மனித குலத்தையே மாற்றப்போகும் மாத்திரை! (Post No.2924)

Stephen Hawking

rticle Written by S Nagarajan

Date 27th June 2016

Post No.2924

 

பாக்யா 24-6-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
மனித குலத்தையே மாற்றப்போகும் மாத்திரை!
ச.நாகராஜன்

“30 நாட்களில் உங்களுக்குத் திருப்தி இல்லையெனில் உங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” – ஜீனியக்ஸ் மாத்திரையைத் தயாரிக்கும் கம்பெனி

உலகின் புரட்சிகரமான மாத்திரை அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. பெயர் ஜீனியக்ஸ் (Geniux) .இதைப் பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பிரப்ல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் கூறுகையில், “இது மனித குலத்தையே மாற்றப் போகிறது” (This pill will change humanity) என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

 
ஸ்டீபங் ஹாகிங் நரம்பு மண்டலக் கோளாறினால் பேச முடியாமல் அவஸ்தைப் படும் நோயாளி என்பதை உலகமே நன்கு அறியும்.
மூளையில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க விரும்பும் அவர் இப்படிப்பட்ட நற்சான்றிதழை ஒரு மாத்திரைக்குத் தந்துள்ளார் எனில் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா!
தனது மூளை முன்பை விட கூர்மையாக செயல் பட ஜீனியக்ஸ் தான் காரணம் என்று கூறும் அவர், “மூளையானது ஒரு தசை போல. நீங்கள் அதை செயல்படுத்த சில துணைப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்” என்கிறார். இந்த மாத்திரையை உட்கொண்ட டாம் பிராடி என்ற விளையாட்டு வீரரும் கன்யே வெஸ்ட் என்ற இசைக் கலைஞரும் இதைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் இந்த மாத்திரையே தனது வணிகத்தில் தான் பெற்ற வெற்றிக்குக் காரணம் என்கிறார்.
“இது ஒரு மாயாஜால மாத்திரை (This pill is the real magic) என்பது அவரது புகழுரை!
இதை உட்கொள்வது பாதுகாப்பானது தானா? இதற்கு பதிலை, ஏழு வருட கால ஆய்வுக்குப் பின்னர் இந்த மாத்திரையை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று ஹார்வர்ட் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..
இது நுண்ணறிவைக் கூட்டுகிறது. “இதைச் சாப்பிட்டவுடன் வானத்தை மறைத்திருக்கும் மேகக் கூட்டம் விலகுவது போல இருக்கிறது; மூளை கூர்மையாகிறது” என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வின் தலைவர் டாக்டர் ரோஸன்ஹ்வுஸ் (Dr Rosenhouse), “இந்த மாத்திரையில் மூளைக்குத் தேவையான வைட்டமின்களும், இதர முக்கிய கூறுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது உடனடி நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல், பிரச்சினனகளைத் தீர்க்கும் ஆற்றல் உள்ளிட்ட அனைத்து மூளை சக்தியையும் வழங்குகிறது” என்கிறார்.
பூமியில் மனித குலத்தை அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் மாத்திரை இது என்கிறது ஆய்வுக்குழு.
இதைத் தயாரிக்கும் நிறுவனம் 5 பாட்டில்கள் மாத்திரைக்கு 100 டாலர் (சுமார் 6600 ரூபாய்) என விலையை அதிகமாக நிர்ணயம் செய்துள்ளது. என்றாலும் விற்பனை அமோகம் தான்! .
ஆய்வு மைய சோதனைகள் கீழ்க்கண்ட பலன்களை உறுதிப்படுத்தியுள்ளன :
கவனக்குவிப்பை 312 சதவிகிதம் அதிகரிக்கும்
படைப்பாற்றலை ஊக்குவிக்கும்
ஆற்றலை அதிகரிக்கும்
நினைவாற்றலை அதிகரித்து எதையும் உடனடியாக நினைவு கொள்ளும்படி செய்கிறது
நுண்ணறிவை 77 % அதிகரிக்கிறது.

ஜீனியக்ஸின் சூடு பறக்கும் விற்பனைக்கு சில விமரிசகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“இதன் விலை மிகவும் அதிகம்
இதில் உள்ள 19 மூலப் பொருள்களில் ஒன்றை மட்டுமே நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற 18பொருள்கள் என்னென்ன? இவற்றில் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்?
இந்த மாத்திரைக்கு பதிலாக தினமும் எட்டு மணி நேர உறக்கம், ஆரோக்கியமான உணவு, அளவான தினசரி உடற்பயிற்சிகள் போதுமே. மூளை நன்கு செயல்படுமே!” என்று இதை எதிர்க்கும் விமரிசகர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

ஜீனியக்ஸை உட்கொண்ட ஒருவர் எனது வேலைத்திறன் மிக அதிகமானது உண்மை. ஆனால் தூக்கம் போச்சு என்று அலட்டிக் கொள்கிறார். ஒரு மாணவரோ, “ ஐந்து பக்க ஆய்வுக் கட்டுரையை மூன்றே மணி நேரத்தில் முடித்து விட்டேன். ஜீனியக்ஸின் சக்தி அபாரம்”, என்கிறார்.
இதைப் பயன்படுத்திய ஒருவர் “எந்த இலட்சிய இலக்கை நான் நிர்ணையித்தாலும் அதை உடனே முடித்து விடுகிறேன். இனி பெரிய லட்சியம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியது தான்!” என அங்கலாய்க்கிறார்.
உச்ச பட்ச புகழ் மொழியாக இதை “மூளையின் வயாக்ரா” என்று சொல்லிப் புகழ்கின்றனர், இதனால் பயன் பெறுவோர்!

எது எப்படியென்றாலும் ‘ஸ்மார்ட் பில்’ என்று அறிமுகப்படுத்தப்படும் ஜீனியக்ஸின் வருகை எதிர்கால மனித உலகை மாற்றப்போகும் மருந்துகளுக்கு ஒரு முன்னோடி என்று சந்தேகம் இல்லாமல் சொல்லலாம்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

ரஷியாவைச் சேர்ந்த டிமிட்ரி ஃபெடொரோவிச் ஈகோரோவ் (Dimitri Fedorovich Egorov) பிரப்லமான கணித மேதை. (தோற்றம் 2-12-1869 மறைவு 10-9-1931)ரஷியாவில் கணித சங்கத்தின் தலைவராக இருந்த இவரை அனைவரும் பெரு மதிப்புடன் போற்றுவர். இவருக்கு கணித நூல்களின் மீது எவ்வளவு பற்றோ அவ்வளவு பற்று பைபிளின் மீதும் உண்டு. தேவாலயங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமாகப் பங்கேற்பார். ஆனால் ரஷிய புரட்சி தோன்றியவுடன் மார்க்ஸீய புரட்சிவாதிகள் இவருக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். கணித சங்கக் கூட்டத்தில் மதவாதிக்கும் கணிதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வியை எழுப்பினர். இதனால் பெரிதும் மனம் நொந்து போனார் அவர். தேவாலயங்கள் மாணவர்களின் உடற்பயிற்சிக்க் கூடங்களாக மாற்றப்பட்டன. வெவ்வேறு விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கலாயின. அவர் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்து விட்டார்.
மாஸ்கோவில் சிவில் எஞ்ஜினியரிங் இன்ஸ்டிடியூட்டில் கணிதம் கற்பித்து வந்த அவரை மார்க்ஸீயவாதியான எர்னஸ்ட் கோல்மேன் என்பவர் “மாணவர்களைக் கவரும் அபாயகரமான மதவாதி” என்று ஏசினார். இதைத் தொடர்ந்து அவர் இன்ஸ்டிடியூட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்தப் பணிக்கு நிகொலாய் கிரிகோரிவிச் செபொடார்யோவ் (Nikolai Grigorievich Chebotaryov) என்னும் மேதை நியமிக்கப்பட்டார். அவர் தனக்கு எப்படி அந்தப் பணி கிடைத்தது என்பதைத் தெரிந்து கொண்ட போது திடுக்கிட்டார். மாமேதையான ஈகோரோவுக்குப் பதிலாகத் தானா என்று திடுக்கிட்ட அவர் அந்தப் பணியை ஏற்க மறுத்து ராஜிநாமா செய்து விட்டார்.
அடுத்து 1930ஆம் ஆண்டு கணித சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். “பழ்மைவாதியான” அவரை புரட்சி அர்சாங்கம் சிறையில் அடைத்தது. சிறையில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் மாமேதை. நாளடைவில் அவரது உட்ல் நலிந்தது. அங்கு சிறையில் டாக்டராக இருந்தவர் செபொடார்யோவின் மனைவி. மரியா.
அவர் மாபெரும் கணித மேதையைச் சிறையில் கண்டு திடுக்கிட்டதோடு அவர் இருந்த நிலையைப் பார்த்து வருந்தினார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடையை மரியா மேதையின் சவத்தைத் தன் வீட்டிற்கே எடுத்துச் சென்று தன் கணவருடன் அவருக்கு ம்ரியாதை செலுத்தி இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார்.
மாபெரும் மேதையான அவர் இன்றும் அனைவராலும் மதிக்கப்படுகிறார்.
*********