Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -58 Tamil and English Words 2700 Years Ago- Part 58
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -58
பாணினி எழுதிய அஷ்டாத்யாயியி (அஷ்ட அத்யாய = எட்டு அத்தியாயங்கள்) உள்ள நூலில் ஆறாவது பகுதிக்கு வந்துவிட்டோம்.
Panini 6-1-3;6-1-4
Doubling rules
In modern days Sandhi/ joining letters or words/ rules exist only in two ancient languages -Sanskrit and Tamil
Doubling rules discussed in these sutras exist in Tamil as well, but I must add that the rules are not same.
If I want to add kan +Aadi, I have to add one more n to kan and form Kannaadi= mirror or specs.
If I don’t add’ n’ , it will be Kanaadi.
In short doubling rules exist in only these two ancient languages EVEN TODAY.
இரட்டிப்பு விதிகள்.
உலகில் சந்தி விதிகள் இன்றும் பின்பற்றப்படும் இரண்டே மொழிகள் ஸம்ஸ்க்ருதமும் தமிழும்தான் .
தமிழிலும் சம்ஸ்க்ருதத்தில் சந்தி விதிகள் வெவ்வேறானவை. ஆனால் சொல்லோ எழுத்தோ புணரும்போது அவை மாறும் என்பது பொதுவிதி. திராவிட மொழிக் குடும்பம் என்பது வேறல்ல. ஸம்ஸ்க்ருதமும் தமிழும் ஒரே மூலம் உடையவை என்பதை அறிய வேண்டும்.
கண் + ஆடி என்பதை கணாடி என்று எழுத முடியாது. கண் +ண் +ஆடி = கண்ணாடி என்றுதான் எழுத முடியும் இங்கே ‘ண்’ என்பது இரட்டித்தது. இது போல விதிகளை இன்றும் சம்ஸ்க்ருதத்தில் காணலாம். தொல்காப்பியத்துக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த பாணினீயத்தில் இதைக் காண்பது சிறப்புடைத்து.
XXX
6-1-6
Jaag= wake, ஜாக்ர = விழிப்பு
Wake up is derived from Jaag
Darithra = poor தரித்ர /ஏழ்மை
Indian languages use this until today.
Xxx
6-1-12
சர சர, சல சல
Words are doubled in both the languages
Varttika adds
Saraasara, chalaachala are examples
Bull they can be used without doubling too
Chara, chala
In Tamil also this is same,
Avan ododi/ Odi+ Odi/ vanthan.
ஓடோடி = ஓடி, ஓடி
We can even say Avan Odi ஓடி vanthaan
Avan azuthu azuthu kan sivanthathu
அழுதழுது கண் சிவந்தது.
அழுது , அழுது
Or simply Avan azuthu அழுது kan sivanthathu
பட பட என்று வெடித்தது. நெஞ்சு பட பட என்று அடித்துக் கொண்டது.
பிற மொழிகளில் பேச்சு வழக்கில் வந்தாலும் இலக்கிய நடையில் வராது.
தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் மட்டுமே இதைக் காணலாம். இதற்கு தமிழுக்கும் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி விதி இயற்றியது குறிப்பிடத்தக்கது.
Xxx
6-1-14
Bandhu = relative
Bond is derived from this; also binding; bound; bundle etc
பந்து = சொந்தக்காரன் ; பந்த பாசம்;
Xxx
6-1-16
Grah= paani grahanam = holding hands = wedding
Grah = solar eclipse = surya grahana
Grah = grip= grab
கிரஹ = பிடி
பாணி கிரஹணம் – கைப்பிடித்தல்
சூரிய கிரஹணம்
Way = weave, வேய்
Vrus = vettu in Tamil வெட்டு
Prasj = fry வறு
ப = வ
Xxx
6-1-20
Vas = wish
Xxx
6-1-24
Drava = liquid
திரவ
Drava= drip, drop
Xxxx
6-1-25
Prates = freeze = solidify
freeze- விறை
ப= வ
Xxx
6-1-47
Spurati= spur
ஸ்புரதி – துடித்தல்
Xxx
6-1-82
Kravya – to sell
In Tamil Kirayam Selling is used even in villages
கிரவ்ய = கிரயம் = விலை பேசுதல், விற்றல் .
இப்போதும் கிராமத்தில் கூட நிலத்தை ……. க்கு கிரயம் பேசினான் என்பதைக் கேட்கலாம்.
Xxx
6-1-87
Commentators give an example
Karabauru= thighs like the trunk of an elephant
Karaba =elephant = kari in Tamil
Kara =chiro= kai in Tamil
கரபோ ரு = யானையின் துதிக்கை போன்ற தொடை
கரப = யானை = கரி = யானை
கரப= கையினால் தண்ணீ ர் குடிக்கும் பிராணி
கை = கைரோ = கிரேக்க மொழியிலும் கை என்ற சொல்லே உள்ளது.
இது சம்ஸ்க்ருத தொடர்புடையது.
கிரேக்க மொழியில் உள்ள சொல் தமிழிலும் இருக்கிறது. அதன் மூல வடிவம் ஸம்ஸ்ருதத்தில் உளது
Xxx
6-1-89
Varttika adds vrddhi and that becomes Vathi in Tamil
Tion = Sion in English
ட = ஷ
ஆங்கிலத்தில் டியன் என்று ஸ்பெல்லிங் இருந்தாலும் உச்சரிப்பு = ஷன்
இது சம்ஸ்க்ருத விதிப்படியானது.
ரிஷப = இடப வாகனம் = ஷ = ட
It is from Panini sutra
Vrusabha = Rishabha = Idabha in Tamil
Here we see sha =da; Sion =Tion
Xxx
6-1-94
Ushta = uthadu in Tamil
Ushtra = Animal with prominent lips = camel
Ushtra = Ottai =Ottakam in Tamil
ஏற்கனவே சொல்லிவிட்டேன் உதடு= உஷ்ட்ரா= ஓட்டை= ஒட்டகம்
உதடு பிராணி – உஷ்ட்ர = ஓட்டை= ஒட்டகம்
Xxx
6-1-95
Om or Aum
ஓம்
தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் ஒரே விளக்கம் அ + உ +ம
இசை நயம் மிக்க உணர்ச்சி கொப்பளிக்கும் சிறிய பாடல்களை ஆங்கிலத்தில் லிரிக் LYRIC என்பர். அவைகளை எழுதுவதில் அதி சமர்த்தர் டென்னிசன்; அவருடைய யுலிஸிஸ் ULYSSES கவிதையைப் படித்தவர்களுக்கு இது புரியும்
ஆல்ப்ரெட் டென்னிஸன், ஒரு கிறிஸ்தவ மத போதகரின் மகன். அவரே அவருக்குக் கல்வி கற்பித்தார். கவிதைகள் பற்றி ஆர்வத்தையும் உண்டாக்கினார். இதனால் அவர் 15 வயதிலேயே கவிதை எழுதினார். பைரன் பிரபு பாணியில் கவிதை எழுதத் துவங்கினார். BYRON பைரன், இவருக்கும் முந்தைய பெருங் கவிஞர்.
18 வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்போது அவருடைய சகோதரர்கள் எழுதிய கவிதைகளுடன் இவர் கவிதையும் புஸ்தகமாக வெளிவந்தது. அங்கு படிக்கையில் ஆர்தர் ஹாலம் ARTHUR HALLAM என்பவருடன் நட்பு மலர்ந்தது. டென்னிசன் தொடர்ந்து கவிதைகளை எழுதி வந்தார்
இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பில் மிகவும் பிரபலமான மரியானா MARIANA இடம்பெற்றது. இந்தத் தொகுப்பு விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. பலர் குறையும் சொன்னார்கள். அடுத்த தொகுப்பில் மிகவும் பிரபலமான THE LOTUS EATERS ‘லோட்டஸ் ஈட்டர்ஸ்’ பாடலும் THE LADY OF SHALOTT ‘தி லேடி ஆப் தி ஷலோட்’ ட்டும் இடம்பெற்றன. இதற்கு அடுத்த ஆண்டில் அவரது ஆப்த நண்பர் ஆர்தர் ஹாலம் ARTHUR HALLAM இறந்தார். இது டென்னிசனுக்கு பெரிய மனத் தொய்வை உண்டாக்கியது. அடுத்த ப த்து ஆண்டுகளுக்கு கவிதை எழுதிய போதும் எதையும் வெளியிடாமல் அமைதி காத்தார்.
1842ல் டென்னிசன் வெளியிட்ட இரண்டு தொகுதி கவிதைகளில் ஆர்தர் பற்றிய கவிதையும் யூலிஸிஸ் ULYSSES கவிதையும் இருந்தன. இவை பெரும் வரவேற்பைப் பெற்றன இதைத் தொடர்ந்து அவர் 1850-ல் ஆஸ்தான கவிஞராக POET LAUREATE நியமிக்கப்பட்டார். அவர் புகழ் எங்கும் பரவியது. . அதே ஆண்டில் ஹாலம் நினைவாக ‘இன் மெமோரியம்’ IN MEMORIAM கவிதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்பாகும்.
பின்னர் வெளியான MAUD மாட் தொகுப்பில் தான், ‘சார்ஜ் ஆப் தி லைட் ப்ரிகேட்’ CHARGE OF THE LIGHT BRIGADE அச்சாகியது பின்னர் ஆர்தர் கதைகளைப் பிரதிபலிக்கும் ‘ஜடில்ஸ் ஆப் தி கிங்’ IDYLLS OF THE KING என்ற காவியத்தை எழுதினார்.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
பாருக்கரிய பகவான் ரமண பதஞ்
சேரக் கிடைத்த இந்த சென்மம் போல் – யாருக்கும்
எத்தனை கோடிப் பிறவி ஏற்றாலும் வாய்ப்பரிதே
அத்தனை மாண்புள்ளதிதுவாம்.
ஸ்ரீ சாது ஓம் வாழி!
பல்லாயிரக்கணக்கான ரிஷிகளை யுகம் தோறும் பார்த்த பூமி பாரத பூமி. அவர்கள் யுகம் கடந்த நிலையான தர்மங்களை மக்களுக்கு உபதேசித்தவர்கள்.
ரிஷிகளைப் பற்றி சம கால மக்கள் நன்கு அறிந்து உணரும் வண்ணம் தோன்றி, லக்ஷக்கணக்கானோருக்கு அருள் பாலித்தவர் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி!
திருவண்ணாமலை பற்றிய புராண சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. அக்னி ஸ்தலம் என்று மிகவும் போற்றித் துதிக்கப்படும் திருவண்ணாமலை உலகின் பழம்பெரும் மலை என்பதோடு அதிசய மலையும் கூட!
காலத்திற்குத் தக்கவாறு அடியார்களுக்கு அருள் புரிய சிவபிரான் உளங் கனிந்தார் போலும்; ரமண மஹரிஷியைத் தன் பால் திருவண்ணாமலைக்கு ஈர்த்து பல அருள் விளையாடல்களை அவரை வைத்து நிகழ்த்தச் செய்தார். பல்லாயிரம் மக்களை ஆன்மீகத்தில் உயர்த்த வழி வகுத்தார். திருவண்ணாமலையில் அருளாட்சி புரிந்த பகவான் ரமண மஹரிஷியின் வாழ்வு அதிசயமான ஒன்று; அன்பர்களுக்கு ஆனந்தம் தருவதும் கூட!
ரமண அவதாரம்
அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள திருச்சுழியில் 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஆருத்ரா தரிசன நாளன்று புனர்வசு நக்ஷத்திரத்தில் சுந்தரம் ஐயருக்கும் அழகம்மாளுக்கும் குழந்தையாக வந்துதித்தார் ரமணர். அவருக்கு வேங்கடராமன் என்று பெயரிடப்பட்டது.
மற்றவர்களைப் போலவே இருந்தாலும் கூட இள வயதிலேயே சகஜ சமாதி எனப்படும் அரிய நிலை வேங்கடராமனுக்கு இயல்பாக வாய்த்திருந்தது. ஒரு நாள் அவரது உறவினர் ஒருவர் நான் திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன் என்றார். திருவண்ணாமலை என்ற சொல் அவரை வெகுவாகப் ஈர்த்தது.
1896ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் அவருக்கு மரண பயம் தோன்றியது. தொடர்ந்து, மதுரையில் அவர் இருந்த இல்லத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தால், பெறுதற்கரிய ஞானத்தில், உயர் நிலையை அவர் பெற்றார். 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ரயிலில் ஏறிய அவர் திருவண்ணாமலையை அடைந்தார் 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சமாதி நிலையை எய்தியது வரை திருவண்ணாமலையை விட்டு வேறு ஒரு இடத்திற்கும் அவர் செல்லவில்லை.
கடுமையான தவத்தின் மூலம் சேஷாத்ரி ஸ்வாமிகள், காஞ்சி பரமாசார்யர், நாராயண குரு உள்ளிட்ட மகான்கள் வியந்து போற்றும் மஹரிஷியாக அவர் திகழந்தார். காவ்யகண்ட கணபதி சாஸ்திரி அவரை அழைத்த ரமணர் என்ற பெயரால் அவரை உலகம் அறிந்து கொண்டது.
ஏராளமானோர் அவர் அருள் நாடி வரவே ரமணாசிரமம் உருவானது.
அற்புதங்கள் ஆயிரம்!
ரமணரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களுக்கு எண்ணிக்கையே இல்லை; நவீன காலத்திற்கேற்றபடி பல்வேறு அன்பர்களும் அவற்றைக் குறிப்புகளாக எடுத்ததோடு புத்தகங்களாக எழுதியும் வெளியிட்டனர்; ஆகவே தான் அதிகாரபூர்வமான ஆவணங்கள் மூலம் அவை அனைத்தையும் அறிந்து பரவசப்பட முடிகிறது.
நேரத்தைக் கருதி சில சம்பவங்களை மட்டும் இங்கு பார்ப்போம். அமுதத் துளியில் எந்தப் பகுதியைச் சுவைத்தாலும் இனிக்கும் என்பது போல பகவானின் வாழ்க்கையில் நிகழ்ந்த எந்த சம்பவமும் சுவையானதே; அரிய ரகசியத்தையோ செய்தியையோ அது சொல்வதும் இயல்பானதே.
ரமணரிடம் வந்த ஃப்ராங்க் ஹம்ப்ரீஸ்
நூற்றுக் கணக்கான மேலை நாட்டோர் திருவண்ணாமலை வந்து ரமணரை தரிசனம் செய்து பயன் பெற்றனர்; தங்கள் அனுபவங்களைப் பல்வேறு நூல்களில் பதிவு செய்துள்ளனர்.
முதன் முதலாக வந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஃப்ராங்க் ஹம்ப்ரீஸ் என்பவர். அவர் 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஸிஸ்டண்ட் சூபரிடெண்டெண்டாக பம்பாய்க்கு வந்தார். பம்பாய் வரும் போதே அவரது உடல் நிலை மோசமானது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தனது மனதை வலியிலிருந்து திருப்ப முயற்சி செய்து ஆவி உடலில் மேலெழும்பி சஞ்சரிக்க ஆரம்பித்து வெல்லூர் வரை வந்தார். அங்கு நரசிம்மய்யா என்பவரைப் பார்த்தார்.
இந்த அனுபவத்திற்குப் பிறகு ஒருவாறாக அவர் மார்ச் மாதம் உடல் நிலை தேறினார். அதே மாதம் 18ஆம் தேதி வெல்லூருக்கு அவர் வந்தார். அங்கு தான் ஆவி உடலில் பார்த்த நரசிம்மய்யாவை நேரில் கண்டு வியந்தார். மீண்டும் உடல் நிலை மோசமாகவே ஊட்டிக்குச் சென்ற அவர் அதீதமான தனது அனுபவங்களை நரசிம்மய்யாவிற்குக் கடிதம் மூலம் எழுதி விளக்கம் கேட்டு வந்தார். ஏதேனும் ஒரு பெரிய மகானைச் சந்திக்க முடியுமா என்ற தனது ஆவலைக் கடிதம் மூலம் தெரிவித்த அவர் வெல்லூர் வந்த போது தன் மனதில் தோன்றிய ஒரு குகையின் படத்தையும் குகை வாயிலில் நிற்கும் மகானின் படத்தையும் வரைந்து நரசிம்மய்யாவிற்குக் காட்டினார். அந்த மகான் தான் ரமணர்.
இப்படி எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த பல அயல் நாட்டினருக்கும் அருள் பாலித்து அவர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் ரமணர்.
உலகின் மிகப் பெரும் எழுத்தாளரான பால் பிரண்டன் (Paul Brunton) ரமணரைச் சரண் அடைந்த சம்பவம் சுவையான ஒன்று. காஞ்சி மஹாபெரியவாளைச் சந்தித்த பிரண்டன் அவரைத் தனக்குக் குருவாக இருந்து வழிகாட்ட முடியுமா என்று கேட்ட போது அவர் ரமணரைத் தரிசிக்குமாறு அருளுரை புகன்றார். அதன்படி ரமணரைச் சந்தித்த பிரண்டன் தான் கேட்க விரும்பிய கேள்விகளுக்கெல்லாம் அவர் சந்நிதியில் உடனுக்குடன் தன் மனதிலேயே பதில் கிடைப்பது கண்டு வியந்தார்.
பகவான் ரமணருடனான தன் அனுபவங்களையும் ரமணரின் உபதேசங்களையும் பல நூல்களின் வாயிலாக அவர் வெளிப்படுத்தினார்.
உலகம் முழுவதும் ரமணரின் புகழ் பரவ ஆரம்பித்தது. பால் பிரண்டனின் ‘எ செர்ச் இன் சீக்ரட் இந்தியா” (A Search In Secret India) பல்லாயிரம் பிரதிகள் விற்பனையான அருமையான ஒரு புத்தகம். அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.
மிகவும் பிரபலமான ஆங்கில எழுத்தாளரான சாமர்செட் மாம் (Somerset Maugham) திருவண்ணாமலைக்கு ரமணரை தரிசிக்க வந்தார். தான் கேட்க வேண்டிய கேள்விகளைக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு அவர் சந்நிதியின் முன் அமர்ந்தார். ஒவ்வொரு கேள்வியாக அவர் மனதில் எழ அதற்கான அற்புதமான பதில் அவர் மனதிலேயே தோன்றியது. ஒரு கேள்வியையும் அவர் கேட்கவில்லை. ஹிந்து மதம் பற்றிய அவரது ‘பாயிண்ட்ஸ் ஆப் வியூ’ என்ற புத்தகம் அரிய சம்பவங்களையும் கருத்துக்களையும் கொண்ட நூலாகும்.
பகவான் ரமணரின் கருணை மழை அனைவருக்கும் பொதுவானது.
பகவானிடம் அருளாசி பெற பாரதத்தின் முதல் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் வந்தார். அருளாசி பெற்றார்.
ராஜாஜி வந்தார். மகாகவி பாரதியார் வந்தார். இன்னும் மைசூர் மஹாராஜா, பரோடா மஹாராஜா, மஹாத்மா காந்திஜியின் செயலாளரான மஹாதேவ தேசாய், பரமஹம்ஸ யோகானந்தா, நாராயண குரு, காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள், பால் பிரண்டன், சாட்விக், சாமர்செட் மாம்,திலிப் குமார் ராய் உள்ளிட்ட ஏராளமான துறவிகள், தேசியத் தலைவர்கள், பேரறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் வந்தனர். ரமண தரிசனத்தால் பெரும் பேறு பெற்றனர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great
ஸ்காட்லாந்து நாவல் ஆசிரியர் SIR WALTER SCOTT சர் வால்டர் ஸ்காட்
பிரிட்டனிலுள்ள ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நாவல் ஆசிரியர், கவிஞர் வால்டர் ஸ்காட் SIR WALTER SCOTT ஆவார் பல காதல் கதைகளையும், துணிகர, சாகசக் கதைகளையும் எழுதியவர். இவருடைய எழுத்துக்கள் இவருக்குப் பின்னர் வந்த அலெக்சாண்டர் துமா, அலெக்சாண்டர் புஷ்கின், கூப்பர் முதலியோர் எழுதிய வரலாற்றுப் புதினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.
ஸ்காட் , எடின்பர்க் EDINBURG நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். தாயார் ஒரு டாக்டரின் மகள். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 26 வயதில் திருமணம் செய்துகொண்டு ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையும் ஆனார்.
இரு நுறு ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்காட் லாந்தின் நாட்டுப்புற மக்கள் பாடிய நாடோடிப் பாடல்களையும் (BALADS) கதைகளையும் அவர் ஒய்வு நேரத்தில் சேகரித்தார். வக்கீல் தொழில் போக எஞ்சியுள்ள நேரத்தில் கிராப்புறங்களுக்குச் சென்றுவிடுவார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இதில் ஒரு ஈடுபாடு இருந்தது. இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்த்துக்கும் எல்லையாகவுள்ள பகுதியில் அவர் அதிகம் உலாவினார்.
அவருக்கு 31 வயதாகும் போதே அவர் தொகுத்த பாடல்கள் மூன்று தொகுதிகளாக வெளிவந்தன. பின்னர் தனது சொந்தக் கவிதையையும் வெளியிட்டார். இது எல்லைப்புற மனிதனின் வரலாற்றுக் கதையாகும். நீண்ட கவிதை வடிவில் எழுதினார். 40 வயதில் மேலும் இரண்டு வரலாற்றுக் கவிதைகளை எழுதியவுடன் அவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது.
இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் எல்லையாகவுள்ள பகுதியில் கொஞ்சம் நிலத்தை வாங்கி ஒரு மாளிகையும் கட்டினார். அது ட்வீட் TWEED என்னும் நதிக்கரையில் அமைந்த இடம்.
அவர் எழுதிய 27 நாவல்களில் முதல் நாவல் WAVERLY வேவர்லி ஆகும்.அந்த நாவலின் கதை என்னவென்றால் ஒரு ஸ்காட்டிஷ் குடும்பத்தை பிரிட்டிஷ் சிம்மாசனத்தில் அமரவைக்க நடந்த புரட்சி பற்றியதாகும். ஒரு வீரன் எந்த ஆட்சிக்கு விசுவாசம் செலுத்துவது என்று திண்டாடும் நிலையை இந்த நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது. அவருடைய மற்ற நாவல்களிலும் இதே போல இரட்டை விசுவாசம் உடைய கதாநாயகர்களைக் காண முடியும்.
காணாமற்போன ராஜாங்க ரத்தினை க்ரீடங்கள் (CROWN JEWELS) நகைகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை பிரின்ஸ் ரீஜெண்ட் (பின்னர் நாலாம் ஜார்ஜ் என்று அழைக்கப்பட்ட மன்னர்) இவருக்குத் தந்தார். இவர் 100 ஆண்டுக்கு காலம் மறைந்திருந்த அந்த பொக்கிஷத்தைத் தேடிக்கண்டுபிடித்தார். பின்னர் இவர் ஒரு பிரபு அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். லண்டனிலும் பிரபுக்கள் சபையில் இடம்பெற்று ‘ஸர்’ பட்டம் பெற்றார்.
இவர் நாடகங்களையும் எழுதியுள்ளார்.
அவர் சம்பந்தப்பட்ட வெளியீட்டு நிறுவனம் பெரிய கடனில் சிக்கிக் கொண்டது. அதைத் திரும்பிச் செலுத்துவதில் முனைப்பு காட்டியதில் அவர் உடல் நலம் குன்றினார்.
பிறந்த தேதி – ஆகஸ்ட் 15, 1771
இறந்த தேதி – செப்டம்பர் 21, 1832
வாழ்ந்த ஆண்டுகள் – 61
அவர் எழுதிய நூல்கள்
1802- MINSTRELSY OF THE SCOTTISH BORDER
1805- THE LAY OF THE LAST MINSTREL
1808 – MARMION
1810- THE LADY OF THE LAKE
1814- WAVERLY
1815- GUY MANNERING
1816- OLD MORTALITY
1817 – ROB ROY
1818- THE HEART OF MIDLOTHIAN
1819- IVANHOE
–SUBHAM–
TAGS- ஸ்காட்லாந்து, நாவல் ஆசிரியர், சர் வால்டர் ஸ்காட் , SIR WALTER SCOTT
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 25-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!
வசனமிகவேற்றி மறவாதே, மனது துயராற்றில் உழலாதே
இசை பயில் சடாக்ஷரமதாலே இகபர சௌபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்றருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி மிக வாழ, அமரர் சிறை மீட்ட பெருமாளே!
அருணகிரிநாதர் திரு நாமம் போற்றி, போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது முருகனின் ஆறு படைவீடுகளில் மூன்றாவது படை வீடாக அமையும் பழநி என்று அனைவராலும் அறியப்படும் திருவாவினன் குடி ஆகும். இந்தத் தலம் தமிழகத்தில், கொங்கு நாட்டில் திண்டுக்கல் மாவட்டதில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லிலிருந்து 57 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து இது 123 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. மலையின் அடிவாரத்தில் உள்ள கோவிலின் மூலவர் குழந்தை வேலாயுதர்.
மலை மீதுள்ள கோவிலின் மூலவர் தண்டாயுதபாணி நவபாஷாண மூர்த்தி. தல விருக்ஷம் – நெல்லி மரம். தீர்த்தம் – ஷண்முக நதி.
பழனியில் முருகன் கோவில் கொண்டுள்ளதைப் பற்றிய பிரசித்தமான வரலாற்றை அனைவரும் அறிவர். ஒரு முறை மாம்பழம் ஒன்றை நாரத முனிவர் சிவபிரானிடம் அளிக்க அவருடன் இருந்த இரு குமாரர்களான விநாயகர் மற்றும் முருகனை நோக்கி அவர், “யார் உலகை முதலில் சுற்றி வருகிறாரோ அவருக்கே இந்தக் கனி” என்றார். உடனே முருகன் தன் மயில் வாகனத்தில் ஏறி அதிவேகத்துடன் உலகை வலம் வரப் புறப்பட்டார். ஆனால் விநாயகரோ சிவபிரானையும் பார்வதி தேவியையும் வலம் வந்து “நீவீரே உலகம். உம்மை வலம் வந்து விட்டேன்” என்றார். இதனால் சிவபிரான் அவரிடம் அந்தக் கனியைத் தந்தார். உலகைச் சுற்றி விட்டு அங்கு வந்த முருகன், கனி விநாயகர் கையில் இருப்பதைக் கண்டு, வெகுண்டு அங்கிருந்து அகன்றார். பழநித் தலத்தில் தண்டாயுதபாணியாக நின்றார். பார்வதி தேவியும் சிவபிரானும் அவரை நோக்கி, “பழம் நீ அப்பா ஞானப் பழம் நீ அப்பா” என்று கூறி அவரது கோபத்தைத் தணித்து, இந்தத் தலத்தை முருகன் இருக்கும் தலமாக பெருமையுறச் செய்தனர். திரு ஆவினன் குடி என்ற பெயருக்கான காரணம் திரு – லக்ஷ்மி, ஆ – காமதேனு, இனன் – சூரியன், கு – பூமி, டி – அக்னி ஆகியோர் இந்தத் தலத்தில் வந்து வழிபட்டமையால் இது திருவாவினன் குடி என்ற பெயரைப் பெற்றது.
சங்க இலக்கியத்தில் பொதினி என்று கூறப்படுகிறது இந்தத் தலம்.
மலையின் மீதுள்ள முருகனின் சிலையை பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் ஸ்தாபித்தார். இந்தச் சிலை நவபாஷாணத்தால் ஆனது. சிலை காலப்போக்கில் பழமையானதை ஒட்டி இங்கு விக்ரஹ அபிஷேகம் எதுவும் செய்யப்படாமல் சந்தனப் பூச்சு மட்டும் பூசப்படுகிறது. இந்த சந்தனத்தைப் பெறுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதி பக்தர்கள் இதைப் பெறுகின்றனர். பழநி முருகனுக்கு பஞ்சாமிர்தம் நைவேத்யம் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுவது ஒரு தனிச் சிறப்பாகும்.
தைப்பூசம், பங்குனிஉத்தரம், சூர சம்ஹாரம் உள்ளிட்ட பல திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பழநியில் உள்ள தங்கத் தேர் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.
இங்கு மலை மீது போகருக்கான சமாதி உள்ளது. முருகன் சந்நிதியிலும் போகர் சந்நிதியிலும் மரகத லிங்கங்கள் உள்ளன. பழநியில் இடும்பனுக்கு ஒரு கோவில் உண்டு. இங்குள்ள சிவசக்தி மலைகளையும் இடும்பனையும் பற்றி, பழநித் தலபுராணமும் கொங்கு மண்டல சதகமும் விரிவாகக் கூறுகின்றன. சூரபன்மனுக்கு அஸ்திர சஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொடுத்த குரு இடும்பாசுரன்.முருகபிரான் அசுரர்களை அழித்த பின் நல்லறிவு பெற்ற அவன் தன் மனைவி இடும்பியோடு பொதியமலை வந்து, அகத்தியப் பெருமானிடம் அடைக்கலம் புகுந்தான். அகத்தியர் அவனிடம் வடக்கே சென்று, அங்கே கேதாரத்தில் உள்ள சிவ, சக்தி ஆகிய இரு மலைகளைக் கொண்டு வந்தால் அவனுக்கு போகம், முக்தி இரண்டும் கிடைக்கும் என்று கூறி அருளினார். அகத்தியர் கூறியபடியே, இடும்பாசுரன் சிவ, சக்தி ஆகிய இரு மலைகளையும் தோள் சுமையாக, காவடியாகத் தூக்கி வந்தான். வழி தெரியாமல் இடும்பன் திருவாவினன் குடியை – பழனியை- அடைந்தான். பசி, தாகம் இரண்டும் அவனை வருத்த தன் தோளில் இருந்த சிவ,சக்தி,மலைகளைக் கீழே இறக்கி வைத்தான். பசி தாகம் நீங்கிய பின்னர் மலைகளை மீண்டும் தூக்கினான். ஆனால் மலைகள் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. சந்தேகம் கொண்ட இடும்பன் மலைகளின் மீது ஏறிப் பார்த்தான். அங்கே தண்டம் தாங்கி இருந்த குமரவேல், இடும்பனை நோக்கி, “அசுரனே, இந்த மலைகளை இங்கேயே விட்டுச் செல்” என்றார். கோபம் கொண்ட இடும்பன் குமாரவேளின் மேல் பாய, நடந்த சண்டையில் இடும்பன் மாய்ந்தான்.
இதை அறிந்த இடும்பி குமரவேளைத் துதித்து அருள் வேண்டினாள்.
முருகனின் கிருபையால் இடும்பன் உயிர் பிழைத்து அவரைத் துதித்தான். தனக்குக் குற்றேவல் செய்து வருமாறு இடும்பனை முருகன் பணித்தார். ஆக இப்படிப்பட்ட ஏராளமான வரலாறுகள் பழநியைப் பற்றி உண்டு. அருணகிரிநாதர் இந்தத் தலத்தில் முருகனை வழிபட்டு 95 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். பழநியில் நெடுங்காலம் தங்கி அதன் சிறப்புக்களையும் வரலாறுகளையும் அறிந்த அவர் ‘அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று கூறிப் பாராட்டுகிறார். பழநி மலையை வலம் வருவது பாவத்தைப் போக்கும். மலை மீது ஏற யானைப் பாதை ஒன்றும், படிக்கட்டுகள் மீது ஏறிச் செல்லும் வழியும் உண்டு. மலை மீதுள்ள கோவிலை அடைய விஞ்ச் (Winch) வசதியும் உண்டு.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பழநி முருகன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். அருணகிரிநாதரின் அருள் வாக்கு இது.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் மேம்பாட்டிற்கும், ஆற்றல் இன்றியமையாதது. நிலக்கரி, இயற்கை வாயு, எண்ணெய் வளம் உள்ளிட்ட படிம எரிபொருள்களாலேயே உலகில் ஆற்றல் உருவாக்கப்படுகிறது. இந்த படிம எரிபொருள்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி நச்சு வாயுக்களை வளி மண்டலத்தில் கலக்கச் செய்கிறது.
ஆகவே மனித குலம் மாற்று முறையில் தயாராகும் ஆற்றலை எதிர்நோக்குகிறது. ஒரு பெரும் வரபிரசாதமாக சூரிய ஆற்றல் தங்கு தடையின்றி எங்கும் இலவசமாகக் கிடைக்கும் ஒரு அரிய சக்தி. இந்த சூரிய சக்தியைப் பயன்படுத்தி சோலார் கார்கள் எனப்படும் சூரிய ஆற்றலில் இயங்கும் கார்கள் வடிவமைக்கப்பட்டு உபயோகத்திற்குத் தயாராக உள்ளன. இதன் மூலம் பெட்ரோல், டீஸல் உள்ளிட்ட படிம எரிபொருள்களிலிருந்து உலகம் விடுதலை பெறும்; சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் மாசும் குறையும்; அபாயமும் மறையும்.
இன்று புழக்கத்தில் வந்துள்ள சோலார் பேனல்கள் (Solar Panels) நச்சு வாயுக்களை வெளிப்படுத்தாது. சோலார் பேனல்களால் உருவாக்கப்படும் 879 மெகாவாட் ஆற்றலானது ஐந்து லட்சத்தி நாற்பதினாயிரம் டன்கள் கழிவுப் பொருளை மறுசுழற்சிக்கு உள்ளாக்கிப் பெறும் ஆற்றலுக்குச் சமம். ஒரு மெகாவாட் என்பது பத்து லட்சம் வாட்களாகும் (Watts). சோலார் பேனல்களை தயாரிக்க நீர் தேவைப்படுவதில்லை என்பதால் அரிய நீர்வளமும் சேமிக்கப்படுகிறது. சூரிய ஆற்றல் தெளிவானது, மாசில்லாதது, அதிகம் செலவில்லாதது. ஒரு ஐந்து கிலோவாட் சூரிய ஆற்றல் மின் அமைப்பை ஒருவர் 25 ஆண்டுகள் பயன்படுத்தினால் அது 2,98,108 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைட் உருவாவதைத் தடுக்கும். புகை மூட்டத்தை உருவாக்கும் நச்சு வாயுவான நைட்ரஜன் ஆக்ஸைடில் 928 பவுண்டுகள் என்ற அளவு தடுக்கும், அமில மழையை உருவாக்குகின்ற சல்பர் டை ஆக்ஸைடில் 840 பவுண்டுகள் உருவாவதைத் தடுக்கும், ஆஸ்த்மாவை உருவாக்கும் துகள்மங்களில் (particulates) 57 பவுண்ட் உருவாவதைத் தடுக்கும். படிம எரிபொருள்களைப் பயன்படுத்தி 25 வருடங்களில் ஒருவர் ஓட்டும் சுமார் மூன்று லட்சம் மைல்களில் வரும் நச்சுப் புகை வெளியேற்றத்தைத் தடுக்கும. இப்படி உலகளாவிய விதத்தில் பல லட்சம் பேர்கள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்த ஆரம்பித்தால் ஏற்படும் நல்விளைவுகள் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக அமையும். அடுத்த பத்து ஆண்டுகளில் இல்லங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படும் என்ற நல்ல செய்தியை வரவேற்று சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவோம். புவியை மாசில்லாத பூமியாக மாற்றுவோம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 25 -ஆம் தேதி — ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX
அரசு கட்டுபாட்டிலிருந்து கோவில்களை விடுவிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்
அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை விடுவிக்க வழிவகுக்கும் சட்டத்தை இயற்றக்கோரி, மத்திய அரசை, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஹரியானாவின் பரிதாபாதில் நடந்து முடிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் பல கோவில்கள் உள்ளன.கோவில்களில் யார் பூஜை செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, அரசு ஏன் தீர்மானிக்க வேண்டும்?
எனவே, அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதேபோல் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படுவதை தடுக்கும் கடுமையான சட்டத்தை இயற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
XXXX
இந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த பாதிரியார் கைது
இந்து கடவுளை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து கடவுள், , பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என பலர் குரல் எழுப்பினர்.
இந்நிலையில் சென்னைக்கு காரில் 4 பேருடன் தப்பி செல்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை கருப்பாயூரணி அருகே சோதனை நடத்திய போது ஒரு காரில் பாதிரியார் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்று வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
பாதிரியாருக்கு உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து அவர் பாளையம்கோட்டை சிறையிலுள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கடைசியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
xxxx
உடுப்பி அருகே ரூ.2 கோடியில் விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழில் அதிபர்
உடுப்பியில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோவிலை கட்டி அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அர்ப்பணித்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி உள்ளார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியை சேர்ந்தவர் கேபிரியல் நாசரேத் (வயது 77). இவர் தொழில் அதிபர் ஆவார். கேபிரியலின் தந்தை பேபியன் செபஸ்டின் உயிரிழப்பதற்கு முன்பு கேபிரியலுக்கு 15 சென்ட் நிலத்தை கொடுத்து இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் செபஸ்டினும், அவரது மனைவி சபீனாவும் உயிரிழந்து இருந்தனர்.
ரூ.2 கோடி செலவில்….
இந்த நிலையில் தனது தந்தை, தாயின் நினைவாக 15 சென்ட் நிலத்தில் ஒரு விநாயகர் கோவிலை கட்ட கேபிரியல் முடிவு செய்தார். அதன்படி ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோவிலையும், அதன் அருகே அர்ச்சகர் தங்க ஒரு வீட்டையும் கேபிரியல் கட்டி முடித்தார்.அந்த கோவிலுக்குள் 36 அங்குலம் விநாயகர் சிலை உள்ளது. பின்னர் அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அவர் அர்ப்பணித்தார். இந்த கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு கேபிரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
நண்பர்களுக்காக…
இதுகுறித்து கேபிரியல் கூறும்போது, நான் கடந்த 1959-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்ததும் வேலைக்காக மும்பைக்கு சென்றேன். மும்பையில் சித்தி விநாயகர் கோவிலுக்கு தினமும் செல்வேன். அப்போது எனக்கு சொந்த செலவில் விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை வந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிருவாவுக்கு வந்த நான் கோவிலை கட்ட முடிவு செய்து தற்போது கட்டி முடித்து இந்து நணபர்களுக்கு அர்ப்பணித்து உள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
XXXX
கோவில் யானை பராமரிப்பு; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
-கோவில் யானைகளை பெரிய இடங்களில், இயற்கை சூழலில் பராமரிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக கோவில்களில் 34 யானைகள், புதுச்சேரியில் உள்ள கோவிலில் ஒரு யானையும் பராமரிக்கப்படுகிறது. அறநிலையத் துறையின் அலட்சியத்தால், 2016 முதல், 2019 வரை, மூன்று கோவில் யானைகள் இறந்தன.
உடல் பருமன், காலில் ஏற்படும் பிரச்னையால், யானைகள் இறக்கின்றன.கோவில் யானைகளை நடை பயிற்சிக்கு கூட்டிச் செல்வதில்லை; முறையான உணவு வழங்கப்படுவது இல்லை., கோவில் அருகில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில், யானைகளை பராமரிக்க வேண்டும். ஆண் யானைக்கு துணையாக, பெண் யானையையும் பராமரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், விசார ணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
Xxxx
விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ 37 கோடியில் தொங்கு பாலம்
கன்னியாகுமரி; சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 140 மீட்டர் தூரத்திற்கு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்கு பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே 140 மீட்டர் தூரத்திற்கு தொங்கு பாலம் அமைக்கப்படும்
இதற்காக ரூ.37 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவே பாலம் அமைக்க வேண்டியிருப்பதால் சென்னை ஐஐடி பேராசிரியர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுற்றுலா மாளிகை கட்டப்படும்.
xxxxxxx
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்
திருப்பதியின்புனிதத் தன்மை, இயற்கை சுற்றுச்சூழலையை பாதுகாக்கவும் தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஆயினும் பக்தர்கள் பலர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொண்டு வருகின்றனர்.
அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் உடைமைகள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் இருந்தால் அங்கேயே அப்புறப்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் பக்தர்கள் பயன்படும் வகையில் குடிநீர் தொட்டி ஆங்காங்கே அமைக்கப் பட்டுள்ளது. அதன் அருகில் கோப்பைகள், டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை தினசரி சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே பக்தர்கள் குடிநீர் தேவைக்காக அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.
Xxx
திருப்பதியில் DRONE டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம்: தேவஸ்தானம் முடிவு
திருப்பதி கோயிலை Drone டுரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், டிஆர்டிஓD R D O தயாரித்துள்ள டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தொழில்நுட்ப செயல் விளக்க கூட்டம், கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 6 ம் தேதி நடந்தது. முப்படை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு துறை தலைவர் கோபிநாத்தும் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து, அந்த drone டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை வாங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அத்துமீறி வரும் டுரோன்களை கண்டுபிடித்து, அதனை தடுத்து நிறுத்தி அழிக்கும் வகையில், டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ தயாரித்து உள்ளது. 4 கி.மீ., தூரத்தில் வரும் டுரோனை கண்டறியும் இந்த தொழில்நுட்பம், அதன் தொலைதொடர்பு வசதியை துண்டித்து 3 கி.மீ., தொலைவில் அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரு அமைப்பின் விலை தற்போது ரூ.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை தயாரித்து உள்ள டிஆர்டிஓ, அதனை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திடம் வழங்கி உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டியின் ஆலோசனையை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தொழில்நுட்பத்தை வாங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Xxxxx
உலகம் முழுதும் இந்திய பாரம்பரிய கலை: குரு பவுர்ணமி விழாவில் சத்குரு JAGGI VASUDEV பேச்சு
”ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்கள் இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வார்கள்,” என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு JAGGI VASUDEV தெரிவித்தார்.
குரு பவுர்ணமியை முன்னிட்டு, சத்குருவின் சிறப்பு சத்சங்கம் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில், ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் இசை, நடனம் மற்றும் களரி நிகழ்ச்சி நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு JAGGI VASUDEV பேசியதாவது:
மனிதர்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்பதற்கு ஏராளமான சாகசம் செய்கின்றனர். துன்பம், இன்பம், கோபம், அமைதி என மனித அனுபவங்கள் அனைத்தும் நமக்குள் இருந்து தான் வருகிறது.
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், சிறு வயதில் இருந்தே, இசை, நடனம், களரி போன்றவற்றில், தங்கள் வாழ்வை முதலீடு செய்துள்ளனர். 24 மணி நேரமும் இந்த கலைகளுடன், வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கற்ற கலைகளை, தற்போது மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க தயாராகிவிட்டனர். அதற்காக, ‘புராஜக்ட் சம்ஸ்க்ருதி’ என்ற திட்டம், இந்த குரு பவுர்ணமி நாளில் துவங்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வர். இவ்வாறு, JAGGI VASUDEV தெரிவித்தார்.
Xxxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN