பெற்றோருக்குப் பணிவிடை செய்!- யமன் கூறிய உபதேசம் (Post.9130)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9130

Date uploaded in London – –11 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாபாரதம்

யமன் கூறிய உபதேசம் : பெற்றோருக்குப் பணிவிடை செய்!

ச.நாகராஜன்

மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் ஏராளமான கதைகளையும் அந்தக் கதைகள் சொல்லும் நீதியையும் காணலாம். தர்ம சம்பந்தமான தனது கேள்விகளை தர்ம புத்திரர் கேட்க பீஷ்மர் ஒவ்வொன்றுக்கும் ஆணித்தரமான விடைகளைக் கூறுகிறார்.

அதில் கௌதமருக்கும் யமனுக்கும் நடந்த இந்த உரையாடல் – சம்வாதம் – ஒரு அரிய உண்மையைத் தருகிறது. (இதை சாந்தி பர்வம் 129ஆம் அத்தியாயத்தில் காணலாம்).

பாரியாத்திரம் என்னும் மலையில் கௌதமருக்கு பெரியதோர் ஆஸ்ரமம் இருந்தது. தனது பாவங்களை தவத்தால் எரித்த கௌதமர் அங்கு வசித்து வந்தார். அறுபதினாயிரம் வருடங்கள் அவர் தவம் செய்தார்.

ஒரு நாள் அவரிடம் லோகபாலனான யமதர்மன் வந்தான்.

தனது தவ வலிமையால் வந்தவனை யமன் என்று பிரம்ம ரிஷியான கௌதமர் அறிந்து கொண்டார். கைகட்டி வணக்கத்துடன் அவனிடம் அவர் சென்றார்.

யமன் அவரை நமஸ்கரித்து, “தர்மனான நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான்.

கௌதமர் யமனை நோக்கி, “ ஒருவன் எதைச் செய்து தாய் தந்தையரிடத்துக் கடனில்லாதிருக்கும் தன்மையை அடைவான்? அடைய முடியாத புண்யலோகங்களையும் ஒருவன் எப்படி அடைய முடியும்?” என்று கேட்டார்.

இதற்கு பதிலை யமன் கூறலானான் : “எப்பொழுதும் தவமும் பரிசுத்தியும் உள்ளவனும், சத்தியத்திலும் தர்மத்திலும் விருப்பமுள்ளவனுமாய் இருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் தாய் தந்தையரின் பூஜையை நேராகச் செய்து வர வேண்டும். நிறைந்த தக்ஷிணை கொடுத்து பல அஸ்வமேத யாகங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அப்படிச் செய்பவன் ஆச்சரியமாக காணப்படும் உலகங்களை அவன் அடைவான்”.

யமனின் இந்த வார்த்தைகளால் தாய் தந்தையரை உரிய முறையில் வணங்கி அவர்களைப் பாதுகாக்கும் ஒருவன் அவர்கள் புத்திரர்களுக்குச் செய்த செயல்களுக்கான கடனைத் திருப்பிச் செய்தவன் ஆகிறான் என்பது தெரிகிறது.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது அவ்வையார் வாக்கு,

மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்பது வேத வாக்கு.

இதையே யமனும் தனது வார்த்தைகளால் கௌதமருக்கு உறுதி செய்தான்.

***

tags- பெற்றோர, பணிவிடை,  யமன், உபதேசம்

PLEASE JOIN US TODAY MONDAY 11-1-2021

AGENDA OF GNANAMAYAM BROADCAST TODAY-

Xxx

11TH JANUARY 2021

PRAYER- RANJANI DASARATHY’S SONG – EZAIKKU IRANGA ….3 MTS

WORLD HINDU NEWS ROUND UP – 20 mts

IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

SONG BY Mrs LAKSHMI Ramaswamy’s disciple MISS Maitreyi- 4 MTS

LONDON SWAMINATHAN’S ARTICLE -READ BY VAISHNAVI ANAND- 5 MTS

MRS ANNAPURANI PANCHANATHAN SINGING- 5 MTS

BENGALURU MR. S NAGARAJAN’S Q AD A – 6 MTS

Sri Lanka Sisters Sowmya and Akshaya song – 5 mts

DR N .Kannan on Alwars – 7 MTS

APPRX 60 MINUTES

xxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

XXX

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

YOUTUBE/ GNANAMAYAM

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU MATTERS

XXXX SUBHAM XXXX

TAGS – PUBLICITY11121

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 22 (Post.9129)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9129

Date uploaded in London – –10 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -22

3-2-11

Palaharah

Fruit gatherer

Pala =PAZAM

பல ஹர – பழம் சேகரிப்போன்

பலம் -பழம்

xxx

3-2-12

Arha

அர்ஹ – அருகதை

Arukathai

Pujarhaa- woman who deserves respect

பூஜார் க = மரியாதைக்குரிய

Puja – pusanai in Tirukkural

பூஜா = பூசனை/ திருக்குறள்

Ja = sa

xxx

3-2-13

Karnejapah – gossip monger

கர்ண ஜபம் – வதந்தி மன்னன்

காதைக் கடிப்போ ன் 

Karne japitaa – mosquito

In Tamil the idiom is one who bites karna- kaathu

Also kiss kisu in kathu கிசு கிசுத்தல்

Like karne japitaa for mosquito

கர்ணே ஜபிதா = கொசு

காதில் ஜபம் செய்தல்

Xxx

3-2-15

க சய – ஆகாயத்தில் படுப்போன்

Ka saya- one who sleeps in the sky

Ka – sky, Sun, Moon, Cloud

க – ஸ்கை/ஆங்கிலம்

xxx

3-2-17

Biksha-pichchai – beg

பிக்ஷ= பிச்சை

Bikshacharah – pichaikkaran

பிக்ஷசரன் = பிச்சைக் காரன்

Aadhaaya charah- taking all available things

ஆதாய சரன் – சுருட்டி வாரிக்கொண்டு செல்பவன்

ஆதாயம்

Aadhaaya – used in Tamil, gains

xxx

3-2-18

Agresa- leader

அக்ரேஸ = தலைவர்

Agrahara- brahmin street, foremost street

Immediately after crossing the river, first street

Congress party leaders were called Agraasanar

காங்கிரஸ் கட்சியின் தலைவரை அக்ராசனர் என்றே குறிப்பிட்ட காலம் உண்டு

Xxxx

3-2-20

Hetu- ethuvaaka

ஹேது = காரணம்

Hetu- reason, cause

ஹேதுவாக

Aanulomya- anusaranai

அனுசரணை

Yasaskarii vidhyaa- Education brings you fame

Yasas- isai in tamil, pugaz

யச – இசை = புகழ்

xx

KAARA IN TIRUKKURAL 1

கார , கர

அகர முதல எழுத்தெல்லாம் ……………………

எழுத்துக்களுடன் கரம், காரம் சேர்ப்பது சம்ஸ்க்ருத வழக்கு

A-KARA MUTHALA

IT IS SANSKRIT

AKAARANTHA  PULLINGAH RAAMA SABDAH

Kara, kaara suffix in tamil means one who does, one who owns or runs

Kumabakaara – potter கும்ப காரன் = குயவன்

In Tamil we use paalkaran milkman, veettukkarar husband puukkaari, kadaikkaaran etc

தமிழில் பால்காரன், வீட்டுக்காரன் , வண்டிக்காரன்

Xxx

3-2-21

Lipikara, libikara – one who takes copies

லிபி காரன்= படி எடுப்போன்

Lipi, libi = glyphs

அஹ = பகல்

அகஸ்கரன் – பகலவன் =சூரியன்

Ahas-pahal

Ahaskara-pahalavan

Xxxx

-2-22

Artist and artiste are different

In the same way

கர்மகர – வேலையாள்

Karmakara is servant

கர்மகார – கலைஞன்

Karmakaara is artiste

Xxx

3-2-23

Kalaha kaara

கலஹக் காரன்

Kalakakkaaran .one who creates troubles

One who causes quarrels

A rioter

Xxx

3-2-24

Stambha

Stump

Vaarttika adds…………

Stambakari – arisi,rice

Sakrudkari– calf

ஸ்தம்ப = சமித்து ;  குச்சி

Xxxx

3-2-25

Druthi

Thol pai

துருத்தி – தோல் பை

கொல்லன் துருத்தி

Skin bag in Tamil it is thuruththi

Dhruthi haara- one who carries skin bag

Xxx  subham xxx

tags- Panini Tamil words 22

ஆலயம் அறிவோம்! உஜ்ஜயினி ஜோதிர்லிங்க ஸ்தலம் (Post No.9128)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9128

Date uploaded in London – –10 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

VOICE RECORDING IS AVAILABLE IN FACEBOOK.COM/GNANAMAYAM AND YOU TUBE (GNANA MAYAM CHANNEL); BROADCAST ON 10TH JANUARY 2021.

“ஓம் மஹாகால மஹாகாய மஹாகால ஜகத்பத் – மஹாகால மஹாயோகின் மஹாகால நமோஸ்துதே -மஹாகால மஹாதேவ மஹாகால மஹா ப்ரபோ – மஹாகால மஹாருத்ர மஹாகால நமோஸ்துதே!

மஹாகாலேஷ்வருக்கு நமஸ்காரம்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  சப்த மோக்ஷபுரிகளில் ஒன்றும் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள, அவந்திகா என்று பழைய காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த உஜ்ஜயினி ஆகும். மத்யபிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து இது 192 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஒவ்வொரு யுகத்திலும் இது ஒவ்வொரு பெயரைக் கொண்டது என்பதால் இது யுகம் கடந்த நகரம் என்பதை அறியலாம். கனகசிருங்கா அதாவது பொன் வேய்ந்த வீடு என்றும்,குசஸ்தலி அதாவது விசேஷ தர்ப்பை தலம் என்றும், பத்மாவதி அதாவது தாமரை மலர்களை முழுதுமாகக் கொண்ட இடம் என்றும் அமராவதி அதாவது என்றும் அழியாத தேவர்களின் இருப்பிடம் என்றும் இவ்வாறாகப் பல பெயர்களைக் கொண்ட திவ்ய நகரம் இது!

க்ஷிப்ர நதிக் கரையில் அமைந்துள்ள அற்புத ஸ்தலம் இது. க்ஷிப்ர என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இமைப்பொழுது என்று பொருள். இந்த புண்ணிய நதியில்  ஸ்நானம் செய்தால் இமைப்பொழுதில் ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தும் பறந்தோடும். இங்கு நடக்கும் கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு புண்ய ஸ்நானம் செய்வது வழக்கம்.

இந்த தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. தூஷணன் என்ற வேதாளம் ஒன்று, அவந்தி நகர் அதாவது உஜ்ஜயினி நகர் வாழ் மக்களைக் கொடுமைப்படுத்தி வந்தது. மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அங்கு வேதத்தில் வல்ல ஒரு அந்தணரிடம் சென்று முறையிட்டனர். அவர் மக்கள் படும் துன்பத்தைக் கண்டு இரங்கி ஒரு யாகம் செய்தார். அவரது தவத்தை மெச்சிய சிவபிரான் பூமியைப் பிளக்கச் செய்தார். அதிலிருந்து மஹாகாலர் தோன்றினார்; தூஷணனை வதைத்தார். அங்கு பூமிக்கு அடியிலேயே கோவில் கொண்டார். அது தான் நாம் இன்று காணும் மஹாகாலேஸ்வர் ஆலயம் ஆகும். இதன் வெளி பிரகாரம் பரந்து அகன்றது. இதன் தல விருட்சம் சித்தவடம் என்னும் ஆலமரம் ஆகும். இந்த மரத்தைத் தொன்று தொட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

ஐந்து அடுக்குகள்  கொண்ட இந்தக் கோவிலில் மூன்று அடுக்குகளில் மூன்று லிங்கங்களைக் காணலாம். பூமிக்குக் கீழே இருந்து அருள் பாலிப்பவரே மஹா காலர். ஜோதிர் லிங்கமான இவர் பூமிக்கு அடியில் இருப்பதால் படியில் இறங்கிச் சென்று இவரை தரிசிக்க வேண்டும். அவருக்கு மேலே இருப்பவர் ஓம்காரேஸ்வரர். அவருக்கும் மேலே இருப்பவர் தாரகேஸ்வரர்.

மஹாகாலேஸ்வரர் கோவிலில் இருக்கும் கோடி தீர்த்தத்தை எடுத்து நாமே அவருக்கு அபிஷேகம் செய்யலாம். இதற்காக குளக்கரையில் செம்பினால் ஆன சொம்புகள் உண்டு.

மஹாகாலேஸ்வரர் நிலை கொண்டுள்ள புள்ளி வழியாகத் தான் பூமியின் முதலாவது தீர்க்க ரேகை செல்கிறது. இதை வைத்துத் தான் கால நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகவே தான் இவர் மஹாகாலேஸ்வரர் ஆகிறார். உலகெங்குமுள்ள வானவியில் நிபுணர்களுக்கு மூலாதாரம் இந்தப் புள்ளியே.

கோவிலுக்கு தெற்கில் உள்ள கோடி தீர்த்தம் அபூர்வமான ஆற்றல் கொண்டது. இராவணனை வதைத்த இராமபிரானின் பட்டாபிஷேகத்திற்கென அனைத்து தீர்த்தங்களையும் சேகரித்து வந்த ஹனுமான் க்ஷிப்ர நதி வந்த போது இந்தத் தலத்தில் காகபுஜண்ட மஹரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். ஹனுமான் தீர்த்தத்தை எடுக்க முயன்ற போது அவர் தவம் கலைய, அவரது தபோபலத்தால் ஹனுமாரால் தீர்த்தத்தை எடுக்க முடியவில்லை. ரிஷியை வணங்கிய ஹனுமார் தான் வந்த காரியத்தைப் பணிவுடன் கூற, கொண்டு வந்த பல்வேறு தீர்த்தங்களில் ஒரு துளியை அங்கு விடுமாறு பணித்தார் ரிஷி. ஹனுமான் அப்படியே செய்ய அவரால் தீர்த்தத்தை எடுக்க முடிந்தது. அவர் மனம் மிக மகிழ்ந்தார்.  இந்த தீர்த்தத்தில் சரும வியாதி உள்ளவர்கள் குளித்தால் அந்த வியாதிகள் போகும் என்பது அனுபவ உண்மையாக அமைகிறது.

இந்தத் தலத்தில் தான் சாந்தீபனி மஹரிஷி தன் குருகுலத்தை நடத்தினார். பலராமரும் கிருஷ்ணரும் குருகுல வாசம் செய்தது இந்த முனிவரின் ஆசிரமத்தில் தான். இது உஜ்ஜயினி நகரின் வெளியில் உள்ளது.

விக்ரமாதித்தன் உலகம் வியக்கும் வண்ணம் சிறப்பாக ஆண்ட இடம் உஜ்ஜயினியே. இங்கு அவன் வழிபட்ட ஹர்சித்தி ஆலயம் மிக சக்தி வாய்ந்த சக்தி பீடங்களில் ஒன்று. தட்சனின் யாகத்தின் போது சிவபிரான் வீசி எறிந்த தேவியின் உறுப்புகளில் அவள் விலா எலும்பு விழுந்த இடம் இது. அங்காரகன் எனப்படும் செவ்வாய் பிறந்த இடமும் உஜ்ஜயினி தான். அவனுக்கு இங்குள்ள குன்றின் மேல் சிறிய கோவில் ஒன்று உண்டு. உலகம் வியக்கும் மஹாகவி காளிதாஸன் காளி அருள் பெற்று கவி மழை பொழிந்து வாழ்ந்த இடமும்

இதுவே. மேகதூதத்தில்  மேகத்தை நோக்கி, ‘நீ மாலை நேரத்தில் அங்கே இருந்து இரவில் இடிமுழக்கத்தால் மஹா காலருடைய பறையைத் தொட்டு வணங்கி விட்டுப் பின் மேலே செல்வாயாக” என்று சொல்வதோடு இன்னும் பலவாறாக உஜ்ஜயினியை அவர் போற்றிச் சித்தரிக்கிறார். மாபெரும் மன்னனாக இருந்து பின்னர் உலகைத் துறந்து மஹரிஷியாக மாறிய பர்த்ருஹரி தவம் செய்த குகையையும் ஊருக்கு வெளியே காணலாம்.

உலகெங்கிலும் உள்ள அறிஞர்களும் யாத்ரீகர்களும் இங்கு வந்து வியக்கும் வண்ணம் நல்லறிவு மற்றும் அனைத்துக் கலைகளின் தலைநகரமாகத் திகழ்ந்தது இது!

காலம் காலமாக கோடிக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும், மஹா காலேஷ்வரும் மஹா காளியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.       மஹாகவி பாரதியாரின் அருள் வாக்கு –  “யாதுமாகி நின்றாய் காளீ, எங்கும் நீ நிறைந்தாய்! காளி மீது நெஞ்சும் என்றும் கலந்து நிற்க வேண்டும்! அன்னாய் வாழ்க நின்றன் அருளே! நன்றி வணக்கம்!

–subham–

tags-  உஜ்ஜயினி, ஜோதிர்லிங்கம்,மஹாகாலேஸ்வரர்

Please join us today Sunday 10-1-21

PICTURE OF DIRECTOR MR AMSHANKUMAR

JANUARY 10, 2021 SUNDAY

PRAYER 

TEMPLE REPORT BY MRS BRHANNAYAKI SATHYANARAYANAN

Tiruppugaz -BY Mrs JAYANTHI SUNDAR AND HER DISCIPLES

FILM DIRECTOR CHENNAI MR AMSHAN KUMAR’S INTERVIEW

INTRODUCED BY LONDON Mr. PATHMANATHAN IYER- (30+5)

LONDON Mr.BALA SUBRAHMANYAN’S –  RASAM PAATTU (5)

Bharati Episode BY SRI VIDHYA FROM DUBAI (8)

APPR. 70 MINUTES

Amshan Kumar is an Indian filmmaker and writer. He has won a National Film Award for his documentary film Yazhpanan Thedchanamoorthy – Music beyond boundaries in the year 2015.[1][2][3] This is a lone Tamil non-fiction film to win a National Award in the past 17 years prior to this award [4] He is also a writer on films, his book Cinema Rasanai on film appreciation is being used as a textbook in many universities.[5] His debut feature film Oruththi was selected for the 2003 International Film Festival of India and was screened in the Indian Panorama section.[6][7][8] His second feature film Manusangada was screened in the 39th Cairo International Film Festival and also in the 48th International Film Festival of India (2017) in the Indian Panorama section.[9][10] He lives in Chennai.

Career[edit]

Amshan Kumar has made more than twenty five documentaries including Badal Sircar`s Third Theatre, Modern Art in Tamil Nadu,[11] Mangrove Forests, Nobel Laureate C.V.Raman, U.Ve.Saminatha Iyer, Tamil Poet Subramania Bharati[12] and Manakkal S.Rangarajan. His first directorial feature film in Tamil Oruththi selected for was shown in Indian Panorama based on a short novel by the renowned writer Ki. Rajanarayanan . It won the best film awards from Government of Pondicherry and Tamil Association of New Jersey.[13] His documentary on the Tavil Maestro Yazhpanam Thedchanmoorthy won the national award for the best arts/ cultural film in 2015.[3] It is the first Tamil non-feature film to win a National Award in 17 years.[14]

His second feature film Manusangada was selected in the Indian Panorama section of International Film Festival of India , Goa and was the only Tamil film to be selected that year.[15] The film had its world priemere in Jio MAMI Mumbai Film Festival[16] and its International Premiere at the Cairo International Film Festival.[17][18]

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

XXX

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM (Producer)   AND MRS VAISHNAVI ANAND AND MRS SUJATHA RENAGANATHAN ARE CO-PRODUCERS FOR TAMIL PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU MATTERS

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY10121

BOYS ARE MORE INTELLIGENT THAN GIRLS, HERE IS THE PROOF! (Post No.9127)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 9127

Date uploaded in London – – 10 January 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

DEAR GOD,

I KNOW THAT I AM NOT PERFECT,
I KNOW SOMETIMES I FORGOT TO PRAY,
I KNOW I HAVE QUESTIONED MY FAITH,
I KNOW I SOMETIMES I LOOSE MY TEMPER,
BUT, THANK YOU FOR ALL FOR LOVING ME
UNCONDITIONALLY GIVING ME ANOTHER DAY

TO START AGAIN !!!
XXXX

WHEN I WAS A YOUNG BOY, I WAS SCARED OF DARK.
NOW , WHEN I SEE THE ELECTRIC BILL I AM SCARED
OF LIGHTS !!!

XXX

YOU KNOW THE MEANING OF
A B. C. D. E. F. G. H. ????????
A Boy Can Do Everything For Girl. !!!

XXXX

REVERSE THE MEANING OF
G. F. E. D. C. B. A………….
Girls Forget Everything Done & Catch new-Boy Again!!!

XXX

YOUR LIFE BECOMES MASTER “PIECE”, IF YOU
LEARN TO MASTER “PEACE”

XXXX

ARGUING WITH A WOMAN IS LIKE GETTING ARRESTED,
EVERY THING YOU SAY CAN AND WILL BE USED
AGAINST YOU !!!

XXXX

HAPPINESS IS LIKE A BUTTERFLY,
THE MORE YOU CHASE IT,
THE MORE IT WILL ELUDE YOU,
BUT IF YOU KEEP TURN YOUR
ATTENTION TO OTHER THINGS,
IT WILL COME AND SIT SOFTLY
ON YOUR SHOULDER !!!

XXXX

ONE QUARTER WHAT YOU EAT KEEPS YOU ALIVE,
THREE FOURTH QUARTER KEEPS YOUR DOCTOR ALIVE !!!

XXXX

MONEY SAYS EARN ME,
CALENDAR SAYS TURN ME,
TIME SAYS PLAN ME,
FUTURE SAYS LEARN ME,
BEAUTY SAYS LOVE ME,
BUT
GOD SIMPLY SAYS, WORK HARD AND TRUST ME!!!

XXX

OUR GENERATION’S SLEEPING SCHEDULE DEPENDS ON,
THE TIME OF BATTERY REMAINING IN THE PHONE !!!

XXXX

POSITIVE THINKING POEM.

LITTLE BIRD IN THE SKY,
DROPPING SHIT ON YOUR HEAD,
YOU DONT WORRY, YOU DONT CRY,
YOU JUST THANK GOD THAT COW DO NOT FLY !!!!

XXX

EVERYBODY KNOWS HOW TO BUILD A BEAUTIFUL HOUSE
BUT ONLY A FEW PEOPLE KNOW HOW TO LIVE BEAUTIFULLY
IN THE HOUSE

XXXX

BOYS ARE ALWAYS MORE INTELLIGENT THAN GIRLS
WHAT IS THE PROOF ?
OK, READ THIS………
WE ALWAYS SAY INTELLI “GENTS”………
HAVE YOU EVER HEARD INTELLI “GIRLS”!

XXX

AS YOU START A NEW BUSINESS, I WISH THAT
FAILURE IS BEHIND YOU……

SUCCESS IS IN FRONT OF YOU…….

GOOD LUCK IS BY YOUR SIDE !!!

XXXX SUBHAM XXXXX

tags- boys, girls, intelligent

தோல்வி இதயத்திற்கு,வெற்றி தலைக்கு போகக் கூடாது (Post No.9126)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9126

Date uploaded in London – – 10 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 17

                    Kattukutty

உன்னால் ஒருவர் கண்ணீர் விட்டால் அது பாவம்,

உனக்காக ஒருவர் கண்ணீர் விட்டால் அது பாசம் !!!

XXX

மனிதனாக வாழ வழிகள்

மிகவும் மதிப்பிற்குரியவர்கள் – தாய், தந்தை, குரு

மிக நல்ல நாள் – இன்று

மிகவும் வேண்டியது – பணிவு

மிகவும் வேண்டாதது – வெறுப்பு

மிகப் பெரிய தேவை – நம்பிக்கை

மிகக் கொடிய நோய் – பேராசை

மிக சுலபமானது – குற்றம் காணல்

மிக தரமற்ற குணம் – பொறாமை

நம்பக்கூடாதது – வதந்தி

ஆபத்தை விளைவிப்பது – அதிகப் பேச்சு

செய்யக் கூடாதது – நம்பிக்கை துரோகம்

செய்யக் கூடியது – உதவி

விலக்க வேண்டியது – சோம்பேறித்தனம்

உயர்வுக்கு வழி – உழைப்பு

நழுவவிடக் கூடாதது – வாய்ப்பு

பிரியக் கூடாதது  – நட்பு

மறக்க கூடாததது – நன்றி

ஒவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது – இறை பக்தி

XXXX

தேனீர்ல சர்க்கரை கொட்டினாலும், சர்க்கரை மீது தேனீர்

கொட்டினாலும், கரையப் போவது சர்க்கரை தான்……….

வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டாலும், வருத்தப்பட்டுக்

கொண்டே வாழ்ந்தாலும் வீணாகப் போவது உன் வாழ்க்கைதான்!!!

XXXX

நம்பிக்கை கிடைத்த இடத்தில் அன்பு கிடைக்காது,

அன்பு இல்லாத இடத்தில் சந்தோஷம் இருக்காது,

சந்தோஷம் இல்லாத இடத்தில் வாழ்க்கை இருக்காது !!!.,

XXXX

சில பொழுது சிந்தித்தால்,

பல பொழுது அவசியமில்லை அழுவதற்கு!!!

XXXX

தோல்வி இதயத்திற்குப் போகக் கூடாது,

வெற்றி தலைக்கு போகக் கூடாது ……….

XXXX

வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதைவிட,

யாரையும் வேதனைப் படுத்தவில்லை என்பதே சிறந்தது!!!

XXXX

தலைவர் தன்னை யூத் YOUTH ன்னு நினைச்சுகிட்டு பண்ற அட்டகாசம்

தாங்கலை………..

ஏன்.? என்ன ஆச்சு…….?

இன்னைக்கு ஒரு குழந்தைக்கு WHATSUP (WHATSAPP) ன்னு பேர் வச்சிருக்காரு!!!

XXXX

                                                                      ***

tags-  நவீன ஞான மொழிகள்17

விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ரிகார்ட் செய்தது யார்? ENGLISH & TAMIL(Post.9125)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9125

Date uploaded in London – –10 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ENGLISH VERSION FOLLOWS TAMIL MATTER

விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ரிகார்ட் செய்தது யார்? ENGLISH & TAMIL(Post.

ச.நாகராஜன்

1940களிலோ அல்லது 1950 களிலோ ஒரு நாள் ஒருவர் காஞ்சி மஹாபெரியவாளை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு டேப் ரிகார்டரைப் பயன்படுத்தி பேட்டியை ரிகார்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது பெரியவாள் ஒரு கேள்வியைக் கேட்டார்: யாருக்காவது உலகின் மிகப் பழைய டேப் ரிகார்டர் எது என்று தெரியுமா?

ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. பின்னர் மஹாபெரியவாள் இன்னொரு கேள்வியைக் கேட்டார் : “விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? ‘பீஷ்ம பிதாமஹர் நமக்குக் கொடுத்தார், என்று ஒருவரிடமிருந்து பதில் வந்தது. அனைவரும் இதை ஒப்புக்கொண்டனர். பின்னர் மஹாபெரியவாள் இன்னொரு கேள்வியைக் கேட்டார் : “போர்க்களத்தில் அனைவரும் பீஷ்ம பிதாமஹர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த போது குருக்ஷேத்திரத்தில் யார் அதை எழுதிக் கொண்டிருந்தார்?

ஸ்ரீ மஹாபெரியவாள் விளக்க ஆரம்பித்தார் : “பீஷ்ம பிதாமஹர் கிருஷ்ணரை ஆயிரம் நாமங்களால் (சஹஸ்ரநாமம்) போற்றிக் கொண்டிருந்த போது கிருஷ்ணரும் வேத வியாஸ முனிவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் ஆயிரம் நாமங்களை முடித்த பின்னர் தான் அனைவ்ரும் கண்களை விழித்தனர். அப்போது முதலில் பேசியவர் யுதிஷ்டிரர் தான்! அவர் கூறினார் : “பிதாமஹர் வாசுதேவரின் ஆயிரம் நாமங்களை உச்சரித்தார். நாம் அனைவரும் அதைக் கேட்டோம். ஆனால் ஒருவருமே அதை எழுதி வைத்துக் கொள்ளவில்லையே! அந்த நாம வரிசை இப்போது இல்லையே!

உடனே அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து அவரது உதவியை நாடினர்.

வழக்கம் போல அவர், “நானும் எல்லோரையும் போலக் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது நாம் என்ன செய்வது?” என்றார். அனைவரும் கிருஷ்ணரைச் சூழ்ந்து கொண்டு எப்படியாவது அந்த அருமையான நாமங்களை மீண்டும் பெறுவதற்கு உதவ வேண்டும் என்று வேண்டினர்.

“அது சஹாதேவன் ஒருவனால் மட்டுமே முடியும். அதை அவன் சொல்ல வியாஸர் எழுதிக் கொள்ளட்டும்” என்றார் கிருஷ்ணர்.

அனைவருக்கும் சஹாதேவனால் மட்டும் அதை எப்படிச் செய்ய முடியும் என்று ஆச்சரியம். அவர்கள் அதை கிருஷ்ணரிடமே கேட்டனர்.

கிருஷ்ணர் கூறினார் இப்படி :”  இங்கு கூடியிருந்த அனைவருள்ளும் சஹாதேவன் ஒருவனே சுத்த ஸ்படிகத்தைத் தரித்துக் கொண்டிருந்தான். அவன் சிவனை நோக்கி தியானம் செய்து பிரார்த்தித்தால் ஸ்படிகத்தை ஒலி அலைகளாக மாற்ற முடியும்; அதை வியாஸர் எழுதலாம்”

உடனே வியாஸரும் சஹாதேவனும் பீஷ்ம பிதாமஹர் வாசுதேவனைக் குறித்து உச்சரித்த விஷ்ணு சஹஸ்ரநாமம் சொன்ன இடத்திலேயே அமர்ந்தனர். சஹாதேவன் ஸ்படிகத்தில் இருந்த ஒலி அலைகளைப் பெற தியானம் செய்ய ஆரம்பித்தார்.

ஸ்படிகத்தின் இயற்கை என்னவெனில், ஒரு அமைதியான சூழ்நிலையில் ஸ்படிகம் ஒலி அலைகளை அப்படியே கிரஹிக்கும்; ஸ்வேதாம்பரராகவும் ஸ்படிகமாகவும் விளங்கும் மஹாதேவரை முறைப்படி தியானம் செய்தால் அதை மீண்டும் பெற முடியும். ஆகவே உலகின் முதல் டேப் ரிகார்டர் ஸ்படிகம் தான்; அது தான் நமக்கு அருமையான விஷ்ணுசஹஸ்ரநாமத்தைத் தந்தது!

மஹா பெரியவாள் இப்படி விளக்கிய பின்னர் அனைவரும் பிரமித்து நின்றனர். ஸ்படிகம் ரிகார்ட் செய்ய, வேத வியாஸர் மூலமாக விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்குக் கிடைத்தது!

(காஞ்சி ஜகத்குரு மஹா பெரியவாள் – காஞ்சி பரமாசார்யாள் உரையிலிருந்து தொகுக்கப்பட்டது)

ஆதாரம், நன்றி : ட்ரூத், கல்கத்தா ஆங்கில வார இதழ்; தொகுதி 88 இதழ் 24 தேதி 1-1-2021

*

இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது :

Who recorded the Vishnu Sahasranamam? 

Once, way back in the 1940’s or 50’s, someone was interviewing Sri Maha Periyava. That gentleman recorded the interview using a tape recorder. Periyava then posed a question, “Does anyone know which is the oldest known tape recorder?” 

Nobody was able to answer. Then Sri Maha Periyava asked another question, “How did Vishnu Sahasranamam come to us?” Someone said that Bheeshma Pitamah gave it to us. All agreed. Then Sri Maha Periyava posed another question, “When all were listening to Bheeshma on the battlefield, who took the notes at Kurukshetra?”Again silence. 

Sri Maha Periyava explained, “When Bheeshma Pitamah was glorifying Sri Krishna with Sahasranamam, everyone was looking at him including Sri Krishna and the sage, Veda Vyasa. After he finished the 1000 Namas, all opened their eyes. The first to react was Yudhistirar. He said, “Pitamah has chanted 1000 glorious names of Vasudeva. All of us listened to it but none of us have noted it down. The sequence is lost.” Then all turned to Sri Krishna and asked for His help. 

As usual He said, “I was also listening like the rest of you. What can we do?” Then all beseeched Sri Krishna to help them recover the precious rendition. Then Sri Krishna said, “It can only be done by Sahadeva and Vyasa will write it down.” 

Everyone wanted to know how Sahadeva could do it. Sri Krishna replied, “Sahadeva is the only one amongst us wearing the Shuddha Sphatika. If he prays to Shiva and does dhyanam, he can convert the Sphatika into waves of sound and Vyasa can write it down.” 

Then both Sahadeva and Vyasa sat in the same place under Bheeshma Pitamah, where he had recited the Vishnu Sahasranamam. Sahadeva started doing the dhyanam to rocover the sound waves from the Sphatika. 

The nature of Sphatika is that it will capture sounds in a calm environment which can be got back with proper dhyanam of Maheswara who is Swethambara and Sphatika. So, the world’s earliest tape recorder is this Sphatika which gave us the wonderful Vishnu Sahasranamam. 

When Sri Maha Periyava explained this all were stunned. From the Sphatika recording, the grantha came to us through Veda Vyasa. 

[Compiled by Jagadguru Sri Maha Periyava– Kanchi Paramacharya.]
Source : English Weekly :  TRUTH VOL. 88 NO. 24

***

TAGS- விஷ்ணு சஹஸ்ரநாமம், ரிகார்ட் ,

வீணைக் கொடியுடைய வேந்தனே! (Post No.9124)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9124

Date uploaded in London – –9 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வீணைக் கொடியுடைய வேந்தனே!

கொடிகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள்.  சின்னங்கள் முத்திரைகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள் ; வாகனங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் இந்துக்கள் (READ MY OLD RESEARH ARTICLES ON VAHANAS, SYMBOLS AND FLAGS PLEASE). தொல்காப்பியத்திலேயே பலராமனின் பனைக்கொடி உளது.

புறநானூற்றுப் பாடல் 56, மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனாரால் பாடப்பட்டது அதில்  சிவனின் ரிஷபக் கொடி, முருகனின் மயில் கொடி, பலதேவனின் பனைக்கொடி, விஷ்ணுவின் கருடக்  கொடி  ஆகிய அனைத்தும்  குறிப்பிடப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள்  அதி தீவிர இந்துக்கள் . அவர்களுக்கு ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகள் அத்துபடி!! திருப்பறங்குன்றத்தில் இருந்த இந்திரன்-அகலிகை ஓவியத்தை ஒரு கிராமத்தான், அவனுடைய  மனைவிக்கு விளக்கிய பரிபாடல் காட்சி மூலமும் இது தெரிகிறது

துரியோனாதணனுக்கு பாம்புக் கொடி ; ராவணனுக்கு வீணைக் கொடி என்பதும் நமக்குத் தெரியும் .

ஆயினும் திருக்குறள் காலம் வரை யாழ் பற்றிய குறிப்பே கிடைக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் எழுத்து வடிவில் உருவான சிலப்பதிகாரத்தில்தான் முதல் முதலில் வீணையை சந்திக்கிறோம்.(6-18). ‘நாரதர் வீணை’ (6-18, 22) பற்றி இளங்கோ பாடுகிறார். பின்னர் மணிமேகலையில் (CHAPTER 29) காண்கிறோம் . ஆனால் கம்பன் பல இடங்களில் வீணைக் கொடியைக் குறிப்பிடுகிறான்; பாடுகிறான்

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் வரும் இராவணன் பற்றிய பாடல் எல்லோரும் கேட்டு ரசித்த பாடல் …………….

வீணைக் கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே

உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே

ஆனந்தகான அமுத மழையே

பொழிந்து மனம் தனை உருக வழி செய்த

வீணைக் கொடியுடைய வேந்தனே (பாடல் – ஏ.மருதகாசி

வால்மீகி ராமாயணத்தில்தான் இதற்கான மூலம் உளது. ஸீதையைத் தேடிச் சென்ற அனுமன், ராவணனின் அந்தப்புரத்தில் நுழைந்த போது, ‘விபஞ்சி’ என்ற ஒரு வகை வீணையுடன் பல பெண்கள் தூங்குவதைக் காண்கிறான். ஒரு பெண்மணி வீணை வாசித்த களைப்பில் அதைக் கட்டிக்கொண்டு உறங்கும் காட்சியும் வருகிறது . இவை சுந்தர காண்டத்தில் உளது. ஆயினும் இராவணன் சாம கானப் பிரியன், சிவ பக்தன் , வீணை வாசிப்பதில் வல்லவன் என்று கேட்டபோதிலும் அவன் வீணை வசிக்கும் காட்சியை வால்மீகி வருணிக்கவில்லை. அவனுக்கும் வீணாவுக்கும் உள்ள தொடர்பை ஒரு அற்புத உவமை விளக்குகிறது. அவன் போர்க் களத்தையே வீணை வாசிப்பதற்கு ஒப்பிடுகிறான்.

யுத்த காண்டத்தில் வரும் வால்மீகி ஸ்லோகம் ஒரு புதுமையான உவமை! போர்க்களம் என்பது  ‘வீணை யாம்’ . அதில் அவன் பயன்படுத்தும் வில், அம்புகள் வீணை வாசிக்கும் கருவியாம் . இதைப் புரிந்துகொள்ள ராவணன் வைத்திருந்த விநோத வகை வீணையை நாம் அறியவேண்டும். அவனிடம் ‘ராவண ஹஸ்தக’ என்ற விசேஷ வகை வீணை இருந்தது. இதை வயலின் வாசிப்பது போல அவன் (violin bow)வில்லால் வாசிப்பானாம். ஆகையால்தான் போர்க்களத்தை வீணைக்கு ஒப்பிடும் உவமையை வால்மீகி பயன்படுத்துகிறார்.

கம்பனும் ‘ராவணன்- வீணை’ தொடர்பை பல பாடல்களில் ‘வீணைக்கொடி’ மூலம் விளக்குகிறான் .

ஆரண்ய காண்டத்தில் ராவணனுடன் சடாயு போரிட்ட காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் கொடியை மறக்கவில்லை

“இடிப்பு ……………

…………….

கடிப்பக் கடிது உற்றவன் காண் தகும் நீண்ட வீணைக்

கொடிப் பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான்”

பொருள் —

இடி முழக்கத்துடன் பறந்துவந்து, சிறகுகளால் ராவணன் தலைகளைத் தள்ளிவிட்டு , நீண்ட வீணைக்கொடியைப் பழித்து ஒடித்து , அச்செயல் மூலம் தேவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றான்

Xxx

பின்னரும் சடாயு உயிர் நீத்த படலத்தில் கொடியை மறக்கவில்லை கம்பன் …

இராமனும் இலக்குவனும் தெற்கு நோக்கி பயணம் செய்கையில் சடாயு இறந்த இடத்தில் வீணைக்கொடி ஒன்று தரையின் மீது கிடந்ததைக் கண்டனர்

“பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார்மேல் “–

இதற்கு அடுத்த சில பாடல்களில் சடாயுதான் சீதையைக் கவர்ந்த பகைவருடன் போரிட்டு இதைச் செய்திருக்க வேண்டும் என்று இலக்குவனிடம் சொல்லி கண்ணீர் விடுகிறான்.

Xxxx

கம்ப இராமாயண யுத்த காண்டத்தில், முதற் போர் புரி படலத்தில் வரும் பாடல் இதோ ………………………

ஏழிசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்

சூழிருந்திசைகளைத் தொடரும் தொல்கொடி

வாழிய உலகு எலாம்  வளைத்து வாய் இடும்

ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே

பொருள் ……….

“தேரிலே ஏழிசைக் கருவியாகிய வீணையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது .அந்தக் கொடி காற்றில் திக்குகள் தோறும் படபடத்தது. அது யமனுடைய நாக்கு போல இருந்தது ஊழிக் காலத்தில் உலகத்தை எல்லாம் தனது வாய்க்குள் போட்டு விழுங்கும் யமனின் நாக்கு போல உயர்ந்து விளங்கியது”.

யுத்த காண்டத்தில், இன்னும் ஒரு பாடலில் வீணைக்கொடியின் அவல நிலையைப் பாடுகிறான் கம்பன் …

எழுத்து வீணை கொடு ஏந்து பதாகை மேல்

கழுகும் காகமும் மொய்த்தன 

பொருள்

வரையப் பெற்ற வீணையைச் சின்னமாகக் கொண்ட ராவணனின் கொடி மீது  காகமும் கழுகும் மொய்த்தன .

XXXX

MY OLD ARTICLE………

அகத்தியரும் வீணை வாசிப்பதில் வல்லவர்

நச்சினார்க்கினியர் சொல்லும் இராவணன் வீணைக்  கதை 

ராவணன் – பாண்டியர் சமாதான …

tamilandvedas.com › 2014/06/24 › ர… 

24 Jun 2014 — ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை ! pandya-flags. Pandya Flags drawn by me. தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!! ஆராய்ச்சிக் …

–subham—

tags- வீணைக் கொடி, நச்சினார்க்கினியர், ,ராவணன் 

புராணத்துளிகள்- முக்தி அடைய உள்ள 3 யோகங்கள்! (Post.9123)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9123

Date uploaded in London – –9 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 2

ச.நாகராஜன்

2. பரமபதம் அடைவது எப்படி?

பரமபதம் அடைவது எப்படி என்பதை துருவ சரித்திரத்தில் நாரதர் விளக்குவதைக் கண்டோம். மஹாகவி பாரதியாரின் கவிதைப் பகுதி இதே கருத்தை வலியுறுத்துவதை இங்கு கண்டு மகிழலாம்.

எங்கள் மதம் (உயிர் பெற்ற தமிழர் பாட்டு)

தோன்றி அழிவது வாழ்க்கை – இதில்

துன்பத்தோடின்பம் வெறுமையென்றோதும்

மூன்றில் எது வருமேனும் – களி

மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி

3. நமது துக்கத்திற்குக் காரணம்!

நமது துக்கத்திற்குக் காரணம் என்ன என்பதை துருவனின் தாயான ஸுநீதி அவனிடம் கூறுகிறாள்:

“அப்பா! பிறர் மேல் அபராதத்தை நினைக்காதே! எவன் பிறருக்குத் துக்கத்தை விளைவிக்கின்றானோ, அவன் தானும் அந்த துக்கத்தையே அனுபவிப்பான். நாம் ஜன்மாந்தரங்களில் எவருக்கு என்ன துக்கத்தை விளைவித்தோமோ, இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கின்றோம். ஆகையால் இது நம்முடைய பாவத்தின் பலனேயன்றி  வேறன்று. இதற்கு நாம்  பிறர் மேல் தோஷத்தை நினைக்கலாகாது.”

பாகவதம் சதுர்த்த ஸ்கந்தம் எட்டாம் அத்தியாயத்தில் இடம் பெறுவது இந்த உரையாடல்.

4. முக்தி அடைய உள்ள மூன்று யோகங்கள்!

தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 37ஆம் அத்தியாயத்தில் வருவது இது:

தேவியானவள் பர்வதராஜனுக்குக் கூறுவது : “மோக்ஷத்தை அடைவதற்குச் சொல்லப்பட்ட வழிகள் மூன்று. கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகியவையே அவை. இம்மூன்றும் எப்போதும் சுலபமாக சுவாதீனம் செய்து கொள்ளலாம்.

5. மூவகை பக்தி

தேவியானவள் மேற்கொண்டு பக்தியின் மூன்று வகைகளை விளக்குகிறாள் இப்படி:-

மனிதர்களின் குண பேதங்களால் பக்தி யோகமானது தாமஸ பக்தி என்றும், ராஜஸ பக்தி என்றும் சாத்விக பக்தி என்றும் மூவகைப்படும்.

தாமஸ பக்தியாவது : பிறர் வருந்தவேனும், டம்பமாகவேனும் மாச்சரியத்தினாலும், குரோதத்தினாலும் என்னிடம் விஸ்வாசம் வைத்துச் செய்யும் செயல்களாம்.

ராஜஸ பக்தியாவது : பிறருக்குத் துன்பம் செய்யாமல் தனக்கு மாத்திரம் நன்மையான செயல்களைச் செய்து கொண்டும் ஏதேனும் ஒரு இச்சையை நாள்தோறும் எண்ணியும் புண்ணிய பலன்களை அனுபவிக்கும் பொருட்டும் பேத புத்தியினால் என்னை உபாசித்தல் ஆகும்.

சாத்விக பக்தியாவது : பாவ நிவர்த்தியின் பொருட்டு எல்லாச் செயல்களையும் ஈஸ்வரார்ப்பணமாகச் செய்வதாகும். இச்செயல் வேதோக்தம் என்பதால் இதை எப்போதும் செய்ய வேண்டும்  என்கிற நிச்சய புத்தியை உடையவனாக ஆதல், ஆண்டான் அடிமை என்கிற பேத புத்தியோடு தெய்வத்தினிடத்தில் பிரியம் உடையவனாக இருத்தல் முதலியனவாம்.

6. தேவியின் ஒரு இமை கொட்டும் காலம், மனிதர்களின் காலத்தோடு ஒப்பிட்டால் எவ்வளவு?

தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்கந்தம் அத்தியாயம் எட்டில் வரும் அற்புதமான கால அளவைகள் கீழே தரப்படுகின்றன.

மனிதர்களுக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். மனிதர்களுக்கு முன்னூற்றறுபது யுகம் கழிந்தால் அது தேவர்களுக்கு ஒரு யுகமாகும்.

எழுபத்தோரு தேவ யுகம் ஒரு மன்வந்தரமாகும்.

அது இந்திரனுடைய காலத்துக்குச் சமமாகும்.

இருபத்தெட்டு இந்திரகாலம் கழிந்தால் அது பிரம்மாவுக்கு ஒரு நாளாகும்.

நூற்றேட்டு வயதானால் பிரம்மாவுக்கு ஆயுள் முடிந்து விடும்.

அப்போது பிராகிருத பிரளயம் ஏற்படுகிறது. பூமி ஜலத்தினால் மூடப்பட்டு விடும்.

மும்மூர்த்திகளும், மஹரிஷிகளும், சகல ஞானிகளும் சத்ய ரூபமான சிதாத்மாவில் ஐக்கியமாகின்றனர்.

பிரகிருதியும் சிதாத்மாவில் லயமடையும் காலமானது தேவிக்கு இமை கொட்டும் காலமாகும்.

இவ்வாறு அசைவில்லாத பிரம்மாண்டங்கள் லயித்துப் போகின்றன.

மறுபடியும் தேவி சிருஷ்டிகிரமத்தால் ஒரு நிமிஷ காலத்துக்குள் சிருஷ்டித்து விடுகிறாள்.

இப்படி சிருஷ்டிலயம் கற்பங்கள் எத்தனையோ நடந்து விட்டன.

இதன் கணக்கையும், பிரம்மாண்டங்களின் கணக்கையும் எவர் அறிவார்?!

***

tags- புராணத்துளிகள்,  மூன்று யோகங்கள்