அமெரிக்கக் கவிஞர் லாங் ஃபெலோ (Post No.9771)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9771

Date uploaded in London – –24 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அமெரிக்க இலக்கியத்தில் மறக்க முடியாத கவிதை வரிகளை எழுதியவர் கவிஞர் லாங் ஃபெலோ ஆவார். லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் கவிஞர் மூலையில் (POET’S CORNER IN WESTMINSTER ABBEY, LONDN) சிலை பெற்ற முதல் அமெரிக்கப் புலவரும் ஆவார்.

ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங் ஃபெலோ (HENRY WADSWORTH LONGFELLOW) எழுதிய பால் ரெவியர்ஸ் ரைட் (PAU REVERE’S RIDE)   கவிதை பலர் உள்ளங்களில் அழியா இடம்பெற்றது. அதேபோல அவர் எழுதிய வாழ்விசைப்பாவில் (PSALMS OF LIFE) வரும் காலம் எனும் மணற் கரையில் படிந்த அடிச் சுவடுகள் என்ற (IN THE FOOTPRINTS OF SANDS OF TIME ) வரிகளும் புகழ் பெற்றவை, இதை 100 ஆண்டுக்கு முன்னரே மதுரை ஆசிரியர் கோபாலகிருஷ்ண ஐயர் மொழிபெயர்த்து வெளியிட்டார்.(இணைப்பில் காண்க)

லாங் ஃபெலோ , அமெரிக்காவில் போர்ட்லண்டில் (PORTLAND, MAINE) பிறந்தார். ‘சர்ச் ஆப் இங்கிலாந்து’க்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று பிளிமவுத் காலனி அமைத்தனர். தன்னுடைய பெற்றோர்கள் அந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்றார் லாங்பெலோ .

1825ல் பட்டம் பெற்றார். மற்றோர்  புகழ்மிகு எழுத்தாளர் நதானியல் ஹாதோர்ன் NATHAIEL HAWTHORNE இவரது வகுப்பில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

இவர் துவக்க காலத்தில் ஹார்வர்ட் முதலிய கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பித்தார். இதனால் பிறமொழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் கொண்டுவரும் முயற்சிக்கு உத்வேகம் கொடுத்தார். பின்னர் கவிதைகளை எழுதிக் குவிப்பதில் முழு மூச்சில் ஈடுபட்டார். கவிதை எழுதுவதன் மூலமே சம்பாதித்து வாழ்க்கை நடத்த முடியும் என்று காட்டிய புலவர் இவர். ஆயினும் சுய வாழ்வில் சில துயர சம்பவங்கள் நிகழ்ந்தன. முதல் மனைவி திருமணமான சில காலத்துக்குள் இறந்தார். இரண்டாவது மனைவி தீ விபத்தில் உயிர் இழந்தார். இந்தத் துயரம் அவரது கவிதையில் எதிரொலிப்பதையும் காணலாம் .

32 வயதில் ‘வாய்சஸ் ஆப் தி நைட்’ (VOICES OF THE NIGHT )என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவுடன் இவர் புகழ் பரவியது . இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பல்லட்ஸ் (BALLADS) என்ற தொகுப்பு வெளியானது. அதிலுள்ள கிராமப்புறத்துக் கருங்  கொல்லன் (VILLAGE BLACKSMITH) கவிதை எல்லோராலும் விரும்பப்பட்டது . லாங்பெலோவுக்கு கதை சொல்லும் ஆற்றல் இருந்ததால் அதைக் கவிதைகளில் பயன்படுத்தினார் . அமெரிக்க வரலாறு, அமெரிக்காவின் பங்குடி மக்களின் புராணம் ஆகியவற்றைக் கவிதையில் வடித்துக்கொடுத்தார் .

இந்த வகையில் மூன்று கவிதைகளைச் சொல்லலாம்

1.ஹயாவதாவின் பாட்டு THE SONG OF HIAWATHA- அமெரிக்க பழங்குடியினரின் கதை ;

2.எவாஞ்சலின் EVANGELINE – அமெரிக்காவில் குடிபுகுந்த பிரெஞ்சு மக்களின் கதை;

3.தி கோர்ட்ஷிப் ஆப் மைல்ஸ் ஸ்டாண்டிஷ் THE COURTSHIP OF MILES STANDISH– இங்கிலாந்திலிருந்து குடிபுகுந்தவர்கள் இடையே மலர்ந்த காதல் கதை.

லாங் ஃபெலோ பிறந்த தேதி — பிப்ரவரி 27, 1807

இறந்த தேதி —  மார்ச் 24, 1882

வாழ்ந்த காலம் – 75 ஆண்டுகள்

படைப்புகள்

1839- VOICES OF THE NIGHT

1841 – BALLADS

1847- EVANGELINE

1849 – THE SEASIDE AND THE FIRESIDE

1855- THE SONG OF HIAWATHA

1858- THE COURTSHIP OF MILES STANDISH

1863- TALES OF WAYSIDE (Including Paul Revere’s side)

1880 – ULTIMA THULE

XXX

OLD ARTICLES IN MY BLOG ON LONGFELLOW:-

லாங்பெலோ | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ல…

  1.  

1 Oct 2015 — … நூலகம் முதலியவற்றில் கண்டாலோ, தயவுசெய்து எழுதுங்கள். ஆங்கிலக் கவிஞன் ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்பெலோ எழுதிய புகழ் …

longfellow | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › longfellow

  1.  

WRITTEN BY R. NANJAPPA. Post No. 8471. Date uploaded in London – – – 8 August 2020. Contact – swami_48@yahoo.com. Pictures are taken from various​ …


H W Longfellow | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › h-…

  1.  

7 Oct 2018 — Henry Wadsworth Longfellow wrote some of the most well-known poems in American literature, including ‘Paul Revere’s Ride’. He was the first …

Swami’s Indology Blog: BHARTRUHARI NOTES- 1 (Post No …

http://swamiindology.blogspot.com › 2019/11 › bhartr…

  1.  

30 Nov 2019 — … educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. … Compare Longfellow’s English poem.

–SUBHAM–

tags – அமெரிக்கக் கவிஞர், லாங் ஃபெலோ

ஜோதிட மேதை ஸ்ரீ சூர்யநாராயண ராவ்! (Post.9770)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9770

Date uploaded in London – –  –24 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜோதிட மேதை ஸ்ரீ சூர்யநாராயண ராவ்!

ச.நாகராஜன்

பிரபல ஜோதிட மேதை ஸ்ரீ சூர்ய நாராயண ராவ் வேத ஜோதிடத்திற்கு ஒரு புது மஹிமையைத் தந்து அதை உயரத்தில் ஏற்றி வைத்தவர்.

ஸ்ரீகாகுளத்தில் 1856ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பகல் 12.10க்கு அவர் பிரந்தார். பிரபல ஜோதிட இதழான ‘தி அஸ்ட் ராலஜிகல் மாகஸைன் – ஐ நிறுவியவர் இவரே. 1895இல் இந்த இதழ் ஆரம்பிக்கப்பட்டது. இடையில் ராவ் அவர்களின் உடல் நலக் குறைவு காரணமாக 1923இல் அந்த ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் இது வெளி வரவில்லை. ஆனால் இவரது பேரன் புகழ் பெற்ற பி.வி.ராமன் உதவிக்கு வந்தவுடன் இதுப் புதுப் பொலிவுடன் வெளி வர ஆரம்பித்தது. சூர்யநாராயண் ராவ் பங்களூர் சென்ட்ரல் காலேஜில் படித்துப் பட்டம் பெற்றார். பெல்லாரியில் ஒன்பது ஆண்டுகள் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். அப்போது அவருக்கு ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டது.

(இவர் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள கட்டுரைகளில் இது பற்றிக் காணலாம்).

ஆங்கிலத்தில் சூர்யநாராயண ராவ் எழுதியுள்ள ஜோதிட நூல்கள் இன்றளவும் போற்றிப் படிக்கப்படுகின்றன. 1882இல் இவரது முதல் நூல் வெளி வந்தது. தொடர்ந்து வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகத்தை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்டார். எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் படைத்துள்ளார்.

‘The Autobiography of a Vedic Astrologer’ என்ற தலைப்பில் தன் சுய சரிதையை மிக அருமையாக பி.வி.ராமன் அவர்கள் எழுதியுள்ளார். அதில் தனது பாட்டனாரான ஸ்ரீ சூர்யநாராயண ராவ் பற்றி நிறைய விவரங்களைத் தந்துள்ளார். ஜோதிட சாஸ்திரத்தையும் அதில் உள்ள நுணுக்கங்களையும் அவரிடம் கற்றுத் தேர்ந்தார் பி.வி.ராமன்.

தனது சுயசரிதையில் 19ஆம் அத்தியாயத்தில் தனது பாட்டனாரின் இறுதி நாள் பற்றி மிக விவரமாக அவர் பதிவிட்டுள்ளார்.

1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி!

மிக அவசரமான செய்தி ஒன்று பி.வி.ராமன் அவர்களுக்கு வந்தது, உடனடியாக கிராமத்திற்கு வருமாறு! அவரது பாட்டனாரைப் பார்க்க உடனடியாக அவர் கிராமத்திற்கு விரைந்தார். தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதை நன்கு உணர்ந்திருந்த சூர்ய நாராயண ராவ் பேரனை அழைத்தார். சுமார் 3 மணி நேரம் அவருடன் அந்தரங்கமாகப் பேசினார். அது புத்தரின் உபதேசம் போல இருந்தது என்று பி.வி.ராமன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

“எந்த ஒருவரையும் குறைத்து மதிப்பிடாதே.

“பெரியவரோ, சிறிய ஆளோ, அவரை மதிப்புடன் நடத்து.

“முடிந்த போது மற்றவருக்கு உதவி செய். ஆனால் ஒரு போதும் எவருக்கும் தீங்கிழைக்காதே.

“உனது தொழிலில் எந்த உயரத்தை நீ எட்டினாலும் கூட எப்போதும் அடக்கமாகவே இரு.

ஜாதகத்தை ஒரு போதும் திட்டவட்டமாக அர்த்தம் கொண்டு சொல்லாதே.

“ஒருபோதும் மற்றவரிடமிருந்து சலுகைகளை எதிர்பார்க்காதே.

“உனது சுய மரியாதையை எப்போதும் காப்பாற்றிக் கொள்.

“பற்றற்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்.

“உன்னை ஆத்திரமூட்டும் சந்தர்ப்பங்களில் பொறுமையாக இரு.

“தனிப்பட்ட சந்திப்பிலோ அல்லது பொது மேடைகளிலோ யாரையும் குறைத்து எடை போடாதே.

“கதை சொல்பவர்களுக்கு (வதந்தி அல்லது வம்புப் பிரியர்களுக்கு) காதைக் கொடுக்காதே.

“உனது குறிக்கோளை உன் முன்னே வைத்துக்  கொள், அதை அடைய முயற்சிகள் எடு.

ஆனால் நீ செய்யும் கர்மாவானது நிஷ்காம்யமாக (பலனை எதிர்பார்க்காத ஒன்றாகவே) இருக்கட்டும்.

“கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக!

இந்த மொழிகள் தான் தன் பேரனுக்கு இறுதியாக சூர்யநாராயண ராவ் செய்த உபதேச மொழிகள்.

பாட்டனாரைச் சந்தித்து விட்டு பங்களூர் திரும்பிய ராமன் தனது மனைவி ராஜேஸ்வரியிடம் நடந்த விஷயத்தைக் கூறினார். உடனே அவர், “பெரியவர் ‘கிளம்பத் தயாராகி விட்டார் போல இருக்கிறது. உடனே கிராமத்திற்குச் செல்வோம் என்று கூறினார்.

1937, மார்ச் 12ஆம் தேதி கிராமத்திலிருந்து பெரியவர் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகச் செய்தி வந்தது. நல்ல ஒரு டாக்டரையும் கூடவே கூட்டிக் கொண்டு ராமன் தம்பதியினர் கிராமத்திற்கு விரைந்தனர். டாக்டர் பெரியவரைப் பரிசோதனை செய்து விட்டு உடனடியாக பெங்களூருக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்று அறிவுரை பகர்ந்தார். இதைக் கேட்ட சூர்ய நாராயண் ராவ் கூறினார்:” இன்று அமாவாசை. இது பற்றி நாளைக்கு யோசிப்போம்

கங்கை ஜலத்தைக் கொண்டு வரச் சொல்லி அதை அருந்தினார் அவர். ‘தலைவலி தாங்க முடியவில்லை என்ற அவர் ஓய்வற்றுக் காணப்பட்டார். சரியாக பகல் 1.10க்கு தனது ஆவியை அவர் துறந்தார்.

இப்படியாக ஒரு மகோன்னத ஜோதிட மேதையின் வாழ்வு முடிந்தது.

1937 ஏப்ரல்- ஜூன் அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் இதழில் ஜோதிட சூரியன் அஸ்தமித்தது (“The Astrological Sun has set”) என்று தலையங்கம் எழுதினார் ராமன்.

பாட்டனாரைத் தொடர்ந்து அவர் காட்டிய வழியில் அதே மேதைத் தன்மையுடன் தனது பணியைத் தொடர்ந்தார் பி.வி.ராமன். உலகப் புகழ் பெற்று உச்சத்திற்கு ஏறினார்.

வாழ்க வேத ஜோதிடம்! வாழ்க ஜோதிட மேதைகள்!!

***

Index

சூரிய நாராயண் ராவ்,

பி.வி.ராமன்

இறுதி உபதேசம்

மறைவு

அஸ்ட்ராலஜிகல் மாகஸைன்

ஆதாரம் : The Autobiography of a Vedic Astrologer

tags – ஜோதிட மேதை, சூரிய நாராயண் ராவ்,

WONDERS NEVER STOP; EVERYTHING IS IN THE RIG VEDA – 2 (Post No.9769)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9769

Date uploaded in London – –23 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

First part was posted here yesterday 22-6-2021

World’s first history book is the Rigveda. The Ten Kings War is referred to very often in many mandalas/books. Lot of kings’ names are in the Ten Mandalas of the RV.

World’s first Animal Fable book is the Rig Veda. Here we see several animals and birds pulling the chariots of Asvins. Here we see falcons bringing Soma plant, birds are helped by gods to escape from the mouth of wolves;

Here we see animals roaming the forests freely. Lions and deer are used as similes.

Xxx

Forest Fires

In almost all ‘Agni’ verses, Forest Fire is beautifully and graphically described.

The description of the forest fires is very realistic. The seers must have seen such fires. This shows that they have not lived just around the rivers or riverbanks. A lot of them might have been doing penance at the foothills of the Himalayas or other hill areas. This gives a severe blow on the Western idiots, who now and then add a comment saying that “it shows Aryan migration from North West to East”. To explode their idiotic theories Indra was given the direction East and Varuna was given west which is the seaside for Ancient Hindus.

And it gives a slap on the Max Muller gang who used capital ‘A’ for wherever the word occurred. Actually Arya should be translated ‘cultured, educated, civilized’ . Emperor Sudas, the winner of the Ten Kings War, was associated with River Yamuna. All the 30 Western clowns blink and bluff at the mantra. They were surprised to see the RV covering an area from Iran to Delhi. The name has su+DASA. Later we have Kali DASA, Sur Dasa, Kabir DASA. So their dasa , dasyu theories are also challenged. They are still struggling to identify the Simyus who are coupled with dasyus! Dasyus mean lawless, godless robbers. It is clearly said in Manu smrti and Kalidasa’s works.

By the way, Rig Veda has the oldest war description in the world. The War of Ten Kings has been constantly referred to by various Rishis in various Mandalas. And that was an internal war, not on Dasyus or Dasas. Poor Westerners never discuss it . Tamils fought the longest internal wars in the world.  Chera, Choza, Pandya kings killed each other for 1500 years continuously till Sundara Pandya invited foreign Muslims and finished Hindu Tamils. Knowing the 2000 year old Tamil literature would help one very much in understanding the RV. 2000 year old Sangam Tamil literature has the Sanskrit words Yupa pillar, Rajasuya Yagna, Eagle shaped fire altar of Karikal Choza and spreading Dharba grass and  walking Seven Steps, a Vedic custom.

Rigveda is the Oldest Miracle Book in the world. There are stories which beat Harry Potter and earlier spooky and eerie stories. Ghosts and demons and dragons are referred to.

Xxx

Dialogue Poems and Dance Dramas

Rigveda is the oldest book with dialogue poems. It shows that the dramas originated in India . Even before me finishing Third Mandala of the Rigveda, I have come across five dialogues. There are sexy dialogues in the later parts which Griffith and his gang refused to translate. For Hindus sex is no taboo. They were the one who produced Kama sutra of Vatsyayana, the origin of which lies in the Rigveda.

Rigveda is the book that covers the largest area on earth. We have geographical and historical references from Iran to Delhi region where Jamuna/Yamuna flows. Eighth Mandala of the Rig Veda has many references to Iran and camels.

Xxx

Book on Nature

Rig Veda is the first book on Nature. Ode to Kapinjala bird by Grtsamada in the second mandala paved way for Wordsworths and Shelleys to sing about daffodils and ode to skylark.

The oldest part of the Old Testament is assigned to 900 BCE whereas even anti Hindu idiots like Max Muller assigned Rigveda 1500 BCE that too after Professor Wilson blasted Max Muller for dating it to 1200 BCE. Now we know it was compiled by Vyasa before 3100

BCE which is proved by the marine excavations around Dwaraka and hydrological research by nuclear scientists on the dried beds of River Sarasvati.

Rigveda is the oldest book in the world with beautiful similes. Though we see similes in Babylonian Gilgamesh and Homer’s Iliad and Odyssey, the number of similes and the variety of similes in the Vedas are amazing . Kalidasa followed this tradition later.

Xxx

Decimal System

Decimal System is everywhere in the Rig Veda. The seers always speak in terms of hundreds and thousands. With the use of horses and wheeled chariots they changed the world. With the decimal system they paved way for computers and space research. With the domestication of cows and bulls, they paved way for agriculture and infants’ health.

Rigveda is the oldest book with Number Symbolism. The way the Rishis play with Number Three and Number Seven is mind blowing. All the Western Clowns under Max Muller are suffocating. Moreover, Indus Valley seals have more Sevens and Threes in their strokes.

Xxx

Rig Veda- Book of Drug Addicts!

The Thirty +++Western rascals have called the Rigveda  a ‘Book of Drug Addicts’. For them Soma plant and it’s juice are hallucinating. In the very first page of Rigveda, Griffith has said it. Had the western frauds known the real Soma plant, they would have made billions of dollars every minute by canning and bottling them like Coca Cola.

Swami Vivekananda was right when he said “Even if we throw all the mud from the bottom of Indian Ocean on the West it wouldn’t be enough” (for the evils they did to us). We must punish the Western frauds for calling the Rigveda a Book of Drug addicts. Soma plant is mentioned in 90 percent of the hymns. For them it is a drug. For Hindus, it is a very rare elixir. Tamil inscriptions say ‘it purifies the mind’.

No two clocks agree. No two westerners agreed on important mantras. What the frauds have agreed is that “Aryans invaded India and destroyed local civilisation” and “Vedic Hindus were drug addicts”. According to them, Rishis had a bath before sunrise and sat before fire and drank Soma juice. And the wonder is they wasted it by pouring into sacrificial fire as well!!

Which idiot would believe that a community systematically drank at 5 am in the morning everyday, that too after a holy bath! That too after wasting the precious Soma into fire every time they did Yaga and Yagna! And for the rest of the day, they did their usual work without any difficulty!!!

For God sake read the Rig Veda and make marginal notes wherever the word Soma comes. They themselves couldn’t explain how come falcons and eagles brought Soma.

To be continued……………….

tags – Rig veda -2, everything- 2

கூன் முதுகுக் கவிஞர் அலெக்சாண்டர் போப் (Post No.9768)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9768

Date uploaded in London – –23 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பதினெட்டாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப் (ALEXANDER POPE ). அவர் நக்கல், கேலி செய்யும் விமர்சனங்களை எழுதுவதில் வல்லவர். போப்பின் காலம் (AGE OF POPE) என்று 1700ம் ஆண்டுகளை அழைக்கும் அளவுக்கு அவர் புகழ் மேலோங்கியது.

போப் (POPE) , லண்டனில் ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்.பி ரிட்டன் கத்தோலிக்க மதத்தை ஆதரிக்காத நாடு. இதனால் போப் நினைத்த இடத்தில் வசிக்க முடியாது. எல்லா பள்ளிகளிலும் சேர முடியாது . விரும்பிய செயல்களைச்  செய்யவும் இயலாது கஷ்டப்பட்டார். அவருக்கு நல்ல கல்வி அமையவில்லை. தொடர்ச்சியாகப் படிக்கவும் முடியவில்லை.  nஆயினும் அவர் சொந்த முயற்சியில் லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு , இத்தாலிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.

இளம் வயதில் அவர் முதுகில் , தண்டுவடத்தைப் பாதிக்கும் ஒரு தொற்றுநோய் தாக்கியதால் அவருக்கு கூன் (HUNCH BACK) விழுந்தது. அவர் வளர்ச்சி குன்றியதோடு உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டது. ஒரு பக்கம் இப்படி ஏற்பட்ட பாதிப்பு, மறுபக்கம் அவருக்கு வேறு வகையில் உதவியது. முழு கவனத்தையும் படிப்பிலும் கவிதை எழுதுவதிலும் செலவிட்டார்.

23 வயதுக்கு முன்னரே எழுதத் துவங்கினார். ஒரு நகைச் சுவை (AN ESSAY ON CRITICISM )கவிதையையும் எழுதி வெளியிட்டார்.

அதில் அவர் எழுதிய “கொஞ்சம் படிப்பது பெரிய ஆபத்து  (A LITTLE LEARNING IS A DANGEROUS THING) ஆகும்”– என்ற புகழ்பெற்ற வாக்கியம் பொன்மொழியாக அமைந்தது .இதில் தாக்குண்ட விமர்சகர்களும் எழுத்தாளர்களும் சினந்து எழுந்தனர். “டேய், கூன் முதுகுத் தவளையே!” (HUNCH BACKED TOAD) என்று அவரை ஏசினர். இதற்குப் பின்னரும் போப் சளைக்கவில்லை. அவருக்கு மிகவும் புகழ் சம்பாதித்துக் கொடுத்த ‘தி ரேப் ஆப் தி லாக்’ (THE RAPE OF THE LOCK)  கவிதையை வெளியிட்டார். இது கிண்டலும் கேலியும் நக்கலும் பகடியும் நிறைந்த படைப்பு. ஒரு இளம் பெண்ணின் அழகிய முடியை ஒருவன் திருடிய பின்னர் தொடுக்கப்படும் வழக்கு பற்றியது இது. அக்கால ஆடம்பரப் பித்தர்களை ஏசும் கவிதை இது.

1715- 1726 இடைப்பட்ட ஆண்டுகளில் கிரேக்க, லத்தீன் மொழி இலக்கியங்களை  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஹோமரின் இலியட் (Iliad of Homer) காவியம் இதில் ஒன்றாகும். பின்னர் அங்கத, சிலேடைச் செய்யுட்களை எழுதினார். இதில் முக்கியமானது ‘தி டன்ஸியாட்’ (THE DUNCIAD). மோசமான விமர்சகர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளைத் தாக்கும் படைப்பு இது .

போப்-பின்

பிறந்த தேதி மே  21, 1688

இறந்த தேதி – மே 30, 1744

வாழ்ந்த ஆண்டுகள் – 56

படைப்புகள்…..

1711 – AN ESSAY ON CRITICISM

1712 – THE RAPE OF THE LOCK

1728-35 – MORAL ESSAYS

1733-34-  AN ESSAY ON MAN

1733- 38-  IMITATIONS OF HORACE

1735 – OF THE CHARACTERS OF WOMEN

TAGS– கூன் முதுகுக் கவிஞர், அலெக்சாண்டர் போப், ALEXANDER POPE, RAPE OF THE LOCK

சூர்தாஸர் அவதரித்த கிராமம் உரிய பெயரைப் பெறுகிறது (Post.9767)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9767

Date uploaded in London – –  –23 JUNE   2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சூர்தாஸர் அவதரித்த கிராமம் உரிய பெயரைப் பெறுகிறது!

ச.நாகராஜன்

16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகான் சூர்தாஸர். இரு கண்களை இழந்த போதும் இடைவிடாமல் இறைவனைப் போற்றிப் பாடினார். ஊனக் கண்ணை இழந்த அவர் ஞானக் கண்ணைப் பெற்றார். இறைவன் அருளால் ஊனக் கண்களில் ஒளி பெற்று இறை தரிசனத்தையும் பெற்றார். 1478ஆம் ஆண்டு பிறந்த சூர்தாஸர் 1581ல் இறைவனுடன் ஒன்றினார். விரஜ மொழியில் பக்தி இலக்கியத்தைப் படைத்த இவர் மதுராவில் உள்ள பராசௌலி கிராமத்தில் இறுதிக் காலத்தில் வாழ்ந்து வந்தார். முகலாயப் படையெடுப்பை ஒட்டி இந்த கிராமம் மஹமத்பூர் என்று பெயரிடப்பட்டது.

இன்றைய உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல்வரான யோகி ஆதித்ய நாத் பண்டைய பழம் பெரும் பாரம்பரியத்தை கொண்ட ஊர்களை, அவை பெயர் மாற்றப்பட்டிருப்பின், மீண்டும் புகழோங்கிய பழைய பெயரைக் கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறார்.

அதையொட்டி அவர் அதிகாரபூர்வமாக கெஜட் வெளியீட்டில் மஹமத்பூரை பராசௌலியாக மாற்றியுள்ளார். பராசௌலி பராசர முனிவர் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது.

பொதுமக்களின் நீண்டநாளைய வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு விட்டதால் அங்கு ஒரே மகிழ்ச்சி. சூர்தாஸ் ப்ராஜ் ராஸ்தாலி விகாஸ் சமிதியின் செயலாளர் ஹரி பாபு கௌசிக், “ 1982ஆம் ஆண்டிலிருந்தே இந்த பெயர் மாற்றத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் யோகி ஆட்சிக்கு வந்த பின்னரேயே இது செயல்படுத்தப்பட்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். பராசௌலி கோவர்தனில் உள்ள ஒரு கிராமம். இங்கு ஏராளமான பக்தர்கள் சூர்தாஸரின் சமாதிக்கு வந்து வணங்குகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் சூர்தாஸரின் பாடல்கள் எழுதப்பட்டிருப்பது சாதாரணமான காட்சியாகும்.

மாவட்ட மாஜிஸ்ட் ரேட் நவ்நீத் சிங் சஹால், “2019இல் பிரேரிக்கப்பட்ட இந்த வேண்டுகோள் உத்தரபிரதேச அரசினால் அங்கீகரிக்கப்பட்டு சென்ற மாதத்தில் ( மார்ச் 2021இல்) கெஜட் அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது” என்றார்.

(செய்தியின் ஆங்கில வடிவத்தைக் கீழே காணலாம்.)

யோகி ஆதித்ய நாத் அரசுப் பொறுப்பை ஏற்றவுடன் அலஹாபாத் ப்ரயாக் ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதே போல ஃபஜியாபாத் அயோத்யா ஆனது;  முகல்சராய் தீன் தயாள் உபாத்யாயா நகர் ஆனது. ஆக்ராவில் உள்ள முகல் மியூஸியம், சத்ரபதி சிவாஜி மஹராஜின் பெயரைக் கொண்டு விளங்குகிறது!

இதே போல ஆக்ராவையும், வரலாற்றை நன்கு ஆய்வு செய்து அதன் பெயரை அக்ராவன் என மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெயர் மாற்றம் நடக்கும் என்றே நம்பலாம்!

ஜெய் சூர்தாஸ்!

Mathura, Apr 8, 2021 (PTI) The Uttar Pradesh government has renamed Mathura’s Mahmudpur village as Parasauli, an official said on Thursday.

Confirming it, District Magistrate Navneet Singh Chahal said a gazette notification has been issued, renaming the village in Goverdhan tehsil.

The village is associated with Bhakti saint Surdas, who had spent over seven decades here, an office-bearer of Surdas Braj Ras Sthali Vikas Samiti said here, adding that they have been demanding a change in the name since 1982.

Narrating the history of the village, another office-bearer of the Samiti said the village was named Parasauli as noted sage Parashar was born here.

Lord Krishna and his divine consort Radha took part in a ‘Raslila’ for uninterrupted six months in the Chandra Sarovar area of the village, the office-bearer added.

***

tags–  சூர்தாஸர், கிராமம் , parasauli, surdas village,

EVERYTHING IS IN THE RIGVEDA! (Post.9766)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9766

Date uploaded in London – –22 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

It is amazing to see the continuity of our customs from the days of the Rig Veda to this day. Not many Hindu scholars noticed or not documented those customs. I don’t expect Western Buffoons to list them because Max Muller gang is not only Anti Hindu but also could not understand many of the customs said in mantras. Most of them including Max Muller never visited India nor seen a true Vedic Hindu.

Rigveda contains over 1000 hymns in which we come across over 10000 mantras . One will be amazed and flabbergasted to see the way the seers address the Gods. I have just finished reading two out of Ten Mandalas(Books) in the Rig Veda.

Let me tell you the points I have noted.

Everyone knows that this is the Oldest Religious Book in the world.

Most of you know that this is the Oldest Anthology in the world. Several thousands of years after the Rigveda, Tamils also made anthologies like this. Tamil books themselves are 2200 years old!!

Most amazing thing in the Vedas is the Mudra or Signature they use in the Rig veda. I used to wonder how come the great Tamil saint Tiru Jnana Sambandar put his name in every decad 1400 years ago and how come 900 years after him the great Carnatic music composer Sri Purandaradasa used the same style and revived it. Many of the hymns in the Veda have the names of the Seers who sang them e.g. Agastya, Grtsamada, Bhargava,Visvamitra. All the Carnatic music composers used the technique. We see Thyagaraja’s name in his Krtis and Guruguha for Muthuswami Dikshitar krtis. Dikshitar used Guru Guha , perhaps following Agastya. He also used Mana’s son and in few his own name ‘Agastya

Before Purandaradasa, Jeyadeva also placed his name in every Ashtapathi. It continued with Kabir Mirabai and the latest Tamil composers of 20th century.

Until this day this Rig Vedic custom is followed.

Xxx

Dharba Grass

All the Brahmin priests leave the house with a bundle or bunch of Dharba grass. Every Brahmin use it in their day today rituals. As a Brahmin I use it at least once a month. Most amazing thing is the way the Vedic seers used it on the banks of River Yamuna, Ganga, Sindhu and Sarasvati is followed by me in London on the banks of the River Thamasa, that is Thames.

All the Vedic Rishis or seers invoke the gods to sit on the Dharba grass spread before them. I do the same to invoke my departed forefathers every New Moon day what is called Amavasya. Apart from 12 new moon days and 12 first days of every Hindu month, Hindus are supposed to this Tarpana 70 more days. I invoke the departed souls from my father’s side and from my mother’s side in the Dharba grass on a plate. Then we do it with mantras and Sesamum seeds and the water.

So this Dharba grass  business is being continued for several thousands of years.

Amazing thing about this Dharba business is, it is in 2000 year old Sangam Tamil literature too!!

xxx

Let me tell you more amazing things. In Carnatic and Hindustani songs we have Pallavi.

Refrain (Pallavi)  is part of the compositions. That is the opening lines or sentences are used after each stanza. This custom or style is started by the Vedic Rishis. Bards like Homer and Sangam age Tamil poets also used refrains. We see it in Bharati’s Tamil poems too.

But the oldest refrains are found in the Rigveda. Some times all the stanzas/ mantras finish with the same word s or lines. Sometimes a particular Rishi finish all his compositions with the same stanza/ Mantra.

The wonder of wonders is like Visvamitra of Rig Veda, Tamil saint, The Boy wonder, Tiru Jnana Sambandar, also composed 11 stanzas and the finishing has the same message like the previous decads. Though we call it decads they have 10+1=11.

Jnana Sambandar, the boy saint, who changed Tamil Nadu completely within 16 years of his life, mentioned Rig Veda in many of his Pathikams / decads. No wonder he followed Visvamitra.

Look at the beauty in his name. Visvamitra means ‘Friend of the World’. And the very first hymn was sung by Madhu chandas which means Mr Honey Poetry or honey poems.

Vedas are full of positive words. They address all the Gods as Friends and address their colleagues Comrades. I don’t know whether there is any Index book that gives the information of the number of times each word is used. They use the similes ‘God please help me like a friend helping another friend’.

‘God please shower me good things like a father showers his love and affection on his children’.

Mother, father, brother, sister, friend and cow and calf are used thousands of times. I don’t find it in Sangam Tamil literature that many times. Even ten fingers are called ‘10 sisters’, because they help you like a sister.

Wonders never stop in the Rig Veda.

To be continued………….

tags- everything, Rig Veda,

LONDON CALLING (HINDUS) 21-6-2021 (Post No.9765)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9765

Date uploaded in London – –22 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

21-6- 2021 MONDAY PROGRAMME AS BROADCAST

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -6 MTS

PRAYER – MRS DAYA NARAYANAN

Talk By Tiruchi Ganesan on Dharma Sastra- 12 minutes

KATRINILE VARUM GEETHAM-  SONG BY RANJANI , 4 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT MEERA BHAI- 12 MTS

ASHTAPATHI -19 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -6 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

Mangalam – 2 minutes

TOTAL TIME- APPR. 50 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS– BROADCAST 21-6-21

LONDON CALLING (TAMILS) 20-6-2021(Post No.9764)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9764

Date uploaded in London – –22 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

20-6-2021 SUNDAY PROGRAMME TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

 OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS 

 Prayer – MISS MAHISA SRINIVAS, PARIS.

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON THIRU NAGESWARAM TEMPLE,8 MTS

 Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR – 10 mts 

 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN 

 WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN –25 MINUTES 

 SEMINAR FOR WRITERS in English 

 Conducted by Dr V S Mani of Amersham and Mrs Uma Prasad of Dubai 

 20 minutes

DURATION-  appr. 70 minutes 

 XXXX 

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS– BROADCAST 20-6-21

மர்மக் கதை மன்னன்; உலகில் முதல் துப்பறியும் கதை எழுதிய ‘போ’ (Post.9763)

மர்மக் கதை மன்னன்; உலகில் முதல் துப்பறியும் கதை எழுதிய ‘போ’  (Post.9763)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9763

Date uploaded in London – –22 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மர்மக் கதை மன்னன்; உலகில் முதல் துப்பறியும் கதை எழுதிய ‘போ’  (Post.9763)

உலகில் முதலில் ஆங்கிலத்தில் துப்பறியும் கதை (DETECTIVE STORY ) எழுதியவர் அமெரிக்க  கதாசிரியர் எட்கர் ஆலன் போ (EDGAR ALLAN POE)  என்பவராவார்.

பயங்கரக் கதைகள் மற்றும் பயங்கரக் கவிதைகள் எழுதுவதில்  முன்னனியில் நின்றவர் 19-ஆம் நூற்றாண்டின்  அமெரிக்க எழுத்தாளர் எட்கர் ஆலன் போ.

போ- வுக்கு மூன்று வயது ஆனபோதே தாய் தந்தையரை இழந்தார். இதனால் அவரை அமெரிக்காவில் வர்ஜினியா ரிச்மண்டிலுள்ள ஒரு பணக்கார புகையிலை வணிகர் வளர்த்து வந்தார். ஆனால் போ- வுக்கு அது குடும்ப சூழ்நிலையைத்  தரவில்லை.. போ- வும் மோசமாக நடந்து கொண்டார். படிப்பில் கவனம்  செலுத்தாமல் கவிதைகள் எழுதுவதில் முனைப்பு காட்டினார். இதுவும் வளர்ப்புத் தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது.

***

பிறந்த தேதி -19-1-1809

இறந்த தேதி -7-10-1849

வாழ்ந்த ஆண்டுகள்-40

***

போ – வின் படைப்புகள்

1833 – MANUSCRIPT FOUND IN A BOTTLE

1839- THE FALL OF THE HOUSE OF USHER

1840- TALES OF THE GROTESQUE AND ARABESQUE

1841 – THE MURDERS IN THE RUE MORGUE

1843 – THE GOLD BUG

1845 THE RAVEN AND OTHER POEMS

1845 -THE PIT AND THE PENDULUM

1845 -TALES

1849 -ANNABEL LEE

***

சூதாட்டம் மூலம் பெரும் கடனாளியாகிய போ, 1827ல் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற நேரிட்டது. 1831-ம் ஆண்டில்  வெஸ்ட்பாயின்ட் மிலிட்டரி அகாடமி, இவரை கல்வி நிறுவனத்திலிருந்தே வெளியே தள்ளியது.

24 வயதில் அவர் எழுதிய பாட்டிலில் கண்ட எழுத்து MANUSCRIPT FOUND IN A BOTTLE என்னும் சிறுகதை வெற்றி அடைந்து பரிசையும் பெற்றது . பின்னர் பல பத்திரிகைகளில் பணியாற்றினார். ஆயினும் எதிலும் நிலைத்து நிற்க முடியவில்லை. இவருடைய அதீத குடிப் பழக்கத்தினால்  ஒவ்வொரு நிர்வாகமும் அவரை வெளியே அனுப்பியது.

இதற்கு நேர் மாறாக அவர் இயற்றிய கதைகளும் கவிதைகளும் பெரும் புகழ் ஈட்டித் தந்தன. 31 வய தல்  கதைத் தொகுப்பினை வெளியிட்டார். அதற்குப் பின்னர் அவர் எழுதிய THE MURDERS IN THE RUE MORGUE

(ரூ மார்க்கில் படுகொலைகள்) என்ற புஸ்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் அந்த கொலைக் கதைதான் உலகின் முதல்  துப்பறியும் கதை (Detective Story)  என்று கருதப்படுகிறது

இப்படி மர்மக்கதை எழுதினாலும் அவருக்கு பேய், பிசாசுகள் என்றால் பயம் ;மரணம் குறித்தும் பயந்தார். இப்போது வரும் பயங்கரக் கதைகள், மர்மக்  கதைகள், குற்றம் பற்றிய கதைகள் அனைத்திலும் போ -வின் ஒரு அம்சத்தையாவது  காணலாம். அந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தினார். வருங்கால மர்மக் கதைகளுக்கு போ அஸ்திவாரம் இட்டார் என்றால் மிகையில்லை .

போ எழுதிய கதைகள் திரைப்படத்திலும் டெலிவிஷன் தொடர்களிலும் இடம்பெற்றன . சில கதைகள் முழு அளவிலும் மற்றவற்றில்  சில அம்சங்களையும் காணலாம். ‘ஹவுஸ் ஆப் அஷர்’ என்ற கதை திரைப்படமாகியது. ‘பேய்பிடித்த அரண்மனை’ என்ற இவரது கவிதைத் தலைப்பு ஒரு திரைப்படத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது; போவின் கதை, கவிதைத் தொகுப்பு வசனங்களை மேலும் பல டெலிவிஷன் தொடர்களிலும் கையாண்டனர்

-SUBHAM-

–subham–

மர்மக் கதை மன்னன்,  முதல் துப்பறியும் கதை,  எட்கர் ஆலன் போ

அற்புதமான பக்த மீராபாய் சரித்திரம் (Post No.9762)

அற்புதமான பக்த மீராபாய் சரித்திரம் (Post No.9762)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9762

Date uploaded in London – –  –22 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

அற்புதமான பக்த மீராபாய் சரித்திரம்

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 21-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

பிருந்தாவனம், கிரிதர கோபாலன், பக்த மீராபாய் – ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சொற்கள் இவை. பக்திக்கான இலக்கணமாக வாழ்ந்தவர் பக்த மீராபாய். அவரது சரித்திரம் அற்புதமான ஒன்று!

அந்த நாளும் வந்திடாதோ, பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ என்று இன்றும் கூட நாம் கேட்கும் அருமையான பாடலை பாரத ரத்னா திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் கேட்கும் போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.

காற்றினிலே வரும் கீதம்! கண்கள் பனித்திட பொங்கும் கீதம்!! கல்லும் கனியும் கீதம்! பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம், பண்ணொளி பொங்கிடும் கீதம்! காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம், நெஞ்சினிலே, நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம், சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனங்குவிந்திடவும் வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும், ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம், நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான், காலமெல்லாம், காலமெல்லாம், அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம், காற்றினிலே வரும் கீதம்!

அருமையான இந்தப் பாடல் 1945ஆம் ஆண்டு வெளி வந்த பக்த மீரா படத்தில் வரும் பாடல். எம்.எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரல் ஒரு புறம் இருக்க, இதை அருமையாக எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.இசை அமைத்தவர் டி.எஸ்.வெங்கட்ராமன் அவர்கள்.

பக்த மீராவின் அற்புதமான உணர்வுகளை நம்மிடையேயும் எழுப்பிய அமர வரிகள் இவை. கிருஷ்ண பக்தியில் தோய்ந்து தனது பாடல்களால் நம்மையும் அதில் தோயச் செய்யும் பக்த மீராபாயின் 1500க்கும் மேற்பட்ட பாடல்கள் பக்தி இலக்கியத்தில் தனி ஒரு சிறப்பான இடத்தைப் பெறுபவையாகும்.

ஜோத்பூர் அரசை நிர்மாணித்தவர் ராவ் ஜோதா. அவரது மகன் ராவ்தூதா. அவரது இளைய மகன் தான் ரத்தன் சிங் ரதோர். அவருக்கும் வீரகுமாரிக்கும்

1498ஆம் ஆண்டு குர்கி என்ற கிராமத்தில் ராஜபுதனத்து இளவரசியான மீராபாய் பிறந்தார். மிஹிரா (மீரா) என்ற சொல்லுக்கு சூரிய சந்திர தேஜஸ் கொண்டவர் என்று பொருள். மீராபாயின் சரியான வரலாறு நமக்குக் கிடைக்காத நிலையில், மீராவின் இளமைப் பருவம் பற்றியும் அந்தப் பருவத்தில் அவருக்கு எப்படி கிருஷ்ணரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது என்பது பற்றியும் ஏராளமான செய்திகள் உண்டு. முதல் செய்தி அவரது இளமைப் பருவத்தில் அவருக்குக் கிடைத்த கிருஷ்ணர் பொம்மையை வைத்து அவர் விளையாடும் போது அவரது அம்மா அது தெய்வீகத் தோற்றம் என்றும் அதைக் கண்டபடி வைத்து விளையாடக் கூடாது என்றும் சொல்ல உடனே அளப்பரிய மதிப்பும் அன்பும் அவருக்கு கிருஷ்ணர் பால் ஏற்பட்டது என்று கூறுகிறது.

இன்னொரு செய்தி, அவரது இளமைப் பருவத்தில் அவரது இல்லத்திற்கு வந்த ரூப கோஸ்வாமி என்ற சாது அவருக்கு ஒரு சிறிய கிருஷ்ண விக்ரஹத்தை அளிக்க அதன் பால் பக்தியும் பிரேமையும் அவருக்கு ஏற்பட்டது என்று கூறுகிறது. குழந்தை வளர்ந்த போது ஒரு கல்யாண ஊர்வலம் வர, அதை மாடத்திலிருந்து பார்த்த மீரா குதிரை மீது அமர்ந்து வரும் மாப்பிள்ளையைப் பார்த்துப் பின்னர், எனக்கு மாப்பிள்ளை யார் என்று அவரது அம்மாவிடம் கேட்க அவரோ, உனக்கு கிருஷ்ண பகவானே தான் மணமகன் என்று கூற, மீரா தனக்கு கிருஷ்ணனையே மணாளனாக வரித்தாள் என்று ஒரு வரலாறும் உண்டு.

துரதிர்ஷ்டவசமாக மீராவின் தாயார் அவரது இளம் வயதிலேயே இறந்தார். அவரது தந்தையோ காலத்தின் நிர்பந்தத்தால் மகத்தான போர்களில் ஈடுபட வேண்டியதாயிற்று. ஆகவே இளம் ராஜகுமாரியான மீரா, தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்க்கப்படுவதற்காக ஜெய்பூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்தா (Medta) என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். 1516ஆம் ஆண்டு அவருக்கு 18 வயது ஆனது. சிசோதயா வம்சத்தைச் சேர்ந்த சித்தோர்கர் இளவரசனுடன் அவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டது.. அப்போது முஸ்லீம் படையெடுப்பு ஆரம்பித்திருந்தது. ஆகவே அவர்களை வலுவாக எதிர்க்க ராஜபுதனத்தின் இரு வம்சங்கள் இணைவதற்குச் சாதகமாக இரு வமிசத்தாரும் கூடி இந்த முடிவை எடுத்தனர். வரலாற்றுச் செய்தியின் படி இந்த திருமணத்திற்கு முன்னம் மீரா தனது கிருஷ்ண பொம்மையை மணக்கும் சடங்குகளைச் செய்து கொண்டார். அவரது கணவரின் பெயர் ராணா கும்பா எனப்படும் போஜராஜன் (Bhojaraj).  மீரா அரசவம்சத்தின் குல தெய்வமான துளஜ பவானியையோ சிவபிரானையோ வணங்க மறுத்தார். இதனால் புகுந்த வீட்டில் ஒரு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

ஒரு நாள் மீராவின் அறையில் அவரது பேச்சுக் குரலும் உற்சாகமான சிரிப்பலையும் எழ அவரது கணவன் சந்தேகம் மொண்டு அறையை வலிமையுடன் தள்ளித் திறந்து பார்க்க, உள்ளே மீரா தனது கிருஷ்ண விக்ரஹத்தின் முன்னர் கிரிதர கோபாலனுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து திகைத்தான். இந்தத் திருமணம் மூன்று ஆண்டுகள் தான் நிலைத்தது. தனது உண்மையான கணவன் கிருஷ்ணரே என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார். அவரது புகுந்த வீட்டார் அவரை பயத்துடன் பார்த்தனர். ஏனெனில் ராஜபுத்திர பழக்க வழக்கங்கள் எதையும் அவர் பின்பற்றவில்லை; மறுத்து விட்டார். மாறாக கோவில்களுக்குச் செல்வது, பாடுவது, ஆடுவது என்று இருந்ததோடு அந்தஸ்து, ஜாதி வேறுபாடின்றி அனைவருடனும் சர்வ சாதாரணமாகப் பழகி வந்தார். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவரை அவர் குருவாகவும் கொண்டார். இதனால் வெறுப்புற்ற அவரது புகுந்த வீட்டார் அவரைக் கொல்ல பல முயற்சிகள் எடுத்தனர். அவரது மைத்துனரும் நாத்தனாரும் அவருக்கு எதிராகக் கிளம்பினர்.

முதல் முயற்சியாக அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை கிருஷ்ண நிவேதனம் செய்யப்பட்ட அமிர்தமாக அவர் அருந்த அவரை அந்த விஷம் ஒன்றும் செய்யவில்லை. அடுத்து ஒரு நஞ்சு கக்கும் பாம்பை மலர்க்கூடையில் வைத்து அவரிடம் தந்தனர். அவர் கூடையைத் திறந்த போது பாம்புக்கு பதிலாக மலர் மாலை ஒன்று இருந்தது. பின்னர் ஒரு முள் படுக்கையை அவருக்குத் தர அதிலும் அவர் படுத்தார். ஆனால் முட்கள் ரோஜா மலர்களாக மாறி இருந்தன. அவருக்குத் தீங்கு எதுவும் ஏற்படவில்லை. அவரது தந்தையும் இறந்து விட 1527ஆம் ஆண்டு வாக்கில் மீராபாய் தனது அரண்மனையை விட்டு வெளியேறினார். ஸ்தலம் ஸ்தலமாகச் சென்றார்.  அங்கெல்லாம் இறைவனின் நாமத்தை விரஜ மொழியில் இனிய பாடல்களால் பாடி நர்த்தனம் செய்து பக்திப் பரவசத்தை அனைவருக்கும் ஊட்டினார்.

Merrabai temple at Chittorgarh
Merta in Rajasthan, where Meera lived.

கொலை முயற்சியிலிருந்து மீள்வதற்காக தனது  சொந்த ஊருக்குத் திரும்பி வந்த அவர் அங்கு சில காலம் வாழ்ந்தார். சதுர்புஜி (Chaterbhuji) ஆலயத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். அந்த ஆலயத்தில் இன்றும் மீராபாயின் பெயர் சொல்லப்படுகிறது. பின்னர் அவர் பிருந்தாவனம் சென்றார். கௌடிய வைஷ்ணவ பிரிவைச் சேர்ந்த, தனக்கு சிறுமியாக இருந்த போது கிருஷ்ண விக்ரஹத்தைத் தந்த ரூப கோஸ்வாமியை சந்திக்க அவர் முயன்றார். ரூப கோஸ்வாமியோ அவர் ஒரு பெண் என்பதால் அவரைச் சநதிக்க மறுத்தார். மீராவோ கிருஷ்ணர் ஒருவரே ஆண் மகன் என்றும் இதர அனைவரும் கோபியரே என்றும் வாதிட்டார். ரூப கோஸ்வாமி தனது தவறை உணர்ந்து அவரைச் சந்தித்தார்.

பின்னர் மீராபாய் குஜராத் மாநிலத்தில் உள்ள த்வாரகாவிற்குச் சென்றார். அங்கு ராணாசோர் (Ranachor) கோவிலில் இறைவனை தரிசித்தார். ஆனால் இடைவிடாது தொடர்ந்த இந்து-முஸ்லீம் போர்களினால் அவருக்கு ஏராளமான தொந்தரவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. 1535இல் சித்தூர் தோற்கடிக்கப்பட்டது. ஆகவே அரச குலத்தில் பிறந்த மகளிர் எரியும் நெருப்பில் கும்பல் கும்பலாக நுழைந்தனர். மீராவோ தான் கிரிதர கோபாலனுக்கு ஆட்பட்டு விட்டதால் நெருப்பில் புக வேண்டியதில்லை என்று தனது நிலையைத் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த நிலையில் மேவார் அரச குடும்பத்தினர் மீராபாயை மீண்டும் வருமாறு ஒரு விசேஷ தூதரை அனுப்பி வேண்டினர். அவர் மறுத்தார். தங்களின் முந்தைய செயலுக்கு வருத்தம் கொண்டிருந்த அரச குடும்பத்தினர் மீராபாய் திரும்பி வரும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.

நிலைமை சிக்கலானது. மீராபாய் தர்மசங்கடத்திற்கு உள்ளானார். அவருக்கு அங்கு செல்லப் பிடிக்கவில்லை. அவர் திரும்பிச் செல்லவில்லை என்றால் அனைவரின் இறப்பிற்கும் அவரே காரணம் ஆவார். இதற்குத் தீர்வு தான் என்ன? கிருஷ்ணரையே கேட்டு விடலாம் என்று அவர் கிருஷ்ண விக்ரஹத்திடம் சென்று முறையிட்டார். இதற்கு அருமையான தீர்வு ஒன்றை  கிருஷ்ணர் அருளினார். ஆம், அவர் மீராவைத் தன்னுள் ஐக்கியம் செய்து கொண்டார். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒளிப்பிழம்பாக மாறிய மீரா அவர் போற்றி வந்த கிரிதர கோபாலனுடன் ஒன்றினார். அதற்கு அடையாளமாக அவர் அணிந்திருந்த புடவை மட்டும் கிருஷ்ண விக்ரஹத்தைச் சுற்றிப் படர்ந்திருந்தது! 1547ஆம் ஆண்டு வாக்கில் இது நிகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அதாவது அப்போது மீராபாய்க்கு வயது 49. மீரா ஸ்ம்ருதி ஸன்ஸ்தான் என்ற அமைப்பு சித்தோர்கரில் இப்போது இயங்கி வருகிறது. ஆண்டு தோறும் மீராபாய் பிறந்த சரத் பூர்ணிமா அன்று மீரா மஹோத்ஸவத்தை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது.

மீராவின் கீதங்கள் இன்று வரை நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ராதையின் மறு அவதாரமாகவே மக்கள் மீராபாயைப் போற்றி வருகின்றனர்.

மீராவின் வாழ்க்கை நாரத பக்தி சூத்திரம் சொல்லும் பக்தி இலக்கணத்திற்கு ஒரு அழகான சான்றாகும்.

பக்தி என்பது என்ன, அது சாதகரை எங்கு கொண்டு விடும்  என்பதைச் சொல்கையில் நாரதர் தத் சிந்தனம், தத் வாக்யம், தத் அவலோக்யம், தத் பரம் என்ற சூத்திரத்தை அருள்கிறார்.

முதலில் தத் சிந்தனம் -அதைப் பற்றியே சிந்திக்க வேண்டும்; பின்னர் தத் வாக்யம் – அதைப் பற்றியே பேச வேண்டும், பின்னர் தத் அவலோக்யம் – அதைச் சொல்லும் சத்சங்கத்தினருடையே மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் தத் பரம் -அதுவாகவே ஆகி விடலாம்! இதுவே நாரதர் அருளும் பக்தி சூத்ரம்!

மீரா கிரிதரனையே சிந்தித்தாள்; அவனைப் பற்றி மட்டுமே அல்லும் பகலும் பேசினாள்; அவனைப் போற்றுபவருடனேயே ஆடினாள், பாடினாள், சகவாசம் கொண்டாள், இதனால் இறுதியில் அவனாகவே ஆனாள். ஜோதியாக மாறி அவனுள்ளேயே புகுந்தாள்!

விஷத்திலிருந்து தப்பித்தது, சதிக்கு உடன்படாமல் இருந்தது உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கான அகச்சான்றுகள் அவரது கீதங்களிலிருந்தே நமக்குக் கிடைத்துள்ளன.

ஒரு இரு வரிப் பாடல் இது. தோஹா என்று இதைச் சொல்வது வழக்கம்

மீரா ஜன்மி மேட்தே, பரநாயீ சித்தோட்!

ஹரி பஜன் ப்ரதா பசே, பயி சகல சீதீ சிர மோர்!

மீரா தான் தனியாக இருப்பதை கிரிதர கோபாலனுக்கு உணர்த்தி அவனை அழைக்கும் கீதம்:

மோஹன் ஆவோ தோ சரீ!

மாரா ரே மந்திர் மே, மீரா அகேலீ கடீ, அகேலீ கடி வோ மீரா அகேலி கடீ!

கண்ணனுக்கு எனது நமஸ்காரங்கள் மயிலிறகு கொண்ட மகுடம் சூடியவன் அவன்! நெற்றியிலே அழகுத் திலகம். காதைச் சுற்றிச் சுருண்டோடும் கேசம், மதுர உதடுகள்! அடடா!

அவன் தனது வேய்ங்குழலைக் கரத்தில் ஏந்துகிறான். வாயில் வைத்து புல்லாங்குழலை இசைக்கிறான்! அவனது ராதையை மயக்குகிறான். இதோ இந்தக் காட்சி மீராவைக் கொள்ளை கொள்கிறதே! இதோ மோஹனக் காட்சி, அவன் கோவர்த்தன கிரியைத் தூக்கிய காட்சி!

இப்படி ஏராளமானவை மீராபாய் பாடிய பாடல்கள்!

பாரத ரத்னா திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட ஏராளமான அருமையான இசைக் கலைஞர்களின் வாயிலாக இந்தப் பாடல்களை யூ டியூப் உள்ளிட்ட சாதனங்கள் மூலம் தினமும் கேட்கலாம். மெய் மறக்கலாம். கிருஷ்ண பக்தியில் திளைக்கலாம்.

மீராவின் நாமம் போற்றுவோம்; அவர் வழியில் கிருஷ்ண பக்தியில் திளைப்போம்; கிருஷ்ணரையே அடைவோமாக. நன்றி, வணக்கம்!

***

கேட்க வேண்டிய பாடல்கள் :-

கிரிதர கோபாலா (2 நிமி 47 விநாடி)

பிருந்தாவனத்தில் கண்ணன்  4 நிமிடம்   56 விநாடி    

Index

பக்த மீரா :- பிறப்பு, மறைவு, ராஜபுதன இளவரசி, கிருஷ்ண பக்தி ஏற்பட காரணங்கள், திருமணம், ரூப கோஸ்வாமி சந்திப்பு, துவாரகையில் கிருஷ்ணனுடன் ஒளி மயமாக ஒன்றுதல், மீரா கீதங்கள்    

-SUBHAM-

tags- -மீராபாய் ,சரித்திரம்,