நாட்டிய தாரகையின் 5 நிபந்தனைகள்; மாந்தோப்பு அழகியுடன் புத்தர் சந்திப்பு (Post.7671)

Written  by  London Swaminathan

Post No.7671

Date uploaded in London – 9 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நாட்டிய தாரகையின் 5 நிபந்தனைகள்; மாந்தோப்பு அழகியுடன் புத்தர் சந்திப்பு (Post.7671)

2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா எப்படி இருந்தது என்பதை சம்ஸ்கிருத நூல்களும், பாலி மொழி நூல்களும்  காட்டுகின்றன.  இதில் மிகவும் சுவையான விஷயம் மாந்தோப்பு அழகி பற்றிய நான்கு  செய்திகளாகும்.

1.அவளுக்கு ஆம்ர பாலி (பாலி  மொழியில் அம்பா பாலி )   ‘மாந் தோப்புக்காரி’ என்று பெயர் வந்தது ஏன்?

2.புத்தர் பிரான் ஏன் அவள் வீட்டுக்குப் போய் சாப்பிட்டார்?

3.அவளுடன் ஒரு நாள் படுக்க, அவள் போட்ட ஐந்து நிபந்தனைகள் என்ன?

4.மகத சாம்ராஜ்ய சக்ரவர்த்தி பிம்பி சாரன் அவளுடன் படுக்க செய்த தந்திரம் என்ன?

2600 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் பிரான் அடிக்கடி சென்ற இடம் பீஹார் மாநிலம் ஆகும். அந்த மாநிலத்தில் வைசாலி என்னும் புகழ்மிகு நகரம் சீ ரும் சிறப்புடனும் திகழ்ந்தது. அதில் சாக்கிய குல பிரபு ‘மஹாநாமா’ வாழ்ந்து வந்தார். அவருக்கு குழந்தைகள் கிடையாது. ஒரு நாள் அவர் மாந்தோப்பில் உலவச் சென்றபொழுது ஒரு பெண் குழந்தை கேட்பாரற்றுக் கிடந்தது. அதை எடுத்து மனைவியிடம் கொடுக்கவே அவளுக்குப் பேரானந்தம் கிட்டியது. செல்வச் சீமாட்டி போல அவளை வளர்த்தார்கள். அவள் பருவத்துக்கு வந்தபோது பேரழகியாகத் தோன்றினாள் . மாந்தோப்பில் கிடைத்த பெண் ஆதலால் அவள் பெயரும் அம்பா பாலி என்றே நிலைபெற்றுவிட்டது (சம்ஸ்கிருத மொழியில் ஆம்ர என்றால் மாமரம். அது பேச்சு வழக்கு மொழிகளான பாலி /பிராக்ருதத்தில் ‘அம்பா’ ஆகிவிடும்).

பெண்ணுக்குக் கல்யாணம் கட்ட வேண்டிய தருணம் வந்தவுடன் பெற்றோருக்கு கவலையும் வந்தது. ஏனெனில் லிச்சாவி குல வழக்கப்படி அந்த ஜாதியில்தான் மணம் முடிக்க வேண்டும். ஆகையால் லிச்சாவி சபை கூட்டப்பட்டது . எல்லோரும் மண்டபத்தில் கண்களை அகலவிரித்து காத்திருந்தனர். பேரழகி அம்பா பாலி  உள்ளே புகுந்தாள் . அனைவரும் ஆச்ச ரியத்தில் மூழ்கினர். இதயம் ‘படக் படக்’ என்று துடித்தது. இவள் எனக்குத்தான் என்று எல்லோரும் ஏகமனதாக தீர்மானம் போட்டுக்கொண்டனர். அறைக்குள் யுத்தம் வெடிக்கும் அளவுக்கு போட்டா போட்டி; காட்டா குஸ்தி. சபைத் தலைவர்கள் ஒரு சமாதானத் தீர்மானம் போட்டனர் . இவளை ‘பொது மகளாக்கி’ எல்லோரும் அனுபவிப்போம் என்று தீர்மானம் போட்டனர். தந்தை தாய் மனம் துடித்தது; ஒப்புக்கொள்ள மறுத்தனர்.

வீட்டில் நுழைய ஐந்து நிபந்தனைகள்

ஆனால் பெரும் சண்டை நிகழ்வதைத் தடுப்பதற்காக அந்த புத்திசாலிப் பெண் ஒரு அறிவிப்பைப் பிரகடனம் செய்தாள் . உங்கள் தீர்மானத்தை நான்  ஏற்கிறேன் . நான் போடும்  நிபந்தனைகளை நீங்கள் ஏற்கவேண்டும் என்று சொல்லிப் புல்லட் பாயிண்டு (Bullet Points )களில் பட்டியல் போட்டாள் –

1. ஒவ்வொரு நாளும் ஒரு ஆண்மகன் மட்டுமே என் வீட்டுக்குள் நுழையலாம்

2. அவர் ஒரு இரவு என்னுடன் படுக்க 500 ‘கார்ஷா பணம்’ தரவேண்டும்; (இந்தப் பழங்கால நாணய முறை இன்று வரை தமிழில் கூட ‘காசு’ ‘பணம்’ என்று வழங்கப்படுகிறது )

3.என் வீட்டுக்குள் வந்து போவோரை யாரும் கண்காணிக்கக் கூடாது

(நல்ல வேளையாக அக்காலத்தில் சி சி டி வி C C T V cameras, காமெராக்களும் கிடையாது; கூகுள் வாட்ச் Google Watch-ம் கிடையாது)

4.எனக்கு நகரத்தில் முக்கிய இடத்தில் பெரிய வீடு கொடுக்க வேண்டும்.

5.எந்தக் காரணத்துக்காகவாவது அரசாங்க அதிகாரிகள் என் வீட்டை சோதனை போடவேண்டுமானால் எனக்கு ஏழு நாள் நோட்டிஸ் (Seven Day Notice)  கொடுத்து அதற்குப்பின்னரே என் வீட்டுக்குள் அதிகாரிகள் வரவேண்டும் .

இந்த ஐந்து நிபந்தனைகளையும் சபை ஏற்றுக்கொண்டது.

அம்பாலிக்கு பெரிய வீடு கிடைத்தவுடன் சிறந்த ஓவியனைக் கூப்பிட்டு வீட்டுச் சுவர்களில் மன்னர்கள், பிரபுக்கள், பெரிய வியாபாரிகள் ஆகியோரின் ஓவியங்களை  வரைய ச் சொன்னாள் . அதில் மகத சாம்ராஜ்யத்தின் மாமன்னன் பிம்பிசாரனின் படமும் இருந்தது. அதைப் பார்த்தவுடன் அவளுக்கு காதல் மலர்ந்தது. இந்தச் செய்தி மன்னன் காதிலும் விழுந்தது . அவனும் அம்பாபாலியின் புகழ் பரவுவதை அறிந்து அவள் வீட்டுக்குப் புறப்படத் தயாரானான். ஆனால் அதில் ஒரு சிக்கல் . மகதப் பேரரசுக்கும்  லிச்சாவிகளுக்கும் இடையே உரசல் நிலவியது. அமைச் சர்கள் வைசாலி நகருக்குள் நுழைவது ஆபத்து என்று எச்சரித்தனர் . பிம்பி சாரன் மாவீரன் ; ராணுவ தளபதி கோபன் என்பவனைப் பாதுகாப்புக்கு அழைத்துக்கொண்டு மாறு  வேடத்தில் வைசாலி நகருக்குள் போய் அம்பாபாலியுடன் ஆறு இரவுகள் தங்கினான்.

இதற்குள்  நகர அதிகாரிகளுக்கு பராபரியாகத் தகவல் கிடைக்கவே எதிரி நாட்டு மன்னனைப் பிடிக்க வீடு வீடாக சோதனை போடத் துவங்கினர். அம்பா வீட்டுக்கும் வந்தபோது அவள் 7  நாள் நோட்டிஸ் நிபந்தனையைச் சுட்டிக்காட்டியவுடன் அவர்கள் போய்விட்டனர். மன்னன் பிம்பிசாரனும் மாறுவேடத்தில் தப்பித்துச் சென்றான்.

பிம்பிசாரன் விடைபெற்றுச் செல்லும் முன்பாக அம்பாபாலிக்கு ராஜமுத்திரை பதித்த மோதிரத்தை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து எப்போதும் தன் அரண்மனைக்கு வரலாம் என்றான். அவளும் ஒன்பது மாதத்தில் ஒரு பிள்ளையைப் பெற்றாள் .அவன் பள்ளிப்பருவம் எய்தியபோது எல்லோரும் அவனை ‘யாருக்குப் பிறந்தவனோ’ என்று ஏசினர் . உடனே அவனை அம்பா , அரண்மனைக்கு அனுப்பிவைத்தாள். அங்கே அவன் விமல கொண்டன்னா என்ற பெயருடன் வளர்ந்து பிற்காலத்தில் புத்த பிட்சுவாக மாறினான். காலம் உருண்டோடியது .

புத்தர் வருகை

வைசாலி நகருக்கு அருகில் உள்ள கொடிகாம என்னும் ஊரில் புத்தர் தங்கியிருப்பதை அறிந்து அம்பாவும் அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்றாள் அவருடைய சொற்பழிவைச் செவிமடுத்தாள் ;அதே நேரத்தில் லிச் சாவி குலத் தலைவர்களும் அங்கே வந்தனர். புத்தர் பிரானை சிஷ்யர்கள் புடைசூழ தம் இல்லத்துக்கு விருந்துண்ண அவள் அழைத்தாள் ;லிச் சாவி குலத் தலைவர்களும் புத்தரை அழைத்தனர். அனால் புத்தர் பிரான் அம்பாவின் அழைப்பை ஏற்று அவள் வீட்டுக்குச் சென்று விருந்துண்டார். இது லிச்சாவி குலத் தலைவர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது . புத்தர் பிரான் சாப்பிட்டு முடித்தவுடன் தனது பெரிய மாந்தோப்புகளையும் வீடுகளையும் புத்த சங்கத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் .

நாளடைவில் தனது உடலைத் தானே பார்த்து வருத்தமுற்றாள் . உலகையே ஈர்த்த அழகான தோல், இப்போது சுருங்கிப்போய் அவளுக்கே பார்க்க அருவருப்பாக இருந்தது. அந்த நேரத்தில் புத்த பிட்சுவாக மாறிய தனது மகன் விமல கொண்டன்னா உபன்யாசம் செய்வதை அறிந்து காது குளிர கேட்டாள் ; வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தாள்; நித்யானந்தம், பேரானந்தம் பெரும் வழி புத்தரின் வழி என்று அறிந்து புத்த பிக்ஷுணி ஆனார். அதில் அர்க்கத் என்ற பெரிய நிலையை அடைந்து பெரும்பேறு பெற்றாள் ; மகத சாம்ராஜ்யத்தின் மாமன்னனான பிம்பி சாரனும் புத்த மதத்துக்குப் பேராதரவு நல்கினான்.

TAGS- அம்பபாலி ,பிம்பி சாரன், புத்தர், நாட்டிய தாரகை

–சுபம்—

‘மேலைச் சிதம்பரம்’ பேரூரில் தாண்டவமாடிய பட்டீசுரன்! (Post .7670)

Written  by  S NAGARAJAN

Post No.7670

Date uploaded in London – 9 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Big Thanks for your pictures.

மேலைச் சிதம்பரம் என்று புகழ் பெற்ற பேரூரில் தாண்டவமாடிய பட்டீசுரன்!

ச.நாகராஜன்

மேலைச் சிதம்பரம் என்று புகழ் பெற்றது பேரூர். அங்கு கோமுனி, பட்டி முனி காண மரகதவல்லி சமேதரான பட்டீசுரன் தாண்டவமாடினார். இப்படிப்பட்ட பெருமையைக் கொண்ட பேரூர் உள்ளது கொங்கு மண்டலத்திலேயாம் என்று கூறிப் பெருமைப் படுகிறது கொங்கு மண்டல சதகம்.

பாகான சொல்லிதென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா

நாகா பரணர்பட் டீசுரர் பாதத்தை நம்பியெங்கும்

போகாத கோமுனி பட்டி முனிக்குப் பொதுநடஞ்செய்

வாகான மேலைச் சிதம்பர முங்கொங்கு மண்டலமே

இது கொங்கு மண்டல சதகத்தில் வரும் 17வது பாடல்.

பேரூர் உள்ளது ஆறை நாடு. பேரூர்ப் புராணம் கூறும் செய்யுள் இது:

கோமுக முனியும்பட்டி முனிவனுங் குறுகியேத்த

வேமுறு பூதநாத ரிடனறத் துவன்றிப் போற்ற

காமுறு விசும்பிற் றேவர் கடிமலர் மாரி தூர்ப்பத்

தீமுழங் கங்கைவள்ள றிருநடன நவிற்றலோடும் (பேரூர்ப் புராணம்)

இந்த வரலாற்றைச் சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவாரத்திலும் காணலாம் :

ஏழாம் திருமுறையில் கோயில் பகுதியில் உள்ள பத்துப் பாடல்களில் பத்தாவது பாடலாக அமைவது இது:

பார் ஊரும் அரவு அல்குல் உமைநங்கை அவள் பங்கன் பைங்கண் ஏற்றன்

ஊர் ஊரான் தருமனார்தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்

ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய்ப்

பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே.

கொங்குமண்டல சதகத்தில் அடுத்த பாடலாக மலரும் 18வது பாடல் பட்டீசுரன் பள்ளனான வரலாறைக் கூறுகிறது இப்படி:

கடுவாள் விழியினைப் பாரூர்ப் பரவை கலவிவலைப்

படுவார் தமிழ்ச்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்

நெடுவாளை பாயும் வயலூடு போகி  நெடியபள்ள

வடிவாகி நின்றதும் பேரூர்ச் சிவன்கொங்கு மண்டலமே

இதன் பொருள் :- சுந்தரர் நம்மைப் பாடி வருவார்; அவருக்குக் கொடுக்கப் பரிசு (பொன்) இல்லையே என்று ஒளிந்தவர் போலப் பட்டிப் பெருமான், பள்ள வடிவு கொண்ட பேரூரும் கொங்குமண்டலத்தில் உள்ளதேயாம்.

இதைப் பேரூர்ப் புராணம் இப்படி விவரிக்கிறது:

உயர்ந்தவுந்தாமே யிழிந்தவுந்தாமே யெனமறையோல மிட்டுரைக்கும்

வியந்ததஞ்செய்கை யிரண்டினுளொன்று வேதியனாகிமுன் காட்டிப்

பயந்தரு றைவர் மற்றதுங்காட்டப் பள்ளனாய்த் திருவிளையாட்டால்

நயந்தபூம் பணையின் வினைசெய வன்பர் நண்ணிமுனண்ணிரம்மா

கொங்கு மண்டல சதகம் தனது நூறு பாடல்களில், பட்டீசுரத் திருவிளையாடலுக்கு மட்டும் மூன்று பாடல்களை ஒதுக்குகிறது. (பாடல்கள் 17,18,19). இந்த மூன்றையும் நமது கொங்கு மண்டல சதகத் தொடரில் விரிவாகப் பார்த்து விட்டோம்.

***

மகளிர் சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி832020 (Post No.7668)

Written  by  LONDON SWAMINATHAN

Post No.7668

Date uploaded in London – 8 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ACROSS

4. – (3) கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர்குலப் பெண்

7. (2)- சங்க காலத்தில் புகழ்பெற்ற பெண் புலவர்

8. (R to L)- (4) வலமிருந்து இடம் செல்க/  ராஜராஜ சோழனின் தமக்கை

14. – (5) அப்பர் பெருமானின் சகோதரி

DOWN

1– (4)- சிலப்பதிகார கதாநாயகி

2. சிலப்பதிகார ஆடல் அழகி

3. – பாரிமகளிரில் ஒருத்தி

5.– (8) கோவலனுக்கு வழித்துணையாக வந்த சமண மத பெண் துறவி

6. – (5)- சிலப்பதிகாரத்துடன் வந்த இரட்டைக் காப்பியம் இந்தப் பெண்மனியின் பெயர் கொண்டது

9. – (5 )காவிரியில் விழுந்த ஆட்டநத்தியைத் தொடர்ந்து சென்ற கரிகால் சோழன் மகள்

10. – (5)காரைக்கால் அம்மையார் ஆனவர்

11., go up — (4) கீழிருந்து மேலே செல்க/பாரி மகளிரில்  மற்றவர்

12. go up – (2) -கீழிருந்து மேலே செல்க/ சிலப்பதிகார ஆயர்குலப் பெண் /ஆர்யை என்பதன் தமிழ் வடிவம்

—subham—-

அதிசயப் பெண்கள்- எட்டு மொழிகளில் 100 கவிகள் – 24 நிமிடங்களில்! (Post No.7667)

Written  by  LONDON SWAMINATHAN

Post No.7667

Date uploaded in London – 8 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஒரு கடிகை என்பது 24 நிமிஷங்கள். அந்த நேரத்தில் எட்டு மொழிகளில் 100 கவிதைகளை –  செய்யுட்களை – எட்டுக் கட்டுவோரை ‘சத லேகினி’ என்பர். அப்படிப்பட்ட திறமையான பெண்கள் நாயக்கர் ஆட்சியில் இருந்தனர். மதுரவாணி, ராமபத்ராம்பா , முத்து பழனி, ரங்க ஜம்மா என்போர் விஜய நகர மற்றும் நாயக்கர் ஆட்சியில் பெரும் சாதனைகளைச் செய்தனர். அவர்களில் சிலர் ‘அஷ்டாவதானம் செய்தனர். அதாவது ஒரே நேரத்தில் எட்டு காரியங்களைச் செய்து தங்கள் திறமையை வெளிக் கொணர்வர். இவர்களில் ஒரு பெண்மணிக்கு மன்னர் ‘கனகாபிஷேகம்’ செய்து — தங்கக்  காசுகளால் அபிஷேகம் செய்து நாடெங்கும் அறியச் செய்தார் . மன்னருக்கு அந்தப் பெண்கள் மீது இலக்கியக் காதலுடன் உண்மைக்கு காதலும் மலர்ந்தது

இதோ சில சுவையான செய்திகள் –

தஞ்சாவூரிலிருந்து  ஆண்ட நாயக்க மன்னர்களில் ரகுநாத நாயக்கர் மாபெரும் அறிஞர். தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் புலமை மிக்கவர். தெலுங்கில் வால்மீகி சரித்திரம் எழுதினார். கோவிந்த தீட்சிதர் முதலிய பேரறிஞர்களை ஆதரித்தார். அவரது தந்தையான அச்சுத நாயக்கர் பற்றி அச் யுதேந்தாப்யுதயம் என்ற காவியத்தை இயற்றினார். இது தவிர பல சம்ஸ்க்ருத நூல்களையும் இயற்றினார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகள் சிறக்க பேருதவி புரிந்தார்.

ராம பத்ராம்பாவும் மதுரவாணியும் நாயக்க மன்னரின் அன்பிற்குப் பாத்திரமானார்கள் . அவர்களிருவரும் தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் வியத்தகு அறிவு பெற்றிருந்தனர். எட்டு மொழிகளில் கவி புனையும் ‘சத லேகினி’ பட்டம் பெற்றவர் ராமபத்ராம்பா. மன்னரின் காதலி.

அவரைப் போலவே இவரும் ஒரு சம்ஸ்கிருத காவியம் படைத்தார். அதன் பெயர் ரகுநாதாப்யுதயம். அதாவது காதலனும்  மன்னனுமான ரகுநாத நாயக்கர் பற்றியது. இது விஜய நகர ஆட் சியின் இறுதிக்காலம் பற்றி அறிய பெரிதும் உதவும் வரலாற்றுக் களஞ்சியம் ஆகும். ராமபத்ராம்பா எழுதிய ரகுநாத அப்யுதயம் நூலில்  12 காண்டங்கள் உள . அக்கால ராணுவ, அரசியல் எழுச்சிகளைக் கூறும் வரலாற்று நூல் இது. தஞ்சாவூர் பெண்களின் எட்டு மொழிப் புலமையை இவருடைய நூலின் கடைசி இரண்டு காண்டங்களில் காணலாம்.  அந்தப் பெண்மணிகள் வைசேஷிக தத்துவ நூல்களிலும் வல்லவராம்.

மதுர வாணியும் ரகுநாத நாயக்கரின் அவைக்கள புலவர் பெருமக்களில்  ஒருத்தி. சம்ஸ்கிருதம், பிராகிருதம்,தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர்.ரகுநாத நாயக்கர் தெலுங்கில் இயற்றி ராமாயண திலகத்தை இவர் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். இவருக்கு இசையிலும் வீணை வாசிப்பதிலும் அபார புலமை உண்டு. சம கால அறிஞ்ஞர்களின் பாராட்டைப் பெற்றவர். பாணிணீய இலக்கணத்தின் கரை கண்டவர்.

ராமாயண காவ்ய திலகம் 14 சர்க்கங்கள் உடைய நூல்.  இவரைப் பாராட்டி மன்னர் ரகுநாத நாயக்கர் கவிதை மழை  பொழிந்தார்

சாதுர்யமேதி கவிதாஸு சதுர்விதாஸு

வீணா கலா ப்ரகடேன பவதிப் ப்ரவீணா

ப்ரக்ஞாமியம்  நிபுணமஞ்சதி  பாணிணீ யே

மேதாம் வ்யனக்தி  பஹுதா விவிதா வதானே

என்பது ரகுநாத நாயக்க மன்னர் பாடிய புகழ் மாலை.

மதுர வாணியின் புகழ்மிகு சாதனைகள் அவரது ராமாயண காவியத்தின் முகவுரையில் உளது. அவர் அஷ்டாவதானம் மட்டுமின்றி சதாவதானமும் செய்தார் . அதாவது பலர் முன்னிலையிலும் 100 விஷயங்களை நினைவு வைத்துக் கொண்டு கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுப்பார். அவர் வீணையில் இனிமையாக வாசித்ததால் மதுரவாணி பட்டம் பெற்றார். பின்னர் ஆடசி புரிந்த மன்னர் காலத்தில் இவரை ஆசு கவிதாராணி என்று புகழ்ந்தனர் . ஆசு கவி என்றால் நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் ஆற்றல் உடையவர். காளிதாசரின் ரகுவம்ச காவிய நடையைப் பின்பற்றியவர்..


பெண்மணிக்கு தங்க அபிஷேகம்

ரங்க ஜம்மா  என்பவர் பசுபலேட்டி வேங்கடாத்ரியின் புதல்வி. இவர் விஜயராகவ நாயக்கரின் மனைவி. இவரும் எட்டு மொழி கவிதை வித்தகி என்றாலும் காமச் சுவையூட்டும் காவியங்களையே இயற்றினார். மன்னாருதாச விலாசம், உஷா பரிணயம் என்பன இவர் இயற்றிய தெலுங்கு காவியங்கள்.  உஷா பரிணயம் மிகவும் புகழ்பெற்ற தெலுங்கு நூல். சதா சர்வ காலமும் இவருடன் காலம் கழித்த மன்னர், ரங்கஜம்மாவின் புலமையைப் பாராட்டி தங்க  மழை பொழிந்தார். அதாவது அவரை அமரவைத்து தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்தார்.

பெண்களை இந்த அளவுக்கு பகிரங்கமாக உயர்த்திப் பாராட்டியது உலகில் வேறெங்கும் காணாத புதுமை . இது அவளது அழகிற்காக கிடைத்த பரிசன்று . புலமைக்குக் கிடைத்த பரிசு என்பதை அவரது நூல்களை கற்போர் அறிவர். ராமாயண சாரம், பாகவத சாரம், யக்ஷ கான நாடகம் ஆகியனவும் இவரது படைப்புகளாம்.

முத்துப் பழனி

நாயக்க மன்னர்கள் வளர்த்த கலைகளையும் இலக்கியத்தையும் அவருக்குப் பின்னர் தஞ்சசையை ஆண்ட வீர சிவாஜியின் பான்ஸ்லே வம்ச அரசர்களும் பின்பற்றினர் அவர்கள் முயற்சியால் உருவானதே சரஸ்வதி மஹால் நூலகம். பிரதாப சிம்மன் 1739-63, என்ற மன்னரின் அந்தப்புர நாட்டிய தாரகைகளில் ஒருவர் முத்துப் பழனி. வாத்ஸ்யாயனர் எழுதிய சம்ஸ்கிருத காம சூத்திரத்தில் பெண்களுக்கான பாடத்திட்ட சிலபஸில் Syllabus 64 கலைகளின் பட்டியல் உளது. தெலுங்கு, தமிழ்  நாட்டிய தாரகைகள் அனைவரும் இவைகளைக் கற்று மகா மேதாவிகளாக விளங்கினர். முத்துப் பழனி

சம்ஸ்கிருத, தெலுங்கு மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுத்  திகழ்ந்தார். வீணை வாத்தியத்தில் பெரும் திறமை பெற்றவர். ராதிகா சா ந்தவன , அஷ்டபதி ஆகியன  அவர் படைத்த தெலுங்கு நூல்கள். ராதா- கிருஷ்ணர் லீலைகளை வருணிப்பது முதல் நூல். ஜெயதேவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய அஷ்ட பதியை  சுவை குன்றாமல் தெலுங்கில் கூறுவது இரண்டாவது நூல். ஜெயதேவரின் ஒரிஜினல் பாடல் போலவே சிறப்புடையது இது என்பது இசை வாணர்களின் அபிப்ராயம்  ஆகும்.

–subham—

BREAKING NEWS ஆடிப் போயிருக்கும் சில டி.வி. சானல்கள், பத்திரிகைகள்! (Post No.7665)

Written   by S NAGARAJAN

Post No.7665

Date uploaded in London – 8 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

A request : Please spread this news to all of your friends, relatives…

ஆடிப் போயிருக்கும் சில டி.வி. சானல்களும், பத்திரிகைகளும்!

ச.நாகராஜன்

பரபரப்புச் செய்தி!

டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி அவர்களின் அப்பீலை ஒட்டி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனது அப்பீலில் டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி, இந்தியாவில் உள்ள அனைது நியூஸ் சானல்களும், ஊடக நிறுவனங்களும் இந்தியர்களையே சொந்தக்காரர்களாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் உண்மை என்னவெனில் நியூஸ் சானல்கள் மற்றும் செய்தி நாளிதழ்களில் பெரும்பாலானவை சவூதி அரேபியா, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் துபாய் குடி மக்களுக்கே சொந்தமாக இருக்கின்றன!

சொந்தம் கொண்ட உரிமையாளர்களின் நிலை இப்படி இருக்க, இந்த ஊடகங்கள் அவற்றின் சொந்தக்காரர்கள் இசைக்கும் பாட்டுக்கு டான்ஸ் ஆட வேண்டிய நிலையில் உள்ளன. அவற்றின் சொந்தகாரர்களுக்கோ  தாங்கள் அடைய வேண்டிய, யாருக்கும் தெரியாத, சொந்தக் குறிக்கோள் இருக்கிறது!

தேசத்தின் நலனைக் கருதி, சுப்ரீம் கோர்ட் இந்த நிலையை மாற்ற தகுந்த ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று அவரது அப்பீல் முடிகிறது!

      சுபிர்ரிம் கோர்ட் உறுதியான இறுதியான ஒரு ஆணையை டாக்டர் சுப்ரமணியம் ஸ்வாமியின் அப்பீலுக்குத் தந்து விட்டால் – ABP, AAJ TAK, NDTV மற்றும் அதையொத்த சானல்களும் / செய்தித்தாள் ஊடகங்களும்

மூடப்படும்!

இந்த வார்த்தையைக் கேட்ட வினாடியிலிருந்து அந்த ஊடக நிறுவனங்கள் அடி வயிறு கலங்கி ஆடிப் போயுள்ளன.

அவை  கவலையின் உச்சிக்கே போய் விட்டன!

ஆனால் இதில் பரிதாபரகரமான ஒரு விஷயம் என்னவெனில், எப்போதுமே பரபரப்பைப் பரப்பி விட்டுக் கொண்டே இருக்கும் இந்த சானல்கள் இந்த செய்தியை ஃப்ளாஷ் நியூஸாகவும் வெளியிடமுடியவில்லை. டி.வியில் பளீர் செய்தியாகவும் காண்பிக்க முடியவில்லை; செய்தித்தாள்களிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட முடியவில்லை!

உண்மையான இந்தியர்களாகிய நாம் இந்த செய்தியை தேசம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்வோமாக!

நன்றி : வார இதழ் ட்ரூத், தொகுதி 87- இதழ் 42 21-2-2020 தேதியிட்ட இதழ்

***

அன்பர்கள் இந்த கட்டுரை செய்தியை முடிந்த அளவு அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டுகிறேன்.

இதன் ஆங்கில மூலம் :-

Breaking News. 

Against an Appeal by Dr. Subramaniam Swamy, Supreme Court has given Notice to the Central Government…… 

In his Appeal, Dr. Swamy has stated that all News Channels and Media Houses in India should only be owned by Indians. 

But the truth is that a majority of News Channels and News Magazines are owned by Saudi Arabia, Italy, America, Britain and Dubai citizens! 

Because of this ownership status, these Media Houses are made to dance to the tunes of their owners, who have hidden Agendas to achieve! 

His Appeal concludes with a plea that the Supreme Court should pass a suitable Order to end this status in the interest of the Nation!

If the Supreme Court issues a firm and conclusive Order in favour of Dr. Swamy’s Appeal– ABP, AAJ TAK, NDTV and similar other Channels/News Media will be closed! 

From the time this situation has been heard of, these Media Houses have been shaken up to their bones! 

They are really, really worried!

But, it is a pitiable situation that these Media Houses could not highlight this as Flash News in their Telecast or in their printed material! 

It is our duty as a true Indians to take this news forward and spread it to every citizen across the country! 

Thanks to Weekly Magazine TRUTH Vol 87 Issue 42 dated 21-02-2020  

***

புத்தர் சொன்ன உணவுகள். மருந்துகள் (Post No.7625)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7625

Date uploaded in London – 27 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

புத்த மதத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று அனுமதித்தவுடன் உணவு, உடை, நடத்தை (நடை உடை பாவனை) முதலிய பல விஷயங்களில் கேள்விகள் எழுந்தன. புத்தர் உயிருடன் இருக்கும் வரை அவரே பதில் கொடுத்ததாக பிற்கால நூல்கள் காட்டுகின்றன. அவர் இறந்தவுடன் ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற நிலை ஏற்பட்டவுடன் மூன்று முறை மஹா நாடு கூட்டி புதிய, புதிய விதிகளை இயற்றினர் . யார் புத்த பிட்சு? என்பதை ஒரு அறிஞர் குழு முடிவு செய்தது . மஹா நாட்டு பந்தல் வாசலில் அமர்ந்து கேள்வி கேட்டனர் . சரியான பதில்  சொன்னவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பிற்காலத்தில் எழுந்த புத்த மத நூல்களில் அந்த விதிகள் தொகுக்கப்பட்டன. அவைகளில் உள்ள உணவு, மருந்து விஷயங்கள் பற்றிய சுவையான செய்திகள் இதோ ….

விநயபீடகா நூல்களில் இருந்து இவை தொகுக்கப்பட்டன. இதைத் தொகுத்தவர் நாளந்தா மஹாவிஹார பேராசிரியர் சி. எஸ். உபாசிக் ஆவார்; அது பாலி மொழியில் உள்ளது.

அகடயூஸ

பாசிப்பருப்பை பாதி கொதிக்கவைத்த கஞ்சி. இதை புத்த பிட்சுக்களுக்கு மருந்தாகக் கொடுப்பதை புத்தர் அனுமதித்தார்

அந்தோ பக்கம் , அந்தோ உ த்தம் / பிண்டம்

பவுத்த விஹாரத்துக்குள் சமைக்கப்பட்ட உணவை பிட்சுக்கள் சாப்பிடக்கூடாது .

வெளியில் பிச்சை எடுத்தே சாப்பிட வேண்டும். விஹாரத்துக்குள் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் பயன்படுத்துவது தவறு.

அம்ப பாண

மாம்பழச்சாறு சாப்பிடலாம். புத்தர் அனுமதித்த எட்டு வகைப் பழச் சாறுகளில் இதுவும் ஒன்று. இது ‘யாம காலிக’. அதாவது பகலிலும் இரவிலும் சாப்பிடலாம் .

பல காதநீய, பல பாஜக , பல பேஷஜ

எல்லா வகைப் பழங்களையும் சாப்பிட புத்தர் அனுமதித்தார் .

பாலி மொழி நூல்கள் குறிப்பிட்ட கறிகாய் ,பழங்களில் பலா , மா , தேங்காய் , புளி ,கத்தரிக்காய் முதலியன உள்ளன .

‘பல பாஜக’ என்பவர் சங்கத்துக்கு பழங்களை விநியோகிப்பவர் .

‘பல பேஷஜ’ என்பன மருந்துச் சரக்குகள் — பிப்பலி,  விளங்க , மரிச ஹரிதிக, விபிடக , ஆமலக, கொத்தபல(அதாவது மிளகு, கடுக்காய், திப்பிலி, நெல்லிக்காய் முதலியன)

பழம்’ தமிழ்ச்  சொல்லா?

2700 ஆண்டுகளுக்கு முன்னர், இப்போதுள்ள பாகிஸ்தானில் பிறந்த, உலக மகா இலக்கண மேதை பாணினி , பலம் /பழம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார் . ஆனால் வேதத்தில் ‘பிப்பல’ என்ற சொல்லே உளது. இது ‘ஆப்பிள்’ (Pippala = Berries= Apple) போன்ற சொற்களைத் தோற்றுவித்தது . இதுவே பல /பழ ஆயிற்றா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். பாலி மொழி நூல்களில் “பல” (பழம்) மலிந்து கிடக்கிறது.

புத்தர் அனுமதித்த எட்டு வகை பல/பழ  ரசங்கள்

மாம்பழ ரசம், நாவல் பழரசம் , காட்டு வாழைப்பழ ரசம், வாழைப் பழரசம், திராட்சைப் பழரசம், ‘மது ரசம் /இலுப்பைப் பழம்’ , ‘சாலூக பாண / அல்லிப் பூ வேரின் சாறு’ , ‘பாருசக/ பலசாக /தடச்சி’- க்ரிவியா ஏஸியாடிகா Grewia asiatica

கோ ரஸா

புத்தர் அறிவித்ததாக பவுத்த நூல்கள் செப்புவதாவது-

பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைச் சாப்பிட நான் உங்ககளை அனுமதிக்கிறேன்- பால், தயிர், மோர், நெய் , வெண்ணெய்.

இப்போது வெளிநாட்டில் பரவி வரும் (Vegan) வேகன் கொள்கை பழங்கால இந்தியாவில் கிடையாது. வெளிநாட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மாமிசம் , மருந்து ஊசி ஆகியன கொடுப்பதால் பலருக்கும் ‘லாக்டோஸ்’ (Lactose) (பாலில் உள்ள ஒரு பொருள்) ஒவ்வாமை வந்து விட்டது. ஆகையால் பால் பொருட்கள் எதையும் உபயோகிக்கக்கூடாது என்ற வேகன் VEGAN கொளகை பரவி வருகிறது. பழங்கால ரிஷிகள் பாலையும் தேனையும் கலந்த உணவையே சாப்பிட்டனர். ஒரு நாடு வளம் பொருந்தியது என்று சொல்ல, அந்த நாட்டில் “பாலும் தேனும் ஆறாக ஓடிற்று” என்ற சொற்றோடர் சம்ஸ்கிருத நூல்களிலும் பைபிளிலும் பயன்படுத்தப்பட்டது .

மண் சோறு சாப்பிடு (கரதின்னகாபாதோ)

ஏதேனும் ஒரு வீட்டில் பிச்சை  கேட்டபோது அந்த வீட்டுப் பெண்மணி , புத்த பிட்சுவை மயக்குவதற்காக ஏதேனும் மாய மருந்துகளை , வசிய விஷயங்களைக் கலந்ததாகத் தெரிந்துவிட்டால் , அந்த மாய, வசியத்தை முறிக்க, கலப்பையில் ஒட்டியிருக்கும் ‘சேறு/ சகதி’யைக் கரை த்துக் குடிக்க வேண்டும் . இதன் பெயர் ‘சீதா லோலி’. சீதா தேவி இப்படிக்கு கலப்பையில் உழுகலனில்  பிறந்ததால் அவளுக்கு ஜனக மாமன்னன் ‘சீதா’ என்று பெயரிட்டான் . ஒரு பூமியை யாகத்துக்காக  செம்மைப் படுத்துகையில் மன்னன் வந்து ‘தங்க ஏர்’ கொண்டு அந்த இடத்தை  உழுதல் பழங்கால வழக்கம் .

இந்து மஹா அதிசயம்

உலகில் இந்துக்களைப்  போல இயற்கை நண்பர்கள் எவருமிலர் . ஸீதாவுக்கு ‘கலப்பை/ஸீதா’ என்று பெயரிட்டது போல பறவைகளால் வளர்க்கப்பட்ட சகுந்தலைக்கு பறவைப் பெண் (Shakuntala= Bird) என்று பெயரிடப்பட்டது. இதுபோல புராண இதிஹாசங்களிலும் , வேத ரிஷிகளின் பெயர்களிலும் 50 பெயர்கள் பறவைகள், மிருகங்களின் பெயர்கள் ஆகும் .

அரசமரம் – பிப்பலதான்

ஆந்தை – கௌசிகன்

ஆமை – காஸ்யபன்

காகம் – பரத்வாஜன்

வேணு – மூங்கில்

இப்படி ஐம்பது பெயர்கள் கிடைக்கின்றன.

இந்துக்கள் இயற்கையில் இன்பம் அனுபவித்தார்கள். காகத்துக்கும் ஆந்தைக்கும் மனிதர்களை போல மதிப்பு தந்தார்கள் .

இந்தப் பெயர்கள் பற்றிய எனது ஆராய்சசியைத் தனியே வரைவேன். தமிழிலும் ஆந்தை (பிசிர் ஆந்தை) காகம் (காக்கை பாடினியார் ) முதலியன உண்டு. தமிழ், சம்ஸ்கிருத பெயர் பட்டியலை பின்னர் தருகிறேன்.

சங்க இலக்கியத்தில், குப்தர்கள் கல்வெட்டுக்களில்  20க்கும் மேலான நாகர் (பாம்பு) பெயர்கள் இருக்கின்றன.

Xxx

குருடு , ஊமை ,செவிடு

குருடர்கள், செவிடர்கள், ஊமைகளை புத்த பிட்சுக்களாக ‘சன்யாசம்’ கொடுக்கக்கூடாது. அந்த மாதிரி நடந்தால் அதில் பங்கேற்போரும் தவறு செய்தவர்களே.

இணைந்த கை விரல் உடையோர், ஆறு விரல்கள் உடையோரையும் பிட்சுக்களாக்கக்கூடாது. நொண்டி, முடவன்,குள்ளன் ஆகியோரும் பிட்சுக்களாகத் தடை விதித்தார் புத்தர். பிராமணர்கள் பவுத்தர்களாக மதம் மாறியபோது அவருடைய முகம் பிரகாசத்தால் ஒளிவிட்டது.

பாலி மொழி அகராதியையும் புத்தமத அகராதியையும் ஆராய்ந்தால் ஆரிய – திராவிட மொழிக் கொள்கைளைத் தவிடு பொடியாக்கலாம் . தமிழும் சம்ஸ்கிருதமும் மிகவும் நெருக்கமானவை, ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை  என்பதை நிரூபிக்கலாம். உலகிலுள்ள பழங்கால மொழிகளில் தமிழும் சம்ஸ்கிதமும் விரவிக் கிடப்பதைக் காட்டி இங்கிருந்தே நாகரீகம் பரவியது என்பதையும் காட்டலாம். திராவிடர்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்ற வெள்ளைக்காரன் கொள்கைக்கு முடிவு கட்டலாம் .

Xxx

புத்தர், பெண்களுக்கு எதிரானவர் என்பதை இந்தியாவின் ராஷ்டிரபதியாக இருந்த , உலகப் புகழ்பெற்ற தத்துவ வித்தகர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவரது தம்மபத மொழிபெயர்ப்பில் எடுத்துக் காட்டுகளுடன் தந்தார். (முன்னரே இதுபற்றி எழுதிவிட்டேன்) பிரதம சிஷ்யன் ஆனந்தன் கெஞ்சிக் கூத்தாடவே ‘தொலைந்து போ, பெண்களையும் புத்த பிட்சுணிகளாக்கு !’ ஆனால் ஒன்றைக்  குறித்துக் கொள் ; எனது மதம் எக்காலம் வரை இந்தப் பூவுலகில் இருக்கும் என்று கணக்கிட்டேனோ அதில் பாதி காலத்தில் என் மதம் போய்விடும்’ என்றார் .

இன்றும் புத்த மத நூல்ளில் ஆண்களுக்கு ஒரு நீதி , பெண்களுக்கு ஒரு நீதி என்றே விதிகள் உள .

ஒரே ஒரு எடுத்துக் காட்டைக் காண்போம் .

ஆராம (தோட்டம் ,பூங்கா)

புராதன இந்தியாவில் மக்கள் இன்பத்துடன் வாழ்ந்தனர். நகரெங்கும் பூங்காக்களும் தோட்டங்களும் ஆயிரக்கணக்கில் இருந்தன. பீஹார் மாநிலத்தில் வைசாலி நகரில் 7000க்கும் அதிகமான தோட்டங்கள் (ஆராம) தோப்புகள், நந்தவனங்கள், பூங்காக்கள் இருந்தன. இவைகளுக்கு புத்த பிட்சுணிக்கள் போகக்கூடாது என்று புத்தர் தடை விதித்தார்.

புத்தர் சொன்ன எல்லாம், பிற்காலத்தில் மூன்று மஹாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையில் ‘‘த்ரி பீடகம்’ (மூன்று பெட்டிகள்) என்ற புஸ்தகங்களாக வெளியிடப்பட்டன. புத்தர் உலவியது முழுதும் இன்றைய இந்தியாவின் பீஹார் , உத்தர பிரதேச மாநிலங்களாகும் . பீஹார் என்ற பெயரே (புத்த) ”விஹார” என்ற சொல்லில் இருந்து வந்ததே !

Reference

kd.6.34.21 Then the Lord on this occasion, having given reasoned talk, addressed the monks, saying: “I allow you, monks, five products of the cow: milk, curds, butter-milk, butter, ghee. There are, monks, wilderness roads with little water, with little food; it is not easy to go along them without provisions for the journey. I allow you, monks, to look about for provisions for a journey: husked rice for him who has need of husked rice; kidney-beans for him who has need of kidney-beans; beans for him who has need of beans; salt for him who has need of salt; Vin.1.245 sugar for him who has need of sugar; oil for him who has need of oil; ghee for him who has need of ghee. 

—subham —

பேரூர் நந்தியின் முகம் வெட்டப்பட்டு பின் மீண்டும் வளர்ந்தது ஏன்?(Post.7615)

Perur Temple, WIKIPEDIA

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7615

Date uploaded in London – – 25 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கொங்குமண்டல சதகம் பாடல் 19

பேரூர் நந்தியின் முகம் வெட்டப்பட்டு பின் மீண்டும் வளர்ந்தது ஏன்?

ச.நாகராஜன்

கோயமுத்தூரை அடுத்துள்ள பேரூர் பழைய காலத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள ஆறை நாடு என்று அழைக்கப்பட்டது.

சுந்தர மூர்த்தி நாயனார் ஊர் ஊராகச் சென்று சிவனை வழிபட்டு வரும் நாளில் ஒரு நாள் பேரூர் சென்றார்.

அப்போது அங்கு எழுந்தருளியுள்ள பட்டீசுரர் பள்ள வேடம் கொண்டு வயலுக்குச் செல்வாராயினர். செல்லும் போது நந்தியிடம் , “நான் எங்கு செல்கிறேன் என்பதை யாருக்கும் தெரிவிக்காதே” என்று கட்டளையிட்டு விட்டுச் சென்றார்

tamilandvedas.com, swamiindology.blogspot.com.

சுந்தரர் அங்கு வந்து இறைவனைக் காணாத நிலையில் நந்தியிடம் எம்பெருமான் எங்கே என்று கேட்டார்.

நந்திக்குத் தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. சிவபிரான் தான் செல்லும் இடத்தை யாருக்கும் சொல்லக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் சிவனடியாரோ சிவன் இருக்கும் இடத்தைக் கேட்கிறார். சிவனடியாரிடம் பொய் சொல்லக் கூடாது, அதுவும் தவறு தான்.

ஆகவே கண் ஜாடையால் சுவாமி சென்ற இடத்தைக் காட்டினார்.

விஷயத்தைப் புரிந்து கொண்ட சுந்தரர் நேராக வயலுக்குச் சென்று சிவ தரிசனம் பெற்றார்.

சுந்தரருடன் கரை ஏறிய பட்டிப் பெருமான் ஆலயத்திற்குச் சென்றார். கோபம் கொண்ட அவர், அங்கு மண்வெட்டி கொண்டு இடபதேவர் முகத்தை வெட்டினார்.tamilandvedas.com, swamiindology.blogspot.com

நந்திகேசுரர் சிவபெருமானை வணங்கி அருள் வேண்டி இறைஞ்ச அவர் முகம் மீண்டும் பழையபடி வளர்ந்தது.

இந்த வரலாற்றை கொங்கு மண்டல சதகம் 19ஆம் பாடலில் விளக்குகிறது இப்படி:-

நறைவயல் வாய்ச்சுந் தரர்க்கொளித் தாரதை நந்திசொலப்

பிறைமுடி மேனியர் பட்டீச் சுரர்பெரு மண்வெட்டியாற்

குறைபட வெட்டி விழுமுக நந்திசெய் கொள்கையினால்

மறுமுக மீண்டு வளர்ந்தது வுங்கொங்கு மண்டலமே

பொருள் : சுந்தரமூர்த்தி நாயனார் வருவதைத் தெரிந்து கொண்ட பட்டீச்சுரப் பெருமான் (பள்ள வடிவாக) வயலில் ஒளிந்திருந்ததை நந்திகேசுரர் (கண் ஜாடையால்) காட்ட, கோபம் கொண்ட சிவபிரான் திருக்கையி ற் கொண்ட மண்வெட்டியால் நந்தி முகத்தை வெட்ட, அந்த முகம் மீண்டும் வளர்ந்த பேருர் கொங்குமண்டலத்தைச் சேர்ந்ததேயாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்த வரலாற்றைப் பேரூர்ப் புராணம் இப்படி விவரிக்கிறது:-

பண்ணையி லேரிற் பூட்டிப் பகட்டொடு முழாது வைத்தால்

நண்ணிய தொண்டர்க் குண்மை நவிற்றுறா திருப்பை கொல்லென்

றண்ணல்வெள் விடையைச் சீறி  யானனஞ் சரிந்து வீழ

மண்ணகல் கருவி தன்னால் வள்ளலார் துணித்திட் டாரால்  (பேரூர்ப் புராணம்) tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுந்தரர் வரலாற்றிலும் இந்தச் சம்பவம் இடம் பெறுகிறது.

****

மாதவையா குடும்பத்தினரின் மகத்தான தமிழ் சேவை (Post No.7578)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7578

Date uploaded in London – 15 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பழைய தமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்? என்று 2016ல் ஒரு கட்டுரை எழுதினேன். முத்தமிழ் நாவல் முன்னோடிகளில் ஒருவரான அ. .மாதவையா பற்றியும் அவருடைய மகன், மகள்கள் பற்றியும் கிடைத்த செய்தியை பிரிட்டிஷ் லைப்ரரி நூல் ‘தில்லைக் கோவிந்தன்’ கதையிலிருந்து இங்கு இணைத்து இருக்கிறேன்.. பெண் எழுத்தாளர்கள் வரலாற்றை எழுதுவோருக்குப் பயன்படும். மாதவையாவின் வாழ்க்கைக்குறிப்பும் சுவையானது. அவருக்கு ‘பம்பா’ (PAMBA) என்ற புனைப்பெயர் எப்படி ஏற்பட்டது என்பதை படியுங்கள்.

Tags -மாதவையா, விசாலாக்ஷி அம்மாள், பம்பா

tamilandvedas.com › tag › எழுத்தாளர்க…

எழுத்தாளர்கள் | Tamil and Vedas

  1.  

6 Jun 2016 – தமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்? … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … புரிந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களைப் பார்த்தால் பெண்கள் பெயர்களையே …

SUBHAM

இந்தியர்களை வியக்கவைத்த முஸ்லீம் ராணி! (Post No. 7577)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7577

Date uploaded in London – 15 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இந்தியாவை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண்மணி நூர் ஜஹான் (Nur Jahan) . மொகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கிரின் மனைவி. முக அழகு, வசீகரம், ஆளும் திறமை, புதுமை விரும்பி, கண்டுபிடிப்பாளர் , அதிர்ஷ்டம் ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாக உருவம் எடுத்து வந்தவர் புதுவகை உணவு, . பலவகை பாஷன்  ஆடைகள், ரோஜா மலர் அத்தர் ஆகியவற்றைக் கண்டுபிடித்த பெருமை உடையவள். ஏராளமான ஆங்கில புத்தகங்களின் கதாநாயகி. இவ்வளவுக்கும் இந்தியர் அல்ல. அவள் ஒரு பாரசீக ரோஜா.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதோ சுருக்கமான கதை –

பாரசீகம் என்ற நாட்டின் தற்கால பெயர் ஈரான் (Persia= Iran). உலகில் எவருக்கேனும் துன்பம் நேரிட்டால் அவர்கள் மன நிம்மதி பெறுவதற்கு அடைக்கலம் புகும் நாடு இந்தியா. பாரஸீகத்தில் மிர்ஜா கயாத் பேக் என்பவர் புகழ்மிகு குடும்பத்தில் பிறந்த செல்வந்தர். பாரசீகத்தில் முஸ்லிம்களின் கொடுமைகள் அதிகரிக்கவே குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இவை எல்லாம் 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. சம்ஸ்கிருத இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் பெரிய வணிகர் கூட்டம், ஒரு சார்த்தவாகன் தலைமையில் ஊர் ஊராக , நாடு நாடாகச் செல்லும். சிலப்பதிகாரத்தில் கூட கோவலன் தந்தை மாசாத்துவானைப் பார்க்கலாம். நளனின் மனைவியான தமயந்தி கூட  ஒரு வணிகக் கும்பலுடன் சேர்ந்து கொண்டு காட்டுப்பாதையைக் கடந்து வந்ததை படிக்கிறோம். இதே போல மிர்ஜா பேக் தனது மகள் நூர் ஜஹான், மனைவி, பிள்ளைகள் ஆகியோருடன் பிரபல வணிகர் தலைவனான, மா சாத்துவன் ஆன, மாலிக் மசூத் வணிகர் குழுவுடன் பாதுகாப்பாக புறப்பட்டார். அந்தக் குழு இந்தியா வந்து சேர்ந்தது tamilandvedas.com, swamiindology.blogspot.com

 .

அப்போது இந்தியாவை மொகலாய மன்னர் அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். நூர் ஜஹானையும் மிர்ஜா பேக்கையும் அழைத்து வந்த மாலிக்கிற்கு அரண்மனையில் உள்ள பலரைத் தெரியும் . ஆகையால் நூர்ஜஹானின் தந்தையான மிர்ஜா பேக்கையும் சகோதரர்களையும் ஆக்ராவிற்கு அழைத்துச் சென்று அக்பர் முன்னிலையில் பிரசன்னமானார். உடனே அக்பரும் அவர்களுக்கு அரண்மனையில் சேவகம் செய்ய சில பணிகளைக் கொடுத்தார்.

அப்போதிலிருந்து நூர் ஜஹானின் வாழ்க்கை  பட்டம் போல உயர, உயர,மேலே சென்று, பட்டொளி வீசி பறக்கத் துவங்கியது. அவள்  அடிக்கடி அம்மாவுடன் அரண்மனைத் தோட்டத்தில் உலவ வருவாள் . அழ கா ளும் அறிவாலும் அனைவரையும் கவர்ந்தாள் . அக்பரின் மகன் இளவரசன் சலீம் அவளைக் கண்டவுடன் காதல்  கொண்டான் . சலீமின் பிற்காலப் பெயர் ஜஹாங்கிர். ஆயினும் விதி வசம் வேறு மாதிரி இருந்தது  17 வயதான போது,நூர் ஜஹான் , பர்த்வான் கவர்னரான ஷேர் ஆப்கான் கானுக்கு மனைவியானாள்.

அக்பர்  இறந்த பின்னர்,   இளவரசர்  சலீம், ஜஹாங்கிர் என்ற பெயரில் 1605ல் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யத்தின் மன்னர் ஆனார். தன்  தம்பியை அனுப்பி ராஜத் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டி  நூர்ஜஹானின் கணவரைக் கைது செய்ய அனுப்பினார். நூர்ஜஹானின் கணவரான ஷேர் ஆப்கான் கான் அவசரப்பட்டு கத்தியை  சுழற்றவே, ஜகாங்கீரின் ஆட்கள், அவர் மீது பயந்து,  அவனைக் கண்டம் துண்டமாக வெட்டிவிட்டு நூர்ஜஹானைப் பிடித்துவந்து ஜஹாங்கிர் முன்னிலையில் விட்டனர். இதற்கு 4 ஆண்டுகளுக்குப்  பின்னர், நூர்ஜஹானுக்கு 34 வயதானபோது, ஜஹாங்கிரின் மனைவி ஆனாள்.

நூர் ஜஹானுக்கு ஜஹாங்கீர், முதலில் ‘நூர் மஹால்’ – அரண்மனையின் ஒளி விளக்கு – பட்டம் அளித்தார். பின்னர் ‘நூர் ஜஹான்’–  உலகத்தின் ஒளி விளக்கு— என்ற பட்டங்களை அளித்தார். ஜஹாங்கீருக்கு குடிபோதை பழக்கம் இருந்ததால் சுகபோக வாழ்க்கையில் மூழ்கி முழுப் பொறுப்பையும் நூர் ஜஹானிடம் விட்டார். அவள் 11 ஆண்டுகளுக்கு அக்கால உலகின்  மிகப்பெரிய சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யத்தைத் திறம்பட ஆண்டார். சகல கலா வல்லி  ஆனார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

ஒருகாலத்தில் ஜஹாங்கீர் வெளியிட்ட நாணயத்தில் பின்கண்ட வாசகம் காணப்படுகிறது-

ஜஹாங்கிரின் கட்டளையின் பேரில்

தங்கத்துக்கு நூறு மடங்கு மதிப்பு

அதிகரித்துவிட்டது . சக்ரவர்த்தியின் மனைவி

நூர்ஜஹானின் பெயர் அதில் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது மனைவியின் பெயரால் தங்கத்துக்கு 100 மடங்கு மதிப்பு அதிகமாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரோஜா மலரில் இருந்து அத்தர் எடுப்பதை  நூர்ஜஹான் கண்டுபிடித்தார். புதுவகை உணவு வகைகள், பாஷன் உடைகளைக் கண்டுபிடித்தார். துப்பாக்கி ஏந்தி ஒரே நேரத்தில் 4 புலிகளைச் சுட்டார் . இப்படி அவளுடைய வீர தீர செயல்கள் பற்றி பெரிய பட்டியலே இருக்கிறது . ஒரு முறை அரண்மனையிலிருந்து இவர் விட்ட அம்பு, ஆற்றங்கரை வண்ணானைக் கொல்லவே , வண்ணாத்தி ஓவென்று கதறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தாள் . நூர்ஜஹான், சாதாரணக் குற்றவாளி போல ராஜ சபைக்கு இழுத்து வரப்பட்டாள் . பின்னர் என்ன? மஹாராணி ஆயிற்றே , மன்னிப்பு, நஷ்ட ஈடு என்று கதை முடிந்தது. முஸ்லீம் மன்னர்கள், மனு நீதிச் சோழர்கள் அல்லவே tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

நூர்ஜஹான் 4 புலிகளைச் சுட்டுக்கொண்றதைக் கேள்விப்பட்டவுடன் அவளுக்கு ஜஹாங்கிர் ஒரு லட்ச ரூபாய்  மதிப்பில்  வைர மோதிரம்  பரிசளித்தார். இன்றைய விலையில் பத்து கோடி இருக்கலாம். ஆயிரம் ஏழைகளுக்குத் தங்கக் காசுகளையும் விநியோகித்தார். நூர்ஜஹானுக்கும் தர்ம கைங்கர்யங்களில் பிரியம் உண்டு

காலம் செல்லச் செல்ல நுரஜஹானுக்கு கஷ்டகாலம் துவங்கியது ஜஹாங்கிரின் மூத்த மகன் பெயர் இளவரசன் (Prince Khurram) குர்ரம் . இவனுடைய பிற்காலப் பெயர் சக்ரவர்த்தி ஷாஜஹான். இவனுக்குப் பேரழகி மும்தாஜ்மஹாலைக் கல்யாணம் செய்துவைத்த ஆசப்கான் ஷாஜஹானுக்கு முழு ஆதரவு தந்து தனது மருமகன் அரசுக்கட்டில் ஏறும் நாளைக் கனக்குப் போட்டுக்கொண்டிருந்தான். நூர்ஜஹான் வேறு  கணக்குப்போட்டாள் . தனது முதல் கணவர் மூலம் பிறந்த பெண்ணை மணந்த, ஜஹாங்கிரின் இளைய மகன் ஷாரியார் சிம்மாதனம் ஏற திட்டம் தீட்டினாள் . புரட்சி tamilandvedas.com, swamiindology.blogspot.com வெடித்தது.

போரும் தொடர்ந்தது. காபூல் நகர கவர்நர் பதவி வகித்த மஹாபாத் கான் உதவியுடன் புரட்சியை ஒடுக்கினாள் நூர்ஜஹான்.

காலப் போக்கில் நடந்த கசமுசாவில் அதே மஹாபத் கான், அரசுக்கு எதிராகத் திரும்பி, ஜஹாங்கிரையும் நூர்ஜஹானையும் சிறைப்பிடித்தான் . நூர் ஜஹான் தப்பிச் சென்று பெரும்படை திரட்டி வந்தாள் . வில்லாதி வில்லியான அவள் யானை மீது ஏறி, பிரவாஹம் எடுத்து வந்த நதியில் இறங்கி அக்கரை சேர்ந்தாள் . ஆனால் அவளைத் தொடர்ந்து வந்த படைகள் பின்தங்கின. மஹா பாத் கான் அவளை மீண்டும் சிறைப்பிடித்தான். பின்ர் அவள் பெண்களுக்கே உரித்தான சாதுர்யங்களைப் பயன்படுத்தி தன்னையும் கணவர ஜஹாங்கிரையும் tamilandvedas.com, swamiindology.blogspot.com

விடுவித்துக் கொண்டார்.

குடிப்பழக்கத்தால் உடலைப் பலவீனமாக்கிக் கொண்ட ஜஹாங்கிர் காஸ்மீரிலிருந்து லாகூருக்குச் செல்லும் வழியில் 1627ல் மரணம் அடைந்தார். குர்ரம் என்ற ஷா ஜஹான்  பதவி ஏற்றார். ஆயினும் நூர்ஜஹானை அன்போடு நடத்தினார் . அவளுக்கோ வாழ்க்கை வெறுத்துவிட்டது. தனிமையில் வாடினார் .பழங்காலத்தில் நடந்த  புகழ்மிகு நிகழ்வுகள் மனதில் நிழல் ஆட வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடியது .,கணவன் இறந்த 19 ஆண்டுகளுக்குப் பின்னர், 1646ல் , அவளுடைய 72ஆவது வயதில் உயிர்நீத்தாள் . லாகூரில் தனது கணவருக்காக மிக அழகான பூந்தோட்ட சமாதியை அமைத்திருந்தார் . அதற்குச் சற்று தொலைவில் இவளது உடலும் அடக்கம் செய்யப்பட்டது..

அதில் எழுதப்பட்டுள்ள சோகமயமான  வாசகம் செப்புவது யாதெனில் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ,தனிமையான எனது கல்லறையில் ரோஜாக்கள் மலராது;

இசை பாடும் குயில்கள் சங்கிதம் இசைக்காது;

இருள் அகற்றும் நட்புறவு  ஒளிவீசும் விளக்குகளும் ஒளிராது;

அதில் சிறகு எரித்து விழுவதற்காக  விட்டில் பூச்சிகள் கூட வாராது..

முடி சார்ந்த மன்னரும் பின்னர்ப்  பிடி சாம்பராய்ப் போவார்கள் என்றாலும், இந்திய வரலாற்றில் அழியாத சுவடுகளை பதித்து விட்டாள் ‘பாரசீக ரோஜா’ –ராணி.நூர் ஜஹான்

Tags —  நூர் ஜஹான், முஸ்லீம் ராணி, மொகலாய, ஜஹாங்கிர் , ஷா ஜஹான்

–subham—

பெண்கள் மனிதப் பிறவிகளா? கிறிஸ்தவர் காரசார விவாதம் (Post No.7561)

WRITTEN BY London Swaminathan

Post No.7561

Date uploaded in London – 11 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உலகப் புகழ் பெற்ற தத்துவ வித்தகரும் இந்தியாவின் ராஷ்டபதியுமான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்

‘இந்தியாவின் புகழ் பெற்ற பெண்மணிகள்’ (GREAT WOMEN OF INDIA) என்ற 1953-ம் ஆண்டுப் புஸ்தத்துக்கு றிமுகக் கட்டுரை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து டாக்கா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆர்.சி . மஜூம்தார் (RAMESH CHANDRA MAJUMDHAR, VICE CHANCELLOR OF DACCA UNIVERSITY)  ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் . கட்டுரையில் பல அரிய சுவையான விஷயங்களைக் காணலாம். இதோ சில சுவையான செய்திகள் —

டாக்டர் ராதா கிருஷ்ணன் அப்போது உபராஷ்டிரபதி . அவர் எழுதியதாவது-

இந்தியப் பண்பாட்டில் பொதுவாக பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அதை இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் எடுத்துரைக்கின்றன. ஆனால் அவ்வப்போது பெண்களுக்கு எதிரான குறிப்புகளையும் காணமுடிகிறது  கடவுளையே நாம் அரை ஆண்மகனாகவும் , அரை பெண்மணியாகவும் பார்க்கிறோம் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில். மநு சொல்கிறார் (3-56)- “எங்கே பெண்கள் கௌரவிக்கப்படுகிறார்களோ அங்கே கடவுள் மகிழ்சசி அடைகிறான் ; எங்கே அவர்களை மதிக்கவில்லையோ அவ்விடத்தில் நடைபெறும் அத்தனையும் பயனற்றுப் போகும்” .

ஆண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் பெண்கள் , செய்ய இயலாது. ஏனெனில் அவர்களின் உடல்வாகு அதற்கு இடம் தராது . இதன் காரணமாக அவர்களை மட்டம் தட்ட முடியாது . அவரவர்களுக்கு உரிய செயல்களைச் செவ்வனே செய்வதே சிறப்பாகும்.

பழங்காலத்தில் பெண்களும் கல்வி கற்றனர்; பூணுல் அணிந்து கிரியைகளைச் செய்தனர். பிரம்ம வித்யைக்கு அவர்க்களும் உரிமை கொண்டாடினர். ‘மஹாநிர்வாண தந்திரம்’ கூறுகிறது – “பெண்களையும் வளர்த்து ஆளாக்கி கவனத்துடனும் பெரு முயற்சியுடனும் கல்விப் பயிற்சி தர வேண்டும்”- 8-47

தேவி மஹாத்ம்யம் என்னும் நூல் இயம்புகிறது – “அறிவின் எல்லா துறைகளும் நீயே! உலகம் முழுதுமுள்ள பெண்கள் யாவரும், தேவி! உன் வடிவங்களே” – 11-6.

கல்விக்கான கடவுளே ஸரஸ்வதி ஆவார் .

நாமும் மைத்ரேயி, கார்கி , அருந்ததி, லீலாவதி  முதலிய புகழ் பெற்ற பெண்மணிகளின் பெயர்களைக் கேள்விப்பட்டுள்ளோம்.

வேத காலத்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிட்டின. இதற்குப்பின்னர் அவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் அறியாமையிலும் மூட  நம்பிக்கைகளிலும் உழன்றனர்.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூட பைரவி பிராஹ்மணி என்ற பெண்மணியைத் தன் குருவாக ஏற்றார் . அவருடைய மனைவியான சாரதாதேவிக்கு அவர் கொடுத்த மரியாதையும் குறிப்பிடற்பாலது .

வேத காலத்தில் பெண்கள் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்ததை அறிகிறோம். இதற்காக ‘சமான’ என்ற விழாக்கள் நடந்தன. கல்யாணம் என்பது மதிப்பிற்குரிய ஒரு விஷயமாக போற்றப்பட்டது .

துர்கா சப்த சதியில் ஒரு சுவையா விஷயத்தைக் காண்கிறோம். அங்கே துர்க்கை கல்யாணம் ஆகாத குமாரி. அவளைத் திருமணம் செய்துகொள்ள அசுரர்கள் ஆசைப்படுகின்றனர். அப்போது துர்கா தேவி சொல்கிறாள் —

“போரில் என்னை எவர் ஒருவர் வெல்கிறாரோ, எவர் ஒருவர் என்னையும் விஞ்சும்  கர்வத்தைக் காட்டுகிறாரோ, எவர் ஒருவர் எனக்குச் சமமானவரோ அவரை நான் மணந்து கொள்வேன்” .

இதிலிருந்து பெண்கள் வெறும் இன்பத்தைத் தரும் அடிமைகள் அல்ல என்பது விளங்கும்.

மஹாபாரதத்தில் ஆதி பர்வத்தில் ஒரு ஸ்லோகம் உரைக்கிறது -1-3-9

“உன்னுடைய இருதயம்/ உள்ளம் என்னுடையதாகட்டும் ;

என்னுடைய இருதயம்/ உள்ளம் உன்னுடையதாகட்டும்”;

ஆகையால் காம சுக போகத்தை அவர்கள் வெறுக்கவில்லை

கல்வி கற்க வரும் சிறுவனுக்கு ‘தாயைச் சிறந்ததொரு கோயில் இல்லை’ என்பது தொனிக்கும் வகையில் முதலிலேயே மாத்ரு தேவோ பவ’  (தாயே கடவுள் என்று கருது) – என்று கற்றும் தருகிறோம். மனு இதை மிகவும் வலியுறுத்தி மொழிகிறார் –

“பத்து உபாத்யாயர்களை விட   ஒரு ஆச்சார்யர் பெரியவர் ;

ஒரு தந்தையானவர் 100 ஆச்சார்யர்களை  விடச் சிறந்தவர் ஆவார்;

ஒரு தாய் என்பவளோ 1000 தந்தையரையும் விடச்  சிறந்தவர் ஆவார்” – 2-145

xxx

இவ்வாறு டாக்டர் ராதா கிருஷ்ணன் எழுதியத்தைத் தொடர்ந்து டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் எழுதுகிறார் –

“நம்முடைய அதிர்ஷ்டம் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டல 85 ஆவது துதி (Rik Veda 10-85) கல்யாண மந்திரத்தை அப்படியே இன்று வரை காப்பாற்றி வந்துள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத இந்த ஒப்பற்ற கவிதை, இந்துக்கள் திருமணத்துக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுத்தனர் என்பதைக் காட்டுகிறது ; ஒரு நாகரிகம் வாய்ந்த சமுதாயத்தில் நடக்கும் திருமணத்தின் மிகப்பழைய (oldest document on marriage) குறிப்பு இதுதான்”.

“இதற்குப்பின்னர் அவர் பெண்களுக்கு எதிரும் புதிருமாக உள்ள கருத்துக்களை இந்து மத நூல்களில் இருந்த எழுதிவிட்டு நாம் பெரும்பாலும் கேள்விப்படாத முக்கிய விஷயத்தை எழுதுகிறார்).

“பெண்கள் இயல்பாகவே தீய குணங்களுடன் படைக்கப்பட்டவர்கள் என்று குறை கூறுகிறீர்களே. ஆண்களிடம் அத்தகைய தீய குணங்கள் இல்லையா? என்று வராஹ மிஹிரர் கேட்கிறார்.

உலகம் முழுதும் பெண்களுக்கு எதிரான போக்கு காணப்பட்டது . கி.பி. 585ல் பிரான்சில் மேசன் நகரில் நடந்த கிறிஸ்தவ குருமார்கள் மகாநாட்டில்(Synod of Macon) பெண்கள் மனிதப் பிறவிகளா என்று காரசாரமாக விவாதித்தனர்.

கௌதம புத்தர் 2600 ஆண்டுகளுக்கு  முன்னரே பெண்களை கடுமையாக நடத்தினார் . பவுத்த சங்கத்தில் அவர்களை அனுமதிக்க முடியாது என்று அடம்பிடித்தார்.

சிஷ்யர்கள் மிகவும் வற்புறுத்தவே பெண்களை புத்த சங்கத்தில் அனுமதித்துவிட்டு , நான் எவ்வளவு காலம் என் கொள்கைகள் இந்த பூமியில் நிலவும் என்று நினைத்தேனோ அதில் பாதிக் காலம்தான் என் மதம் இந்தப் பூமியில் நிலவும் என்று ஆருடம் கூறினார். நூறு வயது பிக்குணி கூட நேற்று வந்த 16 வயது பிட் சுவுக்கு  மரியாதை செய்ய வேண்டும். என்றார். மேற்கு நாடுகளில் இதையும் விட நிலைமை  மோசம். கிரேக்க, ஸீ ன தத்துவ  ஞானிகளான கன்பூசியஸ், அரிஸ்டாட்டில், பிரெஞ்சு அறிஞர் ரூஸோ ,  ஆங்கிலக் கவிஞன் மில்டன் ஆகியோரும் பெண்களுக்கு எதிராகப் பொழி ந்து தள்ளினர் ஆண்களை விட பெண்கள் மட்டம் என்றும் அவர்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றும் எழுதினார்கள்.”

xxx

என் கருத்து

பாரதி போன்று பழங்கால உலகில் பெண்களுக்கு ஆதரவு கொடுத்த அறிஞர் வராஹமிஹிரர் ஒருவரே. 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று வாதாடினார். இந்தியர்களைவிட மிகவும் மோசமானவர்கள் மேலை நாட் டார்தான். இந்திய பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்த பின்னரே பிரிட்டிஷ் பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடைத்தது.

சங்கத் தமிழிலக்கியம் , திருக்குறளில் கூட ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று படிக்கிறோம். கம்பனும், பட்டினத்தாரும் பிறரும் பெண்களை  சாடுகின்றனர் . ஆனால் இதை சரியான பார்வையில் பார்க்க வேண்டும். இந்துக்கள் பெண்களை மூன்று கோணங்களில் அணுகினர்.

1.தாய் என்ற பார்வையில், அவர்கள் தெய்வமாகப் போற்றப்பட்டனர் . எல்லா பெண்களும் யாரோ ஒருவருக்குத் தாய் என்பதும் அவர்களுக்குத் தெரியும் .

2. இரண்டாவது கோணம்- அவர்கள் யாரோ ஒருவருக்கு மனைவி. அப்போது அவர்கள் ‘சுகம் தரும், வீட்டு வேலை செய்யும் ஒரு ‘கருவி’, ‘வஸ்து’ என்று கருதப்பட்டனர்.

3. மூன்றாவது கோணம் – விலைமகளிர் போல குணம் உடைய பெண்கள். அவர்களை பற்றி எச்சரிக்கவே பக்தி இலக்கிய பாடகர்கள் அவர்களை சாடினர் .

ஆக நிஜ வாழ்வைப் பார்க்கையில் பெண்களைப் போற்றியதையும் தூற்றியதையும் காண முடிகிறது .விக்டோரியன் கால (Victorian period Novels)  ஆங்கில நாவல்களில் ,பெண்களை புத்தியில்லாத , பொறாமை கொண்ட, அலர் தூற்றும் வம்புக்காரிகளாக (Dumb, Ignorant, Gossip mongers)  சித்தரிப்பதைக் காணலாம்.

வேத காலத்தில் இருந்த பெண்களின் உன்னத நிலை, காலப்போக்கில் சரி ந்து வந்ததை இந்து சமய நூற்கள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அக்காலத்தில் பாரதி போன்றோர் வராஹமிஹிரர் போன்றோர் மிகவும் குறைவு. அது மட்டுமல்லாது வெளிநாட்டோர் படை எடுப்புகளும் பெண்களின் நிலையைப் படு குழியில் தள்ளி ன பாரசீகர், கிரேக்கர், சகரர் , ஹுணர் , முஸ்லீம்கள் , கிறிஸ்தவர்கள் படை எடுப்பு காரணாமாக  பெண்கள் நிலைமை படிப்படியாக மோசமாகி வந்ததை வரலாறு காட்டுகிறது.

உலகிலுள்ள பழங்கால பெண் கவிஞர்கள் , அறிஞர்களைப்  பட்டியலிட்டால்  நாம் மிக உன்னத நிலையில் இருப்பதைப் பார்க்க முடியும்.

வாழ்க பாரதி, வாழ்க பெண்ணினம்

–subham—