Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version posted already.
Part 101
ஸ்வயம்பு
சுயமாக , அதாவது தாமாக உருவாகும் சிலைகள் ; பல பாறை வடிவங்களும் கற்களின் வடிவங்களும் இயற்கையாகவே கடவுள் உருவங்கள் போல இருத்தல்; பாணலிங்கம், சாளக்கிராமம் முதலி யன இயற்கை யில் நதிகளில் கிடைக்கின்றன ; இவைகளை சிவன், விஷ்ணு வடைவங்களாக வணங்குவர் ; கயிலாயம் , அமர்நாத்திலுள்ள ஐஸ் லிங்கம் முதலியன இயற்கையில் காணப்படும் சிவ லிங்க வடிவங்களாகும் . இவை தவிர பூமிக்கடியில் நிகழும் அதிர்வலைகளால் பூமிக்கு மேலே வடிவங்கள் தோன்றுவதும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது . பிரம்மாவுக்கும் ஸ்வயம்பூ என்று பெயர்
ஸ்வயம்பூ லிங்கம் தோன்றுவது எப்படி?
ஆதிசங்கரர் போன்ற பெரிய மகான்கள் பல இடங்களில் இப்படி லிங்கங்களைக் கண்டுபிடித்து அவைகளை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்று படிக்கிறோம். மதுரை நகரம் ஒருகாலத்தில் கடம்பவனக் காடாக இருந்தது என்றும் தனஞ்செயன் என்ற வணிகன் இரவு நேரத்தில் காட்டைக் கடந்து போகும் நேரத்தில் ஒளிமயமான ஒருகாட்சியைக் கண்டான் என்றும் இந்திரன் முதலானோர் வந்து பூஜை செய்த காட்சி அது என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது. அதுவும் ஸ்வயம்பூ லிங்கம்தான். பாண்டிய மன்னனுக்கு இச்செய்தியை அறிவித்தவுடன் அவன் அங்கே கோவில் அமைத்தான்..
ஆனால் இதைத்தவிர வேறு ஒரு சக்தியும் உண்டு. அது பூமிக்கடியில் இருக்கும் கற்களை மேலே தள்ளுகிறது. அதை அறிவியல் படித்தவர்கள் ஈ.எல்.எf. என்று சொல்லுவார்கள். அதாவது மிகவும் சன்னமான அதிர்வு அலைகள். இவைகள் பூமிக்கு அடியில் உள்ள கற்களை சிறிது சிறிதாக அசைத்து பூமிக்கு மேலே கொண்டுவந்துவிடும்! லண்டனைத் தாண்டியுள்ள பர்மிங்ஹாம்சைரில் சில்டெர்ன் என்னும் இடத்தில் இப்படி பூமிக்கு மேலே வரும் கற்களை விலைக்கும் விற்கிறார்கள். இதை மே 1994ல் சி.ஏ.சில்க் என்பவர் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இந்த இடத்துக்கே கல் விளையும் பூமி என்று பெயர்!
Science behind Swayambhu Lingams
A letter published in London Times newspaper on 20th May, 1994 explains this. Anne C.A. Silk wrote this letter in reply to a reader’s query. The letter gives some interesting information about “stone growing fields” in Chiltern Hills. (These Hills are not far from London). “There was a local industry of gathering the large flints, some the size of a fist, to sell to local builders by the roadside.
There is a further reason for the ascending mode of flints and rocks worldwide, over and above the fork disturbance proposed by Brian Parker (May 14 letter). This is the natural extremely low frequency (ELF) seismic energy from deep within earth.
Micro seismic activity from faults such as Church Stratton Fault, Mere Fault, Great Glen Fault, sub terranean settling and indeed traffic at roundabouts will generate ELF energy sufficient enough to vibrate rocks and stones to the surface.
It is of relevance to note that ELF frequencies from 30 Hz to 300 Hz also cover brain waves in humans”.
***
சுகன்யா
பொது அர்த்தம் – நல்ல பெண் அல்லது நல்ல அழகு ;இளவரசி சுகன்யா ஒரு சமயம் தந்தையுடன் காட்டுக்குச் சென்ற போது ஸ்யவன முனிவர் ஆஸ்ரமத்துக்குச் சென்றனர் ; அங்கு புற்று போல வளர்ந்திருந்த ஓரிடத்தில் இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தவுடன் விளையாட்டாக அதைக் குத்தவே புற்று மண்ணில் தவம் செய்துகொண்டிருந்த ஸ்யவன முனிவரின் கண்கள் குருடாயின. இந்தத் தவற்றுக்குப் பிராயச்சித்தமாக சுகன்யாவின் தந்தை சர்யாதி அவளை முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். ஸ்யவன முனிவர் கிழவர் ; அஸ்வினி தேவர்கள் ஸ்யவன முனிவருக்கு இளமையைக் கொடுத்தனர் .
***
ஸ்வேதாஸ்வதர உபநிஷத்
கிருஷ்ண-யஜுர்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத் இது . ஸ்வேதாஸ்வதர முனிவர் போதனை இதில் உள்ளது சிவா பெருமானையும் ருத்ரனையும் புகையும் இந்த உபநிஷத் , பிற்காலத்தில் எழுதப்பட்டது
சிவா பெருமானை உயர்த்தி பிரம்மன் ஆக — உயர்ந்த கடவுளாக – காட்டுகிறது . வேதாந்த ஸாங்க்ய விஷயங்கள் இதில் காணப்படுகிறது . ஆறு அத்தியாயங்களைக் கொண்டது .ஸ்வேதாஸ்வதர என்பதன் இன்னுமொரு பொருள் வெள்ளைக் குதிரை என்பதாகும் .
சில எடுத்துக் காட்டுகள்:-
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை
வேதாம்ஸ்ச ப்ரஹிணோதிதஸ்மை
தம் ஹ தேவம்ஆத்மபுத்திப்ரகாசம்முமுக்ஷுர்வை
சரணமஹம் ப்ரபத்யே
–ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -6-18,19
யார் பிரம்மதேவனை சிருஷ்டியின்போது தோற்றுவித்தானோ , யார் மேலும் அந்த வேதங்களை பிரம்மதேவனுக்குக் கொடுத்தானோ , அப்பரமனை, அறிவை ,ஆத்ம ஞானத்தில் ஒளிர்பவனை, அவயங்கள் இல்லாதவனை, கர்மங்கள் இல்லாதவனை, சாந்த மூர்த்தியை, குற்றமற்றவனை, மாசற்றவனை மரணமில்லாத நிலைக்கு இட்டுச் செல்லும் பாலமாக இருப்பவனை, விறகு எரிந்த பின்னர் ஒளிரும் தீப்போன்றவனை, மோக்ஷத்தை நாடுகின்ற நான் சரணடைகிறேன்.
யோ யோனிம் யோனிமதிதிஷ்டத்யேகோ
யஸ்மின்னிதம்ஸம் சவி சைதி ஸர்வம்
தமீசானம் வரதம் தேவமீட்யம்
நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி
—-ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -4-11
எந்த ஒரு இறைவன் பிரகிருதியின் / இயற்கையின் பிறப்பிடங்களிலெல்லாம் தலைமை தாங்குகிறானோ , எவனிடத்து இவை யாவும் ஒடுங்குகின்றனவோ , எவன் பல வடிவங்களை எடுக்க வல்லவனோ , அந்த ஈசனை, வரம் கொடுப்பவனை, போற்றுதற்குரியவனை, பிரகாசமானவனை அனுபவத்தில் அறிகிற ஒருவன் அளவுகடந்த சாந்தியை அடைகிறான்.
ஆதி சங்கரர் இந்த உபநிஷத்துக்கு உரை எழுதவில்லை.
***
ஸ்வர்கம்
தமிழ் மொழியில் இதைத் துறக்கம் என்பர் ; நாகலோகம் மேலுலகம் தேவ லோகம் என்ற பொருளைகளும் உண்டு. இந்திரன் இதன் தலைவர் புண்ணியம் செய்தொரர் இங்கு இன்பத்தை அனுபவித்துவிட்டு பூமிக்குத் திரும்புவார் கள். ஆனால் இங்கு பார்வதியின் சாபத்தால் செக்ஸ் தடை செய்யப்பட்டுஉள்ளது . மேரு மலை உச்சியில் இருப்பதாகவும் சில கருதுகிறார்கள் ஸ்வர்க்க என்ற எழுத்துக்களுக்கு ஒருவித கணிதத்தில் 21 என்ற பொருளும் உண்டு . சங்க காலாட் தமிழர்களுக்கு இதில் நம்பிக்கை இருந்ததால் மேற்கூறிய ட்கமிழ்ச் சொற்களை பயன்படுத்தியுள்ளனர்.
. ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா ஆகியோர் இங்கு நடனமாடி எல்லோரையும் மகிழ்விப்பார்கள் என்பது புராணம் சொல்லும் செய்தி .
***
ஸ்வஸ்திகா
1200 YEAR OLD SWASTIKA WELL NEAR TRICHY
SWASTIKA IN INDUS VALLEY SEALS
இந்துக்களின் புனிதத் சின்னம் ; மணங்களாம் சுபம் என்று பொருள்; சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படுகிறது உலகின் பழைய கிரேக்க, ரோமானிய பாண்டங்களிலும் இந்தச் சின்னம் உள்ளது ; ஆயினும் இன்றுவரை இந்துக்கள் மட்டுமே இதை 4500 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர் . சம்ஸ்க்ருத தமிழக கல்வெட்டுகள் ஸ்வஸ்தி ஸ்ரீ என்றே துவங்குவம் .
மாக்ஸ்முல்லர் , ஜெர்மானியர்களும் ஆரியர்கள் என்று சொன்னதை மனதில் கொண்டு ஹிட்ட லரும் ஜெர்மனியின் கொடி மற்றும் அரசாங்க சின்னங்களில் ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்தினார் . ஆகையால் மேலை உலகம் முழுதும் இந்த சின்னத்தத் த்தை தடை செய்துவிட்டார்கள்; எங்காவது இந்த சின்னத்தைக் கண்டால் கூச்சல் போட த்துவங்குவார்கள் . சில கட்டடங்கள் இயற்கையாக இந்த வடிவத்தில் இருந்ததையும் இடித்து வேறு வடிவத்தில் கட்டிய செய்திகளை அ வ்வப்போது பத்திரிகைகளில் படிக்கலாம் . இந்துக்களுக்கு இது சுப சகுனம் என்பதால் கல்யாணப் பத்திரிகைகள் , அழைப்பிதழ்களிலும் போடுவார்கள்; மேலை நாட்டினருக்கோ இது சிம்ம சொப்பனம்!
1200 ஆண்டுகளுக்கு முன்னால் திருச்சிக்கு அருகில் திருவெள்ளறை என்னும் ஊரில் தந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சியில் சுவஸ்திகா வடிவில் ஒரு கிணறு தோண்டி அமைக்கப்பட்டது . அதில் ஒரு பாடல் கல்வெட்டும் உள்ளது . மேலை நாட்டில் இந்த வடிவத்தில் எந்த அமைப்பு, கட்டிடம், குளம், கிணறு இருந்தாலும் மக்களும் அரசாங்கமும் சேர்ந்து இடித்துத் தள்ளிவிடுவார்கள்! ஹிட்லர் மீது அவ்வளவு கோபம், வெறுப்பு .
–Subham— .
Tags– ஸ்வஸ்திகா, துறக்கம், ஸ்வயம்பூ, லிங்கம்,HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL -101; இந்து மத கலைச்சொல் அகராதி-101
1.அம்பலவாணக் கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.. இவர் சோழநாட்டிலே தில்லையாடி என்னும் ஊரிலே வேளாளர் குலத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் இராம நாடகம், சீர்காழித் தலபுராணம் என்னும் அரிய நூல்களை இயற்றிப் புகழ் பெற்ற அருணாசலக் கவிராயர் ஆவார். அவருடைய மூத்தமகன் இவர். இவர் காலம் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது
***
2.ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி
ஒன்றுதப் பாது புரிவார்;
உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்
ஒருமூன்றி னுக்கும் மறவா
தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்
அதிதிபூ சைகள்பண் ணுவார்;
யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்
இன்றியே செய்து வருவார்;
பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே
பிழையா திருக்கும் மறையோர்
பெய்யெனப் பெய்யும்முகில்;அவர்மகி மையெவர்களும்
பேசுதற் கரித ரிதுகாண்!
(அந்தணர் தமக்கு உரித்தான ஆறு தொழிலையும் (ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்) கைவிடார்.
வெறி கொண்ட மற்கடம் – வெறி பிடித்த ஒரு குரங்கு, பேய் கொண்டு – பேயாற் பிடிக்கப்பட்டு, கள் உண்டு – (அதன்மேற்) கள்ளையுங் குடித்து, வெம் கரஞ்சொறிப் புதரில் வீழ்ந்து – (மேலும்) கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து, தேள்
அவர்கட்கு, கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் – சிறிது
தலைமைப்பதவி கிடைத்தாலும், குவலயந்தனில் – உலகத்தில், நிறைகின்றபத்தியும் – நிறைந்த கடவுள் அன்பும், சீலமும் – ஒழுக்கமும், மேன்மையும்– பெருந்தன்மையும், நிதானமும் – அமைதியும், பெரியோர்கள்மேல் நேசமும் – அறிஞரிடம் நட்பும், ஈகையும் – கொடைப்பண்பும்,இவையெலாம் நினைவிலும் கனவிலும் வராது – (ஆகிய) இவைகள் யாவும் நினைவிலேயன்றிக் கனவிலும் உண்டாகா.
***
9.நல்லவர்களின் பட்டியலில் சற்புருடர்யார் ?
செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர்செய்
தீமையை மறந்த பேரும்,
திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேல்
சித்தம்வை யாத பேரும்,
கைகண்டு எடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
கையில்கொ டுத்த பேரும்,
காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி
காத்தருள்செய் கின்ற பேரும்,
பொய்ஒன்று நிதிகோடி வரினும் வழக்குஅழிவு
புகலாத நிலைகொள் பேரும்.
புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
பொய்ம்மைஉரை யாத பேரும்,
ஐய, இங்கு இவரெலாம் சற்புருடர் என்று உலகர்
அகமகிழ்வர்!
(செய்நன்றி மறவாதவர்கள், ஒருவர் செய்த தீமையை மறந்து, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற ‘பாலிசி’யைப் பின்பற்றுவோர் உத்தமர்கள்.
பணமே கொடுத்தாலும் மாற்றானின் மனைவியின் மீது ஆசை வைக்காதவனும், பிறர் பொருளைக் கீழே கண்டு எடுத்தாலும் அதன் உரிமையாளரைத் தேடிக்கண்டு பிடித்து கொடுப்பவரும், கோவிலுக்கும் அறப்பணிகளுக்கும், பிராமணர்களுக்கும் கல்வெட்டுக்களில், உயில்களில் எழுதி வைத்த தர்மத்தைக் காப்பவர்களும் உத்தமர்கள்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் வழக்கில் பொய் பேசாமல், நடுவு நிலைமை தவறாறாதவர்களும் , அதாவது கோடிக்கணாக்காக பணத்தை அள்ளிவீசினாலும் பணத்துக்காக பொய்ச் சாட்சி, பொய்த் தீர்ப்பு சொல்லாதவர்களும் உயிரே போகும் நிலைமை வந்தாலும் கனவிலும் கூட பொய் மட்டும் சொல்ல மாட்டேன் என்போரும் சத் புருஷர்கள்/ நல்லவர்கள் என்று உலகமே போற்றும்.)
***
10.அம்பலவாணர் சொல்வது :
கோவில் இல்லாத ஊர், நாசி இல்லா முகம்,
கொழுநன் இல்லாத மடவார்,
குணமது இல்லா வித்தை, மணமது இல்லாத மலர்,
குஞ்சரம் இலாத சேனை,
காவல் இல்லாத பயிர், பாலர் இல்லாத மனை,
கதிர் மதி இலாத வானம்,
கவிஞர் இல்லாத சபை, சுதி லயை இலாத பண்,
காவலர் இலாத தேசம்,
ஈவது இல்லாத தனம் நியமம் இல்லாத செபம்,
இசை லவணம் இல்லாத ஊண்,
இச்சை இல்லாத பெண் போக நலம், இவை தம்மின்
ஏது பலன் உண்டு?
–subham—
Tags அறப்பளீச்சுர சதகம், 10 கேள்விகள், அம்பலவாணர், அந்தணர், நல்ல மனைவி , நல்லவர் பட்டியல் , கள் குடித்த குரங்கு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கிலத்தில் ஆர் ஐRI எழுத்துக்களில் துவங்கும் சொற்கள்
ரிக் வேதம்
உலகிலேயே மிகப்பழமையான நூல்; இதற்கு இணையான நூல் உலகில் எந்தப் பகுதியிலும் இல்லை ; வேத கால ஸம்ஸ்ருத மொழியில் உள்ள இந்த நூலில் சுமார் 450 முனிவர்கள் மனக்கண்களால் கண்ட — ரேடியோ அலைகளை போல ஈர்த்த– 10,000
மந்திரங்கள் சுமார் ஆயிரம் துதிகளில் உள்ளன . நான்கு வேதங்களில்– அதாவது ரிக், யஜுர், சாமம் அதர்வணம் என்ற – நான்கில் முதன்மையானது . சுமார் 6000 ஆண்டு முதல் 3500 ஆண்டுவரை பலராலும் தேதி குறிப்பிடப்பட்டது.
இதுபற்றி அதிகம் எழுதியோர் ஆங்கிலத்தில் எழுதியதால் தப்பும் தவறுமாக உளறிக்கொட்டி இருக்கிறார்கள்; அந்தப் பேர்வழிகள் இந்துமதத்தை எதிர்க்கும் ஆக்ஸ்போர்ட் துறையில் சம்பளம் வாங்கியவர்கள்; அவர்களில் மாக்ஸ்முல்லர் போன்ற பேர்வழிகள் இந்தியாவுக்கு வந்ததும் இல்லை ; இந்துக்களைப் பார்த்தும் இல்லை ; யார் இந்துமதத்தைப் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் வேதங்களைப் பற்றி என்ன சொல்கிறார்களோ அதைப் படித்தால் நன்கு புரியும் ; இந்திரன் என்பது ஒரே ஆளின் பெயர் என்று நினைத்து உளறிக்கொட்டி இருக்கிறார்கள் ; இவர்களை பற்றிக் காஞ்சி மகா சுவாமிகள் (1894-1994) முதலியோர் சொன்னதை முன்னரே எழுதி ருக்கிறேன் .
ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன அவைகளில் ஆறு மண்டலங்களை அந்தந்த ரிஷிகளின் வழிவந்தவர்கள் படைத்துள்ளனர் . வேதத்தை ஏற்காதவர்களை இந்துக்களாகச் சேர்ப்பதில்லை . ஆழ்வார்கள் நாயன்மார்கள் மஹான்கள், சாது, சந்யாசிகள் வேத்தைப் புகழ்ந்துள்ளார்கள். இதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறளிலும் காணலாம்.
இதோ சில ரிக் வேத புள்ளிவிவரங்கள்
மொத்தமுள்ள சூக்தங்கள்/ துதிகள் 1028 .
அவைகளில் உள்ள மந்திரங்களின் எண்ணிக்கை- 10,600.
The number of syllables அசைகள் 432,000.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் எழுதிய பாஷ்யத்தை வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்த்து ஆங்காங்கு சொந்தச் சரக்கையும் சேர்த்து, அதி பயங்கர உளறல்களைக் கொட்டியுள்ளனர் ; எடுத்துக்காட்டாக முதல் பக்கத்திலே கிரிப்பித் என்னும் பேர்வழி, சோம லதை பற்றிச் சேர்த்த உதாரணத்தைச் சொல்லலாம்.
ரிக்வேதத்திலுள்ள சொற்களின் எண்ணிக்கை – 1,53,826
மண்டலம் 2: க்ருத்சமத ரிஷியின் குடும்ப ரிஷிகள் (43 hymns)
மண்டலம் 3: விசுவாமித்திரர் குடும்பம் (62 hymns)
மண்டலம் 4: வாமதேவ ரிஷியின் குடும்பம் (58 hymns)
மண்டலம் 5: அத்ரி மகரிஷியின் குடும்பம் (87 hymns)
மண்டலம் 6: பரத்வாஜ ரிஷியின்குடும்பம் (75 hymns)
மண்டலம் 7: வசிஷ்ட மஹரிஷியின் குடும்பம் (104 hymns)
முதல் மண்டலத்திலும் கடைசி /பத்தாவது மண்டலத்திலும் பல ரிஷிகளின் பாடல்கள் இருக்கின்றன .
மண்டலம் 8 – பல தெய்வங்கள் பற்றிய 103 துதிகள்; ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம லதை பற்றிய 114 துதிகள் உள்ளன .
***
ரிஷிகேஷ்
இமயமலையின் அடிவாரத்தில், கங்கை நதியின் கரையில், அமைந்த புனிதத்தலம . ஒருகாலத்தில் இயற்கை வனப்புடன் இருந்த இந்த இடம் இப்பொழுது முழு அளவுக்கு வணிகத் தலமாக மாறிவிட்டது சுவாமி சிவானந்தர் போன்ற தூய தமிழ் சந்நியாசி முதலில் தெய்வ நெறிக்கழகத்தை Divini Life Society. நிறுவி இதன் புகழை இந்தியா முழுதும் பரப்பினார். பின்னர் மஹேஸ் யோகியை பீட்டில்ஸ் பாடகர்கள் பின்பற்றவே இது உலகம் முழுதும் தெரியவந்தது; இன்று ரிஷிகேஷில் கிளை அமைக்காத சாது சன்யாசி கிடையாது; முக்கால் வாசி யோகா பிசினஸ் நடத்துவோர் ஆவர்; தூய்மைக்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளி மிகப்பெரியது இதை உலக யோகா தலை நகர் என்றும் அழைப்பார்கள்; தற்போது உத்தர கண்ட மாநிலத்திலுள்ள இந்த இடத்தை டேராடூன் முதலிய நகரங்களிலிருந்து எளிதில் அடையலாம் ஹரித்வாரிலிருந்து 24 கிலோமீட்டர் தூரம். (லண்டன் சுவாமிநாதன் இரண்டு முறை சென்றுவந்த இடம் )
***
ரிஷ்யசிருங்கர் / தமிழில் கலைக்கோட்டு முனிவர்
தலையில் மான் கொம்புடன் பிறந்தவர் ; தந்தை விபாண்டக முனிவரால் காட்டில் வளர்ந்து யோகங்களையும் வேதங்களையும் கற்றவர் ; ஒரு காலத்தில் ரோமபாதர் ஆண்ட அங்க தேசத்தில் வறட்சி நிலவியது; அப்போது இவர் வந்தால் மழை பெய்யும் என்று அறிந்து நாட்டியக்காரிகளை அனுப்பி அவரைக் கவர்ந்து அழைத்துவந்தார்; மழையும் பெய்தது. தனது மகள் சாந்தாவை திருமணம் செய்து கொடுத்தார் இவரது பெருமையை அறிந்த தசரதர் குழந்தை வரம் வேண்டி நடத்திய புத்ர காமேஷ்டி யாகத்தை இவர் மூலம் நடத்தி பலன் அடைந்தார்.
***
ரோமஹர்ஷணர்
புராணக் கதைகளைச் சொல்லுவதில் வல்லவர் . வேத வியாசரின் சீடர். . அவருடைய மகன் உக்ரஸ்ரவஸ் மஹாபாரத பிரவசனம் செய்தார் . அவர் மூலமே மஹாபாரதம் கிடைத்தது .
***
ருது
பர்வம் என்பது இதன் பொருள்; இந்துக்கள் பருவங்களை ஆறாகப் பிரித்தனர் ; சங்க காலத் தமிழர்கள் அதை அப்படியே ஏற்று தமிழிலும் கொடுத்தனர் ; மேலை நாடுகளில் நான்கு பருவங்கள் மட்டுமே பேசப்படுகிறது .
உலகில் முதல் முதலில் பருவங்களைப் புகழ்ந்து நூல் எழுதியவர் காளிதாசர் ஆவார்; இவர்ருடை சம்ஸ்க்ருத ருது சம்ஹாரம் மிகவும் அழகான வருணனைகள் அடங்கியது .
அதில் காணும் ஆறு பருவங்கள் :
1. வசந்த, or spring (Phālguna to Vaiśākha—mid March to mid May);
2. க்ரீஷ்ம/ கோடை , or summer (Vaiśākha to Āṣāḍha—mid May to mid July);
3. வர்ஷ /மழைக்காலம் , or rainy season (Āṣāḍha to Bhādrapadā—mid July to mid Sep-tember );
4. சரத் , or autumn (Bhādrapadā to Kārtika—mid September to mid No-vember);
5. ஹேமந்த /குளிர் காலம் , winter, before the frost (Kārtika to Pauṣa—mid November to mid January);
6. சீர்ஷ , or winter (Pauṣa to Phālguna—mid January to mid March).
காளிதாசனுக்கு முன்னர், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதத்திலும், பருவம் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயினும் அதர்வண வேதமே (6-55-2) ஆறு பருவங்களை முதலில் குறிப்பிடுகிறது. பல சம்ஹிதைகளிலும் ஆறு பருவங்கள் வருகின்றன.
வேதத்திலும் தொல்காப்பியத்திலும் இளவேனில், முது வேனில், கார், கூதிர், முன் பனி, பின்பனிக் காலம் என்று ஆறு பருவங்கள் உள்ளன. பழங்கால நாகரீகம் எதிலும் இப்பிரிவுகள் இல்லை. இதனால் என்ன தெரிகிறது?
காஷ்மீர் முதல் இலங்கையின் தென்கோடி கண்டி வரை ஒரே கலாசாரமே வேத காலம் முதல் நிலவியது.
தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் அகத்திணை இயலில் வரும் சூத்திரம்: “காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர். பனிஎதிர் பருவமும் மொழிப. வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும் நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே பின்பனி தானும் உரித்தென மொழிப”
என்று நிலங்களுக்கு உரிய ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறு பொழுதுகளையும் கூறுவார்.
***
ருத்ராக்ஷம்
இமயமலையிலும் தென் கிழக்காசிய நாடுகளிலும் வளரும் ஒரு குறிப்பிட்ட மரத்தின் (botanically Elaeocarpus ganitrus) விதைகளை இந்துக்கள் புனிதமாகக் கருதி மாலைகளாக ஜெப மாலைகளாகப் பயன்படுத்துகின்றனர்; ருத்ர + அக்ஷ = என்றால் சிவனின் கண்கள் என்று பொருள் இதில் ஏக முகம் முதல் பல முகங்கள் உள்ள வகை வரை கிடைக்கின்றன ; அவைகளின் பலன்களை தேவி பாகவதம், சிவ புராணம் முதலிய நூல்களில் காணலாம்.
***
ருத்ரன்
ரிக் வேதத்தில் ருத்ரன் என்று போற்றப்படும் தெய்வத்தை யஜுர் வேதம் முதலிய நூல்களில் சிவ பெருமானாகக் காண்கிறோம். சங்கத்தமிழ் நூல்களில் சிவனும் ருத்திரனும் ஒருவரே. ருத்ரன் கோபக் கனல் வீசும் சிவன் ஆவார் ; மும்மூர்த்திகளில் அழி த்தல் தொழில் அவருடையது; வேதத்தில் இவர் யானை புலித் தோலை அணிந்து வில் அம்புடன் காட்சி தருவதைத் தேவாரம் திருவாசகத்தில் காணலாம் . ருத்ரனை டாக் டராகவும் மருந்தாகவும் வேதங்கள் போற்றுகின்றன ஒரு மந்திரம் இவரிடம் ஆயிரம் குளிகைகள் உள்ளதாகப் பாடு கிறது; தீராத நோயைத் தீர்த்து வைய்ப்பவர் என்று அப்பர் பெருமானும் புள்ளிருக்கு வேளூர் பதிகத்தில் போற்றுகிறார்; இன்றுவரை அந்த வைத்தீஸ்வரன் கோவிலை நோய் தீர்க்கும் தெய்வமாகவே வழிபட்டு வருகிறோம் ஆகையால் ரிக்வேதத்தில் பாடப்பட்ட ருத்ரனும் தேவாரத்தில், சங்க இலக்கியத்தில் நக்கீரர் அவ்வையார் பாடிய சிவனும் ஒன்றே.
***
ருத்ரம்
யஜுர் வேதத்தில் வரும் முக்கியதுதி .
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் முதல் முதலி வரும் துதி இது
ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.
நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.
நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்
சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.
நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.
ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.
ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது.
ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.
பாபா செய்த மகத்தான யக்ஞம்– அதிருத்ரம்
ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். நமது காலத்தில் சென்னையிலும் புட்டபர்த்தியிலும் ஸ்ரீ சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்:–
ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.
Rudra Ekadasi: When Rudram is recited 121 times (11 priests recite it 11 times) it is Rudra Ekadasi.
When Rudram is recited 1331 times (11X11X11) it is Maha Rudram
When Rudram is recited 14641 times (11X 11X11X11) it is Ati Rudram.
To be continued………………………..
Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 87; இந்து மத கலைச்சொல் அகராதி-87,அதிருத்ரம், ருத்ரன், ருத்ராக்ஷம், ரிக் வேதம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
N words continued…………………..
நாயன்மார் / நாயனார்
சிவ பெருமானை வழிபட்ட 63 பெரியோர்கள் நாயன்மார் அல்லது நாயனார் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களில் மூவர் பெண்கள்; இவர்களுடைய கதைகளை சேக்கிழார் என்ற புலவர் அறிஞர் பெரியபுராணம் என்னும் நூலில் பாடியுள்ளார் ; இவர்களுடைய சிலைகளை பெரிய சிவன் கோவில்களின் பிரகாரத்தில் காணலாம். இந்த 63 பேரில் மாணிக்கவாசகர் இல்லாதது ஏன் என்று இன்று வரை விவாதிக்கப்பட்டுவருகிறது. 12 ஆழ்வார்களைப் போலவே இவர்களிலும் பல ஜாதிகளைச் சேர்ந்தோர் உள்ளனர் ; அப்பர் என்னும் திருநாவுக்கரசர் (600 CE) மற்றும் ஞான சம்பந்தர் காலம் நமக்குத் தெரிவதால் இவர்கள் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை பரப்பியது உறுதியாகிறது; இவர்களுடைய பாடல்களை பன்னிரு திருமுறைகளில் படிக்கலாம் . 63 பேரில் கண்ணப்ப நாயனார் என்ற வேடரின் கதை மிகவும் பிரபலமானது.
***
நாரதர்
தேவரிஷி என்று பெயர் பெற்றவர் நாரதர் ; பூலோகத்துக்கும் மேலோகத்துக்கும் இடையே பயணம் செய்த முதல் விண்வெளி வீரர் ; திரிலோக சஞ்சாரி என்று பெயர்பெற்றவர் ; கலகம் விளைவிப்பதில்மன்னன்; ஆயினும் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்ற வசனமும் பிரபலமானதே ; தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரத்தில் முதல் தடவையாக இவர் பெயர் வருகிறது ; இவர் வீணை என்னும் இசைக்கருவியைக் கண்டுபிடித்தால் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ இவரை நாரதர் வீணை என்று பாடியிருக்கிறார்; வீணையும் நாராயண நாராயண என்ற சொற்களும் இவரை அடையாளம் காட்டிவிடும்; பெரிய விஷ்ணு பக்தர் ; மஹாபாரதத்தில் வனவாசம் செய்த பாண்டவர்களை அவ்வப்போது கண்டு, தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியவர்; துரியோதனனை அடக்கி வையுங்கள் என்று திருத ராஷ்டிரனுக்கும் அறிவுரை வழங்கினார். பிரம்மாவின் மனதில் உதித்த பத்து ரிஷிகளில் ஒருவர் ; பிரபஞ்த்தின் முதல் பிரம்மச்சாரி; இவர் போதித்த பாகவதத்தை வியாசர் அவருடைய பிள்ளையான சுகருக்குச் சொல்லிக்கொடுத்தார் ; நாரதர் பெயரில் பல நூல்கள் உள்ளன. இவர்கள் தேவரிஷி நாரதர் அல்ல ; நாட்டிய சாஸ்திரத்தைப் பரத முனி 6000 சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் பாடியபோது இவரும் இருந்ததாக நாட்டிய சாஸ்திரம் பகர்கிறது ;
நாரத பக்தி சூத்திரம்
பக்தியின் இலக்கணத்தை விளம்பும் நாரத பக்தி சூத்திரம் என்ற நூலை சம்ஸ்க்ருத மொழியில் இவர் இயற்றினார். பக்தி என்றால் என்ன, பக்தரின் நடை உடை பாவனை எப்படி இருக்கும், பக்தியால் விளையும் நன்மைகள் என்னென்ன என்ற 84 சூத்திரங்களை உடைய நூல் நாரத பக்தி சூத்திரம் ஆகும்.
***
நரகாசுரன்
கிருஷ்ண பரமாத்வாலால் வதைக்கப்பட்ட அசுரர்களில் ஒருவன் ; பிரக் ஜோதிஷம் என்னும் அஸ்ஸாம் பகுதியை ஆட்சி செய்தவன் ; 16, 000 பெண்களை சிறை வைத்தவன்; இவன் இறந்த நாளை நரக சதுர்த்தி என்ற பெயரில் தீபாவளியாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பூமாதேவியின் புதல்வன் ; வராஹ அவதாரத்தில் தர்த்தி என்ற பெயர்; தன்னுடைய புதல்வனுக்கு நீண்ட ஆயுளும் அதிக சக்தியும் கொடுக்கவேண்டும் என்று விஷ்ணுவிடம் பூமாதேவி வேண்டினாள்; மேலும் எந்த ஆண் மகனும் இவனைக் கொல்லமுடியாத சக்தி தர வேண்டும் என்றாள்; விஷ்ணுவும் இவன் அடுத்த யுகம் வரை வாழ்வான் என்று சொல்லி வரமளித்தார் . அவனோ பாணாசுரனுடன் சேர்ந்து அதிகார மமதையில் எல்லோரையும் கொடுமைப்படுத்தி வந்தான் ; சொர்க்க லோகத்தையும் வசப்படுத்த எண்ணினான் ; விஷ்ணுவானவர் கிருஷ்ணனாக அவதரித்தபோது அவருடைய எட்டு மனைவிகளில் ஒருவரான சத்யபாமா பூதேவியின் அவதாரம் ஆக வந்தாள்; கிருஷ்ணர் அவளையும் அழைத்துக்கொண்டு நரகாசுரனுடன் மோதியபோது பூ தேவி ( சத்யா பாமா) அம்பினாலேயே அவன் அழிந்தான் ; கிருஷ்ணன் 16,000 பெண்களையும் துவாரகைக்கு அழைத்துச் சென்றார்
***
நிகும்ப
பல ராக்ஷஸர்களுக்கு இந்தப் பெயர் உண்டு
மஹாபாரத நிகும்பன் சுந்த–உபசுந்த என்ற ராக்ஷஸர்களுக்கு தந்தை; அவ்விரு ராக்ஷஸர்களும் திலோத்தமை என்ற தேவ லோக அழகி விஷயத்தில் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொன்று அழிந்தனர்.
வால்மீகி ராமாயணத்தில் வரும் நிகும்பன், வஜ்ரமாலா- கும்பகர்ணன் தம்பதியருக்குப் பிறந்தவன் . அவனுடைய அண்ணன் பெயர் கும்பன்; ராமாயணத்தில் அனுமனால் கொல்லப்பட்டான்
ராவணனுடைய படைத்தளபதிகள் ஒருவனுக்கும் இதே பெயர் ; புராணங்களில் பேய் பிசாசுகளுடன் தொடர்புடையது நிகும்ப வனம்; ராவணனின் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித் இலங்கையிலுள்ள நிகும்ப வன குகையில் எதிரிகளை ஒழிக்கும் ஆபிசார யாகத்தை நடத்த முனைந்தபோது அதை அறிந்த லெட்சுமணன் அங்கு சென்று யாகத்தை நடைபெறாதவாறு தடுத்தான்.
***
நிமி
தத்தாத்ரேயரின் புதல்வன்; அவருடைய மகன் இறந்தவுடன், அவன் சாந்தி அடைவதற்கான பல சடங்குகளை நிமி செய்தார் ; அவைதான் இப்போது செய்யப்படும் சிராத்தம் என்னும் சடங்குகளுக்கு அடைப்படையாக அமைந்தது .
***
நிவாதக்கவச்ச, நீவாடகவச்ச The nivatakavachas (Sanskrit: निवातकवच,)
நிவாதக்கவச்ச என்றால் ஆயுதம் துளைக்க முடியாத கவசங்களைஅணிந்தவர்கள் என்று பொருள் ; இப்போது அரசியல் தலைவர்கள் அணிந்து செல்லும் புல்லெட் ப்ரூப் சட்டை போன்றது; மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் நீவாடகவசர்கள் கடலுக்கு அடியில் வாழும் அசுர இனத்தவர், இவர்களை அர்ஜுனன் இந்திரன் உதவியுடன் போரிட்டு வென்றான்.
மஹாபாரதத் தகவல்
இதன் விவரமாவது; இவர்கள் தேவர்களுக்கு எதிரான தானவர்கள் ; தேவர்களின் நகரத்தை இவர்கள் ஆக்ரமித்தவுடன் சண்டை துவங்கியது; இவர்களின் எண்ணிக்கையோ முப்பது லட்சம்; அர்ஜுனன் விண்வெளியில் / சொர்க்க லோகத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தான்; பிரிவுபசாரத்தின் போது தானவர்களை அழித்து விட்டுச் சென்றால் அதுவே பெரிய நன்றி என்று இந்திரன் பகர்ந்தான் ; ஸ்பேஸ் ஷட்டில் என்னும் விண்கலத்தின் பைலட் மாதலியுடன் அர்ஜுனனை பூலோகத்துக்கு அனுப்பினான் ; அர்ஜுனன் விண்வெளியில் கிடைத்த நவீன (லேசர்) ஆயுதங்களை பயன்படுத்தி தானவர்களை அழித்தான். அர்ஜுனன் போர் முழக்கத்தை தேவ தத்தம் என்ற சங்கினை முழக்கித் துவங்கினான் ; தானவர்கள் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிப் போனான் ; அப்போதுதான் ஸ்பேஸ் ஷட்டில் பைலட் மாதலி, ஏன் தெய்வீக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று வினவினான். அதன்பேரில் அர்ஜுனன் தேவலோக ஆயுதங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றான் .
ராமாயணத்தில் வரும் தகவலின் படி இவர்கள் பிரம்மாவிடம் பெற்ற வரத்தால் ராவணனாலும் இந்திரஜித்தாலும் தோற்க முடியாவார்களாக விளங்கினார்கள் ; இறுதியில் பிரம்மா தலையிட்டு சமரசம் செய்து வைத்தார் ; இந்த தானவர்கள் தலைநகர் மணிமதீ ; இவர்கள் காலகேயர் என்னும் அசுரர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டனர்.
****
நர நாராயண
PICTURE OF NARA NARAYANA
நர நாராயணர்கள் என்போர் விஷ்ணுவின் இரட்டை அவதாரம் என்றும் இரட்டையர் ரிஷிகள் என்றும் புராணங்கள் செப்புகின்றன;
இதன் கருத்து என்னவென்றால் தர்மத்தை நிலைநாட்டுவதற்கு மனித முயற்சியும் தெய்வீக அருளும் தேவை என்பதாகும்.
தட்சனின் மகளான மூர்த்திக்கும் தர்மத்துக்கும் பிறந்தவர்கள் இவர்கள் ;பத்ரிநாத்தில் நீண்ட காலம் தவம் இயற்றினர்
மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் என்னும் நரன் ஆகவும் கிருஷ்ணன் என்னும் நாராயணன் ஆகவும் தோன்றினார்கள்
சிற்பங்களில் நரனை இரு கைகள் உடையவராகவும் நாராயணனை நான்கு கைகள் உடையவராகவும் காட்டியுள்ளனர்.
***
நரசிம்ம/ நரசிம்மவாதாரம்
நரசிம்மவாதாரம் விஷ்ணுவின் நாலாவது அவதாரம் ஆகும்; விஷ்ணு பக்தனான பிரஹலாதன் என்னும் சிறுவனைக் காப்பாற்றுவதற்காக சிங்க முகமும் மனித உடலும் எடுத்து அவதரித்தார் . ஹிரண்யகசிபுவை கடவுளாக வணங்க மறுத்த பிரஹலாதன் கடவுள் அணுவிலும் மேரு மலையிலும் தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்று சொன்னான் ; மன்னன் ஹிரண்யகசிபு அரண்மனைத் தூணை எட்டி உதைத்து கடவுளைக் காட்டு என்றான் ; பிரஹலாதன் என்ற சிறுவன் பிரார்த்திக்கவே தூண் வெடித்துப் பிளந்து சிங்க முகப் பெருமாள் வெளியே வந்து, ஹிரண்ய காசிபுவின் உடலைக் கிழித்து எறிந்தார். இந்தச் சிற்பமும் ஓவியமும் நிறைய கோவில்களில் உள்ளன ; பக்தர்கள் அதை வழிபட்டு வருகின்றனர் ; முதல் மூன்று அவதாரங்களுக்கு அத்தகைய சிறப்பு இல்லை .
***
நாளந்தா
தற்போதைய பீஹார் மாநிலம் முற்காலத்தில் பாரத்தின் வலிமை வாய்ந்த மகத சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது; அதிலிருந்த நாளந்தா உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தது ; பாட்னா என்னும் பாடலிபுத்ரத்திலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த இடம் இப்போது யுனெஸ்கோ பாரம்பர்ய கேந்திரமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
தட்சசீலம், விக்ரமசீலம் முதலிய பல்கலைக்கழகங்களின் மாதிரியில் அமைக்கப்பட்ட இது புத்த விஹாரமாகவும் இருந்தது; சீனா, ஜப்பான் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மாணவர்கள் பயின்றனர்; வேதம் முதல் பெளத்தம் வரையான நூல்கள் பல்லாயிரக்கணக்கில் சேகரித்து வைக்கப்பட்ட உலகின் பிரம்மாண்ட லைப்ரரியும் இருந்தது; விஷ்ணு பக்தர்களான குப்தர்கள் பேராதரவு நல்கினார்கள் ; ஐந்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரை கொடிகட்டிப் பறந்தது .
துருக்கிய ஆப்கானிய தில்லி சுலதான் வம்ச மதவெறியன் பக்தியார் கில்ஜி (Bakhtiyar Khilji of the Delhi Sultanate ) படையெடுத்து வந்து பல்கலைக்கழகத்தை இடித்து நூலகத்துக்கு தீ வைத்தான் ; அந்த நூலகம் மூன்று மாதங்களுக்கு எரிந்து கொண்டிருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்தனர் ; பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத நூல்களின் பெயர்களை இன்று உரைகளில் காண்கிறோம்; ஆனால் நூல்கள் கிடைக்கவில்லை ;எல்லாம் அங்கே சாம்பலாயின.
Eyewitness Accounts: Tibetan monk Dharmasvamin visited the site in 1234 CE, nearly 40 years after Khilji’s campaign. He found the institution heavily ruined but still functioning, with a small fraction of about 70 monks being taught by a 90-year-old abbot.
பக்தியார் கில்ஜி தீவைத்து அழித்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தர்ம சுவாமி என்னும் திபெத்திய புத்த பிட்சு அங்கே வந்து கண்ட காட்சியை நமக்கு எழுதிவைத்துள்ளார் . 90 வயத்துக்கிழவனார் ஒருவர் பாடம் கற்பிக்க 70 மாணவர்கள் இருந்தனர் என்றும் பலக்லைக்கழகம் பயங்கர சேதம் அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார் அதற்குப்பின்னர் அதை புனருத்தாரணம் செய்யும் முயற்சிகள் பலிக்க வில்லை; காரணம் மேலும் மேலும் முஸ்லீம்கள் படையெடுத்து அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர்; இப்போது அதே பேரில் புதிய பல்கலைக்கழகம் தோன்றியுள்ளது.
Tags- நாளந்தா, நரசிம்ம, நிவாதக்கவச்ச, நரகாசுர, நீவாடகவச்ச, நாயன்மார் , நிகும்ப, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 73; இந்து மத கலைச்சொல் அகராதி- 75, நாரதர், நரகாசுரன்
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் ;இங்குதான் கண்ணன் குழந்தைப் பருவத்தில் தனது விளையாட்டுகள் மூலம் எல்லோரின் அன்பையும் பெற்றார் ; இன்றும் வீடுகளில் சேட்டை செய்யும் சிறுவர்களைக் கண்ணனுக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.
திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல்)
மதுரா ஜங்ஷனிலிருந்து 3 மைல் தூரமுள்ள யமுனைப் பாலத்தைக் கடந்து அங்கிருந்து 5 மைல் பஸ்ஸில் சென்று இவ்வூரை அடையலாம்.
மூலவர் – நவமோஹன கிருஷ்ணன், நின் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – ருக்மிணி ஸத்யபாமா பிராட்டியார்கள்.
தீர்த்தம் – யமுனா நதி.
விமானம் – ஹேமகூட விமானம்.
ப்ரத்யக்ஷம் – நந்தகோபர்.
ஆழ்வார்கள் பாடிய கோவில்களோ மூர்த்திகளோ ஒன்றும் இப்போது இல்லை. இப்போது உள்ளவை எல்லாம் பிற்காலத்தவை. கோகுல் என்ற இடத்துக்கு சுமார் முக்கால் மைல் தூரத்தில் “புராணா கோகுல்” (பழைய கோகுலம்) என்று ஓர் ஆலயத்தை ஸ்தாபித்துள்ளனர். கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. நந்தகோபர், யஸோதா, பலராமர் விக்ரஹங்களுக்கடியில் குழந்தை கிருஷ்ணன் ஒரு சிறிய மரத்தொட்டிலில் ஸேவை ஸாதிக்கிறார். இவை எல்லாம் மர விக்ரஹங்கள். இந்த இரண்டு கோகுலங்களில் எது உண்மையானது என்று தெரியாது.
கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நிறைந்த கோகுலம் (ஆயர்பாடி) பற்றிய சிறப்புகள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பல பாசுரங்களில் போற்றப்பட்டுள்ளன. ஆண்டாள் அருளிய திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி மற்றும் நம்மாழ்வார் பாசுரங்கள் கோகுலத்தின் அழகையும் கண்ணனின் லீலைகளையும் விவரிக்கின்றன. துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.
திருப்பாவை (ஆண்டாள்):ஆயர்பாடியில் அவதரித்த கண்ணனின் பெருமைகளையும், கோகுலத்துப் பெண்களின் மார்கழி நோன்பையும் விவரிக்கும் முப்பது பாசுரங்களின் தொகுப்பு இது. “கீசுகீசென்றெங்கும்” எனத் தொடங்கும் பாசுரம், கோகுலத்தில் பறவைகள் எழுப்பும் ஓசையையும், பெண்களின் விடியலையும் அழகாகக் கூறுகிறது.
பெரியாழ்வார் திருமொழி:கண்ணனைத் தன் குழந்தையாக பாவித்து, கோகுலத்தில் அவன் செய்த குறும்புத்தனங்களை (வெண்ணெய் திருடியது, உரலில் கட்டியது, ஆய்ச்சிகளிடம் வம்பு செய்தது) பெரியாழ்வார் மிகச் சுவையாகப் பாடியுள்ளார். “மாணிக்கம் கட்டுண்டாய்” மற்றும் “கண்ணன் பிறந்த அணிமணி அரங்கத்து” போன்ற பாசுரங்கள் ஆயர்பாடியின் சிறப்பைப் போற்றுகின்றன. திருவாய்மொழி (நம்மாழ்வார்):கண்ணனின் மீது அதீத அன்பு கொண்டு, அவனது லீலைகளை வியந்து பல பாசுரங்களை அருளியுள்ளார். கோகுலத்தில் கண்ணன் ஆடிய லீலைகள் இப்பாசுரங்களில் சிறப்பிடம் பெறுகின்றன.
திவ்யதேச பாசுரங்கள்
132.
தீய புந்திக் கஞ்சன் உன்மேல்* சினம் உடையன் சோர்வு பார்த்து*
மூலவர்: பெருமாள் ‘அப்பால ரெங்கநாதர்’, ‘அப்பக்குடத்தான்’
இவர் சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
புராணக் கதை: உபமன்யு முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க பெருமாள் ஒரு குடத்தில் அப்பத்தை ஏந்தி வந்து அருளிய தலம் என்பதால் இப்பெயர் பெற்றது.சிறப்பு: இத்தலத்து பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகாவில், கொள்ளிடம் மற்றும் காவிரி நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. இது திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், கல்லணையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது., அன்பில் திவ்ய தேசத்தில் இருந்து கொள்ளிடம் நதியின் மறுகரையை அடைந்தும் இத்தலத்தை அடையலாம்.
***
கோவிலடி என்னும் திருப்பேர் நகர்
பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே (3745)
திருவாய்மொழி 10-8-2
திருப்பேர் நகர் என்றால் யாருக்கும் தெரியாது. கோவிலடி என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும். இயற்கையின் அரவணைப்பில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள அழகான தலமாகும் இது.
இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
புராணம் இதனை பலசவனச் ஷேத்திரம் என்று பகர்கிறது. தமிழில்
புரசாங்காடு என்பதையே வட வானர் பலசவனம் என்று எடுத்தாண்டுள்ளனர். இவ்விடத்து புரசஞ் செடிகள் இன்றும் அளவு கடந்து பல்கிக் கிளைத்து சூழ்ந்து வளர்ந்தோங்கிய காட்சியைக் காணலாம்.
உபமன்யு என்னும் மன்னன் துர்வாச முனிவரின் சாபத்தால்
தன்பலமிழந்து போக அதற்கு விமோசனம் வேண்ட இப்பலசவனம்
ஷேத்திரத்தில் லட்சம்பேருக்கு அன்னதானம் அளித்தால் (ததி ஆராதனம்) சாபந்தீரும் என்று துர்வாசர் தெரிவிக்க இத்தலத்தின் அருகில் ஒரு அரண்மனையெழுப்பி அன்னதானம் செய்யலானார்.
விசேஷம் – ஸந்நிதியின் இடது பக்கச்சுவற்றில் அதிகார நந்தி இருக்கிறார். நந்தி இவ்விடத்தில் தவம் செய்து சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாதலால் ‘நந்திபுரம்’ என்றும் பகவானுக்கு ‘நந்திநாதன்’ என்றும் பெயர் உண்டாயிற்று. நந்திவர்மன் ஏற்படுத்திய ஊர் என்றும் அவன் கட்டிய கோவில் என்றும் இதனைக் கூறுவர். ‘நந்தி பணி செய்த நகர்’ என்றார் திருமங்கையாழ்வார். CH சக்கரவர்த்தி தன் உயிரைத்துறந்து புறாவின் உயிரை காப்பாற்ற தராசு தட்டில் தன் மாமிசத்தை வைத்து சமமாகாமல் இருக்க, தானே, புறாவின் எடைக்கு சமமாக எதிர்த்தட்டில் உட்கார்ந்த அதிசயத்தைக் காண, கிழக்கே இருந்த பெருமாள் மேற்கு முகமாக ஆனார்.
இந்த ஸந்நிதி வானமாமலை மடத்து ஆதினத்தில் உள்ளது.
மங்களா சாஸனம் –
திருமங்கையாழ்வார் – 1438 – 47 – 10 பாசுரங்கள்.
கும்பகோணத்திலிருந்து பஸ்ஸில் கொருக்கை என்ற ஊருக்கு வந்து அங்கிருந்து 1 1/2 மைல் தூரம் செல்ல வேண்டும். வழியில் ஒரு வாய்க்காலைக் கடக்க வேண்டும். டவுன் பஸ்ஸில் கும்பகோணத்திலிருந்து வரலாம்.
நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம்
தம்பியொடு தாமொருவர் தந்துணைவி
காதல் துணை யாக முனநாள்
வெம்பியெரி கானகமு லாவுமவர்
தாமினிது மேவு நகர்தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ
மயிலாலு மெழிலார் புறவு சேர்
நம்பியுறை கின்ற நகர் நந்தி புர
விண்ணகரம் நன்னு மனமே
(1443) பெரிய திருமொழி 5-10-6
மரக்கொம்புகளில் தமது தோகைகளை அசைத்து அசைத்து குயில்கள் கூவ, மயிலினங்கள் ஆடிக்கொண்டிருக்க எழில் நிறைந்த பொழில் சூழ்ந்த சோலைகளால் சூழப்பட்ட இந்த நந்திபுர விண்ணகரத்தில்தான் தன் மனைவியொடும் தம்பியொடும் கொடிய கானகமெல்லாஞ் சுற்றித்திரிந்த ராமபிரான் உறைகிறான் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம்கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. நாதன் கோவில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.
கும்பகோணத்திலிருந்து கொருக்கை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்து 11/2மைல் நடத்தும் இத்தலத்தையடையலாம். வலங்கை மானிலிருந்தும் இதே தொலைவுதான்.
***
3
திருக்கரம்பனூர் /உத்தமர் கோயில்
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தனித்தனி சன்னதிகளில் காட்சி / தரிசனம் தருகின்றனர் .
மூலவர்: புருஷோத்தம பெருமாள் (ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம்).
தாயார்: பூரணவல்லி.
தீர்த்தம்: கடம்ப தீர்த்தம், திருமஞ்சன தீர்த்தம்.
மூலவர் — புருஷோத்தமன், புஜங்கசயனம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் — பூர்ணவல்லி, பூர்வாதேவி எனவும் பெயர்.
தீர்த்தம் — கதம்ப தீர்த்தம், கதம்ப மர உருக்கொண்டு நின்ற பெருமானை தம் கமண்டல நீரால் பிரம்மா திருமஞ்சனம் செய்ய அந்நீரே பெருக்கெடுத்து குளமாகத் தேங்கி கதம்பத் தீர்த்தமாயிற்று.
விமானம் — உத்யோக விமானம்
காட்சி கண்டவர்கள் — பிரம்மா, சிவன், உபரிசரவசு, ஸநக ஸந்தன. குமாரர்கள், திருமங்கையாழ்வார்.
விசேஷங்கள்: இத்தலம் சப்த குரு ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மன், விஷ்ணு, சிவன், சக்தி, சுப்பிரமணியர், தேவகுரு, அசுரகுரு ஆகிய ஏழு குருக்களும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.
வரலாறு: பிரம்மனின் கர்வத்தைப் போக்க சிவபெருமான் பிச்சாண்டவராக வந்து இத்தலத்தில் பிச்சை ஏற்றார், இதனால் இதற்கு பிச்சாண்டார் கோவில் என்ற பெயரும் உண்டு.
****
பேரானைக் குறுங்குடி யெம் பெருமானைத் திருத்தண்கா
லூரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண்கடலேழும் மலையேழிவ் வுலகுண்டும்
ஆராதென் றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே.
(1399) பெரிய திருமொழி 5-6-2
என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருச்சியிலிருந்துவடக்கே நான்கு மைல் தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் உள்ளது.ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு மைல் தூரம். திருச்சியிலிருந்து துறையூர், மணச்சநல்லூர் செல்லும் பேருந்துகள் இக்கோவிலைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி கூறுகிறது. பிரம்மன், ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டு சந்தியா காலத்தில் திருமாலை ஆராதித்து வந்தார். பிரம்மனின் பக்தியைச் சோதிக்க விரும்பிய திருமால் த்தலத்தில் ஒரு கதம்ப மரமாக உருக்கொண்டு நிற்க இதை யுணர்ந்த பிரம்மனும் இவ்விடத்தே வந்து தம் கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்து திருமாலைத் துதிக்க, பிரம்மனுக்கு காட்சியளித்த திருமால் இதுபோலவே எந்நாளும் என்னைத் துதித்து இவ்விடத்தே
வழிபடவும் என்று கூறியதால் பிரம்மனும் இங்கு கோவில் கொண்டார்.
பிரம்மனின் கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள, அத்துடன் தீர்த்த
யாத்திரை செய்த சிவன் இங்கு வந்து சேர்ந்ததும், சிவனுடைய பிட்சா பாத்திரத்தில் பிச்சையிடுமாறு மஹாலட்சுமியை திருமால் கேட்டுக் கொள்ள அவ்விதமே மஹாலட்சுமி பிச்சையிட்டதும் இதுவரை நிறையாத கபாலம் நிரம்பியது. ஆதலால் பிராட்டிக்கும் பூரணவல்லி தாயார் என்னும் பெயர் ஏற்பட்டது.
தனது பிச்சை பாத்திரம் நிறைந்த காரணத்தால் சிவபெருமானும் இங்கு பிட்சாடன் மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
திருமால் கதம்ப மரமாக உருவெடுத்து நின்றமையால் கதம்பனூர் என்றே இத்தலம் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கரம்பனூர் ஆயிற்று, திருமங்கையாழ்வாரால் “உத்தமன்” என்று இப்பெருமாள் அழைக்கப்பட்டதால் உத்தமர் கோவிலாயிற்று. பன்னிரண்டு ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரும், ஆண்டாளுமே பெருமாளை உத்தமன் என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகின்றனர். ஓங்கி உலகளந்த உத்தமன் என்பது ஆண்டாளின் திருப்பாவை.
இக்கோயிலின் விசேஷம், மும்மூர்த்திகள் எனப்படும் சிவனுன், விஷ்ணுவும், பிரம்மனும் ஒரே இடத்தில் தங்கள் துணைவியருடன் எழுந்தருளியிருப்பது தான் ! அதனாலேயே, இக்கோயில் கதம்ப ஷேத்திரம் எனப்படுகிறது. இங்கு கிடைக்கும், (அரிதாகக் காணப்படும்) நாகலிங்கப்பூ கோயில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. விஷ்ணு, மகாலஷ்மி தவிர, சிவன், பார்வதி (வடிவுடையம்மன்), பிரம்மா, சரஸ்வதி ஆகியோருக்கு தனி சன்னதிகள் இங்கு உள்ளன. மேலும், ஆண்டாள், வரதராஜர், வேணுகோபாலன், ராமர், விநாயகர், நடராஜர், சுப்ரமணியர், சனீஸ்வரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு இக்கோயிலில் சன்னதிகள் இருக்கின்றன.
பரமசிவன் குடும்பத்தோடு, பிட்சாடன மூர்த்தியாக இங்கு காட்சியளிப்பது, விசேஷமாகக் கருதப்படுகிறது.
—subham—
Tags- கோவிலடி, திருக்கரம்பனூர் ,உத்தமர்கோயில், நாதன் கோயில், நந்திபுர விண்ணகர், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-57, திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்
விசேஷங்கள் – வீற்றிருந்த பெருமாளாக கோவிந்தராஜனுக்கும், சயனத் திருக்கோலத்தில் ரங்கநாதனுக்கும் இரு ஸந்நிதிகள். வேறு பல ஸந்நிதிகளும் உண்டு. ரங்கநாதன் ஸந்நிதியில் மிக அபூர்வமான அஷ்டபுஜ நரஸிம்ஹரின் வெண்கலச்சிலை உள்ளது. ஒருகை பிரஹ்லாதன் தலையைத் தொட்டும் மற்றொரு கை அபயஹஸ்தமாகவும் விளங்குகின்றன. மற்ற கைகள் ஹிரண்யவதம் செய்கின்றன. இந்த க்ஷேத்ரம் த்ருவனுக்கு ஸேவை தந்த அவஸரத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கோலத்தில் இன்னும் சில சிறு அழகிய கோவில்கள் உள்ளன.
****
பாசுரங்கள்
திருமங்கையாழ்வார் அருளிய 10 பாசுரங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ளன.இப்பதிகம் அச்சோப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளின் அழகில் ஆழ்வார் மயங்கி, “அச்சோ, ஒருவன் அழகியவா!” என்று ஒவ்வொரு பாசுரத்திலும் வியந்து பாடியுள்ளார்.
நாலாயிர திவ்ய பிரபந்தம்– இரண்டாம் ஆயிரம்– திருமங்கை ஆழ்வார்– பெரிய திருமொழி– திருநாகை: அச்சோப்பதிகம்.
1757 பொன் இவர் மேனி மரகதத்தின்
பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும்
வேதியர் வானவர் ஆவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி
ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்-
அச்சோ ஒருவர் அழகியவா (1)
1758 தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்
சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்
செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல் அடியார் வணங்க
பல் மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்-
அச்சோ ஒருவர் அழகியவா (2)
1759 வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்
தாயின நாயகர் ஆவர் தோழீ
தாமரைக் கண்கள் இருந்த ஆறு
சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்
செவ்விய ஆகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்-
அச்சோ ஒருவர் அழகியவா (3)
1760 வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல்
கையன ஆழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்
நாகரிகர் பெரிதும் இளையர்
செம் பவளம் இவர் வாயின் வண்ணம்
தேவர் இவரது உருவம் சொலலில்
அம் பவளத் திரளேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (4)
1761 கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி-
அச்சோ ஒருவர் அழகியவா (5)
1762 வெம் சின வேழ மருப்பு ஒசித்த
வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தைத்
தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன்
தாமரைக் கண்கள் இருந்த ஆறு
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த
காளையர் ஆவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (6)
1763 பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்
பேர் அருளாளர்கொல்? யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ
பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை அன்ன கண்ணும்
அம் கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (7)
1764 மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட
மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த
மா முகில் போன்று உளர் வந்து காணீர்
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்-
அச்சோ ஒருவர் அழகியவா (8)
1765 எண் திசையும் எறி நீர்க் கடலும்
ஏழ் உலகும் உடனே விழுங்கி
மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும்
மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்
கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும்
அண்டத்து அமரர் பணிய நின்றார்-
அச்சோ ஒருவர் அழகியவா (9)
1766 அன்னமும் கேழலும் மீனும் ஆய
ஆதியை நாகை அழகியாரை
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்
காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும்
வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே (10)
***
இங்கு புகழ்பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது
அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பாள் கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நந்தி சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுச் சுவர்களில் புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது.
மேலும் நாகாபரணப் பிள்ளையார், சுவாமி சந்நிதியின் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை இந்த ஆலயத்தின் மற்ற சிறப்புகள் ஆகும்.
மேலும் இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் சுந்தரவிடங்கர் எனப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தியும் அடைந்தவர் அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. அதிபத்த நாயனார் தான் முதல் தடவை பிடிக்கும் மீன்களை பக்திப் பெருக்கோடு இறைவனுக்கு அர்ப்பணித்து பூஜித்து வந்தார். ஒரு முறை ஒரே ஒரு தங்க மீன் கொடுத்து அதிபத்த நாயனாரை சோதித்து திருவிளையாடல் செய்து அவரை இறைவன் ஆட்கொண்ட திருத்தலம் இதுவாகும்.
—subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-53; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திரு நாகை, அம்பாள் நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி
எல்லோரும் அறிஞர்கள்! எல்லோரும் அரசியல் வல்லுநர்கள்! யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “உண்மையாக்கலாம்” உண்மையைப் பொய் ஆக்கலாம்!
சோஷியல் மீடியாக்களில் எத்தனை மணி நேரம் வேஸ்ட்!
“இப்பதான் பிரதம மந்திரி என்னிடம் மட்டும் சொன்னாரு” என்று
டெல்லியிலிருந்து வரும் பொய்க்குரலைக் கேட்டு ஏமாந்தவர்கள் எத்தனை லட்சம்!
இப்படி ஏமாறுவதைத் தவிர்க்க வழி உண்டா?
2005ம் ஆண்டு பிலிப் டெட்லாக் என்பவர் “நிபுணர்களின் அரசியல் ஆரூடம்” என்று ஒரு ஆய்வை மேற்கொண்டார். இஷ்டத்திற்கு “அள்ளி விடுபவர்களைப்” பற்றிய ஆய்வு இது.
எதிர்காலத்தைப் பற்றி இந்த நிபுணர்களின் ஆரூடமும் கணிப்பும் உண்மை தானா, நம்பலாமா என்பதே அவரது ஆய்வின் அடிப்படைக் கேள்வி.
ஆச்சரியகரமான பதில் வந்தது.
உண்மை இல்லை!
284 அரசியல் நிபுணர்களிடமிருந்து அவர் 28000 அரசியல் கணிப்புகளை எடுத்து அலசி ஆராய்ந்தார்.
முடிவைக் கண்டவுடன் அவர் திகைத்தே போனார்.
கூக்குரலிட்டு கத்தி ‘நாளையே உலகம் பாழாய் போகப் போகிறது, இவர் தோற்கப் போகிறார் அவர் ஜெயிப்பார்’ என்ற கணிப்புகள் எல்லாம் பொய்யாய்ப் போயின.
மிகச் சில கணிப்புகளே அதிர்ஷ்டவசமாக உண்மை ஆயின.
எதைப் பற்றிய கணிப்பை வெளியிடும் அறிஞராக இருந்தாலும் அவர் இந்த அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கிறாரா என்று பாருங்கள் என்கிறார் பிலிப்..
கணிப்பை நம்பரில் சொல்லுங்கள்.
இ’ந்தக் கட்சி பெரும்பான்மையாக ஆகும். அது தேறவே தேறாது’ என்று அடித்துச் சொல்பவர்கள் போலி கணிப்பாளர்கள். இவர் 150 இடங்களை பெறுவார் அவர் 30 இடங்களையே பெறுவார் என்று ஒருவர் சொல்லும் போது உண்மையான கணிப்பாளர் சற்று அடிப்படை வேலைகளைச் செய்தே ஆக வேண்டும். களத்திற்குச் சென்று அவர்கள் நிலவரத்தை ஆராய்ந்த பின்னரே நம்பரைச் சொல்வார். இதையும் மீறி இரண்டு சீட்டுகளே வாங்குவார் என்று சொல்லும் போலி அறிவாளி ஒருவர், எதிராளி 108 இடங்களை வாங்கி விட்டால்
முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்?
அவர் ஒரு போலி என்பதை முத்திரை குத்தித் தெரிந்து கொள்ளலாம். அவர் சொல்வதை இனி யாராவது கேட்பார்களா?
கேள்வியைச் சுருக்கி குறிப்பாகக் கேளுங்கள்.
தினசரி உடற்பயிற்சி செய்தால் நான் கட்டமைப்பான உடலைப் பெறுவேனா என்று கேட்கக் கூடாது.இன்றிலிருந்து தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சியை நான்கு வாரங்கள் செய்தால் என் எடை எவ்வளவு குறையும் என்று குறிப்பாகக் கேளுங்கள்.முதல் கேள்விக்கான பதிலை ”அளக்க” முடியாது. இரண்டாம் கேள்விக்கான பதிலை அளக்க முடியும். தவறாக இருப்பின் அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இது உதவும்.
உண்மைக்கான அடிப்படை விகிதத்தைக் கேளுங்கள். ‘இது போல எப்போது யாருக்கெல்லாம் நடந்தது. அதன் பலன் அல்லது விளைவு என்ன’ என்று கேளுங்கள். இது உண்மையின் அடிப்படையை ஆராயும் கேள்வி. இப்போது சூழ்நிலை மாறி இருக்கிறதா, அதே போலத் தான் இன்றும் சகல அம்சங்களும் உள்ளனவா என்பனவற்றைக்
கேட்டால் கணிப்பு தவறாகப் போனாலும் அடிப்படையைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
ஃபெர்மி வழியைக் கடைப்பிடியுங்கள். பிரபல விஞ்ஞானியான என்ரிகோ ஃபெர்மி கண்டுபிடித்து கடைப்பிடித்த வழி இது. ஒரு
பிரச்சனையை ஏழு எட்டு துண்டுகளாகப் பிரித்து உண்மையை அறிவது
தான் இந்த வழி உதாரணமாக இந்த வேலையை நள்ளிரவுக்குள்
முடிப்பேனா என்று கேட்காதீர்கள். இரவு 9 மணிக்கு எத்தனை பக்கம்
முடிப்பேன். அதற்கு அப்புறம் எவ்வளவு முடிக்க வேண்டி இருக்கிறது. இதில் என் வேகம் அல்லது ஆற்றல் என்ன என்று பல சிறு துண்டுகளாக பிரச்சினையை ஆக்கி விடை என்ன என்பதைப் பற்றி யோசித்தால் பதில் – உண்மையான பதில் -கிடைக்கும்.
இப்படித்தான் ஆரூடக் கணிப்புகளைச் செய்வோரையும் அலசி ஆராய வேண்டும். காசுக்காக சோஷியல் மீடியாக்களில் ஆரூடம் சொல்பவர்களைக் கேட்டுக் கொண்டே இருந்தால் நமது மூளையும் பாதிக்கப்படும்; நமது பொன்னான நேரமும் வீணாகும். அவர்களின் கணிப்புகளுக்கான பலிக்கடாக்களில் நாமும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டுவோம்.
இந்த நான்கு அம்ச வழிமுறையை பிலிப் சொல்கிறார்; கேட்டுப் பலனை அனுபவிப்போமே!
ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலம்.. இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.
1) முதல்பிரிவு – கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாள், கோவில்
மூலவர் – கோவிந்தராஜப் பெருமாள், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – புண்டரீகவல்லி.
விசேஷங்கள் – இங்கு, ஆண்டாள், உடையவர், முதலியவர்களின் ஸந்நிதிகள் உள்ளன.
2) இரண்டாம் பிரிவு – திருமலை.
மூலவர் – திருவேங்கடமுடையான், ஸ்ரீ நிவாஸன், வெங்கடாசலபதி, பாலாஜி, நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
ஆதீவராஹர் ஸந்நிதி – ஸ்வாமி புஷ்கரிணியின் வடமேற்கு மூலையில் கோவில் கொண்டுள்ள இப்பெருமாளக்கு தளிகை ஸமர்ப்பித்த பிறகே, அது ஸ்ரீநிவாஸனுக்கும் ஸமர்ப்பிக்கப்படுகிறது. ஏழு பர்வதங்கள் வெங்கடாத்ரி, சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி என்ற பெயர்களுடன் இருக்கின்றன. இதன் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ நீவாஸன் எழுந்தருளுவதற்கு முன் ஆதிவராஹன் இத்தலத்தில் ஸேவை ஸாதித்ததனால் ஆதிவராஹரைஸேவித்த பிறகுதான் ஸ்ரீநிவாஸனை ஸேவிக்கவேண்டும்.
3) மூன்றாம் பிரிவு – திருச்சானூர் (அலர்மேல் மங்காபுரம்)
மூலவர் தாயார் – அலர்மேல்மங்கை (பத்மாவதி) , கிழக்கே திருமுக மண்டலம்.
தீர்த்தம் – பத்மஸரோவரம்.
விசேஷங்கள் – இக்கோவிலில் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் ஸெனந்தரராஜனுக்கும் ஸந்நிதிகள் உள்ளன. இந்தக்கோயிலை ஸ்ரீநிவாஸன் நியமனப்படி, தொண்டைமான் என்ற அரசர் கட்டி பகவான் மிக்க ஆனந்தத்துடன் எழுந்தருளியதால் ஆனந்த விமானம் என்று பெயர் உண்டானதாக ஸ்தலவரலாறு.
திருமலைமேல் கல்யாண உத்ஸவம், ப்ருஹ்மோத்ஸவம் முடியளிப்பது ஏராளமான பிரார்த்தனைகள் செலுத்தப்படகின்றன. காணிக்கைகளின் காரணமாக உலகத்திலேயே பணக்காரக் கோவில் இதுதான்.
சென்னை – பம்பாய் ரயில்பாதையிலுள்ள ரேணிகுண்டாவிலிருந்து சுமார் 7 மைல் தூரத்திலுள்ள ரயில்வேஸ்டேஷன் திருப்பதி.. திருப்பதி, திருமலை, திருச்சானூர் என்ற மூன்று முக்ய பிரிவுகளிலும், தேவஸ்தான சத்திரங்களும் ஹோட்டல்களும் மற்ற எல்லா வசதிகளும் உள்ளன.
சென்னையிலிருந்து 108 கி.மீ. ரயில், விமானம், சாலை வழியாகச் செல்லலாம் சாலை வழியாகச் சென்றால் கோவிலுக்கு மிக அருகில் போகலாம். இயற்கை வனப்புமிக்க 7 மலைகளையும் காணலாம்..பத்தொன்பது கி.மீ தூரம். சுமார் நாற்பது நிமிடங்கள் பிடிக்கும்.
மலை அடிவாரத்திலிருந்து, மலை உச்சியிலுள்ள வெங்கடாசலபதி கோவிலுக்கு நடந்து போனால் 11 கிமீ. மூன்று மணி முதல் ஆறு மணி நேரம் பிடிக்கும். எல்லோரும் போகும்பாதை அலிபிரி பாதை எனப்படும்; 3500 படிகளுக்கு மேல் உள்ளது.
***
திருப்பதி அதிசயங்கள்
திருப்பதி சென்று திருமலையில் ஏறினால் அதிசய வெங்கடாசலபதி நமக்கு தரிசனம் தருவார். இந்த மலையப்ப சுவாமி, ஏழு மலை வாசன் பற்றி புஸ்தகம் புஸ்தகமாக எழுதலாம். அவ்வளவு அற்புதங்களை பகதர்கள் வாழ்வில் செய்துள்ளார். ஆயினும் எல்லா விஷயங்களையும் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.
உலகின் பணக்கார வழிபாட்டுத்தலங்களில் திருப்பதி, முன்னிலையில் நிற்கிறது தினமும் 4 முதல் 6 கோடி ரூபாய் வரை உண்டியலில் விழுகிறது!
பாலாஜி என்றும் வெங்கடேஸ்வரன் என்றும் அழைக்கப்படும் பெருமாள் உலகில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறார்.
பெருமாளே ஒரு அதிசயம்தான். வைஷ்ணவ, சைவ சின்னங்களுடன் காட்சிதருகிறார். இதனால் அருணகிரிநாதர் 500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய திருப்புகழில் இவர் முருகப் பெருமானே என்று பாடிவிட்டார்.
மக்கள் நாட் கணக்கில் நின்று தரிசிக்கும் ஒரே கடவுள் இவர்தான்.
இந்தியாவில் அதிகமான கல்வெட்டுகள் உள்ள கோவிலும் இதுதான்.
பக்தர்களால் அதிகம் பாடப்பட்ட துதிக்கப்பட்ட கடவுளும் இவர்தான் அன்னமாசார்யா மட்டுமே ஆயிரக்கணக்கில் கிருதிகளை செய்துவிட்டார்.
சுமார் 2000 ஆண்டு வரலாறு உடைய கோவில் இது.
தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமே வட வேங்கடத்தைக் குறிக்கிறது.
இன்றுவரை பாலாஜி, வெங்கடேஸ்வரன், வெங்கடாசலபதி, சீனிவாசன், வெங்கட் என்ற பெயர்களை இந்துக்கள் குழந்தைகளுக்குச் சூட்டி வருகிறார்கள்.
தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பழைய கோவிலும் இதுதான்.
இது 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்று.
****
திருப்பதி லட்டு
இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கமுடியாது ; 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.
****
நான் 24 AUGUST 2019-ல் எழுதிய கட்டுரையிலிருந்து முக்கியத் தகவல்கள்
திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)
திருப்பதி என்றவுடன் வெங்கடாசலபதியும் அவருடைய உண்டியலும், லட்டு-ம் தான் நம் கண்ணுக்கு முன்னே வரும். அங்கு மிகப்பெரிய வரலாற்றுப் புதையல் , தமிழ் வரலாற்றுப் புதையல்- இருப்பது பலருக்கும் தெரியாது. அதுவும் தமிழ் வரலாற்றுப் புதையல்.
2000 ஆண்டுக்கும் மேலாக வேங்கட மலை உச்சியில் நின்றுகொண்டு, போகும் வருவோரின் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு, உலக அரசியல்வாதிகளைத் தன் கோவிலுக்கு வரவழைக்கும், காலடியில் விழ வைக்கும் வேங்கட நாயகனுக்கு பல சிறப்புகள் உண்டு. அருணகிரிநாதர் அவரை முருகா என்று பாடுகிறார்; பேயாழ்வரோ அவரை சிவனே என்று பாடுகிறார்; குல சேகர ஆழ்வாரோ உனது மலையில் எனக்குப்
பறவையாகவோ, புதராகவோ, சுனையாகவோ இருக்க அருள் புரி; அதுவும் முடியாவிட்டால், Please, At least ப்ளீஸ், அட் லீஸ்ட் என்னை வெற்றிலை எச்சில் துப்பும் தட்டாகவாது செய்து விடு என்று இறைஞ்சுகிறார்.
சிலப்பதிகார இளங்கோவோ பாடிப்பரவுகிறார். புரந்தரதாசரோ 600 ஆண்டுக்கு முன்னரே அவரை கிண்டல் செய்கிறார்; நீ ஒரு சரியான செட்டிப்பயல்; காசிலே கறாரான கெட்டிப் பயல் என்று கன்னடத்தில் பாடி சந்தோஷப்படுகிறார்.
kAsu tappidare paTTi baTTi kAsu biDade kaNDu kaTTi
இதில் எல்லாம் மயங்கிப் போன நமக்கு அங்குள்ள தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. எனக்கும் தெரியாது . நேற்று லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று ஆறு தடித் தடிப் புஸ்தகங்களைத் தூக்கி வந்து படித்தபோது நிறைய அதிசயச் செய்திகள் கிடைத்தன. சில செய்திகளைக் காண்போம்.
பல்லவர் காலம் முதல் அண்மைக்காலம் வரை கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாறு கிடைக்கிறது இவ்வளவு நீண்ட வரலாறு ஒரு கோவிலில் உலகில் வேறு எங்கும் கிடைக்காது!
திருப்பதி கோவிலிலும் புனித மலை வளாகத்திலும் 1150 கல்வெட்டுகள் உள்ளன. இது 1930ம் ஆண்டு கணக்கு! அவைகள் பெரும்பாலும் தமிழ் மொழியில்தான் இருக்கின்றன. ஏன் தெரியுமா?
சிவன் உடுக்கை அடித்தபோது ஒரு புறம் தமிழ் ஒலியும் மறுபுறம் ஸம்ஸ்க்ருதமும் வந்ததாம். இதற்குச் சான்று தமிழ் இலக்கியத்தில் உள்ளது பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடல் புராணம் அகஸ்தியரும், பாணினியும் எப்படி இரண்டு மொழிகளை சிவ பெருமானிடமிருந்து பெற்றனர் என்று பாடி இருக்கிறார்.
ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளோடு கவிஞர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய 3000 தாமிர சாசனங்கள் இருக்கின்றன. இதில் அன்னமாச்சார்யா பாடிய கீர்த்தனைகளை அறியாத சங்கீத வித்துவான் கிடையாது.
ஆக உலகிலேயே அதிக கல்வெட்டுகள் நிறைந்த ஒரு வழிபாட்டுத் தலம், உலகிலேயே கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் ஒரு இடம், உலகிலேயே அதிகமான தமிழ்க் கல்வெட்டுகள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான தாமிர சாசனங்கள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான பக்தர்கள் வரும் இடம், உலகிலேயே அதிகமான வசூல் செய்யும் சாமி என்று எல்லா வகையிலும் வேங்கட +அசல+ பதி சாதனைப் புத்தகத்தில் நுழைந்து விடுகிறார்.
1150 கல்வெட்டுகளையும் படியெடுத்து வெளியிட்ட பெருமை சாது சுப்ரமண்ய சாஸ்திரியைச் சாரும். அவர், சிறப்புக் கல்வெட்டு பயிற்சி பெற்ற திருப்பதி கோவில் தொல்பொருட் துறை அறிஞர்; அவரை முன்னின்று நடத்திய பெருமை தேவஸ்தான விசாரண கர்த்தா சுவாமி மஹந்த் பிரயாகதாஸ்ஜியைச் சாரும். 1930ம் ஆண்டிலேயே இவைகளை வெளியிட்ட பெருமை கோவிலைச் சாரும். இவைகளை சேர்த்துவைத்து இலவசமாகப் படிக்க அனுமதிக்கும் பெருமை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியைச் சாரும்.
1150 கல்வெட்டு பற்றியும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். இவைகளை ஆராய்ந்து பத்து டாக்டர் பட்டம் பெறலாம் ; அவ்வளவு விஷயம்.
பல்லவன் தந்திவர்மன் அவனது 51ஆவது ஆட்சியாண்டில் ஒரு கல்வெட்டு வழங்கியுள்ளான்.
51 ஆண்டுக்காலம் ஆண்ட மன்னன் தந்திவர்மன்!
ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் முதலியோர் கல்வெட்டுகளும் உள.
பழங்கால பல்லவ, பாண்டிய, சோழ , விஜய நகர மன்னர்களின் 236 கல்வெட்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் முதல் தொகுதியில் உளது.
ஏனைய 5 தொகுதிகளில் உள்ள கல்வெட்டுகள் :-
சாளுவ நரசிம்மன் -169 கல்வெட்டுகள்,
கிருஷ்ணதேவராயர்- 229 கல்வெட்டுகள்,
அச்யுதராயர்- 251 கல்வெட்டுகள்
சதாசிவராயர்-147 கல்வெட்டுகள்
ஆரவீடு வம்சாவளி- 135 கல்வெட்டுகள்
இவர்களில் வண்னமிகு மன்னன் – மாமன்னன், சக்ரவர்த்தி– கிருஷ்ண தேவராயர் ஆவார்; 35 முறை வெங்கடாசலாதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தவர். ஆமுக்த மால்யதா எழுதி ஆண்டாள் புகழ்
பாடியவர் அவருக்கு நான்கு மனைவிகள். இது போன்ற ஏராளமான வரலாற்றுத் தகவல்கள், கலெட்டுகளுக்குப் பின்னணியாக தரப்பட்டுள்ளன.
*****
திருப்பதி மலைமேல் முருகன் !
(எனது பழைய அக்கட்டுரையில் ஒரு பகுதி)
திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை– 9
அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.
1. திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் புதிர்.
திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:
வேந்த குமார குகசேந்த மயூர வட
வேங்கட மாமலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
வேண்டவெறாது உதவு பெருமாளே
****
திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்
ராவணார் முடி பொடியாகச்
சிலை வாங்கிய நாரணார் மரு
மகனாம் குகனே பொழில் சூழ்தரு
திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே
என்று பாடுகிறார்.
திருப்பதி கடவுள் பற்றி நிறைய புதிர்கள் உள்ளன. வேறு எந்த வைணவ தலங்களிலும் இல்லாத உருவ அமைப்பும், பல நடைமுறைகளும் பூஜைகளும் திருவேங்கடநாதருக்கு இருக்கின்றன. ஆனால் சிலப்பதிகார காலம் முதல் ஆழ்வார்கள் காலம் வரை அங்குள்ள விஷ்ணுவையும் பாடி இருக்கிறார்கள் அப்படியானால் முருகன் கோவில் எங்கே? இதுவரை ஏழு மலைகளில் முருகன் கோவில் கண்டுபிடிக்கப்படவில்லை.
வேங்கடேசன் என்று சிவனைப் போல ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைக்கிறோம். பொதுவாக ‘ஈசன், ஈஸ்வரன்’ என்பது சிவனையே குறிக்கும். எதற்காக ஈசன் பெயரைச் சேர்க்கிறார்கள்? ‘வேங்கட சுப்ரமணி’யனென்றும் பெயர் வைக்கிறோம். வேங்கடத்தில் (திருப்பதி-திருமலை) சுப்பிரமணியன் எங்கே இருக்கிறார்? குன்று தோராடும் குமரன் தமிழக வட எல்லையான வேங்கடத்தில் கட்டாயம் கோவில் கொண்டிருப்பாரே? அது எங்கே? சிலர் விஷ்ணு கோவில் (பாலாஜி), முதலில் முருகன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.
இருதரப்பு வாதங்களையும் படித்த பின்னர் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவேளை இரண்டு கோவில்களும் இருந்து ஒன்று மறைந்திருக்கலாம். தமிழ் நாட்டில் கூட சிதம்பரம் போன்ற இடங்களில் சிவனும் விஷ்ணுவும் அடுத்தடுத்து இருப்பதைப் பார்க்கிறோம். “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பொன்மொழியை அறிந்தவர்களுக்கு இது வியப்பு தராது. காலப் போக்கில் ஒன்று மறைந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் பலகோவில்களில் பலராமன் வழிபாடும் இருந்தது. ஆனால் இன்று அறவே இல்லை. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பலராமன் வழிபாடு உள்ளது. பழமுதிர்ச்சோலை காணாமற்போகவே நமது காலத்தில் நாமாக புதிய பழமுதிர்ச்சோலையை உருவாக்கினோம்.
நமது ரெகுலர் வாசகரும் பேரரறிஞருமான காலஞ்சென்ற நஞ்சப்பா அவர்கள் தரும் தகவல்
R.Nanjappa
/ August 24, 2019
Tirupathi- the abode of Balaji,the most famous and wealthy of our Hindu temples- is it a wonder or mystery?
If we follow the ancient Tamil tradition of the five-fold division of the land with a Deity for each, then the hilly region of Tirumala-Tirupati qualifies as Kurinji land, of which the presiding Deity is Subrahmanya, the eternal Kumara ie Balaji! So claims are made that this was originally a Subrahmanya temple.
On the other hand, ancient Tamil literature gives the extant of the land of the Tamil speaking people as “lying between Venkatam in the North and Kumari in the South”. The interesting inference here is that as Kumari is the famous seat of Devi, which is the southern border, the northern border could as well have been a seat of Devi!. In fact we see the image of lion on the four corners of the Gopuram in Tirupati, and lion is the va-hana of Devi!
When Swami Brahmananda [ Rakhal Maharaj] the spiritual son and direct disciple of Sri Ramakrishna and the first President of the RK Math and Mission visited Tirupati around 1911/12, he had a mystic experience there. He felt the presence of Devi there. He asked the priests there about the Deity. And the priests confirmed that it had been a De-vi temple. This is clearly stated in the book ‘Swami Brahmananda As We Knew Him’, published by RK Math, Chennai.
So there is enough mystery surrounding this temple. Wish someone will unravel it with-out bigotry and prejudice.
****
திருப்பதி கோவில் அறிவிப்பு
திருமலையில் பிறந்தார் அனுமன்!
’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் அறிவித்தது.
ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் வெளியிடப்பட்டது.
இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****
QUIZ திருப்பதி பத்து QUIZ (Post No.12,291)
Post No. 12,291
Date uploaded in London – 18 July , 2023
1.திருப்பதியில் இருப்பது முருகனே என்று பாடியவர் யார் ?
****
2.திருப்பதியில் எத்தனை கல்வெட்டுகள் இருக்கின்றன ?
****
3.திருமலையில் உள்ள புதராகவோ பறவையாகவோ , சுனையாகவோ பிறந்தாலும் போதும் என்று பாடியவர் யார்?
****
4.திருமலையில் உள்ள பெருமாள் மீது அதிக துதிகளை இயற்றியவர் யார்?
****
5.வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர் யார் ? ஸுப்ரபாதத்தின் முதல் வரி எங்கிருந்து எடுக்கப்பட்டது ?
****
6.திருப்பதி மலையை தமிழ் பாட்டுக்கள் எப்படிக் குறிப்பிடுகின்றன?
****
7.திருப்பதியில் உள்ள அருவியின் பெயர் என்ன?
****
8.ஏழு மலையான் என்று ஏன் பெருமாளை அழைக்கின்றனர்?
****
9.பெருமாள் எப்படி உலகிலேயே பணக்கார கடவுள் ஆனார்?
****
10.வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் பக்தர்கள் உடனே வழிபடும் திருமலைக்குக் கீழேயுள்ள கோவில் எது ?
****
விடைகள்
1.முருகனே என்று பாடியவர் அருணகிரி நாதர் (திருப்புகழில் ); சிவனே என்று பாடியவர் பேயாழ்வார்.
திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:
வேந்த குமார குகசேந்த மயூர வட
வேங்கட மாமலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
வேண்டவெறாது உதவு பெருமாளே
திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்
ராவணார் முடி பொடியாகச்
சிலை வாங்கிய நாரணார் மரு
மகனாம் குகனே பொழில் சூழ்தரு
திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே
என்று பாடுகிறார்.
கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்
****
2.திருமலை-திருமலை கோவிலிலும் அதன் கீழ் வரும் பகுதியிலும் 1150-க்கு மேலான கல்வெட்டுகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள வழி பாட்டுத் தலம் இதுதான். பல்லவர் காலம் முதல் 800 ஆண்டு வரலாற்றைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .
****
3. குலசேகர ஆழ்வார்
****
4.திருப்பதி பெருமாள் குறித்து அதிகமான பாடல்களை இயற்றியவர் அன்னமாச்சார்யா
****
5.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் ஸம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டது.
இதன் முதல் வரி கெளசல்யா ஸுப்ரஜா சந்த்யா பிரவர்த்ததே — என்பது வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரி .
திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
****
8.திருமலை வெங்கடாசலபதி, ஏழு குன்றுகள் இடையே காட்சி தருகிறார். அவையாவன:
Vrushabhadri – விருஷபாத்ரி
Anjanadri – அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த இடம்)
Neeladri – நீலாத்ரி
Garudadri or Garudachalam – கருடாத்ரி
Seshadri or Seshachalam – சேஷாத்ரி
Naraynadri–நாரதாத்ரி அல்லது நாராயணாத்ரி
Venkatadri – வேங்கடாத்ரி
****
9.திருப்பதி பாலாஜி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், கடனை அடைப்பதற்காக பக்தர்களிடம் காணிக்கை வாங்குகிறார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தனை பாடிய புரந்தரதாசரோ நீ சரியான செட்டிப்பயல் என்று பெருமாளை கிண்டல் செய்கிறார்.
****
10.திருப்பதியிலி ருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.
****
தொல்காப்பியர் காலத்தில் திருப்பதி
தொல்காப்பியத்துக்கு பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார் பாடுகிறார்:-
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு……………………………
பொருள்:-
வடக்கே வேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ் பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரு வழக்குகளில் உள்ள எழுத்து, சொற்கள், பொருள்களை நன்கு ஆராய்ந்து (தொல்காப்பியர் நூல் இயற்றினார்).
புராணங்களில் வரும் 56 தேசங்களில் திராவிட தேசத்துக்கும் தெற்கில்தான் பாண்டிய சோழ தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக திராவிட என்ற சொல்லையும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வில்லை.
கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்;
வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி
நான் மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்
நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு
புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த
மெய்யேபோல் பூத்துநின்ற
அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய
வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ
பொருள்:-
வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும், ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்.
சீதையைத் தேடச் செல்லும் வானரப் படைகளுக்கு கட்டளையிட்டபோது இச்செய்யுள் கூற்று வருகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நான் கொடுத்த தலைப்பு பொய்யான தலைப்பு.
ஏனெனில் சங்க இலக்கியத்திலோ பிறகால தமிழ் இலக்கியத்திலோ பாரதி பாடல்களிலோ தேவாரம் திருவாசகத்திலோ திராவிட என்ற சொல் கிடையாது . ஆயினும் சங்க இலக்கியம் முதல் பாரதி பாடல் வரை ஆரியARYA என்ற சொல் உண்டு. தேவார, திருவாசககங்களில் ஆரியன் என்றால் சிவ பெருமான்! சங்க இலக்கியத்திலும் ஆரிய என்றல் வடக்கில் இமய மலையில் வாழும் முனிவர்கள் அல்லது பண்பாடுமிக்க மனிதர்கள்; ஆங்கிலத்தில் CULTURED, EDUCATED என்று சொல்வதற்கு சமம் ; இதனால் அந்த திசையிலிருந்து வந்த கூத்தாடிக்கும், பயில்வான்களுக்கும் ஆரிய மல்லன், ஆரிய கூத்தாடி என்று சொல்லத் துவங்கினர்; ஆனால் திராவிட என்ற சொல்லை எங்குமே தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ காண முடியாது; இது வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதை ; இப்படிச் சொன்னால் தென்னாட்டில் கிறிஸ்தவ மதத்தை பரப்பலாம் என்று கனக்குப் போட்டனர்; அது ஓரளவுக்குப் பலித்தது. மீனவர்களையும் பனை ஏறிகளையும் மலையாள ஈழவாக்களையும் மாற்றினார்கள்
பிற்காலத்தில் தென் பகுதியையும் அங்கு பேசப்பட்ட மொழிகளையும் குமாரில பட்டர் (EIGTH CENTURY CE ) போன்றோர் திராவிட பாஷை என்று அழைத்தனர்; அதற்கு முன்னர் சமணர்கள் ஸ்தாபித்த சங்கத்தை திராவிட சங்கம் (FIFTH EIGTH CENTURY CE) என்றனர் ; இரண்டும் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள்; அதற்கும் முன்னதாக ஒரிஸ்ஸா என்னும் கலிங்கத்தை ஆண்ட காரவேலன் த்ரமிள என்ற சொல்லை பயன்படுத்தினான்; சிலர் தமிழ் – த்ரமிள- திராவிட என்று விளக்கினர் இன்னும் சிலர் இல்லை திராவிட- த்ரமிள- என்பது தமிழ் ஆயிற்று என்று REVERSE GEAR ரிவர்ஸ் கியரில் பயணம் செய்தனர் . 56 தேச வரைபடங்களிலும் விளக்கங்களிலும் திராவிடம் என்பதைத் தமிழ் நாட்டுக்கு மேலே ஆந்திரப் பகுதியைக் காட்டியுள்ளார்கள்; ஆக இது தமிழ் நாடோ சேர, சோழ, பாண்டிய நாடோ இல்லை!
****
கணவன்மாரும் மனைவியரும்
“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்!
ரிக்வேத ரிஷி தீர்க்கதமஸ் – தாசர் குலப் பெண் மமதா ;
கவச ஐலுசர் – தாசர் குலப் பெண்;
உபநிஷத பெண்மணி ஜாபாலா- பணிப்பெண் ; மகன் சத்யகாம ஜாபாலன் ;
பிராமண ராவணன் – அசுரர் மகள் மண்டோதரி ;
பீமன் – அரக்கி ஹிடிம்பா;பீமன் மற்றும் அரக்கி இடும்பி ஆகியோரின் மகன் கடோத்கஜன்.
சந்தனு – மீனவப் பெண் மத்ஸ்யகந்தி; அவள் மகள் வேத வியாசர்
கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன் – அசுரர் இளவரசி பிரபாவதி
ராமனின் மகன் குசன் – நாக இளவரசி- குமுதவதி; அவர்கள் மகன் அதிதி
ராமன் மகன் லவன் – நாக இளவரசி கஞ்சசனா
நரகாசுரன் -மனைவி மாயா ; விதர்ப்ப நாட்டு இளவரசி; மகன் பகதத்தன்
முறைப்பெண்ணை மணப்பது தமிழ்நாடு மட்டுமின்றி ஒரிஸ்ஸா, குஜராத், மகாராஷ்டிரத்தில் உண்டு ; அவர்களுக்கு முன்னால் அர்ஜுனன் முறைப்பெண் சுபத்ராவையும் , கிருஷ்ணன் மகன் பிரத்யும்னன் முறைப்பெண், ருக்மவதியையும் மணந்தனர்.
***
வெள்ளைக்காரன் வந்து ஆரிய திராவிட என்று பிரிப்பதற்கு முன்னர் நச்சினார்க்கினியர் முதலியோர் 18 குடிகள் அல்லது 18 பிரிவுகள் பற்றிப் பேசினார்கள். அதிலும் ஆரியர் திராவிடர் கிடையாது இவைகளுக்கு எல்லாம் இனவாதப் பொருளை கற்பித்தோர் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்கள் மாக்ஸ் முல்லர் , ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர் , ஜான் மக்கே ஆவர். இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது ; நாலு பேரைக் குறிப்பிட்டதற்கு காரணம் இவர்கள் எல்லோரும் சிந்து வெளி எழுத்துக்களை படிக்க முடியாமல் திசை திருப்பியதோடு வேதத்தையும் நேற்று வந்தது, அதாவது பைபிளின் பழைய ஏற்பாடு, யூத மதம் ஆகியவற்றுக்குப் பிற்பாடு வந்தது என்று பொய்யுரை பரப்பினர்; நான் சொல்வதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) மிக அழகாக, பாலீஷாக, திட்டாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லி இருக்கிறார் (காண்க தெய்வத்தின் குரல்).
இந்தக் கொள்ளைக்காரர்கள் ஸாரி, ஸாரி SORRY, SORRY வெள்ளைக்காரர்கள் ஆங்கிலத்தில் பல விஷயங்களை எழுதினாலும் அது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்க முயன்றனர்.
ஆயினும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற எஸ் ஆர் கே ( எங்கள் வீட்டுக்கு நாலு வீடுக்கு தள்ளி மதுரையில் வசித்த பேராசிரியர்; சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரையாளர் எஸ் ராம கிருஷ்ணன் ) போன்றோர் சில விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். (காண்க – இந்திய பண்பாடும் தமிழரும் , எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தகநிலையம், மதுரை , 1971).அவைகளைக் காண்போம் .
எந்தெந்த ஜாதிக்காரரை மணந்து பெற்ற பிள்ளைகளுக்கு என்ன பெயர் என்பதை மனு ஸ்ம்ருதியும் கூறுவதால் அப்படி நிகழ்ந்தது தெரிகிறது ஆனால் உதாரணங்களைக் காண்போம்.
மஹாபாரதம் சொல்லும் கதையில் சந்தனு மகாராஜன் மீனவப் பெண்ணான மத்ஸ்ய கந்தியை மணந்தது வருகிறது; மத்திய கந்தி என்றால் மீன் நாற்றம் என்று பொருள் ;அவர்களுக்குப் பிறந்தவர்தான் வியாசர்- வேத வியாசர் இல்லாவிடில் மஹாபாரதமும் கிடையாது, புராணங்களும் கிடையாது, நான்கு வேதங்களும் கிடையாது; ஆகையால் இன்றுவரை குருபூர்ணிமா தினத்தன்று அவரைக் குருவாக எல்லா இந்துக்களும் வணங்குகின்றனர் அவர் நிறமோ கருப்பு ; காக்காக் கருப்பு! UTTER BLACK!
இங்கு இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்; திராவிடர்கள் கோழி முட்டைக் கண்களும், போண்டா மூக்கும், சுருட்டை முடியும், குட்டையான தோற்றமும் உடையவர்கள் என்று வெள்ளைக்காரர்கள் எழுதிவைத்தார்கள். ஆரியர்கள் இதற்கு நேர் மாறாக கூரிய மூக்கும், நல்ல உயரமும், வெள்ளைத் தோலும் தாமரைக் கண்களும் உடையவர்கள் என்றும் வருணித்தார்கள் !
ஆனால் வியாசர் கருப்பு! திரவுபதி கருப்பு! கிருஷ்ணன் கருப்பு! ரிக் வேத அகஸ்தியர் குட்டை !
இதிலும் வெள்ளைக்காரன் புளுகு அம்பலமாகிறது (ஹரப்பாவில் குட்டையான திராவிடர் எலும்புக்கூடு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை !!!) ராமன் வேடர் குலத் தலைவன் குகனைத் தழுவிக்கொண்டு யூ ஆர் மை பிரதர் YOU ARE MY BROTHER TOO என்று சொன்னதெல்லாம் நமக்குத் தெரியும்.
திருவிளையாடல் புராணக் கதைப்படி மதுரை மீனாட்சி கூட வடக்கத்திப் பெண்தான் ! சூரசேன மஹாராஜாவின் பெண்ணான காஞ்சன மாலாவுக்குப் பிறந்தவள் மீனாட்சி . 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மெகஸ்த்னீஸ் கூட அவளைக் குறிப்பிட்டான் .ஆனால் அவளை திருஞான சம்பந்தர் அழகான தமிழ்ப்பெயர் சொல்லி — அங்கயற்கண்ணி என்று சொல்லித் –தேவாரம் பாடினார்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் !
அசுரர்கள் என்றால் திராவிடர்கள், தேவர்கள் என்றால் ஆரியர்கள் என்றும் வெள்ளைக்கார கிறிஸ்தவன் கதை கட்டி விட்டான் ; விருத்திராசுரன் என்ற பிராமணனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதை ரிக் வேதம் முதல் நம்ம ஊர் தல புராணங்கள் வரை ஆயிரம் முறையாவது சொல்லி இருக்கும்;
ராவணன் என்ற 50% பிராமணனைக் கொன்றதற்காக ராம பிரானையும் பிரமஹத்தி பிடித்ததை ராமேஸ்வரம் முதலிய தல புராணங்களில் காண்கிறோம் ராவணனும் ஒரு அசுரன்!
பெண்கள் வசப்பட்ட க்ஷத்ரிய விசுவாமித்திர பின்னர் பிராமணனாக மாறியதும் நந்தனார் கதையும் எவரும் பிராமணன் ஆக முடியும் என்றும் காட்டுகிறது
நமுசி என்ற அரக்கனை இந்திரன் கொன்றான் என்ற ரிக் வேதக் கதையிலும் நமுசியை பிராமணன் என்றே காட்டுகிறது; நமுசியின் சகோதரன்தான் அசுரத் தச்சனான மயன்.
நேபாளம் பூட்டானில் இப்போதும் நமுசி என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்.
ரிக்வேதத்தில் வேறு ஒரு கிருஷ்ணன் உள்ளான்; அவனுக்கும் இந்திரனுக்கும் மோதல்! த்வஷ்டா மகனும் தேவர்களின் புரோகிதனுமான பிராமணன் திரிசரஸின் மூன்றுதலைகளையும் இந்திரன் துண்டித்தான் என்றும் ரிக் வேதம் 10-8 கூறுகிறது ; திரிசிரசும் ஒரு அசுரன் என்கிறது ! ஆகவே அசுரர் என்பது குணத்தால் வந்த அடைமொழிதான்; பிறப்பால் அல்ல. வெள்ளைக்காரன் கணக்குப்படி இவை எல்லாம் இன மோதல்கள் .
இப்படி ஏனைய மத நூ ல்களில் ஆயிரம் விஷயம் இருந்தும் அவைகளுக்கு வெள்ளைக்காரன் இன வேற்றுமை கற்பிக்கவில்லை;
ஆக பிராமணர்களையும் அசுரர்கள் அல்லது ராக்ஷஸர்கள் என்று வருணித்ததை ரிக் வேதத்திலும் ராமாயணத்திலும் காண்கிறோம் ; அவ்வளவு அசுரர்களும் ராக்ஷஸர்களும் பிரம்மா அல்லது சிவ பெருமானை நோக்கித் தவம் செய்து ஏராளமான வரங்களை பெற்றதையும் புராண, இதிகாசங்களில் படிக்கிறோம்; இவர்கள் திராவிடர்கள் என்றால் எப்படி ஆரிய தெய்வங்களை வழிபட்டு வரங்களை பெற்றார்கள் ? இவைகளை எல்லாம் மறைத்ததால்தான் வெள்ளைக்கார்களை அயோக்கியர்கள் என்று குறிப்பிடுகிறேன் .
இந்திரன் என்பது பட்டம்; ஒரே ஆள் அல்ல; ராஜா, தலைவன் என்று பொருள்;
ரிக்வேதத்தில் கீழ் ஜாதி முனிவர் தீர்க்கதமஸ் என்ற ரிஷி, தாசர் குல மமதாவின் புதல்வர் . வெள்ளைக்காரன் கணக்குப்படி மமதா திராவிடப் பெண் .
கவச ஐலுசர் என்ற ரிக்வேத ரிஷியும் கிழ்ஜாதி தாசர் மகன்தான் .
சுதாஸ் என்ற ரிக்வேத கால மன்னனும் தாசன் என்பதை பெயரே காட்டிவிடுகிறது
உபநிஷத்தில் வரும் ஜாபாலா வேலைக்காரப்பெண் ; அவளுக்குப் பிறந்தவன் ரிஷியிடம் போய் “என் அப்பா யார் என்று தெரியாது என்று அம்மா சொல்லிவிட்டாள் என்றான். அப்படியானால் நீ பிராமணன்தான் ஏனெனில் பிராமணன் உண்மையே பேசுவான் உன் பெயர் இன்றுமுதல் உண்மை விளம்பி — அதாவது சத்யா காமன்- வா, வா! வேத வகுப்பில் உட்கார்! என்கிறார் வண்டிக்காரன் ரைவக் , ஜானுசுருதி என்ற மன்னனுக்கு ஆத்ம ஞானம் போதித்ததை சாந்தோக்கிய உபநிடதம் சொல்கிறது .
ஒரே வேதம் பயிலும் வெள்ளை நிறத்தவன் , இரு வேதம் பயிலும் மாநிறத்தவன் மூன்று வேதம் பயிலும் கருப்பு நிறத்தவன் பற்றி உபநிஷத்துக்களிலேயே பழமையான பிருஹத் ஆரண்யக உபநிஷத் குறிப்பிடுகிறது. வெள்ளைக்காரன் சொல்லுவதை ஒப்புக்கொண்டால் கருப்பு நிற திராவிடன்மட்டும்தான் 3 வேதங்களையும் படித்தான் என்று எழுதவேண்டி வரும்!
கசாப்புக் கடை வைத்திருந்த தர்மவியாதனிடம் கெளசிக முனிவர் அறிவுபெறச் சென்ற செய்தி மஹாபாரதத்தில் உள்ளது.
இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும் ; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினைக்கு வேதங்களிலும் சங்க கால இலக்கியங்களிலும் ஆதாரம் இல்லை ; ஆரிய, திராவிடச் சொற்களுக்கு இனவாத அர்த்தம் நம்முடைய நூல்களில் இல்லை ; குணத்தால் ஒருவன் தேவன் ஆகலாம் அல்லது அசுரன் ஆகலாம் ஆரியன் என்றால் படித்தவன், நாகரீகம் உடையவன்; திராவிடன் என்றால் தென் இந்தியாவில் வசிப்பவன் என்பதே உண்மைப்பொருள்.