மஹாபாரதத்தில் வாணிபம்- வியாபாரம் (Post No.5082)

Written by London Swaminathan 

 

 

Date: 7 JUNE 2018

 

 

Time uploaded in London – 7-22 AM

 

Post No. 5082

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மஹாபாரதத்தில் வாணிபம்- வியாபாரம் (Post No.5082)

வேத காலம் முதல் வணிகச் செய்திகள் கிடைக்கின்றன. ‘பாணி’ என்ற வணிகர்கள் பற்றிய செய்திகளும் அவர்களின் அடாவடிச் செயல்களை இந்துக்கள் கண்டித்ததையும் வேதத்தில் காண்கிறோம்; பிற்காலத்தில் ‘பனியா’ என்ற சொல் வணிகர்களைக் குறித்தது. வியாபாரிகளைக் குறிக்கும் இச் சொல்.( ‘பாணி’  ) பீனீஷியர்களைக் குறித்ததாகவும் சிலர் கொள்வர். மாபாரதத்தில் இல்லாதது உலகில் எதுவும் இல்லை என்ற ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் பிரசித்தமானது “வ்யாச்சோசிஷ்டம் ஜகத் ஸர்வம்” என்பர்- அதாவது வ்யாஸ பகவானின் எச்சில்தான் உலகம் முழுதும்  உளது என்பது  தாத்பர்யம் (கருத்து)- இதன் பொருள் யாது என்றால் இவ்வுகில் வியாஸர் என்ற முனிவரின் வாயில் வராத சொல் எதுவும் இல்லை என்பதாம்.

 

உலக மஹா இதிஹாசமான– உலகிலேயே நீண்ட கவிதை நூலான– மஹாபாரதத்தில்– எதிர்பாராத ஒரு வர்த்தகச் செய்தி வருகிறது- நள தமயந்தி கதையில் அச் செய்தி உளது!

ஆரண்யக பர்வம் தரும் தகவல் இதோ:-

சேதி நாட்டில் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டும் நோக்கத்தோடு ஒரு பெரிய சார்த்தவாஹன வண்டித் தொடர் சென்று கொண்டிருந்தது. அது வேத்ரவதி நதியைக் கடந்து செல்லும் தருணத்தே தமயந்தியும் அக்கூட்டத்தில் சேர்ந்துகொண்டாள். வேத்ரவதியின் தற்காலப் பெயர் பேட்வா நதி. நடுக்காட்டின் வழியே சென்ற போது சார்த்தவாஹ தலைவர் மணிபத்ரா கடவுளை நோக்கிப் பிராத்தனை செய்தார்.

 

(மணிமேகலை என்பது தமிழ் வணிகர் தெய்வம்; மணிபத்ரா என்பது வடக்கத்திய வியாபாரிகளின் தெய்வம்– எனது முந்தைய கட்டுரையில் மேல் விவரம் காண்க).

 

அந்தக்கூட்டத்தில் யானைகள், குதிரைகள், ரதங்கள் எல்லாம் அணிவகுத்துச் சென்றன. அதிலுள்ள கழுதைகள்,  காளை மாடுகள், ஒட்டகங்கள், மக்கள் எல்லாம் கடல் போலக் காட்சி அளித்தன. வியாபாரிகள் மட்டுமின்றி வேதம் ஓதும் பிராஹ்மணர்களும் அதில் காணப்பட்டனர்.

(முன் காலத்தில் காடுகளைக் கடந்து வேற்றூருக்குச் செல்ல விரும்புவோர் இத்தகைய மாசாத்தனுடன் (சிலப்பதிகாரம்- மாசாத்தான்) செல்வர். அவ்வகையிலேயே தனி ஒரு பெண்ணான இளவரசி தமயந்தியும் சேர்ந்துகொண்டாள். குழந்தைகளும் பெண்களும் வயோதிகர்களும் அதில் சென்றனர் என்பதை மாபாரதம் தெளிவு படுத்துகிறது.)

 

இந்தியர் வாழ்வின் இணையற்ற என்சைக்ளோபீடியா (கலைக் களஞ்சியம்)  மஹாபாரதம்- ராக்கெட் விஞ்ஞானம் முதல் வேதாந்தம் வரை அத்தனை விஷயங்களையும் உடைத்து.

 

(கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள், காலப் பயணம், மேலுக மக்களை அர்ஜுனன் கண்டது முதலிய விஞ்ஞான விஷயங்களை எனது முந்தைய கட்டுரைகளில் கண்டு மகிழ்க)

 

இத்தகைய கூட்டத்தில் இளமைத் துடிப்புள்ள சில காமப் பிசாசுகளும் இருந்தன. அவர்கள், பேரழகியான தமயந்தியைக் கண்டவுடன் நக்கல் அடிக்கத் தொடங்கினர்; சிலர் ஜொள்ளு விட்டனர். உடனே அங்கிருந்த பெரியோர் அத்தகைய காமாந்தகர்களை விலக்கி, தமயந்தியின் சோகக் கதையை அன்புடன் வினவினர். மஹாபாரதம் இன்னும் ஒரு விஷயத்தையும் செப்பத் தவறவில்லை.

 

தமிழ் பேரர்சர்கள் படையெடுக்கும் முன் ஒரு படை (தூஸிப் படை) முன் சென்று வழி செய்தது போல, இந்த வணிகர் குழுவிலும் ஒரு தொழிலாளர் படை முன்னே சென்று காடு வெட்டி, புதர் அகற்றி வழி செய்தனவாம்; இத்தகைய சிறு விஷயங்களையும் செப்பும் இதிஹாசம் மஹாபாரதம்.

‘சார்த்தவாஹ’ வெறும் வணிகர் தலைவனாக மட்டுமின்றி அதன் எஜமானனாகவும் விளங்கினன் என்கிறது இந்நூல்.

 

மாலை நேரம் நெருங்கியது; சூரிய தேவன் மலை வாயில் விழுந்து கொண்டிருந்தான். சார்த வாஹத் தலைவன் கட்டளையின் பேரில் அவரவர் முகாம் அடித்தனர். ஆனால் அந்த முட்டாள் வணிகர் தலைவனுக்கு அது யானைப் பாதை என்பது தெரியாது. வனவிலங்குகள் குளிக்கவும் தண்ணீர் குடிக்கவும் நீர் நிலைகளை நோக்கி வரும் பாதை அது. யானைகள் தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக வரவே வணிகர்கள் பீதி அடைந்து ஓடினர். அவர்களில் பலர் மிதிபட்டு இறந்தனர்; ஒரே களேபரம்; அங்கும் இங்கும் அனைவரும் சிதறி ஓடினர்; துயரக் காட்சி.

 

இத்தகைய குழப்பத்துக்கு இடையே உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் தமயந்தியும் ஒருவள் (ஒருத்தி); அவள் நளனைத் தேடிச் செல்லும் நெடும் பயணம் இது. வணிகர்களுடன் சேர்ந்து அவளும் காட்டைக் கடந்தாள்.

 

மஹாபாரதத்தில் வியாஸர் எத்தனை வகைச் செய்திகளைத் தொகுத்துட அளிக்கிறார் என்பது வியப்புறும் செய்தி;  2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்த ஒரு கிரேக்கன் இந்த நாட்டில் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் உடைய ஒரு கிரந்தம் (நூல்) இருக்கிறதாம் என்று வியப்புடன் எழுதியுள்ளான்.

வாழ்க மஹாபாரதம் – வளர்க இந்திய வணிகம்

 

– சுபம், சுபம்–

நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்! (Post No.5027)

Written by S NAGARAJAN

 

Date: 20 MAY 2018

 

Time uploaded in London –  6-28 AM   (British Summer Time)

 

Post No. 5027

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் மே 2018  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆரோக்கிய ரகசியம்

நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்!

 

ச.நாகராஜன்

நமது ஆயுர்வேத நூல்களிலும், வைத்ய நூல்களிலும் இதர சுபாஷித நூல்களிலும் ஆரோக்கியம் பற்றிய ஏராளமான நுட்பமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது அடிப்படையான விஷயம். இதை முதலில் தெரிந்து கொண்டால் நமக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெற்று நோய்களிலிருந்து மீளலாம்.

நோயே இல்லாத ஆரோக்கிய வாழ்வைப் பெறவும் இந்தக் கருத்துக்கள் இன்றியமையாதவை.

சில கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டு தரப்படுகின்றன.

1

நோய் வருவதற்கான நான்கு காரணங்கள்

ரோக நிமித்தம்

  • ஆகண்டுகா – Exogenous – வெளியிலிருந்து
  • வாதம்
  • பித்தம்
  • ஸ்லேஷ்மா

சரக சம்ஹிதை (சூத்ர 20-3)

 

2

நோயாளியின் நான்கு குணங்கள்

ரோகாதுரா குணா:

 

1) ஸ்மிருதி – நல்ல ஞாபக சக்தி (good memory)

2) நிர்தேசா – மருத்துவ அறிவுரையின் படி நடத்தல் (follwoing the prescription)

3) அபீருத்வா – பயமின்மை (fearlessness)

4) ஞானபாகா – தடையற்ற வெளிப்பாடுகள் (uninhibited expressions)

 

சரக சம்ஹிதை (சூத்ர 9-9)

 

3

நோயைப் போக்கத் தேவையான அம்சங்கள்

Aspects of therapeutics for the cure of disease

 

1)பிஷக் – வைத்தியர் (Physician0

2) த்ரவ்யாணி –  மருந்துகள் (Medicines)

3) உபஸ்தாதா – உடன் இருந்து உதவி செய்பவர் -Upasthata

4) ரோகி – வியாதியஸ்தர் – Rogi

சரக சம்ஹிதை (சூத்ர 9-3)

 

4

வைத்யருக்கான குணங்கள்

வைத்ய குணா:

 

1) மிகச் சிறந்த மருத்துவ அறிவு (ச்ருதே பர்யாவதாதத்வம்)

2) பரந்த மருத்துவ அனுபவம் (பஹுஷோ த்ருஷ்டகர்மதா)

3) திறமை (தாக்ஷ்யம்)

4) சுத்தம் (சௌசம்)

சரக சம்ஹிதை (சூத்ர 9-6)

 

5

அறுவை சிகிச்சை நிபுணருக்கான குணங்கள்

சஸ்த்ர வைத்ய குணா:

பயப்படாமை – சௌர்யம்

எளிதாகக் கையாளும் தன்மை – ஆசுக்ரியா

சஸ்த்ரதைக்ச்ன்யம் – மிகக் கூர்மையான கருவிகள்

வியர்வை இல்லாமல் இருத்தல், நடுங்காமல் இருத்தல் -அஸ்வேதவேபது

குழப்பமின்றி இருத்தல் – அஸம்மோஹ:

சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 5-10)

 

6

நோயாளிகளிடம் வைத்யரின் அணுகுமுறை

வைத்ய வ்ருத்தி

 

நட்பு – (மைத்ரி)

தயை – (காருண்யா)

சந்தோஷம் – (ப்ரீதி)

இரக்கம் – (உபேக்ஷணம்)

சரக சம்ஹிதை (சூத்ர 9-26)

7

நோய் அறிதல்

வியவஹார தர்ஷணம் (Diagnosis)

 

கேட்டல்- (ஆகம)

உரையாடுதல் – (வியவஹாரா)

சிகிச்சை – (சிகித்ஸா)

முடுவெடுத்தல் – (நிர்ணயா)

நாரத ஸ்மிருதி (1-36)

 

8

நோய் அறிதல்

ரோக விஞ்ஞானம்

நோய் வருவதற்கான காரணம் – நிதானம்

முந்தைய நிலை – பூர்வரூபா

தோற்றம் – ரூபா

நோய்க்குத் தீர்வு – உபசாயா

முடிவு – சம்ப்ராப்தி

மாதவ நிதானம் (1-4)

 

9

 

வியாதிகளின் வகைகள்

வியாதி

 

தொற்று நோய் – (ஆகண்டவா)

உடல் சம்பந்தமானது – (சரீரா)

மனோ வியாதி – (மானஸா)

இயற்கையானது – (ஸ்வாபாவிகா)

சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 1-23)

10

எலும்பு வகைகள்

அஸ்திவர்கா

 

தட்டை – (கபாலா)

பல் – (ருசகா)

குருத்தெலும்பு – (தருணா – cartilege)

வட்ட வடிவமானது – (வளயா)

நீளமானது – (நாளகா)

சுஸ்ருத சம்ஹிதா (சரீர 5-20)

11

மருந்துக் கஷாயங்கள்

கஷாயம்

 

அத்தி – (சமி)

அரசு – (அஸ்வத்தா)

ஆலமரம் – (ந்யாக்ரோதா)

புரசு – (பலாச)

 

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்கரீதியாக ஆராய்ந்து எது நல்லது, யார் வியாதியை நீக்கத் தகுதியானவர்கள் என்பன போன்றவற்றை ஆயிரக் கணக்கான செய்யுள்கள் தருகின்றன.

 

அனுபவத்தின் அடிப்படையில் சிறந்த வைத்தியர்கள் ஒவ்வொரு கிராமம்தோறும் இருந்து மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகப் பாடுபட்டனர். பாரம்பரிய வழியிலான அந்த ஆயுர்வேத மருத்துவம் பற்றி அறிவது நமது கடமை – நமது நலனுக்காகவே!

***

 

 

 

 

 

 

 

 

 

ஸம்ஸ்க்ருதம் படித்த வில்லியம் ஹென்றி ராபின்ஸனின் சுவையான கதை (Post No.4967)

ஸம்ஸ்க்ருதம் படித்த வில்லியம் ஹென்றி ராபின்ஸனின் சுவையான கதை (Post No.4967)

 

Written by London Swaminathan 

 

Date: 1 May 2018

 

Time uploaded in London – 17-00 (British Summer Time)

 

Post No. 4967

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

எவ்வளவோ வெளிநாட்டினர் ஸம்ஸ்க்ருதம் பயின்றனர். மாக்ஸ்முல்லர், வில்சன், ஓல்டன்பர்க், க்ரிப்பித், ராத், ஸிம்மர், கீத், மக்டொனால்ட், எக்லிங் போன்ற நூற்றுக் கணக்கானோர் பெயர்கள்– பலருக்கும் தெரியும். ஆயினும் கூகிள் செய்தாலும் அரிதே தென்படும் ஒருவர் வில்லியம் ஹென்றி ராபின்ஸன் — லண்டன் யுனிவர்ஸிட்டி லைப்ரரியில் பர்த்ருஹரியின் நீதி சதகத்தைத் தேடிப் போனேன்; எதேச்சையாக நூற்றாண்டுக்கும் முந்தைய ஒரு புத்தகம் கையில் அகப்பட்டது. அதிலுள்ள கதையைச் சொல்லுவதற்கு முன்னால், ராபின்ஸன் கதையைச் சொல்லுகிறேன்.

19 வயதில் திருமணம்

லண்டனில் 1824 ஆம் ஆண்டில் வெஸ்டமினிஸ்டர் பகுதியில் ராபின்ஸன் பிறந்தார். 1891 ஆம் ஆண்டில் இறந்தார்.

லண்டன் அந்த நூல்

அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் கோல்டன் லெஜென்ட் ஆஃப் இண்டியா. (Golden Legend of India). 1898ம் ஆண்டில் முதல் பதிப்பு வெளியானது. அது பிரிண்டில் இருக்கையில் அவர் இறந்துவிட்டார்.

 

அவருடைய பெற்றோர்கள் மிகவும் ஏழைகள். இருந்தபோதிலும் நன்கு படிக்க வைத்தனர். இதனால் அவர் 14 வயதிலேயே மாணவர்- ஆசிரியராக நியமனம் பெற்றார்.

 

நம்மூர் போலவே அவருக்கு 19 வயதிலேயே திருமணம் நடந்தது.

 

அந்த நூலின் அடிக் குறிப்புகளைப் பார்த்தவுடனேயே அவர் ஸம்ஸ்க்ருத இந்து மத நூல்களை ஐயம் திரிபறக் காற்றவர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கியது. மேலும் அவர் எழுதிய நூல் ஆங்கில மொழியில் கவிதை நடையில் அமைந்துளது. இதனால் இவருடைய ஆங்கிலப் புலமையும் விளாங்கா நிற்கும். (ஆ என்பது எதிர்மறைப் பொருள் தரா; விளங்கி நிற்கும் என்பதே போருள்)

 

அவ்வளவு சின்ன வயதிலேயே கல்யாணம் கட்டியதால், நல்ல சம்பள வேலையை நாடினார்.வரி வசூல் அலுவலகத்தில் வேலை கிடைத்தது; பின்னர் பல வேலைகளுக்குத் தாவினார். சென்ற இடமெல்லாம் சிறப்பே கிடைத்தது.

 

ஸம்ஸ்க்ருதத்தில் விழுந்தார்!

 

திடீரென்று கீழை நாட்டு விஷயங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. பிரிட்டிஷ் மியூஸியத்தில் ஸம்ஸ்க்ருதம் கற்றார். அங்கு இவர் முகத்தை அறியாத அறிஞர் எவருமிலர். அற்புதமான இந்திய தத்துவ நூல்களில் மூழ்கிப் போனார். டாக்டர் ரிச்சர்ட் கார்னர் (Dr Richard Gardner) என்ற அறிஞர், அன்பரே! படியும்; மேலும் மேலும் படியும்!! என்று உத்வேகம் ஊட்டினார். அவருடைய கோல்டன் லெஜெண்ட் நூல் தயாராகவும் உதவினார்.

 

ஹென்றியின் மனைவி 1889-ல் காலமானார். இது அவருக்கு பெருத்த அடியாக இருந்தது; பட்ட காலிலேயே படும் என்பது பழமொழி அல்லவா? 1897ல் அவரும் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டார். ஒரு வண்டி மோதி படு காயமடைந்தார். உடைந்த கையை ஒட்டினாலும் உடைந்த மனம் ஒட்டவில்லை.

 

கடைசி சில ஆண்டுகளில் படுத்த படுக்கையாகக் கிடந்தார். அதுவும் அவருக்கு கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற்போல அமைந்தது. நூலை எழுதி முடித்து, பிரிண்டுக்கு அனுப்பினார். திரும்பத் திரும்பி அதைத் திருத்தி எழுதி அடிக் குறிப்புகளைச் சேர்த்தார். அவைதான் இவருடைய அறிவுக்குச் சான்று பகர்கின்றன ஆனால் புத்தகம்  அச்சாகி  வந்தது; அதற்கு முன் அவர் காலச் சுவடில் அச்சாகி மறைந்து விட்டார்.

அவருடைய அறிவுத்தாகம் தணியவே இல்லை. உடல் தளர்ந்தாலும்             உள்ளம் உரம் பெற இந்திய இலக்கியங்களும் தத்துவ நூல்களும் உதவின. தெய்வீக உண்மைகளை வெளி உலகிற்கு அறிவிக்க ஆசை கொண்டார். இந்த நூலைப் பார்வையிட்ட பலரும், இதன் இலக்கிய நயத்தோடு இந்திய தத்துவ ஞானமும் பெற இது உதவுகிறது என்றனர்.

 

சுனஸ்சேபன் என்றால் நாய் வால் என்று பலரும் மொழி பெயர்ப்பர். ஆனால் ஹென்றியோ சினோசூர் (Cynosure)  எனப்படும் துருவ நட்சத்திரமே இதன்      சரியான மொழிபெயர்ப்பு என்பார்.

சுனஸ்சேபன் கதையை வில்ஸன், ராத் போன்ற அறிஞர்கள் மொழிபெயர்த்த போதும் ஹென்றியே ஐதரேய பிராஹ்மணக் கதையை முழுதும் தனி நூலாகத்   தந்துள்ளார்.

 

ஹரிசந்திரன் என்ற மன்னனின் கதையை அறியாத இந்தியர் எவருமிலர். மஹாத்மா காந்தி போன்றோரை உருவாக்கிய உண்மை விளம்பியின் கதை; நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் வேதக் கடவுளான வருண பகவான் அவருக்கு ரோஹிதன் என்ற மகனைத் தந்து அவனை பிற்காலத்தில் பலி தரவேண்டும் என்றார். அவரும் ஒப்புக்கொண்டு பின்னர் தயங்கினார். ரோஹிதன் , அஜீகர்த்தன் என்பவரின் குழந்தையான சுனஸ்சேபனை விலைக்கு வாங்கி அவனை பலி கொடுக்க யாகக் கம்பத்தில் கட்டியிருந்தார். அந்த நேரத்தில் விஸ்வாமித்ர மஹரிஷி அந்தப் பக்கம் வந்தார்; வெகுண்டெழுந்தார். அவனை யாகத் தூணில் இருந்து விடுவித்தார்.

 

இது பற்றி வேதத்துக்கு பா ஷ்யம் எழுதிய சாயனர் என்பார் இந்திய யாகங்களில் உயிர்ப்பலி என்பது கிடையாது என்றும் யாகக் கம்பத்தைச் சுற்றி அக்னியை எடுத்துச் சென்றவுடன் அந்த உயிரினங்கள் விடுவிக்கப்படும் என்றும் உரை எழுதியுள்ளார். அவரது பாஷ்யத்தையே அனைவரும் ஏற்பதால் யாக  என்பது இல்லை என்பதே உண்மை. அது மட்டுமல்ல. இந்திய இலக்கியத்தில் ஒரே ஒரு நரபலி மட்டுமே பேசப்படுகிறது சுனஸ்சேபனும் இறுதியில் பலி இடப்படவில்லை. அதற்கு முன்னரோ பின்னரோ இப்படி ஒரு சம்பவமும் இல்லை.

 

அதிசயம் ஆனால் உண்மை

 

உண்மையில் நரபலி நடந்திருந்தால் அதை மறைக்கவே அனைவரும் முயல்வர்;  ஆனால் இந்திய சட்டப் புத்தகங்களில் எழுதிய ஸ்ம்ருதிகாரர்களோவெனில் இந்த சுநஸ்சேபன் கதையை எல்லா முடிசூட்டு விழாக்களிலும் ராஜசூய யக்ஞத்திலும் படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினர். ஏன் என்று எவரும் விளக்கவில்லை. சோழ மன்னர்களில் ராஜ சூய யக்ஞம் செய்தவன் பெருநற்கிள்ளி. பாண்டவர்களில் ராஜசூயம் செய்தவன் தர்ம புத்ரன். ஆக ராமாயண, மஹாபாரத இதிஹாசங்களில் இக்கதை சுருக்க வடிவில் இருந்தாலும், ரிக் வேதத்தின் துணை நூலான ஐதரேய பிராஹ்மணத்தில் முழுக்கதையும் உள்ளது. இதை எல்லா முடிசூட்டு வைபவங்களிலும் பாராயணம் செய்வர் .

 

வேத ஸம்ஹிதைகளை அடுத்து வந்தவை பிராஹ்மண நூல்கள்; அவைகளை அடுத்து வந்தவை ஆரண்யங்களும் உபநிஷதங்களும் ஆகும்; இந்த நான்கு வகை நூல்களும் சேர்ந்து வேத நூல்கள் என்று விளம்பப்படும்; இவை அனைத்தும் கிரேக்கர்கள், தமிழர்கள் முதலியோர் நூல்களை எழுதுவதற்கு முன்னர் எழுந்தவை ஆகும்.

 

–சுபம்–

தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே! (Post No.4951)

தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே! (Post No.4951)

 

Written by London Swaminathan 

 

Date: 26 April 2018

 

Time uploaded in London – 15-19

 

Post No. 4951

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Tamil Poets and Kalhana

காஷ்மீரின் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருத கவிஞர் கல்ஹணர்; இவரை வெள்ளைக்கார்கள் மெத்தப் புகழ்வர். புராணங்களில் 140 தலைமுறை மன்னர்களின் பெயர்கள் இருந்தாலும் வருஷம் குறிப்பிடவில்லை. கல்ஹணர்தான் முதல் முதலில் வருஷத்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதினார் என வெளி நாட்டினர் விளம்புவர். ஆனால்  கல்ஹணரின் கலியுகக் கணக்கு இந்துக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது போல கி.மு 3102 துவங்குவது அல்ல, இவர் கி.மு 2600 வாக்கில் என்று செப்புவார். கல்ஹணர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர். ஆயினும் அவைகளை      ஆராய்ச்சியளருக்கு விட்டு விட்டு, நாம் ஒப்பீட்டு இலக்கியத்தை மட்டும் நாம் காண்போம்.

 

GREAT MEN THINK ALIKE பெரியோர்கள் ஒரே மாதிரி சிந்திப்பர் என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். கல்ஹணர் சொன்னதை தமிழ்ப் புலவர் பாடல்களுடன் ஒப்பிட்டால் அது உண்மையே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

“தன் உடல் வருத்தத்தையும் மனக் களைப்பையும் பற்றிக் கவலை ப்படாதவர் அடைய முடியாததும் உண்டோ? அத்தகையோர் துணிகரச் செயல்களில் இறங்குவர் (வெற்றி அடைவர்) என்று கல்ஹணர் நுவல்வார்.

 

Achievement
What cannot be accomplished by anyone who disregard s his own limbs and mind?
Such a person is capable of bold enterprise. Rajatarangini 7-1328

 

கருமமே கண்ணாயினார்

உத்தமர் யார் என்று நீதிவெண்பா கூறுகிறது:-

ஒரு வேலையைச் செய்யும்போது, உடலுக்கு வரும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். பசியைப்பற்றி கவலைப்படமாட்டார். வேலை முடியும் வரை தூங்க மாட்டார். யார் இடையூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார். காலம் வீணாகுமோ என்று கவலைப்படமாட்டார். யார் இகழ்வதையும் பொருட்படுத்தமாட்டார்.

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங்கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

 

XXX

“ஆற்றின் கரையில் உள்ள ஒரு பெரிய மரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதைத் தொற்றிக்கொண்டு வளரும் பூங்கொடியும் அழியும் என்பதை சொல்லவும் வேண்டுமோ”- என்று மொழிகிறார் கல்ஹணர்.

இதைத் தமிழில் சேருவார் சேர்க்கையினால்– சஹவாச தோஷத்தால்– ஒருவன் கெட்டான் என் போம்.

Certainty
If a tree which protects a river bank collapses in a flood, the creeper which lives on it, will surely follow suit.8-3250

‘சேராத இடந்தனிலே சேர வேண்டாம்’- என்று உலக நீதி உரைக்கிறது.

 

நீதி வெண்பா (எழுதியவர் யார் என்பது கிடைக்கவில்லை) சொல்கிறது:

புற்றுக்குப் பக்கத்தில் வைக்கோற் புரி கிடந்தாலும் அதைப் பாம்பு என்றே கருதுவர்; தீயோருடன் சேர்ந்த நல்லோரையும்   தீயவர்கள் என்று எண்ணி ஒதுங்குவர் என்று:

நல்லொழுக்க மிலா ரிடஞ்சேர்ந்த நல்லோர்க்கும்

நல்லொழுக்கமில்லாச் சொல் நண்ணுமே – கொல்லும்

பாம்பெனவுன் னாரோ பழுதையே யானாலுந்

தூம்பமரும் புற்றடுத்தாற் சொல்

நல்லோருடன் சேராதோர் இப்படி அழிவர் என்று மற்றொரு பாடல் கூறும்.

 

சந்தனமரத்துக்குப் பக்கத்தில் நிற்கும் மற்ற செடி கொடிகளும் அந்த மரத்தின் மணத்தைப் பெறும். ஆனால் மூங்கில் மரத்துக்கு அருகில் நிற்கும் மரங்களோ அது உராய்ந்து உண்டாகும் தீயில் தான் அழிவதோடு பக்கத்தில் உள்ள மரங்களையும் அழித்துவிடும்.

 

சந்தனத்தைச் சார்தருவுந்  தக்க மணங்கமழும்

சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற — அந்தவனந்

தானுமச் சந்தனமும் தன்னினமு மாய்வதன்றித்

தானுங் கெடச்சுடுமே தான்  (நீதி வெண்பா)

வேய்= மூங்கில்; தரு=மரம்

 

XXX

 

Defeat
Every great person finally meets with humiliating defeat just if he was a common man. Who then could proudly think I am great 8-335

 

“எல்லாப் பெரிய மனிதர்களும் இறுதியில் அவமானப்பட்டு தோல்வி அடைகின்றனர் ; சாதாரண மனிதனைப் போல ஆகின்றனர். இப்படி இருக்கையில் யார் நான்தான் பெரியவன் என்று நினைக்கமுடியும்?” என்று கல்ஹணர் கேட்கிறார்.
முடி சார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவிலொரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்த
படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னம்பலவர்
அடி சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இலையே

பட்டினத்தாரோ முடி மன்னர்களும் இறுதியில் பிடி சாம்பராய் சுடு காட்டில் சாதாரண மனிதன் எரிக்கப்பட்ட இடத்தில் எரிக்கப்படுவதைக் காட்டுகிறார். (இந்து மதத்தில் மன்னர்களுக்கும் பிச்சைக்காரகளுக்கும் ஒரே சுடுகாடுதான்)

xxx

 

Equanimity
The ocean is not warmed by the submarine fire nor does it cold by the snow s of the Himalayas when they enter it. Men of unruffled mind display equanimity either in dejection or exultation 8-2666
கடலுக்கு அடியிலுள்ள தீயினால் (வடமுகாக்னி= கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகள்) கடல் சூடாவதும் இல்லை; இமயமலையில் இருந்து வரும் பனிக்கட்டி  ஆறுகள் கடலில் பாய்வதால் அது குளிர்வதும் இல்லை. அது ஒரே மாதிரிதான் இருக்கும்; அது போல பெரியோர்கள் போற்றினும் தூற்றினும் சம நிலை தவற மாட்டார்கள் –கல்ஹணர்

 

இதையே தமிழ்ப் புலவர்கள் பால், தங்கம், சந்தனம் அகில், சங்கு கடல் மூலம் மிக அழகாகச் சொல்லுகின்றனர்.

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

 

அதிவீர ராம பாண்டியனுக்கு முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்

வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்: 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்  – வாக்குண்டாம்

–சுபம்–

 

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943)

 

Yupa is on seen in the right.

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943)

 

 

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan 

 

Date: 23 April 2018

 

Time uploaded in London –  22-20 (British Summer Time)

 

Post No. 4943

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேத்திலுள்ள சொற்களை நாம் இன்று வரை பன்படுத்துவது, இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் இருந்ததற்குச் சான்றாக விளங்கி வருகிறது.

 

யூபம் என்னும் தூண் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை இது. இந்த யூப ஸ்தம்பம் ரிக்வேதத்திலும் உள்ளது. அதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்திலும் உளது. ஹரப்பா என்பதே ஹரி யூப என்ற சொல்லின் மருவு என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன்.

Pandya coin

நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூலவர்மனின் ஏழு யூப ஸ்தம்பங்கள் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்ததை காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) பல ஆண்டுகளுக்கு முன்னரே சொற்பொழிவில் குறிப்பிட்டதையும் எழுதினேன்.

 

புற நானூற்றின் மிகப்பழைய பாட்டிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் யூபம் பற்றிய குறிப்புகள் உளதையும் சுட்டிக்காட்டினேன். தமிழ் மன்னர்கள் வேத கால யாக யக்ஞங்களில் பேரார்வம் கொண்டவர்கள் என்பதை ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கி ள்ளி பற்றிய கட்டுரையிலும், பருந்து வடிவில் யாக குண்டம் அமைத்த கரிகாற் பெருவள த்தான் செய்த யாகம் பற்றிய கட்டுரையிலும் எழுதினேன்.

 

 

அகஸ்தியரையும் பாண்டியரையும்

தொடர்புப் படுத்திப் பேசிய முதல் காவியம் உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் ரகுவம்சம் என்பதையும், பாண்டிய மன்னர்கள் சதாசர்வ காலமும் அவப்ருத ஸ்நானத்தில் நனைந்திருப்பதே அவர்களின் பெருமை என்று காளிதாசன் பாண்டிய மன்னனை இந்துமதி ஸ்வயம்வரத்தில் அறிமுகப்படுத்தியதை எழுதி இது பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் அஸ்வமேத யாகம் பற்றிய குறிப்பாக இருக்கலாம் என்பதையும் குதிரை பொறித்த பெருவழுதி நாணயம் கிடைத்திருப்பதையும் எழுதினேன். இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்கத் தமிழ் இலக்கியத்தை ஒட்டியோ முன்னரோ இருக்கலாம் என்றும் சொன்னேன்.

(இவை அனைத்தையும் எனது ஐந்து ஆண்டுக் கட்டுரைகளில் கண்டு மகிழ்க. இப்பொழுது புதிய விஷயங்களைக் காண்போம்).

 

Yupa is shown.

வேள்வி நெடுந்தூண்

 

யூபம் என்ற ரிக்வேதச் சொல்லை மிகப் பழைய புலவரான நெட்டிமையார் அப்படியே குறிப்பிடுவதும் மற்றொரு புலவர் வேள்வி நெடுந்தூண் என்று குறிப்பிடுவதையும் காண்போம்.

 

பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது (புறம்.15)

 

நால்வேதத்து

அருஞ் சீர்த்திப்பெருங்கண்ணுறை

நெய்மமலி ஆவுதி பொங்க, பல் மாண்

வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன் களம் பல கொல்?

யா பல கொல்லோ?

 

பொருள்

உன்னால் தோற்கடிக்கப்பட்ட பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா? அல்லது நான்கு வேதங்களில் சொன்னபடி நெய்யும் பொரியும் போட்டு யூப ஸ்தம்பங்கள் நட்டு நீ செய்த யாககங்கள்  அதிகமா?என்று பாண்டிய மன்னரைக் கேட்கிறார் நெட்டிமையார்.

 

சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாடிய கருங்குளவாதனார் பாடிய (புறம்.224) பாட்டில்,

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்

என்கிறார்.

 

அதாவது பருந்து வடிவ யாக குண்டத்தில் அந்தணர் சொற்படி செய்யப்பட்ட யாகத்தில் யூப நெடுந்தூண் நட்டவன் நீ…

 

இவ்வாறு பதிற்றுப் பத்து,  பெரும்பாணாற்றுப்படையிலும் வருகிறது

 

கேள்வியந்தணர் ரருங்கடனிறுத்த

வேள்வித்தூணத் தசைஇ யவன

ரோதிம விளக்கின்………

–பெரும்பாணாற்றுப்படை வரி 315, 316

 

யூபம் பற்றி அக்காலத் தமிழ் அறிஞர்களுக்கு நன்கு தெரியுமாதலால் உரைகாரர்கள் அதிகம் விளக்கவில்லை. இதற்கு நாம் ஸம்ஸ்க்ருத நூல்களையே நாட வேண்டியுள்ளது.

 

யூபக் கம்பங்களில் வேள்வியில் ‘பலியிடும்’ மனிதர்கள், மிருகங்களைக் கட்டுவார்கள். பின்னர் அவைகளை அவிழ்த்து விட்டு விடுவார்கள்.

 

ஐதரேய பிராஹ்மணம் என்னும் நூல் ரிக் வேதத்தின் துணை நூல். அதில் ராஜ சூய யாகம் பற்றி வருகிறது; எந்த யாகம் செய்தாலும் அதில் மன்னர்கள் சுநஸ்சேபன் கதையைக் கேட்க வேண்டும்.

உயிர்ப்பலி இல்லை

 

சுநஸ்சேபன் என்பவன் யாகத்தில் பலியிடக் கட்டியிருந்த போது அவனை விஸ்வாமித்ரர் விடுவித்த கதை இது. இது சூர்ய வம்சத்தின் 28ஆவது மன்னரான ஹரிச்சந்திரன் காலத்தில் நடந்தது.

 

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால் ஹரிசந்திரன் காலத்துக்கு முன்னாலோ பின்னாலோ இப்படி நடந்ததாக எங்கும் எந்தக் குறிப்பும் இல்லை. ஆக அந்த ஒரே சம்பவத்திலும் சுனஸ்சேபனை விஸ்வாமித்ர மஹரிஷி காப்பாற்றி விடுகிறார்.

 

மேலும் நால் வேதத்துக்கும் உரை எழுதிய பலருள் மிக முக்கியமானவர் சாயனர். அவரே சொல்கிறார்: ‘யாகத்தில் உயிர்கள் பலியிடப்படுவதில்லை. யூப ஸ்தம்பத்தைச் சுற்றி தீ எடுத்துச் செல்லப்பட்டவுடன் அவை  விடுதலை செய்யப்பட்டுவிடும்’.

சாயனர் சொல்லுவதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர்.

 

அகநானூற்றில் ஒரு ஆமை மர்மம் இருந்தது. அது எப்படி வெளியே வந்தது என்ற மர்மத்தைத் துலக்கி நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையிலும் ஆமை பலியிடப்படவில்லை என்பதைக் காட்டி இருக்கிறேன் (கட்டுரையில் மேல் விவரம் காண்க)

 

 

ரிக் வேதத்தில் இரண்டு இடங்களிலும் அதர்வ வேதத்தில் சில இடங்களிலும் பிற்கால பிராமண நூல்களில் ஏராளமான இடங்களிலும் யூபம் என்ற சொல் நேரடியாகப் பயிலப்படுகிறது. குறிப்பால் உணர்த்தும் இடங்கள் மிகப் பல.

 

யூப ஸ்தம்பம் கடிர மரத்தால் (கருங்காலி வகை மரம்) செய்யப்படும், அதன் மேல் பகுதி த்ரிசூலம் போல இருக்கும்; யக சாலைக்கு கிழக்கே வைப்பர். அதில் நெய் தடவி தோரணங்கள் கட்டுவர். அந்தக்கால இளைஞர்களின் அலங்காரம் போல இது விளங்குவதால் யுவ (இளைஞர்) என்ற சொல்லே இப்படி மருவியதாச் சிலர் பகர்வர்.

 

மனிதர்களுக்கு யாக யக்ஞங்க்ள் பற்றிய அறிவு வருவதைக் கடவுளர் விரும்பாமல் தடுத்ததால் (யோயுபயன்) யூபம் என்பப் எயர் வந்ததாக ஐதரேய பிராஹ்மணம் செப்பும். சதபதப் பிராமணத்தில் வேறு விளக்கம் உண்டு.

 

யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளோ மனிதர்களோ சம்மதம் தெரிவித்தால்தான் அவைகளைப் பலியிடலாம். ம்ருகங்களுக்கு, தான் சாகப்போகிறோம் என்று தெரிந்தவுடன் தயங்கும் என்றும் அப்போது கடவுளர் அவைகளிடம் நான் உன்னை சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னவுடன் அவை இசைவு தெரிவிக்கும் என்றும் நூல்கள் இயம்பும்.

இன்னும் சிலர் மந்திரத்தைக் கேட்டவுடன் அதன் சக்தியில் மிருகங்களே செயல் இழந்து விடும் என்பர். எது எப்படியாகிலும் யாகத்தில் பலி என்பதே இல்லை அதற்குப் பதிலாக நெய்யே விடப்படும் என்று 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் எழுதி வைத்ததே சரி யென்று தோன்றுகிறது.

 

மாபாரதக் கதை

 

 

இசைவு தெரிவிக்கும் விஷயம் பற்றி மஹாபாரத்ததில் ஒரு சுவையான சம்பவம் உண்டு. அஸ்வமேத பர்வத்தில் அந்தக் கதை வருகிறது

 

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பிராமணர் வேடத்தில் மேவரத்வஜன் என்ற மன்னரிடம் சென்றனர். கிருஷ்ணனின் மகனை புலி தூக்கிக்கொண்டு போய்விட்டதென்றும் அரசனின் மகனின் உடலில் பாதி கிடைத்தால்தான் புலி அவனை விடும் என்றும் சொன்னார்கள். உடனே மன்னன், தன்னையே பலி கொடுப்பதாகச் சொல்லி மகனையும் மனைவியையும் கூப்பிட்டு அறுக்கச் சொன்னான். அவர்களும் அப்படியே செய்ய முன்வந்தார்கள். அப்பொழுது அந்த மன்னரின் இடது கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தவுடன் கிருஷ்ணன் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். முழு சம்மதம் இருந்தால்தான் யாகத்தில் பலியிடலாம், கண்ணீர்த் துளியானது முழு மனது இல்லை என்பதைக் காட்டுகிறது என்று சொல்லி நிறுத்திவிட்டனர். இந்தக் கதையானது எதையும் அனுமதி இன்றி செய்யக்கூடாது என்பதை விளக்குவதோடு அக்காலத்தில் சிறந்த ஜனநாயகம் இருந்ததைக் காட்டுகிறது.

 

இதுவரை சொன்ன விஷயங்கள்:

 

இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம்  இருந்ததை பாண்டிய மன்னர்கள் சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் யாகம் செய்ததை சங்கத் தமிழ் இலக்கியம் செப்புவதால் அறிகிறோம்.

 

யாகத்தில் உயிர்ப்பலி இல்லாமல் அது அடையாள         பூர்வமாக செய்யப்பட்டதையும் சாயனர் உரை மூலம் அறிகிறோம்.

 

 

கருங்காலி வகை மரம் பல மருத்துவ குணம் உடைய மரம். அதை யூப ஸ்தம்பத்துக் பயன்படுத்தியது, அதன் தோற்றம் மற்றும் மருத்துவ குணமுள்ள ஒரு மரத்தைப் பயன்படுத்தியது ஆகியவற்றையும் கண்டோம்.

 

 

யூப தூண் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/யூப-தூண்/

Translate this page

ஆகவே யூபம் என்பது சிந்து சமவெளி நாகரீக ஹரியூப்பியவில் மட்டும் இன்றி 2000 ஆண்டுகளாக ஆசியா முழுதும் பரவிவிட்டது தெரிகிறது. யூப ஸ்தம்பம் என்பது வேதத்தில் ஆகுதியாக்கப்படும் யாகப் பசு கட்டப்படும் இடம் அல்லது வேதச் சடங்கின் வெற்றியின் நினைவாக எழுப்பபடும் …

ராவணன் – பாண்டியர் சமாதான …

swamiindology.blogspot.com/2014/06/blog-post_24.html?view=sidebar#!

24 Jun 2014 – வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்திகாளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்)பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது …

புலிக் கொடி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/புலிக்-கொடி/

Translate this page

தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்களும் குறைந்தது 2500 ஆண்டுகளாக வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். போதாயனர், காத்யாயனர், வால்மீகி, வியாசர், அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், மாமன்னன் அசோகன், கலிங்க மன்னன் காரவேலன், இலங்கையின் …

பாண்டியர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாண்டியர்/

Translate this page

அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்)பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் …

–சுபம்–

 

பணம், பணம், பணம்– ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ்மாலை (Post No.4923)

பணம், பணம், பணம்– ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ்மாலை (Post No.4923)


WRITTEN by London Swaminathan 

 

Date: 17 April 2018

 

Time uploaded in London –  13-53 (British Summer Time)

 

Post No. 4923

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ – என்பது தமிழ்ப் பழமொழி. ரிக் வேதமும், தமிழ் வேதமாகிய திருக்குறளும் பணத்தைப் போற்றுகின்றன. தமிழ் வேதம் என்று திருவள்ளுவமாலை போற்றும் திருக்குறளை விடப் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து ரிக் வேதம் . ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபி சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று வானியல் குறிப்புகளை வைத்து மொழிந்தார். அவர் உரைத்ததை இன்று வரை தகர்த்தார் எவருமிலர். நிற்க

 

பணம் ஜிந்தாபாத்! பணம் வாழ்க! ஏன்? ஏன்?

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)

 

பொருள்

பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் நல்ல வாழ்வு இல்லை; அது போல அருள் (கருணை) இல்லாதவர்களுக்கு சுவர்க்கத்தில் இடம் இல்லை.

 

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் அதி தீவிர இந்துக்கள். ஆர். எஸ். எஸ்.காரர்கள் தோற்றுப்போவார்கள்!!

 

ஸம்ஸ்க்ருதத்தில் சொன்ன தர்ம, அர்த்த , காம என்ற வரிசையில் தீவிர இந்துத்வவாதியான திருவள்ளுவர் திருக்குறளை அமைத்தார். த்ருண தூமாக்கினி என்னும் தொல்காப்பிய ரிஷியோ இதைப் பல இடங்களில் அதே வரிசையில் செப்பிச் சென்றார்.

 

ஆக பொருள் (பணம்) என்பதன் முக்கியத்துவத்தைத் தொல்காப்பிய ரிஷியும் வள்ளுவ முனியும் வலியுறுத்துவர்.

 

இன்னொரு குறளில் வள்ளுவன் விளம்புவது யாதெனின்,

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்

அற்றார் மற்று ஆதல் அரிது (248)

 

உலகில் பணம் இல்லாதவர்களுக்கு திடீரென லாட்டரிப் பரிசு அடிக்க வாய்ப்பு உண்டு; ஆனால் கருணை இல்லாதவர்களுக்குப் பாவம் சேர்வதால் மீண்டும் வளம்பெறுவது கடினமே.

 

இவ்வாறு பல இடங்களில் வள்ளுவன் நுவல்வதோடு, வாணிகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை  அப்படியே வள்ளுவத்தில் கையாளுவதால் அவர் நல்ல பிஸினஸ்வாதி என்றும் தெளிவு பெறலாம்.

 

சாணக்கிய நீதியில் சாணக்கியன் பகர்வான்-

 

கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.

 

செல்வம்  என்பது சக்கரம் போல. அது மாறி மாறி வரும் என்று ரிக் வேதம் புகலும். அதை மேற்கூறிய (248) குறளில் கண்டோம்.

15-6

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி

ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி

 

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659

 

பிற மக்களை அழ, அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.

இனி ரிக் வேதத்துக்குள் நுழைவோம்:-

 

எங்களுக்குச் செல்வத்தைக் கொடு; அதன் மூலம் தாக்கும் சக்தியையும் கொடு- என்று வேத மந்திரம் சொல்கிறது (ரிக் வேதம் 3-46)

 

பணம் இருந்தால்தான் எதிரிகளைத் தாக்கும் சக்தியும்  கிடைக்கும்.

 

ஆயினும் பணம் என்பது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு வழி இல்லை என்பதை பிருஹத் ஆரண்யக (பெருங்காட்டு உபநிஷதம்) உபநிஷத் தெளிவுபடுத்தும்:-

‘செல்வம் மூலம் முக்தி பெற முடியாது’- நாலாவது அத்யாயம், ஐந்தாவது பிராஹ்மணம், பிரு. உபநிஷத்.

 

xxx

 

கவச ஐலூஷன் என்ற ரிஷி பாடுகிறார் (10-31-2)

மனிதர்கள் செல்வம் பற்றி சிந்திக்கட்டும்

சட்டபூர்வ வழிகளிலும் வழிபாட்டின் மூலமும் வெல்லட்டும்

நன்கு சிந்தித்து விவேகத்துடன் செயல்படட்டும்

சுய சிந்தனையால் திறமையுடன் செயல்படட்டும்.

 

க்ருத்ஸமடர் என்ற ரிஷியும் செல்வம் பற்றிப் பாடுகிறார் (2-21-6)

 

இந்திரா! எங்களுக்கு நல்ல புதையல்கள் கிடைக்கட்டும்

திறமையான சிந்தனையையும் பிரகாசமான புத்தியையும் கொடு

செல்வம் அதிகரிக்கட்டும், உடல் ஆரோக்கியம் பெருகட்டும்

இனிமையான பேச்சு அமையட்டும், நாட்கள் நல்லதாக இருக்கட்டும்.

 

ஆக செல்வத்திதை வேண்டுவது, உலகின் பழமையான புஸ்தகத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது. உலகில் இந்துக்கள் மட்டுமே இப்படி அறம்- பொருள்- இன்பம்- வீடு (மோக்ஷம்) என்று வாழ்க்க்கைக்கு நான்கு தூண்கள் நிறுவியவர்கள். வேறு எந்த ஒரு மதத்திலும் இவ்வாறான தெளிவான வரையறை இல்லை!

 

MY OLD ARTICLES ON THE SAME THEME

பண மோசடி பற்றி வள்ளுவன், சாணக்கியன் …

https://tamilandvedas.com/…/பண-மோசடி-பற்றி-வள…

Translate this page

1 Mar 2018 – அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659. பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே …

பாவங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாவங்கள்/

Translate this page

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயன் நற்பாலவை (659). பிறரை அழவைத்து பிடுங்கிய பணம்எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும். இடுக்கட் படினும் இளிவந்த …

அஜீரணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அஜீரணம்/

Translate this page

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயன் நற்பாலவை (659). பிறரை அழவைத்து பிடுங்கிய பணம்எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும். இடுக்கட் படினும் இளிவந்த …

குறள் உவமை | Tamil and Vedas

https://tamilandvedas.com/category/குறள்-உவமை/

Translate this page

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி. ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி.அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659. பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் …

 

–subham–

 

 

சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கியன் (Post No.4913)

சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கியன் (Post No.4913)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 14 April 2018

 

Time uploaded in London –  14-18 (British Summer Time)

 

Post No. 4913

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய, உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தில், தண்டனை பற்றி பல சுவையான விஷயங்கள் உள்ளன.

 

கடுமையான தண்டனை கொடுத்தால் மக்கள் வெறுக்கிறார்கள்;

குறைவான தண்டனை கொடுத்தால் மக்கள்  நிந்திப்பார்கள்;

தவற்றுக்கு ஏற்ற தண்டனை கொடுத்தால் மக்கள் மதிப்பார்கள் (அர்த்தசாஸ்திரம் 1-4

 

யார் ஒருவன் அதிகமாகக் குடிக்கிறானோ சூதாடுகிறானோ, வேட்டை ஆடுகிறானோ அவர்களை, சட்டம் சந்தேகத்துடன் பார்க்கும் – (4-6)

 

பெண்கள் விஷயத்திலோ அல்லது வேறு எதிலோ அதிக ஈடுபாடு கொண்டிருப்பது குற்றம் – (8-1)

 

ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்குப் பின்னர் கூடி வாழ வேண்டும். மாத விலக்குக்குப் பின்னர் மனைவியுடன் படுக்க மறுக்கும் கணவன் குற்றம் இழைத்தவன் ஆவான் (1-3; 3-2)

மஹா பாரதமும் இந்தக் கருத்தைச் சொல்கிறது.

ஒரு ஆண்மகன் இஷ்டப்பட்டால் வீட்டை விட்டு ஓடிப் போய் சந்யாசி ஆகிவிட முடியாது. அவன் தனது மனைவியும், மகனும் வாழ வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்த பின்னரே சந்யாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதானவ ஒருவர் காவி ஆடை போட்டுக்கொள்ள விரும்பினாலும் அரசாங்க அதிகாரிகளுக்குச் சொல்லாமல் செய்வது தண்டணைக்கு உரிய குற்றம் ஆகும் – (2-1)

 

ஒரு அரசன் கூட எதிலும் நிதானம் காட்ட வேண்டும் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கொள்கை. அரசன் சுக போக விஷயங்களில் ஈடுபட்டால் அறமும் இல்லை, பொருளும் இல்லை என்று ஆகிவிடும் (பொருள்= செல்வம்; அறம்= தர்மம்) – மநு 7-46

 

தொல்காப்பியமும் திருக்குறளும் அறம், பொருள், இன்பம் ( தர்ம, அர்த்த, காம) என்ற சொற்களைப் பல இடங்களில் வலியுறுத்துகிறது. இதையே கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் அவ்விரு நூல்களுக்கும் முன்னரே சொல்லிவிட்டான்.

இன்பம் இல்லாமல் வாழாதீர்கள் (ந நிஸ்ஸுகஸ்யாத்- 1-7) என்று கௌடில்யன் கூறுவான். உள்ளத்தில் ஆசைத் தீ எரியட்டும். ஆனால் அறத்துக்கும் பொருளுக்கும் ஊறு விளைவிக்காத வகை யில் காமம் (ஆசை) இருக்க வேண்டும் என்பான் (1-7).

 

சாணக்கியன் சொல்லும் பல விஷயங்கள் மஹா பாரத சாந்தி பர்வத்திலும் உள்ளது. இது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததால் தமிழர்களும் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் அறம், பொருள் இன்பமென்பதை அதே வரிசையில் அப்படியே (தர்ம, அர்த்த, காம) விளம்பினர்.

 

திருக்குறளின் பெயர்களில் ஒன்று முப்பால் (அறம், பொருள், இன்பம்).

இந்த மூன்று விஷயங்களை (த்ரிவர்க) என்று இயம்புவர்.

வாத்ஸ்யாயனர் எழுதிய காம சூத்ரமும் இது பற்றிக் கூறும்:-

 

ஒரு மனிதனுடைய வாழ்வு 100 ஆண்டுகள். இதை அவர்கள் முறையாகப் பிரித்து, ஒன்றுக்கு ஒன்று மோதாமல், அனுசரணையாக இருக்கும்படி அமைத்துக்  கொள்ள வேண்டும். மாணவப் பருவத்தில் கல்வியும், பொருள் ஈட்டும் வழிகளும் நோக்கம் ஆக இருக்க வேண்டும்.

வாலிபப் பருவத்தில் காம சுகங்களை நாட வேண்டும்; முதுமையில் மோட்சத்துக்கான வழிகளில் மனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, தக்க விதத்தில் இக்குறிக்கோள்கள்களைப் பின்பற்ற வேண்டும்.

 

திருக்குறளுக்கு முப்பால் என்று பெயரிட்டது ஏன்?

த்ரிவர்கங்களில் (அறம், பொருள் இன்பம்) மூன்றையும் அல்லது இரண்டையாவது அடையும்   செயல்களைச் செய்ய வேண்டும்.  ஆனால் மூன்றில் எந்த ஒன்றும்  அடுத்த இரண்டு குறிக்கோள்களைப் பாதிக்கக்கூடாது.(காமசூத்திரம் 1-2-51)

இவற்றைக் காணும் போது திருக்குறளுக்கு முப்பால் என்று பெயர் வந்தது ஏன்? திருவள்ளுவர் ஏன் தன் நூலை முப்பால்களாகத் தொகுத்தார் என்பது நன்கு விளங்கும்.

 

கிரேக்க அறிஞர் அரிஸ்டாடிலும் கூட கிட்டத்தட்ட இந்தக் கருத்துகளை எதிரொலிக்கிறார்.

 

எந்த ஒரு விஷயத்திலும் மிக அதிக ஈடுபாடோ மிகக் குறைவான ஈடுபாடோ அழிவை ஏற்படுத்தும். உடற்பயிற்சியில் இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் பலம் பாதிக்கப்படும்; மதுவிலோ, மாமிச உணவிலோ இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தைரியம், கோபம் முதலிய குணங்களில் ஏற்ற தாழ்வு இப்படி இருந்தால் அழிவை உண்டாக்கும்; நடுநிலை வகிப்பதே சாலச் சிறந்தது (ETHICS , ARISTOTLE எதிக்ஸ் 2-2)

 

மநுவும் மனு நீதி நூலில் இதையே உரைக்கிறார்:

மன்னன் என்பவன் தர்ம அர்த்த காம விஷயங்களைக் கற்றவன் ஆக இருத்தல் அவசியம்; தன் ஆட்சி அதிகாரத்தில் இம்மூன்றிலும் படிப்படியாக முன்னேற்றம் காண வேண்டும் (தர்ம காமார்த்தகோவிதம்; த்ரைவர்கேனாபிவர்ததே- மநு 7-26/27)

 

அர்த்தசாஸ்திரம் இதை இன்னும் தெளிவாகச் செப்பும்:

 

அறம், பொருள் இன்பம் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை அளவுக்கு அதிகமாகப் பின்பற்றினால் பின்பற்றப்பட்ட ஒரு விஷயம் பாதிப்பதோடு மற்ற இரண்டையும் கெடுத்துவிடும் (1-7)

 

2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இதையெல்லாம் சிந்தித்துஎழுதி இருப்பது சிறப்புக்குரியது.

xxxx

 

தொல்காப்பியத்தில் அறம் பொருள் இன்பம்

தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

Translate this page

… (மோட்சம்)= அறம்பொருள்இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது. 9.

அறம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அறம்/

Translate this page

”தர்ம, அர்த்த, காம” என்ற வட மொழிச் சொற்றொடர் ”அறம்,பொருள்இன்பம்” என்று தமிழில் அதே வரிசையில் வருகிறது. இவை வாழ்க்கை மூல்யங்கள்- இந்தியர்களின் ஆதார சுருதி- பாரதீய வாழ்வின் அஸ்திவாரக் கற்கள்.–இதை மஹாபாரதத்திலும் காணலாம். தொல்காப்பியம்(சூத்திரம்1037, 1363) …

தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

Translate this page

தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!! … ஆரிய திராவிட வாதம் பேசும் அரை வேக்காடுகளுக்கு சூத்திரம் சூத்திரமாகத் தொல்காப்பியர் அடிமேல் அடி கொடுக்கிறார். … வாழ்க்கையின் லட்சியங்களை அறம்பொருள் இன்பம், வீடு (தர்மார்த்த காமமோக்ஷ) என்று பிரிப்பது.

 

Bhagavad Gita in Tamil | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/bhagavad-gita-in-tamil/

Translate this page

“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும். அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல” (புறம் 31, கோவுர் கிழார்). மேலும் சில :தொல்காப்பியம் 1038,,கலி.141,திருவள்ளுவ மாலையில் 5 இடங்கள். உ.வே.சாமிநாத அய்யர் புறநானூறு பாடல் முறை வைப்பு அறம்,பொருள்,இன்பம் என்ற தலைப்பில் …

You’ve visited this page 2 times. Last visit: 03/02/17

 

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு | Tamil …

https://tamilandvedas.com/…/பகுதி4-தொல்காப்பி…

Translate this page

13 Sep 2012 – ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது). தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் …

தொல்காப்பியம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தொல்காப்பியம்/

Translate this page

தொல்காப்பியர் பெண்களுக்கு வேண்டிய குணநலன்கள் பற்றிச் சொல்லுவதையும் கூட இன்று பெண்கள் ஏற்பார்களா என்பது ஐயப்பாடே!சந்தேகமே! ….. தர்ம, அர்த்த, காம, (மோட்சம்)= அறம்பொருள்இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு …

You’ve visited this page 3 times. Last visit: 16/12/16

கண்ணனின் பக்தி அறம், பொருள், இன்பம் …

https://tamilandvedas.com/…/கண்ணனின்-பக்தி-அற…

Translate this page

1 Feb 2014 – … சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் …

–சுபம்–

த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்? (Post No.4873)

Date: 2 April, 2018

 

 

Time uploaded in London- 5- 59 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4873

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்?

 

ச.நாகராஜன்

 

உலகின் முதல் காதல் சரித்திரம் நள- தமயந்தி கதை. இதை மஹாபாரதம் விரிவாகக் கூறுகிறது. ஆனால் உலகின் ஆதி நூலான வேதத்தில் நளனைப் பற்றிய குறிப்பைக் காணலாம்.

சுக்ல யஜுர் வேதத்தில் சதபத பிராமணத்தில் நளனைப் பற்றிக் கூறப்படுகிறது.

மஹாபாரதத்தில் கூறப்பட்ட நள – தமயந்தியின் அழகிய கதையை வைத்து ஏராளமான நூல்கள் இயற்றப்பட்டன.

இவற்றில் பல இன்னும் அச்சேறாமல் சுவடிகளாகவே இருப்பது வருந்தத் தக்கது.

 

ராஷ்ட்ர கூட மன்னனான மூன்றாம் இந்திரனின் அரசவையில் ஆஸ்தான புலவராக இருந்தவர் த்ரிவிக்ரம பட்டர். போஜ மஹாராஜன் அவரைப் பற்றித் தன் நூலான சரஸ்வதிகண்டாபரணம் என்ற நூலில் குறிப்பிடுகிறான்.

அவர் நள சம்புவை இயற்றிய காலம் உத்தேசமாக கி.பி.915 என்று நிர்ணயிக்கப்படுகிறது.

நள சம்பு அல்லது தமயந்தி கதா என்ற நூல் ஏழாம் அத்தியாயத்துடன் நிற்கிறது. நூல் முற்றுப் பெறவில்லை.

சம்பு காவியம் என்றாலே அது கவிதையும் உரைநடையும் கலந்த ஒரு நூல் என்று பொருள்.

 

இது ஏன் முற்றுப் பெறவில்லை என்பதற்குச் சுவையான கதை ஒன்று பாரம்பரியமாக வழங்கி வருகிறது.

 

கதை இது தான்:

தேவாதித்யா என்ற ஒரு பிராம்மணன் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த விற்பன்னராகத் திகழ்ந்தான். ஒரு முறை அவன் வெளியூர் செல்ல நேர்ந்தது.

 

அந்தச் சமயம் இன்னொரு நகரிலிருந்து வந்த புலவன் ஒருவன் தன்னை எதிர்கொள்ளும் ஒருவரை உடனடியாக அரசவைக்கு வருமாறு சவால் விடுத்தான். இல்லையேல் தானே சிறந்த அறிஞன் என்பதற்கான ஜயபத்ரம் தருமாறு மன்னனை வேண்டினான்.

மன்னனோ உடனடியாக தேவாதித்யாவை அழைத்து வருமாறு காவலர்களை அனுப்பினான். ஆனால் தேவாதித்யாவோ ஊரில் இல்லை.

 

அவரது மகனான த்ரிவிக்ரம பட்டர் தனது அறியாமையை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார்.

 

சரஸ்வதி தேவியிடம் மனதார வேண்டினார். சரஸ்வதி அவரிடம் ‘உனது தந்தை திரும்பி வரும் வரை உன் நாவில் நான் அமர்வேன், கவலைப்படாதே’ என்று அருளினாள்.

சரஸ்வதியின் அருளினால் சவாலுக்கு அழைத்த புலவரை எதிர்கொண்டு த்ரிவிக்ரம பட்டர் வென்றார்.

அவரைப் பாராட்டிய மன்னன் சகல வெகுமதிகளையும் கொடுத்து அவரை கௌரவித்தான்.

 

சரஸ்வதி தன் நாவில் இருக்க்ம் போதே ஒரு காவியத்தை இயற்ற த்ரிவிக்ரம பட்டர் எண்ணினார்.

 

“புண்ய ஸ்லோகோ நளோ ராஜா” என்று நள சரித்திரத்தைத் தொடங்கினார்.

 

ஏழாவது அத்தியாயத்தை முடித்த அன்று அவரது தந்தை தேவாதித்யா ஊர் திரும்பினார்.

 

உடனடியாக சரஸ்வதி அவரது நாவை விட்டு அகல நூல் முற்றுப் பெறாமல் அப்படியே நின்று விட்டது!

 

மிக அருமையான சிலேடையும் அரிதான செய்யுள்களின் அமைப்பையும் கொண்டுள்ளது நள சம்பு.

ஆகவே அதன் பல ஸ்லோகங்கள் பின்னால் வந்த கவிஞர்களால் எடுத்துக்காட்டப்படுவது வழக்கமானது.

நள சம்புவிற்கு சில உரைகள் உண்டு.

அனைவராலும் பாராட்டப்படும் நூலாக நள சம்பு இன்றளவும் திகழ்கிறது!

***

பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில் (Post No.4871)

பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில் (Post No.4871)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 1 April 2018

 

Time uploaded in London –  15-06 (British Summer Time)

 

Post No. 4871

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மநு நீதி நூல்- Part 14 (Post No 4871)

 

குருவின் ஆசனத்திலும் படுக்கவும் உட்காரவும்  கூடாது; ஒரு மாணவன் தனது படுக்கையில் படுத்திருக்கும் போது அல்லது  உட்கர்ந்திருக்கும்போது குரு வந்தால் எழுந்து நின்று வந்தனம் (வணக்கம்) செய்ய வேண்டும். 2-117 (235)

 

வயதிலும் கல்வியிலும் பெரியவர்களானவர்கள் வரும்போது ஒருவன் உடகார்ந்திருந்தால் அவனுடைய பிராண வாயு மேலெழுந்து வெளியே செல்ல முற்படும்; எழுந்து நின்றால் அது சம நிலையை அடையும். 2-118 (236)

 

 

நான்கு கிடைக்கும்!

 

பெரியார்களை நாள்தோறும் வந்தனம் செய்கிறவனுக்கும் தரிசிக்கிறவனுக்கும் நான்கு கிடைக்கும்:- அவையாவன- ஆயுள், கல்வி, புகழ்/கீர்த்தி, பலம் 2-119 (237)

 

பெரியோர்களுக்கு வணக்கம் சொல்லுகையில் தன்னுடைய பெயர், குலம், கோத்திரம், தான் படிக்கும் வேதம், ஷாகை ஆகியவற்றைச் சொல்லி அபிவாதனம் செய்ய வேண்டும்.

அபிவாதனம்– மிகவும் அடக்கத்துடன் குனிந்து எதிரேயுள்ள பெரியோரின் காலைத் தொட்டுச் சொல்லுதல்

 

யாருக்கு ஆசீர்வாதம் செய்யத் தெரியாதோ அவர்களுக்கும் பெண்களுக்கும் வணக்கம் சொல்லுகையில் அபிவாதயே மந்திரம் சொல்லத் தேவை இல்லை. தன்னுடைய பெயரை மட்டும் சொன்னால் போதும்

 

பெயரைச் சொன்ன பின்னர் ‘போ’ (தாங்கள் = தங்களை வணங்குகிறேன்) என்று சொல்லி முடிக்க வேண்டும்.அந்த சப்தமானது பெயர்களின் ஸ்வரூபம் (நிறைவு பெற்றது) என்று ரிஷிகளால் சொல்லப்படுகிறது.

 

 

சிறியோர்கள் வந்தனம் சொல்லும்போது பெரியோர்கள் “நீ நீண்டகாலம் வாழ்வாயாக” என்று வாழ்த்த வேண்டும்; சம்ஸ்க்ருதத்தில் ஆயுஷ்மான்  பவ,

என்று வந்தனம் சொன்னவர் பெயரை நெடில் எழுத்தில் சொல்ல வேண்டும் (உ.ம். ஆயுஷ்மான்  பவ ஸ்வாமிநாதா, கார்த்திகேயா)

 

இவ்வாறு எந்தப் பிராமணனுக்கு ஆஸீர்வாதம் செய்யத் தெரியவில்லையோ அவனுக்கு வந்தனம் செய்யக்கூடாது- அவன் சூத்திரனுக்குச் சமம்.

 

இவ்வாறு வணக்கம் செய்பவனை – பிராமணனாக இருந்தால் குசலம் (நலமாக இருக்கிறீர்களா?) விசாரிக்க வேண்டும்; க்ஷத்ரியனாக இருந்தால் நோயற்ற வாழ்வு வாழ்கிறீர்களா? எனக் கேட்க வேண்டும்; வைஸ்யனாக இருந்தால் நல்ல பணம் வருகிறதா? என்றும் சூத்திரனாக இருந்தால் சுகமாக இருக்கிறீர்களா? என்றும் கேட்கவேண்டும்.

யாகம் செய்வதற்காக தீக்ஷை அணிந்தவன் – வயதில் சிறியவனாக இருந்தாலும் அவரைப் பெயரைச் சொல்லி அழைக்கக்கூடாது. ‘போ’, ‘பவான்’ (தாங்கள்) என்றே அழைக்க வேண்டும்

 

வயதான மாதர்கள் பிறருடைய மனைவியாகவோ, உறவினர் அல்லாதவர்களாகவோ இருந்தால் ‘பவதி’, ‘சுபகே’, ‘பகினி’ என்று அழைக்க வேண்டும் அதாவது அவர்களை அக்கா, அம்மா, அம்மணி என்ற மரியாதையுடன் நடத்துவதாகும்.

 

அம்மான், சிற்றப்பன், பெரியப்பன், மாமனார், யாக புரோகிதர்கள், குரு  வந்தால் எழுந்து நின்று  அபிவாதனம் செய்து மரியாதை செய்தல் வேண்டும்.

அண்ணன் மனைவியை நாள் தோறும் வணங்க வேண்டும். ஞாதி- சம்பந்திகளின் மனைவிமார்களை ஊருக்குப் போய் வந்தபோது மட்டும் வணங்க வேண்டும்- 132

பெரிய அத்தை, தாயுடன் பிறந்த பெரிய தாய், சிறிய தாய்- ஆகியோரிடத்தில் தாயைப் போல மரியாதை காட்டவேண்டும்; ஆனால் தாயார், இவர்கள் எல்லோரையும் காட்டிலும் உயர்ந்தவள்

யாரை நண்பன் ஆக்கலாம்?

ஓர் பட்டணம், ஊரில் வசிப்பவன் தனக்கு பத்து வயது மூத்தவனோடும், சங்கீதம் முதலிய வித்தைகள் தெரிந்தவன் ஆனால் ஐந்து வயது மூத்தவனோடும், வேதம் தெரிந்திருந்தால் மூன்று வயது மூத்தவனோடும், ஞாதி ஆகியோருடன் கொஞ்சம் வயது வயது மூத்தவனோடும் சிநேகம் செய்யலாம் (நட்புறவு கொள்ள வேண்டும்).

 

பத்து வயதுள்ள பிராமணனையும் 100 வயதுள்ள க்ஷத்ரியனையும் தகப்பன்- பிள்ளயாக கவனிக்க வேண்டியது. அதாவது பிராமணனை தகப்பன் மரியாதையுடனும் க்ஷத்ரியனை புத்திரன் மரியாதையுடனும் நடத்த வேண்டும்.

 

பூஜிக்கத்தக்க 5 அம்சங்கள்

நியாயமாய்த் தேடிய பொருள், சிற்றப்பன் முதலிய உறவினர்கள்,  உயர்ந்த வயது, நல்ல ஒழுக்கம், கல்வி ஆகிய ஐந்தும் ஒருவனை பூஜிப்பதற்குரிய /மதிப்பதற்குரிய ஐந்து அம்சங்கள் –  வரிசைக் கிரமத்தில் பார்த்தால் இவை ஒன்றைக் காட்டிலும் ஒன்று உயர்ந்தது. இந்த ஐந்து அம்சங்/தகுதி/களில் ஏதேனும் இரண்டு, மூன்று அம்சங்கள்/தகுதிகள் உடையோரை ஒன்று மட்டுமே உடையவர்கள் பூஜிக்க வேண்டும்; 90 வயதுக்கு மேற்பட்ட சூத்திரர்களுக்கு எல்லோரும் மரியாதை செய்ய வேண்டும்.

 

90 வயதுக்கு மேற்பட்டவன், நோயாளி, சுமையாளி, மாதர்கள், அநுஷ்டானமுள்ள பிராமணர்கள்,அரசன், கலியானம் செய்யப்போகும் மாப்பிள்ளை ஆகியோருக்கு வண்டி வாஹனங்களில் வருவோர் வழிவிட வேண்டும்.

 

இவர்களில் பலரும் வந்தால் அனுஷ்டானமுள்ள பிராமணனுக்கும் மன்னனுக்கும் முதலில் வழிவிட வேண்டும். பிராமணனும் அரசனும் வந்தால் பிராமணனுக்கே முதலில் வழிவிடவேண்டும்.

 

யார் ஆச்சார்யன்?

எவன் உபநயனம் செய்வித்து வேத, யாக மந்திரங்களையும், வேதாந்தங்களையும் ஓதுவிக்கிறானோ, அவனே ஆச்சார்ன் எனப்படுவார்.

எவன் கர்ப்பதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிக்கிறானோ அவன் குரு எனப்படுவான்.

எவன் அக்னிசந்தானம், அக்னிஷ்டோமம் முதலிய யாகங்களைச் செய்விக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு அதனைச்

செய்விக்கிறானோ அவனை ரித்விக் என்று சொல்லுவார்கள்.

 

எவன் ஸ்வரத்தோடு கூடிய வேத ஒலியினால் தன் காதுகளை நிறைவிக்கின்றானோ அவன் தாய், தந்தைக்குச் சமமானவன்; அவனுக்கு ஒருக்காலும் துரோகம் செய்யக் கூடாது.

 

உபத்தியாயனைவிட ஆச்சார்யன் பத்து மடங்கு உயர்ந்தவன். ஆச்சார்யனைவிட உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்வித்த தந்தை நூறு மடங்கு  உயர்ந்தவன்.. அவரைவிட ஒருவனுடைய தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவள்.

 

பெற்ற தகப்பனை விட இரண்டாவது ஜன்மம் உண்டாக்கும் பிரம்மோபதேசம் செய்த ஆச்சார்யன் உயர்ந்தவன்; அவ்விரண்டாவது பிறப்பானது இம்மையிலும் மறுமையிலும் அழியாதது.

 

மாதாவும் பிதாவும் புணர்ந்து அதன் காரணமாக யோனி வழியாகப் பிறக்கும் உடல் மிருகங்களைப் போல உறுப்புகளை மட்டும் உண்டாக்கும் (2-147)

 

எனது கருத்து

 

மேற்கூறிய ஸ்லோகங்கள் பற்றி எனது கருத்துகள்:

 

வயதானோருக்கு வந்தனம் சொன்னால் புகழ், வலிமை, ஆயுள், கல்வி கிடைக்கும் என்ற ஸ்லோகமும் ஒருவனைப் பூஜிக்க அடிப்படையான ஐந்து அம்சங்களை விளக்கும் ஸ்லோகமும் அருமையானவை

 

.தமிழ்நாட்டிலும் மஹாராஷ்டிரத்திலும் தோன்றிய அரசியல்வாதிகள் பிராமணர் அல்லாதோர் அனைவரையும் சூத்திரர் ஆக்கிவிட்டார்கள். உண்மையில் அந்த நாலாவது வருணத்தார் மிகவும் குறைவே.

 

அவர்களில் மிகவும் வயதானோரை மற்ற மூன்று வருணத்தாரும் மதிக்க வேண்டும் என்ற ஸ்லோகம் குலத்தால் ஒருவர் தாழ்ச்சி இல்லை என்பதைக் காட்டுகிறது.

 

ஒவ்வொருவரையும் நலம் விசாரிப்பது எப்படி என்ற ஸ்லோகத்தில் சூத்திரனை, சுகமாக இருக்கிறீர்களா? என்று மரியாதையுடன் விசாரிக்க வேண்டும் என்று மநு விதிக்கிறார். ஆகையால் எவ்வளவு சம நிலையுடன் அணுகப்படுகிறது என்பது புலப்படும். விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகத்திலும் “சூத்ர சுகம் அவப்னுயாத்” என்று வேண்டப்படுகிறது. எங்குமே அவனுக்கு எதிராக நெகட்டிவ் – வசவு வாக்கியம் கிடையாது.

 

வேதப் படிப்பு முதலியவற்றில் அவன் தொடர்பு இருக்கக் கூடாது என்ற கடுமையான வாசகங்களைக் காண்கிறோம்; அவர்கள் ஏதோ வேதம் கற்க ஆர்வத்தோடு ஓடி வந்த போது பிராஹ்மணர்கள் அதைத் தடுத்துவிட்டார்கள் என்று எண்ணுவது நகைப்புக்குரிய விஷயமாகும்; பிராஹ்மணர்களே வேதம் கற்பதை நிறுத்திவிட்ட இன்றை நிலையைப் பார்க்கையில் இது இன்னும் நன்றாக விளங்கும்.

ஜாதி என்பது உலகம் முழுதும் உளது. இந்தியாவில் அரசியல்வாதிகள், தங்கள் குடும்பத்தினரை மந்திரி பதவியில் அமர்த்துகின்றனர்; கட்சிப்பதவிகளில் நியமிக்கின்றனர். கீழ்ஜாதி மக்கள் தங்களி மேலும் கீழ் ஜாதிகளாக அறிவித்து எப்போதும் வேலை, கல்வி நிறுவனச் சலௌகை தரவேண்டும் என்கின்றனர். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தும் ஜாதி ஒதுக்கீட்டு ம்சலுகைகளைப் பெறுவதிலிருந்து அவர்கள் செய்யும் மோசடி அம்பலம் ஏற்கிறது. பிரிட்டனிலும் ஆதிகள் உண்டு; அரச ஜாதியினரே அரசனாக முடியும்; பிரபுக்களின் வம்சாவளியினரே பிரபு வாக முடியும்; இவை அனைத்தும் பிறப்பு மூலமே கிடைக்கின்றன. நடிக,நடிகையர் மகன்கள், மனிவிகள் மட்டும் ஏதாவது ஒரு சினிமாத் துறயில் புகுந்து விடுகின்றானர்.

 

 

ஆயிரம் தகப்பன் = ஒரு தாய்

 

பெண்ணின் மதிப்பை மநு தொடர்ந்து போற்றி வருகிறார். இங்கே ஒரு ஸ்லோகத்தில் ஒரு தந்தையைவிட தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவள் என்ற ஸ்லோகம் மிகவும் அருமையானது.

 

வண்டிகள் போக்குவரத்தில் யார், யாருக்கு வழிவிட வேண்டும் என்ற விதிமுறை போன்றவற்றைப் பார்க்கையில் , இக்காலத்தில் உள்ள ப்ரயாரிட்டி PRIORITY, RIGHT OF WAY ரைட் ஆf வே நினைவுக்கு வருகிறது. மநு இந்தப் போக்குவரத்து பற்றி கூட பேசுகிறார்

அண்ணன், மனைவி முதலியோருக்குக் கூட மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறது.

 

உபாத்யாயன், ஆச்சார்யன், குரு, ரித்விக் முதலிய வருணனைகள் இக்காலத்துக்குத் தேவை இல்லாதாகிவிட்டது..

 

தொடரும்………………….

 

 

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4 (Post No.4867)

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4 (Post No.4867)

 

Date: MARCH 31, 2018

 

 

Time uploaded in London- 5-35 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4867

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு :

நீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரையின் இறுதிப் பகுதி.

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4

 

ச.நாகராஜன்

நரேந்திரா தனது வழிமுறை அரவிந்தராலும் அன்னையாலும் தரப்பட்டது என்று கூறுகிறார். அந்த வழிமுறையைத் தான் நாங்கள் இங்கு டப்ளினில்  இன்று கடைப்பிடிக்கிறோம்.

அன்னை கூறிய பல ஊக்கமூட்டும் மொழிகளில் இதுவும் ஒன்று:-

“Teach logically. Your method should be most natural, efficient and stimulating to the mind. It should carry one forward at a great pace. You need not cling there to any past or present manner of teaching.”

 

 

Renaissance எனப்படும் மறுமலர்ச்சியின் 500 ஆண்டு கால சுழற்சியைப் பார்ப்போம்.

 

ஐரோப்பாவின் கடைசி மறுமலர்ச்சி நாம் வாழும் இன்றைய உலகை மாற்றி அமைத்த மூன்று விஷயங்களை மேம்படுத்தியது.

கலை, இசை மற்றும் விஞ்ஞானம்!

 

நாஸாவின்  ஸ்பேஸ் புரொகிராம் (விண்வெளித் திட்டம்) இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் ஆகியவற்றிற்கு சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்த அதி தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.

ஸ்ரீ அரவிந்தர் கூறினார்:

 

”…. at once majestic and sweet and flexible,  strong and clearly formed and full and vibrant and subtle…”

 

ஜான் ஸ்காட்ஸ் பள்ளி மாணவர்கள் கூறுவது இது:-

 

It makes your mind bright, sharp and clear.

It makes you feel peaceful and happy.

It makes you feel BIG.

It clears and loosens your tongue so you can pronounce any language easily.

 

நாஸாவில் உள்ள சம்ஸ்கிருத ஆர்வலர் ரிக் ப்ரிக்ஸ் (rick Briggs)  கூறுகிறார்:-

 

It gives you access to a vast and liberating literature.

It can describe all aspects of human life from the most abstract philosophical to the latest scientific discoveries, hinting at further development.

 It can describe all aspects of human life from the most abstract philosophical to the latest scientific discoveries, hinting at further developments.

Sanskrit and computers are a perfect fit. The precision play of Sanskrit with computer tools will awaken the capacity in human beings to utilize their innate higher mental faculty with a momentum that would inevitably transform the mind. In fact, the mere learning of Sanskrit by large numbers of people in itself represents a quantum leap in consciousness, not to mention the rich endowment it will provide in the arena of future communication. NASA, California

After many thousands of years, Sanskrit still lives with a vitality that can breathe life, restore unity and inspire peace on our tired and troubled planet. It is a sacred gift, an opportunity. The future could be very bright.

 

நாஸாவின் ரிக் ப்ரிக்ஸ் (rick Briggs)  கூறும் வார்த்தைகளையே எனது கடைசி வார்த்தைகளாகக் கூறுகிறேன்:-

 

One thing is certain; Sanskrit will only become the planetary language when it is taught in a way which is exiting and enjoyable. Furthermore it must address individual learning inhibitions with clarity and compassion in a setting which encourages everyone to step forth, take risks, make mistakes and learn.

Rick Briggs [NASA]

 

***

சம்ஸ்கிருதத்தின் சிறப்பு பற்றிய இந்தத் தொடர் முற்றும்.

இதன் ஆங்கில மூலத்தை அடுத்த கட்டுரையாகக் காணலாம்.