MORE JOKES FROM CHENNAI (Post No.9279)

compiled   BY KATTUKKUTY

Post No. 9279

Date uploaded in London – –     18 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ENJOY MORE JOKES FROM 50 YEAR COLLECTION.

—- subham—-

tags –   more jokes, chennai

பாகவத அபசாரம் கூடாது! (Post No.9278)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9278

Date uploaded in London – –18 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF YOU NEED THE ARTICLE IN WORD FORMAT PLEASE WRITE TO US 

பாகவத அபசாரம் கூடாது!

ச.நாகராஜன்

திரிலோக சஞ்சாரியான நாரத முனிவருக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்து விட்டது. பகவான் விஷ்ணு எங்கிருக்கிறார் என்று. ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்ட அவர் முன் விஷ்ணு பகவான் தோன்றினார். அவரிடம், விஷ்ணு, “என்ன, நாரதா? என்ன சந்தேகம்?” என்று கேட்டார்.

“பகவானே! வைகுந்தம் வந்திருந்தேன்.அங்கு உங்களைக் காணோமே..” என்று இழுத்தார் நாரதர்.

TAGS- பாகவத, அபசாரம், கூடாது,

INDEX 52 FOR LONDON SWAMINATHAN’S MARCH 2017 ARTICLES (Post No.9277)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9277

Date uploaded in London – –17 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9200 PLUS POSTS.

XXX

March 2017 Index 52

Cabinet Ministers Anecdotes, 3681;March 1,2017

More Dictator Anecdotes , 3683;2/3/2017

More Parliament Anecdotes, 3686;3/3

Father in Sanskrit and Tamil literature, 3690; 4/3

First Homosexual in History, 3692;5/3

Pandu- Tiger among Men, 3697; 6/3

Three Stories about Stupid Shepherds,3701;7/3

Includes Kalidasa story

Famous Tamil Princess Aadhi Mandhi,3703;8/3

Hindus Migrate to Europe 8000 years ago, 3708;9/3

Word Research shows Sanskrit is the Oldest Language, 3709; 10/3

Story: The Brahmin who ate too much, 3714;11/3

Husband is God! Who will believe Valmiki ,Kalidasa and Sangam Poets?

3717;12/3

Vedic Ribhu is Greek Orpheus- Nicholas Kazanaz, 3720; 13/3

Similarities between Sumerian and Hindu Marriage s;3726;15/3

Ganges in Sumerian Culture,3731; 17/3

Refugees Anecdotes: Hitler s Rule, 3734; 18/3

Censorship Anecdotes, 3738;19/3

Rationing Anecdotes, 3741; 20/3

11 Egyptian Kings with Same Name: Ramesses, 3744; 21/3

Battle Anecdotes,3747; 22/3

Ramayana Cures Curses, 3754; 24/3

Mahabharata at One Go! Bullet Point Summary of 18 Chapters, 3758;26/3

Animal Sex and Akbar’s Daughter, 3760;26/3

30 More Golden Sayings from Panchatantra, 3763; 28/3

Office Seekers Anecdotes, 3766; 28/3

Questions and Answers: Where can I get books on Vedas? , 3770, 29/3

More Rudeness Anecdotes, 3773; 30/3

Kalidasas simile in Tamil Kalitokai about Water Purification, 3775; 31/3

****

TAMIL ARTICLES

மண்டோதரி பற்றி இரண்டு விசித்திரக் கதைகள் ; 3680, 1 மார்ச், 2017.

வேதக்  கழுகும்  எகிப்தியக்  கழுகும் – எகிப்திய அதிசயங்கள் 12, 3684; 2/3

சுவர்களில் எழுதப்பட்ட எகிப்திய சடங்குகள் – எகிப்திய அதிசயங்கள் 13, 3687; 3/3

மன்னர்களுடன் படகுகளைப் புதைத்தது ஏன் ? எகிப்திய அதிசயங்கள்-14; 4/3

சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள்-15; 3693; 5/3

காளிதாசன் காவியங்களில் பெண் கல்வி; 3694; 5/3

விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள் – எகிப்திய அதிசயங்கள்-16; 3696; 6/3

அந்த புலி பாண்டு மஹாராஜா செக்ஸ் பற்றிய உண்மை ;3698; 6/3

இலங்கையைப் பாதுகாக்கும் பஞ்சவர்ணக்கிளி ;3700;  7/3

தமிழ் இளவரசி  செய்த அற்புதம் /ஆதி மந்தி; 3704; 8/3

எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு ; எகிப்திய அதிசயங்கள் -17

8000 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இந்துக்கள் குடியேற்றம், 3707 ; 9/3

உலகம் முழுதும் உமாதேவி வழிபாடு; 3711; 10/3

ரிக் வேதத்தில் பழமையான மண்டலம் எது?3713; 11/3

எகிப்து  மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர் க ளா ? 3716;  எகிப்திய அதிசயங்கள் -18

கணவன் தெய்வமாம்; பெயரை ச் சொல்லக்கூடாதாம் ;அடுத்த ஜன்மத்திலும் அவரே …..3719; 13/3

சொந்த தங்கையை மணந்த மன்னர்கள் – எகிப்திய அதிசயங்கள்-19; 3722;14/3

சுமேரிய கல்யாணம் – இந்து திருமணம் ஒப்பீடு ;3723; 14/3

கற்பண ம் , முசுன்டி, பிண்டி, பா லம்- கம்பன் தரும் ஆயு தப் பட்டியல்;3725; 15/3;

ஹிடலரிடமிருந்து அகதிகள் தப்பியது எப்படி?3728; 16/3

மன்னர்கள் படுகொலைகள்- எகிப்திய அதிசயங்கள்-20; 3729; 16/3

சுமேரிய நாகரிகத்தில் கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும் 3732; 17/3

அறம் வெல்லும், பாவம் தோற்கும்- கம்பன் பொன்மொழி ;3735;18/3

இறந்து போனவர்களுக்கு எழுதிய கடிதங்கள்-எகிப்திய அதிசயங்கள்-21 ;3736; 18/3

எகிப்தில் பேய் விரட்டல்- எகிப்திய அதிசயங்கள்-22; 3740; 20/3

எகிப்திய மன்னன் 94 ஆண்டுகள் ஆண்டானா ?எகிப்திய அதிசயங்கள்-23; ; 3743; 21/3

தற்பெருமை பேசிய ராம்செஸ் மன்னர்கள்; எகிப்திய அதிசயங்கள்-24; 3746; 22/3

லண்டன் பூங்கா பார்க்க வாறீங்களா ?3749; 23/3

ராமாயணம் படித்தால் சாபம் தீரும் ! ராமாயண அதிசயங்கள் 3753; 24/3

மஹாபாரதம் படிக்க முடியவில்லையா ? இதோ ஒரே மூ ச்சில் பாரதம்; 3756; 25/3

மக்களுக்கு அக் பர் பாதுஷா கற்பித்த செக்ஸ் படம்; 3759; 26/3

அதிசயங்கள் நிறைந்த ஆகம நூல்; 3762; 27/3

நாயக்கர் ஆட்சியில் சம்ஸ்க்ருத மறுமலர் ச்சி 3765; 28/3

அவ்வையாரின் அருமையான 30 பொன்மொழிகள் ; 3768; 29/3

இடிதாங்கிக் கருவி பற்றி கம்பன் தகவல்; 3772; 30/3

ராணி மஹா ராணி – எகிப்திய அதிசயங்கள் – 25; 31/3

–subham —

tags- Index 52, March 2017 posts, எகிப்திய அதிசயங்கள்-25

கோணிச் சாக்கும் சுமேரிய மொழிச் சொல்லாம் !! (Post No.9276)

image of Goni (Gunny) sacks

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9276

Date uploaded in London – –17 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோணிச் சாக்கும்  சுமேரிய மொழிச் சொல்லாம் !!

தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடந்த போது உருவான ஆலகால விஷத்தை இரு தரப்பினரையும் காப்பாற்ற சிவ பெருமான் விழுங்கியதும், அதை பார்வதி  சிவனின் கழுத்தில் தடுத்து நிறுத்தியதும், அதனால் சிவ பெருமானை ‘நீல மணி மிடற்றோன்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புறநானூற்றுப் புலவர்கள் பாடியதும் எல்லோரும் அறிந்ததே. ஆயினும் பாணினி இலக்கணம்  பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய வி.எஸ். அக்ரவாலா (INDIA AS KNOWN TO PANINI BY V S AGRAWALA, UNIVERSITY OF LUCKNOW, 1953)  அது அராமியச் சொல் என்று சொன்னதை நேற்று 

tags-கோணி, சாக்கு,  சுமேரிய மொழி,

–SUBHAM —

அம்புலி மாமா வா வா !!!- Part 2(Post. 9275)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9275

Date uploaded in London – –     17 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சந்திர கிரகணம்

பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே ஒரே நேர் கோட்டில்

இருக்கும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது. இந்த நேரத்தில் உணவு வயிற்றில் இல்லாமல் இருப்பது நல்லது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கும், மந்திரங்களை

உரு ஏற்றுவதற்கும் சந்திர கிரகணமே சரியான நேரம்.

சந்திரனின் ஆதிக்கம் உள்ள இடங்கள்

சந்திர ஆதிக்கம் உள்ள இடம் நீர் நிலை. கருத்தொரு மிக்க காதலர்கள் சந்திக்குமிடம் அந்தக் காலத்தில் ஆற்றங்கரை,இந்தக்

காலத்தில் கடற்கரை…..

சந்திரனுக்கு “ஔஷதி” எனப்பெயருண்டு. மருத்துவ செடிகளுக்கும்

கொடிகளுக்கும், இரவில் அல்லி பூப்பதற்கும் சந்திரனே காரணம்.

சந்திர ஆதிக்கம் உள்ளநேரம் “இரவு  . மயக்கும் மாலை பொழுதே நீ போ, போ, இனிக்கும் இன்ப இரவே நீ வா வா”.கணவன் மனைவி

சண்டைகள் எப்பேர்ப்பட்டதாயினும் மறையச்செய்வது இரவே!!!

சந்திர ஆதிக்கம் உள்ளவை அல்லி மலர் வில் மீன், மான்,வண்டு…!!ஆகையினால் “மான் விழியாளே” எனவும், “மீன் விழியாளே”எனவும், “பிறை போன்ற மதியாளே” எனவும் “வில்லினை ஒத்த புருவத்தாளே”எனவும் கண் கரு வண்டுபோலே எனவும், நிலவு போன்ற முகம் என்றும்,

“அல்லித்தண்டு போன்ற கால்கள் உடையவளே”என்றும் வர்ணிக்கிறார்கள்,கவிஞர்கள். ஏனெனில் கற்பனையும், கவிதையும் கலைஞர்களும் சந்திரவயப் பட்டவர்களே!!!

சந்தினுக்கு “மதி”என்றும் பெயர்…..இந்த மதிக்கதிபதி சந்திரனே!!!

ஆங்கிலத்தில் “LUNA “ என்பார்கள் இந்த மதி கெட்டால் தமிழில்

“கிறுக்கன்”என்றும் “பைத்தியம்” ஆங்கிலத்தில் “LUNATIC” என்றும்

கூறகிறார்கள்.”கண்டவுடன் காதல்”, புருஷன் மனைவி அடிக்கடி

சண்டை, விவாக ரத்து, குழாயடியில் சண்டை, இதற்கும் “மதி

கெட்ட” சந்திரனே காரணம்!!!

திருமண பொருத்தம் பார்க்கையில், பெண்ணினுடைய சந்திரன்

நிற்கும் நட்சத்திரத்திற்கும், ஆணினுடைய சந்திரன் நிற்கும்

நட்சத்திரத்திற்குமே பொருத்தம் பார்க்கிறார்கள்.ஏனெனில் மனோ

காரகனாகிய சந்திரன் பொருத்தமானால் “மனதிருந்தால் மார்கமுண்டு” என ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவார்கள்.

சிலர் ஜாதகங்கள் பார்க்கையில் லக்னம் சரியாக இல்லாவிட்டால்

“விதி கெட்டால் மதியைப் பார்” என்று சந்திரனை லக்னமாக

வைத்து பலன் கூறுவர்.

திருமணம் முடிந்தவுடன், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும்

தம்பதியினர் உல்லாசப் பயணமாக “தேனிலவு” சென்று

திருப்திகரமாக, திட்டமிட்டு குடும்பம் நடத்தவதற்கும் சந்திரனே

காரணம்.

பௌர்ணமி நிலவில் அம்மா கையினால் பால் சோறும் அல்லது

மோர் சோறும் ஊர்க் கதைகளையும், மந்திர தந்திர பேய்க்கதை

களையும் கேட்டு மகிழாதவர்களே கிடையாது !!!

சாப்பிடாத குழந்தைகளை அம்மா இரவு வாசலில், முற்றத்தில், மாடியில்

நின்று கொண்டு அம்புலிமாமா வா் வா என்பாட்டுப்பாடி சாப்பிட

வைப்பது தாய்மார்களின் கை வந்த கலை

சந்தரனின் வேறு பெயர்கள்

இந்து, விது,அம்புலி,பதி, நிசாகரன்,திங்கள், அலவன்,சோமன், குமுத

நண்பன்,உடுபதி, ரஜினிபதி,சசி,ஆலோன்,சகி, முயிலன்கூடு, சுதாகரன்,களங்கன்,பிறை உடுவின் வேந்தன், கலாநிதி,சுகுபராக.

சந்திரனைப் பற்றிய விஞ்ஞான விவரங்கள்

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் 2 லட்சத்து,52 ஆயிரத்து

உள்ள தூரம். 225மைல்கள்

சந்திரன் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எடுக்கும் நேரம். 27 நாட்கள்,7 மணி48.5நிமிடம்

சந்திரன் பூமியை சுற்ற எடுக்கும் நேரம். 29 நாட்கள்,22 மணி,

44 நிமிடம், 12 வினாடிகள்

சந்திரனுக்கு சுய ஒளி உண்டா? கிடையாது சூரிய ஒளியை

பிரதிபலிக்கிறது

சந்திரனில் முதன் முதலில் காலடி வைத்தது –

1969- ஆம்வருடம் ஜூலை. 20 – ம் தேதி நீல் ஆர்ம் ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின்.சென்ற கலத்தின பெயர் – அப்பல்லோ 11.

சந்திரனைப் பற்றிய மற்ற விவரங்கள்

சந்திரனின் தாய் / தகப்பனார். அத்திரி மகரிஷி/ அனசூயை

சகோதரர்கள் தத்தாத்திரேயன் / துர்வாசர்

சந்திரனின் மகன். புதன்(குருவின் மனைவி தாரைமூலமாக

பரி வேடன்

கோத்திரம் – ஆத்திரேயம்

காரகன் – மனோகாரகன், தாயார் காரகன்

குணம் – சாத்வீகம்

சுபாவம் -சௌமியம்

தேவதை – பார்வதி

ப்ரத்யதி தேவதை – கௌரி

பாலினம் – பெண்

நிறம் – வெண்மை

ஜாதி – வைசியர்

தானியம் – பச்சரிசி

ரத்தினம் – முத்து

உலோகம் – ஈயம்

சின்னம் – முயல்,வானவில்,மேகம்,மீன்

ருசி – உப்பு ருசி

திக்கு – வட மேற்கு

பாஷை. தமிழ்

மலர் – வெள்ளரளி

பூதம் – நீர்

ருது – வர்ஷ ருது

மண்டலம் – சூரம்

உடல் அங்கம் – தோல்

நாடி – சிலேத்துமம்

சமித்து -முறுக்கு

தாது – ரத்தம்

தேசம் – யமுனா தேசம்

ராகம் – பைரவி

ஸ்வரம் – ம

ஆட்சி – கடகம்

உச்சம் – ரிஷபம்

நீசம் – விருச்சிகம்

நட்பு  ராசிகள் – மிதுனம், சிம்மம் , கன்னி

நட்பு கிரகங்கள் – சூரியன், புதன்

சம கிரகங்கள் – செவ்வாய்,சூரியன்,குரு,சனி, சுக்கிரன்

பகை – ராகு, கேது

திசா ஆண்டுகள் – 10 ஆண்டுகள்

நட்சத்திரங்கள் – ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்

சந்திர ஷேத்திரங்கள்

சைவ சமய குரவர்களில் மிக வயதானவர் திரு நாவுக்கரசர். அவர்ஒரு

ஊருக்குள் நுழையும் போது, திரு நாவுக்கரசர், தண்ணீர் பந்தல், திருநாவுக்கரசர் சத்திரம், திருநாவுக்கரசர் பசு மாடு, திரு நாவுக்கரசர்

என எல்லாவற்றிற்கும் பெயரிடப்பட்டிருந்தது.ஆச்சரியப்பட்ட அவர்

விசாரித்து எழுதியவரின் வீட்டிற்கு சென்று விசாரிக்க, அவர் திடீரென

காலில் விழுந்து, நீங்களும் சிவனடியார் தானே, இவரைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லையா??? அவர் தொண்டு மாதிரி உலகில் யாரும் செய்யவில்லை. அவரை காணும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை, இருந்தாலும், அவர் பெயரிட்டு வீடு சத்திரம், தண்ணீர் பந்தல் வைத்து ஆறுதலடைகிறேன்”, என்றார்.

நீங்கள் குறிப்பிட்ட அந்த சிவனடியார் நான் தான் எனக் கூறினார் அப்பர் . அந்த சிவனடியார், தடாலென்று காலில் விழுந்து’ என் பாக்கியமே, பாக்கியம் என் பெயர் அப்பூதி அடிகள் என் வீட்டில் தங்கி உணவருந்த வேண்டும்’ என வேண்டிக் கொண்டார் . தன் மனைவியையும், தன் குழந்தையையும் அப்பர் காலில் விழுந்து ஆசி வழங்கச் செய்தார்.

மகனின் பெயர் கூட திரு நாவுக்கரசு தான்!!! சாப்பிட இலை பறிக்க

சென்ற மகனை பாம்பு கடித்து இறக்க கணவனும் மனைவியும் பதறி

வாழை இலையால் மூடி மறைத்து கண்ணீர் வந்ததை மறைத்து

சிவனடியாருக்கு இலை போட்டனர். அமர்ந்த திரு நாவுக்கரசர்,

உங்கள் மகனையும் என் அருகில் அமரச் செய்யுங்கள் எனக் கூறினார்

கண்ணீர் மல்க அவன் வரமாட்டான் . பாம்பு கடித்து இறந்தான், எனகூற “நீத்தார் பதிகம்” என சிறுவனின் உடலைக் கிடத்திப் பாட

உயிரோடு எழந்தான் திருநாவுக்கரசு என்ற சிறுவன்.

அப்பேர் பட்ட

இடமே அப்பூதி அடிகளின் பிறந்த ஊரான “திங்களூர்”எனப் படும்

சிவ ஸ்தலம் !!! சந்திரனின் சாபம் தீர்ந்த இடம். சந்திர தோஷம் உடையவர்கள் அங்கு சென்றாலே சந்திர தோஷம் தீரும்

  1. திங்களூர்
  2. திருப்பதி இந்த ஸ்தலம் பற்றி திருமதி பிருஹன் நாயகி சத்ய நாராயணன் அவரகள் அருமையாக விவரித்திருக்கிறார்கள் tamilandvedasa.com ல் கண்டு மகிழ்க.
  3. நவ திருப்பதிகளில் ஒன்றான வர குண மங்கை
  4. நவ கைலாசங்களில் ஒன்றான சேரன் மா தேவி
  5. சென்னை அருகில் உள்ள சோமங்கலம்

சந்திர காயத்திரி

பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி

தன்னோ ஸோம: ப்ரசோதயாத்

சந்திரனின் ஸ்லோகம்

ததிஸங்க துஷாராபம் ஷீரோதார்ணவ ஸம்பவம்

நமாமி ஸசினம் ஸோமம் ஸம்போர்மகுட பூஷணம்

மன அமைதியையும், மந்திர சக்தி சித்திக்கவும், வசீகர சக்தியையும் முக அழகையும் பெற சந்ததிரனை வணங்கி பெரும் பேறு பெற வாழ்த்தி வணங்கி விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்

***

PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM FOR SRINIVASAN’S TALK.

***

 tags- சந்திரன்-2, அம்புலி மாமா-2,

ஜோதிடம் உண்மையா?- PART 2 (Post No.9274)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9274

Date uploaded in London – –17 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தங்களது பிறந்த தேதி,நேரம்,இடம் ஆகியவற்றைக் குறிப்பிடுவோருக்கு சரியாகக் கணிக்கப்பட்ட அவர்களது ஜாதகமும், பலன்களும் அனுப்பப்படும் என்று விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்தன.

கடிதங்கள் அனைத்திற்கும் ஒரே ஜாதகத்தை அனுப்பிய காக்லின் பலனாக, “நல்ல மனம் படைத்தவர்”, ‘அனைவரையும் வரவேற்பவர்’, ‘நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்’ என்று தனக்குத் தோன்றியதை எல்லாம் எழுதி அனுப்பினார். அத்துடன் ஒரு வினாத்தாளையும் அதில் இணைத்துத் தான் கூறிய பலன்கள் எல்லாம் சரிதானா என்றும் கேட்டிருந்தார்.

94 சதவிகிதம் பேர் பலன்கள் சரியாக இருக்கிறது என்றும் 90 சதவிகிதம் பேர் தங்கள் குடும்பத்தினரும் அவை சரியாக உள்ளன என்று குறிப்பிடுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் பிறந்த தேதி, இடம் குறித்து அனுப்பியோருக்கு காக்லின் அனுப்பிய ஜாதகமோ ஒரு பயங்கர கிரிமினலின் ஜாதகம்! பல கொலைகளைச் செய்ததோடு, கொலை செய்யப்பட்டோரின் உடல்களை மறைத்து சாட்சியங்களையும் மறைத்தவன் அவன்.

ஜோதிடம் நிச்சயமாக நம் தலைவிதியை நிர்ணயிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார் காக்லின். என்றாலும் ஆராய்ச்சியை நிறுத்தாமல் தொடர்ந்து பிறந்த தேதிகளைச் சேகரித்து ஜாதக பலன்களை ஆராய்ந்து வந்தார்.

அவருக்குத் தன் ஆராய்ச்சியின் மூலம் சில அதிசயமான உண்மைகள் தெரிய ஆரம்பித்தன.

சனியும் செவ்வாயும் பிரதானமாக உள்ள ஜாதகங்களை உடையவர்கள் மருத்துவத் துறையில் பிரபலங்களாக இருப்பதை அவர் கவனித்தார். சோதனைகளை மேலும் தொடர்ந்தார்.

போர் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் ஜாதகத்தில் செவ்வாய் பிரதானமாக இருப்பது அவருக்குத் தெரிந்தது.

ஆனால் கலைஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வியாழன் பலம் பொருந்தியவனாக இருந்தான்.

எழுத்தாளர்களுக்கோ சந்திரன் பிரதான கிரகமாக அமைந்திருந்தான்.

அவர் கடைப்பிடித்த முறை ஸ்டாடிஸ்டிக்ஸ் எனப்படும் புள்ளிவிவர இயலை அடிப்படையாகக் கொண்டது.

இந்த ஆராய்ச்சி சுமார் பத்து வருட காலம் நீடித்தது. 1955இல் அவரது முதல் புத்தகம் வெளியானது. 347 பக்கம் கொண்ட அந்தப் புத்தகத்தில் 1084 டாக்டர்கள், 570 விளையாட்டு வீரர்கள், 676 ராணுவ வீரர்கள், 906 பிரபல ஓவியர்கள், 301 சாதாரண ஓவியர்கள், 500 நடிகர்கள், 494 அரசியல்வாதிகள், 349 விஞ்ஞானிகள் 884 பாதிரிகள் ஆக மொத்தம் 5824 பேர்களின் பிறந்த தினக் குறிப்புகள் இருந்தன. முதன் முதலாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஜோதிடக் குறிப்புகள் வெளியான முதல் புத்தகம் இது தான்.

காக்லின் ஆய்வை கடுமையாக விமரிசித்த பலர் பிரான்ஸில் மட்டும் புள்ளிவிவரம் சேகரித்து முடிவு சொன்னால் போதாது, இதர நாடுகளிலும் இப்படி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்றனர். இதற்கு ஒத்துக் கொண்ட காக்லின் மேலும் 15000 ஜாதகங்களை ஆராய்ந்தார். முடிவுகளை இரண்டாவது புத்தகமாக 1960ஆம் ஆண்டு வெளியிட்டார்.

தொடர்ந்து செய்த ஆய்வில் அவரிடம், மலைக்க வைக்கும் ஐந்து லட்சம் பேர்களின் பிறந்த தேதி, அவர்களைப் பற்றிய அதிகாரபூர்வமான வாழ்க்கைக் குறிப்புகள் இருந்தன.

ஆனால் காக்லினின் கண்டுபிடிப்புகளுக்கு ஜோதிடர்களும் விஞ்ஞானிகளும் அவ்வளவாக முக்கியத்துவம் தரவில்லை.

1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டு நாடுகளிலிருந்து 110 நிபுணர்களை அவர் லண்டனுக்கு அழைத்து ஒரு மாநாட்டை நடத்தினார். வந்திருந்த அனைவரும் காக்லினின் பணியை மனதாரப் பாராட்டினர்.

ஜோதிடத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான ஆய்வு என்றும் இது போல இன்னொரு ஆய்வு உலகில் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

ஆனால் இதற்கு பதிலாக விஞ்ஞானிகள் அவரது புள்ளி விவரச் சேகரிப்பில் பெரும் பிழை உள்ளது என்றும், அதில் ‘எஃபக்டிவ் சைஸ்’ இல்லை என்றும் டெக்னிகலாகக் கூறினர்; ஆகவே அதை ஒரு ஆய்வு என ஒப்புக் கொள்ள முடியாது என்று பதில் விடுத்தனர்.

பெரும் ஆய்வை நடத்தி, நடத்தி ஓய்ந்து போய் மன உளைச்சலுக்கு ஆளான காக்லின் கடைசி கடைசியாக, “ஜோதிடம் என்பது ஒரு பெரிய மர்மம். பல நூற்றாண்டுகளாக இது பற்றி அறிஞர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர். இதில் ஓரளவு வெளிச்சத்தைக் காட்டிய திருப்தி எனக்கு இருக்கிறது” என்று கூறி முடித்துக் கொண்டார். அதிக மனச்சோர்வுக்கு ஆளாகவே அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தன் வாழ்வையும் முடித்துக் கொண்டார்.

காக்லினின் புள்ளிவிவர இயல் ரீதியான ஜோதிட ஆராய்ச்சியை மறுக்கும் விஞ்ஞானிகள் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உளவியல் விஞ்ஞானியான கார்ல் ஜங் (தோற்றம் 26-7-1875 மறைவு : 26-6-1961) ஜோதிடம் பற்றிய கூறிய கூற்றுக்கள் பற்றி எதுவும் சொல்ல முடிவதில்லை. அவ்வளவு அறிவியல் பூர்வமான ஆணித்தரமான ஆராய்ச்சி அவருடையது!

சைக்கோ அனாலிஸிஸ் எனப்படும் உளநிலை பகுப்பாய்விற்கு ஜோதிடத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பது குறித்து அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

ஜோதிடக் கலையை நன்கு ஆய்வு செய்து வந்த அவர், “ஜோதிடம் என்பது உள்ளுணர்வின் அடிப்படையிலான ஒரு மாபெரும் கலை.  அறிவியல் ரீதியாக சரியான அடித்தளம் கொண்டு அது இன்னும் ஆராயப்படவில்லை” என்று கூறியுள்ளார். ஜங் இந்தியாவிற்கு வந்து பல இடங்களுக்குச் சென்றார். சாஞ்சியில் புத்தர் உபதேசம் செய்த இடம் அருகே சென்றவுடன் அவருக்கு ஒரு உயரிய நிலை ஏற்பட்டது. ஜோதிடத்தின் அடிப்படையில் அவர் கண்டுபிடித்தது தான் சிங்க்ரானிசிடி எனப்படும் தற்செயல் ஒற்றுமை பற்றிய புதிய கொள்கை விளக்கமாகும். அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் அன்பர்கள் கனவுகள், கடவுள், ஜோதிடம் பற்றிய பல அதிசய விஷயங்களை அறிந்து பிரமித்துப் போவர் என்பது நிச்சயம்.

இனி விண்ணில் உள்ள கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் நமது பூமிக்கும் ஒரு தொடர்பு உள்ளது உண்மையே என்பதற்கு அறிவியல் பத்துக் காரணங்களை அளிக்கிறது. இவற்றை விளக்கமாகக் கூற நேரம் போதாது என்பதால் மிகச் சுருக்கமாகக் கூறுகிறேன்.

  1. விண்வெளி சாடிலைட் மூலம் கிடைத்த விவரங்களை ஆராயும் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டொமினிக் க்னிவெடன், எத்தனை விண்வெளிக்கதிர்கள் பூமியைத் தாக்குகின்றனவோ அந்த எண்ணிக்கைக்குத் தக்கபடி மழை ஏற்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளார். விண்வெளி பூமியின் மீது ஏற்படுத்தும் முதல் விளைவு இது.
  2. ஸ்வீடிஷ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த லுண்ட் ஆப்ஸர்வேடரியைச் சேர்ந்த டாக்டர் ஹென்றிக் லுண்ட்ஸ்டெட், சூரியக் காற்றிற்கும் நார்த் அட்லாண்டிக் ஆஸிலேஷன் என்று கூறப்படும் ஒருவகை அழுத்த மண்டல அமைப்புகளுக்கும் ஒரு தொடர்பு உள்ளது என்று கண்டறிந்துள்ளார்.
  3. எரிமலை குமுற சந்திரனே காரணம் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் குவிந்து வருகின்றன. கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மாயா இதைக் கண்டுபிடித்துள்ளார்.
  4.  நமது பூமி சந்திரனுடன் நேருக்கு நேர் வரும்போது 40 செண்டிமீட்டர் மேலெழும்புகிறது. தினமும் இப்படி மேலெழும்பி இறங்குவதை ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல செர்ன் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
  5. சூரியனும் சந்திரனுமே இன்றைய பூமியின் நிலப்பரப்புக்கு காரணமாகும். பூமியின் நடுப்பகுதியையும் அதைச் சுற்றியுள்ள மாண்டில் என்ற பகுதி வரையிலும் கூட அவை ஊடுருவி அசைக்கிறது என்பதை பாரிசில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் க்ளோபல் பிஸிக்ஸ் நிறுவன விஞ்ஞானிகள் மரியன் க்ரெப்லெப்ஸ் நிரூபித்துள்ளார்.
  6. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் ஆர்லாவன் தென் அமெரிக்க பழங்குடியினரை ஆராய்ந்தவர். கார்த்திகை நட்சத்திரம் பிரகாசமானால் மழை வரும் என்றும் ஆகாயத்திற்கும் எல் நினோ உஷ்ண அலைகளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் அவர்கள் கூறுவது கண்டு அவர் பிரமித்தார். அவை உண்மையே!
  7. ஐஸ் காலம் என்று நாம் விவரிக்கும் காலமானது சந்திரனும் இதர கிரகங்களினாலும் உருவாக்கப்பட்டதே. சர் ஜான் ஹெர்ஷல் இதை 1830இலேயே சுட்டிக் காட்டி விட்டார்.
  8. லண்டனைச் சேர்ந்த அஸ்ட்ரோ பிஸிஸ்ட் பியர்ஸ் கார்பின் என்பவர் சூரிய புள்ளிகளை வைத்து ஒன்பது மாதங்களுக்கு முன்பேயே நமது வானிலையைக் கூற முடியும் என்று கண்டு பிடித்திருக்கிறார்.
  9.  சூரியனே நாம் கூறும் லிட்டில் ஐஸ் காலம் உருவாகக் காரணம். பனிப்படலம் உருவாக சூரியனே காரணம். மீன்வளம் குறையவும் சூரியனே காரணம். இதை நவீன அறிவியல் கூறுகிறது.
  10. பௌர்ணமி அன்று பவழப்பாறைகளின் உள்ள பவழங்கள் ஏராளமான விந்தணுக்களையும் முட்டைகளையும் கடலுக்குள் விடுகின்றன. உயிர்களின் மீது சந்திரனுக்கு ஆதிக்கம் உண்டு என்பதை இப்படி அறிவியல் உறுதிப் படுத்துகிறது.

இது தவிர ஏராளமான விஞ்ஞானிகள் ஜோதிடம் உண்மையே என்பதை உறுதிப் படுத்துகின்றனர். பிரிட்டிஷ் வானவியல் விஞ்ஞானி பெர்சி செய்மூர் தனது ஸயிண்டிபிக் பேஸிஸ் ஆஃப் அஸ்ட்ராலஜி என்ற நூலில் பல ஆதாரங்களைத் தருகிறார்.

இப்படி அறிவியல் ஆமோதிக்கும் ஜோதிடத்தைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம். அடுத்து இன்னொரு உரையில் மேலும் இது பற்றி சுவையான சம்பவங்களுடன் இதைப் பற்றி மேலும் ஆராய்வோம்.

PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM TO LISTEN TO THIS TALK; ALSO AVAILABLE IN YOUTUBE.COM/GNANAMAYAM

நன்றி, வணக்கம்!

**

TAGS- ஜோதிடம் உண்மையா-2

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 36 (Post No.9273)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9273

Date uploaded in London – –16 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -36

Sutra 4-1-8

Dvipaatha  – masculine த்விபத 

Dvipathii – feminineத்விபதி

தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் மட்டும் ஆண் பெயருடன் ‘இ’ சேர்த்தால் பெண் பால் பெயர் ஆகி விடும்

Only Tamil and Sanskrit make masculine and feminine by this way.

Kizavan – kizavi கிழவன் – கிழவி அல்லது கிழத்தி

Oruvan- oruththi ஒருவன் – ஒருத்தி

Nulaiyar – nulaichiyar நுளையர் – நுளைச்  சியர்

Parathar – paraththiyar பரதர் – பரத்தியர்

Maravar – maraththiyar மறவர் – மறத்தியர்

Kuravar – kuraththiyar குறவர் – குறத்தியர்

Xxx

PATHA – PATH, PEDAL, PEDESTRIAN ; already covered

Paatham becomes Adi in Tamil

The meaning is same in Tamil and Sanskrit only

Patham – path/way

Patham – foot

Patham – onequarter

Patham is used in poetry/prosody

Patham – becomes Padi/step in tamil

பாத – கால்

பாத- பாதை /அத்தம்

பாத – கால் /உறுப்பு

பாத – கால் /அளவு; நாளில் ஒரு பகுதி

பாத – படி

தமிழி லும்  இதே அணுகுமுறையைக் காணலாம்

In Tamil

Patham – paathai, Aththam/way

Paatham – adi/ one foot in measurement

Paatham – adi one leg in body parts

Patham – one Adi in Seyyul/Prosody

Paatham – kaal is one quarter

Patham- Padi as in Madippadi/step

No two languages do it.

If we see some aspects in English, linguists already agree Sanskrit is their eldest sister.

Xxx

4-1-14

Bahu – vehu ; veku in Tamil

பஹு = வெகு

B= V ப=வ

xxx

4-1-15

Making feminine nouns by adding ii

Sangam Tamils followed Sanskrit in making feminine words (se above for examples)

மேலே காண்க

Xxxx

4-1-30

Sumangalii – married woman

சுமங்கலி – திருமணமான பெண்

தீர்க்க சுமங்கலி பவஹ

சத்தியவான் – சாவித்திரி கதையே இந்த வளத்தில்தான் இருக்கிறது

Used in greetings etc

Xxx

4-1-33

Pathi – husband

Pathni – wife who gets all the beneits of Yaga/ Puja by standing behind her husband.

பதி , பத்தினி

பூஜை செய்யாமலேயே கணவன் செய்யும் எல்லா நல்ல செயல்களின் பலனும் மனைவிக்குக் கிடைப்பதால் அவளுக்கு பத்தினி என்று பெயர் என்பது தர்ம சாத்திரங்கள் தரும் விளக்கம்.

கண்ணகி ஒருத்திதான் தமிழ் வீராங்கனை. அவளை பத்தினித் தெய்வம் ஆக வழிபடுவது 2000 ஆண்டுகளாக இலங்கையிலும் தமிழ் நாட்டிலும்  உளது . இலங்கை வே ந்தன் கஜபாகுவும் பத்தினி சிலை புனித ஸ்தாபகத்துக்கு வந்தான்

Kannaki the only Tamil heroine is worshipped as Pathni Divinity in Sri Lanka and Tamil Nadu

Gajabahu of 130 CE came to Kerala to attend the Pathni Consecration Ceremony made up of Holy Himalayan stone bathed in Holy Ganga around 125 CE.

Xxx

4-1-35

In the commentary we see VEERA PATNI

Veera = hero வீர பத்னி, வீரத் தாய் கொள்கை வேதம், காளிதாசன், தமிழ் இலக்கியத்தில் உளது

Veerath Thaay (mother of Heroes) is found in Vedas an Sangam Literature and Kalidas ( see my article written many years ago)

Xxx

4-1-38

Manu’s wife MANAIVI

In Tamil wife is MANAIVI

மனுவின் மனைவி பெயர்- மனா வி , மனா யி

Interesting thing is first man Manu’s wife is also Manaavi, manayi, manuhu

Probably Tamils and Sanskrit has same root.

Also Manai is house in Tamil; so one who rules house is Manaivi.

தமிழில் மனைவி என்பத ற்கு மனையை/ வீட்டை ஆளும் பெண் என்ற பொருளும் உண்டு

Xxxx

4-1039

Varna is used by Panini for Colourtamils use it until today.

It becomes Vannam as well

வர்ணம்/ வண்ணம் என்பது இன்று வரை பயன்படுத்தப்படுகிறது

Harinii is green; Harin becomes H/Green

ஹரிணி என்பது ஆங்கிலத்தில் க்ரீன் ஆகிவிட்டது

Xxx

4-1-42

Goni – sack, goni usi- goni needle are used in tamil

Bhaaji – cooked food

Kaali – black; in tamil it becomes kari and kaari

R=l

கோணி என்பது சுமேரியச் சொல்லாம்/என் ஆராய்ச் சிக் கட்டுரையில் விவரம் காண்க.

நீலி = நீலம்

Neeli – Neelam, blue used until today

கவரி என்பது கவரி வீசல் மன்னருக்கும் இறைவர்க்கும்  உண்டு.

Kavari – hair do becomes Savari in Tamil

Cheer girls probably got the name from Kavari

கவரி என்பது சவரி ஆவதும் உண்டு

Old Indian kings had people doing it on his two sides

Xxx

4-1-44

Commentators give Karu for black

கரு – க றுப்பு இரண்டு மொழிகளிலும் இது இருக்கிறது

Tamils use it.

To be continued…………………………………

tags- Tamil in Panini -36

ஆலகால விஷம் பற்றிய அதிசய செய்தி ! (Post No.9272)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9272

Date uploaded in London – –16 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆலகால விஷம் பற்றிய அதிசய செய்தி ! (Post No.9272) ஆலகால விஷம் என்பது பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்துடன் வந்ததாகவும் அதைக் கண்டு எல்லோரும் பயந்து நடுங்கிய பொழுது கருணையே வடிவான சிவபிரான் அதை விழுங்கி அஸுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றியதாகவும் நாம் புராணத்தில் படிக்கிறோம். ஆனால் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூலான பாணினியின் அஷ்டாத்யாயியை ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கிய வி.எஸ். அக்ரவாலா (Dr V S Agrawala) ஒரு புதிய செய்தியை நமக்கு

tags- ஆலகால விஷம், வி.எஸ். அக்ரவாலா, செமிட்டிக் மொழி, சொல் 

அம்புலி மாமா வா வா !!!- 1 (Post. 9271)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9271

Date uploaded in London – –     16 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அம்புலி மாமா வா வா !!!- 1

S SRINIVASAN

அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம்

கவர்ச்சி நாயகன், காதல் மன்னன், இரவிற்கு அதிபதி, மனோகாரகன்,

சந்திரனை வணங்கி என் உரையை ஆரம்பிக்கிறேன். வணக்கம்.

PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM TO LISTEN TO THIS TALK; ALSO AVAILABLE IN YOUTUBE.COM/GNANAMAYAM

வேறு எந்த நவ கிரகத்திற்கும் இல்லாத ஒரு பெருமை சந்திரனுக்கே

உண்டு. அதை முதலில் சொல்லியே ஆகவேண்டும்.எந்நாட்டவர்க்கும்

இறைவனான தென்னாடுடைய சிவனின் தலையில் பிறை வடிவமாக அமரந்த பெருமை சந்திரனுக்கே உண்டு!!!சூரியன் பகலுக்கு ராஜாவென்றால், சந்திரன் இரவுக்கு ராணி!!!எல்லா நாட்டினருக்கும்

இதுவே காதல் தெய்வம்!!!

சந்திரனின் பிறப்பு

அத்திரி மகரிஷியும், அனசூயையையும் ஆனந்தமாக இல்லறம் நடத்தி

வருகையில் மூன்று தவ சிரேஷ்டர்கள் அவர்கள் வசிக்கும் வாயிலுக்கு

வந்தனர். அத்திரியும் அனசூயையும் காலில் விழுந்து குடிசைக்குள் வர

வழைத்து விருந்துபசாரம் செய்ய ஆரம்பித்தனர்.

என்ன பாக்கியம் செய்தோமோ இந்த ஏழையின் குடிலுக்கு நீங்கள்

எழுந்தருளியதற்கு….. நீங்களனைவரும் விருந்துண்டே செல்ல வேண்டும் என்றார்கள்அத்திரியும் அனசூயையும்.

அம்மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள் விருந்துண்கிறோம்

ஆனால்

ஒரு கண்டிஷன்…….என்ன அது???

“விருந்து பரிமாறும் பெண்மணி நிர்வாணத்துடன் தான் விருந்து பரிமாற வேண்டும்”

அதிர்ந்து போனார்கள் தம்பதியினர்………சோதனையை சந்தித்தாள்

அனசூயை. அம்மூவரையும் சிறு குழந்தைகளாக மாற்றினாள், தன் தவ வலிமையினால்!!! விருந்தும் படைத்தாள்!!!அங்கு அதே சமயம் வந்த நாரதர், கலைமகள், அலைமகள், மலை மகளிரிடம் சென்று அவர்களின் புருஷன்மார்கள் குழந்தைகளாக மாறியிருப்பதை கூறினார். அலறிப்புடைத்துக்கொண்டு ஓடி வந்து அவர்கள் அனசூயையின் காலில் விழுந்தனர். முப்பெரும் தேவியரும் அவர்கள் கணவன்மார்களும் தன்னகத்தே வந்ததைக் கண்டு அத்திரியும் அனசூயையும் அவர்கள் காலில் விழுந்தனர். தேவர்களைவரும் கூடினர் இந்தக் காட்சியைக்

காண !!!

அனசூயா உனது கற்பின் பெருமையை உலகத்திற்குணர்த்தவே இப்படி ஒரு நாடகமாடினோம்.வேண்டிய வரங்களைக்கேளுங்கள்……..குழந்தை வரம் வேண்டினர் தம்பதியினர்.

மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தனர் அவர்கள் : சோமன், துர்வாசர், தத்தாத்தி

ரேயன்.

அவர்களின் சோமன்தான் நமது சந்திரன். துர்வாசர் தவசியானார், தத்தாதிரேயன் தேவரானார். சோமன் சந்திரனாகி இரவுக்கு அதிபனாகி,ரஜினிபதி எனப்பெயர் பெற்றார்.ரஜினிபதி என்றால் இரவுக்கு அதிபதி என்று பெயராம்!!!

மிகமிக அழகான சந்தினுக்கு தனக்கு தெரிந்தவற்றை கற்பித்து

வயது வந்தவுடன் தேவ குருவிடம் பாடம் கற்க அனுப்பினார் அத்திரி.

தேவ குருவின் மனைவி தாரை இவனழகில் மயங்கி மையல் கொண்டாள்.

சந்திரனின் திருமணம்

சந்திரனின் அழகில் மயங்கிய தட்சனின் மகள்கள் 27 பேரும் சந்திரனையே மணந்தனர்.அந்த 27 பேர்களில் ரோகிணியிடம் மிக அன்பாக நடந்தான் சந்திரன்…. மற்ற 26 பேர்களும் தகப்பனார் தட்சனிடம் complaint செய்ய, கோபம் கொண்ட தட்சன் ஒரு நாளைக்கு ஒரு கலை வீதம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய சந்திரனுக்குச் சாபம் கொடுத்தான். சந்திரன் ஓடிப் போய் சிவனின் காலடியில் விழ,சாபத்தை நான் எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது, ஆனால்,

மீண்டும் நீ வளர வரம் கொடுக்கிறேன் என்று வரம் கொடுத்தார். அன்றிலிருந்து சந்திரன் 14 நாட்கள் தேய்ந்து அமாவாசையாகவும், மற்ற 14 நாட்கள் வளர்ந்து பௌர்ணமியாகவும் விளங்குகிறார்.

அரிஸ்டாட்டில் கூறுவது- “சந்திரன் மனித உடலில் மிகுதியாக ஆதிக்கம் செலுத்துகிறது”.

மருத்துவத் தந்தை ஹிப்பாக்ரடீஸ் கூறுவது- கோள்களின் கதியை அறியாமல் எந்த மருத்துவராலும் சரியாக மருத்துவம் செய்ய முடியாது.

பௌர்ணமியின் பெருமை

ஜாதகத்தில் சூரியனுக்கு நேர் எதிர் கட்டத்தில் சந்திரன் இருந்தால்

அவர் பௌர்ணமியன்று பிறந்தவராவார்.

சூரியனின் மாற்றத்தைப் பொறுத்தே மாதங்கள் பிறக்கின்றன.ஆனால்

மாதங்களின் பெயர்களோ பௌர்ணமி எந்த நட்சத்திரத்தின் அருகில்

சந்திரன் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்த மாதம்

விளங்குகிறது. உதாரணமாக, சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி

வருவதினால் அந்த மாத த்தின் பெயர் சித்திரை. விசாக நடசத்திரத்தில் பௌர்ணமி வருவதினால் அந்த மாதத்தின் பெயர் வைகாசி……

ஒவ்வொரு பௌர்ணமியும் மிக மிக விசேஷமானவை என்பது

மட்டுமல்லாது விழாக்களாக கொண்டாடப் படுகின்றன.பௌர்ணமி

மந்திர உபதேசமானவர்களுக்கு மிக முக்கிய நாளாகும் . மந்திர உரு

ஏற்றுவது, அம்மனை உபாசிப்பது, பால் குடம்எடுப்பது போன்ற விழாக்கள் நடத்துகின்றனர் இந்த நாளில்.சந்திரனின் கவர்ச்சி காரணமாக

கடல் அலைகள் உயர்ந்து வீசும் காட்சி கண்ணுக்கு விருந்து.

வெளிநாட்டு மக்களும் உள்நாட்டு மக்களும் கன்யா குமரி கடற்கரையில் பௌர்ணமி அன்று கும்பலாக காத்திருந்து ஒரே சமயத்தில் மேற்கே சூரியன் மறைவதையும், சந்திரன் உதயமாவதையும்

இரண்டு தங்கத்தகடுகளை கண்டு களிப்பது உலகில் வேறெங்கும்

காணக்கிடைக்காத காட்சி !!!

அமாவாசையின் பெருமை

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே கட்டதிலிருந்தால்அவர் அமாவாசையன்று பிறந்திருக்கிறார் என்று அர்த்தம்.பௌர்ணமி

ஒரு விசேஷமான நாள் என்றால் அமாவாசை அதைவிட விசேஷமான

நாளாகும். முன்னோர்கள் வெகு ஆவலுடன. நம் எள்ளுக்கும் , தண்ணீருக்கும் காத்திருக்கும் நாள். நல்ல காரியங்கள் தொடங்கும்

நாள்…. அமாவாசையன்று “திருஷ்டி”கழிப்பதென்பது தொன்று தொட்ட வழக்கமாகும். மந்திரிப்பதற்கும், மந்திரம் கற்க ஆரம்பிக்கவும் சிறந்தநாள்.புரட்டாசி மாதம் வரும் மஹாளய பட்சம்

என்ற 15 நாட்களுக்கும் பித்ருக்களை திருப்தி செய்யும் நாட்கள்.

இறந்த திதி தெரியாதவர்கள், துர்மரணமடைந்தவர்கள் முதலியோருக்கு திதி செய்ய சிறந்த நாள்.ஆடி அமாவாசையும் இது போலவே தான்……..ஆடி 18 ல் காதலர் வெவ்வேறு சித்திரான்னங்களுடன் உண்டு மகிழும் சிறந்த நாள்!!!

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே,

சந்திரன் கெட்டதும் பெண்ணாலே !!!

சந்திரன் ஒரு பெரும் யாகம் நடத்தினான்.எல்லா முனிவர்களும், தேவர்களும் கலந்து கொண்டனர்.தேவ குருவின் மனைவி தாரையும்

கலந்து கொண்டாள். யாகம் முடிந்து குருவுடன் திரும்பாமல் சந்திரனிடையே தங்கிவிட்டாள் தாரை. தேவர்களனைவரும்

சந்திரனைக் கண்டித்து தாரையை திருப்பி அனுப்புமாறு கேட்டனர்.

வலிய வந்த சீதேவியை தான் திருப்பி அனுப்ப முடியாது என சட்டம்

பேசினான் சந்திரன். வில்லெடுத்தார் சிவன். பயந்த பிரும்மா

ஒரு வழியாக “ பஞ்சாயத்து” பண்ண தாரையை அனுப்பினான்

சந்திரன்.

குரு ஏற்றக்கொள்ள மறுத்தார்.சாபம் கொடுத்தார். கர்ப்பமானாள் தாரை……..

அழகான குழந்தையான“ புதனை“பெற்றெடுத்தாள்.

சந்திரனின் மனைவி ரோகிணியே புதனை வளர்த்தாள்.

To be continued…………………………………………

tags- அம்புலி மாமா, சந்திரன், 

ஜோதிடம் உண்மையா?- PART 1(Post No.9270)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9270

Date uploaded in London – –16 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள் கிழமை ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 15-2-21 அன்று ஒளிபரப்பான ஜோதிடம் உண்மையா? என்ற உரை கீழே தரப்படுகிறது.

PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM TO LISTEN TO THIS TALK; ALSO AVAILABLE IN YOUTUBE.COM/GNANAMAYAM

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். ஜோதிடம் உண்மையா, பொய்யா? அறிவியல் ஜோதிடத்தை ஆமோதிக்கிறதா? ஏராளமானோருக்குத் தோன்றும் இந்த சந்தேகங்களுக்கு சற்று விடை காண முயல்வோம்.

ஜோதிடம் உண்மையா என்பதை மூன்று பகுதிகளாகப் பிரித்து அணுக வேண்டியுள்ளது. முதலாவது அணுகு முறை அறிவியல் ரீதியாக – ஏனெனில் காலத்திற்கேற்ற அணுகு முறை இது. இரண்டாவது அணுகு முறை – வேதத்தின் அடிப்படையிலான சாஸ்திர ரீதியாக. ஏனெனில் வேதாங்கம் ஆறு என்பதை நாம் அறிவோம். அதில் ஒன்று ஜோதிடம். அடுத்து மூன்றாவது அணுகு முறை – அனுபவ ரீதியாக.

இந்த மூன்று முறைகளின் அடிப்படையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு ஜோதிடம் உண்மையா என்ற ஒரு தொடரை மஞ்சுளா ரமேஷ் அவர்களின் ஞானஆலயம் குழுமத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையான  ஸ்ரீ ஜோஸியம் இதழில்  எழுதினேன். அத்தோடு பல்வேறு பத்திரிகைகளிலும் விஞ்ஞானிகளின் கூற்றுக்களையும் அறிவியல் ஆய்வின் முடிவுகளையும் கட்டுரைகளாகத் தந்து வந்தேன். அதன் அடிப்படையில் இந்த உரையை அமைத்துள்ளேன்.

ஏராளமான விஷயங்களைக் கொண்ட 160 பக்கம்  கொண்ட புத்தகம் ஜோதிடம் உண்மையா? ஆகவே அவை அனைத்தையும் சில நிமிடங்களில் அளிக்க முடியாது என்பதால் இந்த உரையில் சுவாரசியமான சில சம்பவங்களையும் ஜோதிடம் பற்றிய அறிவியல் அணுகுமுறையையும் மட்டும் அளிக்கிறேன்.

ஜோதிடம் சம்பந்தமான உண்மையாக நடந்த சில வரலாற்றுச் சம்பவங்களை முதலில் பார்க்கலாம்.

மதுரையை நிர்வகித்த மாபெரும் வீரர் தளவாய் அரியநாயகத்தின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் இது. அரியநாயகம் இளைஞனாக இருந்த சமயம் அவர் ஒரு அந்தணரிடம் ஜோதிடம் பார்க்கச் சென்றார். அந்த சமயத்தில் அவரது அன்றாட வாழ்க்கைக்கே அவர் அல்லல்பட வேண்டியதாக இருந்தது. அந்த அந்தணர் அரிய நாயகத்திடம், “நீ பெரிய சாம்ராஜ்யத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கப் போகிறாய்” என்றார். அரியநாயகத்திற்குச் சிரிப்பு தான் வந்தது. இது சாத்தியமே இல்லை என்றார் அவர். ஆனால் அந்த அந்தணரோ விடாப்பிடியாகத் தான் சொன்னதையே சொல்லி, ‘இது நடக்கும்’ என்றார். சரி, ‘இது நடக்கும்’ என்று சொல்கின்ற நீங்கள் இது நடக்கும் போது என்னை வந்து பாருங்கள்.

உங்களுக்கு எனது சொத்தில் பாதியைத் தருகிறேன்’ என்று கூறிய அரியநாயகம் சொன்னதோடு நிற்காமல் ஒரு ஓலையில் அதை எழுதி அந்தணரிடம் கொடுத்தார். காலம் உருண்டோடியது. அரியநாயகம் மதுரையின் மாபெரும் வீரனாகி நிர்வாகப் பொறுப்பு  முழுமையும் ஏற்றார். ஒரு நாள் அரண்மனையில் அந்தணர் ஒருவர் வந்து அரியநாயகத்தைப் பார்க்க வேண்டும் என்றார். சேவகர்கள் அனுமதி தர மறுத்தனர். அவரோ வற்புறுத்தி வேண்டினார். இறுதியில் அரியநாயகம் அவரை வரச் சொல்ல அவரைச் சந்தித்த அந்தணரை நோக்கிய அரிய நாயகம், ‘என்ன விஷயம்’ என்றார். ‘நீங்கள் முன்பொருமுறை என்னைப் பார்க்கச் சொன்னீர்கள். ஆகையால் தான் வந்திருக்கிறேன்’, என்றார் அவர். ‘நானா’ என்று ஆச்சரியப்பட்ட அரியநாயகத்திடம் ‘இதோ நீங்கள் கொடுத்த ஓலை’ என்று ஓலை ஒன்றைக் கொடுத்தார் அந்தணர். அதைப் படித்துப் பார்த்த அரியநாயகம் துள்ளிக் குதித்தார். ‘அன்று கொடுத்த ஓலை’, ‘அன்று கொடுத்த ஓலை’ என்று அவர் கூவினார்.அவர் கண்கள் பனித்தன. ஓடி வந்து அந்தணரை வணங்கினார்.

‘இதில் பாதிச் சொத்தைத் தருவதாக வாக்களித்துள்ளேன். ஆனால் பாதிச் சொத்தை என்னால் தர முடியாது. ஒன்றுமில்லாமல் நான் இருந்த காலத்தில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டிய உங்களுக்குப் பாதிச் சொத்தைத் தருவது முறை ஆகாது. என் முழுச்சொத்தையும் உங்களுக்குத் தருகிறேன். இதோ இந்த அரியணையில் ஏறி அமருங்கள்’ என்றார் அரிய நாயகம். அங்கிருந்தோரிடம் நடந்ததை எல்லாம் அவர் கூற அனைவரும் அந்தணரை வணங்கினர். ஆனால் அந்த அந்தணரோ, ‘எளிமையாக வாழும் எனக்கு எதற்கு இந்த அரசுப் பொறுப்பு. நான் வாழ்வதற்குத் தேவையான சிறிய அளவு பொருளை மட்டும் தாருங்கள்’ என்று கூறி அரசை அவரிடமே திருப்பி அளித்தார். அரியநாயகம் அவரை உரிய முறையில் கௌரவித்தார்.

இது பழைய காலச் செய்தி.

நவீன் காலத்தில் ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். அமெரிக்காவில் விஸ்கான்ஸின் மாகாணத்தில் 1904இல் பிறந்தார் ஜீன் டிக்ஸன் என்னும் ஒரு அபூர்வ பெண்மணி. ஜோதிடத்தில் வல்லுநரான இவர் இரண்டாம் உலகப் போரை வழி நடத்தி பிரிட்டனை வெற்றி பெறச் செய்த வின்ஸ்டன் சர்ச்சிலிடம்,  ‘வரப்போகும் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்’ என்றார். விழுந்து விழுந்து சிரித்தார் சர்ச்சில். பிரிட்டனுக்கு வெற்றி ஈட்டித் தந்த என்னை மக்கள் ஒரு போதும் புறக்கணிக்க மாட்டார்கள் என்று உறுதியாகச் சொன்னார். ஆனால் தேர்தலில் ஜீன் டிக்ஸன் கூறியபடி அவர் தோற்றார். 1956இல் அவர் “வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியாக பழுப்பு நிற முடியும் நீல நிறக் கண்களும் கொண்ட ஒரு இளைஞர் குடியேறப் போகிறார். ஆனால் அவர் தன் பதவிக் காலத்திலேயே சுட்டுக் கொல்லப்படுவார் என்றார். அதன்படியே கென்னடி ஜனாதிபதி ஆனார். ஆனால் 1963ஆம் ஆண்டு டல்லாஸில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது போல ஏராளமான சம்பவங்கள் உள்ளன.

இனி அடுத்து அறிவியல் ரீதியில் ஜோதிடம் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளைப் பற்றி ஒரு சிறிது காண்போம்.

எங்கோ இருக்கின்ற கிரகங்களுக்கும் பூமிக்கும் என்ன சம்பந்தம், அதிலும் அவற்றிற்கும் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? பகுத்தறிவுடன் ஆராய வேண்டாமா? சொல்பவர் சொன்னால் கேட்பவர்க்கு புத்தி எங்கே போயிற்று? விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையாவது பார்க்க வேண்டாமா?

இப்படி நினைக்கும் ஏராளமான பேர்களில் பிரான்ஸை சேர்ந்த மைக்கேல் காக்லின்(Michel Gauquelin) சற்று வித்தியாசமானவர்.

1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி பாரிஸில் பிறந்தார் காக்லின்.

16 வயதில், அருகிலிருக்கும் புத்தகக் கடைக்குச் சென்று அங்கேயே உட்கார்ந்து  ஜோதிட புத்தகங்களைப் படித்துக் கரைத்துக் குடித்தார்.

 பிரான்ஸில் உள்ள சார்போர்ன் பல்கலைக் கழகத்தில் உளவியல் படிக்க ஆரம்பித்த அவர், அதில் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றார்.

ஜோதிடம் உண்மையா இல்லையா என்ற கேள்வி அவர் மனதில் இடைவிடாது எழுந்த வண்ணம் இருந்தது.

இதைப் பற்றி முற்றிலுமாக ஆராய்ந்து விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்ட அவர் பிரெஞ்சு பத்திரிகை ஒன்றில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்தார்.

to be continued…………………………………………………………………

tags- ஜோதிடம்-1,  உண்மையா- PART 1,