மோடி ‘டீ’ விற்றார்; லிங்கன் விஸ்கி விற்றார்!!- சூடான பதில்கள் (Post No.3051)

Abraham-Lincoln

Translated by london swaminathan

Date: 11th    August 2016

Post No. 3051

Time uploaded in London :– 6-07 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சில தலைவர்கள் கொடுக்கும் சூடான பதில்கள் வரலாற்றில் இடம் பெற்றுவிடுகின்றன. இந்தியப் பிரதமர், ஒரு காலத்தில் டீக்கடை வைத்தது பற்றி பலர் கிண்டல் செய்தவுடன், பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்கள், எல்லா இடங்களிலும் இலவச தேநீர் கடை வைத்து தேநீர் வழங்கியதை நாம் அறிவோம்

 

 

இதுபோல அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம். அமெரிக்காவின் தலை சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவர் ஆப்ரஹாம் லிங்கன். அமெரிக்க சுதந்திரப் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். கறுப்பின மக்களின் உரிமைக்காக பாடுபட்டவர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து உழைப்பால் முன்னேறியவர்.

 

ஒருமுறை, வாழ்க்கையின் உயர்மட்டத்திலுள்ள பிரமுகர் டக்ளஸ் என்பவர் பொது இடங்களில்   லிங்கனை விமர்சித்து வந்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் டக்ளஸ் சொன்னார்:-

 

“நான் லிங்கனை முதலில் சந்தித்ததே ஒரு கடைப் பையனாக வேலை பார்த்தபோதுதான். அவன்  விற்காத பொருள் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?  அவன் மதுபானக் கடையில் எடுபிடியாகவும் இருந்தான்!”

 

இப்படி டக்ளஸ் பேசி முடிந்தவுடன் ஒரே கரகோசம்!

 

லிங்கனா சளைப்பார்? அவர் சொன்னார்:’

 

“மாண்புமிகு டக்ளஸ் சொன்னது எல்லாம் உண்மை. எள்ளளவும் பிசகில்லை! நான் பலசரக்குக் கடையில் வேலை பார்த்தேன்; பஞ்சு விற்றேன்; சுருட்டு விற்றேன்; மெழுகு வர்த்தி வியாபரமும் செய்தேன்; சில நேரங்களில் மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு விஸ்கியும் விற்று இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் டக்ளஸ், ‘கவுண்ட’-ருக்கு எதிர்ப் பகுதியில் நின்று என்னிடம் பொருள்களும் வாங்கியது உண்மையே; ஆனால் இப்பொழுது என்ன நிலை?

 

‘கவுண்ட’–ருக்கு அந்தப்புறம் நின்று பொருள்களை விற்ற நான், அங்கிருந்து வெளியேறி விட்டேன். உங்களுக்கே தெரியும். ஆனால் மதுபானக் கடையில் என்னிடம் ‘கவுண்ட’’-ருக்கு எதிர்ப்புறத்தில் நின்று என்னிடம் விஸ்கி வாங்கிக் குடித்தாரே அவர் மட்டும் அந்தப் பகுதியை விட்டு இன்று வரை விலகவே இல்லை! அது மட்டுமல்ல, அதிபயங்கர விசுவாசத்தோடு அக்கடையை விட்டு அகலுவதே இல்லை என்றார்.

 

பொதுக்கூட்ட மண்டபத்தின் கூரை இடிந்து விழும் அளவுக்கு கரவொலி எழுந்தது!

 

Xxxx

m twain

மார்க் ட்வைனின் சூடான பதில்!

(சாமுவேல் லாங்ஹார்ன் க்ளெமென்ஸ் என்பவரின் புனைப் பெயர் மார்க் ட்வைன். சிறந்த அமெரிக்க எழுத்தாளர், விரிவுரையாளர், நாவலாசிரியர், நகைச் சுவைப் பேச்சாளர்)

 

ஒருநாள் அவரும் வில்லியம் டீன் ஹவல்ஸ் என்ற பிரமுகரும், சர்ச்சிலிருந்து வெளியே வர முயன்றனர். ஆனால் கன மழை கொட்டியது.

 

ஹவல்ஸ்: “ சாமுவேல் இந்த மழை நிற்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

சாமுவேல் (மார்க் ட்வைன்):- எனக்குத் தெரிந்தவரை மழை, எப்போது பெய்யத் துவங்கினாலும் நின்று போய் இருக்கிறது!

–என்று நமட்டுச் சிரிப்போடு சொன்னார்.

 

மழையில் சொன்னாலும், இ துவும் சூடான பதில்தான்!

 

–subham–