
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7632
Date uploaded in London – 29 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Muslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் குதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)

1850 ஆம் ஆண்டு தமிழை ரசித்துப்படிக்க ஒரு குட்டிக் கதை
முதலில் பழைய தமிழைப் படியுங்கள் . புரியாவிட்டால் நான் சொல்லும் கதையைப் படியுங்கள்.
ஒரு தமிழன் வெளியூர் செல்கையில் கட்டுச் சாதம் சாப்பிடுவதற்காக தனது குதிரையை குளத்தின் கரையில்,ஒரு மரத்தில் கட்டினான். அவ்வழியே வெளியூருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு துலுக்கன் தனது குதிரையையும் அந்த மரத்தில் கட்டப் போனான்.
“டேய் அங்கே கட்டாதே ; என் குதிரை ரொம்ப பொல்லாதது” என்று பல முறை சொன்னான். அப்படியும் முரட்டுத் துலுக்கன் அதே மரத்தில் கட்டி விட்டு அவனது சாப்பாட்டு மூட்டையை அவிழ்த்தான். பொல்லாத தமிழ் குதிரை, துலுக்கன் குதிரையைக் கடித்துக் குதறி கொன்று போட்டது. துலுக்கன் சண்டைக்கு வந்தான். அவன் வே ட்டியைப் பிடித்து, எனக்கு நஷ்ட ஈடு கொடு என்றான் . தமிழன் தான் சொன்னதையே சொல்ல, அவனைத் துலுக்கன் மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச் சென்று தனது தரப்பை எடுத்துரைத்தான்.
தமிழன் தரப்பை வியாதிபதி கேட்ட போது அவன் வாய் மூடி மௌனியாக இருந்தான். அடப் பாவமே, இவன் ஊமை அல்லவா , உன்னிடம் பேசினான் என்றாயே? என்றார்.
துலுக்கன் சொன்னான் – ஐயோ அவனை நம்பாதீர்கள்; அவன் பாசாங்கு செய்கிறான். என்னிடம் இரண்டு முறை சொன்னான்- “மரத்தில் குதிரையைக் கட்டாதே” என்றான்.
மாஜிஸ்திரேட் சிரித்துக்கொண்டே “அப்படியா சொன்னான். அப்படியானால் உனக்கு அவன் நஷ்ட ஈடு எதுவும் தர வேண்டியது இல்லை. போ” என்றார்.
துலுக்கன் தோற்றான்; தமிழன் வென்றான்.
1850ம் ஆண்டு கதை
ஒரிஜினல் தமிழில் படியுங்கள். சுவையாக இருக்கும்.







