
Post No. 9065-A
Date uploaded in London – –22 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
TODAY SUNDAY 20-12-2020 FROM LONDON
TODAY’S AGENDA ON ‘THAMIL MUZAKKAM’ (Tamil Thunder)
BROADCAST (PART OF GNANAMAYAM CHANNEL)
ENGINEER MISS Mahisa FROM PARIS- – PRAYER
MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON SRIRANGAM TEMPLE
THIRUPPUGAZ-BY MRS JAYANTHI SUNDAR GROUP with Vidula and Mrs Harini Natarajan ,Mrs Charumathy Ramakrishnan and Mrs Geetha Ramesh
CHENNAI Ranjani Dasarathy – Song-on SRI ANJANEYA COMPOSED BY S SURIYA NARAYANAN
Ranjani Dasarathy song | |||
Lyrics and music composition by
Chennai S.SURIYANARAYANAN.
பாடுபவர்
Chennai திருமதி.ரஞ்சனி தாஷரதி
ராகம்.சுத்த தன்யாஸி
Dr V S Mani OF AMERSHAM INTRODUCING POET NARAYANAN OF LONDON
Narayanan Kavithais READ BY VAISHNAVI —
CHENNAI LAXMI RAMESH’S SONGS OF BHARATI IN NEW RAGAS
MR NAGARAJAN TALK- ON FLOWER MEDICINES
DUBAI VIDHYA PRESENTS BHARATIYAR EPISODES
MRS HARINI RAGHU OF LONDON – NEW BHARATI SOG IN NEW RAGA-
XXXX
PRODUCER- LONDON SWAMINATHAN
— CO PRODUCED BY MRS VAISHNAVI ANAND AND SRI KALYANASUNDARA SIVACHARYA
EVERY SUNDAY FOR TAMIL
EVERY MONDAY FOR HINDUISM
XXX
SAME TIME ONE PM LONDON TIME;
6-30 PM INDIAN TIME
XXX
WHERE ? AT FACEBOOK.COM/GNANAMAYAM
Facebook.com/gnanamayam
XXX
WHAT IS NEW?
CHILDREN AND STUDENTS SPECIAL PROGRAMME- DECEMBER 25, 2020
XXX
GLOBAL RUDRA CHANTING – ON JANUARY 2, 3 NEXT YEAR 2021
XXX
INTERNATIONAL BHARATI CENTENARY MEMORIAL COMMITTEE FORMED; PLEASE JOIN US.
SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.
(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.)
54 BHARATI SONGS RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021.
XXXX
V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE AT FACEBOOK.
IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.
SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY
THANKS FOR UR GREAT SUPPORT.
XXX













POEMS BY DR A.NARAYANAN
பாரதிக்கோர் அஞ்சலி
தீக்குள் விரலை விட்டுக் கரி எடுத்துப்
பாரதிரும் கவிதை தீட்டியோனே பாரதி
போருணர்ச்சிப் பொழிவ தவன் மொழி
சமூகக் கூச்சலே அவன் கவிதையின்
பேரிரைச்சலாய் சாதி இரண்டொழிய
வேரில்லையெனப் பறைச் சாற்றிக்
கோத்திரம் கேட்டாலாத் திரமடைந்து
முப்புரி நூலோ மூவர்ணத் துரிமை
யென சரித்திரம் படைத்தோனுக்கு
தரித்திரமே உதாரமென வறு மைக்கு
வருமானம் புலவன் வறுமையே என
வருத்தமடையா இவன் புலவன் எனில்
புரவலனே, ஐய்யோ! என்னே!
காலனின் கணிசம் இவன்
கொண்ட ஆயுளிலும் வறுமை
நாராயணன்
14-12-20
XXXX
ஆண்டாள் திருவடிகளே சரணம்
பாவை
பைந்தமிழில் பரந்தாமன் புகழ்பாடி
வைய்யத்து வாழ்வோர்க் கெல்லாம்
உய்யவழி ஓங்கியுல களந்த
உத்தமனான மாயன், வடமதுரை
மைந்தனாய் ஆலவாய் அழகனாய்
ஆழியும் சங்குமேந்தியப் பாழியந்
தோளுடைய பற்பநாபனாய் நின்று
மாதங்களில் மார்கழியான மாதவன்
பேர்த்தொடுத்தப் பா மாலையே
சூடிக்கொடுத்த சுடர் கொடியின்
பூமாலையில் மொய்ந்த தேனீக்களின்
ரீங்காரமாய் ஒலிக்க வேதமோவெனக்
கனவுலக் கன்னியின் காவிய
நாயகன் நித்திரை கலைய
சொல்லழகுச் சோலையில் சொர்க்கம்
ஒவ்வா ஆனால் ஒவ்வுவதோ
அரஙகன் திருவடியே தன்
முடியென முறை யிட்டோளை
முத்தாரமாய்க் கொண்ட முகுந்தனை
யடையக் கோதை நூற்றப்
பாவை நோன்பே மார்கழித்
திங்களையே மதி நிறைந்த நன்னாளாக்கும்
நாராயணன்
XXXX
பாரதமா இந்தியாவா?
ஒலி தந்த வேதத்தால் விண்ணுக்கு ஒளிதந்து
ஓங்கி உயர்ந்து நின்றதோர் தேசமே பாரதமின்று
இந்தியாவெனப் புனைப்பெயராய் புகுந்தப்பரதேசிகள்
இட்ட திருநாமம் சரித்திர சதியில் விளைந்த விபரீதம்
உள்ளத்துயர்ந்த முனிவர்களும் யோகிகளும் விண்வெளி
ஒலிக்குச் செவிசாய்த்து ஞானத்தாலறிந்ததே வேதமெனும்
தகவல் களஞ்சியம் மானுட வாழ்வு வளம்பெற்றோங்க
குறையிலாத்தகவல்களை நிறைவாய் மறைவாயீன்றது
எண்ணுமெழுத்தும் கண்ணென கணித சாத்திரத்தில்
அதுவின்றி ஓரியலும் ஓங்காதென எண்களும்
எண் இலக்கும், பூஜ்ஜியமும் கணிதத்தின் ஆதி
பகவனாக அவதாரமெடுத்தது அன்றைய பாரதத்திலே
நவீன வானியல் வல்லுனர்கள் தொலை நோக்கிக்கருவி
கொண்டறிந்த கிரகங்களின் சுழற்சியும் காலளவும் கருவி
இன்றியே என்றோ துல்லியமாக கணக்கிட்டப் பண்டைய
பாரதவானியல் மேதைகளினடிச்சுவடுகளே பஞ்சாங்கம்
நுண்ணறிவில் நுகர்ந்த என்ணற்றச்சிந்தனைச்சிற்பிகள்
தோற்றுவித்த வேதாந்த வாத ஞானமும் விஞ்ஞானத்தில்
இன்று காணும் உண்மைகளென்றோ நம்முன்னோரறிய
ஆய கலைகள் அறுபத்தி நான்கெனக் கைத்தொழிலாயின
ஆயுர்வேதமருத்துவமு மாயுத சிகிச்சையும் சீரோங்க
தனுர்வேதம் தந்ததோ போரின் சூழ்நிலைக்கேற்ற பல
ஆயிரகணக்கானப்கைவரை ஒரே பாணத்திலழிக்கும்
அத்திரப்பிரயோகமரிந்ததுமன்றைய பாரதமே
வேத நெறியே நாடாள நன்னெறியென எழுந்தோங்கிய
இதிகாசம் போற்றும் பல பேரரசுகளில் நால் குலத்தோர்
நலமுடன் நன்னெறி வாழப் புள்ளுயிர்காக்கத் தன்னுடல்
புலாலீன்ற புரவலனாண்ட நாடே பாரதம்
சிந்துப்பள்ளத்தாக்கு நாகரீகம் சிந்தனைக்கு மீறிய
இருக்வேத கால நாகரீகம் வளமை கண்டிரு ந்தும்
அன்னியன் கற்பித்த சரித்திரமோ ஆரியனெனும்
அன்னியன் ஆக்கிரமிப்பில் தோன்றிய நாகரீகமாம்
ஆரியனெனும் சொல் அறமும்,அன்பும் பண்பும்
படைத்தோ னெவனுக்கும் பொருந்தும் ஆனால்
பொருந்தாதோ ஆரியன் புறம் குடி புகுந்த இன
மென்ற அன்னியனுருவாக்கிய சரித்திரமே .
தொடரும்
Dr A.நாராயணன்

—subham–
tags – Dr Narayanan poems, Thamil Muzakkam201220,