எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து (Post No.7516)

WRITTEN  BY LONDON SWAMINATHAN

Post No.7516

Date uploaded in London – 30 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மே 24, 1992 தினமணியில் நான் எழுதிய கட்டுரைகள்:–

1.ரஷ்ய ராக்கெட்டுகள் ஏலம்

2.எல்விஸ் பிரெஸ்லி தபால் தலை

3.டைட்டானிக் கப்பல் விபத்து விசாரணை

4.எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து

இதில் ‘எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து’

பற்றிய செய்தியைக் காண்போம்–

Pure ecstasy takes the form of a white powder. It is known as MDMA which is short for 3,4 Methylenedioxymethamphetamine. Although police seizures of MDMA powder have increased in recent years, it remains less common than ecstasy tablets or capsules. Ecstasy is also very occasionally sold as crystals.

—subham—

தேக்கடி ராஜா கதையும் டார்ட்போர்ட் டால்பின்களும் (Post No.7515)

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7515

Date uploaded in London – 30 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அன் பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் (ப்பாள் ) ? என்றான் வள்ளுவப்  பெருந்தகை. இந்த அன்பு உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் உண்டு என்பதை பஞ்ச தந்திரக் கதைகளும். சங்க இலக்கியக் காட்சிகளும் காட்டுகின்றன.நேற்றைய பிரிட்டிஷ் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு செய்தி மேலும் இரண்டு சமபவங்களை நினைவுபடுத்தின. 1. நான் பள்ளிப் பருவத்தில் 1960-களில் படித்த ‘தேக்கடி ராஜா’ கதை (இணைப்பைப் பாருங்கள்) மற்றொன்று உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய நாய். இப்போது டோக்கியோவில் சிலையால் புகழ் பெற்றுவரும் நாய். இது தவிர மாதாகோவிலுக்கு வந்த நாய், சங்கராசார்ய மடத்தில் இருந்த நாய், மஹாபாரதத்தில் பாண்டவர்களைத் தொடர்ந்து வந்த நாய், ரிக் வேதத்தில் உள்ள சரமா நாய், அதை கிரேக்கர்கள் ஹெர்மஸ் என்று காப்பியடித்த நாய் என்று ஏராளமான மிருகங்களின் கதைகளை இந்த ‘பிளாக்’கில் படிக்கலாம். இது தவிர சிவன் மூலம் முக்தி பெற்ற மிருகங்களின் கதைகளையும் கொடுத்தேன்.

புதுக் கதையை மட்டும் எழுதுகிறேன் …..

இங்கிலாந்தின் தென் மேற்கு மூலையில் உள்ளது டெவன் பிராந்தியம். அதில் உள்ள டார்ட்போர்ட் அருகில் கிங்ஸ்வேர் (Kingswear near Dartford in Devon, England) என்னும் இடத்தில் கடலில் 20 டால்பின்கள் (Dolphins) கரையை நோக்கி நீந்தி வந்தன.  அவை அங்கே சோகத்துடன் தத்தளித்துக் கொண்டு இருந்தன. ஒன்றிரண்டு டால்பின்களை அரிதே காணும் மக்களுக்கு இது வியப்பாக இருந்தது. பின்னர்தான் விஷயம் புரிந்தது. அதற்கு முதல் நாளன்று கடற்கரை தடுப்புச்சுவர் அருகில் ஒரு குட்டி டால்பின் இறந்து கிடந்தது.   தலையில் இரண்டு வெடிகுண்டுக்கு காயங்கள் இருந்தன.

செத்துப்போன தனது குழந்தையைத் தேடி அதன் தாயாரும் தகப்பனும் நண்பர்கள் உறவினர்கள் புடை சூழ அந்தக் கடற்கரைக்கு வந்ததாகப் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

டால்பின்களும் திமிங்கிலங்களளும் குட்டி போட்டு பால் கொடுக்கும் கடல் வாழ் பிராணிகள் (Mammals). மீன் போல தோன்றினாலும் மீன் வகையை சேர்ந்தவை அல்ல. டால்பின்களின் மூளை மிகப்பெரியவை. மனிதர்களை போல குடும்பத்துடனும் உறவினர்களுடனும் கூட்டாக வாழும் பிராணி வகை. உலகம் முழுதும் டால்பின்களை பற்றி நிறைய கதைகள் உண்டு. கிரேக்க நாட்டுச சிறுவனை டால்பின் ஏற்றி சென்று காப்பாற்றிய கதை முதல் இன்று வரை பல சம்பவங்கள்.

சுருக்கமாக

டோக்கியோ நாய் ஹசிகோ தனது இறந்து போன எஜமானரைக் காண ஒன்பது ஆண்டுகளுக்கு நாள் தோறும் , அவர் வந்து இறங்கும் ரயில் நிலையத்துக்கு வந்து சென்றது.

தேக்கடி ராஜா கதை இறந்து போன யானைத் தலைவனுக்கு நள்ளிரவில், நடுக் காட்டில், பௌர்ணமி இரவில் நூற்றுக்கணக்காண யானைகள அஞ்சலி  செய்த கதை.  இது நான் பள்ளிக்கூடத்தில் இருக்குபோது பத்திரிகையில் தொடராக வந்து எல்லோரையும் அசத்திய கதை- 50 ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் மீண்டும் படித்தேன். டால்பின் செய்தி வந்தவுடன் அதுவும் நினைவுக்கு வந்தது.

OLD ARTICLES IN THE BLOG

tamilandvedas.com › 2013/01/19 › வேத-நா…

வேத நாயும் மாதா கோவில் …

  1.  

19 Jan 2013 – வேத நாயும் மாதா கோவில் நாயும் … பூர்வ ஜன்மத்தில் ஒரு மடத்தின்/ கல்வி நிறுவனத்தின் தலைவர் தாம் என்றும் அப்போது …

tamilandvedas.com › 2015/07/12 › செய்நன…

செய்நன்றி:- நன்றியுள்ள … – Tamil and Vedas

  1.  

12 Jul 2015 – செய்நன்றி:- நன்றியுள்ள யானையும்குடிகாரப் பாம்பும்! … நன்றியுள்ள பிராணிகள் பற்றி நிறையவே படித்து இருக்கிறோம்.

Gajendra Moksha in Africa !! | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/08/02/gajendra-moksha-in-africa/

  1.  

2 Aug 2012 – Believe it or not it happened in Africa very recently. … The meaning of the word Gajendra Moksha is Gaja=elephant, Indra= the leader or the …

—SUBHAM

ரஷ்ய ராக்கெட்டுகள் ஏலம் (Post No.7511)

ரஷ்ய ராக்கெட்டுகள் ஏலம் (Post No.5711)

WRITTEN  BY LONDON SWAMINATHAN

Post No.7511

Date uploaded in London – 29 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மே 24, 1992 தினமணியில் நான் எழுதிய கட்டுரைகள்:–

ரஷ்ய ராக்கெட்டுகள் ஏலம்

எல்விஸ் பிரெஸ்லி தபால் தலை

டைட்டானிக் கப்பல் விபத்து விசாரணை

எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து

இதில் ‘ரஷ்ய ராக்கெட்டுகள் ஏலம்’

பற்றிய செய்தியைக் காண்போம்–

பட்டுப் பூச்சிக்குப் பலத்த காவல்! (Post No.7502)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7502

Date uploaded in London – 27 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பட்டுப்பூச்சி உலகம் பற்றி நான் தினமணிக்கதிரில் 18-10-  எழுதிய துணுக்கு செய்தி இது.

இப்பொழுது பிரிட்டன் உள்பட  உலகின் பல பகுதிகளிலும் இது போல காடசியகங்கள் உள்ளன.

பத்திரிக்கையின் பெயர் — தினமணி கதிர்.

தேதி – 18-10-1992

தலைப்பு -அபூர்வப்  பட்டுப்பூச்சிக்குப் பலத்த காவல்

HOW TO FIND US

BUTTERFLY WORLD
Preston Park
Yarm Road
Eaglescliffe
Stockton
TS18 3RH

Tel: 01642 791414
Email: butterflyworldltd@outlook.com

நதிக்கரையில் வைரங்கள் (Post No.7498)

நதிக்கரையில் வைரங்கள் (Post No.7498)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7498

Date uploaded in London – 26 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இது இத்தொடரில் வைரங்கள் பற்றிய பன்னிரெண்டாவது கட்டுரை.

வெளியான தேதிகள் – ஜனவரி 3, 1993; அக்டோபர் 4, 1992; அக்ட்டோபர 8, 1992

பத்திரிக்கையின் பெயர்- தினமணி கதிர்

நான் தினமணிக்கு எழுதிய கட்டுரைகள், சில நேரங்களில் வார இணைப்பான

தினமணிக் கதிரிலும் வெளியாவதுண்டு. எல்லா இடங்களிலும் பெயரைத்

திரும்பத் திரும்பப் போடாமல் ‘சுவாமி’ என்றும், ‘நாதன்’ என்றும் எழுதுவர்.

சில நேரங்களில் பெயர் இல்லாமலும் வரும். இதற்குப் பின்னர் நான்

ஜெம்மாலஜி பத்திரிகையில் எழுதியதால் சில விஷயங்களை நீங்கள்  மீண்டும்

படிக்க வேண்டியிருக்கும்.

இத்துடன் மூன்று வைரத் துணுக்குள் உள .

கட்டுரைத் தலைப்புகள் –  நதிக்கரையில் வைரங்கள் ;

உலகின் மிகப்பெரிய வைரம்;

பலத்த பாதுகாப்பில் கோஹினுர் வைரம்

subham

Tags – நதிக்கரை , வைரம், கோஹினுர், பாதுகாப்பு, பெரிய வைரம்

Tags – நதிக்கரை , வைரம், கோஹினுர், பாதுகாப்பு, பெரிய வைரம்

ஆகாயத்திலிருந்து விழும் நிக்கல்! (Post No.7497)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7497

Date uploaded in London – 26 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நிக்கல் என்னும் அற்புத உலோகம் – Part 2 (Post No.7497)

ஆகாயத்திலிருந்து விழும் நிக்கல்!

பூமியில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கில் விண்கற்கள் விழுகின்றன. காற்றில் எரிந்தது போ க பூமியில் விழும் கற்களே டன்  கணக்கில் என்பர் விஞ்ஞானிகள்

விண்கற்களில் அதிக அளவு இரும்பும் நிக்கலும் இருப்பதால் இதை கத்திகள் செய்ய நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். இது துருப்பிடிக்காததால் இதை பெரு நாட்டு பழங்குடி மக்கள் வெள்ளி என்று கருதினர். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா பைதுங் என்ற பெயரில் நிக்கல்-துத்தநாக கலப்பு தாதுவை ஏற்றுமதி செய்த்தது. பைதுங் என்றால் வெள்ளை நிற தாமிரம் என்று பொருள் . தாமிரச்  சுரங்கங்களில் கிடைத்த கலவை ஒன்றை ஜெர்மானியர்கள் பேய்த் தாமிரம் என்று அழைத்தனர். அதைக் கண்ணாடிக்கு பச் சை  வர்ணம் ஏற்ற மட்டுமே பயன்படுத்த முடிந்ததால் இந்த அவப்பெயர். நிக்கல் என்பது என்ன என்ற வாதப்  பிரதிவாதங்களை முடிவுக்குக்  கொண்டு வந்தவர் டோர்பெர்ன் பெர்க்மான்  ஆவார். 1775ம் ஆண்டில் இது தனி மூலகம் என்று அவர் அறிவித்தார்.

இப்பொழுது பூமியில் கிடைக்கும் நிக்கலி ன் பெரும்பகுதி ஆகாயத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுவர். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவின் ஒண்டாரியோவின் சட்பரி (Sudbury, Ontario, Canada) பகுதியில் ஒரு பிரம்மாண்டமான விண்  கல் (மலை) விழுந்தது. இங்கு 20 கோடி டன்  நிக்கல் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்; விண்ணிலிருந்து வந்த  மலை மோதிய வேகத்தில் பூமிக்கடியில் இருந்த நிக்கல் குழம்பும் வெளியேறி யி ருக்கலாம். பூமியின் மத்திய பாகத்தில் இரும்பும் நிக்கலும் சேர்ந்த திரவம் கொதித்துக்கொண்டே இருக்கிறது .  கனடாவில் 1905 ஆம்  ஆண்டு முதல் 17,000 ஓட்டைகள் போட்டு நிக்கல், தாமிரம் முதலியன எடுத்துவருகின்றனர்.

பொருளாதார உபயோகங்கள்

நிக்கலுக்கும் கந்தகத்துக்கும் இடையே ஒருவித காதல் உண்டு. இதனால் நிக்கல் சல்பைடு தாதுவிலிருந்து அதிகமாக நிக்கல் எடுக்கப்படுகிறது. கனடாவின் ஒண்டாரியோ சுரங்கம் மட்டுமே உலகின் 30 சதவிகித நிக்கலை உற்பத்தி  செய்கிறது. இது தவிர அமெரிக்கா , ரஷ்யா, தென் ஆப்ரிக்காவும் அதிக அளவில் நிக்கல் எடுக்கின்றன.

உலகில் தோண்டி எடுக்கப்படும் நிக்கலில் பாதி ஸ்டெயின்லஸ் ஸ்டீல் செய்யப் பயன்படுகிறது. எவர் சில்வர் என்று நாம்  அழைக்கும் இதை இருபதாம் நூற் றாண்டில் ஒரே நேரத்தில் ஜெர்மனியும் இங்கிலாந்தும் கண்டுபிடித்தன . காசுகள், நாணயங்கள் செய்யவும் பெரும்பகுதி பயன்படுகிறது. அமெரிக்காவில் ஒரு காசின் பெயர் நிக்கல்.. 1865ல் செய்த இந்தக் காசில் — 5 சென்ட் நாணயத்தில்– 25 சதம் நிக்கல் ஆகும்.

இனி அதிகம் பயன்படும் நிக்கல் கலப்பு உலோகங்களைக் காண்போம்.

இன் வார் — 64 சத இரும்பு 34 சத நிக்கல் – மீட்டர்கள், கடிகாரத்தின் உட்பகுதிகள் , அளக்க உதவும் டேப்புகள் செய்ய உதவுகிறது. கா ரணம் – வெப்பத்திலும் விரிவடையாத குணம் உடையது.

நிக்ரோம் – நிக்கலும் 22 சத க்ரோமியமும் – டோஸ்டர், மின்சார அடுப்புகளில் பயன்படுகிறது.

மோனெல் – 70 சத நிக்கல், 30 சத தாமிரம் – கப்பல்களில் பயன்படுகிறது.

பிளாட்டினைட் – 46 சத நிக்கல், 54 சத இரும்பு- மின்சார பல்புகளில்

இன்கோ 276 – 57 சத நிக்கல், 16 சத குரோமியம், 16 சத மாலிப்டினம்  – பூமியைத் தோண்டும் கருவிகள்

ஒவ்வொன்றிலும் வேறு சில உலோகங்களும் தேவைக்கேற்ப இடம்பெறும்.

நிக்கல்-காட்மியம் பாட்டரிகள் மீண்டும் மீண்டும் சார்ஜ் ஏற்றி பயன்படுத்தப் படுகின்றன. பெயிண்டுகள், மார்ஜரின் (கிரியா ஊக்கியாக ) முதலியன தயாரிக்கும் இடங்களில் இது உபயோகப்படுகிறது.

பூமியிலுள்ள நிக்கல் எல்லாம் மையப்  பகுதியில்  கொதித்துக் கொண்டு இருக்கும் திரவக் குழம்பில் இருப்பதால் நாம் அதை எடுக்க இயலாது. இப்போது நாம் எடுப்பதெல்லாம் விண்வெளியில் இருந்து விழுந்த பாறைகளில் இருப்பதுதான். கடலிலும் 800 கோடி டன் கரைந்து கிடக்கிறது.

நிக்கல் ஆராய்சசி நீடிக்கிறது. சில வகைத் தாவரங்கள் நிலத்திலுள்ள நிக்கலை  உறிஞ்சியும் உயிர்வாழ்வதால் நிக்கல் மண்டிய நிலங்களில் இவற்றை வளர்த்து நிக்கல் விஷத்தை வெளியேற்றலாமா என்றும் முயன்று வருகின்றனர்.

from old Tamil Magazine

–subham–

நிக்கல் என்னும் அற்புத உலோகம் – Part 1 (Post No.7494)

US Nickel Coin

நிக்கல் என்னும் அற்புத உலோகம் – Part 1 (Post No.7494)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7494

Date uploaded in London – 25 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

–subham–

வைரங்களின் அளவு, தரம், விலை (Post No.7493)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7493

Date uploaded in London – 25 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இது இத்தொடரில் வைரங்கள் பற்றிய பதினோராவது கட்டுரை.

வெளியான தேதி-   ஜூன்-ஜூலை  2000 & May- June 2000

பத்திரிக்கையின் பெயர்- ஜெம்மாலஜியும் ஜோதிடமும்

கட்டுரைத் தலைப்பு –  வைரங்களின் அளவு, தரம், விலை

—-subham—-

ஆகாயத்தில் இருந்து வைரக்கற்கள் விழுவது உண்மையே! (Post No.7490)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7490

Date uploaded in London – 24 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இது இத்தொடரில் வைரங்கள் பற்றிய பத்தாவது கட்டுரை.

வெளியான தேதி-   மார்ச் – ஏப்ரல் 2000, May- June 2000

பத்திரிக்கையின் பெயர்- ஜெம்மாலஜியும் ஜோதிடமும்

கட்டுரைத் தலைப்பு –  ஆகாயத்தில் இருந்து வைரக்கற்கள் விழுவது உண்மையே!

இதில் இரண்டு பகுதிகள் உள்ளன.

1.வானத்தில் இருந்து விழும் விண்கற்களில் (METEORITES) வைரம் இருப்பது உண்மைதான்

2.இரண்டாவது கட்டுரையில் லண்டனில் உள்ள வைர வியாபார தலைமையகம் சி.எஸ்.ஓ. ( CSO) பற்றியது. இரண்டும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரைகள்.

இன்று உலகில் எவ்வளவோ  மாறுதல்கள் நிகழ்கின்றன. ஆனால் வைரத்தின்  விலையோ, தங்கத்தின் விலையோ குறைந்ததாக வரலாறே இல்லை!

பொதுவாக வானத்தில் இருந்து பூமியில் விழும் கற்களுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. சென்ற ஆண்டு நியூ சைன்டிஸ்ட்  (NEW SCIENTIST) அறிவியல் பத்திரிகை நடத்தும் கண்காட்சிக்கு போயிருந்தேன்.முதல் கடையே விண்கற்களை விற்கும் கடைதான் . உள்ளே நுழைந்த ஒரு சில நிமிடங்களுக்குள் ஒருவர் இரண்டு குட்டிக்கற்களை 140 பவுனுக்கு (  £140-00) விலைக்கு வாங்கியது கண்டு வியந்தேன். வைரம் இல்லாத கற்களுக்கே இவ்வளவு விலை என்றால் வைரம் இருந்தால் எவ்வளவு மதிப்பு என்பதை நாமே ஊகிக்கலாம். நீங்களும் வயற்காடுகளில், அந்த இடத்துக்குச சம்பந்தமில்லாத மின்னும் கற்கள் கிடைத்தால் பத்திரப்படுத்துங்கள். அதன் விலை பற்றிய கேட்டலாக்குகள் (Catalogue) வெப்சைட்டில் உள்ளன. என்னிடம் பழைய கேட்டலாக் உள்ளது  .

tags வைரக் கற்கள், விண்கற்கள், ஆகாயம், சி.எஸ் ஓ , தலைமையகம் , வானம்

மலர் மருத்துவம்! FLOWER MEDICINE– 2, ரெஸ்க்யூ ரெமடி! (Post No.7488)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7488

Date uploaded in London – 24 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மலர் மருத்துவத்தில் உள்ள 38 மருந்துகள் பற்றிய முதல் கட்டுரையை அடுத்து வருகிறது ரெஸ்க்யூ ரெமடி!

மலர் மருத்துவம்! – 2 – ரெஸ்க்யூ ரெமடி!

ச.நாகராஜன்

டாக்டர் எட்வர்ட் பாச் (Dr Edward Bach, M.B. B.S., M.R.C.S., L.R.C.P., D.P.M.,  (CAMB) உலகிற்குத் தந்த   மலர் மருந்துகளில் அற்புதமான ஒன்று ரெஸ்க்யூ ரெமடி! (Rescue Remedy)

இந்த மருந்து அவசரகால உதவி மருந்து. திடீரென ஒரு விபத்து அல்லது எதிர்பாராத அதிர்ச்சி தரும் செய்தி போன்றவற்றால் ஏற்படும் மோசமான பாதிப்புக்கு உடனடி நிவாரணம் தான் இந்த ரெஸ்க்யூ ரெமடி!

38 மலர் மருந்துகளில் ஐந்தின் கலவை இது.

ஸ்டார் ஆஃப் பெத்லஹேம் (Star of Bethlahem) For Shock

ராக் ரோஸ் (Rock Rose) For terror and panic

இம்பேஷன்ஸ் (Impatiens) For mental stress and tension

செர்ரி ப்ளம் (Cherry Plum) For desperation

க்ளமேடிஸ் (Clematis) For the bemused, faraway, out-of-the body feeling which often precedes fainting or loss of consciousness)

ஆகிய ஐந்தும் கலந்து செய்யப்படுவது ரெஸ்க்யூ ரெமடி.

இதை எப்படிச் செய்வது?

மேற்கண்ட ஐந்து மருந்துகள் உள்ள பாட்டில்களிலிருந்து இரண்டு இரண்டு துளிகளை எடுத்துச் சேர்த்துக் கொண்டு அத்துடன் ஒரு அவுன்ஸ் – அதாவது 30 cc – பிராந்தி அல்லது ஆல்கஹாலைச் சேர்க்க வேண்டும். இது தான் ரெஸ்க்யூ ரெமடி.

பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி வைத்துக் கொண்டு அவசரகாலங்களில் உபயோகப்படுத்தலாம்.

டாக்டர் பாச்  இந்த அவசரகால மருந்தை எப்போதும் கை வசம் வைத்திருப்பர். இன்று உலகில் ஏராளமானோர் இதைக் கைவசம் வைத்திருக்கின்றனர்.

ஏனெனில் விபத்து எப்போது எந்த ரூபத்தில் எங்கு வரும் என்பது யாருக்குத் தெரியும்?

அதிர்ச்சியில் உறைந்த யாருக்கேனும் இதைக் கொடுக்க வேண்டுமெனில் ஒரு டம்ளர் நீரில் மூன்று துளி ரெஸ்க்யூ ரெமடியைக் கலக்க வேண்டும். இதைப் பாதிக்கப்பட்டவர் சிறிது குடிக்க வேண்டும். அவர் கலக்கம் நீங்கி அமைதியை அடைய அடைய ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு வாய் இந்த நீரைக் குடிக்க வேண்டும், அவ்வளவு தான்.

இதை நீடித்து ஒருவருக்குக் கொடுக்க வேண்டுமெனில் ஒரு டீ ஸ்பூன் நீரில் மூன்று துளிகளை விட்டுக் கொடுக்க வேண்டும்.

ஒருவேளை தண்ணீர் அருகில் கிடைக்கவில்லை எனில், இந்த ரெமடியின் துளிகளை மட்டும் பாதிக்கப்பட்டவரின் உதடுகள், நாக்கு, பல் ஈறுகளில் தடவி விட்டால் போதும்.

இதை வெளிக் காயங்களுக்கு மருந்தாகக் கூடப் பயன்படுத்தலாம்.

காயம் பட்ட இடத்தில் ஆயின்மெண்டாக (Ointment) – பூச்சு மருந்தாகப் – பூசலாம்.

ஆறு துளிகளை 16 அவுன்ஸ் நீரில் கரைத்தால் ஆயின்மெண்ட் ரெடி!

தீராத துக்கமா, திடீரென்று வரும் துயரச் செய்தியா அதிலிருந்து மீள இதைப் பயன்படுத்தலாம்.

1930இல் முதன்முதலாக இந்த மருந்தை டாக்டர் பாச் உபயோகப்படுத்தினார்.

அப்போது  அவர் ராக் ரோஸ், க்ளமேடிஸ் மற்றும் இம்பேஷன்ஸ் ஆகிய மூன்றை மட்டுமே கலந்து இதை உருவாக்கிப் பயன்படுத்தினார். மற்ற இரண்டை அவர் அப்போது கண்டுபிடித்திருக்கவில்லை.

பின்னால் இது ஐந்து மலர் மருந்துகளின் கூட்டுச் சேர்க்கை கலவையானது.

ரெமடி பற்றிய சுவையான சம்பவம் ஒன்று இது:-

திடீர் புயலில் படகு ஒன்று சிக்கிக் கொண்டது. பல மணி நேரம் படகில் சிக்கிக் கொண்ட இருவர் ஒருவாறாக மீட்கப்பட்டனர்.  மீட்கப்பட்டவருள் ஒரு இளைஞன் நினைவிழந்திருந்தான். அவன் உடம்பு நீலம் பாய்ச்சியிருந்தது. அவனது உடைகளோவெனில் கடல் உப்பினால் விரைப்பாகி இருந்தது.

டாக்டர் பாச் வேகமாக அவர்களிடம் ஓடினார். உடனடியாக ரெஸ்க்யூ ரெமடியை அவர்கள் உதடுகளில் தடவி விட்டார். தொடர்ந்து இதை அவர் பயன்படுத்தினார்.

அந்த இளைஞனை பீச்சிலிருந்து அருகிலிருந்த ஹோட்டல் ஒன்றிற்குக் கொண்டு சென்றனர். ஹோட்டலை அடையுமுன்னரே அவனுக்கு சுயநினைவு திரும்பி விட்டது. ஹோட்டலை அடைந்த போது அவன் ஒரு சிகரட் இருக்கிறதா என்று கேட்டான்!

இது போல உலகெங்கும் ஆயிரக்கணக்கான வியப்பூட்டும் கேஸ்கள் இன்றளவும் இந்த ரெஸ்க்யூ ரெமடியினால் ஏற்பட்டுள்ளன; பிரமிக்க வைக்கும் சம்பவங்களை பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் சொல்லி வருகின்றனர்.

மலர் மருந்துகள் மிக மிக எளிமையானவை.

“ஆகவே இந்த சிகிச்சைமுறை பற்றி தவறாக அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டாம். இன்னும் ஆய்வுகள் அதிகமாக ஆக, படைப்பின் எளிமையை இன்னும் அதிகமாக நீங்கள் உணர்வீர்கள்” என்று டாக்டர் பாச் கூறி இருப்பது எவ்வளவு பொருள் பொதிந்த ஒன்று.

அவரது கூற்று இது: “Let not the simplicity of this method deter you from its use, for you will find the further your researches advance, the greater you will realize the simplicity of the Creation.”

மலர் மருத்துவம் பற்றிச் சரியாகப் புரிந்து கொண்டோமெனில் நமது வீட்டிலும் ஒரு மலர் மருந்து – கிட் (Kit)  – பெட்டி தேவையாக இருக்குமல்லவா?!

***