சத்தியம் பற்றிய 28 தமிழ் மேற்கோள்கள்

february athisayam

Unique February 2015 (7 days X 4 each)

சுவாமியின் பொன்மொழி காலண்டர் –  (ஜய வருடம்) பிப்ரவரி 2015

உண்மை, வாய்மை, மெய்மை பற்றிய 28 நல்ல மேற்கோள்கள்

 

Compiled by London Swaminathan

Post No.1608; Dated  28 January 2015

 

முக்கிய நாட்கள்:பிப்.3: தைப் பூசம், 17 மகா சிவராத்திரி.

 

அமாவாசை: பிப்.18; பௌர்ணமி: பிப்.3; ஏகாதசி:பிப்.15

முஹூர்த்த நாட்கள்: 2, 5,8, 9, 11, 15, 22

பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை

வாய்மையே வெல்லும் – தமிழ் நாடு அரசு சின்னம்

சத்யமேவ ஜயதே, நான்ருதம் (சம்ஸ்கிருதத்தில்)- முண்டகோபநிஷத்;

 

பிப்ரவரி 2 திங்கட்கிழமை

அஸ்வமேத சஹஸ்ராத்தி சத்யமேவ அதிரிச்யதே= ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதை விட சத்தியத்தைக் கடைப் பிடிப்பதே சிறந்தது– ஹிதோபதேசம் 4-136


pusam

Thaipusam in Malaysia

பிப்ரவரி 3 செவ்வாய்க்கிழமை

வாய்மை எனப்படுவது…. யாதொன்றும் தீமை இலாத சொலல்- குறள் 291

 

பிப்ரவரி 4 புதன்கிழமை

தன் நெஞ்சறிவது பொய்யற்க (பொய் என்று தெரிந்தும் அதைச் சொல்லாதே – குறள் 293)

 

பிப்ரவரி 5 வியாழக்கிழமை

பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை நன்று ​= பொய் சொல்லாமல் இருந்துவிட்டால் வேறு அறங்கள் அவசியமில்லை  – குறள் 297

பிப்ரவரி 6 வெள்ளிக் கிழமை

சத்தியம்தான் உயர்ந்தது என்று அறம் தெரிந்த பெரியோர் கூறுவர்- வால்மீகி ராமாயணம் 2-14-3 (ஆஹு: சத்யம் ஹி பரமம் தர்மம் தர்மவிதோ ஜனாஹா)

பிப்ரவரி 7 சனிக்கிழமை

அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் – குறள் 298

குளித்தால் அழுக்குப் போகும்; சத்தியத்தால் மன அழுக்கு நீங்கும்

 

பிப்ரவரி 8 ஞாயிற்றுக்கிழமை

சான்றோர்க்கு பொய்யா விளக்கே விளக்கு – குறள் 299

Happy Mahashivratri wallpaper Download

பிப்ரவரி 9 திங்கட்கிழமை

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்– பாரதி

 

பிப்ரவரி 10 செவ்வாய்க்கிழமை

சத்யம் வத; தர்மம் சர = உண்மையே பேசு; அறச் செயல்களைச் செய் (தைத்ரீயோபனிஷத்)

 

பிப்ரவரி 11 புதன்கிழமை

தர்மா சத்யேன வர்ததே– உண்மையால் தான் தர்மம் செழிக்கிறது- மனு ஸ்ம்ருதி 8-83

 

பிப்ரவரி 12 வியாழக்கிழமை

சத்யபூதாம் வதேத் வாணீம் (உண்மையில் தோய்க்கப்பட்ட சொற்களையே சொல்லுங்கள்) மனு ஸ்ம்ருதி 6-46

பிப்ரவரி 13 வெள்ளிக் கிழமை

கலியுகத்தில் சத்தியம் பேசுவோர் கஷ்டப்படுவர்; கபடதாரிகள் செழித்தோங்குவர் (சத்ய வக்தா கலௌ துக்கீ , மித்யவாதி ப்ரமோததே- கஹாவத்ரத்னாகர்)

பிப்ரவரி 14 சனிக்கிழமை

சர்வம் சத்யே  ப்ரதிஷ்டிதம் – சாணக்கிய நீதி 2-28= எல்லாம் சத்தியம் என்னும் அஸ்திவாரக் கல்லின் மேல் நிற்கிறது.

thaipu20penang, malysia

பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை

சத்யம் ப்ரூயாத், ப்ரியம்  ப்ரூயாத் ந  ப்ரூயாத் சத்யம்

அப்ரியம் – மனு ஸ்ம்ருதி 4-138 (உண்மையே பேசு, இதமாகப் பேசு, மனக் கசப்பைத் தரும் விஷயங்கள் உண்மையானாலும் சொல்லாதே)

 

பிப்ரவரி 16 திங்கட்கிழமை

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது – தமிழ் பழமொழி

`

பிப்ரவரி 17 செவ்வாய்க்கிழமை

 

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கில்லை (குறுந்தொகை 184) சான்றோர்கள் தான் அறிந்ததை மறைத்து பொய் சொல்லமாட்டார்கள்

Happy-Mahashivratri-

பிப்ரவரி 18 புதன்கிழமை

தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தானடக்கிற்

பின்னைத் தான் எய்தா நலனில்லை (அறனெறிச் சாரம் 206)

 

பிப்ரவரி 19 வியாழக்கிழமை

 

உள்ளதால் பொய்யாதொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன் -குறள் 294

(எடுத்துக்காட்டு: அரிச்சந்திரன், மஹாத்மா காந்தி)

 

பிப்ரவரி 20 வெள்ளிக் கிழமை

வாய்மை உடைமை வனப்பாகும் – தீமை

மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்

தவத்தில் தருக்கினார் கோள் – திரிகடுகம் 78

batu

Batu Caves (Malaysia) attract huge crowd on Thaipusam Day

பிப்ரவரி 21 சனிக்கிழமை

வாய்மையின் வழாஅது மன்னுயிர் ஓம்புனர்க்

கியாவதும் உண்டோ எய்தா அரும்பொருள் – சிலப்பதிகாரம் 11-158

 

பிப்ரவரி 22 ஞாயிற்றுக்கிழமை

வாய்மையே தூய்மையாக — பூசனை ஈசனார்க்கு (அப்பர் தேவாரம். பொது 4)

 

பிப்ரவரி 23 திங்கட்கிழமை

வாய்மை என்னும் ஈதன்றி வையகம்

தூய்மை என்னும் ஒன்றுண்மை சொல்லுமோ (கம்பராமாயணம்- கிளைகண்டு-115)

 

பிப்ரவரி 24 செவ்வாய்க்கிழமை

புகழ் செய்யும் பொய்யா விளக்கம் – நான்மணிக்கடிகை 22

 

பிப்ரவரி 25 புதன்கிழமை

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்; உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்– வள்ளலார் ராமலிங்கர்

vadalur

Vadalur Vallar Ashram attract a big crowd on Thai pusam day.

பிப்ரவரி 26 வியாழக்கிழமை

பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே

மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர் பிரான்- சுந்தரர் தேவாரம். கழிப்பாலை 9

 

பிப்ரவரி 27 வெள்ளிக் கிழமை

வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன்; மெய் கூறுவல் – புற நானூறு- மருதன் இள  நாகன்

 

பிப்ரவரி 28 சனிக்கிழமை

நிலம் பெயரினும், நின் சொற் பெயரல் – இரும்பிடர்த்தலையார், புறநானூறு பாடல் 3 ( பூமியே பிறண்டாலும் தன் சொல் பெயராதவன் பாண்டியன்  கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி)

PerayaanThaipusam

மார்ச் 1 ஞாயிற்றுக்கிழமை

(2014 ஜனவரி முதல் மாதந்தோறும் தமிழ், ஆங்கில மேற்கோள்களை இந்து மத நூல்களில் இருந்து, அவை எந்தப் பாடலில் எங்கே உள்ளன என்ற முழு விவரத்துடன் கொடுத்து வருகிறோம். இதுவரை 800 தமிழ், சம்ஸ்கிருத மேற்கோள்கள் கொடுக்கப்பட்டன. தமிழ், ஆங்கில மொழிகளில் இவை உள்ளன படித்துப் பயன் அடைக!)