லண்டன் கண்காட்சியில் அரிய SEX செக்ஸ் புஸ்தகம்! (Post No.4705)

Date: 5 FEBRUARY 2018

 

Time uploaded in London- 13-14

 

Written by London swaminathan

 

Post No. 4705

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

AYURVEDA EXHIBITION – PART 3

Model of Heart

லண்டன் யூஸ்டன் ஸ்கொயர் (Euston Square) ஸ்டேஷன் அருகில் உள்ள வெல்கம் சென்டரில் (Wellcome Centre) ஏப்ரல் 8-ம் தேதி வரை ஆயுர்வேத கண்காட்சி நடைபெறும். ஹென்றி வெல்கம் என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த மருத்துவ பொக்கிஷங்கள் இங்கே உள்ளன. அரிய சம்ஸ்கிருத நூல்களும், இந்தி யாவிலிருந்து எடுத்து வர முடியாத ஓலைச் சுவடிகளின் மைக்ரோ பில்ம் (Microfilm) முதலியனவும் இங்கு ஆராய்ச்சியாளருக்கு எப்போதுமே கிடைக்கும்.

 

நான் சில ஆண்டுகளுக்கு முன் வரை லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்து வந்தேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் வெல்கம் சென்டரில் உள்ள  ஒரு மருத்துவ மாணவர் யுனானி வைத்யத்தில் ஆராய்ச்சி செய்தார். அவர் என்னிடம் தமிழ் கற்றதோடு யுனானி (Unani) பற்றி 100, 150 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பத்திரிக்கைகளில் வெளியான விளம்பரங்களை மொழி பெயர்க்கவும் சொன்னார். அது முதற்கொண்டு எனக்கு இந்த வெல்கம் சென்டருடன் தொடர்பு உண்டு.

 

பாம்புக்கடி முதல் செக்ஸ் மருத்துவம் வரை எல்லா இந்திய பொக்கிஷங்களும் இங்கே ஒரே கூரையின் கீழ் அறியலாம். இந்தியாவில் ஒவ்வொரு விஷயத்துக்கும் வேறு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேலும் வெள்ளைக்காரர் என்றால் வாயைப் பிளந்து கொண்டு எல்லாவற்ரையும் தேடிக் கொடுக்கும் நம்மவர்கள், வேட்டி கட்டிக் கொண்டு போகும் நம்மவரை மதிக்கவும் மாட்டார்கள்; எள்ளி நகையாடவும் செய்வர். அவ்விஷயத்தில் பிரிட்டிஷ் லைப்ரரியும், வெல்கம் லைப்ரரியும் 100 மடங்கு மேல்.

இன்னொரு சிறப்பையும் சொல்லி ஆக வேண்டும். பிரிட்டிஷ் மியூஸியத்தில் மற்றவர்களுக்குக் காட்டாத அரிய பொக்கிஷங்களை அவ்வப்பொழுது ஸ்பெஷல் கண்காட்சி என்று வைத்து 20, 30 பவுன் கட்டணம் வைத்து விடுகிறார்கள் போட்டொ எடுக்கவும் அனுமதி இல்லை. ஆனால் வெல்கம் லைப்ரரி அனைவருக்கும் இலவசமாக தங்கள் பொக்கிஷங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. புகைப்படமும் எடுக்கலாம்.

Sex Book பாலியல்

 

இந்தக் கண்காட்சியில் அனங்கரங்க என்ற சம்ஸ்கிருத செக்ஸ் (sex) பாலியல்   நூல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது 500 ஆண்டுகளுக்கு முந்திய நூல். இந்தப் புஸ்தகத்தை 18 ஆவது நூற்றாண்டில் படி எடுத்துள்ளனர். இது உலகின் முதல் செக்ஸ் புஸ்தகமான காமசூத்ரத்துடன் ஒப்பிடப்படுகிறது. காம சூத்ரத்தை ஸம்ஸ்க்ருதத்தில் எழுதியவர் வாத்ஸ்யாயன மஹரிஷி.

 

உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அரிய பெரிய பொக்கிஷங்கள் ஸம்ஸ்க்ருத மொழியில் மட்டுமே உண்டு. ஷேக்ஸ்பியர் நாடகங்களை எல்லாம் விழுங்கிச் சாப்பிட்டுவிடும் காளிதாசன், பாஷா, சூத்ரகன் போன்றோரின் நாடகங்கள், ஹமுராபியை விழுங்கிவிடும் உலகின் முதல் சட்ட நூலான மநு ஸ்ம்ருதி, உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரம், உலகின் முதல் தெஸரஸான (Thesarus) அமர கோஷ அகராதி, உலகின் முதல் இண்டெக்ஸான (Index) வேத அநுக்ரமணி, உலகின் முதல் தத்துவ நூலான உபநிஷத், உலகின் முதல் இலக்கண நூலனலான அற்புதம் நிறைந்த பாணிணீய வ்யாகரணம், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம், பரத முனியின் பரத நாட்டிய சாஸ்திரம் — இப்படி தத்துவம், தர்கம், காம சாஸ்திரம், கணிதம், விமானவியல் என்று ஆயிரக்கணக்கான புஸ்தகங்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சீனம், கிரேக்கம், லத்தீன், எபிரேயம் தமிழ் ஆகிய அவ்வளவு பழைய மொழிகளின் நூல்களை ஒரு தட்டில் வைத்து ஸம்ஸ்க்ருத நூல்களை மற்றொரு தட்டில் வைத்தால் ஸம்ஸ்க்ருதம் மிக மிக கனமானது என்பது விளங்கும்

 

அவ்வகையில் அநங்க சாஸ்திரம் 10 பக்கங்களில் செக்ஸ் படங்களைக் கொண்டுள்ள ஒரு நூலாகும். ஒவ்வொரு பக்கத்திலும் 37 படங்கள் உண்டு. 17ஆவது நூற்றாண்டு முதல் நேபாள மன்னர்கள் செக்ஸ் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டியதால் இந்த நூல் உருவானது. இதனால் இதில் ஸம்ஸ்க்ருத மற்றும் நேவாரி மொழிகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

காஷ்மீரில் வாங்கிய பொருள்கள் பட்டியல்

 

டாக்டர் பைரா மால் (Dr Paira Mall) என்பவர் இந்தியாவில் டாக்டர் படிப்பு படித்தவர். ஐரோப்பாவில் பயிற்சி பெற்றவர். ஆகையால் இவர் 1911ல் காஷ்மீருக்குச் சென்று லண்டன் வெல்கம் சென்டர் மியூசியத்துக்காகப் பொருள்களையும் புஸ்தகங்களையும் வாங்கினார். இந்தப் பட்டியலைப் பார்த்தால் ஹென்றி வெல்கமுக்கு எதில் எதில் ஆர்வம் இருந்தது என்பது புலப்படும், டாக்டர் பைரால் 11 ஆண்டுகளுக்கு இந்த வெல்கம் சென்டருக்காக இந்தியாவில் பணிபுரிந்தார். பாம்புக்கடி மருந்து முதல் முஸ்லீம் தாயத்து வரை பல பொருள்களை காஷ்மீரில் 229 ரூபாய்க்கு வாங்கி லண்டனுக்கு அனுப்பினார். இந்தப் பட்டியலை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். இதிலுள்ள சில சுவையான விஷயங்கள்:–

 

காசுகள், தாயத்துகள்

காஷ்மீர் தொப்பி

ஸர்ப்ப வழிபாட்டு படங்கள்

இந்து தெய்வங்களின் படங்கள்

பச்சைக் கல் மீது நோயைப் போக்க எழுதப்பட்ட தாயத்துகள்

அராபிய, பாரஸீக, ஸம்ஸ்க்ருத,

திபெத்திய, சாரதா மொழி பிரதிகள், ஓலை ச்சுவடிகள்

நாவிதர் கத்திகள்

குரான் வரிகள் பொறிக்கப்பட்ட நெற்றிச் சுட்டிகள்

வெள்ளி யந்திரம்

சிவப்பு லிங்கம்

 

முதலியவற்றை வாங்கி லண்டனுக்கு அனுப்பினார்.

ஹென்றி வெல்கமின்  சேகரிப்புகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன.

டாக்டர் பைரா மால், இந்தியாவில் தங்கிய 11 ஆண்டுகளும் லண்டனில் இருந்த வெல்கம் சென்டர் அதிகாரி தாம்ஸனுடன் தொடர்புகொண்டு அவ்வப்பொழுது கடிதம் எழுதி வந்தார்.

–சுபம்–

 

What did Dr.Paira Mall buy for Rs.229 for London Museum in 1911? (Post No.4704)

Date: 5 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-03 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4704

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

LONDON AYURVEDA EXHIBITION- PART 3

Paira Mall was a doctor born in India and trained in Europe. He was sent to India by Henry Wellcome to collect medical treasures from India. Henry wanted him to collect the books in manuscripts or translations and important herbs. He was one of the several agents Henry employed for collecting valuable materials for his research museum. Paira Mall spent 11 years in India and he was in regular correspondence with Mr C J S Thompson, the curator of Museum.

 

There is a list of things Mr Mall bought in Sri Nagar, Kashmir. It makes a very interesting list and shows what type of things were collected from different parts of the world by Henry Wellcome. Here is the list of things (displayed in Ayurvdic Man Exhibition in London)  he bought in 1911 for 229 rupees 4 annas:

 

Rupees- Annas

One Kashmiri cap with Silver charms –  21- 00

One Brass Amulet necklace                     –       3- 8

1 red Lingam                                                            –           3-8

1 very old stone Hindu medical deity     4-00

Tibetan Stone tablet with Mantra                     3-12

1 Persian manuscript with pictures       14-00

1 Persian manuscript, Animal logic                   4-00

6 jade engraved charms

against several diseases                                      18-00

1 old Persian medical manuscript            12-00

1 Hanuman sketch                                                 2-00

2 forehead silver charms with

Koran Verses –                                                                     14-4

1 kollyrium silver holder for eyes            8-00

1 hollow amulet                                                     1-4

1 silver yantra coin                                                            5-00

2 barber knives                                                       3-00

3 Deity pictures                                                      4-00

1 circumcision apparatus                         2-0

3 coins with Kalma engraved                              4-00

1 very ancient manuscript on bark                   35-00

2 pictures of snake worship-                              2-00

3 Very old Persian manuscripts              15-00

2 old Arabic medical manuscripts                     25-00

Gratuity one Mohammedan Hakim      1-00

Agent                                                                         2-00

Picture of Navayana                                              2-00

4 Sharada manuscripts                                         20-00

———

 

Total                                                                           229-4

 

This receipt was signed by Paira Mall and sent to London.

 

 

It is very interesting to see what were the objects Henry Well come was interested in. Anything to do with cures, medical beliefs and cures for snake bites and other diseases.

 

–Subham–

 

 

 

 

 

 

எந்தக் கேள்விக்கும் இதோ பதில்! (Post No.4703)

Devotee

Devotee in Sri Lankan Temple

Date: 5 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-17 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4703

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஞான ஆலயம் பத்திரிகை சிறந்த ஆன்மீகக் கட்டுரைகளை வெளியிடும் சிறந்த பத்திரிகை. இதன் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ். பிப்ரவரி 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

 

எந்தக் கேள்விக்கும் இதோ பதில்! ஹிந்து மதம் வழங்கும் சம்வாதங்கள்!!

 

ச.நாகராஜன்

 

Krishna Picture from Facebook friend

1

ஹிந்து மதத்தின் பெரும் சிறப்பியல்புகளில் ஒன்று அது மனித மனத்தில் தோன்றும் எந்தக் கேள்விக்கும் சரியான விடையைத் தருவது தான்!

 

 

உலகில் தோன்றுவதிலிருந்து (அதாவது காலிருந்து) மறைவது வரை (அதாவது மரணம் முடிய), அதற்கு அப்பால் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை, அதற்கும் அப்பாலாய் ஜனன, மரணச் சுழலிலிருந்து விடுபட்டு முக்தி அடைவது உள்ளிட்ட எதைப் பற்றியும் எந்தக் கேள்வியையும் யார் வேண்டுமானாலும் கேட்கலாம்.

 

அதற்கு பதில் ரெடி!

 

வேதங்கள், உபநிடதங்கள், இதிஹாஸங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் உள்ளிட்ட இவையே பொதுவாக சாஸ்திரங்கள் எனப்படுகின்றன.

 

இவற்றில் ஆயிரக்கணக்கான சம்வாதங்களைப் பார்க்கலாம்.

சம்வாதம் என்றால் அர்த்தமுள்ள உரையாடல் என்று பொருள்.  சிரத்தையுள்ள ஒருவர், ஒரு விஷயத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்திற்கான பதிலை, நிஜமாகவே தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன், அதில் நிபுணராக உள்ள ஒருவரை அணுகித் தெளிவு பெறுவதே சம்வாதம் ஆகும்.

இந்த சம்வாதங்களில் முக்திக்கான பாதை உண்டு, செக்ஸ் சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில்கள் உண்டு, பொருளை எப்படிச் சம்பாதிக்க வேண்டும், வெற்றிகரமாக வாழ்க்கையை எப்படி நடத்துவது (இன்று செல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட் என்ற பெயரில் நாம் அறிந்து கொள்பவை) என்பது போன்ற பொருளாதார மேம்பாட்டிற்கான சந்தேகம் போக்கும் பதில்கள் உண்டு, தர்மம் என்றால் என்ன, அதையொட்டி ஏன் நம் வாழ்வு அமைக்கப்பட வேண்டும், ஒருவர் உயரவும் இன்னொருவர் தாழவும் (தர்மம் அனுஷ்டிப்பது) காரணமாவது எப்படி என்பன போன்ற சிக்கலான கேள்விகளுக்கும் பதில் உண்டு.

இந்த சம்வாதங்களைத் தொகுத்தால் அது உலகின் தலை சிறந்த அறிவுக் கருவூலத்தின் கலைக் களஞ்சியமாகத் திகழும்.

ஆயிரக் கணக்கான சம்வாதங்களில் நமக்குப் பிடித்தமான நூற்றெட்டைத் தேர்ந்தெடுத்துப் படித்தாலேயே போதும் – மன அமைதியுடனும், செல்வத்துடனும், குடும்ப வளத்துடனும் தர்ம அடிப்படையில் உலகில் வெற்றிகரமாக வாழ்வதற்கு.

இங்கு சில சுவையான சம்வாதங்களைப் பார்ப்போம்.

 

2

மஹாபாரதத்தில் தொட்ட இடங்களில் எல்லாம் சுவையான ஒரு சம்வாதம் இடம் பெறும்.

 

நாரதர் – ஸமங்கர் சம்வாதம்: நாரத மஹரிஷி  ஸமங்கரை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். எப்போதுமே சந்தோஷத்துடன் இருக்கிறார்; துக்கமே இல்லாதவர்! எப்படி இது சாத்தியம்.

அர்த்தமுள்ள ஒரு உரையாடல் (சம்வாதம்) ஆரம்பிக்கிறது.

ஸமங்கர் நாரதருக்கு விரிவாக பதில் கூறுகிறார். (சாந்தி பர்வம், 292ஆம் அத்தியாயம்)

 

காலவருக்கும் நாரதருக்கும் நடந்த சம்வாதம் ச்ரேயஸுக்கான காரணத்தை விளக்குகிறது (சாந்தி பர்வம் 293ஆம் அத்தியாயம்)

 

எதிரிகளை வெல்வது எப்படி? இந்திரனுக்கும் பிரஹஸ்பதிக்கும் நடந்த அர்த்தமுள்ள உரையாடல் எதிரியை வெற்றி கொள்வது பற்றி விவரிக்கிறது. (சாந்தி பர்வம் 103ஆம் அத்தியாயம்)

 

சத்யபாமா த்ரௌபதியைச் சந்திக்கும் போது எப்படி த்ரௌபதி ஐந்து கணவர்களையும் மனம் கோணாதபடி இணங்கி நடக்கச் செய்கிறாள் என்ற தன் சந்தேகத்தைக் கேட்க, த்ரௌபதி அவளைக் கடிந்து கொள்கிறாள் – கேட்கத் தகாத முறையால் அதைக் கேட்டதால்! இருந்தாலும் தனது கடுமையான ஸ்தீரி தர்மமே  ஐந்து கணவர்களையும் தன்னுடன் இணக்கத்தோடு வாழ வைக்கிறது என்று கூறி தனது ஸ்தீரி தர்மத்தை விரிவாக விளக்குகிறாள். பெண்களுக்கான அருமையான இரகசிய விளக்கம் இது. ( வன பர்வத்தில் திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வம்)

கர்ம பலன் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சந்தேகம். எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்பது ஒரு பொதுவான கேள்வி. அன்னை பார்வதி சிவபிரானை நோக்கி ஏராளமான கேள்விகளைக் கேட்க சிவபிரான் பொறுமையாக பல்வேறு கர்மங்களுக்கு அதற்கான உரிய பலன்களை விரிவாக விளக்குகிறார். (அநுசாஸன பர்வம் அத்தியாயம் 218 )

 

தார்க்ஷ்யருக்கும் ஸரஸ்வதிக்கும் இடையே நடக்கும் சம்வாதம் தானம், அக்னிஹோத்ரம், மோக்ஷம் ஆகியவற்றை நிரூபிக்கிறது.

(வன பர்வம்- மார்க்கண்டேய ஸமஸ்யா பர்வம்)

 

இன்னும் க்ருஷ்ணார்ஜுன சம்வாதமே உலகம் போற்றும் பகவத் கீதை; தர்மருக்கும் யட்சனுக்கும் நடந்த சம்வாதமே யட்சப் ப்ரஸ்னம் என்பதை அறிவோம்.

கிருஷ்ணருக்கும் ஜராசந்தனுக்கும் இடையே நடந்த சம்வாதம்; அனுமன் – பீமசேனன்; த்ருதராஷ்டிரன் – சஞ்சயன்;ராவணன் – சீதா; பரத்வாஜர்- ப்ருகு; கிருஷ்ணர்- உக்ரசேனர்; சூரியன் – கர்ணன்; ஜனகர்- அவர் மனைவி (சாந்தி பர்வம் அத் 18-19): ஒரு பக்ஷி- ரிஷி; தர்மர்- இந்திரன்; ஆக இப்படி இருவருக்கு இடையே நடக்கும் சம்வாதங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய கேள்வியை எழுப்பி அதற்கான சரியான விடையைத் தருகின்றன.

 

3

பாகவதத்தை எடுத்துக் கொண்டால் அதிலும் ஏராளமான சம்வாதங்கள் உண்டு.

ரிஷிகள் சௌனகரை அணுகி 6 கேள்விகளைக் கேட்க அவர் அருமையான பதிலை அளிக்கிறார் (முதல் ஸ்கந்தம்; 2ஆம் அத்தியாயம்) ஒவ்வொருவருக்கும் உண்மையான, நிலைத்திருக்கும், மிகச் சிறந்த நன்மை எது, சாஸ்திரங்களின் சாரம் என்ன, ஏன் பகவான், கிருஷ்ணராகத் தானே நேரில் வந்தார்?, கிருஷ்ண லீலைகள் எவை, பத்து அவதாரங்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே உள்ள காரணம் என்ன?, கிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் தர்மம் யாரிடம் தஞ்சம் புகுந்திருக்கிறது என்பன போன்ற கேள்விகளுக்குப் பதிலை இந்த சம்வாதமே தருகிறது.

 

வியாஸருக்கும் நாரதருக்கும் இடையே நடந்த அர்த்தமுள்ள உரையாடலை முதல் ஸ்கந்தத்தில் காணலாம்.

விதுரருக்கும் உத்தவருக்கும் இடையேயான உரையாடலை மூன்றாம் ஸ்கந்தம் விளக்குகிறது.

நிமிக்கும் ஜெயந்தேயனுக்கும் நடந்த உரையாடல் ஜெயந்தேய கீதையாக பதினொன்றாம் ஸ்கந்தத்தில் மிளிர்கிறது.

 

4

புராணங்களில் வரும் நூற்றுக் கணக்கான சம்வாதங்கள் பொருள் பொதிந்தவை; சுவையானவை; வேறு எந்த நூல்களிலும் காணக்கிடைக்காதவை!

அருந்ததிக்கும் சாவித்திரிக்கும் இடையேயான சம்வாதம் சூரிய புராணத்தில் இடம் பெறுகிறது.

பீஷ்மர் – புலஸ்த்யர் – பத்ம புராணம்

அம்பரீஷன் – நாரதன் – பத்ம புராணம்

நாரதர் – மஹாதேவர் – பத்ம புராணம்

உமா தேவி – நாரதர் – பத்ம புராணம்

சஞ்ஜயன் – வியாஸர் – பத்ம புராணம்

பூமி – வராஹம் – வராஹ புராணம்

சுக்ரன் – தேவயானி – மத்ஸ்ய புராணம்

தேவயானி – கச்ச – மத்ஸ்ய புராணம்

ப்ரஹ்மா – நாரதர் – ஸ்கந்த புராணம்

ஸ்வேத – கால – ஸௌர புராணம்

மரணத்திற்குப் பின்னர் உயிர் செல்லும் பாதையும், மறு பிறப்பு ரகசியமும், கர்ம பலன்களின் காரணமும் ரிஷிகளின் அருள் வாக்கின் மூலம் அர்த்தமுள்ள உரையாடலில் விளக்கப்படும் போது கேட்டவர் மட்டும் பயன் பெறவில்லை; இன்றளவும் உலகில் உள்ள அனைவரும் பயனடைகின்றனர்.

ஆகவே தான் ஸ்வாமி விவேகானந்தர், “முதலில் இந்த நாட்டில் புராணங்களை வெள்ளமெனப் பாய்ச்சுங்கள்” என்று அருளுரை பகர்ந்தார்.

 

 

Yajur Veda Parayan, picture posted by Krishna Ganapatigal

5

 

வசிஷ்டருக்கும் ராமருக்கும் நடந்த நீண்ட உரையாடலே யோக வாசிஷ்டமாக மலர்கிறது.

அபூர்வமான இரகசியங்களை விவரிக்கும் இதை உலகின் தலை சிறந்த நூல்களில் முதலிட வரிசையைப் பிடிக்கும் நூல்களில் ஒன்றாகக் கூறலாம்.

 

நோய் வரக் காரணம், கர்ம பலன் காரணம், விதியா, மதியா எது பெரிது, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிகள், எண்ணங்களின் ரகசியம், முக்திக்கு வழி என்று இந்த நூல் தொடாத பொருளே இல்லை. உலகின் தலை சிறந்த மேலை நாட்டு அறிஞர்கள், விஞ்ஞானிகள், கீழை நாட்டு மேதைகள் உள்ளிட்டோர்களின் சிறந்த கொள்கைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அவை யோக வாசிஷ்டத்தில் இருப்பதைக் கண்டு பிரமிக்கிறோம். இப்படி ஒரு பட்டியலை “யோக வாசிஷ்ட ஸ்லோகம் – அறிஞரின் கூற்று” என்று எதிர் எதிராகப் போட்டு பட்டியலிட்டிருக்கிறார் பி.எல்.ஆத்ரேயா என்ற அறிஞர். (Yoga Vasistha and Modern Thought – B.L.Atreya -1934 Publication) அயர வைக்கும் பட்டியல் இது!

 

ரிக் வேதத்தில் விஸ்வாமித்திர மஹரிஷிக்கும் நதிக்கும் நடந்த உரையாடல் வியக்க வைக்கும் ஒன்று.

விஸ்வாமித்திரர் நதியைக் கடக்க வேண்டி நதியிடம் வழி விடுமாறு கேட்கிறார். நதியோ இயற்கை தர்மமமான தன் பிரவாகத்தை விட்டு விட முடியாது என்கிறது. தொடர்ந்து விஸ்வாமித்திரர் வெகு தூரத்திலிருந்து வரும் தனக்கு வழி விட்டே ஆக வேண்டும் என்கிறார். நதி சம்மதித்து வழி விடுகிறது. ஒரு பிரச்சினை. அதில் எதிர் கொள்ள வேண்டிய விஷயங்கள், பின்னர் ஒரு உடன்பாடு என்று இப்படி இன்றைய மாடர்ன் மேனேஜ்மெண்ட் சிக்கலைத் தீர்ப்பதை, உலகின் ஆதி நூலான ரிக் வேதத்தில் காண முடிகிறது என்று சம்வாதத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் மேலை நாட்டோர் வியந்து கூறுவது பொருள் பொதிந்த ஒன்று.

 

இன்னும் அகஸ்த்யர் – லோபாமுத்ரா; இந்திரன் – இந்திராணி; ஸரமா – பணி; வசிஷ்டர் – சுதாஸ் ஆகியோரது சம்வாதங்களை ரிக் வேதம் விளக்குகிறது.

 

 

Dakshineswar Kali Temple, Kolkata

6

இராமாயணம் தரும் சம்வாதங்கள் அறத்தின் அடிப்படையிலானவை. படிக்க வேண்டியவை.

ராம – லட்சுமணர்;  நாரதர்- ஸனத்குமாரர்; (வால்மீகி ராமாயணம்) வசிஷ்டர் -அருந்ததி (மணிரத்ன ராமாயணம்) அஞ்சனா-ஹனுமான் (ஸௌர்ய ராமாயணம்) ஹனுமான் -சந்திரன் (சாந்த்ர ராமாயணம்) ஆகியவை சுவாரஸ்யமானவை.

சீதை இராமனின் செயலான சமுத்திரத்தில் சேதுவைக் கட்டியது ஏன் என்பதற்கு, பரிந்து கொண்டு லோபாமுத்ரைக்கு விடை தரும் சம்வாதம் மிகவும் சுவையான ஒன்று. பாணத்தால் வற்ற வைத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு நேரும் என்பதில் ஆரம்பித்து ராமர் ஏன் ஹனுமான் போலப் பறக்கவில்லை (அவர் மனிதர் என்பதே காரணம்) என்பது உள்ளிட்ட வெவ்வேறு காரணங்கள் அலசப்படுகின்றன. சமத்காரமாக புதிர் போன்ற கேள்விகளைக் கேட்டவர் சீதையின் பதிலால் மிகவும் திருப்தியுறுகிறார்.

அத்யாத்ம ராமாயணத்தில் இடம் பெறும் உமா-மஹேஸ்வர சம்வாதம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

இறைவனின் திருவிளையாடலில் பொதிந்துள்ள அம்சங்களைக் கண்டு வியக்கிறோம்.

 

7

விநாயக சம்ஹிதாவில் வரும் பார்கவ- ஈஸ்வர சம்வாதம், உமா யாமளத்தில் வரும் ஹரகாரி சம்வாதம், காத்யாயனி தந்திரத்தில் வரும் சிவ- கௌரி சம்வாதம், ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் வரும் புகழ் பெற்ற யாக்ஞவல்க்யர் –  மைத்ரேயி சம்வாதம், நரசிம்ம புராணத்தில் வரும் யம-யமி சம்வாதம், கர்ம விபாக சம்ஹிதாவில் வரும் பார்வதி- சிவ சம்வாதம் ருத்ர யாமளத்தில் வரும் பைரவ-பைரவி சம்வாதம் ஆகியவை ஒவ்வொன்றும் ஆழ்ந்த ரகசியங்களை விளக்கி அருள்பவை.

 

 

8

இன்றைய நவீன கால ஆராய்ச்சியாளர்கள் பிளேட்டோவின் உரையாடலை எடுத்துக் கொண்டு Dialogue எனப்படும் உரையாடலின் மேன்மையை உச்சி மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

 

“Words are events, they do things, change things”  (வார்த்தைகள் நிகழ்வுகளே, அவைகள் அனைத்தையும் செய்யும், எல்லாவற்றையும் மாற்றும்) என்று இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல அமெரிக்க நாவலாசிரியையான அர்சலா கே. லா குவின் (Ursula k. Le Guin) இப்போது சொல்வதைப் பார்க்கும் போது ஏற்கனவே ஆயிரக்கணக்கான அர்த்தமுள்ள உரையாடல்களைக் காலம் காலமாகத் தம் கை வசம் வைத்திருக்கும் ஹிந்துக்களுக்கு புன்முறுவல் தோன்றுவது இயல்பே.

 

முன்னோர்களின் சரித்திரத்தைக் கேட்போம் என்று வரிந்து கட்டிக் கொண்டு முனிவர்கள் நைமிசாரண்யத்தில் குழுமி உரையாடல் மூலம் அனைத்தையும் உணர்த்திய, உணர்ந்து கொண்ட பரம்பரை வழி வந்தோர் நாம்.

 

சம்வாதம் என்பது நமக்கு வாழ்க்கை முறையின் ஒரு சிறந்த அம்சம்.

 

இன்று அதை மறந்து விட்டோம், பல்வேறு குழப்பங்களினால் தவிக்கிறோம் எனில், அதை ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டிய தக்க தருணம் இதுவே.

 

ஒவ்வொரு சம்வாதமாக எடுத்துப் படிப்போம். இனி எந்தக் கேள்வி கேட்டாலும் இதோ பதில் என்று சொல்லும் வலிமையைப் பெறுவோம்; சந்தேக விளக்கத்தின் அடிப்படையில் கிடைக்கும் தெளிவினால்  வாழ்க்கையை அமைத்து வளம் பெறுவோம்.

***

ஞான ஆலயம் பத்திரிகையின் வருடச் சந்தா ரூ360/ 5 ஆண்டுச் சந்தா ரூ1750/ முகவரி: ஸ்ரீ ஆலயம் பப்ளிகேஷன், பழைய எண் 7, புதிய எண்32, அருணாசலபுரம் 2-வது தெரு, அடையாறு,சென்னை 600 020.

 

பாரதி போற்றி ஆயிரம் – 44 (Post No.4702)

Date: 5 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-08 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4702

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

  பாடல்கள் 264 முதல் 272

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

 

சென்னை வாழ்வு,சுதேசமித்திரன் துணையாசிரியர் மற்றும் வ.உ.சி தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஒன்பது பாடல்கள்

 

Picture posted by Bhaskaran Sivaraman

சென்னை வாழ்வு

பணியை ஏற்ற பாரதியார் – அரசவைப்

    புலவராய் மூன்றாண் டுதொண்டேற்றார்!

பிணித்த அன்பால் மூன்றுமாதம் – மதுரை

    சேதுப திஉயர் நிலைப்பள்ளி

பணித்த தமிழா சிரியராக – நற்பணி

    புரிந்து தொண்டு உவந்தேற்றார்!

அணிதவழ் சுதந்தர இயக்கத்தின் – எதிர்ப்பு

    எங்கும் திகழ்ந்தது அடக்குமுறை!

 

அடக்கு முறைகள் நிகழ்ந்ததுகாண் – சென்னை

    சுதேச மித்திரன் ஆசிரியர்

திடமிகு சுப்பிரமணியயர் – பாரதி

    யாரை அழைத்தார் சென்னைக்கு!

கடமை அதுவென பாரதியார் – உணர்ந்து

    கடிது சென்னை சென்றாரே!

நடப்பு உதவி ஆசிரியர் – பணியை

    நாட்ட முடனே ஏற்றாரே!

 

ஏற்றார் எழுத்துப் பணியுடனே – கவியும்

    இயற்றி உணர்ச்சி ஊட்டுவித்தார்!

ஆற்றல் பெற்ற பத்திரிகை – சுதேச

    மித்திரன் அதுவென அறிந்தனர்காண்!

ஏற்ற மிக்க சொற்பொழிவால் – மக்கள்

    இதயந் தன்னைக் கவர்ந்தாரே!

போற்றுதல் பெற்று முதற்பதிப்பு  – “வங்கமே

    வாழிய மித்ரனில் மிளிர்ந்தது காண்!

 

சுதேசமித்திரன் துணையாசிரியர்

 

மிளிர்ந்த பாக்களால் மித்திரனில் – பாரதி

    மக்கள் விழிப்பை மலர்வித்தார்!

களிப்பு மிகுசெய் தியொன்றுகேட்டார் – மூத்தபெண்

    பாரதி யார்க்குப் பிறந்தது காண்!

ஒளிர்ந்த பேச்சால் காசியிலே – கோகலே

    தலைமை யேற்க முழக்கமிட்டார்!

ஒளிதரு காங்கிரஸ் மாநாடு – கல்கத்

    தாவில் நடந்தது பீடுடனே

 

பீடுற நடந்த மாநாட்டில் – தாதா

    பாய்நௌ ரோஜி தலைமையேற்றார்!

நாடியே சென்று உரையாற்றி – கல்கத்

    தாவில் பாரதி பங்கேற்றார்!

ஈடிலா தேவி நிவேதிதாவை – பாரதி

    டம்டம் நகரில் சந்தித்தார்!

பாடிய பாரதி பாக்களெலாம் – மக்களின்

    உணர்வைத் தட்டி எழுப்பினகாண்!

 

எழுப்பிய பாக்களின் மிகைகண்டு – அஞ்சினார்

    சுதேச மித்திரன் ஆசிரியர்!

எழுச்சிப் பாக்களால் இதழுக்கு – தடையும்

    வரக்கூ டுமென்று கூறினார் காண்!

பழுதிலா உதவி ஆசிரியர் – பதவியை

    பட்டென விடுத்தார் பாரதியார்!

விழுமிய நண்பர் திருமலாச் – சாரியார்

    உதவி செய்ய முன்வந்தார்!

 

வ.உ.சி.தொடர்பு

 

முன்வந் துதவிய நண்பராலே – பாரதி

    மாதவத் தொண்டினைத் தொடர்ந்தேற்றார்!

உன்னத “இந்தியா வாரஇதழ் – பாரதி

    உரிமை யோடு நடத்தினாரே!

நன்றே ஏற்றார் வரவேற்பு – “இந்தியா

    நளினம் பெற்று உயர்ந்ததுகாண்!

புன்னகை பூத்து “இந்தியத்தாய் – எங்கும்

    புதுநடை காட்டிப் பவனி வந்தாள்

 

பவனி வந்த “இந்தியத்தாய் – ஒலித்தாள்

    பாரதி சுதேச கீதங்கள்!

அவனி போற்றப் பாரதியார் – முழங்கினார்

    “இந்தியா இதழில் கீதங்கள்!

நவநிதி பெற்றது போலெண்ணி – வஉ

    சிதம்பர னாரும் சென்னைவந்தார்!

அவயம் புகுந்த சிதம்பரனார் – பாரதி

    இருவரும் கட்டித் தழுவினர்காண்!

 

தழுவிய இருபெரும் புரட்சியாளர் – நண்பர்

    தேசத் தொண்டர் கூடினர்காண்!

பொழுதெலாம் சுதந்தரம் வேண்டிநின்றோர் – இருவரும்

    பெட்புடன் தத்தம் வழிசென்றார்!

முழுமூச் சுடனே உழைக்கின்ற – வங்கத்

    தலைவர் விபின்சந் திரபாலை

இழுமென சென்னைக் குஅழைத்து – வந்து

    சொற்பொழி வாற்றப் பணித்தாரே!

                   ( மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

அதிசய மூக்கு ஆபரேஷன்! லண்டன் கண்காட்சி தரும் தகவல்!! (Post No4701)

Date: 4 FEBRUARY 2018

 

Time uploaded in London- 14-56

 

Compiled by London swaminathan

 

Post No. 4701

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

லண்டனில் நடைபெற்றுவரும் ஆயுர்வேதக் கண்காட்சியில் நிறைய புதிய தகல்கள் உள்ளன. 2600 ஆண்டுகளுக்கு முன்னர் சுஸ்ருதர் என்ற மாமேதை சம்ஸ்க்ருதத்தில் மருத்துவ நூலை எழுதினார். இதில் உலகம் வியக்கும் இரண்டு விஷயங்கள் இருந்தன. 1.மனிதனுக்கு செயற்கை மூக்கு பொருத்தும் அறுவைச் சிகிச்சையும் 2. நூற்றுக்கணக்கான ஆபரேஷன் (சர்ஜரி= அறுவைச் சிகிச்சை) கருவிகளின் வருணனையும் எல்லா மருத்துவர்களையும் வியப்பில் ஆழ்த்தின. அது சரி! இவை எல்லாம் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பதற்கு என்ன சான்று? என்று கேள்வி கேட்போருக்கு லண்டன் வெல்கம் (WELLCOME CENTRE) சென்டர், ஆதாரத்தோடு படங்களை  வெளியிட்டுள்ளது.

 

 

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்தியாவை ஆண்ட காலத்தில் மைசூர் போர் நடந்தது. அதில் ஒருவரின் மூக்கு சேதம் அடைந்துவிட்டது. அவர் கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர். அவரைப் பிடித்த மைசூர் வீரர்கள், அவருடைய மூக்கை அறுத்துவிட்டனர். இது பற்றி 1794-ஆம் ஆண்டில் லண்டன் ஜென்டில்மேன் என்னும் பத்திரிக்கை படத்துடன் செய்தி வெளியிட்டது. அதில் சொல்லப்பட்ட தகவலாவது:-  சம்பந்தப்பட்ட ஊழியரின் நெற்றியில் இருந்து கொஞ்சம் சதை வெட்டப்பட்டு அதை மூக்கின் மேல் பதியம் வைத்து செயற்கை மூக்கு உருவாக்கினர். இந்தச் சிகிச்சை நடந்த போது பிரிட்டிஷ் சர்ஜன்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் 1700-ஆம் ஆண்டில் இந்திய சர்ஜரி முறைகள் புத்துயிர் பெற்றன என்று லண்டன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. மேலும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட ஆளின் படத்தையும் வெளியிட்டுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்வரை நம்மவர்கள் இந்த முறையை நினைவிற்கொண்டு அறுவை செய்ததையும் அதைப் பிரிட்டிஷார் பாராட்டி அதிசய செய்தியாக லண்டன் பத்திரிக்கையில் வெளியீயிட்டதையும் வெல்கம் சென்டர் நமக்குத் தெரி விக்கிறது. இதன் காரணமாக சுஸ்ருதர் சம்ஸ்க்ருத மொழியில் விளக்கிய ஆயுதங்களை இரும்பில் செய்து காட்சிக்கும் வைத்தனர்.

 

இந்தியச் செல்வங்களை (HENRY WELLCOME) ஹென்றி வெல்கம் சேகரித்ததோடு பழைய ஆயுர்வேத நூல்களை மைக்ரோபில்ம் (MICROFILM) எடுத்து லண்டனில் சேகரித்து வைத்துள்ளார்.

இத்து தவிர டில்லி பார்மஸி (மருந்துக் கடை) ஒன்றில் இருந்த அனுமன் படத்தையும் கண்காட்சியில் காணலாம். இதில் மயங்கிக் கிடக்கும் லெட்சுமணனைக் காப்பாற்ற, அனுமன் மலையுட ன் பெயர்த்தெடுத்து சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்த படம் இது.

 

ஆயுர் வேத முறைப்படி உடலின் உறுப்புகளையும், இரத்த நாளங்களையும் கா ட் டும் படமும் , அதாவது ஓவியமும் இங்கே உள்ளது. இது குஜராத்தி, சம்ஸ்க்ருதச் சொற்களுடன் இருப்பதால், இந்தியாவின் மேற்குப் பாகத்தில் இருந்து வந்தது தெரிகிறது. சுமார் 300 ஆண்டு பழமையானது இந்த ஓவியம். இது இந்தியர்களுக்கு எந்த அளவுக்கு உடற்கூறு சாஸ்திரம் தெரிந்தது என்பதற்குச் சான்று.

கண்காட்சி ஏப்ரல் 8 வரை உண்டு. ஆனால் திங்கட்கிழமை கண்காட்சி கிடையாது. அனுமதி இலவசம். யூஸ்டன் ஸ்கொயர் ஸ்    டேஷனுக்கு அடுத்த கட்டிடம் வெல்கம் சென்டர்.

 

இன்னும் சில அதிசயங்களை நாளை காண்போம்.

 

–சுபம்–

2600 YEAR OLD ANCIENT INDIAN PLASTIC SURGERY! (Post No.4700)

Date: 4 FEBRUARY 2018

 

Time uploaded in London- 10-03 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4700

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

AYURVEDA EXHIBITION – PART 2

 

Sushruta who lived 2600 years ago in India is the Father of Surgery. He described  over 100 medical instruments. He was famous for nose surgery known as rhinoplasty. The amazing thing about the Nose Surgery is that it was used even 300 years ago in India. A British magazine has described it and the magazine news is displayed in the Ayuevdic man in Wellcome Centre in London (For full details of the Ayurvedic exhibition, please read my article posted yesterday here.

The news item says,

“Cowasjee, a man who had his nose reconstructed with the aid of plastic surgery, stipple engraving by W Nutter, after drawing by J Wales 1795.

 

Among the surgical techniques described in the  Ssruta Samhiat is rhinoplasty, the repair of a severed nose. Variations of this technique have survived in India over the centuries. In 1794, an article in the Gentleman’s magazine of London reported an operation carried out on an employee of the British East India Company who had been captured and mutilated during the Mysore Wars. As witnessed by Company surgeons, a flap of skin incised from the forehead was grafted onto the stump from which a new nose was formed. Such reports heled the resurgence of Indian surgical methods in the 1700s and foreshadowed the modern plastic surgery.

 

Here is another anatomical image from Western India. It has Sanskrit and Gujarati terms for body parts. It is like Persian picture, but the Indian artist had added Chakras and Tantric iconography to the spinal column.

Hanuman bringing the Magical Herb Sanjeevani along with the hill. When Lakshmana was injured, Hanauman was asked to get the Life Giving Sanjeevani herb. Since he could identify the herb he uprooted the entire hill where it is grown and brought it to Lanka.

–Subham–

 

பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? (Post No.4699)

Picture of S Nagarajan in Halabedu, Karnataka, August 2017.

 

Date: 4 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-02 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4699

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நாட்டு நடப்பும் சொந்த அனுபவமும்!

 

பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? எனது சில அனுபவங்கள்!

 

ச.நாகராஜன்

 

 

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் இருப்பவை எனது சொந்தக் கருத்துக்கள்; சொந்த அனுபவங்கள். இது எவரையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளாக்கவோ எழுதப்படவில்லை. நல்ல நோக்கத்துடன் எழுதப்படும் இது எவர் மனதையும் நோக வைத்தால் இப்போதே சொல்கிறேன் – Sorry!)

1

பாராட்டிற்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? நமது தமிழ்நாட்டு ஊடகங்கள் போல் அல்லாமல், அரசியல் கட்சிகள் போல் அல்லாமல் உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டினால் பலன் உண்டு.

தீமையையும் கூட, ஒரு பொதுவான நன்மைக்காகக் கண்டித்தால் பலனுண்டு.

தற்பெருமைக்காக அல்ல; ஒரு இன்ஸ்பிரேஷனுக்காகத் தான் இந்த எனது சொந்த அனுபவங்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

2

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.

சாவியும் மணியனும் ஆனந்தவிகடனிலிருந்து விலகி விட்ட காலம் அது.

சாவி தினமணிகதிர் ஆசிரியப் பொறுப்பை வகித்தார். ஆனால் தினமணி கதிர் வெளியீடு பற்றி வரும் பத்தியில் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் என்றே பதிப்பிக்கப்பட்டிருக்கும்.

ஒரு நாள் தினமணி கதிரைப் பிரித்துப் பார்த்த எனக்கு பகீர் என்றிருந்தது.

ஹலோ ராமச்சந்திரா என்ற தலைப்பில் சாவி ஒரு நகைச்சுவைத் தொடரை ஆரம்பித்திருந்தார்.

அதில் ஒரு படம்.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி டெலிபோன் ரிசீவரைக் கையில் பிடித்திருக்கும் காட்சி.

அன்றாடம் ராமரை வழிபடும் பக்தர்களுக்கு எப்படி இருக்கும்?

மனம் நொந்தேன். அன்றே பல நண்பர்களும் இது பற்றிப் பேசினர். விளைவு, அன்று மாலையே பல பேர் கையெழுத்திட்ட கண்டனக் கடிதம் தினமணி கதிருக்கு அனுப்பப்பட்டது.

அடுத்த வாரம் தினமணி கதிர் வந்தது.

என்ன ஆச்சரியம். பல பக்தர்களின்  மனம் நொந்திருப்பதாகக் கடிதம் வந்ததால் இந்தத் தொடர் இத்துடன் நிறுத்தப்படுகிறது -சாவி என்று அறிவிப்பு வந்தது.

ராம பக்தி ஜெயித்தது!

 

S Nagarajan and S Swaminathan with Great Scholar Dr R Nagaswamy in Chennai, 2017.

 

3

ஏறத்தாழ ஒரு மஞ்சள் பத்திரிகையாகவே தினமணி கதிரை சாவி நடத்திக் கொண்டிருந்தார்.

மிக அருமையான எழுத்தாளரான, மிகவும் (அப்போது) இளைஞரான ஸ்ரீ வேணுகோபாலனை புஷ்பா தங்கதுரையாக மாற்றி ரெட் லைட் ஏரியாவுக்கு அனுப்பி கமலாவின் கதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார்.

வேணுகோபாலன் மிக அருமையான எழுத்தாளர் என்றும் அவரை இப்படிக் கெடுக்கக் கூடாது என்றும் பிரபல மணிக்கொடி எழுத்தாளரும் எனது தந்தையாரின் நண்பருமான கி.ரா. அடிக்கடி என்னிடம் சொல்லி வேதனைப்படுவார். கி.ரா. சிறிது காலம் மதுரையில் எங்கள் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவர் உலக இலக்கியம் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் பேசுவார். அதில் வேணுகோபாலனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்.

இந்த ரீதியில் நடந்த கதிரில் ஒரு நாள் ஜெயகாந்தன் கதை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. (பெயர் நினைவில்லை- ‘சக்கரம்’ என்ற தலைப்பாக இருக்கலாம்!)

அதைப் பார்த்த எல்லோரும் திடுக்கிட்டனர். இப்படி ஒரு ஆபாசமான கதை தினமணி கதிரில் வரலாமா?

பலரும் வெகுண்டனர். நானும், எனது நண்பர்களும் ஆளுக்கொரு போஸ்ட்கார்டில் கண்டனத்தைத் தெரிவித்து ஏ.என்.சிவராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதினோம்.

இப்போது லண்டனில் வசிக்கும் டாக்டர் நாகசுப்பிரமணியன், அவரது சகோதரர் திரு கிரி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

பங்களூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் நண்பர்கள் கண்டனக் கடிதங்களை அனுப்பினர்.

அடுத்த வாரம் ஆச்சரியம்!

தினமணி கதிரில் கடைசிப் பக்கத்திற்கு முன் பக்கம் ஒரு அறிவிப்பு வந்தது. என் நினைவிலிருக்கும் வார்த்தைகளை வைத்துப் பொருள் கெடாமல் அதைக் கீழே தருகிறேன்,.

“இப்படி ஒரு கதை வெளியானதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனி இப்படிப்பட்ட கதைகள் என் பெயரை ஆசிரியராகப் போட்ட பத்திரிகையில் இடம் பெறாது.” ஏ.என். சிவராமன்.

அன்பர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.

விஷயம் இத்துடன் முடியவில்லை.

அடுத்த வாரம் கதிர் வந்தது. அதன் கடைசிப் பக்கத்தில் இதுவரை ஆசிரியர் : ஏ.என்.சிவராமன் என்று இருந்ததற்குப் பதிலாக ஆசிரியர்: சாவி என்று போடப்பட்டிருந்தது.

பின்னர் சில காலம் கழித்து, சாவியும் கதிரிலிருந்து வெளியேறி விட்டார்.

 

 

4

கண்டனத்திற்குப் பலன் உண்டு என்பது எனது அனுபவம். ‘ஜெனியுன்’ – Genuine- என்று சொல்கிறோமே அது முக்கியம்! இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.

இனி பாராட்டிற்குப் பலன் உண்டா, உண்டு.

இர்விங் வாலஸ் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். த்ரீ சைரன், வோர்ட், ஆர் டாகுமெண்ட், பீஜன் ப்ராஜெக்ட், செவந்த் சீக்ரட் – எந்த நாவல் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள், என்னிடம் இருக்கும். கதையும் கிட்டத்தட்ட ஃபிங்கர் டிப்ஸில் இருக்கும்.

எமர்ஜென்ஸி காலம். இந்திராவின் தாங்கவொண்ணா அடக்கு முறை.

மதுரை கொதித்தெழுந்தது. அதில் ஏராளமான அனுபவங்கள். அதைச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல; இடமும் இல்லை.

அப்போது ஆர் டாகுமெண்டில் இர்விங் வாலஸ் சித்தரித்திருந்த சூழ்நிலை இந்தியாவில்.

உடனடியாக ஒரு தற்காலிக சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. மூன்லைட் அசோஷியேஷன் – எம்.எல்.ஏ. (Moon Light Association MLA)

ஆங்காங்கு நண்பர்களின் வீடுகளில் பத்துப் பேர் சேர்ந்தால் போதும். ஒரு கூட்டம் நடைபெறும். அதில் நான் ஆர் டாகுமெண்ட் கதையைச் சொல்வேன். சரியாக ஒரு மணி நேரம்.

மூன் லைட் என்று சங்கப் பெயர் இருந்தாலும் திருப்பரங்குன்ற மலையின் பின்பக்கம் இருட்டிலும் இரவில் இந்தக் கூட்டம் நடைபெற்றதுண்டு. அதில் உருவங்கள் தெரியாது; ஆனால் என் குரல் ஒலிக்கும்.

கூட்டம் கலையும் போது எமர்ஜென்ஸியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு நல்ல உத்வேகம் எழும்.

இப்படிப்பட்ட நாவலை எழுதிய இர்விங் வாலஸைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது.

பாராட்டுவது என்றால் (தர்மத்தை உடனே செய்ய வேண்டும் என்பது போல) உடனடியாகப் பாராட்டி விடுவது என் வழக்கம் -இடம், பொருள், காலம் எதையும் பாராமல்!

 

நண்பர் ஒருவர் – இர்விங் வாலஸ் பைத்தியம்! அவரும் கூடச் சேர்ந்தார்.

வாலஸுக்குக் கடிதம் பறந்தது.

என்ன ஆச்சரியம், ஒரு நாள் நண்பர் ஓடி வந்தார்.

இர்விங் வாலஸ் பதில் எழுதி இருந்தார் – ஒரு போட்டோவும் இணைக்கப்பட்டிருந்தது. அவரும் அவர் மனைவியும் இருந்த போட்டோவில் அவரது கையெழுத்து வேறு.

எங்கள் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த உலகின் மாபெரும் எழுத்தாளர் எங்களைப் பாராட்டி இருந்தது தான் ஆச்சரியம்.

“உங்கள் எழுத்திலிருந்து நீங்களே நல்ல கருத்துக்களை எழுதும் வல்லமை படைத்தவர்கள் என்பதை என்னால் அறிய முடிகிறது.

ஆகவே நீங்கள் தெரிவித்திருக்கும் பொருள் பற்றி நீங்களே எழுத முடியும். ஏற்கனவே பலவற்றில் ஈடுபட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் எனக்குப் போதிய நேரம் இப்போது இல்லை”

அவரது இந்தக் கடிதத்தை நாங்கள் காட்டாத ஆளே இல்லை. (ஆர் டாகுமெண்ட் போன்ற நாவல்களை அவர் எழுத வேண்டுகோள் விடுத்திருந்தோம் எங்கள் கடிதத்தில்)

ஒரே பெருமிதம்.

பாராட்டுக்கு ஒரு பாராட்டு! அது தான் இர்விங்வாலஸ்!

 

இன்னொரு சொந்த அனுபவம்.

எனது தொழிற்சாலையில் நான் ஒரு பொறுப்பு வாய்ந்த மேலாளர்.

காம்பொணண்ட் ஸ்டோர்ஸில் ஒரு இன் சார்ஜ். ஆள் எப்போதும் கடுகடு என்று இருப்பார் என்று எல்லோரும் சொல்வார்கள். எதற்கு இப்படி ஒரு கடுமை, சிடுசிடுப்பு என்று எனக்கும் புரியவில்லை.

ஒரு நாள் ஸ்டோர்ஸுக்குச் செல்ல வேண்டிய வேலை இருந்தது. சென்றேன். அகஸ்மாத்தாக கராத்தே பற்றிய பேச்சு அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.

என்ன விஷயம் என்று கேட்டேன்.

அங்கிருந்த பணியாளர், அவரைச் சுட்டிக் காட்டி ‘சார், இவர் கராத்தே மாஸ்டர் சார்’ என்றார்.

உடனடியாக அவரைப் பார்த்து, “உண்மையா இது” என்றேன்.

சற்று நெளிந்த அவர் தான் அடைந்திருக்கும் மிகப் பெரிய உயரிய நிலையை – பெல்ட் பெற்றதைக்-  காண்பித்தார்.

“இன்னும் அரை மணி நேரத்தில் சாப்பாடு நேரம் வந்து விடும். அப்போது என் மேஜைக்கு வாருங்கள்” என்று சொல்லி விட்டு    (ஒரு மாதிரியான உத்தரவு தான்!) கிளம்பினேன்.

சாப்பாடு நேரத்தில் அவர் சற்று பயந்தவாறு வந்தார்.

(வேலை நேரத்தில் கராத்தே பற்றி பேசியதற்கு கண்டனமோ!?)

“வாருங்கள்” என்று அவரை அழைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரது அனுபவங்களைத் தெரிந்து கொண்டேன்.

பிறகு அவர் கிளம்பும் போது உங்களது போட்டோ ஒன்று நாளை காலை எட்டு மணிக்கு என் மேஜையில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு அவரை அனுப்பினேன்.

அடுத்த மாதம் எங்கள் தொழிலகத்தின் பிரபல இதழில் அவர் பற்றிய பேட்டிக் கட்டுரை ஒன்று அவரது  போட்டோவுடன் வந்திருந்தது.

தொழிற்சாலையில் ஒரு பரபரப்பு. அவரை அனைவரும் நேரில் சென்று பாராட்டினர்.

அவர் சிடுசிடுப்பு அன்றிலிருந்து போயே போயிற்று. பெரும் புகழைத் தாங்க முடியாத அவர் எளிமையான மனிதராக ஆகி விட்டார்.

விஷயம் இத்துடன் நிற்கவில்லை.

எனது ஜாயிண்ட் மேனேஜிங் டைரக்டர் ( அவரைப் பார்ப்பதே சிம்ம சொப்பனம்; என்ன ஒரு கம்பீரம்; ரோட்டரி தலைவருக்கே உள்ள ஒரு கம்பீரம் அது!) தனது அறைக்குள் நுழைந்தவர், பர்ஸனல் மேனேஜருக்குப் போன் செய்து, “ யாரப்பா அது,கராத்தே மாஸ்டர், அவரை என் ரூமுக்கு அனுப்பு” என்று கூற அலுவலகமும் தொழிற்சாலையும் பரபரப்புக்குள்ளாகியது.

பயந்து நடுநடுங்கியவாறே உள்ளே சென்ற சிடுசிடுப்பு நண்பர் மிகவும் பாராட்டப்பட்டு நிஜ கராத்தே வீரராக வெளியில் வந்தார்.

எனக்கு அவர் கூறிய நன்றி வார்த்தைகள் ஒரு புறம் இருக்கட்டும்! அவர் வேலையே பறி போனது.

ஆம், ஜே.எம்.டி, ஸ்டோர்ஸ் இன் சார்ஜ் வேலையிலிருந்து அவரை நீக்கி விட்டார்.

அவருக்கு இன்னும் அதிகப் பொறுப்புடன் கூடிய உயர் பதவியான செக்யூரிடி பிரிவில் வேலை தரப்பட்டது.

எனக்கும் மகிழ்ச்சி; பாராட்டி எழுதிய எழுத்துக்கும் ஒரு மஹிமை இருப்பதைப் புரிந்து கொண்டேன். (பின்னொரு காலத்தில் அவர் துபாயில் இருப்பதாகக் கேட்டு மகிழ்ந்தேன்)

பாராட்டுகளுக்கு மிகப் பிரமாதமான பலன் உண்டு.

ஆயிரமாயிரம் பேர் மனதில் புகழ்ந்தாலும் வெளிப்படையாகச் சொல்பவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்!

அதற்கு ஒரு தனிப் பெருமை உண்டு!

(இந்த சமயத்தில் திரு நஞ்சப்பா அவர்களை நினைக்கிறேன். உடனடியாக பாராட்டி கமெண்ட்ஸ் காலத்தில் தன் கருத்தைப் பதிவிடும் இவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்! இவர் எந்த ஊரோ! என்ன பொறுப்பில் இருக்கிறாரோ – எனக்குத் தெரியாது. இந்த விநாடி வரை!)

இன்னும் பல சுவையான அனுபவங்கள் உண்டு என்றாலும் கூட கட்டுரை நீண்டு விட்டதால் நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது!

சாரம் இது தான்!

மக்களுக்குத் தீங்கு பயக்கும் விஷயங்களைக் கண்டியுங்கள். லெட்டர்ஸ் டு தி எடிட்டருக்கு ஒரு கடிதம் போடுங்கள். பாராட்ட வேண்டியவர்களை – உங்கள் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, சமூக சேவை, எழுத்து உள்ளிட்ட பணியில் ஈடுபட்டவராக இருந்தாலும் சரி, பாராட்டுங்கள்.

பயன் உண்டு சார், பயன் உண்டு!

என் அனுபவம் பேசுகிறது!

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 43 (Post No.4698)

Date: 4 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-13 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4698

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 255 முதல் 263

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

காப்பு மற்றும் முதல் ஒன்பது பாடல்கள்

காப்பு

சகாயமா யிருந்து நமக்கருளும்

    சீல நல்லூர் அனவரதன்

மகாலய செல்வ விநாயக! நின்

    மலரடி போற்றித் துதிக்கின்றேன்!

உகாமை பெற்று உயர்சிறப்பு

    ஏற்க இயற்றிய காவியமாம்

மகாகவி பாரதி அந்தாதி

    மேதினி போற்ற வரந்தருவாய்.

 

இளமைக் கல்வி

அரசவைப் புலவர் சின்னசாமி – துணைவி

   இலக்குமி அம்மை தவப்பயனாய்

விரவிய ஆயிரத்து எண்ணூற்று – எண்பத்

   திரண்டு திசம்பர் பதினொன்றில்

புரட்சிக் கவிஞர் சேயாக – எட்டய

   புரத்தில் பிறப்பெ டுத்தாரே!

கருவிலே திருவும் பெற்றவராம் – பாரதி

   கண்ணிய சுப்பிர மணியனென்பார்

 

மணியெனக் கருவிலே அறிவொளியும் – வீ ச

   மகிழ்ந்து சேயைக் கண்ட பெற்றோர்

கனிந்தே சுப்பையா பெயர்சூட்டி – செல்வனைக்

   குவலயம் போற்ற வளர்த்தனர் காண்

இனிய மழலை சொல்கேட்டும் – சிறுகை

   அளாவிய செயல்கண் டும் உவந்து

புனிதன் சபையில் சிறந்தோங்க – மகனைப்

   பேணி வளர்த்தனர் ஒருங்கிணைந்து

 

ஒருங்கே புலமை மிகவேற்று – புதல்வனும்

   பிதாவைக் குருவாய் ஏற்றான்காண்!

வருந்திச் சிறுவனை ஏங்கவைத்துத் – தாயும்

   விண்ணுல காளச் சென்றார் காண்!

திருவுடன் கல்வியைச் சிறிதுபெற்று – மணியன்

   தொடக்கப் பள்ளியில் சேர்ந்தானே!

அருந்திறல் கண்டு ஆசிரியர் – குழுவும்

   அவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

 

 

உயர் கல்வியும் பட்டமும்

 

புகழ்ச்சீர் இந்துக் கல்லூரி – நெல்லை

   பள்ளியில் தொடர்ந்து பயின்றானே!

அகவை பதினொன் றாகியது – கலைமகள்

   அருளால் கவிகள் படைத்தனன் காண்!

அகந்தை கொண்ட காந்திமதி – நாதன்

   “பாரதி சின்னப் பயல் என்று

உகந்த ஈற்றடிப் பாவொன்று – இயற்றுக

   என்று பலர்முன் கூறினன்காண்.

 

கூறிய வுடனே, “காந்திமதி – நாதனைப்

   பார்! அதி சின்னப் பயல் என்று

வீ றுடன் ஈற்றடி யமைத்துப்பா – ஒன்று

   சுப்பிர மணியன் விடுத்தனன் காண்!

ஆறுதல் பெற்று எதிர்த்தவனும் – அடங்கி

   மணியன் திறத்தைப் போற்றினன் காண்!

ஏறுபோல் கவிதை இயற்றுகின்ற – மணியன்

   இயல்பை வியந்தனர் புலவர்கள்!

 

புலவர் பலரும் ஒருங்குகூடி – அவர்க்குப்

   “பாரதி பட்டம் வழங்கினர் காண்!

குலவிய ஆசு கவியியற்றும் ஆற்றலை

   பாரதி பெற்றுச் சிறந்தனன் காண்!

நலமுற மூன்று நான்கு ஐந்து – படிவம்

   உயர்நிலைக் கல்வி ஏற்றான் காண்!

நிலவிய வயது பதினான்கில் – பாரதி

   ஏற்றார் மணவினை இல்லறமே!

 

 

இளமைத் திருமணமும் அரசவைக்கவியும்

இல்லற மேற்ற செல்லம்மாள் – கடையம்

   செல்லப் பாவின் செல்வமகள்!

செல்லம் மாளின் வயதேழு – சுந்தர

   சற்குண வதியாய்த் திகழ்ந்தனள் காண்!

பல்வள சிறப்புடன் பாரதியும் – குடும்பம்

   பாங்குடன் நடத்திப் பேர்பெற்றார்!

அல்லல் தொழிலில் ஏற்றதந்தை – நோயால்

   அவதி யுற்று அமரமேற்றார்!

 

அமர மேற்றார் தந்தையுமே – அதனால்

   இன்ன லுற்றார் பாரதியார்!

தமது அத்தை குப்பம்மாள் – இளவலை

   காசிக் கழைத்துச் சென்றனள் காண்!

சமர்த்தன் அங்குஜெய் நாராயண  – பள்ளியில்

   சாலக் கல்வி தொடர்ந்தாரே!

அமன்ற இந்தி சமஸ்கிருதம் – மொழியில்

   தேர்ச்சி பெற்றுத் திகழ்ந்தாரே!

 

திகழ்ந்த பல்கலை அலகாபாத் – கழகத்

   தேர்விலும் வெற்றி பெற்றார்காண்!

மிகன்சீர் பாரதி சீர் கண்ட – எட்டய

   புரத்தின் அரசர் அங்கு சென்றார்!

உகந்து பேசி பாரதியை – தம்மூர்

   அழைத்து வந்து உயர்வளித்தார்!

மகிழ்ந்து அரசவைக் கவிஞராக – பாரதி

   எட்டய புரத்தில் பணியேற்றார்

             ( மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

***

 

லண்டனில் ஆயுர்வேதக் கண்காட்சி (Post No.4697)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-58 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4697

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

 

லண்டன் மாநகரில் யூஸ்டன் (Euston or Euston Square) ரயில் நிலையம் அருகில் வெல்கம் சென்டர் (Wellcome Centre) என்ற புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிலயம் உள்ளது. இந்தியாவின் ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகள் தொடர்பான ஏராளமான மருத்துவ பொக்கிஷங்களின் உறைவிடம் இது. இப்பொழுது ஒரு ஆயுர்வேத கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இது ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும். ஆனால் திங்கட்கிழமையில் கண்காட்சி மூடப்பட்டிருக்கும்.

 

 

இந்தக் கண்காட்சி பற்றியும் வெல்கம் என்பவர் யார் என்றும் சில செய்திகளைக் காண்போம்.

ஹென்றி வெல்கம் (1853-1936) என்பவர் அமெரிக்காவில் பிறந்தவர். அவர் லண்டனுக்கு ஒரு மருந்து விற்பனையாளராக வந்தார். பின்னர் ஒரு பெரிய மருத்துவ தொழில் நிறுவனத்தை அமைத்து வெற்றி கண்டார். அவருக்கு வரலாற்றில்– குறிப்பாக மருத்துவ வரலாற்றில்— பேரார்வம் இருந்தது. அவர் ஒரு தர்ம சிந்தனையாளர், ஆராய்ச்சியாளர், பழம்பொருள் சேகரிப்பாளர். ஆகையால் உலகம் முழுதும் குறிப்பாக இமய மலைப் பகுதி மூலிகைச் செல்வங்கள், ஆயுர்வேத நூல்கள் ஆகியவற்றைச் சேகரித்தார். அவர் சேகரித்த நூல்களும், பொக்கிஷங்களும் உலகம் முழுதும் பரவலாக வைக்கப்பட்டுள்ளன. அவர் அமைத்த அறக்கொடை நிறுவனமான வெல்கம் ட்றஸ்ட் (Wellcome Trust) இன்று 70  நாடுகளில் ஆரய்ச்சிப் பணிகளுக்கு நிதி உதவி செய்கிறது.

 

வெல்கம் சென்டரில் எப்போதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களுடன் புதிதாக ஆயுர்வேத கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. பெரிய புத்தகக் கடை, காப்பிக் கடை, நூலகம் ஆகியன இந்த இடத்தின் சிறப்புகள்; எப்போதும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் கூடி இருப்பர்.

 

ஆயூர்வேதக் காட்சியில் நிறைய விஷயங்கள் உள்ளன. சம்ஸ்கிருத பாரசீக, திபெத்திய மொழி நூல்களும் சுவடிகளும் இருக்கின்றன. ஒரு புறம் வீடியோவில் திபெத்திய மூலிகைச் செல்வம் பற்றிய ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். மறுபுறம் சம்ஸ்கிருத ஸ்லோகங்களுடன்  மருத்துவ செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்.

 

2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அவதரித்த சுஸ்ருதர் என்ற மஹா மேதைதான் உலகில் அறுவைச் சிகிச்சையின் தந்தை (Father of Surgery)  என்ப போற்றப்படுகிறார். அவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய விஷயங்கள் உலகப் பிரசித்தமானவை.

 

சுஸ்ருதர் செயற்கை மூக்கு எப்படிச் செய்வது எப்படிப் பொருத்துவது (Rhinoplasty) என்று சொன்ன விஷயங்களும், அவர் வருணிக்கும் நூற்றுக்கணக்கான அறுவைச் சிகிச்சை கருவிகளும் (Surgical Instruments) உலக மக்களை வியப்பில் ஆழ்த்தின. இந்த மருத்துவக் கருவிகள் நம்மிடையே இன்று இல்லாவிடினும், அதன் மாதிரிகளைத் (Replicas) தயாரித்துக் காட்சிக்கு வைத்துள்ளனர்.

 

இந்தக் கண்காட்சிக்கு ஆயுர்வேத மனிதன் என்ற பெயர் சூட்டியதற்குக் காரணமாக அமைந்ததது ஒரு 18ஆவது நூற்றாண்டின் நேபாளி ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட வண்ணம் ஒரு மனிதனின் உடலுறுப்புகள் ரத்த நாளங்கள் வரையப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம் இன்று இந்தியாவுக்கு அப்பாலும் பயிலப்படுகிறது.

கண்காட்சியிலுள்ள வேறு பல சுவையான விஷயங்களைத் தனியாகத் தருகிறேன்.

–Subham–

AYURVEDA EXHIBITION IN LONDON (Post No. 4696)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-05 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4696

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

There is a very interesting exhibition in London Wellcome Centre about Ayurveda, the Indian medical system. This is a free exhibition held until 8 April 2018. It is next to the Euston Square underground. The title given to the Exhibition is ‘Ayurvedic Man—Encounters with Indian Medicine’.

What is in the Exhibition?

Valuable collection of Sanskrit manuscripts, pictures and displays of surgical instruments. There is a beautiful video show of Himalayan herbal wealth.

 

A leaflet about the exhibition explains the title as follows:

“The exhibition sheds light on Sir Henry Wellcome’s historical collections that relate to Ayurveda and Indian medicine and traces how health narratives have been shaped by multiple cultural encounters.

The exhibition takes its title and inspiration from the Ayurvedic Man – an 18th century Nepali painting depicting the organs and vessels of the male body according to classical Ayurveda. It showcases an executive range off material from our collections, including Sanskrit, Persian and Tibetan manuscripts, vibrant gouche paintings and erotic manuals.”

 

 

What is Wellcome Centre?

Ninteenth Century philanthropist Sir Henry Wellcome had enormous interest in medical knowledge around the world. He collected lot of medical antiquities. Now it has become a charitable organisation funding medical research in 70 countries. Their website wellcome.ac.uk has full details of their funding, research and library details.

Wellcome collections include rare Ayurveda, Unani books and microfilms of rare medical books around the world.

Now I will show some of the displays:

Sushruta was the Father of Surgery. He describes a lot of surgical instruments. On the basis of his description, model instruments were created. They are displayed in London exhibition. Sushruta describes rhinoplasty – fixing artificial nose. See the pictures below:-

 

  

The Wellcome Centre has another display by the side of the temporary Ayurveda Exhibition. Henry Wellcome’s profile is displayed there.

Henry Welcome was a man of many parts: entrepreneur, philanthropist, patron of science and pioneer of aerial photography. He also created one of  the world’s great  museums: a vast stockpile of evidence about our universal interest in health and the body.

Henry Solomon Wellcome (1853—1936) was born in a Protestant family in America. He came to Britain as an ambitious salesman and remained, initially to help establish Boroughs Wellcome and Co eventually to build a pharmaceutical empire. He also had a fascination for the past and collected lot of treasures with medical, historical and anthropological interests. Now they are housed in museums and libraries around the world. Here is his picture:

 

 

–Subham–