எண் நான்கின் (4) சிறப்புகள்- ஒரு ஆராய்ச்சி (Post N0.6370)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 11 May 2019
British Summer Time uploaded in London – 6-57 am

Post No. 6370

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

—subham—

நெரூர் மஹான் சதாசிவ பிரம்மேந்திராள் செய்த அற்புதங்கள்! (Post No.6329)

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 1 May 2019


British Summer Time uploaded in London –  6-59 am

Post No. 6329

Pictures shown here are taken by london swaminathan

 This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நெரூருக்குச் சென்று சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. அது மார்ச் 27ம் தேதி (2019) நிறைவேறியது.

1957ல் வெளியான ஜகத்குரு திவ்ய சரித்திரம் புத்தகத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் நடத்திய அற்புதங்களைப் படித்ததும், மாதம் தோறும் லண்டனில் நடக்கும் பஜனையில் சதாசிவரின் அற்புதமான பாடல்களைக் கேட்பதும் இதற்குக் காரணமாகும்.

நெருர் என்னும் கிராமம் கரூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் ஒரு சிவன் கோவில், அதனருகில் பிரம்மேந்திராளின் ஜீவ சமாதி. அதாவது சமாதியின் கீழ் அவர் இன்னும் அப்படியே இருந்து அருள் புரிகிறார் என்பது பொருள்; ஏனெனில் உயிருடன் இருக்கும்போதே உடல் சமாதியில் இறக்கப்பட்டு மேலே அதிஷ்டானம் எழுப்பப்படும்.

அங்கே நாங்கள் காலை 11 மணி வாக்கில் சென்றதால் பூஜையையும் காண முடிந்தது. எனது சகோதரர் பேராசிரியர் சூரிய நாராயணன் உள்பட சுமார் 25 பேர் இருந்தோம். சமாதியை அடுத்த சிவன் கோவிலும் சிறியதுதான். இறுதியில் சர்க்கரைப் பொங்கல் விநியோகம்.

அங்குள்ள சிறிய கடையில் புஸ்தகங்கள், பாடல் தகடுகள் (CDs), படங்கள் விலைக்குக் கிடைக்கின்றன. இது வரை சதாசிவரின் அற்புதங்களை அறியாதோர் அறிய அவை உதவும்.

சதாசிவ பிரம்மேந்திரரின் ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் மிகவும் சிறியவை. பல கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் இடம்பெறுகின்றன. அவரது பாடல்கள் (பரம)ஹம்ஸ என்ற முத்திரையுடன் முடியும்.

சதாசிவ பிரம்மேந்திராள்

சதாசிவ பிரம்மேந்திராள் பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை இணைப்பையும் காஞ்சி பரமாசார்யாளின் விஜய இணைப்பையும் கீழே காண்க.

நீங்களும் அவருடைய பாடல்களைக் கச்சேரியிலோ பஜனைகளிலோ கேட்டிருப்பீர்கள்: இதோ சில முதல் வரிகள்:

பஜரே கோபாலம், மானஸ…………..

ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….

ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..

மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….

க்ரீடதி வனமாலி கோஷ்டே………….

பஜரே யதுநாதம் மானஸ…………..

ப்ரதிவாரம் மானஸ…………..

பிபரே ராம ரஸம்…………………

சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..

ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே

காயதி வனமாலி மதுரம்………………..

இன்னும் பல. இவைகள் அடங்கிய புஸ்தகங்கள் அதிஷ்டானத்தில் கிடைக்கும்

முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த …



https://tamilandvedas.com/…/முஸ்லீம்-பக்தருக்…

3 Mar 2014 – சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் … பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் …

6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/6-நாட்களில்-30-கோவ…

  1.  

 ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.

–subham–

முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த …



https://tamilandvedas.com/…/முஸ்லீம்-பக்தருக்…

3 Mar 2014 – சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் … பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் …

6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/6-நாட்களில்-30-கோவ…

1.      

 ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.

subham

கைக்கு கங்கணம் அழகா? காதுக்கு குண்டலம் அழகா? (Post No.6280)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 19 April 2019


British Summer Time uploaded in London – 7-54 am

Post No. 6280

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–SUBHAM–

மநு சொல்லும் இரண்டு அதிசயக் கதைகள்!(Post No.6263)

Written  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 14 April 2019


British Summer Time uploaded in London – 11-47 am

Post No. 6263

Pictures shown here are taken from various sources. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

to be continued………………….

மனதைத் தைக்கும் ஏழு முட்கள்; பர்த்ருஹரி வருத்தம் (Post No.6078)

written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 15 FEBRUARY 2019


GMT Time uploaded in London –12-08


Post No. 6078

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

விஷ முறிவுக்கு ரத்னங்கள், -மூலிகைகள் மநு நீதி நூல் தகவல் (Post No.5999)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 28 JANUARY 2019
GMT Time uploaded in London -9-45 am
Post No. 5999
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மநு நீதி நூல்- பகுதி 38 (7-162 to 7-226)

இன்று ஏழாவது அத்தியாயத்தை முடித்து விடுவோம். மநு நீதி நூல் நிறைய, சட்டத் தொடர்பில்லாத விஷயங்களையும் தருகிறது. மேலும் பல உரைகாரர்கள், அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயத்துக்கும் தரும் விளக்கங்கள், ஒரு கலைக்களஞ்சியத்துக்கும் மேலான தகவல்களை அளிக்கிறது. தமிழில் இது கிடைக்கதது நமது துரதிருஷ்டமே. இந்தியிலும், ஸம்ஸ்க்ருதத்திலும், ஓரளவுக்கு ஆங்கிலத்திலும் மட்டும் கிடைக்கிறது.

ஏழாவது அத்தியாயத்தின் இறுதிப் பகுதி பெரும்பாலும் போர் தொடுக்கும் முறை, நண்பர்கள், எதிரிகள் யார், மன்னரின் அன்றாடப் பணியில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன, உளவாளிகள் ரிப்போர்ட் ஆகியன பற்றியதே. ஆயினும் அவர் சொல்லும் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டுகளில் தருகிறேன். முடிந்தால் இணைப் பையும் படியுங்கள். இன்னும் ஐந்து அத்தியாயங்கள் உள. அவைகளையும் வரிசையாகக் காண்போம்.

1.முதலில் பல ஸ்லோகங்களில், படையெடுக்க இரண்டு முறைகள், நண்பர்களை ஏற்படுத்த இரண்டு முறைகள், முகாமிட,அணி வகுத்துச் செல்ல இரண்டு முறைகள் என பல விஷயங்களை இரட்டை இரட்டையாகப் பிரித்து இருக்கிறார்.

2.ஸ்லோகம் 7-180 ல் அரசியலில் விவேகமான செயல் என்ன என்று விளம்புகிறார்.

3.ஸ்லோகம் 7-182ல் படை எடுக்க மார்கழி முதலிய மாதங்கள் உகந்தன என்று செப்புகிறார். இந்தியாவில் அந்த மாதங்களில் பருவநிலை சாதகமாக இருக்கும்; உணவு தான்யங்கள் அதிகம் கிடைக்கும் என்று இது பற்றி பாஷ்யக்காரர்கள் வியாக்கியானம் செய்கின்றனர்.

4.ஸ்லோகம் 7-185 ல்மூன்று வகை சாலைகள் பற்றிப் பேசுகிறார்.

5.ஸ்லோகம் 7-187 ல் படைகளை அணிவகுக்கும் வியூகங்கள் பற்றி அறிவுரை பகர்கிறார்; மஹா பாரத யுத்ததில் இதை அதிகம் காண்கிறோம். அபிமன்யு, சக்ர வியூகத்தில் இருந்து வெளியே வரக் கற்காத குற்றத்தையும் சிற்பங்களில் காண்கிறோம்.

6.ஸ்லோகம் 7-193 ல் எந்த நாட்டு சிப்பாய்களை முன்னனியில் நிறுத்த வேண்டும் என்றும் மொழிகிறார். அந்த தேச வீரர்கள் மற்றவர்களை விட உயரமானவர்கள் என்பது வியாக்கியானக் காரர்களின் விளக்கம்.

7.ஸ்லோகம் 7-210ல் பயங்கர எதிரி யார் என்று விளக்குகிறார். அறிவுள்ள எதிரியைக் கண்டு அஞ்ச வேண்டும் என்பார்.

8.ஸ்லோகம் 7-218 ல் உணவில் விஷம் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துவிட்டு மந்திரங்கள், ரத்தினங்கள், மூலிகைகள் மூலம் உணவை விஷமற்றதாக்க ஆக்கலாம் என்கிறார்.

9.ஸ்லோகம் 7-223 ல் தினமும் ரஹஸியமாக உளவு அறிக்கைகளைப் பெற வேண்டும் என்பார்.

10.இறுதிப் பகுதியில் ஒரு மன்னன் அன்றாடம் செய்ய வேண்டிய டைம் டேபிள் time table ,கால அட்டவணை- தருகிறார்.

11.ஸ்லோகம் 7-206 ல் ஒரு போரினால் கிடைக்கும் மூன்று ஆதாயங்கள் புது நண்பர்கள், தங்கம், நாடு என்று சொல்கிறார்.

இணைப்பில் மேல் விவரம் காண்க.

–subham–

பிலிப்பைன்ஸ் நாட்டில் மநுவின் சிலை (Post No.5876)

Written by London swaminathan

swami_48@yahoo.com
Date: 3 JANUARY 2019
GMT Time uploaded in London 7-02 am
Post No. 5876
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAGS- பிலிப்பைன்ஸ், மநு சிலை, தென் கிழக்கு ஆசியா,மநு செல்வாக்கு

வாழ்க்கையில் முன்னேற மநு தரும் 4 டிப்ஸ்! (Post No.5859)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 December 2018
GMT Time uploaded in London –18-37
Post No. 5859


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மநு நீதி நூல்- பகுதி 37

மனு தர்ம சாஸ்திரத்தின்  ஏழாவது அத்தியாயத்தில் 99 ஸ்லோகங்களைக் கண்டோம். இன்று 160 வரை காண்போம். முதலில் இணைப்பைப் படிப்பதற்கு முன்னால் சுவையான விஷயங்களை புல்லட் பாய்ண்டு bullet points களில் தந்து விடுகிறேன்.

மநுவை உலக மஹா ஜீனியஸ் genius என்று புகழ்வதற்குக் காரணம் அவர் இங்கே கூறும் நிர்வாக அமைப்பு, உளவாளி விஷயம், தூதர் விஷயம், அரசனின் அன்றாட ஆலோசனை, வரிவிதிப்பு விஷயம் ஆகியன ஆகும்.

மநுவின் மஹா மேதவித் தனத்துக்கு சர்டிபிகேட் கொடுப்பவர் தமிழ் வேத மஹா முனிவர் திருவள்ளுவ நாயனார் ஆவார். மநு சொல்லும் எல்லா விஷயங்களையும் அவர் அரசியலில் சொல்லி  விடுகிறார். சில மநு ஸ்லோகங்களை வள்ளுவர் அப்படியே தருகிறார்.இதை நானும் தனிக் கட்டுரைகளில் தந்துள்ளேன். அந்தக் காலத்தில் பேராசிரியர் V R . ராமச்சந்திர தீட்சிதர் முதல் தற்காலப்  பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி வரை அனைவரும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டனர்.

அழகான அட்வைஸ் Advice

ஸ்லோகம் 7-99 முதல் 7-102 வரை மன்னர்களுக்கு புத்திமதி சொல்கிறார். அந்த 4 புத்திமதிகளும் அரசியல், நிதித் துறையில் வெற்றி அடைய விரும்புவோருக்கும் பொருந்தும்.

ஸ்லோகம் 102, 105, 110 முதலியவற்றின் எதிரொலியைத் திருக்குறளிலும் காணலாம்.

ஆமையும் கொக்கும்

ஆமை போல அடக்கம்- இது பகவத் கீதை முதல் திருமூலர் வரை கையாளும் இந்து உவமை; கொக்கு போலக் காத்திரு என்பதும் பர்த்ருஹரி முதல் வள்ளுவன் வரை காணலாம்.இதற்கெல்லாம் ஆதி மூல காரணம் மநு ஐயாதான்.

மநுவைப் படிக்கும் ஆங்கிலேயர்கள், வெள்ளைத்தோல் அறிஞர்கள் , அனைவரும் ஒரு விஷயத்தை மனமுவந்து அளிகின்றனர். மநு சொல்லும் தெய்வங்களனைவரும் வேத காலக் கடவுளர்.ஆகையால் அவர் வேத காலத்தை ஒட்டியவர் என்று தெளிவு  பெற்றனர்.அண்மைக்கால ஸரஸ்வதி நதி ஆய்வும் மநுவை கி.மு 2000 க்கு முன்னர் தள்ளிவிட்டதை முன்னரே பார்த்தோம்.ஆயினும் ‘சூத்ராள்’ பற்றிப் பல விஷயங்களை சுங்க வம்ஸ மன்னர்கள் சேர்த்துள்ளனர் அல்லது அவர்கள் பிராஹ்மண அரசர்களென்பதால் எவரோ துணிச்சலாகக் ‘கை வைத்திருக்கலாம்’. அவர் சொல்லும் ஒட்டு மொத்த விஷயங்களையும்   பார்க்கையில் இவை பிற் சேர்க்கைஎன்பது வெள்ளிடைமலை என விளங்கும்.

அட்டை போல உறிஞ்சு, கன்று போல பால் குடி, தேனீ போல தேன் எடு (sloka 129)

இது அவர் வரிவிதிப்புக்குக் கொடுத்த அட்வைஸ். இதற்கு முன்னர் ஆமை, கொக்கு, ஓநாய்,சிங்கம் முதலிய உவமைகள் வருகின்றன.இந்த மூன்று பிராணிகள்  பற்றி   மநு சொன்னதை ஒன்பது உரைகாரர்களும் ‘சிக்’கெனப்பிடித்து அழகாக விளக்கினர்.

பணக்காரர்களாக இருந்தால் எங்கள் பிரிட்டனைப்போல 60% வரி; ட்டை போல உறிஞ்சு.இங்கு 60000 க்கு மேல் சம்பளம் இருந்தால் அட்டை (leech), இரத்தத்தை உறிஞ்சுவது போல உறிஞ்சிவிடுவர் (கடுமையான வரிவிதிப்பு).

என்னைப்போ ல ஏழைப் பங்காளர்-மிடில் கிளாஸ் middle class – என்றால் கன்று(calf)  போல வரி விதிப்பு! பாதி உனக்கு, பாதி எனக்கு.

மிக ஏழை என்றால் தேனீ (bee)  தேன் எடுப்பது போல வரிவிதிப்பு. அதாவது மலருக்கு ஒரு தீங்கும் இல்லை. மலருக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் பலன் வேறு! அதுவும் மலருக்குத் தேவை இல்லாத தேன். இப்படி அற்புதமான வரி விதிப்பு முறையை மநு கூறுகிறான்  ஸ்லோகம் 129

சங்க இலக்கியத்திலும் ஸம்ஸ்க்ருத இலக்கியம் நெடுகிலும், விளைச்சல்,உற்பத்திப் பொருட்களுக்கு  ஆறில் ஒரு பங்கு  வரி விதிப்பு பேசப்படுகிறது.இதற்கும் மூல புருஷன் ஐயா மநு தான்.

எங்கள் பிரிட்டனிலும் VAT 17.5 சதவிகிதம்தான்! ஆறிலொரு பங்குதான்! மநு சொன்னதை இன்றுவரை பிரிட்டன் பினபற்றுகிறது.

மநு சொன்ன விஷயங்களில் சூத்ராள் எதிர்ப்புப்  பிற்சேர்க்கை ஸ்லோகங்களைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டால் அதிசய விஷயங்களைக் காணலாம். ஆனால் அப்படி எறிந்தால், பாவம் மார்கஸீயங்களும் திராவிடங்களும் பேசுவதற்கு எதுவுமின்றித் தவியாய்த் தவிப்பார்கள்!!

ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்!!

ஸ்லோகம் 7-135 முதல்  வேத பண்டிதர்களுக்கு வரி போடாதே என்கிறார். வள்ளுவரும் பசுக்கள் பால் தராது, பிராஹ்மணர்கள் வேதத்தை மர்றந்து விடுவர்- அரசன் நேர்மையான ஆட்சி செய்யவிடில்  என்று கடும் எச்சரிக்கை விடுக்கிறான்.(காண்க ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் — குறள்

தஸ்யூ யார்?

ஸ்லோகம் 7-143ல் தஸ்யூ என்றால் திருடன் என்று சொல்கிறார். பத்தாவது அத்தியாயத்தில் மேலும் பிரஸ்தாபிக்கிறார். அதையும் பின்னர் காண்போம். உலகிலுள்ள எல்லா சமுதாயத்திலும் நல்லோரும் தீயோரும் உண்டு . நாடாள வந்த அயோக்கியர்களும், மதத்தைப் பரப்ப வந்த கிராதகர்களும் தஸ்யூ என்றால் திராவிடர்கள், பழங்குடி மக்கள் என்று பொய் மூட்டை கட்டி விட்டனர். தத்துப்பித்து திராவிடங்களுக்கும், மார்கஸீய விஷமங்களுக்கும் ‘கோதுமை அல்வா’ போட்டது போல ஆயிற்று. சாகுந்தலத்திலும் கூட தஸ்யூ என்றால்  கொள்ளைக்காரன் என்று காளி தாஸன் விளம்புவான். நம் நாட்டைக் கொள்ளையிட்ட பிரிட்டானியர்கள் நம்மைப் பொறுத்த ட்டில் தஸ்யூக்கள்!

பெண்கள் ஜாக்கிரதை

மன்னர்கள் ரஹஸிய ஆலோசனைக் கூட்டத்தில் பெண்கள், கிளிகள், மைனாக்கள் போன்றவை இருந்தால் ஆபத்து என்கிறான்– மநு ஸ்லோகம் 7-150

அண்மையில் பிரிட்டனில்கூட ஒரு கள்ளக் காதலி வருகையை மைனா சொல்லிக் கொடுத்து பத்திரிக்கைகளில் பெரிய செய்தி வெளியானது. பெண்கள் பற்றி மஹாபாரதம் முதல் கம்ப ராமாயணம் வரை இப்படி ஒரு ரஹஸியம் காக்க முடியாத செய்தி உளது

பெண்கள் வேலைசெய்வது பற்றியும் சொல்லுவதால், மநுவின் காலத்தில் பெண்கள் வேலை செய்தததும் தெரிகிறது –ஸ்லோகம் 125

சம்பள விகிதாசாரம் 126 முதல்

அம்சமான organization ஆர்கனைசேஷன்

மநு 7-110 முதல் 7-10 வரை நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்பதை அழகாகச் செப்புகிறான்

ஸ்லோகம் 7-153 முதல் தூதர்கள்,உளவாளிகளமைப்பு பற்றிப் பேசுகிறான். ராமாயண, மஹாபரதத்தில் தூதர், உளவாளிகள் பற்றிப் படிக்கிறோம். உலகில் நாகரீக முதிர்ச்சி அடைந்த நாடுகளில் மட்டுமே இது இருக்கும். எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க நாகரீகங்களில் இப்படி விரிவானதொரு நீதி நூல் இல்லாமையால் நாம்தான் உலகிற்குக் கொடிகள், சின்னங்கள், தூதர் முறை, உளவாளி அமைப்பு என்பதை எல்லாம் கற்றுத தந்தோம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி எனவிளங்கும்.

நான்  மேலே பிரஸ்தாபித்த பெரும்பாலான விஷயங்கள் ஒன்பது உரைகாரர்களின் வியாக்யானங்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக காமாந்தகியின் நீதி சாரம் என்னும் நூல் எடுத்தாளப்படுகிறது.

மரண தண்டனை ஜிந்தாபாத்

வள்ளுவன் மரணதண்டனை ஆதரவாளன். கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல்– என்ற குறளில் கொலைகாரர்களை களை எடுப்பது போலப் பிடுங்கி எறி என்பான் வள்ளுவந்0– இது மநு ஸ்லோகத்தின்  மொழி பெயர்ப்பு

கருமிகளைக் கண்டால் கையை முறுக்கி தாடையில் ஒரு குத்து விட்டுக் காசைப் பறி என்பான் வள்ளுவன் (காண்க- கயமை அதிகாரம்1077, 1078, 550, 1224).

இதுவும் மநு சொன்னதே. மன்னர்கள் ,வன்செயலைப்– பலவந்தத்தைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது என்பான் மநு.

காண்க ஸ்லோகம் 99-160

பாபிலோனிய ஹம்முராபியின் 282 சட்ட விதிகளில் பக்கத்துக்குப் பக்கம் ‘கொல், கொல், கொல்’ என்று கொக்கரிக்கிறான்.ஆனால் மநுவில் அளவோடு தண்டனைகள் பேசப்படுகின்றன.

7-99. Let him strive to gain what he has not yet gained; 
what he has gained let him carefully preserve; 
let him augment what he preserves, and 
what he has augmented let him bestow on worthy men.

100. Let him know that these are the four means for securing the aims of human (existence); let him, without ever tiring, properly employ them.

101. What he has not yet gained, let him seek to gain by his army; what he has gained, let him protect by careful attention; what he has protected, let him augment by various modes of increasing it; and what he has augmented, let him liberally bestow on worthy men.

7-102. Let him be ever ready to strike, 
his prowess constantly displayed, and 
his secrets constantly concealed, and 
let him constantly explore the weaknesses of his foe.

tags-மநு நீதி நூல்- பகுதி 37

–தொடரும்

வித்யாரண்யர் செல்வம் கேட் டு ஏமாந்த கதை (Post N0.5809)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 December 2018
GMT Time uploaded in London – 13-32
Post No. 5809


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

                                     !

நீதி சதகம்- பர்த்ருஹரி

பாடல் 44

யத்தாத்ரா நிஜபாலபட்டலிகிதம் ஸ்தோகம் மஹத்தா தனம்

தத்ப்ராப்னோதி மருஸ்தலேபி நிதராம் மேரௌ ச நாதோதிகம்

தத்திரோ பவ வித்தவத்சு க்ருபணாம் வித்திம் வெருதா மா க்ருதாஹா

கூபே பஸ்ய பயோநிதாவபி கடோ க்ருஹ்ணாதி துல்யம் ஜலம்- 44

“ஒருவனுடைய நெற்றியில் பிரம்மா எழுதிவைத்த அளவே அவனுக்கு செல்வம் கிடைக்கும். அவன் பாலைவனத்தில் வசித்தாலும்  இது கிடைக்கும். மேரு மலையில் வசித்தாலும் இதைவிடக் கூடுதலாக எதுவும் கிடைக்காது. ஆகையால் பொறுமையுடன் இரு. பணக்காரர்களிடம் சென்று அடிபணிந்து முகத்துதி செய்யாதே. ஒரு குடத்தைக் கடலில் முக்கினாலும், கிணற்றில் முக்கினாலும் குடத்தின் அளவுக்கே தண்ணீர் கிடைக்கும்”.

தலைவிதிப்படியே செல்வம் கிட்டும் என்பதை விளக்க ஒரு கதை, இந்து சமய நூல்களில் உள்ளது:–

வித்யாரண்யர் என்பவர் தென்னாட்டில் துலுக்கர்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த பெரிய மஹான். அவர் இளம் வயதில் செல்வம் வேண்டி தவம் இருந்தார். இவரது தவத்தை மெச்சிய தேவி, அவர் முன் தோன்றி,

அன்பனே! உன் தவத்தை மெச்சுகிறோம் ஆனால் இந்த நற்பிறப்பில் உமக்கு செல்வம் கிடைக்க வழியில்லை. உமது தலைவிதி அப்படி.

ஆயினும் வேறு ஏதாவது ஒரு வரம் கேள்;  அதைத் தருகிறேன் என்றாள்.

வித்யாரண்யர் யோசித்தார். தேவியயையே   மடக்கி விடுவோம் என்று ஒரு கிடுக்கிப் பிடி போட்டார். நான் ஸந்யாஸம் வாங்கினால் அது டுத்த பிறவிதானே. இப்போதே ஸந்யாஸி ஆகிறேன். அடுத்த பிறவிக்கான செல்வத்தைக் கொடு என்று கேட்டார்.

தேவியும் சிரித்துக் கொண்டே ‘டன்’ கணக்கில் அவர் முன் தங்கப் பாளங்களை வைத்துவிட்டு மறைந்து விட்டாள்

வித்யாரண்யரோ ஸத்யம் தவறாத மஹா யோகி. ஸந்யாஸம் எடுத்த அடுத்த நிமிடமே அவருக்குப் புரிந்தது; எதிலும் பற்று  இருக்கக் கூடாது என்பது.

அடடா! தேவியிடம் ஏமாந்துவிட்டோமே. ஸந்யாசமும் செல்வமும் ‘சூடான ஐஸ்க்ரீம் என்பது போல ஆயிற்றே’ என்று உணர்ந்தார். அந்தக் காலத்தில் துலுக்கர்களின் அட்டஹாசம் பெருகிக்கொண்டே வந்தது; இந்து தர்மம் அழிபட்டு  வந்தது. அவர் கண் முன்னால் இரண்டு ஆட்டு இடையர்கள் தென்பட்டனர். அவர்களிடம் பிரம்மாண்டமான செல்வத்தைக் கொடுத்து படை திரட்டச் சொன்னார். அவர்களும் உரிய பயிற்சி பெற்று மாபெரும் படை திரட்டி விஜய நகரப் பேரரசை நிறுவி தென்னாட்டில் புகுந்த துலுக்கப் படைகளை விரட்டி அடித்தார் கள்.

விதிப்படி செல்வம் கிட்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. பர்த்ருஹரி சொல்லுவது போல, பாலைவனத்தில் இருந்தாலும் செல்வம் கிட்டும் என்பதற்கிணங்க ஹரிஹரன், புக்கன் என்ற இருவருக்குச் செல்வம் போய் சேர்ந்து விஜய நகரப் பேரரசு உதயமானது.

விதியே வலியது என்னும் வள்ளுவன் கருத்து

திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் மிகத் தீவிரமாக விதியின் வலிமையை விளக்குகிறார்.

கர்ம வினை என்பதுதான் இந்துமத்தின் சிறப்புக் கொள்கை. இந்து மதத்தைத் தொடர்ந்து பாரதத்தில் எழுந்த பிற மதங்களான சமணம், பவுத்தம்,

சீக்கியம் ஆகியனவும் கர்மவினைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன.

இதோ விதியை வலியுறுத்தும் முக்கியக் குறள்கள்

வள்ளுவனும் விதியின் காரணமாகவே ஒருவனுக்கு செல்வம் கிடைக்கிறது என்னும் பர்த்ருஹரி கருத்தை ஆதரிக்கிறான்:

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி- 371

பொருள்

ஒருவனுக்கு பணம் வரக்கூடிய தலைவிதி இருக்குமானால் அவனுக்கு முயற்சி தோன்றும்;அவன் தலைவிதி பணம் வரக்கூடாது என்றால் அவனை சோம்பல் ஆட்கொள்ளும்

பிரம்மாதான் நெற்றியில் எழுதுகிறான் என்பதை வள்ளுவனும் ஒப்புக்கொள்கிறான்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது- 377

கோடி கோடியாகப் பொருள் சேர்த்து இருந்தாலும் நம் விதியை வகுக்கும் இறைவன் எழுதியபடியே நடக்கும்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான் முந்துறும்- 380

தலை விதியை விட, வேறு வலி மையானது ஏதேனும் இருக்கிறதா?

statue of Brahma

அவ்வையார்

ஒரு குடத்தை எவ்வளவு தண்ணீரில் முக்கினாலும், குடத்தின் கொள் அளவுக்கே தண்ணீர் மிஞ்சும் உள்ளே தங்கும் என்பதை பர்த்ருஹரியிடமிருந்து அவ்வையாரும் எடுத்தாண்டுள்ளார்.

இதோ அந்தப் பாடல்

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.18.Though you dip the measure deep in the deep sea water, it will not contain four measures. O Maid ! Though riches and husband are choice, the happiness of the couple hangs on fate or destiny.மூதுரைப் பாடல் இது. இதை எழுதிய அவ்வையார் சங்க கால அவ்வையார் அல்ல. பர்த்ருஹரிக்குப் பல நூறு நூற்றாண்டுகள் பிறப்பட்டவர். பர்த்ருஹரி சொன்ன பல கருத்துக்கள் அவருக்குப் பின்னர் தோன்றிய பதினென் கீழக்கணக்கு நூல்களிலும்  உள.

இன்னொரு சிறப்பு- பிரம்மாதான் ஒருவனுடைய தலையில் அல்லது நெற்றியில் எல்லாவற்றையும் எழுதிவைக்கிறான் என்பதாகும்.

எழுத்துமுறையைக் கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. கல்வி, எழுத்து, படைப்பு, விதி ஆகியவற்றுக்குப் பிரம்மாவும், அவருடைய மனைவி ஸரஸ்வதியுமே அதிதேவதைகள் என்பது இமயம் முதல் குமரி வரையுள்ள நம்பிக்கை.

tags– வித்யாரண்யர் ,விதியே வலியது,நீதி சதகம், பர்த்ருஹரி

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

வரி விதிப்பது எப்படி? பர்த்ருஹரி, வள்ளுவன், மநு அறிவுரை (Post No.5793)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 December 2018
GMT Time uploaded in London – 8-33 am
Post No. 5793


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரி நீதி சதகம் 40, 41, 42, 43

பர்த்ருஹரியின் நீதி சதகத்தைத் தொடர்ந்து காண்போம்

ஏழையாய் இருப்போனுக்கு ஒரு சில தானிய மணிகள் கிடைத்தால் மகிழ்ச்சி; ஆனால் அவனுக்கே நிறைய செல்வம் கிடைத்து கோடீஸ்வரன் ஆகிவிட்டாலோ உலகத்தையே ஒரு சிறு புல் என மதிப்பான். ஆக செல்வத்தின் தன்மை நிலையற்றது. ஒருவனுடைய சூழ்நிலையைப் பொறுத்தே அதன் முக்கியத்துவம்  உள்ளது

பர்த்ருஹரி நீதி சதகம் , ஸ்லோகம் 40

அதாவது செல்வம் ஒருவனை மாற்றி விடும். முதலில் சோற்றுக்கே லாட்டரி அடித்தவனுக்கு, லாட்டரி விழுந்து விட்டாலோ உலகத்தையே மதிக்கமாட்டான்

பரிக்ஷீணஹ கஸ்சித் ப்ருஹயதி யவானாம் ப்ரஸ்ருதயே

ஸ பஸ்சாத் ஸம்பூர்ணஹ கலயதி தரித்ரீம் த்ருண சமம்

அதஸ்சானே காந்தா குருலகுதயார்தேஷு தனினா

மவஸ்தா வஸ்தூனி ப்ரதயதி ச ஸங்கோசயதி ச- 40

இது செல்வம் வந்துவிட்டால் ஒருவன் தலைகால் புரியாமல் திரிவான் என்பதைக் காட்டும்.

தமிழிலும் பழமொழி உண்டு:

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான் – என்று.

பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு ஸர்மன் இதை இன்னும் அழகாக வருணிப்பான். முதலில் சோர்ந்து கிடந்த எலிகள், வயிறு கொழுக்கச் சாப்பிட்டவுடன் எகிரிக் குதிக்க ஆரம்பிக்கும் இதுவே செல்வம் வந்தவர்களின் நிலையும் என்பது விளங்கும்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் செல்வம் வந்தவுடன் ஒருவன் எப்படி மாறினான்  என்று சொல்லுகிறார்.

பரமஹம்ஸர்  சொல்கிறார்:-

பணம் என்பது வலிமைமிக்க, தீமைமிக்க கவர்ச்சிப்பொருள்.

ஒருவன் செல்வத்தைப் பெற்றதும் மிகவும் மாறிவிடுகிறான். வணக்கமும் அமரிக்கையும் உள்ள பிராம்மணன் ஒருவன் அடிக்கடி தக்ஷிணேஸ்வரத்து க்கு வருவதுண்டு. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும் எக்களுக்குத் தெரியவில்லை. ஒரு நாள் நாங்கள் படகு மார்க்கமாக கொன்னாகருக்குப் போனோம்.

படகிலிருந்து கீழே இறங்கும் போது, அந்தப் பிராம்மணன் பிரபுக்களைப் போல கங்கைக் கரையில் உடகார்ந்துகொண்டு, காற்று வாங்குவதைக் கண்டோம். அவன் என்னைக் கண்டதும்,

‘என்ன, ஸ்வாமி, சௌக்கியமா? ‘என்று கம்பீரத் தொனியுடன் கேட்டான். அவனது குரலில் இருந்த மாறுபாட்டைக் கவனித்ததும் நான் ஹிருதயனிடம், இவனுக்கு ஏதோ பணம் கொஞ்சம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. என்ன மாறுதல் உண்டாகி இருக்கிறது, பார்த்தாயா? என்றேன். ஹிருதயன் விலா வலிக்கச் சிரித்தான்.

xxxx

வரி விதிப்பது எப்படி?

ஓ அரசனே! இந்தப் பூமி என்னும் பசுவிடம் இருந்து பால் கறக்க விரும்பினால், முதலில் கன்றுகள் என்னும் மக்களுக்கு உணவளித்துப் பாதுகாக்க வேண்டும். உனது மக்களை அன்புடனும் பரிவுடனும் போற்றிப் பாதுகாத்தால், பூமியானது கற்பக மரம் போல வேண்டியதை எல்லாம் உனக்கு அளிக்கும்.–41

இது எல்லா அரசுக்கும் இன்றும் பொருந்தும். முதலில் மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யாவிட்டால் அரசனின் வரி விதிப்புகள் எதிர்ப்பையே சந்திக்கும்.

காளிதாசனும் கூட இதை வேறு விதமாகச் சொல்லுவான். ஆயிரம் கிரனணங்களால் கடல் நீரை சூரியன் உறிஞ்சுவது எதற்காகத் தெரியுமா? அதை மழை போல பூமியில் கொட்டதான் என்பான். ஆக அரசனுடைய வரிவிதிப்பு மக்களுக்காகவே!

வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர்.

அட்டை போல உறிஞ்சு!

மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.

ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)

அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.

அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப் பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.

பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.

வள்ளுவன் சொல்லுவான்:

அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.

வேலொடு நின்றான் இடு என்றது போலும்

கோலொடு நின்றான் இரவு (குறள் 552)

பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை  வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.

காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-

ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்

சதாப்யோ பலிமக்ரஹீத்

சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்

ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு 1-18)

சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும்  உதவுவது போல அரசனும் உதவுவான்.

இந்துமத நுல்களில் நாடும் பூமியும் பசுவுடன் ஒப்பிடப்படுகிறது. பசு பால் தருவது போல பூமியும் வற்றாது வளம் கொழிக்கும்.

ராஜன் துதுக்ஷஸி யதி க்ஷிததேனுமேனாம்

தேனாத்ய வத்ஸமிவ லோகமமும் புஷாண

தஸ்மிஞ்ச ஸம்யகனிசம் புரிபுஷ்யமாணே

நானாபலம் பலதி கல்பலதேவ பூமிஹி-41

ஒரு அரசன் நியாயமாக ஆட்சி செய்தால் வளம் கொழிக்கும். அநியாய ஆட்சி செய்தால் வறட்சி நிலவும் என்னும் பர்த்ருஹரியின் கொள்கையில் வள்ளுவனுக்கும் உடன்பாடு  உண்டு

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல் – குறள் 559

நீதி முறை தவறி மன்னன் ஆட்சி செய்தால் அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகும்.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையும் தொக்கு – குறள் 559

தர்ம நூல்கள் செப்பும் படி ஆட்சி நடத்தும் மன்னவன் நாட்டில் மழையும் பெய்யும்; விளைச்சலும் பெருகும்.-559

இதையே காளிதாசனும் ரகு வம்ச காவியத்தில் செப்பினான் (5-29/33)

xxxx

அரசனும் விலை மாதும்

ஒரு அரசன் விலை மாதர் போன்றவன் என்று பர்த்ருஹரி சொல்லுவான். இக்கருத்து சங்க இலக்கிய நூலான புற நானூற்றிலும் (365) உள்ளது.

ஸத்யான்ருதா ச பருஷா ப்ரியவாதினீ ச

ஹிம்ஸ்ரா தயாலுஅபி சார்த்தபரா வதான்யா

நித்யவ்யயா ப்ரசுரனித்யதனாகமா ச

வாராங்கனேவ ந்ருபனீதிரனேகரூபா -42

ஒரு அரசனுடைய வாழ்வு ஒரு விபசாரியைப் போல பல உருவங்களை எடுக்கும். அவன் பொய்யும் பேசுவான்; மெய்யும் உரைப்பான். அவன் சுடு சொற்களும் பெய்வான்; இனிய சொல்லும் அருள்வான். கருணையுடன் இருப்பான்;சில நேரங்களில் கொடுங்கோலனாகக் காட்சி தருவான். அவன் கொடயாளியாகவும் இருப்பான்; கருமியாகச் செல்வத்தையும் சேர்ப்பான். சில நேரங்களில் பணத்தை விரயமும் செய்வான்- ஸ்லோகம் 42

இதை அடுத்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறான் என்று பார்த்து ஒப்பிட வேண்டும். ஒருவனுடைய போக்கு எப்படியும் இருக்கலாம். அவனுடைய     அப்போதைய மனநிலையே இதற்குக் காரணம் என்றும் கொள்ளலாம் அல்லது அரசனானவன் இப்படி எல்லாம் இருக்கும் நிர்பந்தம் உண்டு என்றும் கருதலாம். ஆனால் அடுத்த ஸ்லோகத்தில் ஆறு நல்ல குணங்களைப் பட்டியலிட்டு  விடுகிறான். ஆகையால் பர்த்ருஹரியின் கொள்கை நமக்குத் தெளிவாகி விடுகிறது.

ஆக்ஞா கீர்த்திஹி பாலனம் ப்ராஹ்மணானாம்

தானம் போகோ மித்ரஸம்ரக்ஷனாம் ச

யேஷாமேதே ஷட்குணா நப்ரவ்ருத்தாஹா

கோஅர்த்தச்தேஷாம் பார்த்திவோபாஸ்ரயேண- 43

பொருள்

ஒரு அரசனுக்கு கீழ்க் கண்ட ஆறு குணங்கள் இல்லாவிடில் அந்த அரசனின் கீழ் வாழ்வதில் அர்த்தமே இல்லை; அரசனுக்குத் தேவையான ஆறு குணங்கள்–

ஆணை இடும் அதிகார தோரணை, புகழ், பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்கல், நண்பர்களைக் காப்பாற்றுதல், தானம், அதே நேரத்தில் இன்பமான வாழ்வு

வள்ளுவனும் இவைகளைச் சொல்லுகிறான்.

அரசனுடைய நீதி வழுவினால், பசுக்கள் பால் தராது; பிராமணர்களுக்கு வேதம் மறந்துவிடும் என்பான். இதன் பொருள்

கோ ப்ராஹ்மணேப்ய ரக்ஷதி (பசுவையும் பார்ப்பனர்களையும் போற்றுவதே நல்லாட்சியின் சின்னங்கள்)- குறள் 560

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் -560

ஆக பாரதீய சிந்தனை இமயம் முதல் குமரி வரைஒன்றே!

परिक्षीणः कश्चित्स्पृहयति यवानां प्रसृतये
स पश्चात्सम्पूर्णः कलयति धरित्रीं तृणसमाम् ।
अतश्चानैकान्त्याद्गुरुलघुतया‌உर्थेषु धनिनाम्
अवस्था वस्तूनि प्रथयति च सङ्कोचयति च ॥ 1.40 ॥

राजन्दुधुक्षसि यदि क्षितिधेनुम् एतां
तेनाद्य वत्सम् इव लोकम् अमुं पुषाण
तस्मिंश्च सम्यगनिशं परिपोष्यमाणे
नानाफलैः फलति कल्पलतेव भूमिः ॥ 1.41 ॥

सत्यानृता च परुषा प्रियवादिनी च
हिंस्रा दयालुरपि चार्थपरा वदान्या ।
नित्यव्यया प्रचुरनित्यधनागमा च
वाराङ्गनेव नृपनीतिरनेकरूपा ॥ 1.42 ॥

आज्ञा कीर्तिः पालनं ब्राह्मणानां
दानं भोगो मित्रसंरक्षणं च
येषाम् एते षड्गुणा न प्रवृत्ताः
को‌உर्थस्तेषां पार्थिवोपाश्रयेण ॥ 1.43 ॥

tags-வரி விதிப்பது,  விலை மாது, பர்த்ருஹரி நீதி சதகம் 40, 41, 42, 43

–சுபம்—

Xxxx