அதிசயப் பெண்கள்- எட்டு மொழிகளில் 100 கவிகள் – 24 நிமிடங்களில்! (Post No.7667)

Written  by  LONDON SWAMINATHAN

Post No.7667

Date uploaded in London – 8 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஒரு கடிகை என்பது 24 நிமிஷங்கள். அந்த நேரத்தில் எட்டு மொழிகளில் 100 கவிதைகளை –  செய்யுட்களை – எட்டுக் கட்டுவோரை ‘சத லேகினி’ என்பர். அப்படிப்பட்ட திறமையான பெண்கள் நாயக்கர் ஆட்சியில் இருந்தனர். மதுரவாணி, ராமபத்ராம்பா , முத்து பழனி, ரங்க ஜம்மா என்போர் விஜய நகர மற்றும் நாயக்கர் ஆட்சியில் பெரும் சாதனைகளைச் செய்தனர். அவர்களில் சிலர் ‘அஷ்டாவதானம் செய்தனர். அதாவது ஒரே நேரத்தில் எட்டு காரியங்களைச் செய்து தங்கள் திறமையை வெளிக் கொணர்வர். இவர்களில் ஒரு பெண்மணிக்கு மன்னர் ‘கனகாபிஷேகம்’ செய்து — தங்கக்  காசுகளால் அபிஷேகம் செய்து நாடெங்கும் அறியச் செய்தார் . மன்னருக்கு அந்தப் பெண்கள் மீது இலக்கியக் காதலுடன் உண்மைக்கு காதலும் மலர்ந்தது

இதோ சில சுவையான செய்திகள் –

தஞ்சாவூரிலிருந்து  ஆண்ட நாயக்க மன்னர்களில் ரகுநாத நாயக்கர் மாபெரும் அறிஞர். தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் புலமை மிக்கவர். தெலுங்கில் வால்மீகி சரித்திரம் எழுதினார். கோவிந்த தீட்சிதர் முதலிய பேரறிஞர்களை ஆதரித்தார். அவரது தந்தையான அச்சுத நாயக்கர் பற்றி அச் யுதேந்தாப்யுதயம் என்ற காவியத்தை இயற்றினார். இது தவிர பல சம்ஸ்க்ருத நூல்களையும் இயற்றினார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகள் சிறக்க பேருதவி புரிந்தார்.

ராம பத்ராம்பாவும் மதுரவாணியும் நாயக்க மன்னரின் அன்பிற்குப் பாத்திரமானார்கள் . அவர்களிருவரும் தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் வியத்தகு அறிவு பெற்றிருந்தனர். எட்டு மொழிகளில் கவி புனையும் ‘சத லேகினி’ பட்டம் பெற்றவர் ராமபத்ராம்பா. மன்னரின் காதலி.

அவரைப் போலவே இவரும் ஒரு சம்ஸ்கிருத காவியம் படைத்தார். அதன் பெயர் ரகுநாதாப்யுதயம். அதாவது காதலனும்  மன்னனுமான ரகுநாத நாயக்கர் பற்றியது. இது விஜய நகர ஆட் சியின் இறுதிக்காலம் பற்றி அறிய பெரிதும் உதவும் வரலாற்றுக் களஞ்சியம் ஆகும். ராமபத்ராம்பா எழுதிய ரகுநாத அப்யுதயம் நூலில்  12 காண்டங்கள் உள . அக்கால ராணுவ, அரசியல் எழுச்சிகளைக் கூறும் வரலாற்று நூல் இது. தஞ்சாவூர் பெண்களின் எட்டு மொழிப் புலமையை இவருடைய நூலின் கடைசி இரண்டு காண்டங்களில் காணலாம்.  அந்தப் பெண்மணிகள் வைசேஷிக தத்துவ நூல்களிலும் வல்லவராம்.

மதுர வாணியும் ரகுநாத நாயக்கரின் அவைக்கள புலவர் பெருமக்களில்  ஒருத்தி. சம்ஸ்கிருதம், பிராகிருதம்,தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர்.ரகுநாத நாயக்கர் தெலுங்கில் இயற்றி ராமாயண திலகத்தை இவர் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். இவருக்கு இசையிலும் வீணை வாசிப்பதிலும் அபார புலமை உண்டு. சம கால அறிஞ்ஞர்களின் பாராட்டைப் பெற்றவர். பாணிணீய இலக்கணத்தின் கரை கண்டவர்.

ராமாயண காவ்ய திலகம் 14 சர்க்கங்கள் உடைய நூல்.  இவரைப் பாராட்டி மன்னர் ரகுநாத நாயக்கர் கவிதை மழை  பொழிந்தார்

சாதுர்யமேதி கவிதாஸு சதுர்விதாஸு

வீணா கலா ப்ரகடேன பவதிப் ப்ரவீணா

ப்ரக்ஞாமியம்  நிபுணமஞ்சதி  பாணிணீ யே

மேதாம் வ்யனக்தி  பஹுதா விவிதா வதானே

என்பது ரகுநாத நாயக்க மன்னர் பாடிய புகழ் மாலை.

மதுர வாணியின் புகழ்மிகு சாதனைகள் அவரது ராமாயண காவியத்தின் முகவுரையில் உளது. அவர் அஷ்டாவதானம் மட்டுமின்றி சதாவதானமும் செய்தார் . அதாவது பலர் முன்னிலையிலும் 100 விஷயங்களை நினைவு வைத்துக் கொண்டு கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுப்பார். அவர் வீணையில் இனிமையாக வாசித்ததால் மதுரவாணி பட்டம் பெற்றார். பின்னர் ஆடசி புரிந்த மன்னர் காலத்தில் இவரை ஆசு கவிதாராணி என்று புகழ்ந்தனர் . ஆசு கவி என்றால் நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் ஆற்றல் உடையவர். காளிதாசரின் ரகுவம்ச காவிய நடையைப் பின்பற்றியவர்..


பெண்மணிக்கு தங்க அபிஷேகம்

ரங்க ஜம்மா  என்பவர் பசுபலேட்டி வேங்கடாத்ரியின் புதல்வி. இவர் விஜயராகவ நாயக்கரின் மனைவி. இவரும் எட்டு மொழி கவிதை வித்தகி என்றாலும் காமச் சுவையூட்டும் காவியங்களையே இயற்றினார். மன்னாருதாச விலாசம், உஷா பரிணயம் என்பன இவர் இயற்றிய தெலுங்கு காவியங்கள்.  உஷா பரிணயம் மிகவும் புகழ்பெற்ற தெலுங்கு நூல். சதா சர்வ காலமும் இவருடன் காலம் கழித்த மன்னர், ரங்கஜம்மாவின் புலமையைப் பாராட்டி தங்க  மழை பொழிந்தார். அதாவது அவரை அமரவைத்து தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்தார்.

பெண்களை இந்த அளவுக்கு பகிரங்கமாக உயர்த்திப் பாராட்டியது உலகில் வேறெங்கும் காணாத புதுமை . இது அவளது அழகிற்காக கிடைத்த பரிசன்று . புலமைக்குக் கிடைத்த பரிசு என்பதை அவரது நூல்களை கற்போர் அறிவர். ராமாயண சாரம், பாகவத சாரம், யக்ஷ கான நாடகம் ஆகியனவும் இவரது படைப்புகளாம்.

முத்துப் பழனி

நாயக்க மன்னர்கள் வளர்த்த கலைகளையும் இலக்கியத்தையும் அவருக்குப் பின்னர் தஞ்சசையை ஆண்ட வீர சிவாஜியின் பான்ஸ்லே வம்ச அரசர்களும் பின்பற்றினர் அவர்கள் முயற்சியால் உருவானதே சரஸ்வதி மஹால் நூலகம். பிரதாப சிம்மன் 1739-63, என்ற மன்னரின் அந்தப்புர நாட்டிய தாரகைகளில் ஒருவர் முத்துப் பழனி. வாத்ஸ்யாயனர் எழுதிய சம்ஸ்கிருத காம சூத்திரத்தில் பெண்களுக்கான பாடத்திட்ட சிலபஸில் Syllabus 64 கலைகளின் பட்டியல் உளது. தெலுங்கு, தமிழ்  நாட்டிய தாரகைகள் அனைவரும் இவைகளைக் கற்று மகா மேதாவிகளாக விளங்கினர். முத்துப் பழனி

சம்ஸ்கிருத, தெலுங்கு மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுத்  திகழ்ந்தார். வீணை வாத்தியத்தில் பெரும் திறமை பெற்றவர். ராதிகா சா ந்தவன , அஷ்டபதி ஆகியன  அவர் படைத்த தெலுங்கு நூல்கள். ராதா- கிருஷ்ணர் லீலைகளை வருணிப்பது முதல் நூல். ஜெயதேவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய அஷ்ட பதியை  சுவை குன்றாமல் தெலுங்கில் கூறுவது இரண்டாவது நூல். ஜெயதேவரின் ஒரிஜினல் பாடல் போலவே சிறப்புடையது இது என்பது இசை வாணர்களின் அபிப்ராயம்  ஆகும்.

–subham—

அகர முதல எழுத்து எல்லாம்- எனது முக்கிய ஆராய்ச்சி (Post No.7653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7653

Date uploaded in London – 5 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இறுதியில் வரும் எனது ஆராய்ச்சியினை படிக்கத் தவறாதீர்கள்

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு —  என்று வான் புகழ் வள்ளுவன் மட்டுமா சொன்னார் ? ஏசு கிறிஸ்துவும் சொன்னார்;

அது எப்படி?  எப்படியென்றால் இருவருக்கும் பகவத் கீதை மனப்படமாகத் தெரியும்.

எழுத்துக்கெல்லாம் முதலாவது நிற்பது ‘அ’ என்னும் எழுத்து ; அது போல உலகிற்கெல்லாம் மூல  முதல்வன் இறைவனே! என்பது வள்ளுவனின் முதல் குறள் .அப்படிச் சொல்ல வந்ததையும் முதல் குறளாக வைத்தது வள்ளுவன் ஒரு ஜீனியஸ் — மஹா மேதாவி — என்பதைக் காட்டுகிறது .

Jesus Christ said in the Bible,

‘I am Alpha and Omega, the beginning and the end, the first and the last’- Revelation 22-13

ஏசு கிறிஸ்து நானே ‘ஆல்பா’வும் ‘ஒமேகா’வும் என்று புதிய ஏற்பாட்டில் செப்பினார் . ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் மோசஸுக்கும் முந்திய மொழிகள் என்பதும் தெரியாது.ஏசு பிரானோ எபிரேய/ஹீப்ரு மொழியில் உபன்யாசம் செய்தார்.

வள்ளுவரும் ஏசுவும் இதுபற்றி கதைப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பகவான்  பகவத் கீதையில் ‘அக்ஷராணா ம் அகாரோஸ்மி’ (ப.கீ .10-33)- எழுத்துக்களில் நான் ‘அ’ -காரம் என்று சொன்னார் ; அவர் சொல்லுவது மேற் கூறிய இருவர் செப்பியதைவிட இன்னும் பொருத்தமாக உள்ளது . உலகிலுள்ள உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் இறைவனின் அம்சமே என்று அர்ஜுனனுக்கு விளக்கும்போது ஒவ்வொரு வகையிலும் முதன்மையான சிறந்த பொருளை விளக்குகையில் “காலங்களில் நான் வசந்தம் ,மாதங்களில் நான் மார்கழி , எழுத்துக்களில் நான் ‘அ’ என்று……….. நிறைய சொல்லிக்கொண்டே போகிறார் . இதற்கு மூலம், உபநிஷத்துக்களில் இருப்பதை சுவாமி சின்மயானந்தா  , அவரது பகவத் கீதை பாஷ்யத்தில் எழுதியுள்ளார் .

சுவாமி சின்மயானந்தா மேலும் விளக்குகையில், சம்ஸ்கிருதம் இனிமையான மொழியாக இருப்பதற்கு பெரும்பாலான சொற்களில் ‘அ’ இருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சொல்லை உச்சரிக்க அதில் உயிர் எழுத்து இருப்பது அவசியம் என்பது எல்லா மொழிகளுக்கும் பொது என்றாலும் சம்ஸ்கிருதத்தில் நிறைய சொற்கள் ‘அ’காரத்தில் முடிவது இனிமை சேர்ப்பதோடு சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்கிறார் ; ஒரு ஹாலில் / மண்டபத்தில் சம்ஸ்க்ருத பாடல் அல்லது துதிகள் முழங்கியவுடன் மன அமைதியும் சாந்தமும் ஏற்படுவதை எடுத்துக் காட்டுகிறார்.

வள்ளுவர் ஒரு ‘பக்கா’ ஹிந்து என்று சொல்லும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector General of Police) , தமிழ் அறிஞர் டாக்டர் எஸ் .எம் . டயஸும் (Dr S M Diaz) பகவத் கீதை , பைபிள் , திருமந்திரம் ஆகியவற்றில் ‘அ’ -கரத்தின் பெருமை வருவதை எடுத்துரைத்து மேலை நாட்டு அறிஞர்களும் கூட இந்தப் பிரபஞ்சம் இயங்கவும் நிலை பெறவும் இறைவனே காரணம் என்பதை புகன்றதை எடுத்துக் காட்டியுள்ளார் . சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என் ராமச்சந்திரன் (Dr T N Ramachandran) , அப்பர் பெருமானும் தேவாரத்தில் இதை பாடியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

“ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும்” – அப்பர் தேவாரம்

உலகம் என்னிடம் தோன்றி என்னிடமே முடிகிறது என்று கீதையில் பகவான் சொன்னதையும் (ப.கீ.7-6) டாக்டர் எஸ்.எம் டயஸ் பொருத்தமாகக் காட்டியுள்ளார்.

“அஹம் கருத்னஸ்ய ஜகத: ப்ரபவ: பிரளயஸ் ததா” (BIG BANG THEORY AND BIG CRUNCH THEORY)  (BG.7-6)

xxx

என்னுடைய 50 ஆண்டுக்கால ஆராய்ச்சி

எனக்கு வயது 72 ஆகப்போகிறது. அந்தக் காலத்தில் காஞ்சி பரமாசார்ய (1894-1994)  சுவாமிகளின் உபன்யாசங்களை காமகோடி மடத்தினரே வெளியிட்டனர். அதில் அவர் சொற்கள் பற்றி ஆற்றிய சொப்பொழிவைப் படித்த காலத்தில் இருந்து ஆராயத்  தொடங்கி 50 ஆண்டுகளில் சில முடிவுகளைக் கண்டேன்.

உலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம். அதன் முதல் துதியில் முதல்  மந்திரம் ‘அக்நி மீளே’ என்று அ–கரத்தில்தான் துவங்குகிறது; அதே போல இறுதி மந்திரமும் அக்கினி பகவானுக்கே!!  .

உலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’ ; அதன் ஒரு பகுதியான மகேஸ்வர சூத்திரத்தில் சிவன் உடுக்கையில் எழுந்த முதல் ஒலி ‘அ’ – தான்

சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது ; அதில் தமிழ் மொழியில் உள்ளதை போல ஒரு விதி உளது.

அதாவது ஒரு நூலை மங்களச் சொல்லுடன்தான் துவங்க வேண்டும் ; அதனால்தான் ரிக் வேதமும் திருக்குறளும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்குகிறது. சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் ‘அத’ என்றோ ‘ஓம்’ என்றோ நூலைத் துவக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .

வேத மந்திரங்கள் அனைத்தும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் துவங்குவதாகக் கொண்டாலும் ‘ஓம்’ என்பது  ‘அ +உ +ம’ என்பதன் வடிவமே என்பதை இரு மொழியினரும் ஒப்புக்கொள்வர் . ஆக இந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் ‘அ’  என்பதே முதல் எழுத்து என்பதை ரிக் வேத காலம் முதல் காண்கிறோம்

சம்ஸ்கிருதம் கற்கப் போகும் ஐந்து வயது மாணவனுக்கு பாடசாலையில் கற்பிக்கப்படும் முதல் இலக்கணம் ‘அகாரந்த புள்ளிங்கஹ ராம சப்தஹ’ — என்று ‘அ’ வில் துவங்கும். இதற்குப்பின்னர் உலகில் தோன்றிய முதல் நிகண்டான அமர கோசத்தை மனப்பாடம் செய்ய வைப்பர் ; அதை எழுதியவர் ‘அ’மரஸிம்மன் ; நூலின் பெயர் ‘அ’மர கோஸம் ; இரண்டும் ‘அ’ – வில் துவங்கும் பெயர்கள்!!

வேறு யாரும் செய்யாத ஒரு ஆராய்ச்சியினை நான் செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கும் எழுதினேன்.அதாவது தமிழுக்கு மிக நெருங்கிய மொழி என்பது சம்ஸ்கிருதம் ஒன்றுதான். திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்கிருதம் எந்த மூலத்திலிருந்து வந்ததோ அதே மூலத்தில் இருந்து வந்ததுதான். சிவனின் உடுக்கையின் ஒரு பகுதியிலிருந்து சம்ஸ்கிருதமும் மற்ற ஒரு  பகுதியிலிருந்து தமிழும் வந்ததென ஆன்றோரும் செப்புவார்கள் . இதனால்தான் வடக்கே இமய மலையில் இருந்த அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார். இதை பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் பாடிவைத்தனர். புறநானுற்றில் ஒரே பாட்டில் ‘பொதியமும் இமயமும்’ என்ற சொற்றோடர் வருவதற்கும் இதுவே காரணம் . ஒவ்வொரு நூலின் பாடற் முதல் குறிப்பு பகுதியைப் பார்த்தபோது எனக்கு ஒரு வியப்பான உண்மை புலப்பட்டது. அதாவது ‘அ’ என்னும் குறில் (short vowel) எழுத்தில் அதிகமான பாடல்கள் இருக்கும். அடுத்துவரும் ‘ஆ’ என்னும் எழுத்தில் (long vowel) குறைவான பாடல்களே வரும் . ஐ , அவ் (Diphthongs I and Au) என்னும் எழுத்துக்களில் பாடல்கள் துவங்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். இதுதவிர உயிர் எழுத்துக்களில் (Vowels) துவங்கும் பாடல்களே அதிகம் இருக்கும் . இதன விகிதாசாரம் கூட தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஒரே மாதிரி இருக்கும் .இத்தோடு சந்தி இலக்கணம் இன்றுவரையுள்ள இரண்டே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும் என்பதையும் நோக்கும்கால் திராவிட மொழிக்கு குடும்பம்- ஆரிய மொழிக் குடும்பம் என்று சொல்வது தவறு . என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்;  ஏறத் தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூலத்தில் இருந்து இரு மொழிகளும் தனித்தனியே வளர்ந்தன; ஆயினும் அதன் கட்டமைப்பு (Morphological and anatomical structure) ஒன்றே. கீழேயுள்ள கீதை , குறள் துவக்க வரிகளை மட்டும் பாருங்கள். கிருஷ்ணரிடமோ வள்ளுவரிடமோ யாரும் போய் நீங்கள் ‘அ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் ‘ஆ’  என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள்! என்று சொல்லவில்லை .ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள் என்பதால் அது இயல்பாகவே அமைகிறது . ‘சந்தி’ இலக்கணமும் இன்று வரை இவ்விரு மொழிகள் மட்டும் கடைப்பிடிப்பதற்கும் அதற்கென்றே இலக்கணப் புஸ்தகத்தில் விதிகள் இருப்பதும் நான் சொல்வதை நிரூபிக்கும்.

ஆராய்ச்சி முடிவு-

திராவிட, ஆரிய மொழிக்கு குடும்பங்கள் என்ற பிரிவினை தவறு; இந்திய மொழிக்குடும்பம் என்பதன் இரு பிரிவுகளே தமிழும் சம்ஸ்கிருதமும் . இரு மொழிக் குடும்பத்தினரும் அருகருகே வசித்ததால் ஒன்றின் தாக்கம் (Proximity)  மறறொன்றின் மீது வரும் என்ற வாதம் இங்கே பொருந்தாது.

காரணம் ?

மொழியின் உள் அமைப்புக்குள் (internal structure)  உள்ள , கட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமைகள் இவை !!

எனது இரண்டாவது ஆராய்ச்சி முடிவு!

இதுவரையும் யாராலும் படித்தறிய முடியாத (Undeciphered Indus Script) சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீக  எழுத்துக்களை எவரேனும் படித்து, உலகமே அதை ஒப்புக்கொண்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளவோம் . அப்போது நான் மேலே கண்டபடி ‘அ ‘- காரத்தில் துவங்கும் சொற்களோ ஒலியோதான் அதிகம் இருக்கும் . ‘ஆ’ என்னும் நெடிலில் துவங்குவது குறைவாக இருக்கும் . நான் சொல்லும் அணுகு முறைப்படி அணுகினால் சிந்துவெளி முத்திரைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் வடிவை ‘அ’ என்ற எழுத்தாகவோ (letter or sound) ஒலியாகவோ  உச்சரிக்கலாம் .

இனி எழுதும் புத்தகங்களில் ஆரிய – திராவிட மொழிக் குடும்பம் என்பதை நீக்கிவிட்டு இந்திய மொழிக் குடும்பத்தின் இரு பிரிவுகள் தமிழும் சம்ஸ்கிருதமும் என்று காட்ட வேண்டும் . உலகம் முழுதும் சென்ற இந்தியர்கள் மொழியையும் நாகரிகத்தையும் பரப்பினர் என்றே கொள்ள வேண்டும்

மனிதர்கள் தோன்றியது ஆப்பிரிக்க கண்டம் என ஒப்புக்கொண்டாலும் நாகரீகம் தோன்றியது பாரத பூமியே என்பதை நிரூபிக்கலாம் .

‘பாரத பூமி பழம்பெரும் பூமி’, ‘பாரத நாடு பார்க்கெலாம் திலகம்’ என்று பாரதியார் சொன்னது வெறும் புகழுரை அல்ல; என்றும் அழியாத மஹத்தான உண்மை !

திருக்குறளில் ‘அ எழுத்தில் துவங்கும் குறள்கள் — 157

பகவத் கீதையில் ‘அ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் – 97

திருக்குறளில் ஆ’ எழுத்தில் துவங்கும் குறள்கள் –23

பகவத் கீதையில் ‘ஆ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –17

திருக்குறளில் ‘இ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 114

பகவத் கீதையில் ‘இ’  எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –21

திருக்குறளில்  ‘ஈ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 8

பகவத் கீதையில் ‘ஈ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –1

திருக்குறளில் ‘உ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்-81

பகவத் கீதையில் ‘உ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –9

திருக்குறளில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்– 21

பகவத் கீதையில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –2

திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள்;

பகவத் கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள்.

இந்த இரண்டு நூல்களும் எடுத்துக் காட்டுகளே .

கம்ப ராமாயணத்திலும் இதைக் காணலாம்; காளிதாஸனிலும் இதைக் காணலாம் ; திவ்யப் பிரபந்தத்திலும் இதைக் காணலாம் ; தேவாரத்திலும் இதைக் காணலாம்!!

ஒரு அற்புதமான (wonderful pattern) பாணியைக் காண்கிறோம் .

குறில் என்றால் அதிகம்;

நெடில் என்றால் குறைவு .

உலகில் பழைய மொழிகளில் வேறு எங்கும் காண முடியாது .

அது மட்டுமா ? பழங்கால மொழிகளில் நம்மைப் போல அ ஆ இ ஈ ……………. க ச ட த ப ற …………. ய ர ல வ ………… வரிசையும் கிடையாது. அப்படி அகர வரிசையோ கொஞ்சம் சந்தியோ இருந்தால், அவை நமக்குப்  பின்னால் பிறந்த அல்லது நமது செல்வாக்கிற்கு உட்பட்ட மொழியாக இருக்கும்!!

Tags – அகர முதல, நெடில் , குறில், திருக்குறள் , பகவத் கீதை , அ -காரம்

வாழ்க சம்ஸ்கிருதம், வளர்க தமிழ்

–subham–

கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள் (Post No.7592)

When i went to Greece, i visited the historical island Santorini. I took this picture in Santorini.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7592

Date uploaded in London – 19 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

தம்பதி என்ற சொல் வேதத்தில் வருகிறது. இதன் சம்ஸ்கிருதப் பொருள்- கணவனும் மனைவியும் குடும்பத்தின், வீட்டின் கூட்டுச்  சொந்தக்காரர்கள் என்பதாகும். இதை விளக்கும் வகையில் சிவனும் உமையும் அர்த்தநாரீஸ்வரர்  வடிவத்தில் காட்டப்பட்டுள்ளது  . அதாவது உறவினில் ல் 50-50; உரிமையில் 50-50. tamilandvedas.com, swamiindology.blogspot.com

தம்பதி – ரிக் வேதம் 8-31-5/6

யா தம்பதி சமனஸா சுனுதா அ ச

தாவள: தேவஸோ நியயாசிர்

Xxx

இல்லாள், இல்லத்தரசி

Picture card bought in Athens Museum

தமிழில் இல்லாள், இல்லத்தரசி என்றெல்லாம் சொல்கிறோம். இதுவும் தமிழில் வருவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரிக்வேதத்தில் உள்ளது. கல்யாண மந்திரங்களில் ‘நீயே வீட்டுக்கு ராணி’ என்று வருகிறது.

சங்க இலக்கியப்  பாடல்களில் மனைவியை ‘குடும்ப விளக்கு’ என்று அற்புதமாக வருணிக்கிறரர்கள் .

ரிக் வேதம் (3-53-4) மனைவியே வீடு என்கிறது.

கிருஹம் என்றால் வீடு/ இல்லம். கிருஹிணி  என்றால் வீட்டுக்காரி , இல்லாள் , இல்லத்தரசி ; அதாவது இல்லத்தை ஆள்பவள். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இந்தக்கருத்து அப்படியே இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே அணுகுமுறை, ஒரே பண்பாடு என்பதைத் தெள்ளிதின் tamilandvedas.com, swamiindology.blogspot.com

விளக்கும்.

Xxx

மணப் பெண்

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்ட வேண்டும் . ‘வது’ என்ற சொல் சம்ஸ்கிருதத்தில் மணப் பெண் என்ற பொருளிலும் வரும். சங்கத் தமிழ் பாடல்களிலும் இந்த ரிக் வேதச்  சொல் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

Xxx

தொழிற்சாலைகளில் பெண்கள்

துணி நெய்தல், நூல் நூற்றல் ஆகிய தொழில்களில் வேதகாலப் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வியப்பா ன விஷயம் அவர்கள் போர்க் கருவி செய்யு ம் ஆலைகளிலும் வேலை பார்த்ததை ‘இஷு கர்த்ரயாக’ என்ற சொல் காட்டுகிறது.

வேத காலத்தில் ‘பர்தா’ முறை கிடையாது. இதை பாரதியார் பாடலிலும் வலியுறுத்துகிறார். இது தில்லித் துருக்கர் (துலுக்கர்) செய்தவழக்கமடி என்று சாடுகிறார். துலுக்கர் என்று பாரதியார்  எழுதியதை சில தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி துருக்கர் என்று மாற்றியதாக எங்கள் தமிழ் குருநாதர் , மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் வி.ஜி.சீனிவாசன் சொல்லி tamilandvedas.com, swamiindology.blogspot.com வருத்தப்படுவார்.

xxx

கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.

Picture card from Athens Museum

வேதம் தோன்றிய சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க மொழியில் ஹோமர் என்னும் அந்தகக் கவிராயர் (Blind Poet Homer) இலியட், ஆடிஸி என்ற இரு பெரும் காவியங்களை எழுதினார்.

அதில் அக்காலப் பெண்கள் எப்படி  நடத்தப்பட்டனர் என்று வருகிறது. ஒரு மன்னர் வேற்று நாட்டை வென்றால் அந்த நாட்டிலுள்ள பெண்களை  வீரர்கள்  அ னைவரும்  பகிர்ந்து கொள்ளலாம். “வாருங்கள் வீரர்களே, அணி திரண்டு வாருங்கள். நாம் வெற்றி பெற்று வேற்று நாட்டுப் பெண்களை பகிர்ந்து கொள்வோம்” என்று ஹோமர் அறைகூவல் விடுக்கிறார். இந்து மன்னர்கள், வேற்று நாட்டு செல்வங்களைப்  பகிர்ந்து கொள் வார்கள். ஆனால் பெண்களை மதிப்புடன் நடத்துவர். வீர சிவாஜி முஸ்லீம் மகளிரை எவ்வளவு மதிப்புடன் நடத்தினார் என்பதை நாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com அறிவோம்.

வேதத்தில் சில பாடல்களை சகோதர -சகோதரி திருமணம் நடந்ததாக சிலர் சித்தரிப்பர். எகிப்தில் இவ்வழக்கம் இருந்தது. தமிழ் நாட்டில் இப்போது காணப்படும் அத்தை மகன், மாமன் மகள் கல்யாணத்தையும்  ஆங்கிலேயர் ‘கஸின் மேரியேஜ்’ (Cousin Marriage) என்றே சொல்லுவர்; அதாவது ‘ஒன்றுவிட்ட சகோதரர்’ என்னும் பொருள். இது வேதகாலத்தில் இருந்திருக்கலாம். கிருஷ்ணர் விஷயத்திலும் இதைக் காண்கிறோம். அதாவது உறவு முறைத் திருமணம்- முறைப் பெண் கல்யாணம்.

கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறுவது பிற்கால வழக்கம். புற  நானுற்று பாடலில் பாண்டிய ராணி பூதப்பாண்டியன் தேவி இப்படி உடன்கட்டை ஏறிதைக் காண்கிறோம். வேதகாலத்தில் இது குறைவு . அதற்குப் பதிலாக இறந்து போன கணவரின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்பான் . இந்த வழக்கம் யூதர்களிடையேயும் tamilandvedas.com, swamiindology.blogspot.com இருந்தது.

பார்ஸி மதத்தினரின் வேத நூலான ஜெண்ட் அவஸ்தா(Zend Avesta) கணவனுக்கு கீழ் படிந்து பெண்கள் நடக்க வேண்டும் என்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதிய டாக்டர் ராதாகிருஷ்ணன் , டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் போன்ற பேரறிஞர்கள் வேத காலப் பெண்கள் வாழ்வே சிறந்தது என்று உறுதிபடப் tamilandvedas.com, swamiindology.blogspot.com பேசுகிறார்கள்

Source book –  Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )

xxx

இந்தியர்களை வியக்கவைத்த முஸ்லீம் ராணி! (Post No. 7577)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7577

Date uploaded in London – 15 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இந்தியாவை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண்மணி நூர் ஜஹான் (Nur Jahan) . மொகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கிரின் மனைவி. முக அழகு, வசீகரம், ஆளும் திறமை, புதுமை விரும்பி, கண்டுபிடிப்பாளர் , அதிர்ஷ்டம் ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாக உருவம் எடுத்து வந்தவர் புதுவகை உணவு, . பலவகை பாஷன்  ஆடைகள், ரோஜா மலர் அத்தர் ஆகியவற்றைக் கண்டுபிடித்த பெருமை உடையவள். ஏராளமான ஆங்கில புத்தகங்களின் கதாநாயகி. இவ்வளவுக்கும் இந்தியர் அல்ல. அவள் ஒரு பாரசீக ரோஜா.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதோ சுருக்கமான கதை –

பாரசீகம் என்ற நாட்டின் தற்கால பெயர் ஈரான் (Persia= Iran). உலகில் எவருக்கேனும் துன்பம் நேரிட்டால் அவர்கள் மன நிம்மதி பெறுவதற்கு அடைக்கலம் புகும் நாடு இந்தியா. பாரஸீகத்தில் மிர்ஜா கயாத் பேக் என்பவர் புகழ்மிகு குடும்பத்தில் பிறந்த செல்வந்தர். பாரசீகத்தில் முஸ்லிம்களின் கொடுமைகள் அதிகரிக்கவே குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இவை எல்லாம் 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. சம்ஸ்கிருத இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் பெரிய வணிகர் கூட்டம், ஒரு சார்த்தவாகன் தலைமையில் ஊர் ஊராக , நாடு நாடாகச் செல்லும். சிலப்பதிகாரத்தில் கூட கோவலன் தந்தை மாசாத்துவானைப் பார்க்கலாம். நளனின் மனைவியான தமயந்தி கூட  ஒரு வணிகக் கும்பலுடன் சேர்ந்து கொண்டு காட்டுப்பாதையைக் கடந்து வந்ததை படிக்கிறோம். இதே போல மிர்ஜா பேக் தனது மகள் நூர் ஜஹான், மனைவி, பிள்ளைகள் ஆகியோருடன் பிரபல வணிகர் தலைவனான, மா சாத்துவன் ஆன, மாலிக் மசூத் வணிகர் குழுவுடன் பாதுகாப்பாக புறப்பட்டார். அந்தக் குழு இந்தியா வந்து சேர்ந்தது tamilandvedas.com, swamiindology.blogspot.com

 .

அப்போது இந்தியாவை மொகலாய மன்னர் அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். நூர் ஜஹானையும் மிர்ஜா பேக்கையும் அழைத்து வந்த மாலிக்கிற்கு அரண்மனையில் உள்ள பலரைத் தெரியும் . ஆகையால் நூர்ஜஹானின் தந்தையான மிர்ஜா பேக்கையும் சகோதரர்களையும் ஆக்ராவிற்கு அழைத்துச் சென்று அக்பர் முன்னிலையில் பிரசன்னமானார். உடனே அக்பரும் அவர்களுக்கு அரண்மனையில் சேவகம் செய்ய சில பணிகளைக் கொடுத்தார்.

அப்போதிலிருந்து நூர் ஜஹானின் வாழ்க்கை  பட்டம் போல உயர, உயர,மேலே சென்று, பட்டொளி வீசி பறக்கத் துவங்கியது. அவள்  அடிக்கடி அம்மாவுடன் அரண்மனைத் தோட்டத்தில் உலவ வருவாள் . அழ கா ளும் அறிவாலும் அனைவரையும் கவர்ந்தாள் . அக்பரின் மகன் இளவரசன் சலீம் அவளைக் கண்டவுடன் காதல்  கொண்டான் . சலீமின் பிற்காலப் பெயர் ஜஹாங்கிர். ஆயினும் விதி வசம் வேறு மாதிரி இருந்தது  17 வயதான போது,நூர் ஜஹான் , பர்த்வான் கவர்னரான ஷேர் ஆப்கான் கானுக்கு மனைவியானாள்.

அக்பர்  இறந்த பின்னர்,   இளவரசர்  சலீம், ஜஹாங்கிர் என்ற பெயரில் 1605ல் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யத்தின் மன்னர் ஆனார். தன்  தம்பியை அனுப்பி ராஜத் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டி  நூர்ஜஹானின் கணவரைக் கைது செய்ய அனுப்பினார். நூர்ஜஹானின் கணவரான ஷேர் ஆப்கான் கான் அவசரப்பட்டு கத்தியை  சுழற்றவே, ஜகாங்கீரின் ஆட்கள், அவர் மீது பயந்து,  அவனைக் கண்டம் துண்டமாக வெட்டிவிட்டு நூர்ஜஹானைப் பிடித்துவந்து ஜஹாங்கிர் முன்னிலையில் விட்டனர். இதற்கு 4 ஆண்டுகளுக்குப்  பின்னர், நூர்ஜஹானுக்கு 34 வயதானபோது, ஜஹாங்கிரின் மனைவி ஆனாள்.

நூர் ஜஹானுக்கு ஜஹாங்கீர், முதலில் ‘நூர் மஹால்’ – அரண்மனையின் ஒளி விளக்கு – பட்டம் அளித்தார். பின்னர் ‘நூர் ஜஹான்’–  உலகத்தின் ஒளி விளக்கு— என்ற பட்டங்களை அளித்தார். ஜஹாங்கீருக்கு குடிபோதை பழக்கம் இருந்ததால் சுகபோக வாழ்க்கையில் மூழ்கி முழுப் பொறுப்பையும் நூர் ஜஹானிடம் விட்டார். அவள் 11 ஆண்டுகளுக்கு அக்கால உலகின்  மிகப்பெரிய சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யத்தைத் திறம்பட ஆண்டார். சகல கலா வல்லி  ஆனார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

ஒருகாலத்தில் ஜஹாங்கீர் வெளியிட்ட நாணயத்தில் பின்கண்ட வாசகம் காணப்படுகிறது-

ஜஹாங்கிரின் கட்டளையின் பேரில்

தங்கத்துக்கு நூறு மடங்கு மதிப்பு

அதிகரித்துவிட்டது . சக்ரவர்த்தியின் மனைவி

நூர்ஜஹானின் பெயர் அதில் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது மனைவியின் பெயரால் தங்கத்துக்கு 100 மடங்கு மதிப்பு அதிகமாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரோஜா மலரில் இருந்து அத்தர் எடுப்பதை  நூர்ஜஹான் கண்டுபிடித்தார். புதுவகை உணவு வகைகள், பாஷன் உடைகளைக் கண்டுபிடித்தார். துப்பாக்கி ஏந்தி ஒரே நேரத்தில் 4 புலிகளைச் சுட்டார் . இப்படி அவளுடைய வீர தீர செயல்கள் பற்றி பெரிய பட்டியலே இருக்கிறது . ஒரு முறை அரண்மனையிலிருந்து இவர் விட்ட அம்பு, ஆற்றங்கரை வண்ணானைக் கொல்லவே , வண்ணாத்தி ஓவென்று கதறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தாள் . நூர்ஜஹான், சாதாரணக் குற்றவாளி போல ராஜ சபைக்கு இழுத்து வரப்பட்டாள் . பின்னர் என்ன? மஹாராணி ஆயிற்றே , மன்னிப்பு, நஷ்ட ஈடு என்று கதை முடிந்தது. முஸ்லீம் மன்னர்கள், மனு நீதிச் சோழர்கள் அல்லவே tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

நூர்ஜஹான் 4 புலிகளைச் சுட்டுக்கொண்றதைக் கேள்விப்பட்டவுடன் அவளுக்கு ஜஹாங்கிர் ஒரு லட்ச ரூபாய்  மதிப்பில்  வைர மோதிரம்  பரிசளித்தார். இன்றைய விலையில் பத்து கோடி இருக்கலாம். ஆயிரம் ஏழைகளுக்குத் தங்கக் காசுகளையும் விநியோகித்தார். நூர்ஜஹானுக்கும் தர்ம கைங்கர்யங்களில் பிரியம் உண்டு

காலம் செல்லச் செல்ல நுரஜஹானுக்கு கஷ்டகாலம் துவங்கியது ஜஹாங்கிரின் மூத்த மகன் பெயர் இளவரசன் (Prince Khurram) குர்ரம் . இவனுடைய பிற்காலப் பெயர் சக்ரவர்த்தி ஷாஜஹான். இவனுக்குப் பேரழகி மும்தாஜ்மஹாலைக் கல்யாணம் செய்துவைத்த ஆசப்கான் ஷாஜஹானுக்கு முழு ஆதரவு தந்து தனது மருமகன் அரசுக்கட்டில் ஏறும் நாளைக் கனக்குப் போட்டுக்கொண்டிருந்தான். நூர்ஜஹான் வேறு  கணக்குப்போட்டாள் . தனது முதல் கணவர் மூலம் பிறந்த பெண்ணை மணந்த, ஜஹாங்கிரின் இளைய மகன் ஷாரியார் சிம்மாதனம் ஏற திட்டம் தீட்டினாள் . புரட்சி tamilandvedas.com, swamiindology.blogspot.com வெடித்தது.

போரும் தொடர்ந்தது. காபூல் நகர கவர்நர் பதவி வகித்த மஹாபாத் கான் உதவியுடன் புரட்சியை ஒடுக்கினாள் நூர்ஜஹான்.

காலப் போக்கில் நடந்த கசமுசாவில் அதே மஹாபத் கான், அரசுக்கு எதிராகத் திரும்பி, ஜஹாங்கிரையும் நூர்ஜஹானையும் சிறைப்பிடித்தான் . நூர் ஜஹான் தப்பிச் சென்று பெரும்படை திரட்டி வந்தாள் . வில்லாதி வில்லியான அவள் யானை மீது ஏறி, பிரவாஹம் எடுத்து வந்த நதியில் இறங்கி அக்கரை சேர்ந்தாள் . ஆனால் அவளைத் தொடர்ந்து வந்த படைகள் பின்தங்கின. மஹா பாத் கான் அவளை மீண்டும் சிறைப்பிடித்தான். பின்ர் அவள் பெண்களுக்கே உரித்தான சாதுர்யங்களைப் பயன்படுத்தி தன்னையும் கணவர ஜஹாங்கிரையும் tamilandvedas.com, swamiindology.blogspot.com

விடுவித்துக் கொண்டார்.

குடிப்பழக்கத்தால் உடலைப் பலவீனமாக்கிக் கொண்ட ஜஹாங்கிர் காஸ்மீரிலிருந்து லாகூருக்குச் செல்லும் வழியில் 1627ல் மரணம் அடைந்தார். குர்ரம் என்ற ஷா ஜஹான்  பதவி ஏற்றார். ஆயினும் நூர்ஜஹானை அன்போடு நடத்தினார் . அவளுக்கோ வாழ்க்கை வெறுத்துவிட்டது. தனிமையில் வாடினார் .பழங்காலத்தில் நடந்த  புகழ்மிகு நிகழ்வுகள் மனதில் நிழல் ஆட வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடியது .,கணவன் இறந்த 19 ஆண்டுகளுக்குப் பின்னர், 1646ல் , அவளுடைய 72ஆவது வயதில் உயிர்நீத்தாள் . லாகூரில் தனது கணவருக்காக மிக அழகான பூந்தோட்ட சமாதியை அமைத்திருந்தார் . அதற்குச் சற்று தொலைவில் இவளது உடலும் அடக்கம் செய்யப்பட்டது..

அதில் எழுதப்பட்டுள்ள சோகமயமான  வாசகம் செப்புவது யாதெனில் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ,தனிமையான எனது கல்லறையில் ரோஜாக்கள் மலராது;

இசை பாடும் குயில்கள் சங்கிதம் இசைக்காது;

இருள் அகற்றும் நட்புறவு  ஒளிவீசும் விளக்குகளும் ஒளிராது;

அதில் சிறகு எரித்து விழுவதற்காக  விட்டில் பூச்சிகள் கூட வாராது..

முடி சார்ந்த மன்னரும் பின்னர்ப்  பிடி சாம்பராய்ப் போவார்கள் என்றாலும், இந்திய வரலாற்றில் அழியாத சுவடுகளை பதித்து விட்டாள் ‘பாரசீக ரோஜா’ –ராணி.நூர் ஜஹான்

Tags —  நூர் ஜஹான், முஸ்லீம் ராணி, மொகலாய, ஜஹாங்கிர் , ஷா ஜஹான்

–subham—

வேதத்தில் இரண்டு வகைப் பெண்கள் (Post No.7569)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7569

Date uploaded in London – 13 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

வேத காலம் என்பது புத்தருக்கு முந்தைய சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆகும் . இக்காலத்தில் பெண்களுக்கும் பூணுல் அணிவித்தனர். அதாவது முதல் மூன்று வருண மக்களுக்கு வேதம் கற்கும் உரிமை இருந்தது. பெண்களில் சிலர் திருமணம் செய்து இல்லறத்தில் நுழைந்தனர் . இன்னும் சிலர் ஆன்மீக நாட்டம் கொண்டு இறுதி வரை வேதக் கல்வி கற்று, வாதப்  பிரதிவாதங்களில் பங்கு கொண்டனர்.

அக்காலத்தில் புகழ் பெற்ற யாக்ஞவால்கிய  மகரிஷியை கேள்வி கேட்க யாரும் முன்வராதபோது , எல்லோரும் பயந்தபோது, கார்கி வாசக்னவி என்ற பெண் மட்டுமே கேள்வி கேட்டாள் . இது நடந்தது அகில இந்திய தத்துவ பேரறிஞர் மகாநாட்டில். 2800 ஆண்டுகளுக்கு முன்னர் பீஹார் மாநிலத்தில் இப்படி ஒரு அனைத்திந்திய மாநாடு நடந்த செய்தியையும். அதில் பெண்களும் பங்கு கொண்ட செய்தியையும், அதில் வெற்றி பெற்றவருக்கு ஆயிரம் பசுமாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்ட தங்கக்  காசுகள் பரிசாகக் கிடைத்த செய்தியையும்  பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத் நமக்குத் தெரிவிக்கிறது.

Xxx

மேலும் சில வியப்பான செய்திகள் வேதகால இலக்கியத்தில் கிடைக்கிறது. யாக குண்டங்கள் அமைக்கும்போது முதல் செங்கலை வைத்து துவக்க விழா நடத்தும் உரிமை பெண்க ளுக்கே இருந்தது.

சீதா , ருத்ர என்னும் அறுவடை , நிலம்  தொடர்பான யாக யக்ஞங்களை பெண்கள் மட்டுமே செய்தனர்.

சமான’ என்னும் விழாக்களில் பெண்களே அவர்களுடைய கணவரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கமும் இருந்தது. பிறகாலத்தில் வந்த எண்வகைத் திருமண முறையிலும் காதல் திருமணம் அனுமதிக்கப்பட்டதை மநு நீதி நூலும், தொல்காப்பியமும் செப்புகின்றன

1.கல்யாணம் ஆகும் வரை படித்துக்கொண்டிருந்த பெண்களை ‘சத்யோத்வாஹா’ என்று அழைத்தனர் ;

2.கல்யாணமே செய்துகொள்ளாமல் சாகும் வரை சாகாக் கல்விகற்ற பெண்களை ‘பிரம்மவாதினி’ என்று  அழைத்தனர்.

இங்கே இரண்டு சுவையான செய்திகளை சொல்லவேண்டும்.

1. படித்த பெண்களுக்கு நல்ல கணவர்கள் கிடைத்த செய்தி ; அதர்வண வேதத்தில் ஒரு மந்திரம் வருகிறது 11-5-18,

‘வேதம் கற்கும் மாணவிகளுக்கு இளம் வயது ஆண்கள் கண வர்களாக வருவர்’  – என்கிறது அந்த மந்திரம். அதாவது பெண்கள் கற்றால், வாழ்க்கையில்  நல்ல நிலைமையை அடையலாம் என்பது இங்கே தொனிக்கிறது.  இரண்டாவது சுவையான செய்தி வணங்குதற்குரிய பெரியோரின் பெயர் வரிசையில் பெண்களின் பெயர்களும் இருக்கின்றன.

பிரம்ம யக்ஞத்தின்போது அஞ்சலி செலுத்தப்பட வேண்டியவர்களின் பெயர்களில் கார்கி வாசக்னவி, வடவா ப்ரா திதெயி, சுலபா மைத்ரேயி ஆகியோரின் பெயர்களும் உள்ளன. இதை ஆஸ்வலாயன கிருஹ்ய சூத்ரத்தில் காண்கிறோம் 3-4-4

சுருக்கமாகச்  சொல்ல வேண்டுமானால் , ஆசிரியர்களாகவும், தத்துவ வித்தகர்களாகவும் பட்டிமன்ற ராணிகளாகவும் வேத காலப்  பெண்கள் திகழ்ந்தனர். ரோமானிய, கிரேக்க சாம்ராஜ்யப் பெண்களைவிட மிக உன்னத நிலையில் இருந்தனர் என்பதைத் தயக்கமின்றி முரசு கொட்டலாம்..

ரிக்வேதத்திலேயே லோபாமுத்ரா, அபாலா , விஷ்வாவாரா , சிகதா, நிவாவரி , கோஷா ஆகியோர் யாத்த கவிதைகள் பெண்களின் அறிவுக்கு ‘ஆயிரம் வாட் பல்பு’  வெளிச்சம்  போட்டுக் காட்டுகின்றன.

Source book –  Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )

கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.

தம்பதி என்ற சொல் வேதத்தில் வருகிறது. இதம் சம்ஸ்கிருதப் பொருள்- கணவனும் மனைவியும் குடும்பத்தின், வீட்டின் கூட்டுச்  சொந்தக்காரர்கள் என்பதாகும். இதை விளக்கும் வகையில் சிவனும் உமையும் அர்த்தநாரீஸ் வரர்  வடிவத்தில் காட்டப்பட்டுள்ளது  . அதாவது உறவினில் ல் 50-50; உரிமையில் 50-50.

தம்பதி – ரிக் வேதம் 8-31-5/6

யா தம்பதி சமனஸா சுனுதா அ ச

தாவள: தேவஸோ நியயாசிர்

Xxx

தமிழில் இல்லாள், இல்லத்தரசி என்றெல்லாம் சொல்கிறோம். இதுவும் ரிக்வேதத்தில் தமிழில் வருவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உள்ளது.கல்யாண மந்திரங்களில் நீயே வீட்டுக்கு ராணி என்று வருகிறது.

சங்க இலக்கியப்பாடல்களில் மனைவியை குடும்ப விளக்கு என்று அற்புதமாக வருணிக்கிறர்ர்கள் .

ரிக் வேதம் (3-53-4) மனைவியே வீ டு என்கிறது.

கிருஹம் என்றால் வீடு/ இல்லம். கிருஹிணி  என்றால் வீ ட்டுக்காரி , இல்லாள் , இல்லத்தரசி ; அதாவது இல்லத்தை ஆள்பவள். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இந்தக்கருத்து அப்படியே இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே அணுகுமுறை, ஒரே பண்பாடு என்பதைத் தெள்ளிதின்  விளக்கும்.

Xxx

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்ட வே ண்டும் . வைத்து என்ற சொல் சம்ஸ்கிருதத்தில் மணப் பெண் என்ற பொருளிலும் வரும். சங்கத் தமிழ் பாடல்களிலும் இந்த ரிக் வேதச்  சொல் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

Xxx

தொழிற்சாலைகளில் பெண்கள்

துணி நெய்தல், நூல் நூற்றல் ஆகிய தொழில்களில் வேதகாலப் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வியப்பனா விஷயம் அவர்கள் போர்க் கருவி செய்யம் ஆலைகளிலும் வேலை பார்த்ததை இஷு கர்த்ரயாக என்ற சொல் காட்டுகிறது.

வேத காலத்தில் ‘பர்தா’ முறை கிடையாது. இதை பாரதியார் பாடலிலும் வலியுறுத்துகிறார். இது தில்லித் துருக்கர் (துலுக்கர்) செய்தவழக்கம்டி என்று சாடுகிறார். துலுக்கர் என்று பாரதியார்  எழுதியதை சில தமிழ் அறி ஞர்கள் ஒன்றுகூடி துருக்கர் என்று மாற்றியதாக எங்கள் தமிழ் குருநாதர் , மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் வி.ஜி.சீனிவாசன் சொல்லி வருத்தப்படுவார்.

xxx

கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.

வேதம் தோன்றிய சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க மொழியில் ஹோமர் என்னும் அந்தகக் கவிராயர் இலியட், ஆடிஸி என்ற இரு பெரும் காவியங்களை எழுதினார். அதில் அக்களப் பெண்கள் எப்பாடு நடத்தப்பட்டனர் என்று வருகிறது. ஒரு மன்னர் வேற்று நாட்டை வென்றால் அந்த நாட்டிலுள்ள பெண்களை னைவரையும் வீரர்கள்  பகிர்ந்து கொள்ளலாம். வாருங்கள் வீரர்களே, அணி திரண்டு வாருங்கள். நாம் வெற்றி பெற்று வேற்று நாட்டுப் பெண்களை பகிர்ந்து கொள்வோம் என்று ஹோமர் அறைகூவல் விடுக்கிறார். இந்து மன்னர்கள் வேற்று நாட்டு செல்வங்களை பகிர்ந்து வருவார்கள். அனால் பெண்களை மதிப்புடன் நடத்துவர். வீர சிவாஜி முஸ்லீம் மகளிரை எவ்வளவு மதிப்புடன் நடத்தினார் என்பதை நாம் அறிவோம்.

வேதத்தில் சில பாடல்களை சகோதர -சகோதரி திருமணம் நடந்ததாக சிலர் சித்தரிப்பர். எகிப்தில் இவ்வழக்கம் இருந்தது. தமிழ் நாட்டில் இப்போது காணப்படும் அத்தை மகன், மாமன் மக்கள் கல்யாணத்தையும்  ஆங்கிலேயர் கஸின் மேரியேஜ் என்றே சொல்லுவர் அதாவது ஒன்றுவிட்ட சகோதர என்னும் பொருள். இது வேதகாலத்தில் இருந்திருக்கலாம். கிருஷ்ணர் விஷயத்திலும் இதைக் காண்கிறோம். அதாவது உறவு முறைத் திருமணம்- முறைப் பெண் கல்யாணம்.

கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறுவது பிற்கால வழக்கம். புற  நானுற்று பாடலில் பாண்டிய ராணி பூதப்பாண்டியன் தேவி இப்படி உடன்கட்டை ஈரி,,,,,,,,,,,,,,,,,,,,யத்தைக் காண்கிறோம். வேதகாலத்தில் இது குறைவு . அதற்குப் பதிலாக இறந்து போன கணவரின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்பான் . இந்த வழக்கம் யூதர்களிடையேயும் இருந்தது.

பார்ஸி மதத்தினரின் வேத நூலான ஜெண்ட் அவஸ்தா பெண்கள், கணவனுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதிய டாக்டர் ராதாகிருஷ்ணன் , டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் போன்ற பேரறிஞர்கள் வேத கால பெண்கள் வாழ்வே சிறந்தது என்று உறுதிப்படப் பேசுகிறார்கள்

Source book –  Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )

Xxx subham xxx

பெண்கள் மனிதப் பிறவிகளா? கிறிஸ்தவர் காரசார விவாதம் (Post No.7561)

WRITTEN BY London Swaminathan

Post No.7561

Date uploaded in London – 11 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உலகப் புகழ் பெற்ற தத்துவ வித்தகரும் இந்தியாவின் ராஷ்டபதியுமான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்

‘இந்தியாவின் புகழ் பெற்ற பெண்மணிகள்’ (GREAT WOMEN OF INDIA) என்ற 1953-ம் ஆண்டுப் புஸ்தத்துக்கு றிமுகக் கட்டுரை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து டாக்கா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆர்.சி . மஜூம்தார் (RAMESH CHANDRA MAJUMDHAR, VICE CHANCELLOR OF DACCA UNIVERSITY)  ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் . கட்டுரையில் பல அரிய சுவையான விஷயங்களைக் காணலாம். இதோ சில சுவையான செய்திகள் —

டாக்டர் ராதா கிருஷ்ணன் அப்போது உபராஷ்டிரபதி . அவர் எழுதியதாவது-

இந்தியப் பண்பாட்டில் பொதுவாக பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அதை இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் எடுத்துரைக்கின்றன. ஆனால் அவ்வப்போது பெண்களுக்கு எதிரான குறிப்புகளையும் காணமுடிகிறது  கடவுளையே நாம் அரை ஆண்மகனாகவும் , அரை பெண்மணியாகவும் பார்க்கிறோம் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில். மநு சொல்கிறார் (3-56)- “எங்கே பெண்கள் கௌரவிக்கப்படுகிறார்களோ அங்கே கடவுள் மகிழ்சசி அடைகிறான் ; எங்கே அவர்களை மதிக்கவில்லையோ அவ்விடத்தில் நடைபெறும் அத்தனையும் பயனற்றுப் போகும்” .

ஆண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் பெண்கள் , செய்ய இயலாது. ஏனெனில் அவர்களின் உடல்வாகு அதற்கு இடம் தராது . இதன் காரணமாக அவர்களை மட்டம் தட்ட முடியாது . அவரவர்களுக்கு உரிய செயல்களைச் செவ்வனே செய்வதே சிறப்பாகும்.

பழங்காலத்தில் பெண்களும் கல்வி கற்றனர்; பூணுல் அணிந்து கிரியைகளைச் செய்தனர். பிரம்ம வித்யைக்கு அவர்க்களும் உரிமை கொண்டாடினர். ‘மஹாநிர்வாண தந்திரம்’ கூறுகிறது – “பெண்களையும் வளர்த்து ஆளாக்கி கவனத்துடனும் பெரு முயற்சியுடனும் கல்விப் பயிற்சி தர வேண்டும்”- 8-47

தேவி மஹாத்ம்யம் என்னும் நூல் இயம்புகிறது – “அறிவின் எல்லா துறைகளும் நீயே! உலகம் முழுதுமுள்ள பெண்கள் யாவரும், தேவி! உன் வடிவங்களே” – 11-6.

கல்விக்கான கடவுளே ஸரஸ்வதி ஆவார் .

நாமும் மைத்ரேயி, கார்கி , அருந்ததி, லீலாவதி  முதலிய புகழ் பெற்ற பெண்மணிகளின் பெயர்களைக் கேள்விப்பட்டுள்ளோம்.

வேத காலத்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிட்டின. இதற்குப்பின்னர் அவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் அறியாமையிலும் மூட  நம்பிக்கைகளிலும் உழன்றனர்.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூட பைரவி பிராஹ்மணி என்ற பெண்மணியைத் தன் குருவாக ஏற்றார் . அவருடைய மனைவியான சாரதாதேவிக்கு அவர் கொடுத்த மரியாதையும் குறிப்பிடற்பாலது .

வேத காலத்தில் பெண்கள் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்ததை அறிகிறோம். இதற்காக ‘சமான’ என்ற விழாக்கள் நடந்தன. கல்யாணம் என்பது மதிப்பிற்குரிய ஒரு விஷயமாக போற்றப்பட்டது .

துர்கா சப்த சதியில் ஒரு சுவையா விஷயத்தைக் காண்கிறோம். அங்கே துர்க்கை கல்யாணம் ஆகாத குமாரி. அவளைத் திருமணம் செய்துகொள்ள அசுரர்கள் ஆசைப்படுகின்றனர். அப்போது துர்கா தேவி சொல்கிறாள் —

“போரில் என்னை எவர் ஒருவர் வெல்கிறாரோ, எவர் ஒருவர் என்னையும் விஞ்சும்  கர்வத்தைக் காட்டுகிறாரோ, எவர் ஒருவர் எனக்குச் சமமானவரோ அவரை நான் மணந்து கொள்வேன்” .

இதிலிருந்து பெண்கள் வெறும் இன்பத்தைத் தரும் அடிமைகள் அல்ல என்பது விளங்கும்.

மஹாபாரதத்தில் ஆதி பர்வத்தில் ஒரு ஸ்லோகம் உரைக்கிறது -1-3-9

“உன்னுடைய இருதயம்/ உள்ளம் என்னுடையதாகட்டும் ;

என்னுடைய இருதயம்/ உள்ளம் உன்னுடையதாகட்டும்”;

ஆகையால் காம சுக போகத்தை அவர்கள் வெறுக்கவில்லை

கல்வி கற்க வரும் சிறுவனுக்கு ‘தாயைச் சிறந்ததொரு கோயில் இல்லை’ என்பது தொனிக்கும் வகையில் முதலிலேயே மாத்ரு தேவோ பவ’  (தாயே கடவுள் என்று கருது) – என்று கற்றும் தருகிறோம். மனு இதை மிகவும் வலியுறுத்தி மொழிகிறார் –

“பத்து உபாத்யாயர்களை விட   ஒரு ஆச்சார்யர் பெரியவர் ;

ஒரு தந்தையானவர் 100 ஆச்சார்யர்களை  விடச் சிறந்தவர் ஆவார்;

ஒரு தாய் என்பவளோ 1000 தந்தையரையும் விடச்  சிறந்தவர் ஆவார்” – 2-145

xxx

இவ்வாறு டாக்டர் ராதா கிருஷ்ணன் எழுதியத்தைத் தொடர்ந்து டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் எழுதுகிறார் –

“நம்முடைய அதிர்ஷ்டம் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டல 85 ஆவது துதி (Rik Veda 10-85) கல்யாண மந்திரத்தை அப்படியே இன்று வரை காப்பாற்றி வந்துள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத இந்த ஒப்பற்ற கவிதை, இந்துக்கள் திருமணத்துக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுத்தனர் என்பதைக் காட்டுகிறது ; ஒரு நாகரிகம் வாய்ந்த சமுதாயத்தில் நடக்கும் திருமணத்தின் மிகப்பழைய (oldest document on marriage) குறிப்பு இதுதான்”.

“இதற்குப்பின்னர் அவர் பெண்களுக்கு எதிரும் புதிருமாக உள்ள கருத்துக்களை இந்து மத நூல்களில் இருந்த எழுதிவிட்டு நாம் பெரும்பாலும் கேள்விப்படாத முக்கிய விஷயத்தை எழுதுகிறார்).

“பெண்கள் இயல்பாகவே தீய குணங்களுடன் படைக்கப்பட்டவர்கள் என்று குறை கூறுகிறீர்களே. ஆண்களிடம் அத்தகைய தீய குணங்கள் இல்லையா? என்று வராஹ மிஹிரர் கேட்கிறார்.

உலகம் முழுதும் பெண்களுக்கு எதிரான போக்கு காணப்பட்டது . கி.பி. 585ல் பிரான்சில் மேசன் நகரில் நடந்த கிறிஸ்தவ குருமார்கள் மகாநாட்டில்(Synod of Macon) பெண்கள் மனிதப் பிறவிகளா என்று காரசாரமாக விவாதித்தனர்.

கௌதம புத்தர் 2600 ஆண்டுகளுக்கு  முன்னரே பெண்களை கடுமையாக நடத்தினார் . பவுத்த சங்கத்தில் அவர்களை அனுமதிக்க முடியாது என்று அடம்பிடித்தார்.

சிஷ்யர்கள் மிகவும் வற்புறுத்தவே பெண்களை புத்த சங்கத்தில் அனுமதித்துவிட்டு , நான் எவ்வளவு காலம் என் கொள்கைகள் இந்த பூமியில் நிலவும் என்று நினைத்தேனோ அதில் பாதிக் காலம்தான் என் மதம் இந்தப் பூமியில் நிலவும் என்று ஆருடம் கூறினார். நூறு வயது பிக்குணி கூட நேற்று வந்த 16 வயது பிட் சுவுக்கு  மரியாதை செய்ய வேண்டும். என்றார். மேற்கு நாடுகளில் இதையும் விட நிலைமை  மோசம். கிரேக்க, ஸீ ன தத்துவ  ஞானிகளான கன்பூசியஸ், அரிஸ்டாட்டில், பிரெஞ்சு அறிஞர் ரூஸோ ,  ஆங்கிலக் கவிஞன் மில்டன் ஆகியோரும் பெண்களுக்கு எதிராகப் பொழி ந்து தள்ளினர் ஆண்களை விட பெண்கள் மட்டம் என்றும் அவர்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றும் எழுதினார்கள்.”

xxx

என் கருத்து

பாரதி போன்று பழங்கால உலகில் பெண்களுக்கு ஆதரவு கொடுத்த அறிஞர் வராஹமிஹிரர் ஒருவரே. 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று வாதாடினார். இந்தியர்களைவிட மிகவும் மோசமானவர்கள் மேலை நாட் டார்தான். இந்திய பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்த பின்னரே பிரிட்டிஷ் பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடைத்தது.

சங்கத் தமிழிலக்கியம் , திருக்குறளில் கூட ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று படிக்கிறோம். கம்பனும், பட்டினத்தாரும் பிறரும் பெண்களை  சாடுகின்றனர் . ஆனால் இதை சரியான பார்வையில் பார்க்க வேண்டும். இந்துக்கள் பெண்களை மூன்று கோணங்களில் அணுகினர்.

1.தாய் என்ற பார்வையில், அவர்கள் தெய்வமாகப் போற்றப்பட்டனர் . எல்லா பெண்களும் யாரோ ஒருவருக்குத் தாய் என்பதும் அவர்களுக்குத் தெரியும் .

2. இரண்டாவது கோணம்- அவர்கள் யாரோ ஒருவருக்கு மனைவி. அப்போது அவர்கள் ‘சுகம் தரும், வீட்டு வேலை செய்யும் ஒரு ‘கருவி’, ‘வஸ்து’ என்று கருதப்பட்டனர்.

3. மூன்றாவது கோணம் – விலைமகளிர் போல குணம் உடைய பெண்கள். அவர்களை பற்றி எச்சரிக்கவே பக்தி இலக்கிய பாடகர்கள் அவர்களை சாடினர் .

ஆக நிஜ வாழ்வைப் பார்க்கையில் பெண்களைப் போற்றியதையும் தூற்றியதையும் காண முடிகிறது .விக்டோரியன் கால (Victorian period Novels)  ஆங்கில நாவல்களில் ,பெண்களை புத்தியில்லாத , பொறாமை கொண்ட, அலர் தூற்றும் வம்புக்காரிகளாக (Dumb, Ignorant, Gossip mongers)  சித்தரிப்பதைக் காணலாம்.

வேத காலத்தில் இருந்த பெண்களின் உன்னத நிலை, காலப்போக்கில் சரி ந்து வந்ததை இந்து சமய நூற்கள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அக்காலத்தில் பாரதி போன்றோர் வராஹமிஹிரர் போன்றோர் மிகவும் குறைவு. அது மட்டுமல்லாது வெளிநாட்டோர் படை எடுப்புகளும் பெண்களின் நிலையைப் படு குழியில் தள்ளி ன பாரசீகர், கிரேக்கர், சகரர் , ஹுணர் , முஸ்லீம்கள் , கிறிஸ்தவர்கள் படை எடுப்பு காரணாமாக  பெண்கள் நிலைமை படிப்படியாக மோசமாகி வந்ததை வரலாறு காட்டுகிறது.

உலகிலுள்ள பழங்கால பெண் கவிஞர்கள் , அறிஞர்களைப்  பட்டியலிட்டால்  நாம் மிக உன்னத நிலையில் இருப்பதைப் பார்க்க முடியும்.

வாழ்க பாரதி, வாழ்க பெண்ணினம்

–subham—

மேலும் ஒரு புதையல் செய்தி (Post No.7558)

Written by London Swaminathan

Post No.7558

Date uploaded in London – 10 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நான் 11-10-1992ல் எழுதிய மேலும் ஒரு புதையல் செய்தி. இது தினமணி கதிரில் வெளியானது.

தலைப்பு – ‘போலீஸ்காரர் கண்டுபிடித்த புதையல்’ இணைப்பில் காணுங்கள்.

xxx subham xxxx

கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால யவனன் ! (Post No.7546)

கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால  யவனன் ! (Post No.7546)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN  

Post No.7546

Date uploaded in London – – 7 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்ச புராணம், பாகவதம் முதலியவற்றில் கிருஷ்ணனைப் பற்றிய ஒரு உண்மைக்கதை- வரலாற்றுச்  சிறப்புமிக்க கதை உள்ளது. யாதவர்களை ஓடஓட விரட்டிய நிகழ்ச்சி  இது. உத்தர பிரதேச மாநிலமான மதுராவில் இருந்த ஒரு சமூகத்தை 802 மைல்  — 1291 கிலோமீட்டர் தொலைவில் குஜராத் மாநிலத்தில் உள்ள துவராகா புரிக்கு  விரட்டிய வரலாற்று நிகழ்வு இது – அதைவிட வியப்பான விஷயம், கிருஷ்ணனையும் யாதவர்களையும் விரட்டிய மன்னன் பெயர் ‘கால யவனன்’ . யமன் போன்ற யவனன் அல்லது கருப்பு யவநன் என்று பொருள் சொல்லலாம். அந்த யவனன் கிரேக்கனா, அராபியான , ரோமானியனா என்றும் தெரியவில்லை . இதை எல்லாவற்றையும் விட சுவையான விஷயம் கிருஷ்ணன் அனுப்பிய கறுப்புப் பாம்புக்குப் பதிலாக அவன் அனுப்பிய எறும்பு டப்பா கதை! tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதோ முழு விவரம்-

இந்த வரலாற்று நிகழ்வினைச்  சொன்னால் மக்களிடையே கிருஷ்ணன் மதிப்பு குறைந்துவிடும் என்று பவுராணிகர்கள், இதை அதிகம் பிரஸ்தாபிக்கவில்லை போலும் !

கால யவனன் கதையில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. முதல் பகுதி கார்க்யர் என்ற ரிஷி பற்றிய கதை; அவர் வ்ருஷ்ணி குல, அந்தக குல (யாதவ) மக்களுக்கு குரு . அவரை ஒரு சமயம் யாதவர்கள்  அவமானப்படுத்தவே அவர் 12 ஆண்டு தவம் செய்து சிவபெருமான் அருளால் ஒரு அப்சரஸ் மூலம்குழந்தை பெறுகிறார். அந்தக் குழந்தை யாதவ குலத்தைப் பழி வாங்கும் என்றும் சிவன் சொல்கிறார். இதை அறிந்த பக்கத்து தேச யவன மன்னன் அவரையும் அவரது குழந்தையையும் தனது அரண்மனையில் வளர்த்தான். காரணம்? அவனுக்குக் குழந்தை கிடையாது. அவன் இறந்தபின்னர் கார்க்யரின் மக ன் பட்டம் சூட்டப்பட்டான் . tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவனுக்கு கால யவனன் என்ற பெயர் ஏற்பட்டது..

நாரத முனிவர் இதுபற்றி மதுராபுரி மன்னனான கிருஷ்ணனை எச்சரிக்கிறார் . அவரோ சிறிதும் பொருட்படுத்தவில்லை.

இது ஒரு புறமிருக்க, கம்சனின் மாமனாரும் மகா சக்திவாய்ந்த மகத சாம்ராஜ்யத்தின் மன்னனும் ஆன  ஜராசந்தன், கம்சனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனைக் காலி  செய்ய தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது காலயவனனுடன்  இமயமலைப் பகுதியில் உள்ள குட்டி நாடுகளை ஆளும் எல்லா மன்னர்களும் சேர்ந்து கொ ண்டனர். அவன், ஜராசந்தன் ஆதரவோடு மதுராபுரி மீது படையெடுத்தான். அவனுடைய படைகளுடன் வந்த குதிரைகளும் ஓட்டக்கங்களும் போட்ட லத்திகளும் மூத்திரமும் ஆறு போல பெருக்கெடுத்தது ; அந்த ஆற்று க்கு அஸ்வகிருத் என்ற பெயரும் ஏற்பட்டது.

மாபெரும் படை மதுராபுரியை நோக்கி வருவதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா யாதவ மக்களின் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி சொற்பொழிவைத் துவக்கினார்-

எனது அருமை மக்களே, நான் சொல்லுவதைக் கேளீர் . மாபெரும் படை மதுராபுரியை சுற்றி வளைத்து இருக்கிறது. இது வெல்ல முடியாத படை. கால யவனன் , சிவ பெருமானிடம் வரம் பெற்றவன் . நானும் சமாதானத்துக்கு எவ்வளவோ முயன்று பார்த்தேன். இதுவரை பலன் கிட்டவில்லை. காரணம்? ஜராசந்தனின் கோபம் தணியவில்லை. அவன் காழ்ப்பு உணர்வு கொண்டுள்ளான். கால யவனனோ , ‘நானே ஆளப் பிறந்தவன்’ என்று மமதையுடன் கொக்கரிக்கிறான். இந்த செய்தியை நாரதர் என்னிடம் இயம்பினார்” tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

ஹரி வம்சத்தில் உள்ள சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் மேலும் சொல்லப்படுவதாவது —

கிருஷ்ணர் ஒரு டப் பியை எடுத்து அதற்குள்   அதி பயங்கரமான கரு நாகப் பாம்பை உள்ளே போட்டு ஒரு தூதனிடம் கொடுத்தார் இதை காலா யவன னிடம் காட்டி நான் சொல்லுவதைச்  சொல்லிவிட்டு வா என்று தூது அனுப்பினார் கண்ணன். தூதன் , கால யவனனி டம் சென்று டப்பாவைத் திறந்து காட்டியது குல நந்தன னான கிருஷ்ணன் சீறும்  கரும் பாம்பு போன்றவன் என்றான். கால  யவன னுக்குப் புரிந்துவிட்டது. அதி பயங்கரமான கூரிய பற்களுடைய எறும்புகளை பிடித்துவரச்  சொல்லி அதை டப்பா  முழுதும் போட்டு நிரப்பினான் . அந்தப் பாம்பை அவை கடித்துக் குதறி சாப்பிட்டு விட்டன.. இதைப்போய் உங்கள் கிருஷ்ணனிடம் கொடு என்றான் கால யவனன் .

எறும்புடன் வந்த டப்பாவில் அதி பயங்கர கரும்பாம்பு பிணமானதைக் கண்டு கிருஷ்ணன் பயந்தான்; யாதவகுலத்தை அழைத்துக் கோடு 800  மைல் பயணம் செய்து கடலோரப்  பட்டினமான துவாரகா நகருக்கு சென்றான் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

யாதவ குல மக்கள் அனைவரும் வீ ட்டு வாசலுடன் வாழத் துவங்கிய ஒரு நாள், கிருஷ்ணன் மட்டும் தனியாக, நிராயுதபாணியாக  மதுரா புரிக்கு நடந்தே  சென்றான் . கா லயவனனை ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு வா என்றான் . அவன் இத்தகைய தருணத்தை நழுவ விடக்கூடாது .கிருஷ்ணன் கதையை இன்றுடன் முடிப்போம் என்று புறப்பட்டான். கிருஷ்ணர் ஓட்டம் பிடித்தார் எல்லாம் ஒரு திட்டத்தோடு தான் .

ஹரிவம்சத்தில் உள்ள மூன்றாவது கதை.

மாந்தாதா என்ற மாமன்னனின் மகன் முசுகுந்த சக்ரவர்த்தி.  அவன் தேவாசுரப்  போரில் தேவர்களுக்கு வெற்றி வாகை பெற்றுத் தந்தவன் . இனி போரே வேண்டாம் . நான் நிம்மதியாகத் தூங்க அருள்புரியுங்கள்  என்று தேவர்களிடம் வேண்ட, இந்திரன் மூலமாக ஒரு வரம் பெற்றான். என து தூக்கத்தை எவனாவது கெடுப்பானாகில், நான் விழித்தவுடன் பார்க்கும் மனிதன் எரிந்து போ க வேண்டும் என்றான். இந்திரனும் ததாஸ்து (அப்படியே ஆகட்டும்) என்றான். அவர் ஒரு குகையில் சென்று உறங்கி விட்டார் . இந்த விஷயம் முழுவதையும் நாரத முனிவர் ஆதியோடு அந்தமாக கிருஷ்ணனிடம் இயம்பி இருந்தார் . இது எல்லாம் கிருஷ்ணனுக்கு நினைவுக்கு வரவே முசுகுந்த மன்னன் தூங்கும்  குகைக்குள் மெதுவாக சப்தமின்றி நுழைந்து முசுகுந்தனின் தலை மாட்டில் அமர்ந்தார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

கால யவனனும் அந்தக் குகைக்குள் நுழைந்தான். கால  யவனனுக்கு விநாச காலே விபரீத புத்தி; ஒரு உறங்கும் ஆசாமி அருகில்தலை மாட்டில், கிருஷ்ணன் அமர்ந்து இருப்பதைப்  பார்த்து, உறங்கும் ஆசாமியை  கால்களால் எத்தி உதைத்தான். கோபத்தோடு எழுந்த முசுகுந்தன் கோபப் பார்வையை அவன் மீது வீசவே கால யவனன் எரிந்து சாம்பலானான் . . கிருஷ்ணனுக்கு  புத்திமான் பலவான் ஆவான்என்ற பழமொழி பொருந்தும்.

இதற்குப் பின்னர், முசுகுந்த மன்னனிடம், அவன் தூங்கிய காலத்தில் உலகில் என்ன என்ன நடந்தன என்ற தலைப்புச்  செய்திகளை ‘புல்லட் பாயிண்டு’ (Bullet Points) களில் கிருஷ்ணன் மொழிந்தார். முசுகுந்தனும் மகிழ்ந்து, இனி சுவர்க்கம் புகும் நேரம் வந்துவிட்டது என்று சொல்லி பூவுலகில் இருந்து புறப்பட்டார்.

xxx

என் கருத்து

பைபிளில்  (Bible) இரண்டாவது அத்தியாயத்தில் எக்ஸோடஸ் (Exodus)  என்ற தலைப்பில் மோசஸ் என்ற தலைவன் யூத மக்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்து இஸ்ரேலுக்கு அழைத்துச்  சென்றான் என்ற செய்தி வருகிறது . மூன்று மதங்கள் போற்றும் மோசஸ் உண்மையில் இருந்ததற்கு இதுவரை வரலாற்றுச் சான்றுகளோ தொல்பொருட் துறை சான்றுகளோ கிடைத்தில ; ஆயினும் எக்ஸோடஸ் என்னும் மாபெரும் வெளியேற்றம் பற்றி பல சினிமாக்களும் புஸ்தகங்களும்  வெளியாகியுள்ளன. அது போன்ற நிகழ்ச்சி யாதவர் வெளியேற்றமும் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

மோசஸ் இஸ்ரேலை நோக்கி சென்ற காலையில் அவருக்கு செங்கடல் வழி திறந்துவிட்டது என்று பைபிள் இயம்பும். இது எல்லாம் ஹரிவம்சத்தைக் காப்பி அடித்து எழுதியது என்பர் ஆன்றோர். கிருஷ்ணர் பற்றி சொல்லும் விஷயங்கள் அத்தனையையும் பைபிளும் காப்பி அடித்து இருக்கிறது .

1.பிறக்கும் முதல் குழந்தை குலத்துக்கு ஆபத்து என்றவுடன் ரோம மன்னர் குழந்தைகளைக் கொன்றதை கம்சன் செய்த கொடுஞ் செயல்களுடன் ஒப்பிடலாம்.

2.மோசஸ் யாதவ/ யூதர்களை குடியேற்றியதை கிருஷ்ணனின் துவாரகா குடியேற்றத்துடன் ஒப்பிடலாம்.

3.கூடையில் மோசஸை நைல் நதியில் மிதக்கவிட்டதை கர்ணன் கதையுடன் ஒப்பிடலாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

4..செங்கடல் திறந்து மோசஸ் முதலியோருக்கு வழிவிட்டதை யமுனை நதி திறந்து வசுதேவனுக்கு வழிவிட்டதை ஒப்பிடலாம்.

5.ஆதம் (Adam) ஏவாள்(Eve) கதை என்பது உபநிஷத்தில் உள்ள இரண்டு பறவைக் கதை என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஏற்கனவே ஒப்பிட்டுள்ளார் . ஆதம் (Adam=Adma) என்பது ஆத்மா என்பதன் திரிபு. ஏவாள் என்பது ஜீவ (Eve-Jeev)  என்பதன் மருவு. அதாவது உபநிஷத்தில் வரும் இரண்டு பறவைக் கதை– ஒரு பறவை பழம் சாப்பிட்டது– என்பதை பைபிள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டதாகக் கூறும் . இது பரமாத்மா , ஜீவாத்மா கதை

6.ஆதம் தனது இடது எலும்பை ஒடித்து பெண் இனத்தை உருவாக்கினான் என்பது அர்த்த நாரி கதை. சிவ பெருமானின் இடப்புறம் சக்தி/ பெண் இனம்.

7. ஏசு சொல்லும் குட்டிக்கதைகள் உபநிஷத் கதைகள் போன்றவை tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

8.இதுதவிர பைபிளில் ஏராளமான சம்ஸ்கிருத் சொற்கள் இருக்கின்றன.

பைபிள் என்பது இந்துமத நுல்களைக் காப்பி அடித்து எழுதியது என்பதற்கு இவைகள் சான்றுகள். மோசஸ் எக்ஸோடஸ் அத்தியாயம் எழுதப்பட்டது கி.மு ஆறாம்   நூற்றாண்டு . கிருஷ்ணர் கதைகளோ கி.மு 3100க்கு முந்தையது.

xxx

Krishna appears in Yaga Fire

இதை எல்லாம் விட்டுவிட்டு ஒரிஜினல் கதைக்குத் திரும்புவோம்

கால யவன் கருப்பு கிரேக்கனா (Black Greek?), கருப்பு அராபியனா (Black Arabian)? என்ற ஆராய்சசியும் நீடிக்கிறது. யவன என்ற சொல்லை சங்க இலக்கியம் ரோமானியர் என்ற பொருளில் பயன்படுத்துகிறது. அலெக்சாண்டர் படை எடுப்புக்குப் பின்னர் கிரேக்கர் என்ற பொருளில் வருகிறது. குதிரை விற்பனைக் கதைகளில் அராபியர் என்ற பொருளில் வருகிறது . யவன என்ற சொல் வரும் பல்லாயிரம் இடங்களைத் தொகுத்து ஹெல்சிங்கி (பின்லாந்து) நகர புஸ்தக வெளியீடு 2015ல் வெளியாகி யிருக்கிறது. அதில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் ஆங்கிலத்தில் அப்படியே உள்ளன. கால யவனனுடன் சேர்ந்த மன்னர்கள், இனங்கள் பெயர்கள் நிறைய உள்ளன . அத்தனையையும் ஆராய்ந்தால் புதிய இந்திய வரலாறு tamilandvedas.com, swamiindology.blogspot.com

எழுதலாம்.

இதைவிட மிக மிக சுவையான விஷயம் ஹெலிகாப்டர் பற்றியது. ஹரி வம்சத்தில் ஓரிடத்தில் கால யவனனுக்கு  வானில் பறக்கும் (aerial car) வாகனத்தில் தூது விடுவோம் என்ற ஸ்லோகம் வருகிறது. போகிற போக்கில் இதைச்  சொல்லுவதால் அக்கால மக்களுக்கு விமானம், ஹெலிகாப்டர் என்பன அத்துப்படி என்பதும் ஆனால் மன்னர்கள் மட்டுமே அரிதாகப் பயன்படுத்தினர் என்றும் தெரிகிறது.

இதை எல்லாம்விட மிக மிக அதிசயமான விஷயம் போக்குவரத்து வசதிகள். கிருஷ்ணர், துவாரகைக்கும் ஹஸ்தினாபுரத்துக்கும், துவரகை க்கும் மதுராபுரிக்கும் இடையே சென்று வந்த செய்திகள் நிறைய உள்ளன. துவாரகா- மதுரா தொலைவு 1291 கிலோ மீட்டர். அதாவது 802 மை லகள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வதற்கு புல்லட் ரயில் (Bullet Trains)  இல்லை ; அப்படியும் எப்படி கிருஷ்ணன் அடிக்கடி பயணம் செய்தார்? அதுவும் யாதவ குல மக்கள் கால் நடையாக எப்படி வந்தனர்? பின்னர் கிருஷ்ணர் மட்டும் எப்படி கால்நடையாக தனியே சென்றார்.? tamilandvedas.com, swamiindology.blogspot.com

 புற நானுற்றுக்கு உரை எழுதிய மதுரை பாரத்வாஜ கோத்ர பிராமணன், உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர், விளம்புவது போல யாதவ குலத்தினர் தமிழ் நாட்டில் எப்படி குடியேறினர்? இரண்டாயிரம் மைல்கள் நடந்து வந்தனரா ? மதுரை அரசி மீனாடசியின் அம்மா காஞ்சன மாலை , அவளோ உக்ரசேனனின் குமாரத்தி ஆயிற்றே . அவர்கள் எப்படி  தமிழ் நாட்டு மதுரைக்கு குடியேறினர் ? ஆதி சங்கரர் எப்படி இரு முறை இமயம் முதல் குமரி வரை வலம் வந்தார்? பாஹியானும் யுவாங் சுவானும் சீனாவில் இருந்து எப்படி காஞ்சிபுரம் வரை வந்தனர்? இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டு புது வரலாறு எழுதுவோமாக . புரியாத பல புதிர்களை விடுவிப்போமாக .

Tags  –  துவாரகா , மதுரா , கிருஷ்ணன் , குடியேற்றம்,யாதவர், கால யவனன் , கார்க்யர் , ஜராசந்தன், கிருஷ்ணர்

சுபம் —

செய்தியில் அடிபட்ட புஸ்தகங்கள் (Post No.7535)

Compiled by London Swaminathan               

Post No.7535

Date uploaded in London – – 4 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

1993ம் ஆண்டு ஜனவரி 3 தேதியிட்ட தினமணி கதிரில் நான் எழுதிய செய்தியில் அடிபடும் புஸ்தகங்களை இத்துடன் இணைத்துள்ளேன். சல்மான் ருஷ்தியைப் பொறுத்தவரையில் அவர் மீதான பட்வா நீக்கப்பட்டு அவர் உயிருடன் உள்ளார். கலை ப் பொக்கிஷம் தொடர்பான புஸ்தகம் இன்றும் ‘யானை விலை குதிரை விலை’க்கு விற்கப்படுகிறது .

Latest on Salman Rushdie

Sir Ahmed Salman Rushdie FRSL is a British Indian novelist and essayist. His second novel, Midnight’s Children, won the Booker Prize in 1981 and was deemed to be “the best novel of all winners” on two separate occasions, marking the 25th and the 40th anniversary of the prize. Wikipedia

Born19 June 1947 (age 72 years), Mumbai, India

SpousePadma Lakshmi (m. 2004–2007), 

MoviesMidnight’s ChildrenThen She Found Me,

ChildrenZafar RushdieMilan Rushdie

Tags –  பட்வா , சல்மான் ருஷ்தி, கல்லறை, புஸ்தகம், கலைப் பொக்கிஷம்

–subham–

புதையலோ புதையல், மஹா மஹா MEGA புதையல் (Post No.7532)

Iron Age Coins discovered in Britain

Written  by London Swaminathan               

Post No.7532

Date uploaded in London – – 4 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Treasure Hunters Mr Mead and Mr Miles

நேற்றைய தினம் (3-2-2020) பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒரு சுவையான செய்தியை வெளியிட்டுள்ளன. அது பிரிட்டனின் மிகப்பெரிய புதையல் பற்றிய செய்தி .அதன் மதிப்பு பத்து மில்லியன் ஸ்டெர்லிங் பவுன்கள். இந்தியக்கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய். இவை இரும்புக் கால நாணயங்கள் (Iron Age Coins)

பிரிட்டனில்  புதையல் கண்டுபிடிக்கும் கருவி விலைக்கு கிடைக்கிறது. குழந்தைகளுக்கான சிறு பொம்மைக் கருவி முதல் மிகவும் சக்தி வாய்ந்த கருவி வரை யாரும் வாங்கலாம். இதை மெட்டல் டிடெக்டர் (Metal Detector) என்பர். அதாவது பூமிக்கடியில் இருக்கும் உலோகப் பொருட்களைக் கண்டுபிடித்து  ஒலி எழுப்பும்.

பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வாரம் தோறும் புதையல் செய்திகள் வருகின்றன. இதற்காக மாதப் பத்திரிக்கைகளும் உள . இந்தியாவிலும் நிலத்துக்கடியில் நிறைய புதையல் உளது. அதைக் கண்டு பிடிப்போர் அதன் மதிப்பு தெரியாமல் உருக்கி உலோகத்தை மட்டும், குறிப்பாக தங்கம் வெள்ளியை மட்டும் , எடுத்துக்கொள்வர். உண்மையில் அதிலுள்ள உலோகத்துக்குக் கிடைக்கும் விலையைப் போல பத்து முதல் 100 மடங்கு விலை கிடைக்கும் என்பதை பாமரர்கள் அறியார். விஷயம் தெரிந்தோர் அதை வெளிநாட்டுக்க்குக் கடத்தி விடுகின்றனர். தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காதலன் காதலி ரோமானிய மோதிர உருவம் பத்திரிகைகளில் வெளியான சில தினங்களில் மாயமாய் மறைந்து விட்டது. கரூரில் அமராவதி ஆற்றில் கிடைக்கும் புதையல்கள கள்ளத் தனமாய் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. கங்கை நதியில் நவநந்தர்கள்  ( Nava Nandas of Nanda Dynasty, 5th century BCE)  தங்கக் கட்டிகளை ஒளித்து வைத்த செய்தியை சங்க புலவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளனர் . நிற்க. Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரிட்டனில்  கண்டுபிடிக்கப்பட்ட புதையல்களில் (Treasure) இதுதான் மிகப்பெரியது என்று கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்ற இப் புதையலில் 69,347 தங்கம், வெள்ளி, இரும்பு நாணயங்கள் அடங்கும். இதன் எடை 1700 பவுண்டு.விலை மதிப்பு பத்து மில்லியன் ஸ்டெர்லிங் பவுன். இதில் பழைய காசு கி.மு. 50 காலத்தைச் சேர்ந்தது .

ரெக்  மீட்  மற்றும் ரிசர்ட்  மைல்ஸ் (Reg Mead and Richard Miles) ஆகிய இருவர் இதை 2012ல் ஒரு வேலிக்கு அடியில் களிமண் மேட்டில் கண்டுபிடித்தனர் . ஆனால் இப்போதுதான் கின்னஸ்  சாதனை நூல் இதை பெரும் புதையல் (Biggest Treasure) என்று  அறிவித்துள்ளது. புதையலை யாராவது கண்டுபிடித்தால் அது மகாராணிக்குச் சொந்தம் என்பது பிரிட்டனில் உள்ள சட்டம். ஆயினும் கண்டுபிடித்தோருக்கு ஒரு பங்கு உண்டு.

‘கழுகுக்கு மூக்கில் வேர்க்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி. அதுபோல புதையல் தேடுவோருக்கு கையில் அரிக்கும். யாரோ ஒரு பெண்மணி இந்தப் பொட்டலில் ஒரு வெள்ளி பித்தா னை பார்த்தேன் என்றார். உடனே இவ்விருவரும் மம்மட்டி, கோடாரி , கத்தி, கபடா , மெ ட்டல் டிடெக்டர் சஹிதம் போய் வெற்றி கண்டனர்.

curator in the museum sorting out the coins

இவை கிடைத்த இடம் சானல் ஐலண்ட்ஸ் (Channel Islands) எனப்படும் ஜெர்சி, கேர்ன்சி ஆகும்.

ஜெர்சியில் உள்ள லா ஹோ க் பை மியூசியத்தில் (La Hogue Bie Museum, Grouville, Jersey) இவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதையல் 1978ல் வில்ட்ஷைர் (Wiltshire) அருகில் கிடைத்த 54,951 நாணயங்கள் புதையல் ஆகும். Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகில் கிடைத்த மிகப்பெரிய புதையல் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 1,50,000 பென்னி காசுகள்  புதையல் ஆகும். அவை 1908ம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்) நகரில் கண்டெடுக்கப்பட்டன.

நாமும் புதையல் தேடுவோம். கிடைத்தை அழிக்காமல் , உருக்காமல்  பாதுகாப்போம் .

Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com

Tags –  புதையல், மிகப்பெரிய, ஜெர்சி, கின்னஸ் சாதனை,

–subham–