged into his iron-bound ascesis… [2-59]

umArUpeNa te yUyaM saMyamastimitaM manaH |

shambhoryatadhvamAkraShTumayaskAntena lohavat || 2-59

குமார சம்பவம் முழுதும் உமாவின் கதை என்பதால் ஓரிரு உதாரணங்களைக் கொடுத்தேன்.

–subham—

Tags- குமார சம்பவம், சங்க இலக்கியம் ,காளிதாசன்,  உமா ,உமை

காளிதாசன் காவியங்களில் இந்திரன்! சங்கத் தமிழ் நூல்களுடன் ஒப்பீடு! –2 (Post.14,857)

Indra’s Vajraayudha 

Written by London Swaminathan

Post No. 14,857

Date uploaded in London –  11 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Indra in Indus Valley; chakra is his name; written on top with wheel/chakra symbol

காளிதாசன் ரகுவம்சத்தில் சொன்ன பல ஸ்லோகங்களை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஐந்தாறு வரிகளில் சொல்லிவிட்டார். சங்க காலத்துக்கு முன்னர் காளிதாசன் வாழ்ந்ததற்கு இதுவும் ஒரு சான்று . பகுதி ஒன்றில் சங்க இலக்கியப்  பாடல்களை கொடுத்துள்ளேன்

இதோ ரகுவம்சம் : (From Sanskritdocuments.org)

स पूर्वतः पर्वतपक्षशातनं ददर्श देवं नरदेवसंभवः|

पुनः पुनः सूतनिषिद्धचापलं हरन्तमश्वं रथरश्मिसंयुतम्॥ ३-४२

sa pūrvataḥ parvatapakṣaśātanaṁ

dadarśa devaṁ naradevasaṁbhavaḥ|

punaḥ punaḥ sūtaniṣiddhacāpalaṁ

harantamaśvaṁ ratharaśmisaṁyutam || 3-42

(இளவரசன் ரகு, அவனுடைய தந்தை திலீபன் நூறு யாகங்களைச்  செய்தால் தனது பதவி போய்விடுமே என்று அஞ்சி, இந்திரன் அதைக் கெடுக்க வந்து அஸ்வமேத குதிரையைத் திருடிய கட்டம் இது.)

 மலைகளை பிளந்த இந்திரனை ரகு கிழக்கு திசையில் கண்டான் ;அஸ்வமேத குதிரையைத் தனது தேரில் கட்டி இழுத்தான்; அந்தக்கு திரையோ முரண்டு பிடித்தது .

இதில் இரண்டு விஷயங்கள் உ ள்ளன ; இந்திரன் திசை கிழக்கு. அவன் பறக்கும் மலைகளை வெட்டி வீழ்த்தியவன் (கோத்ரபித்). [3-42]

****

Nivedita produced this falg with Vajrayudha

शतैस्तमक्ष्णामनिमेषवृत्तिभिर्हरिं विदित्वा हरिभिश्च वाजिभिः|

अवोचदेनं गगनस्पृशा रघुः स्वरेण धीरेण निवर्तयन्निव॥ ३-४३

śataistamakṣṇāmanimeṣavṛttibhirhariṁ viditvā haribhiśca vājibhiḥ|

avocadenaṁ gaganaspṛśā raghuḥ svareṇa dhīreṇa nivartayanniva || 3-43

குதிரையைத் திருடியவன் இந்திரன்தான் என்று ரகு, அங்க அடையாளங்களை வைத்துக் கண்டுபிடித்தான் . பச்சைக் நிறக் குதிரைகள்இமைக்காத கண்கள் , நூற்றுக்கும் மேலான கண்கள் ; உடனே உரத்த குரலில் இந்திரனை அதட்டினான்.

****

मखांशभाजां प्रथमो मनीषिभिस्त्वमेव देवेन्द्र सदा निगद्यसे|

अजस्रदीक्षाप्रयतस्य मद्गुरोः क्रियाविघाताय कथं प्रवर्तसे॥ ३-४४

makhāṁśabhājāṁ prathamo manīṣibhistvameva devendra sadā nigadyase|

ajasradīkṣāprayatasya madguroḥ kriyāvighātāya kathaṁ pravartase || 3-44

வேத வேள்விகளில் கொடுக்கப்படும் அவிஸ் என்னும் பலியில் பெரும்பங்கு உனக்கு கிடைப்பதாக அறிஞர்கள் செப்புவர்; அப்படி  இருக்கையில் என் தந்தை செய்யும் வேள்விக்கு கெடுதல் செய்வது ஏன்? (இதில் தேவேந்திர என்ற பெயர் வருகிறது.)

****

इति प्रगल्भं रघुणा समीरितं वचो निशम्याधिपतिर्दिवौकसाम्|

निवर्तयामास रथं सविस्मयः प्रचक्रमे च प्रतिवक्तुमुत्तरम्॥ ३-४७

கணீரென்ற குரலில் ஒருவன்  கேள்வி கேட்டவுடன் இந்திரன் தனது ரதத்தைத் திருப்பி, பதில் அளிக்கத் துவங்கினான் . [3-47]

***

हरिर्यथैकः पुरुषोत्तमः स्मृतो महेश्वरस्त्र्यम्बक एव नापरः|

तथा विदुर्मां मुनयः शतक्रतुं द्वितीयगामी न हि शब्द एष नः॥ ३-४९

hariryathaikaḥ puruṣottamaḥ smṛto maheśvarastryambaka eva nāparaḥ|

tathā vidurmāṁ munayaḥ śatakratuṁ dvitīyagāmī na hi śabda eṣa naḥ || 3-49

இந்திரன் சொன்னான்: புருஷோத்தமன் என்ற பெயர் விஷ்ணு ஒருவருக்கே பொருந்தும்; பரமேச்வரன் என்ற பெயர் முக்கண்ணன் சிவனுக்கே பொருந்தும்; அதேபோல ரிஷி முனிவர்கள் சதக்ரது என்றால் எனக்கே பொருந்தும் என்று ஒப்புக்கொண்டுள்ளார்கள்.  (அதாவது ரகுவின் தந்தை திலீபன், நூறு வேள்விகளைச் செய்யக்கூடாது; செய்ய விடமாட்டேன் என்பது பொருள்)

சதக்ரது– யாரேனும் ஓருவர் நூறு அஸ்வமேத யாகம் செய்தால் அவருக்கு இந்திரனின் பதவி கிடைத்துவிடும். இதனால் யாரையும் 100 யாகம் செய்யாதவாறு மண், பெண், பொன் பதவி ஆசைகளைக் காட்டி அவர்களை இந்திரன் விழுத்தாட்டி விடுவானாம்.  இந்திரன் பிருஹஸ்பதியின் கீழ் 100 அஸ்வமேதம் செய்தவன் அவன் பெயர் சதக்ரது (நூறு செய்தவன் = சதக்ரது).

***

அஹல்யா-இந்திரன் கதை -விக்ரம. 2-8-௨ ல் வருகிறது ; இதைத் திரு  ப்பரங்குன்ற ஓவியத்தில் முன்னரே கண்டோம் .

பிடவஜஸ்-ரகு.3-59;14-59- பொருள்- அவனுடைய ஓஜஸ் எங்கும் பரவியது.

கோத்ர பித்– ரகு.13-7. . கோத்ரபித் –பறக்கும் மலைகளின் இறக்கைகளை வெட்டியவன்.

இந்திர- குமார; ரகு ;நிறைய இடங்களில்

சதக்ரது– நூறு யாகம் செய்தவன்

ஆகண்டல –நொறுக்கித் தள்ளுபவன்- ரகு.4-83; குமார.3-11

மகவான்- ரகு., குமார . சுமார் பத்து இடங்களில் வரும் சொல்

மஹேந்திர –ரகு. விக்ரம.,. சாகுந்தலம் – சுமார் பதினைந்து இடங்கள்

இந்தப்பெயரை இந்தியா முழுதும் இன்றும் காணலாம்.

மருத்வத்– விக்ரம

இந்திரனின் தேரோட்டி மாதலி– ரகு

Indra with Saci

பாகசாசன – விக்ரம– பாக என்ற அசுரனை அழித்தவன்

புரந்தர— கோட்டைகளை உடைத்தவன் –ரகு., விக்ரம.

புரூஹுத -ரகு.

சக்ர – இந்த முத்திரை சிந்து சமவெளியில் உள்ளது

சுரேந்திர = சுரர் என்னும் தேவர்களின் தலைவன் = தேவேந்திரன்

துராசாஹா 

வஜ்ர பாணி — வஜ்ராயுதத்தைக்கையில்  உடையவன்

வாசவ

வ்ருத்ரஹன்– வ்ருத்ரன் என்ற அசுரனைக்கொன்றவன்

****

இந்திரனுக்கு பெயர்கள்

அமரகோசத்தில் இந்திரனுக்கு முப்பத்தாறு பெயர்கள் உள்ளன

இந்திரன் மனைவிக்கு மூன்று பெயர்கள் –

Indra’s wife – சசி , இந்திராணி , புலோமஜா அல்லது பெளலோமி 

Indra’s son மகன் — ஜயந்த

Indra’s city நகரம்  – அமராவதி

Indra’s garden தோட்டம்  -நந்தன

Indra’s Palace அரணமனையின் பெயர் – வைஜயந்த

Indra’s horse குதிரை  -உச்ச்சைச்ரவஸ் 

Indra’s elephant யானை  – ஐராவத

இதில் வியப்பான விஷயம் நான்கு தந்த யானை என்று நக்கீரர் வருணிக்கும் உருவம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமே உள்ளது

Indra’s driver தேரோட்டி – மாதலி

Indra’s weapon ஆயுதம்  – வஜ்ரா  ஆயுத

Indra’s bow வில்  — இந்திரா தனுஷ் என்று வானவில்லுக்குப் பெயர்

கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, லாவோஸ், வியட்நாம் முதலிய நாடுகளில் யானை மீது வரும் இந்திரன் சிலைகள் உள்ளன ; மங்கோலியா, லாவோஸ் ஆகியன வஜ்ராயுதம் பொறித்த தபால்தலைகளை வெளியிட்டன. நிவேதிதா உருவாக்கிய கொடியில் இந்த ஆயுதம் உள்ளது . பாரதியாரும் பாடியுள்ளார்.

இந்திரன் நடத்திய யுத்தங்கள் (ரிக் வேத செய்யுட்களில் ) 

Indra’s battles are listed in the Rig Veda: 1-53-8, 1-100-18, 1-103-3, 1-104-3, 1-130-8, 1-133-2/5, 1-174-7/8, 1-82-4, 2-20-6/7, 3-10-6, 4-38-5, 4-30-15, 4-30-20, 4-30,31, 5-70-3, 6-18-3, 6-25-2, 6-47-20, 5-29-10, 8-96-13, 10-22-8.

ரிக் வேதத்தில் 250 துதிகளில் இந்திரனைப் போற்றுகின்றனர் ; ஆயினும் இது ஒரே ஒரு தேவரைக் குறிக்கும் சொல் அல்ல என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்ற அறிஞர்கள் பகர்ந்துள்ளார்கள். தமிழிலும் தொல்காப்பியர் வேந்தன்/ அரசன் என்ற பொதுப்பெயரையே இவருக்கு அளித்துள்ளார் இதன்பொருள் யார் தலைமைப் பதவியில் உள்ளாரோ அவர் இந்திரன்.

***

Indra in Ellora cave

அமரகோசத்தில் வரும் இந்திரன் பெயர்கள்

வ்ரத்ரஹன் – விருத்திரன் என்ற பிராமணனைக் கொன்றவன்  (வெள்ளைக்காரர்கள்  இதில் பிராமணன் என்ற சொல்லை விட்டுவிட்டுவார்கள்ஏனெனில் இதில் ஆரிய-திராவிட வாதத்துக்கு செமை அடி கிடைக்கிறது .)

ஆகாண்டல – எதிரிகளை நொறுக்குவோன்

ஆஜி க்ருத் –  (RV 8-53-6 குதிரைப்பந்தயம் நடத்துவோன்

ஆஜி பதி  (RV 8-53-14குதிரைப்பந்தய தலைவன் 

வஜ்ரபாணி  / Vajrin:–வஜ்ராயுதம் தரித்தோன்

மருத்மான் :–காற்றின் நாயகன்

மகாவான் :–மாண்புமிகு

பீடோஜா :–செல்வம் உடையோன், பிரகாசமானவன்

பாகசாசன :–பாக என்ற அசுரனை மாய்த்தவன்

சுனாசிர : –ஏர் அல்லது படைகளை நடத்திச் செல்லுவோன்

புரூஹு :–யாகத்தில் அதிகப் பங்கினைப் பெறுபவன்

புரந்தர :–கோட்டைகள் அல்லது ஊர்களை அழித்தவன் ; சிவனுக்கும் இந்தப் பெயர் உண்டு . வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம் இந்தச் சொல். ஏனெனில் சிந்து சமவெளியில் சிவன் வழிபாடு இருப்பதாக எழுதியோர், சிவனும் புரங்களை அழித்தான் என்பதை மறைத்துவிட்டு, இந்திரன் மட்டும் திராவிடக் கோட்டைகள் அல்லது ஊர்களை அழித்தான் என்று கதை கட்டியதால் அவர்களுக்குப் பிடிக்காத சொல் இது!

ஜிஸ்னு :– எப்போதும் வென்றான்

லேகாச்ரவா :–எழுதுவதில் மன்னன் இதுவும் வெள்ளைக்காரர்களுக்கு செமை அடி கொடுக்கும் சொல். ஆரியர்களுக்கு எழுதத் தெரியாது என்றும் அவர்கள் கதை கட்டினார்கள் மஹாபாரதம்ராமாயணம்  முதல் திருவிளையாடல் புராணம் வரை அம்புகளில் பெயர் இருந்த சம்பவங்கள் உள்ளன. மஹாபாரதத்தை பிள்ளையார் எழுதினார் என்பதும் இந்துக்கள் அறிந்ததே!

Indra in South East Asian countries.

சதமன்யு : –நூறு யாகங்களை செய்தவன்; நூறு எதிரிகளை வென்றவன் .

திவஸ்பதி :–தேவலோக அதிபதி

ஸ்வர்க்கபதி  :–சுவர்க்கத்தின் தலைவன்

உலுக  :–ஆந்தை

உக்ரதன்வன் :– பயங்கர வில்லினை உடையவன்

வாசவ :–வசுவிலிருந்து பிறந்தவன்

வ்ரிஷ :–கட்டிளங் காளை; அல்லது மழையை உண்டாக்குவோன் 

வாஸ்தோஸ்பதி :–வாஸ்து — மனையின் தலைவன்

சுரபதி / தேவபதி :–தேவர் தலைவன்

பலாராதி  :–வலன் என்று அசுரனின் எதிரி

சசிபதி :–சசியின் கணவன்

ஜம்பவேதின் :–அரக்கர்களின் எதிரி

ஹரிஹயஹ  :–பச்சைக்குதிரையில் செல்பவன்

ஸ்வரான :–தேவர்களை ஆள்பவன்

மகேந்திர : மகத்தான இந்திரன்; கண்டி முதல் காஷ்மீர் வரை இன்றும் மக்கள் இப்பெயர்களை சூட்டுகின்றனர்

நமுசிசூதன : நமுசி என்ற அரக்கனைக் கொன்றவன்

ஸ்வர்க்கபதி :–சொர்க்கத்தின் தலைவன்

சஙகிரந்தன :–எதிரிகளுக்கு அச்சமூட்டுவோன்

துஸ்சுவன –கெட்டவர்களை நசுக்குபவன்

துரசஹ  :–விரைவாகப் பயணிப்பவன்

மேகவாஹன  :–மேகத்தை வாகனமாக உடையவன் .

ஸஹஸ்ராக்ஷ   :–கண்ணாயிரம்

வ்ருத்தஸ்ரவஹ  :–அறிஞர்களுக்கிடையே புகழுடையோன்

கோத்ரபித் – மலை பிளந்தவன்

ருவிக்சன  ,கோவிதா  , சூத்ர மான் , பிருதஸ் ரவாஸ்  என்ற பெயர்களும் பிற இடங்களில் காணப்படுகின்றன. .

***

இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு!
By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013.

–லண்டன் சுவாமிநாதன்
தமிழ் வேதமான திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் பரிமேலழகர் எழுதிய உரையே மேலானது என்பது அறிஞர் உலகம் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட முடிவு. ஆயினும் யானைக்கும் கூட அடி சறுக்கும் என்பது போல அவரும் சில தவறுகளைச் செய்திருக்கிறார். இன்று ஒரு குறளை மட்டும் காண்போம்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி (குறள் 25)

‘ஐம்புல ஆசைகளை அறவே ஒழித்த ஒருவனுடைய ஆற்றலுக்கு தேவர் கோமான் இந்திரனே சான்று பகர்வான்’ என்பது இதன் பொருள்.

இந்தப் பொருளை எழுதி அதற்குப் பின் ஒரு ஆச்சர்யக் குறியையோ கேள்விக்குறியையோ போட்டுவிட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். பரிமேலழகர் இது இந்திரனைக் கிண்டல் செய்து எழுதிய இகழ்ச்சிக் குறிப்பு என்று கொண்டுவிட்டார். அவன் அகல்யை இடத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவத்தை வைத்துப் பலரும் இந்திரனை தவறாக எடைபோட்டுவிட்டனர்.

இந்துமத நூல்களிலும் புத்தமத வேதப் புத்தகமான தம்மபததிலும் இந்திரனை உயர்வாகவே கூறியுள்ளனர். பதின்மர் உரையில் மணக்குடவர் எழுதிய உரையில் இதை இகழ்ச்சிக் குறிப்பாகக் கொள்ளாமல், பாராட்டும்படியாகவே எழுதியுள்ளார். இதை டாக்டர் எஸ்.எம்.டயஸ் அவர்கள் எழுதியுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டு மணக்குடவர் உரையே திருவள்ளுவரின் மொத்த அணுகுமுறைக்கு இசைவாக இருக்கிறது என்றும் எழுதியிருக்கிறார்.

எனது கருத்து:
“இந்திரன் அவனுடைய பிரம்மசர்யத்தால் தேவர்களுக்கு தேஜஸை (ஒளியை) உண்டாக்கினான்”- என்று அதர்வ வேதம் கூறுகிறது ( அதர்வணம் 11-5-19).

“இந்திரன் மிகவும் கவனமாக/விழிப்பாக இருந்ததால் தேவர்களுக்கு எல்லாம் இறைவன் ஆனான்” – என்று புத்தர் தம்மபதத்தில் (2—10) கூறுகிறார்.

பூமியில் யாராவது தவம் செய்தாலோ, நூறு அஸ்வமேத யாகம் செய்தாலோ, தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று இந்திரன் நடுங்கத் துவங்கி மண், பெண், பொன் ஆசைகளால் துறவிகளைக் கவிழ்த்துவிடுவான். ஆகையால் மணக்குடவரும் மற்றவர்களின் தவ வலிமை இந்திரனை நடுங்கச் செய்வதே “ இந்திரனே சான்று பகர்வான்” என்பதன் பொருள் என்கிறார். பரிமேலழகர் சொல்லுவது போல இந்திரனை வள்ளுவர் பகடி செய்யவில்லை.

மணக்குடவர் உரை: ஐந்து= நுகர்ச்சியாகிய ஐந்து. இந்திரன் சான்று என்றது இவ்வுலகின் கண் மிகத் தவம் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு.

பரிமேலழகர் உரை: ஐந்தும் என்னும் முற்றும்மையும் ஆற்றர்க்கு என்னும் நான்கனுருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று அவித்தானது ஆற்றல் உணர்த்தினானாகலின் ‘இந்திரனே சாலுங் கரி’ என்றார்.

To be continued………………………..

Tags- காளிதாசன் காவியங்கள்,  இந்திரன், சங்கத் தமிழ் நூல்கள் ஒப்பீடு – பகுதி 2 , அமரகோசம், இந்திரனுக்கு 35  பெயர்கள், பரிமேலழகர் தவறு

காளிதாசன் காவியங்களில் விஷ்ணு கொடி, வாகனம்!- Part 5 (Post No.14,837)

Written by London Swaminathan

Post No. 14,837

Date uploaded in London –  6 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

காளிதாசன் காவியங்களில் விஷ்ணு கொடி, வாகனம்  !- Part 5

சங்கப்புலவர்களும் காளிதாசனும் விஷ்ணு பற்றியும் அவருடைய அவதாரங்கள், கொடி, வாகனம் அவனுக்குப் பிரியமான துளசி  உதளியான பற்றி சொல்லும் விஷயங்களை மேலும் விரிவாக விஷ்ணு ஸஹஸ்ரநாம உரைகள் ஆழ்வார் பாடல்களில்  மற்றுமுள்ள பக்தி இலக்கியங்களில் காண்கிறோம்.

பக்தி இயக்கம் என்பது ரிக் வேத காலத்திலியேயே துவங்கி விட்டது அப்போதிட்ட விதைகள் மரமாக வளர்ந்து பூத்துக்குலுங்கிப் பழங்களைக் கொடுத்தது  காளிதாசன் காலத்தில்- பரிபாடல் பாடிய சங்க காலத்தில்– என்றால் மிகையாகாது . ராமாயணம் இயற்றிய வால்மீகி  ராமனை அவதாரம் என்று சொல்லவில்லை ஆனால் காளிதாசன் அவன் விஷ்ணுவின் அவதாரம் என்றும் அவனது வாகனம் , கொடி, மனைவியர்  இவை இவை என்றும் சொல்கிறான் . ரகு வம்ச காவியத்திலிருந்தும் சங்க இலக்கிய நூல்களிலிருந்தும் சில பாடல்களை மட்டும் காண்போம்.

अथात्मनः शब्दगुणम्गुणज्ञ्यः

पदम्विमानेन विगाहमानः।

रत्नाकरम्वीक्ष्य मिथः स जायाम्

रामाभिधानो हरिरित्युवाच॥ १३-१

athātmanaḥ śabdaguṇamguṇajñyaḥ

padamvimānena vigāhamānaḥ |

ratnākaramvīkṣya mithaḥ sa jāyām

rāmābhidhāno harirityuvāca || 13-1

ராமன் என்ற ஸ்ரீ ஹரி என்று சொல்லும் ஸ்லோகம் இது . ராமன் சிங்கையில் விமானத்தில் ஏறிக்கொண்டு கடலினை காண்பித்து சீதையிடம் பேசும் காட்சி இது

****

त्रस्तेन तार्क्ष्यात्किल कालियेन मणिम् विसृष्टम् यमुनौकसा यः|

वक्षःस्थलव्यापिरुचम् दधानः सकौस्तुभम् ह्रेपयतीव कृष्णम्॥ ६-४९

trastena tārkṣyātkila kāliyena maṇim visṛṣṭam yamunaukasā yaḥ |

vakṣaḥsthalavyāpirucam dadhānaḥ sakaustubham hrepayatīva kṛṣṇam || 6-49

இந்துமதி சுயம்வர கட்டத்தில் ஒரு மன்னரை அறிமுகப்படுத்திய தோழி அந்த மன்னன் யமுனை நதியில் வாழும் காளியன் என்னும் பாம்பு கொடுத்த டீ ரத்தினத்தை மார்பில் அணிந்து விஷ்ணு கெளஸ்துப மணியை மார்பில் அணிந்து போல இருக்கிறது என்கிறாள் . இதை யமுனை, கிருஷ்ணன் அடக்கிய காளியன், விஷ்ணு அணியும் ரத்தினம்  முதலியன வருவதைக் கவனிக்க வேண்டும்.

****

स्वासिधारापरिहृतः कामम् चक्रस्य तेन मे।

स्थापितो दशमो मूर्धा लभ्याम्श इव रक्षसा॥ १०-४१

svāsidhārāparihṛtaḥ kāmam cakrasya tena me।

sthāpito daśamo mūrdhā labhyāmśa iva rakṣasā || 10-41

ராவணன் ஒரு அரக்கன் என்பதை புறநானூறு குறிப்பிட்டத்தை முந்தைய கட்டுரையில் கண்டோம் இந்த ரகுவம்ச பாடல் அவனை ராக்ஷஸன் என்றும் அவனது பத்தாவது தலை தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் வெட்டப்படும் என்றும் தேவர்களுக்கு விஷ்ணு உறுதி  தருகிறார்  முன்னொரு காலத்தில் கடும் தவம் இயற்றிய ராவணன் ஒன்பது தலைகளைத் தியாகம் செய்தபோது பிரம்மா தோன்றி வரம் கொடுத்து ஒன்பது தலைகளையும் மீண்டும் கொடுத்ததாக ஒரு வரலாறு உண்டு. இதில் ராவணன் ஒரு அரக்கன், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் ஆகியன  வருவதைக் கவனிக்க வேண்டும்.

***

யாதவப் பெண்ணுக்கு காளை மாடு  காட்டிய கணவன்!

கிருஷ்ணனும் தெய்வ மாலும் (திரு மால் /விஷ்ணு/ ஹரியும் ) ஒன்று என்பதைக் காட்டும் வருணனை கலித்தொகையில் முல்லைக்கு காலையில் வருகிறது ஆயர்கள் -அதாவது யாதவ இடையர் வீட்டுப் பெண்மணிகள்  காளை அடக்கும் போட்டியில் (ஜல்லிக்கட்டு/ மஞ்சசுவிரட்டு) யார் வெல்கிறாரோ அவரையே

கல்யாணம் செய்வது வழக்கம் காளை அடக்கும் போட்டி, முதல் முதலில் பாகவதத்தில் வருகிறது

 கலி .107-22

ஒரு யாதவ பெண் தான் வளர்த்த காளையை மைதானத்துக்குள் அனுப்பினாள்; அந்தக் காலத்தில் ஆண்களும் தலையில் பூக்களை அணிவது வழக்கம்; காளையை அடக்க வந்த ஆண்மகனின் பூ மாலை காளையின் கொம்பில் சிக்கிக்கொண்டது அதை யாதவ இளைஞன் அடக்கியபோது துள்ளிக்குதித்த காளையின் கொம்பில் சிக்கி இருந்த அந்தப் பூ மாலை , யார் அந்தக் காளையை வளர்த்து போட்டிக்கு அனுப்பினாளோ அவள் மீது போய் விழுந்தது உடனே தோழியர் அனைவரும் பாராட்டி விஷ்ணுவே/ திருமாலே உனது கணவனைக் காட்டிவிட்டார் என்று சொல்லி மகிழ்கிறார்கள் இதை முல்லைக் கலி  பாடிய சங்கப்புலவர் சித்தரிக்கிறார் ; இதில் யாதவர்கள் வணங்கும் கிருஷ்ணனே மால் என்று வருவதைக்க  கருத்திற்கொள்ள வேண்டும்  .

வருந்தாதி
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன்   30
கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, ‘திண்ணிதா,
தெய்வ மால்காட்டிற்று இவட்கு எனநின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு

வருந்தவேண்டாம். உன் கூந்தலில் அவன் பூ விழுந்தது எனக் கேட்டு “இவளுக்குத் தெய்வம் காட்டிய வழி” என்று எண்ணிக்கொண்டு உன் தாய் தந்தையரும், அண்ணன்மாரும் திருமணம் செய்துதர உறுதி பூண்டுள்ளனர். உன் விருப்பம் நிறைவேறும்.

****

மார்பில் லெட்சுமி , கெளஸ்துப மணி கருடன்

பரிபாடல் 1 

எரிமலர் சினைஇய கண்ணை; பூவை

விரிமலர் புரையும் மேனியை; மேனித்

திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்

தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை

எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை 10

சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

ஏவல் உழந்தமை கூறும்,

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

பொருள்

எரியும் தீ போலப் பூக்கும் தாமரை-மலர் போன்ற கண்ணை உடையவன்.

பூவை என்னும் காயாம்பூ பூத்திருப்பது போன்ற ஒளிர்-நீல-நிற மேனியை உடையவன்.

அந்த மேனியில் திருமகள் நிமிர்ந்து அமர்ந்திருக்கும் மார்பினை உடையவன்.

அந்த மார்பில் தெரிப்பாக மணி ஒளிரும் பூணினை (கவச-அணிகௌவுத்துவ-மணி) உடையவன்.

பெரிய மலை பற்றி எரிவது போன்ற பொன்னிழையாலான உடுக்கை-ஆடை உடையவன்.

கருடச்சேவல் அழகு தரும் கொடியை வலப்புறம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பவன்.

உன் ஏவலின்படி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நாக்கு வல்லமை பெற்ற (வடமொழி மந்திரத்தை வளமாக ஓதும் வல்லமை) அந்தணர்கள். அவர்கள் ஓதும் அருமறையின் பொருளாக விளங்குபவன். இப்படி விளங்குபவனே!

****

தசரதன் மனைவியர் கர்ப்பமாக இருக்கும்போது கண்ட கனவுகள்

गुप्तम् ददृशुरात्मानम् सर्वाः स्वप्नेषु वामनैः।

जलजासिकदाशार्ङ्गचक्रलाञ्छितमूर्तिभिः॥ १०-६०

guptam dadṛśurātmānam sarvāḥ svapneṣu vāmanaiḥ।

jalajāsikadāśārṅgacakralāñchitamūrtibhiḥ || 10-60

விஷ்ணுவின் அவதாரத்தைக்கோடி காட்டும்

சங்கு சக்ர சாரங்க கதையுடன் உள்ள இளைஞர்களைக் கனவில் கண்டனர்.

हेमपक्षप्रभाजालम् गगने च वितन्वता।

उह्यन्ते स्म सुपर्णेन वेगाकृष्टपयोमुचा॥ १०-६१

hemapakṣaprabhājālam gagane ca vitanvatā।

uhyante sma suparṇena vegākṛṣṭapayomucā || 10-61

ஒளியை வீசிக்கொண்டு பறக்கும் கருடன் தங்களை சுமந்து செல்வதாகவும் மேகங்கள் பின் தொடர்வதாகவும் கனவு கண்டார்கள்.

बिभ्रत्या कौस्तुभन्यासम् स्तनान्तरविलम्बितम्।

पर्युपास्यन्त लक्ष्म्या च पद्मव्यजनहस्तया॥ १०-६२

bibhratyā kaustubhanyāsam stanāntaravilambitam।

paryupāsyanta lakṣmyā ca padmavyajanahastayā || 10-62

லட்சுமி தனது மார்பில் கெளஸ்துப மணி விளங்க தாமரைப்பூ விசிறி கொண்டு வீசி உபசரிப்பதாகவும் கனவில் தெரிந்தது.

அடுத்த ஸ்லோகத்தில் சப்த ரிஷிகள் உபசரித்த கனவு வருகிறது இதையெல்லாம் அவர்கள் கணவன் தசரத சக்கரவர்த்தியிடம் சொன்னவுடன் அவர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார்.

****

அகநானூறு 175

கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் 10

ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த

வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என

மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,

நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்

போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், 15

திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு

மண் பயம் பூப்பப் பாஅய்,

தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?

இப்போது வானம் மின்னுகிறது. செழியன் கைவண்மை மிக்க வள்ளல். அவன் வலிமை மிக்க சக்கரம் கொண்ட தேரில் சென்று ஆலங்கானம் என்னுமிடத்தில் போரிட்டான். அப்போது அவன் வேல்கள் மின்னியது போல வானம் மின்னுகிறது. அப்போது அவன் முரசு முழங்கியது போல இடி முழங்குகிறது. சக்கரத்தைக் கையிலே கொண்ட திருமால் மார்பில் உள்ள ஆரம் போல வானவில்லை வளைத்துக் காட்டுகிறது. மண்ணெல்லாம் விளைச்சல் பயன் தருமாறு மழை பொழிகிறது. அவர் வருவேன் என்று சொன்ன காலம் இதுதானே?

நான்கு தெய்வங்களின் கொடிகள் வாகனங்கள் பற்றி சங்கப்புலவர் நக்கீரர்

புறநானூறு 56

காளைமாட்டு ஊர்தி,

தீ போன்று விரிந்த செஞ்சடை,

கையில் கணிச்சி ஆயுதப் படை,

கழுத்தில் நீலநிற நஞ்சுமணி

ஆகியவற்றை உடைய சிவபெருமான் (1)

இவன் கூற்றுவன் போல் சினம் கொண்டவன்.

கடலில் வளரும் சுழல்சங்கு போன்ற வெண்ணிற மேனி,

கலப்பை ஆயுதப் படை,

பனைமரக் கொடி

ஆகியவற்றை உடைய பலராமன் (2)

இந்தப் பலராமன் போல் வலிமை கொண்டவன்

கழுவிய மணிக்கல் போன்ற நீலநிற மேனி,

கருடப்பறவைக் கொடி

ஆகியவற்றை உடைய திருமால் (3)

திருமால் போல் இகழ்வாரை அழிக்கும் புகழ் கொண்டவன்

மயில் கொடி,

மயில் ஊர்தி

ஆகியவற்றுடன் வெற்றியாளனாக விளங்கும் முருகன் (4)

முருகன் போல் எண்ணியதை முடிக்கும் திறனாளன்.

இப்படி நான்கு பெருந் தெய்வம் போல்

ஆற்றல் மிக்க உனக்கு செய்யமுடியாதது என்று ஒன்று உண்டா?

இல்லை.எனவே

இரப்போருக்கு வேண்டிய பொருள்களைக் குறைவின்றி வழங்குவாயாக.

யவனர் தந்த பொன்-கிண்ணத்தில்

மகளிர் நாள்தோறும் ஊட்டும் தேறலை உண்டு

மகிழ்ந்து இனிதாக வாழ்வாயாக.

வாளோக்கிய மாறனே!

இருளகற்றும் சூரியன் போலவும்,

மேற்குத் திசையில் காணப்படும் வளர்பிறை நிலாப் போலவும்

நிலைபேற்றுடன் உலகில் வாழ்வாயாக.

பாடல்

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;

கடல் வளர் புரி வளை புரையும் மேனி,

அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;

மண்ணுறு திரு மணி புரையும் மேனி,       5

விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,

பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என

ஞாலம் காக்கும் கால முன்பின்,

தோலா நல் இசை, நால்வருள்ளும்,                 10

கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;

வலி ஒத்தீயே, வாலியோனை;

புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;

முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;

ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்   15

அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,

இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,          20

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!

அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்

வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்

தண் கதிர் மதியம் போலவும்,

நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!    25

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

****

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை

மதுரை மருதன் இளநாகனார் பாடிய முந்தைய பாடலில் மன்னனை முருகனுக்கும் சிவனுக்கும் ஒப்பிடுகிறார் . இதிலிருந்து இன்னுமொரு விஷயம் தெளிவாகத்தெறிகிறது ; காளிதாசன் சங்க காலத்துக்கு முந்தையவன் ஏனெனில் அவன் மன்னர்களை வேத கால இந்திரன், அக்கினி, வருணன் , யமனுக்கு ஒப்பிடுகிறான் ; தமிழ் தெரியாத வடகத்தியர்களும் வெளிநாட்டுக்காரர்களும் காளிதாசனைக் குப்தர்  காலத்தில் வைப்பது பொருந்தாது என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.

****

ஆதிசேஷன்படுக்கையில் விஷ்ணு

பிரம்மாவை வருணிக்கும் பாடலில் ஆதிசேஷன் என்னும் பாம்புப்  படுக்கை வருகிறது அதை அடுத்ததாகக் காண்போம்

–subham–

Tags- காளிதாசன் காவியங்கள், விஷ்ணு கொடி, வாகனம் ,சங்கப்புலவர் நக்கீரர், அகநானூறு 175,யாதவப் பெண், காளை மாடு,   கணவன், கலித்தொகை

காளிதாசன் காவியங்களில் விஷ்ணு அவதாரங்கள்!- Part 4 (Post No.14,833)

Written by London Swaminathan

Post No. 14,833

Date uploaded in London –  5 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரசுராமன்

விஷ்ணுவின் பல அவதாரங்கள் சங்கத் தமிழ் நூல்களிலும் காளிதாஸனிலும் பாடப்படுகின்றன .

பரசுராமன்- ராமன் மோதலை காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் விரிவாகவே பாடுகிறான் (ரகு வம்சம் 11-ஆவது சர்க்கம்). காளிதாசன் பிருஹுபதி என்ற பெயரில் பரசுராமனை மேகதூதத்திலும் (59) குறிப்பிடுகிறான். 

பரசுராமன் பற்றிய குறிப்பு சங்கத் தமிழில் அகம்-220 ல் காணாலாம்.

இதை மருதன் இளநாகனார் பாடியதால் சங்க காலத்தின் கடைசி கட்டத்தில் (200-300 CE)  இது பாடப் பெற்றிருக்க வேண்டும் .

நான்கு முக்கியச் செய்திகள் இதில் உள்ளன

மழுவாள் நெடியோன் = பரசுராமன்

ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,

தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,

கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,

கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,

மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்     5

முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,

கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,

அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்….”

1..கெடுதி செய்யாத வேள்வித் தீ செல்லூரில் எரிந்தது.

2..“மழுவாள் நெடியோன்” என்னும் பெயர் கொண்டவன் யானைப்படையுடன் வந்து தாக்கிய அரசர்களை பூண்டோடு அழித்தான்.

3..வேள்விக்கு நடப்பட்ட வேள்வித்தூண் நாற்புறமும் கயிறுகளால் கட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அது காணத்தக்க பொலிவு கொண்டதாக விளங்கியது. வேள்வித் தூண் – யூபஸ்தம்பம் .

4.அந்த வேள்வித்தூண் போன்றது உன் மார்பு.

ஆனால் அந்தத் தூணைப் போல அனைவராலும் காணமுடியாத மார்பு உன்னுடையது; நினைத்தாலும் நடுங்கவைக்கும் மார்பு அது.

****

பலராமன் – கண்ணன் ஜோடி

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடலில் நீங்கள் இருவரும் இருபெருந் தெய்வங்களாகிய பலராமனும், திருமாலும் போல ஒன்றிப் பகைவர்கள் அஞ்சுமாறு தோன்றுகிறீர்கள் என்று சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனையும்  பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் புகழ்கிறார். .

செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,

அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,                  10

வரைய சாந்தமும், திரைய முத்தமும்,

இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;

பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,

நீல் நிற உருவின் நேமியோனும், என்று                    15

இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,

உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,

இதில் மேலும் சில செய்திகளையும் தமிழ்ப்புலவர்கள் கொடுக்கின்றனர் . பலராமன்  நிறம்  வெள்ளைக் கலர் (வாலியோன்); கிருஷ்ண நிறம் நீலம் சேர்ந்த கருப்பு . பலராமன் கொடி பனைக்கொடி ; கிருஷ்ணன் கொடி புள் கொடி என்பது வேறு பாடல்களில் வருகிறது

கிருஷ்ணனும் பலராமனும் ஆதிகாலத் தமிழ் நாட்டில் கோவிலில் ஒருங்கே வழிபடப்பட்டனர் . காலியான/ வெற்றிடமான  பலராமன்  சந்நிதிகளை இன்றும் சில கோவில்களில்  காணலாம் . பலராமனை லாங்கலின்,  ஹலப்ருத் (மேகம் 61, 51) என்று காளிதாசன் அழைக்கிறான் அதாவது கலப்பையை ஏந்தி; காடு திருத்தி நாடாக்கிய பெரும் விவசாயி; அவன் இந்தியா முழுதும் விவசாயத்தைப் பரப்புவதற்காக மஹாபாரத யுத்த காலத்தில் பயணம் செய்தான் . இந்தக் காளிதாசனின் கலப்பை ஏந்தியவன் என்ற சொல்லைத் தமிழ்ப்புலவர்களும் பாடுகின்றனர்.

பலராமன், கிருஷ்ணன்  – பரி  2-20-27 ; 15-13/4,

பலராமன்  மட்டும் பாடப்பட்ட இடங்கள்  – கலி  105-11/12; பரி  15-19 to 21

பனைக்கொடி  , நாஞ்சிலோன்=ஹல ப்ருத்   பரி  13-35; புறம்  58-14; கலி104-7; பரி 1-4; கலி 105-11;பரி 13-33

***

இடைக்குல கண்ணனை மேகதூதத்தில் முன்னரே கண்டோம் .அகநானூற்றில் கண்ணன் லீலைகள் உளது 

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்

வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5

மரம் செல மிதித்த மாஅல் போல,

…..

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,              10

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை…………”

வட நாட்டில் ஓடும் தொழுனை என்ற  யமுனை ஆற்று மணலில் அண்டர் என்னும் இடையர் குல மகளிர் தழையாடை உடுத்திக் கொள்வதற்காகக் கண்ணன் மரத்தில் ஏறிக் கிளைகளை மிதித்து வளைத்துக் கொடுத்தான் என்று பிற்காலப் புலவரான மருதன் இளநாகன் பாடுகிறார்  . இது  கோபியரின் புடவைகளை குருந்த மரங்களில் கண்ணன் ஒளித்துவைத்ததையும் தொலைவில் அண்ணன் பலராமன் வருவதைக்கண்டவுடன் அவசர அவசரமாக புடவைகளைத் திருப்பிக்கொடுத்ததையும் கூறும் பாகவதக் கதையின் தமிழாக்கம் ஆகும் —அகம் 59

பரிபாடல் பாடிய அந்துவன் பற்றி இளநாகன் குறிப்பிடுவதால் அவன் மிகவும் பிற்காலப் புலவன் என்பதும் அந்துவன் முருகனைப் பாடிய செய்தியும் உளது .

தொழுனை என்ற மர்மப் பெயரை யாரும் விளக்கவில்லை! கோபியர் தொழுது மன்றாடியதால் தொழுனை என்ற பெயர் வந்தது போலும்!

***

புறம் 174,

அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,

சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,

இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து

இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்

அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,5

அரசு இழந்திருந்த அல்லல் காலை,

முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது

இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி

மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,

பொய்யா நாவின் கபிலன் பாடிய,           10

மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்

செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட

எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,

அரு வழி இருந்த பெரு விறல் வளவன்

மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை 15

புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!

விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,

சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்

ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,

உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,     20

ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்

கவலை நெஞ்சத்து அவலம் தீர,

நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!

கல் கண் பொடிய, கானம் வெம்ப,

மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,        25

கோடை நீடிய பைது அறு காலை,

இரு நிலம் நெளிய ஈண்டி,

உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.- புறம் 174,

SOLAR ECLIPSE

இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார் ; அவரால் பாடப்பெற்ற மன்னன் பெயர் ஸ்ரீ கிருஷ்ணா =மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்.

கிருஷ்ணன் எப்படி சூரியனை மறைத்த இருளை அகற்றி சூரியனை வெளிக்கொணர்ந்தாரோ SOLAR ECLIPSE அது போல காட்டில் ஒளிந்து கொண்டிருந்த சோழ மன்னனை நீ மீட்டுவந்து அரசுக்கட்டிலில் ஏற்றினாய் என்ற உவமை உள்ளது. அப்படிக் கிருஷ்ணனாகிய நீ என்ற சிலேடையை வைத்துள்ளார் . சோழமன்னன் சூரியகுலத்தவன் என்பதால் அவனை சூரியனுக்கு ஒப்பிட்டார் ; பாடல் முழுதும் சிலேடை நயமும் உவமை நயமும் உளது ; கபிலனை புலவர் குறிப்பிடுவதால் அவர் காலத்துக்குப் பிற்பட்டவர் நப்பசலையார் என்ற செய்தியும் உளது

இதிஹாஸக் கிருஷ்ணன் மஹாபாரத யுத்தத்தில் சூரிய கிரகணத்தைப் பயன்படுத்தி ஜயத்ரதனை வீழ்த்தினார் .

இதே போல ரிக்வேதத்தில் சூரியனை அத்ரி மகரிஷி வெளிக்கொணர்ந்தார் என்ற பாடலும் உளது.

****

வராஹ அவதாரம்

குமார சம்பவ ஸ்லோகத்தில் (6-8) வராஹ அவதாரத்தைக் காளிதாசன் வருணிக்கிறார்;  நாட்டிலேயே மிகப்பெரிய வராஹ அவதார சிலை குப்தர்கால உதய கிரி குகையில் (400 CE)  உள்ளது .காளிதாசன் பாடியதால் இது உருவாக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.

வராஹஅவதாரம்  பரி  2-16/19; 3-21/3; 3-34/6; 4-22/4

பரி பாடல் முழுதும் குறைந்தது நான்கு இடங்களிலாவது வராஹ அவதாரம் பாடப்பட்டுள்ளது 

****

பரசுராமன்

கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள்  அணியுமிடம்  தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது. –

கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்    20

செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,

அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே

இருங் கிளைத் தலைமை எய்தி,சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியதுபுறநானூறு 378

அகநானூற்றில் ராமயணம்

கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,

……………………………………

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த     15

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்றுஇவ் அழுங்கல் ஊரே..

மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடல்

காளிதாசன் மூன்று ரகுவம்ச சர்க்கங்களில் ராமாயணத்தை அற்புதமாகச் சுருக்கிக் கொடுத்துள்ளான் .12 ஆவது சர்க்கத்தில் வால் மீகியின் ஐந்து காண்டங்களின் சாரத்தை சுருக்கிக் கொடுக்கிறான்  .

To be continued…………………………………

Tag– பரசுராமன் , காளிதாசன் காவியங்களில், விஷ்ணு, அவதாரங்கள், Part 4

 காளிதாசன் காவியங்களில் விஷ்ணு! சொல்லினுள் வாய்மை நீ;அறத்தினுள் அன்பு நீ – 3(Post.14,826)

Written by London Swaminathan

Post No. 14,826

Date uploaded in London –  3 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

விஷ்ணு – பொருள் – எங்கும் நிறைந்தவன் 

மேக 15,59;

குமா.6-67; 7-44;

ரகு..13-5, 14-59.

கீழே பாடல்களின் பொருள் உள்ளன

***

இந்தப் பெயரை விண்ணந்தாயன் என்ற சங்கப்புலவர் பெயரில் காண்கிறோம்

விண்ணந்தாயன்= விஷ்ணு + தாசன்

ஆகாச என்பது தமிழில் ஆகாயம் என்று மாறுவது போல (ய=ச) தாசன் , தாயனானாக மாறுகிறது

சங்க காலத்திலியேயே லேடி  மஹாபாரதத்தைத் தமிழாக்கிய செய்தி பாரதம் பாடிய மாதேவனார் (மஹாதேவன்) என்ற புலவர் மூலம் கிடைக்கிறது

கண்ணன் என்பதும் , கன்னையா என்பதும் ஆழ்வார்  பாடல்கள், பாரதி பாடல்கள் மூலம் நாம் அறிந்ததே .

இந்த கண்ணன் பெயர் முது கண்ணன் , பாண்டரங் கண்ணன் தாயங்கண்ணன் (தாச +கண்ணா ) முதலிய பெயர்களில் வருகிறது ; தாமோதரனார், கேசவனார், வால்மீகி என்ற சங்கத் தமிழ் புலவர்களை நான் விளக்கத் தேவையே இல்லை.

***

ரகுவம்சம் 13-5 பாடலில் கடலுடன் விஷ்ணு ஒப்பிடப்பட்டதை முந்தைய கட்டுரையில் கண்டோம் . கடல் வண்ணன் என்றால் உடனே விஷ்ணு என்பது புரியக்கூடியதுதான் மாயோன் என்ற சொல்லால் தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும் இதைக் குறிப்பிடுகின்றனர்  ; கருப்பு, நீலம் ஆகிய இரண்டு நிறங்களையும் இந்துக்கள் ஒரே பொருளில் பயன்படுத்துவர் ; கண்ணன் நிறமும் விஷ்ணு நிறமும் கருப்பு என்பது கிருஷ்ணா= கருப்பன் என்ற பெயரிலேயே உள்ளது.

மண்ணுறு திருமணி புரையும் மேனி

விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்

—புறநானூறு -56

நீல்நிற உருவின், நேமியோனும், என்று  

இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,

—புறநானூறு -58

நீல நிற வண்ணன் (கலி .104-38),நெடியோன் (மது .வரி  763, பெரும் .வரி  402,  பதிற்றுப் -15-39,

தேயா விழுப்புகழ்த் தெய்வம்;–கலி .103-75

தொல் கதிர்த் திகிரியான்;–கலி .104-78; 105-72

ஆடுகொள் நேமியான்;

(சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியவன் -நேமி , திகிரி)

தெய்வ மால்;–கலி .103 to 108  (Mal= Black; Melanesian Islands in the Pacific Ocen meant Black People)

வெள்ளைக்காரக்  கொள்ளைக் காரர்கள், நாடு பிடிக்க உலகம் முழுதும் சென்றபோது கறுப்புத் தோல் உடையவர்களைக் கண்டவுடன் அந்த பசிபிக் மகா சமுத்திரத் தீவுகளுக்கு மேலனெசியா  என்று பெயர் சூட்டினார்கள்.

Maal = Mala= Mela

****

रत्नच्छाया-व्यतिकर इव प्रेक्ष्यमेतत् पुरस्ताद्

वल्मीकाग्रात् प्रभवति धनुःखण्डमाखण्डलस्य ।

येन श्यामं वपुरतितरां कान्तिमापत्स्यते ते

बर्हेणेव स्फुरितरुचिना गोपवेषस्य विष्णोः ॥ 15

Kalidasa wrote first Travelogue in the world.  He wrote the first Meteorological book showing the course of Southwest Monsoon, the most important weather factor in India.

மேகதூத காவியத்தில் உலகத்தின் முதல் பயண நூலைக் காளிதாசன் எழுதினான்; அது மட்டுமல்ல  உலகின் முதல் வானிலையியல்  நூலையும் எழுதி தென் மேற்குப்  பருவக்காற்றின் போக்கினை வர்ணிக்கிறான்.

15–ஆவது பாடலில் “ஏ மேகமே கிழக்கே பார்! மலை முகட்டினின்று இந்திர தனுஷ் என்னும் வான வில்லினைக் காண். ரத்தினங்கள் அத்தனையின் ஒளியையும் ஒருங்கே உமிழ்வதைப் பார்.  உன்னுடைய கரு நிற உடலின் மீது அது பிரகாசிப்பது விஷ்ணுவானவர் இடையன் கோலத்தில் வந்த (கிருஷ்ணனின்) வனின் மயில் பீலி மீது பிரகாசிப்பது போல இருக்கிறது” என்கிறான் காளிதாசன்

இந்தப்பாடலில் மேகமும் கருப்புவிஷ்ணுவும் கருப்பு; கிருஷ்னும் கருப்புவிஷ்ணுதான் கிருஷ்ணாவதார ம் எடுத்தான் அவன் தலையிலுள்ள மயில் பீலி, வானவில் பொழப்பு பிரகாசிக்கிறது என்ற எல்லா செய்திகளும் உள.

****

प्रालेयाद्रेरुपतटमतिक्रम्य तांस्तान् विशेषान्

हंसद्वारं भृगुपति-यशोवर्त्म यत् क्रौञ्चरन्ध्रम् ।

तेनोदीचीं दिशमनुसरेस्तिर्यगायाम-शोभी

श्यामः पादो बलि-नियमनाभ्युद्यतस्येव विष्णोः ॥ 59॥

பாடல் 59 -ல் மூன்று சுவையான செய்திகளைத் தெரிவிக்கிறான் .

முருகனுக்கு கிரவுஞ்ச்சபேதனார் என்ற பெயர் உண்டு இந்த கிரவுஞ்ச்ச இடைவெளி- இமயமலைக் கணவாய் –இன்றும் நிதி கணவாய் என்ற பெயரில் உள்ளது;; அதன் வழியாகத்தான் ரஷ்யாவிலிருந்து பறவைகள் தமிழ்நாட்டிலுள்ள வேடந்தாங்கல் வரை இன்றும் வந்து கொண்டிருக்கின்றன; அதைக் குறிப்பிட்ட பின்னர் பலியின் கர்வத்தை அடக்குவதற்கு ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாமன- த்ரிவிக்ரமாவதாரத்தையும் குறிப்பிடுகிறான்

திருவள்ளுவரும் அடி அளந்தான் என்று குறளில் புகழ்கிறார் விஷ்ணுவை ; 1.ஆக பறவைகள் குடியேற்றம் என்ற ஆர்னிதாலஜி ORNITHOLOGY FACT விஷயம், 2.கிரவுஞ்சபேதம் என்னும் முருகன் விஷயம், 3. விஷ்ணுவின் வாமன அவதாரம் ஆகிய அத்தனையும் கொட்டிவிட்டான் .

பாடலின் பொருள் இதோ:–

ஏ  மேகமே,  இமயமலையின் சரிவிலுள்ள பல அற்புதங்களைப் பார்த்துக்கொண்டே போ ; குறுகிய கிரவுஞ்ச கணவாய் வழியாகச் செல்வாயாக! அதன் வழியாகத்தான் குள்ள வாத்துக்கள் வருகின்றன பிருகு வம்சத் தலைவனின் பெருமையைப் பாடும் இடம் அது . குறுக்கு நெடுக்காக விரிந்த அந்த மலைப்பகுதி விஷ்ணு தனது கருமை நிறப்பாதங்களால் மகாபலியை அடக்குவது போல இருக்கும்—59

Krauñca (क्रौञ्च)—Sanskrit word for a bird “crane”, “demoiselle crane” (Anthropoides virgo). This animal is from the group called Plava (‘those which float’ or ‘those move about in large flocks’). Plava itself is a sub-group of the group of animals known as Ānupa (those that frequent marshy places).

Krauñca [Kraunch] is the name of a mythical mountain said to be the grandson of Himālaya who was pierced by Kārtikeya and Paraśurāma.

முருகன் அல்லது பரசுராமன் பிளந்த மலை என்ற கதையும் உண்டு அதனால்தான் காளிதாசன் பிருகு தலைவன் என்று சொல்கிறான்.

கிரவுஞ்ச என்பது நாரை, குள்ள வாத்து வகைப் பறவைகள்.

****

திருமணிதிரைபாடு அவிந்த முந்நீர்,

வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்; பரிபாடல் 4-6/7

****

Five in One

கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,

அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;

பரிபாடல் 13-42/43

****

மலையொடு மார்பு அமைந்த செல்வன்; Chest as wide as mountain or as strong as hill- – கலி.108-55

மலைமகள் பார்வதியை பெண்கேட்க, சப்த ரிஷிகளும் ஆங்கிரஸ் தலைமையில் இமய மலையிடம்  போகிறார்கள் ; ஆங்கிரஸ்  சொல்கிறார் :

உன்னை விஷ்ணு என்று எல்லோரும் அழைப்பது பொருத்தமே ; அசையாமல் நீ இருக்கிறாய்! உன்னுடைய நடுப்பகுதியோ அசையும் அசையாப்பொருட்கள் அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ளது – குமார சம்பவம், 6-67

பர்வத ராஜ குமாரி= பார்வதி

****

காளிதாசன் மாபெரும் சிவ பக்தன் .ரகு வம்ச முதல் ஸ்லோகத்தில் இந்த ஜகத்துக்கு பார்வதி பரமேஸ்வரன் பெற்றோர்கள் என்கிறான் குமார சம்பவ 8-27 பாடலில் சிவ பெருமானை ஜகத் குரு என்கிறான்  . ஆயினும் அத்வைதத்தின் உச்சநிலையை அடைந்த அவனுக்கு மூவரும் ஒருவரே என்றும் தெரியும் ; இதோ குமார சம்பவப் பாடல் :

ஒரே கடவுள் மூன்றாகப்பிரிந்து அருள்புரிகிறார் ; அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்பது மாறி மாறி வரும்; சில நேரங்களில் சிவனைவிடப்பெரியவர் விஷ்ணு என்றும் , மேலும் சில இடங்களில் விஷ்ணு வை விடப்பெரியவர் சிவன் என்றும் அல்லது இவ்விருவரை விடப்பெரியவர் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார்கள்- 7-44

பரிபாடலில் விஷ்ணுவைப் புகழும் பாடல்களில் எல்லாம் அவனே என்ற கருத்து வருகிறது ; பகவத் கீதையில் விபூதி யோகத்த்தில் கிருஷ்ண எதில்  எதில் சிறந்ததோ, அது தனது உருவமே என்பது போன்றது இது;  காளிதாசன் அதைக் குமார சம்பவத்தில் ஒரே ஸ்லோகத்தில் சுருக்கமாகச் சொல்லவிட்டான் ; இதோ பரிபாடல்

பரிபாடல்-4

உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;   25

நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;

நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;

நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;

நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;      30

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;

நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;

அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,

ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,

மேவல் சான்றன, எல்லாம்.   35

****

பகையும் நட்பும் இன்மை

கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,

கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50

உள்வழி உடையை; இல்வழி இலையே;

போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,

மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு

மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்’ எனும்

வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55

மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;

கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,

நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;

பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!

நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை     60

அன்ன நாட்டத்து அளப்பரியவை;

நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;

நின்னில் சிறந்த நிறை கடவுளவை;

அன்னோர் அல்லா வேறும் உள; அவை

நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை.    65

பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை

ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,

கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,

அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!

எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்    70

தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;

அவரவர் ஏவலாளனும் நீயே;

அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73

****

பரிபாடல் 3-48/58

வனப்பும் வலியும்

நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,

வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-

வனப்பு வரம்பு அறியா மரபினோயே!     50

அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,

பிறை வளர், நிறை மதி உண்டி,

அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;

திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,

நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;

அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்

வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?

Xxxx

எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை

பரிபாடல் 13-14/25

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,

அவையும் நீயே, அடு போர் அண்ணால்!  15

அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;

முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;

இரண்டின் உணரும் வளியும் நீயே;

மூன்றின் உணரும் தீயும் நீயே;             20

நான்கின் உணரும் நீரும் நீயே;

அதனால், நின் மருங்கின்று–மூ-ஏழ் உலகமும்,

மூலமும், அறனும், முதன்மையின் இகந்த

காலமும், விசும்பும், காற்றொடு கனலும்  25

****

பரிபாடல் 2-52/60

திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புக்கள்

பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.

நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;

கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;

வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த

நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், 55

சாயல் நினது, வான் நிறை-என்னும்

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:

அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்

எவ் வயினோயும் நீயே.

உருவமும், உணவும், வெளிப்பாடும்

செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!

Xxx

பரிபாடல் 3-4/11

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,

ஞாயிறும்திங்களும்அறனும்ஐவரும்,         5

திதியின் சிறாரும்விதியின் மக்களும்,

மாசு இல் எண்மரும்பதினொரு கபிலரும்,

தா மா இருவரும்தருமனும்மடங்கலும்,

மூ-ஏழ் உலகமும்உலகினுள் மன்பதும்,

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்   10

மாயா வாய்மொழி உரைதர வலந்து:

****

பரிபாடல் 3-61-70

ஓ!’ எனக் கிளக்கும் கால முதல்வனை;

ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;

சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்

தீயினுள் தெறல் நீபூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீசொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;         65

வேதத்து மறை நீபூதத்து முதலும் நீ;

வெஞ் சுடர் ஒளியும் நீதிங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீஅனைத்தின் உட்பொருளும் நீஆதலின்,

உறையும் உறைவதும் இலையே; உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;               70

****

பரிபாடல் 3-73-76

பறவாப் பூவைப் பூவினோயே!

அருள் குடையாக, அறம் கோலாக,

இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும்

*****

TO BE CONTINUED…………………………….

TAGS- காளிதாசன் , காவியங்கள் , விஷ்ணு , மால் , திருமால், மாயோன் 

, சங்க இலக்கியம் , ஒப்பீடு , பகுதி 3