சிவனடியார்கள் பாடிய முதலைப் பாடல்கள் – 1 (Post No. 2475)

sankara croc

Picture: Adi Shankara and Crocodile

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 10 January 2016

 

Post No. 2475

 

Time uploaded in London :–  7- 15 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

தேவார சுகம்

முதலைப் பாடல்கள் – 1

ச.நாகராஜன்

 crocodile-4

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

முதலைகள் ஐந்திடம் மாட்டிக் கொண்டால் ..

 

ஒரு குளம். அதிலே ஒன்பது துறைகள். ஒரு முழக் குளம் அதன் அகலமோ அரை முழம் தான். அதற்குள் ஐந்து முதலைகள்.அவைகள் உங்களை, என்னையும் தான், படாத பாடு படுத்துகின்றன.

 

தப்ப வேண்டுமே, வழி என்ன?

 

என்ன, புதிர் ஏதாவது போடப்படுகிறதா?

விடுங்கள், அப்பரே, “நான் பிதற்றுகின்றேன் என்று சொல்கின்ற பாடலுக்கு நேரடியாகப் போவோம்.

திரு ஏகம்பத்தில் பாடிய ‘நம்பனை எனத் தொடங்கும் பதிகத்தில் இரண்டாம் பாடல் (4ஆம் திருமுறை):

 

 

ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துறை உடைத்தாய்       

அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து  பெருமுழைவாய்தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன் கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே

 

 

ஒரு முழம் நீளமும் அரை முழம் அகலமும் கொண்டுள்ள உடல் என்னும் குளத்தில் ஐந்து முதலைகள் வாழ்கின்றன. இந்த குளத்திற்கு நீர் வரும் வழிகள் ஒன்பது. அதாவது ஒன்பது துவாரங்கள். இதில் அகப்பட்டுள்ள நான் ஐம்பொறிகளுக்கும் பயந்து பெரிய குகை போன்று காணப்படும் நீர் வரும் வழியைப் பற்றிக் கொண்டு எப்படித் தப்புவது என்ற பயத்தில் வாய்க்கு வந்தபடி பிதற்றுகின்றேன். கருமுகில் தவழ்கின்ற மாடங்களை உடைய கச்சி ஏகம்ம்பத்தில் உறையும் ஏகம்பனே, என்னை ஐந்து முதலைகளிடமிருந்து (ஐம்பொறிகளிலிருந்து) காப்பாற்றுவீராக!

 

 

அப்பரா பிதற்றுகிறார். அவர் அருளாளர். அவர் நமக்கு வழிகாட்டப் பிதற்றுகிறார். ‘

 

‘ஏகம்பம் மேவினாரைக் கையினால் தொழ வல்லார்க்குக் கடுவினை களையலாமே’ என்ற இரகசியத்தை ஐந்தாம் பாட்டில் அறிவித்து நமக்கு உய்யும் வழியைக் காட்டுகிறார்.

ஐந்து  முதலைகள் பிடித்ததை விடாது. அதைப் பிடித்து அகற்ற சிவபிரான் அருள் அல்லவா, வேண்டும். அதைத் தான் சுட்டிக் காட்டுகிறார் அருளாளர்.

 

 

திருமூலர் காட்டும் குளமும் வலை வீசும் சிவனும்

 

இதே கருத்தைத் திருமூலரும் சொல்கிறார்:

திருமந்திரம் பாடல் எண் 2031 (ஐந்திந்திரயம் அடக்கு முறைமை)

 

குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம்

வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன

பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து

இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே

 

திருமூலர் பாடலின் பொருள்: நமது உடல் ஒரு முழம் (தலை

முதல் கழுத்தின் கீழ் இதயம் வரை) அகலம் அரை முழம். காதுக்குக் காது உள்ள அகலம். இந்தக் குளத்தில் ஐந்து மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன. இந்த ஐந்து பொறிகளை வலை வீசிப் பிடிக்க பரவன் (மீனவன்) ஒருவனின் அருளினால் மட்டுமே முடியும். அந்த சிவபிரானின் அருள் கிடைத்தால் துன்பமே இல்லை!

 

மனித முயற்சியால் ஐம்புலன்கள் அடக்குதல் கடினம். ஆனால் அதே முயற்சியால் சிவனை நினைந்து பணிந்தால் அவன் அருள் கிடைக்கும். அப்போது ஐந்து பொறிகளும் அடங்கும்.

croc2

மணிவாசகர் காட்டும் முதலை

 

 

அப்பரைப் போலவே மாணிக்கவாசகரும் முதலை பயத்தைக் கொண்டவர் தான்! ஆனால் இது வேறு விதமான முதலை.

பாடலைப் பார்ப்போம்:

 

முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி   விதலைச் செய்வேனை விடுதி கண்டாய் விடக்கூன் மிடைந்த சிதலைச் செய் காயம் போறேன் சிவனே முறையோ முறையோ திதலைச் செய்பூண்முலை மங்கை பங்காவென் சிவகதியே

(நீத்தல் விண்ணப்பம் பாடல் 41)

 

மகளிரின் காம நீரில் மூழ்கி நடுங்கிய என்னைக் கைவிட்டு விடாதே என இறைஞ்சுகிறார் மணிவாசகர்.

 

முதலைச் செவ்வாய்ச்சியர் – முதலை போலக் கொண்டதை விடாது பற்றி நிற்கும் மகளிர்

 

வெந்நீர் – சுடுகின்ற காம நீர் (இளமைக்காலத்தில் அது விருப்பமாக இருந்தது. இப்போது வெறுப்பாக இருக்கிறது)

வெம்+நீர் = வெந்நீர் என்பதை விருப்பம் மற்றும் கொடுமை ஆகிய இரு அர்த்தங்களில் நோக்க வேண்டும்.

கடிப்ப என்ற வார்த்தைக்கும் இரு பொருள் உண்டு. ஒன்று மணப்ப என்ற பொருளைத் தரும் இன்னொரு பொருள் வெறுக்க என்பதாகும்.

 

விதலை – நடுக்கம்; விடக்கு ஊன் – தசைத் திரள் சிதலை – நோய் திதலை – தேமல்

 

மங்கையர் மயக்கிலிருந்து என்னை விடுவித்து ஆட்கொண்டருள். ஆட்கொண்டு விடாமல் விடுதல் முறையோ முறையோ என வேண்டுகிறார் மணிவாசகர்.

 

இப்படிப் பல முதலைப் பாடல்கள் உண்டு பன்னிரு திருமுறைகளில்.

 

Written by S Nagarajan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com

 

இரண்டைப் பார்த்தோம்; இன்னும் இரண்டை அடுத்துப் பார்ப்போம்!

*******

‘எல்லாம் நன்மைக்கே’- சுவாமி ராமதாஸ் சொன்ன கதை (Post No. 2474)

ramdas

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 9 January 2016

 

Post No. 2474

 

Time uploaded in London :– 12-06

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஒரு நாட்டில் ஒரு மன்னனிடம் மந்திரி ஒருவர் வேலை பார்த்தார். அவர் இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். எது நடந்தாலும் எல்லாம் , ‘இறைவன் கொடுத்த வரம்” என்று நினைப்பார். யாராவது வந்து “எனக்கு அந்தக் கஷ்டம், இந்தக் கஷ்டம்” என்று முறையிட்டாலோ,முனகினாலோ, “கவலைப் படாதே, எல்லாம் நன்மைக்கே, கடவுள் எதையும் யாருக்கும் காரணமின்றி தரமாட்டார்” என்று ஆறுதல் சொல்லுவார். இவ்வாறு இந்த ‘எல்லாம் நன்மைக்கே’ மந்திரியின் புகழ் திக்கெட்டும் பரவியது.

ramdas book

ஒரு நாள் அரசனும் மந்திரியும் வேட்டையாட காட்டுக்குச் சென்றனர். இருள் சூழும் வேலையில், அவர்கள் கூட வந்த பரிவாரம், வேறுதிசையில் போய்விட்டது. மந்திரியும் மன்னனும் தனித்து இருந்தனர். அரசனுக்கு ஒரே பசி. அமைச்சரிடம் சொல்லவே அவரும் ஒரு மரத்தில் பழங்கள் இருப்பதைப் பார்த்து அதைப் பறித்து மன்னைடம் கொடுத்தார்.

மன்னனோ பசி, அவசரத்தில் பழங்களை வெட்டும்போது ஒரு விரலையும் வெட்டிக்கொண்டு விட்டார். ரத்தம் குபுகுபு என்று வழிந்தோடியது. வலியில் துடித்தார். மந்திரியிடம் பொறுக்கமுடியாத வலி பற்றிச் சொல்லி கதறினார். மந்திரியோ, “மன்னரே! கவலைப் படாதீர்கள்; எல்லாம் நன்மைக்கே” என்றார்.

 

அரசனுக்கு அதி பயங்கர கோபம் வந்தது. “நான் துடியாய்த் துடிக்கிறேன். ஆறுதல் சொல்வதற்குப் பதில் எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய்” என்று சொல்லி மந்திரியை ஓங்கி ஒரு உதை விட்டு, இனிமேல் என்முகத்தில் முழிக்காமல் ஓடிவிடு என்றார். மந்திரியோ, அதற்கும்’ எல்லாம் நன்மைக்கே’ என்று காரணம் கற்பித்துவிட்டு அவர்முகத்தை திருப்பிக்கொண்டு, வேறு ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தார். மன்னன் தனது மேலாடையில் ஒரு ஓரத்தைக் கிழித்து கையில் விரல் துண்டித்த இடத்தில் ஒரு கட்டுப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.

 

 

ramdas2

கொஞ்ச நேரத்தில் அந்த வழியே இரண்டு தடியர்கள் வந்தனர். மன்னர்கள் மீது பாய்ந்து அவரைக் கட்டி, அலாக்காகத் தூக்கினர். அவரோ குய்யோ முறையோ என்று கத்தினார். தான் இந்நாட்டு மன்னர் என்றும், யாது காரணத்தாலவர்கள் இப்படிச் செய்கின்றனர் என்று ம் வினவினார். அந்த தடியர்களுக்கு மேலும் சந்தோஷம் வந்தது. உடனே சிரித்துக் கொண்டே சொன்னார்கள்: “நாங்கள் ஆண்டுதோறும் ஒரு ஆடவனை காளிதேவிக்கு உயிர்பலி தருவோம். இந்த தடவை மன்னே உயிர்ப்பலிக்கு கொடுக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியது. காளிதேவி எங்களுக்கு கூடுதல் அருள் பொழிவாள்”.

 

மன்னனுக்கு ஒரே துன்பம்! என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.

 

காளிதேவியின் பீடத்தில் அவனைக் கிடத்தி பூசாரியை அருவாளுடன் வர அழைத்தனர். அவரும் வந்தார். ஆடைகளையெல்லாம் ஒன்றொன்றாக உருவிவிட்டு வெட்டச் செல்லும் போது அந்தப் பூசாரி, மன்னனின் கையில் ஒரு கட்டு போடப் பட்டிருப்பதைப் பார்த்தான். அது என்னவென்று வினவினான். உடனே விரல் துண்டுப்பட்ட இடத்தை மன்னன் காட்டினான்.

 

“அடக் கடவுளே! முழு உடலிருக்கும் மனிதனைத் தான் காளிக்குப் பலி தரவேண்டும். இவனுக்கோ ஒரு அங்கம் பழுது. இவனை உடனே எடுத்துச் செல்லுங்கள். காளிதேவி கோபித்துக்கொள்வாள்” என்றார் பூசாரி. உடனே இரண்டு தடியர்களும் மன்னரை அலாக்காகத் தூக்கி பழைய இடத்திலேயே போட்டுவிட்டு போய்விட்டனர்.

 

மன்னனுக்கு மந்திரி சொன்னது நினைவுக்கு வந்தது: எல்லாம் நன்மைக்கே – என்று அமைச்சர் சொன்னாரே. கை விரல் வெட்டுப்பட்டதற்கு கோபப்பட்டு அவரை எட்டி உதைந்தேனே. கைவிரல் வெட்டுப்பாடாமல் முழு அங்கத்துடனிருந்தால் இவ்வளவு நேரம் காளிக்குப் பலி கொடுத்திருப்பார்களே என்று எண்ணி வருத்தப்பட்டார். மந்திரியின் பெயரை உரத்த குரலில் சொல்லி அழைத்துக் கொண்டே போனார்.

 

தொலைவில் மரத்தடியில் அமர்ந்திருந்த மந்திரி ஓடோடி வந்து மன்னா! என்ன வேண்டும்? ஏன் அழைத்தீர்கள்? என்றார். மன்னன் முழுக் கதையையும் சொல்லி மந்திரி சொன்னது உண்மைதான். கடவுள் கஷ்டத்தைக் கொடுத்தால் அதுவும் நன்மைக்கே என்றார். மந்திரியிடம் மன்னிப்பும் கோரினார்.

 

மந்திரி சொன்னார்: மன்னரே, மன்னிப்பு கேட்க வேண்டாம். நீங்கள் என்னை எட்டி உதைந்தபோது நானும் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிவிட்டுப் போனேன். நீங்கள் என்னை விரட்டாமலிருந்தால், இவ்வளவு நேரம் அந்தத் தடியர்கள் நம்மிருவரையும் கொண்டுபோய் பூசாரியிடம் ஒப்படைத்திருப்பர். உமக்கு அங்கக் குறைவு இருந்ததால் என்னைத்தான் பலியாக்கி இருப்பர். நீங்கள் என்னை எட்டி உதைத்து விரட்டிவிட்டதும் இறைவன் செயலே. எல்லாம் நன்மைக்கே” என்று சொன்னார். பின்னர் இருவரும் காட்டிலிருந்து நாட்டுக்குப் புறப்பட்டனர்.

bhavan book

நீதி: ஏதேனும் துன்பம் நேரிட்டாலும், அது ஏதோ ஒரு நன்மைக்கே என்று ஆண்டவனை நம்பி வாழ வேண்டும்.

 

“நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு” (பாரதியார் பாடல் வரிகள்).

தமிழ் மொழி பெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்

–சுபம்–

 

 

God does everything for good! (Post No. 2473)

bhavan book

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 9 January 2016

 

Post No. 2473

 

Time uploaded in London :– 8-41 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(I have translated this story in Tamil as well).

liramdas

Once a King, with his minister, followed by his retinue went into the depths of a forest on a hunting expedition. Now the minister was well known for his wisdom. He held the motto, God does everything for the best, and whenever anyone went to him for advice in his trouble, woe or misfortune, the minister would console the distressed party by convincing him of the wisdom of submission to the will of God.

 

The King and the minister in their hunt for game were separated from the followers and roamed far into the interiors of the forest and eventually lost their way. The sun rose to the meridian. The King was oppressed with fatigue and hunger. They rested in the shade of a tree.

 

“Minister”, said the exhausted King, “I am sorely upset through pangs of hunger. Can you get me something to eat?”

 

The minister looked around and discovered fruits on a tree. Climbing up the tree, he plucked some fruits and presented them to the King. The King in a haste to eat the fruit, while cutting it with a knife chopped off a bit of his finger. With a cry of pain, he dropped both the fruit and the knife, his injured finger streaming with blood.

 

Ho, he cried out, how it pains, minister

 

“God does everything for the best”, put in the minister quietly.

 

These words tended only to rouse the already petulant King. He flew into a rage and cried out,

 

“Fool, truce to your philosophy. l have had enough of it. While I am suffering from excruciating agony, the only consolation you can tender is God does everything for the best. How can this be for the best, when the pain is intense and real? I will have nothing to do with you in future. Get out of my sight, and never show me your face again”. Unable to control himself, he kicked the minister furiously and commanded him to take himself off at once. While the minister was leaving the King, he calmly reiterated, “God does everything for the best.”

 

Now the King was left alone. He tore a strip of his garment and bandaged his injured finger. When he was musing over the sad event, two stalwart men approached him.  They instantly fell on the King and bound his hand and foot. Struggle or resistance was utterly useless, as the men were strong and sturdy.

ramdas book

The frightened King now asked, “What are you going to do with me?” They replied, “We want you to be sacrificed at the altar our goddess Kali. It is the custom to offer to her a human sacrifice once a year. The time has arrived for it and we were on the lookout for a human being. We are fortunate in having found you”.

 

These words of his captors thoroughly alarmed the King. He remonstrated, “Let me go. I am the King of a province. You cannot, therefore, kill me for the sacrifice.”

 

 

The men laughed and said, “Then this year’s sacrifice is going to be unique, and our goddess will be highly pleased when she finds that we bring to her altar this time an exalted personage as an offering.  Come along”.

 

 

They dragged the victim to the Kali shrine, not far away from the spot. He was duly placed on the sacrificial altar. Things were ready for the death blow, when the priest, observing the bandage on his left hand forefinger removed it, and discovered that a portion of it was cut off. He said to the men, “This man is not acceptable for our goddess. Set him free. The goddess wants a whole man, while the man here has a defect in his body. A bit of his finger is gone. Let him go”.

 

Accordingly untying the ropes with which he was bound, the men set the King free and allowed him to depart in peace.

 

 

Now the King remembered the words of the minister, uttered when his finger was cut “God does everything for the best”. Indeed had it not been for the cut of the finger he would have by now been a dead man. He felt keenly for the ill treatment he had meted out to his friend. He was anxious to remedy the blunder by begging his forgiveness. So he rambled in the woods, called aloud the name of the minister, and at last found him. The minister was resting beneath a tree. Going up to him the King embraced him with extreme love and said, “Friend, I seek your forgiveness for the cruel treatment accorded to you. The truth of your golden saying is brought home to me.”

 

ramdas

Then he narrated the incident of the intended sacrifice to the goddess, and how he was set free on account of the defect in his hand, caused by the knife cut.

 

“Sire, replied the minis, you have done me no harm. So there is nothing to forgive. In truth you have saved me while you kicked and drove me away. You may remember I repeated the same words, ‘God does everything for the best’. Now in my case as well it has come true. For if you have not driven me a away, I would have been in your company when the men of Kali captured you and, when they have discovered that you were unfit for sacrifice, they would have offered me for it instead, since I had no cut in my body as the one you had providentially got. So ‘God does everything for the best’.

Story told by Swami Ramdas of Anandashram, North Kerala.

 

-Subham-

 

 

லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம் (Post No. 2472)

Shri-Kuzhandhaiyanandha-Swamigal

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 9 January 2016

 

Post No. 2472

 

Time uploaded in London :–  5-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஆன்மீக இரகசியம்

 

லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம்

 

ச.நாகராஜன்

 

குழந்தையானந்த ஸ்வாமிகள்

 

பல நூறு ஆண்டுகளாக பாரதத்தில் லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லி வருவது இயல்பான ஒரு பழக்கமாக பல்லாயிரம் குடும்பங்களில் ஆகி விட்டது.

 

ஆனால் இதைச் சொல்லுவதில் உள்ள இரகசியத்தை குழந்தையானந்த ஸ்வாமிகள் தன் பக்தை ஒருவருக்கு அனுக்ரஹித்துள்ளார்.

 

சுவையான அந்த சம்பவத்தின் மூலம் இரகசியம் அனைவருக்கும் வெளிப்பட அனைவரும் அதன் மூலம் பலன் பெறும் பாக்கியமும் ஏற்பட்டுள்ளது.

 

1927ஆம் ஆண்டு. புதுக்கோட்டை சீஃப் கோர்ட் வக்கீல் சுவாமிநாத ஐயரும் அவரது மனைவி பாகீரதி அம்மாளும் ஸ்வாமிகளின் அநுக்ரஹத்திற்குப் பாத்திரமான சிறந்த பக்தர்கள். ஸ்வாமிகளின் மீது பரம் பக்தி அவர்களுக்கு.ஸ்வாமிகள் இரு முறை அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்து பல நாட்கள் அங்கு தங்கி இருக்கிறார்.

இரண்டாம் முறை (1927இல்) ஸ்வாமிகள் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது பாகீரதி அம்மாள் ஒன்பது மாத கர்ப்பிணி.

ஸ்வாமிகள் வாய் சிறு குழந்தைகள் குழறுவது போலக் குழறிச் சொற்களை வெளிப்படுத்தும்.

‘பாயி’ என்று பாகீரதி அம்மாளை மாடியிலிருந்து விளித்து ஸ்வாமிகள் கஞ்சியோ காப்பியோ கொண்டு வரச் சொல்லுவது வழக்கம்.

 

நிறைமாத கர்ப்பிணி படி ஏறி வருதைப் பார்த்து, “உனக்கு சிரமமாய் இருக்கிறதா?” என்று ஸ்வாமிகள் பரிவோடு கேட்பார்.

“நல்ல காரியங்கள் நடக்கும் போது சற்று சிரமம் கூடவே இருக்கும்.ஆனால் அதைப் பொருட்படுத்தக் கூடாது” என்று அருளுரை வழங்கிய ஸ்வாமிகள்,” ஸ் என்று சொல்லாதே! ஸ் என்று போய் விடும்’ என்று அன்பாகக் கூறினார்.

om tamil

 

கரை கட்டி ஸஹஸ்ர நாமத்தைச் சொல்

 

லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் வழக்கத்தை பாகீரதி அம்மாள் கொண்டிருந்தார்.

 

ஒரு நாள் அவரிடம் ஸ்வாமிகள்,”லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் போது ஆற்றுக்குக் கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமத்திற்கும் முன்னும் பின்னும் பிரணவமாகிய ஓம் என்பதைச் சேர்த்துச் சொல்” என்று அருளினார்.

 

ஸ்வாமிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் வளர்த்த மீனாட்சி அம்மையின் அருள் குழந்தை.

 

தன் அன்னையை எப்படி வழிபட்டால் முழுப் பலனும் கிடைக்கும் என்ற இரகசியத்தை அவர் அருளியது அனைவருக்குமான காலத்திற்கேற்ற உபதேசம்.

 

 om swasik

ஓம் என்னும் உயரிய மந்திரம்

தானம் யக்ஞம் போன்ற சகல காரியங்களையும் ஆரம்பிக்கும் போது ப்ரணவமாகிய ஓம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று சாட்யாயனர் அருளியுள்ளார்.

 

அதே போல காத்யாயனர் ப்ரண்வத்தை சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்று அருளியுள்ளார்.

தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும் ஸ்வாமிகள் ஓம்காரத்தைச் சேர்த்துச் சொல் என்றார்.

 

முதலில் சொல்லாவிட்டால் மந்திரம் ஒழுகி விடுமென்றும் கடைசியில் சொல்லாவிட்டால் மந்திரம் பொங்கி வழிந்து விடும் என்றும் காளிகா புராணம் போன்றவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

இந்த அரிய இரகசியத்தை ஸ்வாமிகள் பக்தைக்கு அருளினார்.

 

பக்தைக்கு ஆண் குழந்தை பிறக்க அது புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்ததைக் கேட்டு அறிந்த ஸ்வாமிகள், “புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். ஜெகதீசன் என்று பெயர் வை. நன்றாக இருப்பான்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

ஒவ்வொரு மந்திரம் சொல்லும் விதத்தையும் ஆசார்யர் மூலமாகவே கற்றுத் தெளிந்து உச்சரிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

காலம் கலி காலமானதால் நமக்குத் தெரியாத இரகசியங்களை இப்படிப் பெரும் மகான்கள் கூறி அருளுவது வழக்கம்.

ஆக லலிதா சஹஸ்ரநாமம் கூறும் வழியை பெரும் மகானான குழந்தையானந்த ஸ்வாமிகள் அருளியுள்ளார். அதைக் கடைப்பிடித்து சஹஸ்ர நாமம் சொல்லி முழுப்பலனையும் அன்னையின் அருளால் பெறுவோமாக!

 

*****

 

A proverb is an ornament to language (Post No. 2471)

apple a day

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 8 January 2016

 

Post No. 2471

 

Time uploaded in London :–  9-16 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Proverbs: What are they? Sayings on Proverbs

1.A good maxim is never out of season.

2.The genius, wit and spirit of a nation are discovered in its proverbs (Francis Bacon 1561-1626).

3.Great consolation may grow out of the smallest saying.

4.A proverb is an ornament to language

5.The proverb cannot be bettered.

 

6.Common proverb seldom lies.

7.Old saws speak truth.

8.There is no disputing a proverb, a fool and the truth.

9.Proverbs cannot be contradicted.

10.Though the proverb is abandoned, it is not falsified.

 

11.Proverbs are the children of experience.

12.Maxims are the condensed good sense of nations.

13.Proverbs are the wisdom of the streets.

14.A proverb is the wit of one and the wisdom of many.

15.A proverb comes not from nothing.

tamil book proverb

16.Death and proverbs love brevity.

17.A proverb is shorter than a bird’s beak.

 

18.Time passes away, but sayings remain.

 

19.Proverbs are like butterflies, some are caught, others fly away.

 

20.Hold fast to the words of your ancestors.

 

21.Wise men make proverbs and fools repeat them.

 

 

There are over 100 articles on proverbs and sayings ‘subject wise’ in my blogs, both in Tamil and English; posted from 2012. If you are interested in Proverbs, please go to my blogs:-

Tamilandvedas.com

Swamiindology.blogspot.com

herman

A few of the articles are listed here:–

20,000 Tamil Proverbs | Tamil and Vedas

tamilandvedas.com/2012/06/01/20000tamilproverbs/

 

1 Jun 2012 – Tamil is one of the richest languages in the world. It has a collection of more than 20,000 proverbs. This collection is an Encyclopaedia of Tamil …

 

Stories behind Five Tamil Proverbs – Swami’s Indology Blog

swamiindology.blogspot.de/…/stories-behind-five-tamilproverbs.html?…

3 Jun 2015 – Tamil language is rich in proverbs. There are more than 20,000 proverbs. Percival, Rev.J.Lazarus and Herman Jensen had compiled and  …

 

இருபதாயிரம் தமிழ் பழமொழிகள் …

tamilandvedas.com/…/இருபதாயிரம்-தம

 

31 May 2012 – ஆயினும் தமிழ் மொழிதான் பழமொழித் தொகுப்பில் உலகில் … 20,000 பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஆராய்ந்து தனித் தனி  …

பழமொழிகள் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/பழமொழிகள்/

8 Nov 2015 – ஆரோக்கியம் தொடர்பான பழமொழிகள், 25 பிப்ரவரி 201520,000 Tamil Proverbs (English article). Tamil – English Proverb Book (108 தமிழ்-ஆங்கிலப் பழமொழிகள்), posted 17  …

 

 

ஐந்தில் வளையாதது ஐம்பதில் …

swamiindology.blogspot.com/2013/…/blog-post_31.ht…

31 May 2013 – தமிழில் அருமையான 20,000 பழமொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆழமான பொருள் உடையவை. ‘இளமையில் கல்’ என்பது ஒரு பொன்மொழி.

 

 

 

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்

tamilandvedas.com/…/பெண்கள்பற்றி3

 

26 Jun 2012 – பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்– Part 1 பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிரானதாகவும், .

 

 

யானை பற்றிய நூறு பழமொழிகள் …

tamilandvedas.com/…/யானைபற்றிய-ந…

Translate this page

5 Jun 2012 – உலகில் தமிழ் மொழியில் உள்ளதைப் போல வேறு எந்த மொழியிலாவது பழமொழிகள் இருக்குமா என்பது சந்தேகமே. வளமிக்க மிகப் …

 

lazarus

 

Swami’s Indology Blog: June 2012

swamiindology.blogspot.de/2012_06_01_archive.htm…

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்– இறுதி பகுதி … பழமொழிகளில்இந்துமதம் ஆகிய மூன்று கட்டுரைகளையும் (4) Amazing Collection of 20,000Tamil Proverbs  …

 

பாரதி பாட்டில் பழமொழிகள்

அப்பர் தேவாரத்தில் பழமொழிகள்

கடவுள் பற்றிய பழமொழிகள் and more………………….

–Subham–

விஷ்ணு ஓடி ஒளிந்த இடம்! நாரதர் கேள்வி!!(Post No. 2470)

narshimha1

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 8 January 2016

 

Post No. 2470

 

Time uploaded in London :–  காலை 8-04

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

அசுரர் குல மன்னன் ஹிரண்யகசிபு மூவுலகமும் நடுநடுங்க ஆட்சி செய்தான். ஈரேழு லோகங்களையும் வெல்ல ஆசை கொண்டான். நேரம் கிடைத்த போதெல்லாம் தேவர்களைத் தாக்கி ஓட ஓட விரட்டினான். இவ்வளவு பலம் எப்படி வந்தது? கடும் தவத்தினால் பெற்ற பலம் இது. ஆகையால் தேவர்கள் ஏது செய்வதென்று அறியாது திகைத்தனர். தேவ லோகத்தையும், விஷ்ணு வசிக்கும் வைகுண்டத்தையும் வசப்படுத்த எண்ணினான்.

 

ஹிரண்யகசிபு, ஒரு நாள் வைகுண்டத்தின் மீது தாக்குதல் தொடுக்கவே, விஷ்ணு உள்பட எல்லா  தேவர்களும் ஓடி ஒளிந்தனர். அவன், எப்படியாவது விஷ்ணுவைப் பிடித்து தனது சக்தியைக் காட்டவேண்டுமென்று தேடோ தேடென்று தேடினான். பூலோகம், புவர் லோகம் சுவர்லோகம் – எங்கு தேடினும் விஷ்ணுவைக் காணவில்லை. அவனுக்கு ஒரு புறம் ஏமாற்றம்- மறுபுறம் பெருமிதம்; விஷ்ணுவையே ஓடி ஒளிய வைத்துவிட்ட இறுமாப்பு.

narasimha

விஷ்ணு ஓடி, ஒளிந்த செய்தி ஈரேழு 14  லோகங்களிலும் காட்டுத் தீ போல பரவியது. நாரதர் காதிலும் விழுந்தது. ‘வெறும் வாயையே மெல்லுபவருக்கு அவல் கிடைத்தது போல’ ஆயிற்று. அட, ‘பழம் நழுவிப் பாலில் விழுந்துவிட்டது’. விடக்கூடாது என்று விஷ்ணுவின் இருப்பிடத்தை அறிந்து அங்கே சென்றார். இந்த தடவை, விஷ்ணுவின் குடுமி, தன் கையில் சிக்குவது உறுதி என்ற இறுமாப்புடன நாரதர் சென்றார்.

 

முதலில் உரிய வணக்கங்களைச் செலுத்திவிட்டு, கிண்டல் தொனியில், “ஐயா,பெரியவரே! ஹிரண்யகசிபு படையெடுத்து வந்தபோது, தேவலோகமே, காலியாமே! நீரும் ஓடிப் போய் ஒளிந்தீராமே! ஹிரண்யகசிபு கண்டுபிடிக்கமுடியாத இடத்தில் ஒளிந்து கொண்டுவிட்டு இப்போது நடமாடுகிறீரே! என்ன விஷயம்? எங்கு ஒளிந்தீர்? என்று நக்கல் செய்தார்.

 

நாரதரைப் பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, விஷ்ணு சொன்னார்: “ஐயா, மஹா பக்தர் நாரதரே! நான் எங்கும் ஓடி, ஒளியவில்லை. ஹிரண்யகசிபுக்கு வெகு அருகில்தான் இருந்தேன். அவனுக்குத் தெரியவில்லை!

 

நாரதர்: என்ன? அவனருகில் இருந்தால், எப்படி ஐயா, உம்மைக் கண்டுபிடிக்காமல் போனான்?

 

விஷ்ணு: நான் அவனது இதயத்தில் உட்கார்ந்திருந்தேன். எல்லோர் இதய கமலத்திலும் நான் வீற்றிருப்பதை நீர் அறிவீரே! இதில் என்ன வியப்பு? ஹிரண்யகசிபு, அகந்தையே வடிவெடுத்தவன். அவனது தலைக் கனத்தால், அவன் என்றும் குனிந்ததும் இல்லை; பணிந்ததுமில்லை. ஆகவே அவனால் என்னைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கொஞ்சம் குனிந்து என்னைத் தேயிருந்தால்கூட கண்டுபிடித்திருக்கலாம். அடக்கமும் பணிவும் இருந்திருந்தால் அவனுள்ளேயே நான் இருப்பதை அறிந்திருப்பான் – என்றார்.

 

நாளை காலை பத்திரிக்கைகளுக்குச் சூடான செய்தி தரலாம் என்று ஆர்வத்துடன் போன நாரதருக்கு விஷ்ணுவின் பதில் நல்ல பாடமாக அமைந்தது.

இந்தக் கதையின் நீதி என்ன வென்று இக்கதையை விளம்பிய ஆனந்தாஸ்ரம சுவாமி ராமதாஸ் சொல்கிறார்:- அகந்தையை விட்டால் இதய கமலத்தில் வீற்றிருக்கும் இறைவனை உணரலாம், காணலாம்.

–சுபம்–

 

வள்ளுவரின் சுடும் குறள்கள்! (Post No. 2469)

punul valluvar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 8 January 2016

 

Post No. 2469

 

Time uploaded in London :–  5-16 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

திருக்குறள் தெளிவு

 

வள்ளுவரின் சுடும் குறள்கள்!

 

.நாகராஜன்

 

சுடும் குறள்கள் ஐந்து

 

வள்ளுவரின் சில குறள்கள் நம்மைக் குளிர்விக்கும். சில அறிவுரை தரும். சில கேள்விகளைக் கேட்கும். சில கேள்விகளைக் கேட்டு பதிலும் தரும்.

இன்னும் சில குறள்களோ  சுடும்

 

என்ன சுடுமா? ஆம், சுடும் குறள்கள் அனைத்தையும் இங்கு பார்ப்போம்.

 

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை    உள்ளினும் உள்ளம் சுடும்   (குறள் 799)

 

 

ஒருவனின் உள்ளம் எப்போது சுடும்?

பதில் தருகிறார் வள்ளுவர்.

மரணம் வரும் போது நினைத்தால் கூட (அடுங்காலை) உள்ளம் சுடும் – ஒரு கேடு நமக்கு வரும் போது உதவாமல் ந்ம்மைக் கைவிடுபவரின் நட்பை மரண நேரத்தில் நினைத்தால் கூட உள்ளம் சுடும்!

 

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்                உள்ளினும் உள்ளம் சுடும்    (குறள் 1207)

 

 

எனது காதலனை மறக்காமல் இடை விடாது நினைத்துக் கொண்டிருக்கும் போதே இந்த உள்ளம் சுடுகிறதே, ஒரு வேளை நினைக்காமல் மறக்க நேர்ந்தால் நான் என்ன ஆவேன்?

 

காதல் பற்றிய உணர்வை ஒரு பெண் சொல்லுகின்ற குறளில் உள்ளம் ஏன் சுடுகிறது என்பதை அறிய சுவையாக இருக்கிறது.

valluvar iyengar

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்                  தன்னெஞ்சே தன்னைச் சுடும்       (குறள் 293)

 

 

உன் நெஞ்சம் தானாகவே உன்னைச் சுடும் என்ற எச்சரிக்கைக் குறள் இது. எப்போது சுடும்?

தன் நெஞ்சம் அறிந்த உண்மையைக் கூறாமல் பொய் கூறினால் தன் நெஞ்சே தன்னைச் சுடும்.

அந்தச் சூடு இருக்க, தனியே வேறு இறந்த பிறகு மயானத்தில் சுட வேண்டாம். இறந்த பின் சுடுவது சில மணி நேரமே. ஆனால் நெஞ்சம் சுடுவதோ வாழ்நாள் இருக்கும் வரைக்கும்!

 

 

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்           ஏமப் புணையைச் சுடும்    (குறள் 306)

 

 

சேர்ந்தவுடன் ஒருவரை அழிக்கும் அபூர்வப் பொருள் உள்ளது. அது தான் நெருப்பு. சேர்ந்தாரைக் கொல்லி – நெருப்பு.

ஏமப்புணை என்பது நமக்குத் துணையாக இருக்கும் பாதுகாவலர்.

நெருப்பு பரவினால் அனைத்தையும் அல்லவா சுட்டெரிக்கும்.

 

சினம் அதாவது கோபம் நெருப்பு போன்றது. அது கோபப்பட்டவரை மட்டும் அது அழிக்காது. உடன் துணையாக இருக்கும் பாதுகாவலரையும் சுடும்.

சேர்ந்தாரைக் கொல்லி உடன் இருந்தாரையும் அல்லவா சுட்டு விடும்! ஜாக்கிரதை!

 

 

tirukkural seminar

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்             நாணின்மை நின்றக் கடை    (குறள் 1019)

 

ஒருவன் தான் கொண்ட கொள்கை தவறினால் (கொள்கை பிழைப்பின்) அது அவனுடைய குலத்தைச் சுடும்; அழிக்கும். ஆனால் செய்யத் தகாத செயல்களைச் செய்வதில் வெட்கப் படாவிட்டால் (நாணின்மை நின்றக் கடை) எல்லா நன்மையையும் அது அழிக்கும் (நலம் சுடும்)

 

ஐந்தும் சுடும் குறள்கள்.

 

ஒன்று உன் உள்ளத்தைச் சுட்டே உன்னை சாகும் வரைக்கும் எரிக்கும் என்கிறது — நெஞ்சம் அறிந்து பொய் சொல்லாதே

அடுத்தது மரண சமயத்தில் நினைத்தால் கூட உள்ளம் சுடும் என்கிறது -ஆபத்துக் காலத்தில் கைவிட்ட நண்பனை நினைத்தால்!

 

இன்னொன்று காதலியின் உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. சதா ‘அவன்’ நினைவாக இருக்கும் போதே சுடுகிறதே, மறந்தேன் என்றால், ஐயையோ… அந்த நிலையை நினைக்கவும் முடியுமா?

 

அடுத்தது கொள்கையை விட்டு விட்டால் குலம் அழியும்; வெட்கப்பட வேண்டிய செயல்களை விடாவிட்டால் எல்லா நன்மையும் அழியும் என்கிறது.

 

இன்னொன்று, கோபப்படாதே. கோபம் சேர்ந்தவரை அழிக்கும் சேர்ந்தாரைக் கொல்லி. அது உன்னை மட்டும் அழிக்காது, உன் துணையையும் அழித்து விடும் என்கிறது.

 

 

அபூர்வமான சுடும் குறள்கள் நெஞ்சத்திற்கு இதமான உண்மைகளை அல்லவா கூறுகிறது!

 

valluvar gold

 

சுடுவதை ஒப்பிடும் குறள்கள் நான்கு

 

 

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்                 சுடச்சுட நோற்கிற்பவர்க்கு  (குறள் 267)

 

தவம் செய்கிறான் ஒருவன் அவனது தவம் மேம்பட மேம்பட ஒளி மயம் ஆவான். எது போல? சுடச் சுட  மாசு நீங்கி ஒளிரும் பொன் போல! தவம் மாசைக் களையும். மாயையை அழிக்கும். ஒளியைத் தரும்!

 

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல                        விடிற் கடல் ஆற்றுமோ தீ    (குறள் 1159)

 

 

நெருப்பு தன்னைத் தொட்டவரை மட்டும் தான் சுடும். ஆனால் இந்த காம நோய் இருக்கிறதே, விட்டு நீங்கியவரை கூட சுடுகிறதே, அந்த நெருப்புக்கு இந்த ஆற்றல் இல்லையே!

நெருப்புக்கும் காம நோய்க்கும் உள்ள வேற்றுமை தெரிந்து விடுகிறது! எப்போதும் உடலை தகிக்க வைப்பது காமம்!

 

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்              பெரியார்ப் பிழைத்தொழுகுவார்   (குறள் 896)

 

தீயினால் சுடப்பட்டால் கூட ஒரு வேளை உயிர் தப்பி வாழ ஒருவனுக்கு வழி உண்டு. (எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்)

ஆனால் ஒருவன் பெரியோரிடத்தில் குற்றம் செய்து விட்டாலோ உய்வதற்கு வழியே இல்லை.

பெரியோரிடம் தவறு இழைக்காதே!

 

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே                  நாவினால் சுட்ட வடு  (குறள் 129)

 

 

தீயினால் சுட்ட புண் கூட ஆறி விடும். ஆனால் நாவினால் ஒருவனைச் சுட்டு விட்டால் அது அவன் நினைவில் நீங்காத வடுவாக அல்லவா நிலைத்து நிற்கும். நாவினால் யாரையும் சுடாதே!

 

எப்படி இருக்கிறது ஐந்து சுடும் குறள்களும் நான்கு சுடுவது பற்றி ஒப்பிடும் குறள்களும்.

 

நவ (9) குறள்களும் நவமான (புதிதாக இருக்கும்) குறள்கள் – இன்று நோக்கினாலும், என்று நோக்கினாலும்!

*******

Where was Vishnu hiding? (Post No. 2468)

narshimha1

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 7 January 2016

 

Post No. 2468

 

Time uploaded in London :–  18-20

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Give up pride to attain God

narasimha2

Picture: Hiranyakasipu was killed by Vishnu in his lion-man form.

Hiranyakasipu was the King of the Asuras or demons. At one time he was the most powerful monarch of all the worlds. Being an Asura he was the enemy of the Gods. He used to wage war with the gods from time to time. By the great powers he had attained by penance, he used to defeat gods who would flee from him because of his severe onslaught on them.

 

 

Once Hiranyakasipu thought of taking possession completely of Devaloka, the abode of Devas, and also of Vaikuntha where Vishnu lived. He started the campaign with a sword in his hand fought with the Devas and drove them away from Devaloka. Then he proceeded to Vaikuntha. The news having reached Vishnu and his Dutas, they in a body took to heels and disappeared. Hiranyakasipu entered Vaikuntha and finding the place vacant, searched for Vishnu everywhere in all secret hiding places in the three worlds. But Vishnu could not be found anywhere. He returned to his kingdom utterly disappointed. Soon after, Vishnu came out of his hiding place and returned to Vaikuntha.

 

The news about Vishnu s flight from Vaikuntha out of fear on the invasion of Hiranyakasipu spread like wildfire. It reached the ears of Narada. Narada was astonished to hear of it. He directly went to Vaikuntha for making enquiries. After paying due obeisance to Vishnu, Narada with a curious smile on his face, asked the Lord, How is it You ran away when Hiranyakasipu invaded your heaven?  Vishnu confessed that since Hiranyakasipu was gifted with invincible powers acquired by his long continued penance, He couldn’t face him. Then Narada queried, it appears that you hid yourself in such a place that Hiranyakasipu, in spite of his combing every possible place of hiding all over the three worlds, could not discover You. May I know where you were when the search was going on?

 

Vishnu with a wink replied, Don you know? I was hiding in the heart of Hiranyakasipu himself. Is it so! Exclaimed Narada. How was it Hiranyakasipu failed to find you out while You were so near him, hiding in his own heart? Vishnu replied, How could he see me unless he bends down his head? He would not bow down as he was sitting and walking always with a puffed chest and upright head with a feeling of colossal pride that he was the suzerainty of all the worlds. So I felt safe in his heart while search for me was going on.

narasimha

The lesson we have to learn from this story is unless we bow down in all humility to God, we cannot find Him.

Story told by swami Ramdas.

 

–Subham–

 

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க………….. தீயினில் தூசாகும் – ஆண்டாள் (Post No. 2467)

30 திருப்பாவை

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 7 January 2016

 

Post No. 2467

 

Time uploaded in London :–  8-37 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

கடவுள் பற்றி 275 பொன்மொழிகள், பழமொழிகள்

 

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 1 (ஜூன் 21, 2012)

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 2 (ஜூன் 22, 2012)

எனது முந்தைய தொகுப்புகளில் 200 பழமொழிகளும் இன்றைய தொகுப்பில் 75 பழமொழிகளும், ஆக மொத்தம் 275 பழமொழிகள் பொன்மொழிகள் உள:

2 கோதாவரி

கீழ்கண்ட தொகுப்பில் பல ஆங்கிலப் பழமொழிகளின் மொழி பெயர்ப்பும் உள.

 

1.சொர்கம் ஏன் காலியாக இல்லை? நம் பாவங்களை கடவுள் மன்னிப்பதால்!

 

2.முதல் எழுத்து அ போல உலகிற்கு மூல முதல்வன் பகவான் –வள்ளுவன் குறள்

 

3.வேண்டுதல் வேண்டாமை இலாதவன் –குறள்

 

4.தனக்குவமை இலாதான் – குறள்

 

5.வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் – ஆண்டாள்

 

6.கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்து கொண்டு கொடுக்கும்

 

7.நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்

 

8.நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு – பாரதியார்

 

9.அவனருளாலே அவன் தாள் வணங்கி- மாணிக்கவாசகர்

10.அன்பே சிவம் – திருமூலர்

11.கடவுள்,மர்மமான வழிகளில் செயல்படுகிறார்- வில்லியம் கவ்பர்

2.cosmic dancer, Boston Museum, US

12.குணப்படுத்துபவன் கடவுள்; நன்றியை வாங்கிக் கொள்பவன் டாக்டர்!

13.கடவுள் கட்டாயமாகக் கூலி கொடுக்கும் எஜமானன்

 

14.கடவுள் மெதுவாக வருவார்; ஆனால் அடிக்கும்போது இரும்புக்கரத்தால் அடிப்பார்

15.கடவுள் கோவிலில் இருப்பார்; அருகில் சின்னக் கோவிலில் சாத்தான் வசிப்பான்

 

16.கடவுள் கல்லைப் படைக்கிறார்; மனிதன் வடிவமைக்கிறான்

 

17.கடவுள் நாட்டுப்புறம் படைத்தார்; மனிதன் நகரத்தை உருவாக்கினான்.

 

18.எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன் இறைவன்

 

19.திக்கற்றவருக்கு தெய்வமே துணை

 

20.யாண்டும் இடும்பை இல – குறள் (கடவுளை நம்புவோருக்கு துன்பமே இல்லை)

 

21.சங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம், விமுக்த துக்கா சுகினோ பவந்து – விஷ்ணு சஹஸ்ரநாமம் (நாராயண சப்தமுள்ள இடத்தில் துக்கம் பறந்தோடும்)

 

3 goddesses

22.சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம்தர மாட்டான்

23.தெய்வச் செயல் இருந்தால் செத்தவனும் எழும்புவான்

 

24.தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும் – வள்ளுவன் வாக்கு

25.தெய்வப் புலவனுக்கு நா உணரும், சித்திர ஓடாவிக்கு கை உணரும்

 

26.தெய்வமிலாதேயா பொழுது போகிறதும், பொழுது விடிகிறதும்?

 

27.தெய்வமே துணை

 

28.தெய்வம் உண்டெபார்க்கு உண்டு, இல்லை என்பார்க்கு இல்லை

 

29.எல்லாம் அவன் செயல்

 

30.தெய்வம் காட்டுமே தவிர, ஊட்டாது

 

31.தெய்வம் பண்ணின திருக்கூத்து

 

32.பரமம் பவித்ரம் லீலா விபூதிம் (எல்லாம் அவன் லீலா விநோதம்)

 

33.தெய்வ வணக்கமே நரக வாசலை அடைக்கும் தாழ்

9krish_AP.jpgallbad, new IE

34.சாகற நேரத்தில் சங்கரா, சங்கரா என்றானாம்

 

35.சம்யாத்மா விநஸ்யதி (சந்தேகப்படுவான் அழிவான்)- பகவத் கீதை

36.அகதிக்குத் தெய்வமே துணை

37.அரசன் அன்று கேட்பான், தெய்வம் நின்று கேட்கும் (அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்)

 

 

38.யோகக்ஷேமம் வஹாம்யஹம்- பகவத் கீதை 9-22 (பக்தன் விரும்பியதை அடையச்செய்வதும் அதைக் காப்பதும் என் பொறுப்பு)

39.கடவுள் நினைத்தால் காற்றில்லாமலே மேகம், மழை வரும்

 

40.சத்யம் ஞானம் அனதம் பிரம்மா

 

41.சத்யம், சிவம், சுந்தரம்

 

42.வேலை வணங்குவதே எமக்கு வேலை- பாரதியார்

 

18 steps

43.அஹம் பிரம்மாஸ்மி (நானே பிரம்மம்)

44.தத் த்வம் அஸி ( நீ அதுவாக (கடவுள்) இருக்கிறாய்)

45.ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்

46.அரங்கனைப் பாடின வாயால் குரங்கனைப் பாடுவேனா?

47.சிவநி ஆக்ஞலேக சீம கறவது (சிவனுடைய ஆணையின்றி எறும்பும் கடிக்காது)

48.ஓ ராம நீ நாமமு ஏமி ருசிரா? (தியாகராஜர்)

 

49.ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ- திருவாசகம்

 

50.பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது

 

51.அனுமார் வால் போல நீளும்

 

52.முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் (சிவன் பற்றி மாணிக்கவாசகர்)

 

53.சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கரும் மீனாட்சியும்

54.சிதம்பர ரகசியமா?

55.சிவத்தைப் போற்றிர் தவத்திற்கு அழகு – கொன்றைவேந்தன்

 

56.ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் – உலகநீதி

 

57.தெய்வம் நமக்குத் துணை பாப்பா- ஒரு தீங்குவரலாகாது பாப்பா – பாரதியார்

 

58.சிவாத் பரதரம் நாஸ்தி (சிவனுக்கு மேல் தெய்வமில்லை)

 

59.சுக்குக்கு மேல் மருந்தும் இல்லை; சுப்பிரமணியத்துக்கு மேல் தெய்வமும் இல்லை

 

60.சிவன் அபிஷேகப் பிரியன்; விஷ்ணு அலங்காரப் ப்ரியன்

 

61.அவனினின்றி ஓர் அணுவும் அசையாது.

 

62.ஒன்றே குலம் ஒருவனே தேவன் –திருமூலர்

 

63.சிவனே என்று கிட

1377607696503-Janmashtami in jammu

Jammu,August 27 An children dressed up as Shri Krishna and his friends during shoba yatra on the eve of Janmashtami in Jammu city on Tuesday. Photo by Vishal Dutta

64.அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில மண்ணு

65.சிவனொடொக்கும் தெய்வம் தேடினுமில்லை

 

66.ஈசனுக்கு ஒப்பு எங்கனும் இல்லை

 

67.ஈசன் எப்படி, அப்படி தாசன்

68.ஈசன் செயலை நீசன் குறை சொன்னானாம்

69.ஈசன் செயல் எண்ணத் தொலையாது

70.ஈசுவரன் கோயில் திருநாள் ஒருநாள் கந்தாயம்

71.இறைவன், அடியார் நெஞ்சில் குடியாய் இருப்பான்

 

72தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்

73.காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி

74.ஜகஜ்ஜனனி, லோக மாதா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி

75.ஈக்கும் எறும்புக்கும் படி அளப்பவன் நமக்கும் படி அளப்பான்

 

alwarpet govindarajan

–Subham—

ராக தேவதைகளின் அருள் பெற்ற தான்ஸேன்! (Post No. 2466)

ragamala2

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 7 January 2016

 

Post No. 2466

 

Time uploaded in London :–  5-54 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

இந்திய சங்கீதம்

ராக தேவதைகளின் அருள் பெற்ற தான்ஸேன்!

 

ச.நாகராஜன்

 

 

ஹரிதாஸரின் சீடர்

 

இந்திய சரித்திரத்தில் பாடகர்களின் வரிசையில் இணையிலா இடத்தை வகிப்பவர் தான்ஸேன்.

 

இவரைப் பற்றி ஏராளமான சுவையான சம்பவங்கள் பல்வேறு நூல்களில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவையெல்லாம் உண்மையா பொய்யா என்பதை அறிவது முடியாத காரியம்.

தான்ஸேனின் தந்தையின் பெயர் முகுந்த மிஸ்ரா.

ஐந்து வயதிலேயே சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவராக ஆகி இருந்தார் தான்ஸேன். அவரது இளமைக்காலப் பெயர் ராமதனு.

அவரது குருநாதர் பிருந்தாவனத்தில் வாழ்ந்து வந்த பெரிய மகானான ஸ்வாமி ஹரிதாஸ்.

 

காடு வழியே சென்று கொண்டிருந்த குருநாதர் புலி போல குரல் (மிமிக்ரி) கொடுத்த ராமதனுவின் திறமையை மெச்சி அவருக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்ததாக ஒரு கதை.

அவரது தந்தையின் ஏற்பாட்டின் படி குருகுலவாஸம் செய்து தான்ஸேன் சங்கீதம் கற்றுக் கொண்டதாக இன்னொரு கதை.

எது எப்படியானாலும் ஹரிதாஸர் தனக்கு இணையாகப் பாடும்படி தான்ஸேனுக்கு அருளைப் பொழிந்தது வரலாற்று உண்மை. அனைத்து ராக தேவதைகளும் தான்ஸேன் மீது அருளைப் பொழிந்ததும் உண்மை!

 

ragamala3

அக்பரின் அழைப்பு

 

தான்ஸேனின் புகழைக் கேட்ட அக்பர் எப்படியும் அவரைத் தன் அரசவைக்கு அழைத்து வர விரும்பினார். அப்போது அக்பருக்கு வயது 20.

 

ரேவாவின் மஹாராஜாவான ராமச்சந்திராவின் அரசவையில் இருந்த தான்ஸேன் ஒருவாறாக அக்பர் அரசவைக்குச் சென்று தன் முதல் கச்சேரியை நிகழ்த்தினார். அப்போது அவருக்கு வயது 57.

 

அடுத்த 27 வருடங்களுக்கு அக்பர் தான்ஸேனை விடவே இல்லை. (1589ஆம் ஆண்டு வாக்கில் தான்ஸேன் மறைந்தார்)

அப்படி ஒரு மோகம், மரியாதை அக்பருக்கு தான்ஸேன் மேல் ஏற்பட்டது.

 

முதல் கச்சேரிக்கு ஒரு லட்சம் தங்க நாணயங்களை அக்பர் தான்ஸேனுக்கு வழங்கியதாக கர்ண பரம்பரைச் செய்தி தெரிவிக்கிறது.

 

தனது நவரத்தினங்களில் முக்கியமான இடத்தை அக்பர் தான்ஸேனுக்கு அளித்தார்.

 

ragamala1

நரபதியும் தான்பதியும்

 

தன்னை புலவர்கள் நரபதி என்று அழைத்த போது தான்ஸேனை தான்பதி என்று அழைக்க வைத்தார் அக்பர்.

பாரத சாம்ராட் என்று கவிஞர்கள் அக்பரைப் புகழ்ந்த போது தான்ஸேனை சங்கீத சாம்ராட் என்று அவர் அழைத்தார்.

 

அவர் மேக மல்ஹார் ராகத்தைப் பாடினால் மழை பொழியும்!

(தான்ஸேன் தீபக் ராகம் பாடிய போது தீ ஜுவாலை எழுந்ததையும் குருநாதர் ஹரிதாஸைப் பார்க்க அக்பர் விரும்ப அவரை அழைத்துச் சென்ற போது நடந்த சுவையான சம்பவங்களையும் ஏற்கனவே கட்டுரைகளில் எழுதி இருப்பதால் அவற்றை இங்கு மீண்டும் எழுதவில்லை)

 

 

ஒரு அழகிய பாடல் நரபதி-தான்பதி விஷயத்தை விளக்குகிறது.

முராரே த்ரிபுவநபதே, இந்த்ர சுரபதே,, சேஷநாக் ஹை ஃபநபதே |

(முராரி மூன்று உலகங்களுக்கும் அதிபதி

இந்திரன் தேவலோகத்திற்கு அதிபதி

ஆதிசேஷன் நாகங்களுக்கு அதிபதி)

க்ஷீர உததி சலிலபதே, கௌஸ்துப மணி ரத்னபதே தினகர் தீனனபதே, கமலாபதே ||

(க்ஷீர சமுத்ரம் கடல்களுக்கு அதிபதி, கௌஸ்துப மணி  ரத்னங்களுக்கு அரசன், தினகரனும் விஷ்ணுவும் தீனர்களுக்குத் துணைவர்)

சசி உட்கணபதே, ஹநுமான் பலிநபதே, நாரதாதி பக்தநபதே, சாஜன் வீணா ம்ருதங்கபதே |

(நட்சத்திரங்களின் தலைவன் சந்திரன், ஹநுமான் பலசாலிகளின் அதிபதி, நாரதர், பக்தர்களின் தலைவர், வாத்தியங்களில் வீணை முதன்மையானது)

 

சிரஞ்சீவௌ சாஹ் அக்பர் நரபதே, தான்ஸேன் தான்பதே ||

இது போலவே சிரஞ்சீவி அக்பர் நரர்களுக்கு அதிபதி, அது போலவே தானபதி தான்ஸேன் தான்!

 

 raga1

சங்கீத ரஸிகர்கள் சென்று காணும் வட விருக்ஷம்

 

அக்பரின் அந்தப்புரத்தில் அக்பரைத் தவிர உள்ளே நுழையக் கூடிய உரிமையை தான்ஸேன் மட்டுமே பெற்றிருந்தார்.

அங்கு அவரது கச்சேரிகளை அந்தப்புரத்தில் இருக்கும் அரசமகளிருடன் அக்பரும் கேட்டு மகிழ்வது வழக்கம்.

தீபக் ராகம் பாடியபோது எழுந்த அக்னி ஜுவாலையில் தான்ஸேன் இறந்ததாக கர்ண பரம்பரைச் செய்தி தெரிவிக்கிறது.

அவரது அந்திமக் கிரியையின் போது கண்ணீருடன் அக்பர கலந்து கொண்டார் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

 

 

தான்ஸேனின் சமாதி, அவர் சங்கீதத்தை சாதகம் செய்த வட விருக்ஷம் முதலிய அனைத்தும் இன்றும் சங்கீத ரஸிகர்கள் செல்லும் இடங்களாக இன்றும் திகழ்கின்றன.

சுவையான சம்பவங்கள் நிறைந்த தான்ஸேனின் வாழ்க்கை இந்திய சங்கீதத்தின் பெருமைக்கான ஒரு வரலாறே. ஹிந்து(ஸ்தானி) ராகங்கள் பற்றியும் ராக தேவதைகளைப் பற்றியும் அறிய விரும்புவோர் தான்ஸேனின் வரலாறைப் படிப்பது பயன் தரும் ஒன்றாக அமையும்!

 

*******

இதைப் படிக்கும் அன்பர்கள் நேற்று வெளியான அக்பரும் சூரிய நமஸ்காரமும் கட்டுரையையும் படித்து மகிழலாம்.