தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2

Adhiyamaan and Avvaiyar

அதியமான், அவ்வையார்

First Part of Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410)

The Wonder that is Tamil – Part 3

தொல்காப்பிய அதிசயங்கள்

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1513; தேதி 24 டிசம்பர், 2014.

அதிசயம் 11

கி.பி.12 ஆம் நூற்றாண்டில் நேமிநாத ஆசிரியர் குணவீர பண்டிதர், தொல்காப்பியத்தைக் கடலாகவும் நேமிநாதம் என்னும் நூலை அக்கடலில் செல்லும் சிறு படகாவும் கொள்வார்:–

தொல்காப்பியக் கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப்

பல்காற் கொண்டோடும் படகென்ப

அதிசயம் 12

வழிபடு தெய்வம் நிற்புறங்காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

பொலிமின் (தொல். 1367)

நாம் விரும்பிய தெய்வத்தை வழிபடும் உரிமையையும், இறைவன் நம்மை எல்லா வளங்களும் கொடுத்துக் காப்பான் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். பழிதீர் செல்வம் என்ற சொற்றொடர் குறிப்பிடத்த்க்கது. நல்ல வழியில் சம்பாதிக்கும் பொருள்!

tamil poets1

அதிசயம் 13

தந்தையர் ஒப்பர் மக்கள் (1092)

“தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” — என்று தமிழில் ஒரு பழ மொழி உண்டு. மனுஸ்மிருதியில் பிள்ளை என்பவன் தந்தையின் மறு அச்சு என்கிறார். அதைத் தொல்காப்பியரும் தந்தையர் ஒப்பர் மக்கள் (1092)

என்கிறார்.

அதிசயம் 14

பெரும் பெயர் புலவர்கள்

தமிழில் பெயர்பெற்ற புலவர்களுக்கு சிறப்பு அடைமொழிகள் உள்ளன. கற்றறிந்தோர் எப்போதும் அந்த அடை மொழிகளைப் பயன்படுத்துவர்

ஒல்காப்புகழ் தொல்காப்பியன்

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்

வானோர் ஏத்தும் வாய் மொழிப் பல் புகழ்

ஆனாப் பெருமை அகத்தியன்

உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்

புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலன்

தெய்வப் புலவன் திருவள்ளுவன்

பல்கலைக் குரிசில் பவணந்தி

உளம்கூர் கேள்வி இளம்பூரணர்

ஆனாப் பெருமைச் சேனாவரையர்

WCTC/Padma Subramaniam

அதிசயம் 15

தொல்காப்பியர் தமிழுக்கு புதிய இலக்கணம் வகுத்தார் என்பதைவிட அவருக்கு முந்தியிருந்த கருத்துக்களைத் தொகுத்து நூல் வடிவில் தந்தார் என்பதே பொருந்தும். அவர் மற்றவர் வகுத்த விதிகளை மேற்கோள் காட்டும்போதெல்லாம் என்ப, மொழிப போன்ற வினைச் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு 287 இடங்களில் அவர் சொல்கிறார்.

அதிசயம் 16

பாணிணியில் சொற்செட்டை தொல்காபியத்தில் காண முடியாது. சொன்னதையே மீண்டும் சொல்லி நம் பொறுமையைச் சோதிக்கும் இடங்களும் உண்டு:–

ஆறறிவு உயிர்கள் பற்றிய சூத்திரத்தில்

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்று

திரும்பத் திரும்பச் சொல்லுவார்.

இதுபோல வேறு சில இடங்களில்

என்ன பெயரும் அத்திணையவ்வே,

மேலைக் கிளவியொடு வேறுபாடிலவே என்று

திரும்பத் திரும்பச் சொல்லுவார்.

paari

பாரி வள்ளல்

அதிசயம் 17

தொல்காப்பியர் 94 சம்ஸ்கிருதச் சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். இது சங்க இலக்கியத்தை விட அதிகம் என்று கே கே பிள்ளை போன்றோர் செப்புவர்.

தொல்காப்பியத்தை முதல் முதலில் பிரசுரித்தவர் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை ஆவார். 1891ல் முதல் பதிப்பு அச்சிடப்ப்ட்டது. 1610 சூத்திரங்கள் கொண்ட 3 அதிகாரங்களையும் அவர் வெளியிட்டார்.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: