ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை!

sapta mata - IVC
சப்த மாதாவுக்கு உயிர்ப் பலி தரும் சிந்து முத்திரை!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1428; தேதி 22 நவம்பர், 2014.

எண்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது ஏழு என்ற எண்ணாகும். நான் ஏற்கனவே எழுதிய எண் தொடர்பான கட்டுரைகளின் விவரங்கள் இறுதியில் உள்ளது. அந்தக் கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்.

சிந்து சமவெளி நாகரீகத்தில் எண் (7) ஏழும் எண் (3) மூன்றும் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்துக்களும் இந்து மதத்தில் ஆன்மீக விஷயங்களில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளியில் ஏழு பெண்கள் நிற்கும் ஒரு முத்திரை ‘’சப்தமாதா’’ முத்திரை என்று அழைக்கப்படும். தமிழ்நாட்டில் பல கோவில்களிலும் சப்தமாதா சிலைகளை வரிசையாக வைத்திருப்பர். அது போலவே இந்த முத்திரையில் ஏழு மாதர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றனர்.

ARV_INDUS_12484f

ஏழு கோடு உடைய சீப்பு எழுத்து

இதே போல பாபிலோனியாவில் ஏழு அரக்கர்கள் வரிசையாக நிற்கின்றனர். ஆனால் ரிக் வேதத்தைப் பொறுத்த மட்டில் ஏழு என்பது நல்ல பொருளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ரிக் வேதம் உலகின் மிகப் பழைய வேதம். யார் சிந்து சமவெளி பற்றி புத்தகம் எழுதினாலும் இந்த வேதத்தைக் குறிப்பிடாமல் புத்தகம் எழுத முடியாது. ஏனெனில் அதே பஞ்சாப் சமவெளியில்தான் வேதத்தின் முக்கியப் பகுதிகள் உருவாயின. சிந்து சமவெளி எழுத்துக்களைப் படிக்கையில் அது சரியா தப்பா என்று கண்டறிய ரிக்வேதம்தான் உதவ முடியும். ஆகையால் இதை அப்படியே காப்பது நம் கடமை.

வேதத்தில் ஏழு என்று வரும் இடங்களைக் கிழே உள்ள பட்டியலில் காணுங்கள்:
சப்த ரிஷிக்கள்
தீயின் ஏழு நாக்குகள்
சப்த சிந்து (ஏழு நதிகள்)
பிருஹஸ்பதியின் ஏழு வாய்
சூரியனின் ஏழு குதிரைகள்
ஏழு புனித இடங்கள்
ஏழு குருக்கள்
வானில் வசிக்கும் அசுரர்களின் 7 கோட்டைகள்
ஏழு புண்ய தலங்கள்
ஏழு புனித பாடகர்கள்
சூரியனின் ஏழு கிரணங்கள் (ஏழு வர்ணங்களில் கிரணம் விழும்)
ஏழு ஆண் குழந்தைகள்
எழு சூத்திரங்கள்
ஏழு சந்தஸ்கள்
ஏழு ஸ்வரங்கள்
விதை கருவில் உள்ள ந்ந்ழு சத்துப் பொருட்கள்
சப்த வத்ரி

சப்த வத்ரி என்னும் பெயருக்குப் பின் ஒரு கதை உண்டு. அவரை அவரது சகோதர்கள் தினமும் இரவு நேரத்தில் ஒரு அலமாரிக்குள் வைத்துப் பூட்டி விடுவர் என்றும் அவர் எந்தப் பெண்ணுடனும் குடும்ப உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே சகோதர்களின் நோக்கம் என்றும் இறுதியில் அவர் அஸ்வினி தேவர்களின் உதவியுடன் வெளியே வந்தார் என்றும் சொல்லுவர். இந்த சுவையான கதை அடையாளபூர்வ கதையாகும். அதாவது வறண்ட கோடையும் குளிரும் நீங்கி வசந்தகாலம் வருவதைக் குறிப்பதே இக்கதை. வேத கால ரிஷிகள் நாங்கள் மறை பொருளில்தான் பாடுவோம், பேசுவோம் என்று ஒரு மந்திரத்தில் கூறுவர். இதை அறிந்தே சங்க காலத் தமிழன் வேதங்களுக்கு ரஹசியம் (மறை) என்று பெயர் வைத்தான்.

InscriptH8205a_edited-1
சிந்துவெளியில் சீப்பு போன்ற எழுத்திலும் ஏழு கோடுகளைக் காண்க

சப்தகு என்று ஒரு வேத கால ரிஷி முனிவரும் உளர். இன்றும் சப்தரிஷி என்ற பெயர்களை நம் நண்பர்கள் இடையேயும் பார்க்கலாம். வான மண்டலத்தில் வலம் வரும் சப்தரிஷி மண்டல நட்சத்திரக் கூட்டத்தையும் அதில் வசிட்டருடன் இணபிரியாது நிற்கும் கற்புக்கரசி அருந்ததியையும் சங்க இலக்கியத் தமிழ் நூல்கள் ஆறு, ஏழு இடங்களில் விதந்து ஓதுவதையும் முன்னரே பல கட்டுரைகளில் கண்டு மகிழ்ந்தோம்.

பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்த்யாவந்தனத்தில் ஏழு ரிஷிகள் பெயரையும் சம்ஸ்கிருத யாப்பு இலக்கணத்தில் உள்ள ஏழு பெயர்களையும் சொல்லுவர். இது தவிர சப்தபதி, ஏழு கடல், ஏழு மலை, ஏழு நதி, ஏழு புனித நகரங்கள், ஏழு த்வீபங்கள் என்று ஏராளமாக ஏழு ஏழாக வகைபடுத்துவர்.

பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 ரிஷிகள்:
அத்ரி ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்ப, ஆங்கிரஸ ரிஷிகள்
பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 செய்யுள் இலக்கண அணிகள்:
காயத்ரி, உஷ்னிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பக்தி, த்ருஷ்டுப், ஜகதி
பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 வேத காலக் கடவுள்கள்:
அக்னி, வாயு, அர்க்க (சூரியன்), வாகீஸ (பிருஹஸ்பதி), வருண, இந்திர, விஸ்வேதேவா:

இதுதவிர மேல் ஏழு உலகங்களில் பூர், புவர், ஸ்வர் என்று சொல்லுவர். ஆனால் அதன் பொருள் அதற்கு மேலுள்ள மஹர், ஜன, தபோ, சத்ய லோகங்களையும் உள்ளடக்கியதாகும்.

babylon-8
ஏழு ராக்ஷசர்கள் — பூதங்கள், பாபிலோனியா

ராமபிரான் ஏழு மராமரங்களை ஒரே அம்பால் துளைக்கும் பரீட்சையில் தேறியது பற்றியும் அவருக்கு ‘’குட் –பை’’ — சொல்லும் போது விபீஷணன் நினைவுப் பரிசாக ஏழு தங்க பனைமரங்கள் பொம்மையைக் கொடுத்தது பற்றியும் ஏற்கனவே எழுதிவிட்டேன். இதே போல சங்கீத சப்தஸ்வர ரஹசியங்களையும் முன்னரே கண்டுவிட்டோம்.

திருமணத்தில் துவங்கும் சப்தபதி — ( ஏழு அடி நடந்து நட்பை உறுதி செய்து) — முதல் எல்லாவற்றிலும் ஏழு பிரதானம் ஆகும். கரிகால் சோழன் ரிக்வேதத்தில் சொன்ன படி எல்லோரையும் ஏழு அடி நடந்து சென்றுதான் வழியனுப்புவான் என்று சங்க இலக்கியம் செப்பும்:–

பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
காலின் ஏழடிப் பின் சென்று கோலின்
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு
–பொருநர் ஆற்றுப்படை வரிகள் 165-167

‘’கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டமும் சங்க கால மன்னர் செய்த யாகங்களும்’’ — என்ற எனது 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கட்டுரையில் இது பற்றி எழுதியுள்ளேன்.

bronze-bells
பாபிலோய ஏழு பூதங்கள்

வள்ளுவன் ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமைக்கும் (ஏழு பிறப்பு) பயன்படுவது பற்றி பாடிவிட்டான். ஆண்டாளோ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் அடிமை என்று திருப்பாவையில் பாடுவாள். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவனைச் சந்தித்து அவன் முன்னால் கான் விளை பரிசுப் பொருட்களைக் குவித்து வணங்கியபோது எங்கள் குலம் உனக்கு ஏழு தலைமுறைக்கு அடிமைப்பட்டது என்று பெருமைபடப் பேசுவர். ஏழு என்றால் மிகப் பல — பரிபூரணம் என்ற பொருளும் இவைகளில் தொனிக்கும்!

பாபிலோனியாவில் உள்ள ஏழு பூதங்கள் குறித்து 3000, 4000 ஆண்டு பழமையான பாடல்கள் உள்ளன. எந்தௌ ஆங்கிலக் கட்டுரையில் பாடல் முழுதும் உளது. சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் புலி தேவதை, பேய் முத்திரை, கோமுக யக்ஷன் (ஆட்டு முக தக்ஷன் – தக்ஷன் செய்த யாகக் கதை — போன்ற முத்திரைகள்) ஆகியவற்றை சிந்து சம்வெளி முத்திரிகளுடன் ஒப்பிடுவது நலம் பயக்கும். ஆராய்ச்சியை புதிய திசையில் கொண்டு செல்லும்.
–சுபம்–

demon indus
Gods from Indus 5
சிந்துசமவெளி பூத பேய் முத்திரைகள்

எண்கள் பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகள்

தமிழர்களின் எண் ஜோதிடம்(posted on 16th April 2012)
நீங்கள் நாலும் தெரிந்தவரா? (தமிழ் க்விஸ்)
Mystic No.7 in Music! (posted on 13th April 2013)
Numbers in the Rig Veda (posted on 3rd September2014)
Hindus’ Magic Numbers 18,108,1008! (posted on 26th November 2011)
Most Hated Numbers 666 and 13 (posted on 29th July 2012)
King and 8 Ministries in Vedic Period (posted on 28th May 2013)
Four Stages and Seven Ages of Man (posted on 21st March 2013)

contact swami_48@yahoo.com
babylon demon
பாபிலோனியய பூதம் – சிந்து சமவெளிப் புலிப் பெண் பூத முத்திரை போன்றது

சிந்து சமவெளி மன்னர்கள் பெயர் எப்படி இருக்கும்?

313183-mahabharat.jpg

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1393; தேதி 6 நவம்பர், 2014.

சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாராலும் படிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன் கப்யூட்டரில் போட்டுப் பார்த்து இது திராவிட வகை மொழியாக இருக்கலாம் என்று பின்லாந்து, சோவியத் ஆய்வாளர் கள் சொன்னார்கள். இதுவரை அது ருசுப்பிக்கப்படவில்லை. ஏற்கனவே இது பற்றிக் கருத்துச் சொன்ன அறிஞர்களும் குழம்பிப்போய் திராவிட, ஆரிய சகதியில் சிக்கி மாற்றி மாற்றி உளறிக்கொட்டி கிளறி மூடி வருகிறார்கள். எல்லோரும் சாண் ஏறினால் முழம் சறுக்கி விழும் ஆராய்ச்சி இது!! இத்தனை அதி நவீன வசதிகள் இருந்தும் ஏன் சிந்து வெளி எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை?
ஏன் என்றால் “முதல் கோணல், முற்றும் கோணல்” — என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. சின்னக் குழந்தைகளிடம் ஒரு முறை இருட்டில் காற்றில் ஆடும் தென்னை மரத்தைக் காட்டி, அது பேய், தோட்டத்துக்குள் போகாதே என்று அம்மா சொல்லிவிட்டால் அது அடி மனதில் பதிந்து வாழ்நாள் முழுதும் அக் குழந்தை — பெரியவன் ஆன பின்னரும் –— பயப்படும். இது போல வெளிநாட்டில் இருந்து மதத்தையும் ஆட்சியையும் நிலைநாட்ட வந்த சிலர் இதற்கும் ஆரிய—திராவிடப் பேய் வர்ணத்தைப் பூசிவிட்டார்கள். நம்மவர்கள் அதில் சிக்கி சாண் ஏறி முழம் சறுக்கி விழுகிறார்கள்.

நாளைய தினம் சிந்துவெளி எழுத்துக்களை யாராவது படித்துவிட்டாலும் அதில் ராமாயண, மஹாபாரத, வேத, புராண விஷயங்கள் இருக்கும். அப்போது பல அறிஞர்கள், அது எல்லாம் திராவிடர்களிடமிருந்து ரிக்வேத ரிஷி முனிவர்கள் கற்றுக் கொண்டது என்று சொல்லி, “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை”– என்பர்!

யாரவது ஒருவர் வடமொழியையும் தமிழ் மொழியையும் படிக்காமல் இந்தியா பற்றி எழுத வந்தால் அவர்களை அரைகுறை என்று அறியுங்கள். வடமொழி, தென் மொழியில் உள்ள விஷயங்களை திரித்து எழுதினால் அவர்களை குதர்க்கவாதிகள் என்றும் பி.எச்டி. ஆய்வுப்பட்டத்துக்காக பொய் சொல்லுகிறார்கள் — அல்லது உலக …………………………….. மகாநாட்டில் பொன்னாடைக்காக இப்படிச் சொல்லுகிறார்கள் என்று ஒதுக்கிவிடுங்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், லண்டன் பல்கலைக் கழகத்தில் பேச வந்த அஸ்கோ பர்போலாவிடம் Asko Parpola ஒரு சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய Deciphering the Indus Script “டிசைபரிங் தி இண்டஸ் ஸ்கிரிப்ட்” படித்தேன். அதற்குப் பின் எழுந்த ஆய்வு பற்றி இன்றைய சொற்பொழிவில் எதுவும் புதிதாகச் சொல்ல வில்லையே என்று கேட்டேன். “அதற்குப் பின் ஒன்றும் புதிது இல்லை” — என்றார். அதாவது இந்த ஆய்வு தேக்க நிலையை அடைந்துவிட்டது. நிற்க.

சிந்து சமவெளியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு யாரோ ஆட்சி செய்துள்ளனர். அதுவும் பல நகரங்களில் பலர் ஆட்சி செய்திருக்கவேண்டும். பழைய சுமேரிய, இந்திய நாகரீக வரலாற்றைப் பார்க்கையில் இது தெரிகிறது. இந்தியாவில் 56 தேச மன்னர்கள் ஆண்டது போல சுமேரியா, கிரேக்கத்தில் பல நகர அரசுகள் இருந்தன. அப்படியானால் 20 ஆண்டுக்கு ஒரு மன்னர் வீதம் குறைந்தது 75 மன்னர்கள் சிந்து வெளியில் ஒரு நகரத்தை மட்டும் ஆண்டிருக்க வேண்டும். ஹரப்பாவுக்கும் (பாஞ்சாலம்), மொஹஞ்சதாரோவுக்கும் (சிந்து) தனித்தனி அரசர் என்றால் இன்னும் இரு மடங்கோ மும்மடங்கோ மன்னர்கள் இருந்திருப்பர். அவர்கள் பெயர் என்ன?

Krishna-Arjuna

மாற வர்மன், சடைய வர்மன்?
“மஹாபாரதம் யார்? எவர்?” (சுபாஷ் மஜூம்தார் தொகுப்பு) — என்ற ஆங்கில நூலைப் பல ஆண்டுகளுக்கு முன் படித்தபோது ஒரு ஆராய்ச்சி செய்தேன். எந்தப் பெயர் அதிகமாக பின் ஒட்டாக வருகிறது? என்று பார்த்தேன். வர்மன், கேது, சேனன், தத்தன், பதி, வதி, மதி ( பதி, வதி, மதி என்பது பற்றிய எனது ஆய்வுக் கட்டுரையையும் படிக்க வேண்டுகிறேன் ) எனப் பல பெயர்கள் வந்தாலும். இதில் மிகவும் அதிசயம்!! வேத காலம் முதல் சமீப மன்னர் காலம் வரை — அம்புலிமாமா கதைகள், வேதாளம்-விக்ரமாதித்தன் கதைகள், கதா சரித் சாகர/கதைக் கடல் கதைகள் வரை — சில பெயர்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. குறிப்பாக வர்மன் என்ற பெயர் இந்தியா மட்டுமின்றி தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகள் அனைத்திலும் காணப்படுகிறது.

ஆக என் கருத்து — சிந்து வெளி மன்னர்கள் சேனன், கேது (கொடி), வர்மன், தேவன், ரதன் என்ற பெயரிலேயே முடிந்திருக்க வேண்டும். குடும்பப்பெயர்கள் பதி, வதி, மதி என்ற பெயரிலேயே முடிந்திருக்க வேண்டும். அப்பர் வீட்டிலும், காரைக்கால் அம்மையார் விட்டிலும் திலக வதி, புனித வதி இருந்தது பற்றி எனது ஆய்வுக்கட்டுரையில் சொல்லிவிட்டேன். இது வேத கால சரஸ் வதி யில் துவங்கியது.

cheran flag

சேனன், கேது, தத்த, அயன
உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் பதி, வதி, மதி, சேன, கேது ரத ஆகியவற்றில் முடியும் பெயர்கள் நிறைய இருக்கின்றன ( காண்க: வேதிக் இண்டெக்ஸ், கீத் & மக்டொனல்)
நம்மில் யாரவது ஒருவர் இந்த பின் ஒட்டுப் பெயர்களை சிந்து சம்வெளி எழுத்துக்களில் கண்டுபிடித்துவிட்டால் புதிர் விட்டுப் போகும்.

இதோ மஹா பாரதப் பெயர் பட்டியல் ( இது முழு ஆய்வு அல்ல. ஒரு சாம்பிள் மட்டுமே):–

சேன (ன்)– என்ற பெயரில் முடிபவை; 24 எடுத்துக் காட்டு:– பீம சேன, சித்ர சேன, த்யூமட சேன
வர்ம (ன்) – என்ற பெயரில் முடிபவை;13 எடுத்துக் காட்டு:– கேது வர்மன், க்ருத வர்மன்
கேது – என்ற பெயரில் முடிபவை; 9 எடுத்துக் காட்டு:– ஸ்வேத கேது, கேது என்றால் கொடி என அர்த்தம்.
தத்த (ன்) – என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– பக தத்த, வ்யாக்ரதத்த
பதி+வதி– என்ற பெயரில் முடிபவை;13+3 எடுத்துக் காட்டு:– மாத்ரவதி, மாயாவதி,
த்யூம (ன்)– என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– த்ருஷ்டத்யும்ன
ரத (ன்)– என்ற பெயரில் முடிபவை; எடுத்துக் காட்டு:– ஜெயத்ரத, பகீரத,
ஆயுத / யுத்த (ன்) – என்ற பெயரில் முடிபவை; 3 எடுத்துக் காட்டு:–ஹலாயுத
அஸ்வ (ன்) – என்ற பெயரில் முடிபவை; 5 எடுத்துக் காட்டு:–பிருஹதஸ்வ
மானன் – என்ற பெயரில் முடிபவை; 5 எடுத்துக் காட்டு:–அன்சுமான
வான (ன்) – என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– ருமன்வான
தேவ – 8; சஹதேவ
ஜய – 6
வசு -5
இப்படி பல பெயர்களை வைத்து ஆராயலாம். ரிக் வேத கால ரிஷிகளின் பெயரில் அயன என்று முடிவோர் பெயர்களே அதிகம். பிற்காலத்தில் இது அருகிப் போய்விட்டது.

கால வாரியாக, புத்தக வாரியாக பெயர்களைத் தொகுத்து ஒப்பீட்டால் பல விடுகதைகளுக்கு விடை கிடைக்கும்.
–சுபம்–

என்னுடைய முந்தைய 30 கட்டுரைகள்: Read my other 30 posts on Indus:

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)

‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
பதி – வதி — மதி சிந்து சமவெளியில் உண்டா? அக்டோபர் 20, 2014
ரிக்வேதத்தில் ஹரப்பா நகரம் – நம்பர் 1. 2014
சிந்துசமவெளி பாடகர்கள்: ஹாஹா ஹூஹூ — அக்டோபர் 2014
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14

TAMIL-Sindhu samaveli- piramanar thotarpu ((Post No 1033, Date 10-5-14)
Hariyupia-harappa posted 30-10-14
Indus Valley-Brahmin Connection (Post No 1034, Date 10-5-14)
Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature
Flags: Indus Valley- Egypt Similarity
Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?
Indra on Elephant Vahana in Indus Valley
Indus Script Deciphered

Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012
Indus Valley Cities in Ramayana Dec.18, 2012
Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013
Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014
Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013
‘Sex Worship’ in Indus Valley

Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)
The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012
Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14
Indus Valley Civilization- New Approach , posted on May 29, 2011

contact swami_48@yahoo.com