கபீர்-
பதினைந்தாம் நூற்றாண்டுக் கவிஞர், சமய குரு, ராமாநந்தரின்
சீடர். இந்துவாகப் பிறந்து முஸ்லீம் வீட்டில் வளர்க்கப்பட்டார் என்பது பலர்
நம்பிக்கை.
120 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகவும்
நம்பப்படுகிறது.
2
கபீர் துணி விற்ற கதையும் பாடலும்
உண்மைக்குக் காலமில்லை.
3
லோயி காப்பாற்றப்பட்ட வரலாறும் கபீர் செய்த அற்புதமும்.
லோயி என்றால் கம்பளம்.
4
லோயியை கபீர் தோளில் தூக்கிச் சென்றவுடன் அவளை விருபியவன் கபீரின் காலில் விழுந்தது.
5
கமால் (அதிசயம்), கமாலி கதைகள்.
6
பிராமணனுக்கு புத்திமதி
7
அரசன் வீரசிங்கனுக்கு புத்திமதி
8
மன்னர் சிக்கந்தர் லோதியுடன் மோதல்
சைவா சமய நால்வரில் ஒருவரான அப்பர் போலவே துன்பாம் அனுபவித்து அற்புதங்கள் புரிதல்.
9
காசியில் இறக்காமல் மக்ஹரில் இறந்தது ஏன்?
10
இறந்த பின்னர் அவர் உடல் மாயமாய் மறைந்து பூக்குவியல் மட்டும் மிஞ்சியது.
கபீரின் பாடல்கள் சீக்கிய மத நூலான ஆதிக்கிரந்தத்திலும் தென்னிந்தியாவில் சம்பிரதாய பஜனை பாடுவோரின் பஜனைப் பாடல் புத்தகத்திலும் இன்றும் உளது. இவர் இந்து, சீக்கிய, முஸ்லீம் மக்களால் கொண்டாடப்படுகிறார். இவரது பாடல்கள் தமிழ்ச் சித்தர் பாடல்களைப் போல இருக்கும்.
2.சிறு
நீரகக் கல் நோயைத் தீர்க்கும் பிரம்ம தீர்த்தம்
3.தேவார
வைப்புத் தலம்
4.வெட்டுப்பட்ட
சிவலிங்கம்
5.ராஜ
ராஜ சோழனால் கட்டப்பட்ட கோவில்
6.நிறைய
கல்வெட்டுகள்
7.வயல்
நடுவில், தொலை தூரத்தில் கோவிலமைந்த அதிசயம்
8.நாங்கள்
சென்ற தேதி – 25-3-2019
9.எங்கே
உள்ளது?
இந்த
சிவன் கோவில் திருச்சி மாவட்ட லால்குடி வட்டத்தில் இருக்கிறது. நாங்கள்
திருச்சியிலிருந்து காரில் சென்றோம். பாடலூரிலிருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவு.
சிவனின்
பெயர்- சுத்த ரத்தினேஸ்வரர்
இறைவியின்
பெயர்- அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம்
– பிரம்ம தீர்த்தம்
10. கோவில்
பிரகார மேல் சுவற்றில் நவக் கிரகங்கள், 27 நட்சத்திரங்கள்.
11. கோவிலில் ஒட்டியுள்ள விளம்பரப் பலகையில் கோவிலின் சிறப்புகள் வரையப்பட்டுள்ளன. (இணைப்பில் விவரம் காண்க)
மார்ச்
23, 2019
அன்று இந்தியாவுக்குச் சென்றேன். சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக நாலு
நாட்களுக்கு கோவில் விஜயம். பின்னர் 29-ம் தேதி காஞ்சீபுரம் விஜயம். லண்டனுக்கு விமானம் ஏறும் முதல் நாள்
இரவில் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் கோவில்களுக்கு
விஜயம். ஆக ஆறே நாட்களில் கண்டது என்ன?
30+ கோவில்கள்
செஞ்சி
கோட்டை
கல்லணை
சகுந்தலா
ஜகந்நாதன் மியூசியம், காஞ்சீபுரம்
சித்தர்
, முனிவர் சமாதிகள்
புதிய
அதிசயங்கள்
இந்த
முறை நான் கண்ட புதிய அதிசயங்கள்:
1.கோவிலுக்குள் தங்கப் பல்லி தரிசனம்
2.கல் நடராஜர்- கிட்னி ஸ்டோன் Kidney
Stone
நோய் நீக்கும்
3.நமது விதியைத் திருத்தி (Fate
Changing Horoscope Temple) எழுதும் ஜாதகக் கோவில்
4.செய்வினை, பேயை ஓட்டும் பேய் விரட்டும் (Ghost busters) மேடை
5.ஆண்டாள் பாடிய மணிக் கதவம் (Bell
Door)
6.ஸ்ரீ பெரும்புதூரில் சினிமா போஸ்டர் ஸைசுக்கு 108 திவ்ய தேச ஓவியங்கள்
9.சகுந்தலா ஜகந்நாதன் மியூசியத்தில் மீன் வடிவ
மகர யாழ்
10.உறையூர் கோவிலில் கோழி யானை சண்டையிடும் சிலை
500 புகைப்படங்கள்
இவை
ஒவ்வொன்று பற்றியும் படங்களுடன் கட்டுரை எழுதுவேன்.
டாக்டர்
நாகசாமி சொன்ன அதிசய விஷயங்கள்!
லண்டனுக்கு
விமானம் ஏறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னால் தொல்பொருட்துறை பேரறிஞர் டாக்டர் நாகசாமியைச் சந்தித்து 90 வயது மூதறிஞருக்கு பணிவான வணக்கம்
செலுத்தினேன். அவர் கர்நாடக இசைக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்ற அதிசயத்
தகவலை (ஆராய்ச்சிச் சொற்பொழிவில் கூறியதைச்) சொன்னார். தமிழ்நாட்டின் பெயரில் ஒரு
ராகம் (திராவிடி), ஆப்கனிஸ்தான் (காந்தாரி) பெயரில் ஒரு ராகம், வங்க (கௌலை)தேசம் சார்பில் உள்ள ராகம், மத்தியப்பிரதேசம்(மாளவம்) பெயரில் உள்ள ராகங்கள் பற்றி விளக்கினார். தொல்காப்பியம் ஒரு இலக்கண
நூல் மட்டுமன்று; அது ஒரு இசை நூல் என்றும்தொல்காப்பியர் சொல்லும் நாடக வழக்கு, உலகியல் வழக்கு என்பது ஸம்ஸ்க்ருத
நாடக/இசை நூல்களில் உள்ள சொல் வழக்கு என்றும் விளக்கினார்.
தி.
மு. க. தலைவர் ஸ்டாலின் உளறல் பற்றி நான் கேட்டபோது, டாக்டர் நாகசாமியை இது விஷயமாக ஒரு
தமிழ் டெலிவிஷன் சானல் பேட்டி கண்டதாகவும் அதில் அவர் ஜி.யூ.போப் முதலிய மதப்
பிரசாரகர்களின் விஷமங்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு இது வரை எவரும் பதில்
சொல்லவில்லை என்றும் சொன்னார். டாக்டர் ஜி. யூ. போப் ஒரு தமிழ் அறிஞர் மட்டுமன்று; பெரிய ஸம்ஸ்க்ருத அறிஞரும்கூட; ஆனால் சாகும்போது தான் இதைச்
செய்ததெல்லாம் கிறிஸ்தவ மதப் பிரசாரகத்துக்குத்தான்; மற்றவரும் இது போல மொழிகளைக் கற்று
மதப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதையும் ஆதாரத்துடன் கூறினார்.
டாக்டர்
நாகசாமியுடன் மோத எவரும் முன்வரார். அப்படி வந்தால் அவர்களது வாதம் கல்பாறையில்
மோதிய மண்ணாங்கட்டி போல சிதறி உதிரும்.
ஒவ்வொரு
கட்டுரையிலும் புதிய தகவல்களை அளிப்பேன்
கதவு
ஆராய்ச்சி
கோவில்களின்
கதவுகள் பிரம்மாண்டமானவை. அவைகள் பல வடிவங்கள் கொண்டவை. அவை பற்றி தனி விதி
முறைகள் உள்ளன. மணிகள் பொருத்திய கதவுகளைச் சில கோவில்களில் கண்டேன். அப்போதுதான்
ஆண்டாளின் திருப்பாவை வரிகளின் முழுப்
பொருளும் விளங்கியது.
எல்லாக்
கோவில்களிலும் உள்ள கதவுகள் மற்றும் மணிகளைப் புகைப்படம் எடுத்தேன்; கட்டுரைகளில் படங்கள் வரும்.
திருப்பாவைபாடல் 9
துாமணி
மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
துாபம்
கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான்
மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்!
பார்த்த
கோவில்களைப் பார்ப்பதில்லை
குலதெய்வம்
வைதீஸ்வரன், திருப்பதி வெங்கடாசலபதி, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் துர்கை, முருகன் தவிர வேறு எந்தக் கோவிலையும்
ஒரு முறைக்கு மேல் பார்ப்பதில்லை என்ற சங்கல்பத்துடன் சென்று இதுவரை மூன்று இந்திய
விஜயங்களிலில் பல புதிய விஷயங்களை அறிந்தேன்.
படங்கள்
தயாரானவுடன் கட்டுரைகள் வரும்!
இந்த
முறை நான் சென்ற ஊர்கள்
1.சென்னை
2.திண்டிவனம்
3.மலைவையாவூர் கோவில்
4.உத்தரமேரூர் கோவில்
5.செஞ்சி கோட்டை
6.மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
7.சிறுவாச்சூர் காளி கோவில்
8.திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில், பல்லவர் குகை, மலை அடிவார மாணிக்க விநாயகர் கோவில்.
9.திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி -ஜம்புகேஸ்வரர்
கோவில்
எங்கெங்கு
வைஷ்ணவ கோவில்கள் (நாமம் போட்ட பெருமாள் கோவில்கள்) உளதோ அங்கெங்கெல்லாம் அவர்கள்
இஷ்டப்படி கோவில்களை மூடுவார்கள்; திறப்பார்கள் (irregular opening hours
); ஆகையால் சேவை நேரம் தெரியாமல் போனால் மணிக்கணக்கில் திரை முன்னாலோ
கதவு முன்னாலோ தவம் கிடக்கவேண்டும்.
சிவன்
கோவில்கள் (விபூதிப்பட்டை) அனைத்தும் முறையாக காலை 6 மணி முதல் மதியம் 11-30 வரையும் மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் திறந்திருக்கும்.
சுருங்கச்சொல்லின்
திரை போடும் நேரம்,
கோவில்
திறக்கும் நேரம் தெரியாமல் போகாதீர்கள்; ஏமாறாதீர்கள்
எச்சரிக்கை
2
செஞ்சி, உத்தரமேரூர், காஞ்சீபுரம் கோவில்களில் சில, திருச்சி பல்லவர் குகை முதலியன
தொல்பொருட்துறையினரின் கட்டுப்பாட்டில் உளதால் காலை
பத்து மணிக்குத் திறப்பார்கள்;
மாலை
4 மணிக்கு மூடிவிடுவார்கள். .
ஆகையால்
முன்கூட்டி தகவல் அறிந்து திட்டமிட்டுச் செல்லவும்.
மஹாபாரதத்தில் பலருடைய விசித்திரமான பிறப்புகளின் பின்னுள்ள உண்மைகளை — அறிவியல் உண்மைகளை — நிறைய எழுதிவிட்டேன். இன்று பாண்டு, திருத ராஷ்டிரன் பிறப்புகளில் உள்ள விஞ்ஞான உண்மைகளைத் தொட்டுக் காட்டுகிறேன்.
மஹாபாரத மாவீரர்களில் அதிகம் போற்றப்படாதவர்களில் ஒருவர் பாண்டு மஹாராஜன். ஆனால் மஹாபாரதத்தில் இவரைப் பற்றிப் பல பாராட்டுரைகள் உள்ளன. மனிதர்களுள் ஆண்புலி என்று வருணிக்கப்படுகிறார்.
கணவனும் மனைவியும் படுக்கையில் இன்பம் அனுபவிக்கும்போது வேண்டா வெறுப்பாக ஒருவர் இருந்தாலும், அது பிறக்கப் போகும் குழந்தையைப் பாதிக்கும் என்பது பாண்டு-திருதராஷ்டிரர் வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது..
மேலை நாடுகளிலும் கூட, பெற்றோர்கள் குடி, கூத்து, போதை மருந்து, மற்றும் பல தீய பழக்கங்களைக் கொண்டிருந்தால் அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிகமாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
எல்லோருக்கும் தெரிந்த கதை என்பதால் மிகச் சுருக்கமாக சொல்கிறேன். விசித்திரவீர்யனின் இரண்டு மனைவிகளுக்கும் மகப்பேறு இல்லாததால் நாட்டை ஆள்வதற்கு சந்ததி இல்லாமல் போய்விடுமே என்று வியாசர் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள வியாசரின் தாயாரே எற்பாடுசெய்கிறார். அக்காலத்தில் ராஜ வம்சம் நசித்துப் போகாமல் இருக்க இப்படி ஒரு ஏற்பாடு இருந்தது. விசித்ர வீர்யனின் இரண்டு மனைவியர் அம்பிகா, அம்பாலிகா. இருவரிடமும் வியாசர் வரப்போகிறார் என்று சொன்னவுடனே முகம் சுழித்தனர். ஏனெனில் வியாசர் கருப்பர். அவர் பெயரே கருப்பு (க்ருஷ்ண த்வைபாயன)! அழகும் கிடையாது. ஆனால் உலக சாதனையில் அவரை மிஞ்ச இன்று வரை யாரும் பிறக்கவில்லை. பிரம்மாண்டமான வேதங்களை நான்காகப் பிரித்தார். உலகிலேயே நீண்ட இதிஹாசமான மஹாபரதத்தை எழுதினார். இதில் இல்லாத விஷயங்களே உலகில் இல்லை.
அவர் படுக்கை அறையில் நுழைந்தவுடன் அம்பிகா வெறுப்புற்று கண்களை முடிக் கொண்டார். வியாசரோ முற்றும் துறந்த முனிவர். அது பற்றிக் கவலைப் படாமல் தாயார் இட்ட கட்டளையை தலைமேற்கொண்டு பாலியல் இன்பத்திற்காகவன்றி, வம்ச விருத்திக்காக மட்டுமே என்று, சொன்ன செயலைச் செய்துவிட்டு வெளியேறினார். கண்னை மூடி வெறுப்புக் காட்டிய அம்பிகாவுக்கு கண்கள் தெரியாத திருதராஷ்டிரன் பிறந்தான். அவனும் வெறுப்புடன் பிறந்ததால் இறுதிவரை பாண்டவர் மீது வெறுப்பைப் பொழிந்தான்; அழிந்தான்.
அம்பாலிகாவுக்கும் இதே வெறுப்புதான். அவளும் வேண்டா வெறுப்பால முகம் வெளுத்து பயந்து போய் படுக்கையில் படுத்தாள் . அவளுக்குப் பிறந்த பாண்டு மஹாராஜன் வெளுத்த தோலுடனும், செக்ஸில் ஈடுபட முடியாத பயத்துடனும் பிறந்தான்..
இது மஹாபாரதம் கற்பிக்கும் பாடம்; செய்யும் செயலை — செக்ஸே ஆனாலும் — மனமுவந்து செய்ய வேண்டும் அப்படி செய்யாவிடில் குழந்தைகள், குறையுடன் பிறக்கலாம்.
பாண்டுவின் மற்ற கதை எல்லோரும் அறிந்ததே. குந்தி என்ற முதல் மனைவியும் மாத்ரி என்ற இரண்டாவது மனைவியும் உண்டு. ஒரு முறை வேட்டையாடும் போது மான் தோல் போற்றிய கிண்டம ரிஷியை உண்மையான மான் என்று நினத்து அம்பெய்திக் கொன்றுவிட்டார். அப்போது அந்த ரிஷி தன் மனைவியுடன் படுத்திருந்தார். உடனே அவர் ஒரு சாபம் இட்டார். நீ உன் மனைவியுடன் படுத்தாயானால் இறந்து போவாய் என்று.
பாண்டுவும் பயந்துபோய் காட்டிற்குத் தவம் செய்யப்போனார். அவருடன் இரண்டு மனைவியரும் சென்றனர். ஒரு நாள் மாத்ரியும், பாண்டுவும் உணர்ச்சிவயப்பட்டு படுத்தபோது பாண்டு இறந்தார். சாபத்தை அறிந்தும் கணவனை எச்சரிக்காமல் போனோமே என்று வ ருந்தி மாத்ரியும் பூதப் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி போல கணவருடன் தீப்பாய்ந்தாள்.
குந்திக்கும் மாத்ரிக்கும் மந்திரம் மூலம் பிறந்த பஞ்ச பாண்டவர்களையும் வளர்க்கும் பொறுப்பை குந்தி ஏற்றாள்.
(மஹா பாரதத்திலுள்ள டெஸ்ட் ட்யூப் TEST TUBE BABY குழந்தை, செக்ஸ் மாற்ற ஆபரேஷன் SEX CHANGE OPERATION, ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை (SIAMESE TWINS சயாமீஸ் ட்வின்ஸ்) முதலிய பத்து ரஹசியங்களை பழைய கட்டுரைகளில் காண்க)
பாண்டு மஹாராஜன் பற்றி மஹா பாரதத்தில் உள்ள ஓரிரு ஸ்லோகங்களைக் காண்போம்:-
ஆண்களில் புலி போன்ற வீரம் படைத்த அவர் (பாண்டு) மீண்டும் வந்து விட்டார்; குணங்களை நன்கு அறிந்தவர். தர்ம விதிப்படி நம்மை தனது சொந்தக்கார ர்கள் போலப் பாதுகாக்கிறார்.
கேசாம் சித் அபவத் ப்ராதா
கேசாம் சித் அபவத் சகா
ர்ஷயஸ் த்வ அபரே சை நாம்
புத்ரவத் பர்யபாலன் 1-113-3
பாண்டு காட்டில்ச தவம் செய்த போது சிலரை சகோதர்களாகவும் சிலரை தோழர்களாகவும் நடத்தினார். ஆனால் ரிஷிகளோவெனில் பாண்டுவை தனந்து சொந்த மகன் போல நடத்தினர்.
பாண்டு ராஜ வம்சத்தில் பிறந்திருந்தாலும் காட்டில் தவம் செய்தபோது ஒரு பிரம்ம ரிஷி போல ஒளியுடன் விளங்கினார்:
6 Mar 2017 – … பின்னுள்ள உண்மைகளை — அறிவியல் உண்மைகளை — நிறைய எழுதிவிட்டேன். இன்று பாண்டு, திருத ராஷ்டிரன் பிறப்புகளில் உள்ள விஞ்ஞான … மஹாபாரதமாவீரர்களில் அதிகம் போற்றப்படாதவர்களில் ஒருவர் … https://tamilandvedas.com/2017/03/06/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0 …
மஹாபாரதத்தில் வாணிபம்- வியாபாரம் (Post No.5082) … மஹாபாரதம்– ராக்கெட் விஞ்ஞானம் முதல் வேதாந்தம் வரை அத்தனை …. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) ….. வல்லவர் யாருமே அறிந்திராத அற்புத உண்மைகளை பதிலாகத் தருவர்.
Post No. 934.மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞானவிளக்கம்-பகுதி1 (Date 26-3-14) 3. Post No.935. … நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்– Part 2 9. ராமரின் புஷ்பக …
12 Nov 2014 – இந்துமதமும் விஞ்ஞானமும்: கடல் கடைந்த கதையில் சில அறிவியல் உண்மைகள்! … மஹாபாரதம் முதலிய புராண, இதிஹாசக் கதைகளில் உள்ளன. … இதுவும் கடலில் தோன்றியது என்பது விஞ்ஞான உண்மையே. … https://tamilandvedas.com/2014/11/12/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae …
காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம்!! … சுவைதரும் காவியத்தில் ஒரு அரிய பெரிய விஞ்ஞான உண்மையையும் புதைத்து … மஹாபாரத வன பர்வத்தில் வரும் அர்ஜுனனின் ஐந்து ஆண்டு … https://tamilandvedas.com/2014/09/13/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%