Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Vitamin Tablets to Students
1992ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நான் எழுதிய கட்டுரை மாணவர்
அறிவு வளர வைட்டமின் (விட்டமின் என்றும் உச்சரிக்கலாம்) மாத்திரைகள் உதவுமா என்று
பிரிட்டனில் நடந்த ஒரு சுவையான வழக்கு பற்றியதாகும்.
சுவையான
வழக்கு இது. படியுங்கள்
London Swaminathan’s Articles in 1992 Dinamani–subham–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கவிஞர் கண்ணதாசன் கேட்கும் கேள்விக்கு யாராலாவது மறுத்துப்
பேச முடியுமா?
ஆம், கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆகாது.
மாணிக்கத்தின் குணாதிசயங்களும் பலன்களும்!
ரூபி (Ruby)
என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மாணிக்கம் நவரத்தினங்களுள்
அற்புதமான ஒரு ரத்தினம்.
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுடன்
தொடர்பு கொண்ட ரத்தினம் இது. எண் கணிதத்தில் ஒன்று என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டதும்
இதுவே தான்!
சூரிய காந்த மணி,கெம்பு, சீயம்
என்று அழைக்கப்படும் இந்தக் கல் சூரியன் தரும் பிரகாசம், புகழ், மேன்மை, வெற்றி ஆகியவற்றை
தரும்!
சூரியன் ஒரு ஜாதகத்தில் ஐந்து
மற்றும் ஒன்பது ஸ்தானங்களில் இருக்கும் போது மாணிக்கம் அணிவது சிறந்த மேன்மையை ஜாதகருக்குத்
தரும்.
மாணிக்கத்தில் எந்த மாணிக்கத்தை
அணிவது என்ற கேள்விக்கு பல காலமாகச் சொல்லும் பதிலைத் தான் இன்றும் சொல்ல முடியும்!
பர்மாவிலிருந்து கிடைக்கும் சிவப்பு வண்ண மாணிக்கம் மிகவும் சிறந்தது.
மாணிக்கம் வைரத்திற்கு அடுத்தபடி
மிகவும் கடினமானது.
பிரடரிச் மோ என்ற ஜெர்மானிய
அறிஞர் ஒவ்வொரு கல்லுக்கும் உள்ள கடினத்தன்மையை வரையறுத்தார். அவர் கூறும் அளவு அவரது
பெயாராலே மோ அலகு எனக் கூறப்படுகிறது.
இதன் படி மிகவும் கடினமான வைரம்
10 என்ற அலகைப் பெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக 9 என்ற மோ அலகைப் பெறுவது மாணிக்கம்.
மாணிக்கத்தின் ஒப்படர்த்தி
3.99லிருந்து 4.05 வரை இருக்கும். இதன் ஒளி விலகல் எண் 1.756 ஆகும்.
பலவித நிற வேறுபாடுகள் கொண்ட
மாணிக்கம் கிடைக்கப்பெறுகின்றன.
புறா ரத்த வண்ணம் எனப்படும்
(Piegeon Blood Red) மாணிக்கமே மதிப்பு மிக்கது, அணிவதற்கு ஏற்றது.
கண்களில் நோய் உள்ளவர்கள் மாணிக்கம்
அணிந்தால் அந்த நோய்கள் விலகும்.
உடலின் வலிமை கூடும்.வீரிய விருத்தி
உண்டாகும்.
ஆயுளைக் கூட்டும்.
மனதிற்கு சாந்தியைத் தரும்.
அதிகாரத்தைக் குறிக்கும் கல் என்பதால் பழைய காலத்தில் மன்னர்கள் இதை அணிவது வழக்கம். இன்றைய நாட்களில் தலைமை அதிகாரி (CEO) க்கு உரிய கல் இது.
ARGENTINA’S PRESIDENT WITH HER RUBY NECKLACE
தலைமை பீடத்தில் இல்லாதவர் இதை
அணிந்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். அரசியலிலும் ஏற்றம் தரும் கல் இது.
வைத்திய சாஸ்திரங்களில் மாணிக்கத்தின்
பெருமை பலவாறாகப் புகழப்படுகிறது.
பதார்த்த குணசிந்தாமணி என்ற
புகழ்பெற்ற பண்டைய வைத்திய நூல் இதைப் பற்றிக் கூறும் போது,
‘சுர ரோகம் சன்னிகளின் தோஷம்
அதிதாகம்
உரமான மேகம் ஒழியும் – திரமாக
ஊணிக்கொள் நேத்திரநோய் ஓடும்
அரவீன்ற
மாணிக்கத்தால் வசியமாம்’ என்று கூறுகிறது.
இதன் பொருள் ; சுர நோய் தீரும். அதி தாகம், மேக நோய் ஒழியும். கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் போகும். வசியம் உண்டாகும்.
பண்டைய நாகரிகங்களில் மாணிக்கம்!
பண்டைய நாகரிகங்களில் எகிப்திய
நாகரிகம் உள்ளிட்ட நாகரிகத்தில் இது செய்வினை மற்றும் தீய சக்திகளிடமிருந்து காத்துக்
கொள்ள அணியப்பட்டது. மாணிக்கத்தை நனைத்து விட்டு அந்த நீரை வயிற்று வியாதிகளுக்கு அருந்துமாறு
வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அத்தோடு இதன் பொடியை ரத்த சம்பந்தமான நோய்கள் தீர்க்கவும்
இதர மருந்துப் பொருள்களுடன் சேர்ந்து பயன்படுத்தினர்.
எப்போது முதல் முறையாக அணிவது?
சுக்ல பக்ஷ ஞாயிற்றுக்கிழமை
அன்று சூரிய ஹோரையில் இதை அணிவது நலம்.
தங்கம் அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட
மோதிரத்தில் இதைப் பதித்து அணியலாம்.
முதல் முறை அணியும் போது பாலில் இதை அமிழ்த்திப் பின்னர் நீரால் அலம்பி விட்டு அணிதல் வேண்டும்.
நான்கு வகை நல்ல மாணிக்கக் கற்கள்!
மிகப் பழைய நூலான ரஸ ஜல நிதி
மாணிக்கத்தைப் பற்றிய ஏராளமான விவரங்களைத் தருகிறது:
மாணிக்கம் நான்கு வகைப்படும்
1) பத்மராகம் 2) குருவிந்தஜா 3)சௌகந்திகா 4) நீல காந்தி
இதில் தாமரை வண்ணத்தில் (வெள்ளையுடன்
கூடிய சிவப்பு வண்ணம்) கண்ணுக்கு விருந்தாகும் ஒளி பொருந்திய ஒளி ஊடுருவும் வட்ட வடிவமான மிருதுவான ஆனால் கனமான மாணிக்கமே சிறந்தது.இதுவே
பத்மராகம்.
கோரண்டம் (Corundum) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது
சம்ஸ்கிருதத்தில் குருவிந்தம் என அழைக்கப்படுகிறது.
லலிதாம்பிகையின் தலையில் அணியப்பட்டுள்ள
கிரீடம் குருவிந்தத்தால் ஆனது என்பதிலிருந்தே இதன் சிறப்பை அறியலாம். செக்கச் செவேலென
இருக்கும் அழகிய கல் இது.
சௌகந்திகம் மஞ்சள் கலந்த சிவப்பு
வண்ணத்துடன் இருக்கும்.
நீல கங்கா நதியிலிருந்து கிடைப்பது
நீல காந்தி. சிவப்புடன் நீல வண்ணம் உள்ளிருந்து ஒளிர இரண்டு வண்ணமும் கலந்த கல் இது.
இந்த நான்கு வகைகளும் அதன் தரத்தின் படி மேலே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
குறைபாடுகள் எவை?
மாணிக்கத்தில் உள்ள குறைகள்
பின் வருமாறு:
துளைகள் உள்ளது, அழகில்லாமல்
இருப்பது, ஒளியில்லாமல் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, ஓளி புகாத தன்மையுடன் இருப்பது,
தட்டையாக இருப்பது, மிகவும் லேசாக இருப்பது, வடிவமைப்பில் ஒழுங்கற்ற தன்மையுடன் இருப்பது.
இவையிருப்பின் அந்தக் கல்லை
வாங்கக் கூடாது.
ஒரு மாணிக்கத்தில் இரு வேறு
ஒளிகள் அதன் இரு வேறு பக்கங்களிலிருந்து வந்தால் அது அழிவைத் தரும். வாங்கக் கூடாது.
காகத்தின் கால் போல உள்ள தோற்றம்
அளிக்கும் மாணிக்கம் தோல்வியைத் தரும்.
விரிசல் இருப்பின் அதை அணிந்தால்
ஆயுதங்களால் காயம் ஏற்படும்.
மாணிக்கத்தின் உள்ளே சிறு கூழாங்கல்
இருப்பின் நண்பர்கள் அழிவர்; மாடு உள்ளிட்ட கால்நடைகள் அழிந்து படும்.
மாணிக்கத்தின் உள்ளே பால் போன்ற
ஒரு பூச்சு இருப்பின் அதை அணியக் கூடாது. அது துன்பத்தைத் தரும்.
தேனின் நிறத்தைப் போல இருக்கும்
மாணிக்கமும் அணிவதற்குத் தக்கதல்ல. இதை அணிந்தால் ஆயுள் குறையும். துரதிர்ஷ்டம் வரும்.
புகழ் குறையும்.
ஒளி இல்லாத மாணிக்கம் பண இழப்பை உண்டாக்கும்.
புகை போன்ற வண்ணம் உடைய கல் மின்னலினால் விபத்தை ஏற்படுத்தும்.
இவை எல்லாம் ரஸ ஜல நிதி தரும் அறிவுரை!
PICTURE OF RUBY EAR RINGS
நல்ல
மாணிக்கம் எது?
அருமையான மாணிக்கக் கல்லை எப்படி அறிவது?
சூரிய ஒளி அதன் மேல் படப்பட சுற்றுப்புறம் எல்லாம் பிரகாசிக்கும்.
இளங்காலை நேரத்தில் உதய சூரியனின் கிரணங்கள் பட்டவுடன் சிவப்பு ஜூவாலை
போன்ற ஒளியை எந்தக் கல் கக்குகிறதோ அது சிறந்தது.
தூரத்திலிருந்து பார்க்கும் போது சிவப்புத் தீ போல ஜொலிப்பது வம்ச காந்தி
என்று அழைக்கப்படுகிறது. அது உடனடியாக செல்வத்தைத் தரும்.
இருளில் ஒரு மாணிக்கத்தை வைத்தால் அது தன் ஒளியால் சுற்றுப்புறத்தில்
ஒளியைத் தருமாயின் அது நல்ல கல்லாகும்.
கடவுளுக்குக் கூடக் கிடைக்காத மாணிக்கம் அல்லது கடவுளரே ஆவலுடன் விரும்பி
ஏற்கும் மாணிக்கம் எது எனில். அதை ஒரு தாமரை மலரின் உள்ளே வைத்தவுடன் அது விகசித்து
உடனே இதழ் விரித்து மலரும். அதுவே அற்புதமான மாணிக்கக் கல்!
மாணிக்கத்தின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
இரண்டு கேரட் சாதாரணமாக அணியப்படுகிறது.
RUBY STAMP FROM VIETNAM
பிரபலமான மாணிக்கக் கற்கள்!
இது வரை உலகம்
கண்ட புகழ் பெற்ற மாணிக்கக் கற்கள் வருமாறு:
ப்ளாக் ப்ரின்ஸின்
ரூபி (Black Prince’s Ruby)
தைமூர் ரூபி (Timur Ruby)
ரோஸர் ரீவ்ஸ் ஸ்டார் ரூபி (Rosser Reeves Star Ruby)
எட்வர்ட்ஸ் ரூபி
(Edwardes Ruby)
உலகின் பிரபலமான நடிகையும் பேரழகியுமான
எலிஸபத் டெய்லர் 1968 ஆம் ஆண்டு ஒரு மாணிக்கம் பதித்த மோதிரத்தை அணிந்தார். அது உலகினரின்
கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
அதன் எடை 8.24 கேரட். அது 2011இல்
42 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
(ஒரு டாலரின் இன்றைய ரூபாய் மதிப்பு 70) அதாவது ஒரு கேரட்டின் விலை சுமார் ஐந்து லட்சம்
டாலர்!
உலகின் அதிக எடையுள்ள ரூபி ஹோப் ரூபியாகும். இதன் எடை 32.08 கேரட்.
RUBY FROM THAILAND
மாணிக்கம் கிடைக்கும் இடங்கள்!
பர்மாவைத் தவிர அமெரிக்கா மற்றும்
ஆஸ்திரேலியாவிலும் மாணிக்கம் கிடைக்கிறது.
ஒரு முக்கியமான விஷயம், நமது
தமிழ்நாட்டில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மாணிக்கம் உள்ளிட்ட பல கற்கள் உள்ளன.
ரத்தினக் கலையில் நிபுணர்களாக
உள்ள வல்லார் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினால் தமிழகம் மாணிக்க நாடாக ஆகி விடும்.
சிலம்பில் மாணிக்கம்!
தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம்
மாணிக்கத்தையும் முத்தையும் மையமாகக் கொண்டு முடிகிறது.
பாண்டிமாதேவி என் பொற்சிலம்பில்
முத்துப் பரல்கள் உள்ளது என்று கூற கண்ணகி தன் காற்சிலம்பை உடைத்துக் காண்பிக்க அதிலிருந்து
மாணிக்கப் பரல்கள் தெறித்து விழுந்தன.
“கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு
உடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” என அழகுற அந்தக் காட்சியை அமைக்கிறார் இளங்கோவடிகள்.
கண்ணகியின் மாணிக்கக் கற்கள்
மன்னனின் வாயில் தெறிக்க, மதுரை பற்றி எரிந்ததையும் பின்னர் நடந்ததையும் அனைவரும் அறிவர்.
மாணிக்கம் இல்லாத இலக்கியம்
ஒளி இல்லாத இலக்கியம்.
ஆங்கில இலக்கியத்தில் ரால்ஃப்
வால்டோ எமர்ஸன் உள்ளிட்ட கவிஞர்கள் மாணிக்கத்தைத் தங்கள் கவிதையில் இழைத்துள்ளனர்.
தமிழில் மாணிக்கத்தின் பெருமையைச் சுட்டிக் காட்டும் நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன.
பெரியாழ்வார்,
“மாணிக்கம் கட்டி வயிரம் இடை
கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச்
சிறு தொட்டில்”
என்று வர்ணிப்பதிலிருந்து ஆரம்பித்தால்
மாணிக்கப் பட்டியல் நீளும்.
அருளாளர்கள் அனைவரும் மாணிக்கமே
என இறைவனை அறைகூவி அழைக்கும் போது மாணிக்கத்தின் உண்மையான மதிப்பு தெரிய வருகிறது,
இல்லையா?
Date: 25 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 7-22 AM
Post No. 7136
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.
நான் எழுதிய ‘இமயமலையில்
புற்றுநோய்க்கு மருந்து’ என்ற கட்டுரை தினமணியில் உலகப் பலகணி -யின் கீழ் 1992-ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி வெளியானது. அத்துடன் ரஷியாவை
அதிரவைத்த கொலை வழக்குகள், பாட்டில் படத்தின் விலை 21 லட்சம் டாலர் என்ற கட்டுரைகளும் வெளியாகின. முதலில் இமயமலையில்
புற்று நோய்க்கு மருந்து என்பதைக் காண்போம்.
நான் எழுதிய செய்தி 1992-ல் வெளியானது. அதற்குப் பின்னர் 2011-ல்
லண்டனில் வெளியான செய்தி அபாய மணி அடித்துள்ளது. இமயமலை மரங்களில் ‘டாக்ஸால்’ இருப்பதை
அறிந்து அதை அதிகமாக அறுவடை செய்வதால் அந்த இனமே அழிந்து விடும் என்ற பேராபத்து
ஏற்பட்டதாக லண்டன் கார்டியன் (The
Guardian Newspaper, London) செய்தி வெளியிட்டது.
பின்னர் 2015-ல் டாபர் (Dabur) நிறுவனம்
இதை ஆயுர்வேத முறையில் எடுத்துப் பயன்படுத்தப்போவதாக அறிவித்தது.
2002-ல் வெளியான மற்றொரு செய்தி ஆண் மரங்களில் 64 சதவிகிதம் அதிகம் ‘டாக்ஸால்’ கிடைப்பதாக ஆராய்ச்சியில் தெரிய வந்ததாகச் சொல்கிறது.
Thu 10 Nov 2011
Taxol,
a chemotherapy drug used in the treatment of cancer, was first found in the
bark of the Pacific yew tree (Taxus brevifolin). Photograph: National
Cancer Institute/Corbis
A species of
Himalayan yew treethat is used to produce Taxol, a chemotherapy
drug to treat cancer, is being pushed to the brink of extinction by
over-harvesting for medicinal use and collection for fuel, scientists warned on
Thursday.
The medicinal
tree, Taxus contorta, found in Afghanistan, India and Nepal,
has seen its conservation status change from “vulnerable” to
“endangered” on the IUCN’s annual “red list” of threatened
species.
Taxol was discovered by a US
National Cancer Institute programme in the late 1960s, isolated in the bark of
the Pacific yew tree, Taxus brevifolia.
All 11 species of yew have since been found to contain Taxol. “The
harvesting of the bark kills the trees, but it is possible to extract Taxol
from clippings, so harvesting, if properly controlled, can be less detrimental
to the plants,” said Craig Hilton-Taylor, IUCN red list unit manager.
Xxx
Dabur, one of India’s largest
Ayurvedic formulation manufacturers, has now ventured into modern
pharmaceutical research and product development. Dabur recently announced that
it had perfected a method to extract taxol — a potent drug used to treat
ovarian and breast cancers — from the leaves of the Himalayan yew (Taxus
baccata).
Says Anand Burman, director of research and
development at Dabur, “We cannot compete with the big players in the
synthetic pharmaceutical business, so we are limiting our efforts to what we
know best — natural plant products and extracts.”
Xxxx
AGE AND SEX OF TREES DECIDE QUANTITY
OF TAXOL
Taxol content in the bark of
Taxus baccata trees growing in a homogenous (uniform) environment at Jageshwar,
District Almora in Central Himalaya has been quantified. The average taxol
concentration in the bark of sampled trees was 0.0558+/-0.008% (of dry wt.) and
was about 64% higher for male plants (averaged across tree age) in comparison
to female trees. Maximum taxol content was recorded in the bark samples
collected from trees of >110 yrs age.
ANOVA indicates a
significant difference in the taxol content of bark from trees of different
ages, however, differences were not significant between sexes. Taxol was
quantified by HPLC using a standard curve prepared with authentic taxol; the
identification of bark taxol was confirmed by UV and mass spectrometry. The
total taxol content of the bark of Taxus trees across an age series was found
to range between 0.064 to 8.032 g/tree, and a tree of about 100 yrs age can
yield 5.74 kg dry bark.
Date: 25 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 5-32 AM
Post No. 7135
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.
பாக்யா 16-10-2019 இதழில்
அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதினெட்டாம் கட்டுரை – அத்தியாயம் 434
வேண்டியதைத் திறம்படச் செய்து முடிக்க
கெய்ஸன் மற்றும் ஜிடிடி வழிமுறை!
ச.நாகராஜன்
வாழ்க்கையில் திறம்பட முன்னேற்றம் அடைய விரும்பாதாரே
இல்லை. நிறுவனங்களும் எப்படியேனும் உற்பத்தியை அதிகரித்துச் செலவைக் குறைத்து நிறைய
லாபத்தை அடையவே விரும்புகின்றன.
இரண்டாவது உலகப் போர் முடிந்தவுடன் வீழ்ந்து கிடந்த
ஜப்பான் எப்படியேனும் எழுந்து நிற்க வேண்டும் என்று எண்ணியது. அதன் விளைவாக ஜப்பானியர்கள்
பல உத்திகளைக் கையாண்டனர். அவற்றில் ஒன்று கெய்ஸன்(Kaizen).
கெய்ஸன் என்றால் தொடர்ந்த முன்னேற்றம் என்று பொருள்.
ஒரு மாற்றத்தை அதிரடியாக ஒரே நாளில் அடைவது என்பது கடினம். ஆகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
விதத்திலும் சிறுகச் சிறுக தொடர்ந்து முன்னேற்றம் அடைதல் என்ற உத்தியை ஜப்பானிய நிறுவனங்கள்
கையாள நினைத்தன. இந்த தொடர் முன்னேற்றமான கெய்ஸனை மிகவும் வெற்றிகரமாக ஜப்பானின் டொயோடோ
நிறுவனம் கையாண்டது. உலகமே பிரமிக்கும் வண்ணம் அதன் உற்பத்தி அதிகரிக்க, தரமோ வானளவு
உயர்ந்தது.
இதனால் உலக நிறுவனங்கள் இந்த கெய்ஸன் எனப்படும்
தொடர் முன்னேற்றத்தை அமுல் படுத்த ஆரம்பித்தன.
திட்டமிடு – செய்- சரிபார்- செயலில் இறங்கு. இது
தான் கெய்ஸன்.
ஒரு சின்ன குப்பைக் கூடையை இடம் மாற்றி வைப்பதால்
கூட நேர விரயம் தவிர்க்கப்படுகிறது என்பது ஆச்சரியமான விஷயம் என்றாலும் கூட அது உண்மைதான்.
எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் நாற்காலி போன்ற பர்னிச்சர் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திய ஹெர்மன் மில்லர் என்பவர் கெய்ஸனில் ஆர்வம் காட்டி அதை அமுல்படுத்த ஆரம்பித்தார். ஏரான் சேர் (Aeron Chair) என்பது அவரது நிறுவனத்தின் புகழ் பெற்ற தயாரிப்பு. ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலும் சரி, டி.வி. ஷோக்களானாலும் சரி, சேர் என்றால் அது ஏரான் நாற்காலியாகத் தான் இருக்கும். அப்படி ஒரு புகழ்!
2012இல் அவர் கெய்ஸனை ஆரம்பித்தவுடன் 1998ஆம்
ஆண்டை ஒப்பிடும் போது 500 சதவிகிதம் உற்பத்தி அதிகமானது. தரமோ 1000 சதவிகிதம் உயர்ந்தது.
ஒரு நாற்காலி தயாரிக்க 82 விநாடிகள் என்பது வெறும் 17 விநாடிகள் என்றானது.
முழு நாற்காலியும் உற்பத்தி வரிசையிலிருந்து முழுவதுமாக
பாக்கிங் முடிய 600 விநாடிகள் என்பதிலிருந்து 340 விநாடிகள் என்றானது.
கெய்ஸனின் வெற்றியால் மனம் மகிழ்ந்தோர் அதைத்
தனிப்பட்ட வாழ்வில் உயரவும் பயன்படுத்த ஆரம்பித்தனர். ஒரு மனிதன் ஒரேயடியாக ஒரே நாளில்
உயர்ந்து விட முடியுமா? முடியாது.
படிப்படியாகத் தொடர் முன்னேற்றம் அடைய கெய்ஸன் விதிகள் பயன்படுத்தப்பட்டு பார்த்ததில் நல்ல விளைவுகள் தெரிந்தன.
கெய்ஸனின் பத்து விதிகள் வருமாறு :
சம்பிரதாயமான தொடர்ந்து கடைப்பிடித்து வந்த உளுத்துப் போன கருத்துக்களைத் தூக்கி எறியுங்கள்
எப்படி முடிப்பது என்று பாருங்கள், ஏன் அதை முடிக்க முடியாது என்று காரணம் சொல்லாதீர்கள்
செய்ய முடியாததற்கு காரணம் சொல்லி மன்னிப்புக் கேட்காதீர்கள். இப்போதிருக்கும் நடைமுறை பற்றிக் கேள்விகளைக் கேட்டு அலசுங்கள்.
100 சதவிகிதம் முழுமையாக ஒரு செயல் உடனே முடிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். 50 சதவிகிதம் அடைய முடியும் என்றாலும் அதை இப்போதே செய்யுங்கள்.
ஒரு தவறு செய்யப்பட்டால் அதை உடனடியாகத் திருத்துங்கள்
ஏன் என்று ஐந்து முறை கேளுங்கள். பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள்
ஒரு தனிப்பட்டவருடைய அறிவை நம்புவதை விட பத்துப் பேரைக் கலந்தாலோசித்து அனைவரின் அறிவையும் பயன்படுத்துங்கள்
கெய்ஸன் அடிப்படையிலான கருத்துக்கள் எண்ணிலடங்காதவை. அனைத்தையும் தெரிந்து கொள்ள முயலுங்கள்; பயன்படுத்துங்கள். தொடர் முன்னேற்றத்தை அடையுங்கள்.
கெய்ஸன் ஒரு புறமிருக்க, நாளுக்கு நாள் அறிவியல் முன்னேற்றத்தினால் தேவைகளும் அதிகரிக்கின்றன; உத்திகளும் கூட மாறுபடுகின்றன.
ஏராளமான வேலைகள்! பல காரியங்களை அவசரம் என்ற பெயரில்
உடனுக்குடன் செய்ய வேண்டி இருக்கிறது. கணினித் துறையிலோ கேட்கவே வேண்டாம். நாளைக்கு
ஆரம்பிக்க வேண்டிய வேலைக்கு நேற்றே முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது!
திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைக்க வேண்டி இருக்கிறது;
நன்கு திட்டமிட வேண்டி இருக்கிறது.
எந்த ஒரு இடத்திலும் சிறிது குறை என்றால் ஏகப்பட்ட
நஷ்டத்தைச் சந்திக்க நேரிடுகிறது.
ஆகவே Getting Things Done – சுருக்கமாக GTD எனக் கூறப்படும் புது வழியைத் தருகிறார் டேவிட்
ஆலன் என்னும் அமெரிக்கர். இவரது Getting Things Done என்ற புத்தகம் 15 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்திருக்கிறது.
உற்பத்தித் திறனைக் கூட்டுவதற்கான பைபிள் என்று இதைப் புகழ்கின்றனர்.
2001ஆம் ஆண்டு முதலில் வெளியான இது 2015ஆம் ஆண்டு புதிய வடிவில் வெளியிடப்பட்டு உலகினரின்
கவனத்தை ஈர்த்திருக்கிறது!
தொழிலகங்களின் உற்பத்திப் பெருக்கத்திற்கும் தனி நபர் முன்னேற்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுவது இயல்பே. ஆலன் கூறும் வழிகளை அப்படியே வாழ்க்கை முறையிலும் பயன்படுத்த முடியும். நாம் நினைத்ததை அடைய முடியும்.
அவர் கூறும் பல வழிகளில் முக்கியமான சில இதோ:
ஒரு ‘கலெக் ஷன் பக்கெட்டை’ உருவாக்குங்கள். அதென்ன கலெக் ஷன் பக்கெட்?
பல விஷயங்களைச்
செய்ய வேண்டுமென்றால் அதை மனம் அடிக்கடி நினைவூட்டி நம்மை செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து
திசை திருப்புகிறது. பால் வாங்க வேண்டும், பால் வாங்க வேண்டும் என்று அடிக்கடி நினைவூட்டுகிறது
மனம். ஆனால் வீட்டிற்குப் பால் வாங்காமலேயே போகும் போது வருத்தப்படுகிறோம். ஆகவே ஒரு
சின்னப் பேப்பரில் இப்படிப்பட்ட விஷயங்களை எழுதி விடுங்கள். வேலை முடிந்தவுடன் அதைப்
பாருங்கள். செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்ய முடியும். இந்தச் சின்னப் பேப்பர் தான்
செய்ய வேண்டியவற்றைச் செய்ய உதவும்
‘கலெக் ஷன் பக்கெட்!
அடுத்த செயல் என்ன என்பதற்கான பட்டியல்.
இப்படி பல துண்டுச்
சீட்டுகளை எழுதி வைத்திருக்கிறேன், ஒன்றும் நடக்கக் காணோம் என்று சொல்வோருக்கு ஆலன்
கூறும் அடுத்த வழி இது. பல செயல்களைச் செய்து முடிக்கத் துடிப்போருக்கு, அடுத்து உடனடியாகச்
செய்ய வேண்டிய செயல் என்ன என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். இதன்
மூலம் ஒவ்வொரு காரியமாக முடிந்து கொண்டே இருக்கும் – டென்ஷன் இல்லாமல். தனிநபரின் காரியத்
திறன் கூடும்; கூடிக் கொண்டே இருக்கும்.
3) வாராந்திர
மதிப்பீடு செய்யுங்கள்
குறித்து வைக்கப்பட்டவை முடிகிறதா, பெண்டிங் என்றால் ஏன் அப்படி ஏற்பட்டது, அதை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள் என்கிறார் ஆலன்.
இது மட்டுமல்ல,
பல செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் (எடுத்துக்காட்டாக
திரைப்பட ஷூட்டிங் என்று வைத்துக் கொள்வோம் அல்லது ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர் லாப்
டாப்பில் உட்கார்ந்து வேலை செய்வதை எடுத்துக் கொள்வோம்) தங்கள் வேலைகளை 25 நிமிட வேலைப்
பகுதிகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு 25 நிமிட வேலை 5 நிமிட ஓய்வு என்று செய்து கொண்டிருந்தால்
அதிகமாகத் திறனுடன் வேண்டியதைச் சாதிக்க முடியும் என்கிறார் ஆலன்.
பல லட்சம்
பேர் உலகில் கெய்ஸன் வழியாலும் ஜிடிடி முறையாலும் இன்றைய அவசர யுகத்தில் பலன் பெற்று
வருகின்றனர். நாமும் பலன் அடையலாமே!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அமெரிக்க கணித
மேதையும் எலக்ட்ரிகல் எஞ்ஜினியருமான க்ளாட் எல்வுட் ஷனான் (Cladude Elwood Shannon தோற்றம்:3-4-1916 – மறைவு: 24-2-2001) வாழ்வில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு.
ஃபாதர் ஆஃப் இன்பர்மேஷன்
தியரி (Father of Information Theory) என்று கொண்டாடப்படுபவர்
அவர்.
செஸ் விளையாட்டில் எத்தனை சிக்கலான கணித நகர்த்துதல்கள்
என்பதைப் பற்றிய பேப்பரை 1950 இல் சமர்ப்பித்த அவர் அதில் பத்தின் 120 மடங்கு அடுக்குகள்
உள்ளன என்றார். அதாவது ஒன்றைத் தொடர்ந்து 120 பூஜ்யங்களைப் போட்டால் வரும் பிரம்மாண்டமான
எண் அது.
செஸ் விளையாட்டை
விளையாடும் மெஷினையும் அவர் தான் உருவாக்கினார். உலகினரை பிரமிக்க வைக்கும் மூளையைக்
கொண்ட அவருக்கு மேடையில் பேசுவது என்றால் நடுக்கம் தான். ஆயிரத்து தொள்ளாயிரத்து
அறுபதுகளிலிருந்தே தான் உருவாக்கிய துறை சம்பந்தமான கூட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்தி
விட்டார் அவர். 1973 இல் அவர் பெயரால் நிறுவப்பட்ட ஷனான் லெக்சரில் உரையாற்ற அவரை அழைத்தனர்.
கடைசி நிமிடத்தில் கூட்டத்தில் உரையாற்ற மறுத்து விட்டார்.
1985இல் பன்னாட்டு இன்பர்மேஷன் தியரி பற்றிய கருத்தரங்கில் திடீரெனத் தோன்றவே அவரைப் பேசுமாறு அனைவரும் வேண்டவே சில நிமிடங்கள் உரையாற்றினார். திடீரென்று தான் போர் அடிக்கிறோமோ என்று நினைத்தவர் தன் பையிலிருந்து மூன்று பந்துகளை எடுத்து தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தார்.
இது அவரது பொழுதுபோக்குகளில்
ஒன்று!
வந்தவர் ஷனான்
என்பதை அறிந்து கொண்ட கூட்டத்தினரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவரிடம் ஆட்டோகிராப்
வாங்க பெரும் வரிசை உருவானது. அனைவரையும் திருப்திப்படுத்தினார் அந்த மேதை!
Date: 22 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 7-42 am Post No. 7124
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992ம்
ஆண்டில் நான் வாரம் தோறும் தினமணி பத்திரிக்கையில் எழுதி வந்த உலகப் பலகணி
ப்குதியிலிருந்து மேலும் ஒரு கட்டுரை.
அனைவரும்
போற்றும் 500 வயது மரம் ! published in Dinamani on
6-9-1992; written by S Swaminathan from London
இது
போல நாமும் புகழ்பெற்ற மரங்களை, குறிப்பாகத் தமிழ் நாட்டுக் கோவில் தல மரங்களப் பாதுகாக்க வேண்டும்.
மதுரை, காஞ்சீபுரம்
போன்ற இடங்களில் பாதுகாத்து வைக்கப்பட்ட பட்டுப் போன மரங்களை விஞ்ஞான முறையில்
கார்பன் டேட்டிங் செய்து முடிவுகளை வெளியிட வேண்டும்.
புத்தரின்
போதி/ அரச மரம் உலகப் புகழ் பெற்றுவிட்டது. ஆனால் புகழ்பெறாத பெரிய ஆலமரங்கள், நம்மாழ்வாரின் புளிய மரம், தான்ஸேனின் புளிய மரம், கட்டபொம்மனின் தூக்கு மரம்
முதலியவற்றையும் சுற்றுலாத் தலங்கள் ஆக்க வேண்டும்.
மேலும்
புகழ்பெற்ற மரங்கள் பற்றித் தபால் தலைகள் வெளியிட வேண்டும்.
கட்டபொம்மன்
தூக்கிலிடப்பட்ட மரத்துக்கு அடியில், போகும் வரும் யாத்ரீகர்கள் ஒரு சிறு
கல்லைப் போட்டு மரியாதை செய்வர் என்று எழுதப்பட்ட, 100 ஆண்டுக்கு முந்தைய புஸ்தகத்தை பேஸ்
புக்கில் வெளியிட்டேன். இப்பொழுது அந்த இடம் இருந்தால் , அதையெல்லாம் மரியாதைக்குரிய
சின்னங்களாக மாற்ற வேண்டும்.
என்னிடமே பிரிட்டனின் புகழ்பெற்ற மரங்கள் பற்றிய நூலும்
மாதம் தோறும் வெளியாகும் மரங்கள் பற்றிய பத்திரிக்கையும் உள்ளன. இது போல மரம்
அறிவு பெருகி “மரத்தடியர்கள்” அதிகரிக்க வேண்டும்.
மரத்தடியர்கள்
= மரத்துக்கு அடியில் வசிப்போர்! வானப் ப்ரஸ்தர்கள்; புத்தர், நம்மாழ்வார் போன்ற ஞானிகள்.
மரங்கள் பற்றி எனது பிளாக்கில் 20, 30 கட்டுரைகள் உள. படித்து இன்புறுக.
Following is
from Daily Mail (Nov.14, 2014)
The Major Oak in Nottinghamshire’s Sherwood Forest was a clear
winner in a public vote run by the Woodland Trust.
It
claimed 2,317 votes or 18 per cent of the 13,000 cast in just eight days
earlier this month.
The
Major Oak is said to be where Robin Hood and his Merry Men slept when not
stealing from the rich and giving to the poor.
It
gets its name from Major Hayman Rooke, an 18th century historian, who described
it in 1790.
But
it is thought to have stood within what is now Nottinghamshire County Council’s
Sherwood Forest Country Park for up to 1,000 years.
It
boasts a girth of 33ft, a spread of 92 ft, weighs 23 tons and each year
produces up to 150,000 acorns.
Its
nearest rivals were two other ancient oaks – Old Knobbley in Mistley, Essex,
and the Ickwell Oak in Ickwell, Bedfordshire.
7 branched Palmyra Tree, Kallal Tamarind Tree of NammalvarPicture by Lalgudi VedaTree Worship in VaranasiSangu/ Conch Katha Perumal TempleSave Our Trees; Dont cut them.TansenTansen’s Famous Tamarind Tree
Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8-13 am Post No. 7119
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் 19-10-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 3
ச.நாகராஜன்
சங்க காலம் முதல் கண்ணதாசன் வரை
தலைவன் தலைவியிடம் உன்னை விட்டு ஒருநாளும் பிரியமாட்டேன் என்று சொல்லும் ஒரு காட்சி.
அரக்கில் பதிந்த வைரத்தைப் போல உன்னை விட்டு ஒருநாளும் பிரிய மாட்டேன் என்கிறான் அவன்.
சங்க காலத்திற்கு முன்பிருந்தே இன்று பழனி என்று நாம் அழைக்கும் சங்க காலப் பொதினி நகரில் வைரத்தைப் பட்டை தீட்டும் தொழில் சிறப்பாக நடை பெற்று வந்தது. இங்கு பட்டை தீட்டும் நிபுணருக்கு காரோடன் என்று பெயர். ஒரு குச்சியின் முனையில் அரக்கை வைத்து, அந்த அரக்கின் நுனியில் வைரத்தை வைத்துப் பட்டை தீட்டுவது வழக்கம். ஆக
“சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரிந்திலம்” என்ற சங்க இலக்கியத்தின் வரி நமக்குக் காதலின் ஆழத்தை விளக்குகிறது.
‘அரக்குடன் ஒட்டிய பிரிக்க முடியாத வைரத்தைப் போல உன்னுடன் ஒட்டி பிரிய மாட்டேன்’ என்கிறான் காதலன், காதலியிடம்.
அகநானூற்றில் களிற்றியானையில் வரும் முதல் பாடலில் மலரும் காட்சி இது.
இன்னொரு காட்சியை சிறுபாணாற்றுப்படை சித்தரிக்கிறது. பாணன் பார்க்கும் காட்சி இது.
‘இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த’ என்ற வரி சங்க காலத்தில் வைரமானது அன்றாடத் தமிழரின் வாழ்க்கையில் எத்தகைய சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என்பதைத் தெரிவிக்கிறது.
‘தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்’ – கவியரசு கண்ணதாசன் பாசமலருக்காக வரைந்த வைர வரி இது.
வளம் வாய்ந்த வைர நாடாக தமிழகம் விளங்கியதை இது போன்ற நூற்றுக் கணக்கான அழகிய பாடல்கள் சித்தரிக்கின்றன.
மஹாபாரதம், வால்மீகி ராமாயணம் போன்ற இதிஹாஸங்கள் வைரம் பற்றிய சுவையான தகவல்களைத் தருகின்றன.
வைரத்தின் ஒளிச் சிதறலால் இரவே இல்லையாம் அயோத்தியிலும் இலங்கையிலும்! வைரங்கள் பதிக்கப்பட்ட மதில்களும் மாளிகைகளும் ஒளி வீசுவதை எண்ணிப் பார்த்து பிரமிக்கிறோம். அனைவரும் அணிந்திருக்கும் வைரங்களின் ஒளியால் சூரிய ஒளி மங்கி விடுகிறதாம்!
இது போல இந்தியா முழுவதும் உள்ள இலக்கியங்கள் வைரத்தின் ஒரிஜினல் பூமியான இந்தியா பற்றி எத்தனை ஆயிரம் செய்திகளைத் தருகின்றன என்பதை எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.
வைரத்தின் 12 குற்றங்கள்
வைரத்தின் குற்றங்களையும் குணங்களையும் தரும் தமிழ் நூல்களும் பல.
வைரத்தின் குற்றங்கள் 12.
சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை,கரி, விந்து, காகபாதம்,இருத்து, கோடியில்லன, கோடி முரிந்தன, தாரை மழுங்கல் ஆகிய பன்னிரெண்டும் குற்றங்கள். இவற்றில் மிக மோசமானவை 4.
காகபாதம் நாகம் கொல்லும். (காகபிந்து என்றால் கரும்புள்ளி என்று பொருள்)
விந்து பைத்தியம் பிடிக்க வைக்கும்.
மலம் பிரியாதது நிலந்தரு கிளை கெடும் (மலம், உறவினர் அனைவரையும் அழித்து விடும்)
கீற்று வரலினை ஏற்றவர் மாய்வர். (கீற்று உள்ள வைரத்தை அணிபவர் மரணம் அடைவர்)
ஐந்து நல்ல குணங்கள்
வைரத்தின் குணங்கள் 5.
பலகை எட்டு, கோணம் ஆறு, தாரை, சுத்தி, தராசம் என்பன குணங்கள்.
குற்றங்களையும் குணங்களையும் நிபுணர்கள் மட்டுமே அறிவர்.
சாமானியனுக்குப் புரியும் வகையில் சொன்னால் கோடு, கீறல், புள்ளி, பிளவு ஆகியவை வைரத்தில் இருக்கக் கூடாது.
அதிக ஒளி, வண்ண ஜாலங்கள், நல்ல பட்டைகளின் ஒளிப் பிரதிபலிப்பு ஆகியவை குணங்கள். வைரம் இல்லத்திற்கு வந்தவுடன் பல நல்ல விஷயங்கள் நடப்பது குணங்களின் உடனடிப் பயன்.
நல்ல பலன்கள்
நல்ல பலன்கள் என்பவை : அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்டும். அறிவு பிரகாசிக்கும். மனம் எப்போதும் அலை பாயாது அமைதியுடன் இருக்கும். எதிலும் அதிர்ஷ்டம் வரும். கலைகளில் ஈடுபாடும் வெற்றியும் உண்டாகும். செல்வம் சேரும். வளம் கூடும். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். எதிரிகள் தோற்று ஓடுவர். செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படும். நல்ல நீடித்த திருமண வாழ்வு கைகூடும்.
கண்கள், தொண்டை, ஜனன உறுப்புகள், ஜீரண மண்டலம், சிறுநீரகக் கல் ஆகியவற்றில் ஏற்படும் வியாதிகள் நீங்கவும் வைரம் அணிதல் சிறந்தது. செய்வினை உள்ளிட்ட அதிமானுஷ்ய தீய சக்திகளால் பயம் ஏற்படாது.
கிரேக்க நாட்டின் பேரறிஞரான ப்ளினி வைரம் விஷத்தை முறிக்க வல்லது என்றும் சித்தபிரமையை நீக்க வல்லது என்றும் குறிப்பிடுகிறார். ஒயினிலோ அல்லது நீரிலோ வைரத்தை அமிழ்த்தி விட்டு அதை அருந்தினால் மூட்டு வலி, மஞ்சள் காமாலை, இரத்தக் கசிவு உள்ளிட்டவை நீங்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். கெட்ட கனவுகளைப் போக்கும், பிசாசுகளை அண்ட விடாது தீய கண் திருஷ்டியை வைரம் போக்கும் என்றும் அவர் விவரமாகக் குறிப்பிடுகிறா
ரஸ ஜல நிதி தரும் உண்மைகள்
ரஸ ஜல நிதி வைரத்தை மூன்று வகையாகப் பிரிக்கிறது.
1) ஆண் (Masculine) 2) பெண் (Feminine) 3) நியூட்ரல் (Neutral)
ஆண் வைரம் என்பது ஆறு அல்லது எட்டு முகம் கொண்டது. வானவில் போன்ற வர்ணஜாலங்களைக் காண்பிப்பது. கோடுகள், புள்ளிகள் அற்றது.
பெண் வைரம் என்பது உருளை வடிவமானது. ஆறு கோணம் கொண்டது. ஆண், பெண் இரண்டுமற்ற நியூட்ரல், மூன்று கோணம் கொண்டது.மெலிதானது. நீளமானது.
முதல் இரண்டு ரகங்களும் அணியக் கூடியவை. மூன்றாவது ரகம் விலக்கப்பட வேண்டிய ஒன்று.
வைர வடிவங்களும் ஜொலிக்கும் பட்டைகளும்
உயர் ரக வைரம் இலேசாக இருக்கும்.
அதன் ஒப்பற்ற குணங்களில் ஒன்று, அதை எக்ஸ் ரே ஒளியில் பார்த்தோமெனில் அது ஒளியைக் கக்கும். (Flourescence). ஆகவே வைரத்தை ஏனைய கற்களிலிருந்து இனம் பிரிக்க எக்ஸ் ரே பயன்படுத்தப்படுகிறது.
வைரத்தில் 58 வெட்டுகள் இருக்கும். பட்டை தீட்டத் தீட்ட வைரம் ஜொலிக்கும். (படத்தில் 58 வெட்டுகளைக் காணலாம். மேல் பகுதியில் 33ம் கீழ்ப் பகுதியில் 25ம் இருப்பது வழக்கம்)
ஹாலந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரம் தான் உலகிலேயே மிகப் பெரிய பட்டை தீட்டும் இடம் ஆகும்.
வைரத்தினாலும் எண்ணெயினாலும் பூசப்பட்ட சுழலும் உலோக பிளேடு ஒன்றைக் கொண்டு வைரத்தை அறுப்பார்கள். இப்படி அறுக்க இரண்டு நாட்கள் ஆகும்.
வைரத்தின் முகங்களுக்குப் பல பெயர்கள் உண்டு.
Table,Star,Templet,Lozene,Quotin,Cross, Skew,Skilt என இப்படிப் பல பெயர்கள்!
வடிவங்களும் கூட இதயம் (Heart), பியர் (piar), ஓவல் (Oval), எமரால்ட் ( Emerald) என இப்படிப் பல பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.
பேரமில்லாத வைர வியாபாரம்!
வைர வியாபாரத்தின் உலகத் தலைமையகம் டீ பீர்ஸ் நிறுவனம் தான். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டீ பீர்ஸ் கன்ஸாலிடேடட் மைன்ஸ் என்ற நிறுவனம் வைரங்களை லண்டனிலுள்ள மத்திய விற்பனை நிலையம் எனப்படும் Central Selling Organisation- CSO-க்கு அனுப்புகிறது.
சூரிய ஒளி நன்கு விழுகின்ற வடக்கு திசையை நோக்கி அமர்ந்து இங்குள்ள 600 தொழிலாளிகள் – அனைவரும் வைர நிபுணர்கள் – 5000 விதமாக வைரத்தைத் தரம் பிரிக்கிறார்கள்.
நகைகளுக்கு உகந்தது அல்ல எனப்படும் வைரங்கள் தொழிலகம் உள்ளிட்ட இதரப் பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிபுணர்கள் இயந்திரங்களைக் கையாளுவதில்லை. கைத்திறனையும் தங்கள் நிபுணத்துவத்தையும் கொண்டு தான் வைரத்தைப் பிரிக்கிறார்கள்.
வைரம் வாங்குவதில் பேரம் என்பதே கிடையாது. சொன்ன விலை சொன்னது தான்!
ஆண்டுக்கு பத்து முறை மட்டுமே லண்டன், சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் வைர விற்பனை நடைபெறும். சுமார் முன்னூறு வியாபாரிகள் உலகெங்குமிலிருந்து வந்து வைரங்களை வாங்குகிறார்கள்.
வாங்க வருவோர் தங்கள் தேவை என்ன என்பதை முதலில் சொல்ல வேண்டும். பின்னர் வைரங்கள் சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் தரப்படும். அதை வியாபாரிகள் பார்வையிடுவர். பின்னர் வாங்குவர். வாங்கும் போது மொத்த அட்டைப் பெட்டியையும் வாங்க வேண்டும். பிடிக்கவில்லையெனில் அப்படியே திருப்பிக் கொடுத்து விடலாம்.
ஒரு வைரத்தை வாங்கும்போது நம் பார்க்க வேண்டிய இன்னும் ஒரு C உள்ளது. அது தான் Certificate. விற்பவர் தானே கொடுத்துக் கொள்ளும் லாபரட்டரி சர்டிபிகேட் அல்லது விற்கும் நிறுவனத்தின் சர்டிபிகேட் அல்ல இங்கு குறிப்பிடப்படுவது. GIA (ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்கா) போன்ற அதிகாரபூர்வ நிறுவனங்களின் சர்டிபிகேட் உள்ளதா என்பதையே பார்க்க வேண்டும்.
சுக்ரனுக்குரியது வைரம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்ரனுக்குரியது வைரம். சுக்ரன் லக்னாதிபதியாக இருந்தாலும் சுக்ரன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தாலும் வைரத்தை அணிவது அமோகப் பலனைத் தரும், ஆயுளையும் நீட்டிக்கும்.
கருட புராணம் ரஸ ஜல நிதி ஆகிய நூல்களில் வரும் ஒரு எச்சரிக்கைக் குறிப்பையும் அறிந்து கொள்வது அவசியம்.
மணமாகி குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வைரத்தை அணிதல் கூடாது என்பதே அந்தக் குறிப்பு. குழந்தைப் பேற்றை அடைந்தவுடன் அணியலாம்.
நகைகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட வைரங்களைத் தவிர இதர ரகங்கள் தொழிலகத்தில் பல்வேறு பயன்பாட்டுகளுக்காகவும், பல சாதனங்களின் தயாரிப்பிற்கும் உதவுகின்றன.
கண்ணிற்கான காண்டாக்ட் லென்ஸில் வைரம், விண்ணில் பறக்கும் விண்கல ஜன்னலில் வைரம் என ஆயிரக் கணக்கில் வைரங்களைப் பற்றிய சுவையான செய்திகள் உண்டு.
எம்.எஸ்., பத்மினி, எலிஸபத் டெய்லர், மர்லின் மன்ரோ
பாரத் ரத்னா இசையரசி எம்.எஸ்.ஸின் கச்சேரிக்குச் சென்றவர்கள், குறிப்பாகப் பெண்மணிகள், அவரது இசையை வானளாவப் புகழ்வதோடு மட்டுமல்லாமல் அவரது டால் அடிக்கும் வைர மூக்குத்தி பற்றியும் பேசாமல் இருக்க மாட்டார்கள்.
தில்லானா மோகனாம்பாளில் பத்மினியின் ஜொலிக்கும் முக்குத்தியும் நகைகளும் நாட்டியப் பேரொளியின் நடனம் பேசப்பட்ட அளவு பெரிதும் பேசப்பட்டவை.
இன்னும் எலிஸபத் டெய்லரின் வைர மோதிரம், க்ரேஸ் கெல்லியின் வைர நகை ஆகியவை உலகினரின் உள்ளத்தைக் கவர்ந்ததில் வியப்பே இல்லை.
எலிஸபத் டெய்லர், “பெரிய பெண்மணிகளுக்கு பெரிய வைரங்கள் தேவை” (Big girls need big Diamonds) என்று ஒரு போடு போட்டார்.
பிரபல அமெரிக்க டி.வி.சீரியல் பிரபலமான நிகோல் ரிச்சி, “உண்மையான நண்பர்கள் வைரங்களைப் போல – பிரகாசமானவர்கள்.அழகானவர்கள்.மிக்க மதிப்புடையவர்கள், எப்போதும் ஸ்டைலை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் என்று சொன்ன பொன்மொழி வைர மொழியாக மதிக்கப்படுகிறது.
உலகை மயக்கிய பேரழகி மர்லின் மன்ரோ 1953ஆம் ஆண்டு,’ஒரு பெண்மணியின் உண்மைத் தோழி வைரமே’ என்று பிரகடனம் செய்தார்.
நாரீமணிகளின் உண்மைத் தோழி வைரங்கள் தானே?
எப்போதும் நிலைத்து நிற்பது வைரம் மட்டுமே!
இதற்கான ஆங்கில வாசகங்களான், ‘Diamond’s are girl’s best friend’, A Diamond is For Ever’ என்ற விளம்பர வாசகங்களை பற்பல கோடி ரூபாய்களைச் செலவழித்து டீ பீர்ஸ் நிறுவனம் உலகத்தில் மறக்க முடியாதபடி நிலை நிறுத்தி விட்டது.
Date: 19 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 18-58 Post No. 7114
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
அட, இந்த ஒன்பது தெரியாதவர் யார்? விலைதான் அதிகம்.
குறுக்கும் நெடுக்குமாகப் போங்கள்; கொஞ்சம் வளைந்தும், நெளிந்தும் பாருங்களேன்.
Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-39
Post No. 7113
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.
Date: 19 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 6-05 am Post No. 7111
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஹெல்த்கேர் (Health care Magazine) அக்டோபர் 2019 இதழில் வெளியான கட்டுரை
Program for Dynamic Health : (ப்ரோக்ராம் ஃபார் டைனமிக் ஹெல்த்) : எழுதியவர் :T.C.Fry
ச.நாகராஜன்
1
Natural Hygiene எனப்படும் இயற்கை சுகாதாரத்தை அறிமுகப்படுத்தியவர்
டி.சி. ஃப்ரை.
1926, ஜூலை மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவில்
ஓக்லஹாமா, பென்னிங்டனில் பிறந்த அவருக்கு 1970இல் இயற்கை உணவு சார்ந்த
வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. அதை ஆராயத் தொடங்கினார். ஏராளமான புத்தகங்களை
எழுதினார். 1976இல் Health Sciences Institute
ஒன்றையும் நிறுவினார்.தனது 69ஆம் வயதில் காலமானார்.
அவர் எழுதிய
புத்தகங்களுள் ஒன்று “Program for Dynamic Health”.
118 பக்கமே உள்ள
இந்தச் சிறிய புத்தகம் ஆரோக்கியத்துடன் வாழ பல முக்கிய குறிப்புகளை அளிக்கிறது.
புத்தகத்தின் சில முக்கிய பகுதிகளை இங்கு பார்க்கலாம்.
2
ஒரு நல்ல வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத காரணிகள் 18.
அவையாவன : சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், சுத்தம், வெப்பம், தூக்கம்,
சத்துள்ள உணவு, உடல் பயிற்சி, ஓய்வும் இளைப்பாறுதலும்,சூரிய ஒளி, உணர்ச்சிகளில்
நிதானம், இன்பமான சுற்றுப்புறச் சூழல், பாதுகாப்பான வாழ்வும் அதற்கான வழிமுறையும்,
தன்னான்மைத் திறம்,ஊக்கம் அல்லது தன்முனைப்பாற்றல், பயனுள்ள வேலையை உருவாக்கல்,உடைமை, இயற்கையான
உள்ளுணர்ச்சிகளை வெளிப்படுத்தல், கலை, அழகுணர்ச்சிகளில் ஈடுபாடு ஆகியவை.
உபவாசமிருத்தல் : நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திட்டமிட்ட கட்டுப்பாடான உபவாசம்
தேவை. குறிப்பிட்ட நேரம் மட்டும் இந்த உபவாசத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பழ வகைகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைக்கப்பட்ட உணவு வகைகளைக் கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ளலாம். உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
உடல்பயிற்சியின் போது அனைத்து அங்கங்களையும் அதில் ஈடுபடுத்த வேண்டும்.
எப்போதும் நிமிர்ந்து உட்காருதல் நல்லது. நடக்கும் போது நிமிர்ந்த தலையுடன்
நடத்தல் வேண்டும்.
களைத்துப் போயிருந்தால் சற்று ஓய்வெடுங்கள். ஓய்வெடுக்கும் போது
படிக்காதீர்கள். டி.வி.பார்க்காதீர்கள்.
சீக்கிரம் தூங்கச் செல்லுங்கள். நல்ல காற்றோட்டமுள்ள, அமைதியான, இருட்டு
அறையில் உகந்த சீதோஷ்ண நிலையில் தூங்குவது அவசியம்.
சந்தோஷமாக இருப்பதற்கு ஏதேனும் ஒன்றைச் செய்து கொண்டே இருங்கள்.
வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்றைக் கொண்டு அதை அடைவதற்கான செயல்களில்
இறங்குங்கள். நல்ல பிடித்தமான ஹாபி ஒன்றில் ஈடுபடுங்கள்.
டிக்ஷனரி ஆஃப் மேன்’ஸ் ஃபுட்ஸ் – டாக்டர் வில்லியம்
எஸ்ஸர் (Dictionary of Man’s Foods by Dr William Esser) எழுதியதைப் படித்து சாப்பிடுவதற்குரிய உணவு வகைகளைப் பற்றித் தெரிந்து
கொள்ளுங்கள். (அதாவது Sweet Fruit, Sub Acid Fruit,
Acid Fruit, Melons, Proteins, Starches, Non Starchy Vegetables ஆகியவை எவை எவை என்பதைத் தெரிந்து கொண்டு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்)
அமிலம் மற்றும் ஸ்டார்ச் உணவு வகைகளைத் தனித் தனி நேரங்களில் (காலை, மதியம்,
இரவு சாப்பாடு போன்றவற்றில்) உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும்
சேர்ந்து சாப்பிட்டால் அஜீர்ணம் ஏற்படும்.
அதே போல புரோட்டீனையும் கார்போ ஹைட் ரேட்டையும் தனித் தனி நேரங்களில் உணவில்
சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இப்படி எதை எதை எப்போது சாப்பிட வேண்டும் என்ற பட்டியலின் படி சாப்பிட
வேண்டும்.
உணவில் 80 % ஆல்கலைன் உணவைச் சேர்க்க வேண்டும்.
Bread – ப்ரெட்- என்பது ஹெல்த்கேர் உணர்வுள்ள ஒருவரின் உணவில் வரவே கூடாது.
சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு இன்ஆர்கானிக்! அதைச் சேர்க்கவே கூடாது.
உடலில் அதிகமான திரவச் சேர்க்கை உப்பினாலேயே ஏற்படுகிறது. இது தவிர்க்கப்பட
வேண்டிய ஒன்று.
உங்களது நாடித்துடிப்பை சரிபார்க்கத் தவற வேண்டாம். மிகப் பெரும் விளையாட்டு
வீரர்களின் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 30 முதல் 40 வரை தான் இருக்கிறது!
மருத்துவர்கள் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு சராசரியாக 72 இருக்கும் எனக் கூறுகிறார்கள். ஆனால் இது நோய்வாய்ப்பட்டவர்களுக்கான ஒன்று!
ஓய்வாக இருக்கும் ஒருவரின் சராசரி நாடித் துடிப்பு இதோ:
வயதுக்கு வந்த ஒரு ஆண் : நிமிடத்திற்கு 40 முதல் 50 வரை
வயதுக்கு வந்த ஒரு பெண் : நிமிடத்திற்கு 46 முதல் 56 வரை
ஆண் குழந்தை : நிமிடத்திற்கு 50
முதல் 60 வரை
பெண் குழந்தை : நிமிடத்திற்கு 56
முதல் 66 வரை
தினசரி வேலைகள் 8 முதல் 12 வரை நாடித் துடிப்பை அதிகரிக்கலாம்.
வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது
இருக்கும் ஒருவரின் சராசரி நாடித் துடிப்பு இதோ:
வயதுக்கு வந்த ஒரு ஆண் : நிமிடத்திற்கு 50 முதல் 60 வரை
வயதுக்கு வந்த ஒரு பெண் : நிமிடத்திற்கு 56 முதல் 66 வரை
ஆண் குழந்தை : நிமிடத்திற்கு 60
முதல் 70 வரை
பெண் குழந்தை : நிமிடத்திற்கு 66
முதல் 76 வரை
காப்பி என்பது பழக்கத்திற்கு நம்மை அடிமையாக்க வைக்கும் ஒரு ஊக்கி. நிகோடின்
போலவே அதையும் விஷம் என்றே சொல்லலாம்.
ஜீனியில் ஊட்டச்சத்தே கிடையாது. அதில் கலோரி வேல்யூ தான் உண்டு. உடலில்
ஏற்கனவே இருக்கும் ஊட்டச்சத்துக்களை அது
‘கொள்ளையடிக்கிறது’.
டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல் அனைவரும் தலைவலிக்காக எடுத்துக் கொள்ளும்
ஆஸ்பிரின் தனது கெமிக்கல் வினையால் நரம்புகளை செயலிழக்கச் செய்கிறது.
மருந்துகள் அனைத்துமே எந்த ஊட்டச்சத்தையும் உடலுக்கு வழங்குவது இல்லை.
அவைகளுக்கு எந்தத் திசுவையும் உருவாக்கும் ‘அறிவு’ இல்லை.
இயற்கை சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்கு ஆரோக்கியம் மட்டும்
உறுதியாவதில்லை, ஏராளமான மருத்துவச் செலவுகளும் மிச்சமாகிறது.
இதை அனுபவித்து உணர்ந்து பாருங்கள்!
3
கட்டுரை ஆசிரியரின் குறிப்பு :
மேலே கண்ட நூலை முழுவதுமாகப் படிப்பதால் உணவுத் திட்டம், உணவு வகைகள்,
உடலுக்குத் தீங்கு பயக்கும் உணவுகள் ஆகியவை நமக்கு நன்கு தெரிகிறது; தெளிவடைகிறோம்.
ஆனால் சமைக்காத உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், மருந்துகள் எதையும் எடுத்துக்
கொள்ளாதீர்கள் போன்ற ஆலோசனைகள் இந்தக் கால கட்டத்திற்கும் அவரவர் உடலமைப்பு,
வியாதி ஆகியவற்றிற்கும் பொருந்துமா என்பது விளங்கவில்லை.
இந்த நூலின் ஆசிரியரின் யோசனைகளுக்குக் கடுமையான விமரிசனங்கள் எழுந்தாலும் கூட
இந்த நூல் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி உள்ளதை எண்ணினாலேயே இது கூர்ந்து
கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது தெரியவரும்.
அன்பர்கள் இந்த நூலைப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைக்
கடைப்பிடிக்கலாம்; கடைப்பிடிக்கும் முன்பு தங்கள் குடும்ப மருத்துவரையும் நல்ல
ஆலோசனைக்காக நாடி உணவு பற்றிய ஆலோசனைகளையும் பெறலாம்.