STORY OF TAMIL DEVADASIS -PART 3, MANIKKAVALLI, MANANTHAI (Post No.6065)

Translated by London swaminathan

swami_48@yahoo.com


Date: 12 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 13-12


Post No. 6065

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

STORY OF TAMIL DEVADASIS -PART 3, MANIKKAVALLI, MANANTHAI (Post No.6065)

பாபிலோனியாவில் பாம்புக் கடவுளும் கீரிக் கடவுளும் (Post No.6064)

Ethapur picture sent by Lalgudi Veda

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 12 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 7-55 am


Post No. 6064

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

-Babylonian Boundary stone

மானிடரை விதி விடுமா, என்ன? (Post No.6063)

Written by S Nagarajan


Date: 12 February 2019


GMT Time uploaded in London – 6-41 am


Post No. 6063

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Snake God and Mongoose God in Babylonia (Post No.6062)

From Babylonia

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 11 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 20-24


Post No. 6062

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Picture sent by Lalgudi Veda from Ethapur

Babylonian Boundary Stone


—subham–

போலி சந்யாசிகளின் முகத்திரையைக் கிழித்த அசோகன் (Post No.6061)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 11 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 8-48 am


Post No. 6061

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஜகதீஷ் சந்திர போஸை ஊக்குவித்த நிவேதிதா தேவி! (Post No.6060)

Written by S Nagarajan


Date: 11 February 2019


GMT Time uploaded in London – 7-57 am


Post No. 6060

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாக்யா 1-2-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு நாற்பத்தி எட்டாம் கட்டுரை : அத்தியாயம் 412

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽அறிவியல் துளிகள் – 412

ஜகதீஷ் சந்திர போஸை ஊக்குவித்த நிவேதிதா தேவி!

ச.நாகராஜன்

      மிகச் சிறந்த இந்திய விஞ்ஞானியான ஜகதீஷ் சந்திர போஸ் (30-11-1858 – 23-11-1937) தனது கண்டுபிடிப்பை உலகிற்கு நிரூபிப்பதற்குள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

    இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதை நிரூபிக்கத் துடித்த பிரிட்டிஷார் அவரை அங்கீகரிக்கவே இல்லை என்பது ஒரு புறமிருக்க அவரை அவமானப்படுத்தினர்; தொல்லை கொடுத்தனர்.

இதிலிருந்தெல்லாம் அவர் மீண்டு வர உத்வேகமூட்டியவர் சகோதரி நிவேதிதை என்பது பலருக்கும் தெரியாது.

மார்கரெட் எலிஜபத் நோபிள் 1867ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதியன்று வட அயர்லாந்தில் ஒரு ஸ்காட் குடும்பத்தில் பிறந்தார். அவரது பத்து வயதிலேயே தந்தையை இழந்தார். படிப்பை முடித்த பின்னர் ஆசிரியையாக உத்யோகம் பார்க்க ஆரம்பித்தார். 1895ஆம் ஆண்டில் அவரது 28ஆம் வயதில் ஸ்வாமி விவேகானந்தரை அவர் சந்தித்தார்; அதிலிருந்து அவர் வாழ்க்கைப் போக்கே மாறிப் போனது. 1898ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் இந்தியா வந்தார். அவருக்கு நிவேதிதை என்ற புதிய பெயரை ஸ்வாமி விவேகானந்தர் சூட்டினார்.

இந்தியருக்கு புதிய உத்வேகம் ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவர் பாரதியார், அரவிந்தர் உள்ளிட்ட பலருக்கும் உத்வேகம் ஊட்டினார்.

ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த விஞ்ஞானி என்பதை அவர் ஆரம்பத்திலேயே நன்கு உணர்ந்து கொண்டார்.

ஆயிரத்தி எண்ணூற்றுத் தொண்ணூறுகளிலேயே ஜகதீஷ் சந்திர போஸ் ரேடியோ டிரான்ஸ்மிஷன் பற்றிய அரிய கண்டுபிடிப்பைக் கண்டார். அத்துடன் தாவரங்கள் வலியை உணரும் சக்தி கொண்டவை என்று அவர் கூறிய போது யாரும் அவரை நம்பத் தயாராக இல்லை.

ஆனால் நிவேதிதை அவரிடமிருந்த அபாரமான அறிவியல் அறிவை நன்கு கண்டு கொண்டு அவரை ஊக்குவித்ததோடு, அவருக்கு பண உதவியும் தங்க இடமும் கூடத் தந்தார்.

1899ஆம் ஆண்டில் பாரிஸில் விவேகானந்தரும் நிவேதிதையும் இருந்த போது ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களைச் சந்தித்தார்.

போஸும் அவரது மனைவி அபலாவும் விம்பிள்டனில் இருந்த நிவேதிதையின் வீட்டில் 1900ஆம் ஆண்டு தங்கி இருந்தனர்; திடீரென்று அங்கு போஸ் நோய்வாய்ப்படவே நிவேதிதையின் தாயார் மேரி நோபிள் தான் அவருக்குத் தேவையான உதவிகளை ஒரு மாத காலம் அவர் நோயிலிருந்து குணமடையும் வரை செய்தார்.

இங்கிலாந்தில் இந்தியர்களை மதிக்காத ஒரு பெரும் ராட்சஸ பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் மோத வேண்டி இருப்பதை உணர்ந்த போஸ் மிகவும் மனம் நொந்து போனார். ரவீந்திர நாத் தாகூர் அவரை மிகவும் போற்றினார்.

லண்டனிலிருந்து 1900ஆம் ஆண்டு லண்டனிலிருந்து தனது மன வேதனையை ரவீந்திர நாத் தாகூருக்கு ஒரு கடிதம் மூலமாகத் தெரிவித்தார்,இப்படி : “ நீங்கள் நான் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்களை அறிய மாட்டீர்கள். உங்களால் கற்பனையே செய்ய  முடியாது. ‘தாவர உணர்வு’ பற்றிய எனது கட்டுரையை சென்ற மே மாதம் ராயல் சொஸைடியில் வெளியிடப்படுவதை வாலர் மற்றும் சாண்டர்ஸன் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் வாலர் அதைத் தனது பெயரில் நவம்பர் மாதம் வெளியிட்டுக் கொண்டார். எனக்கு இத்தன நாள் வரை அது தெரியாமலேயே இருந்தது. நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். பாரதபூமியின் தூசியைத் தொட்டு வாழ்க்கையின் உற்சாகத்தை மீண்டும் பெற இப்போது இந்தியா வர விரும்புகிறேன்.”

 இப்படி மனம் நொந்திருந்த  போஸின் மன நிலையை நன்கு அறிந்து கொண்டு நிவேதிதை, ஆய்வு லாபரட்டரியை அமைக்க அவருக்கு உதவி செய்தார். பிரபல வயலின் மேதை ஓல் புல் -இன் மனைவியும் விவேகானந்தரின் சிஷ்யையுமான சாரா சாப்மன் புல் தந்த நன்கொடை மூலம் இந்த ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டது. நிவேதிதா போஸை விட  ஒன்பது வயது சிறியவர். என்றாலும் கூட 1911இல் அவர் இறக்கும் வரை போஸுக்கு உதவத் தவறவில்லை.

மிகப் பெரிய விஞ்ஞானியாக இருந்த போதிலும் கூட ஸயின்ஸ் ஃபிக் ஷன் எனப்படும் அறிவியல் புனைகதைகளை எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. வங்காள மொழியில் அவர் எழுதிய ‘போலடாக் தூஃபான்’ என்ற  அவரது பிரபலமான கதை எப்படி ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த தலைக்குத் தடவிக் கொள்ளும் எண்ணெய் ஒரு சூறாவளியைத் தடுத்து நிறுத்தியது என்பதை சுவைபடச் சொல்கிறது. எண்ணெயானது புறப்பரப்பு விசையை   (Surface tension) மாற்றி நீரைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பது தான் கதையின் அடிப்படையான கரு. ‘நிருத்தேஷர் கஹானி’ என்ற அவரது நாவல் தான் முதன் முதலாக வங்க மொழியில் எழுதப்பட்ட ஸயின்ஸ் ஃபிக்‌ஷன் நாவல்!

இந்திய துணைக்கண்டத்திலிருந்து விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக முதன் முதலாக ஒரு பேடண்டைப் பெற்றவர் அவரே. பிரபல விஞ்ஞானிகளான டெஸ்லா, மார்கோனி, போபாவ் ஆகியோர்களுக்குச் சமமாக இந்த சாதனையை அவர் நிகழ்த்திக் காட்டினார். எவ்வளவோ பேர் தடுத்தும் கூட அவர் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1920இல் ராயல் சொஸைடிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் அறிவியலில் கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டு என்பதைக் காட்ட க்ரஸ்கோகிராப் (Crescograph) என்ற கருவியை அவர் வடிவமைத்தார். தாவரத்தின் வளர்ச்சியை மிக நுட்பமாக, நுணுக்கமாக இது காட்டும். அதாவது ஒரு லட்சத்தில் ஒரு பங்கு என்ற அளவிற்கு மிக நுண்ணிய அளவில் தாவரத்தின் வளர்ச்சியை இது காட்டியதால் உலகமே வியந்து அவரை ஆச்சரியத்துடன் பார்த்தது. அவரது கருவி  தாவரம் அசையும் போது அதுவும் அசைந்து துல்லியமாக தாவர இயக்கத்தைக் காட்டியது.

எதையும் நேரில் பார்க்க ஆசைப்படும் பெர்னார்ட் ஷா ஒரு முறை அவரது சோதனையைப் பார்க்க வந்தார். ப்ரோமைட் கரைசலில் முட்டைகோஸ் இலையைப் போடும் போது அந்த விஷக் கரைசலில் அது துடிதுடிக்க ஆரம்பித்ததைப் பார்த்த பெர்னார்ட் ஷா அந்த பயங்கரத்தைப் பார்க்க முடியாமல் வேதனைப் பட்டார்; சோதனையை எண்ணி ஆச்சரியப்பட்டார்.

போஸின் வாழ்க்கை இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் ஒரு உன்னத வாழ்க்கை. அவரது பெருமைக்குத் தக்க அளவில் அவரை இந்திய நாடு இன்னும் அதிக அளவில் போற்றவில்லை என்பது  வருந்தத் தக்க ஒன்றாகும்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

காட்டு வளத்தைக் காக்கும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலரான ஜேன் குட் ஆல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண்மணி.(Jane Goodall – பிறப்பு :3-4-1934 – இப்போது வயது 84). சிம்பன்ஸிகளைப் பற்றி முழுதுமாக ஆராய்ந்து இவர் சேகரித்திருக்கும் தகவல்கள் அனைவரையும் வியக்க வைக்கும். 1957ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவிற்குச் சென்ற அவர் ஆராய்ச்சியாளராகச் சென்றார்;திரும்பி வந்த போது காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற சுற்றுப்புறச் சூழ்நிலை ஆர்வலராக வந்தார். மனிதனுக்கு மட்டுமே கருவிகளை உபயோகப்படுத்தத் தெரியும் என்பது தவறான கருத்து என்பதை அவர் ஆணித்தரமாகச் சொல்கிறார். ஒரு  முறை ஒரு சிம்பன்ஸியை அவர் பார்த்துக் கொண்டிருந்த போது அது ஒரு மரக்கொப்பை உடைத்து அதை வைத்து இலைகளை ஒவ்வொன்றாக சீவி எடுத்துக் கொண்டிருந்தது. ஆக சிம்பன்ஸிகளுக்கும் கருவியைச் செய்து உபயோகப்படுத்தத் தெரியும் என்பதை அவர் கண்டார்.மேலும் மேலும் ஆராய்ந்து சிம்பன்ஸிகளைப் பற்றிய வியக்க வைக்கும் சுவாரசியமான அனைத்து விவரங்களையும் உலகிற்கு எடுத்துரைத்தார். சிம்பன்ஸிகளுக்காக ஒரு நிறுவனத்தையே தான் நிறுவியதோடு அவற்றைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறார். இதற்காகத்  தொடர் சுற்றுப் பயணம் செய்யும் அவர் வருடத்திற்கு 300 நாட்கள் பயணத்தில் இருப்பதாகவும் கடந்த 20 ஆண்டுகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரே படுக்கையில் தான் படுத்ததில்லை என்றும் சொல்கிறார். In the Shadow of Man என்ற அவரது நூல் உலகளாவிய அளவில் பேசப்படும் ஒரு சிறந்த நூலாகி விட்டது. இந்த முதிய வயதிலும் அவர் வனப் பாதுகாப்பில் காட்டும் ஆர்வம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் ஒன்று!

****

Swami’s English Cross word 1022019 (Post No.6059)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 10 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 21-04


Post No. 6059

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across

1. Cowherd Krishna’s caste

4. – one of Vishnu’s 12 names beginning with letter M

6. – King who was scared of Krishna even before Krishna was born

7. -means gem  stone;, jewel Nine are famous;another word for ratna; boy’s name

Down

1. -repeated words with different meanings in poetry

2. a-greatest compiler in hinduissm

3. fire sacrifice

5. – self control in Sanskrit

Answers

Across

Yadava- Cowherd Krishna’s caste

Madhava- one of Vishnu’s 12 names beginning with letter M

Kamsa- King who wasscred of Krishna even before Krishna was born

Mani-means gem  stone;, jewel Nine are famous;another word for ratna; boy’s name

Down

Yamaka-repeated words with different meanings in poetry

Vyasa-greatest compiler in hinduissm

Yajna- fire sacrifice

Damam- self control in Sanskrit

–subham–

Chinese Dragon Dance in London (Post No.6058)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 10 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 19-08


Post No. 6058

Pictures shown here are taken by London swaminathan((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Chinese New Year – the Year of Pig – occurred on 5th February 2019. Chinese community with the support of Mayor of London held big events on 10th February in China Town and Trafalgar Square in London.  Year  of the Dog is over. Now this is the Year of Pig.

I saw the Dragon dance done by two groups. The men in dragon disguise went one shop to another and danced in front of the shops or buildings. They provided the dragon fruits and vegetables. During the dance the dragon man threw the fruits and lettuce on the sponsor.

Unlike other cultures Chinese consider dragon an auspicious symbol. At one time there were even rules that the emperor’s dress should have nine dragons embroidered on it.

Chinese dragon looks like a snake dragon but with a combination of different animal parts such as crocodile. People welcome it when the dancing dragon visited them.

In China town in London, there were thousands of people today to see the dragons and other tableaus in the parade. I have taken videos and uploaded them in You Tube Under Chinese New Celebrations held on 10 February 2019. I attach some pictures with this write up.

–subham–

பரி, கரி, அரி, நரி, மறி, கிரி, சுரி, வரி (Post No.6057)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 10 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 10-50 am


Post No. 6057

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


அரி-குரங்கு, சிங்கம்

மூளை ஆற்றலைக் கூட்டச் சில வழிகள்!(Post No6056)

Written by S Nagarajan


Date: 10 February 2019


GMT Time uploaded in London – 9-32 am


Post No. 6056

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் மாத இதழில் ஜனவரி  2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

எளிதான வழிகள் மூலம் மூளை ஆற்றலை மேம்படுத்துங்கள்

மூளை ஆற்றலைக் கூட்டச் சில வழிகள்!

ச.நாகராஜன்

மூளையைப் பற்றி அறிவியல் விஞ்ஞானிகள் ஆராய ஆராய அவர்களுக்கு வியப்பு தான் மேலோங்குகிறது. நூறு பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) இணைப்புகள் உள்ளன என்று கூறி அவை எப்படி ஒன்றுடன் ஒன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன என்பது பிரமிக்க வைக்கும் ஒரு விஷயம் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த மூளை ஆற்றலை மேம்படுத்த வழிகள் உண்டா என்ற கேள்விக்கு உண்டு என்றே அறிவியல் பதிலைத் தருகிறது. சில வழிகளை இங்குக் காண்போம்: முதலாவது எளிய வழி : மூளை ஆற்றலை மேம்படுத்துவது எப்படி என்பது சம்பந்தமான ஏராளமான புத்தகங்கள் வெளியாகியுள்ளன; கட்டுரைகளும் ஆயிரக் கணக்கில் படிக்க உள்ளன. பணம் கொடுத்து வாங்க முடிந்தோர் இவற்றை வாங்கிப் படித்து முன்னேறலாம்; இல்லை என்றாலும் கவலை இல்லை; அவ்வப்பொழுது நூலகங்கள் சென்று இந்தப் புத்தகங்களைப் படிக்கலாம்; அல்லது இணையதளத்தில் உள்ள ஏராளமான வலைத் தளங்களில் பல ஆக்கபூர்வமான யோசனைகளைப் படிக்கலாம்; அவற்றைக் கடைப்பிடிக்கலாம்.

இரண்டாவது வழி: ஸ்பீட் ரீடிங். வேகமாகப் படிப்பது, குறிப்புகளை உடனுக்குடன் எடுப்பது என்ற அணுகுமுறை உங்களுக்கு இரட்டிப்பு மடங்கு அறிவைத் தரும். மூன்றாவது வழி : இது யோகா வழி. யோகம் கூறும் சுவாசப் பயிற்சியைக் கற்றுக் கொண்டால் மூளை ஆற்றல் மேம்படும். எப்படி? ஆழ்ந்து சுவாசிப்பதால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அதிகமாகிறது; அதுவே மூளைக்கு அதிக ஆக்ஸிஜனைத் தருகிறது.மூக்கினால் ஆழ்ந்து சுவாசித்தால் உங்களின் உதரவிதானம் நன்கு விரிவு படுவதை நீங்களே உணர முடியும். அதன் மூலம் அதிகமாக சுவாசக் காற்று உங்கள் நுரையீரலைச் சென்றடைவதையும் நீங்கள் அறிய முடியும். பலமுறை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதால் மனத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கம் போய் ஒரு ஓய்வு உணர்வு உங்களுக்கு ஏற்படும். இந்த அருமையான உணர்வு உங்கள் மூளையைத் திறனுடன் சிந்திக்க வைக்கும். நல்ல சிந்திக்கும் ஆற்றலே முன்னேற்றத்திற்கு வழி அல்லவா! அதைப் பெற முடியும்! அடுத்து நான்காவது வழி யோகா கூறும் தியான முறை : கண்களை மூடிக் கொண்டு உங்கள் சுவாசத்தைக் கவனிப்பது நல்ல ஒரு வழி முறை. தசைகளை இறுக்கி விட்டு அதை தளர்ச்சி அடையச் செய்வதும் ஒரு நல்ல வழிமுறை. மனம் அங்கும் இங்கும் அலை பாய்ந்தால் மீண்டும் அதை உங்கள் சுவாசத்தை நோக்கிக் கவனிக்க வையுங்கள்.கவன சக்தியும், ஒருமுகக் குவிப்பும் அதிகமாக இதுவே நல்ல வழிமுறை! ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தினமும் இதைச் செய்தால் மனம் தெளிவாகும். பல பிரச்சினைகளுக்கு அறிவார்ந்த தெளிவான முடிவுகளைக் காண முடியும்.



அடுத்து ஐந்தாவது வழி : எப்படி உட்கார்கிறோம் என்பதும் முக்கியம் தான்! உடலின் நிலை உங்களின் மூளை ஆற்றலை – சிந்திக்கும் திறனை நிர்ணயிக்கிறது. உதாரணத்திற்கு உங்களை நீங்களே ஒரு சிறிய சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். கடினமான ஒரு கணக்கை எடுத்துக் கொண்டு கூரையையும், ஜன்னலின் வழியாக வெளிப்புறங்களையும் பார்த்துக் கொண்டு, படுத்துக் கொண்டு செய்து பாருங்கள்; அந்தக் கணக்கு முடியாது; ஆனால் அதே சமயம் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கண்களைக் கூர்மையாக அதன் மீது பதித்துக் கொண்டு கணக்கை ஆரம்பியுங்கள். எளிதில் முடிந்து விடும். இப்படி உடல் நிலைப்பாடு எதிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆம், பாடி லாங்க்வேஜ் முக்கியமே! அடுத்து ஆறாவது வழி:  Phosphotidyl Serine (PS)  மீது கவனம் செலுத்துங்கள். இந்தத் துணை மருந்து கற்கும் ஆற்றலை அதிகப்படுத்துவதாக மருத்துவ சோதனைகளும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன். நினைவாற்றல் குறைப்பாடுகளையும் இது நீக்குகிறது. பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. ஆகவே இதைப் பயன்படுத்தலாம். அடுத்து ஏழாவது வழி: வல்லாரையைச் சிறிதளவு அன்றாடம் சாப்பிடலாம். இந்த அரிய மூலிகை மூளை ஆற்றலை மேம்படுத்துகிறது; நினைவாற்றலை அதிகரிக்க வைக்கிறது. இது எந்த ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். பிரம்மி என்று சம்ஸ்கிருதப் பெயரைக் கொண்ட இது பிரம்மி டானிக்காகவும் மாத்திரைகளாகவும் கிடைக்கிறது. வல்லாரை சூட்டைக் கிளப்பும். ஆகவே ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுகி எப்படி எப்போது எந்த அளவில் சாப்பிடலாம் என்பதைக் கலந்து ஆலோசித்து இந்த அரிய மூலிகையைப் பயன்படுத்துங்கள். அடுத்து எட்டாவது வழி: சிந்தனை ஆற்றலை மேம்படுத்தும் நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ரூபிக் க்யூப் (Rubik’s Cube) போன்ற சில பிரச்சினை தீர்க்கும் விளையாட்டுக்களை சில வாரங்கள் பழகிப் பாருங்கள். எதையும் ஒரு புதிய அணுகுமுறையுடன் பார்க்க இந்த சிந்தனை பழக்கங்கள் வழி வகுக்கும். பழக்கத்திற்கு உள்ள அபார பலத்தின் காரணமாக நாளடைவில் பிரச்சினைகளைத் தீர்க்கும் உங்கள் அணுகுமுறையே நல்ல முறையில் மாறி விடும். அடுத்து ஒன்பதாவது வழி :டெட் டைம் அல்லது வேஸ்ட் டைம் எனப்படும்  (Dead Time and Waste time) பயன்படுத்தாத நேரம் பற்றிக் கவனியுங்கள். காரில் அல்லது பஸ்ஸில் செய்யும் போது நீங்கள் சும்மா உட்கார்ந்திருப்பீர்கள். மணிக்கணக்காக டாக்டரின் டிஸ்பென்ஸரியில், அரசு அலுவலங்களில், வங்கியில் இன்னும் இது போன்ற இதர இடங்களில் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கும் நேரங்களைக் கணக்கில் எடுங்கள். குறைந்த பட்சம் ஒரு வருடத்தில் 200 மணி நேரம் இப்படிச் செலவிடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் திட்டமிடுங்கள். புத்தகம் படிப்பது அல்லது புத்தகத்தை ஆடியோ டேப்பில் கேட்பது என்பதிலிருந்து நூற்றுக்கணக்கான பயனுள்ள வழிகளை நீங்களே தொகுக்கலாம்; அதைப் பயன்படுத்தலாம்.


அடுத்து பத்தாவது வழி: புதிதாக ஒரு மொழியைக் கற்பது. இது வயதாகும் போது ஏற்படும் மூளை ஆற்றல் குறைபாட்டை நீக்க வல்லது. புதிய பரிமாணங்களை அறிய இது வழி வகுக்கிறது. இது ஒரு நல்ல மூளைப் பயிற்சி. தமிழில் முகம் இல்லை என்று சம்ஸ்கிருதம் அறிந்தோர் சொன்னால் அதைச் சொல்ல உனக்கு வாய் இல்லை என்று நீங்கள் கூற முடியும். (இந்த இரு மொழிகளை அறிந்தால் தானே இப்படிச் சொல்ல முடியும்) ஆங்கிலத்தில் afraid. ஸ்பெயின் மொழியிலோ fear! அடுத்து பதினொன்றாவது வழி எழுதுவது. எதையும் எழுதிப் பார்ப்பது பல வழிகளில் உங்கள் மனதை மேம்படுத்துகிறது. எது முக்கியம் என்பதை இது புலப்படுத்துவதோடு மட்டுமின்றி மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருவதை எளிதாக்கவும் எழுதும் முறை பயன்படுகிறது. படைப்பாற்றல் திறனையும் இது ஊக்குவிக்கிறது. டயரி எழுதுவது, நல்ல பல விஷயங்களைக் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்வது, கவிதை எழுதல் அல்லது பிடித்தமான கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்தல் என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். செலவே இல்லாத எளிய இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள்; ஒரு சில மாதங்கள் சென்ற பிறகு உங்களை நீங்களே மதிப்பீடு செய்யுங்கள். எப்படி மூளைத் திறனைக் கூட்டியுள்ளீர்கள் என்பது உங்களுக்கே தெரியவரும். உங்களுடன் பழகும் இதர நண்பர், உறவினர், குடும்பத்தினர் உங்களின் ஆற்றல் திறனை வியப்பது ஒரு போனஸும் கூட!   *****